Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி உட்பட 21 பேரை விசேட விமானத்தில் அரசாங்கம் வடக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளது ‐ விஜிதஹேரத் குற்றச்சாட்டு

Featured Replies

2ஆம் இணைப்பு‐கே.பி உட்பட 21 பேரை விசேட விமானத்தில் அரசாங்கம் வடக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளது ‐ விஜிதஹேரத் குற்றச்சாட்டு‐

22 June 10 11:31 am (BST)

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரும் அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கேபி மற்றும் 20 வெளிநாட்டு தமிழ் பிரதிநிதிகள் அடங்களாக 21 பேர் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

இவர்களை அரசாங்கமே கொழும்பிலிருந்து அழைத்துச் சென்று பத்திரமாக கொழும்பிற்கு திருப்பி அழைத்து வந்துள்ளதாகவும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றம் சாட்டுகின்றார்.

அரச விமானம் ஊடாக அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் பலாலி முகாமிற்குச் சென்றதுடன் கிளிநொச்சிக்கும் சென்று கிளிநொச்சியையும் பார்வையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இராணுவத் தளபதி வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கும் இந்த அரசு பயங்கரவாதத்தைத் தோற்றுவித்து அதில் முக்கிய பங்காற்றி தலைமை பொறுப்பினைக் கொண்ட கேபியை மிக சொகுசு ஆடம்பர மாளிகையில் வைத்து உபசரிப்பதாகவும் விஜித்த ஹேரத் விசனம் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கேபி உட்பட ஏனையவர்கள் அரசாங்கத்தின் முழுமையான அணுசரணையுடனும் பாதுகாப்புடனும் வடக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்சொன்னவாறு கூறினார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=26074&cat=1

கருணாவில் இருந்து டக்லஸ் வரை தங்கள் உள்வீட்டு பிரச்சனைக்காக சிங்கள அரசுடன் சேர்ந்தவர்கள் தானே.

தமிழீழம் வேண்டாம் , புலிகளிடம் இருந்து எங்களை காத்தருள்க என்று சிங்கள பேரினவாதிகளின் கை பொம்மை ஆகியவர் பட்டியல் இன்னமும் முடியவில்லை.

ஆனால் இம்முறை அவர்கள் நேரடியாக சந்திக்க போவது மக்களை!. புலிகள் என்றும் எதிரிகள் என்றும் நாங்கள் பார்கபோவது இல்லை ,

தெளிவாக இருப்போம் ! அறிவோடு நடப்போம் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்..... விடுதலைப்புலிகளின் அறிக்கையை வெளியிட துணிவும் விடுதலை உணர்வும் ஏற்புடைத்தன்மையும் இல்லாலா வன்மம் கொண்ட தமிழ் தேசியத்தின் அழிவுக்கு காரணமான காஸ்...வின் ஊடகங்கள், சிறீலங்கா அரசின் பரப்புரை ஊடகங்களான தே. அ..வு போன்றவற்றின் சகோதர ஊடகமான சண்டே ஒப்சோவரில், மகிந்தாவின் ஆலோசனைக்குழுவினதும் பசில் இராஜபட்டாவின் அந்தரங்க செயலருமான ஆனந் பாலகிட்னர் தயாரித்து வெளியிட்ட செய்தியை முக்கியத்துவம் கொடுத்து விமர்சித்திருப்பது வேதனையானது தான். இதை பிரசுரித்த ஊடகங்களிடம் சில கேள்விகள் கே.பி துரோகிஇ .......? அது ஒருபுறம் இருக்கட்டும். சண்டே ஒப்சேவர் செய்தியை போட்டு மக்களை விடுதலைப்புலிகளின் மீது வெறுப்படைய, சந்தேகம் கொள்ள வைப்தன் மூலம் நீங்கள் சாதிக்கப் போவது என்ன? இதே சிங்கள ஊடகம் அண்மையில் தலைவரின் மகள், மகன் ஆகியோரின் பெயரில் கனடாவில் சொத்துக்கள் இருப்பதாக சொன்ன செய்தியை ஏன் இதே வன்ம ஊடகங்கள் வெளியிடவில்லை? இச் செய்தியையும் தயாரித்தவர் இதே ஆனந் பாலகிட்னர் விடுதலைப்புலிகளின் கா.. அணியின் நிதிப்பிரிவு தலைவர் எனக்கருதப்படும் இராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுசென்று இதே ஊடகத்துக்கு அளித்த செவ்வியில்... போர்களத்திலிருந்து தலைவரை காப்பாற்றுவதற்கு கேபி சர்வதேச விமான கம்பனியுடன் செய்துகொண்ட ஒப்பத்தந்தின் அடிப்படையில் கேபிக்கு விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினரால் மூன்று மில்லியன் டொலர் காசு கொடுக்கும் படி சொல்லப்பட்ட கட்டளையை கா... தடுத்தார் அவர் அவ்வாறு தடுத்தமையினால் தான் தலைவரை காப்பாற்ற முடியாமல் போனது. என்று இராஜன் சொன்ன செய்தியை ஏன் இந்த ஊடகங்கள் வெளியிடவில்லை? இப்படி பல உண்மைகளும் கேள்விகளும் எம்மிடம் உண்டு..... என்செய்வோம் தமிழினம் இப்படி ஏன் ஆனது விதியே விதியே தமிழ் சாதியை என்செய்யப்போ கிறாய்.... சுவிசிலிருந்து என்று குஃம் என்று நீங்கள் கு.த்தின் மீது உங்களுக்கு என்ன பிரச்சனை உண்மையில் குருபரா? உம்மை இயக்குவது யார்? கருத்தை ஏற்பவராக இருந்தால் எமது இக்கருத்தையும் இணையத்தில் பதியவும் அது சரி குருபரா? இலங்கையின் உளவுதுறையின் நாடகத்தை நீரும் அறியாதவரா? அல்லது அறிந்தும் நீரும் பண்றியுடன் சேர்ந்து ....... பிளீஸ்

http://www.globaltam...nid=26074&cat=1

ஒற்றுமை இன்மையால் உலகில் அழிய பிறந்த இனமே தமிழினம் என நினைக்க தோன்றுகின்றது.

உண்மையில் இந்தக் கும்பலை மக்களைக் கொண்டு தான் விரட்ட வேண்டும். இவர்கள் வசதியாக காவல்துறையில் எல்லாம் இரகசியமாக புலிகளால் தங்களுக்கு ஆபத்து என்று முறைப்பாடு செய்து வைத்தக் கொண்டு நன்றாக நாடகமாடுகின்றார்கள் , பாரிசல் இருக்கும் ஒரு இல்லம் தான் இவர்களின் கூடாரம். இந்தக் கூடாரத்துக்குள் இருந்துதான் யாரை துரோகியாக்கலாம் யாருக்கு குழிபறிக்கலாம் என்று திட்டம் தீட்டப்படுகிறது இந்தக் கூட்டம் ஆபத்தானது மட்டுமல்லாமல் எஞ்சியுள்ள தமிழ் சந்தியின் எதிர்காலத்துக்கே குழிபறிக்க கூடியது.

இதிலே இவர்களை பற்றி « பொறுப்பானவர்கள் » இனியாவது முடிவெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
<_< உண்மையன புலியான கே.பீ அண்ணாவைத் துரோகியாக்கிப் பார்க்கத் துடிக்கும் இந்தக் காஸ்ட்ரோ குழுவை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன். ஏனென்றால், இண்டைக்கு அரசாங்கமும் புலிகளும் சேந்துதான் செயல்ப்படுறாங்கள். இந்த ராஜதந்திரம் தெரியாமல் உவையள் அந்த மனுசனைத் துரோகியெண்டுறதும், காட்டிக்குடுத்தவன் என்டுரதும். கேட்கவே கவலையாக் கிடக்கு. மனுசன் 3 மில்லியன் காசுக்குத் தலைவரை தூக்கித்தாரன் எண்டு அப்பவே கேட்டது, உந்த நெடியவந்தான் எல்லாத்தையும் குழப்பிப் போட்டான். தலைவர் இருந்திருந்தால் கே.பீ அண்ணா மாதிரி எவ்வளவு சந்தோசமா மகிந்த அங்கிளோட சரிக்குச் சரியா இருந்து சேர்ந்து வேலை செய்திருக்கலாம். நாங்களும் சந்தோசமாப் பார்த்துக்கொண்டு இருந்திருப்பம். எல்லாம் உந்தத் துலைஞ்சு போவான் நெடியவானால பாலய்ப் போச்சுதே !!!என்ர ஐயோ....இதை ஆரிட்டச் சொல்லி அழ?? எப்பத்தான் இந்தச் சனம் கண்திறந்து நாங்கள் சொல்லுரதை எல்லாம் கேட்டு கே.பீ அண்ணாவையும் மகிந்த அங்கிளையும் ஏற்றுக்கொள்ளப்போகுதுகளோ தெரியேல்லையே??!!!!

:huh::wub::lol:

ம்ம்ம். தலைவற்றை தாயை இப்ப விட்டுட்டாங்கள், நல்லது என்று பார்த்தால் ... இப்ப கேபி .... புராணம்!!!!! .... சிங்களவன் நல்லாச்செய்கிறான்!!! ... ஆனால் யூதனுக்கு அடுத்த மூளை உள்ள இனமாக நினைக்கும் ஈழத்தமிழினமோ ... கேபியை கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறது!!!!! ... மே18 இற்குப்பின்னம், அதற்கு முன்னம் செய்த போராட்டங்கள் எல்லாம் முடிபுக்கு வந்து விட்டது, புலத்தில், அதற்கு மாற்றீடாக இந்த கேபி போராட்டம்!!! அவன் சிங்களவன் கேபியை கொண்டே எங்களை உடைக்கிறான்!!! இங்கு நாங்களோ....

ஒரு கோஸ்டி ... அடித்த கதிரையையும், காசையும் அமத்தி வைத்திருக்க கேபியின் ஓலம்!!

மறு கோஸ்டி ... நாமோ நமோ மாதாவை பாடச்சொல்லும் ஏவலாளிகளின் ஏவலின் கேபி புராணம்!!

... இடையில் புலம்பெயர் தமிழர்கள் ... அழிவில் ஈழத்தில் இருக்கும் தமிழினம்!!!

இனி தயவுசெய்து கேபி ... எனும் பூணாவை விடுங்கோடாப்பா!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்
<_< நெல்லைய்யனின்ர கோரிக்கையை நான் வழிமொழியிறன். ஆமேன் !

ஒற்றுமை இன்மையால் உலகில் அழிய பிறந்த இனமே தமிழினம் என நினைக்க தோன்றுகின்றது.

ஊஊஊஊஊஊஊ.... உங்கை பார் .... ஆடு நனைகிறதாம் ... <_<

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி கேபி என்பது யார்? அவர் எப்படியிருப்பார்? அவர் இப்போது எங்கிருக்கிறார்? தமிழீழ விடுதலைப் பலிகள் இயக்கத்தின் முள்ளிவாய்கால் நிகழ்வின்போது அவர் எங்க இருந்தார்? அவருக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கம் இடையிலான தற்போதைய பங்களிப்பென்ன? அண்மைக்காலங்களில் அவர் எங்காவது நேரடியாகப் பிரசன்னமாகினாரா? அதைவிட அவருடன் சேர்ந்து அரசாங்கத்துடன் கழுவாக இயங்கப்போகிறார்கள் என அறியத்தந்தவர்களில் யாராவது தமமைப் பகிரங்கப்படுத்தினார்களா? யாராவது சொல்லுங்கோ எனக்கொரு உண்மைதெரிஞ்சாகணும். இதுவெல்லாம் தெரிஞசும் நான் ஒரு ..............யும் புடுங்கிவிடப்போவதில்லை

அப்படி அரசிடம் கே பி இருந்தால் ஏன் அவரை வெளியே பகிரங்கபடுத்தவில்லை? வன்னியில் இருந்த வைத்தியரை கொண்டு ஒரு ஊடகவியலாளர் மகாநாடு நடத்தியது போன்று ஏன் கேபியை வைத்து நடத்தவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

கே பி இன் செயற்பாடுகள் சிறைகளில் வாடும் எமது போராளிகளை விடுவிக்க உதவுமாக இருந்தால் நான் நிச்சயம் அவற்றை வரவேற்பேன். வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருப்பதிலும்.. போராளிகளை மீட்பது குறித்து கள யதார்த்ததிற்கு ஏற்ப சாதுரியமாக செயற்படுவது அவசியமாகும்...! அதை கேபி செய்வாராக இருந்தால் அதை வரவேற்கவே வேண்டும்.

கே.பி யுடன் தொடர்பில் இருக்கும் பெரியவர்கள், இந்தக்கதையைத்தான், இப்போது சொல்லிவருகின்றனர்.

Edited by aathirai

நாம் இன்னும் தேசியக் கனவிலும் அதற்கு யாரோ ஒருவன் தலமை தாங்குவான் என்ற நப்பாசையிலும் இருக்கின்றோம். அவைகள் எல்லாம் கலைந்துவிட்டது. முள்ளிவாய்க்காலுக்கு முன்னதாகவே அரசாங்கத்துடன் கைகோர்த்த புலிகள் ஏராளம். இன்றைக்கு எந்த ஊடகத்தை யார் நாடத்துகின்றார்கள் நடுவப்பணியகம் வெளிக்களப் புலநாய்வுத்துறை தலமைச்செயலகம் புலிகளின் குரல் என்ற பெயர்களில் எல்லாம் யார் இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது. நிச்சயமாக இவைகள் அனைத்தும் இலங்கை இந்தியப் புலநாய்வுத்துறைகளின் கட்டுப்பாடுகளுக்குள் வந்து நீண்டநாட்களாகிவிட்டது. முள்ளவாய்க்கால் முடிவுக்கு முன்னர் அரசாங்கத்துடன் கைகோர்த்தது புலிகளின் புலநாய்வுத்துறையே. கே பி அரசுடனோ இல்லையோ இந்தியாவிடமோ இல்லை கொன்றுவிட்டார்களோ என்பது யாருக்கும் தெரியாது ஆனால் கே பி என்ற பெயரை வைத்து பல்வேறு வேலைகளை இலங்கை அரசு செய்துகொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இவைகள் எல்லாவற்றின் கவனத்தில் இருந்தும் நாம் வெளியேற வேண்டும். தேசியத்தின் மீது நாம் காட்டும் ஆர்வம் எம்மை அழித்தெழிக்கும். மிச்சமில்லாது துடைக்கும் ஏனெனில் நாம் கனவுகாணும் தேசியத்துக்கு தற்போது தலமை வகிப்பதும் முற்படுவதும் இந்திய இலங்கைப் புலநாய்வுத்துறைகளே. சிங்களத்துடன் ஐக்கியமாகி எம்மை தக்கவைக்க முயல்வதொன்றே ஒரே வழி. காலநகர்வில் மாற்றங்கள் வரும் சந்தர்ப்பங்கள் வரும் அதுவரை எம்மை சிங்களத்துக்குள்ளாக தக்கவைப்பதே இன்றய போராட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

கே பி இன் செயற்பாடுகள் சிறைகளில் வாடும் எமது போராளிகளை விடுவிக்க உதவுமாக இருந்தால் நான் நிச்சயம் அவற்றை வரவேற்பேன். வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருப்பதிலும்.. போராளிகளை மீட்பது குறித்து கள யதார்த்ததிற்கு ஏற்ப சாதுரியமாக செயற்படுவது அவசியமாகும்...! அதை கேபி செய்வாராக இருந்தால் அதை வரவேற்கவே வேண்டும்.

நான் எழுதுறது சரியா,தப்பா தெரியவில்லை எனது மனதில் பட்டதை எழுதுகிறேன்...கே பி அரசோடு சேர்ந்திருந்து அவ்வளவு மக்கள் முள்ளி வாய்க்காலில் அழிவதற்கும்,போராளிகள் சிறையில் வாடுவதற்கு முக்கிய காரணகர்த்தவாக இருந்திருந்தால் தற்போது அவர்களை [போராளிகளை]விடுவிக்க முயற்சி செய்ய மாட்டார் என்பது எனது கருத்து அப்படி முயற்சி செய்தாலும் அது அப்பட்டமான அவரது சுயநலம்

நூறு வீதம் உடன்படுகின்றேன்

நன்றி

  • தொடங்கியவர்

கே.பி யுடன் தொடர்பில் இருக்கும் பெரியவர்கள், இந்தக்கதையைத்தான், இப்போது சொல்லிவருகின்றனர்.

KP யுடன் தொடர்பில் இருக்கும் பெரியவர்கள் எண்டால் இண்டைக்கும் தொடர்பில் இருப்பவர்களா...??? அல்லது இருந்த எண்று நீங்கள் இறந்த காலத்தில் எழுத வேண்டியதை இருக்கும் எண்டு எழுதி விட்டீர்களா....?? :lol:

முP யுடன் தொடர்பில் இருக்கும் பெரியவர்கள் எண்டால் இண்டைக்கும் தொடர்பில் இருப்பவர்களா...??? அல்லது இருந்த எண்று நீங்கள் இறந்த காலத்தில் எழுத வேண்டியதை இருக்கும் எண்டு எழுதி விட்டீர்களா....??

இப்போதும் கே.பி யுடன் தொடர்பில் இருப்பவர்கள் தான், இந்தப் புதிய வகையான சரணாகதி இராசதந்திர நகர்விற்கு ஆலவட்டம் பிடிக்கின்றணர். நியாயம் கற்பிக்கின்றனர். புலத்து தமிழர் அமைப்புகளிற்குள்ளும் இவர்களின் ஆதிக்கம், செல்வாக்கின் வீச்சுக்காரணமாக இலங்கை அரசிற்கு எதிரான செயற்பாடுகளும் தேக்க நிலையை அடைந்துள்ளன. மடிக்குள் நெருப்பைக் கட்டிகொண்டு இயங்கி, முள்ளிவாய்க்காலில் எரிந்தது போதும்.

இலக்குகள் வெவவேறாகிவிட்டன.

அடையும் வழி முறைகளும் வெவவேறாகிவிட்டன.

ஒன்றாகச் சேர்ந்து செயற்படுவது காலத்தைக் கரைக்கும் வரலாறாகவே அமையும்.

Edited by kalaivani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.