Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டேவிட் பூபாலபிள்ளையின் கூற்றுக்கு கனடிய தமிழ்க் காங்கிரஸ் மறுப்பு

Featured Replies

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் மக்களை.கூட்டமைப்பின் காவடி தூக்கிகலின் இன்னொரு பொய்ப் பிரச்சாராம்.இவர்களுக்கு பொய்களைப் புனைவதைத் தவிர வேறு வழியில்லை.இல்லாத மக்கள் ஆதரவை இருபதகாக் காட்ட படாத பாடு படுகிறார்கள்.உதயன் சுடரொளி பதிரிகைகளும் அவர்கள் நடாத்தும் தமிழ்வின் போன்ற இணையத் தளங்களுமே இவ்வாறான பொய்களைப் பரப்பி கீழ்த் தரமான அரசியலை நாடாதுகிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தேசம், சிங்களவர்களின் தேசம் என்ற அடிப்படையில் போட்டியிட்டு வருவதாக, கனடிய தமிழர் பேரவையின் (கனடிய தமிழ்க் காங்கிரசின்) பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை கூறியதாக வெளியான செய்திக்கு, கனடிய தமிழர் பேரவை மறுப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன் அவர்கள், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய அடிகளார் கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) கனடியத் தமிழர் பேரவை எந்தக் கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை எனவும், தமது பெயரில் வெளியான செய்திகள் தவறானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து பிறளாத கட்சிக்கு மக்கள் சுயமாக வக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ள கனடியத் தமிழர் பேரவை, தேர்தல் களத்திலுள்ள அரசியல் கட்சிகள் தமது அடிப்படைக் கோட்பாடுகள் பற்றி மக்களிற்கு மயக்கமற்ற தெளிவான விளக்கத்தினைக் கொடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவின் உதவியுடன் சமஸ்டி முறையிலான தீர்வுக்கு முயற்சி செய்வோம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர், தமிழர்களின் தேசம், சிங்களவர்களின் தேசம் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதாக, கனடிய தமிழர் பேரவையின் (கனடிய தமிழ்க் காங்கிரசின்) பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை கூறியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

http://www.pathivu.com/news/6008/54//d,view.aspx

Edited by narathar

எப்போ, தணியப் போகிறது ... இக்குடும்பிச்சண்டை???? ......

  • கருத்துக்கள உறவுகள்

:D உதயன், சுடரொளி போன்ற பத்திரிக்கைகளின் உரிமையாளரான ஷப்ரா யுனிக்கோ பினான்ஸ் புகழ் சரவணபவனும் இத்தேர்தலில் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிடுகிறார். ஆகவே அவர் நடத்தும் பத்திரிக்கை எவ்வாறு அவரை நியாயப்படுத்தாமலிருப்பது ? இன்னொரு வழியில் சொல்வதானால், எப்படி உண்மையை எழுதுவது ?

தமிழ் வின் பற்றிக் கேட்க வேண்டாம். பல்லூடக வித்தகர், தாரக்கி, தமிழ்ப்பொடியன் எனும் பெயர்களில் உலாவருகின்ற முன்னாள் யாழ் பலகலைக்கழக மாணவரும் தற்போது மெல்பேன், அவுஸ்த்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு ஏதோ வன்னிக்காட்டினுள் புலிகளோடு புலிகளாக அலைந்து திரிந்து போராளிகளை விடுவிப்பதற்காக உயிர் கொடுத்துப் போராட்டங்கள் செய்வதாக கதையளந்து கொண்டு திரியும் இங்குள்ள ஒருவரது ஊடகம்தானே?? செய்தி அப்படித்தானிருக்கும்.

பல பெயர்களில் மின்னஞ்சல்களை அனுப்புவதாலும், ஒரு தொலைக்காட்சியில் செய்திகள் வாசிப்பதாலும் தாங்களும் சமூகத்தில் ஊடகவியளாளர்கள் ஆகி விடுவதாக பலருக்கு நினைப்பு. என்ன செய்வோம், பலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால் ஒருநாள் உண்மை தெரிய வரும்.

எப்போ, தணியப் போகிறது ... இக்குடும்பிச்சண்டை???? ......

எலக்சன் நெருங்க நெருங்க இது தீவிரமடையும்

எலக்சன் முடிஞ்சவுடன் இவங்கள் எலாம் வெளிநாட்டுக்கு போடுவாங்கள் அப்பத்தான் முடியும்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D உதயன், சுடரொளி போன்ற பத்திரிக்கைகளின் உரிமையாளரான ஷப்ரா யுனிக்கோ பினான்ஸ் புகழ் சரவணபவனும் இத்தேர்தலில் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிடுகிறார். ஆகவே அவர் நடத்தும் பத்திரிக்கை எவ்வாறு அவரை நியாயப்படுத்தாமலிருப்பது ? இன்னொரு வழியில் சொல்வதானால், எப்படி உண்மையை எழுதுவது ?

உதயன் குழுமத்தினால் நடாத்தப்பட்ட Shabra Unico Finance நிறுவனம் பொதுமக்களின் வைப்புப் பணமான ஆறுகோடி ரூபாவுடன் வங்குரோத்து நிலைக்கு சென்றதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

Shabra Unico Finance that was associated with the Uthayan group collapsed in 1993 with mostly pensioners in Jaffna losing Rs. 60 million. One member of the family left the country with Rs. 46 million and has not since been heard of. (http://www.uthr.org/bulletins/bul28.htm)

மேற்படி நிறுவனம் மூடப்பட்டது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இவை:

http://documents.gov.lk/gazette/2009/PDF/Jun/12Jun09/I%20-%20IIB%20%28E%29%202009.06.12.pdf

http://documents.gov.lk/gazette/2007/pdf/March/23Mar07/23MarBE.pdf

இதுபற்றிய மேலதிக தகவல்களை எங்காவது பெற்றுக் கொள்ள முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D உதயன், சுடரொளி போன்ற பத்திரிக்கைகளின் உரிமையாளரான ஷப்ரா யுனிக்கோ பினான்ஸ் புகழ் சரவணபவனும் இத்தேர்தலில் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிடுகிறார். ஆகவே அவர் நடத்தும் பத்திரிக்கை எவ்வாறு அவரை நியாயப்படுத்தாமலிருப்பது ? இன்னொரு வழியில் சொல்வதானால், எப்படி உண்மையை எழுதுவது ?

தமிழ் வின் பற்றிக் கேட்க வேண்டாம். பல்லூடக வித்தகர், தாரக்கி, தமிழ்ப்பொடியன் எனும் பெயர்களில் உலாவருகின்ற முன்னாள் யாழ் பலகலைக்கழக மாணவரும் தற்போது மெல்பேன், அவுஸ்த்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு ஏதோ வன்னிக்காட்டினுள் புலிகளோடு புலிகளாக அலைந்து திரிந்து போராளிகளை விடுவிப்பதற்காக உயிர் கொடுத்துப் போராட்டங்கள் செய்வதாக கதையளந்து கொண்டு திரியும் இங்குள்ள ஒருவரது ஊடகம்தானே?? செய்தி அப்படித்தானிருக்கும்.

பல பெயர்களில் மின்னஞ்சல்களை அனுப்புவதாலும், ஒரு தொலைக்காட்சியில் செய்திகள் வாசிப்பதாலும் தாங்களும் சமூகத்தில் ஊடகவியளாளர்கள் ஆகி விடுவதாக பலருக்கு நினைப்பு. என்ன செய்வோம், பலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால் ஒருநாள் உண்மை தெரிய வரும்.

சகோதரம் ரகு, பிரிச்சு மேஞ்சு போட்டீங்கள். தகவலுக்கு நன்றி! :lol: பச்சை புள்ளி குத்திட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கனடிய தமிழ் காங்கிரசுக்கு.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயன் குழுமத்தினால் நடாத்தப்பட்ட Shabra Unico Finance நிறுவனம் பொதுமக்களின் வைப்புப் பணமான ஆறுகோடி ரூபாவுடன் வங்குரோத்து நிலைக்கு சென்றதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

Shabra Unico Finance that was associated with the Uthayan group collapsed in 1993 with mostly pensioners in Jaffna losing Rs. 60 million. One member of the family left the country with Rs. 46 million and has not since been heard of. (http://www.uthr.org/bulletins/bul28.htm)

மேற்படி நிறுவனம் மூடப்பட்டது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இவை:

http://documents.gov.lk/gazette/2009/PDF/Jun/12Jun09/I%20-%20IIB%20%28E%29%202009.06.12.pdf

http://documents.gov.lk/gazette/2007/pdf/March/23Mar07/23MarBE.pdf

இதுபற்றிய மேலதிக தகவல்களை எங்காவது பெற்றுக் கொள்ள முடியுமா?

எண்ட இங்கிலாந்து உளவுத்துரையாருக்கும் ஒரு பச்சை புள்ளி.

மொத்தத்தில் சம்பந்தன் கூட்டமைப்பை கூத்தமைப்பாக மாற்றிவிட்டார்.

இனி தேர்தல் முடியும் வரை, கூத்தமைப்பிடம் இருந்து நேரத்துக்கு நேரம் மக்களைக் கவரும் (ஏமாற்றும்) விதம் விதமான கருத்துக்களை கேட்கலாம்.

மக்கள் தமிழின படுகொலையாளர்களின் அடிவருடிகளிடமும் ஏமாறாமல் இருந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகு. யார் யார் எப்படி, ஏன் தகவல்கள் தருகிறார்கள் என்பதுக்கு உங்களில் தகவல்கள் மிகவும் உதவும்.நிற்க, ஒரு பச்சை மட்டும் இப்போ.

மேலும் எம்17 மேலும் உங்களிடம் தகவல்கள் உண்டு. எடுத்து விடுங்கோ.ஒரு பச்சை மட்டும் இப்போ.

சரவணபவன் ஒரு சின்னமலையை விழுங்கியவர். இமயத்தை விழுங்கியவர்கள்தான் உலகம் முழுக்க புலி பேச்சாளர்களாக பொறுப்பாளர்களாக இருந்த கதை உங்களுக்கு தெரியாது போலிருக்கு.

இந்த சரவணபவனிடமும்,மகா துரோகி அருளம்பலத்தின் வீட்டில் மகனின் கலியாணவீட்டிற்கு வைத்திருந்த பட்டு வேட்டியை களவெடுத்தவரும் தான் இன்று உலகம் வியக்கும் அரசியல் ஆய்வாளர்,தமிழ் சனம் அழிந்தாலென்ன தலைவர் முடிந்தாலென்ன புலிக்கொடியுடன் ஊர்வலம் வைக்க சொல்லி முழுசனத்தையும் உசுப்பேதினவர்.

நீங்கள் எல்லோரும் எப்போது உண்மைகளை உணரப் போகின்றீர்களோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

நாங்கள் சம்பந்தர் கூட்டத்தை பற்றி கதைத்தால் ஒற்றுமை பறிபோய்விட்டது... சிங்களம் சிரியாய் சிரிக்கிறதா...??? நீங்கள் பேசுவது எந்தவகை அண்ணை....???

அண்மைக்காலமாக பல மின்னஞ்சல் நாற்றப்போர் நடந்து வருகின்றது இது பலருக்கும் வந்திருக்கும்

இதில் பிரபலமாக அடிபட்டது இந்த பூபாலப்பிள்ளையை[ இவர் மட்டக்களப்பு பூர்வீகம் ] மீது பிரதேசவாதம் பாவித்து கனடியத் தமிழ்க்காங்கிரஸிலிருந்து தூக்கமுயற்சிப்பதாக கதகா தலைவர்களையும் உத தலைவர்களையும் இனைத்து வந்து கொண்டிருந்தது அவர் அப்படி இல்லை சுத்த தமிழ்த்தேசியவாதி என்றும் அடுக்கடுக்காக வந்து கொண்டிருந்தது

ஆனால் இப்போது பார்த்தால் பூபாலப்பிள்ளை தான் பிரதேசவாதத்தை கையில் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது ஆனால் அது அவரது தனிப்பட்ட கருத்தாம் ஆக பொதுவில் காங்கிரஸில் தமிழ்த்தேசியம் தனிப்பட்டவகையில் சுயதேசியம்

ஆக நீங்கள் தனிப்பட்ட ரீதியில் கருணாவையும் ராஜபக்ச பிரத்ர்களையும் ஆதரிக்கலாம் ஆனால் பொதுவில் பிரபாகரனை ஆதரித்தால் போதுமானது :D

அண்மைக்காலமாக பல மின்னஞ்சல் நாற்றப்போர் நடந்து வருகின்றது இது பலருக்கும் வந்திருக்கும்

இதில் பிரபலமாக அடிபட்டது இந்த பூபாலப்பிள்ளையை[ இவர் மட்டக்களப்பு பூர்வீகம் ] மீது பிரதேசவாதம் பாவித்து கனடியத் தமிழ்க்காங்கிரஸிலிருந்து தூக்கமுயற்சிப்பதாக கதகா தலைவர்களையும் உத தலைவர்களையும் இனைத்து வந்து கொண்டிருந்தது அவர் அப்படி இல்லை சுத்த தமிழ்த்தேசியவாதி என்றும் அடுக்கடுக்காக வந்து கொண்டிருந்தது

ஆனால் இப்போது பார்த்தால் பூபாலப்பிள்ளை தான் பிரதேசவாதத்தை கையில் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது ஆனால் அது அவரது தனிப்பட்ட கருத்தாம் ஆக பொதுவில் காங்கிரஸில் தமிழ்த்தேசியம் தனிப்பட்டவகையில் சுயதேசியம்

ஆக நீங்கள் தனிப்பட்ட ரீதியில் கருணாவையும் ராஜபக்ச பிரத்ர்களையும் ஆதரிக்கலாம் ஆனால் பொதுவில் பிரபாகரனை ஆதரித்தால் போதுமானது :wub:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரின் அடிப்படைக் கோட்பாடுகளான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை போன்றவற்றை முன்வைத்து போட்டியிடுவதாகத் திரு. டேவிட் பூபாலப்பிள்ளை அவர்கள் தெரிவித்தாக வெளியான செய்திகளைத் தான் தமிழ்க் காங்கிரஸ் மறுத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடிப்படைக் கோட்பாடுகளை வலியுறுத்திப் போட்டியிடுவதாகத் அவர் உண்மையில் தெரிவித்திருந்தார் என்று வைத்துக் கொண்டாலும் இதில் பிரதேசவாதத்தை அவர் எங்கே வெளிப்படுத்தினார்.

தேவையற்ற முறையில் அவர் மீது சேறு பூச முற்படும் உங்களிடமே பிரதேசவாதம் இருக்கிறது. எனவே முதலில் உந்த அழுக்கிலிருந்து நீங்கள் வெளியேறுங்கள்.

தென்தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள் சிலரே செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள் அவர்கள் மீதும் உங்கள் வக்கிரத்தை வெளிப்படுத்தி அவர்களையும் ஒதுக்கி வைக்காதீர்கள்!!!

Edited by மின்னல்

இந்தச் சம்பந்தரைத்தான் திருகோணமலையில் வெல்லவைக்க எமது புலத்து ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர் எனப் பலர் முயன்றுகொண்டிருக்கின்றனர். இதற்கு அவர்கள் வைக்கும் ஒரே சாக்குப்போக்கு: திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்.

தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டுமென்ற காரணத்தால் மிகப்பிழையான, மிகவும் ஆபத்தான ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப முடியுமா என்ன? அவரைத் தோற்கடித்து வேறொருவரை நாடாளுமன்றம் அனுப்புவதைப் பற்றி ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்? எல்லோரும் திரண்டுநின்று காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் நிற்கும் அணியை ஆதரிப்பதன் மூலம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் காபாற்றியதாகிறது; அத்தோடு தவறான ஒருவரைத் தோற்கடித்ததும் ஆகிறது.

இதுவொன்றும் சாத்தியப்படாத விடயமன்று. ஏதோ சம்பந்தர் அசைக்க முடியாத சக்தியாகத் திருமலையில் திகழ்கிறார் என்று கருதிக்கொண்டு யாராவது பேசுவார்களாக இருந்தால் அவர்கள் அங்குள்ள நிலைமை தெரியாமல் கதைப்பவர்களாகவே இருப்பர். சம்பந்தருக்குப் பின்னால் இருக்கும் பலமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு மாயையும் வீட்டுச் சின்னமும் தான். இதைச் சரியான முறையில் எதிர்கொண்டு அந்த மாயையைத் தகர்க்க முடியும். திருகோணமலையின் நகர்ப்புறத்தைத் தாண்டிப்பார்த்தால் சம்பந்தனுக்கு மிகப்பெரும் எதிர்ப்பலையொன்று ஏற்கனவே இருக்கிறது.

மேலும் கெளரிமுகுந்தன், கண்மணி அம்மா போன்றவர்களுக்கு இருக்கும் செல்வாக்கும், ஆதரவும் அதிகமேதான். நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த சம்பந்தனைவிடவும் மக்களோடு நேரிலே களத்திலே நின்று பணியாற்றிய கெளரிமுகுந்தன், கண்மணி அம்மா குழுவுக்கு கீழ்த்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிக ஆதரவு உள்ளதென்பதே கள யாதார்த்தம். மிகக் கடுமையான போட்டியை சம்பந்தன் அணிக்கு அங்கே சைக்கிள் சின்னக்காரர் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் தொடக்கத்திலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் கெளரிமுகுந்தன் பற்றிய அவதூறுப் பிரச்சாரத்தைத் தொடங்கியிருந்தார்.

ஊடக, பண பலமின்றி களத்திலிறங்கி வேலைசெய்யும் கஜேந்திரகுமார் அணியைப் பலப்படுத்தி சரியான ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புவதே நாம் செய்ய வேண்டிய பணி. அஃதன்றி, சம்பந்தர் புராணம் பாடிக்கொண்டிருப்பது தவறு; அதற்கு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும், பிரதேசவாதத்தையும் (கிழக்கான் தலைமை தாங்குவதை வடக்கான் விரும்பவில்லை என்பது) துணைக்கழைப்பது மகாதவறு.

தேவையற்ற முறையில் அவர் மீது சேறு பூச முற்படும் உங்களிடமே பிரதேசவாதம் இருக்கிறது. எனவே முதலில் உந்த அழுக்கிலிருந்து நீங்கள் வெளியேறுங்கள்.

தென்தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள் சிலரே செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள் அவர்கள் மீதும் உங்கள் வக்கிரத்தை வெளிப்படுத்தி அவர்களையும் ஒதுக்கி வைக்காதீர்கள்!!!

இங்கே பிரதேசத்தை முன்னிறுத்தி சம்பந்தரை ஆதரிப்பவர்களால் தான் முன்னெடுக்கப்படுகின்றது அது தான் டேவிட் பூபாலப்பிள்ளை முதல் நிலவன் நிராஜ் டேவில் முதல் பின்னணி ஆக நான் முன்னெடுக்கவில்லை இவர்கள் முன்னெடுப்பதைச் சொன்னேன்

ஆனால் நீங்கள் ஒரு படி மேல் போய் தென் தமிழீழ பிரதேசத்தையும் சந்தடி சாக்கில் இழுக்கின்றீர்கள்

“தமிழர்களின் தேசம், சிங்களவர்களின் தேசம் என இரண்டு தனியான தேசங்களைக் கொண்ட ஒருநாடு என்ற அடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது” என்று கனேடிய தமிழ்க் காங்கிரசின் பேச்சாளர் திரு. டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

எங்கே, எப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்தது என்பது குறித்து நாமறியோம். பூபாலபிள்ளைக்கு மட்டும் இரகசியமாகச் சொன்னார்களா என்று யோசிக்கத் தோன்றுகிறது. அப்படி ‘இரகசியமாக’ச் சொன்ன விடயத்தை இப்படிப் பரகசியமாக வெளியிட்டது தொடர்பில் கூட்டமைப்பின் தலைமைகள் பூபாலபிள்ளை தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும்.

மக்களுக்கு தமது கொள்கை, கோட்பாடு, இன்னபிற வியாக்கியானங்களைத் தெளிவுபடுத்தத்தான் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படுகிறது. அவற்றில் ஏதும் குறிப்பிடாமல் தனியாக இப்படி நாலுபேரை அழைத்து இரகசியமாகக் கதைக்க வேண்டிய தேவை கூட்டமைப்புக்கு ஏன் வந்ததென்று தெரியவில்லை. முதலில் இப்படி இரகசியமாக ஏதாவது சொன்னார்களா என்பதும் எமக்குத் தெரியவில்லை. அப்படிச் சொல்லவில்லையானால் பூபாலபிள்ளை ஏன் இப்படி உளற வேண்டும்?

சிலவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்துத்தான் வித்தகர் டேவிட் பூபாலபிள்ளை மேற்கண்ட விடயத்தைச் சொன்னாரென்றால், தமிழரின் தலைவிதியை என்னவென்று சொல்லி அழுவது. இப்படிப்பட்ட வித்தகர்கள் கனடாவிலுள்ள தமிழர்களின் ஆகப்பெரிய ஜனநாயக அமைப்பின் தலைமைப் பொறுப்பொன்றில் இருப்பது குறித்து நாம் வெட்கப்படத் தானே வேண்டும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விடத்திலே இந்த ‘இரு தேசங்கள் – ஒரு நாடு’ என்ற கோட்பாட்டை முன்வைத்துள்ளது என்று டேவிட் பூபாலபிள்ளை விளக்குவாரா? நிற்க, இந்தக் கோட்பாடு திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் முன்வைக்கப்பட்டுத்தான் அவர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார் என்ற செய்தியை ஒரு மாதத்துக்குள்ளாகவே தமிழர்கள் மறந்து விட்டார்களா? இப்படியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த கோட்பாட்டைக் ‘களவெடுத்து’ கூட்டமைப்புக்குப் பொருத்தி அழகுபார்க்கும் இழிவு வேலையை கனேடியத் தமிழ்க் காங்கிரசும் அதன் தலைமைப் பீடமும் செய்வது அருவருப்பானது. சிலவேளை தன்னிலை மறந்து ஒரு போதைநிலையில் மேற்கண்ட உளறல் நடந்திருந்தால், அதுகுறித்த வருத்தத்தையும் மறுப்பையும் கனேடியத் தமிழ்க் காங்கிரஸ் வெளியிட்டாக வேண்டும். கனேடியத் தமிழ்க் காங்கிரஸ் ஒன்றும் தனிப்பட்ட நாலுபேரின் சொத்து அன்று. ’நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்றவனின் இராப்போசன விருந்துதான் இப்படி உளற வைத்ததோ தெரியாது.

இங்கே பூபாலபிள்ளை போன்றவர்கள் விளையாடுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியினதும் அரசியல் நிலைப்பாடுகளோடு மட்டுமன்று. தமிழர்களின் சிந்தனைத் திறனோடும் தான். ‘இரு தேசங்கள் – ஒரு நாடு’ என்று சொல்லும்போது, ‘கோதாரி உதைத்தானே கஜேந்திரகுமார் சொன்னது? உது சரிவராது எண்டு நீங்கள் சொல்லப்போகத்தானே அந்தமனுசன் தனிய வெளிக்கிட்டது? பிறகென்ன கோதாரிக்கு இப்பவந்து அந்தக் கதையையே சொல்லிறியள்?‘ என்று தமிழர்கள் திருப்பிக் கேட்க மாட்டார்கள் என்ற துணிவில்தானே பூபாலபிள்ளை போன்றவர்கள் இப்படி உளறிக் கொண்டிருக்கிறார்கள்?

முதலில் பூபாலபிள்ளை சொல்லும் இந்தக் கோட்பாடுபற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரியுமா? எங்களது வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் இதுகுறித்து கூட்டமைப்புத் தலைமையிடம் கேள்வி கேட்டு உறுதிப்படுத்துவார்களா? கூட்டமைப்புக்குத்தான் அதை ஒத்துக்கொள்ளும் ‘தில்’ இருக்கிறதா?

தாயகத்திலே ஒரு கதை, புலத்திலே ஒரு கதை என்று வண்டில் விட்டுக்கொண்டிருக்கும் இந்த நிலை நிறுத்தப்பட வேண்டும். இப்படிச் சொன்னால் புலத்திலே காசு கறக்கலாமென்று கணக்குப் போட்டு கயிறு திரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் எப்போ உணரப் போகிறோம்? இந்த வேடதாரிகளின் முகமூடிகள் களையப்பட்டு இவர்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். துணிவிருந்தால், நீங்கள் நேர்மையானவர்களென்றால் உந்த ‘இரு தேசங்கள் – ஒரு நாடு’ என்ற கோட்பாட்டை தாயகத்திலும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சொல்லியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் ‘வழிபாட்டாளர்களை’ வைத்துக்கொண்டு இப்படிச் சொல்வது காசுகறப்பதற்காகச் செய்யப்படும் ஒரு திருகுதாளம் என்றுதான் நோக்கப்பட வேண்டும்.

ஆக, தமிழர்களைக் கேணயர்கள் என்று எண்ணிக்கொண்டு இவர்கள் ஆடும் கூத்து நிறுத்தப்பட வேண்டும். இதுகுறித்த கேள்விகள் தமிழர்களிடமிருந்து கேட்கப்பட வேண்டும். அப்படியில்லாமல் பேசாமல் தலையாட்டிக் கொண்டிருந்தால், அவர்கள் நினைப்பது போல் நாம் கேணயர்களாகத்தான் இருப்போம். எங்கள் முதுகில் அவர்கள் தாம் நினைத்தபடி சவாரி செய்துகொண்டிருப்பார்கள். 13 இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் தங்கள் பின்னால் நிற்கிறார்கள் என்று அவர்கள் கதைவிடுவது கூட எம்மை மந்தைகளாக நினைத்துத்தான்.

நாம் கேணயர்களா? மந்தைக் கூட்டமா? தீர்மானிக்க வேண்டியது நாமேதான்.

http://defeatsms.com/

Edited by tamilsvoice

http://defeatsms.com/

This Account Has Been Suspended

இப்போது எங்கே போய் விட்டது ஊடக தர்மம்

தமிழ்வொய்ஸ்

டேவிட் பூபாலப்பிள்ளை அவர்களின் கருத்து என வெளியான செய்திக்கு தமிழ் காங்கிரஸ் மறுப்புத் தெரிவித்துள்ளது. அதாவது டேவிட் பூபாலப்பிள்ளை அவர்கள் அப்படி ஒரு கருத்தைச் சொல்லவில்லை என்பதே அதன் பொருள். எனவே தேவையற்றவிதத்தில் அவர் மீது சேறு பூசவேண்டாம்.

உண்மையில் அவர் அப்படித் தெரிவித்திருந்தாலும் நீர் குறிப்பிடுவது போன்று அது பிரதேசவாதமல்ல. எந்தவித அடிப்படையுமில்லாமல் வேண்டுமேன்றே நீர் திரு. டேவிட் பூபாலப்பிள்ளை அவர்கள் பிரதேசவாதத்தை கையில் எடுத்திருப்பதாக எழுதியிருக்கிறீர்.

திரு. துரைரத்தினம் பிரதேசவாதம் குறித்து எழுதிய கருத்திற்கும் திரு. டேவிற் பூபாலப்பிள்ளைக்கும் என்ன சம்பந்தம்?

அவர் சொன்னதாக வெளியிடப்பட்ட செய்தியில் அப்படி எதுவுமில்லையே??

இந்த நிலையில் நீர் ஏன் அவர் பிரதேசவாதத்தைக் கையில் எடுத்திருப்பதாக அவர் மீது சேறு பூச முற்படுகிறீர்???

உமக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையென்றால் ஆக்கபூர்வமாக விமர்சனம் வையும். அதற்கு ஆதரவு கொடுப்பவர்களின் நிலைப்பாட்டில் உமக்கு உடன்பாடு இல்லையென்றால் அவர்கள் வெளியிடும் கருத்துக்களிற்கு உமது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

அதைவிடுத்து அவர் பிரதேசவாதத்தை எடுக்கிறார் இவர் பிரதேச வாதத்தை எடுக்கிறார் என் பொய்களை அவிழ்த்து விட வேண்டாம்.

Edited by மின்னல்

அதாவது டேவிட் பூபாலப்பிள்ளை அவர்கள் அப்படி ஒரு கருத்தைச் சொல்லவில்லை என்பதே அதன் பொருள். எனவே தேவையற்றவிதத்தில் அவர் மீது சேறு பூசவேண்டாம்.

இதில் மறுப்பு பட்டும் படாமல் தான் வெளியிடப்பட்டிருக்கின்றது ஆணித்தரமான தெளிவான மறுப்பாகத் தெரியவில்லை தவிர இது குறித்து அவர்களது மின்னஞ்சல் பிரிவில் இது அனுப்படவில்லை தவிர இதுகுறித்து எழுதிய எல்லா ஊடகங்களிலும் அறிந்தவர்களும் இது அவரது தனிப்பட்ட கருத்து என்று தான் எழுதியிருக்கின்றார்கள் அவர் கருத்தே சொல்லவில்லை என்று சொல்லவில்லை

இப்படியான வேறு உறுப்பினர் மீது ஒரு சர்ச்சை வந்த போது அது அவரது தனிப்பட்ட கருத்து என்று இதே டேவிட் பூபாலப்பிள்ளை சொல்லி சமாளித்தவர்

அது பகிரங்கமாக ஊடகங்களில் வராதபடியால் பலருக்கும் தெரியாது

டேவிட் பூபாலப்பிள்ளை அப்படி ஒரு செய்தியையே சொல்லவில்லை என்று நிரூபித்தால் நான் பகிரங்கமாகவே மன்னிப்புக்கேட்கின்றேன்

மக்களின் குழப்பத்திற்கு உரியவிதத்தில் அறிக்கையும் வெளியிடப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர் அண்ணைக்கும் சபேசன் அண்ணைக்கும் இடையில எவளவு காலமா கடுப்பு?

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் மக்களை.கூட்டமைப்பின் காவடி தூக்கிகலின் இன்னொரு பொய்ப் பிரச்சாராம்.இவர்களுக்கு பொய்களைப் புனைவதைத் தவிர வேறு வழியில்லை.இல்லாத மக்கள் ஆதரவை இருபதகாக் காட்ட படாத பாடு படுகிறார்கள்.உதயன் சுடரொளி பதிரிகைகளும் அவர்கள் நடாத்தும் தமிழ்வின் போன்ற இணையத் தளங்களுமே இவ்வாறான பொய்களைப் பரப்பி கீழ்த் தரமான அரசியலை நாடாதுகிறார்கள்.

கனடியத் தமிழர் பேரவை எங்கே போகின்றது?

கனடியத் தமிழர்களின் ஒருமித்த குரலாக ஓர் அமைப்பு இயங்க வேண்டும் என்ற உன்னத உயரிய நோக்குடன் கனடியத் தமிழர் பேரவையை (Canadian Tamil Congress) சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது.

இதனது உருவாக்கத்திலும், கடந்தகால - நிகழ்கால செயற்பாடுகளிலும், பல்துறைசார் மக்களினது பங்களிப்பு நிரம்பவே உண்டு. கனடியத் தமிழ் மக்களைச் சீரிய பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு நிறைந்த கனடியத் தமிழர் பேரவை, அதற்கான பாதையிலிருந்து வழிநழுவிச் செல்கின்றதோ என்னும் அச்சமும் கவலையும் மக்களிடையே இன்று ஏற்படத் தொடங்கியுள்ளது.

இத்தகைய நிலைக்கு மகுடம் வைப்பது போன்று, மேற்படி பேரவை சார்பில் கடந்த சில நாட்களில் வெளியான இரண்டு அறிக்கைகள் அமைந்துள்ளன. இலங்கையில் தற்போது நடைபெறும் தேர்தல் தொடர்பாக, பேரவையின் பேச்சானரெனக் கூறப்படும் டேவிட் பூபாலப்பிள்ளை என்பவர் தெரிவித்த கருத்துக்கு, அதே பேரவையின் தலைவரான பேராசிரியர் சிறிரஞ்சன் விடுத்த மறுப்பையே இங்கு நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் தேசம் சிங்களவர்களின் தேசம் என்ற அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டு வருவதாக டேவிட் பூபாலப்பிள்ளை கூறியதாக முதலில் வெளியான செய்திகள் தெரிவித்தன. இச்செய்தி அநேகமாக சகல ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. இப்படியான ஒரு கருத்தை வெளியிடுவது கனடியத் தமிழர் பேரவைக்கு அவசியமற்றது என்ற கருத்தே பலரிடமும் காணப்பட்டது.

அதனைப் புரிந்துகொண்ட வகையில், பேரவைத் தலைவர் சிறிரஞ்சனின் மறுப்பறிக்கை வெளியானது நிலைமையைத் தணியவைத்துள்ளது. "டேவிட் பூபாலப்பிள்ளையின் அறிக்கைக்கும் கனடியத் தமிழர் பேரவைக்கும் சம்பந்தமில்லை. தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாட்டைத் நாம் எடுக்கவில்லை" எனவும் தலைவர் சிறிரஞ்சன் ஆணித்தரமாகக் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

ஓர் அமைப்பானது பேச்சாளர் எனப்படுபவர், அந்த அமைப்பின் குரலாக இருக்கவேண்டும். அமைப்பின் குரல் என்பது, அதனது நிர்வாகத்தின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். நிர்வாகத்தின் நிலைப்பாடானது அதனது நிர்வாகக் குழுவின் முடிவின் பாற்பட்டதாக இருக்கவேண்டும். ஆனால், கனடியத் தமிழர் பேரவைப் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளையின் கருத்தானது, அவரது இ~;டப்படியான ஒன்றாகவும் ஒரு தலைப்பட்சமானதாகவும் அமைந்திருந்ததை இப்போது கனடிய மக்களால் உணர முடிகின்றது.

வட்டுக்கோட்டைத் தீர்மான தேர்தலின் போதும் இப்படியான கருத்தையே பேரவை தெரிவித்து, பலரது எதிர்ப்பையும் சம்பாதிக்க நேர்ந்தது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இனிமேலாவது, தங்களின் பேச்சாளர் தம்போக்கில் அறிக்கைகளை விடாமல் பார்த்துக்கொள்வது கனடியத் தமிழர் பேரவையின் தலையாய கடமை. தவறினால், பேரவை எந்தப் பாதையில் போகிறது என்று அதனை உருவாக்கிய மக்களே கேட்க நேரிடும்.

ஆசிரிய தலைப்பு: உலகத்தமிழர் கனடா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடிய தமிழ் காங்கிரசும் துரோகி. :lol::lol:

கனடிய தமிழ் காங்கிரசும் துரோகி. :lol::lol:

இங்கை யாராவது யாருக்காவது எதிர்ப்பு தெரிவிச்சால் அவை எல்லாம் துரோகிகளோ...??

இப்பிடியே வளர்ந்திட்டியள்...

Edited by தயா

இங்கை யாராவது யாருக்காவது எதிர்ப்பு தெரிவிச்சால் அவை எல்லாம் துரோகிகளோ...??

இப்பிடியே வளர்ந்திட்டியள்...

Mathivathanang Icon

Posted Yesterday, 02:50 PM

கனடிய தமிழ் காங்கிரசும் துரோகி.

மதிவதனா உங்கள் பதவியை ராஜினாமா செய்தால் தானே யாருக்காவது கொடுக்கலாம் <_< ஆனால் இன்னும் நீங்கள் அதைச் செய்யவில்லையே :lol: இதில் நீங்கள் தானே யாழில் தனிக்காட்டு ராஜா

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிவதனா உங்கள் பதவியை ராஜினாமா செய்தால் தானே யாருக்காவது கொடுக்கலாம் <_< ஆனால் இன்னும் நீங்கள் அதைச் செய்யவில்லையே :lol: இதில் நீங்கள் தானே யாழில் தனிக்காட்டு ராஜா

அண்ணே பட்டம் பதவி குடுத்தவர்கள் மீளப்பெறுவதாக இல்லை , குடுத்த பதவிக்கு ஏதுவாக என்னால் முடிந்ததை செய்யக்கூட விடுகிறீர்களில்லை. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.