Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாட்டை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாட்டை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 9-வது உலகத் தமிழ் மாநாடு எதிர்வரும் ஜனவரி 21 முதல் 24 வரை கோவையில் நடாத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். முதலாவது ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ 1966 ஏப்ரல் மாதத்தில் ஈழத்துத் தமிழரான வணக்கத்திற்குரிய தனிநாயகம் அடிகளாரால் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968-ம் வருடத்தில் அன்றைய தமிழக முதல்வரான அண்ணா அவர்களால் நடாத்தப்பட்டது.

மூன்றாவது ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970-ம் ஆணடு பாரிஸ் நகரில் நடாத்தப்பட்டது. அதன் பின்னர் 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி ஈழத் தமிழினத்தின் மாநாடு பெரும் சோகமாக நிறைவுற்றது. தமிழ் மக்களால் கோலாகலமாக நடாத்தப்பட்ட இந்த மாநாட்டில் அன்றை சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு கலகத்தை விளைவித்தனர்.

இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த இறுதிநாள் நிகழ்வில் திட்டம்போட்டு உள்நுழைந்த காவல்த்துறையினர் கணணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தடியடி நடதத்தியும் கலகம் விளைவித்ததால் ஏற்பட்ட நெரிசலிலும், மின்சாரக் கம்பிகள் அறுந்து வீழ்ந்ததாலும் 9 தமிழர்கள் பலியானார்கள். அந்த அரச பயங்கரவாதமே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நோக்கி நகர்த்தியது.

அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த வேளை, 1981-ம் ஆண்டு 5-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1987 இல் கோலாலம்பூரிலும், ஏழாவது மாநாடு 1989 இல் மொரிசியசிலும் நடைபெற்றது. அதன் பின்னர் ஆறு வருடங்கள் கடந்த நிலையில், 1995-ம் ஆண்டில் அப்போது தமிழக முதல்வராகப் பதவி வகித்த செல்வி ஜெயலலிதா அவர்களால் தஞ்சாவூரில் நடைபெற்றது.

அதில் கலந்து கொள்ளச் சென்ற தமிழீழ அறிஞர்கள் வெல்வி ஜெயலலிதா அவர்களால் அவமானப்படுத்தப்பட்டு, அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர் 14 வருடங்கள் கடந்த நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்ற பதம் மாற்றம் செய்யப்பட்டு, ‘உலகத் தமிழ் மாநாடு’ என்ற நாமத்துடன் அரங்கேற்றப்பட உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டப்பட்டிருக்க வேண்டிய இந்த மாநாடு கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தை ஆண்ட 14 வருட காலத்தில் முதல் தடவையாக உலகத் தமிழர் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. கலைஞர் அவர்களது தமிழ்ப் பற்றுக்கு இதுவும் ஒரு மைல் கல்லாகப் பதிவு செய்யப்படவுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழுக்குச் செய்ததை விட அதிகமாகவே தமிழ் அவருக்குச் செய்துள்ளது.

வெறும் தகரப் பெட்டியுடன் திருக்குவளையிலிருந்து சென்னை வந்த கருணாநிதி அவர்களுக்கு தமிழ் சோறு போட்டது. தமிழ் அரசியலைக் கற்றுக் கொடுத்தது. தமிழ் அவரைக் கோடீஸ்வரனாக உயர்த்தியது. தமிழ் அவரை தமிழக முதல்வராக 14 வருடங்கள் பதவியில் அமர்த்தியுள்ளது. தமிழ் வேறொருவருக்கும் இந்த அளவுக்கு வாரி வழங்கியதும் இல்லை வாரி வழங்கப் போவதும் இல்லை.

‘வீழ்வது தமிழாக இருந்தாலும், வாழ்வது நானாக இருக்கவேண்டும்’ என்ற அர்த்தத்தில் தமிழக முதல்வர் அடிக்கடி சொல்லும் வார்த்தையை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு தமிழ் தாழ்ந்த அளவிற்கு கலைஞர் உயர்ந்துவிட்டார். ‘தமிழா! தமிழா!! என்னைக் கட்டிக் கடலில் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன். அதில் ஏறி நீ பயணம் செய்யலாம்’ என்று கலைஞர் தொலைக்காட்சியில் தமிழ் விற்கப்படுகின்றது.

தமிழர்கள் ஏமாளிகளாக ஆக்கப்படுகின்றார்கள். சிங்களக் கொடும்பாவிகள் தமிழீழ மக்கள் மீது தமிழின அழிப்பு யுத்தத்தை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த காலத்தில், அந்த வேதனை தெரியாத வகையில் ‘மானாட மயிலாட’ வழங்கி மகத்தான தமிழ்ப் பணி ஆற்றியவரல்லாவா எங்கள் கலைஞர்.

ஈழத் தமிழர்களின் வேதனைகளால் தமிழக மக்கள் துன்பப்பட்டு விடக்கூடாது என்ற அவாவினால், இன்றுவரை சண் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் அத்தனை செய்திகளையும் இருட்டடிப்புச் செய்து தமிழ்ப் பணியாற்றியதை தமிழகத் தமிழர்கள் உணர்ந்திருப்பார்களோ தெரியாது, ஆனால், ஈழத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்கள்.

சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள் பொங்கி எழுந்தபோது, சோனியாவிற்கும் மன்மோகன் சிங்கிற்கும் எழுதிய கடிதங்கள் எவ்வளவு அற்புதமானவை. அவையும் நாளை நெஞ்சுக்கு நீதியாகி, கருணாநிதியின் கல்லாப் பெட்டியை நிறைக்கத்தான் போகின்றது. மூன்று வேளையும் உண்டு வசதியாக வாழ்ந்த மக்கள், சிங்கள தேசத்திடம் அடிபணிய மறுத்து முள்ளிவாய்க்கால் வரை இடம் பெயர்ந்து, அதற்கும் அப்பால் செய்வது எதுவென்று தெரியாமல், ஒருவாய் தண்ணீருக்கும் வழியில்லாமல் ஏங்கித் தவித்தபோது, அப்போதும் தத்துவம் பேசத் தமிழ்தான் கலைஞரின் நாவில் நின்றது.

தலைமாட்டில் மனைவியும், கால்மாட்டில் துணைவியுமாக அண்ணா சிலையருகே அரைநாள் உண்ணாவிரதம் இருந்தபோது, அதையும் மந்தைகள் போல் தமிழக மக்களைத் தலையாட்ட வைத்ததும் அதே தமிழ்தான். தமிழகத்திலேயே மிகப் பெரிய செல்வந்தக் குடும்பமாக கவைஞரை உருவாக்கி, அரசியலில் அந்தக் குடும்பமே உச்ச நிலைக்குச் செல்ல, இன்னமும் மேலே செல்ல உறுதுணையாக இருக்கும் தமிழுக்கு கலைஞர் விழா எடுப்பது மிகப் பொருத்தமானதே.

ஆனால், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்தது முதல், அதன் நிமித்தம் உயிர்களையும் பலி கொடுத்த ஈழத் தமிழினம் இத்தனை கொடுமைகளை அனுபவிக்கும் இன்னைய காலத்தில், ஆயிரம் ஆயிரமாகக் கொல்லப்பட்டு, எஞ்சியவர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டவர்களாக சிறை முகாம்களில் சிக்கித் தவிக்கும்போது போலியாக ஆவது கலைஞர் கவலை கொண்டிருந்தால் உலகத் தமிழினம் தமது சினத்தைக் குறைத்திருக்கும்.

ஈழத் தமிழர்களது இத்தனை அழிவுக்கும், அவர்களது அவலங்களிற்கும் கலைஞர் கருணாநிதி அவர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை உலகத் தமிழினம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. ஈழத் தமிழர்களின் அவலங்ங்கள் தொடர்வதால் உலகம் சிறிலங்காமீது கோபப் பார்வை பார்க்க ஆரம்பித்துள்ள நிலையில், அந்த அக்கினித் தீ தமிழகத்தையும் தொட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக, தமிழக மக்களை மந்தைகளாக்கி மலிவு விலையில் கொள்முதல் செய்யவே கலைஞர் ‘உலகத் தமிழ் மாநாடு’ ஏற்பாட்டைச் செய்கிறார் என்பது நன்றாகவே புரிகின்றது.

இப்போது கலைஞரது தலைக்குப்பின்னால் பிரகாசித்த ஒளி வட்டம் மங்கி வருவது நன்றாகவே தெரிகின்றது. அதை மீண்டும் துலக்குவதற்கு கலைஞர் முயற்சிக்கிறார். தமிழகத்து முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழாலும், பணத்தாலும், சினிமாவாலும், தொலைக்காட்சியாலும் அப்பாவிப் பாமர தமிழகத்து மக்களுக்குத் தன்னை பரமாத்மாவாகக் காட்டிக் கொள்ளலாம். நடந்து முடிந்த, நடக்கின்ற அத்தனையையும் பகுத்தறிவோடு பார்த்துக்கொண்டிருக்கும் உலகத் தமிழினம் அவரின் மகுடிக்கு மயங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

சிங்கள தேசத்தின் இன அழிப்பு யுத்தத்தில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு, எஞ்சிய தமிழர்கள் வதை முகாம்களுக்குள் வைத்து சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் நடாத்தப்பட உள்ள ‘உலகத் தமிழ் மாநாடு’ மிகக் கொடுமையான ஈனச் செயல் என உலகத் தமிழர்கள் எண்ணுகிறார்கள். சினம் கொள்கிறார்கள்.

தமிழுக்கு அரியாசனம் பெற்றுக் கொடுக்கவும், உலகத் தமிழினத்திற்கு ஒரு நாடு உருவாக்கவும் களத்தில் நின்று போராடி பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் தமது இன்னுயிரை ஈகம் செய்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் இலட்சியத்திற்குப் பக்கபலமாக நின்று, இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளார்கள். இந்த விடுதலைத் தீ அணைந்து போகாமல் தடுக்கவும், விடுதலை அவா கொண்ட அந்த மக்களைக் காப்பாற்றவும் முத்துக்குமார் தொடக்கம் பல தமிழர்கள் தம்மைத் தீக்கு இரையாக்கித் தீபங்களாக மாறியுள்ளார்கள்.

அத்தனை நடந்தும் எதையும் கண்டு கொள்ளாமல் பச்சைத் துரோகம் செய்த தமிழக முதல்வர் அவர்கள் ஈழத் தமிழரால் உருவாக்கப்பட்ட ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்ற உயரிய சிந்தனைக்கு விளக்கு ஏற்றுவதும் விழா எடுப்பதும் பொருத்தமற்ற காலத்தில் செய்யப்படும் வெட்கக்கேடான செயலாகவே கணிக்கப்படுகின்றது.

இந்த அரசியல் சித்து விளையாட்டில் கலந்து கொண்டு, வரலாற்றுத் தவறை மேற்கொள்ள உலகத் தமிழர்கள் தயாராவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழ் மீதான அளவற்ற பற்றுக் காரணமாக, இதனைக் கவனத்தில் கொள்ளத் தவறிய அனைத்துத் தமிழ்ப் பெரு மக்களும், அறிஞர்களும் இந்த ‘உலகத் தமிழர் மாநாடு’ என்ற கலைஞர் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்பதே, தமிழுக்காக வீழ்ந்த, வாழ்விழந்த ஈழத் தமிழர்களின் அவாவாகும்.

நன்றி: ஈழநாடு – பாரிஸ்

http://www.meenagam.org/?p=10985

எல்லாம் விளங்கிது.. கடைசியில சொல்லப்பட்டதுதான் கொஞ்சம் குழப்பமாய் இருக்கிது. தமிழுக்காக வீழ்ந்த, வாழ்விழந்த ஈழத் தமிழர்களின் அவாவாகும்..?? உங்கள் அவா என்று சொல்லி இருக்கலாம். உங்கள் கருத்து என்று சொல்லி இருக்கலாம். இதற்கு ஏனைய்யா மற்ற ஆக்களையும் உங்களோட சேர்த்து இழுக்கிறீங்கள்...?

இந்தியாவுடன் நட்புறவை கட்டி வளர்க்க விரும்புகின்றோம் என்பதே கடைசி மாவீரர் தினத்தில் தலைவர் கூறிய செய்தியின் ஓர் பகுதியாக இருந்திச்சிது. தமிழுக்காக வீழ்ந்த, வாழ்விழந்த தமிழர்கள் நீங்கள் சொன்னபடி தமிழாராய்ச்சி மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்பதற்கு ஆதரவு தருவீனமோ என்று சொல்லமுடியவில்லை.

தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்பது தமிழின் வளர்ச்சி, மொழி, நவீன தொழில்நுட்பங்களை தமிழில் பிரயோகம் செய்தல் இப்படி பலவிதமான விசயங்கள் பற்றி திட்டமிடல், கொள்கை வகுத்தல், ஆராய்தல் இதுகள் சம்மந்தமாய் இருக்கலாம்.

சும்மா புறக்கணி புறக்கணி என்று எல்லாத்தையும் புறக்கணிச்சு கடைசியில அம்மணத்தோட நிக்கவேண்டியதுதான்.

கலைஞர் தனது அரசியல் சில்மாலங்களை தமிழாராய்ச்சி மாநாட்டில் கலப்பது ஒருபுறம் இருக்க... அரசியல்.. செல்வாக்குகளிற்கு அப்பால்.. தமிழ் என்கின்ற வகையில.. இவ்வாறான முயற்சிகள் நடைபெற வேண்டும், வெற்றிபெற வேண்டும்.

தனது சுயநலமாக இருந்தாலும்.. மற்றவர்களுக்கும் பயன் உள்ளதாய் ஓர் விசயம் இருந்தால் அதை ஆதரிக்கலாம்.

உலகத்தில இருக்கிற அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மாநாட்டில கலந்துகொள்ளப் போகியினம். உங்களுக்கு விருப்பம், வசதி இல்லை என்றால் புறக்கணியுங்கோ. இதுக்கு ஏன் உலகத்தமிழரை கூப்பிடுறீங்கள்...?

உங்கள் பார்வையில்.. தொடர்ந்து எல்லாம் அழியவேண்டும்? எங்கடை வீட்டுக்க தீ பிடிச்சால்.. அக்கம் பக்கமும் உள்ள வீடுகளையும் எண்ணை ஊத்தி கொளுத்த வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சியையே புறக்கணிக்க மாட்டினம் . ஆனால் புது புதுசா புறக்கணிப்பை எங்கட சனம் அறிவித்துக்கொண்டிருக்கிறது.

இப்ப கொஞ்ச நாளைக்கு முன்பு நடிகர் விஜய் காங்கிரசுக் கட்சியில் சேரப் போரார் என்று ஒரு கருத்துவர சில ஊடகங்களில் விஜயின் வேட்டைக்காரன் படத்தைப் புறக்கணிக்கச் சொன்னார்கள். ஜங்கரன் தான் வேட்டைக்காரனை வெளினாடுகளுக்கு கொண்டுவரப் போகுது என்றார்கள். புறக்கணிக்கச் சொன்ன ஊடகங்களில் ஒன்று சில நாட்களுக்கு பின்னால் விஜயின் படத்தைப் புறக்கணிப்பதினால் எங்களுக்கு என்ன இலாபம், தேவையில்லாமல் எதிரிகள் கூடுது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. விசாரித்துப் பார்த்தால் ஜங்கரன் நிறுவனம் வேட்டைக்காரனை இம்முறை ஐரோப்பாவுக்கு கொண்டு வரவில்லை. அவ்வூடகத்துக்கு வேண்டியவர்கள் தான் இம்முறை வேட்டைக்காரன் படத்தை ஐரோப்பாவுக்கு கொண்டு வருகினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தொடர்பான ஆராய்ச்சி மாநாடுக்குக் கருத்து தெரிவக்கின்றனர். அரசியல் என்ற சாக்கடை உரலுக்குள் தனது சுயநலத்துக்கு மட்டுமாக 'சாணக்கினாக 'வாழும் கருணாநிதி தமிழ் எதிர்காலத்தை இலாவகரமாப் போட அதை தம்மிடம் உள்ள வெற்று உலக்கைகளால் இடிக்கப் பலர் கிளம்பிவிட்டனர் போலும். இதைக் கண்டு பெருமிதப்படப் போவது இந்தச் சாணக்கியனாகிய கருணாநிதியம் இந்திய ஆழும் வர்க்கமும்தான்! முதலில் உரலுக்குள் போடப்பட்டுள்ளது எம் மூச்சாக அறியப்பட்ட 'தமிழ்' என்பதை கரிசனையுடன் கவனம் கொள்ளவேண்டும்.

தமிழாராட்சி மகாநாடென்பது தமிழ் மொழியின் எதிர்காலம் தொடர்பான நுண்ணிய ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டிய 'உலகத் தமிழ் நிறுவனத்'தால் மேற்கொள்ளப்படவேண்டியதொன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் நட்புறவை கட்டி வளர்க்க விரும்புகின்றோம் என்பதே கடைசி மாவீரர் தினத்தில் தலைவர் கூறிய செய்தியின் ஓர் பகுதியாக இருந்திச்சிது. தமிழுக்காக வீழ்ந்த, வாழ்விழந்த தமிழர்கள் நீங்கள் சொன்னபடி தமிழாராய்ச்சி மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்பதற்கு ஆதரவு தருவீனமோ என்று சொல்லமுடியவில்லை.

அதே தலைவர் இன்று இருந்தால், கடந்த மாவீரர் தினத்தில் சொல்லியதை மீளாய்வு செய்து முடிவை நிச்சயம் மாற்றி இருப்பார். ஏம்பா, கதறிக் கும்பிட்ட கைகளை முறித்ததோடல்லாமல், இன்னமும் உங்கள் வாழ்வாதாரங்களையே தம் சுயநலத்திற்காக கேள்விக்குறியாக்க நினைக்கும் ஒரு கழிசடை நாட்டின் கொள்கைகளுக்கு ஏன் வால் பிடிக்கிறீர்களோ தெரியவில்லை. ஆட்சிகள் மாறலாம், ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரை 'பொந்தியா'வின் வெளியுறவுக் கொள்கைகள் மாறி, சாதகமான நிலையோ, அங்கீகாரமோ, இனி மேற்கத்திய நாடுகளின் கடும் அழுத்தமின்றிக் கிடைப்பதென்பது கானல் நீரே!

தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்பது தமிழின் வளர்ச்சி, மொழி, நவீன தொழில்நுட்பங்களை தமிழில் பிரயோகம் செய்தல் இப்படி பலவிதமான விசயங்கள் பற்றி திட்டமிடல், கொள்கை வகுத்தல், ஆராய்தல் இதுகள் சம்மந்தமாய் இருக்கலாம்.

சும்மா புறக்கணி புறக்கணி என்று எல்லாத்தையும் புறக்கணிச்சு கடைசியில அம்மணத்தோட நிக்கவேண்டியதுதான்.

முதலில் அம்மணத்தோடு நிற்பதற்கே வழி இருக்காவென பார்க்கவேண்டும். ஈழத்தில் கால்வாசி இனம் ஏற்கனவே அழிந்துவிட்டது. மிகுதி உலகெங்கும் சிதறியோடி திக்குத் தெரியாமலிருக்கிறது. எஞ்சியிருக்கும் உயிர்களோ, இன்னமும் சின்னா பின்னப்படுத்தப்படுகிறது. இதில் பட்டுக் குஞ்சமாக தமிழாராய்ச்சி என்ற பேரில் ஒரு கெழட்டு நாய், தன் வரலாற்றுத் தவறுகளுக்கு, திசை திருப்ப தமிழை வைத்து நாடகம் போடுகிறது. முதலில் அம்மொழியை பேசும் இனமே ஒருபுறம் சீக்கிரமாக அழிந்துகொண்டிருக்கையில், மொழிக்கென்ன மாநாடு? மானாடவா? எல்லோரும் செத்தபின் மொழியை வைத்து சிங்கியடிக்க வேண்டியதுதான்.

உலகத்தில இருக்கிற அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மாநாட்டில கலந்துகொள்ளப் போகியினம். உங்களுக்கு விருப்பம், வசதி இல்லை என்றால் புறக்கணியுங்கோ. இதுக்கு ஏன் உலகத்தமிழரை கூப்பிடுறீங்கள்...?

இப்பொழுதும் கூப்பிடவில்லையெனில் பின் எப்பொழுது கூப்பிடுவது? உங்கள் விருப்பபடியே தமிழுக்காக என்றே வைத்துக்கொண்டாலும், உலகமெங்கும் பங்கேற்க வரும் தமிழறிஞர்கள் முன் அம்மாநாட்டில் ஒரு மிக முக்கிய சரத்தாக ஈழத்தின் நிலை விவாதிக்கப்படுமா? தமிழர்களின் உரிமை காக்க இம்மாநாடு எந்தவகையில் அரசியல் முக்கியத்துவம் பெறப்போகிறது? வெறும் நகாசுப்பேச்சுகளின், முகஸ்துதிகளின் கூடாரமாகவே இது இருக்கப்போவது திண்ணம்.

முதலில், மானத்தோடு-சரிசமமாக சொந்த மண்ணில் வாழ்வதற்கு உயிர், பின்னால் பார்க்கலாம் மொழியின் மேன்மையை, மேம்படுத்தலை...

விளக்குமாற்றுக்கு, பட்டுக் குஞ்சம் தேவையில்லை!

.

Edited by ராஜவன்னியன்

இப்படியே கற்பனையில காலம் தள்ளிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்...

நாளைக்கு விசய் தமிழக முதல்வராய் வருவார். அதற்கு பிறகு குசய் வருவார். அப்பவும் நாங்கள் புறக்கணிச்சுக்கொண்டுதான் இருக்கப்போறம்.

முடியுமான ஆக்கள் நீங்கள் ஓர் தமிழாராய்ச்சி மாநாட்டை நடாத்திக்காட்டுங்கோ சனங்களிண்ட காசுகளை உருவாமல்..!

அவனவன் அரசாங்க அதிகாரத்தில இருக்கிறவனுள்.. தங்கடை அதிகாரத்தை பாவிச்சு ஏதோ ஒண்டு ரெண்டு நல்லது செய்வம் எண்டு பார்த்தால்.. இதுகள்.. கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களையும் நலுவவிட்டு.. ஒட்டுமொத்தமாய் கோவிந்தா போவதற்கு அழைப்பு விடுவிச்சுக்கொண்டு இருக்கிறீனம்.

மொழி, மொழி வளர்ச்சிக்கு உங்கடை புறக்கணிப்புக்கள் ஓர் தடைக்கல்லா இல்லாமல் பார்த்துக்கொண்டால் நல்லது.

ஈழமுரசிண்ட தகவலின்படி பார்த்தால்... அதன் பார்வையில பார்த்தால்... தமிழாராய்ச்சி மாநாடு என்பது தமிழன் உயிரோட இருக்கும்வரை நடக்கப்போவது சாத்தியம் இல்லை. :lol:

உங்கடை புடுங்குப்பாடுகளுக்கு கடைசியில கிடைச்சது தமிழ் தான்! தமிழ வளர்க்கிறம்.. தமிழருக்கா போராடுறம் எண்டு சொல்லிக்கொண்டு ஒட்டுமொத்தமாய் ஒருத்தருமே எழும்பி நடக்க இயலாமல் புறக்கணிப்புக்கள் செய்வம்,

உங்களுக்கு கலைஞரில இருக்கிற கோபதாபங்களை, காட்ட, பழி தீர்க்க.. நல்லதொரு தமிழ் மொழி கருவியாய் கிடைச்சு இருக்கிது. வாழ்க தமிழ்மொழி! வாழிய வாழியவே! :lol:

........ ஒன்றை உணருவோம், ஏதோ நாலு சினிமாப்படங்கள் எமது பணத்துக்காக எடுக்கப்படுகிறது என்பதால், நாம் இந்தியாவின் அரசியலை நிர்ணயிப்பதாக கூத்தடிக்கிறோம். தவறு!! ... தமிழகம் எங்களின் கைகளில் என்று கோட்டை கட்டுகிறோம்.

நடிகர் விஜய் காங்கரஸில் இணைய முதல் எதிர்ப்பு நாம் தெரிவித்தோம். ... இவைகளின் பின்விளைவுகள், எமக்கே பாதிப்பை ஏற்படுத்தும். அணமையில் இந்திய பாதுகாப்புக்கு பொறுப்பான நாராயணன் தெரிவித்த கருத்துகளும் ... எமது வீரவீச்செல்லைகள் எல்லை மீறி செல்வதின் எதிரொலியாகவும் இருக்கலாம். நாராயணன் எனும் மலையாளி தமிழின விரோதியின் செயல்களுக்கு நாம் எண்ணை ஊற்றுகிறோம்.

எமது குறிப்பாக புலம்பெயர் எம்மவர்களின் செயல்கள் இந்திய இறையாண்மைக்கு இடையூறாக இருப்பதாக, குறிப்பாக தமிழ்த்தேசியத்தை தமிழகத்தில் வளர்ப்பதாக இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கணிப்புகளுக்கு ... நாமே களமிடுகிறோம்.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் எமக்கு ஒன்றையுமே செய்யப்போவதில்லை, அப்படியாயின் எம் மேல் இரக்கம் கொண்ட சிலர் காங்கரஸ் கட்சியில் இணைந்தால் .. சிலவேளை சில மாற்றங்களை கொண்டு வர முடியாதா???

ராகுல் காந்தி, மேற்கத்தேய நாடுகளில் கல்வி. அதே இந்திய சிந்தனைகள் இருக்க தேவையில்லை. சிலசமயம் அகன்ற பார்வை இருக்கலாம். சில தமிழக இளைஞர்கள் அவருடன் கை கோர்ப்பதால் .... எமக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது??? .... சில சமயம் சாதகமான சூழ்நிலைகள் கூட ஏற்படலாம்.

எமது தொடர் இந்திய எதிர்ப்பானது .... நாம் நினைக்கலாம் மேற்குலகு எம்முடன் கை கோர்க்கிறது என்று ... ஒன்றையும் செய்யப்போவதுமில்லை! இந்தியாவை மீறி எவரும் ஒன்றையும் செய்து விடவும் முடியாது!!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=63990

  • கருத்துக்கள உறவுகள்

..ராகுல் காந்தி, மேற்கத்தேய நாடுகளில் கல்வி. அதே இந்திய சிந்தனைகள் இருக்க தேவையில்லை. சிலசமயம் அகன்ற பார்வை (?) :(:D:D இருக்கலாம். சில தமிழக இளைஞர்கள் அவருடன் கை கோர்ப்பதால் .... எமக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது??? .... சில சமயம் சாதகமான சூழ்நிலைகள் கூட ஏற்படலாம்.

எமது தொடர் இந்திய எதிர்ப்பானது .... நாம் நினைக்கலாம் மேற்குலகு எம்முடன் கை கோர்க்கிறது என்று ... ஒன்றையும் செய்யப்போவதுமில்லை! இந்தியாவை மீறி எவரும் ஒன்றையும் செய்து விடவும் முடியாது!!!!

நெல்லையன், நீங்கள் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரப்பா! எப்படி கும்மாங்குத்து குத்தினாலும் காலில் விழுந்து கதறிக் கிடக்கிறீர்! உம்மை மாதிரி சிலர்....., வேண்டாம் நீர் ஒருத்தரே 'பொந்தியா'விற்கு போதும், ஈழத்தவரின் கண்களில் விரல்விட்டு ஆட்ட! :D

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... தயவு செய்து இனியாவது நாலெழுத்து படித்தவர்கள் எம் தலைவர்களாகட்டும்!!

ம்ம் நிறைய படித்தவை பல காலமாக தலைவர்களாக தான் இருந்தவை. ஒன்றும் வெட்டி விழுத்தவில்லை. மகன்மார் மகள்மாரை வெளிநாட்டுக்கு அனுப்பி படிப்பித்தது தான் அவர்களது ஆக கூடிய தேச தொண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

panaapuunaa.jpg

ஈழத் தமிழர்களது இத்தனை அழிவுக்கும், அவர்களது அவலங்களிற்கும் கலைஞர் கருணாநிதி அவர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை உலகத் தமிழினம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. ஈழத் தமிழர்களின் அவலங்ங்கள் தொடர்வதால் உலகம் சிறிலங்காமீது கோபப் பார்வை பார்க்க ஆரம்பித்துள்ள நிலையில், அந்த அக்கினித் தீ தமிழகத்தையும் தொட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக, தமிழக மக்களை மந்தைகளாக்கி மலிவு விலையில் கொள்முதல் செய்யவே கலைஞர் ‘உலகத் தமிழ் மாநாடு’ ஏற்பாட்டைச் செய்கிறார் என்பது நன்றாகவே புரிகின்றது.

இந்த மாநாட்டைப் புறக்கணிப்பதால் யாருக்கும் சுறணை வரப்போவதுமில்லை. யாரும் திருந்தி ஈழத் தமிழர் விவகாரத்தில் தலையிடப் போவதுமில்லை. மந்தைகள் மத்தியில் கலைஞருக்கு அமோக வரவேற்புக் கிடைக்கத்தான் போகிறது. மாறாக மேடைகளில் வீரம் பேசுபவர்கள் இதில் கலந்து கொண்டு, ஈழத் தமிழரின் இன அழிவிற்குத் தமிழ்நாடு துணைபோனதைச் சுட்டிக் காட்டி தலைகுனிவை ஏற்படுத்துவார்களாக இருந்தால் புண்ணியமாகப் போகும். அத்துடன் கலைஞர் தனது தனிப்பட்ட வருமானத்திற்காக தொலைக் காட்சிகளின் மூலம் தமிழ் மொழியைச் சிதைத்துக் செய்துகொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டி வரலாற்றுப் பதிவாக்கி விட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

panaapuunaa.jpg

கருணாநிதி குடும்பம் கதைப்பது திராவிடம், நாத்தியம். செய்வது முற்றிலும் வித்தியாசம், சன், கலைஞர் தொலைக்காட்சிகள் போல.

சும்மா புறக்கணிப்பு மண்ணாங்கட்டி என்று பீத்திக்கொண்டு இருக்காமல்... இந்தமாநாட்டை எங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம் என்று ஆராய்ஞ்சு செயற்பட்டால் நல்லது. மாநாட்டில்.. தாயக மக்களின் அவலங்கள், எதிர்காலம், கலாச்சார அழிவுகள், புலம்பெயர் மக்களின் எதிர்காலம் என்று பலவிதமான கருப்பொருளில் பலவிதமான விடயங்களை சித்தித்து பார்க்கலாம். கலைஞரிடமும் அழுத்தம் கொடுத்து தாயக மக்களிற்கு அவரால் செய்யக்கூடிய ஆகக்குறைந்த சில உதவிகளையாவது பெற்றுக்கொள்ளலாம். மாநிலமாக இருந்தாலும் வலிமை வாய்ந்த ஓர் அரசாங்கம் ஆதரவு தருகின்ற மாநாடு என்கின்ற வகையில் பல்வேறு ஆக்கபூர்வமான வேலைகளை செய்யமுடியும். புறக்கணிக்கிறதை விட்டுப்போட்டு மாநாட்டுக்குபோய் அங்கு சிந்தனை, கருத்துக்களால் நேரடியாக மோதிக்கொள்வதே சிறந்தது.

இந்தக்காலத்தில நாய்க்குட்டிக்கும் பிறந்தநாள் செய்யுற எங்கடை ஆக்கள் மத்தியில.. தமிழுக்கு என்று ஓர் மாநாடு வைக்கேக்க பலருக்கு காய்ச்சல் வருவது அவர்களின் குறுகிய மனப்பான்மையையே காட்டுகின்றது. யார் குத்தினாலும் அரிசி மாவாகட்டும். நாங்கள் தான் மாநாடு நடாத்துவம்.. இல்லாட்டி எங்கடை தலைமையின் கீழதான் மாநாடு நடக்கவேணும் இல்லாட்டிக்கு எங்கடை விரோதிகள் கலந்துகொண்டால் நான் கலந்துகொள்ள மாட்டன் என்று பிடிவாதம் பிடித்தால் நட்டம் எங்களுக்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாநாட்டை எங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம் என்று ஆராய்ஞ்சு செயற்பட்டால் நல்லது. மாநாட்டில்.. தாயக மக்களின் அவலங்கள், எதிர்காலம், கலாச்சார அழிவுகள், புலம்பெயர் மக்களின் எதிர்காலம் என்று பலவிதமான கருப்பொருளில் பலவிதமான விடயங்களை சித்தித்து பார்க்கலாம். கலைஞரிடமும் அழுத்தம் கொடுத்து தாயக மக்களிற்கு அவரால் செய்யக்கூடிய ஆகக்குறைந்த சில உதவிகளையாவது பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சாணக்கியன் பார்க்காத, அறியாத விடயங்களையா அங்கே முன்னிறுத்தப் போகிறீர்கள்? ஈழம் என்ற வார்த்தையையே தமிழகத்திலிருந்து அழிக்க ஏற்பாடு செய்தவனை, கொலைகாரக் கும்பலோடு கை நனைத்தவனை இன்னமும் நம்புகிறீர்கள்...சரி, இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதை வரவேற்கும் அதேவேளையில், இந்த மாநாட்டில்-சக அறிஞர்களை நேரில் ஒரே இடத்தில் சந்திக்க வாய்ப்பாக இருக்குமிடத்தில்-ஈழம் சம்பந்தமாக எந்தவொரு விடயமும் பேசவோ, கண்ணில்படவோ கண்டிப்பாகக் கூடாது(அதுதான் நடக்கப்போவது) என்ற முடிவோடு அனைவருக்கும் மறைமுகமாக அறிவுறுத்தப்பட்டால் உங்கள் நிலையென்ன? இது முயற்சிகளை அதைரியப்படுத்துவதற்காக வைக்கும் கேள்வியல்ல...இங்கே பலரும் கூறுகிறார்களே "தூரநோக்கு"..அந்த சிந்தனையில் விளைந்தது.

கருநாநிதியின் இந்த மாநாட்டில் பங்கு பற்றினால் கரூநாநிதி இந்திய அரசுக்கு ஆதரவு கொடுத்து புலிகளை அழிக்க உதவியதை ஈழதமிழர் ஏற்கிறார்கள் என்று தான் அர்த்தம்..

புலம் பெயர் நாடுகளில் ஒரு கொண்டாட்டமும் வேண்டாம் என்று சொன்ன தமிழ் அமைப்புக்கள் எவ்வாறு இப் பெரிய மாநாட்டுக்கு செல்லலாம்?

வதை முகாம்களில் தமிழர் அடைத்து வைக்கப்பட்டுள்ள்ளார்கள். அவர்களும் தமிழர் தானே. தமிழ் மொழி பேசுபவர்கள் என்பதற்காக அடைக்கப்பட்டிருக்கும் தமிழரை மீட்க வக்கில்லை பிறகு தமிழுக்கு ஒரு மாநாடு.

கருநாநிதி ஈழம் என்ற சொல், அவர்களின் அவலம் போர் முடிவு இது போன்ற சொற்கள், இதன் மேல் ஈடுபாடு உள்ளவர்களின் மாநாட்டு வருகை என்பன மிக திட்டமிட்ட வகையில் வலு கவனமாக கண்கானித்து தனக்கு சார்பாக மாநாட்டை நடாத்த முயற்சிப்பார்.

பிறகு நாங்க காவடி எடுத்து கொண்டு போய் அங்க எங்களை ஒண்டும் பேச விட இல்லை என்று பிசத்துவதை விட்டு விட்டு ஒதுங்கி நிற்போம்.

சரி ஆயுதம்வேண்டாம் அகிம்சையில் ஆவது எமது உள்ள குமுறல்களை வெளிப்படுத்துவம் என்றால் அதுக்கும் எங்களுக்குள் முணு முணுப்பு குரல்கள்.

இனி ஈழத்தமிழரை சித்திரைவதை செய்ய ஒன்றுமே இல்லை என்ற கடைசி நிலையில் வந்து நிற்கும்போது ஏன் கருநாநிதியை கால் பிடிக்கனும்.

புறக்கணிப்பதே சரியான முடிவு

Edited by நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

MKTC0427.jpg

2067-1.jpg

கருணாநிதி பிணத்திலும் பணம் பார்க்கும் ஒரு அரசியல் வியாபாரி .

தமிழ் நாட்டில் பத்திரிகைகளிலோ , வேறு ஊடகங்களிலோ விடுதலைப் புலிகளைப் பற்றி எழுதக்கூடாது என்று கூறியவர் ,

தனது தொலைக்காட்சிகளில் தமிழர் அவலங்களை காட்டாமல் இருக்கும் ஒரு மனிதன் , உலகத்தமிழரை பற்றி கதைக்க என்ன யோக்கியதை இருக்கின்றது.

இந்த வருடம் தான் உலகத்தமிழரில் ஒரு பெரும்பகுதியினரை கொத்தாக இழந்தோம் . அதற்குள் இவருக்கு என்ன மாநாடும் , மண்ணாங்கட்டியும் வேண்டிக்கிடக்கின்றது.

இழந்த ..... தனது உலகத்தமிழர் தலைவர் என்னும் முகமூடியை , சரிப்பண்ணவே இந்த மாநாடே அன்றி , வேறொன்றுமில்லை .

அது சரி ..... இவ்வளவுநாளும் நடந்த மாநாடுகளில் ஏதாவது ...... தமிழுக்கு ஆக்கபூர்வமாக நடந்ததா ........?

மற்ற மொழிக்காரன் தன்னுடைய மொழிக்கு மாநாடு நடத்தாமலேயே ....... உச்சத்தில் நிற்கிறான்.

தமிழன் (f)பிலிம் காட்டுவதற்குத் தான் லாயக்கு.

Edited by தமிழ் சிறி

சும்மா புறக்கணிப்பு மண்ணாங்கட்டி என்று பீத்திக்கொண்டு இருக்காமல்... இந்தமாநாட்டை எங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம் என்று ஆராய்ஞ்சு செயற்பட்டால் நல்லது. மாநாட்டில்.. தாயக மக்களின் அவலங்கள், எதிர்காலம், கலாச்சார அழிவுகள், புலம்பெயர் மக்களின் எதிர்காலம் என்று பலவிதமான கருப்பொருளில் பலவிதமான விடயங்களை சித்தித்து பார்க்கலாம். கலைஞரிடமும் அழுத்தம் கொடுத்து தாயக மக்களிற்கு அவரால் செய்யக்கூடிய ஆகக்குறைந்த சில உதவிகளையாவது பெற்றுக்கொள்ளலாம். மாநிலமாக இருந்தாலும் வலிமை வாய்ந்த ஓர் அரசாங்கம் ஆதரவு தருகின்ற மாநாடு என்கின்ற வகையில் பல்வேறு ஆக்கபூர்வமான வேலைகளை செய்யமுடியும். புறக்கணிக்கிறதை விட்டுப்போட்டு மாநாட்டுக்குபோய் அங்கு சிந்தனை, கருத்துக்களால் நேரடியாக மோதிக்கொள்வதே சிறந்தது.

இந்தக்காலத்தில நாய்க்குட்டிக்கும் பிறந்தநாள் செய்யுற எங்கடை ஆக்கள் மத்தியில.. தமிழுக்கு என்று ஓர் மாநாடு வைக்கேக்க பலருக்கு காய்ச்சல் வருவது அவர்களின் குறுகிய மனப்பான்மையையே காட்டுகின்றது. யார் குத்தினாலும் அரிசி மாவாகட்டும். நாங்கள் தான் மாநாடு நடாத்துவம்.. இல்லாட்டி எங்கடை தலைமையின் கீழதான் மாநாடு நடக்கவேணும் இல்லாட்டிக்கு எங்கடை விரோதிகள் கலந்துகொண்டால் நான் கலந்துகொள்ள மாட்டன் என்று பிடிவாதம் பிடித்தால் நட்டம் எங்களுக்குத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாநாட்டைப் புறக்கணிப்பதால் யாருக்கும் சுறணை வரப்போவதுமில்லை. யாரும் திருந்தி ஈழத் தமிழர் விவகாரத்தில் தலையிடப் போவதுமில்லை. மந்தைகள் மத்தியில் கலைஞருக்கு அமோக வரவேற்புக் கிடைக்கத்தான் போகிறது. மாறாக மேடைகளில் வீரம் பேசுபவர்கள் இதில் கலந்து கொண்டு, ஈழத் தமிழரின் இன அழிவிற்குத் தமிழ்நாடு துணைபோனதைச் சுட்டிக் காட்டி தலைகுனிவை ஏற்படுத்துவார்களாக இருந்தால் புண்ணியமாகப் போகும். அத்துடன் கலைஞர் தனது தனிப்பட்ட வருமானத்திற்காக தொலைக் காட்சிகளின் மூலம் தமிழ் மொழியைச் சிதைத்துக் செய்துகொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டி வரலாற்றுப் பதிவாக்கி விட வேண்டும்.

நீங்கள் சொல்வது சரியே ஆனால் அது நடக்கப் போவதில்லை..ஈழத்தமிழர்கள் சார்பாக யாரும் குரல் கொடுக்கப் போவதில்லை..

உலகத்தமிழ் மாநாடு என்று சொல்லி கருணாநிதிக்கான பாராட்டுவிழா போல் தான் இது நடக்க உள்ளது..

உலகத்தமிழ் மாநாடு குறித்த தமிழக தலைவர்கள் பலரின் கருத்துக்களை தொலைக்காட்சியூடு பார்த்தேன் சு.ப.வீரபாண்டியன் முதல் அத்தனை பேரும் ஏதோ கலைஞர் கடவுள் என்ற நினைப்பில் கருணாநிதி புராணம்

தான் பாடுகிறார்கள்..பாடப் போறார்கள்...

எல்லாம் கருணாநிதியின் அரசியல் சாணக்கியமும் தனது ஈழத்தமிழர் எதிர்ப்பை திசை திருப்புவாதற்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை...

இதற்கு முதல் கூட்டிய உலகத்தமிழர் மாநாட்டில் எடுக்கப் பட்ட தீர்மானங்களே நடைமுறைப் படுத்தப் படாது போது புதிது புதிதாக மாநாடுகூட்டுவதன் நோக்கம் என்ன?

கலைஞருக்கே வெளிச்சம் :(

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரியே ஆனால் அது நடக்கப் போவதில்லை..ஈழத்தமிழர்கள் சார்பாக யாரும் குரல் கொடுக்கப் போவதில்லை..

உலகத்தமிழ் மாநாடு என்று சொல்லி கருணாநிதிக்கான பாராட்டுவிழா போல் தான் இது நடக்க உள்ளது..

உலகத்தமிழ் மாநாடு குறித்த தமிழக தலைவர்கள் பலரின் கருத்துக்களை தொலைக்காட்சியூடு பார்த்தேன் [b]சு.ப.வீரபாண்டியன் முதல் அத்தனை பேரும் ஏதோ கலைஞர் கடவுள் என்ற நினைப்பில் கருணாநிதி புராணம்

தான் பாடுகிறார்கள்..பாடப் போறார்கள்...

எல்லாம் கருணாநிதியின் அரசியல் சாணக்கியமும் தனது ஈழத்தமிழர் எதிர்ப்பை திசை திருப்புவாதற்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை...

இதற்கு முதல் கூட்டிய உலகத்தமிழர் மாநாட்டில் எடுக்கப் பட்ட தீர்மானங்களே நடைமுறைப் படுத்தப் படாது போது புதிது புதிதாக மாநாடுகூட்டுவதன் நோக்கம் என்ன?

கலைஞருக்கே வெளிச்சம் :(

நிச்சயம் உலகத்தமிழர் மாநாடு என்ற பெயரில் கருணா புகழ் பாடும் விழாவாகவே இடு இருக்கும் ....

இதற்கு தமிழின் பேரால் ஆதரவளிக்க ப்போகின்றீர்களா???

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் உலகத்தமிழர் மாநாடு என்ற பெயரில் கருணா புகழ் பாடும் விழாவாகவே இடு இருக்கும் ....

சன், கலைஞர் தொலைக்காட்சி இதைவைத்து கருணாநிதி புகழ்பாடபோகினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I disagree. I dislike Karunanidhi.

International Tamil Conf erence if for developing Tamil. Why should we boycott it? No.

Boycott DMK meetings. Ok. But not International Tamil Conference.

  • கருத்துக்கள உறவுகள்

I disagree. I dislike Karunanidhi.

International Tamil Conf erence if for developing Tamil. Why should we boycott it? No.

Boycott DMK meetings. Ok. But not International Tamil Conference.

முதல்ல இதை தமிழிலை எழுதி , உங்கடை தமிழாராச்சி மாநாடு பற்றிய கருத்தை சொல்லுங்கோ ........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I disagree. I dislike Karunanidhi.

International Tamil Conf erence if for developing Tamil. Why should we boycott it? No.

Boycott DMK meetings. Ok. But not International Tamil Conference.

3 மாதத்திலே 40,000 மக்கள் கொல்லப்பட முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தானே ஒரு ஈனப்பிறவி... அவன் தலைமையில் ஒரு தமிழ் மாநாடு நடத்தி அவனை மேடையில் புகழ்ந்து பாடி விட்டு வரச்சொல்கிறீர்களா ???? சரி அதை விடுங்கள் தமிழ் நாட்டு தமிழனுக்கு தலைமை தாங்கி வருகிறானே.... குரங்கன்; இவன் மட்டுமில்லை குண்டம்மாவையும் சேர்த்துத்தான் ... இன்று 300,000 மக்கள் அடைக்கப்பட்டிருக்கிரார்களே..

. ஏதாவது செய்தார்களா ?? அவர்களை தமது சொந்த இடங்களில் மீள குடியேத்தாமல்.... நீங்கள் தமிழுக்கு குடைபிடிக்க போறிங்களோ ?????? அது தான் உங்களுக்கு சரியாகப்பட்டால் தாராளமாக செய்யுங்களே !!!! முதலில் எங்கள் உறவுகள் தான் எங்களுக்கு முக்கியம்... அதன் பிறகு தான் நீங்கள் சொல்லும் தமிழ், மயிர் மட்டை எல்லாம்....... முதலில் தமிழனை வாழ வையுங்கள் தமிழ் தானாக வளரும்..

அதிகம் வேண்டாம் மக்கள் தொலைகாட்சியில் "கற்போம் கணணி" என்ற நிகழ்ச்சி நடாத்திகொண்டிருந்தார்களே ஈழத்தமிழர் சிலர்... அவர்களையே தனக்கு தோல்வி வரக்கூடாது என்று உள்ளே தூக்கி போட்டானே...... அவன் தலைமையிலா தமிழுக்கு குNடி கழுவப்போகிறீர்கள்..... காலம் எல்லாத்தையும் மறக்கடிக்க வைத்திடும் என்ற தைரியத்திலே தானே எங்கள் மக்களை கதற கதற கொல்ல விட்டிட்டு பார்த்துகொண்டிருந்தான்..... நாய்..... அவனுக்கு தெரியும் இப்படியான நிகழ்ச்சிகள் செய்வதன் மூலம் எம்மை திசை திருப்பி அவனது காலடியை நக்கி கொண்டிருப்போம் காலம் பூராவும் என்று ... அதை தான் நீங்கள் செய்ய விரும்புகிறீர்களா ????

வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர் சங்கங்களே!!குண்டம்மாவை எவ்வாறு வாழ்த்தி (தேர்தல் வேளையிலே ) எவ்வாறு அறிக்கை விட்டிர்களோ அவ்வாறே உங்கள் எதிர்ப்பை அறிக்கை வழி வெளிப்படுத்துங்கள் உடனடியாக... எல்லா ஏற்பாடுகளையும் செய்ததன் பின்னால் நாங்கள் எதிர்கிறோம் என்று அறிக்கை விடுவதில் எந்த பயனும் இராது

Edited by வீரா

ஒரு சனியனும் விளங்க மாட்டன் எண்டுதுகள்.

தமிழ் பேசுகிரம் எண்டதக்காக அடைத்து வைத்து சித்திரைவதை செய்கிறான், மிருகங்கள் போல பட்டியில் அடைத்து வைத்து சாப்பாடு போடுறான்.

வெட்கம் இல்லை தமிழே அழிந்து போ. உனக்கு ஒரு மாநாடா?

மலேசியாவில் நாய்கள். ஈழத்தில் விலங்குகள் தமிழகத்தில் அடிமைகள், ஜரோப்பாவில் அகதிகள்.

யாருக்கு மாநாடு .?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.