Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மது குடிப்பவர்களுக்கு இதய நோய்கள் வராது” ஆய்வில் புதிய தகவல்

Featured Replies

தினமும் மது குடிப்பவர்களுக்கு இதய நோய்கள் பாதிப்பு மிக குறைவு என ஸ்பெயின் நாட்டின் ஆய்வு தெரிவிக்கிறது. 29 வயது முதல் 69 வயது வரை உள்ள 41 ஆயிரம் ஆண் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 609 பேருக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்பட்டது. இவர்களில் 481 பேர் ஆண்கள், 128 பேர் பெண்கள்.

மது குடிக்காதவர்களை விட அதிக அளவில் மது குடித்த ஆண்களுக்கு இதய நோய் பெருமளவில் ஏற்பட வில்லை. 285 மில்லி பீரில் 4.9 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. அதே நேரத்தில் 180 மில்லி ஒயினில் 12 சதவீதம் ஆல்கஹால் உள்ளது.

இவற்றை குடிக்கும் பெண்கள் இதய நோய்களால் பாதிப்படைவதில்லை. பீர் மற்றும் ஒயின் தயாரிப்பில் ஸ்பெயின் நாடு உலகிலேயே 3-வது இடத்தில் உள்ளது. இந்த வர்த்தகத்தின் மூலம் அதிக அளவில் லாபம் சம்பாதிப்பதில் உலகில் 6-வது இடத்தில் உள்ளது. ஆனால் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை உலகிலேயே இங்கு தான் மிக குறைவாக உள்ளது.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1258898413&archive=&start_from=&ucat=2&

இந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்த உண்மை, அடியேனுக்கு ஏறக்குறை 20 வருடங்களுக்கு முன்னமே தெரியும்(நானும் ஒரு விஞ்ஜானியே) :unsure: . ஆரம்பத்தில் வார இறுதி நாட்களில் மருந்தாகவே எடுத்தேன். இனி இந்த மருந்த ஒவ்வொரு நாளும் எடுக்க யோசித்திருக்கிறேன்(மனுசி விட்டுட்டு ஓடுகிறாளோ தெரியாது?) :(

  • கருத்துக்கள உறவுகள்

-----

மது குடிக்காதவர்களை விட அதிக அளவில் மது குடித்த ஆண்களுக்கு இதய நோய் பெருமளவில் ஏற்பட வில்லை. 285 மில்லி பீரில் 4.9 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. அதே நேரத்தில் 180 மில்லி ஒயினில் 12 சதவீதம் ஆல்கஹால் உள்ளது.

-----

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1258898413&archive=&start_from=&ucat=2&

Kallu_Paanai-1.jpg

பனங்கள்ளில் எத்தனை வீதம் அல்கஹோல் உள்ளது ?

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியை அணுகினால் நல்லது அவர்தான் கள்ளுக்கடை விஞ்ஞானி :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

.

குமாரசாமியை அணுகினால் நல்லது அவர்தான் கள்ளுக்கடை விஞ்ஞானி :lol::)

அவரை காலைமை ஏழு மணிக்கு முன்னம் , அணுகவேணும் .

இது நடக்கிற காரியமா ? முனிவர். :D:wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மது குடிப்பவர்களுக்கு இதய நோய்கள் வராது” ஆய்வில் புதிய தகவல்

நல்ல தகவல் கிடைச்சிருக்கு

அதிக அளவில் மது குடித்த ஆண்களுக்கு இதய நோய் பெருமளவில் ஏற்பட வில்லை. 285 மில்லி பீரில் 4.9 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. அதே நேரத்தில் 180 மில்லி ஒயினில் 12 சதவீதம் ஆல்கஹால் உள்ளது.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1258898413&archive=&start_from=&ucat=2&

இல்லை கறுப்பி, அதிக அளவில் குடிப்பவர்களுக்குத்தான் இதய நோய் ஏற்படுவதில்லை.

கேள்வி : 285 மில்லி பீரில் 4.9 வீதம் அல்கொஹோல் இருந்தால் 286 மில்லி லீற்றரில் எத்தனை வீதம் இருக்கும். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தெரிஞ்சுதானே நாங்கள் சந்ததிசந்ததியாய் மிதமிஞ்சி "மதுரசம்" அருந்தி வருகின்றோம். :lol:

நாங்கள் எப்பிடித்தான் முக்கிமுக்கி நல்லதை சொன்னாலும் வெறிக்குட்டியள் எல்லாம் கதைக்க வெளிக்கிட்டுதுகள் எண்டு நக்கலடிப்பினம்.

கோட்டுச்சூட்டு போட்டவன் வியாபாரத்துக்காக எது சொன்னாலும் அது தெய்வ வாக்கு? :lol:

இது தெரிஞ்சுதானே நாங்கள் சந்ததிசந்ததியாய் மிதமிஞ்சி "மதுரசம்" அருந்தி வருகின்றோம். :lol:

நாங்கள் எப்பிடித்தான் முக்கிமுக்கி நல்லதை சொன்னாலும் வெறிக்குட்டியள் எல்லாம் கதைக்க வெளிக்கிட்டுதுகள் எண்டு நக்கலடிப்பினம்.

கோட்டுச்சூட்டு போட்டவன் வியாபாரத்துக்காக எது சொன்னாலும் அது தெய்வ வாக்கு? :)

அதுதானே கு.சா.... அனுபவஸ்தர்கள் நாங்கள் சொன்னால் கேட்க மாட்டினம்.. எல்லாருக்கும் சலங்கை கட்டின மாடு தான் சொல்ல வேண்டும் போல :lol:

மதுபானத்தை மருந்துபோல உட்கொண்டால் இதயநோய் வராது, உடலுக்கு இன்னும் சில அனுகூலங்கள் இருக்கின்றது என்பதே சரியானது. மருத்துவம் சம்மந்தமான கட்டுரைகளில் இப்படித்தான் இருக்கிறது. ஆனால்.. நம்மவர்களிண்ட கணக்கில போனால்.. மப்பில தெருவில வாகனத்தில அடிபட்டே ஆளிண்ட உயிர்போயிடும். குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட மதுபான பாவனை உடலிற்கும், மனதிற்கும் பலவிதமான தீங்குகளை ஏற்படுத்தும். எத்தனை குடும்பங்கள் மதுபாவனை காரணமாக அழிந்துபோனது, அழிந்துபோகிது என்று சொல்லித்தெரிய தேவையில்லை.

மதுபானத்தை மருந்துபோல உட்கொண்டால் இதயநோய் வராது, உடலுக்கு இன்னும் சில அனுகூலங்கள் இருக்கின்றது என்பதே சரியானது. மருத்துவம் சம்மந்தமான கட்டுரைகளில் இப்படித்தான் இருக்கிறது. ஆனால்.. நம்மவர்களிண்ட கணக்கில போனால்.. மப்பில தெருவில வாகனத்தில அடிபட்டே ஆளிண்ட உயிர்போயிடும். குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட மதுபான பாவனை உடலிற்கும், மனதிற்கும் பலவிதமான தீங்குகளை ஏற்படுத்தும். எத்தனை குடும்பங்கள் மதுபாவனை காரணமாக அழிந்துபோனது, அழிந்துபோகிது என்று சொல்லித்தெரிய தேவையில்லை.

எல்லாம் அளவோடு இருந்தால் நல்லது மச்சான்.... சோற்றைக் கூட மூன்று நேரமும் மூக்கு முட்ட நாலு கோப்பை சாப்பிட்டால், உடல் பருமனாகி நிறைய பிரச்சனைகள் வரும் போது மது எம்மாத்திரம்?

மது என்று பொதுவாக மேலே உள்ள கட்டுரை சொல்வது வாசகர்களுக்கு தவறான ஒரு தகவலை வழங்கும். உண்மையில் வைன் இல் தான் உடலுக்கு/ இதய நோய்/ மாரடைப்பு போன்றவற்றை குறைக்கும் சக்தி இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறன. அதிலும் சிவப்பு வைன் தான் அதிக நலனை தரக்கூடியது. ஏனைய வடிகட்டிய மது வகையான விஸ்கி, பிரண்டி, றம் உடலுக்கு நன்மை தரும் எந்த பதார்த்தமும் இல்லை, அதில் இருக்கும் அல்ககோலால் கிடைக்கும் போதையை தவிர.

சிவப்பு வைன் ஏன் இதய நோயை தடுக்கும்/ குறைக்கும் சக்தியை கொண்டிருக்கிறது என்றால் அதில் இருக்கும் ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants )ஆனா பதார்த்தங்கள் உடலில் எனும் இதய நோய்களுக்கு கரணமான LDL cholesterol (the Bad cholesterol) கொலஸ்ரோல் படிவை குறைத்தல், புற்று நோயை குறைத்தல் என்பவற்ரை செய்கிறது.

குறிப்பிட்ட ஒட்சியேற எதிரிகள் பழங்கள், மரக்கறிகளில் தாரளமாக இருக்கிறது. பழங்கள் மரக்கறிகளை தாரளமாக உண்பவர்களுக்கு வைன் குடிக்காவிட்டாலும் இதய நோய் தாக்கம் குறைவாக தான் இருக்கும்.

எனவே அரை குறை கட்டுரையை வாசித்து இருக்கும் இடம்பை கெடுத்துக்கொள்ள தேவையில்லை.

அளவுக்கதிக மது பவனை இதய நோயை மட்டுமல்ல புற்று நோய் ஏற்படும் வாய்ப்பையும் கூட்டும்.

http://www.healthcastle.com/alcoholandcancer.shtml

Is it true that drinking alcohol can lower my risk for heart disease?

There is evidence that drinking modest amounts of alcohol is associated with a lower risk for coronary heart disease in men, and perhaps women. For more details, read Red Wine - Health Benefits? However, drinking higher amounts of alcohol raises the risk of cancer along with risks for high blood pressure, stroke, heart disease, birth defects, inflammation of the pancreas, damage to the brain and heart, malnutrition, osteoporosis, accidents, violence and suicide. There are better ways to decrease your heart disease risk, including exercising, reaching and maintaining a healthy weight, lowering saturated fats and trans fats in your diet, controlling blood pressure and not smoking.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமியை அணுகினால் நல்லது அவர்தான் கள்ளுக்கடை விஞ்ஞானி :lol::(

அவரை காலைமை ஏழு மணிக்கு முன்னம் , அணுகவேணும் .

இது நடக்கிற காரியமா ? முனிவர். :):D:)

இரவு ஏழுமணியை காலைமை ஏழுமணியெண்டு சிறித்தம்பி மப்பிலை வாய்தவறி சொன்னதை இந்த இடத்திலை சுட்டிக்காட்ட விரும்புறன். :D

  • கருத்துக்கள உறவுகள்

:wub::D

பனங்கள்ளில் ஒரு வீதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும் தமிழ். ஊரில் யாரும் பணங்கள் குடிச்சு செத்ததாக புள்ளிவிபரம் இல்லை. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடிமக்களுக்காய்,

Palm wine also called Palm Toddy or simply Toddy is an alcoholic beverage created from the sap of various species of palm tree such as the Palmyra, and coconut palms.

எங்கட கள்ளின் பெயர்தான் wine எல்லாம் ஒண்டுதான் ...அண்ணையும் தம்பியும்..

""yeast which ferments the nectar in the flowers to up to 3.8% அல்கஹோல் "" நானும் இப்படித்தான் மதிச்சனான் , எண்டாலும் ஒருக்கா செக் பண்ணிப்போட்டனான் ...

ஊர் கள்ளும், எங்கட லைன் லகேர் உம் கிட்டத்தட்ட ஒண்டுதான்..ஒண்டு கொட்டிலில மற்றது பார் இல்ல,

  • கருத்துக்கள உறவுகள்

மதுபானத்தில் உள்ள அல்கோகல் மூளையை வெகுவாக பாதிக்கின்றது.

ஆனால் மது அருந்துபவர்களுக்கு கடின உடல்நோய் இருப்பதாக கூறிவிட முடியாது....... அவர்கள் மதுவை அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டாதவரை.

(moderate Drinkers ) இரு கிளாஸ் வைனை ஆண்களும் ஒரு கிளாஸ் வைனை பெண்களும் குடித்துவந்தால் இருதய சம்மந்தமான (குறிப்பாக இதய நரம்புகள் நாளங்கள் நாடிகள்) நோயகள் வர வாய்புகள் குறைவாக இருப்பதாக தெரிவிக்கின்றார்கள். ( ஆனாலும் ஆதாரபூர்வமாக இன்னமும் நிரூபிக்கபடவில்லை. வைன் இரத்தை மேலும் திரவமாக்கிறது அதனாலேயே இது சாத்தியமாகிறது என்று இன்னுமொரு சாரர் வாதிடுகின்றனர்)

மதுவை தொடர்ந்து அருந்துவதால் அதற்கு அடிமையாகும் சாத்தியங்கள் நிறையவே உள்ளன. உடம்பில் உள்ள சில செல்கள் மதுவுடன் சேர்ந்து இயங்க தொடங்கியவுடன். மது இல்லா உட்கொள்ளாத நேரத்தில் சோர்வடைகின்றன. ஆதலால் மதுவை உட்கொள்வது ஒரு சுறுசுறுப்பை உண்டாக்குவது போன்ற தோற்றப்பாட்டை நாளடைவில் உருவாக்கும்.

நாளாந்தம் மது அருந்துபவர்களுக்கு மூளையில் உள்ள சில இராசயனங்கள் (Chemicals) ளின் நிறுவை சீர்கேடாகுவதால் அதிகமாக மதுவை உட்கொள்வது ஒரு ஆரோக்கியத்தை உண்டாக்குவது போன்ற தோற்த்தை உருவாக்குகின்றது. ஆதாவது மூளையில் உள்ள இராசயனங்களான காம்மா அமினொபற்றிக் (gamma- aminobutyric ) குளுற்றாமீற் (glutamate ) நோறேப்பிறின் (norepinephrine ) டோபாமின் (dopamine ) செறோரின் (serotonin ) போன்றவை.

இதில் குறிப்பாக டோபாமின் செறோற்றின் போன்றவை சிற்றின்பத்தை மூளையில் தூண்டும் இராசயனங்கள் இவைபற்றி நீங்கள் ஏற்களவே படித்திருப்பீர்கள். இவைகளே மதுவையும் ஒரு மகிழ்சி கொடுக்கும் விடயமாக தூண்டி மதுவிற்கு அடிமையாக்குகின்றன.

மதுகுடிபழக்கத்தை துண்டும் இன்ன பிற காரணிகள். பரம்பரை பழக்கம். மனசோர்வு. வலிகளை கொடுக்கும் உணர்வுகள். நெருங்கிய நண்பர்கள் அல்லது கணவன் மனைவி. சுற்று சூழல்.

சிகப்பு வைனை தினமும் ஒரு கிளாஸ் குடிப்பதென்பது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக நன்மைகளை பயக்கின்றது. மார்பு புற்றுநோய் வருவது குழந்தை இல்லாமை போன்ற பல விடயங்களில் பயனளிப்தாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். காரணம் பெண்களின் உடலில் உள்ள எக்ஸ்ரோஜன் extrogen அளவின் நிறுவையை அது பேணிபாதுகாக்கின்றது என்று கூறுகின்றார்கள்

  • 1 month later...

:):huh:

பனங்கள்ளில் ஒரு வீதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும் தமிழ். ஊரில் யாரும் பணங்கள் குடிச்சு செத்ததாக புள்ளிவிபரம் இல்லை. :D

ஊரில எங்க அன்னை புள்ளி விபரங்கள்?

கள்ளுக்குடிச்ச்தால சாகாட்டிலும் கள்ளால காண உயிர் போயிருக்கு .

இல்லை கறுப்பி, அதிக அளவில் குடிப்பவர்களுக்குத்தான் இதய நோய் ஏற்படுவதில்லை.

கேள்வி : 285 மில்லி பீரில் 4.9 வீதம் அல்கொஹோல் இருந்தால் 286 மில்லி லீற்றரில் எத்தனை வீதம் இருக்கும். :)

பியரில 285ML beer ஏறக்குறைய 13ML மதுவம் இருக்கு.... அண்ணளவாக 11 கிராம் மதுவம்

ஒரு கிராம் மதுவத்தில் ஏழு கலோரிகள் உள்ளன.

மொத்தத்தில 285ML அந்தளவு பியரில அண்ணளவாக நூறு கலோரிகள் உள்ளன.

மற்ற கலோரிக்கள் போலல்லாமல் மதுவத்தில் இருக்கும் கலோரி உடம்பில் அதிகமாக தேங்கி நிப்பதில்லை.

இது லிவரின் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது. அதிகமான மதுப்பாவனை உங்கள் லிவரை அதாவது கல்லிரன் என்று நினைக்கிறன் பாதிக்கும்.

அத்தோடு மறை முகமாக உங்கள் உடற் பருமனையும் உயர்த்தும்...

அதுமாத்திரமில்லை மூலையில் மூலாதாரமான நிறோன்களை கொண்ரும்விடும்... இது உங்கள் நினைவாற்றலை குறைக்கும்.

எனக்கும் என்ர மூளையைப்பற்றி கவலையும் இல்லை... என்ர லிவரைப்பர்ரித்தான் யோசனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.