Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கணாவத்தை!!!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணாவத்தைக்கு வந்த ஞாபகம் இருக்கின்றது. ஆனால் ஆலமரம் மறந்துவிட்டது. நினைவூட்டியதுக்கு நன்றி.

உங்கள் கருத்திற்கு நன்றி கிருபன்!

ஆமா இலக்கணாவத்தையிற்கு எங்குவரை வந்துள்ளீர்களோ? அப்படியென்றால் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் கூட இலக்கணாவத்தையிலை இருந்து 1கிலோமீற்றர் தூரத்திலை தான் இருக்கெங்கோ.

  • Replies 59
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...மிகவும் நன்றாகவே இருக்கு இலக்கணாவத்தை பற்றி நீங்கள் எழுதும் விதம்.கொஞ்சம் தமிழ் பக்கத்து நாட்டில் கடன் வாங்கிறீங்கள் போல் இருக்கு. :wub: சுத்தமான தமிழிலில் எழுதினால் இன்னும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.நன்றி வரட்டே. :wub:

உங்க கருத்துக்கு நன்றி சகோதரி!

நான் செய்த பெரிய தப்பே அந்த நேரம் சரியாக தமிழை படிக்காதது பாருங்கோ, என்ன செய்வது விளையாட்டுப்பருவம்.

ஏதோ ஓரளவாவது நான் என்ன சொல்ல வாறேனென்றாவது உங்களுக்கு புரியுது தானே, அதுவே எனக்கு கிடைத்த வெற்றி பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்திற்கு நன்றி கிருபன்!

ஆமா இலக்கணாவத்தையிற்கு எங்குவரை வந்துள்ளீர்களோ? அப்படியென்றால் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் கூட இலக்கணாவத்தையிலை இருந்து 1கிலோமீற்றர் தூரத்திலை தான் இருக்கெங்கோ.

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லமாக மாறமுன்னர் , 15 - 16 வயதில், போயுள்ளேன். துயிலும் இல்லத்தைப் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை அண்ணா,

உங்க இலக்கணாவத்தை ரொம்ப இயற்கையா அளகானது தான்...நானும் பல தடவை உங்க ஊருக்கு சென்றிருக்கிறேன்.

எனது அண்ணியும் உடுப்பிட்டி தான். அதனாலை உங்க ஊருக்கும் போயிருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை அண்ணா,

உங்க இலக்கணாவத்தை ரொம்ப இயற்கையா அ(ழ)கானது தான்...நானும் பல தடவை உங்க ஊருக்கு சென்றிருக்கிறேன்.

எனது அண்ணியும் உடுப்பிட்டி தான். அதனாலை உங்க ஊருக்கும் போயிருக்கிறேன்.

24772133438975214610031.jpg

ஓ அப்படியா சங்கதி!

அப்போ இங்குள்ள பலர் ஏற்கெனவே இலக்கணாவத்தையைப் பற்றி ஓரளவாவது அறிந்துள்ளீர்கள் அப்படித்தானே? நான் நினைச்சன் பாருங்கோ அதாவது ஆதங்கப்பட்டன் இலக்கணாவத்தை ஒரு பட்டிக்காட்டு கிராமம், இதை ஒன்றிரண்டு பேராவது அறிஞ்சிருக்கட்டுமே என்றுதான் இப்படியான முயற்சியிலை இறங்கினன்.

ஒரு உண்மையை சொல்றன் யாருக்கும் சொல்லிடாதையுங்கோ உங்களுக்கு மட்டும் தான் இதை சொல்றன் பாருங்கோ.

நான் இலக்கணாவத்தையைப் பற்றி யாழிலை எழுதினதை எங்கவூரவை யாரோ பார்த்திட்டினம் பார்த்தவை ஏதோ குசுகுசுத்துக் கொண்டிருக்கினம் அது என்னவென்று அறிந்துகொண்டு திரும்பவும் வாறேனெங்கோ.

நன்றி ஜீவா!

Edited by வல்வை லிங்கம்

23864101501202221100727.jpg

உங்கள் ஊரைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி. ஊரின் பெருமையை அழகான எழுத்து வடிவில் அறியத் தந்தமைக்கு பச்சைப் புள்ளி வழங்காமல் இருக்க முடியாது. :)

எங்கள் ஊரிலும் இதே மாதிரி பெரிய ஆலமரங்கள் கடற்கரையுடன் சேர்ந்து இருக்கும். ஆனால் அவை மரத்தில் விழுதுகளா அல்லது பாம்புகளா என்று நன்றாக அறிந்த பின்பு தான் அதற்குக் கிட்டவே போறது. :rolleyes:

உண்மைதானெங்க! அனேகமான ஆலமரங்களின் விழுதுகள் நீளமாக வளர்ந்து நிலம்வரை இறங்கும், ஆனால் எங்கவூரிலை உள்ள உந்த மரம் பாருங்கோ ஒரளவுக்குமேலே வளரமாட்டாது.

உங்க கருத்திற்கு நன்றி குட்டி!

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் பிறந்தாலும் உங்கள் ஊரைப் பற்றி தற்போது தான் கேள்விப்படுகிறேன்...உங்கள் ஊர் பற்றி அறிய தந்தமைக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் பிறந்தாலும் உங்கள் ஊரைப் பற்றி தற்போது தான் கேள்விப்படுகிறேன்...உங்கள் ஊர் பற்றி அறிய தந்தமைக்கு நன்றி.

உங்க கருத்துக்கு நன்றியெங்க!

நீங்களும் உங்க ஊரைப்பற்றி கொஞ்சம் விலாசித்தள்ளுறது தானே?

24772133393538078710031.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதானெங்க! அனேகமான ஆலமரங்களின் விழுதுகள் நீளமாக வளர்ந்து நிலம்வரை இறங்கும், ஆனால் எங்கவூரிலை உள்ள உந்த மரம் பாருங்கோ ஒரளவுக்குமேலே வளரமாட்டாது.

உங்க கருத்திற்கு நன்றி குட்டி!

நல்ல கதையாய் கிடக்குது, எல்லா ஆலமரத்தின் விழுதும் நிலம் மட்டும் வளரும்..... :D

உங்கள் ஊர் பெரிசுகள், பல்லு விளக்க....... ஆலமரத்தின் விழுதை முறித்திரிப்பார்கள். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதையாய் கிடக்குது, எல்லா ஆலமரத்தின் விழுதும் நிலம் மட்டும் வளரும்..... :D

உங்கள் ஊர் பெரிசுகள், பல்லு விளக்க....... ஆலமரத்தின் விழுதை முறித்திரிப்பார்கள். :(

:lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதையாய் கிடக்குது, எல்லா ஆலமரத்தின் விழுதும் நிலம் மட்டும் வளரும்..... :wub:

உங்கள் ஊர் பெரிசுகள், பல்லு விளக்க....... ஆலமரத்தின் விழுதை முறித்திரிப்பார்கள். :lol:

imagesteeth.jpg

நீங்க சொல்லிறதிலையும் உண்மை இருக்கு பாருங்கோ, அதுதான் நம்மட ஆட்களின்ரை பல்லு நல்ல உறுதியாக இருக்கோ?

imagesteeth1.jpg

இந்த நேரத்திலை நீங்க இன்னுமொரு உண்மையையும் ஒத்துக் கொள்ளவேணும் பாருங்கோ, அதாவது இலக்கணாவத்தையாங்க பல்லிலை மட்டுமல்ல சொல்லிலையும் உறுதிதானெங்க!

நீங்க பெரிசுகளைப்பற்றி கதைத்ததை எங்கடை அதுதானெங்க யாழ் பெரிசுகள் தப்பாக எடுத்திட்டுகள் போலை கிடக்கு. அதுதான் கோபமா ஒரு பார்வை.

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணாவத்தை என்ற ஊர்பற்றி எனக்கு இவ்வளவு காலமும் தெரியவில்லை. புறாப்பொருக்கி என்ற ஊரும் புலம் பெயர்ந்து வந்தபின்பு தான் அறிந்தேன்.

உங்கள் ஊரைப் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை. படங்களும் மிகவும் நன்றாக இருக்கிறது. பிறந்த மண்ணை நேசிக்கும் வல்வை மைந்தனே, உங்கள் ஊரைப்பற்றி எங்களுக்கு தொடர்ந்து இங்கு தகவல் பதியுங்கோ. நான் இப்பதிவுக்கு 10வது ஆளாக பச்சை குத்தியிருக்கிறேன். நான் நினைக்கிறேன் 10 க்கு கிட்ட பச்சை குத்தப்பட்ட முதல் பதிவு இதுவாகத்தான் இருக்கும்.

26769133737402675110031.jpgநன்றி கந்தப்பு!

இப்ப பாருங்கோ அப்பு, நான் உதை எழுத தொடங்கிய பிறகு இலக்கணாவத்தையிலை நிறைய நன்மை நடக்க இருக்குது.

என்ன புரியல்லையா? அதுதானெங்க உந்த புலம்பெயர்ந்த நாடுகளிலை இருக்கிற சிறுசுகளிற்கெல்லாம் கோபமும், ரோஷமும் பொத்திக்கொண்டு வந்திட்டுதுங்கோ.

வந்தது மட்டுமா அதைச்செய்யனும், இதை செய்யனும் என்று கிளம்பிட்டினம் பாருங்கோ, அதாவது கிராமம். நவீன கிராமமாக மாறப்போகுது என்றால் எவ்வளவு சந்தோஷமா இருக்குத்தெரியுமோ?

அதற்காக நான் என்னுடைய தொடரை நிற்பாட்ட மாட்டேன் பாருங்கோ.

Edited by வல்வை லிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் வல்வைலிங்கமண்ணா,

எப்போதுமே சில விடயங்களை தூசுதட்டி பார்வைக்கு வைப்பது அவசியமானது. தாயகத்தில் உள்ள எப்பொருளையும் நாம் பாதுகாக்க வேண்டிய அவசியம் இன்றைய காலத்தில் புலம் பெயர்ந்த ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்கிறது. இலக்கணாவத்தை மறக்க முடியாத முதல் அனுபவங்களில் இன்றும் மனதிற்குள் இருக்கிறது.1983 இன் பின்னர் 1984 ஆம் ஆண்டு ஆடி மாதமே சிங்கள அரச படைகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகளால் தொடர் கெரில்லாத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட காலம், அந்த தொடர் கெரில்லாத்தாக்குதலின் ஆரம்பம் வல்வை மண்ணிலேயே ஆரம்பிக்கப்பட்டது அன்றுதான் முதல்முதலாக பலகாலமாக நம் முன்னோர்கள் வலுகட்டாயமாக கடைப்பிடித்த பெரும் வரட்டுத்தனம் சிதறடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளால் மக்களுக்குள் ஒரு பாரிய சமூகத்திருத்தம் உருவாக்கப்பட்ட முதன்மைக்குறிப்புகள் எழுதப்பட்டால் அந்நூலில் இலக்கணாவத்தை முக்கிய இடத்தைப் பெறும். அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவக் காலங்களிலும் இலக்கணாவத்தை பல இரகசிய வரலாறுகளை உடையதாக இருந்திருக்கிறது. லிங்கமண்ணா அவற்றையும் நீங்கள் பதிவிட்டால் பலருக்கு இக்கிராமத்தின் சிறப்புத் தெரியும். பலகதைகள் காதுவழிச் செய்தியாகப் போகாமல் உங்களிடமிருந்து அவை பதிவிற்கு வரவேண்டும்.

26769133737402675110031.jpgநன்றி கந்தப்பு!

வல்வை அண்ணா எங்கே இருந்து உங்கள் ஊர் படங்கள் எல்லாம் எடுக்கிறிர்கள் றொம்ப நல்லா இருக்கு சில படம்... ஆலமரம் படம் றொம்ப நல்லா இருந்தது... ஊஞசல் கட்டி விளையடலாம் போல இருக்கு உங்கள் ஊர் ஆல மரத்தில்... :lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ சுஜி என்ன இது?நிறைய பனைமரம் தானே படத்தில் இருக்கு.பனை மரத்தில் ஊஞ்சல் கட்டலாமோ?அப்ப இந்தாங்கோ ஒரு இலவச ஊஞ்சல்.smiley-happy064.gif. :wub:

நன்றி தங்கை சஹாரா!

நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி பல விடயங்களை திட்டமிட்டே தவிர்த்து வருகின்றேன், இதற்கு சில முக்கிய காரனங்களை குறிப்பிடலாம்.

முக்கியமாக சில விடயங்களை இங்கு குறிப்பிட முயலும்போது, அயல் ஊர்களின் பெயர்களை குறிப்பிடவேண்டிய அவசியம் ஏற்படும், அதன்போது பல விரோதங்களை சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை நிறையவே இருக்கின்றது.

இன்னும் விபரமாக சொல்வதானால் யாழிலையே(இணையத்தில்) ஒரு பழையகால சமூகப்பிரச்சினை ஏற்பட நானே களம் அமைத்துக்கொடுத்த மாதிரியாகி விடுமல்லவா?

இருப்பினும் சில வார்த்தைப் பிரயோகங்களை தேடியலைகின்றேன் கிடைத்ததும் தொடரலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ சுஜி என்ன இது?நிறைய பனைமரம் தானே படத்தில் இருக்கு.பனை மரத்தில் ஊஞ்சல் கட்டலாமோ?அப்ப இந்தாங்கோ ஒரு இலவச ஊஞ்சல்.smiley-happy064.gif. :wub:

நன்றி சகோதரி யாயினி!

உங்களுக்கு ஊஞ்சல் ஆடத்தான் தெரியும் என்றிருந்தேன், அட உங்களுக்கு ஊஞ்சல் கட்டவும் தெரியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை அண்ணா எங்கே இருந்து உங்கள் ஊர் படங்கள் எல்லாம் எடுக்கிறிர்கள் றொம்ப நல்லா இருக்கு சில படம்... ஆலமரம் படம் றொம்ப நல்லா இருந்தது... ஊஞசல் கட்டி விளையடலாம் போல இருக்கு உங்கள் ஊர் ஆல மரத்தில்... :lol::wub:

சகோதரி சுஜி!

நாம்ம ஒரு காரியத்தை செய்வேணும் என்று முயற்சியிலை இறங்கிவிட்டாலே பல விடயங்கள் தானாகவே வந்து கிடைத்திடும் பாருங்கோ!

24772133439007215410031.jpg

உதைப்பாருங்கோ நம்ம ஊரிலை முதலி மரம் என்பாங்க, உதுலை காய்க்கிற பழம் வார்த்தையால் குறிப்பிட முடியாதளவுக்கு இனிமையாக இருக்கும்.

இதன் உள்ளமைப்பு கிட்டத்தட்ட றம்பிட்டான் பழம்மாதிரியே இருக்கும், இந்த மரம் இலக்கணாவத்தை பிள்ளையார் கோயிலின் தெற்கு வீதியிலை தான் இருக்கெங்கோ.

Edited by வல்வை லிங்கம்

ஆமா உந்தப்படங்கள் எல்லாம் உண்மையிலையே உங்க ஊரிலை இருந்துதான் இறக்குமதி செய்கிறீர்களா? அல்லது கொள்ளையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமா உந்தப்படங்கள் எல்லாம் உண்மையிலையே உங்க ஊரிலை இருந்துதான் இறக்குமதி செய்கிறீர்களா? அல்லது கொள்ளையா?

நன்றி பெரியமாமி!

உதற்குரிய பதிலை ஏற்கெனவே தெரிவித்துவிட்டேனே.

150px1.jpgU150px1.jpg

இதுதானெங்க முதலிப்பழம்.

Edited by வல்வை லிங்கம்

  • 1 month later...

லிங்கம் அண்ணா! தாய் மண்ணின் பெருமைகள் பேசும் மிக நல்ல, பயனுள்ள பதிவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

26769133737402675110031.jpg

ஒரு நாளைக்கு எவ்வளவு இறக்குமதி? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.