Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள் !

அண்மையில் யாழ்ப்பாணம் சென்று நேற்று நாடு திரும்பிய எனது நண்பர் ஒருவருடன் கதைக்கும் சந்தர்ப்பம் இன்று காலை கிடைத்தது. அவர் கொழும்பிலிருந்து நேற்று மாலைதான் வந்திருந்தார்.அவரிடம் யாழ்ப்பாணத்து இன்றைய நிலமைகள், தேர்தல் நிலவரம், கொழும்பு நிலை என்று விபரங்களைக் கேட்டு அறிந்துகொள்ளலாமே என்று பேசத் கொடங்கினேன்.

முதலாவதாக யாழ்ப்பாணம் பற்றிக் கேட்டேன்.

தான் விமானத்தில் போய் வந்ததால் ஏ 9 வீதியைப் பார்க்க முடியாமல்ப் போய்விட்டது என்று தொடங்கினார்." இப்போது 8 மணித்தியாலத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகலாம், வீட்டில ஏறினால் அங்க போய் இறங்க வேண்டியதுதான், வழியில எந்தச் செக்கிங்கும் இல்லை". " ஏ 9 ரோட் இப்ப முழுவதுமா திறந்து கிடக்கு, யாழ்ழ்ப்பானத்துக்க போனால், அங்க தமிழ், சிங்களம், முஸ்லீம் எண்டு எல்லாச்சனமும் நிக்குது, கொழும்பு மாதிரித்தான். அங்கையில்லாத சாமான் இல்லை, கடையெல்லாம் சாமான் குவிஞ்சுபோய்க் கிடக்குது" என்று சொன்னார்."

சரி, சனம் என்ன சொல்லுது, புலிகள் பற்றி என்ன அபிப்பிராயம் எண்டு கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார், " சனத்துக்கு இப்ப புலிகள் பற்றியே நினைவில்லை, இவ்வளவு காலமும் சனம் பட்ட கஷ்ட்டம் எல்லாத்துக்கும் காரணம் புலிகள்தான் எண்டுதான் சனம் கதைக்குது. இப்பத்தான் சனம் செல்லடி, சுற்றிவளைப்பு, கைது செய்யுறது எண்டு எதுவுமேயில்லாமல் நிம்மதியா இருக்குது" எண்டார்.இப்ப பள்ளிக்கூடங்களிலேயும் சின்னவகுப்பில இருந்து சிங்களம் படிப்பிக்கிறாங்கள், சின்ன பொடியள் பெட்டையள் எண்டு சனம் வீடுகளிலேயும் சிங்களம் படிச்சுக்கொண்டு பாட்டும் பாடிக்கொண்டு திரியுது. ஆமிக்காரனும் போலீஸ்காரனும் சென்ட்ரீ குப் போகும்போது பஸ்ஸிலதான் போறாங்கள், அங்க சனம் அவங்களோட நல்ல சிங்களத்தில கதைசுக்கொண்டு போகுது".

"ஒருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து தெல்லிப்பழைக்கு போகும்போது பஸ்ஸுக்க ஒரு நோட்டீஸ் குடுத்தவங்கள், அதில " வெளிநாட்டில இருக்கும் 8 லட்சம் தமிழருக்காக இனியும் எம்மால் சிலுவை தூக்க முடியாது " என்று தலைப்பில புலம்பெயர் தமிழர் செய்யிற வேலையல அங்க சனம் கடும் கோபமாத்தான் பாக்குது" என்று சொன்னார்."வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த சனம்" எண்டு அதில போட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

  • Replies 100
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி, இனி தேர்தல் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம் என்று அவரை வினவினேன். "சனமெல்லாம் சரத்துக்குத்தான் முழு ஆதரவும் குடுக்குது, மகிந்தவை வர விடமாட்டம் எண்டுதான் சொல்லுதுகள், சரத் தான் வந்து செக்கிங்க், சென்ட்றிப் பொயின்ற் எல்லாம் அகற்றப்போறன் எண்டு சொல்லிப்போட்டார், அதனால் சனத்துக்கெல்லாம் நல்ல சந்தோஷம்."மகிந்த சிலநேரம் தேர்தல் முடிஞ்ச கைய்யோட எ 9 ஐ திருப்பிப் பூட்டினாலும் பூட்டிப் போடுவான் எண்டு சனம் பயப்படூது. அதுதான் சரத்துக்கு வாக்களிக்கப் போகுதாம்" என்று சொன்னார்." நாங்கல் கீரிமலை, அங்க இங்க எண்டு எல்லா இடத்துக்கும் போட்டு வந்தனாங்கள், மயிலிட்டி, தைய்யிட்டி எண்டு எல்லா இடங்களுக்கும் சனம் போய் வரூது". "புலிகளும் புலம்பெயர்ந்த தமிழரும் இல்லாட்டி சனத்துக்கு நல்ல நிம்மதி, அவர்களால தான் இவ்வளவுகாலமும் பிரச்சனை" எண்டுதான் சனமெல்லாம் கதைக்குது எண்டு இறுதியாகச் சொல்லி முடித்தார்.

எனக்கு என்ன சொல்வதெண்ரே தெரியவில்லை. சரியண்ணை, பிறகு கதைக்கிறேன் என்று தொலைபேசிய நிறுத்தினேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:) சிங்களவருடன் மகிழ்ச்சியாக இப்போது இருக்க முடியுமென்றால் எதற்கு முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் தமிழ் ஈழம்தான் எமக்கு வேன்டும் என்று இந்தச் சமூகம் அறைகூவல் விடுத்தது? எதற்காக அந்த 150,000 சனத்தையும், 30,000 போராளிகளையும் சாகக் குடுத்தோம்? அப்பவே இந்த ஞானம் இருந்திருந்தால் இந்த 180,000 மக்களையும் காப்பற்றியிருக்கலாமே??

பிரபாகரனால தான் இவ்வளவு அழிவும், நிம்மதியின்மையுமென்றால், அவர் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த பிரச்சினையெல்லாம் தீர்ந்து விட்டதா? அல்லது பிரபாகரனும் அவரது புலிகளும்தான் உண்மையிலேயே பிரச்சனையா??

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்க்கு இப்போது என்ன பிரச்சனை? அவர்கள் வாழும் நாடுகளில் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் அவர்கலை இனக்கொலை புரிந்து தடை முகாம்களில் அடைத்து வைத்திருக்கின்றனவா?? அப்படியாயின் அவர்கள் எதற்காக இந்தப் போராட்டங்களையெல்லாம் செய்து வருகிறார்கள்?? பணமும் நேரமும் மிஞ்சிக் கிடப்பதாலா?? தாயகத்தில் வாழும் மக்களுக்கு ஒரு நீதியான சுதந்திரமான வாழ்வு கிடைக்க வேன்டுமெந்தற்காகத்தானே??

தாயக மக்களுக்காக புல்மபெயர் மக்கள் குரல் கொடுக்க வேண்டாம் என்றாலோ, அல்லது அவர்கள் அப்படிக் குரல் கொடுப்பது விரும்பப் படவில்லை என்றாலோ பாதிக்கப்படப்போவது யார்?

புலம்பெயர் தமிழரும், புலிகளும்தான் தாயக மக்களின் சிங்கள்வருடனான தோழமைக்கு முட்டுக்கட்டை என்றால் நாம் விலகிக் கொள்கிறோம். அப்போது நிம்மதி கிடைக்கும். இவ்வளவு காலமும் நடந்த தியாகங்களும், ரத்தக் குளியல்களும் வீண் விரயம்தானே??!! சிங்களவர்கள் எவ்வளவு நல்லவர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

நோட்டீசு ஈபிடிபி குடுத்ததா இருக்கும்.அப்ப இனி வெளிநாட்டுக் காசு தேவையில்லையா?இது ஒரு புலி எதிர்பாளரின் கருத்தாகத்தான் இருக்க முடியும்.யாழ்ப்பாணம் வழமை போல இருக்குதெண்டு யுத்தம் உச்சக் கட்டத்தில் இருக்கும் பொழுதே இப்படிப் பட்ட ஆட்கள் கதைச்சவை.எல்லோரும் சிங்களத்தில கதைக்கினம் என்றால் யாழ்ப்பாணம் சிங்கள மாவட்டமா மாறி விட்டது என்றுதான் அர்த்தம். அங்கை இருக்கிற மக்களுக்காக புலம் பெயர்ந்த மக்களும் சிலுவை சுமக்கத் தயாரில்லை என்ற புலம் பெயர்ந்த மக்கள் ஒரு போதும் சொல்ல மாட்டினம்.அங்கையிருக்கிற மக்களும் சொல்ல மாட்டினம்.தமிழர் சுமந்த சிலுவையை இறக்கி வைச்ச மகிந்தவிற்கு தமிழ்மக்கள் எப்படி நன்றியைச் சொல்லப் போகினம் என்பதை வரும் 27ம் திகதி அறிந்து கொள்ளலாம்.நானும் யாழ்பாணத்திற்கு தொலைபேசியில் கதைத்த பொழுது எனது வயதான அம்மாவிடம் சொன்னேன் மகிந்தவிற்கு வாக்குப் போடாதேயுங்கோ என்று சொன்னேன. அதுக்கு அவ சொன்னா அது நடக்காது என்று.வேறு யாருக்குப் போடவேண்டும் என்று நான் கேட்கவும் இல்லை அவ சொல்லவும் இல்லை.சனம் நல்ல தெளிவா இருக்கு யாரும் குழம்பத் தேவையில்லை.

தமிழர் பலனற்றதால் பயனற்று வாழக் கூடாது. புலம் பெயர்ந்தோரின் செயற்பாடுகள் ஈழத்தமிழரைப் பாதிக்கவே கூடாது. அதனால்தான் தமிழர் பெரிய சிறுபான்மையினர் என்பதைக் கருத்திற் கொண்டு அவர்கள் அதிகாரத் தலைமையைத் தீர்மானிக்கும் வலுவுள்ளவர்களாக மாற்றம் பெற வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள் !

அண்மையில் யாழ்ப்பாணம் சென்று நேற்று நாடு திரும்பிய எனது நண்பர் ஒருவருடன் கதைக்கும் சந்தர்ப்பம் இன்று காலை கிடைத்தது. அவர் கொழும்பிலிருந்து நேற்று மாலைதான் வந்திருந்தார்.அவரிடம் யாழ்ப்பாணத்து இன்றைய நிலமைகள், தேர்தல் நிலவரம், கொழும்பு நிலை என்று விபரங்களைக் கேட்டு அறிந்துகொள்ளலாமே என்று பேசத் கொடங்கினேன்.

முதலாவதாக யாழ்ப்பாணம் பற்றிக் கேட்டேன்.

தான் விமானத்தில் போய் வந்ததால் ஏ 9 வீதியைப் பார்க்க முடியாமல்ப் போய்விட்டது என்று தொடங்கினார்." இப்போது 8 மணித்தியாலத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகலாம், வீட்டில ஏறினால் அங்க போய் இறங்க வேண்டியதுதான், வழியில எந்தச் செக்கிங்கும் இல்லை". " ஏ 9 ரோட் இப்ப முழுவதுமா திறந்து கிடக்கு, யாழ்ழ்ப்பானத்துக்க போனால், அங்க தமிழ், சிங்களம், முஸ்லீம் எண்டு எல்லாச்சனமும் நிக்குது, கொழும்பு மாதிரித்தான். அங்கையில்லாத சாமான் இல்லை, கடையெல்லாம் சாமான் குவிஞ்சுபோய்க் கிடக்குது" என்று சொன்னார்."

சரி, சனம் என்ன சொல்லுது, புலிகள் பற்றி என்ன அபிப்பிராயம் எண்டு கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார், " சனத்துக்கு இப்ப புலிகள் பற்றியே நினைவில்லை, இவ்வளவு காலமும் சனம் பட்ட கஷ்ட்டம் எல்லாத்துக்கும் காரணம் புலிகள்தான் எண்டுதான் சனம் கதைக்குது. இப்பத்தான் சனம் செல்லடி, சுற்றிவளைப்பு, கைது செய்யுறது எண்டு எதுவுமேயில்லாமல் நிம்மதியா இருக்குது" எண்டார்.இப்ப பள்ளிக்கூடங்களிலேயும் சின்னவகுப்பில இருந்து சிங்களம் படிப்பிக்கிறாங்கள், சின்ன பொடியள் பெட்டையள் எண்டு சனம் வீடுகளிலேயும் சிங்களம் படிச்சுக்கொண்டு பாட்டும் பாடிக்கொண்டு திரியுது. ஆமிக்காரனும் போலீஸ்காரனும் சென்ட்ரீ குப் போகும்போது பஸ்ஸிலதான் போறாங்கள், அங்க சனம் அவங்களோட நல்ல சிங்களத்தில கதைசுக்கொண்டு போகுது".

"ஒருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து தெல்லிப்பழைக்கு போகும்போது பஸ்ஸுக்க ஒரு நோட்டீஸ் குடுத்தவங்கள், அதில " வெளிநாட்டில இருக்கும் 8 லட்சம் தமிழருக்காக இனியும் எம்மால் சிலுவை தூக்க முடியாது " என்று தலைப்பில புலம்பெயர் தமிழர் செய்யிற வேலையல அங்க சனம் கடும் கோபமாத்தான் பாக்குது" என்று சொன்னார்."வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த சனம்" எண்டு அதில போட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆக இனி சிங்களம் கதைக்க தெரிஞ்சாத்தான் தமிழரோடை கதைக்கலாம் எண்டு சொல்லுறார். ம்ம்ம் தலைஎழுத்து! :)

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

ஆக இனி சிங்களம் கதைக்க தெரிஞ்சாத்தான் தமிழரோடை கதைக்கலாம் எண்டு சொல்லுறார். ம்ம்ம் தலைஎழுத்து! :)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நண்பரே

தமிழ் தெரிந்தால்தான் சிங்களவன் வாழலாம் என்பதற்காக நாம் முயற்சிக்கலாமே....

படிப்பும்

பணமும் இருந்ததால்தான்

காலணி ஆதிக்கங்கள் உருவாகின

என்னைப்பொறுத்தவரை

என்றுமே சொல்வது

சிங்களம் சிறுபான்மை இனம்

நாம் ஒன்றுபட்டால்...

புலம்பெயர் தமிழரும், புலிகளும்தான் தாயக மக்களின் சிங்கள்வருடனான தோழமைக்கு முட்டுக்கட்டை என்றால் நாம் விலகிக் கொள்கிறோம். அப்போது நிம்மதி கிடைக்கும். இவ்வளவு காலமும் நடந்த தியாகங்களும், ரத்தக் குளியல்களும் வீண் விரயம்தானே??!! சிங்களவர்கள் எவ்வளவு நல்லவர்கள்??

அதுக்கு நண்றி கடன் பட்டுத்தானே அந்த புலிகளை அழித்த இராணுவத்துக்கு தலைமை தாங்கின சரத்துக்கு வாக்கு போடப்போகிறம்...! தமிழன் எண்டதிலை நாங்கள் இதுக்காக பெருமைபட வேண்டாமோ....???

சரி, இனி தேர்தல் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம் என்று அவரை வினவினேன். "சனமெல்லாம் சரத்துக்குத்தான் முழு ஆதரவும் குடுக்குது, மகிந்தவை வர விடமாட்டம் எண்டுதான் சொல்லுதுகள், சரத் தான் வந்து செக்கிங்க், சென்ட்றிப் பொயின்ற் எல்லாம் அகற்றப்போறன் எண்டு சொல்லிப்போட்டார், அதனால் சனத்துக்கெல்லாம் நல்ல சந்தோஷம்."மகிந்த சிலநேரம் தேர்தல் முடிஞ்ச கைய்யோட எ 9 ஐ திருப்பிப் பூட்டினாலும் பூட்டிப் போடுவான் எண்டு சனம் பயப்படூது. அதுதான் சரத்துக்கு வாக்களிக்கப் போகுதாம்" என்று சொன்னார்." நாங்கல் கீரிமலை, அங்க இங்க எண்டு எல்லா இடத்துக்கும் போட்டு வந்தனாங்கள், மயிலிட்டி, தைய்யிட்டி எண்டு எல்லா இடங்களுக்கும் சனம் போய் வரூது". "புலிகளும் புலம்பெயர்ந்த தமிழரும் இல்லாட்டி சனத்துக்கு நல்ல நிம்மதி, அவர்களால தான் இவ்வளவுகாலமும் பிரச்சனை" எண்டுதான் சனமெல்லாம் கதைக்குது எண்டு இறுதியாகச் சொல்லி முடித்தார்.

சரத் வந்தால் தமிழ்ர் பிரச்சினை எல்லாம் தீர்ந்து போகப்போகுது எண்டுறார்...! அது சரி உந்த விசயம் சிங்களச்சனத்துக்கு தெரியுமோ...???

தமிழர் பிரச்சினையை தீர்க்க போகும் சரத்பொன்சேகாவை சிங்கள மக்கள் ஆதரிக்கினமோ....??

வாய் புளித்தவர்களின் பேச்சு

வரலாற்றைத் தீர்மானிக்காது.

போர் முடிந்தபின் நானும் இரண்டுமுறை சிறிலங்கா சென்றிருக்கிறேன்...

இரண்டுமுறையும் வவுனியா சென்று முகாம்களில் இருக்கும் மக்களையும் சந்தித்திருக்கிறேன்... யாழுக்கும் சென்றிருந்தேன்... எனக்கென்று அங்கு தெரிந்தவர்கள் யாருமில்லை... தந்தைவழி உறவினர் ஒருவரின் வீட்டில்தான் தங்கிருந்தேன்...

எனது நண்பர்களின் உறவினரையும் ஏனையோரையும் முகாமில் சந்தித்திருந்தேன்... எத்தனைபெறேன்று தெரியாது ஆனால் பலருடன் உரையாடடியுமுள்ளேன். அத்தனைபேரும் எந்த ஒரு இடத்திலும் புலிகளையோ போராட்டத்தையோ குறைகூறவில்லை...

எல்லோரும் தங்கள் தலைவிதியை நொந்தார்கள்.... முகாமில் சிலர் தாங்கள் புலிகளால் தான் தாக்கப்பட்டார்கள் என்றும் சொன்னார்கள்... அவர்களின் வார்த்தையில் கேளிக்குறியைத்தான் பார்த்தேன். ஆனாலும் அவர்கள் புலிகளை போற்றி பேசியதை நம்ப முடியவில்லை... இறுதி நேரத்தில் போலிகள் தாம் இறப்போம் என்றிருந்த வேலையிலும் தாக்கு சமைத்த கஞ்சியும் மருந்தும் கொடுத்து இறுதிவரை இருந்ததாகவும் நினைவிட்டு அகலாமல் சொன்னார்கள்... இவைகள் என்னும் என் நினைவை விட்டு அகலவில்லை...

நான் மீண்டும் செல்வேன்... என்னால் முடிந்தவரை அந்த மக்களுக்கு உதவி செய்வேன்... இதுவே என்னை சந்திப்படுத்டும்.

தயவுசெய்து துண்டுப்பிரசுரங்களை நம்பவேண்டாம்.... ஹெலியில் இருந்தும் எங்களுக்கு துண்டுபிரசுரம் போட்டவங்கள் தானே. இப்ப ஹெலி வேண்டாம் அதுதான் பஸ்சுக்குள் துண்டுப்பிரசுரம் கொடுக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஆட்களில் இன்னொரு வகையானவர்களும் இருக்கிறார்கள். மனத்தளவில் போராட்ட ஆதரவாளர்கள். ஆனால் வெளியில் பேசும்போது புளிச்சல் கதைதான் வரும். புலம்பெயர் நாடுகளிலேயே அவ்வாறான பலரைக் கண்டிருக்கிறேன்.

போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியபோது, இனிமேல் ஒன்றும் செய்ய ஏலாது. அவன் இப்படி, இவன் அப்படி என்று பேசியவர்கள். நடந்ததென்னவோ அதுதான். ஆனால் இவர்கள் ஆற்றும் எதிர்வினை பலரை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும். நான் அறிந்தவரை இவர்கள் இப்படிப் பேசுவதன் நோக்கம் ஒரு வேளை தோற்றுவிட்டால், நான் அப்பவே சொன்னன் பார்த்தியா என்கிற ஒரு சொல்லக்கூடிய ஒரு வாய்ப்புக்காகவே.

தமிழனின் காலைவாருவதற்கு தமிழனைக் கேட்டுத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெளிநாட்டில் இருந்து போனவர் வெளிநாட்டில் இருந்து போனவராகத்தான் அங்குள்ள மக்களுடன் பழகி இருக்கிறார் என்று புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலையில் தமிழீழம் பற்றி கேட்டால் வேறு என்ன சொல்வார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்கள்???

சிங்களவன் நல்லவன் என்று சனம் சொல்லவில்லை.நம்பிய இயக்கங்கள் நாசமறுத்ததைத்தான் சனம் சொல்லுது.

சிங்களவனிடம் இருந்து விடுதலை வேண்டித்தான் போராட்டம் தொடங்கியது பின்னர் இயக்கங்களிடம் இருந்து விடுதலை வேண்டி நின்றது சனம்.

வடக்கும் கிழக்கும் அதைத்தான் சொல்லி நிற்குது.

சிங்களவன்,இந்தியன் கொன்ற அளவிற்கு தமிழனை தமிழன் கொன்றொழித்தான்.

இயக்கங்களை விட எடுபிடிகளால் மக்கள் பட்ட துன்பம் அதிகம்.

புலம் பெயர்ந்தவன் நாடு வேண்டிநிற்கின்றான்.புலத்திலுள்ளவன் வாழ்வு வேண்டி நிற்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நாட்டிலுள்ள உறவுகளுடன் பேசுகின்றேன் வாய்விட்டுப் பேச முடியாத சூழலில் அவர்கள் இருந்தாலும் தேர்தல் காலத்தை ஒட்டிய இன்றைய நிலையை அவர்கள் நம்பத் தயாராகவில்லை. அத்தோடு இழப்பையும் அவர்கள் விழுங்கிவிட்டு இதுதான் வாழ்வு என்று நீண்ட காலத்திற்கு பயணிக்கக் கூடிய அளவிற்கு இன்றைய இடைவெளி அவர்களை ஆற்றுப்படுத்தவில்லை. ஒரு வேளை நான் பேசும் தாயக உறவுகள்தான் விதிவிலக்காகப் பேசுகிறார்களோ? நான் அறியேன்.

நான் பேசிய என் உறவுகள் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி தம்பி ..தலைவர் இருக்கிறாரா ..?? எங்கே என்று கூட சொல்ல வேண்டாம்..... இருக்கிறார் என்று மட்டும் சொல்லுங்கள் அது போதும் ..என்கிற தலைவரையும் மண்ணையும் உளமார நேசிக்கிற உறவுகளும் இன்னும் அதே யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள் ..

மேலே குறிப்பிட்ட நண்பர் சந்தித்த மக்கள் நாங்கள் போராடிய காலத்திலும் இருந்தார்கள் என்பதை மறக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறன் ...

இப்படியான மக்களுக்காக இன்னும் வன்னியில் சிலுவை சுமக்கும் மக்களை மறந்துவிடார்களா..??

Edited by அன்புச்செல்வன்

இன்னம் ஒன்றையும் சொல்லவேண்டும்..

கொழும்பில் உள்ள பல டமிலருடருடனும் அளவலாவ வேண்டிய ஒரு சூழல் இருந்தது... அண்மையில் இங்கிலாந்தில் வந்த ஒரு படித்த முதிய குழுவாம்.... இத்தனை காலமும் புலிகளின் வெற்றியில் வேடிகொளுத்தியதம்... புளிகல்லுக்காகவும் போராட்டத்துக்காகவும் இரவுபகல் பாராமல் நிதியும் பணியும் செய்த குழுவாம். ஆனால் எல்லா அறிமுகமும் முடிந்த பின்னர் புலிகளைப்பற்றி தூற்ற அவர்களுக்கு மேலும் வார்த்தை இல்லாமல் போனது... இதில் ஒரு சட்டத்தரணி தற்போது பயங்கரவாதம் முடிந்துவிட்டது நாம் ஏன் இன்னும் பயங்கர வாதிகளைப் பற்றி ஏசவேண்டும் என்று கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி...

இன்னொருத்தர் தமிழர்களும் புலிகளும் சிங்களவருக்கு இதுவரைக்கும் செய்த துரோகத்துக்கு கூட்டமிப்பின் ஊடாக பகிரங்க மன்னிப்பும் கேடக்வேண்டும் என்றும் சொன்னார்...

இன்னொருத்தரோ.. என்னைப்பார்த்து புலத்தல் உள்ள தமிழ் சனத்துக்குத்தான் வெளுக்கவேனுமாம்... நாம் புலத்தில் போராட்டம் நடத்தினதால் தான் இழப்பு அதிகமாம்....

அங்கு என்னுடன் விவாதித்தவர்கள் இங்கு இருப்பார்களோ எனக்குத்தெரியாது... இருந்தால் தங்கள் பக்க வாதங்களை முன்வைக்கட்டும். (நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விம்பவில்லை).

இதில் பலர் எனக்கு ஆசிரியர்களா இருந்து விடுதலையை போதித்தவர்கள்.... இன்னும் சிலர் முன்னைநாள் கொமுயுநிசுடுக்கள்... சிலர் எனக்கு முதியோர்கள்.

என்ன செய்வது கால் நக்கிப் பிழைக்கவேண்டும் என்றால் திருத்தமுடியுமா? என்னமொன்றும் தெரியும் வடக்கில் மக்கள் இவர்களுடன் இல்லையென்றும்.

ஒன்றுமாத்திரம் தெரியுது... இப்பிடி இன்னும் எத்தனையோ பெரைப்பார்க்கப் போறோமோ?....

  • கருத்துக்கள உறவுகள்

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்..

உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும் கூட மிதிக்கும்..

இந்தத் தத்துவத்தை தங்கள் உயிரைக்கொடுத்து போராடியவர்களுக்கு எதிராகவே சக தமிழன் பாவிப்பானாக இருந்தால், என்னத்தைச் சொல்லுறது?? :)

  • கருத்துக்கள உறவுகள்

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்..

உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும் கூட மிதிக்கும்..

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று

மானமுள்ள தமிழனுக்கு....... சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது

உண்மைதான் இ.கலைஞன்

நெஞ்சைச்சுடும் உண்மை இது.....

பெருமூமூச்சு மட்டுமே மிச்சமாகிறது

வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள்

வன்னி மக்கள் இருக்கும் சூழல் சார்ந்தும் அவர்கள் பட்ட அவலங்கள் ஊடாகவும் அவர்கள் கருத்து நேர்மையானது. இவ்வாறான ஒரு முடிவெடுக்க அவர்களுக்கு முழு அளவிலான உரிமை உண்டு. அவர்கள் சிங்கள அட்சியாளர்களை அனுசரித்து அவர்களின் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுத்து எவ்வகையில் தம்மை மேம்படுத்து முடியுமோ அவ்வகையில் அவர்கள் நகர்வார்கள். புலம்பெயர்ந்த தமிழரின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே அவர்கள் வாழ்கையும் அது சார்ந்த முடிவுகளும் இருக்கும் இருக்கவும் வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயக மக்களுக்குமான தேசியம் சார்ந்த உறவுப்பாலம் என்பது புலிகள் கட்டமைப்பு ஆகும். இந்தக் கட்டமைப்பு உடைந்த பின் தேசியம் சார்ந்த இணைப்பு உடைகின்றது. தாயக மக்களும் புலம்பெயர்ந்த மக்களும் தேசியவாதம் குறித்து தனித் தனிப்பாதையில் பயணிக்கின்றனர். இதற்கு உண்மையாகவே முள்ளிவாய்க்காலில் புலிகளின் இறுதி முடிவோடு புலம்பெயர் தேசங்களில் போராட்டங்கள் முடிவுக்கு வந்தது. ஆனால் மக்கள் அவலங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தாயக மக்களிற்கும் புலம்பெயர் மக்களிற்குமான இணைப்பின் அவசியம் எவருக்கும் முக்கியமானதாக இருக்கவில்லை. இங்கே ஒரு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கோ அல்லது நாடுகடந்த அரசு குறித்தோ தாயக மக்களின் கருத்து அவசியம் என்பது குறித்து ஒருவருக்கும் அக்கறை இல்லை. புலம்பெயர் தமிழனின் தேவைகள் அரசு அதனூடாக பின்புல அடயாளம். வன்னி மக்களுக்கு தேவை வதைமுகாமில் இருந்து வெளியேறுதல் சிறையில் இருக்கும் பிள்ளைகளை மீட்டல் இழந்த வாழ்வை மீள கட்டுதல் வருடக்கணக்காக தொலைந்த கல்வியை சரிசெய்தல் என அவை சொல்லில் அடங்காது. வட்டுக்கோட்டைக்கும் வன்னி மக்கள் வாழ்வுக்குமான துரம் எவ்வளவு என்பது கற்பனை செய்ய முடியாதது.

வன்னி மக்கள் புலிகள் இருந்த காலத்தில் அனைத்து மக்களுக்குமாக சிலுவை சுமந்தார்கள். வன்னியில் இருந்த நான்கு லட்சம் மக்களும் நாற்பத்தைந்து லட்சம் மக்களின் விருப்புக்கான போராட்டத்தை தோழில் சுமந்தார்கள். இதற்காக அவர்கள் அனைத்தையும் இழந்தார்கள். சிங்கள பேரினவாதமும் தமிழீழ விருப்பு சார்ந்த போராட்டமும் அவர்களை நசுக்கியது. படிப்படியாக ஒரு நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்கள். கட்டாய ஆட்சேர்ப்பு அனைவரும் போராளியாகுதல் என்று அவை நகர்ந்தது. இவைகள் புலிகளின் தனித்த முடிவுகள் மட்டுமல்ல தமிழீழத்தை விரும்பிய அதே நேரம் அதிலிருந்து விலகிநின்ற தொண்ணுறு வீதத்துக்கும் மேற்பட்ட தமிழினின் மறைமுக முடிவும் இதுவாகும். வன்னி மக்களை வைத்து எப்படியாவது தமிழீழம் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணமே தமிழ்த்தேசியத்தின் செயல்நிலையாக இருந்தது என்பதை எவன் மறுக்க முடியும்?

இவ்வாறான எண்ணங்களும் அது சார்ந்த நகர்வுகளும் இறுதியில் வன்னிமக்களை பலியிடுவதினூடாக சர்வதேசம் எம்பக்கம் திரும்பும் என்ற கணக்கை ஏற்படுத்தியது. அதன்படியே பலியிடப்பட்டார்கள் எஞ்சியவர்கள் இனியொரு முறைபலிக்கடாவாவதற்கு முட்டாள்கள் இல்லை. இதனர்த்தம் வன்னிமக்கள் தமது சுதந்திரத்திற்கு எதிரானவர்களோ தேசியத்திற்கு எதிரானவர்களோ என்பதில்லை மாறாக அவர்கள் அவர்களது சூழலை அடிப்படையாக வைத்து சுதந்திரம் நோக்கிப் பயணிப்பார்கள் தவிர லண்டன் கனடாவில் உள்ளவர்களின் விருப்பங்களிற்காக நிச்சயம் இல்லை என்பதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை விரும்பிய அதே நேரம் அதிலிருந்து விலகிநின்ற தொண்ணுறு வீதத்துக்கும் மேற்பட்ட தமிழினின் மறைமுக முடிவும் இதுவாகும். வன்னி மக்களை வைத்து எப்படியாவது தமிழீழம் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணமே தமிழ்த்தேசியத்தின் செயல்நிலையாக இருந்தது என்பதை எவன் மறுக்க முடியும்?

ஓங்கி தலையில் அடித்தமாதிரி வலிக்கிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது போன்ற ஒரு பதிலை எனது நண்பரிடமும் இருந்து நான் பெற்றேன், ஏனோ சொல்லவிரும்பவில்லை... நான் எழுதுகிற கருத்துக்களுக்காக (பக்கச்)சார்பான கருத்து என்று மற்றவர்கள் கருதுவார்கள் என்றபடியால்... ஆனால் அங்கிருந்து வரும் செய்தி பொதுவாக நிம்மதியும் , வாழ்வைப்பற்றிய நம்பிக்கையும் கொண்டவை ஆகும். நேரடியாகவும் மறைமுகமாகவும் புலம்பெயர்ந்த மக்களின் செயற்பாடுகளை விமர்சிக்கதவர்கள் இல்லை. இதில் ஒன்றை சொல்லவேண்டும், இங்கு வேறுபலரும் சொன்னபடி, மக்களில் நிகழ்காலத்தையிட்டு கவலைபாடதவர்களோ, எதிர்காலம் குறித்து கவலைபடாதவர்களோ இல்லை என்று சொல்லவில்லை...எல்லோரும் தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணஜம் எல்லாத்தையும் காத்தோடு விட்டுவிட்டு இருக்கிறார்கள் என்றில்லை....ஆனாலும் பலரும் நிகழ்காலத்தை பற்றி ஒருவித திருப்ப்தியுடன் இருக்கிறார்கள்...பிரதானமாக போர் ஓய்ந்ததால்..அதைத்தான் யாழ் ஆயர் சொல்லியதும்...ஆனால் அது ஒரு பெரிய விவாதமானதும் தெரிந்ததே....

ஆனால் சிலர்/ பலர் அதை தவறாகவே விளங்கிக்கொண்டிருக்கிறார்கள்......

உதாரணத்துக்கு,

""சரத் தான் வந்து செக்கிங்க், சென்ட்றிப் பொயின்ற் எல்லாம் அகற்றப்போறன் எண்டு சொல்லிப்போட்டார்,"" என்று சொன்னால்,

ஒரு ?வகையான புலம் பெயர்ந்த தமிழனின் (?Typical immigrant Tamil's) பதில்,

""சரத் வந்தால் தமிழ்ர் பிரச்சினை எல்லாம் தீர்ந்து போகப்போகுது எண்டுறார்...! அது சரி உந்த விசயம் சிங்களச்சனத்துக்கு தெரியுமோ...???"""

இதை எந்தவகையாக கருதுவது....அவர்கள் எப்பவும் யுத்த சுழலுக்குள் வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்னவகையான மனநிலை? அண்மையில் பார்த்த ஒரு Hindi படத்தில் (3 Idiots) வந்த ஒரு காட்சி...3 பேர் ( நெருங்கின நண்பர்கள்) சோதினைக்கு படிக்கிறார்கள், முழுக்காலமும் வாத்தியாரிடம் பேச்சு வாங்கி, திரத்துபட்டு, கஸ்ரப்பட்டு படிக்கிறார்கள் .... results வரும்போது அவர்களில் 2 பேர் அடிபட்டு பார்க்கிறார்கள்..( தங்கள் தங்கடையை (பெயரை ) முதலில் தேடி பார்க்கிறார்கள் ) அப்பா !! இருவரும் பாஸ்!!!! கடைசியாயம் , கடைசிக்கு முதலாவதையும்...நிறைந்த நிம்மதி...அப்பத்தான் மற்றையவரின் 3 வது ஆளின் நினைவு வருகிறது...திரும்ப ஓடிச்சென்று கடைசியாய் உள்ள பெயர் எல்லாம் பார்க்கிறார்கள்...அவரின் பெயர் இல்லை...ஒருவருக்கு மனம் தாங்கமுடியாத வேதனை...அந்த இடத்தை விட்டு விலகி ஓரமாக இருந்து கவலைப்படுகிறார் (நம்ம மாதவன் :) )....மற்றவர் ஏனோ லிஸ்ட் இல் முதலில் உள்ள பெயர்களையும் பார்க்கிறார்...என்ன ஆச்சரியம் அந்த மூன்றாமவர் அந்த வகுப்பிலேயே முதலாவதாய் வந்து விடுகிறார்...அதை பார்த்தவுடன்....அதை பார்த்தவரும் முர்ச்சையாகிவுகிறார்.... அதை மற்றவருக்கு சொன்னவுடன் அவருக்கும் அதே நிலை....பின்னணியில்/ ஏதோவகையில் சொல்லுகிறார்கள், இதுதான் typical இந்தியன் mentality என்று..எங்களுடன் சேர்ந்தவர்கள் கஸ்ரப்படால், எங்களை மறந்து உதவுவோம்..ஆனால் அவர்கள் ஏதாவது வகையில் முன்னுக்கு வந்தால்...அவர்களுடன் பகிர்ந்து கொள்ள தாயாராயில்லை....

ஆனால் இந்த உதாரணத்தில் உள்ளபடி இலங்கையில் தமிழர்கள் பொன்னும் மணியும் விளங்க சீரும் சிறப்புமாக வாழவில்லை...ஆனால் சிறிது நிம்மதி...ஏனோ அது பலருக்கு/சிலருக்கு பிடிக்கவில்லை....வேறு ஓரிடத்தில் சொல்லியிருந்தேன், யுத்த நிறுத்தம் வேண்டும் என்று சொல்லி போராடினோம், ஆனால் இப்ப யுத்தம் நின்றுவிட்டது எண்டால் அது ஏதே குறைபோல இருக்கு....நான் சொல்லவருவது இதுதான் , இனியும் எப்போதும் விடுதலையோ / போராட்டமோ அவர்கள் செய்யவேண்டும்..அதை நாங்கள் வழிமொழிய வேண்டும்...ஜெயபாலனின் ..கவிதையில் இருந்தபடி...புத்திசாலியின் கோட்டை நிலத்தில் தொடக்கி ஆகாயத்தில் முடியும்...நிலம் -தாயகம், ஆகாயம் -புலம். இவ்வளவு நாட்கள் சண்டைபிடித்தோம் என்பதற்காக, இனியும் சண்டை பிடிக்க தேவையில்லை... தேவையில்லாமல், தேவையில்லாத நேரத்தில்.

புலம் பெயர்ந்த தேசம் அடுத்த பயணத்திற்கான தயாரிப்பு வேலையில் ஈடுபடலாம், ஆனால் தாயகத்திற்கு இது ஒய்வு காலம்/ உறங்கு காலம்...அவர்கள் நீண்ட பயணத்தின் பயணிகள்..நாங்கள் பயணிகள் அல்ல நாங்கள் பயணப்பாதையில் உள்ள சிறு கொட்டில்கள்/ கூடாரங்கள் அவர்கள் தங்குவதற்கும்/ நீர் குடிபதற்கும், உணவு உண்ணவும் , உறங்கி சொல்லவும் மட்டுமே ..:( அவர்கள் உறங்குகிறார்கள் அது அவர்களின் தேவை , காத்திருப்போம் அவர்களுக்காய்....

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இதை சொன்னது உண்மையாகவே வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களா அல்லது யாழ் மக்களா எனத் தெரியவில்லை...

யாழ் மக்களாயின் அவர்கள் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டு சுய நலமாகவே இருக்கிறார்கள் என்னையும் சேர்த்து அவர்களை பொருட்படுத்த தேவையில்லை.[சிலர் விதி விலக்கு]

ஆனால் உண்மையாகவே வன்னியில் இருந்து இட‌ம் பெயர்ந்த மக்கள் தான் இதைச் சொல்லி இருந்தால் [அவர்கள் அப்படி சொல்லி இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்]

அவர்களுக்கு; புலிகள் வன்னியில் இருக்கும் போது நாங்கள் அவர்களையும் சேர்த்து தான் பார்த்துக் கொண்டோம்...இப்ப கூட‌ நாங்கள் அவர்களுக்கு எம்மால் ஆன உதவியை செய்து கொண்டு தான் இருக்கிறோம்.இதெல்லாம் அவர்களுக்கு தேவையில்லை என்றால் அவர்களால் சுயமாக இலங்கை அர‌சுட‌ன் இனைந்து வாழலாம் என்றால் பிறகு ஏன் எம் உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது...உட‌னே சில பேர் வருவார்கள் கணணி முன் இருந்து எதுவும் எழுதலாம் ஆனால் உயிரிழப்பது வன்னி மக்கள் தானே என ஆம் ஒன்றை இழந்து தான் இன்னொன்றை பெற முடியும் என் உறவுகளும் சேர்ந்து தான் பலியாகிறது அத்தோடு நாங்களும் இங்கிருந்து கஸ்ட‌ப்பட்டு உழைத்து தான் காசு அனுப்புகிறோம்.

புலம் பெயர்ந்த மக்களுக்காக அவர்கள் சிலுவை சுமக்க தேவையில்லை ஆனால் தங்களுக்காக சிலுவை சுமக்க வேண்டாமா..ஈழம் கிடைத்தால் புலத்தில் உள்ள‌ அரைவாசி மக்கள் ஊரில் போய் இருப்பார்களோ தெரியாது ஆனால் முழுமையாக அனுபவிக்க போவது ஊரில் உள்ள‌ மக்கள் தானே ...தேர்தல் நேர‌த்தில் அற்ப சுகங்களுக்காக போராட்ட‌த்தையே கொச்சைப்படுத்துகிறார்கள்...தேர்தல் முடிய கொஞ்சம் கொஞ்ச‌மாக சிங்கள‌வனோடு சேர்ந்து வாழலாமா இல்லையா என தெரிய வரும்.

எது எப்படி இருந்தாலும் வன்னியில் இருந்து இட‌ம் பெயர்ந்த மக்கள் இதை சொல்லி இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கப்போனால் புலத்திலுள்ள தமிழரை விட சிங்கள அரச பயங்கரவாதத்தைக் கண்டும் அனுபவித்தும் வருபவர்கள் தாயகத் தமிழர்களே.அவர்களே அதை மறந்துவிட்டு புலத்திலுள்ளவர்களால்த்தான் இவ்வளவு பிரச்சனையுமென்றால் என்ன சொல்வது ?

அப்படியானால், சுதந்திரமும், விடுதலையும் எமக்குத் தேவையில்லை என்கிற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டார்களா?? அல்லது எப்போதோ சுதந்திரம் கிடைத்துவிட்டதா?? புலத்திலுள்ளவர்களும் புலிகளும்தான் இவ்வளவு காலப் பிரச்சனைக்கும் காரணமென்றால் சிங்களவர்களால் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை என்றுதானே அர்த்தம்?!

இந்த மக்கள் கூட்டத்தை நம்பித்தானே ஒருவன் தனது குடும்பம் உற்பட 30,000 போராளிகளையும் பலிகுடுத்து இறுதியில் தன்னையும் ஆகுதியாக்கிவிட்டுப் போனான். இதுதானே நாம் காட்டும் நன்றித்தனம்?!

எங்களால் அடிமை வாழ்வு வாழ்வது அப்படி ஒன்றும் கடிணமான காரியம் இல்லை என்று தெரிந்திருந்தால் 1970 களிலேயே இந்த முடிவை எடுத்திருக்கலாமே?? ஏன் இவ்வளவு காலமும் காத்திருந்து இந்த முடிவை எடுத்தோம்?? அப்போதிருந்த சிங்களவனை விட இப்போதிருப்பவன் எப்படி நல்லவனாகி விட்டான்??

சிலருக்கு புலத்திலிருப்பவர்கள் தாயகத்தில் நிம்மதியான வாழ்வு மலர்வதை விரும்பவில்லை என்று சொல்லுமளவிற்கு ஞானம் இருக்கிறது. தொடர்ந்தும் தாயகத்திலுள்ளவர்களை போருக்குள் வைத்திருக்க வேன்டுமென்பதே எமது விருப்பம் என்று எழுதுகிறார். சரி, பரவாயில்லை, அவருடைய விளக்கம் அவருக்கு. அதே நேரத்தில் தாயகத்தில் உள்ளவர்கள் சிங்களவரின் ஆக்கிரமிப்பிற்கு உற்பட்டு அடிமை வாழ்வு வாழ்வதை அவர் மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார்.

தாயகத்திலுள்ளவர்களுக்கு எமது நடவடிக்கைகள் இடைஞ்சலாக இருக்கும் பட்சத்தில நாம் எல்லாவற்றையும் விட்டு விடலாம். அப்போது அந்த நிம்மதி வருகிறதா என்று பார்க்கலாம். ஆனால், ஒன்றுமட்டும் உண்மை, தாயகத்திலுள்ளவர்களுக்காக நாம் குரல் குடுக்காவிடில் எந்த நாயும் குரல் குடுக்கப்போவதில்லை. சிங்களவன் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.எந்தச் சாட்சியுமில்லாமல் அவன் தனது முற்றான ஆக்கிரமிப்பைத் தமிழர் தேசமெங்கும் நடத்துவான். நாம் கை கட்டிப் பார்த்துக்கொண்டிருக்க வேன்டியதுதான். சிங்களவன் விரும்புவதும் அதைத்தான். இறுதியில் எந்த சாட்சியுமில்லாமல் முழுத் தமிழ்த் தேசமும் அவனால் விழுங்கப்பட்டு விடும். தாயகத்திலுள்ளவர்களுக்கு வேன்டுமென்றால் இதன் தாக்கம் புரியாமலிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.