Jump to content

கோழிப்புக்கை


Recommended Posts

பதியப்பட்டது

.......... இது நம்ம ஊரு ஸ்பெஷல் ....

... அழகான ஊர் .. ஊரை சுற்றி தோட்டங்கள் .... தோட்டங்களில் ஆங்காங்கே பூவரசு ஆடுகாற்களுடன் கிணறுகள் ..... அதன் அருகருகே தென்னோலையால் வேயப்பட்ட சிறு குடில்கள்..... தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுபவர்கள் களைப்பாற, வேலை செய்பவர்கள் இளைப்பாற, நீர் இறைக்கும் இயந்திரங்களை சிலவேளை இரவுகளில் விட்டுச் செல்லவும் இக்குடில்கள் ..... அதனை விட பாடசாலையை கட் அடித்து விட்டோ, மதில் ஏறிப் பாய்ந்து சென்று நாலு போத்தல் கள்ளுகளுடன் ஒதுங்கவும் அருமையான இடம் ... நன்றிகள் குடில்களே!!

... அது என்ன கோழிப்புக்கை?????

.... கள்ளுடன் தோட்ட குடிளுக்குள் ஒதுங்கியாச்சு! ... போட்டால் பசிக்கும் ... சாப்பிட??? .. வீடுகளுக்கு போக முடியாது, முறியும் மட்டும்!! ... அப்ப தோட்ட குடிலுகளுக்குள் ஏதாவது செய்து சாப்பிட வேண்டும்!! அதுவும் வாயுக்கு சுவையாக ... சூடாக ... காரமாக ... உதற்கான கண்டு பிடிப்புத்தான் கோழிப்புக்கை!!!!!!!!!!!!

கள்ளுக்கு போகும் முன் ஊரில் ஒரு தெரிந்த வீட்டில் உள்ள கோழியை அமுக்கியாச்சு .... உரபாக்கில் போட்டுக் கொண்டு .... கொஞ்ச அரிசி, வெங்காயம், மிளகாய், தூள், ... ஒரு பெரிய பாத்திரத்துடன் குடிலுக்குள் ஒதுங்கினால் ..... கோழிப்புக்கை!!!!!

இங்கு ... புலத்தில் ... கொஞ்சம் மொடேனாக ... மெருகூட்டி ... கொஞ்ச ஸ்டைலாக செய்வதானால் ...

தேவையான சாமான்கள்: (ஒரு ஆறு பேருக்கு)

பச்சை குத்தரிசி - 2 1/2 சுண்டு (அண்ணளவாக, கூட போட்டால் அடுத்த நாளுக்கும் மனுசிமார் வைச்சிடுவாளல்)

சிறிய துண்டுகளாக வெட்டிய கோழி - ஒன்று (மேய்ந்து திரிந்த கோழி என்றால் நல்லது (Free Range Chicken). அடைத்து வைத்ததென்றால் சிலவேளை கரையப் பார்க்கும். கோழியில் தோலைத் தவிர வேறொன்றையும் கழிக்கத் தேவையில்லை, எலும்பு, கிலும்பு எல்லாம் போடலாம்)

சின்ன வெங்காயம் - உரிந்துப் போட்டு வெட்டாமலும் வைத்திருக்கலாம்

பச்சை மிளகாய் - நாலு, ஐந்து கூறாக பிளந்தது

மிளகாய்த்தூள் - தேவையான அளவு தூள் ( உறைப்பு கூட வேண்டின் நாலு, ஐந்து கரண்டி போடலாம்)

சிறிய காளான்கள் - வெட்டாமல் போடலாம்

மல்லி இலை அல்லது கருவேற்பிலை - சிறிய அளவு

வாசனை தூள் - பெரும் சீரகம், கறுவா, ஏலக்காய், கராம்பு, சாதிக்காய் எல்லாவற்றையும் போட்டு வறுத்து, பொடியாக்கி வைக்க வேண்டும்.

உப்பு - தேவையான அளவு

தேசிக்காய் - பாதி

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில்(பானையில்) போதிய அளவு நீரை எடுத்து, கொதிக்க வைத்து, அதனுள் பச்சை அரிசியை போட்டு அவியவைக்கவும்(ஏறக்குறை புக்கை செய்வது மாதிரி). ... அரிசி அரை பதத்தில் அவிந்து வந்தவுடன் ... அதனுள் வெட்டிய கோழியையும் போட்டு .. மிளகாய் தூளையும் போட்டு ... தேவையான அளவு உப்பையும் சேர்த்து அவிய விட வேண்டும்!! அத்துடன் வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாயையும் சேர்க்கலாம்.

மு.கு: பச்சை அரிசி அவிய ஆரம்பித்தவுடம் தொடர்ச்சியாக கிண்டிக்(கிளறிக்) கொண்டிருக்க வேண்டும், அத்துடன் மிளகாய் தூளையும் போட்டால் சிலவேளை அடிப்பிடிக்க(பாத்திர அடி எரிய) ஆரம்பிக்கப் பார்க்கும். அதனை தவிர்க்க தொடர்ந்து துலாவிக் கொண்டிக்க வேண்டும். அடிப்பிடித்தால் கோழிப்புக்கை வாயில் வைக்க இயலாது, சக்கரைப் புக்கை அடிப்பிடித்தால் எப்படியோ, அதேபோல்!!!

அவிந்து வரும் போது தண்ணீர் தேவைப்படின் சேர்க்கவும்.

பின் கழுவி வைத்திருந்த சிறிய காளான்களையும் போட்டு கிளறி அவிய விடவும். தூளும் (தூள் மணம் போக வேண்டும்), பச்சை அரிசியும் முற்றாக அவிந்த நிலையில், சின்ன வெங்காயங்களையும் சேர்க்கவும் ............. அதன் பின் உப்பையும் சரி பார்த்து விட்டு ... வாசனை தூள் ஒன்றோ இரண்டு கரண்டி போட்டு கலக்கவும்/சேர்க்கவும். ... தொடர்ச்சியாக கிளறிவிட்டு, அடுப்பை அணைக்கும் தறுவாயில் மல்லி இலையை போட்டு விடலாம்!! பின் விரும்பின் சிறிதளவு தேசிக்காய்புளியையும் விட்டு சேர்க்கலாம்!!! ... கோழிப்புக்கை!!!

சாப்பிடுவது சுடச்சுடவாக இருப்பின் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ அத்துடன் சிறிதளவு மகிழ்வூட்டும் பாணம்... சொல்லி வேலையில்லை!!!

.... யாம் பெற்ற இன்பம் வையகமும் பெறுக ......

Posted

அண்மையில்தான் கோழிப்புக்கை உண்ணும் சநு்தர்ப்பம் முதல்தடவையாகக் கிட்டியது. (கோழிப்புக்கை என்றொரு உணவு இருப்பதென்ற விசயமே அப்போதுதான் தெரிந்தது)

வடமாராட்சியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சமைத்திருந்தார்..

பாவி ஒரு போத்தல் மிளகாய்த் தூளை கவிட்டுக் கொட்டீட்டுதூ தெரியேலை.. உறைப்பென்றால் அப்படி ஒரு உறைப்பு.. எனினும் அதன் சுவைக்காக அழுதழுது சாப்பிட்டுவிட்டு.. மறுநாள் அவதிப்பட்டதுதான் தாங்க முடியலை.

பிரியாணி கிரியாணி எண்டுறாங்க.. எண்டாலும் கோழிப்புக்கையை அடிக்கேலாது.. :icon_mrgreen:

சமையல் குறிப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மையில்தான் கோழிப்புக்கை உண்ணும் சநு்தர்ப்பம் முதல்தடவையாகக் கிட்டியது. (கோழிப்புக்கை என்றொரு உணவு இருப்பதென்ற விசயமே அப்போதுதான் தெரிந்தது)

வடமாராட்சியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சமைத்திருந்தார்..

பாவி ஒரு போத்தல் மிளகாய்த் தூளை கவிட்டுக் கொட்டீட்டுதூ தெரியேலை.. உறைப்பென்றால் அப்படி ஒரு உறைப்பு.. எனினும் அதன் சுவைக்காக அழுதழுது சாப்பிட்டுவிட்டு.. மறுநாள் அவதிப்பட்டதுதான் தாங்க முடியலை.

பிரியாணி கிரியாணி எண்டுறாங்க.. எண்டாலும் கோழிப்புக்கையை அடிக்கேலாது.. :icon_idea:

சமையல் குறிப்புக்கு நன்றி.

உண்மைதான், வடமராட்சியைச் சேரந்தவர்கள் தான் கோழிப்புக்கை செய்வார்கள். கனடா வந்த காலத்தில் வல்வெட்டிதுறையை சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருந்தாதால் நானும் சாப்பிட்டு இருக்கிறேன். இப்ப கனகாலம் சாப்பிட்டு... :rolleyes:

செய்முறை உள்ளதால் ஒருக்கா செய்து பாக்கவேணும். முழுக்கோழியை வாங்கி எலும்புகளோட போட்டால் தான் சுவையாக இருக்குமெண்டு நினைக்கிறேன் (அப்படித்தான் ஞாபகம் இருக்கு). அப்பிடியோ நெல்லையான்?

இல்லையெண்டால் அடுத்த நண்பர்வட்ட சந்திப்பில் சகாரா அக்காவும் செய்து தரலாம். :icon_mrgreen:

Posted

.... அப்போது சிங்களவன் படித்த பள்ளிக்கூடத்தையும் கொழுத்திப் போட்டான் .... அப்பர் பார்த்தார் இது றோட்டில் தான் நிற்கப்பாக்குது ... ஊரில் உழாதது வன்னியில் ஆவது உழும் என்ற நப்பாசையில் .... கொழும்பு கொண்டு சென்று விட ...

.... அப்போது ஒருநாள் ..... ஊரில் ....என்னோடு ஊரில் உழுது திரிந்ததுகளின் கைகளில் பத்தோ, இருபது கையில் கிடைத்தவுடன் ... போய் நாலு போத்தல் கள்ளையும் வாங்கி வந்து ... அரிசி, தூள், பாணை, ... என்று எல்லாத்தையும் எடுத்து கொண்டு திரிந்தால் கோழி அம்பிடவில்லையாம்!! . இறுதியாக அவர்களுக்கு கண்ணில் பட்டது என் வீட்டு கோழியே!! பின் பக்கத்தினால் என் வீட்டுக் காணிக்குள் உள்ளட்டு விட்டு, கூட்டினுள் அடைத்து வைத்திருந்ததுகளில் ஒன்றை அமுக்கி கொண்டு பின் பக்கத்தால் ஓடி .... தோட்ட குடிலில் கோழிப்புக்கையையும் செய்து, கள்ளையும் முடித்து ... சிறிய ஓய்வின் பின் ...மீண்டும் ஊர் உழ வெளிக்கிட்டு என் வீட்டருகே வந்தால் ....

... என் மம்மி ஒரு கம்போடு நிற்கிறாவாம்!! ..... கேட்டிருக்கிறார்கள்

... "என்ன நடந்தது, கம்புடன் நிற்கிறீர்கள்" ...

..."யாரோவடா, இன்று எங்கடை கோழி ஒன்றை களவெடுத்துக் கொண்டு பின் பக்கத்தாலை ஓடீட்டாங்கள், சத்தம் கேட்டு போறதற்கிடையில் போட்டாங்களடா" ...

மம்மின் முகத்தில் கோபம் நெருப்பு பிளம்பாகவாம்!!

..."அப்ப கோழியை பிடித்தவங்களை நீங்கள் காணேலையோ??"..

... "இல்லையடா" ..

..."ஆ... ஒரு கோழிதானே போனது விடுங்கள்், ..." ... என்று சொல்லி விட்டு மீண்டும் ஊர் உழ .....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நெல்லையன் அண்ணா நீங்க வடமராட்சிதானே? நெல்லியடியா?

ஏனென்றால் எனக்கு தெரிய வடமராட்சி பொடியள் தான் இது செய்யுறதா சொல்லுவங்கள். வீட்டிலை செய்யிறதா சொல்லலை நீங்கள் சொன்ன மாதிரி கள்ள கோழி தான்.

ஒருதடவை இங்கை சாப்பிட்டு இருக்கன். என்னொடை இருக்கிற ஒரு பொடியன் செய்து தந்தான். நல்லா இருந்திச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொன்னால் நம்பமாட்டியள் நான் இப்பவும் மாதத்திலை ஒருநாளாவது கோழிப்புக்கை சாப்பிடாமல் இருந்ததில்லை.

சாப்பிட்டவனுக்குத்தான் தெரியும் அதின்ரை அருமை :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலால் எல்லாம் மனுஷாள் சாப்பிடக்கூடாது.

Posted

புலால் எல்லாம் மனுஷாள் சாப்பிடக்கூடாது.

:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலால் எல்லாம் மனுஷாள் சாப்பிடக்கூடாது.

”வேதம்:ஸ்மிருதி:சதாச்சார்: ஸ்வஸ்ளச ப்ரிய மாத்மன:!”

”யோவமன்யேத் தே மூலே ஹேதுசாஸ்த்ராஅயத் த்விஜ:!

ஸ ஸாதுபிர்பஹிஷ்கார்யோ நாஸ்த்கோ வேதநிந்தக்:!!

”ஸ்ருதித்வைதம் து யத்ர ஸ்யாப்தத்ர தர்மாவுபெள ஸ்ம்ருதெள!”

”யா வேதபாஹ்யா: ஸ்ம்ருத்யோ யாஸ்ச காஸ்ச குத்ருஷ்:!

ஸர்வாஸ்தா நிஷ் வலா: ப்ரேத்ய தமோநிஸ்டா ஹித்: ஸ்ம்ருதா:!!”

”வேதாயத்வோபநிபந்திருதத் ப்ரமாண்ய ஹி மனோ: ஸ்ம்ருத்

மன்வர்த்தவிபரீதா து யா ஸ்மிருதி ஸா ந சஸ்யதே!!”

”புராண மாநவோ தர்ம: ஸாங்கோ வேத ஸ்சித்ஸித்!

ஆங்யாஸித்தானி சத்வாரி ந ஹந்தவ்யானி ஹேதுபி!!”

  • 1 year later...
Posted

இந்த வார விடுமுறையில் ஒருக்கால் செய்து சாப்பிட வேண்டும் கோழிப் புக்கையை

Posted

கரவெட்டியில் அடிக்கடி சாப்பிட்டது இப்போதும் வாயூறியபடி உள்ளது.

நன்றி நெல்லையன்.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதன்கிழமை முதல் தாக்குதலை தொடங்கணும் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இதுவரைக்கும் கோழிப்புக்கை சாப்பிட்டதே இல்லை ...... செய்து சாப்பிட்டு பார்க்கவேண்டும். :)

பகிர்விற்கு நன்றி நெல்லையன்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து       மருத்துவப்பிரிவின் இறுவட்டு:  
    • பிரிவுகள்   புலிகளின் மருத்துவ வசதிக்காக 'விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவு' உருவாக்கப்பட்டிருந்தது. இது இரு முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. அடிபாட்டாளர்களின் தேவைக்காக 'மருத்துவ பிரிவும் மக்களின் தேவைக்காக 'தமிழீழ சுகாதார பிரிவும்' செயற்பட்டன.    விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவு: தமிழீழ சுகாதார பிரிவு: தமிழீழச் சுகாதார சேவைகள் சுகாதாரக் கல்வியூட்டல் பிரிவு தாய்சேய் நலன் காப்பகம் பற்சுகாதாரப்பிரிவு சுதேச மருத்துவப்பிரிவு கப்டன் திலீபன் சுதேச உற்பத்தி நிறுவனம் நடமாடும் மருத்துவ சேவை கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு பூச்சியியல் ஆய்வுப்பிரிவு விசேட நடவடிக்கைப்பிரிவு சுகாதார விஞ்ஞானக் கல்வி நிறுவனம் உடல்-உளநலன் விழிப்புணர்வு சேவைகள் Dr. பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரி (பொதுமக்களுக்கானது) நலவாழ்வு அபிவிருத்தி மையம் மருந்தகங்கள் போசாக்கு உணவு தயாரிப்பு நிலையம் மருத்துவ ஆராய்ச்சிப்பிரிவு சுகாதார விஞ்ஞானக் கல்லூரி தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை திலீபன் சிறப்பு மருத்துவமனைகள்:- திலீபன் மருத்துவமனை முதலுதவித் தொண்டர்கள் முதலுதவியாளர்கள் அணி கற்சிலைமடு - (முதலாவது மருத்துவமனை.) நெடுந்தீவு புங்குடுதீவு பூநகரி புளியங்குளம் நைனாமடு அளம்பில் மாங்குளம் கறுக்காய்குளம் முத்தரிப்புத்துறை முள்ளிக்குளம் பாட்டாளிபுரம் கதிரவெளி கொக்கட்டிச்சோலை கஞ்சிகுடிச்சாறு தியாக தீபம் திலீபன் நடமாடும் மருத்துவ முகாம் களஞ்சியப்பகுதி கொள்வனவுப்பகுதி கள மருத்துவம் திலீபன் சிறப்பு கள மருத்துவப்பிரிவு மருத்துவ பிரிவு: (இதன் பிரிவுகள் எனக்கு சரியாகத் தெரியாது... தெரிந்தவற்றை பட்டியலிட்டுள்ளேன்) தமிழீழ மருத்துவக் கல்லூரி தமிழீழ தாதியர் பயிற்சிக்கல்லூரி கள மருத்துவக் கல்லூரி மருந்துக் களஞ்சியம் கள மருத்துவப்பிரிவு (முன்மாதிரி மருத்துவ நிலைகள்) --> துணை மருத்துவ நிலைகள் --> முதன்மை மருத்துவ நிலைகள் --> தள மருத்துவமனைகள் --> படையணிப்பிரிவு மருத்துவமனைகள் படையணிப்பிரிவு மருத்துவமனைகள் அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை சிந்தனைச்செல்வன் ஞாபகார்த்த மருத்துவமனை எஸ்தர் மருத்துவமனை யாழ்வேள் மருத்துவமனை கீர்த்திகா மருத்துவமனை திவாகர் ஞாபகார்த்த மருத்துவமனை லக்ஸ்மன் மருத்துவமனை (ஜெயந்தன் படையணியினது, மட்டு.) முல்லை மருத்துவமனை  (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்) நெய்தல் மருத்துவமனை  (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்)  
    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.