Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தும்பினியின் இடுப்பினில் தெரியுது தமிழீழம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

srilankan_dance.jpg

சும்மா கிடந்த நாம்..

தமிழீழ விடுதலை என்றோம்..

ஆயுதம் எடுத்து

ஆலயத்தில் கொள்ளையடித்தோம்..!

தமிழ் மக்களின் தலையினில்

நன்றே..

மிளகாய் அரைக்க கற்றுக் கொண்டோம்..!

ஆட்காட்டி

வயிறு வளர்த்தோம்..!

போகும் வழி

இடையில் மறந்தோம்..

சிங்களச் சீமையில்

சீமைப் பசுக்களிடையில்

சரணடைந்தோம்..!

தாடி வளர்த்து

கம்னீசியம் காட்டினோம்

வெள்ளை ஜிப்பாவில்

ஜனநாயகம் பேசினோம்

புலி எதிர்ப்பும்

தமிழீழ அழிப்புமே

எங்கள் அரசியலாக்கினோம்.

இன்று...

ஆக்கிரமிப்பு படைகளோடு

தும்பினியின் இடுப்பாட்டத்தில்

சதியோடு குதி போடுறோம்..

தெரியுது தமிழீழம்..

சிங்களச் சீமைப்பசுவின்

சிற்றிடையில் என்று

வாக்குக் கேட்கிறோம்.

மத்தியில் கூட்டாட்சி

மாநிலத்தில் சுயாட்சி

எல்லாம் மாய மான் விளையாட்டு..

பிரபாகரன் எனும்

பெரும் வீரன் இருந்த

பயத்தில்..

உளறித் தள்ளினோம்..!

உறுதியாய் சொல்கிறோம்..

அன்றும் இன்றும் என்றும்

எங்கள் வாழ்விடம்..

சிங்களப் பாசறை..!

அங்கே நாங்கள்

சுதந்திரப் பறவைகள்..!

முழங்குகின்றோம்..

சிங்களத்தி

தும்பினியின்

இடுப்பினில் தெரிவது

தமிழீழம் என்றே..!

வாருங்கள் தமிழ் மக்களே

புலம்பெயர்ந்த பெரு வீரர்களே..

கூடித் கூத்தடித்து..

உணருங்கள் அவள் இடுப்பை

காணுங்கள் தமிழீழ சுகமதை..!

கூவி அழைக்கின்றோம்..

சிங்களத்தியோடு கூடி

உருவாக்குங்கள்

சிங்க - தமிழ் பரம்பரை ஒன்றை..!

அப்போதே காணலாம்

சிங்களத்தீவினில்

தமிழருக்கு ஓர்

"நிரந்தர" விடுதலை..!

அதுவரை

எப்போதும்..

புலி எதிர்ப்பே

எங்கள் தாகம்..!

source: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அது யார் தும்பினி அந்த பெண்ணா? எத்தனை பேர் அந்த நிகழ்ச்சியில் ஆடினார்கள் பாடினார்கள் ஏன் அந்தப் பெண்ணோட மட்டும் கோபம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது யார் தும்பினி அந்த பெண்ணா? எத்தனை பேர் அந்த நிகழ்ச்சியில் ஆடினார்கள் பாடினார்கள் ஏன் அந்தப் பெண்ணோட மட்டும் கோபம்...

தும்பினி.. உதாரணத்துக்கு கையாளப்பட்ட பெயர்...!

தும்பினி.. கொழும்பில ஆடட்டும் அது பிரச்சனையில்ல. அதை டக்கிளஸ் தேவானந்தா கிட்ட இருந்து ரசிக்கலாம்.. அதுவும் பிரச்சனையில்ல. தும்பினி வடக்கின் வசந்தமா யாழ்ப்பாணம் வந்து ஆட.. அதை டக்கிளஸ் தேவானந்த முதல் வரிசையில் இருந்து ரசிக்க வேண்டிய அவசியம் தான் என்ன..???! தும்பினிட இடுப்பிலயா வடக்கின் வசந்தம் கட்டிகிட்டு தொங்குது..??! வன்னில தமிழ் பெண்களை பாலியல் சித்திரவதை செய்து கொல்லுறாங்க.. இவன் தும்பினியை ஆடவிட்டு.. ஆட்டம் காட்டிறான்..! வெட்கமில்ல. இதுக்க அவன் தானொரு பிரமச்சாரின்னு வேசமும் போட்டுகிறான்..!

தும்பினி.. என்ன வாக்குச் சீட்டுக்களின் தேவதையா. இதுதான் ஜனநாயகமா..! :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா.

தும்பினி ஆட்டம் பிடிக்கலயா....?சரி விடுங்கள் அவர்களுக்கு தமிழர் நம் வாழ்வோடு விளையாடுவது பொழுது போக்கு அம்சமாக போய்விட்டது.அதைப் போப் பார்த்து ரசித்து மகிழ்பவர்களும் மக்கள் தானே...அதாவது நித்தமும் வேதனையோடு வாழ்பவர்கள் தானே...உங்கள் கவிதை நன்றாகவே உள்ளது.நன்றி.

யாயினி

நன்றிகள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நெடுக்கு நல்லொரு கவிதை எழுதியிருக்கிறாயப்பு. டக்ளசுக்குத்தான் நக்குத்தண்ணியெண்டா அங்கயும் ஆடுதுகள் பார்தம்பி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெடுக்கு நல்லொரு கவிதை எழுதியிருக்கிறாயப்பு. டக்ளசுக்குத்தான் நக்குத்தண்ணியெண்டா அங்கயும் ஆடுதுகள் பார்தம்பி.

கூட ஆடுறவையை விட ஆட வைக்கிறவை தான் அதிகம் தவறு செய்திருக்கினம்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலுள்ள மனித இனம் முழுவதும் ஆட்டு மந்தைகளைப்போன்றது?

அதை வழிநடத்தி செல்லும் மேய்ப்பனின் கைகளிலேயே சகல விடயங்களும் அடங்கியுள்ளது.

இன்று ஈழத்திலுள்ள மந்தைகள் கூட்டம் தவறான மேய்ப்பனின் கைகளில் .............

புலம்பெயர் மந்தைகள் திக்குத்தெரியாத காட்டில் செய்வதறியாது திகைக்கின்றன..........

ஆனால் சர்வதேச தமிழினத்தின் மறுபக்கம் தெரியாமல் தவிக்கின்றது சிங்களமும் அதனுடன் சேர்ந்த நரிக்கூட்டங்களும்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று...

ஆக்கிரமிப்பு படைகளோடு

தும்பினியின் இடுப்பாட்டத்தில்

சதியோடு குதி போடுறோம்..

தெரியுது தமிழீழம்..

சிங்களச் சீமைப்பசுவின்

சிற்றிடையில் என்று

வாக்குக் கேட்கிறோம்.

கவிதைக்கு நன்றி நெடுக்ஸ். இன்று பி.பி.சியிலும் ஒரு தும்பினி ஆடாதது தான் குறை. யாழ் பல்கலைகளகத்தை சேர்ந்தவவாம். எங்கை தேடி பிடிக்கிறாங்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி நெடுக்ஸ். இன்று பி.பி.சியிலும் ஒரு தும்பினி ஆடாதது தான் குறை. யாழ் பல்கலைகளகத்தை சேர்ந்தவவாம். எங்கை தேடி பிடிக்கிறாங்களோ தெரியவில்லை.

ஆக்கத்திற்குப் பாராட்டுகள்.

வாசிக்க வேண்டியவர்கள் வாசிப்பார்களா? அப்படி வாசித்தால் கொஞ்சம் சூடு சொரணை வரும்.

நுணாவிலான் அவர்களே,

பிபிசி தமிழானது ஒரு உண்மையான ஊடகமா? விபச்சாரத்தனமாக, இந்திய சிறிலங்கா அரசுகளிடம் சன்மானம் பெற்று வாழும் கூட்டமொன்று இருக்கிறது போலும். அதனால்தான் எப்போதும் தமிழருக்கு எதிரான கருத்துக்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். சீ....... இவர்களை போய் ஒரு ஊடகர்களாக..... கேவலம். ஊடகத்துறைக்கே கேவலம். இந்த நூற்றாண்டினது மனிதப் பெரும் அவலமென்றால் அது தமிழினப் படுகொலையே. ஆனால் பிபிசி தமிழ், ஒருவரது , ஒருவரது துன்பத்தையாவது பதிவு செய்திருக்குமா?

அவங்களுக்கு சூடு சொரணை தொலைஞ்சு கன நாளாப் போச்சு...! இருந்தாலும்.. அவங்க கூட்டி வர கூட ஆடுறவைக்கு.. எங்க போனது புத்தி..! :wub::(

பலி ஆட்டுக்கு பூமாலை போட்டு பூசை செய்வது போன்றது.. இந்த நிகழ்வுகள். இதனை ஏன் புரியாத ஜென்மங்களாக சிலர்.. இன்னும் இன்னும் எம் மத்தியில்..??! :o:wub:

Edited by nedukkalapoovan

முழங்குகின்றோம்..

சிங்களத்தி

தும்பினியின்

இடுப்பினில் தெரிவது

தமிழீழம் என்றே..!

source: http://kundumani.blogspot.com/

ஒரு சோகமான விடயத்தை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

அன்று கண்ணன் வாயைத் திறந்து அண்டத்தைக் காட்டியதாக எங்கோ படித்தேன்.

இன்று தும்பினி தாவணியைத் திறந்து தமிழீழத்தைக் காட்டியிருக்கிறாள்.

கடவுளின் அவதாரமாக இருப்பாளோ? :(

ஆதிக்கும் இப்ப தும்பினியின் இடுப்பிலதான் ஆர் ஆட்சி. இந்தத் தும்பினியின் இடுப்பில தமிழீழத்தை கட்டிவிட்டது ஆரப்பா?

ஆக்கத்திற்குப் பாராட்டுகள்.

பிசி தமிழானது ஒரு உண்மையான ஊடகமா? விபச்சாரத்தனமாக, இந்திய சிறிலங்கா அரசுகளிடம் சன்மானம் பெற்று வாழும் கூட்டமொன்று இருக்கிறது போலும். அதனால்தான் எப்போதும் தமிழருக்கு எதிரான கருத்துக்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். சீ....... இவர்களை போய் ஒரு ஊடகர்களாக..... கேவலம். ஊடகத்துறைக்கே கேவலம். இந்த நூற்றாண்டினது மனிதப் பெரும் அவலமென்றால் அது தமிழினப் படுகொலையே. ஆனால் பிபிசி தமிழ், ஒருவரது , ஒருவரது துன்பத்தையாவது பதிவு செய்திருக்குமா?

ஏன் எல்லாத்துக்கும் விபச்சாரத்தை இழுக்கின்றீர்கள் எனப் புரியவில்லை. ஊடக விபச்சாரம் என்றால் என்ன?

பாலியல் தொழில் கேவலமான தொழில் அல்ல. ஒரு பாலியல் தொழிலாளி தன் தந்தையுடனோ, சகோதரனுடனோ, தன் பிள்ளையுடனோ உடலுறவு கொள்ள மாட்டார்கள். அவர்களின் உலகத்தில், ஒரு இனத்தின் மீதான படுகொலையை நியாயப்படுத்தி கொலைகாரருக்கு வக்காளத்து வாங்கும் ஈன குணம் இல்லை. தான் பேசும் மொழியையும் தன்னைச் சேர்ந்த இனத்தையும் குழிதோண்டி புதைக்கும் வியாபார குணம் இல்லை. பாலியல் தொழிலாளிகள் தன் உடலை மட்டும்தான் காசுக்காக பகிர்ந்து கொள்கின்றனர், தன் இனத்தின் தலையெழுத்தை அல்ல.

அடிக்கடி ஊடக விபச்சாரம், ஊடக விபச்சாரிகள் என்று நீங்கள் குறிப்பிடுவதால் இதனை கூறுகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதிக்கும் இப்ப தும்பினியின் இடுப்பிலதான் ஆர் ஆட்சி. இந்தத் தும்பினியின் இடுப்பில தமிழீழத்தை கட்டிவிட்டது ஆரப்பா?

ஆட விட்டவங்க தான்..! :(:wub:

----------------

உங்கள் ஒவ்வொருவரின் கருத்துப் பகிர்விற்கும் நன்றிகள்.

Edited by nedukkalapoovan

There was a grand musical show organized by ITN ( Independent

Television Network ) on the 1st of August 2009 Saturday at “Duraiyappa

Stadium”. The Musical Show organized by ITN on request by the

Government. I T N’s Tamil wing comprises Vasantham T V and Vasantham

FM jointly organized this event known as “ Vasanthithayam”.

It was a major success.I saw a massive crowd at “Duraiyappa

Stadium”.When the function started around 7.30 PM we saw around 10000

people converge on the ground.But by about 8.00PM it exceeded 85,000 .

http://asiantribune.com/08/06/jaffna-%E2%8...-entertainment/

ஆகா ஆகககா....

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவித அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாமல் வாழும் புலம் பெயர்ந்த............................... கொள்கை, தேசியம் எல்லாத்தையும் கொஞ்சம் மாத்துவம் என்று சிங்களத்திற்குக் கோபம் வராமல் பார்த்துக் கொள்ளுவோம் என்று முடிவெடுத்து மாவீரர்களினதும் இதுவரை தாயக மண்ணுக்காகப் மரணத்தைப் பெற்றுக் கொண்ட மக்களுக்கும் ந்லல கைமாறு செய்யிற வேளையில........ ............................................................... வார்த்தைகள் தமிழைச் சாகடிக்கக் கூடாது என்பதற்காக நிறுத்திக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லாத்துக்கும் விபச்சாரத்தை இழுக்கின்றீர்கள் எனப் புரியவில்லை. ஊடக விபச்சாரம் என்றால் என்ன?

பாலியல் தொழில் கேவலமான தொழில் அல்ல. ஒரு பாலியல் தொழிலாளி தன் தந்தையுடனோ, சகோதரனுடனோ, தன் பிள்ளையுடனோ உடலுறவு கொள்ள மாட்டார்கள். அவர்களின் உலகத்தில், ஒரு இனத்தின் மீதான படுகொலையை நியாயப்படுத்தி கொலைகாரருக்கு வக்காளத்து வாங்கும் ஈன குணம் இல்லை. தான் பேசும் மொழியையும் தன்னைச் சேர்ந்த இனத்தையும் குழிதோண்டி புதைக்கும் வியாபார குணம் இல்லை. பாலியல் தொழிலாளிகள் தன் உடலை மட்டும்தான் காசுக்காக பகிர்ந்து கொள்கின்றனர், தன் இனத்தின் தலையெழுத்தை அல்ல.

அடிக்கடி ஊடக விபச்சாரம், ஊடக விபச்சாரிகள் என்று நீங்கள் குறிப்பிடுவதால் இதனை கூறுகின்றேன்.

நிழலியவர்களே,

சுட்டிக்காட்டியமைக்காக எனது நன்றிகள்.

ஒழுக்க நெறி பிறழ்வுறும்போது சுட்டப்படும் ஒரு குறியீட்டுச் சொற்பதமாகவே இதனை நான் சுட்டினேன். ஊடகமானது தனது நியாத்தன்மையிலிருந்து இறங்கி மிகவும் கீழ்த்தரமாக நடக்கும்போது அதனைச் சுட்டும் நோக்கிலேயே அந்தச் சொற்பதத்தைப் பாவித்தேன். அதற்காகப் பாலியற் தொழிலாளர்களை ஒப்பீடு செய்வதல்ல நோக்கம். அவர்களுக்குள்ள தகுதி கூட இதுபோன்ற பணத்துக்கு விலைபோகும் ஊடகர்களுக்கு இருக்குமா என்பது சிந்திக்க வேண்டியதே.

பெரும்பாலான ஏழைநாடுகளில், ஏன் அணுவாயுத வல்லரசென்று சொல்லும் இந்தியாவினது பம்பாய் தெருவைப் பார்த்தால் எவளவு கொடுமையான விடயம் என்பது புரியும். தமது குடும்பத்திற்காகத் ....... இவற்றை எழுதுவதாயின் நீண்ட பக்கங்களே தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.