Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி பிடிக்க விழையும் “எடியுகேற்றட் பீப்பிளின்” வலை எல்லாம் ஓட்டை

Featured Replies

முள்ளிவாய்க்கால் முடிவைத்தொடர்ந்து புலிகள் மீதான விமர்சனங்கள் வகைதொகை இன்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமர்சனங்கள் ஆரோக்கியமானவைதான் என்ற போதிலும் அடிப்படைகளிலேயே ஒட்டைகள் உள்ள விமர்சனங்கள் எதிர்க்கருத்து இல்லாமையினால் மட்டும் உண்மையாகிவிடுவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது. இன்றையதேதிக்கு நிரைந்து கிடக்கும் விமர்சனங்களின் எண்ணிக்கையால் அவை அனைத்தையும் வாசிக்காது விட்டுவிடுபவர்களும், வாசித்தாலும் வாசித்த அனைத்தையும் கிரகிக்காது விட்டுவிடுபவர்களும், அப்படிக்கிரகித்தாலும் “என்னத்தை எழுதி என்னத்தைச் செய்ய” என்ற சலிப்பு நிலையில் கருத்துக் கூறாது இருந்துவிடுபவர்களுமே அதிகமாக உள்ளனர். இதனால், பல தவறான வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கி

Edited by Innumoruvan

  • Replies 58
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கட்டுரை...நன்றி

இவ்வளவு காலமும் துரோகி என்கின்ற பதத்தை வைத்து காலத்தை ஓட்டினோம். துரோகி என்கின்ற சொல்லை ஆயுதமாக பயன்படுத்தினோம்.

இனி என்ன செய்வது என்று திகைத்து இருந்தோம். ஏன் என்றால் இப்போது துரோகி என்கின்ற சொல்லிற்கு மவுசு குறைந்துவிட்டது.

இப்போது மீண்டும் எங்களுக்குள் ஓர் நம்பிக்க துளிர்த்து இருக்கின்றது.

ஏன் என்றால் இப்போது ஓர் புதிய சொல்லை கண்டுபிடித்து இருக்கின்றோம்.

எடியுகேட்டட் பீப்பிள்! :D

இனி மாற்றுக்கருத்துக்கள் சொல்பவர்கள்மீது எடியுகேட்டட் பீப்பிள் என்கின்ற ஆயுதத்தை பாவித்து அவர்களை மடக்குவோம். :D

எழுதுவதற்கும், சொல்லுவதற்கும் வசதியாக கேபி என்கின்ற சுருக்கம் போல் இந்தச் சொல்லை ஏபீ என்று அழைக்குமாறு சபையோரை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். :D

குறிப்பு: இன்னுமொருவன், தங்கள் கட்டுரையில் கூறப்பட்டுள்ள சிந்தனைகளை உள்வாங்கி இருக்கின்றேன். மேலே நான் சொன்ன கருத்தை நக்கலாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இப்படி நான் மேலே எழுதியமைக்கு காரணம் இப்போது எடியுகேட்டட் பீப்பிள் என்கின்ற பதத்தை நம்மவர்கள் தங்களால் சரியாக மற்றவனின் கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாதபோது அல்லது கருத்துக்களை எதிர்கொள்ள முடியாதபோது இந்த எடியுகேட்டட் பீப்பிள் என்கின்ற பதத்தை அல்லது பட்டத்தை கொடுத்து ஏதோ அவர்கள் தமிழர்களிடம் இருந்து வேறுபட்ட யாரோ அந்நியர்கள் என்கின்ற தோற்றத்தை ஏற்படுத்தி - அதாவது வழமையாக துரோகிக்கு இணையான பதமாக இதை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றார்கள் போல இருக்கின்றது.

இந்த சமூக சேவைக்கு (?) பிள்ளையார் சுழி போட்டதுபோல் இருக்கின்றது கட்டுரை. எனவேதான் அப்படி கூறவேண்டி இருக்கின்றது. மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்

ரதி, கலைஞன் உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

கலைஞன்,

"ஏதோ எடியுகேட்டற் பீப்பிள் தமிழரல்லாதோர் போல் பிரித்துக் காட்டல்" என்ற உங்களது ஆதங்கம் புரிகிறது. எனினும், இங்கு எடியுகேட்டட் பீப்பிள் தமிழரல்ல தமிழரெல்லாம் அண்எடியுகேட்டற் பீப்பிள் என்று நான் சொல்லவில்லை. அவ்வாறு கட்டுரை பொருள்படுகிறது என்றால் அது எனது எழுத்தில் நிழகந்த பிறழ்வே அன்றி அது கருத்து அல்ல. மேலும், எனது கட்டுரையின் நோக்கு, எவரையும் தமிழரல்ல என்று பிரிப்பதுவல்ல, மாறாக தம்மை மற்றையோரிலும் பெரியோராய் தாமாய் நினைத்துப் பிரித்துக் காட்டி களநிலவரத்தை உள்வாங்காது படிக்காதவர்கள் என்று பிறரை நிராகரிக்க விழையும் ஒரு மனவியல்பு பற்றியதே. இம்மனவியல்பு இக்கட்டுரை உருவாக்கியதல்ல, மாறாக அவ்வாறு இருக்கின்ற ஒரு மனவியல்பு பற்றி இக்கட்டுரை பேசியுள்ளது அவ்வளவு தான். பிரிவாகக் காட்டப்படுகின்ற ஒன்று பற்றிப் பேசுவதால் அது பிரிவினை ஆகிவிடமுடியாது.

மற்றும் துரோகி பற்றிய உங்களது ஒப்பீடு தொடர்பிலும் எனக்கு உடன்பாடில்லை. நானறிந்தவரையில் எந்தத் தமிழனும் தன்னைப் பிறர் துரோகி என்று அழைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் சரியோ பிழையோ மற்றையோர் தம்மை எடியுகேற்றட் பீப்பிள் என்று அழைக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நிறையவே உள்ளனர்--குறிப்பாக இக்கட்டுரையில் பேசப்பட்டுள்ளவர்கள் அவ்வாறு விரும்புபவர்கள். நானறிந்தவரை "படிச்ச மனுசன்" என்று நான் ஆரையும் திட்டமுடியும் என்று கருதவில்லை.

எடியுகேட்டட் பீப்பில் என்று அழைக்கப்படவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நிச்சயம் இருக்கலாம். ஆனால்.. அவர்கள் அந்த ஆசையை நம்மவர்களின் வாயால் சொல்லக் கேட்பதை ஆசைப்படுவார்கள் என்று சொல்வது அபத்தமானது. நீங்கள் தேவையில்லாமல் சில பகுதியினரை மட்டம் தட்டப் பார்க்கின்றீர்கள்.

அதிலும் குறிப்பாக அண்மையில் நடந்த எங்கள் தாயக பிரச்சனையை அலசி ஆராய்வதன்மூலம் தாங்கள் மற்றவர்களால் எடியுகேட்டப் பீப்பில் என்று சொல்லப்படுவார்கள் என்று சிலர் ஆசைப்பட்டு கருத்து கூறுகின்றார்கள் என்பது வேடிக்கையானது.

வேண்டுமானால்.. சோதிடம் பொய், கடவுள் இல்லை.. மூட நம்பிக்கைகள் இப்படியான விடயங்களில் அலசி ஆராய்ஞ்சு தங்களை எம்மவர்கள் படித்தவர்களாக காட்டிக்கொள்பர்களாக இருக்கலாமேயொழிய, தாயகப் பிரச்சனையில் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் ஏபீக்களாக அங்கீகாரம் பெறமுடியும் என்று செயற்படுகின்றார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

அப்படியென்றால்... கட்டுரைகள் எழுதித் தள்ளுகின்ற இதயச்சந்திரன் ஏபீயாக எம்மவர்களால் சொல்லப்பட்டு இருக்கிறாரா? அருல்ஸ் எம்மவர்களால் ஏபீயாக சொல்லப்பட்டு இருக்கிறாரா?

இப்படியான உங்கள் கட்டுரை மூலம் ஒன்று இரண்டு கல்விசார், துறைசார் அனுபவம் உள்ள எம்மவர்களும் தங்கள் கருத்துக்களை சொல்ல தயங்குவார்கள்.

தொலைக்காட்சிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுக்கு டாக்டர்கள், எஞ்சீனியர்கள், வக்கீல்கள் வரவில்லை என்று புலம்புகின்றார்கள். ஆனால்.. இப்படியான ஏபீ பதங்கள் அவ்வாறானவர்கள் உள்ளீர்க்கப்படுவதற்கு இன்னமும் தடையாக அல்லவோ இருக்கும்?

நேரடியாகவே விடயத்துக்கு வருகின்றேன். அண்மையில் ராஜன் கூல் என்பவரின் கட்டுரை ஒன்றை நுணாவிலான் அவர்கள் யாழில் இணைத்து இருந்தார். அதில் கட்டுரையாளரால் தாயகப் பிரச்ச்சனை ஆராயப்பட்டு இருந்தது. கட்டுரையில் என்ன எழுதப்பட்டு இருக்கின்றது என்று அறியாமலே இவர் ஏபீ என்றவகையில் தன்னை இனம் காட்டிக் கொள்கின்றார் என்று கருத்துக்கள் கூறப்பட்டது.

ஒருவரும் தாங்கள் ஏபீக்கள் என்று சொல்லிக்கொண்டு கருத்து கூறுவதில்லை. ராஜன் கூல் பற்றி பார்த்தால் அவர் ஏற்கனவே துறைசார், கல்விசார் பட்டங்களை எடுத்து இருக்கின்றார், நம்மவர்களின் துரோகி பட்டம் உட்பட.

ஆனால்... நாங்கள் அவர் ஏபீ என்று தன்னை காட்டிக்கொள்கின்றார் என்பது எங்கள் இயலாமையையே காட்டுகின்றது.

ஒன்றை மட்டும் விளங்கிக்கொள்ளுங்கள்:

மனிதாபிமான பிரச்சனை பற்றி கதைப்பதற்கு ஒருவன் படித்தவனாகவோ, படிக்காதவனாகவோ இருக்கத் தேவையில்லை. அவன் ஓர் மனிதனாக இருந்தால் போதும். மனிதாபிமான கோணத்தில் பார்க்கப்படும் ஓர் விடயத்தை நீங்கள் ஏபீ அணுகுமுறையுடன் கலந்து பார்த்தால் அது உங்கள் தவறுதான்.

படிச்ச மனுசன் என்று தன்னை எம்மவர்கள் யாராவது சொல்வார்கள் என்பதற்காக யாராவது தாயக பிரச்சனை பற்றி அலசுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வோம். மாற்றுக் கருத்துக்களை வெல்வதற்கு துரோகி, ஏபீ பதங்கள் பயன்படுத்தப்படத் தேவையில்லை. இதுவே எனது தாழ்மையான கருத்து. நன்றி!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கம்..! நன்றிகள் இன்னுமொருவன்..!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை இன்னுமொருவன்.

பல சந்தர்ப்பங்களில் பேச மட்டுமே தெரிந்த படித்தவர்களுடன் வாதாட முடியாமல் தத்தளித்திருக்கிறேன். காரணம் பட்டத்தை வைத்துக் கொண்டு அவர்கள் எல்லாம் வல்லவர்கள் என்று எங்கள் சமூகம் கொடுக்கும் முன்னுரிமையும் மரியாதையுந்தான். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் சிறப்புச் சித்தி எய்தாதவர்கள் இன்னொரு பாடத்தில் சித்தி எய்தி முழுமை பெற்றிருப்பார்கள் ஆனால் குறிப்பிட்ட பாடத்தில் அடிப்படையே அவர்களுக்குக் கோளாறாக இருக்கும், இருப்பினும் அவர்கள் இன்னொரு பாடத்தில் பல்கலைக்கழகம் சென்று கிளிப்பிள்ளைச் சித்தியடைந்திருப்பதால் அடிப்படைக் கோளாறு இருந்தாலும் அங்கீகரிக்கப்பட்டிருப்பார்

Edited by valvaizagara

இது எங்கள் சமூக வழமை... மாற்ற முடியாதது.

பல்கலைக்கழக பட்டம் பெற்றவனை படித்தவன் என்று நீங்கள் கூப்பிட்டால் அவன் பாவம் என்ன செய்வான்? அதே சமயம் பல்கலைக்கழக பட்டம் பெற்ற ஒருவன் கருத்துகூறும்போது அவன் ஏபீ என்றநிலையில் இருந்து கருத்து கூறுகின்றான் என்று நீங்கள் நினைத்தால் அது யார் தவறு சகாரா அக்கா?

மேலே கட்டுரையில்.. கருத்தை பார்க்காது கருத்தைகூறுபவன் பார்க்கப்பட்டு இருக்கின்றான். யாரோ தாயகம்பற்றி அலசி கருத்து எழுதி இருக்கின்றார்கள். அப்படி ஒருவர் கருத்து எழுதியதன் காரணம் ஏபீ அங்கீகாரம் பெறுவது அல்லது தன்னை ஓர் ஏபீயாக காட்டிக்கொள்வது என்றவகையில் கட்டுரை சாடுகின்றது.

அதாவது நேரடியாக கள அனுபவம் இல்லாதவர்கள் தாயக பிரச்சனையை அலசிப் பார்ப்பதற்கு அருகதை அற்றவர்கள் என்பதே கட்டுரையின் சாரம்சம்.

ஆனால்...

இப்படி சொல்கின்ற நாங்களே தாயகம் பற்றி ஒரு மயிரும் தெரியாத.. தாயகத்தில் காலடிகூட வைக்காத ஓர் வெள்ளைக்காரன் அதுவும் ஓர் வக்கீல் ஏதாவது சொன்னால் பொத்திக்கொண்டு கேட்போம். அவன் கருத்தை ஏபீ பதம் கொடுத்து மலினப்படுத்தமாட்டோம். அவனது அலசலை ஆகா ஓகோ என்று பாராட்டுவோம்.

இதுவும் எங்கடை சமூக வழமைதான். மாற்றப்படவேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

படிச்ச மனுசன் என்று தன்னை எம்மவர்கள் யாராவது சொல்வார்கள் என்பதற்காக யாராவது தாயக பிரச்சனை பற்றி அலசுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

கலைஞன்.. நீங்கள் கனடாவிலதானே இருக்கிறீங்கள்? :D

படித்த தமிழரின் அமைப்பு எண்டு வெளிப்படையான பெயரோடையே ஒரு அமைப்பு இருக்குது இங்க..! நானும் ஒரு மெம்பர்..! :D நானும் இடைக்கிடை யோசிப்பன்.. டிகிரி இல்லாட்டில் அம்பேல்தானா எண்டு..! நீங்கள் என்னடா எண்டால்...

படிச்சவன் சொன்னால் மற்றவன் கேட்டுக்கணும்.. இதுதான் அப்ப மட்டுமில்லை.. இப்பவும் எதிர்பார்ப்பு..!

கனேடிய தமிழர் ஐக்கிய ஜனநாயக அமைப்பு என்றும் ஓர் அமைப்பு இருக்கிது. :D இதன் அடிப்படையில ஜனநாயகத்தையும் துவம்சம் செய்து இன்னுமொருவனை ஒரு கட்டுரையை எழுதச்சொல்லுங்கோ டங்குவார்.

  • தொடங்கியவர்

கலைஞன்,

யாரையும் மட்டம் தட்டுவது எனது நோக்கமல்ல. பட்டங்கள் பெற்றவர்களை மட்டம் தட்டுவதால் எனக்கு எத்தகைய நன்மைகள் ஏற்படலாம் என்று நீங்கள் கருதுகின்றீர்கள் என்று எனக்குப் புரியவில்லை (ஏனெனில் என்னிடமும் பட்டங்களும் கல்விசார் தகமைகளும் உள்ளன). போராட்டத்தின் இன்றைய நிலைக்கு சான்றிதழ்கள் அற்ற தலைமை தான் காரணம், ஆயுதப் போராட்டம் தவிர்க்கப்பட்டு நழுவல் வழுவல் கல்விமான்கள் அரசியல் நடத்தியிருந்தால் விடுதலை கிடைத்திருக்கும் என்பன போன்றதுமான கருத்துக்களோடும் அக்கருத்துக்களைத் தன்னலம் சார்ந்து; நாசூக்காக முன்வைப்பவர்களோடும் மட்டும் தான் எனது வழக்கு.

மேலும் “எடியுகேற்றட் பீப்பிள்” எமது மக்கள் வாயால் தாம் “எடியுகேற்றட் பீப்பிள்” என்று கூறக் கேட்க விரும்பமாட்டார்கள் என்கிறீர்கள். ஆனால் உண்மையில் எமது சமூகத்தில் உள்ள கல்வி மீதான வெறித்தனம் மற்றும் பட்டம் பெறாதவர்களின் பெருமூச்சு என்பன சான்றிதழின் அடிப்படையில் மட்டும் (அதாவது புலமை சார் செயற்பாடுகள் மத்திமமாய் இருக்கையிலும் கூட) மரியாதை அல்லது அங்கீகாரம் பெறுவதை எமது சமூகத்திற்குள் மிகவும் இலகுவாக்கியுள்ளது. சான்றிதழை மட்டும் வைத்துக் கொண்டு அங்கீகாரம் தேடுபவர்களிற்கு நமது கல்வி வெறி கொண்ட சமூகம் வரப்பிரசாதம் என்பது யாரும் மறுக்கமுடியாதது.

இனி இதயச்சந்திரன் முதலான உங்களது வாதம் சற்றுக் குளப்பமாய் உள்ளது. தாயக நிலவரம் பற்றிய கட்டுரை எழுதுவதால் மட்டும் கற்றவர் என்ற அங்கீகாரம் பெற்றுவிடலாம் என்பதுவல்லவே நானும் நீங்களும் இங்கு கதைத்துக் கொண்டிருப்பது. மாறாக, தமது சான்றிதழ்களின் (அது எத்துறையாயினும்) அடிப்படையில் மட்டும் தம்மைக் கல்விமான்கள் என்று கூறிக்கொண்டு, தாம் கல்வி மான்கள் என்பதால் தாம் தாயகப் பிரச்சினை தொடர்பில் முற்றும் அறிந்தவர்கள் என்ற நிலைப்பாடுடையவர்கள பற்றியே நாம் கதைப்பாதாக நான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன். ஏனெனில் “தலைவர் சான்றிதழ்கள் பெறாதவர் என்பதனால் தான் அவரால் உலக ஒழுங்கை உள்வாங்க முடியாது போனது, மாறாக தலைமைத்துவத்தை நழுவல் வழுவல் போக்குடைய கல்விமான்கள் கொண்டிருந்திருந்து, ஆயுதப் போராட்டம் தவிர்க்கப்பட்டிருந்தால் எங்கோ நாம் போயிருப்போம்” என்பன போன்ற கருத்துக்கள் தொடர்பில் தானே கட்டுரையில் பேசப்பட்டுள்ளது.

மனிதாபிமான விடயத்தால் உந்தப்படுவதற்கு சான்றிதழ் தேவை இல்லை என்கிறீர்கள். ஆனால் இங்கு என்ன பிரச்சினை என்றால், மனித அவலம் நிகழ்கையில் அனுசரிதும் அமைதியாயும் கற்பனை இன்றியும் இருந்தவர்கள், இன்று தலைவர் சான்றிதழ் இல்லாமையால் நாசமாக்கினார் என்கிறார்கள். மேலும் பாருங்கள், “தொலைக்காட்சியில் கவன ஈர்ப்பு; நிகழ்விற்கு டாக்டர்கள் எஞசினீயர்கள் வரவில்லை என்று புலம்புகின்றார்கள்ஆனால் இப்படியான எடியுகேற்றட் பீப்பிள் போன்ற பதங்கள் அவ்வாறானவர்கள் உள்ளீர்க்கப்படுவதற்கு இன்னமும் தடையாக அல்லவா இருக்கும்” என்றும் நீங்கள் தான் எழுதுகின்றீர்கள். ஆக சான்றிதழ் வைத்திருப்பவர்களை பாடுபட்டு உள்ளிழுக்க வேண்டும் என்கிறீர்கள்.

சொன்னதைக் கேளாது சொன்னவரைத் தாக்குகிறேன் என்கிறீர்கள். ஆனால் கட்டுரையில் இன்றைய நிலையில் புலிகள் தொடர்பில் “எடியுகேற்றட் பீப்பிள்” என்று தம்மைத் தாமே கருதபவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களின் ஓட்டைகள் பற்றித் தானே பேசப்படுகின்றது. தலைவர் சான்றிதழ் இல்லாததால் போராட்டம் தோற்றது மாறாக நழுவல் வழுவல் அரசியல் ஆயுதப்போராட்டத்திற்குப் பதில் நிகழ்த்தப்பட்டிருந்தால் எல்லாம் வென்றிருக்கும் என்று ஒரு கருத்து இருக்கையில், ஆயுதப் போராட்டத்திற்கு முன்னிருந்து நழுவல் வழுவல் அரசியல் எவ்வாறு இருந்தது என்றும் படித்த பேர்வழிகளாகத் தம்மைக் காட்டிக கொள்ள விரும்புவோர்--அதாவது தற்போது குறிப்பிட்ட புலி விமர்சனம் செய்வோரின் வகையறாக்கள்--எவ்வாறு செயற்பட்டார்கள் என்றும் சொன்னால் அது எவ்வாறு தனிநபர் தாக்குதல் ஆகும் என்று எனக்குப் புரியவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, இங்கு கூறப்படும் சான்றிதழ் மனநிலை இக்கட்டுரை உருவாக்கியதல்ல, உள்ள ஒன்று பற்றி பேசப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகத்தில் படித்தவனை எடியுகேற்றட் பீப்பிள் என்று நீங்கள் கருதின் அவன் என்ன செய்வான் என்கிற நீங்கள் மேலே டொக்ரர் எஞ்சினியர் பற்றிய கருத்தையும் முன்வைத்திருப்பது முரண்படுகிறது.

ஜனநாயக அமைப்பொன்று தமிழரிற்கெதிராய்க் கனடாவில் செயற்படுவதால் ஜனநாயகத்தை எதிர்த்து எழுதச் சொல்லவது என்பது, கல்வி என்றதன் மீதாக நான் ஒட்டுமொத்தமாய்த ;தாக்குவதாய் நீங்கள் காட்ட விழையும் ஒரு செயல். மேலே தெளிவாகக் கூறியுள்ளது போல, எனது வழக்கு கல்வி மீதானதல்ல, மாறாக “சான்றிதழ் மனநிலை” பற்றியது. அதாவது, குறிப்பிட்ட மேற்படி விமர்சனங்கள் மற்றும் விமர்சகர்கள் எவ்வாறு சான்றிதழ்களை நாசூக்காக தமக்கு அங்கீகாரம் ஆக்குகிறார்கள் என்பது பற்றியது மட்டுமே.

Edited by Innumoruvan

எமக்குள் இருக்கும் வர்க்க சாதிய ஏற்றதாழ்வுகளை கடந்து செல்லவும் நிலைநிறுத்தவும் கல்வி பிரதான காரணியாக இருக்கின்றது. நீண்டகாலமாக சாதியை அழிக்க முடிவதில்லை. அது மரபணுவில் கலந்த ஒன்றுபோல் உருவாகிவிட்டது. ஒரு குழந்தை பெயர் இன்றி பிறந்த போதிலும் விருப்பு வெறுப்புக்கப்பால் குறித்த சாதியாய் பிறக்கின்றது. இந்த ஏற்றதாழ்வு என்பதை கடைசிவரை சரிசெய்யவோ சம நிலைப்படுத்தவோ முடியாமல் போகும் பட்சத்தில் கல்வி இதில் ஆதிக்கம் செலுத்துகின்றது. கல்விமான் சாதி கடந்த ஒரு பொதுமை. டொக்டர் இன்ஜீனீயர் போராசிரியர் போன்றன ஒரு தளத்தில் சாதிகடந்து சமாந்திரம் அடைவதற்கான கருவியாக பாவிக்கப்படுகின்றது. இதனால் மிக மோசமான போட்டி முரண்பாடுகள் ஆதிக்க மனப்பான்மை கல்வித்தராதரதம் உயர உயர அதிகரிக்கின்றது. பொருளாதரா வசதிக்கான கல்வித்தராதர உயர்வு என்ற கருத்து எமது சமூகத்துக்கு முற்று முழுதாக பொருந்துவதில்லை மாறாக ஏற்றதாழ்வுகளை கடந்த சமாந்தர நிலையை அடைவதற்கான கருவியாகவும் இது நீண்டகாலமாக இருந்துவருகின்றது. எமது இனம் குறித்தும் அதன் விடுதலை குறித்தும் ஒரு பொதுக் கருத்துக்கோ அனுசரித்துப்போகும் நிலைக்கோ எமது கல்விச்சமூகத்தில் என்றும் வரமுடியாமல் போவதற்கும் இது காரணமாகின்றது. இதே கல்வியில் மேம்பாடும் உத்தியோகமும் அன்று தென்னிலங்கையில் வறிய சிங்கள மக்களை எள்ளிநகையாடியது இனவாதத்தீயில் எண்ணை ஊற்றுவதாக அமைந்தது. சிங்கள பேரினவாதத்தை குறிப்பாக யாழ் நுலகத்துக்கு வரவழைத்ததும் இந்த கல்வியில் உள்ள போட்டிநிலையின் எல்லைகடந்த தன்மை என்ற நுணுக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் கூறும் இந்த கல்வித்தராதர ஓட்டை என்பது பல கோணங்களில் விளக்கமாக ஆராயப்பட வேண்டியது. எந்த ஒரு சமூகத்திலும் கல்விமான்கள் அந்த சமூகத்தை வளர்க்க பயன்படுவார்கள் எங்களுக்கு அது நேரெதிரானது நாம் சிதைந்து போக இது வழிகோலுகின்றது. சிங்களவனின் வெட்டுப்புள்ளிக்காக நாம் எகிறினோம் அதே நேரம் யாழ்பல்கலைக்கழகத்தில் உத்தியோகம் பார்க்கமுடியாமல் போன சாதிகுறைந்த போராசிரியர்கள் விலத்திப்போனவர்கள் என்று பல சம்பவங்கள் உண்டு. சிறப்பாக தேர்வெழுதியும் குறைவாக மதிப்பெண்போட்டு தற்கொலைசெய்த மாணவிகள் உண்டு. போராட்ட ஆரம்ப காலம்வரை இந்த நிலை இருக்கவே செய்தது. எல்லாம் மூடிமறைத்து மிதித்து துவைத்து இந்த கல்வித்தராதரப்போட்டி செய்யும் அக்கிரமம் என்றைக்கும் திருந்தப்போவதில்லை.

  • தொடங்கியவர்

டங்குவார், வல்வைசகாரா உங்கள் கருத்துக்கு நன்றி.

சுகன்,

உங்களது கருத்தோடு நான் உடன்படுகின்றேன். கல்வியினைக் கல்விக்காகவும், அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வ நிமித்தமும் கற்பவர்கள், தாம் கற்றது எவ்வளவு சொர்ப்பம் என்பதை திருக்குறள் கூறுவது போன்று நன்கறிவர். மேலும், இவ்வாறு கல்வியைக் கல்விக்காகவும் அறிவிற்காகவும் கற்றவர்களிற்கு "சான்றிதழ் மனநிலையும்" பினாத்தல்களும் தேவையற்றது. ஆனால் எமது சமூகத்தில் கல்வி என்பது நீங்கள் கூறுவது போன்று இன்னோரன்ன காரணங்களால் அங்கீகாரம், அதிகாரம், சீதனம் முதலிய ஏதேதோ தொடர்பில்; எழுவதோடு தமது கல்வித் தராதரங்களை ஓயாது மற்றவரிற்குத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு நிலையும் உள்ளது.

Edited by Innumoruvan

நீங்கள் இந்தக்கட்டுரை எழுதுவதற்கு காரணமாக அமைந்த கட்டுரைகளை, கட்டுரை மூலங்களை, செய்திகளை இங்கு இணையுங்கள் இன்னுமொருவன். அப்போதுதான் மேலே நீங்கள் சொன்ன பதில் கருத்துகளிற்கு - பதில் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்கு சம்மந்தமாக - என்னால் மேற்கொண்டு கருத்துகூறமுடியும். நன்றி!

  • தொடங்கியவர்

கலைஞன்,

மேற்படி கட்டுரையை எழுத்தத் தூண்டிய பதிவுகள், பின்னூட்டங்கள், யாழ்களம் சார்ந்து யாழ்களத்திற்கப்பாலான கலந்துரையாடல்கள் என்பனவற்றின்; மூலங்கள் அனைத்தையும் இணைக்க முடியாதுள்ளமைக்கு வருந்துகின்றேன். நீங்கள் கூறுவது ஏற்புடையது தான், இவ்வாறு ஒரு கட்டுரை எழுதமுன்னர் மேற்படி தரவுகளை நான் தயார் செய்து வைத்திருக்காமை தவறே.

ஆனால் மேற்படி கருத்துக்கள் என்னை அடைந்தமையால், அக்கருத்துக்களை நான் புரிந்து கொண்டதன் அடிப்படையில் (எனது புரிதல்கள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன) மட்டுமே மேற்படி கட்டுரை எழுதவேண்டிய உந்துதல் எனக்குள் ஏற்பட்டது. ஒருவேளை எனது புரிதல்தல்தான் தவறாகவும், மேற்படி கருத்துக்களை என்னைத் தவிர வேறு எவருமே எம் சமூகத்தில் கேள்விப்படாதனவாகவும் இருக்கும் பட்சத்தில் இக்கட்டுரை அழிக்கப்பட வேண்டியது என்பதை ஏற்றுக் கொள்கின்றேன்.

மன்னிக்கவும் இன்னுமொருவன். இந்தக்கட்டுரையை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அது அப்படியே இருக்கட்டும். நான் இந்தக்கட்டுரையுடன் முரண்டு பிடிப்பதற்கு அடிப்படைக் காரணம்... நீங்கள் ஆரம்பத்தில் சொன்னது போல் புத்திசீவிகள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் அல்லது இனம் காணப்பட்டவர்கள் இன்னமும் மையப்புள்ளியில் இருந்து விலகிச் செல்லக்கூடாது என்பதே.

இது விரிவாக சிந்தித்தால் ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக இந்த வாதம் விரிந்து செல்லும். ஏன் என்றால் தாங்கள் புத்திசீவிகள் என்று கூறிக்கொண்டு மற்றும் தலைவர் படிப்பறிவு அற்றவர் என்று குறிகாட்டி முழுத்தமிழர் போராட்டத்தையுமே ஒருசிலர் முட்டாள்தனமாக வர்ணிப்பவர்கள்.

ஆனால்.. இப்படியான சிந்தனை கொண்டவர்களை விட கல்விசார், தொழில்சார் தகமை, அனுபவம் கொண்ட ஆனால்... வாயை பொத்திக்கொண்டு இருக்கின்ற - அதாவது மையப்புள்ளி நோக்கி உள்வாங்கப்படாத பலமடங்குகள் எண்ணிக்கையான உறவுகள் எம்மிடையே இருக்கின்றார்கள். உங்கள் கட்டுரையின் மூலம் சாடப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் ஏவப்படுகின்ற அம்புகள் தவறானவர்கள் மீது தாக்குப்படாமல் இருப்பதற்காகவே நான் எனது கருத்துக்களை கூறுகின்றேன்.

உங்களுக்கு தெரியும்தானே. ஏற்கனவே எம்மவர்களிடையே பின்னூட்டல்கள் விரும்பப்படுவது இல்லை. ஏதாவது சொன்னால் பலருக்கு பத்திக்கொண்டு வந்துவிடும். உடனேயே துரோகி என்று சொல்லத் தொடங்கிவிடுவார்கள்.

இவ்வாறான சமூக கட்டமைப்பில் வாழுகின்ற எங்களுக்கு இன்னொரு தலையிடி வரக்கூடாது. நீங்கள் இந்தக்கட்டுரையை எழுதியன்மூலமே இந்த ஆபத்து பற்றி பேசக்கூடியதாக இருந்தது. எனவே உங்கள் முயற்சிக்கும், நேரத்திற்கும், கட்டுரைக்கும் நன்றி!

மேலும், நான் ஒருவன் மாத்திரம்தானே எதிர்மறையான பின்னூட்டல் இந்தக்கட்டுரைக்கு தந்து இருக்கின்றேன். பெருன்பான்மையானவர்கள் இந்தக்கட்டுரை ஆக்கபூர்வமானதாய் இருப்பதாகத்தானே சொல்கின்றார்கள். எனவே, அதை அழித்து ஒன்றும் செய்துவிடாதீர்கள். நன்றி!

Edited by கலைஞன்

இன்னுமொருவன்.. நெத்தியடி கட்டுரை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் ஏபி க்களைப் பற்றிப் பேசும் போது யாருக்குக் கோபம் வரும்?

- நான் ஏபி எண்டு நினைக்கிறவனுக்கு கோபம் வரும்

- தனது ஏபி தகுதியை, புலிகளின் தோல்விக்கு வியாக்கியானம் சொல்லப் பாவித்தவருக்கும் வரலாம்

-அல்லது, புலிகளின் இராணுவ முன்னெடுப்புக்குரிய அடிப்படைக் காரணங்களை ஆராய மனமின்றி அந்த முன்னெடுப்பிலுள்ள குறைகளை மட்டுமே (ஏதோ ஒண்டில் ஏதோ புடுங்கிய மாதிரி!) ஆராயும் "அரைகுறை" புத்தி ஜீவிகளுக்கும் கோபம் வரலாம்.

இரத்தமும் சதையும் கொடுத்துப் போராடியவனை தோல்விக்குக் காரணமாய்க் காட்ட ஏபி க்களுக்கு மனமிருந்தால் அந்த ஏபிக்கள் மீது விமர்சனம் வரும் போதும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டுமில்லையா? என்னப்பா, நீங்கள் தான் "மாற்றுக் கருத்து ஜனநாயகத்த" க் கண்டு பிடிச்சீங்கள். அத இன்னுமொருவன் பாவிச்சால் ஏன் நீங்களே நக்கலும் அடிக்கிறீங்கள்?

எம் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் கற்றவர்கள் (ஏபி !!) அதிகமாக பங்கு கொண்டு இருந்ததும், பல்கலைகழக சமூகத்தின் நேரிடையான பங்களிப்பு இருந்ததும், அதன் பின் புலிகள் உட்பட பல இயக்கங்களின் பல நூற்றுக் கணக்கான நடவடிக்கையினால் அவர்கள் போராட்ட சூழலில் இருந்து முற்றாக விலகி இருந்தமையும் தான் வரலாறு. தேசிய விடுதலை போராட்டத்தின் இன்றைய மோசமான விளைவுகளுக்கான காரணிகளில் ஒன்றாகவும் இவை இருக்கின்றன

இத்தகைய ஒதுங்கி இருக்கும் ஏபி க்களின் பங்களிப்புகளையும் தாயக விடுதலை நோக்கி இழுக்க வேண்டிய காலகட்டத்தில், இன்னொருவனின் இந்த கட்டுரை, மேலும் எதிர்வினையான விளைவுகளைத் தான் குறிப்பிட்டு நிற்கின்றது. போராட்டத்தின் தற்போதைய தோல்வி நிலையை நுணுக்கமாக ஆராய முற்படுபவர்களை எல்லாம் ஏபீ க்களாக முத்திரை குத்தி வைப்பதற்கான முதல் எழுத்தை இந்த கட்டுரை ஆரம்பித்து வைத்துள்ளது. பிரபாகரனை விமர்சிப்பவர்கள் துரோகிகள் என்பதை போல், கலைஞன் சொல்வது போல் அவரின் தலைமயால் முன்னெடுக்கப் பட்ட தமிழ் தெசிய இராணுவ அரசியல் போராட்டத்தின் இன்றைய தோல்வி நிலையை ஆராய்பவர்கள் ஏபி க்களாக பார்க்கப் பட போகின்றனர்

நன்றி

இன்னுமொருவன் உங்கள் ஆழமான கருத்தான அலசலுக்கு நன்றி..

தராசு போன்று சரியான நீதியாக எழுதியுள்ளீர்.. இதனை உலகமுள்ள ஈழத்தமிழர்களின் கைக்கு போய் சேரவேண்டும்.. தோல்விகளின் மூலம் கிடைத்த பாடங்களினால் சிறந்த வெற்றி கிடைக்கவேண்டுமானால் எமது குறைகள் எல்லாத்தரப்பிலும் கலையப்பட்டு அதன் மூலம் சிறந்த பலனை அடையவேண்டும்..

எமது இனம் விடுதலை பெறவேண்டும் என்பதில் எம்மக்களில் 90% வீதமக்களுக்கு மேல் உறுதியாகவுள்ளனர்..

ஆனால் ஒரு முறை சருகிவிழ வைக்கப்பட்டுள்ளது.. இதன் காரணங்கள் சரியாக கண்டு பிடிக்கப்பட்டு திருந்துவதன் மூலம் அடுத்த கட்டம் உறுதியாக நகர்த்தப்படலாம்...

இஸ்ரேல் மக்கள் வரலாற்றின் மூலம் நாம் ஒன்று பட்டு செயல்பட்டு எம்மின வாழ்வை நிலையனதாக நிமதியானதாக உறுதிப்படுத்தி எமது இலக்கை நகர்த்துவோம்... தமிழன் என்று ஒன்று படுவோம்...முதலில் மற்ற இனஙளை பார்த்து திருந்துவோம்..எம்மக்களிலினுள

் முதலில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்ப்போம்( படித்தவர், சந்தர்ப்பம் இன்மையால் படிக்காதவர்கள் எல்லோரும் தமிழர்களே)..

எல்லோரும் அணைத்து செல்லப்படவேண்டியவர்களே..

ஒன்றுபட்டு செயல்பட்டால் உண்டு சிறந்த வாழ்வு ஒற்றுமை இல்லையெனில்????

எமினத்தில் விழிர்ப்புணர்வு ஏற்பட்டு விட்டால் எவறாலும் தடுக்க முடியாது

எம்மினத்தின் எதிர்கால ஒளிமயமான வாழ்வை... தொடரட்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

(ஏனெனில் சிங்களரே தமிழ் பிரபலங்களில் தங்கியிருந்தமை: சேர் பொன் இராமநாதன், அருணாச்சலம், பொன்னம்பலம், இன்ன பிறர்) பலரும் அறிந்தது என்பதனால்) என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம். இல்லை இத்தகைய தமிழரின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று தான் கொண்டாலும் கூட, மேற்கின் உறவு பேணிய தமிழரின் வீச்சுக் கணிசமாக இருந்தது என்றாவது ஒத்துக் கொள்ள வேண்டும். கேம்பிரிஜிலும் ஒக்ஸ்போர்டிலும் தமிழர்கள் படித்தார்களோ இல்லையோ அனுமதி பெற்றிருந்தார்கள். ஆனால், இத்தமிழரால், அதாவது கல்விமான்கள் என்று எமது சமூகம் ஏற்றுக் கொண்டு அவர்கள் என்ன ஆங்கிலம் ஆரோடு பேசினார்கள் என்று பேசிக்காட்டி மகிழ்ந்த கல்விமான்கள், இலங்கையில் உருவாகிவரும் தமிழரின் பாதுகாப்பின்மை பற்றி மேற்கின் அவதானத்தைப் பெற முடியவில்லை
.

கட்டுரை படித்ததில் நான் புரிந்து கொன்டது..."ஏபி"க்களும் ஒன்றும் செய்யவிலை" அஏபி"க்களின் பங்களிப்பால் இந்த போராட்டம் ஒரளவாவது உலகமயமாக்கப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்குது போல.ஆனால் "ஏபி".."அஏபி" இருவரின் பங்களிப்புடன் தான் இந்த போராட்டம் முன்னிலைப்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை.

மேலும் சிறிலங்கா தமிழர்களுகாக குரல் கொடுக்காத தமிழ் " ஏபி"க்களுடனும் "அஏபி"க்களுடனும் கூட்டு சேர்ந்து உலகை தம்வசம் வைத்திருக்கிறது.

அகதிமுகாங்களுக்கு கூட"ஏபி" க்களின் பெயரை(சேர் பொன் இராமநாதன், அருணாச்சலம், பொன்னம்பலம்)வைத்து லாபம் தெடுகிறார்கள்."அஏபி"க்களை ஜனநாயகவாதிகள் என்ற முத்திரை குத்தி அரசியல் நடத்த விட்டுள்ளார்கள்.

கட்டுரைக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

வசிசுதா, ஜஸ்ரின், குக்கூ, நிழலி மற்றும் புத்தன் உங்கள் அனைவரதும் கருத்துக்கு நன்றி.

நிழலி, "எடியுகேற்றட் பீப்பிள்" என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் ஒரு மனவமைப்புடையோர் போராட்டத்தின் இன்றைய பின்னடைவுகளிற்கு "தலைமையின் சான்றிதழி;ன்மை" சார்ந்து கற்பிக்கும் காரணங்கள் மற்றும் விமரிசனங்களிற்கான எதிர்வினை மட்டுமே இக்கட்டுரை. இவ்வாறு ஒரு எதிர்வினைக் கட்டுரை எழுதுவதால் ஒரு சாரார் போராட்டத்தை விட்டு விலகிவிடுவார்கள் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்றபோதும் உங்களது கருத்தை உள்வாங்குகின்றேன். அத்தோடு, பல்கலைக்கழக சமூகம் ஆரம்பத்தில் ஆதரவாய் இருந்து பின்னர் விலகியது என்ற உங்கள் கருத்துத் தொடர்பில் இரு கருத்துக்களை முன்வைக்கின்றேன். ஒன்று ஆரம்பத்தில் மட்டுமல்ல இறுதிவரை பல்கலைக்கழகங்களில் குறிப்பிடும் அழவிற்கு மாணவர் பங்களிப்பு இருந்தது தான். மாணவர் பருவத்து பங்களிப்பிற்கும் வளர்ந்தவர்களாக இன்னபல சுமைகளோடும் சிக்கல்கள் ஆபத்துக்களோடும் பங்களிப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. பல்கலைக்கழக நாளில் பங்களித்துப் பின்னாளில் விலகிவிட்ட பலர் தமது விலகலிற்குப் புலிகளைக் காரணமாகக் காட்டுவது வழமையாயினும், தனிப்பட்ட ஆபத்துக்களைத் தவிர்த்தல் உத்தியோகத்தைக் காத்துக் கொள்ளளல் முதலிய சிந்தனைகளையும் பலரின் போராட்டத்திலிருந்து விலகியமைக்கான காரணங்களில் இருந்து நாம் ஒதுக்கி விடமுடியாது. இரண்டாவதாக, "எடியுகேற்றட் பீப்பிள்" என்று இங்கு நான் கூறியமை ஒரு குறிப்பிட்ட மனவமைப்பை மட்டும், அதாவது சான்றிதழ் மனவமைப்பை மட்டும் குறிப்பதற்கே. இதை வைத்து நான் கற்றவர்களிற்கும் கல்விக்கும் எதிராய் கடைவிரிக்கின்றேன் என்று கருதிவிடாதீர்கள். மேலும் வெளிநாடுகளில் வாழ்ந்த, புலிகளின் கொள்கைகளோடு முரண்பட்டவர்களாயினும் கூட, இதயசுத்தியோடு தமிழர் நலம் மனித நலம் விரும்பியவர்கள் எத்தனையோ பங்குகளிப்புக்களை ஆற்றமுடியும். இங்கு வெளியே எவரிற்கும் பெயர் தெரியா வண்ணம் தம்மால் இயன்ற பங்களிப்புகளை அறிவு சார்ந்து கட்டமைப்புக்களிற்கு அப்பால் நின்று வழங்கி வருபவர்கள் உள்ளார்கள். எனவே புலியைப் பிடிக்காததால் மனிதனை மறந்து வாழ்ந்தோம் என்று எவரும் கூறிவிடமுடியாது.

புத்தன்,

தழிழர்களாகப் பிறந்தவர்களில் மிகப்பெரும்பான்மையானோர் ஏதோ பங்களிப்பினை எப்போதேனும் போராட்டத்திற்கு வழங்கினார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. குறைந்த பட்சம் தமிழர் பற்றிய புள்ளிவிபரங்களில் இலக்கங்களாக அமைந்தமை கூட எனது பார்வையில் பங்களிப்புத் தான். மேலும் போராட்டம் என்பது அனைத்துத் தமிழரின் பெயரால் அனைவரிற்கும் ஆனது தான் என்பதையும் பல தடவைகள் இக்களத்தில் முன்வைத்துள்ளேன். எனது இக்கட்டுரையானது,

போராட்டத்திற்கு இன்னார் இன்னார் பங்களித்தனர் மற்றையோர் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்தனர் என்று சித்தரிக்கும் நோக்கம் உடையது அல்ல. மாறாக, "தலைவர் சான்றிதழ் அற்றவர் என்பதனால் தான் எல்லாம் நாசமாhகியது, நழுவல் வழுவல் தெரிந்த கல்விமான் தலைமை ஒன்று இருந்திருக்குமேயாயின் விடுதலை என்றோ கிடைத்திருக்கும்" என்ற கருத்துக்கான விமர்சனமாக, எதிர்வினையாகவே இக்கட்டுரை அமைந்திருக்கின்றது. இங்கு "எடியுகேற்றட் பீப்பிள்" என்ற பதத்தால் கற்றவர்கள் அனைவரையும் நான் குறிப்பிடவில்லை என்பதையும் எனது வழக்கு கல்வி மீதானதோ கற்றவர் மீதானதோ அல்ல மாறாக "சான்றிதழ் மனப்பான்மை" சார்;ந்தது என்பதையும் மீளவும் கூறிக்கொள்கின்றேன். அத்தோடு துறைசார் தகமைகள் பிரமிக்கும் வகையில் உள்ள பலரின் பங்களிப்புக்கள் போராட்டத்திற்கு இருந்தது என்ற உங்கள் கருத்தில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனின் வெட்டுப்புள்ளிக்காக நாம் எகிறினோம் அதே நேரம் யாழ்பல்கலைக்கழகத்தில் உத்தியோகம் பார்க்கமுடியாமல் போன சாதிகுறைந்த போராசிரியர்கள் விலத்திப்போனவர்கள் என்று பல சம்பவங்கள் உண்டு. சிறப்பாக தேர்வெழுதியும் குறைவாக மதிப்பெண்போட்டு தற்கொலைசெய்த மாணவிகள் உண்டு. போராட்ட ஆரம்ப காலம்வரை இந்த நிலை இருக்கவே செய்தது. எல்லாம் மூடிமறைத்து மிதித்து துவைத்து இந்த கல்வித்தராதரப்போட்டி செய்யும் அக்கிரமம் என்றைக்கும் திருந்தப்போவதில்லை.

நான் கேள்விப்பட்ட ஒரு விடயம் , கிறிஸ்தவர்கள் யாழ் பல்கலை கழகத்தில் துணைவேந்தர் ஆக முடியாது என்பது ......

எங்களடைய சமூகத்தை தலைவர் திருத்த வேண்டும் என்று நினைத்தார் ஆனால் முடியவில்லை ....சில தவறுகள் ஆரம்பத்தில் இழைக்கபபட்டிருக்கலாம் . ஆனால் நாளோட்டத்தில் அவர்கள் தம்மை மாற்றிக் கொண்டார்கள் . கால ஓட்டத்தில் தம்மை திருத்திக் கொள்ள அவர்கள் பின்னிற்க வில்லை ...அவர்கள் எவ்வளவோ சமூக பழக்கவழக்க மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் ...இதனை மறுக்கமுடியாது ....

இயக்கத்தை பற்றி விமர்சிக்கும் பொது , ஒரு விடயத்தை மனதில் வைத்திருக்க வேண்டும் ...தலைவர் மற்றும் பெரும்பாலான தளபதிகள் போராளிகள் தன்னலமற்று தம் சுய வாழ்கையை துறந்தே இந்த போராட்டத்தை நடத்தினார்கள் , அவர்களின் தியாகம் அளவிட முடியாதது வார்த்தைகளினால் சொல்லிவிட முடியாதது ...ஒரு சில தளபதிகள் போராளிகள் விட்ட தவறுக்காக விட்டு கொண்டிருக்கும் தவறுக்காக அந்த உன்னதமான தலைவனையோ போராளிகளையோ விமர்சிக்கும் பொது ஒரு இங்கிதம் வேண்டும் , உரை நடையில் ஒரு கண்ணியம் வேண்டும், இவை ஒரு மிகச் சில ஆய்வுகள், விமர்சனங்களில் தவறியுள்ளது .....

இது எனது தனிப்பட்ட கருத்து ....

  • கருத்துக்கள உறவுகள்

எம் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் கற்றவர்கள் (ஏபி !!) அதிகமாக பங்கு கொண்டு இருந்ததும்இ பல்கலைகழக சமூகத்தின் நேரிடையான பங்களிப்பு இருந்ததும்இ அதன் பின் புலிகள் உட்பட பல இயக்கங்களின் பல நூற்றுக் கணக்கான நடவடிக்கையினால் அவர்கள் போராட்ட சூழலில் இருந்து முற்றாக விலகி இருந்தமையும் தான் வரலாறு. தேசிய விடுதலை போராட்டத்தின் இன்றைய மோசமான விளைவுகளுக்கான காரணிகளில் ஒன்றாகவும் இவை இருக்கின்றன

இத்தகைய ஒதுங்கி இருக்கும் ஏபி க்களின் பங்களிப்புகளையும் தாயக விடுதலை நோக்கி இழுக்க வேண்டிய காலகட்டத்தில்இ இன்னொருவனின் இந்த கட்டுரைஇ மேலும் எதிர்வினையான விளைவுகளைத் தான் குறிப்பிட்டு நிற்கின்றது. போராட்டத்தின் தற்போதைய தோல்வி நிலையை நுணுக்கமாக ஆராய முற்படுபவர்களை எல்லாம் ஏபீ க்களாக முத்திரை குத்தி வைப்பதற்கான முதல் எழுத்தை இந்த கட்டுரை ஆரம்பித்து வைத்துள்ளது. பிரபாகரனை விமர்சிப்பவர்கள் துரோகிகள் என்பதை போல்இ கலைஞன் சொல்வது போல் அவரின் தலைமயால் முன்னெடுக்கப் பட்ட தமிழ் தெசிய இராணுவ அரசியல் போராட்டத்தின் இன்றைய தோல்வி நிலையை ஆராய்பவர்கள் ஏபி க்களாக பார்க்கப் பட போகின்றனர்

நன்றி

"எம் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் கற்றவர்கள் (ஏபி !!) அதிகமாக பங்கு கொண்டு இருந்ததும்இ பல்கலைகழக சமூகத்தின் நேரிடையான பங்களிப்பு இருந்ததும்இ அதன் பின் புலிகள் உட்பட பல இயக்கங்களின் பல நூற்றுக் கணக்கான நடவடிக்கையினால் அவர்கள் போராட்ட சூழலில் இருந்து முற்றாக விலகி இருந்தமையும் தான் வரலாறு."

எமது தேசிய போராட்ட ஆராம்ப காலம் என்பது சரியாக வரயைறுக்கபடாது உள்ளது. கற்வர்கள் ஆரம்பகாலத்தில் பங்கேற்றார்கள் பின்பு பங்கேற்கவில்லை என்பது ஒரு தவறான கணிப்பு.( ) காரணம் பொதுநலவாதிகளான படித்தவர்கள் போராடத்தை முன்னெடுக்க புறப்பட்ட போது சுயநலவாதிகள் மீதமானார்கள் என்பதுதான் உண்மை. இங்கே மேல் உள்ள கட்டுரையை மீண்டும் ஒரு முறை படித்து புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் புரியாதவர்களுக்கு இருப்பதையே சுட்டிகாட்டுகிறேன்.

"பல நுற்றுக்கணக்கான நடவடிக்கையால்" என்ற நிழலிஅண்ணாவின் வசனத்தை என்னால் புரிந்து கொள்ள முடியாது உள்ளது. இதில் எதை உள்ளடக்க நினைக்கின்றீர்கள் என்பது விளக்கம் இல்லாமல் இருக்கின்றது. இராணுவ நடவடிக்கைகளா? ஆனாலும் தம்மிடம் பட்டம் இருக்கின்றது என்பதால் இராணுவ ஆய்வுகளையும் ஏகே என்றால் என்னவென்று தெரியாத நபர்களுடன் ஆராய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்ததை காண கூடியதாக இருந்தது. அது அறிவுரைகள் கேட்பவர்களுக்கு உயிராப்த்தையே கொடுக்கும் என்று உரியவர்கள் புரிந்து கொண்டதால் புறக்கணித்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.

கல்வியை சமூகநலனுக்காக பயன்படுத்தாது தமது சுயநலனுக்காக பயன்படுத்திவிட்டு. சந்தர்பத்தை கை நீட்டி காட்டுவதென்பது. மேலே உள்ள கட்டுரையின் பிரகாரம் அவர்களிடம் பட்டம் மட்டுமே இருந்தது கல்வி அவர்களிடம் இருக்கவில்லை என்பதையே கோடிட்டுகாட்டுகிறது. "சூழ்நிலையை காரணம் காட்டாதே சூழ்நிலையை உருவாக்கு"

தேசிய விடுதலை போராட்டத்தின் இன்றைய மோசமான விளைவுகளுக்கான காரணிகளில் ஒன்றாகவும் இவை இருக்கின்றன

மோசமான காரணிகளில் ஒன்றாக? ஆக இலங்கை பல்கலைகழகங்களில் படித்தவர்கள் ஆர்பாட்டம் செய்திருப்பின் சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவும் ஆயுதம் கொடுப்பதை நிறுத்தியிருக்கும் என்று சொல்ல வருகின்றீர்களா? அல்லது தற்போதைய பிராந்திய ஆதிக்க போட்டியிலும் உலசந்தைகளை கையகபடுத்தும் போட்டிகளிலும் இருந்து அமெரிக்காவும் சீனாவும் ஜப்பானும் ஒதுங்கியிக்கும் என்று சொல்ல வருகின்றீர்களா? அப்போ அர்ஜன்டீனா வறியவர்களின் போரட்டம் படித்த பணக்கார வாக்த்தினால் நோர்வேயின் உதவியுடன் அமெரிக்கா தோற்கடித்ததிற்கு நீங்கள் என்ன வியாக்கினம் கற்று கொடுக்க போகின்றீர்கள்? தண்ணியை ஊற்றி எண்ணையை மேலே மிதக்க வைப்பதுபோல் போராட்டம் என்பது சுயலவாதிகளையும் ஒட்டுண்ணிகளையும் பிரித்துகாட்டியது என்ற அப்பட்மான ஒரு உண்மையை போரளிகள் உலக ஓட்டத்திற்கேற்ப போராட்டத்தை வடிவமைத்த காலத்தை தோல்வி என்று கூறி பினாத்துவதை எந்த வகையில் நியாயபடுத்த விளைகின்றீர்கள்?

"இத்தகைய ஒதுங்கி இருக்கும் ஏபி க்களின் பங்களிப்புகளையும் தாயக விடுதலை நோக்கி இழுக்க வேண்டிய காலகட்டத்தில்........"அயல்வீடு பற்றி எரிந்தால் ஒடி சென்று அணைப்பது அல்லது அதற்கு உதவுவது என்பது மனிதநேயம் பரிவு சமூகநலசிந்தனை. அதைவிடுத்து அயல்வீட்டுகாரன் பத்திரிகைவைத்து எனக்கு அழைப்பு விடுக்கவில்லை அதுதான் நான் பங்கெடுக்கவில்லை என்பது விண்ணாணம். இத்தகய விண்ணாணிகளை உடன் சேர்ப்பதால்தான் தமிழ்சமூதாயம் சீரளியுமே தவிர. அவர்களை ஒன்று சேர்ப்பதால் எந்த பயனும் இல்லை என்று என்னால் அடித்து கூற முடியாதுதான். ஆனால் இல்லை அதில் பயன்பாடுகள் உள்ளன என்று நம்புவோரால் அதை அடித்து விளக்க முடியும் என்பது எனது எதிர்பார்ப்பு.

"போராட்டத்தின் தற்போதைய தோல்வி நிலையை நுணுக்கமாக ஆராய முற்படுபவர்களை எல்லாம் ஏபீ க்களாக முத்திரை குத்தி வைப்பதற்கான முதல் எழுத்தை இந்த கட்டுரை ஆரம்பித்து வைத்துள்ளது."

நுணுக்கமாக ஆராய........? நுணுக்கமாக ஆராய்பவர்களை இந்த கட்டுரை எந்த இடத்தில் சாடியது என்பதை நீங்கள் அறியதரவேண்டும். முழுபூசனிக்காயை சோற்று கோப்பைக்குள் மறபை;பவர்களையே இது சாடியுள்ளது. இந்த இடத்திற்கு எமது போராட்டத்தை கொண்டுவந்தது மாவீரர்களின் ஒப்பற்ற தியாகமே. அவர்கள் தியாகத்தை தியாகம் செய்திருப்பின் எமது போராட்டம் இந்தியாவின் ஏவுதலுக்கு பயன்பட கூடிய ஒரு பாஸ்த்தான் தீவிரவாத போராட்டமாக மட்டுமே இருந்திருக்கும். இதை நீங்கள் ஏற்க வேண்டியதில்லை ஆனால் எதை வைத்து மறுக்கின்றீர்கள் என்று உங்களால் விளக்கம் தர முடியுமா? புலிகளின் மேல் பாரத்தை போட்டுவிட்டு சும்மா இருந்து வேடிக்கை பார்த்தவர்களும் சொந்த இன பெண்களை கூட்டி கொடுத்து கூலி பெற்ற கைகூலிகளும் ஆராய்ச்சி ஆளர்கள் ஆனதையே அது சுட்டிகாட்டுகின்றது.

"பிரபாகரனை விமர்சிப்பவர்கள் துரோகிகள் என்பதை போல்இ கலைஞன் சொல்வது போல் அவரின் தலைமயால் முன்னெடுக்கப் பட்ட தமிழ் தெசிய இராணுவ அரசியல் போராட்டத்தின் இன்றைய தோல்வி நிலையை ஆராய்பவர்கள் ஏபி க்களாக பார்க்கப் பட போகின்றனர்"

பிரபாகரனை விமர்சிப்பவர்கள் துரோகிகள்...???? இந்த கூற்றை எங்கிருந்து எந்த அடிப்படையில் முன்வைக்கின்றீர்களோ நான் அறியேன். ஆனாலும் துரோகதனமான கருத்துக்களை முன் வைப்பவர்களை துரோகி என்று சொல்லாமால் வேறேதாவது வார்த்தை சொல்லியே குறிப்பிட வேண்டும் என்று நீங்கள் கருதினால் அது எம்மட்டு அவசியம் என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும். "இராணு அரசியல் போராட்டத்தின் தோல்வி நிலை" மிக நல்லதொரு தமிழ் வசனம் ஆதாவது பெயர்சொல் வினைசொல் என்பனவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமை பெற்ற வசனம் என்பதை தவிர வேறெதையும் என்னால் புரிந்து கொள்ள முடியாது உள்ளது. ஆனாலும் நிருபனங்கள் ஏதும் அற்று ஆதாரங்களையும் முன் வைக்காது மறுப்பது என்பது கூடாது. ஆகவே நான் மறுக்கவில்லை மாறாக புலிகள் எதை செய்திருப்பின் இந்த இராணுவ அரசியல் போராட்த்தில் தற்போதைய நிலையில்லாது மேன்மைமிகு வெற்றிநிலை வந்திருக்கும் என்று உங்களால் விளக்கம் தர முடியுமா?

ஏபீகளை ஏபீகளாகத்தான் பார்க்கமுடியும்.....

துரோகிகளை துரோகிகளாகத்தான் பார்க்க முடியும்.....

போராளிகளை போராளிகளாகத்தான் பார்க்க முடியும்...... அதைவிடுத்து எல்லோரையும் ஒருவராக பாருங்கள் என்றால்.......... உங்களிடம் நாங்கள் கையேந்தி கேட்பது எங்களுக்கு நல்லதொரு கண்நோயை தாருங்கள் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்விப்பட்ட ஒரு விடயம் , கிறிஸ்தவர்கள் யாழ் பல்கலை கழகத்தில் துணைவேந்தர் ஆக முடியாது என்பது ......

எங்களடைய சமூகத்தை தலைவர் திருத்த வேண்டும் என்று நினைத்தார் ஆனால் முடியவில்லை ....சில தவறுகள் ஆரம்பத்தில் இழைக்கபபட்டிருக்கலாம் . ஆனால் நாளோட்டத்தில் அவர்கள் தம்மை மாற்றிக் கொண்டார்கள் . கால ஓட்டத்தில் தம்மை திருத்திக் கொள்ள அவர்கள் பின்னிற்க வில்லை ...அவர்கள் எவ்வளவோ சமூக பழக்கவழக்க மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் ...இதனை மறுக்கமுடியாது ....

இயக்கத்தை பற்றி விமர்சிக்கும் பொது , ஒரு விடயத்தை மனதில் வைத்திருக்க வேண்டும் ...தலைவர் மற்றும் பெரும்பாலான தளபதிகள் போராளிகள் தன்னலமற்று தம் சுய வாழ்கையை துறந்தே இந்த போராட்டத்தை நடத்தினார்கள் , அவர்களின் தியாகம் அளவிட முடியாதது வார்த்தைகளினால் சொல்லிவிட முடியாதது ...ஒரு சில தளபதிகள் போராளிகள் விட்ட தவறுக்காக விட்டு கொண்டிருக்கும் தவறுக்காக அந்த உன்னதமான தலைவனையோ போராளிகளையோ விமர்சிக்கும் பொது ஒரு இங்கிதம் வேண்டும் , உரை நடையில் ஒரு கண்ணியம் வேண்டும், இவை ஒரு மிகச் சில ஆய்வுகள், விமர்சனங்களில் தவறியுள்ளது .....

இது எனது தனிப்பட்ட கருத்து ....

ஈபிடிபி யுடன் கூடி சொந்த இன பெண்களை 1987-1989 வரை இந்திய இராணுவத்திற்க்கும் பின்பு ஸ்ரீலங்கா சிங்கள காடையருக்கும் கூட்டி கொடுத்த ஒரு கிறிஸ்த்தவ மததத்தை சார்ந்த ஒரு துரோகியின் எடுபிடி பின்நாளில் துணைவேந்தர் ஆனால். உண்மைகளை அப்படியே மறந்துவிட்டு இல்லை மறுத்துவிட்டு ஏதோ புதிய ஜனநாயகம் யாழில் முளைத்துவிட்டது என்று பினாத்த கூடிய எத்தனையோ ஜம்பவான்கள் இந்த யாழ்கருத்துகளத்திலேயே இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.