Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகத்தார் வீடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருபுறம் சீதனம் ஒழிக என்று கத்திக் கொண்டு மறுபுறம் கொடுக்கிறவையும் வாங்கிறவையும் தான் அதிகம்...! இ

அதே.. அதே.. இந்த நிலைமை தான் சாதிக்கும்.. இல்லை இல்லை என சொல்லிக்கொண்டு....

  • Replies 428
  • Views 38.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் வீடு அங்கம் 8

வணக்கம் கள உறவுகளே இந்த முகத்தார் வீட்டை நானும் இடையிலை மாறி எழுதிறதாலை ஒரு சின்ன விளக்கம் முகத்தாரது கதையின் தளம் ஊரில் நடப்பதாக போகும் எனது கதை வழமைபோல புலத்தில் நடப்பதாக போகும் அதனால் சாட்றீ குடும்பமும் முகத்தார் குடும்பமும் அடிக்கடி ஊருக்கும் அய்ரோப்பாக்கும் போய்வருவினம் நன்றி

சாத்திரியின் கை தொலைபேசி சிணுங்குகிறது

சாத்திரி : கலோ முகத்தான் என்னடாப்பா நாலைஞ்சு நாளா ஆளை காணேல்லை பிசியோ

முகத்தான் : ஓமடாப்பா சரி நாளைக்கு மனிசியையும் கூட்டிகொண்டு வீட்டுபக்கம்வாவன்

சாத்திரி : ஏன் ஏதும் விசேசமோ

முகத்தான் : ஓமடாப்பா நாளைக்கு என்ரை கலியாண நாள் அதுதானடாப்பா என்ரை சுகமோ துக்கமோ பகிர உன்னை விட்டா யார் இருக்கினம் இஞ்சை

சாத்திரி: சரி சரி விழங்கிது நாளைக்கு வாறன்

மறுநாள்மலை

சாத்திரி (கத்துகிறார்): முனியம்மா முனியம்மா... 2 மணித்தியாலமா வெளிக்கிடுறாய் நாங்கள் கலியாணத்துக்கு போகேல்லை முகத்தானின்ரை கலியாண நாளுக்கு போறம்

முனியம்மா: அய்யோ இந்த மனிசனேடை பெரிய ஆக்கினை உங்களை எத்தினை நாள் சொன்னனான் முனியம்மா எண்டு கத்தாதையுங்கோ எண்டு. அண்டைக்கும் இப்பிடித்தான் அந்த கலியாண வீட்டுக்கை நிண்டு முனியம்மா எண்டு கத்த எல்லாரும் திரும்பி பாக்க எனக்கு வெக்கமா போச்சுது

சாத்திரி : ஏனடி நீ பிறந்த உடைனை நானே வந்து உனக்கு பெயர் வைச்சனான் உன்ரை கொப்பர் கொம்மா தானே ஆசையா வைச்சவை

முனியம்மா :அது அந்த நேரம் என்ரை அப்பா தன்ரை அம்மான்ரை நினைவா வைச்சிட்டார் அதை இப்ப மாத்தி முனிஸ்..எண்டு ஸ்ரைலா கூப்பிடுங்கோ எண்டா அது உங்களிற்கு முன்வாய் பல்லு இல்லாததாலைவருகிது இல்லை

சாத்திரி : அதுக்கு இப்ப என்ன பல்லில்லை எண்டு நக்கல் அடிக்கிறியே

முனியம்மா : அதில்லையப்பா இனி என்ரை பேரை முனியம்மா எண்டு கத்தாமை ஸ்ரைலா மினிமா எண்டு கூப்பிட்டு பழகுங்கோ

சாத்திரி : என்ன மாவோ இந்த வயசிலை உனக்கு உது தேவை கெதியா வா

முகத்தாரின் வீடு

பொண்ணம்மா: வாங்கோ வாங்கோ முனியம்மா சாத்திரியார் இருங்கோ

பொண்ணம்மாக்கா குசினி பக்கமாக பாத்து கூப்பிடுகிறார்

பொண்ணம்மா : இஞ்சாருங்கோ சாத்திரியாரும் முனியம்மாவும் வந்திட்டினம் வெளியிலை வாங்கோ

முகத்தார் : அப்பளம் பொரிச்சு கொண்டு நிக்கிறனப்பா வர ஏலாது நீர் முனியம்மாவேடை கதைச்சு கொண்டு சாத்திரியை இஞ்சை அனுப்பும்

சாத்திரி : என்னடாப்பா வாசம் அந்தமாதிரியிருக்கு என்ன ஆடுபோலை

முகத்தான் : ஓமடாப்பா ஆடுதான் வாங்கினனான் ஆனால் என்னத்தை போட்டு காச்சினாலும் எங்கடை ஊர் கறி வாசமும் ருசியும் வராது

சாத்திரி : அதெண்டா உண்மைதான் ஊரிலை பங்கு ஆடு வாங்கி பனை ஓலையிலை கட்டியந்து மண்சட்டியிலை காச்சினாலே தனி ருசிதான்

முகத்தான் : சரி எங்கடை சாமான் அந்தா இருக்கு எடுத்து இரண்டு பேருக்கும் ஊத்து அவைக்கு அங்கை கொக்கா கோலா இருக்கு

சாத்திரி : சரி வேறை என்ன புதினம் சொல்லன்

முகத்தான் : என்ணெண்டா அண்டைக்கு உன்ரை கடைசி பெட்டை வந்தவள் வந்து நடந்தது எல்லாம் சொன்னாள் பாவமா கிடந்திது

சாத்திரி : அதுதானே பாத்தன் என்னடா கலியாண நாள் எண்டு இவ்வளவு அன்பா கூப்பிடுறாய் எண்டு இப்ப என்ன

முகத்தான் : கோவிக்காதையடாப்பா கொஞ்சம் நிதானமா யோசி அவள் ஒரு பெடியனை விரும்புறாளாம் அவளோடை படிச்சவன்தானாம் அதாலை கனகாலமா தெரியுமாம் நல்ல பெடியன் எண்டு வேறை சொல்லுறாள்........

சாத்திரி : நிப்பாட்டு நான் செத்தாலும் உது நடக்காது நடக்கவும் விட மாட்டன் எனக்கு தெரியும் கலியாணம் பண்ணி வைக்க அவை வளந்த உடைனை காதலும் கத்தரிக்காயும்

முகத்தான் :அட ஏனடாப்பா அந்த நேரம் நீ முனியம்மாக்கு பின்னாலை திரியேக்கை மட்டும் காதல் தெய்வீகம் புனிதம் இப்ப உங்கடை பிள்ளையள் விரும்புதண்ட உடைனை கத்தரிக்காய் புடலங்காயா மாறீட்டுதா??

சாத்திரி : அதில்லையடா ........

முகத்தார் :எதில்லை அதுகள் இஞ்சை வளர்ந்த பிள்ளையள் நினைச்சா தானக்கு வயது18 க்கு மேலையாயிட்டுது எண்டு சொல்லி போட்டு தன்ரை பாட்டிலை போக ஏலும் ஆனால் அந்த பிள்ளை உங்கடை மனம் நோகாமல் உங்கடை சம்மதத்தோடை செய்ய விரும்புது அதாலை தான் நீ உந்த துள்ளு துள்ளிறியா??

சாத்திரி : இல்லையடாப்பா அந்த பெடியன் வேதகார பெடியனாம் அதைவிட.....

முகத்தான் : ஓ அதுக்கென்ன இப்ப நீயா அந்த பெடியனோடை குடும்பம் நடத்த போறாய் அதுக்கு பிடிச்சிருக்கு செய்யட்டும் எடேய் வெளி நாட்டுக்கு வந்து வெள்ளை காரனை பாத்து கோட்டும் சூட்டும் போட்டு ரையும் கட்டிஇ கிளாசை முட்டி சியஸ் சொன்னா மட்டும் போதாது. சாதி மதங்களை விட்டு மனிசனை மனிசனா மதிக்கிற பண்பையும் அவனிட்டை இருந்து பழகுங்கோ

சாத்திரி : எண்டாலுமாடா நாளைக்கு எங்கடை சனத்திற்கு பதில் சொல்லவேணுமெல்லே

முகத்தான் : சனத்தை விடு அதுகள் வசதியா நல்லாயிருந்தா எங்கடை சனம் ஆகா ஓகோ எண்டும் .அந்த நேரம் வேலை வெட்டியில்லாத உன்னை நம்பி முனியம்மா உன்னோடை வரேல்லையே ஆனால் பெடியன் நல்ல வேலைசெய்யிறான் நல்ல சம்பளம் உன்ரை பெட்டைக்கும் நல்ல வேலை அதுகளும் நல்லா விரும்புதுகள் பேசாமல் சரியெண்டு சொல்லு

சாத்திரி : சரி நாளைக்கு சடங்கு சம்பிரதாயம் எண்டு வரேக்கை எந்த மதத்திலை செய்யிறதெண்டெல்லெ பிரச்சனை வரும்

முகத்தான் : பேந்தும்பார் உனக்கு ஞாபகம் இருக்கே மானிப்பாயிலை 83லை ஆமிகாரன் றோட்டாலை சுட்டு கொண்டு வரேக்கை றோட்டிலை நிண்ட நாங்கள் திடீரெண்டு பாஞ்சு மானிப்பாய் அந்தோனியார் கோயிலுக்குள்ளை போய் சுருவத்துக்கு பின்னாலை ஒளிச்சனாங்கள் அப்ப நீ யோசிக்கேல்லையா இது வேத கோயில் என்ணெண்டு போறதெண்டு எல்லாம் உங்கடை தேவையெண்டா எம்மதமும் சம்மதம் சம்பந்தம் எண்டு வரேக்கை மட்டும் சாதி சமயம் எண்டு சுயநலம் பாருங்கோ

பொண்ணம்மா : என்னப்பா ஏதோ கருகி மணக்கிது கதையெண்டா எல்லாத்தையும் மறந்திடுங்கோ

முகத்தான் : வெங்காயம் வெங்காயம்

பொண்ணம்மா : ஆரை வெங்காயம் எண்டுறியள் வரட்டே உங்கை

முகத்தான் : இல்லையப்பா பருப்புகறிக்கு வெங்காயம் தாழிக்கிறன் அதைதான் சொன்னனான்

சாத்திரி : நீயடாப்பா சரியான கில்லாடி சரி இப்ப என்ன செய்ய சொல்லுறாய்

முகத்தார் :பேசாமல் அதுகளின்ரை விருப்பபடி விடு அதுகள் வளந்ததுகள் அதுகளிற்கு நல்லது கெட்டது தெரியும் அதை விட்டிட்டு நீ ஒரு கலியாணத்தை செய்து வைக்கபோய் அது ஏதாவது பிரச்னையிலை முடிஞ்சா யோசிச்சு பார் உனக்கு காலமெல்லாம் கவலை அதாலை அந்த பெடியினரை குடும்பத்தோடையும் கதைச்சு நல்ல முடிவா எடு

சாத்திரி : எதுக்கும் மனிசியிட்டையும் ஒருக்கா கதைச்சிட்டு சொல்லுறன் அவளுக்கு சம்மதமோ தெரியாது

முகத்தார் : அது நீ கதைக்க தேவையில்லை என்ரை மனிசி கதைச்சிருக்கும் ஒருநிமிசம் உன்ரை மனிசிக்கு சம்மதமா இல்லையாண்டு அறிஞ்சு சொல்லுறன்

சாத்திரி : ஓ அப்ப நீ எல்லாம் பிளான் பண்ணிதான் என்னை வரசொல்லியிருக்கிறாய்

முகத்தார் (சத்தமாக): என்னப்பா சாப்பாடு முடிஞ்சுது முனியம்மாவை கேளும் சாப்பிடுவமோ எண்டு

பொண்ணம்மா : ஓமப்பா பிரச்சனையில்லை ஓமாம் சாப்பாட்டை போடுங்கோ

முகத்தார் :உன்ரைமனிசிக்கும் சம்மதமாம் பிரச்சனையில்லை

சாத்திரி : என்னடா சாப்பாடு போடட்டோ எண்டுதானே உன்ரை மனிசியை கேட்டனி கேட்டிட்டு என்ரை மனிசி கலியாணத்திற்குசம்மதம் எண்டுறாய்

முகத்தார் :அதைதான்ரா சொல்லுறது புருசன் பெண்சாதியின்ரை புரிந்துணர்வு எண்டு நான் என்னத்தை கேட்டனான் எண்டு மனிசிக்கு தெரியும்மனிசி என்ன பதில் சொன்னதெண்டு எனக்கு தெரியும் ஒரளையொராள் நல்லா புரிஞ்சு கொண்டா வார்த்தை கூட தேவையில்லை பாத்தாலே புரிஞ்சு கொள்ளலாம்

சாத்திரி :சரி சரி சாப்பாட்டை போடு எனக்கு அடிச்ச தண்ணி பாதி உன்ரை கதை பாதி இரண்டும் சேந்து தலையை சுத்திது இனியும் தாங்காது

சாத்திரி சாப்பிட்டு முடிய எழும்பி நடக்கேலாமல் தள்ளாட முனியம்மா அவரை தோளில் தூக்கி போய் காரில் கிடத்தி விட்டு காரை ஒடிக்கொண்டு போகிறார்

சாத்திரி :மினிமா அடி மினிமா

முனியம்மா : என்னப்பா

சாத்திரி : அடுத்தமாதம் என்ரை பெட்டைக்கும் அந்த பெடிக்கும் கலியாணம் காட் அடிக்க சொல்லு அதுமுடிய எனக்கும் உனக்கும் கலியாணம் சே அறுபதாம் கலியாணம்

முனியம்மா : இந்த மனிசன் எப்பவும்தண்ணியெண்டாதான் தெளிவா பேசும்

இந்த மனிசன் எப்பவும்தண்ணியெண்டாதான் தெளிவா பேசும்

:):):)

முனிஸ் என கூப்பிட பல்லு இல்லையா? ஹாஹாஹா

பொன்னம்மாக்கா முகத்தார் தாத்தாவின் கலியாண நாளுக்கு சுட்டியின் வாழ்த்துக்கள். வயது காணதுவிட்டாலும் மனசு ஒன்று இருந்தால் போதும் தானே தாத்தா வாழ்த்து சொல்ல? :P :P :P :P :P :P

  • தொடங்கியவர்

சாத்திரி உனக்கு தேவையில்லாத வேலை இப்ப என்னதுக்கு என்ரை கலியாண நாளை இஞ்சை போட்டனி சனம் பிச்ச தின்னப் போது............... முனியம்மாவை பேர் மாத்த சொன்னது பொண்ணம்மான்ரை வேலைதான் என்னை முகம்ஸ் எண்டு தொடக்கிவிட்டதும் அவள்தானே......

ஓ... முகத்தாரின்ர கல்யாண நாளா வாழ்த்துக்கள் முகத்தார்.. :P :P :P

  • தொடங்கியவர்

ஓ... முகத்தாரின்ர கல்யாண நாளா வாழ்த்துக்கள் முகத்தார்.. :P :P :P

தம்பி எங்கைப்பா போயிருந்தனீர் இஞ்சை களத்திலை எங்களுக்கு ஒரு கை குறைஞ்சுது ஊர் புதிகங்களை எழுதும் பாப்பம்...........

சாத்திரி முகத்தார் போலவே நகர்த்தி இருக்கிறீங்கள்..! அம்சமாகவும் அதேவேளை நகைச்சுவையாகவும் இருக்கு...! :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

சாட்றி உங்களைப்போல வயசு போன அப்பா அம்மாவையள் இருந்தினம் எண்டால் எங்களைப்போல 40வயசு இளைஞர்கள் யுவதிகள் கவலைப்படாமல் மதம், பார்க்காமல் லவ் பண்ணலாம், :) :wink: :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் சாத்திராயாரும் அந்த மாதிரி எழுதியிருக்கிறார் நல்ல கருப்பொருள். அது சரி முகம்ஸ்சும் பொன்ஸ்சும் பேசி வைச்சவையே.. ஓம் கலியாணம் செய்து வைக்கிறன் என்டாத்தான் சாப்பாடு இல்லாட்டால் அடிச்சுக்கலைக்கிறது என்று. பின்ன கதையைப்பாத்தா அப்படித்தான் தெரியுது. ம் ம் சாத்திரியார். பாவம் முனியம்மா.. முனிஸ் என்று கூப்பிடிறது தானே.. தொடருங்கோ இருவரும் உங்கள் வீட்டை.. :wink: :P

ஆஹா ஓஹோ :cry: :cry: :cry:

(இன்னும் வார்த்தைகள் கிடைக்கவில்லை)

ஆஹா ஓஹோ :cry: :cry: :cry:

(இன்னும் வார்த்தைகள் கிடைக்கவில்லை)

:):):):lol:

சாத்தியார் உங்க நடந்தை எழுதின மாரிக் கிடக்கு :P :lol::lol: :wink:

2 பேரும் கலக்கிறீங்கள்

வாழ்த்துக்கள்

:P :P :P :P :P :P :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு சாத்திரி அங்கிள்.. :):) வாழத்துக்கள்....நகைச்சுவையுடன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :):)...

நல்லா இருக்கு சாத்திரி

:P :):)...

நல்லா இருக்கு சாத்திரி

காய் ராகவா கவ் ஆர் யு யங்போய்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலோ சாத்திரி ஐயா என்ன இப்படிக் கலக்கிறீங்கள் :)

சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில் நீங்களும் தாத்தாவும் கெட்டிக்காரர்கள்தான் :) :P

தாத்தா எத்தனையாவது கலியாணநாள் 60 தாவதா 90 ஆவதா :wink:

சாத்திரி நல்ல கருப்பொருளுடன் நகைச்சுவையாக இருக்கின்றது. ம்ம் மேலும் தொடருங்கோ.

சாத்திரியார் நன்றிகள். என்ன தாத்தாமாருக்கு எல்லோரும் நகைச்சுவையில் பின்னுறிங்கள்....

நன்றிகள் சிரிக்க வைத்தற்கு

சாஸ்த், அருமையா எழுதுறிங்க. :) வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காய் ராகவா கவ் ஆர் யு யங்போய்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ம்ம்.. நான் நலமாய் இருக்கிறன். நீங்கள் நலமா?

இருவருடை நகைச்சுவையும் அருமையாக இருக்கிறது தொடர வாழ்த்துக்கள்.

சாத்திரி நீங்க கலியாணங் கட்டி மகிழ்வா வாழ்ந்தா காணுமா, எங்களையும் கொஞ்சம் வாழவிடுங்களன். :wink:

மதமா மனமா முக்கியம். மதம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வையும் நல்வழிப்படுத்தத்தானே தவிர வேறொன்றுமில்லை. இதில் அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தால் என்ன? மதமா திருமணம் செய்யப்போகிது....

இந்த மதத்தால் தம் வாழ்வினை இழந்த காதலர்கள் மகிழ்வோடா வாழ்கிறாார்கள். சமூகத்திற்காய், தாய் தந்தைக்காய் தம் கவலை மறைத்து வாழ்கிறார்கள். :idea:

சாத்திரி நீங்களும் முகத்தார் தாத்தா போல மிக நேர்த்தியாக நகர்த்தியுள்ளீர்கள். நீங்கள் எடுத்த கருப்பொருள் மிக நன்று. :P

நகைச்சுவையும் இரசிக்கக் கூடிவாறு மிக நன்றாாக இருக்கிறது.

:lol::lol::lol::lol::lol: :P :P :P :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் அருவி இப்பதான் தவழுறுறீர் அதுக்கை கலியாண அவசரமா நேரம் வரேக்கை முக்தானிட்டை குறிப்பை குடும் :P :P

பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் அருவி இப்பதான் தவழுறுறீர் அதுக்கை கலியாண அவசரமா நேரம் வரேக்கை முக்தானிட்டை குறிப்பை குடும் :P :P

இப்பயே உங்களப்போல ஆக்கள மாத்தினாத்தானே நாம வளந்து கலியாணம் கட்டும் போது குறுக்க வராம நிப்பினம். வளந்தாப்பிறகு பாப்பம் என்று விட்டா கட்டையிலதான் நமக்குக் கலியாணம் நடக்கும். :wink: :P :P :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.