Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"போலிமாயைக்குள் புலம்பெயர் சமூகம்" "அழிந்துபோகும் அவலநிலையில்" தமிழீழம்......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வட்டுக்கோட்டை வாக்குபதிவால் எமது போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிப்பது, ஜ.நா தமிழீழத்தை அங்கீகரிப்பது, இந்தியா, ஜநா போன்றவை அமைதிப் படையை அனுப்புவது போன்ற இன்ன பிற விடயங்கள் இப்போது தமிழக அரசியலிலும், உலக அரங்கிலும், எமது புலம்பெயர் தலைவர்களாலும் தமிழக வீரப் பேச்சுத் தலைவர்களாலும் பேசப்படும் விடயங்களாக இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் மீறி இந்திய அரசும் அதன் ஆளும் வர்க்கமும் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில், அதன் சட்டபூர்வமான உரிமையைக் கொண்டுள்ள அவர்களின் சம்மதமும் ஆலோசனையுமின்றி வளங்களை கொள்ளையிடுவதில் இறங்கியுள்ளது. இவற்றை தடுப்பதற்க்கு துணிவில்லாத தமிழனால் தமிழர்களுக்கு எப்படி மீட்சியைப் பெற்றுக்கொடுக்க முடியும்? தமிழ் ஊடகங்களூடக வெற்றறிக்கைகளும் வெறுவாய்ப்பேச்சுக்களும் விடிவு தராது என்பதை எப்போது தமிழினம் உணருமோ அன்று தான் தமிழினம் தனது சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியும்.".....?

இனி விடையத்துக்கு வருவோம்....

தமிழ்மக்களின் வளங்கள் வல்லரசுக்கு தாரை வார்க்கப்படுகிறது.

சூறையாடப்படும் தமிழீழவளங்கள்

சம்பூர் அனல் மின்னிலையம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, மன்னாரில் எண்ணை ஆய்வு, சேது சமுத்திர திட்டம், வன்னியில் விவசாய அபிவிருத்தி, என இவை அனைத்தும் எமது தாயகப்பகுதியில் நடைபெறும் விடயங்கள். இலங்கை அரசு தமிழ்மக்களின் வளமிக்க பிரதேசங்களை உயர்பாதுகாப்பு வலையமாகப் பிரகடனப்படுத்தி விட்டு மக்களை அங்கு மீள குடியேறவிடாது மிதிவெடி, கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை, பாதுகாப்பானதல்ல எனக் கூறுகிற அதேவேளே யாழ் மாவட்டத்தில் தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்திதுறை ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள் மீள அமைத்தல், மேலதிக இராணுவமுகாம்களை ஏற்படுத்துதல, மற்றும் பல வருடங்களாக வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவை யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரை விஸ்தரித்தல் என்பதுடன் இதற்காக ஒன்பது பிரதான ரயில் நிலையங்கள் உட்பட 34 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

மேலும் காங்கேசன்துறை துறைமுகம் மீள்கட்டுமான மற்றும் நிர்வாகப் பொறுப்பினை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. அதன் முதல் நகர்வாக, பலாலி விமான ஓடு பாதை புனரமைப்பிற்கு 117 மில்லியன் ரூபாய்களை இந்திய தூதுவராலயம் இலங்கைக்கு அண்மையில் வழங்கியுள்ளது.

சம்பூர்அனல்மின்னிலையம்

இலங்கையின் இரண்டாவது அனல் மின்நிலையம் திட்டம் 2002 இல் இந்திய அரசினால் முன் வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு உகந்த இடமாக திருகோணமலை மாவட்டத்தின் சீனக்குடா பிரதேசம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. சீனன்குடாவில் பிரிமா மாஆலை, மிட்சுபி சீமெந்து ஆலை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன அமைந்துள்ளதுடன் சீனன்குடா நகரங்கள் வர்த்தக ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் கேந்திர முக்கியத்தும் வாய்ந்தவையாகும்.

நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யவிருக்கும் அனல் மின்நிலையத்தின் புகைபோக்கி மிக உயரமாக அமையப்போவதால் இது சீனக்குடா விமானத்தளத்தில் விமானப்போக்குவரத்து தடையாக அமையலாம் என அரசு இவ்விடத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது, ஆனால் உண்மையில் சீனக்குடாவிற்கு தென் மேற்குப்பகுதியில் பெரும்பான்மையின மக்கள் செறிந்து வாழும் இடங்களான கந்தளாயும் அதையண்டிய பிரதேசங்களும் அமைந்துள்ளன. இவ் அனல் மின்நிலையத்தால் வெளியேற்றப்படும் கரி நிரம்பிய புகையும், மற்றும் ஏனைய நச்சுக்கழிவுகளின் மூலம் அச் சூழல் மாசமடையும் என்பதாலும் அங்குள்ள மக்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதனாலேயே இத் தெரிவு நிராகரிக்கப்பட்டு அதே மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பகுதியிலுள்ள சம்பூர் தெரிவு செய்யப்பட்டது.

இந்த அனல் மின் நிலையமானது 500 ஏக்கர் நிலப்பரப்பில் 500 மில்லியன் யு.எஸ் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளது. இரு கட்டங்களாக அமையவுள்ள இந்த திட்டத்துக்காக குறைந்தது 5 வேறுபட்ட உடன்படிக்கைகள் கைச்சாத்தாக உள்ளன. எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்ய முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.சுமார் 50 அனல் மின் நிலையங்களை அமைக்கக் கூடியளவு நிலத்தை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்திற்கும் த.வி.புலிகளுக்கும் இடையிலான போர் காரணமாக சம்பூர் பிரதேசத்தை சூழவுள்ள 30 கிராமங்களில் வாழ்ந்த 30,000 தமிழ் மக்கள் அப்பிரதேசத்தை விட்டு வெளியேறினர். சம்பூர், சேனையூர், கடற்கரைச்சேனை, சூடைக்குடா, கூனித்தீவு, பாட்டாளிபுரம் ஆகிய கிராமங்களை சிறிலங்கா அரசு அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்தது. இம் மக்கள் தற்போது மட்டக்களப்பு, கிளிவெட்டி, பட்டித்திடல், மற்றும் கட்டைப்பறிச்சான் பகுதிகளில் இடைத்தங்கல் முகாம்களில் பரந்து வாழ்கின்றனர். அகதி முகாம்களில் தங்கியிருக்கும் பிரதேச மக்களிடம் வேறு இடங்களுக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவிக்கும் கையொப்பங்களை அரசாங்கம் தந்திரமாக பெற்று வருகிறது.

இவ்வாறு இடம்பெயர்ந்து மக்கள் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அந்த பகுதியினை கையகப்படுத்திக் கொண்டுள்ளார். ஈச்சிலம்பற்று கிராம மக்களின் குடிமனைப் பிரதேசத்தில் இன்று இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த மக்களின் குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலம் காலமாக வாழ்ந்து வந்த 75ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வுரிமை மறுக்கப்பட்டு இரண்டு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள உப்புக்கேணி, சின்னக்குளம் ஆகிய இடவசதி குறைந்த தற்காலிக குடில்களில் குடியமர்த்தப்பட்டு உள்ளனர். இம்மக்கள் வேறு இடங்களில் வசிக்க வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை மாற்றீடாக வழங்கப்படவுள்ள பிரதேசங்கள் மிகவும் மோசமான பயனற்ற பிரதேசங்கள் என்பதையும் பரிந்துரைக்கப்பட்டுள்ள ரால்கீ மகாவலி கங்கை பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் நீரில் மூழ்கிவிடும் அபாயமுடையது என்பதையோ மற்றைய தென்பகுதியில் வறட்சி நிலைமை காணப்படுகின்றது என்பன போன்ற விடயங்களை திட்டமிட்டு புறந்தள்ளியுள்ளது.

திருகோணேஸ்வர ஆலயத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய பிரதேசம் சம்பூராகும். இரண்டாம் இராஜசிங்க மன்னனினால் கோணஸ்வரத்திற்கு பதிலாக தம்பலகாமத்தில் ஓர் கோயில் அமைக்கப்பட்டதாகவும், கோயிலுக்கு தொண்டாற்றும் பணிகள் சம்பூர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக டச்சு வரலாற்றுப்பதிவு குறிப்பிடுகிறது.

சம்பூர் ஓர் மிகச் சிறந்த விவசாய நிலம், மின்நிலையத்தை அமைப்பதற்கு பொருத்தமான இடம் அதுவல்ல, அந்தப் பிரதேச மக்களிடம் இது குறித்து எவ்வித கருத்தும் அறியப்படவில்லை. அக் கிராம மக்களை இந்த நிலைமை எந்தளவுக்கு பாதிக்கும் என்பது பற்றி எவரும் கவனத்தில் கொள்ளவில்லை. முதலில் அந்தப் பிரதேச மக்களிடம் கருத்துக்கள் அறியப்பட்டிருக்க வேண்டும், அவர்களுக்கு நியாயமான நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தையும், மீன்பிடியையும் தமது முக்கிய தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். தமிழ் மக்களின் பாரம்பரிய குடியிருப்பு பகுதியினுள் அமைக்கப்பட்டிருந்த 300 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு, 500 ஏக்கர் பகுதியில் 1000 மேகாவோல்ற் மின் உற்பத்தி செய்யும் அனல் மின்னிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையம் அமைக்கப்படுவதனால் சம்பூரை அண்டிய கொட்டியாரக்குடா பகுதியில் நிலக்கரியைச் சேமித்து வைக்கும் தளங்கள் உருவாக்கப்படும், இதனால் மேலும் சுமார் 500 ஏக்கர் குடியிருப்பு நிலங்கள் சுவீகரிக்கப்படும். இவ்வாறான மின் நிலையம் அமைக்கப்பட முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழல் கள ஆய்வுகள் மற்றும் இதர கள ஆய்வுகள் எதுவும் இது வரை மேற்கொள்ளப்பட வில்லை. இம் மின்னிலையத்தில் வெளியேற்றப்படும் நிலக்கரிதூசு, நச்சு வாயுக்களினாலும் சூழல் மாசடைவதுடன், வெளியேறும் கழிவுகள் கொட்டியாரக்குடா கடல் சுற்றாடலில் அமைந்திருக்கும் சேனையூர், கட்டைபறிச்சான், மூதூர் கடல்வளத்தை அழிக்கும் அபாயம் காணப்படுகிறது.

பொதுவாக இம்மின் நிலையங்களின் பயன்பாட்டு ஆயுட்காலம் ஏறத்தாழ அறுபது வருடங்களாகும். இதற்கு முன்னமே முதலீடு செய்யப்பட்ட பணத்தையும் அதன் மூலம் கிடைக்கவிருக்கும் இலாபத்தையும் கம்பனிகள் பெற்றுவிடும். சம்பூரில் முதலீடு செய்யும் இந்த நிறுவனம் உலக உற்பத்தியில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. இந்தியாவில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்வலு பிரச்சினைக்கு தீர்வு காணும் முக்கிய உபாயமாகவே பிராந்தியத்தின் பல நாடுகளுடன் கூட்டு மின்சக்தி திட்டங்களை அமுல்படுத்த இந்தியா முனைத்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடலினூடாக 200 மைல் தூர நிலக்கீழ்குழாய் வழியாக மின்சாரப் பரிமாற்றத் திட்டத்திற்கான அங்கீகாரத்தை இலங்கை அரசு வழங்கியுள்ளது. 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இத்திட்டத்துக்காக செலவாகும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த மின்சாரப் பரிமாற்றத்தின் கீழ் ஆயிரம் மெகாவாற் மின்சாரத்தை கொண்டு செல்லக் கூடிய நிலக்கீழ்குழாய் இணைப்பு ஏற்படுத்தப்பட விருக்கின்றது. ஆயிரம் மெகாவாற் என்பது இலங்கை மின்சார உற்பத்தியில் 40 சதவீதமாகும்.இந்தியா அதன் அண்டைய நாடுகளான நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடனும் உடன்படிக்கைகளைச் செய்து கொண்டுள்ளது.

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை இத்தொழிற்சாலை 1950 இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு இத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதற்கு இப்பகுதியில் காணப்படும் தரத்தில் மேம்பட்ட சுண்ணாம்புக்கற்களே காரணமாகும். இச்சுண்ணாம்புகற் படுக்கையானது நாட்டின் ஏனைய பகுதிகளை விட கனமானதாக உற்பத்திக்கு உகந்த இங்கு காணப்படுகிறது. காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள திறப்பதற்கு முன்னர் அது திறக்கப்படுவதால் சுற்று சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என யாழ் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தகுதியான நிபுணர்களின் உதவியுடன் இது குறித்து உடனடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அந் நிறுவனங்களின் கூட்டமைப்பு சூழல் மாசுபாடுதல,; கடல் அரிப்பு,சுண்ணாம்பு கற்பாறைகளுக்கு எதிர் காலத்தில் ஏற்படும் தட்டுப்பாடு, நிலத்தடி நீரின் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை ஆய்வின் போது பிரதான அம்சங்களாக கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

சீமெந்து உற்பத்திக்காக இந்தியா அல்லது பிறவெளிநாடு ஒன்றிற்கு சீமெந்து தொழிற்சாலை கையளிக்கப்பட உள்ள நிலையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. காங்கேசன் துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் பிறிதொரு நாடு ஒன்றிற்கு தொழிற்சாலையை கையளிப்பது மக்களின் மீள் குடியேற்றத்தையும் மிகவும் பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக யாழ் சிவில் வட்டரங்கள் தெரிவித்துள்ளன.

இத் தொழிற்சாலையின் திறப்புவிழாவில் உரையாற்றிய ஜி.ஜி. இனிமேல் தெற்கில் சிங்கள மக்கள் வீடு கட்டுவதாயிருந்தால் வடக்கில் தான் சிமெந்து வாங்க வேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட சிமெந்து இலங்கையின் சிமெந்துத் தேவையின் பெரும்பகுதியை உற்பத்தி செய்தது ஆனால் யாழ்ப்பாணத்தின் சூழல்மாசடைவது தொடர்பான எந்தவித கரிசனையும் இன்றி இது நிகழ்த்தப்பட்டது. சுமார் ஆறு சதுரமைல் நிலப்பரப்பளவை அப்போது சிமெந்து தொழிற்சாலை எடுத்துக் கொண்டதுடன் கீரிமலைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இருந்த போயிட்டி எனும் கிராமம் காணாமல்லாமல் போய் விட்டது. அத்துடன் மாவை கலட்டி என்ற கிராமத்தின் பெரும் பகுதியை இத்தொழிற்சாலை எடுத்துக் கொண்டது.

லங்கா சிமெந்து லிமிட்டட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இங்கு உற்பத்தி இரு மடங்காக அதிகரிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் இத்தொகுதியை பிரதிநிதிப்படுத்தியவர் செல்வநாயகம் என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும். இது இயங்கிய காலப்பகுதியில் சூழவுள்ள கிராமங்களான மாவட்டபுரம், கொல்லன்கழட்டி மற்றும் பன்னாலை ஆகிய கிராமங்களில் பயிர்களிலும் பனைமரங்களிலும் சீமெந்து தூசுப்படிவுகளைக் காணக்கூடியதாக இருந்தது. இத்தொழிற்சாலையின் முதற்பலியாக காங்கேசன்துறையில் இயங்கி வந்த மருத்துவமனை மூடப்பட்டு இந்த மருத்துவமனை தெல்லிப்பளைக்கு இடம்மாற்றப்பட்டது. மழைநீர் நேரடியாக நிலக்கீழ் ஊற்றுக்களில் கலக்காது இருப்பதற்கு இச்சுண்ணாம்புக்கற்கள் மிகவும் அவசியமாகும். இச்சமநிலையில் மாற்றம் ஏற்படும் போது கடல் நீர் உள்ளே நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் பெருமளவு காணப்படுகிறது.

ஏற்கனவே யாழ்ப்பாணத்திலுள்ள 30 வீதமான நிலக்கீழ் நீரூற்றுக்கள் வௌ;வேறு பட்ட காரணங்களால் சவர்தன்மையுடையதாக மாறிவிட்டது. அண்மையில் பெறப்பட்ட அறிக்கையொன்றின் படி 4500 ஹெக்டர் நிலப்பரப்பு சவர்தன்மையுடையதாகவும் விவசாயத்திற்குகந்ததல்லாத பிரதேசமாக மாறியுள்ளது. உள்நாட்டு சிமெந்து உற்பத்தியில் சிறந்த போட்டித்தன்மையை ஊக்குவிப்பதற்கும், உள்ளூரில் நிலவும் கடுமையான சிமெந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் உற்பத்தி மீள ஆரம்பிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மீண்டும் தொழிற்சாலையில் சீமெந்து உற்பத்திகள் ஆரம்பிக்கப்படுமானால் இலங்கையின் சீமெந்துத் தேவையில் 40வீதத்தினை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க உலகின் மிகப்பெரிய சிமெந்து உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான இந்திய பிர்லா கம்பனி காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையைப் பொறுப்பெடுத்துள்ளது. இந்த நிறுவனம் உலகிலுள்ள சிமெந்து உற்பத்தி நிறுவனங்களின் வரிசையில் 11வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்களில் தமிழ்நாடு கணிசமான பங்கை வகிக்கிறது. காங்கேசன்துறையில் இந்த நிறுவனம் தனது உற்பத்தியை ஆரம்பிக்கும் போது தற்போதிருக்கும் 40 வீத சிமெந்து உற்பத்தியை 80 வீதத்திற்கு அதிகரிக்கவுள்ளது. இதன் மூலம் தனது முதலீட்டின் உச்ச இலாபத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் சந்தையின் தேவை பூர்த்தி செய்யும் வகையில் இராட்சத உற்பத்தியில் ஈடுபடும் என்பதை மட்டும் உறுதியாக நம்பலாம்.

இதனால் யாழ்ப்பாணக் கரையோரங்களில் மீண்டும் சுண்ணாம்புக்கற்கள் பெருமளவில் அகழப்படும், இதனால் கரையோர நிலங்கள் கடலில் மூழ்குதல், சூழல் மாசடைவு, நஞ்சாகும் நிலக்கீழ் நீரூற்றுக்கள், உடல்நலம் பாதிக்கப்படும் மக்கள் என ஒரு பாலைவானத்தை யாழ்தீவகற்பம் எதிர்நோக்கவிருகிறது. அதேவேளை காங்கேசன்துறைமுக மீள்கட்டுமானப் பொறுப்பையும் நிர்வாகப் பொறுப்பினையும் இந்தியா பொறுப்பேற்கவிருக்கிறது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக பலாலி விமான ஓடு பாதையை சீரமைப்பிற்காக பல மில்லியன்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் உற்பத்தியாகும் சிமெந்தினை ஏ9 பாதை வழியாவோ அல்லது துறைமுகம் வழியாகவும் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதேவேளை சிமெந்து தொழிற்சாலையிற்கும் அனல் மின் நிலையத்திற்கு எரிபொருளை கொண்டுவருவதற்கு துறைமுகங்கள் அவசியமானதாகிறது. இந்நோக்கிற்கு வசதியாக காங்கேசன்துறைமுக நிர்வாகப் பொறுப்பினை இந்தியா பொறுப்பேற்கவுள்ளது.

சேது சமுத்திர திட்டம்:

தற்போதைய இலங்கைத்தீவு இந்திய தீபகற்பத்தில் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் எனவும் கடற்கோளினால் சில தாழ்வான பகுதிகள் அழிந்த காரணத்தால் இலங்கை தனித்தீவாக உருவெடுத்தாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் தூத்துக்குடியில் ஆரம்பித்து இராமேஸ்வரம், தனுஷ்கோடியினுடாக இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையிலான பிரதேசமே சேது சமுத்திரமாகும். இப்போதுள்ள நிலைமையில் மணல்திட்டுகள், பவளப்பாறைகள் மற்றும் சீற்றமான கடலடித்தளத்தையும் இப்பகுதி கொண்டுள்ளது. திட்டம் இதுதான் இப்பிரதேசத்தில் தற்போது கடலாழம் குறைவாக இருப்பதால் வணிக்கப்பல்கள் இலங்கையை சுற்றியே பயணம் செய்கின்றன. இக்கடல் பிரதேசத்தை ஆழமாக்கி சேதுக்கால்வாய் ஒன்றை அமைப்பதன் மூலம் 780 கி.மீ கப்பல் பிரயாண தூரத்தையும், 30 மணித்தியால பிரயாண நேரத்தையும் எரிபொருளையும் மீதப்படுத்த முடியும் என்பதே.

இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் தேசிய பொருளாதாரம் வளப்படுவதுடன் இந்தியாவின் கடற்படை மற்றும் கரையோர காவல் படையினரின் கண்காணிப்பை மேம்படுத்த வழிவகுக்கிறது. மன்னார் வளைகுடா என்பது சுமார் 10, 500 சதுரகிலோ மீற்றர் பரப்பளவாகும். இது மீன்வளம் மிக்க ஒரு பிரதேசமாகும். இந்த மீன்வளத்திற்கு அடிப்படையே இங்கே காணப்படும் பவளப்பாறைகள்தான். இப் பவளப்பாறைகளின் மீது விழும் சூரியஒளியைப் பயன்படுத்தி அங்கு வாழும் நுண்ணுயிர்கள் ஒளிச்சேர்க்கையை நிகழ்த்தி ஒட்சிசனை தயாரிக்கின்றன. இங்கு வாழும் பிராணிகள் உயிர்வாழ இது அத்தியாவசியமானதாகும். இங்கு 3,600 வகையான கடற்தாவரங்கள், உயிரினங்கள் மற்றும் 117 வகையான அரிய பவளப் பாறைகளும் காணப்படுகின்றன. இப்பகுதியில் காணப்படும் கடல்வாழ் உயிரினங்கள் உலக முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கு 441 வகையான மீன்கள் பிடிக்கப்படுகின்றன, இவற்றில் 100 வகை மீன்கள் அழகுக்கானவையாகும். மேலும் 5 வகையான கடலாமைகள் குறிப்பாக இவ்விடத்தில் மட்டுமே காணப்படுகின்றன.

இத்தனை வளமிக்க பிரதேசத்தினை ஆழப்படுத்தி வணிக்கப்பல் பிரயாணத்திற்கு பயன்படுத்துவது தனியே சுற்றுச்சூழலுக்கான அச்சுறுத்தல் மட்டுமல்லாது இது பராம்பரிய மீன்பிடித் தொழிற்றுறையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன்னார் வளைகுடாவில் கிராமங்கள் இத்தொழிலையே நம்பியுள்ளன. ஏற்கனவே இப்பகுதி மீனவர்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் குறைந்ததாக காணப்படுகிறது. வடக்கும் வடமேற்கு கரையோரப்பகுதி மக்கள் மீன்பிடித்தொழிலையே தமது வாழ்வாதாரமாக் கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தைச் சூழவுள்ள தீவுகள் கடலில் மூழ்கிவிடும் அபாயம் காணப்படுகிறது என (சேது சமுத்திர கால்வாய் செயற்திட்ட இந்திய அமைப்பு ) கூறியுள்ளது.

மண்ணியல் ஆய்வுகளின் படி யாழ்ப்பாணத் தீவகற்பமானது சுண்ணாம்பு படுக்கையின் மீது அமைந்திருப்பதாகவும், இப்பகுதி முழுவளர்ச்சியை எட்டாத சுண்ணாம்பு கற்பகுதியையும் கொண்டுள்ளது. இந்த சுண்ணாம்புகற் படுக்கையானது தீவைக்கடந்து இராமேஸ்வரம் வரை நீடிக்கின்றது. முற்காலத்தில் தூத்துக்குடியிற்கும் இலங்கையிற்கும் இடையில் கடல்பகுதி இருக்கவில்லை எனவும் இந்தியாவும் இலங்கையும் ஒரே அடித்தள பூமிப்படுக்கையில் அமைந்துள்ளன.

இந்நிலையில் இப்பிரதேசத்தில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் மூலம் யாழ்ப்பாணத்தீபகற்பத்தில் ஒருபகுதி நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் வாய்ப்புக் காணப்படுகிறது. யாழ்ப்பாணம் கடலின் மட்டத்தில் இருந்து சில அடிகளே உயரமாக இருப்பதால் இந்த கால்வாயை ஆழப்படுத்தும் போது கடல் கொந்தளிப்பு மற்றும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நிலக்கீழ் நீரின் தரம் மிகவும் குறைந்து வருவதாக பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ருNனுP நிபுணரான பேராசியர் ரணில் சேனநாயக்கவினால் நடாத்தப்பட்ட ஆய்வுகளின்படி சேது சமுத்திர திட்டம் பூர்த்தியடைந்தால் யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் அடியில் காணப்படும் நன்னீர் ஊற்றுக்களில் பாக்குநீரிணையில் காணப்படும் உப்பு நீர் கலப்பதற்கான வாய்ப்புக் காணப்படுகிறது.

சேதுசமுத்திரத்திட்டதின் மூலம் ஏற்படவிருக்கும் சூழலியல் பாதிப்புக்கள் பற்றிப் போதிய ஆய்வுகள் எதையும் இலங்கை அரசோ இந்தியா அரசோ இதுவரை நிகழ்த்தவில்லை. இது மட்டுமல்லாது இத்திட்டத்தின் விளைவாக யாழ்ப்பாணத்திற்கு மிக அருகில் உருவாகப் போகும் கால்வாயினால் அருகாமையிலுள்ள நிலப்பகுதியில் நீர்வளமும் கூடவே நிலக்கட்டுமானமும் சீர்குலையும் மிகப்பாரதுரமான விளைவையும் இதனால் பலத்த சேதமும் அழிவும் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. கால்வாயை ஆழப்படுத்துமுகமாக 32.5 மி.க.மீ மண் அகழப்படும். இதில் பெரும் பகுதி ஆழக்கடலில் கொட்டப்படவுள்ளது. கடலோர நிலத்தில் கொட்டப்படும் மண்ணும், நீரில் கொட்டப்படும் மண்ணும், கடல் நீரோட்டத்தின் காரணமாகவும், மணல் அரிப்பின் காரணமாகவும் இடம் பெயரும். இவ்வாறு இடம் பெயரும் பெருவாரியான மணற்கும்பங்கள் எப்பகுதியை நோக்கி நகரும் என்பதோ, கடல் கொந்தளிப்பினால் ஏற்படும் பேரனர்த்தங்களையும், மனித கணிப்பீட்டுக்குள் அடங்காத இயற்கை சமநிலையின் பாதிப்பினால் ஏற்படவிருக்கும் எதிர்வுகூறமுடியாத நிலைமைகளையும் பற்றி யாரும் கருத்திற் கொண்டதாக தெரியவில்லை.

வங்காளவிரிகுடாவில் நீரோட்டங்கள் தொடர்பாக பார்க்கும் போது இருவகையான சுழல் நீரோட்டங்கள் காணப்படுகின்றன, எதிர் புயல் நீரோட்டம் ஆண்டின் அனேக மாதங்களிலும், வலிமையான புயல் நீரோட்டம் கார்த்திகை மாதத்திலும் வங்காள விரிகுடாவின் நீர் சுழற்சியின் குணாம்சமாக இருக்கின்றது. வைகாசி மாதத்திலும் 0.7,1.0 மீ என்ற விசைவேகத்தில் நீடிக்கிறது. (இந்த முக்கிய அம்சம் பற்றிய போதிய ஆய்வுகள் இல்லை). அது வளைகுடாவின் கிழக்காக ஓடும்போது மழைக்காலங்களுக்கு இடையிலான நீரோட்டமாகிறது.

தென்மேற்குப் பருவ மழையின்போது முழு வளைகுடாவிலும் உள்ள நீரோட்டம் பலவீனமானதாக இருக்கிறது.ஐப்பசி மாத்தில் பூமத்திய நீரோட்டம் வளைகுடாவின் கிழக்கில் நுழையும்போது புயல் சுழற்சி உருவாக்கப்படுகிறது. குளிர்கால கிழக்கிந்திய நீரோட்டம் ஆற்றல் மிகுந்த மேற்கு எல்லை நீரோட்டமாகும். அதன் விசைவேகம் 1.0 மீ. என்ற அளவுக்கு மேலாகவே எப்போதும் இருக்கும். மன்னார் வளைகுடாவிற்கும் பாக்குநீரிணையிற்கும் இடையில் பருவகால பெயர்ச்சி காற்று காலங்களின் போது (வடகீழ், தென்மேல் ) எவ்வாறான உயர்தாழ் அமுக்கம் மாற்றங்கள் என்பது பற்றியோ, இதற்கேற்ப ஏற்படவிருக்கும் சகதி படியும் விபரம் பற்றியோ எவரும் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை.

இந்தக் கடல்பகுதியின் பவள பாறைகளும், சகதி இடம்பெயர்வதும் நிலத்தின் நிலைத்த தன்மைக்கு அடிப்படையானவையாகும். கால்வாய் அகழ்வினால் எழும் சகதிப் படிவு என்ன திசையில், எத்தனை தூரத்திற்கு நகரும், பவளபாறைகள் மீது என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பன போன்ற விபரங்கள் எதுவும் மன்னாரையும் அதனை சூழவுள்ள மக்களுக்கோ தெரியாது. கடலை அகழும் போது எடுக்கப்படும் மண்ணின் அளவு 32.5 மில்லியன் கனமீற்றர்கள் எனக்கணிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதியை ஆழக்கடலில் கொட்டப்படவுள்ளது. இது கடலடி உயிரினங்களைப்; பாதிக்கும். இங்கே உள்ள கடலடி உயிரினங்கள், குறிப்பாக நுண்ணுயிர்கள்தான் கடல் உயிரினங்களின் அடிப்படையாகும். இந்த உயிரினங்கள் அழிய நேர்ந்தால் அது ஒட்டுமொத்த கடலுயிர்களின் உயிர் சுழற்சியிலும் சரிவைக் கொண்டுவரும். கடலோர நிலத்தில் கொட்டப்படும் மண்ணும், நீரில் கொட்டப்படும் மண்ணும் கடல் நீரோட்டத்தின் காரணமாகவும் மண்அரிப்பின் காரணமாகவும் அவை இடம் பெயரும். அப்படியானானல் அவை எங்கே செல்லப்போகின்றன, கொட்டப்படும் மண் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பவை போன்றன எமக்கு தெரியாது.

மன்னாரும் எண்ணை வளமும்

மன்னார் வளைகுடா என்பது இந்தியப்பெருங்கடலில் இலட்சத்தீவுக்கடலின் பகுதியில் அமைந்துள்ள ஒர் குடாவாகும். இது இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்கு கரைக்கும் இடையில் 100 முதல் 125 மைலிற்கும் இடைப்பட்ட அகல இடத்தில் அமைந்துள்ளது. மன்னார் வளைகுடாவை அண்மித்து அமைந்திருப்பது காவேரி படுக்கை எனப்படும் பாரிய எண்ணை படுக்கையாகும்.இப்படுக்கையானது தமிழ்நாட்டில் 65 வீதம் அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியே தெற்கே மன்னார் பிரதேசத்தில் 35 வீதம் அமைந்துள்ளது. 1956 ஆம் ஆண்டு காவிரிப்படுக்கையில் எண்ணெய் வளம் இருப்பதை சோவியத் நிபுணர்கள் ஊர்ஜிதப் படுத்தியிருந்தனர். 1960களின் ஆரம்பகாலத்தில் இலங்கையும் மன்னார் பகுதியில் அகழ்வாய்ப்புப்பணிகளில் ஈடுபட்டது. இதன் விளைவாக 1980 ஆண்டின் நடுப்பகுதியில் இங்கு எண்ணெய் வளம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மன்னார் எண்ணெய்ப்படுக்கையானது மொத்தமாக ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இதில் இரு பகுதிகள் சீனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் கடற்பரப்பிலிருந்து இருபது மைல் தொலைவில் சீன நிபுணர்கள் எண்ணெய் அகழும் பணிகளில் ஈடுபடுவார்கள். டீசவையiளெ ஊயசைn நுநெசபலயின் ஒரு பகுதி இலங்கையின் கடல்பகுதியில் எண்ணையை அகழ்வதற்கான ஆய்வினை இந்த ஆண்டு முடிவிற்குள் அல்லது 2010 ஆண்டு ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு ஊயசைn ஐனெயை கம்பனிக்கு எண்ணை மற்றும் வாயு வடிவிலான பெற்றோலியத்தைத் தேடும் பணியிற்கு அனுமதியை வழங்கியுள்ளது. இது மன்னார் கடற்பரப்பிலும் அதனையடுத்துள்ள வடமேற்கு கரையோரப்பகுதியிலும் மேற்கொள்ளப்படவுள்ளது. அகழ்வாய்வுகள் பன்னிரெண்டு மாதங்களுக்கு நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கிறது. இக்கம்பனிக்கு 340 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்டதும் 200‐800 மீற்றர் ஆழமான பிரதேசம் கிடைத்துள்ளது. பூகோள தகவல்களின் படி 1.0 பில்லியன் பீப்பாய் எண்ணை வளம் இலங்கையின் வடமேற்கு கரையோரப்பகுதியில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

எண்ணெய் அகழ்வு வெற்றியளிக்கும் பட்சத்தில் இலங்கையின் எரிபொருள் தேவை பூர்த்திசெய்யப்படல், வேலைவாய்ப்புக்கள் அதிகரித்தல், இலங்கையின் பொருளாதார முன்னேற்றம், பிரதேசத்தின் உள்கட்டுமான அபிவிருத்தி ஏற்படும் போன்ற முன்னேற்றகரமான விடயங்கள் வெளித்தோற்றத்தில் நன்மை பயப்பன போல காணப்பட்டாலும் எண்ணெய் அகழ்விற்குரிய தொழிநுட்ப, இயந்திர மற்றும் மூளைவளங்களுக்காக, தொழிநுட்பவியலாளர்கள், நிபுணர்கள், பிரத்தியேக தொழிலாளர்கள் என உதவிகளை நாட வேண்டியிருக்கும். இவற்றை ஈடுசெய்வதற்கு நிச்சயமாக தமிழ் நிபுணர்களோ, கல்வியாளர்களோ தெரிவு செய்யப்படப் போவதில்லை மாறாக பெரும்பான்மையின மற்றும் அந்நிய நிபுணர்களுக்குமே முதலிடம் வழங்கப்படும் இதன் மூலம் நாளடைவில் திட்டமிட்ட குடியேற்றம் என்ற வரைவிலக்கணத்திற்குள் அடங்காதவகையில் தமிழ்மக்களின் பிரதேசங்களை பெரும்பான்மை இனத்தவர் கையடக்கிக்கொள்வர்.

இலங்கையும், இந்தியாவும் பரந்தளவிலான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்யவுள்ளது. இது சீபா என அழைக்கப்படுகிறது. இந்த உடன்படிக்கை செய்யப்பட்டால் இந்திய டாக்டர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணிகள், தகவல்தொழில் நுட்பவியலாளர்கள் இலங்கைக்கு சென்று பணிபுரியலாம். அகழ்ந்தெடுக்கும் மசகெண்ணை மன்னார் பகுதியில் சேமித்து வைக்கப்படலாம் இதற்காக அப்பிரதேசமக்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர வேண்டியேற்படலாம்.

சுத்தரிகரிக்கப்படாத எண்ணையை பிரித்தெடுப்பதற்கான இரசாயன படிமுறையின் போது வெளியிடப்படும் வாயுக்களினால் ஏற்படவிருக்கும் சூழலியல் மாற்றங்கள், சூழல் மாசடைதல், என்பவற்றோடு இவற்றை சேமித்தல், களஞ்சியப்படுத்தல், மற்றும் மசகு எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணை போன்றவற்றை கப்பல் மூலம் எடுத்துச்செல்லும் போதும் ஏற்படும் சுற்றுச்சூழல் தொடர்பான அழிவுகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். கப்பல் போக்குவரத்தினால் ஏற்படும் சேதங்களினால் கடல் சூழற் சமநிலை பாதிக்கப்படுவதால் அங்கு வசிக்கும் உயிரினங்கள் மற்றும் மீன்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

மன்னார் வரட்சியான புவியியல் வலையமைப்பைக் கொண்ட பிரதேசமாகும். எண்ணை உற்பத்தியின் போது வெளியேற்றப்படும் கழிவுகள் வாயுமண்டல சமநிலையைப்பாதிப்பதால் இயற்கையாக மழையை தருவிக்க உதவிபுரியும் காடுகள் அழிவை எதிர்நோக்குகின்றன. பருவகாலமழையும், பயிர்ச்செய்கைக்கு கிடைக்கும் மழையிற்குமான தட்டுப்பாடு ஏற்படும்.

கடலில் எண்ணை அகழ்வினால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களின் பிரதான தொழில்வாய்ப்புக்கள் பாதிக்கப்படும். அத்துடன் எண்ணை அகழ்வின் தாக்கம் நிலம், நீர், காற்று என உயிர்வாழ்விற்கு அத்தியாவசியமான காரணிகளில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்துவதால் அப்பகுதியில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீர், காற்று மற்றும் பயிர்செய்கை நிலங்களையோ பெறமுடியாக பேரவலத்தை சந்திப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும்.

வன்னியில் பாதிக்கப்படவிருக்கும் விவசாயத்துறை வந்தாரை வாழவைக்கும் பூமி என்ற சிறப்பிக்கப்பட்ட பிரதேசம் வன்னி, 70களில் சுய உற்பத்தி பற்றி எண்ணம் கருக்கொண்ட காலம், வெளிக்கிடடி விசுவமடுவிற்கு போன்ற நாடகங்கள் பிரபல்யமாக பேசப்பட்ட காலம், யாழ்ப்பாணத்திலிருந்த தொடர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பை பெறாதவர்கள் இப்பகுதியில் தமது வாழ்வை அமைத்துக் கொண்டனர்.

யாழ்ப்பாணத்தின் மீதான இராணுவ நடவடிக்கைகளின் போதெல்லாம் மக்கள் இங்கு பாரியளவில் இடம் பெயர்ந்தனர், பல வருடங்களாக த.வி.பு கட்டுப்பாட்டுக்குள் இந்த பகுதி முன்னேற்றங்கள் எதையும் எந்தவொரு துறையிலும் பெறவில்லை. வன்னியில் விவசாய அபிவிருத்தி திட்டத்தின் முதல் கட்டமாக இந்தியாவிலிருந்து நிபுணர் குழுவொன்று விஜயம் செய்திருந்தது. இந்தியா இலங்கைக்கு நவீன தொழிநுட்பகருவிகள், விதை இரகங்கள், உரங்கள், பயிற்சி போன்றவற்றை வழங்கவுள்ளது. இது தவிர இந்தியா இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்காக சுமார் நான்கு கோடி

ரூபாய்களை வழங்கியுள்ளது.

இங்கு நாம் இந்தியாவின் விவாசாய அபிவிருத்தி திட்டங்களை சற்று நோக்குவோம். இந்தியாவின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு, பிரதேச வளங்கள் தொடர்பான அறிவையும் ஆற்றல்களையும் கொண்டிருந்த நீண்டகால விவசாயத்தின் மூலம் பெற்றுக் கொண்ட அநுபவ மற்றும் பிரதேசத்திற்கே உரித்தான அறிவு மூலம் சூழலுக்கும், பருவகாலத்திற்கும், நிலவள மற்றும் அமைப்புத்தன்மைகளுக்கு உகந்த வகையில் விதை இரகங்களை சேமித்து பாதுகாத்துவந்தனர். ஆனால் விவசாயிகளின் தொழில்முறை யுக்திகளை கருத்தில் கொள்ளாது பசுமைப்புரட்சி என்ற பெயரில் கலப்பினவகைப் பயிர்களும், வீரிய மிக்க விதை இரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இப்பயிர்ச்செய்கைக்கு அதிகளவு இரசாயனஉரங்கள், கிருமிநாசினி வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. நாற்றுக்கள் மற்றும் விதைகள் தொடர்பாக பின்பற்றப்பட்ட விதிமுறைகளை இல்லாதொழித்து, பல விதைகளின் உரிமையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. இவற்றின் விளைவாக ஆரம்பகாலத்தில் இராட்சத விளைச்சலை தருவதாக காணப்பட்டாலும் இது நீண்ட கால நோக்கில் நன்மைகளுக்கு பதிலாக பல தீமைகளையே உருவாக்கியது. இது மட்டுமல்லாது மீள உற்பத்தியில் ஈடுபடுத்த முடியாத வீரியமற்ற விதைகளையும் அறிமுகம் செய்துள்ளது. இது தவிர மரபணு மாற்றப்பட்ட புதிய இரக விதைகளை அறிமுகப்படுத்தும் விடயத்தில் பருத்தி விதைகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலன் எதையும் வழங்காததுடன் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குத்தள்ளியது.

இம்மாதிரியான ஒரு விவசாயக் கொள்கை எவ்வாறு நடைமுறையில் இருக்கிறது எனப் பார்ப்போம். நிறுவனங்கள் மக்களுக்கு விவசாயப்பணிகளில் ஈடுபடுவதற்கென கடனை வழங்கும். அத்துடன் மக்கள் அந்நிறுவனங்களிலேயே விதைகள் மற்றும் கிருமி நாசினி, பசளை மற்றும் சாகுபடிக்கு தேவையான பொருட்களை வாங்கவேண்டும். இதுதவிர ஏற்றுமதிக்கும் சந்தைக்கும் உகந்ததான பொருட்களின் உற்பத்தியில் மட்டுமே ஈடுபடும் படி மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவதால் மக்களின் நாளாந்த தேவையை பூர்த்தி செய்வதற்கான உணவுப்பொருட்களுக்காக மக்கள் இறக்குமதியில் தங்கியிருக்க வேண்டி ஏற்படுகிறது.

இந்தியாவின் ஊடுருவல்கள்:

உலகமயமாதல் என்ற பெயரில் நடைபெறும் சுரண்டலையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு நாட்டின் உணவுத் தேவைக்குரியவற்றை அந்த நாட்டை விட குறைந்தளவு உற்பத்தி செலவு ஏற்படும் இன்னுமொரு நாட்டில் உற்பத்தி செய்யும் பண்பு. இந்த சுரண்டல் ழுரவளழரசஉiபெ அல்லது தேசம் கடந்த உழைப்பு என அழைக்கப் படுகிறது. காலனியாதிக்கத்தின் போது வல்லரசுகள் அந்தந்த நாடுகளிலிருந்து அந்த நாடுகளை சுரண்டின ஆனால் இப்போது வளர்முக நாடுகளின் வளமிக்க பகுதிகளை பல ஆண்டுகளுக்கு குறைந்த விலையில் குத்தகைக்கு பெற்று தமது தேவைக்கும் சந்தைக்குரிய உணவுப் பொருட்களை குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்துகின்றன. இந்தியா தனது உணவு உற்பத்தி தேவைக்காக சூழவுள்ள பல தீவுகளைக் குறைந்த விலையில் குத்தகைக்கு எடுத்துள்ளது.

இது தவிர கனிம பொருட்கள் அதன் மூலமான உற்பத்திப்பொருட்கள் என்பவற்றுடன் இரும்பு, உருக்கு போன்றவை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கைக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 30 வீத பங்கை வகிக்கிறது. குவுயு வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பின் ஏற்றுமதியானது பூச்சியத்திலிருந்து 702 மில்லியன் டொலர்களாக 2006‐07 காலப்பகுதியில் அதிகரித்துள்ளது. இவைகள் தவிர இந்தியா இலங்கையிற்கு கார்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் பஞ்சையும் ஏற்றுமதி செய்துள்ளது.

மோட்டார் வாகன ஏற்றுமதியானது நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் தற்போதைய பெறுமதி 335 மில்லியன் டொலர்களாகும். குவுயு வர்த்தக ஒப்பந்ததிற்குப்பின் இரும்பு, உருக்கு ஏற்றுமதி நான்கு மடங்காகவும், மருந்துப்பொருட்களின் உற்பத்தி மூன்று மடங்காகவும் அதிகரித்துள்ளது. இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் 8.5 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

2007 இல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 280 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் எண்ணைக் கூட்டுத்தாபனத்திற்கு இலங்கையில் 250ற்கு மேலான விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.

இலங்கையில் நேரடியாக முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தைக் கொண்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு இந்தோ இலங்கை வர்த்தக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் வளர்ச்சிப்பணிக்கு இந்தியா வழங்கிய கடனில் ஆறில் ஒரு பகுதி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியிலும், திருகோணமலையிலும் இந்தியாவின் வர்த்தக வலயங்கள் அமைக்கப்பட இருப்பதாக, இந்த இரண்டு வர்த்தக வலயங்களிலும் இந்தியாவின் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அத்துடன், மீன்பிடி, விவசாயம், மற்றும் சுற்றாலாத்துறை போன்றவற்றில் இந்தியதலையீடு ஏற்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் 50 எரிபொருள் நிலையங்களை அமைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருகோணமலையிலுள்ள எண்ணைக் குதங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்தியா வைத்துள்ளது. திருகோணமலை துறைமுகத்தைச் சூழவுள்ள 679 சதுர கிலோ மீற்றர் பகுதி அவர்களுக்கான பிரத்தியேக பொருளாதார வலயமாக வழங்கப்பட்டது.

கிழக்கிலங்கையின் நிலாவெளி, புல்மோட்டை, வாழைச்சேனை மற்றும் கந்தளாய் சீனித்தொழிற்சாலை என்பனவும் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழர் தம் தாயகப்பிரதேசங்களில் காணப்படும் அனைத்து வளங்கள் தொடர்பான முடிவுகளை, பயன்பாடுகளை, நிர்வகித்தல் தொடர்பான சகல படிமுறைகளிலும் தமது கருத்துக்களை கூறவும் முடிவு செய்வதற்கான அதிகாரத்தையும் கொண்டுள்ளார்கள். இம் மக்களின் தாயகப்பகுதிகளில் பேரழிவினை ஏற்படுத்துவதற்கு சகல வழிகளிலும் உடந்தையாக இருந்தும், பிரதேசங்களுக்கும், வளங்களுக்கும் உரித்துடைய மக்களை அகதிமுகாம்களிலும், பரிசோதனைக்கான இடைத்தங்கல் முகாம்களிலும் அடைத்து வைத்துவிட்டு உற்பத்தி , முன்னேற்றம் என்ற பெயரில் தமிழ்மக்களின் வளங்கள் வல்லரசுக்கு தாரை வார்க்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18664&cat=1

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

போலிமாயைக்குள் புலம்பெயர் மக்கள் என்று சொன்ன கட்டுரையாளரை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் புலம்பெயர் மக்கள். தனித்தமிழீழத்தைப் பெற்றுத்தர போராட்ட வடிவத்தை மாற்றி அனைத்துலகெங்கும் வாக்களிப்பில் இயங்கும் புலத்துச் சமூகத்தை யார் இப்படிச் சொல்வது ? கொண்டு வாருங்கள் அந்தக்கட்டுரையாளரை நாங்கள் ஒரு வாங்கு வாங்குவமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தம் தாயகப்பிரதேசங்களில் காணப்படும் அனைத்து வளங்கள் தொடர்பான முடிவுகளை, பயன்பாடுகளை, நிர்வகித்தல் தொடர்பான சகல படிமுறைகளிலும் தமது கருத்துக்களை கூறவும் முடிவு செய்வதற்கான அதிகாரத்தையும் கொண்டுள்ளார்கள். இம் மக்களின் தாயகப்பகுதிகளில் பேரழிவினை ஏற்படுத்துவதற்கு சகல வழிகளிலும் உடந்தையாக இருந்தும், பிரதேசங்களுக்கும், வளங்களுக்கும் உரித்துடைய மக்களை அகதிமுகாம்களிலும், பரிசோதனைக்கான இடைத்தங்கல் முகாம்களிலும் அடைத்து வைத்துவிட்டு உற்பத்தி , முன்னேற்றம் என்ற பெயரில் தமிழ்மக்களின் வளங்கள் வல்லரசுக்கு தாரை வார்க்கப்படுகிறது.

வல்லரசுகள் கூடி நின்று தமிழனத்தை மட்டுமல்ல தமிழ் நிலத்தின் வளங்களையும் காவுகொள்கிறது என்ற உண்மையைத் தமிழினம் இன்னும் அறியாமலிருக்கிறது. கனவுகளில் வாழ்தல் அல்லது கனவுகாணுதல் சற்றுக்கால நிம்மதிகள் என்பதை யாவரும் புரிந்து கொள்ளல் வேண்டும். கட்டுரையை இணைத்த ஜீவா உங்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

விற்பவனுக்கும் அவசரம்

வாங்குபவனுக்கும் அவசரம்

ஏனெனில் தன்பொருளை அவன் விற்கவில்லை

அது விற்பவனின் பொருள் அல்ல என்பது வாங்குபவனுக்கும் தெரிந்துதான் இந்த அவசரம்

ஆனால் சொந்தக்காறன் மட்டும் தூக்கத்தில்

அல்லது

ஏதுமே செய்யமுடியாதநிலையில்

அப்படியல்ல

ஏதாவது முயற்சி செய்து உடனே இல்லாவிட்டாலும் பின்னராவது தடைப்படுத்தலாமே என எவராவது முயற்சி செய்தால்

இருக்கவே இருக்கிறது

வாயும் பேனாவும்

இவரைப்போல் போட்டுத்தாக்குவதற்கு.......

உருப்படுமா இந்த வைக்கப்பட்டறை இனம்.......????

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

இந்தக்கட்டுரையை எழுதியவரை நோகாமல் கட்டுரையில் உள்ள விடயங்களை உள்வாங்குங்கள். சிலநொடிக்கனவுகளைவிட இந்தக்கட்டுரையில் குறிப்பிட்ட விடயங்கள் எங்கள் இனத்தை நூற்றாண்டுகள் வரையிலுமான உண்மைகளை உடைத்திருக்கிறது. இன்னும் உணர்ச்சிமிகு கருத்துக்கள் தான் பயனென்றால் போட்டுத்தாக்குங்கள்.

வாய்மூடியிருந்ததன் பயனை நம்மினம் இப்போது அனுபவிப்பதை நீங்களும் பார்க்கிறீர்கள் தானே விசுகு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்படி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் உள்ள ஆபத்துகள் எவையும் குறைத்து மதிப்பிடக்கூடியவை அல்ல. இது தொடர்பில் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்ல முயற்சி. ஆனால் கட்டுரையில் தொடக்கத்தில் காணப்படும் வசனங்கள் அவசியமற்றவை, அர்த்தமற்றவை.

"வட்டுக்கோட்டை வாக்குபதிவால் எமது போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிப்பது, ஜ.நா தமிழீழத்தை அங்கீகரிப்பது, இந்தியா, ஜநா போன்றவை அமைதிப் படையை அனுப்புவது போன்ற இன்ன பிற விடயங்கள் இப்போது தமிழக அரசியலிலும், உலக அரங்கிலும், எமது புலம்பெயர் தலைவர்களாலும் தமிழக வீரப் பேச்சுத் தலைவர்களாலும் பேசப்படும் விடயங்களாக இருக்கின்றன"

வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான மீள்வாக்களிப்பை நடாத்துவதன் மூலம் எமது போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும், ஜ.நா தமிழீழத்தை அங்கீகரிக்கும் என எவரும் குறிப்பிடவில்லை. மக்களது உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தப்படும் என்பதே ஒரே நோக்கமாக இருக்கிறது. இத்தீர்மானத்தை முன்வைத்து வீரப்பேச்சுகள் நடாத்தியதாகவும் நான் அறியவில்லை. இத்தேர்தலை பிரான்சில் நடாத்திய இளையவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதனை தமிழ் நெற் (http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30840) தொகுத்து வெளியிட்டுள்ளது.

தமிழக அரசியல்வாதிகளால் வெளியிடப்படும் கருத்துகளையிட்டு நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர்களது கையாலாகாத்தனம் நன்கு வெளிப்பட்டுவிட்ட பின்னரும் அவர்களது வீராவேசப் பேச்சுகளை ஒரு பொருட்டாக நாம் ஏன் எடுக்க வேண்டும்?

மக்கள் தமது அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவது என்பது தவறு எனக்கருதுவது ஒரு சனநாயக விரோத நடவடிக்கை ஆகும். எடுத்ததுக்கெல்லாம் சனநாயகம் பற்றி பேசுவோர் இத்தகைய மக்கள மயப்பட்ட சனநாயக நடவடிக்கைகளை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

உண்மையைத் தமிழினம் இன்னும் அறியாமலிருக்கிறது. கனவுகளில் வாழ்தல் அல்லது கனவுகாணுதல் சற்றுக்கால நிம்மதிகள் என்பதை யாவரும் புரிந்து கொள்ளல் வேண்டும்.

அறியாமை, கனவுகளில் வாழ்தல், கனவுகாணுதல் வெளிப்படையாக விடயத்திற்கு வாருங்கள்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

வாய்மூடியிருந்ததன் பயனை நம்மினம் இப்போது அனுபவிப்பதை நீங்களும் பார்க்கிறீர்கள் தானே விசுகு.

அப்படியோ? என்ன நடந்தது? யார் வாய் மூடி இருந்தது? கனவில இருக்கிற ஒருத்தன் கேட்கிறன். நீங்கள் "நிஜவுலகில" நடத்துற ஆக்கள் தானே ஒருக்கா சொல்லுங்கோவன்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தின் வளங்கள் அன்றிலிருந்து இன்றுவரை சூரையாடப்பட்டே வருகின்றன. கட்டுரையில் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார் கட்டுரையாளர். இவ்வளவு விடயத்தையும் தெளிவாகக் கூறிய கட்டுரையாளர் சூரையாடப்பட்டுவரும் தமிழீழ வளங்களை மாற்றார் கைகளில் போகாமல் பாதுகாக்க நம்மவர்கள் ஏது செய்யலாம்? என்ற ஆலோசனையையும் வழங்கினால் அவை அவற்றை மீட்கும் நடவடிக்கைக்கு பெரியளவில் கைகொடுக்குமாகில் நடைமுறைப்படுத்தலாமே.

அடுத்து கட்டுரையில் இணைக்கப்பட்டிருக்கும் முதல்பந்தி இக்கட்டுரைக்கு அவசியமில்லை. அப்படியே அதை அவசியம் என்று கட்டுரையாளர் கருதினால் அவர் எழுதியிருக்கும் கட்டுரை வடிவத்திற்கும் ஆவன செய்யக்கூடிய தெளிவான வழிகாட்டலையும் இணைத்திருக்கவேண்டும்.

வணிகம் பேசினாலே மனிதம் பேசுவார்களா?

இன்னும் மயக்கம் கோர்த்து உருளும் உலகம்

ஊமையாய், செவிடாய், கூரிய பார்வையற்ற குருடாய்

விற்பனைக்கோ அடகு வைக்கவோ எதுவுமற்ற

எங்களைப் பார்க்கப் பஞ்சிப்படுகிறது.

இருக்கட்டும் இதுவும் பழகி விட்டது.

மீட்பின் தேடல் ஓயாதவரைக்கும்

நித்திய வாழ்விற்குள் விட்டொதுங்க முடியாது.

ஓசோவின் தத்துவம் போல் தொலைத்த இடத்தில்

தேடுவதற்கும் அனுமதியற்று அவலமுறினும்

உயிர்ப்பின் ஒலி மட்டும் உயர்வெய்தவே செய்கிறது.

முள்ளி வாய்க்காலின் ஓலங்கள் முகவரியற்றவையாகவும்,

வணிகம் பேசினாலே மனிதம் கணக்கெடுக்கப்படுவதாகியும்,

அன்பற்றுப் போய்க் கிடக்கிறது அகிலம்

வாய்மூடியிருந்ததன் பயனை நம்மினம் இப்போது அனுபவிப்பதை நீங்களும் பார்க்கிறீர்கள் தானே விசுகு.

எந்தக்காலப் பகுதியில் நாம் வாய் மூடி இருந்தோம் என்பதை கூறமுடியுமா?

Edited by kalaivani

முதலில், இந்தக் கட்டுரையுன் மூலம் globaltamilnews.net ஆகும். அதனை அப்படியே கொப்பி பண்ணி infotamil.ch தனது சொந்தச் சரக்காக வெளியிட்டுள்ளது.

கட்டுரை மிக அவசியமான விடயங்களை வெளிக்கொண்டு வருகின்றது. புல்மோட்டையில் எடுக்கப்படும் இல்மனைற்றில் இருந்து எம் மீன்வளம், கடல் வளம் என்பனவரை காலம்காலமாக எம்மிடம் இருந்து அபகரிக்கப்பட்டே வருகின்றன. அதிகாரம் மத்தியில் குவிக்கப்பட்டுள்ள, பெரும்பான்மை மக்களால் ஆளப்படுகின்ற ஒற்றையாட்சிக்குரிய இலங்கைப் பாராளுமன்றத்தினால் வகுக்கப்படும் நிதிக்கொள்கையின் மூலம் எமக்கு எம் வளங்களின் மூலம் பெறபடும் வருமானத்தில் ஒரு சதமும் எம்மிடம் எம் வளர்ச்சிகாக செலவிடப்படாமை எம் விடுதலைப் போராட்டத்தின் மூலக்காரணங்களில் ஒன்றாக என்றும் இருந்து வருகின்றது. ஆகக் குறைந்தது அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய சமஷ்டி அமைப்பு முறை போன்ற ஒன்றினால் மட்டுமே இத்கைய அபகரிப்பினை தடுக்க முடியும்.

அப்படியான ஒரு அதிகாரத்துடன் கூடிய அரசியலமைப்பைப் பெற, இன்றைய நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்த கட்டுரையாளர் கூறியிருக்கலாம். இல்லை, அது பற்றி கூறக்கூடிய அரசியலமைப்பு. போராட்டம் தொடபான தெளிவு அவருக்கு இல்லையெனில் நாடுகடந்த அரசு, வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு என்பனவற்றை வீண் வேலை என்று சொல்வதை தவிர்த்து இருக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்யாமல் வேண்டுமென்றே அந்த வரிகளை புகுத்தியமை என் இனம் முழுதும் விசமாய் பரவிக்கிடக்கும் குழுநிலை சார்ந்த, இயக்க அரசியல் சார்ந்த குறும் பார்வை கட்டுரையாளருக்கும் உள்ளது என்பதை உறுதியாக காட்டி நிற்கின்றது

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியோ? என்ன நடந்தது? யார் வாய் மூடி இருந்தது? கனவில இருக்கிற ஒருத்தன் கேட்கிறன். நீங்கள் "நிஜவுலகில" நடத்துற ஆக்கள் தானே ஒருக்கா சொல்லுங்கோவன்!

யஸ்ரின் ,

வாய்மூடியிருந்ததன் பயன் என நான் சொன்ன அர்த்தம். தேசத்தின் குரல் முதல் சிலரை வாய்மூட வைத்து ஒதுக்கியதன் முடிவுகளை. வேறு அர்த்தத்தில் இல்லை. களத்தின் முடிவுகள் தனிப்பட்ட சிலரின் முடிவுகளாகவும் ஆளாளுக்கு அனைத்துலகச் செயலகம் என்று கட்சிபிரித்து நின்றவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் யாவையும் தெரிந்தும் சத்தம் போடாமல் அவர்கள் பின்னின்ற நம் ஒவ்வொருவரின் தலையாட்டலும் முடிவுகளை மாற்றி 30வருடவிடுதலைப் போராட்டத்தை இன்று ஆளாளுக்கு அங்குமிங்கும் இழுபட வைத்ததையே கருதினேன்.

மற்றபடி நீங்கள் கனவில் இருக்கும் ஒருவர் நான் நிஜஉலகில் இருந்து உங்களை இழிவுபடுத்தும் நோக்கில் எழுதவில்லை.

முதலில், இந்தக் கட்டுரையுன் மூலம் globaltamilnews.net ஆகும். அதனை அப்படியே கொப்பி பண்ணி infotamil.ch தனது சொந்தச் சரக்காக வெளியிட்டுள்ளது.

கட்டுரை மிக அவசியமான விடயங்களை வெளிக்கொண்டு வருகின்றது. புல்மோட்டையில் எடுக்கப்படும் இல்மனைற்றில் இருந்து எம் மீன்வளம், கடல் வளம் என்பனவரை காலம்காலமாக எம்மிடம் இருந்து அபகரிக்கப்பட்டே வருகின்றன. அதிகாரம் மத்தியில் குவிக்கப்பட்டுள்ள, பெரும்பான்மை மக்களால் ஆளப்படுகின்ற ஒற்றையாட்சிக்குரிய இலங்கைப் பாராளுமன்றத்தினால் வகுக்கப்படும் நிதிக்கொள்கையின் மூலம் எமக்கு எம் வளங்களின் மூலம் பெறபடும் வருமானத்தில் ஒரு சதமும் எம்மிடம் எம் வளர்ச்சிகாக செலவிடப்படாமை எம் விடுதலைப் போராட்டத்தின் மூலக்காரணங்களில் ஒன்றாக என்றும் இருந்து வருகின்றது. ஆகக் குறைந்தது அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய சமஷ்டி அமைப்பு முறை போன்ற ஒன்றினால் மட்டுமே இத்கைய அபகரிப்பினை தடுக்க முடியும்.

அப்படியான ஒரு அதிகாரத்துடன் கூடிய அரசியலமைப்பைப் பெற, இன்றைய நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்த கட்டுரையாளர் கூறியிருக்கலாம். இல்லை, அது பற்றி கூறக்கூடிய அரசியலமைப்பு. போராட்டம் தொடபான தெளிவு அவருக்கு இல்லையெனில் நாடுகடந்த அரசு, வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு என்பனவற்றை வீண் வேலை என்று சொல்வதை தவிர்த்து இருக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்யாமல் வேண்டுமென்றே அந்த வரிகளை புகுத்தியமை என் இனம் முழுதும் விசமாய் பரவிக்கிடக்கும் குழுநிலை சார்ந்த, இயக்க அரசியல் சார்ந்த குறும் பார்வை கட்டுரையாளருக்கும் உள்ளது என்பதை உறுதியாக காட்டி நிற்கின்றது

நிழலி,

கட்டுரையாளர் எழுதிய விடயங்கள் நாம் கட்டாயம் அறிய வேண்டிய விடயம். ஆனால் கட்டுரையாளர் ஏன் வட்டுக்கோட்டையை இழுத்தார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

ஆகக்குறைந்த அதிகாரப்பரவலாக்கமாவது இப்போதைக்கு சாத்தியமானால் இத்தகைய நிலமைகள் குறைய வாய்ப்பு உண்டு.

குளோபல் தமிழ் நியூசில் வந்த இக்கட்டுரை போல செய்தியும் வெட்டு ஒட்டு செய்கிறார்கள் பலர். ஆனால் அந்த இணையத்துக்கு ஒருவரி நன்றியும் செலுத்தாமல்.

வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பான மீள்வாக்களிப்பை நடாத்துவதன் மூலம் எமது போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும், ஜ.நா தமிழீழத்தை அங்கீகரிக்கும் என எவரும் குறிப்பிடவில்லை. மக்களது உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தப்படும் என்பதே ஒரே நோக்கமாக இருக்கிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வழிமொழியும் அக்குழுவில் அங்கம் வகிக்கும் ஒருவர் சொல்கிறார் தமிழீழத்தை அங்கீகரிக்கும்படிஅனைத்துலகத்தை வேண்டும் ஒரு மறைமுகத் தேர்தலாம். இது எனக்கு மட்டும் சொல்லப்படவில்லை. மக்கள் கூடும் இடங்களில் சொல்லப்படுகிறது.

என் கருத்தை மறுத்துள்ள அல்லது புறக்கணித்துள்ள விசுகு அவர்களுக்கு,

கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்களை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். அதன் பின் புறக்கணிப்பை தாராளமாகச் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு முதலில் கட்டுரையை வாசியுங்கள். கட்டுரை எனதல்ல இணைத்ததும் நானல்ல. கட்டுரையில் தமிழின வளங்களும் கொள்ளையிடப்படும் கதைகளும் கட்டுரையாளரால் எழுதப்பட்டுள்ளது

தமிழர் போராட்டம் என்பது எனது வயதளவு

அதனுடன் சேர்ந்து வளர்ந்தவன் யான்

எனவே கட்டரையாளரின் சுட்டிக்காட்டல் நானறிவேன்

இவர் சொல்லித்தெரியுமளவு கிணற்றுத்தவளையல்ல.

ஆனால் நான் சொல்வது அவரின் ஆரம்பமே பிழை

அவர் எதையோ மட்டந்தட்டுவதற்காக தங்களைப்போல் இந்த வரலாற்றை எமக்கு மீட்டு தான் நினைத்ததை எம்மீது சுமத்த இந்த வரலாற்றை துணைக்கழைக்கின்றார் என்பது புலப்பட்ட பின் அவருக்கு மரியாதை பூச்சியமாகிறது

கட்டுரையின் நோக்கத்தில் தூய்மையில்லாதபோது.......

அதை மதிக்கவோ ஏன் வாசிக்கவோ வேண்டிய அவசியம் எனக்கில்லை

அதை மீளவும் வலியுறுத்தும் யோக்கியதையும் எவருக்குமில்லை

ஓம் நீங்களும் உங்கள் உறவுகளும் மறுத்துள்ளீர்கள். இப்பிடி மறுவுங்கோ புறக்கணியுங்கோ அது உங்கள் உரிமை. அதில் தலையிட எனக்கு உரிமையில்லை. உங்களுக்கு இக்களத்தில் கருத்துச் சொல்ல எந்தளவு உரிமையுள்ளதோ அதுயளவு எனக்கும் கருத்துக்களத்தில் கருத்துச் சொல்ல உரிமையுள்ளது. இதில் யாருக்கும் நான் உபதேசம் செய்யவில்லை.உங்களுக்குப் பாடம் நடத்த நான் வாத்தியாருமில்லை.ஆத்திரம் தங்களின் கண்களை மறைக்கிறது

புத்தியை கெடுக்கிறது விசுகு படியுங்கள் என்று எனக்கு எழுதியதை மறந்தது ஏனோ???

உண்மையான முகம் காட்ட நான் எனது முகத்தை பரிசுக்கு அனுப்பவா ? அல்லது நீங்கள் யேர்மனிக்கு வந்து பாக்கிறீங்களா ? எது வசதியென்பதை அறியத்தந்தால் முகத்தை உங்களுக்குக் காட்டலாம்

விசுகு இது கூட தங்களுக்கு விளங்கவில்லை என்று எழுத என் மனம் இடம்தரவில்லை. ஏல்லோரும் இணைந்து வேலை செய்யுங்கள் என்று கடவுளின் உத்தரவு

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

"வட்டுக்கோட்டை வாக்குபதிவால் எமது போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிப்பது, ஜ.நா தமிழீழத்தை அங்கீகரிப்பது, இந்தியா, ஜநா போன்றவை அமைதிப் படையை அனுப்புவது போன்ற இன்ன பிற விடயங்கள் இப்போது தமிழக அரசியலிலும், உலக அரங்கிலும், எமது புலம்பெயர் தலைவர்களாலும் தமிழக வீரப் பேச்சுத் தலைவர்களாலும் பேசப்படும் விடயங்களாக இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் மீறி இந்திய அரசும் அதன் ஆளும் வர்க்கமும் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில், அதன் சட்டபூர்வமான உரிமையைக் கொண்டுள்ள அவர்களின் சம்மதமும் ஆலோசனையுமின்றி வளங்களை கொள்ளையிடுவதில் இறங்கியுள்ளது. இவற்றை தடுப்பதற்க்கு துணிவில்லாத தமிழனால் தமிழர்களுக்கு எப்படி மீட்சியைப் பெற்றுக்கொடுக்க முடியும்? தமிழ் ஊடகங்களூடக வெற்றறிக்கைகளும் வெறுவாய்ப்பேச்சுக்களும் விடிவு தராது என்பதை எப்போது தமிழினம் உணருமோ அன்று தான் தமிழினம் தனது சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியும்."

இனி புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள் செய்யவேண்டியது என்ன?

இனி ஈழதமிழர்கள் இந்தியா நம் தந்தையர்நாடு பாட்டி நாடு கூறுவதை முதலில் நிறுத்தவேண்டும்..பகைநாடு என்று கூறுதல் வேண்டும்! தமிழ்நாடே நட்பு நாடென்றும் கொள்ளவேண்டும்.இவ்வளவுக்கும் காரணமான பொந்திய தேசத்தினை இனியும் இவ்வாறு கூற மானமுள்ள ஈழ தமிழன் முன்வரமாட்டான்.. தொப்புள் கொடி உறவு அவரை கொடி என்று சொல்வதை நிறுத்த வேண்டும் தன்மானமுள்ள ஒரு தலைவர் கூட இங்கே இல்லை..புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!இவர்களுக்கு தமிழனத்தை காப்பதெற்கேன்று தனிகொள்கை எதுவும் இல்லை!சொல்ல போனால் நாங்களே இங்கு அடிமைகளாக உள்ளோம்.. இந்தி தேசியத்தினை பொறுத்தவரை தன் தேசியத்தில் ஒற்றுமை பிறர் தேசியத்தில் வேற்றுமை இதுவே அது கடைபிடிப்பது!இன்று தமிழர்களுக்கு 4 மாநிலம் இலங்கையில் உருவாக்குவோம் என்று இந்தி தேசியத்தின் குரலாய் ஒலிக்கிறதே கோடாலிகாம்பு சிதம்பரத்தின் குரல் காரணம் என்ன?

யாழ்பாணத்தான் ,மட்டகிளப்பாண்,திரிகோணமலையான்,வவுனியான் என பிரித்து தமிழர்களுக்குள்ளேயே ஒருவனை ஒருவன் மோதவிடும் செயல்திட்டங்களே அவை! இவைகளை எப்படி முறியடிப்பது? புலிகள் வீழ்த்தபட்டுள்ள நிலையில் ஈழ அரசியல் தலைவர்கள் இங்கு முந்தி கொள்வது அவசியமாகிறது! ஈழ அரசியல் தலைவர்கள் ஈழத்திற்கான சுயநிர்ணய அடிப்படையுடன் கூடிய அரசியல் அமைப்பு சட்டத்தினை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.. புதிதாக வேறு ஏங்கும் தேட வேண்டாம் ஏற்கனவே உள்ள பிற நாட்டு அரசியல் அமைப்பை முன்மொழிய வேண்டும்..அப்போதுதான் அவர்களுடைய ஆதரவு கிடைக்கும்..! இப்போதைக்கு தேவை சுய நிர்ணய உரிமை! அதை உள்ளடக்கிய நாட்டு அரசியல் அமைப்பு சட்டம் எங்குள்ளது என தேடலாம் உதாரணம் கனடா. அங்கு க்யூபக் மாகாணத்தில் பிரெஞ்சு பேசும் மொழியினருக்காக தனி க்யுபக் நாடு வேண்டுமா என வாக்கெடுப்பு நடைபெற்றது..அதை உதாரணமாக கொள்ளலாம்.அதையும் விட முக்கியமானது..

புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் மீது எனக்கு சிறிய வருத்தம் உண்டு..சிங்களவன் அடிக்கும் போதோ அல்லது சந்தியா அதற்கு உதவும் போதுதான் தமிழ்நாடு என்றே நினைவுக்கு வருகிறது. சராசரியாக இங்குள்ள தமிழனின் வாழ்கையில் ஈழத்தவன் எதாவது ஒரு வகையில் சம்பந்தபட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமடைந்திருக்காது என்பது எனது கருத்து ஆகும். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் ஈழத்திற்காக நாங்கள் இங்கு போராட்டம் ஆர்பாட்டம் என்று செய்து கொண்டு இருக்கும் போது ஈழத்தவர் ஏன் எங்கள் பிரச்சனைக்களுக்கு போராட்டம் நடத்த கூடாது? உங்களை தனித்தனியாக இப்போது பிரிக்கும் ரோ அமைப்பானது.. ஏன் அதே போல தமிழக தமிழர்களான எங்களை கொண்டு அவர்களுக்கு பீதியை ஊட்ட கூடாது? அது யாருக்கு தலையிடியாக இருக்குமென்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை..

எதிரி என்று முடிவாகிவிட்டால் மாமனாவது மச்சானாவது.. இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஈழத்தை சந்தியா அங்கீகரிக்க போவதில்லை.. பிறகு ஏன் இன்னும் தொங்கி கொண்டிருக்கவேண்டும்.. எனவே இன்றே புலம்பெயர்ந்துவாழும் ஈழதமிழர்கள் தமிழகத்தினுடைய நேரடி அரசியலில் பங்கு கொள்ளுங்கள் ..தமிழகத்தினுடைய பிரச்சனைகளை உங்களுடைய பிரச்சனைகளோடு ஒர் மூலையில் சேர்த்து கொள்ளுங்கள்.. சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலியுங்கள்.. நாட்டை கொண்டு அல்ல. இனத்தின் பிரச்சனைகளாக முன்வையுங்கள்.. அப்போது யாருடைய முகமூடி சர்வதேச அரங்கில் கிழியும் என்பது தங்களுக்கு தெரியும் .. அத்தோடு இன்று தேவைபடுவது அறிவியல் ,ரசாயன..அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது.. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால்.. என்று திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே நாமும் நமது பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏல்லோரும் இணைந்து வேலை செய்யுங்கள் என்று கடவுளின் உத்தரவு

நன்றி

நன்றி வணக்கம் கடவுளே.

தமிழீழ தனியரசுக்கான தேர்தல்கள் குறித்து இந்தியா கவலை :

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் புலம் பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ தனியரசுக்கான தேர்தல்கள் குறித்து இந்தியா கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டதை விடவும் இந்த முனைப்புகள் பாரதூரமானை என்று இந்திய அரசாங்கமும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் கருதுகின்றனர்.

http://www.pathivu.com/news/4717/54/.aspx

தேசத்தின் குரல் முதல் சிலரை வாய்மூட வைத்து ஒதுக்கியதன் முடிவுகளை. வேறு அர்த்தத்தில் இல்லை. களத்தின் முடிவுகள் தனிப்பட்ட சிலரின் முடிவுகளாகவும் ஆளாளுக்கு அனைத்துலகச் செயலகம் என்று கட்சிபிரித்து நின்றவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் யாவையும் தெரிந்தும் சத்தம் போடாமல் அவர்கள் பின்னின்ற நம் ஒவ்வொருவரின் தலையாட்டலும் முடிவுகளை மாற்றி 30வருடவிடுதலைப் போராட்டத்தை இன்று ஆளாளுக்கு அங்குமிங்கும் இழுபட வைத்ததையே கருதினேன்

புலம் பெயர் தேசமெங்கும் 2002 இற்கு முன்பு இயங்கிய கொம்பனிமுறையிலான நிர்வாகக் கட்டமைப்பை, 2002 இன் பின் பொறுப்பேற்ற அனைத்துலக செயலகம் மாற்றி அமைக்க முற்பட்டு, மாற்றம் ஏற்படுத்த முடியாது மாட்டுப்பட்டு, முள்ளிவாய்க்காலில் மண் அள்ளிப்போட்டது.

எழுந்த மானத்திற்கு அனைத்துலகச் செயலகம் தவறுவிட்டுள்ளது, என்ற உங்கள் கருத்து ஏற்புடையதாக இல்லை.

புலம் பெயர்தேசமெங்கும், கொம்பனி முறையில், தொடர்ந்து இயங்கத் தலைவர் அனுமதித்திருக்கவேண்டும், மாற்றியது தவறென்று சொல்வதற்கு முற்படுகின்றீர்கள்.

களத்தில் கருணா, புலத்தில் பல கருணாக்கள் உருவாவதைத் தவிர்க்க முற்பட்ட முடிவு என்பதை மறுதலிக்கின்றீர்கள்.

புலத்திலிருந்து ஒரு அரை குறைத்தீர்வைத்திணிப்பதற்குரிய பலத்தைப் பாவிக்க முடியாது போய்விட்டதே என்ற கவலை தெரிகின்றது.

Edited by kalaivani

நன்றி வணக்கம் கடவுளே.

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரை வரவேற்கத்தக்கது. அதில் உள்ள விடையத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமேயொளிய தர்க்கம் கூடாது. நாம் புலத்தில் எமது வளங்களைக் காத்திடல் வேண்டும். இதற்காகவே ஒரு பல்தேசியக் கொம்பனி அதாவது பிரிட்டிஸ் காரர்களது மேற்கிந்தியக் கொம்பனி முறையிலான வலுவானதும் சட்டரீதியான அந்தஸதும் கொண்ட நிதியமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பலம்பெயர் தமிழர்கள் தாயகத்தில் முதலீடுகளைச் செய்வதன் மூலம் இவ்வாறானவற்றை ஓரளவேனும் தடுக்க முற்படலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"போலிமாயைக்குள் புலம்பெயர் சமூகம்" "அழிந்துபோகும் அவலநிலையில்" தமிழீழம்......

அழிந்துபோகும் நிலையில் வெட்டுறன் புடுங்கிறன் எண்டு கறந்து தமிழீழம் எண்டு சொல்லிச்செல்லியே 3 1/2 லச்சத்த கூட்டிக்கொண்டுபோனதயும் மறைச்சு 50000 த்த பலிகுடுத்து புலம்பெயர் சமூகத்த நடுத்தெருவுக்கு அழைச்சு வச்சிருந்து முட்டாளாக்கி செய்த கூத்துக்கள மறக்கேலுமே! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் பல விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.ஆனால் கட்டுரைக்கு சம்பந்தமேயில்லாமல் ஆரம்ப பந்தி எழுதப்பட்டது நெருடலாக இருக்கின்றது.கட்டுரை கூறிய விடயங்கள் நடவாமல் தவிர்ப்பாதாயின் தமிழர்கள் தம்மைத்தாமே நிர்வகிக்கும் (ஆளும்) உரிமைகளைப் பெற்றிட வேண்டும். அதற்கான அரசியல் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதும் கட்டுரையில் உள்ள விடயங்களைச் சொல்லிக் காட்டி தமிழர்களைப் பயமுறுத்தி திசை தீருப்ப முனைவது போலவும் எனக்குத் தெரிகிறது.வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்குபதிவை நடத்தாமல் விட்டால் மேற்கூறிய அழிவுகள் நடக்காமல் நின்று விடுமா என்று கட்டுரையாளர் சொல்லியிருக்கலாமே.

Edited by புலவர்

சிங்களவன் தமிழன் என்ற பிரிவினை மனநிலையில் தொடர்ந்து இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. தமிழ்த்தேசியம் என்ற சிறுபான்மை உணர்வோடும் கருத்தோடும் எம்மால் தனித்து நிற்க முடியாது. என்னும் பத்து வருடங்கள் தமிழன் என்று மார்தட்டி நிற்கலாம் உசுப்பேத்தலாம் ஆனால் எதுவும் நடக்காது. எமது தமிழ்த்தேசிய உணர்வும் நடைமுறை வாழ்வும் ஒன்றுக்கொன்று முரணானது. புலம்பெயர் தேசத்தில் எமது தமிழ்த்தேசிய உணர்வால் எதையும் நாம் சாதிக்க முடியாது. எம்மால் நடந்த அனார்த்தத்தை கூட தடுக்க முடியவில்லை. ஆனால் இன்னும் எதையோ நம்பியிருக்கின்றோம். இந்த உணர்வுத் தக்கவைப்பால் எம்மை நாம் திருப்திப்படுத்த முற்படுகின்றோம். புலம்பெயர் தமிழர்களது தமிழ்த்தேசிய உணர்வுக்கும் தாயக மக்கள் வாழ்வுக்கும் இடையில் பெரும் இடைவெளி இருக்கின்றது. இதை நாம் உணர மறுக்கின்றோம். எமது வாழ்வையும் பாதுகாப்பையும் முடிந்தவரை பொருளாதாரத்தையும் உறுதிப்படுத்தியநிலையில் வாழ்வாதாரங்களை மேம்படுத்திய நிலையில் அதே நேரம் தாயகத்தை விட்டு பிறிதொரு இடத்தில் இருந்தவாறு எமது தமிழ்த்தேசிய உணர்வு தாயக மக்கள் வாழ்வோடு இணையமுடியாத தொலைவில் இருக்கின்றது. முதலில் தாயகத்துக்கும் எமக்குமான இணைப்பு ஏற்பட வேண்டும். இது பொருளாதார முதலீடுகள் சமூக உறவு நிலையில் பிணைப்புகள் ஊடாகத்தான் சாத்தியப்படும். இதற்கு நாம் சிங்களவர்களுடன் ஐக்கியமாகவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. தாயகத்தில் வாழும் மக்கள் சிங்களத்துடன் பிணைந்து வாழ்வது தவிர்க்கமுடியாதது. இன்நிலையில் நாம் அன்னியப்படுவது தாயக மக்களிடம் இருந்து அன்னியப்படுவதாகவே அமையும். புதிய சிந்தனைகள் புதிய முனைப்புகள் அவசியமாகின்றது. சிங்களர்களுடன் இணைந்த பொருளாதார உறவும் பலத்தினூடாக பொது எதிரியான இந்தியாவை எதிர்க்க முற்பட வேண்டும். எமது புலம்பெயர் தமிழ்த்தேசிய உணர்வால் எமக்காதரவாக இந்திய சீனா போன்ற முரண்பட்ட நாடுகளை சாதகமாக்க முடியாது. அதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சிங்களவர்களுடன் சேர்ந்து நாம் இலங்கையார்களாக இயங்குவோமாக இருந்தால் இலங்கையருக்கு இந்தியாவை எதிரியாக்கலாம் தமிழருக்கு இந்தியா நண்பனாகலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் தமிழன் என்ற பிரிவினை மனநிலையில் தொடர்ந்து இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. தமிழ்த்தேசியம் என்ற சிறுபான்மை உணர்வோடும் கருத்தோடும் எம்மால் தனித்து நிற்க முடியாது. என்னும் பத்து வருடங்கள் தமிழன் என்று மார்தட்டி நிற்கலாம் உசுப்பேத்தலாம் ஆனால் எதுவும் நடக்காது. எமது தமிழ்த்தேசிய உணர்வும் நடைமுறை வாழ்வும் ஒன்றுக்கொன்று முரணானது. புலம்பெயர் தேசத்தில் எமது தமிழ்த்தேசிய உணர்வால் எதையும் நாம் சாதிக்க முடியாது. எம்மால் நடந்த அனார்த்தத்தை கூட தடுக்க முடியவில்லை. ஆனால் இன்னும் எதையோ நம்பியிருக்கின்றோம். இந்த உணர்வுத் தக்கவைப்பால் எம்மை நாம் திருப்திப்படுத்த முற்படுகின்றோம். புலம்பெயர் தமிழர்களது தமிழ்த்தேசிய உணர்வுக்கும் தாயக மக்கள் வாழ்வுக்கும் இடையில் பெரும் இடைவெளி இருக்கின்றது. இதை நாம் உணர மறுக்கின்றோம். எமது வாழ்வையும் பாதுகாப்பையும் முடிந்தவரை பொருளாதாரத்தையும் உறுதிப்படுத்தியநிலையில் வாழ்வாதாரங்களை மேம்படுத்திய நிலையில் அதே நேரம் தாயகத்தை விட்டு பிறிதொரு இடத்தில் இருந்தவாறு எமது தமிழ்த்தேசிய உணர்வு தாயக மக்கள் வாழ்வோடு இணையமுடியாத தொலைவில் இருக்கின்றது. முதலில் தாயகத்துக்கும் எமக்குமான இணைப்பு ஏற்பட வேண்டும். இது பொருளாதார முதலீடுகள் சமூக உறவு நிலையில் பிணைப்புகள் ஊடாகத்தான் சாத்தியப்படும். இதற்கு நாம் சிங்களவர்களுடன் ஐக்கியமாகவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. தாயகத்தில் வாழும் மக்கள் சிங்களத்துடன் பிணைந்து வாழ்வது தவிர்க்கமுடியாதது. இன்நிலையில் நாம் அன்னியப்படுவது தாயக மக்களிடம் இருந்து அன்னியப்படுவதாகவே அமையும். புதிய சிந்தனைகள் புதிய முனைப்புகள் அவசியமாகின்றது. சிங்களர்களுடன் இணைந்த பொருளாதார உறவும் பலத்தினூடாக பொது எதிரியான இந்தியாவை எதிர்க்க முற்பட வேண்டும். எமது புலம்பெயர் தமிழ்த்தேசிய உணர்வால் எமக்காதரவாக இந்திய சீனா போன்ற முரண்பட்ட நாடுகளை சாதகமாக்க முடியாது. அதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சிங்களவர்களுடன் சேர்ந்து நாம் இலங்கையார்களாக இயங்குவோமாக இருந்தால் இலங்கையருக்கு இந்தியாவை எதிரியாக்கலாம் தமிழருக்கு இந்தியா நண்பனாகலாம்.

இப்படியான துடிப்புள்ள இளைஞன் போதும், நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளுக்கு வழிசமைக்க. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வழிமொழியும் அக்குழுவில் அங்கம் வகிக்கும் ஒருவர் சொல்கிறார் தமிழீழத்தை அங்கீகரிக்கும்படிஅனைத்துலகத்தை வேண்டும் ஒரு மறைமுகத் தேர்தலாம். இது எனக்கு மட்டும் சொல்லப்படவில்லை. மக்கள் கூடும் இடங்களில் சொல்லப்படுகிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள்வாக்கெடுப்பினை நடாத்துபவர்கள் தாங்கள் அதனை ஏன் செய்கிறோம் என நிறைய விளக்கமளித்துள்ளார்கள். இதற்கென இணையதளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சிகள் வானொலிகளில் இது தொடர்பாக விளக்கம், நேர்காணல்கள், நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தல் என நிரம்பவே நடந்துள்ளது இன்னமும் நடக்கிறது. இவற்றில் எல்லாம் குறிப்பிடாத ஒரு வி்டயத்தை யாரோ ஒருவர் சொன்னார் என்றால் அதற்கு ஏற்பாட்டுக்குழுவினர்தான் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் "தமிழீழத்தை அங்கீகரிக்கும் ஒரு மறைமுகத் தேர்தலாம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி எங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் ஒரு வாங்கு வாங்கலாம்.

கட்டுரை கன கச்சிதம்.தமிழன் தான் என்னத்தை எல்லாம் இழந்துவிட்டான்,இழந்துகொண்டிருக்கின்றான் என்பதை எல்லாம் சொன்னதுடன் செய்யக்கூடாததை திரும்பவும் செய்து கொண்டிருக்கின்றான் என்பதையும் சொல்லியிருக்கின்றது.

சுகனின் பின்னோடம் மிகவும் யதார்த்தமான உண்மை,இதையெல்லாம் விளங்கும் நிலையில் புலம் பெயர்தமிழர் இப்போ இல்லை.

இப்பொது வெளிவரும் தமிழ் படங்கள் மாதிரித்தான் போராட்டத்தையும் பார்கின்றார்கள்.இந்த 30 வருடங்களில் எத்தனையாயிரம் படம் காட்டி விட்டார்கள் என்னமும் எத்தனையாயிரம் காட்டபொகின்றார்களொ பொறுத்திருந்து பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.