Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவள் மட்டுமா இவளும் தான் விபச்சாரி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிச் சீருடையில்

பட்டென்று வந்தவளா இவள்..

கண்கள் அகல விரிய

பார்வை விழுந்தது

அவள் மீது..!

நேற்று அவள்

வகுப்பில் என்னோடு

கதிரைக்கு சண்டை பிடிக்க

தள்ளி விட்டதில்

சிறு உரசல்

கத்தியே உயிரை எடுத்தாள்

வாத்தியார் தந்த அடியோடு

அது நினைவில் பதியும் வரை.

அன்று அவள் சிறுமி

நான் சிறுவன்.

வளர்ந்தோம் இருவரும்

பருவமும் வந்து சேர்ந்தது

அவள் கடைக்கண் பார்வை வீச

நானும் பதிலுக்கு பேச

ஆசைகள் அரும்பின

அதற்கு அன்பு என்று பெயரிட்டோம்.

கடிதங்கள் பரிமாறி

கடலையும் போட்டு

கையும் கோர்த்து

வலண்டைனும் கொண்டாடினோம்.

காலமோ ஓட்டமாய் ஓடியது..

ஓர் நாள் சொன்னாள்

"அப்பாக்கு

லண்டனில் நிரந்திர விசா வந்திட்டுது

நாங்களும் போகப் போறம்."

மின்னலாய் இறங்கியது

ஓர் அதிர்ச்சி

மூளை கலங்கி

கண்கள் துலங்க

தரையில் அமர்ந்தேன்.

ஓர் ஆறுதல் வார்த்தை கூட

உதிர்க்க மறுத்தவளாய்

தோழிகளோடு

லண்டன் கனவில்

பறந்தாள் என்னை மறந்தே.

காலத்தை விரட்டி நானும்

ஏதோ வழியேறி அடைந்தேன்

அதே லண்டன்.

கண்டேன் அவளைக்

கைக்குழந்தையோடு.

அருகில் அவன்

யாரவன் கணவனோ..??!

கேள்விகள் பதில் தேட

அருகில் நகர்ந்து

"காய்" என்றேன்.

அவளோ

முகத்தைத் திருப்பியவளாய்

நடை போட்டாள்

அவன் பின்.

அடுத்தவன் பொருளைத்

தொடர்வது அழகல்ல.

எட்ட வைக்க வேண்டிய

அசிங்கமாய் தெரிந்தாள் அவள்.

என் கைபிடித்தித் திரிந்தவள்

ஓர் விசாவுக்கு

விபச்சாரியானாளே

யாரோ ஒருவனுக்கு.

இவளுக்கும்

பணத்திற்காய்

ராத்திரியில் அலைபவளுக்கும்

வேறுபாடு என்ன..?!

மனதின் கேள்விக்கு

விடை தேட

பதில் வந்தது

அது தான் இந்தச் சமூகம்.

தனிமையில்

விலகி உட்கார்ந்தேன்

வேண்டாம் இந்த நரகம் என்றே.

ஆக்கம்: நான். ஆனால் எனது சொந்த அனுபவம் அல்ல. தரிசனத்தின் உண்மை கலந்தது. வலண்டைன் பரிசாக.. மூளையில் உறைக்க. :lol:

Edited by nedukkalapoovan

  • Replies 146
  • Views 22.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை உரத்து ஒலித்த நெடுக்ஸின் கவிதைக்கு எனது பாராட்டுக்கள். அதனால ஒரு பச்சைப் புள்ளியை குத்திவிடுறன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா...வலன்டைன் தினத்தை ஒட்டி வந்த கவிதை நன்றாக இருக்கு..இருந்தாலும் ஒரு சின்ன விடயத்தையும் சொல்லி விட்டுச் செல்கிறேன்.எல்லாப் பெண்களும் உங்களின் தலையங்க கவிதைக்குள் அடங்கமாட்டார்கள்.ஒரு சிலர் மட்டுமே மேலைத்தேய மோகத்தில் தவறறானவளிக்கு இட்டுச் செல்லப்படுகிறார்கள்.நன்றி.

காதல் என்ற ஒருவரியும் கவிதையில் இல்லை அப்ப அவள் உம்முடன் சும்மாதான் பழகியிருக்கின்றா,நீர் தான் கற்பனையை கன்னா பின்னா என்று வளர்த்துவிட்டீர் போல.ஆழ்ந்த அனுதாபங்கள்.இப்படி இங்க கனபேர் அலையினம்,குடிக்கினம்,அவளவை குடும்பம் குட்டியுடன் சந்தோசமாக இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதைல்லாம் சரி காதலர் தினத்துக்கு என்ன வாங்கி கொடுக்கலாம் என்டு மனுசன் மூளையை போட்டு கசக்கிக்கொன்டு இருக்கிறான்.அதுக்குள்ள இது வேற. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்ற ஒருவரியும் கவிதையில் இல்லை அப்ப அவள் உம்முடன் சும்மாதான் பழகியிருக்கின்றா,நீர் தான் கற்பனையை கன்னா பின்னா என்று வளர்த்துவிட்டீர் போல.ஆழ்ந்த அனுதாபங்கள்.இப்படி இங்க கனபேர் அலையினம்,குடிக்கினம்,அவளவை குடும்பம் குட்டியுடன் சந்தோசமாக இருக்கினம்.

வளர்ந்தோம் இருவரும்

பருவமும் வந்து சேர்ந்தது

அவள் கடைக்கண் பார்வை வீச

நானும் பதிலுக்கு பேச

ஆசைகள் அரும்பின

அதற்கு அன்பு என்று பெயரிட்டோம்.

கடிதங்கள் பரிமாறி

கடலையும் போட்டு

கையும் கோர்த்து

வலண்டைனும் கொண்டாடினோம்.

இதில என்ன சொல்லிருக்கு சார். வளவளன்னு அலம்பி இருக்கா..! :lol:

இப்படியும் கொஞ்சக் கூட்டமிருக்குது. அடுத்தவன் ருசிச்சதை ருசிக்கிறதுக்கு என்று. நானும் பார்த்திருக்கிறன்.. ஒருத்தன் விழுந்து விழுந்து காதலிப்பான். அவளுவையும் விழுந்து விழுந்து காதலிப்பாளவ. அப்புறம்.. இன்னொருத்தர் எட்ட இருந்து ( வேற எங்க வெளிநாட்டிலதான்..! ) இருந்து கற்பனை செய்து கொண்டு அழைப்பு விடுவார்.. அவ்வளவை புதுப்பொம்பிளையளா வெளிக்கிடுவினம். அதுக்கு இவர் போல ஆக்கள் இப்படி சமாதானம் சொல்லி ஏத்துக்கிட்டு கார் பின் சீற்றில அல்லது முன் சீற்றில ஏத்தி வைச்சு பவனி வருவினம். இந்த நாய் பிழைப்புக்கு பெயர் சந்தோசமான வாழ்க்கை. கொடுமை சரவணா. :D

அதைல்லாம் சரி காதலர் தினத்துக்கு என்ன வாங்கி கொடுக்கலாம் என்டு மனுசன் மூளையை போட்டு கசக்கிக்கொன்டு இருக்கிறான்.அதுக்குள்ள இது வேற. :lol:

இதுக்கே மூளையக் கசக்கிறீங்கண்ணா.. எப்படி குடும்பம் நடத்துறீங்க.. மூளையே இல்லாமலா..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நூறுக்கு நாற்பது வீதமான காதல் தான் நிறைவேறுகிறது..........சரி விதியோ ...சதியோ..... காதல் நிறை வேற வில்லை.விபச்சாரி என்றால் அர்த்தம் என்ன ? திருமணமான பின்பும் ...பழைய காதல் தொடரவேனுமா? ..குடும்பம் லண்டனுக்குபோகும் போது இவளுக்கக் அது தடைப்பட வேனுமா? அவளது பிற்கால் வாழ்வில் உன்னால் தான் என் லண்டன் வாழ்வுகெட்டது என்று சொல்லிகாடவேனுமா?

இவ்வளவு கேள்விகளும் மனதில் எழுகின்றது....?.

ஒகே நெடுக்கு அண்ணா நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளுகிறோம் ஆனால் விளக்கம் வேண்டும்.... :D

அந்த பெண்ணை விபச்சாரி என்று சொல்லுகிறிர்களே இதை நீங்கள் ஊரில் இருந்து சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் நீங்களும் வெளி நாட்டு மோகத்தில்தானே இங்கே வந்து இருக்கிறிர்கள்... நான் நினைக்கிறேன் இந்த சான்ஸ் உங்களுக்கு முதலில் கிடைத்து இருந்தால் நீங்களும் அதைத்தானே பண்ணி இருப்பிர்கள்... நீங்களும் அந்த பெண்ணும் ஒரே தாரசியில்தானே இருக்கிறிர்கள்.... உண்மையான காதல் எப்போது காதலையோ காதலர்களையோ விமர்சனம் பண்ணுவதில்லை.... இது என்ன காதலில் விபச்சாராம் அது இது என்று கொண்டு ... தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.. உங்கள் கவிதைக்கு பச்சை குத்தி வாழ்த்து சொல்லமுடியவில்லை :lol::)

முதலில் கவிதையை புறக்கணிக்கவேண்டும்.

காதல் நிறைவேறுவதில்லை அக்கா. எதிர்பார்ப்புக்கள் நிறை வேறும் இடத்தில் காதல் என்று அழைக்கப்படுவது நிறை வேறுகிறது. இதுதான் யதார்த்தம். காதலாவது கத்தரிக்காயாவது. அப்படி ஒன்றிருந்தால்.. இவ்வாறு நடுத்தெருவில் விட்டுவிட்டு ஓடுவார்களா..???! இது எனது சொந்தக் கதையல்ல.. எமது சமூகம் காட்டி நிற்கும் வழக்கமாக இது இருக்கிறது. அதனால் தான் இதை எதிர்க்கிறார்கள் பலரும். ஏனில் இதில் அவர்களின் விம்பங்களும் பிரதிபலிக்கின்றன..! :(

விபச்சாரி காசிற்கு உடலை விற்கிறாள்.. இவள் விசாவிற்கு வசதியான தன் சுயநலவாழ்க்கைக்கு உடலைக் காட்டுகிறாள்..! முன்னவளும் தான் வசதியாக வாழத்தான் உடலை விற்கிறாள்.. அல்லது காட்டிறாள் பின்னவளும் அதற்காகத்தான் (விசா உள்ளவனிற்கு) உடலை விற்கிறாள். :)

ஒகே நெடுக்கு அண்ணா நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளுகிறோம் ஆனால் விளக்கம் வேண்டும்.... :D

அந்த பெண்ணை விபச்சாரி என்று சொல்லுகிறிர்களே இதை நீங்கள் ஊரில் இருந்து சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் நீங்களும் வெளி நாட்டு மோகத்தில்தானே இங்கே வந்து இருக்கிறிர்கள்... நான் நினைக்கிறேன் இந்த சான்ஸ் உங்களுக்கு முதலில் கிடைத்து இருந்தால் நீங்களும் அதைத்தானே பண்ணி இருப்பிர்கள்... நீங்களும் அந்த பெண்ணும் ஒரே தாரசியில்தானே இருக்கிறிர்கள்.... உண்மையான காதல் எப்போது காதலையோ காதலர்களையோ விமர்சனம் பண்ணுவதில்லை.... இது என்ன காதலில் விபச்சாராம் அது இது என்று கொண்டு ... தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.. உங்கள் கவிதைக்கு பச்சை குத்தி வாழ்த்து சொல்லமுடியவில்லை :lol::)

மேலா நிலா அக்காவிற்குச் சொன்ன பதிலில் உங்களுக்கும் பதில் இருக்கிறது.

"இது எனது சொந்தக் கதையல்ல.. எமது சமூகம் காட்டி நிற்கும் வழக்கமாக இது இருக்கிறது. அதனால் தான் இதை எதிர்க்கிறார்கள் பலரும். ஏனில் இதில் அவர்களின் விம்பங்களும் பிரதிபலிக்கின்றன..!" :)

முதலில் கவிதையை புறக்கணிக்கவேண்டும்.

தாராளமாக புறக்கணிக்கலாம் விரும்புகிறவர்கள். நான் படைப்பாளி என்று சொல்லிக்கொள்ள அல்ல எழுதுகிறேன். நான் ஒரு சாதாரண மனிதன். எனது எண்ணங்கள் புறக்கணிக்கப்படுகிறது என்பதற்காக எழுதாமல் இருந்து விடமாட்டேன். எனக்கு யதார்த்தம் என்று படுவதை எது கடந்தும் எழுதுவேன். அதை எதுவும் தடுக்க முடியாது..! :)

Edited by nedukkalapoovan

நாலைஞ்சு நாளைக்கு முன்னம் வாங்கின அடிகளால ஏற்பட்ட பழைய உள்க்காயங்கள் மாறுகிறதுக்கு முன்னம் நண்பருக்கு மீண்டும் ஒரு சோதனையா. நெடுக்காலபோவனுக்கு குருவும், சனியனும் இப்ப பிழையான இடத்தில நிக்கிது போல :D

காதலாவது கத்தரிக்காயாவது. அப்படி ஒன்றிருந்தால்..

காதலாவது கத்தரிக்காய் என்று சொல்லுபவர்கள் ஏன் காதல் கவிதைப்பக்கம் வரவேண்டும்... பிடிக்கவில்லையென்றால் விலகி நிற்ப்பது நல்லம்.... நமக்கு ஒன்று பிடிக்கவில்லையென்றால் நாம் எப்படி வேண்டும் என்றாலும் பேசலாமா?.... பூ மேல் முள்ளு இருக்கின்றது என்பதற்க்காக பூவே முள்ளுதான் என்று முடிவு கட்டலாமா? அதுபோல்தான் காதலும் .... எதிலும் இரண்டு பக்கம் இருக்கு....... உங்களோட சண்டை பிடிக்கவென்று சொல்லவில்லை... என் மனதில் பட்டதை சொன்னன் :D

தங்கச்சி நான் உங்களோட சண்டை பிடிக்கனும் என்பதற்காக எழுதவில்லை.

காதல் என்பது அர்த்தமற்ற உணர்வாகி வியாபாரப் பொருளாகி பொழுதுபோக்கும் அம்சமாகி.. நானும் கேர்ள் பிரண்ட்.. போய் பிரண்ட் வைச்சிருக்கிறன்.. ரெக்ஸ்ட் போடுறன்.. பேஸ் புக்கில கதைக்கிறன்.. வலண்டைன் கொண்டாடுறன்.. பிறகு சந்தித்தோம்.. பிரிவோம் என்றிருக்கும் நிலையில்.. பூ மேல.. முள்ளு மேல உதாரணங்கள் சொல்வது அர்த்தமற்றது. முடிந்தால் காதலின் பெயரால் பொய்யாக நடப்பர்வர்களை சரியாக வழிநடத்துங்கள் வரவேற்போம்.

அதைவிடுத்து காதல்.. சிறுகிக் குறுகி கத்தரிகாயை விட மோசமாகி இருக்கும் நிலையில்.. அதை பேசாதே.. கைகட்டி நின்று வேடிக்கை பார்.. நாங்கள் செய்யுறதுதான் காதல் என்றால்.. அதற்கு நாங்கள்... தயாரில்லை..! சொல்ல வேண்டியதை சொல்வோம்.. மிஞ்சினால் தண்டிக்க வேண்டியதை தண்டிப்போம். ஏனெனில் நாமும் இச்சமூகத்தில் வாழ்ந்து தொலைக்க வேண்டி இருக்கிறது..! :lol:

நாலைஞ்சு நாளைக்கு முன்னம் வாங்கின அடிகளால ஏற்பட்ட பழைய உள்க்காயங்கள் மாறுகிறதுக்கு முன்னம் நண்பருக்கு மீண்டும் ஒரு சோதனையா. நெடுக்காலபோவனுக்கு குருவும், சனியனும் இப்ப பிழையான இடத்தில நிக்கிது போல :(

இதுக்கெல்லாம் பயந்தால் வாழ முடியாது நண்பா.

துணிந்து நில்.. துணிந்து செல்.. துணிந்து செய்..! பயம் உன்னை அண்டாது. பயம் தான் எம்மை கோழை ஆக்கிறது.. மற்றவனை தூண்டி விடுகிறது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கம் ஓன் குருவி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உங்களிடம் இருந்து இப்படி ஒரு கவிதையை நான் எதிர் பார்க்கவில்லை...மூச்சுக்கு நூறு தரம் பெண்களை மதிக்கிறேன் என சொல்பவர் எழுதும் கவிதையா இது...விபச்சாரி உருவாவதற்கு யார் காரணம் ஆண் வர்க்கம் தானே விரும்பி ஒருதரும் விபச்சாரத்திற்கு போவதில்லை[சில பெண்கள் விதி விலக்கு]...அவள் ஆண்களால் நிர்ப்பந்திக்கப்பட்டே இத் தொழிலுக்கு செல்கிறாள்...விபச்சாரம் அவர்கள் செய்யும் தொழில் அந்த தொழிலை வைத்து முழு பெண்களை அவ மதிக்கும் விதமாக எழுதியது தப்பு.

காதல் எல்லோருக்கும் கை கூடுவதில்லை..விபரம் தெரியாத வயதில் ஏற்பட்ட காதல் நீண்ட காலம், தூரம் போக மாறி இருக்கலாம்..நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் அப் பெண் லண்டன் போகாமல் இருந்திருக்க வேண்டும் என்றா...அங்கே போயும் உங்களை நினைத்துக் கொண்டு மணம் முடிக்காமல் இருக்க வேண்டும் என்றா...திருமணம் முடித்த அப் பெண் கணவரை விட்டு விட்டு உங்களுடன் திரும்பி வர வேண்டும் என்றா..மணம் முடித்த பெண்ணை விபச்சாரி எனச் சொன்ன முதல் ஆள் நீங்கள் தான்...ஏமாற்றி விட்டு சென்றால் ஏமாற்றுக்காரி எனச் சொல்லுங்கள் அதை விடுத்து விபச்சாரி எனச் சொல்வது ரொம்ப அதிகம்.

நான் இது வரை ஒருதருக்கும் மைனஸ் புள்ளி வழங்கியதில்லை நீங்கள் தான் முதல் ஆள்.

நான் பெண்களை மதிக்கிறேன் என்பதற்காக அவர்கள் மற்றவர்களைக் காலில் போட்டு மிதிக்க கருவேப்பிலையாக பாவித்துவிட்டு வீச இடமளிப்பேன் என்று அர்த்தமில்லை.

விபச்சாரி என்பவள் தன்னால் இயலாததை தனது உடலை விற்று சாதிப்பவள். விசாவிற்காக உடலை விற்பதும் ஒன்றுதான்.. காசிற்காக.. உணவிற்காக விற்பதும் ஒன்றுதான். உலகில் மனிதப் பெண்களைத் தவிர வேறு எந்த உயிரினமும்.. தனது இதர தேவைகளிற்காக உடலை விற்று உயிர் வாழ்வதில்லை. வெட்கெக்கேடான ஒரு விடயம் இது உயிரினங்களுக்கே..!

நான் விசாவிற்காக உடலைக்காட்டும் பெண்களை விபச்சாரிகள் என்று இனங்காண்பதில் இருந்து விலகக் கூடிய அளவிற்கு காத்திரமான பதிலை எவரும் முன்வைக்கவில்லை.

அடுத்தது.. அந்தப் பெண்ணிருந்த இடத்தில் ஓர் ஆணிருந்தால்.. அவன் லண்டன் போய்.. விசா எடுத்து.. நிரந்தர வதிவுரிமை எடுத்து.. அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டால்.. ஆகா ஓகோ.. காதலை போற்றுகின்ற இளவள்ளல் என்று பாராட்டுவீர்களாக்கும். ஆனால் ஒரு பெண் என்றால்.. அவள் போன இடத்தில் எந்தப் பொறுப்பும் அற்று கொண்டை முடியலாமாக்கும்... எவனோடும் குட்டி போடலாமாக்கும்.

இதெல்லாம் ஒரு நியாயம். உண்மையில் நீங்கள் மைனஸ் வழங்கியது உங்கள் சமூகம் பற்றிய இரட்டை நிலைப்பாட்டுக்கே அன்றி எனக்கல்ல..! அதுமட்டுமன்றி நான் ஒரு ஆக்கத்தை பொதுவிடத்திற்கு கொண்டு வரும் போது வெறுமனவே நேர் வினையை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. மறை வினையையும் எதிர்பார்க்கிறேன். நிச்சயம் ஒரு ஆக்கம் எல்லோராலும் வரவேற்கப்படும் என்றில்லை. ஆனால் அதன் தாக்கம் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையில் சென்றடையும். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

நன்றி உங்கள் கருத்துப் பகிர்விற்கு. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதிய கவிதையில் அப் பெண் காசுக்காகவோ அல்லது விசாவிற்காகவோ தன் உடம்பை விற்கவில்லை....தன் பெற்றோருடன் தான் லண்டன் செல்கிறாள்...ஒரு பெண்ணின் தந்தையோ,ஆண் சகோதரங்களோ அல்லது அவளது கணவரோ சரியில்லா இடத்தில் தான் அப் பெண் தன் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியில்லாமல் தான் இத் தொழிலுக்கு வருகிறாள்....சில பெண்களும் ஆணை ஏமாற்றுகின்றனர் அதே போல ஆண்களும் ஏமாற்றுகின்றனர்...பெண்கள் ஏமாற்றினால் விபச்சாரப் பட்டம் கொடுக்கும் நீங்கள் ஆண்கள் ஏமாற்றினால் என்ன பட்டம் கொடுப்பீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கம் ஓன் குருவி

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது

கவிதையை வடிவாகப் படித்தீர்களா..??!

கவிதையின் படி அவளே கடைக்கண் வீசி ஆரம்பிச்சு.. காதலிச்சு எல்லாம் செய்திருக்கிறாள். இறுதியில் தகப்பனுக்கு விசாக் கிடைத்ததும் மாறிவிட்டாள். சரி போனவள் தான் போனாள் அவனுக்காக காத்திருந்து அல்லது அவனை அழைத்து கொண்டு அவனோடு வாழ்ந்திருக்கலாம் தானே.

இதே நிலையில் ஒரு ஆணிருந்திருந்தால்.. அவருக்கு சுயபுத்தி இல்லையா. அப்பா அம்மாவிடம் சொல்லித் தப்பிக்கத் தெரியாதா.. என்று எத்தனையோ கேள்விக்கணைகள் தொடுத்திருப்பீர்கள்.

பெண் என்றவுடன்.. அவள் பெற்றோருடன் தானே போனாள்.. போன இடத்தில்.. புதுப்பொம்பிளையாய் ஆனாள்.. லண்டனில் இன்னொருத்தனைப் பார்த்து தாலிக் கோர்த்துக் கொண்டால்.. என்று வெகு லாவகமாக கதை எடுத்துவிடுகிறீர்கள். இப்படி தங்கள் பக்கம் சேதாரம் இன்றி கதை அளக்கிற பெண்களின் மனநிலை தான் இந்த நிலைக்குக் காரணம். இவர்கள் மாற வேண்டும். ஆனால் வெளி நாடுகளில் வெள்ளைக்கு கூலிக்கு மாரடிக்கும் ஆண்கள் கூட்டத்திற்கு.. எங்கையடா ஒருத்தி கிடையாளா என்று திரியுறதுகளுக்கு.. இவர்கள் தான் உடலைக் காட்ட வேண்டும். இது விபச்சாரம் இன்றி வேறென்ன..???!

நியாயத்தைப் பேசுங்கள். ஆண்கள் பக்க அநியாயத்தை மறைத்து பெண்கள் பக்கத்தை மட்டும் காட்டுவதல்ல நோக்கம். ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியும் வைக்கும் இந்தச் சமூகத்தை சந்தி நிறுத்திக் கேள்வி கேட்பதே நோக்கம்..! நீங்களே அதற்கு நல்ல ஒரு உதாரணமாகி கருத்துக்களை வைக்கிறீர்கள். நன்றி. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தைக்கு நிரந்தர விசாகிடைத்து லண்டன் வருவது என்றால் ஸ்பொன்சரில் வந்திருக்க வேண்டும், ஸ்பொன்சரில் வந்தவர்களுக்கு சிறீலங்கன் புத்தகதிலேயே இலங்கையிலேயே விசா கொடுக்கபட்டு விடும், லண்டன் வந்ததும் புதுப்பித்து கொள்வார்கள், அப்படியிருக்க விசாவிற்க்காக ஒருத்தனை திருமணம் முடித்தாள் என்பது பொருந்தவில்லை,இட்டு கட்டியதாக இருக்கிறது, எங்கேயோ தவறு நடந்திருக்கு. விவரமாக விசாரித்து பார்கவும், வேறு ஏதாவது காரணம் இருக்கும். :D

கவிதை வரியிலே தேவையான இடத்தில் சரியான வார்த்தையை துணிந்து பாவித்த நெடுக்கருக்கு எனது வாழ்த்துக்கள். கவிஞர் நெடுக்கர் முதல்காதலியின் செயலை விபச்சாரியுடன் ஒப்பிட்டு கவிதை எழுதியிருக்காரேயொழிய அவளை நீங்கள் நினைக்கும் விபச்சாரி போன்று பலருடன் செல்பவளாக சொல்லவில்லை. வித்தியாசமென்ன? என கேட்டு வாசகரை சற்று யோசிக்க வைக்கிறார். வாசகர்கள் பிழையாய் விளங்கியதால் வந்த விமர்சனங்கள் வாஸ்தவம்தான்

கவிஞரோ அடுத்தவரியிலே தன் பழையகாதலியை பத்தினியாக சித்தரிக்கிறார்..விமர்சகர்களுக்கு அது கண்ணிலே இன்னும் பிழையாகவே படுது.

அருகில் நகர்ந்து

"காய்" என்றேன்.

அவளோ

முகத்தைத் திருப்பியவளாய்

நடை போட்டாள்

அவன் பின்.

தாலி கட்டியவன்தான் காதலனை விட மேல் என்று காதலனுக்கு இந்த பெண் உறைக்க வைத்து செல்கின்றாள்..உதுதான் தமிழ் பத்தினி.

எல்லாத்தையும் விட கவிஞர், கவிதை, காதலன், காதலி என்று நோக்குங்கள். கவிஞர் தனது கவிதையில காதலனின் மனக்குமுறலை நண்றாக வெளிப்படுத்துகின்றார். காதலியை பத்தினியாகவும் சித்தரிக்கிறார்.

வாசகருக்கு நல்ல கவிதையை தந்த கவிஞர் நெடுக்ஸ் அவர்களை பாராட்டுகிறேன்..மென்மேலும் உங்கள் வாசகர்களின் சிந்தனையை தூண்டும் கவிதைகளை எதிர்பார்க்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை. பள்ளி பருவத்தில் வருவது காதல் என்டு அதாவது உண்மை காதல் என்டு சொல்ல முடியாது. 16 வயதான பருவத்தில் எல்லோர்க்கும் வருகின்ற காதல் அதிசயம்.

அது நிலைப்பதே இல்லை. நான் சொல்வது சொன்ன காதல் சொல்லாத காதல் இராடும் அடங்கும்.

நினைச்சா சிரிப்பா இருக்கு.கடலை போட்டவள் விசா வந்தவுடன் சொல்லாமல் போய்விட்டாளாம்.*** நாலு கேள்வி கேட்டு விசாவை கிழித்தெறிந்து இழுத்துக்கொண்டு போயிருக்க வேண்டாம்? ஆண்களுக்கே வெட்ககேடு இப்படி சிலரால்.

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தைக்கு நிரந்தர விசாகிடைத்து லண்டன் வருவது என்றால் ஸ்பொன்சரில் வந்திருக்க வேண்டும், ஸ்பொன்சரில் வந்தவர்களுக்கு சிறீலங்கன் புத்தகதிலேயே இலங்கையிலேயே விசா கொடுக்கபட்டு விடும், லண்டன் வந்ததும் புதுப்பித்து கொள்வார்கள், அப்படியிருக்க விசாவிற்க்காக ஒருத்தனை திருமணம் முடித்தாள் என்பது பொருந்தவில்லை,இட்டு கட்டியதாக இருக்கிறது, எங்கேயோ தவறு நடந்திருக்கு. விவரமாக விசாரித்து பார்கவும், வேறு ஏதாவது காரணம் இருக்கும். :D

விசா சிறீலங்கன் புத்தக்கத்தில் குத்தி.. லண்டனில் புதுப்பிக்கப்படட்டும் அது அல்ல பிரச்சனை. தந்தைக்கு விசா வந்ததும்.. தனக்கு கிடைத்து விட்டது என்பதால்.. அருகிருந்தவனை அடியோடு மறப்பதும்.. லண்டனில் இன்னொருவனோடு திருமணம் செய்வதிலும் என்ன நியாயம் இருக்கிறது... விசா இருக்கிறது என்பதற்காக 10 ஆண்களையும் காதலிக்கலாம் கலியாணம் செய்யலாம்.. என்றால் அது விபச்சாரம் இன்றி வேறேன்ன. அதுதான் இங்கு முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி இப்படி விசாவில் வருபவர்கள் இலகுவாக இலங்கையில் இருக்கும் காதலனை அழைத்துக் கொள்ளலாம். ஏன் அந்தப் பெண் செய்து கொள்ளவில்லை..??! விசா வந்ததும்.. லண்டன் ஸ்ரைலில் ஒரு மாப்பிள்ளை கேட்டிச்சுதோ..??!

இந்த விசா பத்தியம் ஒரு வகை என்றால் இன்னும் இன்னும் இன்னும் பல வகைகள் உண்டு. விசா எடுப்பதற்காகவே திருமணம் என்று உடலைக் காட்டும் பெண்கள் எமது சமூகத்தில் மிக அதிகம். இதே பெண்கள் ஊரில் தாங்கள் விரும்பியவரோடு வாழ்வார்களா என்றால்.. விசாவுள்ள கலியாணம் கட்டினவனைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள். இப்படி விசாவிற்காக கலியாணம் கட்டி ஏமாந்த பெண்களும் உளர். ஏன் எதனால்...???! அவர்களின் பேராசைகளால் இல்லையா..???!

இது இட்டுக்கட்டுகை அல்ல.. இந்தப் பெண் ஒரு வகை என்றால் இப்படி இன்னும் பல வகைகள் உள்ளன என்பதைச் சொல்ல உங்கள் கருத்தும் உதவியது நன்றி. :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.