Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நெற்றை வழிப்படுத்த வாரீர்!

Featured Replies

கடந்த வருடம் மேமாதம் தாயகத்தில் நிகழ்தேறிய பேரழிவின் பின்னர் புலத்துவாழ் தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்புக்கள் புதியதோர் பரிணாமத்தில் பிரவேசிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவ்வாறான மாற்றமானது தமிழீழ தேசிய தலைமையின் விருப்புகளுக்கு அமைய - அவரின் வழிகாட்டலுக்கு அமையவே - நிகழ்த்தப்பட்டது. அதன்படி புலத்து வாழ் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் ஒரு படிமுறையாக, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் பல நாடுகளில் நடந்து நிறைவுபெற்று, இன்னும் சில நாடுகளில் நடைபெறவும் இருக்கின்றன. இந்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற புதிய முயற்சியை கண்டுகொண்ட சிங்கள பேரினவாத அரச இயந்திரம் அதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளதொடங்கிவிட்டது.

இவ்வாறான சிறிலங்கா அரசின் முயற்சிக்கு துணைசெய்வது போன்று, முன்னர் தமிழ் தேசியத்திற்காக பயணித்த ஊடகங்களும் கைகோர்த்திருப்பதுதான் வேதனையானது. இன்று தமிழ்நெற் இணையதளத்தில் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்றில், நாடு கடந்த தமிழீ அரசு தொடர்பான பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து - நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான - தமது நிலைப்பாடு என்ன என்பதை அந்த இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசின் மீதும் அதனை நெறிப்படுத்துகின்ற திரு. உருத்திரகுமார் அவர்கள் மீதும் மதிப்பு வைத்து புலத்துவாழ் தமிழ்மக்கள் முழு வீச்சுடனும் எழுச்சியுடனும் இன்று தமது அரசியல் - ஜனநாயக கட்டமைப்பை கட்டியெழுப்புவதில் முனைப்பு பெற்றிருக்கின்ற வேளையில் -

தமிழ்நெற் போன்ற இணையங்கள் இவ்வாறு சேறு பூசும் செயற்பாடுகளில் இறங்கியிருப்பது ஏன் என்ற வினாவுக்கு பதில்தேடும் காலகட்டம் நெருங்கியுள்ளதாகவே கருதுகின்றோம்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற எண்ணக்கருவானது தாயகத்திலும் புலத்திலும் இழந்துபோன உரிமைக்குரலை நிலைநிறுத்துவதற்கான கடைசி ஆயுதமாகவே தற்போதைய நிலையில் இருக்கின்றது.

இதன் உருவாக்கமானது தனியே திரு.உருத்திரகுமாரன் அவர்களால் மட்டும் பிரசவிக்கப்பட்டதல்ல. அதன் படிநிலை உருவாக்கமானது 1985 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே முன்னிறுத்தப்பட்டதாகும். அவ்வேளையில் தாயகத்தில் நடைமுறையிலிருந்த நிழல் அரசும் அதனை நிலைநிறுத்திய போராட்டமும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேவையை அவசியமற்றதாக்கியிருந்தது.

ஆனால், இன்றைய நிலையில் அது அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.நாடு கடந்த தமிழீழ அரசு என்பது காலத்தின் தேவையாக வளர்ந்திருக்கிறது.

அதன் தேவை என்ன?

அதன் உருவாக்கம் எவ்வாறானது?

அதன் கட்டமைப்பு எத்தகையது?

அதற்குரிய ஆலோசனைகள் என்ன?

அது பயணிக்கவுள்ள பாதை எது?

அதில் பங்கெடுக்கப்போகின்றவர்கள் யாவர்?

- போன்ற பல்வேறுபட்ட விடயங்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளுடனும் திரு. உருத்திரகுமார் அவர்களும் அவருடன் கூடிய தேசிய பற்றாளர்களும் பேசி இந்த நாடு கடந்த தமிழிழ அரசு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு விதையிட்டு வளர்த்தெடுக்கப்படவேண்டிய மரத்தை முளையிலேயே கருவறுக்க துணைபோகும் தமிழ்நெற் போன்ற இணையங்களும் அதன் ஊடாக தமிழினத்தை தவறான பாதையில் இட்டுச்செல்ல துடிப்பவர்களையும் தட்டிக்கேட்க வேண்டிய நிலையில் ஈழத்தமிழினம் இன்றுள்ளது.

உள்ளக கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு கண்டு அதன் ஊடாக நாடு கடந்த தமிழீழ அரசை பலமாக்குவதை விடுத்து, எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போல சிறிய சிறிய விடயங்களை சுட்டிக்காட்டி பிழைபிடிக்க முற்படுவது ஒட்டுமொத்த தமிழினத்துக்கே சாபக்கேடானது.

ஒன்றுபட்ட புலம்பெயர்வாழ் தமிழ்மக்களின் ஒருமைப்பாட்டினால் பிரசவிக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு கட்டமைப்பு மீது அவ்வப்போது சேறடிக்கும் பிரசாரங்களை இந்த இணையங்கள் மேற்கொண்டுவந்தபோதும், அவர்கள் திருத்திக்கொள்வார்கள் என பல மாதங்களாக எதிர்பார்த்து அதற்கான விமர்சனங்களை முன்வைக்காது இருந்தோம்.

ஆனால் அவ்வாறு மௌனமாக நாங்கள் இருப்பதனை தமக்குரிய சம்மதமாகவும் - தங்களது நடவடிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் - கருதி இன்னும் பல கேடுகளை விளைவிக்கும் அபாயம் தற்போது எழுந்துள்ளதை தெளிவாக அவதானிக்ககூடியதாகவுள்ளது.

தாயகவிடுதலை போராட்டத்தில் சிந்தப்பட்ட குருதியும் அதற்கான அர்ப்பணிப்புகளும் விலைமதிக்கமுடியாதவை. அதனை விலைபேச முற்படும் சக்திகளை வழிப்படுத்தாமல் மௌனமாகவிருப்பது தமிழீழ தேசிய தலைமையின் வழிகாட்டலில் இதுவரைகாலமும் செயற்பட்டதற்கே அர்த்தமற்றதாக்கிவிடும்.

எனவே அனைத்து தமிழர்களும் - குறிப்பாக புலத்துவாழ் ஈழத்தமிழர்கள் - உடனடியாக செயற்படவேண்டியது அத்தியாவசியமானது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு, சேறு பூச முற்படும் தமிழ்நெற் போன்ற இணையதளங்களையும், அதன் ஊடாக ஊடக சண்டித்தனம் செய்யும் ”எமது தேசப்பற்றாளர்களையும்” கண்டித்து வழிப்படுத்த முன்வரவேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றே ஆரம்பிப்போம்.

http://www.eelanationnews.com/diaspora/119-common/1965-please-join-to-correct-tamilnet.html

அவர்கள் சொல்லும் விடயத்தில் இருக்கும் பிணக்குகளை தீர்க்க வளியை பாக்கிறதை விட்டு போட்டு உங்கட வளிக்கு அவர்கள் வரவேணும் எண்டு அடம் பிடிக்காதேங்கோ ... அவ நம்பிக்கை என்பது தமிழர்களிடம் விதை பட்டு இருக்கிறது... அதுக்கு பல விடயங்கள் காரணமாக இருக்கிறது... அவைகள் தீர்க்க பட வேண்டுமே அண்றி யாரும் ஒதுக்க படவோ அல்லது வளிமாற்றவோ எந்த தேவையும் கிடையாது...

தமிழ் நெற்றும் தமிழர் உரிமைக்காக பாடுபடும் தரப்பே..

Edited by தயா

இங்கே அழுத்திப்பார்க்கவும்

நாடுகடந்த அரசாங்கத்தேர்தல் சிலதொகுதிகளில் ஒருசில கள்ள ஓட்டும் சில முறைகேடுகள் இடம்பெற்றால் நிறுத்திவைக்கப்பட்டுவதுதான் முறையான தேர்தலாகும் விசாரணைகள் நடைபெறுகின்றது. அத்துமீறல் இடம்பெற்றால் மறுதேர்தல் இடம்பெறும் அப்போது தேர்தலில் நின்றவர்கள் தவறிழைக்கவில்லையென்றால் மறுபடியும் தெரிவாகும் வாய்ப்புவரும்.

;தற்கிடையில் முந்திக்கொண்டு குறைகூறுவதன் நோக்கம் என்ன?

சரியாக புரிந்து கொண்டவர்களுக்கு இவர்கள் நோக்கம் புரிந்துவிடும்

இவைகளுக்கு இடையிலை புகுந்து கொண்டு நிண்று சிலர் குழம்பின குட்டையின் மீன் பிடிக்க நினப்பதும் தெளிவாக தெரிகிறது...

பிரச்சினை பட்டவர்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவினால் நல்லது... ஆனால் பாத்து கொண்டு இருப்பவனையும் கேணையன் ஆக்கும் முயற்சியை ஆதரிக்க முடியாது... நீங்கள் என்ன செய்ய முயலுகிறீர்கள் யாருக்கு அது சாதகமானது என்பது எங்களுக்கு புரிகிறது... எங்களுக்கு புரிகிறது என்பது உங்களுக்கும் தெரிந்து இருக்க வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் வெட்கக்கேடு.. சொல்லாவிட்டால் மானக்கேடு :)

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவான விடயம் ஒன்றைச் சொல்லுகின்றேன். இவ்வாறு நீங்கள் பகை உணர்ச்சி, பழி வாங்குதல், காட்டிக் கொடுத்தல் போன்ற செயல்களை மாறி மாறிச் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் மக்கள் தாயகப் போராட்டம் அல்லது, அது தொடர்பான நம்பிக்கையை அழந்து போவார்கள் என்பது யதார்த்தம். உங்களுக்குள்ளேயே ஒரு நிரந்தமான தீர்வுக்கு வர முடியாத உங்களால் எவ்வாறு தமிழீழ மக்களுக்கான தீர்வினைப் பெற்றுத் தரமுடியும்??

இங்கே உருத்திரகுமார் பெயர் பெற்றிருவாரோ, அல்லது எதிர் அமைப்பு பெயர் பெற்றிடுமோ என்ற இருதரப்புப் போட்டி, பொறாமை, வஞ்சகப் புத்தி, காரணமாகவும், சிறிலங்கா அரசின் கைக்கூலிகளாகப் புலத்தில் உள்ள அமைப்புக்களைச் சிதைத்துக் கொள்வதற்குற்குமாக ஒன்றுமில்லாத விடயத்துக்காக அடிபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்?

நாடுகடந்த அரசாகட்டும், வட்டுக் கோட்டைத் தீர்மானமாகட்டும், அதில் சாதித்ததை விட, இதில் அடிபட்டதற்காகத் தான் உங்களின் கால நேரங்கள் விரயமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. உருப்படியாக எதுவுமே செய்ய நீங்கள் செய்யத் தயாராக இல்லாதபோது, அதில் இருந்து உங்களின் பின்னால் மக்களின் அணிவகுப்பு நிச்சயம் இல்லாது போகும்.

உங்களுக்குத் தமிழீழம் பற்றிய இலக்கு இருந்தால், வௌ;வேறு பாதையைத் தெரிவு செய்தாலும், அதனூடகாகப் பயணித்து இலக்கு அடைய முயன்றிருப்பீர்கள். ஆனால் இதில் யார் மக்களிடம் பெயர் பெற வேண்டும் என்று நடந்து கொள்வதால் தான் உங்களால் உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை.

முன்னாள் போராளிகள், இப்போது முகாமிலுள்ள மக்கள், புலத்தில் உள்ள இளையோர்கள் கறுப்பினத்தவர் போல அடையாளம் இழந்து, மொழியிழந்து போகின்ற சூழல் என்று எதையுமே பற்றிக் கவலையில்லை. சிறிலங்கா அரசு செயற்படுத்தக் கஸ்டமான விடயத்தை நீங்கள் இலகுவாகச் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

தலைவசர் பற்றிய கேபியின் அறிவிப்பினால், தொடர்கின்ற உருத்திரகுமார் மீதான சந்தேகம் போன்றவற்றை நேரே சந்தித்துத் தீர்த்துக் கொள்ள முயலுங்கள். அதைத் தவிர்த்து இப்படியே முரண்டு பட்டு என்ன புடுங்கப் போகின்றீர்கள்??

இன்றைக்கு 3ம் திகதியில் இருந்து 19ம் திகதி வரை கனடா மாணவர் சமுதாயம் அமெரிக்கத் தூதரகம் முன்னால் நினைவுகூரல் செயற்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அதில் கலந்து கொண்டிருக்கின்ற மக்கள்....!? சொல்லப் போனால் அது பற்றி கவனிப்பை ஊடகங்களும் கைவிட்டு விட்டன.

ஒரு வகையில் சொல்லப் போனால் தமிழகத்தில் பல குரல்களைப் புலத்தில் உள்ள புடுங்கிகள் முடங்கச் செய்தார்கள். திருமாவளவன், ஜெகத் கெஸ்பார் போன்ற பலர் குரல்கள் அடங்கிப் போயின. உங்களுக்காகக் கதைப்பதை விட, பேசாமல் இருந்தால் பிரச்சனையைச் சந்திக்கத் தேவை ஏற்பாடது என்று அவர்களும் முடிவெடுத்தார்கள். கதைப்பதுமில்லை.

எதுவுமே இல்லாத, கொன்றால் கூட யாரும் கேட்க வக்கில்லாத சமுதாயமாக நாம் இருக்கின்றபோது, நமக்கு அனைத்து மக்களின் ஆதரவும் தேவைப்படும் என்பதையும் மறந்து பகையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள். ஒரு காலத்தில் தமிழனாக, தலைவனின் இனத்தில் பிறந்த ஒருத்தனாகச் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று... இது ஒவ்வொரு தமிழனுக்கும் உங்களைப் பார்க்கின்ற போது எழுகின்ற எண்ணமாகவே இருக்க முடியும்.

என்றைக்குமே ஒற்றுமைப்படாட வார்த்தைகளை விதைப்பதன் ஊடாக எஅழிந்து போகின்ற தமிழனர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் துரோகிகளின் பட்டியலில் உங்களின் பெயரும் நிச்சயம் இடம் பெறும் என்பதையும் மறந்து விடாரதீர்கள்.

-------------

திரு மோகனுக்கு,

யாழ்களத்தை தங்களின் சுயநல தேவைகளுக்கும்இ மக்களைப் பற்றிக் கி'ஞ்சித்தும் கவலைப்படாத வஞ்சப் போரினை வார்த்தைகளில் நடத்துவதற்கும்இ அனுமதி மறுக்க முடியாதா? தயவு செய்து உருப்படியற்ற விடயங்களை யாழ்களத்தில் கதைப்பதற்கு அனுமதிக்கரீர்கள். கருத்துச் சுதறந்திரம் என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் காறி உமிழும் செயற்பாடு யாழ்களத்தில் ஆரோக்கியமானதல்ல... தலை வெடிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன்..! பொது எதிரி யாரென்று தெரிந்தும், புதுப்புது எதிரிகளை உருவாக்கிக்கொண்டும் நமக்குள்ளேயே மோதிக்கொண்டும் இருக்கும் முதுகெலும்பற்ற விலங்குகள் நாம்..! :)

உங்களது மேற்காட்டிய கட்டுரையும் வேண்டுகோளும் நகைப்புக் கிடமாக இருக்கிறது.தமிழ் நெற் ஒரு ஊடகம்.அதனூடாக சில கருதுக்கள் விமரிசனங்கள் வைக்கப்படுகின்றன.அவற்றில் பிழை இருப்பின் அவை பற்றி நீங்களும் ஊடகங்களினூடாக விவாதிக்கலாம்.மக்கள் முன் வைக்கப்படும் இரு அணிகளினதும் கருதுக்களை ஆராய்ந்து மக்கள் தீமானிக்கட்டும்.அதை விட்டு விட்டு ஆளாளுக்கு அவன் துரோகி இவன் தூரோகி என்று நீங்கள் கூவிக் கொண்டிருந்தால் இனி புலத்தில் உள்ளவர்களொன்றில் மகிந்தவே பரவாயில்லை என்று செல்லத் தான் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது.இவ்வளவு வயது போயும் உங்களுக்கு இடையிலானா நீயா நான பெரியவன் என்னும் சில்லறை போட்டிகள் முடியாவிட்டால் மக்கள் உங்கள் மீது காறித் துப்பி விட்டு வேறு வேலை பார்ப்பார்கள்.

தேர்தலை நாடாதியவர்களுக்கு அதற்கான ஆளணியோ செயற்திறனோ இருக்கவில்லை.கடைசியில் எந்தச் செயற்பாட்டாளர்களை அவர்கள் ஒதுக்க நினைத்தர்களோ அவர்களின் தயவிலையே தேர்த்தலை நடாத்த வேண்டி இருந்தது.அதே போல்மக்களும் தம் மத்தியில் ஏற்கனவே அறிமுகமான செயற்பாட்டளர்களையே தேர்ந்தும் எடுத்தனர். நீங்கள் மக்கள் மதியில் வேலை செய்யாமால் உங்கள் யார் நம்புவார்கள்?பூட்டிய அறைக்குள் நீங்கள் எடுக்கும் முடிவுகள் எங்கனம் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் என்னும் உதரவாத்ம் இருக்கிறது.உங்கள் குடும்பி பிடி சண்டைகளை நிப்பாட்டி விட்டு ஒன்று பட்டு அனைவரையும் அரவணைத்து இயங்குங்கள் இல்லாவிட்டால் உங்களுக்குளையே சண்டை போட்டுக் கொண்டு கானாமல் போய் விடுங்கள்.

"துரோகிகளின் பட்டியலில் உங்களின் பெயரும் இடம் பெறும் என்பதை மற்ந்துவிடாதீர்க்ள்"

தமிழனுக்கு இது ஒன்றுதான் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவனின் கருத்தை வரவேற்கின்றேன்.

அத்துடன் நிர்வாகமும் இங்கே ஒருசில கருத்துகளை அனுமதிப்பதினால்.....

உண்மையான பலவிடயங்கள் திரிபுபடுத்தப்பட்டு மாற்றுவழிகளில் வெளிநாட்டில் வாழும் தமிழினமக்களை சென்றடைகின்றது.

பொதுவான விடயம் ஒன்றைச் சொல்லுகின்றேன். இவ்வாறு நீங்கள் பகை உணர்ச்சி, பழி வாங்குதல், காட்டிக் கொடுத்தல் போன்ற செயல்களை மாறி மாறிச் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் மக்கள் தாயகப் போராட்டம் அல்லது, அது தொடர்பான நம்பிக்கையை அழந்து போவார்கள் என்பது யதார்த்தம். உங்களுக்குள்ளேயே ஒரு நிரந்தமான தீர்வுக்கு வர முடியாத உங்களால் எவ்வாறு தமிழீழ மக்களுக்கான தீர்வினைப் பெற்றுத் தரமுடியும்??

இங்கே உருத்திரகுமார் பெயர் பெற்றிருவாரோ, அல்லது எதிர் அமைப்பு பெயர் பெற்றிடுமோ என்ற இருதரப்புப் போட்டி, பொறாமை, வஞ்சகப் புத்தி, காரணமாகவும், சிறிலங்கா அரசின் கைக்கூலிகளாகப் புலத்தில் உள்ள அமைப்புக்களைச் சிதைத்துக் கொள்வதற்குற்குமாக ஒன்றுமில்லாத விடயத்துக்காக அடிபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்?

நாடுகடந்த அரசாகட்டும், வட்டுக் கோட்டைத் தீர்மானமாகட்டும், அதில் சாதித்ததை விட, இதில் அடிபட்டதற்காகத் தான் உங்களின் கால நேரங்கள் விரயமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. உருப்படியாக எதுவுமே செய்ய நீங்கள் செய்யத் தயாராக இல்லாதபோது, அதில் இருந்து உங்களின் பின்னால் மக்களின் அணிவகுப்பு நிச்சயம் இல்லாது போகும்.

உங்களுக்குத் தமிழீழம் பற்றிய இலக்கு இருந்தால், வௌ;வேறு பாதையைத் தெரிவு செய்தாலும், அதனூடகாகப் பயணித்து இலக்கு அடைய முயன்றிருப்பீர்கள். ஆனால் இதில் யார் மக்களிடம் பெயர் பெற வேண்டும் என்று நடந்து கொள்வதால் தான் உங்களால் உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை.

முன்னாள் போராளிகள், இப்போது முகாமிலுள்ள மக்கள், புலத்தில் உள்ள இளையோர்கள் கறுப்பினத்தவர் போல அடையாளம் இழந்து, மொழியிழந்து போகின்ற சூழல் என்று எதையுமே பற்றிக் கவலையில்லை. சிறிலங்கா அரசு செயற்படுத்தக் கஸ்டமான விடயத்தை நீங்கள் இலகுவாகச் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

தலைவசர் பற்றிய கேபியின் அறிவிப்பினால், தொடர்கின்ற உருத்திரகுமார் மீதான சந்தேகம் போன்றவற்றை நேரே சந்தித்துத் தீர்த்துக் கொள்ள முயலுங்கள். அதைத் தவிர்த்து இப்படியே முரண்டு பட்டு என்ன புடுங்கப் போகின்றீர்கள்??

இன்றைக்கு 3ம் திகதியில் இருந்து 19ம் திகதி வரை கனடா மாணவர் சமுதாயம் அமெரிக்கத் தூதரகம் முன்னால் நினைவுகூரல் செயற்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அதில் கலந்து கொண்டிருக்கின்ற மக்கள்....!? சொல்லப் போனால் அது பற்றி கவனிப்பை ஊடகங்களும் கைவிட்டு விட்டன.

ஒரு வகையில் சொல்லப் போனால் தமிழகத்தில் பல குரல்களைப் புலத்தில் உள்ள புடுங்கிகள் முடங்கச் செய்தார்கள். திருமாவளவன், ஜெகத் கெஸ்பார் போன்ற பலர் குரல்கள் அடங்கிப் போயின. உங்களுக்காகக் கதைப்பதை விட, பேசாமல் இருந்தால் பிரச்சனையைச் சந்திக்கத் தேவை ஏற்பாடது என்று அவர்களும் முடிவெடுத்தார்கள். கதைப்பதுமில்லை.

எதுவுமே இல்லாத, கொன்றால் கூட யாரும் கேட்க வக்கில்லாத சமுதாயமாக நாம் இருக்கின்றபோது, நமக்கு அனைத்து மக்களின் ஆதரவும் தேவைப்படும் என்பதையும் மறந்து பகையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள். ஒரு காலத்தில் தமிழனாக, தலைவனின் இனத்தில் பிறந்த ஒருத்தனாகச் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று... இது ஒவ்வொரு தமிழனுக்கும் உங்களைப் பார்க்கின்ற போது எழுகின்ற எண்ணமாகவே இருக்க முடியும்.

என்றைக்குமே ஒற்றுமைப்படாட வார்த்தைகளை விதைப்பதன் ஊடாக எஅழிந்து போகின்ற தமிழனர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் துரோகிகளின் பட்டியலில் உங்களின் பெயரும் நிச்சயம் இடம் பெறும் என்பதையும் மறந்து விடாரதீர்கள்.

-------------

திரு மோகனுக்கு,

யாழ்களத்தை தங்களின் சுயநல தேவைகளுக்கும்இ மக்களைப் பற்றிக் கி'ஞ்சித்தும் கவலைப்படாத வஞ்சப் போரினை வார்த்தைகளில் நடத்துவதற்கும்இ அனுமதி மறுக்க முடியாதா? தயவு செய்து உருப்படியற்ற விடயங்களை யாழ்களத்தில் கதைப்பதற்கு அனுமதிக்கரீர்கள். கருத்துச் சுதறந்திரம் என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் காறி உமிழும் செயற்பாடு யாழ்களத்தில் ஆரோக்கியமானதல்ல... தலை வெடிக்கின்றது.

துயவனின் கருத்தை வரவேற்கிறேன். மோகன் அண்ணா கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுப்பாரா? அல்லது கண்டுகொள்ளாமல் விடுவாரா??

திரு மோகனுக்கு,

யாழ்களத்தை தங்களின் சுயநல தேவைகளுக்கும்இ மக்களைப் பற்றிக் கி'ஞ்சித்தும் கவலைப்படாத வஞ்சப் போரினை வார்த்தைகளில் நடத்துவதற்கும்இ அனுமதி மறுக்க முடியாதா? தயவு செய்து உருப்படியற்ற விடயங்களை யாழ்களத்தில் கதைப்பதற்கு அனுமதிக்கரீர்கள். கருத்துச் சுதறந்திரம் என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் காறி உமிழும் செயற்பாடு யாழ்களத்தில் ஆரோக்கியமானதல்ல... தலை வெடிக்கின்றது.

மேலே சொல்லப்பட்ட அனைத்து விடயங்களிலும் எனக்கு உடன் பாடு உண்டு ஆனால் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

யாழ்களம் இந்தக்கால கட்டங்களில் சிறப்பான எதிர்வினையாற்ற வேண்டும் என்பதே இப்போதைய தேவை... அப்படியான எதிர்வினை ஆற்றுவதுக்கு எங்களுக்கு சார்பான கருத்துக்கள் மட்டும் வந்தால் போதாது... யாழில் எழுதப்படும் எதிர்வினை கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களை அனேகமாக போய் சேருகிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.... அது அவர்களை சரியான வளிக்கு இட்டுச்செல்லும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு...

முன் ஒரு காலத்தில் யாழில் ஒருவிடயத்தை பற்றி முழுமையாக கருத்தாட முடியாத அளவுக்கு தமிழர்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து இருக்கலாம்... அந்தக்காலங்களில் சிங்களவருக்கு ஆதரவான ( கொடுப்பனவுகளுட கூடியவர்களின் ) தமிழர்களின் தொகையும் அதிகம்... தமிழர் விடுதலைக்கு போராடியவர்களுக்கு எதிராகவும் வைக்கப்படும் கருத்துக்கள் அதிகமாகவும், சார்பானவர்களின் கருத்துக்கள் குறைவாகவும் இருக்கும் பட்ச்சத்தில் யாழ்களம் தமிழர் விரோத ஊடகம் போல காட்ச்சி அளிக்கும் நிலை இருந்த காலங்களில் மோகன் அண்ணா அவற்றுக்கு தடையை போட்டு இருந்து இருக்கலாம்...

ஆனால் இண்று அப்படியான நிலை இல்லை... எல்லாருக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டு்ம்... அவர்களின் கருத்துக்கள் விசமத்தனமாக இருந்தால் அதை உறுதியாக எதிர்க்கும் ஆற்றலும் துணிவு எல்லாருக்கும் இருக்கிறது... அப்படியான விசமத்தனங்கள் இங்கு நுளையாது தடுக்க வேண்டிய பொறுப்பு கருத்தாடும் எல்லாருக்கும் உண்டு...

என் வேண்டுகோள் என்ன எண்றால் உங்களுக்கு பிழையானது எண்று ஒண்று தெரிந்தால் அதை யாழில் எழுதுங்கள்... குறிப்பாக விசமத்தனம் செய்து குழப்பம் உண்டாக்குபவர்களை எதிர்க்க வேண்டும்... எங்களின் அமைதியும், அதில் இருந்து விலகி போதலும் அவர்களுக்கு ஊக்கமாக அமையக்கூடாது...

இங்கு பலர் அடிக்கடி யாழை பார்த்து சொல்லும் செய்தி என்னவாக இருக்கிறது எண்றால் வேலை வெட்டி இல்லாதவர்கள் கணனிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு வெட்டி நியாயம் பேசுகிறார்கள் என்பது தான்... இது அவர்களின் இயலாமையால் தோல்வி மனப்பான்மையில் வரும் வார்த்தைகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்...

நீங்கள் மேடை போட்டு இதேவிடயத்தை சொல்வதானால் ஒரேதடவையில் ஒரு 1000 பேருக்கு சொல்வதாக வைத்துக்கொள்ளுங்கள்... அதில் எத்தினை பேர் அதை சரியாக புரிந்து கொள்வார்களோ தெரியாது.. பலர் கேட்டு சில நொடிகளில் மறந்தும் விடுவார்கள்... ஆனால் எழுத்துக்கள் என்பது வாசிக்கும் அனைவருக்கும் புரிந்து கொள்ள வைக்க கூடியது... ஆர்வம் உள்ளவரே தேடிப்படிக்கிறார்கள்... அப்படி நீங்கள் ஒரு 10 பேருக்கு புரிய வைத்தாலே அவர்கள் இன்னும் ஒரு பத்துப்பேருக்கு வாய்வளியே சொல்ல முடியும், புரிய வைக்க முடியும்...

அது போல யாழ் இதுவரை எதிர்வினையாற்றியது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை... அதே போல எதிர்காலத்திலும் ஆற்றவேண்டும்... அதுக்கு உங்களது பங்களிப்பும் வேண்டும்... எல்லோரும் செயற்படுவதுக்கு விசமிகளின் விசமத்தனமும் இங்கு வேண்டு...

எனது வேண்டு கோள் ஒண்றுதான் விசமத்தனங்கள் ஆதரிக்க படவோ விலக்க படவோ கூடாது ( பதில் அளிக்கப்பட்டு ) தோற்கடிக்க பட வேண்டும்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயா அண்ணாவுக்கு எனது சார்பாக ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கும் ஒரு பச்சை தயாவுக்கம் ஒரு பச்சை.

எல்லோருக்கும் ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைமையின் மௌனம் ஒரு பெரும் இடைவெளியைத் தோற்றுவித்துள்ள சூழலில் புலத்திலே நடைபெறும் சம்பவங்கள் தமிழன் தனக்குதானேயான குழியை வெட்டுகின்றானோ என்ற ஐயமே ஏற்பட்டுள்ளது. அதிலே நாம் பொது எதிரிக்கெதிராகப் போராடப் புறப்பட்டோம் என்பவர்கள் பதவிகளுக்காக காழ்ப்புணர்வுடன் தமக்குள் மோதுவதானது தமிழினத்துக்குப் பயன்படுமா? என்பதை ஒரு கணம் சிந்தை கொள்ள வேண்டியது அவசியமானது. தேசியவிடுதலைக்காகத் தமது பிள்ளைகளை, தமது கணவனை, தனது மனைவியை, தமது தாயையோ, தந்தையையோ மண்ணிலே விதையாகச் செய்வதறியாது நிற்கும் இவர்களை ஒரு கணம் எண்ணிப் பார்ப்பீர்களாயின், இந்தத் தேவையற்ற சேறுபூசல்களும், கழுத்தறுப்புகளும் அவசியமற்றது என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

இதுவரை காலமும் தேசியம் பேசியவர்கள் ஒரு வருடத்தில் இந்த தேசியத்தினது இழப்பிலிருந்து அவலத்திலிருந்து எதைக் கற்றுக் கொண்டீர்கள். ஒரு முறை தமிழினம் ஒன்றும் செய்ய வேண்டாம். ஆற அமர யோசித்தாலே பல கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும். தெளிவும் பிறந்துவிடும். புலத்திலே பெரும்பாலான தமிழர்கள் தமது தகைமையைக்கிசைவாகத் தம்மால் முடிந்தவரை தேசியத்தலைவனை நம்பி பல்வேறு விடயங்களைச் செய்தவர்களே. இதில் எமக்குள் எம்மை வெட்டுவதும் ஒட்டுவதும் எம்மைப் பலப்படுத்தமா? பலவீனப்படுத்தமா? ஆனால் ஒற்றுமையைக் குலைப்போர், தேசியத்தைச் சிதைப்போர், சிறிலங்காத் தூதரகங்களோடு நிற்போர், விலைபோவோர் குறித்துத் தமிழினம் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பக்கத்திற்கு வரும் போது எனது பச்சையும் சிவப்பும் தீர்ந்து விட்டது நான் என்ன செய்வேன், என்னால் குத்தாமல் இருக்க முடியவில்லையே :o:(:D:wub:

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளைக் கருத்துகளால் அல்லவா வெல்ல வேண்டும். அதைவிடுத்து....

சிவப்பினைக் குத்திய அன்பரே,

நான் மீண்டும் கேட்கிறேன் இந்த ஒருவருடத்தில் தமிழர்களாகிய நாம் கற்றுக்கொண்டது என்ன? எவ்வளவு தூரம் நாம் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தியுள்ளோம். அதனைக் கூறிவிட்டுக் குத்துவீர்களா?

stempelsolo.gif

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைமையின் மௌனம் ஒரு பெரும் இடைவெளியைத் தோற்றுவித்துள்ள சூழலில் புலத்திலே நடைபெறும் சம்பவங்கள் தமிழன் தனக்குதானேயான குழியை வெட்டுகின்றானோ என்ற ஐயமே ஏற்பட்டுள்ளது. அதிலே நாம் பொது எதிரிக்கெதிராகப் போராடப் புறப்பட்டோம் என்பவர்கள் பதவிகளுக்காக காழ்ப்புணர்வுடன் தமக்குள் மோதுவதானது தமிழினத்துக்குப் பயன்படுமா?

இதுவரை காலமும் தேசியம் பேசியவர்கள் ஒரு வருடத்தில் இந்த தேசியத்தினது இழப்பிலிருந்து அவலத்திலிருந்து எதைக் கற்றுக் கொண்டீர்கள். புலத்திலே பெரும்பாலான தமிழர்கள் தமது தகைமையைக்கிசைவாகத் தம்மால் முடிந்தவரை தேசியத்தலைவனை நம்பி பல்வேறு விடயங்களைச் செய்தவர்களே. இதில் எமக்குள் எம்மை வெட்டுவதும் ஒட்டுவதும் எம்மைப் பலப்படுத்தமா? பலவீனப்படுத்தமா? ஆனால் ஒற்றுமையைக் குலைப்போர், தேசியத்தைச் சிதைப்போர், சிறிலங்காத் தூதரகங்களோடு நிற்போர், விலைபோவோர் குறித்துத் தமிழினம் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இன்றுதான் இதைப்பார்த்தேன்

நன்றி ஐயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.