Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி

Featured Replies

தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி

கூட்டமைப்பின் துரோகத்தனம் எவ்வாறு பிரித்தானியவாலும் மேற்குலகாலும் இனிச் சொல்லப்படும் என்பதற்கான முத்தாய்ப்பாக இந்தச் செய்தி உள்ளது.

Sri Lanka Tamil party drops statehood demand

By Charles Haviland

BBC News, Colombo

In recent weeks, the Tamil National Alliance has dropped some of its MPs

The Sri Lankan political party closest to the defeated Tamil Tiger rebel movement has dropped a demand for a separate Tamil homeland.

The Tamil National Alliance (TNA), which is the biggest political grouping representing the ethnic minority, said it instead wanted a "federal" solution.

The party wants the two Tamil-majority provinces to be merged back into one, and significant devolution of powers.

It outlined the stance in a manifesto for April's parliamentary election.

'Shared sovereignty'

Formed nine years ago, the Tamil National Alliance was generally seen as a proxy for the Tamil Tigers.

Since the 1970s, the latter professed to be fighting for what it called Tamil Eelam, an independent state for Tamils on the island of Sri Lanka. The TNA followed their ideological line.

The government's victory over the Tigers ended a bloody civil war

But 10 months after the Tigers' defeat by government forces, the TNA is changing its outlook.

Its election manifesto asks for power-sharing within a "federal structure".

It wants the two Tamil-majority provinces to be merged back into one, and significant devolution of powers on issues like land and taxes. And it mentions self-determination.

But it also speaks of "shared sovereignty among the peoples who inhabit this island".

The TNA is therefore codifying what its politicians have been saying for some time.

Last month its leader, Rajavarothiam Sampanthan, told the BBC he believed most Tamils in Sri Lanka no longer believed in violence or separation, but nevertheless wanted equality.

Another TNA parliamentarian, Suresh Premachandran, told the BBC on Saturday a federal solution was appropriate given the "changed global and regional situation".

Mr Premachandran said he was inviting the government to respond by solving Tamils' problems within a united Sri Lanka.

In recent weeks, the TNA has dropped some of its MPs and some have formed a new grouping to compete with it.

The TNA's new stance is partly a reflection of Realpolitik - espousing separatism is illegal in Sri Lanka.

But it also highlights the contrast between Tamils based here and those living abroad - the vast majority of the diaspora still believe in a separate Tamil homeland.

  • Replies 120
  • Views 9.9k
  • Created
  • Last Reply

கடந்த சில கால்ங்களாக பல அறிஞர்கள் கூறியது.

இலங்கையில் தமிழர்களுக்கு அமைதித்தீர்வு தலைவர் பிரபாகரன் காலத்தில் ஏற்பட்டால் ஒழிய, வேறு எந்த காலத்திலும் ஏற்பட முடியாது.

அது நியமாகி வருகிறது

நாரதர்,

என்று சிறிலங்கா சனாதிபதித் தேர்தலில் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குரிய நிறைவேற்று அதிகார சனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க கோரினார்களோ (அது த.தே.கூத்தமைப்பு மட்டுமல்ல) அன்றே, ஈழத் தமிழர்கள் "தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர்" என்றே அர்த்தம், அது சம்பந்தரானலும் சரி, கஜேந்திரனாலானாலும் சரி

இன்று அதே அரசியலமைப்பின் தலையாய இடமான பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தொங்கி நிற்பவர்கள் அனைவரும் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டவர்களே ஆவர். அவர்கள் சொல்லும் மொழியும், நாம் புரிந்து கொள்ளும் விதமும் மாறுபடலாம், ஆயினும் உண்மை அதுதான்

இவர்களால், போரில் தன் காலை இழந்த ஒரு சிறு உயிருக்கு கூட எதனையும் செய்ய முடியாது: அது தான் யதார்த்தம்

முழுமையாக உண்மை..

சந்தோசமாக இருக்கு தயா... நானும் நீங்களும் பல விடயங்களில் முரண் பட்டாலும், பொதுவான முக்கிய விடயங்களில் ஒன்றாக இருப்பதையிட்டு

இவர்களால், போரில் தன் காலை இழந்த ஒரு சிறு உயிருக்கு கூட எதனையும் செய்ய முடியாது: அது தான் யதார்த்தம் :rolleyes:

நன்றி நிழலி

Edited by Netfriend

சந்தோசமாக இருக்கு தயா... நானும் நீங்களும் பல விடயங்களில் முரண் பட்டாலும், பொதுவான முக்கிய விடயங்களில் ஒன்றாக இருப்பதையிட்டு

நீங்களும் நானும் என்ன பரம்பரை எதிரிகளா...?? நிங்களும் தமிழர் நானும் தமிழன்... இதிலை இருவரும் சண்டை பிடிக்க வசதியா எங்கட மொழி இருக்கு... சண்டையை பிடிச்சு போட்டு அடுத்த நிமிசம் மறந்திட வேண்டியதுதானே... அதை மனசிலை கொண்டு திரிஞ்சா இரத்த அழுத்தம் வந்திடுமாம் வைத்தியர் சொன்னவர்... :rolleyes::D

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் தமிழீழத்தை கைவிட்டு விட்டதாக சொல்ல வேண்டிய ஒரு தேவை காலத்தின் போக்கில் ஏற்பட்டுவிட்டது.

அதற்காக வெறுமனவே தமிழீழம் என்று சொல்லிக் கொண்டு எதிரியின் நகர்வுகளை தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு நிர்பதிலும்.. சர்வதேச நாடுகள் எல்லாமே (நோர்வே உட்பட) இலங்கையில் தமிழருக்கு தனிநாடு சாத்தியம் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கைக்குள் தமிழர்களின் நிலையை இருப்பை தேசிய அடையாளங்களை இனத்துவ அடையாளங்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு ஒன்றிருக்கிறது.

ஒன்றிரண்டு அல்ல 35 ஆண்டுகள் ஆயுதப் போராட்டம் நடத்தி சிங்களப் படைகளை விரட்டி அடித்து தமிழீழக் கட்டமைப்பை நிறுவி நின்றவர்கள் நாம். இன்று எதிரி அத்தனையையும் தகர்த்து நிற்கிறான். அவன் பட்ட அனுபவங்களை அவன் மீள ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். இந்த நிலையில் தொடர்ச்சியாக தமிழீழம் தனிநாடு என்று உச்சரித்துக்கொண்டு அரசியல் செய்வது இலங்கை மண்ணில் சாத்தியமில்லை. புலம்பெயர் நாடுகளில் அதற்கு மட்டுப்படுத்திய ஆதரவுகள் அந்தந்த நாடுகளின் தேவைப்பாட்டோடு பொருந்தி இருந்தாலும் இலங்கையை சூழ்ந்து அப்படி ஒரு நிலை இல்லை.

இந்த நிலையில் எமது அடுத்தக்கட்ட அரசியல் ராஜதந்திர நகர்வுகள் என்பது எதிரியின் ஆக்கிரமிப்பு நோக்கங்களை தடுப்பதாக இருக்க வேண்டும். இன்றைய நிலையில் தமிழீழம் என்பதை விட அதற்கான அடிப்படையையாவது பாதுகாக்க வேண்டிய நிலை ஒன்றிருக்கிறது. எங்கும் சிங்கள மயமாக்கம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளும் இல்லாத நிலையில் தமிழர்கள் என்ன கருணா டக்கிளஸ் அரசியலா செய்து கொண்டிருக்க முடியும்.

சம்பந்தனின் சில நகர்வுகளை இன்றைய நிலையில் அங்கீகரித்து நிற்க வேண்டிய தேவை ஒன்றிருக்கிறது. சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டோடு ஒருமித்து அதேவேளை எமது அரசியல் அடிப்படைகளை தக்க வைக்கும் வகையில் நாம் செயற்பட வேண்டிய தேவை இருக்கிறது. தொடர்ந்து தமிழீழம்.. ஆயுதப் போராட்டம்.. வன்முறை என்று உச்சரிப்போமாக இருந்தால் இருப்பதை முற்றாக இழந்து அடையாளங்களையும் முற்றாக இழந்து நாட்டையும் எதிரிக்கு முற்றாக இழந்து நிற்போம்.

ஒரு ஆயுதப் போராட்டத்தின் முற்றான வீழ்ச்சி என்பது எத்துணை ஆபத்தானது என்பதை விடுதலைப்புலிகள் உணர்ந்திருந்தாலும் அந்த நிலையை தவிர்க்க தவறிவிட்டார்கள். முள்ளிவாய்க்காலுக்குள் முடங்கிக் கொண்டு இறுதிக் கட்டத்தில் எங்களை காப்பாற்றுங்கோ என்று கெஞ்ச வேண்டிய நிலைக்கு அவர்கள் தங்களைக் கொண்டு வந்தது எந்த நோக்கில் யாரின் பேச்சை நம்பி என்பது இன்றுவரை எவருக்கும் தெரியாது.

நாம் எமது பாரம்பரிய எதிரியிடம் தோற்று நிற்கிறோம். அவன் எமது நிலத்தை வன்வளைத்து நிற்கிறான். தனது சொந்தம் என்று கொண்டாடி நிற்கிறான். இந்த நிலையில் அவனின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதுதான் முதன்மையாக உள்ளது. நாம் சர்வதேசத்தையும் பகைத்து பக்கத்து நாடுகளையும் பகைத்து புலம்பெயர் தமிழர்களை நம்பி போராடி என்னத்தைக் கண்டோம்..??! புலம்பெயர் தமிழர்கள் கொலிடேக்குப் போக சிறீலங்கன் எயார் லைன்ஸ் புக் பண்ணுவதையே காண்கிறோம்.

இந்த நிலையில் தாயக மக்களின் இருப்புக்கான நிலம்.. அடையாளம்.. மொழி.. வளம் இவை அனைத்தையும் எதிரியிடம் இருந்து எந்த ஒரு அடிப்படைப் பலமும் இன்றிய நிலையில் பாதுகாக்க வேண்டி இருக்கிறது. இந்த அடிப்படையை பலர் உணர்வதாகத் தெரியவில்லை.

ஆயுதத்தை மெளனிக்க வைத்து மக்களை இராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் சரணடைந்தும்.. செத்தும் விட்டார்கள். அதன் பின் மக்களின் நிலை என்ன.. என்பதை அறிந்திருந்தும்.. ஏன் இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள் என்பது புரியாத புதிராக இருக்கும் நிலையில் சம்பந்தரும் அதே புதிரோடு எதிரியின் முன் நிராயுதபாணியாக தோள் நிமிர்த்தி அழிவதா தமிழ் தேசிய ஆதரவு என்பது.

இன்றைய இக்கட்டான சூழலில் இருந்து எம்மால் பேச்சு வன்மையால்... தமிழ் தேசிய உச்சரிப்பால்.. தமிழீழ கோரிக்கையை முன்னிறுத்துவதால் வெளிவர முடியாது. காரணம்.. தமிழீழம் அமைவதை எந்த உலக நாடும் ஆதரிக்கவில்லை. இன்றைய நிலையில் ஆதரிக்கவும் மாட்டாது. அப்படியான ஒரு மிகப் பலவீனமான நிலையில் இருக்கும் நாம்.. எப்படி எதிரியின் நாசகார பிடியில் இருந்து வெளி வந்து எம் மக்களையும் மண்ணையும் காப்பது. அதற்கு உள்ள ஒரேமாற்றுவழி சர்வதேசம் எம்மை ஆதரிக்கக் கூடிய ஆனால் எமது அடிப்படை உரிமைகளை நிலை நிறுத்தக் கூடிய மாற்று அரசியல் யோசனைகளை முன் வைப்பதுதான்.

அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த நகர்வு இதய சுத்தியுடையதாக இருப்பின் வரவேற்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்த எடுக்கும் சில நடவடிக்கைகள்.. அதன் பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் முரண்பாட்டை காட்டி நிற்கும் வேளையில்.. இந்த நகர்வு குறித்த உறுதித் தன்மை நம்பகத்தன்மை இழந்து பலவீனத்தோடு காணப்படுகிறது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பெயரால் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமன்றி நிலைமைகளை விளக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலக நேரிட்டவர்களையும் நேரடியாக முடியாவிட்டாலும் மறைமுகமாகவாவது இணைத்துச் செயற்பட முன்வர வேண்டும். இதுவே சம்பந்தன் போன்றவர்களின் நடவடிக்கைகள் மீது மக்கள் நம்பிக்கை வைக்கும் நிலையை தோற்றுவிக்கும்.

மக்களின் ஆதரவு நம்பிக்கை இன்றி இந்தக் கோசங்களோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்தின் ஆதரவு நோக்கி நகர்வது அத்துணை சாத்தியமானதல்ல.

புலம்பெயர் அரசியல் சூழல் என்பது வேறானது. அங்குள்ள மக்கள் தமிழீழத்தை நாடலாம். அதன் மீதான பற்றுறுதியை வெளிப்படுத்தலாம். சர்வதேசத்திற்கு தனிநாட்டின் தேவைக்கான அடிப்படைகளை காட்டலாம். அதற்கு ஏராளமான ஆதாரங்களை எதிரி தந்து கொண்டே இருக்கிறான். ஆனால் களத்தில் நிலமை வேறானது என்பதையும் நாம் உணரத்தலைப்பட வேண்டும். இதில் சில ராஜதந்திர விட்டுக்கொடுப்புகள் இருந்தாலும் அடிப்படை கோட்பாடுகளில் விலகல் இருக்கக் கூடாது. அதுமட்டுமன்றி தாயக நகர்வுகள் வேறு திசையில் இருப்பது போன்று அமைந்தாலும் புலம்பெயர் நகர்வுகளும் தாயக நகர்வுகளும் ஒரு புள்ளியில் சந்திக்கும் வகையில் எதிரியின் திட்டங்களை தகர்த்து முன்னேறிச் செல்லும் வகையில் சர்வதேச ஆதரவை தக்க வைத்து நகரும் வகையில் அமைந்திருந்தால் அன்றி மாவீரர்களின் மாண்ட மக்களின் கனவுகளை நனவாக்குவது என்பது அவ்வளவு இலகுவான பணியல்ல.

வெற்று தமிழீழக் கூச்சல்களும் ஆயுத வன்முறைக்கான அடுத்த பாய்ச்சல் என்ற கூப்பாடுகளும் தாயகம் கோட்பாடு தமிழ் தேசியம் என்ற எல்லாத்தையும் எதிரியும் அவன் சகாக்களும் இல்லாது அழிக்கும் நிலைக்கே இட்டுச் செல்லும். சீக்கியர்களின் காலிஸ்தான் கோரிக்கைக்கு நடந்ததே எமக்கும் நிகழும். இதைத் தவிர்க்க வேண்டின்.. நாம் இராஜதந்திர சாணக்கியமாக நகர்ந்து அரசியல் செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில் புலம்பெயர் சமூகம் தனி ஒரு பாதையிலும் தாயக அரசியல் தலைமைகள் தனி ஒரு பாதையிலும் பயணித்து தேவையான சந்தர்ப்பத்தில் ஒரே புள்ளியில் இரண்டு பாதைகளையும் இணைக்கும் நிலை வகுத்துச் செயற்பட்டால் அன்றி.. துரோகம்.. புறக்கணிப்பு.. ஒதுக்கு என்பதன் பெயரால் நாம் எதிரியின் நாசகாரப் பிடியில் இருந்து எமது மண்ணை மக்களை அடையாளங்களை பாதுகாக்க திராணியற்று நிற்கும் நிலையே நீடிக்கும்.

Edited by nedukkalapoovan

நன்றி நெடுக்கு..

தேர்தலுக்குப்பின் இப்போதிருக்கும் நிலமை இதை விட மோசமாக இருக்கும்.

தமிழீழம் மாகானமாகி மாவட்டமாகி பிரதேசமாக மாறும்..

பிறகு கூட்டமைப்பும் தேசியத்துக்கான முன்னணியும் சேர்ந்து கக்கூசுக்கு வெள்ளையடிக்கலாம்.

நாங்கள் புலத்தில் இருந்து துரோகத்துக்கு வியாக்கியானம் எழுதலாம்.

இலங்கையில் பாராளுமண்ற உறுப்பினர் எண்றால் தமிழ் மக்களால் தெரிவு செய்ய பட்ட உறுப்பினர் எண்று அர்த்தம் படுகிறது... இந்த மக்களின் அங்கீகாரம் பெற்றவர்கள் இலங்கை பாராளு மண்றம் ஊடாக மட்டும் தான் தமிழர்கள் சார்பில் அரசியல் செய்யலாம் எண்டு தான் எல்லாரும் மக்களை தங்களை அங்கீகரியுங்கோ எண்டு கேக்கிறார்களோ....??

இலங்கை பாராளுமண்றத்தை தாண்டி தமிழ் மக்களுக்கான சுயநிர்ணயத்துக்கான அங்கீகாரத்தை பெற எதுவும் செய்ய முடியாதோ...???

உதாரணத்திற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது இனமக்களை எவ்வாறு வன்முறைத் தாக்கங்களில் நின்றும் காப்பாற்றுகிறார்கள் என்பது ஒரு புதுமையான வழி. எவ்வளோ இடர்பாடுகளை அனுபவித்தவர்கள் தமிழர்கள். ஜேவிபி கலவரக் காலத்தில் இடர்களை அனுபவித்தவர்கள் சிங்களவர்கள். ஆனால் இத்தகைய இடர் பாடுகளை முஸ்லிம் இனம் அனுபவித்தது குறைவு. இதற்குக் காரணம் அவர்களது தந்திரமே. சிறிலங்காவின் எந்தப்பகுதியிலும் தமிழைக் கதைத்துக் கொண்டு, தமிழ்ப் பாடல்களை பெரும் சத்தமாக வானொலிகளில் ஒலிபரப்பிக் கொண்டும் அவர்கள் வாழ்கிறார்களென்றால் அவர்களது அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது என்பது அர்த்தமல்ல.

அது போன்றுதான் ஈழத் தமிழ் மக்கள் முதலில் வாழ்வதற்கு வழி தேட வேண்டும். அவர்களை வாழவிடவேண்டும். இவ்வளவு அழிவுகளையும் தம் வாழ்நாளிலே கண்ணெதிரே கண்ட தமிழர்கள் தனித் தமிழ்ஈழம், தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி என்பவற்றை யோசிக்கக் கூடியவர்களாக இருப்பார்களா?

இப்போதைய அரசியல் போக்கு மென்மையானதாகத்தானிருக்கும். கூட்டமைப்போ, தேசிய முன்னணியோ எதுவென்றாலும் அவர்கள் சூழ்நிலைக்குப் பொருத்தமான அரசியல் நகர்வினை முன்னெடுக்க வேண்டும். யார் வென்று பாராளுமன்றம் சென்றாலும் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வில்லை. ஒன்றுமட்டும் புலப்படுகிறது, தேசிய முன்னணி வெற்றிபெற்றால் புலம் பெயர் மக்களால் நடத்தப்படும் இப்போதைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மீள் வாக்கெடுப்பில் ஈடுபடும் பகுதியினர் அவர்களோடு இணைந்து நிற்பர். அவ்வாறில்லாது கூட்டமைப்பு வெற்றி பெறுமானால் இவர்களது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்திற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது இனமக்களை எவ்வாறு வன்முறைத் தாக்கங்களில் நின்றும் காப்பாற்றுகிறார்கள் என்பது ஒரு புதுமையான வழி.

அது ரொம்ப சுலபமானது............... அதற்கு முஸ்லிம்களிடமெல்லாம் போக வேண்டியதில்லை!

எமது துரோக கும்பல்களிடம் போனாலேபோதும் எப்படியென்று அக்குவேறு ஆணிவேறாக சொல்லிதருவார்களே.

இந்தியாவோடு கூடி இலங்கை இராணுவத்தை சுடுவது.............. இலங்கையோடு கூடி இந்தியாவை காட்டி கொடுப்பது. எல்லோரோடும் கூடி தமிழரை சுடுவது. இதில் உட்கார்ந்து இருந்து யோசித்து திட்டம் திட்ட என்ன இருக்கின்றது?

இது விபச்சராம் செய்ய பல்கலைகழகம் சென்று படியுங்கள் என்று கூறுவதுபோல் உள்ளது.

நக்கி பிழைப்பதென்று முடிவு கொண்டால்................ பின்பு செக்கென்ன சிவலிங்கம் என்ன? நாக்கை நீட்ட வேண்டியதுதானே.

தன்மானம்! இனமானம்!

பண்பு பணிவு தன்னிலை சுயநிர்ணயம். இவற்றை தூக்கி எறிந்துவிட்டால் பிறகென்ன இராஜதந்திரம் எல்லாம் வேண்டி கிடக்கு? இத்தாலி சோனியா வந்து இந்திய அரசியல்வாதியான கருணாநிதிக்கு இந்திய இறையாண்மை பற்றி சொல்ல வாயடைத்து நிற்பது இதுதான் இப்போதைய இராஜதந்திரம்.

அக்காவை தங்கையையும் கூட்டிசென்று சிங்களவனுடன் படுக்கவிட்டால் எனக்கு உண்ண உணவும் படுக்க இடமும் தருகிறான். இதை செய்யும் நான் புதிதிசாலி என்றால். இனி தமிழால் இங்கே எழுதுவதற்கே ............... கூச்சமாக எல்லோ இருக்கவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்காவின் பட்டப்படிப்பு வீண்போகவில்லை. அவருடைய தனித்துவமான பார்வை, மொழி வனப்பு, கையாளும் முறை அனைத்துமே மாதர்குலத்துக்கு அவர் அணியும் மலர்மாலை. பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் அக்கா வாழ்க. :wub:

இலங்கையில் பாராளுமண்ற உறுப்பினர் எண்றால் தமிழ் மக்களால் தெரிவு செய்ய பட்ட உறுப்பினர் எண்று அர்த்தம் படுகிறது... இந்த மக்களின் அங்கீகாரம் பெற்றவர்கள் இலங்கை பாராளு மண்றம் ஊடாக மட்டும் தான் தமிழர்கள் சார்பில் அரசியல் செய்யலாம் எண்டு தான் எல்லாரும் மக்களை தங்களை அங்கீகரியுங்கோ எண்டு கேக்கிறார்களோ....??

இலங்கை பாராளுமண்றத்தை தாண்டி தமிழ் மக்களுக்கான சுயநிர்ணயத்துக்கான அங்கீகாரத்தை பெற எதுவும் செய்ய முடியாதோ...???

திரும்பவும் ஒருக்கா உங்களுக்கு பதில் எழுதவேண்டி இருக்கு.. ம்ம் ..

இலங்கைக்கு வெளிலதான் தீர்வு இருக்கெண்டு நான் அபோதிருந்தே சொல்கிறேன்.. இலங்கைக்குள் என்றால் இப்போதே சிங்களம் பழகுவது நல்லது.

வெளில தீர்வை தேடிவதேன்று வைப்பம்.

முதல்ல புலத்தில் இருக்கும் அமைப்புக்கள் ஒன்றுபடவேண்டும்

இரண்டாவது எங்கிருந்து தீர்வு வருவதென்பது

இந்தியாவுக்கு வெளில தீர்வைதேடுவதுக்கு இன்னும் நீண்ட தூரம் போகவேண்டி உள்ளது.

திரும்பவும் ஒருக்கா உங்களுக்கு பதில் எழுதவேண்டி இருக்கு.. ம்ம் ..

நீங்கள் அலுத்து கொள்ளும் அளவுக்கு வந்திட்டுது...

நான் நினைக்கிறன் நீங்கள் உங்களை பற்றி உயர்வாக நினைச்சு கொண்டு திரியுறீயள் போல..... இப்படித்தான் சம்பந்தரும் நினைச்சு ஆடுறார்...

இலங்கைக்கு வெளிலதான் தீர்வு இருக்கெண்டு நான் அபோதிருந்தே சொல்கிறேன்.. இலங்கைக்குள் என்றால் இப்போதே சிங்களம் பழகுவது நல்லது.

ஈழத்தமிழர்களுக்காக ஈழத்தில் அரசியல் செய்பவர்கள் ஒற்றுமையாக வெளியில் இருப்பவர்களுடன் இணைந்து செயற்பட விரும்பாத போது என்ன செய்ய போகிறீர்கள்....

நாடுகடந்த அரசையோ , வட்டுக்கோடை தீர்மானத்தையோ, உலகதமிழர் போரவையையோ SMS குழு அங்கீகரிக்க இல்லை எண்ட கோதாரியையாவது தெரிஞ்சு வைச்சு இருக்கிறீர்களா...??

புலம்பெயர் சக்திகளோடு சம்பந்தன் குழு தொடர்புகளை கூட பேண விரும்பவில்லை... அதனூடு இந்தியாவை திருப்தி படுத்துகிறார்கள்... அவ்வளவுதான்...

வெளில தீர்வை தேடிவதேன்று வைப்பம்.

முதல்ல புலத்தில் இருக்கும் அமைப்புக்கள் ஒன்றுபடவேண்டும்

இரண்டாவது எங்கிருந்து தீர்வு வருவதென்பது

வெளியிலை நீங்கள் ஒரு கோணத்திலை புடுங்க SMS குழு இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்படி இதை பலவீனப்படுத்தி கொண்டு இருக்கட்டும் எல்லாம் விளங்கி துலங்கீடும்...

முதலிலை அடிப்படை பிரச்சினைகளை பாருங்கோ... பிறகு கற்பனை காணலாம்...

இந்தியாவுக்கு வெளில தீர்வைதேடுவதுக்கு இன்னும் நீண்ட தூரம் போகவேண்டி உள்ளது.

இந்தியா... தமிழரின் 35 வருட எல்லாத்தையும் துலைத்த சக்தி.... இதை தாண்டாமல் உங்கட தீர்வு எண்டால் அது உங்கட நித்திரையிலை மட்டும் தான் சாத்தியம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழ் மக்கள் முதலில் வாழ்வதற்கு வழி தேட வேண்டும். அவர்களை வாழவிடவேண்டும். இவ்வளவு அழிவுகளையும் தம் வாழ்நாளிலே கண்ணெதிரே கண்ட தமிழர்கள் தனித் தமிழ்ஈழம், தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி என்பவற்றை யோசிக்கக் கூடியவர்களாக இருப்பார்களா?

எனக்கும் இது சரி என்று தோன்றுது.இப்ப எங்களிடம் இராணுவப்பலமோ அரசியல் பலமோ இல்லை.இருப்பது பொருளாதாரப்பலம் ஒன்றுதான்.இதைப்பயன்டுத்தி அங்குள்ள மக்களின் வாழவாதரத்தை மேம்படுத்த வேண்டும்.இப்பொழுது உள்ள நிலையில் இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் வாசிகசாலை கூட கட்ட முடியாது.இலங்கை அரசுடன் ஏதா ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி அங்கு பொருளாதாரத்தை கட்டி எழுப்பி மக்களுக்குவாழவில் பிடிப்பை ஏற்படுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்

இன்று இருக்கும் நிலையில் எவராலும் எதையும் செய்து விட முடியாது என்பது உண்மையே.சிறிலங்கா அரசு அதன் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் தமிழர் தாயகம் என்னும் கோட்பாட்டைச் சிதைப்பதன் நோக்கில் ,பல இராணுவப்மயப்படுத்தப்பட குடியேற்றங்களை நிறுவி வருகிறது.தமிழர்கள் தனியான ஒரு இனம் அவர்களுக்கு என ஒரு தாயகம் இலங்கையில் இருக்கிறது அது பாதுகாக்கப் பட வேண்டும் என்பதே தமிழர் தாயகக் கோட்பாடு.இதனை தமிழர்கள் அரசியல் ரீதியாகக் கைவிடுவதன் மூலம்,தமிழர்கள் சிங்கள அரசின் நிரந்தர இராணுவ அடக்குமுறைக்குள் வாழ தமது அங்கீகாரத்தை வழங்கிவிட்டர்கள் என்றே அர்த்தப்படும்.மாற்றாக தமிழர்களுக்கென ஒரு தாயாகம் உண்டு என்று வலிந்து கூறுவதன் மூலம், சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை தமிழர் தாயகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்னும் கோரீக்கையே வலுப்பெறும்.இதனாலையே தமிழர் தாயகம் என்னும் கோரிக்கை அரசியல் ரீதியாக தமிழரின் இருப்புக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.கூட்ட்மைப்ப்ன் அரசியல் விவேகம் அற்ற தூர நோக்கற்ற நடவடிக்கைகளால் தமிழரின் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கிறது.

தமிழீழம் என்பதுவும், தாயகம் சுயனிர்ணயம் என்பதுவும் வெறும் கோசங்கள் அன்று.அவை தமிழரின் வாழ்வை அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க எழுந்தவை.இவற்றை அவற்ரின் அரசியல் அர்ததில் புரிந்து கொள்ளாமால் இவற்றை வெறும் உணர்ச்சிகரமான சொற்களகாப் புரிந்து கொண்டதன் வெளிப்பாடே இன்றைய நிலை.தமிழர்கள் தமது இருப்பைப் பாதுகாக்கும் அடிப்படைகளைக் கைவிடுவதன் மூலம் நாம் சிறிலங்கா அரசின் நிக்ழச்சி நிரலை எவ்வாறு நிறுத்தப் போகிறோம்? முடிவில் பிழியான அரசியல் முடிவுகளை எடுதவர்களை வரலாறு பின் தள்ளிவிடும்.

  • தொடங்கியவர்

நாரதர்,

என்று சிறிலங்கா சனாதிபதித் தேர்தலில் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குரிய நிறைவேற்று அதிகார சனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க கோரினார்களோ (அது த.தே.கூத்தமைப்பு மட்டுமல்ல) அன்றே, ஈழத் தமிழர்கள் "தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர்" என்றே அர்த்தம், அது சம்பந்தரானலும் சரி, கஜேந்திரனாலானாலும் சரி

இன்று அதே அரசியலமைப்பின் தலையாய இடமான பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தொங்கி நிற்பவர்கள் அனைவரும் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டவர்களே ஆவர். அவர்கள் சொல்லும் மொழியும், நாம் புரிந்து கொள்ளும் விதமும் மாறுபடலாம், ஆயினும் உண்மை அதுதான்

இவர்களால், போரில் தன் காலை இழந்த ஒரு சிறு உயிருக்கு கூட எதனையும் செய்ய முடியாது: அது தான் யதார்த்தம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டுள்ளது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தாயகக் கோட்பாட்டைக் கைவிடவில்லை.சிறிலங்காப் பாராளுமன்றம் சிறிலங்கா பிரிவதையே தடுக்கிறது.இரு தேசங்கள் ஒரு நாடு என்பதே த தே ம மு முன்வைக்கும் அரசியற் கோரிக்கை.மாற்றாக த தே கூ ஒரு நாட்டிற்க்குள் அதிகாரப் பரவலாக்கலையே தீர்வாக முன் வைக்கிறது.இது மாவட்ட சபையாக மாகாண சபையாக கிராம சபையாக இருக்கலாம்.மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுதுவதே இவற்றின் பணி.இதன் மூலம் தமிழரின் அடையாளமும் தனித்துவமும் பாதுகாக்கப்படும் என்று நீங்கள் கனவு மட்டுமே காணலாம்.

அது ரொம்ப சுலபமானது............... அதற்கு முஸ்லிம்களிடமெல்லாம் போக வேண்டியதில்லை!

எமது துரோக கும்பல்களிடம் போனாலேபோதும் எப்படியென்று அக்குவேறு ஆணிவேறாக சொல்லிதருவார்களே.

இந்தியாவோடு கூடி இலங்கை இராணுவத்தை சுடுவது.............. இலங்கையோடு கூடி இந்தியாவை காட்டி கொடுப்பது. எல்லோரோடும் கூடி தமிழரை சுடுவது. இதில் உட்கார்ந்து இருந்து யோசித்து திட்டம் திட்ட என்ன இருக்கின்றது?

இது விபச்சராம் செய்ய பல்கலைகழகம் சென்று படியுங்கள் என்று கூறுவதுபோல் உள்ளது.

நக்கி பிழைப்பதென்று முடிவு கொண்டால்................ பின்பு செக்கென்ன சிவலிங்கம் என்ன? நாக்கை நீட்ட வேண்டியதுதானே.

தன்மானம்! இனமானம்!

பண்பு பணிவு தன்னிலை சுயநிர்ணயம். இவற்றை தூக்கி எறிந்துவிட்டால் பிறகென்ன இராஜதந்திரம் எல்லாம் வேண்டி கிடக்கு? இத்தாலி சோனியா வந்து இந்திய அரசியல்வாதியான கருணாநிதிக்கு இந்திய இறையாண்மை பற்றி சொல்ல வாயடைத்து நிற்பது இதுதான் இப்போதைய இராஜதந்திரம்.

அக்காவை தங்கையையும் கூட்டிசென்று சிங்களவனுடன் படுக்கவிட்டால் எனக்கு உண்ண உணவும் படுக்க இடமும் தருகிறான். இதை செய்யும் நான் புதிதிசாலி என்றால். இனி தமிழால் இங்கே எழுதுவதற்கே ............... கூச்சமாக எல்லோ இருக்கவேண்டும்

ஏன் புத்திசாலிகளென்றால் போரிடுவதுதான் ஒரே வழியா? இராஜதந்திரம் என்பது காலில் விழுதல் என்றுமட்டும் அர்த்தப்படாது. முஸ்லிம்களின் அரசியல் முறைத் தன்மையைத்தான் இங்கு சுட்டிக்காட்டினேன். அதற்காக அக்கா தங்கைமாரை நீங்கள் கூட்டிக் கொடுக்கத் தேவையில்லை.

வாழ்வதற்கு மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது அவர்களைக் காக்கும் வழிபற்றிச் சிந்தியுங்கள். வளைந்து கொடுக்கவேண்டிய இடங்களில் வளையாமல் நிற்பதால் எதுவும் நடந்தேறிவிடாது. அழிவு மட்டுமே மிஞ்சியிருக்கும்.

தாயகக்கோட்பாட்டை கையில் எடுப்பதற்கு தமிழர்கள் பலமுடனிருக்க வேண்டும். இன்று என்ன பலம் எம்மிடமுண்டு. தன்மானம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள். மானமிழந்து அங்கே தமிழன் தவிக்கின்றான். மானம்பற்றி அங்கு சிந்திக்கப்படுகிறதா? இழப்புக்கள் மேலும் இழப்புக்கள்.

ஒருவழி திறக்க வேண்டும். தமிழர் பலம் மட்டுமல்ல, ஒற்றுமையும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரமிது.

இன்று இருக்கும் நிலையில் எவராலும் எதையும் செய்து விட முடியாது என்பது உண்மையே.சிறிலங்கா அரசு அதன் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் தமிழர் தாயகம் என்னும் கோட்பாட்டைச் சிதைப்பதன் நோக்கில் ,பல இராணுவப்மயப்படுத்தப்பட குடியேற்றங்களை நிறுவி வருகிறது.தமிழர்கள் தனியான ஒரு இனம் அவர்களுக்கு என ஒரு தாயகம் இலங்கையில் இருக்கிறது அது பாதுகாக்கப் பட வேண்டும் என்பதே தமிழர் தாயகக் கோட்பாடு.இதனை தமிழர்கள் அரசியல் ரீதியாகக் கைவிடுவதன் மூலம்,தமிழர்கள் சிங்கள அரசின் நிரந்தர இராணுவ அடக்குமுறைக்குள் வாழ தமது அங்கீகாரத்தை வழங்கிவிட்டர்கள் என்றே அர்த்தப்படும்.மாற்றாக தமிழர்களுக்கென ஒரு தாயாகம் உண்டு என்று வலிந்து கூறுவதன் மூலம், சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை தமிழர் தாயகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்னும் கோரீக்கையே வலுப்பெறும்.இதனாலையே தமிழர் தாயகம் என்னும் கோரிக்கை அரசியல் ரீதியாக தமிழரின் இருப்புக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.கூட்ட்மைப்ப்ன் அரசியல் விவேகம் அற்ற தூர நோக்கற்ற நடவடிக்கைகளால் தமிழரின் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கிறது.

தமிழீழம் என்பதுவும், தாயகம் சுயனிர்ணயம் என்பதுவும் வெறும் கோசங்கள் அன்று.அவை தமிழரின் வாழ்வை அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க எழுந்தவை.இவற்றை அவற்ரின் அரசியல் அர்ததில் புரிந்து கொள்ளாமால் இவற்றை வெறும் உணர்ச்சிகரமான சொற்களகாப் புரிந்து கொண்டதன் வெளிப்பாடே இன்றைய நிலை.தமிழர்கள் தமது இருப்பைப் பாதுகாக்கும் அடிப்படைகளைக் கைவிடுவதன் மூலம் நாம் சிறிலங்கா அரசின் நிக்ழச்சி நிரலை எவ்வாறு நிறுத்தப் போகிறோம்? முடிவில் பிழியான அரசியல் முடிவுகளை எடுதவர்களை வரலாறு பின் தள்ளிவிடும்.

குடாநாடு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் மிகவும் சொகுசுத்தன்மைக்குப் பழகிவிட்டார்கள். அங்கு நடைபெறும் கொண்டாட்டங்கள் இதற்கு உதாரணம். வன்னிப் பிரதேச மக்களின் நிலைதான் இதுவரைக்கும் உதவிகள் கூடச் செய்ய முடியாத நிலைக்கு ஆட்பட்டு நிற்கிறார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள போராளிகளைத் தொடர்ந்து சிறைவைப்பு, வன்னிப் பிரதேச மக்களை தொடர்ந்தும் முகாங்களிலேயே முடக்குதல், முல்லைத்தீவில் 2500 ஏக்கர் பரப்பளவில் வடபிராந்திய முப்படைத் தலைமையகம். இவைகளெல்லாம் திட்மிட்டுத் துரிதகதியில் நடைபெறுகின்றன.

ஆனால் சுயநிர்ணயக் கொள்கையும் ஒரு நாட்டிற்குள்ளான தீர்வும் நாட்டில் அடிபடப் போகின்றன. இவைகள் கிடைக்கிறதோ இல்லையோ மக்களைப்பற்றி இவர்கள் கவலைப்படமாட்டார்.

இறைவன்,

தாயகக் கோட்பாட்டைக் கைவிடுவதன் மூலம் எங்கனம் வன்னியில் உள்ள மக்களும் போராளிகளும் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை விளக்கினால் ,தாயகக் கோட்பாட்டைக் கைவிடுவது சரியான அரசியல் நிலைப்பாடு என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் இதுவரை அதற்கான பதிலை தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டுள்ள எவரும் சொல்லவில்லை.இன்று மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்தவர்களும் வன்னி மக்களையும் போராளிகளையும் சொல்லியே தமது செயல்களை நியாயப்படுதுகிறார்கள்.இதனையும் நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.மக்களின் நீண்டகால நலனை அடிப்படியாக வைத்து அரசியலை முன் நோக்கி நகரத்தவே மக்களுக்கு அரசியற் தலமை என்பது அவசியம்.சலுகைகளைப் பெற தமிழர்களிடம் பலர் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்மானம்! இனமானம்!

பண்பு பணிவு தன்னிலை சுயநிர்ணயம். இவற்றை தூக்கி எறிந்துவிட்டால் பிறகென்ன இராஜதந்திரம் எல்லாம் வேண்டி கிடக்கு?

அக்காவை தங்கையையும் கூட்டிசென்று சிங்களவனுடன் படுக்கவிட்டால் எனக்கு உண்ண உணவும் படுக்க இடமும் தருகிறான். இதை செய்யும் நான் புதிதிசாலி என்றால். இனி தமிழால் இங்கே எழுதுவதற்கே ............... கூச்சமாக எல்லோ இருக்கவேண்டும்

மருதங்கேணி அண்ணா,

வெறும் உசுப்பேத்தும்,உணர்ச்சிவசப்படும் கருத்துக்களை விடுத்து யதார்த்தமாக சிந்தித்து பாருங்கள்,

புலம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு உங்கள் அக்கா,தங்கை பெற்றோரையும் கூடவே பாதுகாப்பாக வைத்திருப்பவர்களால் தான் இப்படி தன் மானம்,இனமானம் என்று உசுப்பேத்த முடியும்..

ஊரிலை பெற்றோர்,சகோதரர்கள் இருக்கும் உறவுகளால் இப்படி சொல்லமுடியாது(ஒருவேளை நீங்கள் ஊரில்லிருந்து எழுதி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்க).

தமிழினம் தன் இருப்பையே தக்கவைத்துக் கொள்ள முடியாமல் இருக்கும் போது மானம்,அவமானம் ஒரு கேடா???

இல்லை மானம்,தன் மானம் என்று இருந்து அழிவைத் தவிர சாதித்தது தான் என்ன??

CNN இல் வந்த ஆய்வுச்செய்தியையாவது படித்து பாருங்க எங்களுடைய மக்களின் துயரங்களை

எத்தனை சிறுவர்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என அங்கவீனம் ஆனவர்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்ல??

ஒவ்வொருவருக்கும் விரும்பினால் பணம்,உணவு கொடுக்கலாம் ஆனால் அவர்கள் ஒவ்வொருத்தரினதும் ஆசைகள் இலட்சியங்கள்,கனவுகளை திருப்பிக்கொடுக்க முடியுமா???

அங்கிருக்கும் மக்கள் சொல்கிறார்கள்,

நாங்கள் கடுமையாக உழைத்தோம்,எங்கள் இனத்தின் விடுதலைக்காய் எல்லாத்தையும் இழந்தோம்..கடைசியில் கண்டதென்ன??

எதுவுமே இல்லாமல் முடிந்ததை எப்படிச்சொல்ல??

அவர்களுடைய மனநிலைகளையும் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். அல்லது அவர்களுடைய இப்படியான

கேள்விகளுக்கு என்ன தான் பதில் வைத்துள்ளீர்கள்????

வெற்று வீரவசனங்களாலும்,உசுப்பேத்தல்களையும் விடுத்து அங்கிருக்கும் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துவதும்,ஆகக்குறைந்த அடிப்படைத்தேவைகளையாவது பூர்த்திசெய்ய ஆவன செய்வதே தற்போதைக்கு மேல்.

Edited by ஜீவா

தாயகக் கோட்பாடு கைவிடப்படுவதன் மூலம் எவ்வாறு அங்கிருக்கும் மக்களின் இருப்பு உறுதிபடுத்தப் படும் என்பதை நீங்களாவது சொல்வீர்களா? நான் மானம் மரியாதை பற்றி எதுவுமே பேசவில்லை. நான் தாயக மக்களின் இருப்பைப் பற்றியே பேசுகிறேன்.புலம் பெயர்ந்தவர் பற்றியும் நான் பேசவில்லை.எவர் உங்களுக்கு என்ன உறுதி மொழிகளைத் தந்துள்ளார்கள் என்றாவது சொல்வீர்களா?ஏன் எல்லாம் பெரிய மூடு மந்திரம் போல் சொல்லப்படுகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் தமிழீழத்தை கைவிட்டு விட்டதாக சொல்ல வேண்டிய ஒரு தேவை காலத்தின் போக்கில் ஏற்பட்டுவிட்டது.

சம்பந்தனின் சில நகர்வுகளை இன்றைய நிலையில் அங்கீகரித்து நிற்க வேண்டிய தேவை ஒன்றிருக்கிறது. சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டோடு ஒருமித்து அதேவேளை எமது அரசியல் அடிப்படைகளை தக்க வைக்கும் வகையில் நாம் செயற்பட வேண்டிய தேவை இருக்கிறது. தொடர்ந்து தமிழீழம்.. ஆயுதப் போராட்டம்.. வன்முறை என்று உச்சரிப்போமாக இருந்தால் இருப்பதை முற்றாக இழந்து அடையாளங்களையும் முற்றாக இழந்து நாட்டையும் எதிரிக்கு முற்றாக இழந்து நிற்போம்.

. இதைத் தவிர்க்க வேண்டின்.. நாம் இராஜதந்திர சாணக்கியமாக நகர்ந்து அரசியல் செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில் புலம்பெயர் சமூகம் தனி ஒரு பாதையிலும் தாயக அரசியல் தலைமைகள் தனி ஒரு பாதையிலும் பயணித்து தேவையான சந்தர்ப்பத்தில் ஒரே புள்ளியில் இரண்டு பாதைகளையும் இணைக்கும் நிலை வகுத்துச் செயற்பட்டால் அன்றி.. துரோகம்.. புறக்கணிப்பு.. ஒதுக்கு என்பதன் பெயரால் நாம் எதிரியின் நாசகாரப் பிடியில் இருந்து எமது மண்ணை மக்களை அடையாளங்களை பாதுகாக்க திராணியற்று நிற்கும் நிலையே நீடிக்கும்.

நன்றி ஐயா தங்களது நேரத்திற்கு..

ஏன் புத்திசாலிகளென்றால் போரிடுவதுதான் ஒரே வழியா? இராஜதந்திரம் என்பது காலில் விழுதல் என்றுமட்டும் அர்த்தப்படாது. அதற்காக அக்கா தங்கைமாரை நீங்கள் கூட்டிக் கொடுக்கத் தேவையில்லை.

வாழ்வதற்கு மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது அவர்களைக் காக்கும் வழிபற்றிச் சிந்தியுங்கள். வளைந்து கொடுக்கவேண்டிய இடங்களில் வளையாமல் நிற்பதால் எதுவும் நடந்தேறிவிடாது. அழிவு மட்டுமே மிஞ்சியிருக்கும்.

தாயகக்கோட்பாட்டை கையில் எடுப்பதற்கு தமிழர்கள் பலமுடனிருக்க வேண்டும். இன்று என்ன பலம் எம்மிடமுண்டு. தன்மானம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள். மானமிழந்து அங்கே தமிழன் தவிக்கின்றான். மானம்பற்றி அங்கு சிந்திக்கப்படுகிறதா? இழப்புக்கள் மேலும் இழப்புக்கள்.

ஒருவழி திறக்க வேண்டும். தமிழர் பலம் மட்டுமல்ல, ஒற்றுமையும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரமிது.

ஒரு வேளை சாப்பாட்டுக்காக எல்லாவற்றையும் துறப்பதற்கு எமது அக்கா தங்கையர் அங்கே தயாராக இருக்கின்றனர் என்ற செய்தி வந்தபின்னும் .....

உணர்வு வீரம் தன் மரியாதை சுயகௌரவம்........

என்று நாம் பேசுகின்றோம் என்றால்.......?

வெட்கப்படவேண்டும் நாம் எமது அக்கா தங்கையரை நினைத்து....

இவர்களை இவற்றிலிருந்து காப்பாற்ற எவரது காலிலும் விழமாட்டேன் என்று எவராவது சொன்னால்...

அவர்களை அக்கா தங்கை என்று சொல்ல எமக்கு என் உரிமை இருக்கிறது.

தமிழினம் தன் இருப்பையே தக்கவைத்துக் கொள்ள முடியாமல் இருக்கும் போது மானம்,அவமானம் ஒரு கேடா???

வெற்று வீரவசனங்களாலும்,உசுப்பேத்தல்களையும் விடுத்து அங்கிருக்கும் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துவதும்,ஆகக்குறைந்த அடிப்படைத்தேவைகளையாவது பூர்த்திசெய்ய ஆவன செய்வதே தற்போதைக்கு மேல்.

உண்மை ஜீவா

நன்றி

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.