Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டணம்: - சர்வாதிகார ஆட்சியுள் இலங்கை நுழைவதாக குற்றச்சாட்டு.

Featured Replies

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டணம்: - சர்வாதிகார ஆட்சியுள் இலங்கை நுழைவதாக குற்றச்சாட்டு.

இலங்கையில் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் வகையில் அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் முறையில் இலங்கையின் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளரான சரத் பொன்சேகா கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். இத்துடன் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளையும் தடைகளையும் மேற்கொள்ளுமாறு கனடியத் தமிழர் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் டமலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

குறிப்பாக அதிகரிக்கும் அடக்குமுறை அதிகாரப் பிடிக்குள் சிக்குண்டு இலங்கையில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் நண்பர்கள் தொடர்பாக கனடியத் தமிழர்கள் கவலை கொண்டுள்ளனர். போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் எந்தவொரு குழுவிற்கும் சாட்சியங்களை அளிப்பதற்குத் தான் தயாராக உள்ளதாக அறிவித்த பின்னர் பொன்சேகாவின் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

"எந்தவொரு விசாரணைகளிற்குச் செல்லவும் சாட்சி வழங்கவும் நான் தயாராக உள்ளேன் யாரும் போர்க்குற்றங்களைப் புரிந்திருந்தால் அவர்கள் எவரையும் நான் காப்பாற்றப் போவதில்லை. யாரும் போர்குற்றம் புரிந்திருந்தால் அவர்களைப் பாதுகாப்பதானது தேசவிரோதமாகும்"

"சரத் பொன்சேகாவினது கைதானது தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மறைப்பதற்கு இலங்கை அரசாங்கமானது எவ்வகையான அடக்கு முறைகளையும் பிரயோகிக்கத் தயாராக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது," இவ்வாறு கனடியத் தமிழர் பேரவையின் தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் தெரிவித்தார். அத்துடன் இக்கைது நடவடிக்கையானது, இலங்கை எவ்வளவு விரைவாக பர்மா மற்றும் ஈரான் போன்று அடக்குமுறை அதிகாரமையமாக மாறுகின்றது என்பதனைக் காட்டுகிறது.

"சர்வதேச சமூகத்தினது மென்போக்கான இராஜதந்திர நடவடிக்கையானது இலங்கை அரசினது ஜனநாயகப் பண்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் அதிகரிப்பின் மூலம் முற்றுமுழுதாகத் தோல்வியடைந்துள்ளது" இவ்வாறு பூபாலபிள்ளை தெரிவித்தார். "இன்றைய இலங்கையானது, மனித உரிமைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தோர் கொலைப் பயமுறுத்தல்களை எதிர்நோக்குதல், காணாமல் போதல் அல்லது சிறைப்பிடிக்கப்படுதல் போன்றவை நடைபெறுகின்ற ஆர்வெலியன் போன்று உள்ளது. முனித உரிமைகள் எனும் விடயம் வரும் போது சதாம் உசைன் மற்றும் ஸ்லொபடோன் மெலோசவிக் போன்றவர்களின் வரிசையில் ராஜபக்சவும் சேருகின்றார்.

"சர்வதேச சமூகமானது உண்மையில் இலங்கையில் ஜனநாயம், ஒற்றுமை மற்றும் மனிதஉரிமைகள் ஆகியவற்றைக் காண விரும்பினால், அவர்கள் மிக முக்கியமாக பொருளாதார மற்றும் இராஜதந்திரத் தடைகளையும் இலங்கை மீது விதிப்பதனைக் கருத்தில் எடுக்கவேண்டும். சிம்பாப்பே நட்டினை பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பில் இருந்த வெளியேற்றியது போல் இலங்கையினையும் வெளியேற்றுவதற்குக் கனடா போன்ற பொதுநலவாய நாடுகள் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

http://seithy.com/

இதுவும் இராஜதந்திர நகர்வோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் அரசியல் குழுக்கள் சிங்களவன்/பார்சி காங்கிரஸ் நொந்து போயிருப்பதை உணர்ந்து முழு வேகத்தில் செயல்பட்டு வருவது சந்தோசமான விடயம்.

இப்போது உலகிற்கு சிங்களவனே தான் எவ்வளவு கெட்டவன் என்பதை காட்டி விட்டான். இனி அவன் செய்த அநியாயங்களுக்கு வழக்கு மேல் வழக்கு போட்டு நமக்கு விவாகரத்து வாங்கவேண்டும்.

தமிழர் தாகம் தமிழீழ தாயகம்.

  • தொடங்கியவர்

"நல்லவன் எண்டால் சிங்களவன் என்றாலும் கட்டி அணை, கெட்டவன் எண்டால் தமிழன் என்றாலும் எட்டி உதை." - குழவி.

இந்த வரிகளுக்கு ஏற்ற மாதிரித்தான் எழுதுகிறீர்கள். ஆனால் இவன் ஒரு கெட்ட சிங்களவன்.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தோடு செயல்படும் கனடிய தமிழ் அமைப்புகளுக்கு நன்றி, எனினும் உங்கள் முன்னுரிமை சர்வாதிகாரத்துக்கு எதிரானது எனப்தற்க்குப் பதிலாக போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசத்தோடு (மேற்குநாடுகளோடு) ஒத்துழைக்க முன்வந்த போர்குற்ற விசாரனை மன்று சாட்ச்சியை கடத்தி கொலசெய்ய முயற்ச்சி என்கிறதை முன்னிலைப் படுத்த்தி ”சர்வதேச சமூகமே போர்குற்றம் தொடர்பான முக்கிய சாட்ச்சியை காப்பாற்று” என்கிறதை ஒத்த கோசங்களை முன்வைத்தல் சரியானதாக இருக்கும் என கருது கிறேன். யுத்த குற்றம் தொடர்பான சாட்சிகளையும் தடயங்களையும் அழிப்பதில் மகிந்த அரசு முன்னிற்பதை மீண்டும் அம்பலப் படுத்துவது நன்று. அடுத்த இலக்கு சம்பந்தர் றவ்கஹீம் மனோ கணேசன் என்கிற கோசமும் முக்கியம் என்பது என் கருத்து அதன்பிறகு சர்வாதிகாரம் போன்ற ஏனைய குற்றச்சாட்டுகள் முக்கியம்.

.

Edited by poet

சுத்த கேனையகளாக இருக்கிறார்களே கனடிய டமிழர்கள்....

:lol::):lol:

தற்போது இருக்கு நிலையில் சிங்களவருக்குள் இருக்கும் சிறிய இடைவெளியை நாம் முடிந்த அளவு பெரிதாக ஆக்கவேண்டும் அதை விடுத்து சரத் பொன்ஸேகா வுக்கு புலத்து பூனைகளின் ஆதரவி இருக்கு என்பது போல ஊளையிட க் கூடாது.

இது அவர்களின் தார்மீகக் கடமையல்லவா------------

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த கேனையகளாக இருக்கிறார்களே கனடிய டமிழர்கள்....

:):lol::lol:

தற்போது இருக்கு நிலையில் சிங்களவருக்குள் இருக்கும் சிறிய இடைவெளியை நாம் முடிந்த அளவு பெரிதாக ஆக்கவேண்டும் அதை விடுத்து சரத் பொன்ஸேகா வுக்கு புலத்து பூனைகளின் ஆதரவி இருக்கு என்பது போல ஊளையிட க் கூடாது.

இதுவல்ல அவர்கள் சொல்ல வந்தது.

ஜனநாயகம் எனும் பேரிலேயே தமிழர் தலைமை சர்வதேசத்தால் ஒதுக்கப்பட்டது / அழிக்கப்பட்டது. சிங்களவனும் ஜனநாயகம் எனும் சொல்லைப் பயன்படுத்தியே தனது நிலையைப் பலப்படுத்தி வந்தான். இப்போது எங்களது முறை. சிங்களவன் வெளிப்படையாகவே ஜனநாயக விரோத செயல்களை மேற்கொள்ளும்போது அதை ஊதிப் பெருப்பிப்பது அவசியமாகிறது. அதற்காக இது பொன்னருக்கான ஆதரவு என்பதல்ல அர்த்தம். :lol:

கனடியத்தமிழ் அமைப்பின் இந்தக்கோசம் தேவையற்றது.

சிங்களவர் தமக்குள் மோதி பகை தீர்துக்கொள்ளட்டும்.

ஒரு தமிழ்த்தறுதலை, நாலு டொலரை வாங்கி பொக்கட்டுக்கில் போட்டுகொண்டு றோவின் மகுடிக்கு நாட்டியம் ஆடினா, முழு கனேடியன் தமிழர்களையும் விமர்சிப்பதா?

இதுக்குதானே கடவுள் உங்களுக்கு இந்த, நாயிலும் கேவலமான வாழ்க்கையை தந்திருக்கிறார்....... :lol:

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டணம்: - சர்வாதிகார ஆட்சியுள் இலங்கை நுழைவதாக குற்றச்சாட்டு.

இலங்கையில் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் வகையில் அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் முறையில் இலங்கையின் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளரான சரத் பொன்சேகா கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். இத்துடன் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளையும் தடைகளையும் மேற்கொள்ளுமாறு கனடியத் தமிழர் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் டமலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

குறிப்பாக அதிகரிக்கும் அடக்குமுறை அதிகாரப் பிடிக்குள் சிக்குண்டு இலங்கையில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் நண்பர்கள் தொடர்பாக கனடியத் தமிழர்கள் கவலை கொண்டுள்ளனர். போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் எந்தவொரு குழுவிற்கும் சாட்சியங்களை அளிப்பதற்குத் தான் தயாராக உள்ளதாக அறிவித்த பின்னர் பொன்சேகாவின் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

"எந்தவொரு விசாரணைகளிற்குச் செல்லவும் சாட்சி வழங்கவும் நான் தயாராக உள்ளேன் யாரும் போர்க்குற்றங்களைப் புரிந்திருந்தால் அவர்கள் எவரையும் நான் காப்பாற்றப் போவதில்லை. யாரும் போர்குற்றம் புரிந்திருந்தால் அவர்களைப் பாதுகாப்பதானது தேசவிரோதமாகும்"

"சரத் பொன்சேகாவினது கைதானது தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மறைப்பதற்கு இலங்கை அரசாங்கமானது எவ்வகையான அடக்கு முறைகளையும் பிரயோகிக்கத் தயாராக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது," இவ்வாறு கனடியத் தமிழர் பேரவையின் தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் தெரிவித்தார். அத்துடன் இக்கைது நடவடிக்கையானது, இலங்கை எவ்வளவு விரைவாக பர்மா மற்றும் ஈரான் போன்று அடக்குமுறை அதிகாரமையமாக மாறுகின்றது என்பதனைக் காட்டுகிறது.

"சர்வதேச சமூகத்தினது மென்போக்கான இராஜதந்திர நடவடிக்கையானது இலங்கை அரசினது ஜனநாயகப் பண்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் அதிகரிப்பின் மூலம் முற்றுமுழுதாகத் தோல்வியடைந்துள்ளது" இவ்வாறு பூபாலபிள்ளை தெரிவித்தார். "இன்றைய இலங்கையானது, மனித உரிமைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தோர் கொலைப் பயமுறுத்தல்களை எதிர்நோக்குதல், காணாமல் போதல் அல்லது சிறைப்பிடிக்கப்படுதல் போன்றவை நடைபெறுகின்ற ஆர்வெலியன் போன்று உள்ளது. முனித உரிமைகள் எனும் விடயம் வரும் போது சதாம் உசைன் மற்றும் ஸ்லொபடோன் மெலோசவிக் போன்றவர்களின் வரிசையில் ராஜபக்சவும் சேருகின்றார்.

"சர்வதேச சமூகமானது உண்மையில் இலங்கையில் ஜனநாயம், ஒற்றுமை மற்றும் மனிதஉரிமைகள் ஆகியவற்றைக் காண விரும்பினால், அவர்கள் மிக முக்கியமாக பொருளாதார மற்றும் இராஜதந்திரத் தடைகளையும் இலங்கை மீது விதிப்பதனைக் கருத்தில் எடுக்கவேண்டும். சிம்பாப்பே நட்டினை பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பில் இருந்த வெளியேற்றியது போல் இலங்கையினையும் வெளியேற்றுவதற்குக் கனடா போன்ற பொதுநலவாய நாடுகள் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

http://seithy.com/

இதுவும் இராஜதந்திர நகர்வோ?

பொன்சேகா வெளியில் வருகிறாரோ இல்லையோ இந்த செய்தியை படித்தால் ஒருநிமிடம் கண்கலங்குவான்..

ஏன் எண்டால்? தமிழனை இவ்வளவு தூரம் அழித்தும் அதை தாங்கிக்கொண்டு தனக்காக கண்டனம் எல்லாம் விடுறாங்களே எண்டுதான்!

இவங்கள் றோம்ப நல்லவங்கள் எண்டு கடதறி அழுவான் :lol: .

கனடிய தமிழர் என்ற அடைமொழிக்குள் வருவதற்காக மிக வெட்கப்படுகின்றேன்

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டணம்: - சர்வாதிகார ஆட்சியுள் இலங்கை நுழைவதாக குற்றச்சாட்டு.

http://seithy.com/

இதுவரை சர்வாதிகார ஆட்சி இலங்கையில் இல்லையென்று "கனடிய தமிழர்" என்ற பெயரில் அறிக்கைவிட்டவர்கள், ஈழத் தமிழரை படுகொலை செய்தவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்!!!

கனடிய தமிழரின் மூளையும், ராஜதந்திரமும் கொடிகட்டி பறக்கிறது!

கலிகாலம் என்று சொல்வது இதைத்தானோ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் சிறிலங்கா சர்வாதிகார ஆட்சிக்குள் நுழையுதோ?அவங்கட சண்டையை விலக்குப் பிடி;குற நிலமையிலா நாங்க இருக்கிறம்.சண்டையைத் இயன்ற அளவுக்கு தூண்டி விடுவதுதான் நமக்கு நல்லது.

அண்ணன் தம்பி சண்டையை விலக்குப் பிடிக்கப் போன வடிவேலுதான்(பூபாலபிள்ளையின் வடிவில்)ஞாபகத்திற்கு வருகிறார்.யாராவது அந்தக் காட்சியை இணைச்சு விடுங்கப்பா!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டணம்: - சர்வாதிகார ஆட்சியுள் இலங்கை நுழைவதாக குற்றச்சாட்டு.

செய்தி.கொம் மட்டும் இப்படியான ஒரு தலையங்கத்தை தீட்டியிருக்கு. அதாவது டேவிட் பூபாலபிள்ளை சொன்ன சில விடயங்களைத் திரித்தது மட்டுமல்லாமல் தலைப்பில் கனேடியத் தமிழர்கள் பொன்சேகாவின் கைதுக்கு எதிர்ப்பு என்று போட்டிருக்கிறார்கள். இவர்கள் ஏதாவது உள்நோக்கத்துடன் எழுதுகிறார்களா அல்லது மேல்மாடி காலியா.. ஒன்றுமே விளங்குதில்லை..! :huh:

தரமான செய்தி நிறுவனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்தால், பூபாலபிள்ளை இப்படிச் சொல்கிறார் என்கிறார்கள்.

தேர்தலில் 40 வீதமான வாக்குகளைப் பெற்ற பொன்சேகாவுக்கே இந்த நிலை என்றால் அங்கு வாழும் அப்பாவித் தமிழர்களின் நிலை என்ன என்று மேற்குலக நாடுகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கரட்-குச்சி தந்திரத்தை சர்வதேச சமூகம் கைவிட்டுவிட்டு இலங்கை மீது பொருளாதார மற்றும் ராஜாங்க ரீதியிலான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். - டேவிட் பூபாலபிள்ளை

The Tamil diaspora has pushed Western nations to take a harder line with Sri Lanka, leading Rajapakse's government to turn increasingly on nations such as China and Iran for support.

One community leader in Canada, which has the West's most politically active Tamil diaspora, hoped that Fonseka's arrest would lead to renewed pressure on Sri Lanka.

"If they can court-martial a top general who polled about 40 per cent in a presidential election, that means they can do anything to a Tamil citizen," said David Poopalapillai, national spokesman for the Canadian Tamil Congress.

"The carrots-and-sticks approach that the international community has been following has to be put to an end," he said. "The time has come to go strong on this country and bring some diplomatic and economic sanctions."

தமிழ் கனேடியன் தளத்தின் தலைப்பு..!

Tamil Canadians: Sri Lanka Descends Into Dictatorship

டேவிட் பூபால பிள்ளை சொல்லாததை எல்லாம் சொன்னதாக எழுதினால் அவர் பாவம் என்ன செய்வார்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே டேவிட் பூபாலபிள்ளை சரத் பொன்சேகாவை வெளியே எடுக்க முயன்றாலும் அதனால் நமக்கு பயன் கிடைக்கும்.

680 சரணடைந்த சிங்கள போலீசை சுட்டு பொசுக்கிய கருணா அம்மானை அவங்கள் அமைச்சர் பதவி கொடுத்து வைத்திருக்கிறானே?

எத்தனை சிங்களவங்களை பிள்ளையான் கொன்றார், அவரை முதல் அமைசாரக்கி வைத்திருக்கிறானே?

அதற்கு முக்கிய காரணம் தமிழரை பிரிப்பதுவே! நாமும் சிங்களவரில் இனவெறி கூட்டத்தால் தாக்கப்படுவோரை காப்பாற்றி பின் அவர்களை வைத்தே சிங்களவனுக்கு ஆப்பு வைக்கவேண்டும்.

இன்னும் எப்படி எதிரிக்கு முதுகில் குத்துவது என்று புரியவில்லை என்றால். சில தமிழ் சீரியல்கள் பார்த்தாலே போதும். :lol:

அண்ணன் புலவர், தங்களது பிரச்சினையை பெரிதாக்கும் ஐடியாவை நானும் ஆமோதிக்கிறேன். சிங்களவனை நிம்மதியாக ஒரு நாளும் இருக்க விடக்கூடாது. வரப் போகும் பொருளாதார அடியுடன், சிங்களவனின் வெளிநாட்டு அடி வருடிகளும் காசில்லாமல் சுருளுவார்கள். வரும் இரண்டு வருடங்களில் தமிழரில் அரசியல் பிரச்சார போராட்டம் உச்சத்தை அடைந்தால் சிங்களவனை/பார்சி கொங்கிரசை அமுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

குழவி.. தங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்..!

பெரும்பாலும் எமக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒருவித தூய்மை மனப்பான்மையே காரணம்..! ஜனநாயக அரசியலில் தூய்மை மனப்பான்மையுடன் இருந்தால் காலம் தள்ள முடியாது. நிலைமைகளைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. சரத் பொன்சேகாவே முன்வந்து போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டாலும் நாங்கள் பான் கி மூனை முந்திக்கொண்டு அவற்றை நிராகரித்துவிடுவோம்..! ஏனென்றால் அவன் நமக்கு எதிரியல்லவா..!! :lol:

எனது கருத்தும் இதுதான்

எம்மில் ஒரு பழக்கமுண்டு

நாம் எதுவும் செய்யமாட்டோம்

அதேநேரம் வேறு யாரும் ஏதாவது செய்தால் எதிர்ப்போம்

அந்த அமைப்பினர் எல்லோரும் விசரர்கள் எம்மைப்பொறுத்தவரை...

  • கருத்துக்கள உறவுகள்

இனி நாங்கள் நல்லா சூழ்சிகள் செய்ய வேணும்.அவங்கட விரலைக் கொண்டே அவங்கட கண்களைக் குத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய தமிழர் என்ற அடைமொழிக்குள் வருவதற்காக மிக வெட்கப்படுகின்றேன்

இதையெல்லாம் நீங்கள் இப்பவும் வைத்திருக்கின்றீர்களா?

பொண்ணுங்ளே விட்டு பல நாளாச்சு!

  • கருத்துக்கள உறவுகள்

குழவி.. தங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்..!

பெரும்பாலும் எமக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒருவித தூய்மை மனப்பான்மையே காரணம்..! ஜனநாயக அரசியலில் தூய்மை மனப்பான்மையுடன் இருந்தால் காலம் தள்ள முடியாது. நிலைமைகளைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. சரத் பொன்சேகாவே முன்வந்து போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டாலும் நாங்கள் பான் கி மூனை முந்திக்கொண்டு அவற்றை நிராகரித்துவிடுவோம்..! ஏனென்றால் அவன் நமக்கு எதிரியல்லவா..!! :lol:

நாங்கள் இராமநாதன் பரம்பரை அல்லவா.இப்படிதான் செய்வோம்.எங்களை பல்லாக்கில் வைத்து அவங்கள் இழுக்கிறது சிலருக்கு பிடிக்கலை போல :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி நாங்கள் நல்லா சூழ்சிகள் செய்ய வேணும்.அவங்கட விரலைக் கொண்டே அவங்கட கண்களைக் குத்தவேண்டும்.

அதனால்தான் சொல்கிறேன் தமிழன் இப்போது இருக்கும் நிலையில், புலி அரசியல் சரிவராது இனி நரி அரசியல்தான் சரிவரும், எல்லோரும் புலியில் இருந்து நரிக்கு மாறவும், நான் மாறிவிட்டேன் அப்ப நீங்க..................... :lol:

ஓநாயா மாறாம இருந்தா சரிதான்.... :lol:

இந்த அறிக்கைகளையும்,கனடாவில் பலரின் அரசியலாய்வுகளையும் பார்க்கும்போது எங்கு போய் முட்டிக்கொள்வதென்று தெரியவில்லை.

50 வருசதிற்கு முதலே அந்த மனுசன் பாரதி என்னமா பாட்டெல்லாம் யதார்த்தமாக பாடிவைத்துபோயுள்ளான்.இன்று அதுவும் கனடாவில் இருந்து கொண்டு இவர்கள் செய்யும் ஆய்வுகள் எங்கட ஆட்களுக்கெல்லாம் என்னவோ கெட் அடிச்சுட்டு மாதிரி இருக்கு.கனவுலகில் தாங்கள் மாத்திரம் இருப்பது பத்தாது மக்களயும் உசுப்பேத்துறாங்கள்.

இன்று ஒருவர் வானொலியில் வந்து ராகுல் காந்தியை போர்க்குற்றங்களில் இருந்து காப்பாற்றத்தான் சரத்தின் கைதாம்.போற போக்கில் ஒபாமையும் விட்டுவைக்கமாட்டார்கள் போல கிடக்கு.

... அந்த மனுசன் பாரதி என்னமா பாட்டெல்லாம் யதார்த்தமாக பாடிவைத்துபோயுள்ளான். ...

.... இன்று ஒருவர் வானொலியில் வந்து ராகுல் காந்தியை போர்க்குற்றங்களில் இருந்து காப்பாற்றத்தான் சரத்தின் கைதாம்.போற போக்கில் ஒபாமையும் விட்டுவைக்கமாட்டார்கள் போல கிடக்கு. ............

இதில் உண்மை இல்லாமல் இல்லை.

போர்க் குற்றவாளிகளை பாதுகாக்க மாட்டேன் என்று இனப்படுகொலையாளிகளில் ஒருவரான பொன்சேகா சொன்னதும், கலவரமடையக் கூடியவர்கள் - இலங்கையில் படு மோசமான தமிழின இனப்படுகொலைகளை நேரடியாகவும் , மறைமுகமாகவும் செய்தவர்கள்.

இதில் நேரடியாக ஈடுபட்ட வெளிநாட்டு தமிழ் இனப்படுகொலையாளிகள்: இந்திய ரோ, இந்திய இராணுவ, இந்திய காங்கிரஸ் மற்றும் ராஜீவ் குடும்ப பயங்கரவாதிகள். இந்த வட இந்திய பயங்கரவாதிகள் தங்கள் உண்மை ரூபம் வெளிவருவதை தடுக்க பல முயற்சிகள் செய்து வருவது இரகசியம் இல்லை.

சர்வதேச அரங்கில் உள்ளூர் பயங்கரவாதிகளின் போர்குற்ற குற்றச்சாட்டுகளை தடுத்து வருபவர்களில் முன்னையில் இருப்பது போலி ஜனநாயக நாடாகிய இந்தியா என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்த நிலையில், பாரதியையும் துணைக்கழைத்து, ராஜீவ் - ராகுல் பயங்கரவாதிகள் குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்கும் பின்னணி என்னவென்று அர்ஜுன் விளங்கப்படுத்துவாரா?

Edited by Aasaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாத்தமிழருக்கு யார் வழிகாட்டுகிறார்களோ பொன்னர் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள், பொன்னருக்கு ஆதரவு தெரிவிச்சு சிங்களவருக்கு உசுப்பூட்டி மகிந்தவ வெல்லப்பண்ணினது மாதிரி, இந்தளவு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் பாத்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரருக்கு எங்கட பச்சோந்தித்தனத்த காட்டிறதா இருக்கு. வெள்ளைக்காரரை பேக்காட்டிறதா நினைச்சு யாரும் உதை செய்தா பாலாமாமா சொன்னதுபோல மேல்மாடியில நிறைய இருக்கு. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.