Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டில் இருந்து தனி தமிழ் நாட்டிற்கு போராடும் ஒருவன்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தமிழ்தேசிய உணர்வாளர்களுக்கு- இன்றைய தேவை சுயசார்புள்ள பொருளாதார கட்டமைப்பு,இனஉணர்வுள்ள சமுதாயமே!!

உலகின் பல தேசிய இனங்கள் தோல்வி அடைந்த வரலாற்றினை கூர்ந்து கவனித்தால் ஒடுக்கும் தேசிய இனங்கள் தமது எதிரியாக கருதும் தேசிய இனங்களை ஒடுக்கும் போது அவர்கள் முதலில் கைவைப்பது அந்த இனத்தின் வாழ்வாதரத்தில் தான் உதாரணம் நம் கண்முன்னே உள்ளது சிங்கள இனவாத அரசானது போரில் வெற்றி கொள்ளபட்டதாக தானே அறிவித்து கொண்டு அம்மக்களை

மாக்கள் போல் முட்கம்பி வேலிகளில் அடைத்துள்ளது மீள்குடியேற்றம் என்ற பெயரில் சிங்களவரை அந்த பகுதியில் குடியேற்றி குடும்பதிற்கு 2 ஏக்கர் நிலம் தோட்டம் அமைக்க 1 ஏக்கர் நிலம் என பங்கிட்டு கொடுக்கபோகிறார்களாம்..யார் வீட்டு நிலம் நம்முடைய உறவுகளுடையதல்லவா? நம் பாட்டன் முப்பாட்டன் வளமையாக வாழ்ந்த நிலமல்லவா? ஏகாதிபத்தியங்கள் எப்போதும் ஒரே மாதிரியே சிந்தித்து வருகின்றன.

ஒடுக்கும் தேசிய இனங்கள் எப்போதும் ஒடுக்கபடும் தேசிய இனங்களை

தம்மிடம் கையேந்தும் நிலையையே வைத்திருக்கின்றன.. இன்று ஈழதமிழர்களை அரசியல் தீர்வு.. உணவு ..மருத்துவம் என அனைத்திற்கும் சிங்களத்தினை நோக்கியே கையேந்த வைத்துள்ளன..

இதற்கு சற்றும் குறைவில்லாதது நாம் வாழும் ‘இந்தி’ தேசியம்.. இன்று அடிப்படை வாழ்வாதரமான விவசாயத்திற்கு காவிரிக்கு கன்னடனையும்,முல்லை பெரியாறுக்கு மலையாளியையும், மீன்பிடிக்கு சிங்களவனையும் நம்பி கையேந்தி நிற்குமாறு செய்துள்ளது.தேவை தீர்ந்துவிட்ட உடனே மனிதன் தன் அடுத்த கட்டத்தினை சிந்திக்க போகிறான்.. என திட்டமிட்டு செயல்படுகிறது..தனி தமிழ்நாடு பேசும் தோழர்கள் ஒன்றினை கவனத்தில் எடுக்கவேண்டியது அவசியம்..

இந்திய தேசம் நம்மை வஞ்சிக்கிறது அது அனைவரும் ஒத்து கொண்டதே! சரி இனி

நாம் தனி நாடு அடைந்தால் நாம் எப்படி வாழ போகிறோம்? காவிரி.முல்லைபெரியாறு பிரச்சனைக்கு ஐ.நா வந்து தலையிடுமா? அப்படியே தலையிட்டாலும் இந்தி தேசியத்தினை எதிர்த்து எந்த நாடும் நமக்கு ஆதரவாக வந்துவிடுமா? இப்போது ஈழதமிழர்களுக்கு ஐ.நா சபையில் நியாயம் கேட்ட நிலையில் நமக்கு என்ன கிடைத்தது என்ற புரிதல் வேண்டும்.

இன்றும் நாம் பருப்புக்கு மகாராஸ்டிரா.. கோதுமைக்கு பஞ்சாப்.. என அடுத்தவர் கையை நோக்கியே உள்ளோம்.. நம்முடைய இன்றைய தேவை குறைந்தபட்சம் தமிழக நதிகளையாவது ஒன்றிணைப்பது..நம்முடைய விவசாயிகளை தமிழக மக்களுடைய உணவு தேவையை உணர்ந்து அதற்கேற்ப பயிர் செய்ய அறிவுறுத்துவது ஆகியவைதான்.நம்முடைய உள்கட்டமைப்பு சரியாக இருந்தால் இந்திக்காரனிடமோ அல்லது வேறு யாரிடமோ நாம் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை .. எந்த தடை எவன் போட்டாலும் அது குறித்து கவலைபட போவதில்லை..அதற்கு ஈழ தமிழர்கள் நமக்கு முன்னோடிகள்..காலம் சென்ற

தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் திரு தமிழ்செல்வன்

அடிகளார் செகத் காஸ்பரோடு உரையாடியதை கவனியுங்கள்..

வன்னியில் நான் இருந்தபோது அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய மற்றொரு விஷயம் சந்திரிகா அம்மையாரின் ஐந்தாண்டு கால தொடர் யுத்தம் மற்றும் நீக்குப்போக்கில்லா பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பது. அப்போதைய அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன். “”எல்லாமே தலைவரின் தீர்க்கதரிசனம்தான் ஃபாதர். சந்திரிகா பாரிய யுத்தமொன்று தொடங்குவாரென்பதும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு அந்த யுத்தம் தொடருமென்பதும் தலைவருக்குத் தெரிந்திருந்தது. எங்களையெல்லாம் அழைத்து முதலில் அவர் கதைத்தது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விவ சாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் துல்லியமாகப் பட்டியலிட்டோம். பணப்பயிர் களை தடை செய்தோம். விதை நெல்கள் சேமித் தோம். இயற்கை உரங்களுக்குப் பழகினோம். பூச்சிக்கொல்லிகளை இயற்கையாக எதிர்கொள் ளும் வழிகளை கற்றறிந்து செயற்படுத்தினோம்… சொன்னால் நம்பமாட்டீர்கள் இவற்றையெல்லாம் நாங்கள் அதிகமாக அறிந்துகொண்டது உங்கட தொலைக்காட்சியின் “வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியைக் கேட்டுத்தான். அதோட 5 லட்சம் சனத்துக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகா அம்மையாரின் கொடுமை யான இரக்கமற்ற பொருளாதாரத் தடையினை எதிர்கொண்டு வெற்றி கண்டோம்” என்றார். நீண்ட யுத்த காலத்தில் பஞ்சம் பட்டினியிலிருந்து மக்களைக் காப்பதென்பது எளிதான விடயமே அல்ல. ஆனால் அதனை புலிகள் திறம்படச் செய்தார்களென்பது வியப்புத் தந்ததென்றால் நாம் பெரிதாகப் பாராட்டாத வயலும் வாழ்வும் நிகழ்ச்சி அவர்களுக்கு உதவியதென்பதை அவர்கள் வாயால் கேட்க சிலிர்ப்பாகத்தான் இருந்தது.

இது சாதாரணமானதல்ல நீண்டகால தொலைநோக்கு பார்வை அப்பார்வை தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு தேவை! வெறுமனே கொடிபிடிப்பதும். தாம் தூம் என்று மக்கள் முன்னே ஆர்பாட்டம் செய்வதும் தமிழ்தேசியத்திற்கு தீர்வினை தராது..

தமிழக தமிழர்களுக்கு இன உணர்வினை ஊட்டுதலும் இங்கு அவசியமாகிறது.. தமிழக தமிழருடைய இன உணர்வினை தடுப்பது.. புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு ..அவர்கள் வீசும் எலும்பு துண்டுகளுக்கு..தமது சூடு சொரணை.. மனைவி..மக்கள் மற்றும் தமிழக தமிழர்களாகிய நம்மையும் விற்கும் திராவிட கட்சி கும்பல்களும் அவர்தம் தொல்லைகாட்சிகளும்தான்..தமிழனை சிந்திக்க விடாமல் மானாட மார்பாட,குத்தாட்டம்.பார்ப்பவர்களாகவும்..ரசிகர்களாகவும், பெண்களை சீரியல் பார்க்கும் அழு மூஞ்சிகளாகவும் வைத்திருக்கிறார்கள்..மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டால் இவர்கள் வாழ்வு அவ்வளவுதான் என இவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது..நன்றாக திட்டமிட்டே செய்கிறார்கள்..தமிழர் அவலங்களை காட்ட மறுக்கிறார்கள்..எவன் செத்தால் எனக்கென்ன என்ற மனப்பான்மையை வளர்க்கிறார்கள்..இங்கு கன்னடர்களிடம் நாம் கற்க வேண்டிய பாடம் ஒன்று உண்டு கன்னட பிரச்சனை எதுவாக இருந்தாலும் அவர்கள் முதலில் தடை செய்வது இவ்வாறான நிகழ்ச்சிகளையும் பிற மொழி குறிப்பாக தமிழ் சேனல்களையும்தான்.. தமிழ்தேசிய உணர்வாளர்கள் முதலில் இவ்வாறான மாயையில் இருந்து தமிழர்களை மீட்டு எடுப்பதே ஆகும். மீட்டு எடுத்தால் நீங்கள் தனியாக இன உணர்வினை ஊட்ட வேண்டிய அவசியம் கூட இருக்காது.அது தானாகவே வந்து சேரும்.. தமிழுணர்வை தக்க வைப்பதும்..எதிர்கால சந்ததியினாரான நம் குழந்தைகளுக்கு ஊட்டுவதும் நமது கடமையே ஆகும்..தமிழன் தனியாக சென்றுவிட்டால் நாம் நம் அடிப்படை தேவைகளுக்காக சோற்றுக்காக பருப்புக்காக முட்டைக்காக ..வேறு ஒருவனிடம் கையேந்த நேரிடும். அவன் இளித்தவாயன் தமிழனை போன்று இருக்கமாட்டான் என தொலை நோக்கு பார்வையுடன் இந்தி தேசியத்தில் தனி அடையாளம் எதுவும் இன்றி..ஒட்டுண்ணிகளாக ..தமிழனை காட்டிகொடுப்பதிலும்.. காவு வாங்குவதிலும் ..டெல்லி சவுத்பிளாக் முதல் ஐ.நா சபை வரை முதன்மையாக .. மனிதம் எதுவும் இன்றி திரியும் மலையாளி கும்பல்கள் தமிழனின் தனித்துவத்தை கண்டு மனம் கொள்ளாமல் ஒக்கேனக்கல்..காவிரி என திரியும் கன்னட கும்பல்கள் இவற்றிக்கு இடையே தமிழினம் போராட வேண்டி உள்ளது. இதற்கு ஒர் வழி முறை இன உணர்வை ஊட்டுதலாகும் இனவுணர்வை எக்காரணம் கொண்டும் விடகூடாது என நம் பிள்ளைகளுக்கு ஊட்டுவதாகும்..ஒரு தமிழ் பெண்மணியான நவநீதம்பிள்ளையின் குரல் மலையாளியான நம்பியாரின் குரலுக்கு முன் அடங்கி போனதை நாம் நினைவு கூர வேண்டும்.. சர்வதேச அமைப்புகளில் பங்கு பெறுமளவிற்கு தங்கள் பிள்ளைகளை கல்வி அறிவோடு ஊட்டி வளர்ப்பது அவசியம்..என்னை கேட்டால் இந்த இழவு பிடித்த இந்தி தேசியமே தேவை இல்லை ..தமிழன் சூடு சொரணையோடு வாழ தனிதமிழ்நாடே தீர்வு! நானும் என்னால் முடிந்த அளவு பிரச்சாரத்தினை ஆரம்பித்துவிட்டேன்..

வீர தமிழினத்திற்கு தலாய்லாமா போன்று இன்னும் 50,60 வருடங்கள் போராடவேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கருத்தாகும் ..நமக்கு அறிவியல் ,ரசாயன..அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது.. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால்.. என்று திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே நாமும் நமது பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுவோம்.. எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ...உங்கள் பதிர்வுக்கு நன்றி.

வணக்கம் வாருங்கள், நல்வரவு.

+++

மேலே நீங்கள் பகிர்ந்த கருத்து ஏற்கனவே ஜூலை மாதம் நான்கு இடங்களில் பகிரப்பட்டு இருக்கிது.

http://www.google.ca/#hl=en&q=%22%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%22&meta=&aq=f&oq=%22%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%22&fp=ca7bc37eb6518610

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள், நல்வரவு.

+++

மேலே நீங்கள் பகிர்ந்த கருத்து ஏற்கனவே ஜூலை மாதம் நான்கு இடங்களில் பகிரப்பட்டு இருக்கிது.

http://www.google.ca/#hl=en&q=%22%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%22&meta=&aq=f&oq=%22%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%22&fp=ca7bc37eb6518610

யாழ் கருத்துகள உறவுகளுக்கு வணக்கம்..ஈழ விடுதலையோடு தமிழக விடுதலையும் அடைய துடிக்கும் ஒருவன்.. தோழர் மச்சான் யாழ் கள விதிமுறைகள் தெரியவில்லை அது என்னுடைய தளம் தான்.. http://siruthai.wordpress.com

நன்றி தொடர்ந்து உரையாடுவோம்.. விவாதத்தில் எப்போது களந்து கொள்ளலாம் என்பதை அறிய தரவும்

  • கருத்துக்கள உறவுகள்

vanakkam.gif

வணக்கம், புரட்சிகர தமிழ்தேசியன். உங்களை யாழ்களம் இன்முகத்துடன் வரவேற்கின்றது.

நீங்கள் இதுவரை இரண்டு பதிவுகளே பதிந்துள்ளீர்கள். மேலும் சில பதிவுகளை அரிச்சுவடி பகுதியில் பதியுங்கள்.

அதன் பின்பு உங்களுக்கு விவாதத்தில் கலந்து கொள்ளவும் , மற்றைய பகுதிகளில் எழுதுவதற்கும் நிர்வாகத்தினரால் அனுமதி வழங்கப்படும்.

Edited by தமிழ் சிறி

வணக்கம் புரட்சிகர தமிழ்தேசியன் வாருங்கள்.

வணக்கம் புரட்சிகர தமிழ்தேசியன் வாங்கோ! :(

ஆரம்பமே அசத்தல்.ஒடுக்கப்படுபவர் அனைவரும் சுதந்திர தாகம் தீர அடக்குமுறையை வேட்டை ஆட வேண்டும்.

ஊங்களுக்கு வாழ்துக்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் புரட்சிகர தமிழ்த்தேசியன்.தங்கள் வரவு நல்வரவாகுக.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரட்சிகர தமிழ்தேசியன் அவர்களுக்கு தனி தமிழ் நாடு பற்றி நாம் பெரிதாக கவலை பட தேவை இல்லை....

இப்பொழுது தான் இங்கே தமிழ் நாட்டை இரண்டாக பிரிப்பது பற்றி பேசுகிறார்கள் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்தால் ஆளுக்கு ஒரு பகுதியாக பிரித்து எடுத்து கொண்டு போய் விடுவார்கள்....

நம் மக்களுக்கும் அதை பற்றி எல்லாம் கவலை இல்லை நமக்கு தான் இலவச வண்ண தொலைக்கட்சி பெட்டி இருக்கிரதே அது போதும் மானாட மயிலாட பார்த்துக் கொண்டு இருக்கலாம்... அய்யா 1 ருபாய்க்கு அரிசி தருகிறார் இன்னும் வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவார் அவர்களும் நமக்கு அள்ளி அள்ளி வழங்குவார்கள் வேறு என்ன கவலை உங்களுக்கு ஒ காவிரி, முல்லை பெரியாறு, கிருஸ்ணா நதி நீர் பிரச்சினயா அதை பற்றியும் கவலை வேண்டம்....இப்பொழுது நமது காடுகளை நாமே அழித்துக்கொண்டு இருக்கிறோம் அதனால் இந்த நதிகளும் வற்றி விடும்.....

நீங்களும் நானும் வேண்டுமானால் இந்த யாழ் தளத்தில் எழுதலாம் ஆனால் கொஞ்சம் யோசியுங்கள் Qஊஆற்Tஏற்க்கும் கோழி பிரியாணிக்கும் ஓட்டுப் போடும் நம் மக்களை இணைத்து போராடுவது என்பது சாத்தியமா என்று?

ஈழத்தமிழர்களெ உங்களுக்கே புரிய வேண்டாமா இங்கே மத்திய அரசுக்கு கை கட்டி வேலை பர்க்கும் எங்கள் தமிழக அரசியல் வாதிகளிடம் இருந்து உதவி எதிர் பார்க்கிறிர்களா???

வேண்டுமானால் சொல்லுங்கள் உங்களுக்கும் எங்கள் அய்யா இலவச வண்ண தொலைக்கட்சி பெட்டி அனுப்பி வைப்பார்... அதை தானே இங்கே உள்ள அகதிகளுக்கு கொடுத்தார் (அவர்கள் கேட்டது என்னவே வாழ வழி செய்யுங்கள் என்று தான்)..

அடுத்து விவசாயம் பற்றி எழுதுகிறேன் மரபணு மாற்றப் பட்ட விதைகள் வெளி வருகின்றன இந்த விதைகளை பரிசோதிக்கும் களமாக தான் நமது தமிழகம் உள்ளது. இன்றய நிலையில் உள்ள விவசயத்தை இயற்கை முறை விவசாயத்துக்கு எப்படி கொண்டு வருவது?

இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்தால் நிச்சயம் நம்மால் தனி தமிழகதுக்கான போராட்டத்தை துவக்கமுடியும்....

தமிழ்நாட்டில் இருந்து தனி தமிழ் நாட்டிற்கு போராடும் மற்றோருவன்......

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகர தமிழ்தேசியன் உங்கள் கருத்துக்கு நன்றி.தமிழ் நாட்டு மக்கள் போராடுவார்கள் என நான் நினைக்கவில்லை. நீங்கள் கல்லில் நாருரிக்க ஆசைப்படுகிறீர்கள் போல உள்ளது.வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் போராட தயாராக தான் உள்ளோம் ஆனால் எங்களை வழி நடத்த ஒரு பிரபாகரன் இல்லை....

தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தமிழ் மக்களின் கருத்துக்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளவும்.....

எங்கள் இன உணர்வுகளை வெளிப்படுத்த இங்கு (தமிழகத்தில்) எந்த அரசியல் கட்சியும் இல்லை அரசியல் தலைவர்களும் இல்லை என்பதே உண்மை...

:D வணக்கம் சகோதரம் வாங்கோ வாங்கோ .....மற்றது உதெல்லாம் டமில் நாட்டில சரி வராது வேணுமெண்டா உந்த மானாட மயிலாட வேணுமெண்டா க....ளு போ..லோடை நானும் கு சா வும் ஆடுறது போல ஒரு புறொகிறாம் செய்யலாம் .......

சரி அப்ப நான் வாறனப்பு

Edited by sinnappu

சாதி, கட்சி என்பவற்றை ஒழிக்க பாடுபடுங்கள் தனித்தமிழ்நாடு தானாக மலரும்

வணக்கம் சகோதரனே

உங்கள் எழுத்துக்களை வேறோரு கருத்துக்களத்தில் பார்த்து வியந்தேன்.

பல அறியாத விடயங்களை அழகு தமிழிலே தொகுத்து எழுதுகிறீர்கள்.

அது போல யாழ்களத்திலும் உங்கள் காத்திரமான பதிவுகளைக் காண ஆவல்.

  • 2 weeks later...

வணக்கம், நான் புதிய உறுப்பினர். நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன். ஈழ சகோதரர்கள் பேசும் தமிழ் அருமையாக உள்ளது. தமிழ் நாட்டில் பேச்சு தமிழ் அழிந்து போகிறது. உறுப்பினர்கள் அனைவரும் ஈழத்தில் வசிக்கிறீர்களா! செய்தி தாள்களில் ஈழ செய்திகளை படிக்கும் பொது மனம் சொல்லொண்ணா துயர் அடைகிறது . ஈழ செய்திகளை நான் படிப்பதை நிறுத்தி விட்டேன் . தயவு செய்து தமிழ் நாட்டையும், இந்தியாவையும் நம்பாதீர்கள்.

தமிழ் நாட்டில் உங்கள் வசனங்களை புரிந்துகொள்ளவே பலகாலம் எடுக்கும். எப்போதோ புரட்சி வெடித்திருக்கவேண்டும். எதுவாகவிருந்தாலும் யாழ் களத்திற்கு நீங்கள் வருவதிதிருப்பது மகிழ்ச்சி.

போராடவேண்டும் என்பதல்ல அங்கு நடக்கும் பிரச்சனைகளை புரிந்துகொள்ளவே கஸ்ரப்படுகிறார்கள். ஈழத்திலும்கூடத்தான்.

Edited by naaddan

தயவு செய்து தமிழ் நாட்டையும், இந்தியாவையும் நம்பாதீர்கள்.

அந்த தவறை எப்பவோ நிறுத்தி விட்டோமே.............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள், நல்வரவு.

  • 4 weeks later...

வணக்கம் தமிழ் தேசியன்.

ஒருவன் பலர் ஆவது எப்ப?

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் பலர் ஆவது எப்ப?

பால்'போல்' கேள்வி. சிறு பொறி, நெருப்பாக காலம் அவ்வளவெடுக்காது. :rolleyes:

வணக்கம் வாருங்கள், நல்வரவு

வாங்கோ மருமகன் புரட்சிகர தமிழ்தேசியன்!

இங்குள்ளவை பெரும்பாலானோர் தங்களையும் அப்படித்தான் சொல்லினம்.

Edited by பெரியமாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.