Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு !!! - பருத்தியன்

Featured Replies

.... சிங்கள அரசின் கொடுமையான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் ஒரு இனத்திற்கு எதிராக இழைக்கப்படும் துரோகம் என்பதை இந்த சர்வதேசம் உணராமல் இருப்பதானது, இந்த உலகத்தில் "மனிதநேயம்" என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற மனநிலைக்கு ஒவ்வொரு தமிழனையும் கொண்டுசெல்கின்றது. இவ்வாறான நிலை தொடருமானால் அதன் விளைவுகளாக தமிழர்களின் பொறுமை சீர்குலைக்கப்படுவதுடன், அரசியல் ரீதியான அகிம்சைவழிப் போராட்டம் மீதுள்ள நம்பிக்கையையும் இல்லாமற் செய்துவிடும் என்பதுவே எதிர்கால யதார்த்தம்.

.... இனி அமையப்போகும் தமிழர் தலைமையும் , தமிழர்களின் பொறுமையின் எல்லையும்தான் எதிர்காலத்தில் தமிழர் தரப்பின் போராட்ட வடிவங்களை நிர்ணயிக்கப்போகின்றன.

... இராஐதந்திர ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகிம்சைவழிப் போராட்டத்திற்கும் மதிப்பளித்து அவர்களுக்கான நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்கக் கூடியதுமாக சர்வதேசம் எவ்வாறு செயற்படும்? என்ற விடயத்திலேயே தங்கியுள்ளது. மாறாக அவர்கள் காக்கும் பொறுமையை அவர்களின் பலவீனம் எனக் கருதி அவர்களின் போராட்டங்களை மேலும் நசுக்க சிங்களமும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து சர்வதேசமும் முயலுமானால் அதன் விளைவுகளை சிங்களத்தோடு சேர்ந்து சர்வதேசமும் அனுபவிக்க நேரிடும்.

இனிமேல் அமையப்போகும் தமிழர் தலைமையைப் பொறுத்தவரையில்... அவர்கள் தமிழர்களை நெறிப்படுத்துபவர்களாகவும், ஒருங்கிணைப்பவர்களாகவும், போராட்டத்தினை நமது தேசியத்தலைவரின் சிந்தனைக்கமைய வழிநடத்துபவர்களாகவும் மாத்திரமே அமையவேண்டும் என்பது பெரும்பாலான தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

.... ஆரம்பம் முதல் இறுதியாக வன்னி அவலம் வரைக்கும் ஏற்பட்ட துயர வடுக்களோடு சிங்களத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலை தமிழருக்கு உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் "தமிழீழம்" ஒன்றே ஈழத் தமிழரின் தீர்வாக அமையும் என்பதையும் அந்த இலட்சியத்தினை அடையும் வரைக்கும் தமிழரின் விடுதலைப் போராட்டம் ஓயாது என்பதையும் நாம் எமது போராட்டங்களினூடாக சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் புரியவைப்போம்!

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

- பருத்தியன்-

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு அருமையான, தற்போதைய நிலைமையின் யதார்த்தமான கருத்துகளை எழுத்து மூலம் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். மனதிற்கு தெம்பு தரும் உங்கள் ஆய்வாக்கங்களை நானும் விரும்பிப் படிப்பேன்- நன்றி பருத்தி அண்ணா

  • Replies 53
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் புலிகளும் தமிழ் மக்களும் ஒன்றா... அண்மையில் லண்டனில் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு வெள்ளை வந்து கேட்டார் இவர்களை[ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை] பார்த்து நீங்கள் இலங்கையா? இவர்கள் ஆம்...தமிழா? ஆம்...புலியா? இவர்கள் உடனே இல்லை இல்லை என சொன்னார்கள் ஏன் இவர்கள் நாங்கள்[மக்கள்] தான் புலி புலி தான் மக்கள் என சொல்லவில்லை? ஆனால் அதில் இருந்த அவ்வளவு பேரும் புலி ஆதரவாளர்கள்... இப்படி நாங்களே புலியையும் மக்களையும் வேறுபடுத்தி சொல்வது நல்லதா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நாங்களே புலியையும் மக்களையும் வேறுபடுத்தி சொல்வது நல்லதா?

சொல்லக் கூடாதுதான். ஆனால் புலிகள் யார் என்றும் தெரியவேண்டும் அல்லவா. தெரிந்தவர்கள் எல்லோரும் மாவீரர் ஆகிவிட்டார்கள் அல்லது சிறிலங்கா அரசின் சிறைகளில் வாடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தியனுக்கு

மிகவும் காத்திரமான கருத்துக்களைத் தாங்கிவந்திருக்கும் உங்களின் இந்தக் கட்டுரை காலத்தின் தேவையை உணர்த்தி நிர்கிறது....

ஆனாலும் நீங்கள் குறிப்பிட்ட ஒற்றுமையாக சேர்ந்து இயங்கவேண்டுமென்பது சாத்தியந்தான் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு கிடைக்கும் பொழுது. உதாரணத்துக்கு முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் நடந்த அவலத்தை நிறுத்தச்சொல்லி நடந்த போராட்டங்களில் வந்திருந்த மக்களுடன் கலந்துரையாடிய போது அறிந்துகொண்ட விடயம் பலர் எமது போராட்டம் சந்தித்துக்கொண்டிருக்கும் பின்னடைவு, மற்றும் கடந்தகால போராட்ட நிகழ்வுகள், தவறுகள் உட்பட பலவிதமான அபிப்பிராய பேதங்களைக் கொண்டிருந்தாலும் எங்கள் மக்களுக்கு ஓர் அவலம் என்றவுடன் ஒன்று சேர்ந்ததைப் போல எமது மக்களை ஒரே குடையில் கீழ் கொண்டுவர முடியும்...

பல நாடுகளுடன் இராஜதந்திர உறவுகள் வளர்க்கப்பட வேண்டும் எனும் கருத்துக்கள் உட்பட பலவிடயங்கள் நிச்சயம் சாத்தியமானதும் அது தாமதமில்லாமல் உடனடியாகச் சாதிக்கப்பட வேண்டியதும் காலத்தின் அவசியமான தேவையாக இருக்கின்றது. எங்கள் தேசியத்தலைவரின் எண்ணங்களை ஏற்று நடக்கும் முறையான ஓர் தலைமை தமிழருக்கு கிடைக்கும் பட்சத்தில் அனைத்தும் விரைவில் சாத்தியமே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி,

வெள்ளாளப் புத்தியை காட்ட வெளிக்கிடுறியளோ? அது என்ன "பறைத்தமிழன்"?

அப்ப சிங்களவன் பறைத்தமிழன் எண்டு சொல்லிச்சொல்லி அடிக்கேக்கை என்ன வெள்ளியே பாத்துக்கொண்டிருந்தனீங்கள்?

குமாரசாமி,

"பறைத் தமிழன்" என்பது சாதியைக் குறிப்பது. தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகம் ஒன்றை இழிவாக அழைப்பதற்கு பயன்படுத்தும் சொல்.

உங்களுக்கு தெரியாது விட்டால் இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

வேளாளர்கள் மற்றவனை திட்டுவதற்கு தாழ்ந்த சாதி மக்களை குறிக்கும் சொற்களை பயன்படுத்துவார்கள். அப்படியே நீங்களும் பயன்படுத்திகிறீர்கள்.

இதற்குள் அதை நியாயப்படுத்தவும் செய்கிறீர்கள். சிங்களவனை துணைக்கு அழைக்கின்றீர்கள். நீங்கள் ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் கேள்வி.

தாழ்த்தப்பட்ட சமூகம் ஒன்றை குறிக்கும் சொல்லை வசைச் சொல்லாக பயன்படுத்துவது வெள்ளாளத் திமிர்.

சிலர் "சண்டாளன்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதையும் கேட்டிருக்கிறேன். திரைப்படங்களில் அதிகம் வரும். இது கூட சாதி ஒன்றை குறிக்கின்ற சொல்தான்.

அறியாமல் செய்திருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை விட எனக்கு சிறுவயதிலிருந்தே பெரிய ஆதங்கம்?

குமாரசாமி அண்ணா!

உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். ஆனாலும்.....

அநாகரிகமான முறையிலான வார்த்தைப் பிரயோகங்களை கொஞ்சம் தவிர்க்கலாமே!!!???

ஏனெனில், அவை பலரது மனதினை காயப்படுத்தலாம்.

இது எனது மிகத் தாழ்மையான வேண்டுகோள்

ஏன் ஒருசில சொற்களை அநாகரிமாக பார்க்கின்றீர்கள்? அதில் என்ன கேவலம் இருக்கின்றது?

ஒருசில தாழ்வுமனப்பான்மைகளே இன்றுவரைக்கும் பல பிரச்சனைகளுக்கு விடிவில்லாமல் இருக்கின்றது?

உதாரணத்திற்கு எனது நண்பன் ஒருத்தன் சொன்னான் நாங்கள் ----------- தொழில்தான் ஊரில் செய்தவர்கள்.

எங்களை---- என்ற சாதி சொல்லி அழைப்பார்கள்.

அங்கே அவன் தனது தொழிலை முதன்மைப்படுத்தினான்.

நீங்கள் குறிப்பிடும் அநாகரீக சொல்லை முதன்மைப்படுத்தி தனது தொழிலை முதன்மைப்படுத்தினான்.

இன்று அவனுக்கிருக்கும் மரியாதையும் புகழும் சொல்லிலடங்கா.

பருத்தியன்!

அநாகரீக வார்த்தை என்று குறிப்பிட்டு நீங்களே மேன்மேலும் பலவிடயங்களுக்கு தூபமிடுகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி,

"பறைத் தமிழன்" என்பது சாதியைக் குறிப்பது. தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகம் ஒன்றை இழிவாக அழைப்பதற்கு பயன்படுத்தும் சொல்.

உங்களுக்கு தெரியாது விட்டால் இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

வேளாளர்கள் மற்றவனை திட்டுவதற்கு தாழ்ந்த சாதி மக்களை குறிக்கும் சொற்களை பயன்படுத்துவார்கள். அப்படியே நீங்களும் பயன்படுத்திகிறீர்கள்.

இதற்குள் அதை நியாயப்படுத்தவும் செய்கிறீர்கள். சிங்களவனை துணைக்கு அழைக்கின்றீர்கள். நீங்கள் ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் கேள்வி.

தாழ்த்தப்பட்ட சமூகம் ஒன்றை குறிக்கும் சொல்லை வசைச் சொல்லாக பயன்படுத்துவது வெள்ளாளத் திமிர்.

சிலர் "சண்டாளன்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதையும் கேட்டிருக்கிறேன். திரைப்படங்களில் அதிகம் வரும். இது கூட சாதி ஒன்றை குறிக்கின்ற சொல்தான்.

அறியாமல் செய்திருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.

உங்களை கையெடுத்து கும்பிடுகின்றேன்.

இனியாவது விதண்டாவாதம் பிடிக்காமல் இருங்கள்????????????

ஏன் எதற்காக தாழ்த்தப்பட்ட சொல்லாக நினைக்கின்றீர்கள்?

அதுவும் வெளிநாடுகளில்?

ஒருசில குறுகிய மனப்பான்மைதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் :blink:

சிங்களவர்கள் "பறைத் தமிழன்" என்று சொன்னதைக் கேட்டு நிறைய வெள்ளாள மனங்கள் கொதித்தது உண்மைதான். தமிழர்களை இழிவுபடுத்துகிறான் என்று அல்ல. வெள்ளாளரை பறையர் என்று சொல்லிப் போட்டான் என்பதுதான் கொதிப்புக்கு காரணம்.

உண்மையில:; "பறையர்" என்பது அநாகரீகமான சொல் இல்லை. ஆனால் அதை ஒரு வசைச் சொல்லுக்குப் பயன்படுத்துவதுதான் உச்சக்கட்ட அநாகரீகம். ஒரு ஆதிக்கசாதிக்காரன் மற்றவனை திட்டுவதற்கு அதைப் பயன்படுத்துவது மிக மோசமான ஒரு செயல்.

சபேசன்!

முதலில் பந்திபந்தியாக எழுதும் உங்களைப்போன்றவர்கள்?

நளவன்,பள்ளன்,வண்ணான், அம்பட்டன் ,கரையான், கோவியன்,சாண்டான், சக்கிலியன் ,பறையன் இன்னும் பல தொழிற்சொற்களை

விரிவாக இளம் சமுதாயங்களுக்கு விரிவுபடுத்தமுனையுங்கள். அதற்குரிய விளக்கங்களை உரியமுறையில் கொடுங்கள்.

எமது இளம் சமுதாயத்திற்கு சாதி என்றதை விலக்கி தொழில் என்ற பெயரில் விளக்கம் கொடுக்க முயற்சியுங்கள்.

சகல சாதிப்பிரச்சனைகளும் தானாக அழிந்துபோகும்.

அதைவிடுத்து கிணற்று தவளை போல் இன்னும் .............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பருத்தியன் அண்ணா, உங்களது கட்டுரை வாசித்தேன். சந்தோசம். வழக்கம் போல ஆக்கபூர்வமாய் நம்பிக்கை தரக்கூடிய எழுத்தாகவே இருந்தது உங்கள் கட்டுரையும் சிந்தனைகளும். உங்கள் முயற்சிக்கு பாராட்டும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றியும்.

தற்போது எமது புலம்பெயர் ஈழ சமூகத்தின் பிரதிபலிப்பாகவே யாழ் களமும் உள்ளது. அண்மைய தோல்விகள் இழப்புகளால் மனம் உடைந்தவர்கள் பலர். எனினும் நாம் ஒரு இனமாகவே அடி சறுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மட்டும் யாழ் களத்திற்கு வந்து தாறு மாறாய் வீண் விதண்டாவாதம் கதைத்து - எம்மை பிரிக்கும் அல்லது பின்வாங்க வைக்கும் மனப்பாங்கை வளர்த்து விட்டு மட்டும் போகும் சிலர் நிச்சயமாக உள்ளார்கள்.

மனோதத்துவ ரீதியாக- மனிதனாகிய எமக்கு, பழக்க படுத்தி கொள்ளும் எதற்கும் அடிமையாகும் சாத்தியங்கள் நிறையவே உண்டு. போதை பொருட்களுக்கு மட்டுமல்ல - கோபம், தோல்வி, நம்பிக்கையின்மை, இயலாமை மேலோங்கிய சிந்தனைகள்- இவை எல்லாம் மீண்டும் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் நாளடைவில் அந்த சிந்தனைகளுக்கே எமது மூளை அதிக இடம் கொடுக்கும்...ஏன் என்றால் புதிதான சிந்தனைகளுக்கு மூளையின் சில இடங்கள் விழித்தெழ வேண்டும்/ புது தகவல்களை உள்வாங்க வேண்டும் -இது மிக கடினமாகத்தான் படும்.

துரோகி துரோகி என்று மலிவாக பட்டங்கள் கொடுக்கிறார்கள் இங்கு.... ஆனால் நான் நினைக்கிறேன், சலித்து நம்பிக்கை தளர்ந்து இருப்பவர்களின் கருத்துகளும் துரோகமாக தான் படும், ஏன் என்றால் வாசிப்பவர்களும் நம்பிக்கை தளர்ந்து தான் இருக்கிறார்கள்.

எமது சக்திக்கு அப்பால் பட்டு ஏதோ ஒரு பெரிய பொறுப்பை, பெரியதாக ஒரு இயக்கத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்ற ஒரு அனுபவம் இல்லாத சிந்தனையே பலரின் சோர்வுக்கு காரணமாகிறது. ஆனால் அந்த பெரிய பொறுப்பை - ஒரு சின்ன செயலால் - அடுத்த ஒரீரு தமிழரோடு என்றாலும் ஒற்றுமையாக இருப்பது - என்ற செயற்பாட்டால் சிந்தனையின் அடிப்படைக்கு செயல் வடிவம் கொடுக்கலாம்.

ஆனால் அதை விட்டுட்டு நாமோ.....!

பார்த்தேன் இந்த கட்டுரை திரியில் கூட ....ஒருவரின் வார்த்தை தெரிவால் ஒரு சாதிபெயர் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கான விளக்கத்தை அவர் விளக்கி சொல்ல முதலே, விளக்கம் கேட்பவர் இன்னொரு சாதியை இழுத்து .. ஏன் தீர்மானம், தீர்ப்பிடல் எல்லாம்!

முஸ்லிம் நண்பர்களுக்குள் இந்த பிரிவினை இல்லை. மதம் என்றாலும் அவர்களை ஒன்றாக இணைத்து வைத்து இருக்கு. ஈழத் தமிழருக்கு, மதம்/சாதி/எந்த இயக்கம் என்று எத்தினை பிரிவினைகள்? இப்பொழுது ஒரு இனமாக கைவிடப் பட்டு நாம் தனித்து நிற்பது - எமது இயலாமையை, ஆத்திரத்தை எமக்குள்ளேயே ஒருவர் மற்றவருக்கு திருப்பும் படி செய்ய வைக்கிறது.

கவிதை பக்கத்தில், "நள்ளிரவு கூட்டம்" என்ற தலைப்பில் இன்னுமொருவன் என்பவர் நல்லதோர் கவிதையை எழுதி இருந்தார். பார்த்தீர்களா? எனக்கு விளங்கிய வரையில்- மதில் என்பது சிங்கள பேரினவாதம்.

சில ஒற்றுமையான சமுதாயங்களில்- ஒரு சிலர் மதிலால் பாதிக்க பட்டால், அந்த இனமே சேர்ந்து மதிலை உடைத்தெறியும்.

நான் நினைக்கிறேன், எமக்கோ இன உணர்வு என்ற ஒன்று- பல பிரிவினைகளுக்கு முன்னால் ஓட்ட பட்டு பூசி மெழுக பட்டு தான் இருக்கிறது.

இப்போது "ஊரில் உள்ள உறவிற்காக..." என்று இங்கு ஜோசிப்பவரில் பலர், இங்கு எமக்கு பளு கூடும் போது ஆழம் இல்லாத எமது பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

ஒரு வேளை இந்த சிங்கள பேரினவாதம் என்ற ஒன்று நேரடியாக புலம்பெயர் தமிழரையும் பாதிக்க வெளிக்கிடும் போது தான்- அந்த ஒரு ஒற்றுமையாவது எமக்குள் எம்மை ஒருங்கிணைக்க கூடும். இதை அறிந்து தான் ஒரு வேளை எங்களுக்கு சொல்ல பட்டதோ தெரியவில்லை, புலம்பெயர் தமிழரை- மக்கள் போராட்டத்தை தொடங்க சொல்லி....நாங்கள் ஒற்றுமையாக ஒழுங்காக செய்கிறோமோ இல்லையோ - சிங்களவன் எங்களையும் சேர்த்து அடிப்பான். அப்போதேன்றாலும் எல்லோரும் ஒன்றாக இணைந்து செயற்படும் சாத்தியம் இருக்குமென?!!!

Edited by Ilayapillai

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையாக அமைப்புக்களை ஒருங்கிணைத்து தொடங்குவதாக சொன்ன அமைப்பு அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்.

இதன் உருவாக்கம் தொடர்பான தகவல்கள் கசிந்துகொண்டிருந்தபோது இன்பத் தமிழ் வானொலியில் அதன் இயக்குநர் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தார

  • தொடங்கியவர்

இனிவரும் காலங்களில் தமிழர்களின் நிலை எவ்வாறு அமையப்போகின்றது என்பது கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், ஒற்றுமையாக போராடினால் மட்டுமே நம்மை நாம் தற்காத்துக்கொண்டு, போராட்டத்திலும் வெற்றிபெறலாம். இதற்காக நாம் முதலில் செய்யவேண்டியது நமக்கிடையேயுள்ள பேதங்களை மறந்து ஒற்றுமைப்படவேண்டியதே.

இதனை மையக்கருத்தாகக் கொண்டே எனது ஆக்கத்தினை எழுதியிருந்தேன். ஆனால், இங்கு பரிமாறிக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் பலவற்றினை உற்றுநோக்கும்போது மனதிற்கு மிகவும் வேதனையளிக்கின்றது.

தன்னம்பிக்கையை சீர்குலைக்கும் விதமான கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.

தேவையற்ற வாதப்பிரதிவாதங்கள், வார்த்தைப் பிரயோகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

விமர்சனங்களும், கருத்துப் பரிமாறல்களும் நிச்சயம் அவசியம்தான். ஆனால், மனமொடிந்து போயுள்ள மக்களை மேலும் துவண்டுபோகாமல் இருக்கக் கூடியவாறான நம்பிக்கையூட்டும் கருத்துக்களை முன்வைத்தால் விடுதலைப் போராட்டத்திற்கு மிகப் பேருதவியாக அமையும்.

இவ்விடயத்தினை இங்கு மட்டுமல்ல அனைத்து ஊடகங்களிலும் வெளிப்படுத்தினால் ஆரோக்கியமானதாக இருக்கும்.

உறவுகளே!

உங்களிடம் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், தன்னம்பிக்கையையும் ஒற்றுமையையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நமது போராட்டத்தினை உறுதியுடன் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்.

இப்பொழுது இதன் அவசியத்தினை உணர மறுப்போமானால், இளையபிள்ளை சொன்னதைப்போல...சிங்களவன் புலம்பெயர்தேசத்தில் வாழும் தமிழர்களையும் குறிவைக்கும்போதுதான் அதை உணர்ந்து கொள்ளவேண்டிவரும். ஆனால்... அப்போது எல்லாமே நமது கைவிட்டு போயிருக்கும்.

அடிமையாக வாழ வேண்டும் அல்லது அழிக்கப்படுவோம் என்ற இழிந்த அவலநிலை நமக்காகக் காத்திருக்கும்.

தீர்மானிக்கப்போவது நீங்கள்தான்....!!!

கருத்துத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இனிவரும் நாட்களில், தனிப்பட்ட கருத்துக்களை தவிர்த்து நமது விடுதலைப் போராட்டம் என்ற அவசியமான பொதுவிடயத்துக்காக கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுவோம்.

ஒற்றுமையாக அமைப்புக்களை ஒருங்கிணைத்து தொடங்குவதாக சொன்ன அமைப்பு அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்.

இதன் உருவாக்கம் தொடர்பான தகவல்கள் கசிந்துகொண்டிருந்தபோது இன்பத் தமிழ் வானொலியில் அதன் இயக்குநர் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தார

இப்போது கூறுங்கள், இதுவா தமிழ்த் தேசியம்? இதுவா அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் கூறும் தமிழ்த் தேசியம் அல்லது ஒற்றுமை?

.

உதட்டளவில் தமிழ்த் தேசியம், ஒற்றுமை என்று கூறி இன்னும் 30 வருடத்துக்கு பின்னாடி போராட்டத்தினை கொண்டுபோக எத்தனிப்பவர்களை அடையாளம் கண்டு - இனியாவது சரியான பாதையில் அனைவரும் பயணிக்க முயற்சிப்போம்.

மொத்தத்தில தமிழர் ஒற்றுமையாக வரவிடகூடாது .அதற்கு யாரிடமாவது காசு வாங்கி ஒற்றுமையாக செயற்படமுயற்சிப்பவர்களை குழப்பவேண்டும் என்று சிலர் வெளிக்கிட்டினம் போல.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பருத்தியன் அண்ணா, உங்களது கட்டுரை வாசித்தேன். சந்தோசம். வழக்கம் போல ஆக்கபூர்வமாய் நம்பிக்கை தரக்கூடிய எழுத்தாகவே இருந்தது உங்கள் கட்டுரையும் சிந்தனைகளும். உங்கள் முயற்சிக்கு பாராட்டும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றியும்.

தற்போது எமது புலம்பெயர் ஈழ சமூகத்தின் பிரதிபலிப்பாகவே யாழ் களமும் உள்ளது. அண்மைய தோல்விகள் இழப்புகளால் மனம் உடைந்தவர்கள் பலர். எனினும் நாம் ஒரு இனமாகவே அடி சறுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மட்டும் யாழ் களத்திற்கு வந்து தாறு மாறாய் வீண் விதண்டாவாதம் கதைத்து - எம்மை பிரிக்கும் அல்லது பின்வாங்க வைக்கும் மனப்பாங்கை வளர்த்து விட்டு மட்டும் போகும் சிலர் நிச்சயமாக உள்ளார்கள்.

மனோதத்துவ ரீதியாக- மனிதனாகிய எமக்கு, பழக்க படுத்தி கொள்ளும் எதற்கும் அடிமையாகும் சாத்தியங்கள் நிறையவே உண்டு. போதை பொருட்களுக்கு மட்டுமல்ல - கோபம், தோல்வி, நம்பிக்கையின்மை, இயலாமை மேலோங்கிய சிந்தனைகள்- இவை எல்லாம் மீண்டும் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் நாளடைவில் அந்த சிந்தனைகளுக்கே எமது மூளை அதிக இடம் கொடுக்கும்...ஏன் என்றால் புதிதான சிந்தனைகளுக்கு மூளையின் சில இடங்கள் விழித்தெழ வேண்டும்/ புது தகவல்களை உள்வாங்க வேண்டும் -இது மிக கடினமாகத்தான் படும்.

துரோகி துரோகி என்று மலிவாக பட்டங்கள் கொடுக்கிறார்கள் இங்கு.... ஆனால் நான் நினைக்கிறேன், சலித்து நம்பிக்கை தளர்ந்து இருப்பவர்களின் கருத்துகளும் துரோகமாக தான் படும், ஏன் என்றால் வாசிப்பவர்களும் நம்பிக்கை தளர்ந்து தான் இருக்கிறார்கள்.

எமது சக்திக்கு அப்பால் பட்டு ஏதோ ஒரு பெரிய பொறுப்பை, பெரியதாக ஒரு இயக்கத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்ற ஒரு அனுபவம் இல்லாத சிந்தனையே பலரின் சோர்வுக்கு காரணமாகிறது. ஆனால் அந்த பெரிய பொறுப்பை - ஒரு சின்ன செயலால் - அடுத்த ஒரீரு தமிழரோடு என்றாலும் ஒற்றுமையாக இருப்பது - என்ற செயற்பாட்டால் சிந்தனையின் அடிப்படைக்கு செயல் வடிவம் கொடுக்கலாம்.

ஆனால் அதை விட்டுட்டு நாமோ.....!

பார்த்தேன் இந்த கட்டுரை திரியில் கூட ....ஒருவரின் வார்த்தை தெரிவால் ஒரு சாதிபெயர் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கான விளக்கத்தை அவர் விளக்கி சொல்ல முதலே, விளக்கம் கேட்பவர் இன்னொரு சாதியை இழுத்து .. ஏன் தீர்மானம், தீர்ப்பிடல் எல்லாம்!

முஸ்லிம் நண்பர்களுக்குள் இந்த பிரிவினை இல்லை. மதம் என்றாலும் அவர்களை ஒன்றாக இணைத்து வைத்து இருக்கு. ஈழத் தமிழருக்கு, மதம்/சாதி/எந்த இயக்கம் என்று எத்தினை பிரிவினைகள்? இப்பொழுது ஒரு இனமாக கைவிடப் பட்டு நாம் தனித்து நிற்பது - எமது இயலாமையை, ஆத்திரத்தை எமக்குள்ளேயே ஒருவர் மற்றவருக்கு திருப்பும் படி செய்ய வைக்கிறது.

கவிதை பக்கத்தில், "நள்ளிரவு கூட்டம்" என்ற தலைப்பில் இன்னுமொருவன் என்பவர் நல்லதோர் கவிதையை எழுதி இருந்தார். பார்த்தீர்களா? எனக்கு விளங்கிய வரையில்- மதில் என்பது சிங்கள பேரினவாதம்.

சில ஒற்றுமையான சமுதாயங்களில்- ஒரு சிலர் மதிலால் பாதிக்க பட்டால், அந்த இனமே சேர்ந்து மதிலை உடைத்தெறியும்.

நான் நினைக்கிறேன், எமக்கோ இன உணர்வு என்ற ஒன்று- பல பிரிவினைகளுக்கு முன்னால் ஓட்ட பட்டு பூசி மெழுக பட்டு தான் இருக்கிறது.

இப்போது "ஊரில் உள்ள உறவிற்காக..." என்று இங்கு ஜோசிப்பவரில் பலர், இங்கு எமக்கு பளு கூடும் போது ஆழம் இல்லாத எமது பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

ஒரு வேளை இந்த சிங்கள பேரினவாதம் என்ற ஒன்று நேரடியாக புலம்பெயர் தமிழரையும் பாதிக்க வெளிக்கிடும் போது தான்- அந்த ஒரு ஒற்றுமையாவது எமக்குள் எம்மை ஒருங்கிணைக்க கூடும். இதை அறிந்து தான் ஒரு வேளை எங்களுக்கு சொல்ல பட்டதோ தெரியவில்லை, புலம்பெயர் தமிழரை- மக்கள் போராட்டத்தை தொடங்க சொல்லி....நாங்கள் ஒற்றுமையாக ஒழுங்காக செய்கிறோமோ இல்லையோ - சிங்களவன் எங்களையும் சேர்த்து அடிப்பான். அப்போதேன்றாலும் எல்லோரும் ஒன்றாக இணைந்து செயற்படும் சாத்தியம் இருக்குமென?!!!

அதுதான் நடக்கும்போல் தெரிகிறது. தெளிவற்ற தமிழினமும் தெளிவான சிங்களமுமாக நாட்கள் நகர்கிறது. ஆனால் நாமோ தேவையற்ற விவாதங்களுடன் தெருவிலே நடுத் தெரிவிலே நிற்கிறோம்.

இந்த கட்டுரை திரியில் கூட ....ஒருவரின் வார்த்தை தெரிவால் ஒரு சாதிபெயர் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கான விளக்கத்தை அவர் விளக்கி சொல்ல முதலே, விளக்கம் கேட்பவர் இன்னொரு சாதியை இழுத்து .. ஏன் தீர்மானம், தீர்ப்பிடல் எல்லாம்!

சாதிப் பெயரை இழுத்து வசை பாடுகின்ற ஒருவரிடம் என்ன மண்ணாங்கட்டிக்கு விளக்கம் கேட்க வேண்டும்?

"பறைத் தமிழர்" என்ற சொல் சாதியத்தில் இருந்த வருகிறது என்பதை அறியாமல் அதைப் பயன்படுத்தியிருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பது சரியாக இருக்கும். ஆனால் அப்படியான பழக்கம் இவர்களிடம் இல்லை.

எங்கள் அடிமனதில் இருந்து சாதியை தூக்கி எறிய தயாராக இல்லை. பின்பு எப்படி இனம், தேசியம் போன்றவை உருவாக முடியும்?

சாதிப் பெயரை சொல்லி திட்டினால் தண்டிப்பதற்கு இப்பொழுது புலிகள் இல்லை. இனி நாம்தான் அந்தப் பொறுப்பை எடுக்க வேண்டும்.

இனம், தேசியம் வலியுறுத்தப்பட வேண்டிய இந்த நேரத்தில், யாராவது சாதியால் தன்னை உயர்ந்தவன் என்பது போன்று நடந்தாலோ, மற்றவனை சாதியின் பெயரில் தாழ்த்தினாலோ, சாதிப் பெயர்களை வசைச் சொற்களாக பயன்படுத்தினாலோ சற்றும் யோசிக்காமல் கன்னத்தில் ஒன்று போடுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாரைப்பாம்பு என்னத்துக்கு மனிசரை கடிக்கிது எண்ட விசயம் ஆருக்காவது தெரியுமோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாரைப்பாம்பு என்னத்துக்கு மனிசரை கடிக்கிது எண்ட விசயம் ஆருக்காவது தெரியுமோ? :lol:

நான் அடிச்சு சொல்லுறேன் எனக்கு தெரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதிப் பெயரை இழுத்து வசை பாடுகின்ற ஒருவரிடம் என்ன மண்ணாங்கட்டிக்கு விளக்கம் கேட்க வேண்டும்?

மன்னிக்கவும் சபேசன், நீங்கள் விளக்கம் கேட்டீர்கள். அதில் பிழையேதும் இல்லை. ஆனால் சாதி புத்தி என்று நீங்கள் தீர்பிட்டது தான் எனது கருத்தின் படி பிழையாக பட்டது.

"பறைத் தமிழர்" என்ற சொல் சாதியத்தில் இருந்த வருகிறது என்பதை அறியாமல் அதைப் பயன்படுத்தியிருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பது சரியாக இருக்கும். ஆனால் அப்படியான பழக்கம் இவர்களிடம் இல்லை.

(குமாரசாமி அண்ணா மன்னிக்கவும் :lol: ) - குமாரசாமி எழுதியது சிங்களவன் சொன்னதை அப்படியே என்று எனக்கு விளங்கி இருந்தாலும், சாதி பெயர் அதில் வருவதால் அதை எழுதாமல் விட்டு இருக்கலாம் என்று தான் நானும் நினைத்தேன். ஆனால் அவர் சொன்ன கருத்தின் நோக்கம் சாதி பிரிவினையை உண்டாக்கும் நோக்கத்துடன் இல்லை என்று பட்டதால், பேசாமல் இருந்தேன். பருத்தியன் கூட அந்த சாதி குறிப்பை சுட்டி காட்டி இருந்தார் - ஆனால் பண்பாக!

நீங்கள் தான் இந்த திரியில் சாதி கலவரத்தை தூண்டுவது போல "வெள்ளாள புத்தி... வெள்ளாள திமிர்....ஆதிக்க சாதிக்காரன்" என்றெல்லாம் ஓர் சாதியை "வசை" பாடியது.

ஒருவர் செய்வது பிழை என்றால் பிழையை சுட்டி காட்டுங்கள், ஏன் பிரிவினையை அதிகரிக்கும் வடிவமாக விதண்டாவாதத்தை வளர்க்கிறீர்கள்?

எங்கள் அடிமனதில் இருந்து சாதியை தூக்கி எறிய தயாராக இல்லை. பின்பு எப்படி இனம், தேசியம் போன்றவை உருவாக முடியும்?

உங்கள் அடிமனதில் இருந்து முதலில் வேளாள வெறுப்பை தூக்கி எறிய முயற்சி செய்யலாம்.

சாதிப் பெயரை சொல்லி திட்டினால் தண்டிப்பதற்கு இப்பொழுது புலிகள் இல்லை. இனி நாம்தான் அந்தப் பொறுப்பை எடுக்க வேண்டும்.

சாதி பெயரை சொல்லி திட்டினால் தண்டிப்பதற்கு புலிகள் இல்லை, என்றா நீங்களும் பதிலுக்கு இன்னொரு சாதியை இழுத்து வசை பாடுகிறீர்கள். எல்லோருக்கும் ஒரே நியாயத்தை வைத்து கொள்ளலாமே?

இனம், தேசியம் வலியுறுத்தப்பட வேண்டிய இந்த நேரத்தில், யாராவது சாதியால் தன்னை உயர்ந்தவன் என்பது போன்று நடந்தாலோ, மற்றவனை சாதியின் பெயரில் தாழ்த்தினாலோ, சாதிப் பெயர்களை வசைச் சொற்களாக பயன்படுத்தினாலோ சற்றும் யோசிக்காமல் கன்னத்தில் ஒன்று போடுங்கள்

இது எல்லாருக்கும் பொருந்தும்! இதை நான் எழுதுவதால் நான் என்ன சாதி என்று நீங்களே தீர்மானித்து திட்டி தீர்ப்பிட வேண்டாம். எனக்கும் சாதி பிரிவினையில் உடன்பாடு அறவே இல்லை!!!! என்னை பொறுத்தவரை முன்னோர்கள் செய்த உத்தியோகங்களை தான் சாதி குறிக்கிறது. அதற்குள் நல்லது கெட்டது, உயர்ந்தது தாழ்ந்தது, சாதிப்புத்தி என்று தீர்ப்பிடல் ஒன்றும் இருக்க கூடாது. உயர்ந்தது என்று ஒன்றை பிரித்தெடுத்து அதை சாடுவோமானால், அந்த செயலின் மூலம் உயர்ந்தது தாழ்ந்தது என்ற பிரிவினையை வளர்த்து விடுகிறோம் - அது தான் கூடாது என்கிறேன்.

சாதி பிரிவினை இருக்க கூடாது என்ற உங்கள் கொள்கையை வரவேற்கிறேன், ஆனால் உங்கள் கருத்தும் செயலும் ஒன்றுக்கொன்று ஒரு விதத்தில் முரண்படுகிரதையே சுட்டி காட்டுகிறேன். உங்களால் ஏற்று கொள்ள முடியா விட்டாலும், இதை வாசிப்பவர் சிலராவது எனது நியாயத்தை விளங்கி கொள்வர் என்று நினைக்கிறேன்.

இதற்கு மேல் இந்த கதையை நான் வளர்க்க விரும்பவில்லை. பருத்தியன், மன்னிக்கவும் உங்கள் கட்டுரை திரியில் இவற்றை தெளிவு படுத்த வேண்டி வந்ததால்... :lol:

Edited by Ilayapillai

  • கருத்துக்கள உறவுகள்

சாரைப்பாம்பு என்னத்துக்கு மனிசரை கடிக்கிது எண்ட விசயம் ஆருக்காவது தெரியுமோ? :lol:

நான் கேள்வி பட்ட‌ வரை சாரைப் பாம்பு மனிதரை கடிக்கதாம் தன் வாலால் தான் அடிக்குமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்ற பாம்பு எல்லாம் கொத்துமா? அல்லது கடிக்குமா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற பாம்பு எல்லாம் கொத்துமா? அல்லது கடிக்குமா? :lol:

மற்றையது எல்லாம் கொத்தும் சாரை தான் அடிக்கும். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நல்ல கட்டுரை பருத்தியன்.இந்த சாதிப்பெயர்களை குறிப்பிடும் விடயம் அவ்வளவு நல்லதில்லை.ஆனாலும் 'வெள்ளாள மனோபாவம்' என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள்கூட்டத்தை

சொல்லுவதல்ல.மாறாக ஆதிக்ககுணமும் மற்றவர்களை காலுக்குகீழாக வைத்திருக்கும் எண்ணக்

கனவையே 'வெ.ம'எனலாம்.ஆனாலும்' ஆறுமுகநாவலர் சைவவேளாள மரபில் பிறந்தார்'என்று

காலகாலமாக புத்தகங்களில் நஞ்சூட்டப்பட்டபோது சாதிப்பெருமையில் ப+ரித்த பெருமக்கள்

இப்போது சாதிப்பெயர்களை சபேசன் எழுதுகிறார் என்று பொருமுவது நல்ல பகிடிதான்.

ஆனாலும் வெள்ளாளமனோபாவம் என்பது என்னவென்றால்

1.ஒரு புரட்சிகரமான சமூகமாற்றங்களுக்கான விடுதலை போராட்டங்கள் ஆரம்பநிலையில் இருக்கும்போது அதை வளரவிடாமல் கருத்துக்களை விதைப்பார்கள்(இன்று சிலரை பார்க்கலாம்)

2.ஆனால் அந்தப்போராட்டம் இவர்களின் நாசகார கருத்துக்களை மீறி வளர்ந்துவிட்டால்

அதனுடன் வந்து ஒட்டி அனுபவிப்பவர்களும் இவர்கள்தான்.

3.ஆறுமுகநாவலர் சேர் பொள் இராமநாதன் முதல் இன்று விமர்சனம் என்ற போர்வையில்

எழுதுபவர்களும் இவர்களே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் சொல்லப்பட்ட ஒற்றுமையைக் குலைக்கும் விதமாகவே கருத்தைச் திசை திருப்பும் விதமாக கருத்தை எழுதுவது அவ்வளவு நல்லதல்ல. கு.சா வின் வார்த்தைப் பிரயோகத்தை கண்டும் காணாமல் விடுவது தான் சாதியை ஒழிக்க விரும்புவர்களின் சரியானவழி. அதை விடுத்து கருத்துக்கள் கட்டுரைபற்றி இருக்கும்; போதெல்லாம் திசை திருப்புவது தமிழரின் ஒற்றுமைறைக் குலைக்கவே வழி வகுக்கும்.

இனி கட்டுரை பற்றி

பிழை விட்டு விட்டோம் பிழை விட்டு விட்டோம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் ஏதாவது நன்மை விளையப் போகிறதா?தவறுகளைச் சரிசெய்து தொடர்ந்து பேராடுவதே எமக்குள்ள வழி. பேராடுபவன் தோற்கலாம் (வெல்லவும் சந்தர்ப்பம் உண்டு) போராடதவன் ஏற்கனவே தோற்று விட்டவன்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.