Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான 53 ஜோடிகளுக்கு சமயாசாரப்படி திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான 53 ஜோடிகளுக்கு சமயாசாரப்படி திருமணம் ‐ படங்கள் இணைப்பு‐ பார்க்க: http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=25697&cat=1

13 June 10 07:28 am (BST)

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான 53 ஜோடிகளுக்கு சமயாசாரப்படி வவுனியா பம்பைமடுவில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீமுத்து ஜெயந்திநாதக் குருக்கள் இந்து மணமக்களுக்கு இந்து சமயப்படி திருமணத்தை நடத்தி வைத்தார். மன்னார் மறைமாவட்டத்தின் குடும்ப ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்திரு அன்ரனி ஜெபமாலை அடிகளார் கத்தோலிக்க மணமக்களுக்கு கத்தோலிக்க சமய முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தார்.

புது மணமக்களாகிய இந்த 53 ஜோடிகளும் காதலர்கள் என்பதும், சிலர் நீண்ட காலமாகவே ஒருவரை ஒருவர் நேசித்து வந்ததாகவும் மணமக்களில் பலரும் தெரிவித்தனர். இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 53 ஜோடிகளுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நேற்று வவுனியா பம்பைமடுவில் சமய சம்பிரதாயப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை சரணடைந்த விடுதலைப்புலிகளின் மறுவாழ்வுக்குப் பொறுப்பான புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

புதுமணத் தம்பதிகளுக்கான பட்டாடைகள், திருமணத்திற்கான உணவு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய ஒருமைப்பாட்டு சம்மேளனம் கொழும்பில் உள்ள தமிழ் வர்த்தகர்களின் உதவியோடு, செய்திருந்ததாகவும், இந்து மாமன்றம் திருமணத்திற்குத் தேவையான தாலியை வழங்கியுள்ளதாகவும் அதன் தலைவர் தெய்வநாயகம் ஈஸ்வரன் தெரிவித்தார்.

இந்த திருமண வைபவத்தில் மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்; டியு குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஹிந்தி நடிகர் ஒபரோய் விவேக், அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ், புனர்வாழ்வு அமைச்சின் விடுதலைப் புலி உறுப்பினர்களின் மறுவாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, வன்னி ஆயுதப்படைகளின் கட்டளைத் தளபதி மற்றும் இராணுவ உயரதிகாரிகள், மணமக்களின் பெற்றார்கள், உறவினர்கள், பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் உள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார்கள். இந்து மாமன்றத்தின் முக்கியஸ்தர்கள், தேசிய ஒருமைப்பாட்டு சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள், மற்றும் வவுனியாவில் உள்ள சமய நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டார்கள்.

மணமக்கள் அனைவரும் பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள அமைக்கப்பட்டுள்ள சமாதான கிராமத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். இவர்கள் காலக்கிரமத்தில் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

புனர்வாழ்வு முகாம்களில் பயற்சி பெற்று வரும் முன்னாள் 53 விடுதலைப்புலி ஜோடிகளுக்கு நாளை தினம் சட்டரீதியாக திருமணம் :

12 June 10 01:38 am (BST)

புனர்வாழ்வு முகாம்களில் தற்போது பயற்சி பெற்று வரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் மற்றும் ஆண் போராளிகளின் 53 இளம் ஜோடிகள் நாளை தினம் சட்டரீதியாக திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இந்த திருமண வைபவம் வவுனியா பம்பைமடு புனர்வாழ்சு முகாமில் நடைபெறவுள்ளது.

திருமணம் செய்து வைக்கப்படவுள்ள இந்த இளம் ஜோடிகள் அவர்களுகென அமைக்கப்பட்டுள்ள விசேட கிராம் ஒன்றில் குடியேற்றப்படவுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளர். ஒரே தினத்தில் ஒரே இடத்தில் முன்னாள் புலி உறுப்பினர்கள் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல் முறையாகும் எனவும் பிரிகேடியர் கூறியுள்ளார்.

- உலக தமிழ்ச் செய்திகள் (ஜிரிஎன்)

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளில் திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட 53 போராளி இணைகளும் நீண்டகாலம் சகல செல்வங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழ உளம் நிறைந்து வாழ்த்துகின்றேன்!

இதே செய்தியை இன்று அதிகாலை ஏ.எப்.பி நியூஸில் கண்டேன். யாழில இணைத்துவிடுவோம் என்று பார்த்தன். பிறகு நம்மட ஆக்கள் ஒவ்வொன்று சொல்லுவீனம். ஒருத்தர் சொல்வார்.. இது சிறீ லங்கா அரசிண்ட பிரச்சாரம் வெளி உலகுக்கு செய்யிறதெல்லாம் செய்துபோட்டு இப்ப படம் காட்டுறாங்கள் எண்டு. இன்னொருத்தர் சொல்வார் இவையள் உண்மையில முன்னாள் புலிகள்தானோ என்று. இதனால ஏன் வம்பு என்று இந்தச்செய்தியை இஞ்ச இணைக்க இல்லை.

முன்னாள் புலிகளாய் இருந்தால் என்ன… இன்னாள் புலிகளாய் இருந்தால் என்ன.. யாரோ அப்பாவிகளாய் இருந்தால் என்ன.. எல்லோரும் நம்மைப்போன்ற மனுசர் தானே. தம்பதியினருக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்~! உன்னை நீ எப்படி விரும்புகிறாயோ அவ்வாறே மற்றவனையும் நீ விரும்பு என்று ஓர் முதுமொழி இருக்கிது. சாம்பல் மேட்டில் இருந்து ஆரம்பிக்கும் இவர்கள் வாழ்க்கை ஒளிமயமாய் பிரகாசிக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

இவர்களின் வாழ்வு சிறக்க வாழ்த்துவதோடு, ****

  • கருத்துக்கள உறவுகள்

இல்வாழ்க்கையில் இணைந்த அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்

வாத்தியார்

..........................

  • கருத்துக்கள உறவுகள்

.

புதிய வாழ்வில் அடி எடுத்து வைத்திருக்கும், அனைத்து தம்பதியருக்கும் நல் வாழ்த்துக்கள்.

.

இந்த திருமண வைபவத்தில் மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்; டியு குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,

ஹிந்தி நடிகர் ஒபரோய் விவேக்
, அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ், புனர்வாழ்வு அமைச்சின் விடுதலைப் புலி உறுப்பினர்களின் மறுவாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர்

திருமணதம்பதியினருக்கு வாழ்த்துக்கள் இத்திருமணத்திற்கு கே.பியையும் அழைத்திருந்தால் மிகவும் நல்லாக இருந்திருக்கும்.

அப்ப இனி நாங்கள் இந்த சமன்பாடு பாவிக்கூடாது என்று சொல்லுறீயள்

வட இந்தியன் அவன் வால்கள்=பிலாபிலாப்லிலாஅ.................................

... என்னத்துக்கு விசில் அடிப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போட்டுது ....

இந்தக்கூத்தை சிங்களம் அரங்கேற்றியது உலகத்தின் கண் துடைப்பிற்கு! அங்கு கைது செய்யப்பட்ட/சரனடைந்த போராளிகள் கொல்லப்படுகிறார்கள், என்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினரின் சந்தங்களுக்கு இப்படியான கூத்தை பெரிதளவில நடத்தி ... நேற்றைய தினம் சர்வதேச ஊடகங்களில் சிங்களம் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது!!

இப்படியான பல கூட்டு திருமண கூத்துக்கள் எங்கள் வாழ்வில் நடந்தவைகளல்ல, இது எமது கலாச்சாரமுமில்லை! ... அங்கு தமிழ்நாட்டு அரசியல்கூத்தாடிகள் இடையிடை இப்படியான கூத்துக்களை நடத்துவது தமது விளம்பரங்களுக்காக!! ... அதை பின்பற்றி .... இம்முன்னால் போராளிகளை கேவலப்படுத்திருக்கிறான் சிங்களவன்!

... குத்தி, அங்கொன்று/இங்கொன்றாக வைத்திருப்பதை விட்டுட்டு .... எங்கேயாவது ஒண்டை பேமணன்ராக அமத்தி இப்படி ஒரு பட பிடிப்பை நடத்தியிக்கலாமே! ..

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் எவராக இருப்பினும்

அவர்களது முகத்தில் தெரிவது உண்மைச்சிரிப்பெனில்....

அவர்கள் அனைவருக்கும் எனது திருமணவாழ்த்துக்கள்

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.

அப்ப இனி நாங்கள் இந்த சமன்பாடு பாவிக்கூடாது என்று சொல்லுறீயள்

வட இந்தியன் அவன் வால்கள்=பிலாபிலாப்லிலாஅ.................................

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

திருமண பந்தத்தில் இணைந்தவர்களை வாழ்த்துகிறோம்.

சிங்கள பயங்கரவாதிகள், தனிமைச் சிறையில், சுதந்திரமில்லாத சூழலில், உற்றார், உறவினர், நண்பர்களின்றி இந்த திருமணங்களை நடத்தி தமது பௌத்த சிங்கள அடக்குமுறைகளை மீண்டும் தமிழ் மக்கள் மீது பிரயோகிப்பது மனிதாபிமானம் உள்ள அனைவராலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது ஆகும்.

வட இந்திய பயங்கரவாதிகள் போன்ற ஒரு சில மனிதாபிமானமற்ற பேர்வழிகள் இதை நகைச்சுவையாகவும், பெரிய சாதனையாகவும் காட்ட முயல்வதையும், மனிதாபிமானம் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

திருமணத் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.

அவர்கள் விரைவில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

... என்னத்துக்கு விசில் அடிப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போட்டுது ....

இந்தக்கூத்தை சிங்களம் அரங்கேற்றியது உலகத்தின் கண் துடைப்பிற்கு! அங்கு கைது செய்யப்பட்ட/சரனடைந்த போராளிகள் கொல்லப்படுகிறார்கள், என்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினரின் சந்தங்களுக்கு இப்படியான கூத்தை பெரிதளவில நடத்தி ... நேற்றைய தினம் சர்வதேச ஊடகங்களில் சிங்களம் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது!!

இப்படியான பல கூட்டு திருமண கூத்துக்கள் எங்கள் வாழ்வில் நடந்தவைகளல்ல, இது எமது கலாச்சாரமுமில்லை! ... அங்கு தமிழ்நாட்டு அரசியல்கூத்தாடிகள் இடையிடை இப்படியான கூத்துக்களை நடத்துவது தமது விளம்பரங்களுக்காக!! ... அதை பின்பற்றி .... இம்முன்னால் போராளிகளை கேவலப்படுத்திருக்கிறான் சிங்களவன்!

... குத்தி, அங்கொன்று/இங்கொன்றாக வைத்திருப்பதை விட்டுட்டு .... எங்கேயாவது ஒண்டை பேமணன்ராக அமத்தி இப்படி ஒரு பட பிடிப்பை நடத்தியிக்கலாமே! ..

நெல்லையின் கருத்து யோசிக்க வைக்குது..! :lol:

புது மணத்தம்பதிகள் வாழ்க!

அவர்களுக்கு வாழ்வு கொடுத்த சிங்கள அரசு வாழ்க!

அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்த சிங்கள அரசு வாழ்க!

வன்னியில் ஓர் மூலையில் நடந்த கல்யாணத்தை சர்வதேசம் வரை கொண்டு வந்த சிங்களவன் வாழ்க!

கல்யாணத்துக்கு தலைமை தாங்கிய நாமல் வாழ்க!

அங்கு வந்த ஒபரோய் வாழ்க!

மணமக்களின் காவலன் டக்லஸ் வாழ்க!

மணமக்களை பிரபாகரனிடமிருந்து காப்பாற்றிய ராஜபக்க்ஷ வாழ்க!

...

இவற்றையும் சேர்த்து எழுதி/வாசித்து அடிப்போம் ... விசில்களை! :lol:

இஞ்ச ஒருத்தரும் விசில் அடிக்க இல்லையே. மனமார்ந்த வாழ்த்தைதானே தெரிவிச்சு இருந்தார்கள். இதேன் உங்களுக்கு கடுக்கிது? :lol:

இந்த திருமணவிழா இதயசுத்தியுடன் செய்யபட்டதாக கருதுவோமாயின்,

- காணாமல் போன கணவன்மாரை தேடும் இளம்விதவைகளுக்கு இந்த அரசாங்கம் என்ன பதில் சொன்னது?.

- கணவன்மாரை போராளி என்று சிறையில் அடைத்து, மனைவி பிள்ளைகளை நடுத்தெருவில் வைத்திருக்கும் இந்த அரசாங்கத்தின் கபட நாடகத்துக்கு என்ன பதில்?

- கட்டிய கணவன் முன்னே மனைவியை கற்பழித்து மன்னாரில் கொலை செய்த வழக்கை மூடியது யார்.?

போராளிகள் திருமணம் முடிக்க கூடாது என்பது என் கருத்து அல்ல. அதை விளம்பரமாக்க கூடாது, அதை வைத்து அரசியல் ஆதாயம் தேட கூடாது. என்பது தான் என் கருத்து.

ஓமோம். அதனாலதான் தமிழ்த்தேசிய ஊடகங்கள் (?) இந்த செய்தியை இருட்டடிப்பு செய்து இருக்கின்றன. அதாவது எதிரி என்றால் எப்பவும் எதிரிமாதிரி நடந்துகொள்ளவேணும். இப்புடி ஆக்களை ஜோடி சேர்க்கற விளையாட்டுக்கு எல்லாம் போவப்படாது.

இதயசுத்தி...? இது முதலில நாங்கள் எல்லாரும் எங்கள் ஒவ்வொருவரையும் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி.

மச்சான் உண்மையை எழுதினால் யாழும் தூக்கிவிடும் யாக்கிரதை

இதேன் உங்களுக்கு கடுக்கிது? :lol:

wedding1306d.jpg

wedding_6.jpg

Unprecedented in Contemporary History: Wedding Bells Ring for 106 Ex–LTTE Combatants at Pampemadu

[updated :: 2010-06-13 14:42:33 Hours || Home]

NEVER before have Sri Lankans had the opportunity to witness a colourful mega-wedding ceremony of this magnitude, nor have we ever thought of this miraculous transformation to be a reality so soon within a spell of several months, since the late megalomaniac terror-monster, under the guise of the so-called “liberation” never wanted his northern youngsters or LTTE combatants and conscripts to wed without his diktats.

Under the new spirit of freedom, liberty and understanding granted to them by the Army, ‘Love Conquered Everything’ as the saying ‘Omnia Vincit Amor’ says after their surrender during the final humanitarian operations that brought about hope for life

The Army, which scuttled his vicious and divisive machinations, exactly 13 months ago, finally bringing permanent peace to the war-ravaged island, has once again proved that they are highly skilled and professional not only at warfare but also for post-war challenges in the multi-ethnic society of Sri Lanka.

Pampemadu Rehabilitation and Protective Accommodation Centre, Vavuniya wearing festive garbs on Sunday (13) morning was set to experience the mega-wedding of 53 brides and 53 bridegrooms, the biggest ever marriage ceremony, unprecedented in the contemporary history of Sri Lanka. Those former LTTE ‘brides’ and ‘grooms’ were in fact ‘fiancés and fiancées’ when they were hand in glove with the world’s most ruthless terrorist outfit at one point of time. Unfortunately, their leader’s diktats barred them even from maintaining secret romantic relations during fighting and had no whatsoever permission even to suggest anything on the lines of an intended marriage. So they psychologically suffered but physically held the guns and explosives for their own survival. All the weddings were registered between 7.30-8.02 a.m. on Sunday (13) as advised by Hindu and Catholic religious leaders.

Time has swiftly changed for the better. Bureau of the Commissioner General for Rehabilitation evaluating humanitarian needs of those 41 Tamil Hindu couples, 11 Tamil Roman Catholic couples and 1 Tamil Christian couple undergoing rehabilitation in 13 island-wide rehabilitation centres after giving up LTTE violence, organized their long dreamt reunion as ‘husband’ and ‘wife’ in accordance with Hindu and Catholic traditions.

The mega -wedding arrangements, initiated and organized by Brigadier Sudantha Ranasinghe, Commissioner General for Rehabilitation, received an overwhelming support from the Hindu Congress, Council for National Unity and Oneness organization as the wedding itself needed valuable gold ornaments and elegantly decorated clothes for both men and women to suit Hindu traditions.

The process for matrimonial preparations got underway as planned and the Bureau of Commissioner General for Rehabilitation got down red and white saris, kafnis (long shirts extending to the knees) with pijamos (leggings) or dhoti or turbans from India, along with henna or mehndi (hand and feet decorating stuff) for those couples, scheduled to tie nuptial knots on Sunday (13). The traditional golden necklace and Pottu, though excessively expensive posed no problem to the organizers.

More significantly, 53 new houses, close to the Pampemadu Rehabilitation Centre were erected in the separately blocked out ‘Sama Gama’ (Peace Village), so that the newly-wedded couples could complete their rehabilitation programme after their marriages.

Hindu and Catholic wedding rites and rituals were performed by fifteen Hindu priests and one Catholic priest on the occasion under a specially designed canopy, known as ‘Mandap’ in front of which was the sacred fire, typical of Hindu marriages. As ‘Mangalashtak’ and Hindu vedic poems reverberated, priests continued their invocations during the auspicious hour as the bride and groom went on feeding each other sweets for four times. Each couple received Rs 10,000 in cash as the wedding gift from the Oneness organization before new couples posed for their lifetime wedding photos, offered free of charge.

The atmosphere, filled with music and melodies, provided by Army band and rhythmic dances of the Army troupe, drew a huge gathering of relatives of those couples, visitors, invitees. The Army and the Sai Foundation jointly provided all sweet meats and the lunch for attendees as the formalities came to an end.

The mammoth arrangement was graced by Minister for Rehabilitation and Prison Reforms D E W Gunasekara as Chief Guest. Popular Indian Movie Star Vivek Oberoi in the company of Namal Rajapaksha MP was associated with the ceremony. Ministers Duglas Devananda, Rishard Baddudeen, Dilan Perera, Wijitha Wijeyamuni Soysa, Major General G A Chandrasiri (Retired) Governor for Northern Province, Major General Daya Rathnayaka, Army Chief of Staff who was formerly the Commissioner General for Rehabilitation, Major General Kamal Gunaratne, Commander Security Forces Wanni, Brigadier Sudantha Ranasinghe, Commissioner General for Rehabilitation, Mrs P S M Charles District Secretary for Vavuniya, State officials, close relatives, civilians and many other invitees witnessed this rare spectacle, perhaps once in lifetime. :lol:

Edited by Nellaiyan

கடுக்காமல் ... இனிக்கிறவருக்கு!

மே 18இற்குப்பின்னம் சரணடைந்த/கைது செய்யப்பட்ட போராளிகளை இன்றுவரை எந்த மனித நேய அமைப்புகளையோ அல்லது மனித உரிமைகள் அமைப்புகளை பார்வையிட சிங்களம் அனுமதிக்கவில்லை! இன்றும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போராளிகள் படுகொலை செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன. .... இவைகள் தொடர்ச்சியாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் தொடர் கேள்விக்கு சிங்களம் முகம் கொடுக்க முடியாத நிலையில், இப்படியான கூத்துக்களை நடத்தி சரிக்கட்டப் பார்க்கிறது! இதற்கு உம்மை போன்ற இச்செய்தியால் கடுக்காதவர்கள் ... விசிலென்ன, இடுப்பில் கட்டியிருக்கிறதையும் அவிட்டு விட்டுட்டு குரக்காட்டுவீர்கள்! :lol:

உங்களுக்கு இடுப்பில கட்டி இருக்கிறதை அவிழ்க்கிறது தவிர வேற ஒன்றும் தெரியாதோ? :lol:

53 சோடிகளின் உயிர்பாதுகாப்பு ஓரளவு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றளவில் நிம்மதியடையவேண்டியதுதான் மற்றபடி இந்த நிகழ்வு போர்க்குற்ற விசாரணைகளை முகம்கொடுக்கும் திட்டமிடலுக்கு உட்பட்டே நடாத்தப்படுகின்றது என்பது வெளிப்படையாக புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான். இந்தியாவில் இலவசத்திருமணங்கள் நடத்தி கட்சி அரசியல் செய்வதுபோல் குடிசைகளை எரித்துவிட்டு உதவி செய்வதுபோல் ஆயிரக்கணக்கான போராளிகளை கொன்றுவிட்டு 53 சோடித் திருமணத்தால் கண்துடைப்பு நடக்கின்றது. இவ்வாறான ஆலோசனையை இந்தியா வழங்கியிருக்கலாம். எம்மைப் பொறுத்தவரை எரியிற வீட்டில் புடுங்குவது வரை லாபம் என்ற நிலைப்பாட்டில் தொன்றுதொட்டு வாழ்பவர்கள் ஆதலால் 50 ஆயிரம் பொதுமக்கள் போராளிகள் கொல்லப்பட்டதை விட இந்த 53 சோடிகள் வாழவைக்கப்படுகின்றனர் என்பது ஆறுதலான விசயம். கோத்தபாய வாழ்க ! கூட இருக்கும் டக்ளஸ் அம்மான் வாழ்க !

இவர்களுக்கு வேறு வழி இருக்குமேயானால் இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்க வாய்ப்புகள் குறைவு. பாவம் சிங்கள அரசின் பிடியில் அவர்கள்... மீறி என்ன தான் செய்ய இயலும்? இன்னும் வதை முகாம்களில் தானே அடைத்து வைத்து இருக்கிறார்கள்? :lol:

பிபிசி

கார்டியன்

http://www.youtube.com/watch?v=XUQQw4Hg3hA

இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளோ, பத்திரிகையாளர்களோ இவர்கள் இருந்த இருக்கிற வதை முகாம்களுக்கு போகும் அனுமதியை இழந்துள்ள நிலையில் இந்த நிகழ்வை மட்டும் உலகறியச் செய்வதேன்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.