Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ பக்திபூர்வமாக நடைபெற்ற நல்லுர் கந்தன் தேர்த் திருவிழா

Featured Replies

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், நல்லுர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்க மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த மக்கள் மத்தியில் மிகவும் பக்திபூர்வமாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

காலை 5:30 நிமிடத்துக்கு தொடங்கிய வசந்த மண்டபப் பூசையையடுத்து முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சகிதம் காலை 7:00 மணியளவில் தேரில் ஆரோகணம் செய்தார்.

வெளி வீதியைச் சுற்றிவந்த பின்னர் காலை 8:30 நிமிடமளவில் இருப்பிடத்தை வந்தடைந்தது. பெரும் தொகையான பக்தர்கள் தேருக்குப் பின்னால் பிரதட்டை செய்ததையும் காண முடிந்தது.

nallur_20090819001.jpg

nallur_20090819002.jpg

தேர்த் திருவிழாவை முன்னிட்டு அடியார்களின் நலன்கருதி யாழ. மாநகரசபையின் சுகாதாரப் பகுதியினர் குடிநீர், மலசலகூட வசதிகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். ஆலய சுற்றாடல்கள் அனைத்தும் மங்கள தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வாழைகள் கட்டப்பட்டு தெய்வீகமயமாகக் காணப்படுகின்றது.

அனைத்து தண்ணீர்ப் பந்தல்களிலும் பக்தர்கள் தாக சாந்தி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவு, இந்து இளைஞர் கழகங்கள், சாரணர் அமைப்புக்கள் என்பன இணைந்து விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

 

இதேவேளையில், தேர்த் திருவிழா மற்றும் தீர்த்த திருவிழாவை முன்னிட்டு குடாநாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இரவு நேர ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாக பலாலி பாதுகாப்பு தலைமையகம் அறிவித்திருந்தது.

nallur_20090819003.jpg

nallur_20090819004.jpg

nallur_20090819005.jpg

இந்நடைமுறைக்கு அமைவாக நேற்று செவ்வாய்க்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட அதேவேளையில், இன்று புதன்கிழமையும் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பதால் போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் பேருந்து டிப்போக்கள் ஆலய திருவிழா சேவையை அதிகாலை 4:00 மணிக்கு தொடங்கி நடத்தியதால் இன்று காலையிலேயே வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள் தேர்த் திருவிழாவில் கலந்துகொள்ள முடிந்தது.

இந்த சேவையில் ஐம்பது பேருந்துகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த சிறப்புச் சேவையையொட்டி முத்திரை சந்தையில் தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

தேர், தீர்த்தம், பூங்காவன திருவிழாவின்போது நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபம் உட்பட ஆறு மடாலயங்களில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளன. சகல தண்ணீர்ப் பந்தல்களிலும் நாள் முழுவதும் தாகசாந்தி வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதேவேளையில் இன்று காலை இடம்பெற்ற தேர்த் திருவிழா நிகழ்வினை சமநேர காலத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள 24 மணிநேர தமிழ் வானொலிகள் நேரடி ஒலிபரப்புச் செய்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

nallur_200908190066.jpg

nallur_20090819007.jpg

nallur_20090819008.jpg

nallur_20090819009.jpg

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில்

எல்லாம் மறந்தேனடி கிளியெ எல்லாம் மறந்தேனடி கிளியே

அரோகரா நல்லூர் கந்தனுக்கு அரோகரா

தங்கன்ட சொந்தங்கள் முள்கம்பி வேலிகளுக்குள் அவல வாழ்வு வாழும் நிலையில்

மடுமாதா திருவிழாவை பெரிய அளவில் செய்ய வேண்டாம் என்றும் ஆரோ பத்து குருமார் பகிஸ்கரித்ததாயும் அண்மையில் படிச்சன்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், நல்லுர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்க மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த மக்கள் மத்தியில் மிகவும் பக்திபூர்வமாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

புதினம்

உதென்ன. இந்த முறை பிரச்சனையால எங்களால திருவிழாவுக்குப் போகேலாமப் போட்டுது. கடைசி நேரம் ஓடித்திரிந்தும் விமான ரிக்கற் எடுக்கேலாமப் போட்டுது.

அடுத்த முறை பாருங்கோ. கலக்குவம்.

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன பெரிய காரியம்.. உங்க லண்டனில.. ஒரு நாள் கூத்துக்கு 30,000 பவுண்டுகள் ( 30,000 x 180 ருபாக்கள்) செலவு பண்ணி கசாப்புக்கடைக்கு முன்னால தேர் இழுத்து திருவிழாச் செய்தனாங்கள்.. நீங்கள் என்னடான்னா.. இதை மட்டும் பெரிசாப் போடுறியள். புதினத்துக்கு லண்டன் சிறீ முருகன் அப்படி என்ன செய்தவர்..! :wub: :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க வளமுடன்

தமிழர்கள் அனைவருக்கும் அறிவைக்கொடுக்குமாறு எல்லாம் வல்ல ராஜபக்ஸவை வேண்டிக்கொள்கிறேன்.

வேட்டியே போனாலும் பறவாயில்லை சந்தனம் பூசினால் மணக்கும்தானே?

இவர்கள் அவர்கள் என்று யாரையும் என்னால் பிரித்து பார்க்க முடியவில்லை.

நாங்கள எல்லாரும் கோமாளிகளே.

எல்லாம் அவன் செயல்

ஆமா யாரு கடவுள் அவர் எங்கை இருக்கிறார். முள்ளிவாய்யகாலில் எல்லாம் ;முடிநத் போது எங்கே போனார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதென்ன. இந்த முறை பிரச்சனையால எங்களால திருவிழாவுக்குப் போகேலாமப் போட்டுது. கடைசி நேரம் ஓடித்திரிந்தும் விமான ரிக்கற் எடுக்கேலாமப் போட்டுது.

அடுத்த முறை பாருங்கோ. கலக்குவம்.

இதுதான் உண்மை எங்களிலேயே எத்தனை பேர் போட்டு வந்து யாழ்விஜயமும் நல்லூர் தேரும் அப்படி இப்படி என்று பயணக்கட்டுரை எழுதியிருப்போம்.

மிஸ் ஆயிட்டுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்குச் சொல்லி அழுவது!

பெருந் தொகையான மக்கள் அழிக்கப்பட்ட இந்த ஆண்டினது எல்லாக் கோயில்களது வருடாந்தத் திருவிழாக்கள் இரத்து(இடைநிறுத்தப்படடிருக்

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயரர்த நாடுகளில் திருவிழாக்களை நடத்தலாம் அங்கு நடத்தக்கூடாது என்று கூறுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம்.மக்கள் திருவிழா செய்யாமல் விட்டால் முகாம்களில் இருக்கும் மக்களுக்கு ஏதாவது மாற்றங்கள் வந்து விடப் போவதில்லை திறந்த வெளிச் சிறையில் இருக்கும் மக்கள் ஒன்று கூடி ஒற்றுமையாக வடம் பிடி;கிறார்கள் அதை ஏன் தடுப்பான். ஒரு நாளைக்காவ சந்தோசமாக இருக்கட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயரர்த நாடுகளில் திருவிழாக்களை நடத்தலாம் அங்கு நடத்தக்கூடாது என்று கூறுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம்.மக்கள் திருவிழா செய்யாமல் விட்டால் முகாம்களில் இருக்கும் மக்களுக்கு ஏதாவது மாற்றங்கள் வந்து விடப் போவதில்லை திறந்த வெளிச் சிறையில் இருக்கும் மக்கள் ஒன்று கூடி ஒற்றுமையாக வடம் பிடி;கிறார்கள் அதை ஏன் தடுப்பான். ஒரு நாளைக்காவ சந்தோசமாக இருக்கட்டுமே.

புலவர் இவர்களோ.. புலம்பெயர்ந்த தமிழர்களோ.. இவ்வாறு செய்து கொள்வதன் மூலம் எதிரிக்கே அவனின் பிரச்சாரத்துக்கே உதவி அளித்து.. முகாம்களில் கிடக்கும் மக்களின் அவல வாழ்வை தொடரச் செய்யப் போகின்றனர் என்பதுதான் உண்மை.

இந்த ஒன்றே போது மகிந்த யாழ்ப்பாண மக்கள்.. வடபகுதி மக்கள் தன்னுடன் உள்ளனர் என்றும்.. பாதுகாப்புப் படையினர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் எனவும்.. வவுனியாவில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றி இவர்களே கருசணை கொள்ளாத போது அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே என்று சாதிக்க இது போதுமானது.

வெளி உலகமும்.. புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாகவே அவதானித்து வருகிறது. முள்ளிவாய்க்காலோடு அடங்கிப் போன புலம்பெயர் குரல்களைக் கண்டு சர்வதேசம் உள்ளூர மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறது. தனக்கு வர இருந்த அந்த கொஞ்சம் அழுத்தமும் போய்விட்டதாகவே அது எண்ணி மகிழ்கிறது. சிலர் கவலைப்படவும் செய்கின்றனர். இந்தப் பிரச்சனையில் தமது தலையீட்டுக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது என்று.

ஆக.. தமிழ் மக்களாக இந்த போராட்டத்தை நடத்தவில்லை. தமிழ் மக்கள் அரசாங்கத்தோடு சேர்ந்து இருக்கவே விரும்புகின்றனர்.. புலிகளும் அவர்களால் மாற்றப்பட்ட வன்னி மக்களுமே பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்தனர். எனவே 3 இலட்சம் மக்களையும் விடுவிப்பது என்பது பயங்கரவாதத்தை வளர்ப்பது போலாகிவிடும் என்று.. எனி கண்ணி வெடிகளுக்கு மேலதிகமாக இக்கருத்துக்கள் அடைக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலையை தாமதப்படுத்த உபயோகிக்கப்படப் போகிறது.

அதற்குத்தான் இத்தனை கொண்டாட்டங்கள்...! ஊக்குவிப்புக்கள்..! நீங்களும் அதைப் புரியாமல்.. ஒரு நாள் சந்தோசத்திற்காக சொந்த மக்களைக் காட்டிக் கொடுப்பதை.. அங்கீகரிப்பதானது.. நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சுயநலத்தையே பிரதிபலிப்பதாக உணர்கிறேன்.

ஏன்.. இதைச் சுட்டிக்காட்டி எழுதிய சில இடங்களில் தமிழர்களே வன்னி மக்களின் துன்பம் சம்பந்தப்பட்ட செய்தி அவ்விடங்களில் இணைக்கப்பட்டதை அகற்றிக் கொண்டு முருகனிடம் கையேந்தியோருக்கு முன்னுரிமை அளித்து.. அவர்களை தூய்மைப்படுத்த வெளிக்கிட்டனர்.

இவர்களை மனிதர்களாகக் கூட என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை..! பச்சிளம் குழந்தைகளும்.. பாலர்கர்களும்.. ஒருவேளை உடைக்கு.. உணவுக்கு அவதிப்படும் இன்றைய நிலையில்.. அரசாங்கத்தின் பொய் புளுகுகளுக்கு இடைமளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் இவர்கள் உண்மையில். தமிழீழ போராட்டத்தை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுதான் இருந்தார்களா.. அல்லது புலிகளுக்காக அப்படி நடித்தார்களா என்பதுதான் இன்றைய கேள்வியாக இருக்கிறது.

புலம்பெயர்ந்த தமிழர்களளில் அநேகர் தங்கள் கிட்டாது என்றிருந்த வெளிநாட்டு வாழ்வுக்கான கனவை நனவாக்க போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டனரே தவிர.. வேறு எதனையும் அவர்கள் சாதிக்க உருப்படியான நினைத்ததும் இல்லை..! செய்ததும் இல்லை என்பதையே அவர்களின் தற்போதைய நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.

இவை நிச்சயம் எமது போராட்டத்தை எதிரி சர்வதே அரங்கிலும் உள்ளூரிலும் மலினப்படுத்தவே வகை செய்யும். இவை தமிழீழக் கனவை நம்பி போராடி மடிந்த அத்தனை உயிர்களுக்கும் செய்த பச்சத்துரோகமாகவே எனக்குப் படுகிறது. இப்படி ஒரு சந்தோசம்.. தான் தமிழனுக்கு தேவைப்பட்டதா..??! இதற்காகவா இவ்வளவு இழப்புகளோடு.. வலிகளோடு போராடினோம்..! போராடினார்கள். வாழ்வைத் தொலைத்தார்கள்..! :wub: :wub:

உதெல்லாம் சரி... இரண்டு பெண்களின் தாலிக் கொடிகள், மற்றும் ஏழு பெண்களின் தங்கச் சங்கிலிகள், ஒருவரின் கைச் சங்கிலி இப்படி லிஸ்ட் போட்டு ஆரப்பா சுட்டது? :wub: அரோகரா! :wub:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=62852&hl=

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் மும்மாறி பொழிகிறது, மக்கள் அனைவரும் செல்வச் செழிப்புடன் இருக்கிறார்கள், கவலை என்றால் என்னவென்றே தெரியாது, பணம் வீட்டில் காலில் உழக்கப்படுகிறது, .......எங்கேயோ நாட்டில 50,000 சனம் செத்து, 300,000 முட்கம்பிக்குப் பின்னால் அடிபட்டதாம் எண்டு கேள்வி?! அதெல்லாம் இப்ப என்னத்துக்கு? ஆரோ சாகுது, ஆரோ அடைபடுது?! அவையென்ன எங்கட ஆக்களே? எங்கேயோ வன்னியாம், அதுக்க இருந்து சுதந்திரம் கேட்டவையாம்! சும்மா எங்கள மாரி இருந்தா, எத்தினை திருவிழா கொண்டாடியிருக்கலாம்?! மோட்டுச்சனம், சுதந்திரமும் கத்திரிக்காயும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் நாட்டில் மானாடமயிலாட ஸ்டையிலில் ர்ப்புகை அடிச்சு அட்டகாசமான சாமத்தியவீட்டு நிகழ்ச்சி ஒன்று நூற்றுக்கணக்கான மக்கள் புடைசூழ இனிதே நடந்தேறியது.

கடந்த முறை நடந்த திருவிழாவின் பொழுது இராணுவ சீருடையுடன் பல இராணுவத்தினர் பக்தர்களுடன் நிற்பதை காணக்க்கூடியதாக இருந்தது.இம்முறை இராணுவத்தினரை காணவில்லை ,திட்டமிட்டு இராணுவத்தின் படங்களை பிரசுரிக்கவில்லயா?

யாழ் இளைஞர்களின் பக்தி முத்தியாக அவர்கள் செய்ய்யும் செயலை பல கோணங்களில் காட்டியுள்ளனர்' இதுவும் ஒரு திட்டமிட்ட செயலோ

மக்கள்கூட்டத்தின் மத்தியில் டக்கிளஸின் படத்தையும் போட்டுள்ளனர்..,மக்கள் பிரதி நிதி டக்கிளஸ் தான் என்று காட்டுவதற்கோ தெரியவில்லை

மீண்டும் பட்டு வேஸ்டி மைனர்களின் பிரசங்கங்கள் ,

அடுத்த திருவிழாவுக்கு அவுஸ்ரேலியா ஆத்மீகவாதி,கனடா ஆத்மீகவாதி,லன்டன் ஆத்மீகவாதி என்று ஒரு கோஸ்டி புலம் பெயர் சாமிமார் என்று பந்தா காட்டி நல்லூர் சென்று பிரசங்கம் செய்வினம்

என்னைப் பொறுத்த வரையில் அதுவல்ல பிரச்சனை, ஏன் முருகனுக்கு விழா எடுத்தால் வரிந்து கட்டிக்கொண்டு சன்டைக்கு வரும் இவர்கள், மடு மாதாவுக்கு விழா எடுத்தால் வாய் மூடி மவுனிகளாகி விடுகிறார்கள், கடைசியில் YOU TOO நெடுக்க்ஸ் ?????

என்னைப் பொறுத்த வரையில் அதுவல்ல பிரச்சனை, ஏன் முருகனுக்கு விழா எடுத்தால் வரிந்து கட்டிக்கொண்டு சன்டைக்கு வரும் இவர்கள், மடு மாதாவுக்கு விழா எடுத்தால் வாய் மூடி மவுனிகளாகி விடுகிறார்கள், கடைசியில் YOU TOO நெடுக்க்ஸ் ?????

மேற்குலகினர் கிறிஸ்தவர்கள். எனவே மடுமாதாவிற்கு விழா எடுத்து தமிழர்கள் பங்கு பற்றினால் மேற்குலம் மகிழ்வுற்று எமக்காக ஆதரவு தரும் என்பது உங்களுக்கு தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன் நெடுக்ஸ். முல்லைத்தீவில் 7;0 ஆயிரம் மக்கள் தான் உள்ளனர் என்று சிறிலங்கா சொன்னதை நம்பிய சர்வ தேசம் அந்த மக்களை விடுவிக்கவே தாக்குதல் செய்கிறோம் என்று சொன்னதை ஏற்றுக் கொண்ட சர்வதேசம் முள்ளி வாய்காலில் 30 ஆயிரம் மக்கள் இறந்ததையும் மனதளவில் சகித்துக் கொண்ட தமிழீழம் கனரக ஆயுதங்கள் பாவிக்கப் பட்டதை செய்மதி ஒளிப்படங்கள் முலம் சந்தேகமின்றி உணர்ந்து கொண்டசர்வதேசம்.பெரும் மனிதப் பேரழிவுகள் நடக்கப் போகின்றதென்பதை உலகத்தமிழர்கள் பேராட்டம் மூலம் சொல்லியு;ம் கருத்திற்கெடுக்காத சர்வதேசம்.இன்னும் எங்களைப் பற்றிக் கரிசனை கொள்ளுமா என்ற விரக்தியில் எழுதியவையே எனது கருத்துக்கள்.இந்தச் சர்வதேசத்திற்கு நல்ல பிள்ளையாக இருக்க வெளிக்கிட்டதாலதான் புலிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் இந்த நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரையில் அதுவல்ல பிரச்சனை, ஏன் முருகனுக்கு விழா எடுத்தால் வரிந்து கட்டிக்கொண்டு சன்டைக்கு வரும் இவர்கள், மடு மாதாவுக்கு விழா எடுத்தால் வாய் மூடி மவுனிகளாகி விடுகிறார்கள், கடைசியில் YOU TOO நெடுக்க்ஸ் ?????

மடு தேவாலயத்தில் கூடியவர்கள் அநேகர் சிங்கள கிறீஸ்தவர்கள் என்று பிபிசி உட்பட்ட ஊடகங்களே சொல்லிவிட்டன. அதற்கு மேலதிகமாக.. மடு திருவிழாவில் அந்த ஊர் மக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்பதும்.. தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை என்பது சம்பந்தப்பட்ட தரப்புக்களால் அறிவிக்கப்பட்டு அது ஊடகங்களிலும் வெளி வந்திருந்தது. இது அரசை தர்ம சங்கத்தில் ஆழ்த்தியது என்பதும் நினைவு கூறத்தக்கது.

ஆனால் இங்கு...?????????????! அப்படியான எதுவும்.. இல்லை.. ! ஏன்..??! ஒரு அறிவிப்பைத்தானும் விட்டார்களா..??! நல்லூர் பக்த கோடிகள்..???! :D:icon_idea::)

நெடுக்ஸ் நான் கேள்விப்படேன் எல்லாத்துக்கும் யாழ்ப்பாணத்து மக்கள் தான் என்று

வெள்ளைக் காரன் இலங்கை வந்து வடபகுதியில் சில இடங்கள் வந்த போது யாழ்ப்பானத்துக்காரரை இலகுவாக மதம் மாத்தினததகவும் உண்மையோ?

  • கருத்துக்கள உறவுகள்

சசி நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஏனென்றால் வடபகுதியின் கடற்கரை நகரங்களில் எல்லாம் கிறீஸ்த்தவர்கள் அதிகமாக இருந்ததைப் பார்க்கும் போதும், பல பிரபல கல்லூரிகள் கிறீஸ்த்தவ பாதிரிகளால் ஆரம்பிக்கப்பட்டதைப் பார்க்கும் போது இதை உணர முடிகிறது. ஆனால் யாழ்ப்பாணம் மட்டும்தான் அப்படியென்று இல்லை. மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை போன்ற ஏனைய முன்னாள் தமிழ் நகரங்களிலும் அவர்கள் செறிந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழர்கள் என்று அடையாலப்படுத்தப் படும்போது கிறீஸ்த்தவர்களும் அதற்குள் அடங்குகிறார்கள். ஆகவே நீங்கள் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை.

மதம் ஒரு பொழுது போக்கு மட்டுமே. உணர்வு ஒன்றுதான் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தாங்கள் அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை. தாங்கள் சந்தோசமாக இல்லை என்பதை 80 வீதமான மக்கள் தேர்தல் புறக்கணிப்பு மூலம் தெரிவித்ததை ஏற்றுக் கொள்ளாத சர்வ தேசத்திற்கு மக்கள் பிரார்த்தனையைப் செய்வதை வன்னி மக்களில் கரிசனை இல்லாதவர்கள் என சர்வ தேசம் போல நாங்களும் சொல்லலாமா.வன்னி மக்கள் சர்வதேச தரத்தில் இருப்பதாக இந்து ராம் சொன்னரே.சிறிலங்கா எதைச் சொன்னாலும் தலையாட்டும் சர்வதேசத்திற்கு நாங்கள் கவலையாய் இருக்கிறோம் என்பது விளங்கவா போகின்றது.

இந்த சர்வதே கம்மநாட்டி ஊடகங்களுக்கு யாராவது மைதானத்தில திறந்து போட்டு ஒடினா அதை சகல கோணத்திலயும் படம் எடுத்து ஆராச்சி பண்ணி விமர்சனம் செய்வான் .உரிமைகளுக்காக யாராவது போராடினால் கண்டு கொள்ளமாட்டான்

Edited by Jil

மடு தேவாலயத்தில் கூடியவர்கள் அநேகர் சிங்கள கிறீஸ்தவர்கள் என்று பிபிசி உட்பட்ட ஊடகங்களே சொல்லிவிட்டன. அதற்கு மேலதிகமாக.. மடு திருவிழாவில் அந்த ஊர் மக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்பதும்.. தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை என்பது சம்பந்தப்பட்ட தரப்புக்களால் அறிவிக்கப்பட்டு அது ஊடகங்களிலும் வெளி வந்திருந்தது. இது அரசை தர்ம சங்கத்தில் ஆழ்த்தியது என்பதும் நினைவு கூறத்தக்கது.

ஆனால் இங்கு...?????????????! அப்படியான எதுவும்.. இல்லை.. ! ஏன்..??! ஒரு அறிவிப்பைத்தானும் விட்டார்களா..??! நல்லூர் பக்த கோடிகள்..???! :lol: :lol: :lol:

அறிவிப்பு விடுவதில் பிரச்சனை இல்லை ஆனால் அறிவிப்பு விட்ட பின்னர் முருகன் தேரில் போவார், அறிவிப்பு விட்டவர் வெள்ளை வானில் போவார் அதான் பிரச்சனை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.