Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர் காலத்துக்கு என்ன படிப்பு உதவும் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய உலக அதிவேக மாற்றத்தில் , எதிர் காலத்துக்கு என்ன படிப்பு உதவும் ?

இந்தக் கேள்வி என்னை பல காலம் குழப்புகின்றது .

எல்லா தமிழ் பெற்றோரும் தம் பிள்ளைகளை மருத்துவராகவோ , பொறியியலாளாராகவோ வருவதை தமது குறிக்கோள் என்று செயல் படுகின்றார்கள் .

உலகத்தில் அது இரண்டும் தான் வேலையா .......? அது சரியில்லை என்று நான் நினைக்கின்றேன் .

இங்கு களத்தில் கருத்தாடுபவர்கள் பல துறைகளையும் சார்ந்தவர்களாக உள்ளார்கள் .

உங்கள் அபிப்பிராயங்களையும் , அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் பலருக்கு உதவியாக இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் எத்துறையில் அதிக நாட்டம் , ஈடுபாடு காட்டுகிறார்களோ அத்துறையில் அவர்கள் படித்தல் நாட்டுக்கும் நல்லது.படிப்பவரும் சந்தோசமாக ஈடுபாட்டுடன் படிப்பார்கள். நிறைய பேர் டாக்டர், எஞ்ஜினியர் ஆக வேண்டும் என பெற்றோரின் வலியுறுத்தலால் படித்து கடைசியில் படிக்க முடியாமல் விட்டவர்களும், ஏதோ படிக்க வேண்டும் என்பதற்காக படிப்பவர்களாகவுமே உள்ளார்கள். யாருக்கும் பலனற்ற படுதாக இருக்க படிக்காமல் எல்லோருக்கும் பலன் தரும் வகையில் படிப்பது எல்லோருக்கும் நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் எத்துறையில் அதிக நாட்டம் , ஈடுபாடு காட்டுகிறார்களோ அத்துறையில் அவர்கள் படித்தல் நாட்டுக்கும் நல்லது.படிப்பவரும் சந்தோசமாக ஈடுபாட்டுடன் படிப்பார்கள். நிறைய பேர் டாக்டர், எஞ்ஜினியர் ஆக வேண்டும் என பெற்றோரின் வலியுறுத்தலால் படித்து கடைசியில் படிக்க முடியாமல் விட்டவர்களும், ஏதோ படிக்க வேண்டும் என்பதற்காக படிப்பவர்களாகவுமே உள்ளார்கள். யாருக்கும் பலனற்ற படுதாக இருக்க படிக்காமல் எல்லோருக்கும் பலன் தரும் வகையில் படிப்பது எல்லோருக்கும் நல்லது.

எல்லோருக்கும் பயன் தரும் படிப்பு என்றால் அது என்ன நுணாவிலான் .

குறிப்பாக சில வேலைகளை சொல்லுங்களேன் .

சுத்துமாத்து, பம்மாத்து, பேக்காட்டல்.. இந்தப்படிப்புக்களை பற்றி என்ன நினைக்கிறீங்கள்? பிள்ளை எங்கை போனாலும் எதுககை போனாலும் பிழைச்சுப்பான்

அனைத்து துறைகளும் தன்னளவில் ஏதேனும் சிறப்பினைக் கொண்டிருப்பவையே. எந்த துறையாயினும் அதில் உச்ச அளவு தேர்ச்சியினை (expertise) பெற்றால், அந்த துறையில் மிளிரலாம். கணணி, மருத்துவம், பொறியியல் போன்றவற்றில் இருக்கும் அதே சிறப்பும் உயர்வும் சமையல், கட்டிடம் கட்டுதல், அலங்கரித்தல் போன்றவற்றிலும் உள்ளது.

கமலஹாசனின் பேட்டியொன்றில் ஒரு முறை ஒரு விடயத்தை குறிப்பிட்டு இருந்தார். அவரின் தாய் அடிக்கடி கூறுவாராம் கக்கூஸ் கழுவும் தொழிலாயினும், உன்னை விட சிறப்பாக யாராலும் கழுவ முடியாது என்ற நிலையைக் கொண்டு வா என. எனக்கு மிகவும் பிடித்த அறிவுரை அது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி ..........உண்மையாகவா கேட்கிரீங்கள் ......

.மருத்துவத்துறை என்றால் தெடஸ் கோப்புடன் நடமாடும் டாக்டர் மட்டுமல்ல . சத்திர சிகிச்சை பிரிவு .மயக்க மருத்து கொடுபோர். ஆய்வு கூட பகுபாய்வாளர்.......அப்படியான பிரிவுகளுக்ககாண படிப்பை படிப்பது நன்று .அந்த அந்த துறையின் உட பிரிவுகளை நோக்கி படிப்பது நன்று...........

.இனி வருங்காலம் சட்டவியல் .........வணிகத்துறை கொடிகட்டி பறக்குமாம். என்று ஒரு ஆய்வு சொல்கிறதாம்.

என்னைப் பொறுத்த மட்டில் பிள்ளைகளை நாம் எந்த துறைக்கு போகவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதே தப்பு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமைகள் இருக்கும். அதை பெற்றோர் தான் ஊக்குவித்து விட வேண்டும் அதை விடுத்து டாக்டராக இஞ்சினியராக தான் வரவேண்டும் வற்புறுத்துவது முற்றிலும் தவறான விடயம்.

எதிர்காலத்தில் கணனி துறையில் தான் அதிக வேலை வாய்ப்பு இருக்க சாத்தியங்கள் உள்ளன.

இருந்தாலும் நான் கணக்கியல் துறையில் வேலைபார்ப்பதால் அதைப்பற்றியும் சில விடயங்கள் கூறவிரும்புகின்றேன். நானும் என்னுடன் கல்லூரியில் படித்த அணைத்து நண்பிகளும் கல்லூரி முடித்து ஒரு சில மாதங்களுக்குள் கணக்கியல் துறையில் வேலை எடுத்து விட்டோம். அதற்காக அணைவரும் கணக்கியல் துறையில் படித்தால் தான் உடனே வேலை எடுக்கலாம் என்று சொல்லவில்லை ஆனால் கணக்கியல் துறையை பொறுத்த மட்டில் எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. எவருக்கு எந்து துறையில் நாட்டம் இருக்கின்றதோ அந்த துறையில் படித்து வேலை எடுப்பதே சிறந்தது என்பது என் கருத்து.

நன்றி.

எவருக்கு எந்து துறையில் நாட்டம் இருக்கின்றதோ அந்த துறையில் படித்து வேலை எடுப்பதே சிறந்தது என்பது என் கருத்து.

எனக்கு 'ஒரு' துறையில் நல்ல நாட்டம் இருக்குது..அதில் வேலை கேட்டன் கொடுக்க மாட்டன் என்றுவிட்டனர். அப்பா அம்மா மார் கூட தும்புத்தடியை தூக்கி கொண்டு வந்தினம்...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் பயன் தரும் படிப்பு என்றால் அது என்ன நுணாவிலான் .

குறிப்பாக சில வேலைகளை சொல்லுங்களேன் .

சிறி பொதுவாக சமுதாயத்துக்கு என்று தான் சொன்னேன். அதற்காக மனதில் ஒரு வேலையை கருத்தில் கொண்டு கருத்து சொல்லவில்லை. ஆனால் எனது தனிப்பட்ட கருத்து என்ன தொழில் என்றாலும் நான் பொஸ்ஸாக(boss) :wub: இருந்து செய்ய கூடிய வேலை தான் எனக்கு பிடிக்கும். மற்றவர்களுக்கு கீழ் வேலை செய்வது அறவே பிடிக்காது.

எனக்கு 'ஒரு' துறையில் நல்ல நாட்டம் இருக்குது..அதில் வேலை கேட்டன் கொடுக்க மாட்டன் என்றுவிட்டனர். அப்பா அம்மா மார் கூட தும்புத்தடியை தூக்கி கொண்டு வந்தினம்...

அது எந்த துறை நிழலி அண்ணா? :) அப்பா அம்மா அடிக்கும் அளவிற்கு..... :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுத்துமாத்து, பம்மாத்து, பேக்காட்டல்.. இந்தப்படிப்புக்களை பற்றி என்ன நினைக்கிறீங்கள்? பிள்ளை எங்கை போனாலும் எதுககை போனாலும் பிழைச்சுப்பான்

மாப்பிள்ளை ,

சுத்துமாத்து , பம்மாத்து , பேக்காட்டல் ...... போன்றவற்ரை பயில்பவர்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க மாட்டார்கள் .

அவர்கள் ஒரு இரவாவது ........ நிம்மதியாக நித்திரை தன்னும் கொள்ள முடியுமா ?

அப்பிடி நீங்கள்தான் நினைக்கிறீங்கள்.. இந்த போட்டிமயமான உலகத்தில உங்கள் பிள்ளைக்கு சுத்துமாத்து தெரியாவிட்டால்.. என்ன தெரிஞ்சாலும் முன்னுக்கு வர வாய்ப்பு இல்லை. அட்லீஸ்ட் கொஞ்சம் புளுகவாவது தெரிஞ்சு இருக்கோணும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து துறைகளும் தன்னளவில் ஏதேனும் சிறப்பினைக் கொண்டிருப்பவையே. எந்த துறையாயினும் அதில் உச்ச அளவு தேர்ச்சியினை (expertise) பெற்றால், அந்த துறையில் மிளிரலாம். கணணி, மருத்துவம், பொறியியல் போன்றவற்றில் இருக்கும் அதே சிறப்பும் உயர்வும் சமையல், கட்டிடம் கட்டுதல், அலங்கரித்தல் போன்றவற்றிலும் உள்ளது.

கமலஹாசனின் பேட்டியொன்றில் ஒரு முறை ஒரு விடயத்தை குறிப்பிட்டு இருந்தார். அவரின் தாய் அடிக்கடி கூறுவாராம் கக்கூஸ் கழுவும் தொழிலாயினும், உன்னை விட சிறப்பாக யாராலும் கழுவ முடியாது என்ற நிலையைக் கொண்டு வா என. எனக்கு மிகவும் பிடித்த அறிவுரை அது

நிழலி , நீங்கள் சொல்வதில் நியாயம் உள்ளது .

ஆனால் அந்த உச்ச அளவை எட்ட எவ்வளவு காலம் பிடிக்கும் ........

அந்த படிக்கும் நேரத்தில் ........ அந்த இடத்தை அடைய முன்னர் , அந்த வேலைக்கு தேவையில்லாமல் போய் விட்டால் .......

நான் இருக்கும் மாகாணத்தில் நாற்பதினாயிரம் எஞ்சினியர் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள் ,

மருத்துவர்களும் கிட்டத்தட்ட அப்பிடித்தான் . ( ஆர் சாவான் ......., வேலை எடுக்கலாம் என்னும் நிலைமை )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் இனத்திற்கான ஏதாவது பிரயோசனமான படிப்புகள் என்றால் ... Journalism, Political Science, Law, போன்ற Social Sciences துறைகள்.

http://en.wikipedia.org/wiki/Social_sciences

எல்லோரும் டாக்டர் இஞ்சினியர் என்று படித்ததால் தான் அன்ரன் பாலசிங்கத்தின் இடத்தை இட்டுநிரப்ப ஒருவர் கூட இருக்கவில்லை. எம்மிடம் சர்வதேச விடயங்கள் அரசியல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் பலர் இருந்திருந்தால் இன்றிந்த அவல நிலைக்கு வந்திருக்கமாட்டோம்.

எனது அவா என்னவென்றால் எம்மிடம் இருக்கும் கட்டமைப்புகள் இப்படியான துறையில் படிப்போருக்கு புலமை பரிசில் (scholarship) மற்றும் பல உதவிகளை செய்வதன் மூலம் பலரை இந்த துறைகளில் படிக்க ஊக்கம் கொடுத்து அவர்களை இந்த இனத்திற்கான சிற்பிகளாக உருவாக்குவது.

Edited by காட்டாறு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி ..........உண்மையாகவா கேட்கிரீங்கள் ......

.மருத்துவத்துறை என்றால் தெடஸ் கோப்புடன் நடமாடும் டாக்டர் மட்டுமல்ல . சத்திர சிகிச்சை பிரிவு .மயக்க மருத்து கொடுபோர். ஆய்வு கூட பகுபாய்வாளர்.......அப்படியான பிரிவுகளுக்ககாண படிப்பை படிப்பது நன்று .அந்த அந்த துறையின் உட பிரிவுகளை நோக்கி படிப்பது நன்று...........

.இனி வருங்காலம் சட்டவியல் .........வணிகத்துறை கொடிகட்டி பறக்குமாம். என்று ஒரு ஆய்வு சொல்கிறதாம்.

என்ன ...... நிலாமதி அக்கா ,

இப்பிடி கேட்டுப் போட்டியள் . உண்மையாகவே கேட்கின்றேன் .

நீங்கள் சொல்லிய வேலைகள் வருங்காலத்துக்கு உதவி செய்யும் என்று நம்புகின்றேன்.

எனக்கு தெரிந்த ஒரு தமிழ் பெண் , நீங்கள் மேற் கூறிய வேலைகளில் கை முட்ட சம்பாதிக்கிறார் .

சந்தோசமான விசயம் தானே .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னனா சொன்னால் இது ஒரு பெரிய விடயம்..

என்னுடைய விருப்பம். நாங்கள் படிக்கிற படிப்பால வீட்டில மற்ற மற்ற காரியங்கள் தடைபட கூடாது..அக்கா டொக்ரருக்கு படிக்க வெளிக்கிட்டா அவ அதை முடிக்கும் மட்டும் மற்றக்களின்ற கலியாணம் பிந்துமென்றால்..இல்லாட்டி தம்பி படிக்க பெரிய கடன் எடுத்துப் போட்டு மற்றாக்கள் ஒன்றும் செய்யேலாம இருக்கிற நிலை.

மற்றப்படி, வீம்புக்கு படிக்க தேவையில்லை, அம்மாவும் அப்பாவும் 60 வயதுமட்டும் பக்ரியில வேலை செய்யேக்க 7,8 வருட லோ படிக்க தேவையில்லை..

நான் சொல்லுவன் விரலுக்கேத்த படிப்பு..

எனக்கு பிள்ளைக்கு பிடித்த துறையில படிப்பு பெரிச நம்பிக்கையில்லை..கனபேர் இங்க சைக்கொலொகி படிச்சுபோட்டு டெற்ர என்றிக்கு வாரவை..எங்களுக்கு படிப்பின்ர தொழில்வாய்ப்பு கட்டாயம் தெரிந்திருக்க வேணும்..அதுவும் நங்கள் இங்க முதல்சந்ததி ஆட்கள்..4 வருடம் படிச்சுபோட்டு 10 டொலர்ர் வேலைக்கு போனால் ஆர் லோன் கட்டுவது?

செய்யிர தொழிலை சந்தொசமாய் செய்யிர மனம் வந்தால் சரி..

சுத்துமாத்து தொழில் பற்றி..நம்பர் வண்..நான் விரும்புகிறதும் எனக்கு இல்லாததும்,..."மனெச்மன்ற்" அது தெரியாட்டி இன்ரவியு போகவேண்டாம்..

அது படித்து வரக்கூடாது.. இரத்ததில ஊறவேண்டும்..

15 நாள் கழித்து வாரன் தலை போகிற சோதிணை இருக்கு..முடியவாரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த மட்டில் பிள்ளைகளை நாம் எந்த துறைக்கு போகவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதே தப்பு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமைகள் இருக்கும். அதை பெற்றோர் தான் ஊக்குவித்து விட வேண்டும் அதை விடுத்து டாக்டராக இஞ்சினியராக தான் வரவேண்டும் வற்புறுத்துவது முற்றிலும் தவறான விடயம்.

எதிர்காலத்தில் கணனி துறையில் தான் அதிக வேலை வாய்ப்பு இருக்க சாத்தியங்கள் உள்ளன.

இருந்தாலும் நான் கணக்கியல் துறையில் வேலைபார்ப்பதால் அதைப்பற்றியும் சில விடயங்கள் கூறவிரும்புகின்றேன். நானும் என்னுடன் கல்லூரியில் படித்த அணைத்து நண்பிகளும் கல்லூரி முடித்து ஒரு சில மாதங்களுக்குள் கணக்கியல் துறையில் வேலை எடுத்து விட்டோம். அதற்காக அணைவரும் கணக்கியல் துறையில் படித்தால் தான் உடனே வேலை எடுக்கலாம் என்று சொல்லவில்லை ஆனால் கணக்கியல் துறையை பொறுத்த மட்டில் எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. எவருக்கு எந்து துறையில் நாட்டம் இருக்கின்றதோ அந்த துறையில் படித்து வேலை எடுப்பதே சிறந்தது என்பது என் கருத்து.

நன்றி.

ஈழமகள் ,

உங்களின் அணுகு முறை வேறாக உள்ளது .

உங்களின் கருத்துக்கு நன்றி .

சில விடயங்களுக்கு சரியாக யோசிக்க வேண்டியிருக்குது. :wub:

தமிழ்சிறி நல்ல கேள்விதான் கேட்டுப் போட்டியள்...........

எல்லாரும் தங்கட மேல் படிப்பை முடிச்சு இந்த உலகத்தில நின்மதியாய் வாழ

முதலில இந்த உலகம் சூடேறாமல் பாதுகாத்துக் கொள்ள வேணும்

அதால இனி புதிசாய் அது சம்பந்தமான படிப்புக்களை படித்தால் தான் உந்த என்சினியரும் டொக்டரும் வேலை செய்யிறதுக்கு மனிசர் உலகத்தில இருப்பினம்...............எங்கட

நாசமாய் போன வாழ்க்கை முறையால பாருங்கோ உலகத்தில தினம் தினம் அழிவுகள்

நடந்து கொண்டிருக்கின்றன..........

அந்த அழிவில நாங்களும் அகப்பட போறம்..............அதால அதை தடுக்கிற சம்பந்தமாய் ஏதாவது

படிச்சால் மனிசர் வாழ வழி வகுக்கும் எண்டுறன்...............

மனிசர் இருந்தால் தானே...............மற்ரதுகளை செய்யலாம்!!!!!!!!!

சிறி எதிர்காலத்துக்கு எது நல்ல படிப்பு உதவும்? எனும் கேள்வி நல்ல கேள்வி தான். யாருடைய எதிர்காலம், உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு என்றால்

எனது கருத்துப்படி

எதிர்காலத்தில் நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு பெரிய வீடு, பென்ஸ் கார், நீச்சல் குளம், இப்படி டாம்பிகமான வாழ்க்கை வேணுமா?

அப்படி வேண்டும் எனில் அதற்கேற்பவும், நீங்கள் இருக்கும் நாடு, அங்குள்ள தொழில் முயற்சிகள்/ பொருளாதரம் எதில் தங்கியுள்ளது என்பதை பார்த்து அதற்கேற்ப தீர்மானிக்கலாம்.

அதல்ல,

மனதுக்கு பிடித்தமாதிரியான, நாளந்தம் வேலைக்கு போகும் போது விருப்பத்துடன் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா?

அந்தவேலை நடுத்தர வருமானமாய் இருந்தாலும் அதனுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாய் வாழ முடியும் என நினைக்கிறீர்களா?

அப்பிடி எனில் உங்களுக்குகாக இருந்தல் உங்கள் விருப்பப்படி / உங்கள் பிள்ளைகளுக்காய் இருந்தால் உங்கள் பிள்ளைகள் விரும்பும் படிப்பை படிப்பதே நல்லது.

நீங்கள்/ உங்கள் பிள்ளை விரும்பு படிப்பு என்பதும் நீங்கள் இருக்கும் நாட்டின் கல்வி வாய்ப்பில்/ கொள்கையிலேயே தங்கியுள்ளது.

சிறி லங்கா எனில் நீங்கள் பொறியியல் படிக்க விரும்பினாலும் தரப்படுத்தலில்ன் படிப்படையில் கிடைக்கும் பல்கலைகழக பட நெறிக்கே போக முடியும்.

அப்படி ஒரு சூழ்நிலையெனில் அந்த குறிப்பிட்ட பாட நெறியில் எந்த வகையான பாடப்பரப்பு உங்களை கவருகிறதோ/ அல்லது அதிக தொழில் வாய்ப்பு உள்ளதோ அதை தெரிவு செய்து அதை சிறப்பு பாடமாக எடுத்து படிப்பது சிறந்தது உதாரணமாக பொறியியலில் இலத்திரனியல், கணனி, சுரங்கதுறை ...... இப்படி பாடப்பரப்புகள், அல்லது பொது விஞ்ஞானம் எனில் இரசாயனவியல், பௌதீகவியல், நுண்ணுயிரியல் இப்படி ஏதும் ஒன்று.

ஆனால் புலம் பெயர் நாடுகளில் பொதுவாக மருத்துவம் தவிர்ந்த ஏனைய துறைகளை நீங்கள் விரும்பியபடி தெரிவு செய்யலாம். எனவே நீங்கள் விரும்பும் பாடத்தை படிப்பதில் சிரமம் இருக்காது.

உதாரணமாக இங்கு எனக்கு அறிமுகமான கனேடிய நண்பன் ஒருவன் தனது கற்கையை தெரிவு செய்த முறையை சொல்கிறேன்.

முதலில் அவர் பொது விஞ்ஞானம் படிக்க பல்கலைகழகம் சென்றார், அவருக்கு அத்துறை பிடிக்க வில்லை ஒரு வருடத்தின் பின் பார்மசி படிப்புக்கு மாற்றம் எடுத்து 2 வருடங்கள் அத்துறையை பயின்றார் அதுகும் அவரை கவரவில்லை. மீண்டும் பொது விஞ்ஞான பிரிவில் படிக்க சென்று உளவியல் (சைக்கொலொயி) ஐ சிறப்பு பாடமாக படித்து பட்டம் பெற்று இப்போது குடும்ப வன்முறை போதை பழக்கங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிறப்பு படசாலையில் அவர்களுக்கு வழிகாட்டியாக/ கவுனிசிலராக வேலைசெய்கிறார். அத்துடன் சமூகப்பணி இல் முதுமாணி பட்டபடிப்பை மேற்கொள்கிறார். சமூக நல பணித்துறை என்பது அதிக பணம் தரும் துறை இல்லை. ஆடம்பர வாழ்க்கைக்கு போதிய பணம் கிடைப்பது கடினம். அது அவருக்கு தெரிந்தே இருக்கிறது. ஆனால் அவருக்கு அந்த பணியில் மனதிருப்தி கிடைக்கிறது, ஆனால் ஏனைய கற்க்கைத்துறைகள் அவருக்கு போதிய திருப்தியை தரவில்லை என சொன்னார்.

இதை முதலில் கேட்ட போது அவர் தனது கல்வியில் பல வருடங்கலை விணாக்கி விட்டர் என யோசித்தேன் ஏன் எனில் நாங்கள் அப்படி பல துறைகளையும் மாறி படிக்கும் பழக்கம் அற்றவர்கள். ஒரு கோடு கீறி அதன் வழியே பயணிக்க நினைப்பவர்கள். அதுவே சில நேரம் உயற்ச்சிக்கும் வழியாக இருக்கும் சில நேரம் எம்மை நரகத்துள் தள்ளவும் காரணமாக அமையலாம்.

என்ன படிப்பது எனும் தெரிவு உங்ளதே, அதில் மற்றவர்களின் ஆலோசனையை விட உங்களுக்கு எது பிடிக்கிறது என்பது முக்கியம்.

Edited by KULAKADDAN

தற்பொழுது கனடாவில் எந்தத்துறையில் வேலைவாய்ப்பு அதிகம் காணப்படுகிறது? நான் nursing செய்ய வேணும் என்று நினைத்திருக்கிறன் ஆனா எனக்கு கணிதத்துறையில் ஆர்வம் கூட. எதைப்படிக்கிறது என்று ஒரே குழப்பமா இருக்கு. 2010 எனது கல்லூரி படிப்பை தொடங்க வேணும்.யாரவது தெரிந்தவர்கள் அறிவுரை கூறுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிதியும் கணக்காய்வும் நல்லது என்று நினைக்கிறேன். பல்கலைக்கழகம் போய் படிப்பதுதான் படிப்பல்ல. CIMA, ACCA போன்ற கல்வி நெறிகளைக் கற்று பலர் நல்ல தகுதியான வேலைகளில் இருக்கின்றனர். ஆனால் பல்கலைக்கழகம் போய் BEng வாங்கியவர்கள் வங்கிகளில் CIMA, ACCA படித்தவர்களை விட கீழ் நிலையில் வேலை செய்ய வேண்டிய நிற்பந்தத்தில் இருக்கிறார்கள்.

வர்த்தகத்துறை சார்ந்த கல்வி சோரம் போகாது என்பது எனது அபிப்பிராயம். எல்லாக் கல்வியும் அடிப்படையில் வர்த்தகம் சார்ந்து தான் இருக்கிறது. அது சேவை வர்த்தகமாகட்டும்.. பொருள் பண்ட வர்த்தமாகட்டும்..!

வெளிநாடுகளில் மருத்துவத்துறை என்பது குறிப்பாக மருத்துவர் என்பது அவ்வளவு இலகுவான பணியல்ல. மிகப் பொறுப்பு வாய்ந்த பணி. சிறிய கவனக் குறைவும் வேலையைப் பறித்துவிடும்.

நிதி கணக்காய்வு முகாமைத்துவம் பங்கு வர்த்தகம் வர்த்தக தகவற்தொழில்நுட்பம்.. போன்ற துறைகளில் நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் இருக்கும்.

ஆனால் ஒன்று.. பொருளாதார நெருக்கடிகள் நிலவும் போது வேலை இழப்பிற்கான வாய்ப்பும் இவர்களுக்கு சற்று அதிகம்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொருத்தவரை நிம்மதியாக வாழ ஒரு நிலம் வேண்டும்.எங்காவது அணு தொழில்நுட்பம் பெற்ற நாடுகளுடன் ஏதாவது ஒரு அண்டைய சக்தி முண்டுவதாக இல்லை.எடுத்த எடுப்பிலே ஏதாவது ஒன்றை பெற முடியாது. எனவே இப்பொழுது இருந்தே அவை தொடர்பான கற்கைகளில் ஈடுபட்டால்தான் குறிப்பிட்ட வொரு காலப்பகுதியில் எமது இலக்கை அடைய முடியும்.தமிழரால் முடியாது என்று ஒன்றில்லை......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை எல்லாற்ரை கதையையும் பாக்கேக்கை...........

எல்லாருக்கும் டாக்குத்தர் எஞ்சினியர் எக்கவுண்டன் எண்டு எல்லாம் சுழல்கதிரை நினைப்பிலைதான் இருக்கினம் போலை கிடக்கு????

அதுசரி நீங்கள் மூண்டு நேரமும் வாய்க்கு ருசியாய் கொட்டுறதுக்கு நேரகாலமில்லாமல் வெய்யில் மழை பனி பாரமல் ஒரு மனிசகூட்டம் அதுதான் உங்கடை பாசையிலை தோட்டக்காரன் எருப்பெட்டிகாவியள் அதுகளைப்பத்தி கொஞ்சமாவது யோசிச்சியளோ?

ஏன் அப்பிடியான வேலையளுக்கு ஒருத்தரும் போகவிரும்பேல்லை?

என்ன அது கூடாத வேலையோ?

இல்லாட்டி...

தோட்டவேலை கொஞ்சம் இளக்காரமோ?

ஒரு மனிசவாழ்க்கைக்கு தேவையான அடிப்படைகளை சிந்திக்க முடியாத சனங்கள்?????????

விடுதலையை பற்றி கொக்கரிக்குதுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தழிழ் சிறி நான் நினைக்கிறன் வெளிநாட்டை பொறுத்தவரையில் மருத்துவர் அல்லது இன்சினியர் நல்லது ஏனண்டா கால் மேல் கால் போட்டு இருக்கலாம். நல்ல சேவை செய்ய வேண்டும் என்ரறால் ஆசிரியராக அல்லது தாதியாக வரலாம்.யாலியான வேலை வேண்டும் என்றால் சிகை அலங்கார வேலைக்கு வரலாம்.

என்னுடைய கருத்து எந்த வேலை எங்கள் தாயகத்தை காப்பாற்றுமோ அதுதான் சிறந்த படிப்பு.

தற்பொழுது கனடாவில் எந்தத்துறையில் வேலைவாய்ப்பு அதிகம் காணப்படுகிறது? நான் ரெசளiபெ செய்ய வேணும் என்று நினைத்திருக்கிறன் ஆனா எனக்கு கணிதத்துறையில் ஆர்வம் கூட. எதைப்படிக்கிறது என்று ஒரே குழப்பமா இருக்கு. 2010 எனது கல்லூரி படிப்பை தொடங்க வேணும்.யாரவது தெரிந்தவர்கள் அறிவுரை கூறுங்களேன்.

செவ்வந்தி இரண்டையும் படிச்சுடுங்கோ சும்மா . எது உங்களுக்கு ஆர்வமோ அது தான் நல்லம்.

Edited by jhansirany

தமிழ்சிறிஇ உங்கள் கேள்வி பொதுப்படையாக இருப்பதால் சரியாகப் பதலளிக்கமுடியாது. ஆனால்இ பொதுவாகஇ பொருளாதாரம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு எப்போதும் வசதி வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமின்றிஇ நீங்கள் ஒரு கம்பனிக்குள் புகுந்துவிட்டால்இ கம்பனியே உங்களைப் படிப்பிக்கும் அல்லது படிப்புச் செலவில் ஒரு பகுதியை அளிக்கும். பத்துவயதிற்குட்பட்ட உங்கள் பிள்ளைகளுக்காகக் கேட்கிறீர்கள் எனில்இ அவர்களை நீங்கள் விரும்பும் எந்தத் துறைக்கும் அனுப்ப முடியும். நீங்கள் செய்யவேண்டிய ஒரே காரியம்இ அவர்களுக்கு அந்தத் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்துவது மட்டுமே. இதனை நீங்கள்இ அவர்களுக்கு அந்தத்துறை சார்ந்த புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதுஇ சிறுவர்களுக்கான அந்தத் துறை சார்ந்த நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வது அல்லது உங்களுக்குத் தெரிந்த அந்தத் துறை சார்ந்தவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் அப்பிள்ளைகளுக்கு அத்துறையின் மீது ஆர்வம் வரச்செய்யலாம். வளர்ந்த பிள்ளைகளாயின்இ அவர்கள் விரும்பும் துறையை அறிந்துஇ அத்துறைசார்ந்தவர்களிடம் உங்கள் பிள்ளைகளோடு நீங்களும் சேர்ந்து அறிந்து அவற்றின் நன்மை தீமைகளை அறிந்து முடிவெடுப்பது நல்லது. பலநேரங்களில்இ பிள்ளைகளுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளதென அவர்களுக்கே தெரிவதில்லை. அவர்கள் எண்ணப்போக்கு மாறிக் கொண்டே இருக்கும். எனவேஇ இவற்றைப் பற்றி ஓரளவேனும் ஆராய்ச்சி செய்து முடிவெடுப்பதே சிறந்தது.

வொல்கானோஇ நீங்கள் கூறுவது உண்மை. கனடாவைப் பொறுத்தமட்டில்இ உளவியலில் கலாநிதிப்பட்டம் எடுத்தால்தான் நல்லவேலை எடுக்க முடியும் என்பது அது சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே தெரிந்தவிடயம். இங்குஇ பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கே இது தெளிவாகத் தெரியும். நீங்கள் குறிப்பிட்ட பிள்ளைகள்இ ஏதோ டிகிரி எடுத்தால் போதும் என்று நினைக்கும் பிள்ளைகளாகவிருப்பார்கள்.

செவ்வந்திஇ நீங்கள் கணக்கில் புலி என்றால்இ அதனைப் படிப்பது சிறந்தது. statistics படிப்பிற்கும் இங்கு வேலைவாய்ப்பு அதிகம். கணக்கியல் இல்லாவிட்டால்இ எக்கவுண்டிங் படிப்பதும் நல்லது. எக்கவுண்டிங் எனில்இ CGA, CMAஎனப் படித்தால்இ உங்கள் சம்பளம் மிகவும் உயர வாய்ப்புள்ளது. இவற்றை நீங்கள் வேலை செய்து கொண்டே படிக்கலாம். அதோடுஇ வேலையிலும் பணஉதவி செய்வார்கள். இவைஇ மாலைநேர வகுப்புகளாக மட்டும்தான் படிக்கமுடியும். படித்துமுடிய 5 வருடங்கள் எடுக்கும். ஆனால்இ ஒவ்வொரு லெவலும் முடிக்கும்போதுஇ உங்கள் சம்பளம் உயர வாய்ப்புள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.