Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீன் / மாட்டிறைச்சி சமைக்கு முறை வேண்டும்: உதவி

Featured Replies

சமையல் என்பது முறை அல்ல, .தொழில் அல்ல..அது ஒரு கலை... என்றுமே எவருக்கும் அம்மாவின் சமையல் சுவைக்கும். உலகம் முழுதும் சுற்றினாலும், பல் நூறு உணவு உண்டாலும், நாக்கின் அடியில் அம்மாவின் உணவின் சுவை என்றுமே ஒட்டியிருந்து, நினைக்கும் நேரத்தில் இனிமை தரும்.

நான் பல இடங்களில் கை கழுவினாலும் இன்றும் அம்மாவினதும் யாழ்ப்பாண உணவினதும் சுவை என் நாக்கு முழுதும் ஒட்டியிருக்கு. சமையல் கலையில் ஈடுபாடு இருப்பதால், அம்மா எப்படி யாழ்ப்பாண முறையில் சமைத்தார் என்ப்தை அறிய ஆவலாக இருக்கின்றேன்

உங்களில் யாருக்கேனும் பின்வரும் உணவை யாழ்பாண முறையில் தயாரிக்கும் முறை தெரிந்தால் தரவும்....வீட்டில் வார இறுதி நாட்களில் சமைத்து பார்க்க ஆவலாக இருக்கின்றேன்

1. மீன் பொரியல் (மிக இலகுவானது போல தெரியும்...ஆனால் பொரித்து பார்த்தால் அந்த சுவை வராது)

2. மாட்டிறைச்சி (பல யாழ் இந்துக்கள் (என் அம்மா உட்பட) இதனை சமைத்து தந்தாலும் வெளியே சொல்லமாட்டார்கள்..சிவபெருமான

் குரங்கை வாகனமாக்கியிருக்கலாம்)

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்கள் எதிர்பார்ப்பை எவராலும் நிறைவேற்ற முடியாது. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் இழையோடி இருக்கும் அன்பின் சுவையை அல்லவா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

  • தொடங்கியவர்

நிழலி உங்கள் எதிர்பார்ப்பை எவராலும் நிறைவேற்ற முடியாது. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் இழையோடி இருக்கும் அன்பின் சுவையை அல்லவா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

உண்மைதான் சாகரா...அம்மாவின் உணவின் சுவை ஆயுள் வரைக்கும் வரும்...அடி நாக்கில் என்றுமே ஒட்டியிருக்கும் அந்த சுவை ஆணுக்கு துயரமானது. ஒரு பெண் பிள்ளை தான் தாயிடம் கற்றதை, அவளின் மார் அணைந்து உண்ட உணவின் சுவையை தன் பிள்ளைக்கு கொடுக்கும் சந்தர்ப்பம் எம் சமூகத்தில் ஆணை விட மிக அதிகம். பிள்ளைக்கு பகிரும் போது அவளின் தாயின் தேடல் முடிவடைகின்றது. ஆனால் ஆணுக்கு அந்த சுகம் மீண்டும் தன் புள்ளியை அடையாது அலைந்து திரியும். எந்த ஆணுக்கும் மனைவியின் உணவை விட தாயின் உணவு சுவைப்பது அதனால் தான்

தாய் போல்தான் தாய் மண்ணும்...எப்படி எட்டி உதைத்து விட்டு "உன்னைவிட மற்ற நாடு எவ்வளவோ சுகம்" என்று வந்த பின்னும், கண்ணுக்கு புலப்படா உணர்வுக் கிளைகள் மூலம் சுற்றி பின்னி பின் தொடரும் சுகம் அது. அந்த மண்ணுக்குரிய உணவினை மீண்டும் பல ஆண்டுகள் கழித்து உண்ணும் போது, உணர்வுக்கு புலப்படா ஒரு இன்பம் பற்றிக் கொள்ளும்

இங்கு, ரொரண்டோவில் உள்ள அநேக தமிழ் உணவுக் கடைகளில் தேடியும் அந்த யாழ் உணவின் சுவை கிடைக்கின்றது இல்லை...எனவே நானே சமைக்க முயல்கின்றேன்...சமைக்க முன் அப்படி சமைப்பவர்களின் உதவி கிடைத்தால் பெரிய சந்தோசமாக இருக்கும்

அதற்காகத்தான் இந்த திரியை ஆரம்பித்தேன்

Edited by நிழலி

நிழலி உங்கள் எதிர்பார்ப்பை எவராலும் நிறைவேற்ற முடியாது. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் இழையோடி இருக்கும் அன்பின் சுவையை அல்லவா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

இதுதானே கூடாத பழக்கம். மீன் பொறிக்கிறது எப்பிடி எண்டு கேட்டால்.. வேற என்னமோ சொல்லி சமாளிக்கிறீங்கள் சகாரா அக்கா. தெரியாட்டிக்கு சொல்லுங்கோ நான் அம்மாவை கேட்டு சொல்லிறன்

இதுதானே கூடாத பழக்கம். மீன் பொறிக்கிறது எப்பிடி எண்டு கேட்டால்.. வேற என்னமோ சொல்லி சமாளிக்கிறீங்கள் சகாரா அக்கா. தெரியாட்டிக்கு சொல்லுங்கோ நான் அம்மாவை கேட்டு சொல்லிறன்

மாப்பு இது தெரியாதா?

அக்காச்சிக்கு ஒழுங்காச் சமைக்கத் தெரியாதாம். தண்ணியில் பொரிக்கலாமோ எண்டு என்ர எசமானிக்குப் போன் பண்ணிக் கேட்டாவாம்......நம்ம எசமானிக்கு சமையல் தெரியாது எண்டுறது வேற பிரச்சினை என்ன சொல்றது எண்டு என்னைக் கேட்டா... நான் என்ன சொல்லியிருப்பன் எண்டு கெட்டிக்காரா மாப்பு எண்டால் கண்டு பிடி ராசா... காலகாலத்துக்கு உதவும்.

நிழலி ஆதி அண்ணனின் வழியைக் கடைப்பிடிக்கிறாப்போல வளர்க.

இந்தக் கேள்விக்கு வந்து ஒழுங்காப் பதில் எழுதிற சீவன் ஆரெண்டு பாப்பம்.

Edited by ஆதிவாசி

  • தொடங்கியவர்

நான் கேட்ட உணவுகளைத் தயாரிக்கும் முறை தெரிந்தும் சொல்லாமல் தமக்குள்ளேயே வைத்திருப்பவர் வீட்டில் பொரிக்கப்படும் மீன்கள் எல்லாம், பொரித்து முடிந்த பின் வால்பேத்தைகளாக போக கடவது

நான் கேட்ட உணவுகளைத் தயாரிக்கும் முறை தெரிந்தும் சொல்லாமல் தமக்குள்ளேயே வைத்திருப்பவர் வீட்டில் பொரிக்கப்படும் மீன்கள் எல்லாம், பொரித்து முடிந்த பின் வால்பேத்தைகளாக போக கடவது

நிழலி அண்ணா எனக்கு தெரிந்தை சொல்லுறன்... எங்க அம்மா பண்ணுவதை பார்த்து நான் கற்றுக்கொண்டதை சொல்லுறேன்..பிழையாக வந்தால் என்னை அடிக்க வரவேண்டாம்..

மீன் பெரியல் பண்ணும்போது எங்க அம்மா மஞ்சல் கொஞ்ச உப்பு தூள் இவ்வளவும் தடவி உற விடுவார்கள்... கொஞ்ச எண்ணையை மட்டும் சட்டியில் விட்டு மீனைப்போட்டு மாற்றி மாற்றி எடுப்பார்கள்... கொஞ்ச எண்ணையில் பெரிப்பதால் மீனில் எண்ணை ஊறுவது குறைவாக இருக்கும்... மீனும் எரியாமல் வரும். ஒவ்வொரு மீனாக போட்டு எடுக்க வேண்டும்... இந்த முறையத்தான் நானும் பின்பற்றுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, மாட்டிறைச்சி சமைப்பதில் பிரச்சனை என்னவெனில் எவ்வளவு தான் பொரித்து, அவித்து நீண்ட நேரம் சமைத்தாலும் இலகுவில் அவியாது. இப்பிரச்சனையை தீர்க்க பிறசர் குக்கரில் (pressure cooker)இறைச்சியை தண்ணிர் விட்டு முதலில் அவியுங்கள். இலகுவில் அவிந்துவிடும். பின்னர் சட்டியில் வெங்காயம், கடுகு , சீரகம் , கறிவேப்பிலை, கறுவா, மற்றும் இறைச்சி கறிக்கு போட கூடிய வாசனை திரவியங்கள் போட்டு எண்ணையில் வதக்கவும். வதங்கி அரைவாசி வரும் நேரம் இறச்சியையும் போட்டு சிறிதளவு மிளகு, உப்பு போட்டு வதக்கவும். இப்போ நீங்கள் அளவாக தூளை போட்டு சுடுதண்ணி விட்டு பிரட்டவும். தண்ணீரை எப்படி கறி பிரட்டலாக வேண்டுமா அல்லது குழம்பாக வேண்டுமா என்பதை பொறுத்து விட்டு கொள்ளவும். கறி ஓரளவு தடிப்பாக வேண்டுமெனில் ஓரிரு உருளைகிழங்கை போடலாம். உருளைகிழங்கை கறி இறக்குவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது போட்டாலே போதும்.

  • தொடங்கியவர்

சுஜியிற்கும் நுணாவிற்கும் கோடி நன்றிகள்..உங்கள் வீட்டிலும் சமைக்கும் அனைத்து உணவும் அறுசுவையாக மலர என் வாழ்த்துகள்

சுஜி,

எண்ணெய் ஊறுவதுதான் பெரிய பிரச்சனையாக இருந்தது....உங்களின் தகவல் நிச்சயம் எனக்கு உதவும்

நுணா,

இங்கு மாட்டிறைச்சி மிக மென்மையாக இருக்கின்றது...அடிக்கடி அதிகமாக அவிந்து சுவையை கெடுத்து விடுகின்றது..நீங்கள் சொன்ன pressure cooker முறை பற்றி இப்பதான் கேள்விப் படுகின்றேன்....நிச்சயம் முயன்று பார்க்க போகின்றேன் இந்த கிழமை

Edited by நிழலி

மீன் பொரியல்

மீனை கடையில் வெட்டும் போது மொத்தமாக வெட்டாம மெல்லியதாக வெட்டி வேண்டுங்கோ. அப்பத்தான் மீன் பொரிந்து சுவையாக இருக்கும்.

மீனை நல்லா கழுவுங்கோ பிறகு தேவையான அளவு உப்பு, தூள்( யாழ்ப்பாண முறையில் தயாரிக்கப்பட்டது)

போட்டு பிரட்டி சிறிது நேரம் ஊறவிடுங்கோ பின்னர் பொரித்து சாப்பிடுங்க.

உங்களுக்கு எண்ணையில் பொரிப்பது பிடிக்காவிடின் ஒரு தட்டில் எண்ணை பூசி அதில் மீனை அடுக்கி அவினில் வைத்து 15- 20 நிமிடத்தில் திருப்பி போட்டு சிறிது நேரத்தில் பொரிந்ததும் எடுத்து சாப்பிடுங்க.

எனக்கு ஆடு சமைக்கும் முறை தெரியும் மாடு தெரியாது . அடு சமைப்பது மாதிரித்தான் என்றால் அந்த முறையை சொல்லுறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பல இடங்களில் கை கழுவினாலும் இன்றும் அம்மாவினதும் யாழ்ப்பாண உணவினதும் சுவை என் நாக்கு முழுதும் ஒட்டியிருக்கு. சமையல் கலையில் ஈடுபாடு இருப்பதால், அம்மா எப்படி யாழ்ப்பாண முறையில் சமைத்தார் என்ப்தை அறிய ஆவலாக இருக்கின்றேன்

மனித வாழ்க்கையில் இந்த சந்தர்ப்பம் ஒருமுறைதான் வரும்.

அதை தவறவிட்டால் அல்லது முடிந்துவிட்டால் அது அவரவரின் கொடுப்பனவு.

இன்றும் என் வாழ்க்கையில் எனது தாயின் உணவையும் அதன் சுவையையும் யாராலும் கொடுக்கமுடியாது.

.

.

என்ன முழுசுறியள்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்ட உணவுகளைத் தயாரிக்கும் முறை தெரிந்தும் சொல்லாமல் தமக்குள்ளேயே வைத்திருப்பவர் வீட்டில் பொரிக்கப்படும் மீன்கள் எல்லாம், பொரித்து முடிந்த பின் வால்பேத்தைகளாக போக கடவது

2077559408_a2056d9a5d.jpg

மீன் பொரிக்கிறதிலை ஒரு சூட்சுமமும் இல்லை .

மீன் வாங்கும் போது நல்ல சதைப்பிடிப்பான மீனாக பார்த்து வாங்கவும் . உ+ம்: பாரை , விளை , அறுக்குளா போன்றவை.

எல்லோரும் கூறியது போல் துண்டாக்கிய மீன்களை , ஆகக் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது உப்பு, மஞ்சள் தூள் , மிளகாய் தூள் போட்டு பிரட்டி ஊறவிட்டு பொரிக்கவும்.

மஞ்சள் தூள் மீனின் வெடுக்கு மணத்தை குறைக்கும் என்று சொல்வார்கள் .

அதற்காக மஞ்சள் தூளை அதிகம் போட வேண்டாம் . அது ஆண்மைக்கு பங்கம் ஏற்படுத்தும் என்று சித்த வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளது.

அப்பாடா ....... இனி என் வீட்டில் பொரிக்கும் மீன் எல்லால் வால்பேத்தையா மாறாது. :icon_idea:

----

மாடு தெரியாது .

----

kobe%20beef%20photo.jpg

மாடு தெரியாதா செவ்வந்தி . மாடு இப்படித்தான் இருக்கும். :lol:

மனித வாழ்க்கையில் இந்த சந்தர்ப்பம் ஒருமுறைதான் வரும்.

அதை தவறவிட்டால் அல்லது முடிந்துவிட்டால் அது அவரவரின் கொடுப்பனவு.

இன்றும் என் வாழ்க்கையில் எனது தாயின் உணவையும் அதன் சுவையையும் யாராலும் கொடுக்கமுடியாது.

.

.

என்ன முழுசுறியள்?

குமாரசாமி அண்ணை , உங்களுடைய பிள்ளைகள் ........ உங்கள் மனைவி சமைத்த உணவே உலகத்தில் சுவையானது என்று கூறுவார்கள் .

இதுதான் உலகம் . எதற்கும் இந்தப்பதிவை உங்கள் மனைவி பார்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் . :rolleyes:

தான் சமைச்சுதாறதை இரண்டு கோப்பை வெட்டிப் போட்டு சுவையில்லை என்று கூறியதற்காக ....... இனிமேல் பாண் தான் சாப்பாடு என்று சொல்லிப் போடுவா. :D

  • தொடங்கியவர்

செவ்வந்திக்கும். படத்துடன் தகவலையும் தந்த தமிழ் சிறிக்கும் நன்றிகள்....வீட்டில் சமைக்கும் உணவு அனைத்தும் அருமையாக வர என் வாழ்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

மேலே சொன்ன முறை எல்லாம் நல்லாத்தான் இருக்கு..! செய்து முடித்தவுடன் குப்பையில் கொட்ட மறக்க வேண்டாம்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பொரியல் குறிப்பு எழுதுபவர்கள் எல்லாம் வால்ப்பேத்தைகளாகக் கடவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாட்டிறைச்சி சமைக்கு முறை வேண்டும்: உதவி, யாழ்ப்பாண முறை

நாங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுறேல்லை.ஏனெண்டால் நாங்கள் சைவ ஆக்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் என்பது முறை அல்ல, .தொழில் அல்ல..அது ஒரு கலை... என்றுமே எவருக்கும் அம்மாவின் சமையல் சுவைக்கும். உலகம் முழுதும் சுற்றினாலும், பல் நூறு உணவு உண்டாலும், நாக்கின் அடியில் அம்மாவின் உணவின் சுவை என்றுமே ஒட்டியிருந்து, நினைக்கும் நேரத்தில் இனிமை தரும்.

நான் பல இடங்களில் கை கழுவினாலும் இன்றும் அம்மாவினதும் யாழ்ப்பாண உணவினதும் சுவை என் நாக்கு முழுதும் ஒட்டியிருக்கு. சமையல் கலையில் ஈடுபாடு இருப்பதால், அம்மா எப்படி யாழ்ப்பாண முறையில் சமைத்தார் என்ப்தை அறிய ஆவலாக இருக்கின்றேன்

இது ஒரு மனம் சம்பந்தமான சிக்கல்.எப்படி நாம் ஒரு பாடலை எத்தனை தடவை கேட்டாலும் அதை முதல் தரம் கேட்க்கும் போது என்ன சூழல் இருந்ததோ அது தான் நினைவில் வரும்.அது மாதிரிதான் இந்த அம்மா சமையலும்.நாம் பெரும்பாலான உணவு வகைகளை அம்மாவின் கைவண்ணத்தில் தான் முதன் முதல் உண்டிருப்போம்.அந்த சுவையே மனதில் பதிந்து விடுகிறது.இப்ப உதாரனத்துக்கு மீன் பொரியல் என்றால் இப்படிதான் சுவை இருக்கும் என்று.சில வேளை நாம் அதை விட சுவை கூடிய மீன் பொரியலை வேறு எங்காவது சாப்பிட்டாலும் எமக்கு அது சுவையாக தெரிவதில்லை.

இன்று தான் இந்தத் திரியைப் பார்த்தேன் நிழலி...

அறக்குளா, நெய்த்தோலி, முரல் மீன் இவைதான் எனக்கு மிகவும் பிடிக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது சமைப்பேன்.

மீனை 2, 3 தரத்திற்கு மேல் கழுவக் கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் மீனில் உள்ள வெடுக்கு மணம் போவதற்க்காக சவர்க்காரம் போடாதா குறையாக சிலர் கழுவுவதைப் பார்த்து இருக்கிறேன். இரண்டு தரம் சுத்தமாகக் கழுவிய பின்பு கொஞ்சம் உப்பு, பழப்புளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கடுக்குத்தூள் (english mustard/ french mustard என்று ஊருப்பட்ட மஸ்டாட் இருக்கு) போட்டு ஊறவைத்தால் வெடுக்கு மணம் போகும் இடம் தெரியாது. மீன் வெட்டிய பலகை, கத்தி எல்லாத்தையும் இந்த கடுகுத்தூளைப் போட்டே கழுவிப் பார்க்கவும்.

எண்ணெய் கொஞ்சமாக விட்டுப் பொரித்தால், மீன் உதிர்ந்தது போவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். (அனுபவசாலிகளுக்குக் கைவந்த கலையாக இருக்கும்) எண்ணெய் கொஞ்சம் அதிகமாக விட்டுப் பொரித்தால், மீன் துண்டின் கீழ் பகுதி பொரிந்து கொண்டு இருக்கும் போதே மேல்பகுதியும் பொரிய வாய்ப்பு இருப்பதால், மீன் துண்டை திருப்பிப் பொரிய விடும் நேரம் குறைகிறது. இதனால், அதிக நேரம் குசினிக்குள் மினக்கடும் நேரம் குறைகிறது, என்பது எனது கருத்து. எண்ணெய் அதிகம் மீன் துண்டில் படிந்து இருப்பின், kitchen tissue மேல் போட்டால், அது எண்ணையை உறிஞ்சி எடுத்துக்கொள்ளும்.

nethilifry.jpg

மாட்டு இறைச்சி...

பொதுவாக இறைச்சியில் ஒவ்வொரு பகுதியும், சமைக்கும் போது குறிப்பிட்ட நேரத்தைப் பிடிக்கும். மாட்டிறைச்சியைப் பொறுத்தவரை,

பல பகுதிகள் இருக்கின்றன, அதில் topside joint எனப்படும் பகுதி சவ்வு, எலும்பு இல்லாத பகுதியாகவும் மற்றைய பகுதியை விட கொஞ்சம் மென்மையாகவும் இருக்கும். அதனால், அந்தப் பகுதியை வாங்கினால் சமைபத்தற்கு சுலபமாக இருக்கும்.

http://www.meatmatters.com/images/cookingt...ts%20poster.pdf

மாட்டிறைச்சிப் பொரியல்: :lol:

மாட்டிறச்சியை மெல்லியதாகவும், அதே நேரம் கொஞ்சம் நீளமாகவும் வெட்டி, உப்பு மிளகாய்த்தூள், இஞ்சி, உள்ளி, மஞ்சள் தூள், ரம்பை, கொத்தமல்லி இலை இவைகளை போட்டு முள்ளுக்கரண்டியால் அல்லது கத்தி நுனியால் கொஞ்சம் இறைச்சிக் கலவையை குத்திய பின்பு, மூடி ஊறவைக்க வேண்டும், (ஊறவைக்கும் நேரம் உங்களைப் பொறுத்தது, முதல் நாளே கலந்து fridge ஊறவைத்தால் இன்னும் நல்லது; கொஞ்சம் வைன் :D விட்டு ஊறவிட்டாலும் இறைச்சி மெதுமையாக வரும், முழுக்க ஊத்தி ஊறவைக்கதேங்கோ, மிச்சம் சமையல் களைப்புத் தெரியாமல் இருக்க உதவும் :rolleyes: ஆனால் இது யாழ்ப்பாண முறை இல்லை என்று நினைகிறேன்) மிச்சம் நீங்கள் சாதாரண இறைச்சிப் பொரியலுகுச் சமைக்கிறது போல செய்யலாம்.

3573648792_3fa6009003.jpg

மாட்டு இறைச்சியில் topside joint அல்லாத வேறு எந்தப் பகுதியையும் நீங்கள் வாங்க நேர்ந்தால், அவை அவிவதற்கு கொஞ்சம் கூடுதலான நேரம் எடுக்கும், முடிந்த வரையில் சவ்வுகளை அகற்றிய பின்பு சமைப்பதால் நேரம் குறைகிறது. அப்படியும் அவியப் பஞ்சிப் பட்டால், கொஞ்சம் பளப்புளி தண்ணீரில் கரைத்து விட்டால் கெதியில் அவிந்துவிடும்.

நேரம் இருக்கும் போது செய்து பார்க்கவும்.

சிறி அண்ணா உங்கட வீட்டு மீன் பொரியலும் :D அந்த மாதிரித் தான் இருக்கு...

இங்கு பொரியல் குறிப்பு எழுதுபவர்கள் எல்லாம் வால்ப்பேத்தைகளாகக் கடவது.

ஏன் சகாரா - உங்களுக்கு கொழுப்பு கூடிப்போச்சே? :lol:

  • தொடங்கியவர்

நன்றி குட்டி...நீங்கள் bonus ஆக தந்த மாட்டிறைச்சி பொரியல் செய்முறை வாசிக்கவே அந்த மாதிரி இருக்கு

எனக்கு பொரியல் குறிப்பு எழுதுபவர்களை எல்லாம் வால்பேத்தைகளாக போகவேண்டும் என சபித்த சாகரா அக்காவின் வீட்டில் சமைக்கப்படும் அத்தனை உணவுகளிலும் உப்பும், காரமும், புளியும் கூடி அவவின் சாப்பாட்டை சாப்பிடும் அனைவரினது திட்டும் மழையாக பொழிவதாக

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சகாரா - உங்களுக்கு கொழுப்பு கூடிப்போச்சே? :)

எனக்கு..... சான்ஸே இல்லை

மற்றவர்களுக்கு கொழுப்பு கூடக்கூடாது என்ற நல்ல எண்ணந்தான்.

எனக்கு பொரியல் குறிப்பு எழுதுபவர்களை எல்லாம் வால்பேத்தைகளாக போகவேண்டும் என சபித்த சாகரா அக்காவின் வீட்டில் சமைக்கப்படும் அத்தனை உணவுகளிலும் உப்பும், காரமும், புளியும் கூடி அவவின் சாப்பாட்டை சாப்பிடும் அனைவரினது திட்டும் மழையாக பொழிவதாக

காரசாரமான உணவை உண்டால் முத்தமழைதான் கிடைக்கும் நிழலி :(

  • கருத்துக்கள உறவுகள்

வால் பேத்தைகள் தான் வளர்ந்து தவளைகளாகின்றன........சீனன் கண்டால் சூப் வைத்து விடுவான். இலங்கையில் உள்ள தவளைகளை ஏற்று மதி செய்ய போகிறானாம் என்று ஒரு தகவல். வால பேத்தைகள் வளரும் வரை விட்டு வை த்திருகிரானாம் சீனன.

சீனன் மட்டுமல்ல பிரஞ்சுகாரனும் நல்லாய் தின்னுவானாம்

  • தொடங்கியவர்

சுஜி சொன்ன முறையில் மீன் பொரியலும், நுணா சொன்ன முறையில் மாட்டிறைச்சியும் கடந்த வார இறுதியில் செய்து பார்த்தேன். இரண்டும் மிக நன்றாக வந்தன...

ஏனையவர்கள் சொன்ன முறையில் அடுத்து வரும் வார இறுதிகளில் செய்து பார்ப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி சொன்ன முறையில் மீன் பொரியலும், நுணா சொன்ன முறையில் மாட்டிறைச்சியும் கடந்த வார இறுதியில் செய்து பார்த்தேன். இரண்டும் மிக நன்றாக வந்தன...

ஏனையவர்கள் சொன்ன முறையில் அடுத்து வரும் வார இறுதிகளில் செய்து பார்ப்பேன்

நால்லா பயிற்சி செய்து வைச்சிருங்கோ... நான் அங்கால வாற நேரம் ரேஸ்ட் பண்ணி பாத்து சொல்லுறேன் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.