Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"போலிமாயைக்குள் புலம்பெயர் சமூகம்" "அழிந்துபோகும் அவலநிலையில்" தமிழீழம்......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒர் சிறுவன் தனது தந்தையிடம் தனது சகோதரகளை பற்றி எப்போதும் முறைப்பாடு செய்வதே வழமையாகக்கொண்டிருந்தான்,ஒரு நாள் தந்தை அந்தச்சிறுவனைப்பார்த்துக்கேட்டார் "உனக்கு உனது சகோதரர்கள் செய்வது பிழையாகத்தெரிகிறது அப்போ உனக்கு எது சரி என்று தெரியும்தானே ஏன் அவர்களை எதிர்பார்க்கிறாய் நீயே செய்யவேண்டியதுதானே"

வணங்காமண் தொடக்கம் வட்டுக்கோட்டை தீர்மானம், 30 வருட போராட்டம் என்பவற்றை கர்ம வீரர்கள் யாரையும் எதிர்பாராமல் செய்து கொண்டிருப்பார்கள்,எங்களைப்போன்றவர்கள் ஒன்றுமே செய்யாமல் வெறும் குத்தல் குதர்க்கம் சொல்லிக்கொண்டேயிருப்போம்.இதெல்லாம் சோம்பேறிகளின் வாழ்க்கையில் சகஜமப்பா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான தலைப்பு, முதல் பந்தி என்பன பின்வருமாறு (இது கட்டுரையை வேறு இடங்களில் ஒட்டியவர் மாற்றிவிட்டார் போலுள்ளது).

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18664&cat=5

சூறையாடப்படும் தமிழீழவளங்கள்

அருந்ததி

இந்திய அரசு எமது போராட்டத்தை அங்கீகரிப்பது, தமிழீழத்தை அங்கீகரிப்பது, படையை அனுப்புவது போன்ற இன்ன பிற விடயங்கள் இப்போது தமிழக அரசியலிலும், எமது ஜனநாயக தலைவர்களாலும்

பேசப்படும் விடயங்களாக இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் மீறி இந்திய அரசும் அதன் ஆளும் வர்க்கமும் தமிழர்களின் தாயகப்பிரதேசத்தில், அதன் சட்டபூர்வமான உரிமையைக் கொண்டுள்ள அவர்களின் சம்மதமும் ஆலோசனையுமின்றி வளங்களை கொள்ளையிடுவதில் இறங்கியுள்ளது.

சம்பூர் அனல் மின்னிலையம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, மன்னாரில் எண்ணை ஆய்வு, சேது சமுத்திர திட்டம், வன்னியில் விவசாய அபிவிருத்தி, என இவை அனைத்தும் எமது தாயகப்பகுதியில் நடைபெறும் விடயங்கள். இலங்கை அரசு தமிழ்மக்களின் வளமிக்கப்பிரதேசங்களை உயர்பாதுகாப்பு வலையமாகப் பிரகடனப்படுத்தி விட்டு மக்களை அங்கு மீள குடியேறவிடாது மிதிவெடி, கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை, பாதுகாப்பானதல்ல எனக் கூறுகிற அதேவேளே யாழ் மாவட்டத்தில் தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்திதுறை ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள் மீள அமைத்தல், மேலதிக இராணுவமுகாம்களை ஏற்படுத்துதல,; மற்றும் பல வருடங்களாக வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவை யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரை விஸ்தரித்தல் என்பதுடன் இதற்காக ஒன்பது பிரதான ரயில் நிலையங்கள் உட்பட 34 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

மேலும் காங்கேசன்துறை துறைமுகம் மீள்கட்டுமான மற்றும் நிர்வாகப் பொறுப்பினை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.அதன் முதல் நகர்வாக, பலாலி விமான ஓடு பாதை புனரமைப்பிற்கு 117 மில்லியன் ரூபாய்களை இந்திய தூதுவராலயம் இலங்கைக்கு அண்மையில் வழங்கியுள்ளது.

.................................

கட்டுரையை எழுதியவர் போலிமாயையைப் பற்றியோ அல்லது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றியோ ஒரு கருத்துக்கூட தெரிவிக்கவில்லை. வேறு தளங்களில் ஒட்டியவர் தங்கள் சொந்தச் சரக்கை கட்டுரையாளரின் கருத்துப் போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளார்.

Edited by கிருபன்

இப்படியான துடிப்புள்ள இளைஞன் போதும், நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளுக்கு வழிசமைக்க. :lol:

சுகனின் பின்னோடம் மிகவும் யதார்த்தமான உண்மை,இதையெல்லாம் விளங்கும் நிலையில் புலம் பெயர்தமிழர் இப்போ இல்லை.

ஆ... ஆசை தோசை அப்பளம் வடை....... :lol:

------------------------

சுகன்,உங்கள் ஏக்கம் தெரிகிறது.

நீங்கள் கீழினம்.

சிங்களவன் உங்களை ஒருபோதும் மதிக்கபோவதில்லை.

காலடியில் உயிருடன் இருக்கலாம் அவ்வளவுதான்.

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

சூறையாடப்படும் தமிழீழவளங்கள்

அருந்ததி

இந்திய அரசு எமது போராட்டத்தை அங்கீகரிப்பது, தமிழீழத்தை அங்கீகரிப்பது, படையை அனுப்புவது போன்ற இன்ன பிற விடயங்கள் இப்போது தமிழக அரசியலிலும், எமது ஜனநாயக தலைவர்களாலும் பேசப்படும் விடயங்களாக இருக்கின்றன.

இந்தியப்படை இனித்தான் வருமா? அமைதிப்படையாக முதலில் வந்து மக்களை கொன்று குவிக்கவில்லையா? அல்லது கடந்த வருடம் அழிவுப்படையாக ஒளிந்து வந்து அழிக்கவில்லையா? உயிரியலில் தக்கன பிழைக்கும் என்று வரலாற்று ரீதியாக அறியப்பட்டுள்ளது. இந்தியாவின் தயவை இன்னமும் நாடி நிற்கும் மக்கள் பிழைக்க தக்கனவா என்று ஐயப்பட வேண்டியுள்ளது.

ஆனால் இவற்றையெல்லாம் மீறி இந்திய அரசும் அதன் ஆளும் வர்க்கமும் தமிழர்களின் தாயகப்பிரதேசத்தில், அதன் சட்டபூர்வமான உரிமையைக் கொண்டுள்ள அவர்களின் சம்மதமும் ஆலோசனையுமின்றி வளங்களை கொள்ளையிடுவதில் இறங்கியுள்ளது.

நாடு என்றால் ஆளும் வர்க்கம் இருக்கும், ஆளும் வர்க்கம் இல்லாத நாடு எது? ஆளும் வர்க்கம் சட்டம் உருவாக்கி சட்டரீதியாக ஆட்சி செய்கிறது. இலங்கையின் ஆளும் வர்க்கம் தனது சட்டப்படி நாட்டை இந்தியாவுக்கு வழங்கினால் அதை சட்டவிரோதம் என்று எந்த நாட்டு சட்டப்படி நாம் சொல்ல முடிகிறது?

சம்பூர் அனல் மின்னிலையம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, மன்னாரில் எண்ணை ஆய்வு, சேது சமுத்திர திட்டம், வன்னியில் விவசாய அபிவிருத்தி, என இவை அனைத்தும் எமது தாயகப்பகுதியில் நடைபெறும் விடயங்கள். இலங்கை அரசு தமிழ்மக்களின் வளமிக்கப்பிரதேசங்களை உயர்பாதுகாப்பு வலையமாகப் பிரகடனப்படுத்தி விட்டு மக்களை அங்கு மீள குடியேறவிடாது மிதிவெடி, கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை, பாதுகாப்பானதல்ல எனக் கூறுகிற அதேவேளே யாழ் மாவட்டத்தில் தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்திதுறை ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள் மீள அமைத்தல், மேலதிக இராணுவமுகாம்களை ஏற்படுத்துதல,; மற்றும் பல வருடங்களாக வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவை யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரை விஸ்தரித்தல் என்பதுடன் இதற்காக ஒன்பது பிரதான ரயில் நிலையங்கள் உட்பட 34 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

மேலும் காங்கேசன்துறை துறைமுகம் மீள்கட்டுமான மற்றும் நிர்வாகப் பொறுப்பினை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.அதன் முதல் நகர்வாக, பலாலி விமான ஓடு பாதை புனரமைப்பிற்கு 117 மில்லியன் ரூபாய்களை இந்திய தூதுவராலயம் இலங்கைக்கு அண்மையில் வழங்கியுள்ளது.

.................................

தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் இழப்புகளையும் தத்துவங்களையும் எழுதத் தெரிந்தவர்களே தவிர, இழப்புகளை தவிர்ப்பதற்கும் மக்களுக்கு நிம்மதியை தருவதற்குமான வழிவகைகளை பற்றி எழுதத் தெரிந்தவர்களாக தெரியவில்லை. இந்த இழப்புகளை தவிர்க்க என்ன செய்யலாம் என்று இந்த எழுத்தாளர் ஏதாவது ஆலோசனை சொல்லியிருக்கிறாரா?

உதாரணமாக, ஐரோப்பா, கனடாவில் உள்ள தமிழர்கள் ஒரு வணிக நிறுவனத்தை ஒருவாக்கி, தமது நாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அரசியல்வாதிகளின் ஆதரவுடனும், உலக வங்கியின் ஆதரவுடனும் மன்னாரில் எண்ணை அகழ்வும், காங்கேசன்துறை சீமேந்து உற்பத்தியும் செய்ய முயற்சிக்கலாம் என்று இந்த எழுத்தாளர் சொல்லியிருக்கலாம். அதை விட்டு ஜீ.ஜீ காங்கேசன்துறையில் சீமேந்து தொழிற்சாலை நிறுவியதால் சூழல் மாசடைந்து விட்டது, அனல்மின்னிலையமும் கூடாது, சேது சமுத்திரமும் வேண்டாம் என்றால், வடக்கு கிழக்கில் வேலைவாய்ப்பு எப்படி வரும்? எல்லாரும் மீன்பிடிக்கவும், விவசாயம் செய்யவும் போக வேண்டும் என்றா இந்த எழுத்தாளர் சொல்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் பல விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.ஆனால் கட்டுரைக்கு சம்பந்தமேயில்லாமல் ஆரம்ப பந்தி எழுதப்பட்டது நெருடலாக இருக்கின்றது.கட்டுரை கூறிய விடயங்கள் நடவாமல் தவிர்ப்பாதாயின் தமிழர்கள் தம்மைத்தாமே நிர்வகிக்கும் (ஆளும்) உரிமைகளைப் பெற்றிட வேண்டும். அதற்கான அரசியல் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதும் கட்டுரையில் உள்ள விடயங்களைச் சொல்லிக் காட்டி தமிழர்களைப் பயமுறுத்தி திசை தீருப்ப முனைவது போலவும் எனக்குத் தெரிகிறது.வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்குபதிவை நடத்தாமல் விட்டால் மேற்கூறிய அழிவுகள் நடக்காமல் நின்று விடுமா என்று கட்டுரையாளர் சொல்லியிருக்கலாமே.

5

சூறையாடப்படும் தமிழீழவளங்கள்[/b]

கட்டுரையை எழுதியவர் போலிமாயையைப் பற்றியோ அல்லது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றியோ ஒரு கருத்துக்கூட தெரிவிக்கவில்லை. வேறு தளங்களில் ஒட்டியவர் தங்கள் சொந்தச் சரக்கை கட்டுரையாளரின் கருத்துப் போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளார்.

வணங்காமண் தொடக்கம் வட்டுக்கோட்டை தீர்மானம், 30 வருட போராட்டம் என்பவற்றை கர்ம வீரர்கள் யாரையும் எதிர்பாராமல் செய்து கொண்டிருப்பார்கள்,எங்களைப்போன்றவர்கள் ஒன்றுமே செய்யாமல் வெறும் குத்தல் குதர்க்கம் சொல்லிக்கொண்டேயிருப்போம்.இதெல்லாம் சோம்பேறிகளின் வாழ்க்கையில் சகஜமப்பா :lol:

ஆ... ஆசை தோசை அப்பளம் வடை....... :lol:

------------------------

சுகன்,உங்கள் ஏக்கம் தெரிகிறது.

நீங்கள் கீழினம்.

சிங்களவன் உங்களை ஒருபோதும் மதிக்கபோவதில்லை.

காலடியில் உயிருடன் இருக்கலாம் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையின் நோக்கத்தைதான் நாம் சாடினோம்

கட்டுரையில் எழுதப்பட்டவை நடந்துவருவன நாம் அறிவோம்

அதற்காகத்தான் எம்மால் முடிந்தவரை உழைக்கின்றோம்

சுகன்உங்கள் ஏக்கம் தெரிகிறது.

நீங்கள் கீழினம்.

சிங்களவன் உங்களை ஒருபோதும் மதிக்கபோவதில்லை.

காலடியில் உயிருடன் இருக்கலாம் அவ்வளவுதான்.

பிரபாகரன் கூட ஏதாவது ஒரு தீர்வைத்தாருங்கள் என்றுதான் கடைசிவரை கேட்டார்

தரவில்லை என்று தெரிந்தும்

தானும் தன் மக்களும் அழிந்தபோதும்

ஏதாவது தாருங்கள் என்று ஏங்கியபடிதான் இருந்தார்

நீங்கள் சொல்லும் வழியில் அது அமையவேண்டும் என்று ஒவ்வொருதரமும் குரல் கொடுக்கும்போதும் குறிப்பிட்டார்

லாவகரமாக அதனை நாம் மறந்துவிடுகின்றோம்

கடைசியில் நாம் எவ்வாறு அழிக்கப்பட்டோம் என்பது வரலாறு

அதை மீண்டும் மீண்டும் திருப்பி எழுதமுடியாது

அதனால்தான் மாற்றுவழி....

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

கட்டுரையாளர் எழுதிய விடயங்கள் நாம் கட்டாயம் அறிய வேண்டிய விடயம். ஆனால் கட்டுரையாளர் ஏன் வட்டுக்கோட்டையை இழுத்தார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

ஆகக்குறைந்த அதிகாரப்பரவலாக்கமாவது இப்போதைக்கு சாத்தியமானால் இத்தகைய நிலமைகள் குறைய வாய்ப்பு உண்டு.

குளோபல் தமிழ் நியூசில் வந்த இக்கட்டுரை போல செய்தியும் வெட்டு ஒட்டு செய்கிறார்கள் பலர். ஆனால் அந்த இணையத்துக்கு ஒருவரி நன்றியும் செலுத்தாமல்.

என் கருத்தை மறுத்துள்ள அல்லது புறக்கணித்துள்ள விசுகு அவர்களுக்கு,

கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்களை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். அதன் பின் புறக்கணிப்பை தாராளமாகச் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா

தாங்களே கட்டுரையாளர் ஏன் இப்படி எழுதுகிறார் என்று தெரியவில்லை என்று தெரியவில்லை என்று எழுதியுள்ளீர்கள்

அப்படியான கட்டுரைக்கு

அப்படியான கட்டுரையாளருக்கு

இவ்வளவு தாங்குதல் நீங்கள் செய்யத்தான் வேண்டுமா???

அதைவிட

அனைத்துலக செயலகம்...

மற்றும்

வட்டுக்கோட்டை அணி.......

என்று சகட்டுமேனிக்கு தாங்கள் இங்கே போட்டுத்தாக்குவதும் எந்த திசையை எமக்கு காட்ட...?

தங்களின் இந்தஅனைத்துலக செயலகம்...

மற்றும்

வட்டுக்கோட்டை அணி.......

என்று சகட்டுமேனிக்கு தாங்கள் இங்கே போட்டுத்தாக்குவதையும்

தூக்காத நிர்வாகம்

நாம் அதற்கு எழுதிய பதில்களை அறுப்பதன் காரணம் அறியலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தமிழன் என்ற பிரிவினை மனநிலையில் தொடர்ந்து இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. தமிழ்த்தேசியம் என்ற சிறுபான்மை உணர்வோடும் கருத்தோடும் எம்மால் தனித்து நிற்க முடியாது. என்னும் பத்து வருடங்கள் தமிழன் என்று மார்தட்டி நிற்கலாம் உசுப்பேத்தலாம் ஆனால் எதுவும் நடக்காது. எமது தமிழ்த்தேசிய உணர்வும் நடைமுறை வாழ்வும் ஒன்றுக்கொன்று முரணானது. புலம்பெயர் தேசத்தில் எமது தமிழ்த்தேசிய உணர்வால் எதையும் நாம் சாதிக்க முடியாது. எம்மால் நடந்த அனார்த்தத்தை கூட தடுக்க முடியவில்லை. ஆனால் இன்னும் எதையோ நம்பியிருக்கின்றோம். இந்த உணர்வுத் தக்கவைப்பால் எம்மை நாம் திருப்திப்படுத்த முற்படுகின்றோம். புலம்பெயர் தமிழர்களது தமிழ்த்தேசிய உணர்வுக்கும் தாயக மக்கள் வாழ்வுக்கும் இடையில் பெரும் இடைவெளி இருக்கின்றது. இதை நாம் உணர மறுக்கின்றோம். எமது வாழ்வையும் பாதுகாப்பையும் முடிந்தவரை பொருளாதாரத்தையும் உறுதிப்படுத்தியநிலையில் வாழ்வாதாரங்களை மேம்படுத்திய நிலையில் அதே நேரம் தாயகத்தை விட்டு பிறிதொரு இடத்தில் இருந்தவாறு எமது தமிழ்த்தேசிய உணர்வு தாயக மக்கள் வாழ்வோடு இணையமுடியாத தொலைவில் இருக்கின்றது. முதலில் தாயகத்துக்கும் எமக்குமான இணைப்பு ஏற்பட வேண்டும். இது பொருளாதார முதலீடுகள் சமூக உறவு நிலையில் பிணைப்புகள் ஊடாகத்தான் சாத்தியப்படும். இதற்கு நாம் சிங்களவர்களுடன் ஐக்கியமாகவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. தாயகத்தில் வாழும் மக்கள் சிங்களத்துடன் பிணைந்து வாழ்வது தவிர்க்கமுடியாதது. இன்நிலையில் நாம் அன்னியப்படுவது தாயக மக்களிடம் இருந்து அன்னியப்படுவதாகவே அமையும். புதிய சிந்தனைகள் புதிய முனைப்புகள் அவசியமாகின்றது. சிங்களர்களுடன் இணைந்த பொருளாதார உறவும் பலத்தினூடாக பொது எதிரியான இந்தியாவை எதிர்க்க முற்பட வேண்டும். எமது புலம்பெயர் தமிழ்த்தேசிய உணர்வால் எமக்காதரவாக இந்திய சீனா போன்ற முரண்பட்ட நாடுகளை சாதகமாக்க முடியாது. அதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சிங்களவர்களுடன் சேர்ந்து நாம் இலங்கையார்களாக இயங்குவோமாக இருந்தால் இலங்கையருக்கு இந்தியாவை எதிரியாக்கலாம் தமிழருக்கு இந்தியா நண்பனாகலாம்.

இடைவெளிகளை இட்டு நிரப்ப வேண்டிய வழிகளை சிந்திக்க வேண்டும் என்கிறீர்கள் சுகன். ஆனால் நடைமுறையில் உசுப்பி உணர்ச்சி மேலீட்டில் மயங்கி உரைப்பது பேறும் பெரும்பாக்கியமுமென நினைக்கும் மனநிலைகளில் மாற்றம் வேண்டும்.

குறைந்தபட்ச அதிகாரங்களையாவது இப்போதைக்குத் தக்க வைத்துக் கொண்டு அடுத்த அடியை வைப்பதே நடைமுறைச் சாத்தியமாகும். இல்லை இது வேண்டாம் வளத்தா சடை போட்டா மொட்டையென்ற புலத்துக் கனவுகளில் சாகப்போவது தாயகத்திலுள்ள எஞ்சிய எல்லாம் இழந்த மக்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தமிழன் என்ற பிரிவினை மனநிலையில் தொடர்ந்து இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. தமிழ்த்தேசியம் என்ற சிறுபான்மை உணர்வோடும் கருத்தோடும் எம்மால் தனித்து நிற்க முடியாது.

சிங்களவர்கள் பிரிவினை மனநிலையில் இல்லையா? சிங்களவர்கள் தமிழர்களைச் சமமாக நடாத்தினால் போராட்டம் என்பது 1956 இல் ஆரம்பித்திருக்காது. தற்போதும் சிங்களவர்கள் தமிழர்களை நடாத்தும் விதம்தான் தமிழ்த் தேசியத்துக்கு உரம் போடுகின்றது.

மேலும் சிங்களவர்கள் பெரும்பான்மையினர், தமிழர்கள் சிறுபான்மையினர் என்று சொல்லுவது சரியா என்று சிந்திக்கவேண்டும். இலங்கையில் சிங்களவர்கள் போன்றே தமிழர்களும் ( சனத்தொகையில் குறைந்தாலும் ) தனித்துவமான ஒரு தேசிய இனம்.

நக்கிப்பிழைக்கும் வழியை தெரிவுசெய்தபின்...

நீங்கள் வேறு

தனித்துவம்

தேசியம்

சம உரிமை என்று ஏதேதோ சொல்கிறீர்கள்...??

ஆனால் ஒன்றுமட்டும் உண்மை

அந்த வழியே இன்று வாழும்வழியாகிவிட்டது சர்வதேச அளவில்...

அவர்களுடைய வழிக்கே அதிகவாக்கு இன்று உலகில்..........

வாசியின் குட்டிக்கதைக்கு நன்றி.நான் ஒன்றுமே செய்யாமல் சும்மா இணயத்தில் மட்டும் எழுதிக்கொண்டிருக்கின்றேன் என்று உமக்கு யார் சொன்னது.இணயம் நாகரீகமாக எமது கருத்துக்களை எழுதும் ஓர் இடம்.கனவில் மூழ்கடித்து நிஜத்தை துலைக்காமல் இருக்க முயலும் சிலரில் நானும் ஒருவன் அவ்வளவும் தான்.

பலர் இங்கு எமது போராட்டம் ஏன் ஆரம்பித்ததென்பதையே மறந்துபோய்விட்டார்கள்.உங்கள் கருத்திற்கு மாறாக எதுவும் எழுதினால் அடிமையாய் இருக்க ஆசைப்படுகின்றீர்கள்,சிங்களவனின் காலை நக்க நிக்குதுகள் என்கின்றீர்கள். நீங்கள் போகும் பாதை பிழைஎன்று சொன்னால் நாங்கள் சிங்களவனை சரி என்று சொல்வதாக அர்த்தம் இல்லை.

ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால் இந்தியாவில் ரோ, பொறின் பொலிசி மெக்கிங் அலுவலகர்கள்,பத்திரிகையாளர்கள் ஜி.கே ரெட்டி,ராம்,பட்னிஸ்,சூரியனாயரணா இவர்களையெல்லாம் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்ததால் வந்தது.

அசோகா கோட்டேலில் அமிர் தொடக்கம் சம்பந்தன் வரை அவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்றதை கண்ணால பார்த்தவன்.

நக்கிப்பிழைக்கும் வழியை தெரிவுசெய்தபின்...

நீங்கள் வேறு

தனித்துவம்

தேசியம்

சம உரிமை என்று ஏதேதோ சொல்கிறீர்கள்...??

ஆனால் ஒன்றுமட்டும் உண்மை

அந்த வழியே இன்று வாழும்வழியாகிவிட்டது சர்வதேச அளவில்...

அவர்களுடைய வழிக்கே அதிகவாக்கு இன்று உலகில்..........

சிங்களம் பிரிவினையில் வெற்றி பெற்றுவிட்டது. நக்கிப்பிழைப்பது எமது தனித்துவத்தில் ஒன்று . புலப்பெயர்வின் அடிப்படை நக்கிப்பிழைத்தலின் சாராம்சத்தை கொண்டது.இதற்குள் தான் எனது வாழ்வும் அடங்குகின்றது. பிரச்சனை சிங்களவனுக்கு நக்குவதா வெள்ளைகளை நக்குவதா என்பதல்ல. நக்கிப்பிழைக்கும் பிழைப்பை மாற்றுவதோடு எமது தனித்துவத்தை எப்படித் தக்கவைப்பது என்பதுதான் பிரச்சனை. நாம் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை எவ்வாறு தக்கவைக்கப்போகின்றோம்? படிப்படியாக நாம் தாயகத்தை நெருங்கவேண்டும். இதற்காக நாம் சிங்களவனை அனுசரித்தே ஆகவேண்டும். ஏனெனில் தாயகம் அவனிடம் தான் உள்ளது. எங்கள் கைகளில் இல்லை. யதார்த்தம் இதுவே. நாம் தாயகத்தை நெருக்குவது குறித்த எந்தச் சிந்தனையும் அற்று அதற்கான விருப்பமும் அற்று தேசியத்தை நிலைநாட்ட முற்படுகின்றோம். இது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை்.

தமிழினத்திற்கு ஆதரவாக எந்த நாடும் இல்லை. ஒரு நாடு தமிழினத்திற்கு ஆதரவாக குரல்கொடுப்பதால் அந்த நாட்டுக்கு என்ன லாபம்? எமக்காதரவாக ஒருவனை எவ்வாறு சம்பாதிப்பது? இதற்கும் நாம் சிங்களவர்களுடன் ஐக்கியமாகவேண்டும். இதனூடக சிங்களவனுக்கும் என்னுமொரு நாட்டுக்கும் ஏற்படுத்தப்படும் பகையாளியே நாளை தமிழனுக்கு ஆதரவாக மாற முடியும். நாம் எமது குறிக்கோளை சிங்களவனிடம் இருந்து பிரிந்து நின்று அடைய முற்படுவது ஒரு வளியாகில் அது தோற்றதெனில் வளியை மாற்றுவது தவிர்க்கமுடியாதது. எட்ட நின்று எட்டி உதைப்பது கூட இருந்து குழிபறிப்பது எதுவாயினும் குறிக்கோள் ஒன்றாக இருக்கும் போது குழம்பவேண்டிய அவசியம் இல்லை. எனது கருத்து எமது தனித்துவத்தில் இருந்து வெளியேறுதல் குறித்து அல்ல அதை நிலைநாட்டுவதற்கான என்னுமொரு வழியை குறித்தே அமைகின்றது.

புலி சிங்கத்துடன் சேராது.

சேர நினைக்கும் நோஞ்சான் மாட்டு கூட்டத்துக்கு என்ன நடக்கும் எண்டு சொல்லத்தேவையில்லை.... :unsure:

அட்லீஸ்ட் சிங்கம் வெஜிட்டேரியனா மாறினாலும்..

நோஞ்சான் மாட்டை அண்ட விடாது..

சிங்கமென்ன எலியே மதிக்கபோவதில்லை.

மேய்பாளர்கள் தொடர்ந்து தண்ணிகாட்டுவார்கள்.. பின்னுக்கு திரியுங்கோ...... :unsure:

மற்றும் எப்படி சிங்களவனுடன் அனுசரிக்கபோறீங்கள்.

தமிழ் கட்சிகள் மாதிரியா?

தமிழ் கூலிபடை மாதிரியா?

அல்லது குலுக்கு சிங்காரி மதிரியா?

புலி சிங்கத்துடன் சேராது.

சேர நினைக்கும் நோஞ்சான் மாட்டு கூட்டத்துக்கு என்ன நடக்கும் எண்டு சொல்லத்தேவையில்லை....

அட்லீஸ்ட் சிங்கம் வெஜிட்டேரியனா மாறினாலும்..

நோஞ்சான் மாட்டை அண்ட விடாது..

சிங்கமென்ன எலியே மதிக்கபோவதில்லை

மேய்பாளர்கள் தொடர்ந்து தண்ணிகாட்டுவார்கள்.. பின்னுக்கு திரியுங்கோ

தெரிந்து தான் பனங்கய் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைந்தார்கள். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்றார்கள். மிச்ச எல்லாச் சனமும் சிங்களவனின் காலடியில் வாழப்பழகிக் கொண்டார்கள். சிங்கமும் எலியும் ஏன் ஏறும்பு கூட மதிக்கப்போவதில்லை. இவைகள் எல்லாம் தான் யதார்த்தம். சீரளிந்த இந்தக் கன்றாவி நிலைக்குள்ளாகத்தான் நாம் எதையும் செய்யவும் முடியும் என்பதை சுலபமாக நிராகரித்து எம்மை நாம் என்னும் கொஞ்சக்காலம் ஏமாத்தலாம்.

மற்றும் எப்படி சிங்களவனுடன் அனுசரிக்கபோறீங்கள்.

தமிழ் கட்சிகள் மாதிரியா?

தமிழ் கூலிபடை மாதிரியா?

அல்லது குலுக்கு சிங்காரி மதிரியா?

இந்த மாதிரிகளாகத்தான் நாம் இப்போது இருக்கின்றோம். கனடாவில் சீமான் வந்து கரும்புலியாக பாய்வோம் கொல்லுவோம் என்று அவேசப்படுவதால் இந்த மாதிரி நிலமை மாறப்போவதில்லை. விசிலடித்து கைதட்டி பொழுதை போக்கலாம். இங்க இந்த மாதிரி விசலடிக்க அடிக்க அங்க ஒரு துரும்புமில்லாமல் துடைத்தளித்துப்போடுவார்கள்.

இந்த உலகத்தில் தேசியம் உட்பட அனைத்தையும் தீர்மானிப்பது பொருளாதர நலன்களே. இதற்கு இலங்கையும் விதிவிலக்கில்லை. போரில் தோற்ற ஜப்பான் கையில் எடுத்தது பொருளாதாரம் என்னும் ஆயுதத்தைதான்.

எங்கட சிங்கம் புலி சேராது என்ற விசிலடிப்புத் தேசியத்தால் வேட்டைக்காரன் என்ன சீரியலைக் கூட புறக்கணிக்க முடியாது என்பதுவே யதார்த்தம்.

இந்த உலகத்தில் தேசியம் உட்பட அனைத்தையும் தீர்மானிப்பது பொருளாதர நலன்களே. இதற்கு இலங்கையும் விதிவிலக்கில்லை. போரில் தோற்ற ஜப்பான் கையில் எடுத்தது பொருளாதாரம் என்னும் ஆயுதத்தைதான்.

பொருளாதாரமென்ன.. அண்டவெயார் போடகூட சிங்களவனின் மேற்பார்வயிகீழ்தான் செய்யவேண்டும்..

உங்கள் கருத்துக்கள். சாககிடப்பவனிடம், அவன் உடல் பாகங்களை பேரம்பேசுவதுபோல்தான் இருக்கிறது. :unsure:

பொருளாதாரமென்ன.. அண்டவெயார் போடகூட சிங்களவனின் மேற்பார்வயிகீழ்தான் செய்யவேண்டும்..

உங்கள் கருத்துக்கள். சாககிடப்பவனிடம், அவன் உடல் பாகங்களை பேரம்பேசுவதுபோல்தான் இருக்கிறது.

நீங்கள் இன்னும் கிணற்றில் இருந்து வெளியே வரவில்லை என்னும் போது பரிதாபமாக இருக்கின்றது. இனம் சிங்களவனுக்கு அடிமையாய் கிடக்கின்றது. பிடிபட்ட பெண்போராளிகள் வரிசையில் அம்மணமாக நிற்கவிட்டு பைப்பால் தண்ணியடிச்சு குளிக்கவார்க்கின்றான் சிங்களவன். உங்களுக்கு மேற்பார்வையில் கீழ் ஒண்டும் செய்ய முடியாதோ? கெளரவம்? இந்த மனநிலையோடு உங்களால் சொந்த தாயகத்திற்கு செல்ல முடியாது. ஏனெனில் சிங்களவனை கடந்து தான் செல்ல வேண்டும். புலத்துத் தேசியம் செத்தவனிடம் பேரம் பேசுகின்றது என்பதை மறக்கவேண்டாம். எமக்கு மக்கள் முக்கியமில்லை. சித்திரவதைப்படும் போராளிகள் முக்கியமில்லை. எமது அடிமை நிலையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏற்றுக்கொள்ளாதவரை அதிலிருந்து மீள்வதற்கான சிந்தனையும் வரமாட்டாது. சில மாதங்களுக்கு முன்னர் புறநிலை அரசு குறித்து ஒரு திரியில் எமக்கான மனித உரிமைகளுக்கா போராடும் ஒரு அமைப்பே இப்போது அவசியம் அதுவே பின்னாளில் புறநிலை அரசாக மாறமுடியும் என்ற கருத்தை வலியுறுத்தியபோதும் இவ்வாறான எதிர்வினைதான் வந்தது. இப்போதும் எனது கருத்து எமது எமக்கும் எமது தாயகத்துக்குமான உறவுப்பாலம் அமைப்பது அவசியம் என்பது தொடர்பானதே. அதற்காக நாம் சில அனுசரிப்புகளையும் மாற்றங்களையும் செய்யவேண்டும் என்பது தொடர்பானதுதான்.

இலங்கையிலும் இந்தியாவிலும் விழையும் தேயிலை அரிசியின் விலையை தீர்மானிப்பது இலங்கையனோ இந்தியனோ இல்லை மாறாக ஏகாதிபத்திய நாடுகளே. சிங்களப் பேரினவாதத்தாலும் இந்திய அதிகாரவர்க்கத்தாலும் இந்தத் தீர்மானிப்புகளில் மாற்றத்தை செய்ய முடியாது. நாம் சிங்களவனுக்கு அடிமையாக்கப்பட்டதற்கு சிங்களவன் ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக இருப்பது காரணமாகின்றது. சீனா கோதுமை உற்பத்திச் தொழிற்சாலைகளையும் நிறுவி பாண் போடும் வெதுப்பக உபகரணங்களையும் இலங்கைக்கு அள்ளி வழங்கியது. அங்கு உற்பத்தியாகும் பொருட்களை மக்கள் உண்பதை தவிர்த்து பாணை உண்ணப்பழகினார்கள். என்னுமொரு இத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் இலங்கையில் நுகரவைக்கப்பட்டு சீனாவின் பொருளாதாரம் செழிக்கின்றது. இலங்கையின் உற்பத்திப் பொருட்கள் மதிப்பற்றுப்போகின்றது. இதற்கு இலங்கை உடன்படுகின்றபோது மனிதாபிமானத்தைக் கடந்து சீனா எம்மை ஒழிக்க இலங்கைக்கு துணைநிற்கின்றது. இதே போல் இந்தியா உட்பட ஒவ்வொரு நாடுகளும் தங்களது நலன்கள் சார்ந்தே இலங்கைக்கு ஆதரவை வழங்குகின்றது. எமக்கு ஆதரவு வழங்க எம்மிடம் என்ன இருக்கின்றது? ஆதரவில்லாமல் எம்மால் என்ன செய்ய முடியும்? நாம் தொண்டைகிழிய கத்தினாலும் உடலை எண்ணை ஊற்றி எரித்தாலும் மனிதாபிமானத்திற்காக தர்மத்துக்கு உட்பட்டு நீதிக்குத் தலைவணங்கி எமக்கொரு தீர்வை பெற்றுத்தர எந்த நாடும் முன்வராது. இது அனுபவம். அதனால் முன்வரும் நாடுகளுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. இன்று தமிழர் தாயகப்பகுதிகளின் வழங்கள் வேறு நாடுகளுக்கு தாரைவாரக்கப்படுகின்றது. பெரும் எண்ணிக்கையான பகுதிகள் மக்கள் இன்றி இருக்கின்றது. புலம்பெயர் சனம் முடிந்தளவு முதலீடுகளை இலங்கையில் செய்ய முன்வரவேண்டும். பிரதேசத்தை இழந்தபின் பிரதேசத்திற்கும் எமக்குமான தொடர்பு அறுந்தபின் எந்த அடிப்படையில் தேசியம் உயிர்வாழும்? நாடுகடந்த அரசாங்கத்தை இங்கேன உருவாக்கி எங்கே கொண்டுபோய் நிறுவுவது? வட்டுக்கோட்டை என்ற ஊர் இல்லாமல் போனபின் அந்த தீர்மானத்தை வைத்து என்ன செய்ய முடியும்? என்னும் எத்தனை நாளைக்கு புலத்தில் கத்த முடியும்? இந்தத் தலைமுறை கடந்தபின் இந்தக் கத்தல் கூட இருக்காது.

உங்கள் தேசிய உணர்ச்சிகளுடன் என்னால் மல்லுக்கட்ட முடியாது. எனக்கு சரி என்று பட்டதை எழுதினேன் தவிர எனது கருத்தை ஏற்கவேணும் என்ற எதிர்பார்ப்பு எதுவும் என்னிடம் இல்லை.

உங்கள் தேசிய உணர்ச்சிகளுடன் என்னால் மல்லுக்கட்ட முடியாது. எனக்கு சரி என்று பட்டதை எழுதினேன் தவிர எனது கருத்தை ஏற்கவேணும் என்ற எதிர்பார்ப்பு எதுவும் என்னிடம் இல்லை.

தமிழர், என்ற மனிதர்க்கு, தமிழ்த் தேசிய உணர்வும் இருக்கக்கூடாது என்றால்.......?

தேசியம் என்றால் என்ன?

தமிழர் எல்லோருக்கும் தமிழ்த் தேசிய உணர்வு இருந்திருந்தால், எமக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

***

Edited by இளைஞன்

தமிழ் இனமே அழிஞ்சு சீரழியும்பொது தமிழனின் போருலாதரதாரமும் வளங்களும் எப்படி வாழும்?

சுவர் இருந்தாத்தானே சித்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர், என்ற மனிதர்க்கு, தமிழ்த் தேசிய உணர்வும் இருக்கக்கூடாது என்றால்.......?

தேசியம் என்றால் என்ன?

தமிழர் எல்லோருக்கும் தமிழ்த் தேசிய உணர்வு இருந்திருந்தால், எமக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

***

தமிழ் தேசியம் என்றால் என்ன?

உலக நாடுகளின் ஆட்சிமுறைகளையும், அது சார்ந்த அணுகுமுறைகளையும் தேசியவாதம், சர்வதேசியவாதம் என பிரித்து பார்க்கலாம். சர்வதேசியவாதம் மனிதமுதல்வாதம், மதமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என பிரிக்கப்படலாம். இவற்றின் அர்த்தம் என்ன? இவை எவ்வாறு ஈழத்தமிழரை பாதிக்கின்றன என அறிவது, ஈழத்தழிழரின் வெளிநாட்டுஉறவுகளை சரிவர அமைத்துக்கொள்ள மிகவும் முக்கியமானது.

தேசியவாதம்

தமது தேசத்தின் எல்லைகளுக்குள் தமது நலன்களும், பிரச்சினைகளும் அடங்குகின்றன என்ற அடிப்டையிலும், தமது தேசத்தின் எல்லைகளுக்குள் தமது நலன்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் ஒரு குறிப்பிட்ட இன மக்களும் ஆட்சியாளரும், சிந்திப்பதும் செயற்படுவதும் தேசியவாதமாகும்.

உதாரணமாக ஜேர்மனிய தேசியவாதிகள், ஜேர்மனியில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டும் என்று நம்புகிறார்கள். அதன் மூலம் ஜேர்மனியர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் முதல் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று நம்புகிறார்கள்.

சர்வதேசியவாதம் - மனிதமுதல்வாதம்

மனிதமுதல்வாதம் மனிதஉரிமைகள், சமூக உரிமைகள், அரசியல் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்படும் ஆட்சியில் மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழமுடியும் என்று மனிதமுதல்வாதிகள் நம்புகிறார்கள். ஒரு நாட்டில், அல்லது ஒரு இன மக்களின் மனிதஉரிமைகள் பாதிக்கப்படும் போது அது மற்ற நாடுகளையும், மக்களையும் பாதிக்கிறது என்றும் இவர்கள் நம்புகிறார்கள். ஆகவே இவர்கள் உலகளாவிய அளவில் நல்லாட்சிக்கு ஆதரவளிக்கிறார்கள்.

சர்வதேசியவாதம் - மதமுதல்வாதம்

மதமுதல்வாதம் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு முதன்மையளிக்கும் ஆட்சியையும், மக்களையும் வகைப்படுத்துகிறது. இசுலாமிய நாடுகள், புத்தமத நாடுகள், இந்துமத நாடுகள், கத்தோலிக்க வத்திகான் நாடு ஆகியவை மதமுதல்வாத நாடுகளாகும்.

சர்வதேசியவாதம் - பொருள்முதல்வாதம்

பொருளாதாரமே எல்லா பிரச்சிகைளுக்கும் காரணம், பொருளாதார வளர்ச்சியும், வறுமையற்ற நிலையும் மக்களுக்கு நிம்மதியான, பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்வை தரும் என்று பொருள்முதல்வாதிகள் நம்புகிறார்கள். பொருள்முதல்வாதிகளை முதலீட்டு பொருளாதார ஆதரவாளர் (முதலாளித்துவ பொருளாதாரம்), பொதுவுடமை பொருளாதார ஆதரவாளர் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.

தமிழ் தேசியம்

தமிழர் இலங்கையில் நிம்மதியாக வாழமுடியாததற்கு சிங்களவரின் இனவெறியே காரணம் எனவும், ஆகவே தமிழருக்கு ஒரு தனியான தேசம் உருவானால் தமிழர் நிம்மதியாக வாழமுடியும் என்று நம்புவதும், செயற்படுவதும் தமிழ் தேசியவாதமாகும். இந்த நம்பிக்கையை தமிழர் அல்லாத பலரும் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். இதற்கு காரணம், இலங்கையில் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் நிம்மதியாக வாழவில்லை. ஜே.வி.பி. புரட்சி முதல் ஊடகவியலாளர் கொல்லப்படுவது வரை பெருமளவிலான சிங்களவர்களும் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். மேலும் பெருமளவில் வறுமையும், ஊழலும் இலங்கையில் காணப்படுகிறது. இது தவிர, தமிழர் மத்தியிலும் மோசமான மனிதஉரிமை மீறல்கள் பல்வேறு ஆயுதக்குழுக்களாலும், அரசியல்வாதிகளாலும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், தமிழர் தலைவர்கள் போதிய அளவு தூரநோக்கையும், ஆட்சித்திறனையும் வெளிக்காட்டவில்லை. இதனால், தமிழ்தேசியத்துக்கு பெருமளவில் உலகாளாவிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. மேலும், தேசியம் பொதுவாக ஒரு இனத்தின் சுயஈடுபாட்டுக்குள் கட்டுப்படுத்தப்படுவதனால் அதற்கு மற்ற இன, நாட்டு மக்களின் ஆதரவு கிடைப்பது கடினம்.

ஈழத்தமிழர் மனிதமுதல்வாதம்

ஈழத்தமிழரின் மனித உரிமைகள், சமூக உரிமைகள், அரசியல் உரிமைகள் பாதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து செயற்படுவதற்கு உலகளாவிய அளவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் முன்வந்திருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், பல உலக தலைவர்கள் மனிதமுதல்வாதிகளாக இருக்கிறார்கள். இவர்களுள் அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிடத்தக்கவர்.

மனிதமுதல்வாதிகள் ஒரு இனத்தின் தேசியவாதம் அதன் பிரச்சினைகளை தீர்த்துவிடும் என்று நம்பாத காரணத்தால், தமிழ் தேசியத்துக்கு அவர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள். மாறாக, இலங்கையில் உள்ள மக்கள் தமது மனித உரிமைகள், சமூக உரிமைகள், அரசியல் உரிமைகளுடன் வாழ எவ்வாறாக நல்லாட்சியை உருவாக்கலாம்? என வழி தேடுகிறார்கள். இந்த முயற்சிக்கு தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களிடம் ஆதரவு குறைவாகவே இருக்கிறது. இதற்கு காரணம், ஈழத்தமிழர் தீவிரமாக தமிழ் தேசியத்தை ஆதரிப்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெண்டா ஒரு மண்ணும் விளங்கேல்ல. எங்களுக்கும் விளங்கிற மாதிரி கருத்தாடுங்கோவன். நாங்களும் எங்கட பாமரக் கருத்துகளையும் சொல்லுவம் இல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையை மூன்று தரம் படித்தால் கொஞ்சம் விளங்கும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67111

  • கருத்துக்கள உறவுகள்

name='sukan' date='22 December 2009 - 05:49 PM' timestamp='1261504167' post='556660']

நீங்கள் இன்னும் கிணற்றில் இருந்து வெளியே வரவில்லை என்னும் போது பரிதாபமாக இருக்கின்றது. இனம் சிங்களவனுக்கு அடிமையாய் கிடக்கின்றது. பிடிபட்ட பெண்போராளிகள் வரிசையில் அம்மணமாக நிற்கவிட்டு பைப்பால் தண்ணியடிச்சு குளிக்கவார்க்கின்றான் சிங்களவன். உங்களுக்கு மேற்பார்வையில் கீழ் ஒண்டும் செய்ய முடியாதோ? கெளரவம்? இந்த மனநிலையோடு உங்களால் சொந்த தாயகத்திற்கு செல்ல முடியாது. ஏனெனில் சிங்களவனை கடந்து தான் செல்ல வேண்டும். புலத்துத் தேசியம் செத்தவனிடம் பேரம் பேசுகின்றது என்பதை மறக்கவேண்டாம். எமக்கு மக்கள் முக்கியமில்லை. சித்திரவதைப்படும் போராளிகள் முக்கியமில்லை. எமது அடிமை நிலையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏற்றுக்கொள்ளாதவரை அதிலிருந்து மீள்வதற்கான சிந்தனையும் வரமாட்டாது. சில மாதங்களுக்கு முன்னர் புறநிலை அரசு குறித்து ஒரு திரியில் எமக்கான மனித உரிமைகளுக்கா போராடும் ஒரு அமைப்பே இப்போது அவசியம் அதுவே பின்னாளில் புறநிலை அரசாக மாறமுடியும் என்ற கருத்தை வலியுறுத்தியபோதும் இவ்வாறான எதிர்வினைதான் வந்தது. இப்போதும் எனது கருத்து எமது எமக்கும் எமது தாயகத்துக்குமான உறவுப்பாலம் அமைப்பது அவசியம் என்பது தொடர்பானதே. அதற்காக நாம் சில அனுசரிப்புகளையும் மாற்றங்களையும் செய்யவேண்டும் என்பது தொடர்பானதுதான்.

இலங்கையிலும் இந்தியாவிலும் விழையும் தேயிலை அரிசியின் விலையை தீர்மானிப்பது இலங்கையனோ இந்தியனோ இல்லை மாறாக ஏகாதிபத்திய நாடுகளே. சிங்களப் பேரினவாதத்தாலும் இந்திய அதிகாரவர்க்கத்தாலும் இந்தத் தீர்மானிப்புகளில் மாற்றத்தை செய்ய முடியாது. நாம் சிங்களவனுக்கு அடிமையாக்கப்பட்டதற்கு சிங்களவன் ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக இருப்பது காரணமாகின்றது. சீனா கோதுமை உற்பத்திச் தொழிற்சாலைகளையும் நிறுவி பாண் போடும் வெதுப்பக உபகரணங்களையும் இலங்கைக்கு அள்ளி வழங்கியது. அங்கு உற்பத்தியாகும் பொருட்களை மக்கள் உண்பதை தவிர்த்து பாணை உண்ணப்பழகினார்கள். என்னுமொரு இத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் இலங்கையில் நுகரவைக்கப்பட்டு சீனாவின் பொருளாதாரம் செழிக்கின்றது. இலங்கையின் உற்பத்திப் பொருட்கள் மதிப்பற்றுப்போகின்றது. இதற்கு இலங்கை உடன்படுகின்றபோது மனிதாபிமானத்தைக் கடந்து சீனா எம்மை ஒழிக்க இலங்கைக்கு துணைநிற்கின்றது. இதே போல் இந்தியா உட்பட ஒவ்வொரு நாடுகளும் தங்களது நலன்கள் சார்ந்தே இலங்கைக்கு ஆதரவை வழங்குகின்றது. எமக்கு ஆதரவு வழங்க எம்மிடம் என்ன இருக்கின்றது? ஆதரவில்லாமல் எம்மால் என்ன செய்ய முடியும்? நாம் தொண்டைகிழிய கத்தினாலும் உடலை எண்ணை ஊற்றி எரித்தாலும் மனிதாபிமானத்திற்காக தர்மத்துக்கு உட்பட்டு நீதிக்குத் தலைவணங்கி எமக்கொரு தீர்வை பெற்றுத்தர எந்த நாடும் முன்வராது. இது அனுபவம். அதனால் முன்வரும் நாடுகளுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. இன்று தமிழர் தாயகப்பகுதிகளின் வழங்கள் வேறு நாடுகளுக்கு தாரைவாரக்கப்படுகின்றது. பெரும் எண்ணிக்கையான பகுதிகள் மக்கள் இன்றி இருக்கின்றது. புலம்பெயர் சனம் முடிந்தளவு முதலீடுகளை இலங்கையில் செய்ய முன்வரவேண்டும். பிரதேசத்தை இழந்தபின் பிரதேசத்திற்கும் எமக்குமான தொடர்பு அறுந்தபின் எந்த அடிப்படையில் தேசியம் உயிர்வாழும்? நாடுகடந்த அரசாங்கத்தை இங்கேன உருவாக்கி எங்கே கொண்டுபோய் நிறுவுவது? வட்டுக்கோட்டை என்ற ஊர் இல்லாமல் போனபின் அந்த தீர்மானத்தை வைத்து என்ன செய்ய முடியும்? என்னும் எத்தனை நாளைக்கு புலத்தில் கத்த முடியும்? இந்தத் தலைமுறை கடந்தபின் இந்தக் கத்தல் கூட இருக்காது.

உங்கள் தேசிய உணர்ச்சிகளுடன் என்னால் மல்லுக்கட்ட முடியாது. எனக்கு சரி என்று பட்டதை எழுதினேன் தவிர எனது கருத்தை ஏற்கவேணும் என்ற எதிர்பார்ப்பு எதுவும் என்னிடம் இல்லை.

கண்ட காவாலி கையில் கொம்ப்யூட்டெர் கிடைத்தால் இப்படித்தானுங்கோ இருக்கும்.... :)

எனக்கெண்டா ஒரு மண்ணும் விளங்கேல்ல. எங்களுக்கும் விளங்கிற மாதிரி கருத்தாடுங்கோவன். நாங்களும் எங்கட பாமரக் கருத்துகளையும் சொல்லுவம் இல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.