Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாய்பாபாவின் மறுபக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாய்பாபாவின் மறுபக்கம்

உலகலாவிய ரீதியில் பல இலட்சம் பக்தர்களைக்கொண்ட சத்திய சாயிபாபாவின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஒரு மாயாஜால மந்திர தந்திரமேயொழிய அவர் ஒரு ஆண்டவனோ அல்லது ஆண்டவனின் அவதாரமோ கிடையாது என்பதனை BBC போதியளவு ஆதாரத்துடன் இந்த டொக்குமென்டரி (documentary film) படத்தினை வெளியிட்டுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் அவரின் மறுபக்கத்தையும் வெளியிட்டு முகத்திரையை கிளித்துள்ளார்கள். இப்படிப்பட்டவரா இந்த பாபா என்று இப்படத்தின் மூலம் அவரை இணங்காண முடிந்தது. இவரை கைதுசெய்து இவரிடம் அகப்பட்டுள்ள சிறார்களை இன்னமும் இந்திய அரசு மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இப்படத்தினை தந்தை பெரியார் திராவிடர்கழகம் தமிழில் மொழி பெயர்த்து தமிழிலேயே பார்க்ககூடியதாக செய்துள்ளார்கள். இப்படம் 3 பாகங்களைக்கொண்டது.

இப்படம் சுமார் 1 மணிநேரம்.

இப்படத்தினை பார்க்க விரும்புபவர்கள் இப்படியே இணையத்தில் பார்க்கலாம். பின்னர் பார்க்கவிரும்புபவர்கள் பின்வரும் லிங்குகளையும் Bookmark செய்து வைத்து பின்னர் பார்க்கலாம். இதுதான் அந்த லிங்குகள்

1) http://www.dailymotion.com/swf/x4y3iy

2) http://www.dailymotion.com/swf/x4y4n1

3) http://www.dailymotion.com/swf/x4y5vb

இப்படத்தினை டவுன்லோட் செய்து சிடியில் பதித்து உங்கள் டிவியில் பார்க்க விரும்புபவர்கள் பிவரும் லிங்குகளை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளவும். டவுன்லோட் செய்ய youtube downloader ஐ பயன்படுத்தி டவுன்லோட் பண்ணி கொன்வேர்ட் பண்ணிக்கொள்ளவும். TV யில் பார்ப்பதற்கு மிகவும் தெளிவாக இருந்தது. நல்ல copy.

இதுதான் அந்த லிங்குகள்

http://www.dailymotion.com/video/x4y3iy_sai-baba-1_news

http://www.dailymotion.com/video/x4y4n1_sai-baba-2_news

http://www.dailymotion.com/video/x4y5vb_sai-baba-3_news

இப்படத்தினை தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமல் BBC யினரின் ஆங்கில படப்பிரதியை பார்க்கவிரும்புபவர்கள் பின்வரும் லிங்கில் சென்று பாருங்கள் அல்லது டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இதுதான் அந்த லிங்

http://video.google.com/videoplay?docid=-3767740320034777862

மற்றும் இப்படத்தின் BBCயின் முழு Transcript ஐயும் படித்துப்பார்க்க விரும்பினால் இங்கே கிளிக்பண்ணவும்.

http://news.bbc.co.uk/2/shared/spl/hi/programmes/this_world/transcripts/secret_swami17_06_04.txt

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டுப்பட்டவுடன் தான் தந்திரங்களைத் தெரிந்தே செய்ததாகவும் அதை மக்களின் நன்மைக்காகச் செய்ததாகவும் பூசி மெழுகியுள்ளார்..! ஆனால் இப்பவும் பக்தர்களுக்குக் குறைவில்லை. ஐயோ பாவம் பக்தர்கள்..! :wub:

அதுசரி, பாபா செய்தால் சரி.. பிரேமானந்தா செய்தால் களியா? ரொம்ப அநியாயம்பா இது..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

-----

அதுசரி, பாபா செய்தால் சரி.. பிரேமானந்தா செய்தால் களியா? ரொம்ப அநியாயம்பா இது..! :wub:

பிரேமானந்தா தமிழன். இந்தியாவில் தமிழன் எது செய்தாலும் பிழை தான்.

BBCக்கு பாபா என்ன தண்டனை கொடுக்கப்போறாரோ தெரியாது.

பகவான் சாயிபாபாவின் திருவிளையாடல்களை எத்தனையோ வருடமாக காட்டி வருகின்றார்கள். இது ஒண்டும் புதிதல்ல. நம்புவதற்கு அடி முட்டாள்களிருந்தால் காட்டுவார்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட தமிழ் மக்களை அழிக்க யுத்தம் ஆரம்பிக்க முதல் ஒவ்வொரு முறையும் சிங்களவன் இவரிட்டதானே ஆசீர்வாதம் வாங்கினவன். அதில வெற்றியும் பெற்றிருக்கிறான் தானே. அப்ப இவர் வாழும் தெய்வம் இல்லாட்டி வேறையென்ன?

http://www.mamalisa.com/mp3/baa_baa_black_sheep_lib.mp3

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் நண்பர்களுடனாவது நட்பை பேணாது.....

அது இது என்று அவதூறுகளை எழுதி உள்ளதுகiளுயும் கெடுத்துகொள்ளுங்கள். தெரிந்த ஒன்று அதுதானே.

அந்த பகவான் எத்தனை ஈழதமிழர்களை தனது பக்தர்களாக கொண்டுள்ளார். இந்தியாவின் இத்தனை கொடுமைகளுக்கு பிறகும் அவர் தனது பக்தர்களான ஈழதமிழர் மீது எந்த நடவடிக்கையையும் பகவான் சத்திய சாய்பாவா எடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம்

தௌ;ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம்”;

உங்களின் உள்ளே கடவுளை (கடஉள்) கண்டு கொள்ள கற்றுக் கொண்டால் வாழ்வே அற்புதமாகிவிடும்.

சீவன், இந்த மூச்சுதான் உண்மையான கடவுள்.

இயற்கைக்கு மாறான விடயங்கள் அல்ல அற்புதம். பசுவில் இருந்து பால் வருவது தான் உண்மையான அற்புதம்.

கல்லில் இருந்து வருவது அல்ல.

நமது தாத்தாவினுடைய தாத்தாவின் பெயரே நமக்கு தெரியாது.

நமக்கும் இதுதான் நடைபெற போகின்றது. எனவே அவர் சரியா, பிழையா என நேரத்தை வீணாக்காது,

உயிருடன் வாழும்பொழுதே அந்த உயிர் சக்தியை உணரும் கலையை கற்றுக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த அளவிலை உயிரோடை இருக்கிற ஒருவரை கும்பிடுறது சரியெனப்படவில்லை.அதை விட எங்களை நாங்களே கும்பிடலாம்.சாயிபாபா செய்ததாக கூறப்படும் எந்த ஒரு அற்புதத்துக்கும் முறையான ஆதாரம் இல்லை.இது இந்தியாவிலை உழைக்க இலகுவான வழி அது மட்டும் தான்.இதுக்கு நிச்சயமா எனக்கு காட்டமான பதிலடிகள் கிடைக்கும் எண்டு நம்புறன் ஆனால் இவை எனக்கு தோன்றியவை மட்டுமே மற்றும்படி எவர் மீதான அவதூறும் அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாய்பாபாவை விட சர்க்கஸ் கோமாளிகளும், மாஜிக் நிபுணர்களும் அதிகமான அதிசயங்களை மக்களுக்கு முன் நிகழ்த்திக் காட்டுவார்கள்.

இது பல காலமாக பலருக்கும் தெரிந்த ஒரு விடயம். யு.எஸ் அரசாங்கம் கூட இந்தியாவிற்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கைவிடுத்திருந்தது.இப்படியான இடங்களுக்கு போய் எதும் பிரச்சனையில் மாட்டுப்பட்டால் நாங்கள் பொறுப்பாளிகளில்லை என்று.சுஜாதா கூட "மாயா" என்றொரு சிறுகதை எழுதியிருந்தார் இவரைப் பற்றி.

இந்திய அரசாங்கத்திற்கு இவரால் பெரும் வருமானம் வருகின்றதென்றபடியால் இப்படியானவர்களை கண்டுகொள்வதில்லை.இவர் பல சமூகத்தொண்டுகளும் செய்ய வெளிக்கிட்டபடியால் நன்கு காலூன்றிவிட்டார்.நம்மட சாமியார் கொஞ்சம் சீப்பாக இருந்தபடியால் ஆப்பிட்டுவிட்டார்.

இவர் பெண்களுடன் சேட்டைவிடுவதில்லை என்பது நல்ல விடயம் நீங்கள் யாரும் போனால்தான் கஸ்டப்படுவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜதந்திரங்கள் ஏதும் அற்று இந்தியாவிற்கும் அங்கு வாழும் அற்புத பாபாவிற்கும் எதிராக அபதூறுகளை அள்ளி கொட்டுவதால் என்ன பயன் உங்களுக்கு கிடைக்க போகின்றது?

பி.பி.சி வேண்டும் என்றே இந்த வீடியோவை தாயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் வருபவர் சாய்பாபா அல்ல.

பல அற்புதங்கள்.............. மன்னிக்க வேண்டும் அற்புதங்களை மட்டுமே கொண்ட இந்து மத்திற்கு எதிரான கிறிஸ்தவர்களின் கோமாளிதனமான வேலையிது.

பிள்ளையார் பால் குடித்துகாட்டிய பின்பும் இவர்களின் பருப்பு வேகும் என்று நினைக்கின்றார்கள் போலும்?

இவர்களின் சேட்டை இப்படியே தொடருமாக இருந்தால்........... சிவபெருமான் குடுப்பத்தோடு வந்து பால்குடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சிறார்கள் பால்குடிக்க வளியில்லாமல் துடிக்கின்றார்கள் என்பதற்காக பின்போடபட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மனிதனை கும்பிடுறதில் நம்பிக்கை இல்லை...சாய்பாபாவை கும்பிடுறவர்கள் முதலில் அவர்களை பெற்றவர்களை கும்பிடட்டும்.

எனக்கு மனிதனை கும்பிடுறதில் நம்பிக்கை இல்லை...சாய்பாபாவை கும்பிடுறவர்கள் முதலில் அவர்களை பெற்றவர்களை கும்பிடட்டும்.

சலாம் சலாம் சலாம் ரதி.

சாய்பாபாவை கும்பிடுறவர்கள் முதலில் அவர்களை பெற்றவர்களை கும்பிடட்டும்.

பெற்றோரை நேர்சிம்கோம் இல விடுவம் ஆனால் புட்டபத்தியில போய் பஜனை பாடுவோம்,இந்த பாபாவை பிரபலபடுத்தியதில் புலம்பெயர் ஈழதமிழனுக்கு முக்கிய பங்குண்டு,சைவமன்றம் நடத்தும் சைவப்பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பமாட்டார்கள் ஆனால் பாலவிகிளாஸ்(பாபா கல்வியறிவு புகட்டுமிடம்)அனுப்புவார்கள் எம்மவர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.