Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக புத்தர் சிலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக தீடீரென புத்தர் சிலை முளைத்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள காளி கோயில் அரச மரத்தின் கீழ் திடீரென புத்தர் சிலை முளைத்துள்ளது.

வெள்ளை நிறத்திலான சிறிய புத்தர் சிலை நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்ப்பட்டுள்ளது.

எனினும் இன்று அச்சிலையைக் காணவில்லை என உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

யாழ் குடாநாட்டில் சிறீலங்கா அரசாங்கம் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை அழிக்கும் நவடிக்கை ஆரம்பித்துள்ளது என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

-பதிவு-

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சாரங்கள் அரசாங்கத்தை ஒன்றும் செய்யப் போவதில்லை. பதிலுக்கு அரசாங்கம் சொல்லும் பொலனறுவையில் இருந்து நுவரெலியா வரை இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றால் சிங்கள பெளத்த இனத்தேசியம் சீரழிகிறது.. இடித்துத் தள்ளுங்கள் என்று சிங்கள மக்கள் கேட்டால் என்ன செய்வது என்று..??!

ஒபாமா சொல்கிறார்.. பயங்கரவாத நிழலின்றி சிறீலங்கா மிளிர்கிறது என்று.

மன்மோகன் சொல்கிறார் சிறீலங்கா இப்போதுதான் சுதந்திரத்தை உணர்கிறது என்று. இப்படி இருக்கும் நிலையில்.. யதார்த்தப் புறநிலைகளுக்கு அப்பால் அமையும் தமிழர்களின் கூப்பாடு எந்த வகையில் தமிழர்களின் நிலைப்பாட்டை குரலை உலகம் நீதி என்று நம்பி ஏற்கும்..???! அப்படி ஏற்காமல்.. புத்தரும் பெருகாமல் நிற்கப்போவதில்லை.

கொழும்பை எடுத்துக் கொண்டால் கூட எத்தனையோ இந்து ஆலயங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் சிங்கள மக்களுக்கும் போய் வழிபாடு செய்கின்றனர். ஏன் அந்த மக்களுக்கு நல்லூரடியில் புத்தரை வைத்து பிரார்த்தனை செய்ய இடமளிக்கக் கூடாது என்று சிங்கள மக்கள் கேட்டால் தமிழர்கள் என்ன பதில் அளிப்பார்கள்..??!

கனடாவில்.. பிரித்தானியாவில்.. ஜேர்மனியில்.. பிரான்சில்.. டென்மார்க்கில்.. அவுஸ்திரேலியாவில்.. நோர்வேயில்.. இத்தாலியில்.. நியூசிலாந்தில்.. நாங்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் கோவில் கட்டி குடியையே குலைக்கலாம்.. கொழும்பில்.. நுவரெலியாவில்.. கண்டியில்.. சிலாபத்தில்.. மாத்தளையில் நாங்கள் கோவில் கட்டி கும்பாபிசேகம் பண்ணலாம்.. ஆனால் நல்லூரில்.. திருகோணமலையில்.. கிளிநொச்சியில்.. முல்லைத்தீவில்.. மட்டகளப்பில்.. மன்னாரில்.. புத்தருக்கு கோவில் கட்டுவது கூடாது..??!

இதில் நியாயம்.. அநியாயம் என்பதை பக்கச் சார்பின்றி நோக்குங்கள்..! இதுவிடயத்தில் ஒரு மயக்க நிலையில்.. தெளிவற்ற நிலையில் தமிழர்கள் எப்போதும் நடந்து கொள்கின்றனர்.

கொழும்பில் தமிழ் மக்கள் சிங்கள மக்களோடு சிங்கள தேசிய இனப் பிரதேசத்துக்குள் கூடி வாழ முடிந்தால்.. ஏன் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ முடியாது. தென்னிலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோரும் புறப்பட்டு வடக்குக்கிழக்கே எமது தாயகம் அங்கு மட்டுமே நாம் வாழப் போகிறோம் என்று கூறி வெளியேறத் தயாராக இருக்கிறார்களா..??! வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்றும் வாழும் இலங்கைத் தமிழர்கள் வடக்குக் கிழக்கு எமது தாயகம் அங்கு போய் தான் நாம் வாழ விரும்புகிறோம் என்று ஒட்டுமொத்தமாக ஊர்திருப்பத் தயாரா..???! இல்லவே இல்லை..! இந்த நிலையில்.. இவ்வாறான கூப்பாடுகளை உலகம் எவ்வாறு நியாயத்தின் பக்கம் வைத்து கண்ணுற முடியும்..???!

இந்த மயக்க நிலை தான் முன்னாள் அமெரிக்கத் தூதரைக் கூட 90% தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றனர் என்று காட்டி புலிகளை திட்டவட்டமாக பயங்கரவாதிகள் என்று காட்டச் செய்தது.

புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கி எமது போராட்டத்தைக் கேள்விக்குறியாக்கியதும் இதே தமிழர்கள் தான் என்பதையும் நாம் ஒரு தடவை எண்ணிப்பார்த்து கூப்பாடுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

1983 இற்குப் பிறகு கொழும்பில் கட்டி எழுப்பட்ட ஆலயங்கள் எத்தனை.. அத்தனையும் தமிழர்கள் இடிப்பார்களா...????! :unsure::lol:

எனக்கொன்னவோ இந்தக் கூப்பாட்டில் தமிழர்களிடம் நியாயம் இல்லை என்றே படுகிறது. ஏனெனில் அவர்கள் அந்த நியாயத்தை தக்க வைக்கும் தகுதியை தாமே இழக்கச் செய்துவிட்டனர். தமது கடந்த கால சுயநலச் செயற்பாடுகளால். எனிக் கூவி எந்தப் பயனும் இல்லை..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான நெடுக்...

அவனது ஆட்சி

அவனது ஆட்கள் இங்கு பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றார்கள்

எதிர்ப்பு சொல்ல எவராலும் முடியாது

அவன் கட்டாமல் விட்டால் அவன் மீண்டும் ஆட்சியேற முடியுமா..?

இழக்கக்கூடாததை இழந்த இனம் இப்படியெல்லாம் வீம்பு காட்டக்கூடாது பல்ராயிரக்கணக்கான மைல்கள்வெளியில் ஒழித்திருந்தபடி..

((கனடாவில்.. பிரித்தானியாவில்.. ஜேர்மனியில்.. பிரான்சில்.. டென்மார்க்கில்.. அவுஸ்திரேலியாவில்.. நோர்வேயில்.. இத்தாலியில்.. நியூசிலாந்தில்.. நாங்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் கோவில் கட்டி குடியையே குலைக்கலாம்.. கொழும்பில்.. நுவரெலியாவில்.. கண்டியில்.. சிலாபத்தில்.. மாத்தளையில் நாங்கள் கோவில் கட்டி கும்பாபிசேகம் பண்ணலாம்.. ஆனால் நல்லூரில்.. திருகோணமலையில்.. கிளிநொச்சியில்.. முல்லைத்தீவில்.. மட்டகளப்பில்.. மன்னாரில்.. புத்தருக்கு கோவில் கட்டுவது கூடாது..??!))

உண்மையிலும் உண்மை ----போகுமிடமெல்லாம் கோவில் கட்டுவது ஒரு ட்ரண்ட் ஆகி விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

கொழும்பை எடுத்துக் கொண்டால் கூட எத்தனையோ இந்து ஆலயங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் சிங்கள மக்களுக்கும் போய் வழிபாடு செய்கின்றனர். ஏன் அந்த மக்களுக்கு நல்லூரடியில் புத்தரை வைத்து பிரார்த்தனை செய்ய இடமளிக்கக் கூடாது என்று சிங்கள மக்கள் கேட்டால் தமிழர்கள் என்ன பதில் அளிப்பார்கள்..??!

கனடாவில்.. பிரித்தானியாவில்.. ஜேர்மனியில்.. பிரான்சில்.. டென்மார்க்கில்.. அவுஸ்திரேலியாவில்.. நோர்வேயில்.. இத்தாலியில்.. நியூசிலாந்தில்.. நாங்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் கோவில் கட்டி குடியையே குலைக்கலாம்.. கொழும்பில்.. நுவரெலியாவில்.. கண்டியில்.. சிலாபத்தில்.. மாத்தளையில் நாங்கள் கோவில் கட்டி கும்பாபிசேகம் பண்ணலாம்.. ஆனால் நல்லூரில்.. திருகோணமலையில்.. கிளிநொச்சியில்.. முல்லைத்தீவில்.. மட்டகளப்பில்.. மன்னாரில்.. புத்தருக்கு கோவில் கட்டுவது கூடாது..??!

------

நெடுக்ஸ்,

தமிழர் சிங்கள பகுதியில் கோவில் கட்டுவதற்கும், சிங்களவர் தமிழ் பகுதியில் கோவில் கட்டுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணரவில்லை போல் தெரிகின்றது.

தமிழர் கட்டும் கோவில் எல்லாம் சிங்களவரின் முக்கிய புத்த விகாரைக்கு அருகில் கட்டவில்லை.

தமிழர் கட்டிய கோவில்களால் சிங்களவரின் புத்த விகாரைகளுக்கு ஆபத்து ஏற்பட்டதென்று உங்களால் ஒரு உதாரணம் காட்ட முடியுமா?

சிங்களவர் வேண்டுமென்றே எமது முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு அருகில் விகாரைகளை பெரிதாக கட்டி, பழம் பெரும் கோவில்களின் முக்கியத்துவத்தை குறைத்தோ..... அல்லது காலப் போக்கில் அதனை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள்.

சிங்களவர் விகாரை கட்டினால், அதற்குப் பக்கத்தில் புதிய இராணுவ முகாமும் ஏற்படும் என்பது ஸ்ரீ லங்காவில் வழமை.

இதற்கு எமது தலை முறையில் கண்ட நல்ல உதாரணம் கதிர்காம கந்தன், திருக்கோணேஸ்வர சிவன் கோவில்.

மற்றும் மேற்கு நாடுகளில் கட்டப்பட்ட கோவில் எல்லாம் , அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் ஒதுக்கிய இடங்களிலேயே கட்டப்பட்டுள்ளது.

தான் தோன்றித்தனமாக கட்டவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பிரச்சாரங்கள் அரசாங்கத்தை ஒன்றும் செய்யப் போவதில்லை. பதிலுக்கு அரசாங்கம் சொல்லும் பொலனறுவையில் இருந்து நுவரெலியா வரை இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றால் சிங்கள பெளத்த இனத்தேசியம் சீரழிகிறது.. இடித்துத் தள்ளுங்கள் என்று சிங்கள மக்கள் கேட்டால் என்ன செய்வது என்று..??!

ஒபாமா சொல்கிறார்.. பயங்கரவாத நிழலின்றி சிறீலங்கா மிளிர்கிறது என்று.

மன்மோகன் சொல்கிறார் சிறீலங்கா இப்போதுதான் சுதந்திரத்தை உணர்கிறது என்று. இப்படி இருக்கும் நிலையில்.. யதார்த்தப் புறநிலைகளுக்கு அப்பால் அமையும் தமிழர்களின் கூப்பாடு எந்த வகையில் தமிழர்களின் நிலைப்பாட்டை குரலை உலகம் நீதி என்று நம்பி ஏற்கும்..???! அப்படி ஏற்காமல்.. புத்தரும் பெருகாமல் நிற்கப்போவதில்லை.

கொழும்பை எடுத்துக் கொண்டால் கூட எத்தனையோ இந்து ஆலயங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் சிங்கள மக்களுக்கும் போய் வழிபாடு செய்கின்றனர். ஏன் அந்த மக்களுக்கு நல்லூரடியில் புத்தரை வைத்து பிரார்த்தனை செய்ய இடமளிக்கக் கூடாது என்று சிங்கள மக்கள் கேட்டால் தமிழர்கள் என்ன பதில் அளிப்பார்கள்..??!

கனடாவில்.. பிரித்தானியாவில்.. ஜேர்மனியில்.. பிரான்சில்.. டென்மார்க்கில்.. அவுஸ்திரேலியாவில்.. நோர்வேயில்.. இத்தாலியில்.. நியூசிலாந்தில்.. நாங்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் கோவில் கட்டி குடியையே குலைக்கலாம்.. கொழும்பில்.. நுவரெலியாவில்.. கண்டியில்.. சிலாபத்தில்.. மாத்தளையில் நாங்கள் கோவில் கட்டி கும்பாபிசேகம் பண்ணலாம்.. ஆனால் நல்லூரில்.. திருகோணமலையில்.. கிளிநொச்சியில்.. முல்லைத்தீவில்.. மட்டகளப்பில்.. மன்னாரில்.. புத்தருக்கு கோவில் கட்டுவது கூடாது..??!

இதில் நியாயம்.. அநியாயம் என்பதை பக்கச் சார்பின்றி நோக்குங்கள்..! இதுவிடயத்தில் ஒரு மயக்க நிலையில்.. தெளிவற்ற நிலையில் தமிழர்கள் எப்போதும் நடந்து கொள்கின்றனர்.

கொழும்பில் தமிழ் மக்கள் சிங்கள மக்களோடு சிங்கள தேசிய இனப் பிரதேசத்துக்குள் கூடி வாழ முடிந்தால்.. ஏன் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ முடியாது. தென்னிலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோரும் புறப்பட்டு வடக்குக்கிழக்கே எமது தாயகம் அங்கு மட்டுமே நாம் வாழப் போகிறோம் என்று கூறி வெளியேறத் தயாராக இருக்கிறார்களா..??! வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்றும் வாழும் இலங்கைத் தமிழர்கள் வடக்குக் கிழக்கு எமது தாயகம் அங்கு போய் தான் நாம் வாழ விரும்புகிறோம் என்று ஒட்டுமொத்தமாக ஊர்திருப்பத் தயாரா..???! இல்லவே இல்லை..! இந்த நிலையில்.. இவ்வாறான கூப்பாடுகளை உலகம் எவ்வாறு நியாயத்தின் பக்கம் வைத்து கண்ணுற முடியும்..???!

இந்த மயக்க நிலை தான் முன்னாள் அமெரிக்கத் தூதரைக் கூட 90% தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றனர் என்று காட்டி புலிகளை திட்டவட்டமாக பயங்கரவாதிகள் என்று காட்டச் செய்தது.

புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கி எமது போராட்டத்தைக் கேள்விக்குறியாக்கியதும் இதே தமிழர்கள் தான் என்பதையும் நாம் ஒரு தடவை எண்ணிப்பார்த்து கூப்பாடுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

1983 இற்குப் பிறகு கொழும்பில் கட்டி எழுப்பட்ட ஆலயங்கள் எத்தனை.. அத்தனையும் தமிழர்கள் இடிப்பார்களா...????! :unsure::lol:

எனக்கொன்னவோ இந்தக் கூப்பாட்டில் தமிழர்களிடம் நியாயம் இல்லை என்றே படுகிறது. ஏனெனில் அவர்கள் அந்த நியாயத்தை தக்க வைக்கும் தகுதியை தாமே இழக்கச் செய்துவிட்டனர். தமது கடந்த கால சுயநலச் செயற்பாடுகளால். எனிக் கூவி எந்தப் பயனும் இல்லை..!

நெடுக்ஸ் அண்ணா நீங்கள் சொல்வது சரி தான். அப்படிப் பார்த்தால்,

இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிக்குள் வெளியே கொழும்பு,கண்டி,நுவரெலியா,மாத்தளை போன்ற பகுதிகளில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறார்கள்,சிங்கள,முஸ்லிம் மக்களுடன் ஜக்கியமாக வாழ்கிறார்கள் அதே போல புலம்பெயர்ந்த நாடுகளிலும் செய்கிறார்கள், அந்தந்த நாட்டு மக்களுடன் ஜக்கியமாக வாழ்கிறார்கள் என்றால் ஏன் தமிழர் தாயகப் பகுதியிலும்,இலங்கையிலும் தமிழர்கள் சிங்களவனுடன் ஒற்றுமையாக வாழமுடியாது??????

நீங்கள் மேற்கூறியது சரி என்றால் மஹிந்த சொன்னதும் சரி தானே?

அதாவது இலங்கையில் எந்த சிறுபான்மை இனமும் இல்லை அவர்களுக்கு என எந்த தீர்வும் தேவையில்லை,

ஜக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக பெரும்பான்மை இனம் அனுபவிக்கும் அத்தனை சலுகைகளும் வழங்கப்படும் என்றால். அதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா?

அப்படி என்றால் இவ்வளவுக்கும் காரணம் சிங்களவன் சொல்வது போல புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் என்று நீங்களும் நியாயப்படுத்துகிறீர்களா??(ஏனென்றால் மக்கள் ஒற்றுமையாக இருக்க புலிகள் தான் அதற்கு தடையாக இருந்தார்கள் என சிங்கள மக்கள் சொல்கிறார்கள் என்று அதையும் நியாயப்படுத்தலாம் தானே)

இல்லை என்றால் கிட்டத்தட்ட 30,35 வருடங்களின் பின் லட்சக்கணக்கான மக்களையும்,ஆயிரக்கணக்கான மாவீரர்களினதும்,போராளிகளினதும் இழப்புக்கு பின் தான் இப்படியான நிலை என்றால் இதுக்கு யார் காரணம்?????

.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக தீடீரென புத்தர் சிலை முளைத்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள காளி கோயில் அரச மரத்தின் கீழ் திடீரென புத்தர் சிலை முளைத்துள்ளது.

வெள்ளை நிறத்திலான சிறிய புத்தர் சிலை நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்ப்பட்டுள்ளது.

எனினும் இன்று அச்சிலையைக் காணவில்லை என உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

யாழ் குடாநாட்டில் சிறீலங்கா அரசாங்கம் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை அழிக்கும் நவடிக்கை ஆரம்பித்துள்ளது என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

-பதிவு-

கந்தனின் உண்டியலில் விழுவதில் கொஞ்சமாவது நமக்கும் கிடைக்குமென்றுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தனின் உண்டியலில் விழுவதில் கொஞ்சமாவது நமக்கும் கிடைக்குமென்றுதான்.

srilanka_coins1.jpg

சிங்களவர், கந்தனின் உண்டியலில் விழும் சில்லறை காசுக்கு ஆசைப்படுகின்றவர்கள் அல்ல, அவர்களின் நோக்கமே வேறு சிற்பி. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பெரிய விடயம். இதைவிடப் பெரிதாக எல்லாம் நடைபெறப்போகிறது என்பதை பேசாப்பொருளில் உள்ள புத்தரின் சீடரான இராவணனைப் பார்த்தால் தெரியவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிலை வருவது பெரிய விடயம் இல்லை. நயினாதீவில் பெரிய விகாரையே கட்டி இருக்கிறார்கள் தமிழர்கள் ஒன்றம் சொல்லவில்லை.சிங்கள இராணுவம் எமது பகுதியை விட்டு விலகட்டும்.அதன் பின் எத்தனை விகாரைகளையும் கட்டட்டும். நமது தமிழர் இராணுவம் ஒர போதும் சிங்களப் பகுதிகளை ஆக்கிரமித்தது இல்லை.சிங்களப் பகுதிகளில் தமிழர் வாழ்வதையும் தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத்தினர் ஆயுதங்களுடன் ஆக்கிரமித்து நிற்பதையும் ஒப்பிட முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலும் உண்மை ----போகுமிடமெல்லாம் கோவில் கட்டுவது ஒரு ட்ரண்ட் ஆகி விட்டது.

சகோதர் சிற்பி, சின்ன மாற்றம். போகுமிடமெல்லாம் கோவில் கட்டுவது ஒரு "பிசினஸ்" ஆகி விட்டது. சும்மா வந்து கமான சமண லமான சின் சாங் ருத்ராயா எண்டு சமஸ்கிருததில எடுத்து விடுறன் எண்டு அலம்பி போட்டு ஆயிரம் யுரோஸ் காசு பார்க்கினம்.

தமிழ் இனம் தழைப்பதற்கு முதலில் கோவில்களில் இந்த சம்ஸ்கிருத குப்பையை தூக்கி எறியவேண்டும்.

நான் இப்போது எனது நகரில் இருக்கும் மனித உரிமை நிலையத்திடம் பேசினேன். அவர்கள் மேற்கத்தைய மனித உரிமை சட்ட முறைப்படி ஒருவரை கோவிலுக்குள் பிரவேசிக்க தடை விதிப்பதோ அல்லது ஒரு "சாதியினர்" தான் பூஜை செய்யலாம் என்று கூறுவதோ தவறு என்று கூறினார்கள். மற்றும், தமிழ் கோவிலில், தமிழ் கடவுளுக்கு, எதோ ஒரு செத்த மொழியில் மந்திரம் கூறுவதும் தவறு என்று கூறினார்கள்.

எங்கட ஆய்யருக்கு இந்த வருடத்திற்குள் வக்கீல் நோட்டீஸ் போகப்போவுது. இது நானும் எனது நண்பர் மூவர் கூடி எடுக்கும் ஒரு முயற்சி. நீங்களும் உங்களது கோவில்களில் பேசி பார்க்கலாம் கேத்கவில்லைஎன்றால் வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாம் அல்லது வரி சுங்க நிலையத்தில் எப்படி காசு சுருட்டுகிரார்கள் எண்டு காட்டி கொடுக்கலாம்.

இங்கே எத்தனை பேருக்கு ஸ்ரீ - திரு பிரச்சினை பற்றி தெரியும்?

புத்த கோயில் பிடிக்காட்டால் போகாதேங்கோ...

இப்ப என்ன செய்யலாம்? சம்பந்தரை கூப்பிட்டு அறிக்கை விட்டால் சரிவருமா?

சத்தியாக்கிரகம் இருந்தால் சரிவருமா? வழக்குப்போட்டால்? ஊர்வலம் செய்தால்?

என்னதான் செய்யலாம்? இங்கயும் வேற இணையத்திலையும் போட்டு நல்லா பின்னூட்டல்கள் எழுதலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி உந்த குறுகிய மனப்பான்மையை விட்டுட்டு நல்லூருக்கு முன்னுக்கு புத்தர் சிலை வந்தால் அங்கயும் போய் கும்பிட்டுட்டு போக பழகிக்கொள்வது தான் நல்லது.

மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் ஒற்றுமையாக வாழ நினைப்பதே எதிர் காலத்திற்கு சிறந்தது.

இந்த விடயம் பற்றி காரசாரமான கட்டுரையே எழுதலாம் . நேரம் வரும்போது பார்ப்போம். எனக்கு என்னகவலை என்றால் இவர்கள் கட்டியுள்ள கோவில்கள் 50வருடங்களின் பின் என்னவாகுமென்பதே.

50 வருசத்தில ஒருவேளை புத்தர் நல்லூர் கோவிலுக்குள்ள shift ஆகி இருப்பார்...முருகன் ஆலமரத்துக்கு கீழ போய் இருப்பார்...ஏனென்டா 50 வருசத்தில யாழ்ப்பாணம் இருக்காது...யாப்பகுவ தான் இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் ஒற்றுமையாக வாழ நினைப்பதே எதிர் காலத்திற்கு சிறந்தது.

சிறு திருத்தம். ஒற்றுமை என்னும் பதம் இங்கே பல அர்த்தங்களைக் கொடுக்கிறது.

எனவே இவ்வாறு எழுதலாம்:

மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் சிங்களவனோடு இரண்டறக் கலந்து சிங்களவனாக வாழ நினைப்பதே எதிர் காலத்திற்கு சிறந்தது.

இங்கு சிங்களவனின் புத்தர் சிலை ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் சிலர், முதலில் தலதா மாளிகை, அனுராதபுரம் விகாரைகள், பொலநறுவை விகாரைகள், களனி விகாரை, ..... போன்றனவற்றின் முன்பாக, ஏன் கதிர்காம கந்தன் கோவிலின் அருகில் ஒவ்வொரு பிள்ளையார் சிலையை, ஒரு சிலுவையை வைத்துவிட்டு வந்து பேசட்டும் பார்க்கலாம்.

தமிழன் அரச காணியையோ, பொது காணியையோ, மற்றவர்கள் காணியையோ திருடி கோவில் கட்டுவதில்லை. தமது சொந்த காசில் வாங்கிய காணியில், தான் பெருமளவில் உள்ள இடங்களில் மட்டும் தான் கோவில்கள் அமைத்துள்ளான். மேலை நாடுகளிலும் காசு கொடுத்து வாங்கிய பூமிகளில் தான் கோவில்களை அமைத்து வருகிறான்.

சிங்களவன் தமிழர் கோவில்கள், சர்ச், பள்ளிவாசல் முன்பாக, காணிகளை, அவன் ஒருவன் கூட இல்லாவிட்டாலும், அபகரித்து புத்தர் சிலை வைத்துவருகிறான். அண்மையில், திருகோணமலை நகர், கோணேஸ்வரம் கோவில், கிளிநொச்சி, காங்கேசன்துறை, ..... என பல இடங்களில் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.

இது இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்பவர்களை எப்படி அழைப்பது? இப்படிப்பட்டவர்களால் தான் எம்மினம் அழிகிறது. இவர்கள் தமிழர் எனும் போர்வையில் யாருக்கு ஊழியம் செய்கிறார்களோ தெரியவில்லை?

பக்கச்சார்பின்மை என்ற போர்வையில் தம்மையும் ஏமாற்றி, ஊரையும் ஏமாற்றி வாழும் இவர்கள் - மிக ஆபத்தானவர்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

சிறு திருத்தம். ஒற்றுமை என்னும் பதம் இங்கே பல அர்த்தங்களைக் கொடுக்கிறது.

எனவே இவ்வாறு எழுதலாம்:

மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் சிங்களவனோடு இரண்டறக் கலந்து சிங்களவனாக வாழ நினைப்பதே எதிர் காலத்திற்கு சிறந்தது.

உதை பல கொழும்பு வாழ் வட கிழக்கு மற்றும் மலையக தமிழர்கள்

ஏற்கனவே நடைமுறை படுத்த துவங்கீட்டினம்.அவையின்ரை பிரச்சனை அவைக்கு.இன்னும் கொஞ்சகாலம் களித்து ஊருக்கு போனால் நாங்களும் எங்கள் சொந்தக்காரருடன் கதைப்பதுக்கு சிங்களம் தெரிந்தால்தான் கதைக்கலாம்.இங்கு சுவீசில் சகோதரங்களின் பிள்ளைகள்(ஒன்று விட்ட சகோதரங்கள்)ஒரே பாசையில் கதைக்க முடிவதில்லை.காரனம் கன்ரோன் பிரச்சனை.சரி தாய் மொழியில் கதைக்கலாம் தானே என்றால் பதில் :lol: என்ர கேள்வி என்ன என்றால் ஏன் இங்கு ஒரு நிலை.அங்கு வேறு நிலை.இது தீர்வு இல்லை. இது சரியும் இல்லை.ஆனால் ஏன் இந்த வேறுபாடு. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

தமிழர் சிங்கள பகுதியில் கோவில் கட்டுவதற்கும், சிங்களவர் தமிழ் பகுதியில் கோவில் கட்டுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணரவில்லை போல் தெரிகின்றது.

தமிழர் கட்டும் கோவில் எல்லாம் சிங்களவரின் முக்கிய புத்த விகாரைக்கு அருகில் கட்டவில்லை.

தமிழர் கட்டிய கோவில்களால் சிங்களவரின் புத்த விகாரைகளுக்கு ஆபத்து ஏற்பட்டதென்று உங்களால் ஒரு உதாரணம் காட்ட முடியுமா?

சிங்களவர் வேண்டுமென்றே எமது முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு அருகில் விகாரைகளை பெரிதாக கட்டி, பழம் பெரும் கோவில்களின் முக்கியத்துவத்தை குறைத்தோ..... அல்லது காலப் போக்கில் அதனை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள்.

.............

.............

மற்றும் மேற்கு நாடுகளில் கட்டப்பட்ட கோவில் எல்லாம் , அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் ஒதுக்கிய இடங்களிலேயே கட்டப்பட்டுள்ளது.

தான் தோன்றித்தனமாக கட்டவில்லை.

யாழ். மாநகரசபையின் அனுமதியின்றி பொருத்தமற்ற முறையில் தான்தோன்றி விகாரைகளோ, கோவில்களோ அமைக்கப்பட்டால் மாநகரசபை அவற்றை அகற்றுமாறு பொலிசுக்கு உத்தரவிடலாம். அப்படி உத்தரவிடாத மாநகரசபையை உத்தரவிடுமாறு வலியுறுத்தி மக்கள் நலன்விரும்பும் அமைப்புகள், வழக்கறிஞர்கள், கூட்டமைப்பு, சிவாஜிலிங்கம் எவராவது நீதிமன்றத்தில் வழக்கு போடலாம். நீதிமன்ற தீர்ப்பையும் பொலிஸ் அமுல்படுத்தாவிட்டால், பொலிசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடலாம். இவை எல்லாம் கந்தனை வழிபடும் தமிழர் தலைவர்கள் செய்யக்கூடியவை. இவற்றை செய்யாமல் அவர்கள் சிங்களவர்களை குறை சொல்லி என்ன பயன்?

சிங்களவர் விகாரை கட்டினால், அதற்குப் பக்கத்தில் புதிய இராணுவ முகாமும் ஏற்படும் என்பது ஸ்ரீ லங்காவில் வழமை.

இதற்கு எமது தலை முறையில் கண்ட நல்ல உதாரணம் கதிர்காம கந்தன், திருக்கோணேஸ்வர சிவன் கோவில்.

புத்தருக்கு ஏன் இராணுவ காவல்? யாழ்ப்பாணத்தில் 70களில் விகாரை இருந்தது. இராணுவ முகாம் அருகில் இருக்கவில்லையே? விகாரையும் சிங்களவரும் தாக்கப்பட்ட பின்னரே இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. தமிழர்கள் சிலப்பதிகார, மணிமேகலை காலத்தில் பௌத்தமதத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். கந்தரோடையிலும் மற்ற இடங்களிலும் உள்ள புராணகாலத்து எச்சங்கள் இதற்கு ஆதாரம். சிங்களவர் இந்து கோவில்களுக்கு போய் வழிபடுகிறார்கள். பௌத்தர்களாக இருந்த தமிழர்களுக்கு புத்தரில் ஏன் இந்த வெறுப்பு? சிங்கள, பௌத்த பேரினவாதிகளை வெறுப்பது நியாயம்: புத்தரை வெறுப்பது நியாயமா? புத்தரை தமிழர் மதித்தால், பௌத்த சிங்கள இராணுவம் கூட தமிழரை மதிக்கும் சாத்தியம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிங்களவனின் புத்தர் சிலை ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் சிலர், முதலில் தலதா மாளிகை, அனுராதபுரம் விகாரைகள், பொலநறுவை விகாரைகள், களனி விகாரை, ..... போன்றனவற்றின் முன்பாக, ஏன் கதிர்காம கந்தன் கோவிலின் அருகில் ஒவ்வொரு பிள்ளையார் சிலையை, ஒரு சிலுவையை வைத்துவிட்டு வந்து பேசட்டும் பார்க்கலாம்.

தமிழன் அரச காணியையோ, பொது காணியையோ, மற்றவர்கள் காணியையோ திருடி கோவில் கட்டுவதில்லை. தமது சொந்த காசில் வாங்கிய காணியில், தான் பெருமளவில் உள்ள இடங்களில் மட்டும் தான் கோவில்கள் அமைத்துள்ளான். மேலை நாடுகளிலும் காசு கொடுத்து வாங்கிய பூமிகளில் தான் கோவில்களை அமைத்து வருகிறான்.

  1. யாழ்ப்பாணத்தில் இருந்த விகாரையை தமிழன் 1983ல் உடைத்து நொறுக்கவில்லையா?
  2. மக்களின் வீடுகளை கைப்பற்றி தமிழன் ஆயுதக்குழுக்களின் முகாம்கள் அமைக்கவில்லையா?
  3. ஆயுதபலத்துடன் தமிழன் இருந்த காலத்தில் செய்யாததையா சிங்களவன் செய்துவிட்டான்?

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றம் வேலை செய்கிறது. மாநகரசபை இயங்குகிறது. தமிழன் காணியில் அடாத்தாக புத்தர்சிலை வைத்தால், தமிழ் வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், மாநகரசபை அங்கத்தவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் எல்லாருக்கும் குலைநடுக்கம், ஆக பொன்சேகாவுக்கு ஆதரவாக பேச மட்டும்தான் துணிச்சல் வந்தது என்றால், அது தான் தமிழர் தலைமை என்று நொந்துவிட்டு இந்த சிலை விவகாரத்தை மறக்க வேண்டியதுதான்.

சிங்களவன் தமிழர் கோவில்கள், சர்ச், பள்ளிவாசல் முன்பாக, காணிகளை, அவன் ஒருவன் கூட இல்லாவிட்டாலும், அபகரித்து புத்தர் சிலை வைத்துவருகிறான். அண்மையில், திருகோணமலை நகர், கோணேஸ்வரம் கோவில், கிளிநொச்சி, காங்கேசன்துறை, ..... என பல இடங்களில் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.

மக்களின் வீடுகளை கைப்பற்றி தமிழன் ஆயுதக்குழுக்களின் முகாம்கள் அமைத்தது போல என்று சொல்கிறீர்கள்.

சிங்களவர் தமிழரின் இந்து கோவில்களுக்கு போய் கும்பிடுவது போல, மணிமேகலை காலத்தில் பௌத்தராக இருந்த தமிழர்கள் புத்தர் கோவில்களுக்கு போக ஆரம்பித்தால், புத்தர்சிலை வைப்பவர்களுக்கு அதன் தேவை பெரிதாக படாது. ஒவ்வொரு இந்து ஆலயத்திலும் தமிழரே புத்தர்சிலையை வைத்துவிட்டால் சிங்களவருக்கு புத்தர்சிலை வைக்கும் ஆசையும் குறையும்.

இது இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்பவர்களை எப்படி அழைப்பது?

இப்படிப்பட்டவர்களால் தான் எம்மினம் அழிகிறது. இவர்கள் தமிழர் எனும் போர்வையில் யாருக்கு ஊழியம் செய்கிறார்களோ தெரியவில்லை?

பக்கச்சார்பின்மை என்ற போர்வையில் தம்மையும் ஏமாற்றி, ஊரையும் ஏமாற்றி வாழும் இவர்கள் - மிக ஆபத்தானவர்கள்!!!

எம்மினம் அழிந்தது, இந்திய உளவுப்பிரிவுடன் இந்துக்கள் என்ற போர்வையில் கூட்டுசேர்ந்து, தமிழ் இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கி, ஆயுதமயப்படுத்தி, கடைசியில் தண்ணியில்லாத முள்ளிவாய்க்காலில் கொண்டுபோய் ஆயிரக்கணக்கில் பலி கொடுத்தனால் தானேயன்றி, இங்கே வெளிநாட்டு பாதுகாப்பில் கருத்து சுதந்திரத்தை அனுபவிப்பவர்களால் அல்ல. தமிழினம் அழிந்ததற்கு தமிழ் அரசியல்வாதிகளும், ஆயுதக்குழுக்களின் தலைமைகளுமே காரணம்.

  1. யாழ்ப்பாணத்தில் இருந்த விகாரையை தமிழன் 1983ல் உடைத்து நொறுக்கவில்லையா?
  2. மக்களின் வீடுகளை கைப்பற்றி தமிழன் ஆயுதக்குழுக்களின் முகாம்கள் அமைக்கவில்லையா?
  3. ஆயுதபலத்துடன் தமிழன் இருந்த காலத்தில் செய்யாததையா சிங்களவன் செய்துவிட்டான்?

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றம் வேலை செய்கிறது. மாநகரசபை இயங்குகிறது. தமிழன் காணியில் அடாத்தாக புத்தர்சிலை வைத்தால், தமிழ் வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், மாநகரசபை அங்கத்தவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் எல்லாருக்கும் குலைநடுக்கம், ஆக பொன்சேகாவுக்கு ஆதரவாக பேச மட்டும்தான் துணிச்சல் வந்தது என்றால், அது தான் தமிழர் தலைமை என்று நொந்துவிட்டு இந்த சிலை விவகாரத்தை மறக்க வேண்டியதுதான்.

மக்களின் வீடுகளை கைப்பற்றி தமிழன் ஆயுதக்குழுக்களின் முகாம்கள் அமைத்தது போல என்று சொல்கிறீர்கள்.

சிங்களவர் தமிழரின் இந்து கோவில்களுக்கு போய் கும்பிடுவது போல, மணிமேகலை காலத்தில் பௌத்தராக இருந்த தமிழர்கள் புத்தர் கோவில்களுக்கு போக ஆரம்பித்தால், புத்தர்சிலை வைப்பவர்களுக்கு அதன் தேவை பெரிதாக படாது. ஒவ்வொரு இந்து ஆலயத்திலும் தமிழரே புத்தர்சிலையை வைத்துவிட்டால் சிங்களவருக்கு புத்தர்சிலை வைக்கும் ஆசையும் குறையும்.

எம்மினம் அழிந்தது, இந்திய உளவுப்பிரிவுடன் இந்துக்கள் என்ற போர்வையில் கூட்டுசேர்ந்து, தமிழ் இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கி, ஆயுதமயப்படுத்தி, கடைசியில் தண்ணியில்லாத முள்ளிவாய்க்காலில் கொண்டுபோய் ஆயிரக்கணக்கில் பலி கொடுத்தனால் தானேயன்றி, இங்கே வெளிநாட்டு பாதுகாப்பில் கருத்து சுதந்திரத்தை அனுபவிப்பவர்களால் அல்ல. தமிழினம் அழிந்ததற்கு தமிழ் அரசியல்வாதிகளும், ஆயுதக்குழுக்களின் தலைமைகளுமே காரணம்.

நாளைக்கு JUDE ண்ட வீட்டுக்குள்ள வேறு ஒருத்தன் வந்து குடியிருந்தாலும் அவர் சகோதர மனப்பாண்மையோட அவனுக்கு கூஜா தூக்குவாராம்....ஏன்டா அவரு ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு :lol::unsure: ....போங்கையா நீங்களும் உங்கட நியாயங்களும்....

சிங்களவர் தமிழரின் இந்து கோவில்களுக்கு போய் கும்பிடுவது போல, மணிமேகலை காலத்தில் பௌத்தராக இருந்த தமிழர்கள் புத்தர் கோவில்களுக்கு போக ஆரம்பித்தால், புத்தர்சிலை வைப்பவர்களுக்கு அதன் தேவை பெரிதாக படாது. ஒவ்வொரு இந்து ஆலயத்திலும் தமிழரே புத்தர்சிலையை வைத்துவிட்டால் சிங்களவருக்கு புத்தர்சிலை வைக்கும் ஆசையும் குறையும்

அப்படியே தமிழர் தங்கட வீட்டு பெண்களை சிங்களவனிட்ட ஒவ்வொரு இரவும் அனுப்பி வைச்சா சிங்களவனுக்கு தமிழ் பெண்களை கற்பளிக்கிற ஆசையும் குறையும்...நான் சொல்லுறது சரி தானே Jude? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு JUDE ண்ட வீட்டுக்குள்ள வேறு ஒருத்தன் வந்து குடியிருந்தாலும் அவர் சகோதர மனப்பாண்மையோட அவனுக்கு கூஜா தூக்குவாராம்....ஏன்டா அவரு ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு :lol::unsure: ....போங்கையா நீங்களும் உங்கட நியாயங்களும்....

  • நான் சகோதர மனப்பான்மை பற்றி எழுதவில்லை, நீங்கள் தான் எழுதியிருக்கிறீர்கள்.
  • நான் கூஜா தூக்குவது பற்றியும் எழுதவில்லை, நீங்கள் தான் எழுதியிருக்கிறீர்கள்.
  • நான் நல்லவர்கள், கெட்டவர்கள் பற்றியும் எழுதவில்லை.

ஆக. நீங்கள் எழுதியது எதைப்பற்றி என்று விளக்கமாக சொல்ல முடியுமா?

அப்படியே தமிழர் தங்கட வீட்டு பெண்களை சிங்களவனிட்ட ஒவ்வொரு இரவும் அனுப்பி வைச்சா சிங்களவனுக்கு தமிழ் பெண்களை கற்பளிக்கிற ஆசையும் குறையும்...நான் சொல்லுறது சரி தானே Jude? :unsure:

நான் பெண்கள் பற்றியும் எழுதவில்லை, நீங்கள் தான் எழுதியிருக்கிறீர்கள்.

விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்காலில் வைத்து அள்ளிக்கொடுத்த தமிழ்பெண்கள் சிறிலங்காவில் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றியா எழுயிருக்கிறீர்கள்?

இப்படியாக உணர்ச்சிவசப்பட்டு எழுதுவதும், பேசுவதும், செயற்படுவதும் இன்றுவரை எந்தவகையில் பயன் தந்திருக்கிறது? அதையாவது எழுவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அன்பைப்போதித்த புத்தரை எமதூருக்குள் அனுமதிப்பதில் எந்தவிதமான பிரச்சனையுமில்லை, ஆனால் ஆக்கிரமிப்புப் புத்தராகவெல்லோ இவர் வந்திருக்கின்றார், அதில்தான் பிரச்சனையே ஆரம்பித்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் பொறுங்கள் தோழர்களே,

இப்போதுதான் கருத்துக்களை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

கேட்ட கருத்துகளை கொஞ்சகாலம் அலசுவோம்.

ஐந்துநட்சத்திர கொட்டலில் மண்டபம் எடுத்து கூடஉள்ளோம்.

பிறகு உங்களுக்கு மிகவும் பிடித்த தேர்தல் வைப்போம்.

அதுக்கு கொஞ்;சகாலம் பின்னர் சபை கூடுவோம்.

அதில் தீர்மானம் கொண்டுவருவோம்.

அதை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அனுப்புவோம்.

பிறகு திரும்பவும் கருத்துக்கேட்டு....அலசி.....அரசியல் கதைத்து.....புத்தர்சிலைக்கு கண்டனம் தெரிவிப்போம். :lol:

நாளைக்கு JUDE ண்ட வீட்டுக்குள்ள வேறு ஒருத்தன் வந்து குடியிருந்தாலும் அவர் சகோதர மனப்பாண்மையோட அவனுக்கு கூஜா தூக்குவாராம்....ஏன்டா அவரு ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு ....போங்கையா நீங்களும் உங்கட நியாயங்களும்....

கொழும்பில் கோவில் கட்டும் போது எங்கையா போனது நியாயங்கள்?

இவளவு மோசமாக யுத்தம் நடந்த போதும் சிங்கள பகுதிகளில் இருந்த கோவில்கள் கோவிலாகவே இருந்தது ஆனால் நமது பகுதியில் இருந்த புத்த கோவில்களும் இல்லை புதிதாக கட்டவும் முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.