Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Photoshop பாவிக்கும் முறை : கருத்துக்கள்

Featured Replies

Photoshop பாவிக்கும் முறை என்ற தலைப்பு தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கே பதியலாம்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

Photoshop பாவிக்கும் முறை என்ற தலைப்பு தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கே பதியலாம்.

பிரயோசமான தகவல் இணையவன். தொடர்ந்து எழுதுங்கள். நான் நிறையத் தடவை photoshop பயன்படுத்த முயற்சி செய்து பார்த்து, பொறுமை இல்ததனால் தொடரவில்லை.

வணக்கம் இணையவன்,

நல்லதொரு முயற்சி. கணணி வளாகம் யாழ் முகப்புக்கு வருவது இல்லை. யாழ் முகப்பிற்கு வந்தால்தான் பலர் இதுகளை வாசிச்சு பயன்பெறுவார்கள் என்று நினைக்கிறன்.

தமிழில இப்பிடி ஏற்கனவே குறிப்புக்கள் இருக்கிதோ தெரியாது. ஆனால் ஆங்கிலம்தெரியாத, மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட கணணி பாவனை வசதி உடைய தாயகத்தில இருக்கிற மாணவர்களுக்கு உங்களது இதுபோன்ற குறிப்புக்கள் மிகவும் பயன் உள்ளதாய் இருக்கும். பொறுமையாக இதை எழுதி முடிச்சீங்கள் என்றால் ஒரு காலத்தில நூலுருவிலையும் கொண்டுவந்து தாயகத்து மாணவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

எனது கேள்வி என்ன எண்டால்.. நான் இதுபோன்ற பலவித Applications ஐ பாவிக்கிறது. ஆனால்.. இதை திருட்டுத்தனமாக தரவிறக்கம் செய்து பாவிச்சால் பிறகு அந்த திருட்டு நகல் மூலம் உருவாக்கப்பட்ட ஆக்கங்களை வலைத்தளத்தில் எப்பிடி பாவிக்கிறது? திருட்டு நகல் மூலம் உருவாக்கப்பட்ட ஆக்கங்களை கண்டுபிடிக்க முடியும் என்று அறிந்து இருந்தேன். திருட்டு நகலை Professional use ஆக பயன்படுத்த ஏதாவது வழி இருக்கிதோ?

நான் வழமையாக பள்ளிக்கூடத்தில்தான் இவற்றை பாவிக்கிறது. அதுவும் தனிப்பட்ட தேவைகள் தவிர Commercial useஇற்கு பயன்படுத்த முடியாது லைசன்ஸ் பிரச்சனை வரும் என்று சொன்னார்கள். Commercialஆக திருட்டுத்தனமாக பாவிக்க ஏதாவது வழி இருக்கிதோ?

Adobe Products இவை எல்லாம் மிகவும் விலையான பொருட்கள். பெரும்பாலானவர்கள் திருட்டு நகல்களையே வைத்து இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

மேலும் பயனுள்ள ஓர் இணைப்பு: http://tv.adobe.com/#

நான் பெரும்பாலான விசயங்களை காணொளிகளாகத்தான் படிக்கிறது. இவர்களின் காணொளி அருமை.

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் மிகவும் நல்ல முயற்சி.

நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பதிவு.

வீடியோ எடிட்டிங் பற்றித்தான் தேடிக்கொண்டுஇருக்கேன். இணையவன் அதனையும் தாங்களேன்.

நல்ல முயற்சி இணையவன் பாராட்டுக்கள். இது போல பலரும் தாம் அறிந்த விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கலாம்.

அடுத்ததாக சொற்களைத்தமிழ் படுத்துவது குறித்த விடயம் அவசியமில்லை எனப் படுகிறது. கணிப்பொறி தொடர்பான பல சொற்களைத் தமிழில் எழுதுவது அதை விளங்கிக் கொள்வதில் சிக்கலை ஏற்படுத்துமேயன்றி இலகுவாக்க உதவாது என்பது என்னுடைய கருத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான முயற்சி இனையவன்,ந‌ன்றி தொடருங்கோ.எனக்கும் கொஞ்சம் தெரியும் ஆனாலும் நிறைய படிகக்கனும்.இதில இருந்து படித்து கொள்ளுறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணையவன் நான் தற்போது தான் இது சம்மந்தமாக அறிவதற்காக வாசிகசாலையில் புத்தகங்களை எடுத்துள்ளேன் பொருத்தமான நேரத்தில் இணைத்தமைக்கு மீண்டும் நன்றி

நல்ல முயற்சி இணையவன். இடையில் விட்டுவிடாமல் தொடரவும்.

கீழ் உள்ள வலைப்பூவிலும் போட்டோ ஷொப் பற்றிய அடிப்படை பாடங்கள் தொடர்ச்சியாக உள்ளது. செய்முறைகளையும் மிக இலகுவாக அறியத்தருகிறார் வலைப்பதிவாளர்.

பயனடையுங்கள்.

http://velang.blogspot.com/2009/03/1.html

ஜானா

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

கருத்துக் கூறிய சபேஷ், மாப்பிள்ளை, சகாரா அக்கா, கறுப்பி, semmari, மணிவாசகன், குமாரசாமி, சுப்பண்ணை, ரதி, இளைஞன், ஜனார்த்தனன் ஆகியோருக்கு நன்றி.

வணக்கம் இணையவன்,

நல்லதொரு முயற்சி. கணணி வளாகம் யாழ் முகப்புக்கு வருவது இல்லை. யாழ் முகப்பிற்கு வந்தால்தான் பலர் இதுகளை வாசிச்சு பயன்பெறுவார்கள் என்று நினைக்கிறன்.

தமிழில இப்பிடி ஏற்கனவே குறிப்புக்கள் இருக்கிதோ தெரியாது. ஆனால் ஆங்கிலம்தெரியாத, மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட கணணி பாவனை வசதி உடைய தாயகத்தில இருக்கிற மாணவர்களுக்கு உங்களது இதுபோன்ற குறிப்புக்கள் மிகவும் பயன் உள்ளதாய் இருக்கும். பொறுமையாக இதை எழுதி முடிச்சீங்கள் என்றால் ஒரு காலத்தில நூலுருவிலையும் கொண்டுவந்து தாயகத்து மாணவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

எனது கேள்வி என்ன எண்டால்.. நான் இதுபோன்ற பலவித Applications ஐ பாவிக்கிறது. ஆனால்.. இதை திருட்டுத்தனமாக தரவிறக்கம் செய்து பாவிச்சால் பிறகு அந்த திருட்டு நகல் மூலம் உருவாக்கப்பட்ட ஆக்கங்களை வலைத்தளத்தில் எப்பிடி பாவிக்கிறது? திருட்டு நகல் மூலம் உருவாக்கப்பட்ட ஆக்கங்களை கண்டுபிடிக்க முடியும் என்று அறிந்து இருந்தேன். திருட்டு நகலை Professional use ஆக பயன்படுத்த ஏதாவது வழி இருக்கிதோ?

நான் வழமையாக பள்ளிக்கூடத்தில்தான் இவற்றை பாவிக்கிறது. அதுவும் தனிப்பட்ட தேவைகள் தவிர Commercial useஇற்கு பயன்படுத்த முடியாது லைசன்ஸ் பிரச்சனை வரும் என்று சொன்னார்கள். Commercialஆக திருட்டுத்தனமாக பாவிக்க ஏதாவது வழி இருக்கிதோ?

Adobe Products இவை எல்லாம் மிகவும் விலையான பொருட்கள். பெரும்பாலானவர்கள் திருட்டு நகல்களையே வைத்து இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

மேலும் பயனுள்ள ஓர் இணைப்பு: http://tv.adobe.com/#

நான் பெரும்பாலான விசயங்களை காணொளிகளாகத்தான் படிக்கிறது. இவர்களின் காணொளி அருமை.

மாப்பிள்ளை,

இது இன்னும் முடிவடையாமல் உள்ளதால் யாழ் முகப்பிற்கு வரவேண்டுமென்று தற்போது அவசியமில்லை. முடிந்தபின்னர் பார்க்கலாம்.

தாயகத்திலுள்ளவர்களுக்கு மட்டுமல்ல, கணணி பாவவிக்கும், Digital ஒளிப்படக் கருவி பாவிக்கும் தமிழர்கள் அனைவருக்கும் பயன்பாடாக இருக்க வேண்டுமென்பதே நோக்கம். ஆனால் எழுதும் முறை சரியானதா, எல்லோராலும் விளங்கிக் கொள்ள முடிகிறதா என்பது தெரியவில்லை. சில வேளைகளில் அதிகமாக அலட்டுகிறேனோ என்று தோன்றும். ஆனால் ஏற்கனெவே photoshop பாவிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடையங்களையும் உள்ளடக்க வேண்டும் என்பதால் சற்று விரிவாக எழுத வேண்டியுள்ளது.

பெரும்பாலான தனிப்பட்ட photoshop பாவனையாளர்கள் பணம் கொடுத்து இதை வாங்கியிருக்க மாட்டார்கள். தயாரிப்பாளர்களும் தஹ்னிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. காரணம் photoshop பாவனையாளர்களை அதிகரிக்கச் செய்து இன்னொரு மென்பொருளின் போட்டி நிலையைக் குறைக்கச் செய்யும். இதற்கு மாறாக நடவடிக்கை எடுக்கப் போனால் GIMP என்னும் இலவச மென்பொருளின் பாவனை அதிகரிக்கும் என்பது நிச்சயம். நிறுவனங்களில் லைசன்ஸ் கட்டாயம் தேவை. பொதுவாக திருட்டுத் தனமாகத் தரவிறக்கம் செய்வது தவறு. அதிலும் photoshop மூலம் வேலைகள் செய்து பணம் சம்பாதிப்பவர்கள் நிச்சயமாக இத் தவறைச் செய்யக் கூடாது. பாடசாலைகளில் பாவிப்பதற்காக குறைந்த விலையில் Photoshop வழங்கப்படுகிறது. இதை Professional use ஆகப் பயன்படுத்துவது தவறாகும்.

PDF, EPS போன்ற சிக்கலான கோப்புக்கள் ஒவ்வொன்றிலும் அவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மென்பொருளின் விபரங்கள் (அதன் இலக்கம், மொழி, கணணி போன்றவை) உள்ளடக்கப் பட்டிருக்கும். ஆனால் GIF போன்ற எளிமையான கோப்புகளை File > Save for Web... என்பதனூடாக உருவாக்கினால் இவ்வாறான தகவல்கள் உள்ளடக்கப் படுவதில்லை (இது பற்றி மேலதிகமாக அறிந்தவர்கள் உறுதிப்படுத்தவும்).

photoshop பழகுபவர்களுக்காக Adobe நிறுவனம் இலவசமாக 30 நாட்களுக்கான பாவனை அனுமதியை வழங்குகிறது. அது தவிர Professional பாவனையாளர்கள் தவிர்ந்த ஏனையவர்களுக்காக Adobe Photoshop Elements என்ற மென்பொருள் 100 யூரோவிற்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறது. இது Photoshop இலிருந்து சில செயற்பாடுகள் நீக்கப்பட்டு எளிமையாக்கப் பட்டதாகும். Digital ஒளிப்படக் கருவி பாவிப்பவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.

காணொளி மூலமான பாடங்கள் விளங்கிக் கொள்ள மிகவும் இலகுவானவை. எழுத்து மூலம் விளக்கக் கடினமானவற்றைக் காணொளி மூலம் இலகுவாக விளக்கலாம். ஆனால் காணொளியை முழுமையாகப் பார்க்கவும் கேட்கவும் வேண்டும். எழுத்து மூலமான பாடத்தில் மேலோட்டமான பார்வையிலேயே எமக்குத் தேவையான விடையத்தை இனம்கண்டு வாசிக்கலாம். இத் திரியில் அதிகமான படங்களை இணைப்பதன் மூலம் இலகுவான விளக்கங்களை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

பயனுள்ள பதிவு.

வீடியோ எடிட்டிங் பற்றித்தான் தேடிக்கொண்டுஇருக்கேன். இணையவன் அதனையும் தாங்களேன்.

கறுப்பி,

வீடியோ எடிட்டிங் சுலபமாகச் செய்வதற்கான இலவச மென்பொருட்கள் பல உள்ளன. நான் Apple பாவிப்பதால் இது பற்றி எழுதுவது பயனுள்ளதாக இருக்காது.

  • தொடங்கியவர்

வணக்கம் நண்பர்களே

தமிழில் இது பற்றி ய தமிழில் காணோளிகள் மற்றும் தகவள்கள் அடங்கிய இணைய முகவரிகள்.

http://photoshopintamil.blog.co.in/

semmari,

உங்கள் தகவல்களுக்கு நன்றி.

மேல்லே குறிப்பிட்டது போல காணொளிகள் போலவே எழுத்திலான பாடங்களும்

பயனுள்ளவை.

நல்ல முயற்சி இணையவன் பாராட்டுக்கள். இது போல பலரும் தாம் அறிந்த விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கலாம்.

அடுத்ததாக சொற்களைத்தமிழ் படுத்துவது குறித்த விடயம் அவசியமில்லை எனப் படுகிறது. கணிப்பொறி தொடர்பான பல சொற்களைத் தமிழில் எழுதுவது அதை விளங்கிக் கொள்வதில் சிக்கலை ஏற்படுத்துமேயன்றி இலகுவாக்க உதவாது என்பது என்னுடைய கருத்து

மணிவாசகன்,

ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்துவது சிக்கலானதுதான். ஏற்கனவே தமிழாக்கப்பட்டு பாவனையில் சொற்கள் எனக்குத் தெரியாமல் இருந்தால் அவற்றைப் அறியத் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

கீழ் உள்ள வலைப்பூவிலும் போட்டோ ஷொப் பற்றிய அடிப்படை பாடங்கள் தொடர்ச்சியாக உள்ளது. செய்முறைகளையும் மிக இலகுவாக அறியத்தருகிறார் வலைப்பதிவாளர்.

பயனடையுங்கள்.

http://velang.blogspot.com/2009/03/1.html

ஜானா

ஜனார்த்தனன்,

உங்கள் இணைப்பிற்கும் நன்றி.

நல்ல விடயம் இணையவன். தொடருங்கள்.

விரிவான பதில்களிற்கு நன்றி இணையவன். செய்முறையை தொடர்ந்து எழுதி முடியுங்கள். நான் மேலோட்டமாக பார்த்தன். படங்களுடன் விளக்கமாய் அழகாய் இருக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள். தொடருங்கள் இணையவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரம் எடுத்து எழுதியமைக்கு நன்றி.

  • 3 weeks later...

நன்றி இணையவன்... மிகவும் பயனுள்ள குறிப்புகள். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பயனுள்ள குறிப்பு ஆங்கிலத்தில் படித்ததை தழிழில் பார்க இன்னும் நன்றாக இருக்கிறது Photoshopபில் செய்த ஒரு படத்தை எப்படி யாழிழ் இணைக்கலாம் உங்களுக்கு ரைம் இருந்தா சொல்லுங்க

நன்றி இணையவன் உங்களின் இந்த உதவியால் எல்லோரும் நன்மை அடைவார்கள்

நன்றி வாழ்த்துக்கள்

நன்றி இணையவன் சார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இணையவன்,

அழகான முறையில் விளக்கங்களை எழுதிவரும் உங்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்களும், செயல் விளக்கமும் இணையவன்.

சில வருடங்களுக்கு முன் நான் கோரல் டிரா10ம் மைக்ரோசாப்டின் போட்டோ டிராV2 வும் பயன்படுத்தி வந்தேன். நீங்கள் தெரிவித்துள்ள மென்பொருளில் அதிக வசதிகளும் நுணுக்கமான திருத்தங்களும் மேம்படுத்துதலும் செய்ய இயலும் போலுள்ளது. போட்டோசாப் CS2 என்ற மென்பொருள் எம் அலுவலகத்தில் பயன்பாட்டிலுள்ளது. முயன்று பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

:( இணையவன் அண்ணா. :D

மிகவும் பயன் உள்ள தகவல்களை மக்களோடு பகிர்ந்து கொளவதற்கு மிகவும் நன்றிகள்.மேலும்....மேலும் பல அரிய பயன் உள்ள தகவல்களை எடுத்து வரவேண்டு எண்டு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  • 3 months later...

இணையவன், நீங்கள் எழுத்தில் செய்வதை காணொளியாகவும் போட்டீங்கள் என்றால் இன்னமும் நல்லாய் இருக்கும் என்று நினைக்கிறன். ஒலிவடிவம் இல்லையென்றாலும் காட்சிகளை மட்டுமாவது திரையை பதிவுசெய்து போடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.