Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எது சரியான வயது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணே முதலில தாம்பத்திய உறவுன்னா என்ன என்று சொல்லுங்கண்ணே.

இதோ இதில் விளக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்.. படியுங்கள். :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=62294

  • Replies 59
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலை போவானுக்கு இதிலை அனுபவம் இல்லாவிட்டாலும், அவருக்கு இதிலை கேள்வி ஞானம் அதிகம். :lol:

எனக்கு உதில அனுபவம் இல்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நிறையப் படித்திருக்கிறேன் இதைப்பற்றி. அதற்காக முழுமையாகப் படித்திருக்கிறேன் என்று அர்த்தமில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உதில அனுபவம் இல்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நிறையப் படித்திருக்கிறேன் இதைப்பற்றி. அதற்காக முழுமையாகப் படித்திருக்கிறேன் என்று அர்த்தமில்லை. :D

இதுக்குப்பிறகும் இவரின் இது சம்பந்தமான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் ...

நீங்கள் அதனுடைய கருத்தை சரியாக விளங்கவில்லை என்றுதான் சொல்லுவேன்.....

Although the probability increases with maternal age, 80% of children with Down syndrome are born to women under the age of 35,[57] reflecting the overall fertility of that age group.

இப்படி சொல்லாம்...35 வயதுக்கு பிறகு பிள்ளை பிறக்கும் தன்மை குறைவடைத்து போவதால் அவர்களுக்கு பிறக்கும் குறைபாடுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை உலகத்தில் உள்ள மொத்த குறைபாடுடைய பிள்ளைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குறைவாகும்...

(பிள்ளையே பிறக்காது பிறகென்ன குறைபாடு உள்ள பிள்ளை என்பது போல -35 வயதிற்கு கூடியவர்களுக்கு )

(காய்க்கிற மரம்தான் கல்லெறி வாங்கும் என்பது போல- 35 வயதிற்கு குறைந்தவர்களுக்கு )

நான் நினைக்கிறேன் அந்த Although உங்களை மயக்குதேனே ...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ...

நீங்கள் அதனுடைய கருத்தை சரியாக விளங்கவில்லை என்றுதான் சொல்லுவேன்.....

Although the probability increases with maternal age, 80% of children with Down syndrome are born to women under the age of 35,[57] reflecting the overall fertility of that age group.

இப்படி சொல்லாம்...35 வயதுக்கு பிறகு பிள்ளை பிறக்கும் தன்மை குறைவடைத்து போவதால் அவர்களுக்கு பிறக்கும் குறைபாடுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை உலகத்தில் உள்ள மொத்த குறைபாடுடைய பிள்ளைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குறைவாகும்...

(பிள்ளையே பிறக்காது பிறகென்ன குறைபாடு உள்ள பிள்ளை என்பது போல -35 வயதிற்கு கூடியவர்களுக்கு )

(காய்க்கிற மரம்தான் கல்லெறி வாங்கும் என்பது போல- 35 வயதிற்கு குறைந்தவர்களுக்கு )

நான் நினைக்கிறேன் அந்த Although உங்களை மயக்குதேனே ...

இளம் பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளையே உருவாக்குவார்கள் என்ற உங்களின் வாதம் தான் தவறு. இளம் பெண்களும் சில பிறப்புரிமையியல் குறைபாடுள்ள குழந்தைகளை அதிகம் உருவாக்குகின்றனர் என்பதுதான் எனது கருத்து. 80% டவுன் சின்றோம் குழந்தைகள் இளம் பெண்களுக்குப் பிறந்தவையாக இருக்கின்றன. அப்படி இருக்கும் போது இளம் பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளையே உருவாக்குகின்றனர் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமல்ல. அதுமட்டுமன்றி இளம் பெண்கள் 40 வயதிற்கும் மேற்பட்ட ஆண்களை விட இரண்டு மடங்கு அதிக அளவில் ஆட்டிசும் பிறப்புரிமையியல் குறைபாட்டோடு குழந்தைகளைப் பெறுகின்றனர். இந்த நிலையில் இளம் பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளையே உருவாக்குகின்றனர் என்பது இன்றைய பொழுதில் எப்போதும் சரியாக அமையக் கூடிய வாதம் அல்ல. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெ..

நான் எங்கையாவது இளவயது ஆண்கள் , பெண்களுக்கு குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்காது என்று சொல்லியிருந்தால் அது பிழையான கருத்து ..நான் நினைக்கவில்லை அந்தளவிற்கு பிழையாக எழுதியிருப்பேன் என்று..

ஆனால் சொல்ல வருவது இதுதான் ...குறைபாடுடைய பிள்ளைகள் பிறப்பதற்கான சாத்தியம் வயது கூட கூட கூடும் ...அந்த 35 வயது "கட் அவுட்" ..பலவிதமான காரணிகளை கொண்டு பெறப்பட்டது...ஆனால் அதுக்கு பிறகு எல்லாம் முடிந்தது என்று கருத்தல்ல. உதாரணத்துக்கு ஒரு பெண்ணின் வயது 35 வயதை தாண்டினால் Risk pregnancy என்ற வகையில் வரும்..கூடுதாலான மருத்துவ கவனிப்பு, சோதனைகள் என்பன ..மற்றது அந்த 80 % நீங்கள் விளங்க்கொல்வது தவறானது...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பருவத்தே பயிர் செய்

  • கருத்துக்கள உறவுகள்

பருவத்தே பயிர் செய்

ஐயர் வருமட்டும் அமாவாசை காத்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறை வாழ்க்கையில் உண்மையானது. பெண்களுக்கு 30 வயதுக்கு மேல் குழந்தையை உருவாகும் தன்மை 30 வயதை விட குறைவாக உள்ளவர்களை விட குறைவாக உள்ளது.அதோடு 30 வயதுக்கு மேல் குழந்தை பெறும் பெண்கள் (உடற்பயிற்சி செய்பவர்கள் தவிர) மிகுந்த கஸ்டத்தை அனுபவிக்கிறார்கள்.குறிப்பாக எமது பெண்கள் பல முறை கரு சிதைவுகளுக்கு உள்ளாகிறார்கள். அத்தோடு குழந்தையை பெறும் போது சத்திர சிகிச்சை(C Section) மூலம் பெற வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் விக்கிபீடியாவில் பார்க்காமல் நடைமுறையில் உள்ளவர்களை பார்த்தாலே புரிந்துவிடும். எம்மவர் பற்றி விக்கிபீடியா தனியாக ஆராட்சி செய்யவில்லை.

என்னோடு வேலை செய்யும் வெள்ளை இன பெண் குழந்தை பெறுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னும் குழந்தை பெற்று ஒரு கிழமைக்கு பின்னும் தனது உடற்பயிற்சியை சர்வசாதாரணமாக தொடர்கிறார்.அப்படி எம்மவர்களும் சிறு வயது முதல் உடற்பயிற்சி செய்து திடகாத்திரமாக வைத்திருப்பவர்களுக்கு குழந்தை பெறுதல் மிக இலகுவானது.

இளவயதில் பிள்ளைகளை பெற்று வளர்ப்பதால் இலகுவாக பிள்ளைகளை வளர்க்க முடியும்.ஏனெனில் பெற்றோருக்கு அதிக சக்தியும், வலுவும் இருக்கும்.வயது போன நேரங்களில் பிள்ளைகளை பெற்று பிள்ளைகளின் திருமணத்தின் போது உயிருடன் இருப்பதையோ அல்லது தள்ளாத வயதில் பிள்ளைகளின் திருமண காட்சிகளை அனுபவிக்க முடியாமல் போய்விடும். பிள்ளைகளின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்காமல் வயோதிபர்களாக , நோயாளிகளாக எந்த வித சந்தோசங்களையும் அனுபவிக்க மாட்டோம்.

ரதியின் ஏற்கனவே இட்ட தலைப்புகான ஒரு பகுதி விடை இது. தாம்பத்திய உறவு பற்றி பெரியோர்கள் விவாதிப்பார்கள்.

என்னுடைய உலக பார்வையில் பல்கலைகளக படிப்பு முடித்தவுடன் (22வயது சராசரியாக) தனது வாழ்க்கையை ஒரு பெண் சிந்திக்கலாம்.தொடர்ந்து படிப்பதன் மூலமோ அல்லது வேலையில் உள்ள போதோ தனது திருமணத்தை முடித்து கொள்ளலாம்.வாழ்வை மிக அனுபவிக்க கூடிய வயதும் இதே.

ஏதோ எனக்கு தெரிந்த கருத்துக்களை தெரிவித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப்பிறகும் இவரின் இது சம்பந்தமான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. :lol::lol:

அதோடை பெண்கள் சம்பந்தமா நெடுக்ஸ் எழுதும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் குடுக்கத் தேவையில்லை..! சும்மா இல்லாததையும் பொல்லாததையும் எழுதி இருக்கிற எங்கட பிழைப்பையும் கெடுத்து விடுவார்..! :D

அடடா இப்படி ஒரு திரி இருக்குதா என்ர கன்னில படாமல். :lol: சரி விசயத்துக்கு வருவம்.முதல்ல தாம்பத்தியத்துக்கும் திருமணத்துக்கும் சம்பந்தம் இல்லை :D .அது உங்கள் வசதி வாய்புகள்,விருப்பு வெறுப்புகளை பொறுத்தது.ஆனால் தங்களை காத்துக்கொள்கிற அளவு அறிவு நிச்சயம் வேண்டும்.திருமணம் நிச்சயமாக இரு பாலாரும் 30 வயதுக்குள் செய்ய வேண்டும்.

நான் கனடாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில வேலை செய்த இடத்தில ஒருத்தன் உதை சொன்னான். என்ன என்றால் உடலுறவு மகிழ்ச்சி வேற. பிள்ளைப்பெறுகிற விளையாட்டு வேற என்று. இஞ்ச உடலுறவு மகிழ்ச்சியை பன்னிரண்டு வயசிலை இருந்தே சனம் அனுபவிக்கிது. சின்னத்தம்பிக்கான கவசம் ஒவ்வொரு பாடசாலை மலசலகூடத்திலையும் வைக்கப்பட்டு இருக்கிதாம்.

பிள்ளை பெறுவது என்று பார்த்தால்.. இந்தக்காலத்தில விஞ்ஞானம், தொழில்நுட்பம், மருத்துவம் முன்னேறி எவ்வளவோ விளையாட்டுக்கள் எல்லாம் வந்திட்டிது. நெடுக்கு அண்ணையை கேட்டால் உதுகளை பற்றி விரிவாய் சொல்லுவார். :lol:

மற்றது, உடலுறவுக்காக கலியாணம் செய்யவேணும் என்கின்ற கட்டாயமும் அருகிக்கொண்டு வருகிது. தவிர, ஏற்கனவே எத்தனையோ மில்லியன் பிள்ளைகள் தாய், தகப்பன் இன்றி வழியின்றி தவிச்சுக்கொண்டு இருக்கிதுகள். அதுகளில ஒன்றை தத்து எடுத்து வளர்த்தால் குறைஞ்சோ போயிடுவம். புதுசாய் ஒன்றை உருவாக்குவதைவிட ஏற்கனவே உருவாக்கப்பட்டு வாழ்க்கை இன்றி தவிர்க்கின்ற ஒன்றுக்கு வாழ்க்கை குடுத்தால் அது புண்ணியமாய் போகும்.

நாங்கள் சிந்திக்கேக்க எப்பவும் எங்களை சமூகத்தில இருக்கிற மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து, சமூகத்தின்ர எதிர்பார்ப்புக்களை திருப்திப்படுத்துற வகையில சிந்திப்பம் பொதுவாய். ஆனால், நடைமுறை வாழ்வு எப்போதும் அதனுடன் ஒத்துப்போவது என்பது இல்லை.

இளம் வயசில கலியாணம் கட்டி இளமையிலேயே பிள்ளைகளையும் பெத்துபோட்டு செத்துபோன எத்தனையோ தாய்மார்கள் இருக்கறீனம். என்ர அம்மாட அம்மாவும், என்ர அப்பாட அம்மாவும் அவையுக்கு முப்பது சொச்சம் வயசு இருக்கேக்கையே செத்துப்போச்சீனம். இப்பவும் இளம் வயசில தாய்மாரின்ர சாவுகள் நடந்துகொண்டுதான் இருக்கிது.

எல்லாத்துக்கும் காலம், சூழ்நிலைகள் இடம்கொடுக்க வேணும். என்னதான் நாங்கள் தலைகீழாக இருந்தாலும் காலம், சூழ்நிலை சரியாக அமையாதபோது எல்லாம் தலைகீழாய்தான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எது சரியான வயது!

ஆண்: 27

பெண்: 23

:D

இதுக்குப்பிறகும் இவரின் இது சம்பந்தமான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. :lol::lol:

அதோடை பெண்கள் சம்பந்தமா நெடுக்ஸ் எழுதும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் குடுக்கத் தேவையில்லை..! சும்மா இல்லாததையும் பொல்லாததையும் எழுதி இருக்கிற எங்கட பிழைப்பையும் கெடுத்து விடுவார்..! :D

ஹாஹா. நெடுக்குக்கு அடி பலமாய்த்தான் விழத்தொடங்கி இருக்கிது. இன்னமும் எவ்வளவு காலம் நிண்டுபிடிப்பாரோ. உதுக்காகவாவது விரைவில ஒருத்தியை நெடுக்கு கலியாணம் கட்டவேணும். :lol:

எது சரியான வயசு

ஆண்: 27

:D

எனக்கு இப்ப 37 வயசு. 27 வயசில நான் கலியாணம் கட்டி இருந்தால் 27 தொடக்கம் இன்றுவரை நான் செய்த காரியங்கள் ஒன்றையும் வாழ்க்கையில செய்து இருக்க ஏலாது. எப்ப எனக்கு கலியாணம் ஆகிதோ அதுதான் எனக்கு சரியான வயசு எண்டு நினைக்கறன். :lol:

திருமணம் செய்யும் வயதுக்கும் தாம்பத்திய உறவுக்கும் (உடலுறவுக்கும்) சம்பந்தமில்லை. ஒரு பெண்ணோ ஆணோ 18 வயதுக்கு முன்பே உடலுறவு கொள்ள உடலளவில் தயாராகின்றனர். ஆனால் மனத்தளவில் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கும், அதனால் ஏதாவது பிரச்சனைகள் வந்தால் அவற்றில் இருந்து வெளியே வருவதற்கும் குறைந்தது 23 வயதாவது ஆகியிருக்க வேண்டும் என்று நம்புகின்றேன். 18 இற்கு முன் செய்யப்படும் உடலுறவு உணர்சிகரமானதாக (Emotional) அமைந்து விடுவதும், அதனால் அதனால் ஏற்படும் விளைவுகள் மீதான அறிவு பூர்வமான அணுகுதல் என்பது முழுதும் அற்றதாய் போய்விடுதலும் உண்டு. மிக இளவயதில் உடலுறவு கொண்டு விட்ட இளையவர்கள் பலர் மனதுள் குற்றவுணர்வு மேலிட்டு மனவழுத்தம் கொண்டு காணப்படுதனையும் காணமுடியும்.

ரதியின் மற்றக் கேள்வி குழப்பகரமாக இருக்கு. புலம்பெயர் நாடுகளில் உள்ள சில பெண்கள் 18 வயதிலேயே திருமணம் முடிக்கின்றனர் என்று குறிப்பிட்டு இருக்கின்றார். ஆனால் அதன் பின் சொல்லப்படும் பிரச்சனைகள் திருமண வயது சம்பந்தமானதோ அல்லது உடலுறவு சம்பந்தமானதோ அல்ல. அது பொருளியல் சார்ந்தது. 25 வயதில் மணம் முடித்த புலம் பெயர் பெண்களின் குடும்பத்திலும் சரி 30 வயதில் மணம் முடித்தவர்களின் வீடுகளிலும் சரி புலம்பெயர் நாடுகளில் இந்தப் பிரச்சனை இருக்கத்தான் செய்கின்றது

பெண்கள் குழந்தை பெறும் காலம் அவர்களின் menopause (மாதவிலக்கு: இதுக்கு சரியான தமிழ் என்ன? 'விலக்கு' என்பது பிற்போக்குத்தனமான ஒரு இணைப்பு) காலம் வரைக்கும் என்று இயற்கை வரையறுத்துள்ளது. இது ஏறக்குறைய 40 இல் இருந்து 45 வயது வரைக்கும் என்று கருதலாம். முன்னர் 10 பிள்ளைகள் பெற வேண்டி இருந்ததால் அவர்கள் 18 இற்கு முன்னமே மணம் முடிக்கும் அவசியம் இருந்தது. ஆனால் இன்று ஒரு குழந்தை அல்லது இரு குழந்தை என்று மட்டுப் படுத்தப்பபட்ட பின் அவர்கள் 30 இல் மணம் முடித்தாலும், ஆரோக்கியமான குழந்தைகள் இரண்டை 40 இற்குள் பெற்றுவிட முடியும். நான் இருக்கும் வீட்டில் மேல் மாடியில் இருக்கும் தமிழ் பெண் 42 இல் தான் மூன்றாவது குழந்தையை பெற்றுள்ளார். menopause காலம் முடிந்த பின்னும் உடலுறவில் பெண்கள் ஈடுபட முடியும் என்பதால் வயது ஒரு தடையாக அமையாது

மேலும் விதவைகள்,விவாகரத்து பெற்ற பெண்கள் மறுமணம் செய்வதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன... ஆண்கள் மணம் முடிக்கா விட்டாலும் தனித்து வாழலாம் ஆனால் பெண்களுக்கு அது கஸ்டம் என நினைக்கிறேன்.தயவு செய்து இது பற்றிய ஆக்க பூர்வமான கருத்துகளையும்,விமர்சனங்களையும் முன் வையுங்கள்

விதவைகள், விவாகரத்து ஆன பெண்கள் மறுமணம் முடிப்பது என்பது எனக்குத் தெரிந்து என் ஆச்சியின் காலத்திலேயே பரவலாக நடைமுறைக்கு வந்து விட்டது. இன்று இது ஒரு விவாதப் பொருளாகவே இல்லை. இடையில் சீதனம் கேட்பது, முதல் உறவில் பிறந்த குழந்தைகளின் நிலை என்பன சார்ந்து இந்த பிரச்சனை மாறுபடும்

  • கருத்துக்கள உறவுகள்

நெ..

நான் எங்கையாவது இளவயது ஆண்கள் , பெண்களுக்கு குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்காது என்று சொல்லியிருந்தால் அது பிழையான கருத்து ..நான் நினைக்கவில்லை அந்தளவிற்கு பிழையாக எழுதியிருப்பேன் என்று..

ஆனால் சொல்ல வருவது இதுதான் ...குறைபாடுடைய பிள்ளைகள் பிறப்பதற்கான சாத்தியம் வயது கூட கூட கூடும் ...அந்த 35 வயது "கட் அவுட்" ..பலவிதமான காரணிகளை கொண்டு பெறப்பட்டது...ஆனால் அதுக்கு பிறகு எல்லாம் முடிந்தது என்று கருத்தல்ல. உதாரணத்துக்கு ஒரு பெண்ணின் வயது 35 வயதை தாண்டினால் Risk pregnancy என்ற வகையில் வரும்..கூடுதாலான மருத்துவ கவனிப்பு, சோதனைகள் என்பன ..மற்றது அந்த 80 % நீங்கள் விளங்க்கொல்வது தவறானது...நன்றி

பொதுவாக முன்னைய காலங்களில் வயதான பெண்கள் திருமணம் செய்வதில்லை. பிள்ளைப் பெறுவதும் குறைவு. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் மத்தியில் தான் அநேகம் குறைபாடுள்ள குழந்தைகளும் உள்ளன. காரணம் குறைபாடு ஒன்றிற்கு வயது மட்டுமல்ல பிற காரணிகளும் செல்வாக்குச் செய்கின்றன. வெறுமனவே வயதுதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று காட்டுவது தவறு. அது சமூகத்து வழங்கப்படும் தவறான தகவல். இளம் பெண்களும் குறைபாடுள்ள குழந்தைகளை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு அதன் வழி சமூகத்தை விழிப்புணர்வூட்ட வேண்டுமே தவிர.. தவறான விளக்கங்கள் தரக் கூடாது.

குறிப்பாக ஆட்டிசும் எனப்படும் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இளம் பெண்கள் உருவாக்கும் குழந்தைகள் வயதான ஆண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை விட அதிகம் பாதிப்புக்களை சந்தித்திருக்கின்ற உண்மையும் சொல்லப்படுகிறது.

நான் மறுத்தலிக்கவில்லை வயதான பெண்களுக்கு உருவாகும் குழந்தைகள் அதிகம் பாதிப்பிற்கான சந்தர்ப்பத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதை. அதேவேளை இளம் பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளையே பெறுகின்றனர் என்பது தவறென்றே சுட்டிக்காட்டுகின்றேன். இளம் பெண்கள் மத்தியிலும் பிரச்சனைகள் இருக்கின்றன. எனவே இதுதான் சிறந்தது என்று இங்கு எல்லையிட முடியாது.

இன்றைய மருத்துவ உலகில் இது சின்னப் பிரச்சனை. இன்று நாங்கள் விரும்பும் பிள்ளையை விரும்பிய இயல்போடு தெரிவு செய்து பெற்றுக் கொள்ளும் அளவிற்கு மருத்துவ உயிர் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டுள்ள நிலையில்.. வயது என்பது முக்கிய காரணியாக இருந்தாலும் அதை சமாளிக்கும் பலத்தை அறிவியல் தருகிறது. அண்மையில் கூட ஒரு 70 வயது மூதாட்டி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றிருந்தார். 70 வயது மூதாட்டிக்கு குழந்தை பிறக்கும் என்பதை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள். ஆனால் மருத்துவ உயிர் தொழில்நுட்பம் அதை செய்து காட்டி இருக்கிறது.

தாம்பத்தியம் என்பது ஆண் - பெண் உடலுறவுக்கான ஒரு அலங்கரித்த சொல்வடிவம் என்று நினைக்கிறேன். பருவ வயதை அடைந்த ஆணும் பெண்ணும் அதை எப்போதும் செய்து கொள்ளலாம். சட்ட விதிமுறைகளுக்குள் செய்து கொண்டால் பொலிஸ் பிடிக்காது.. சட்டத்தை மதிக்காமல் செய்தால் பொலிஸ் பிடிக்கும். மற்றும்படி பெண்களுக்கு மொனாபேர்ஸ்.. அதாவது மாதவிடாய் நிற்கும் வயது வந்துவிட்டால் அவர்களுக்கு உடலுறவில் நாட்டம் குறைவது வழமை. 45 தொடக்கம் 55 க்குள் இது எப்போதும் நிகழலாம் என்பதால் பொதுவாக 55 வயதைக் கடந்த பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் குறைவது வழமை.

ஆனால் இப்போது ஓமோன் திரபி மூலம்.. மொனாபேர்ஸ் அடையும் வயதெல்லையை செயற்கையாக கூட்ட முடியும். இதன் மூலம் உடலுறவுக்கான நாட்டத்திற்கான வயதெல்லையும் அதிகரிக்க முடியும்.

அதைவிட.. உடலுறவில் ஈடுபட கட்டாயம் ஆண் தேவை என்ற நிலையும் இன்று பெண்கள் மத்தியில் இல்லை. பள்ளியில் முந்தி பகிடியாகச் சொல்வார்கள்... சில பெண்கள் பரிசோதனைக் குழாயைக் கொண்டு சுய இன்பம் அனுபவித்து அது உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது என்று. இப்படி கத்தரிக்காயை செலுத்தியவர்களும் உண்டாம். எனக்கு அதில் உண்மை பொய் தெரியாது. ஆனால் இன்று வயது வந்தோருக்கான கடைகளின் செயற்கையான ஆண் உறுப்புக்கள் விற்கப்படுகின்றன. அதை பெண்கள் (குறிப்பாக இளம் பெண்கள்.. மற்றும் ஆண்களை கவர முடியாத பெண்கள்.. உடற் பருத்த பெண்கள்) வாங்கி சுய இன்பம் அடைகின்றனர். இப்படி இருக்கும் போது.. தாம்பத்தியத்திற்கு இதுதான் வயதென்று இன்று வரையறுப்பது கடினமானது. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதைப்பற்றி எழுத ஆக்கள் வெக்கப்படுறீனம் போல. இல்லாட்டிக்கு அனுபவம் இல்லையோவும் தெரியாது. குறிப்பாய் நெடுக்காலபோவனுக்கு உதிலை அனுபவம் இல்லை. :rolleyes:

அனுபவப்பட்டால்தான் பேசமுடியுமா?

அனுபவப்பட்டால்தான் பேசமுடியுமா?

வாகனம் ஓடும் போது, சாரதிக்கு பக்கத்தில் எவ்வளவு நாட்கள் இருந்தாலும் வாகனம் செலுத்துவதை படிக்க முடியாது தானே. தானே வாகனம் செலுத்தினால்தான் எல்லாம் புரியத் தொடங்கும். அதே போல்தான் தாம்பத்திய உறவும் கறுப்ஸ் :rolleyes:

கறுப்பி, கலியாணம் கட்டிப்பார்க்காமல், தாம்பத்திய உறவை அனுபவிச்சு பார்க்காமல் அது எத்தினை வயசில செய்கிறது சரியானது என்று சொல்லிறது கொஞ்சம் கஸ்டமானதே. என்றாலும் பழுத்து கொட்டை போட்டதுகள் உண்மையான அனுபவங்களை சொல்லுமா என்றுறதும் கேள்விக்குறிதான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, கலியாணம் கட்டிப்பார்க்காமல், தாம்பத்திய உறவை அனுபவிச்சு பார்க்காமல் அது எத்தினை வயசில செய்கிறது சரியானது என்று சொல்லிறது கொஞ்சம் கஸ்டமானதே. என்றாலும் பழுத்து கொட்டை போட்டதுகள் உண்மையான அனுபவங்களை சொல்லுமா என்றுறதும் கேள்விக்குறிதான். :rolleyes:

கிணத்துக்குள்ள விழுத்தாமல் விடமாட்டம்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

கிணத்துக்குள்ள விழுத்தாமல் விடமாட்டம்..! :rolleyes:

ஏற்கனவே கிணத்துக்கட்டில்தான் நிக்கினம். :)

.

35 வயது தாண்டிய பெண், பிள்ளை பெற்றுக்கொள்ளும் போது டவுன் சிண்ட்ரோம் உடைய பிள்ளை பிறப்பதற்கான சாத்தியக்கூறு மிகச்சிறிய அளவால் அதிகரிக்கின்றது. கருவில் வைத்தே ஆரம்ப்பக்கட்டத்திலேயே பிள்ளைக்கு டவுன் சிண்ட்ரோம் இருக்கிறதா என்பதை அறிந்து கருக்கலைப்பு செய்வதற்கு வசதி இருக்கிறது. அத்தோடு எம்முடைய சமூகத்தில் டவுன் சிண்ட்ரோம் தாக்கம் குறைவு. ஆகவே இதைப்பற்றி அதிகம் பயப் படத்தேவையில்லை.

பெண் 25 இற்குப் பின்னும் ஆண் 30 இற்குப்பின்னும் பிள்ளை பெற்றால் இருவரும் சுதந்திரமாக வாழ்க்கையை அனுபவிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. மிக இள வயதில் பிள்ளையைப் பெற்றால் இந்தச் சுதந்திரம் கிடையாது.

பிள்ளைபெற நினைக்கும் பெண் சில‌வ‌கை ச‌த்துக்க‌ளை க‌ருத்த‌ரிக்க‌ மூன்று மாத‌ங்க‌ளிற்கு முன்பே உட்கொள்ள‌ ஆர‌ம்பித்தால் பிள்ளையின் சில முக்கிய‌ குறைபாடுக‌ளைத் தவிர்த்துக் கொள்ள‌லாம், அத்தோடு அறிவாளியான பிள்ளையைப் பெற்றுக் கொள்ள‌லாம். குறிப்பாக‌ Folic Acid and Omega 3 (DHA). DHA பிள்ளையின் மூளை வ‌ள‌ர்ச்சியோடு ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌து. Vitamin A ஐ த‌விர்க்க‌ வேண்டும்(த‌விர்க்க‌ - சாதாரண மீன் எண்ணைக் குளிசை Avoid Cod liver oil pills).

தாம்ப‌த்திய‌ உற‌வு இருபால‌ருக்கும் ஒருவித‌ ம‌னோமுதிர்ச்சியை ஏற்ப‌டுத்தினாலும், திரும‌ண‌த்திற்குப் பின்னான‌ தாம்ப‌த்திய‌ உற‌வே க‌லாச்சார‌த்தைப் பேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாகனம் ஓடும் போது, சாரதிக்கு பக்கத்தில் எவ்வளவு நாட்கள் இருந்தாலும் வாகனம் செலுத்துவதை படிக்க முடியாது தானே. தானே வாகனம் செலுத்தினால்தான் எல்லாம் புரியத் தொடங்கும். அதே போல்தான் தாம்பத்திய உறவும் கறுப்ஸ் :D

அட வாகனம் ஓடுற மாதிரிதான் தாம்பத்தியஉறவும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி மிகவும் காத்திரமான விடயத்தை கருத்தாடலுக்கு எடுத்திருக்கிறீர்கள். திரியின் தலைப்பை பார்த்தபோது ஏதோ கலகலப்பாக எல்லோரும் தங்கள் கிண்டல்கள், கிறுக்குத் தனங்களை எழுதி போவதற்கு உரியதாக தெரிந்தது. உங்கள் பதிவினை முழுமையாக வாசித்தபின்னர்தான் தெரிந்தது மிகவும் வேண்டிய கருத்து. கிறுக்குத்தனமாக எல்லாவற்றையும் கிண்டல் அடிக்கும் பலர் உலவும் இக்கருத்துக்களத்தில் பெண்கள் மனந்திறந்து பேசுவார்களா?

கிறுக்குத்தனமாக எல்லாவற்றையும் கிண்டல் அடிக்கும் பலர் உலவும் இக்கருத்துக்களத்தில் பெண்கள் மனந்திறந்து பேசுவார்களா?

நீங்களே ஆரம்பித்து வைக்கலாமே சாகரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.