Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டவிழும் முடிச்சுக்கள்: தென்தமிழீழத்தில் நிகழ்ந்தது என்ன? - சேரமான்

Featured Replies

கட்டவிழும் முடிச்சுக்கள்: தென்தமிழீழத்தில் நிகழ்ந்தது என்ன? - சேரமான்

Pழளவநன டில: ழn ஜூலை 3இ 2010

தென்தமிழீழத்தில் ராம் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இயங்கி வருவதாக அண்மைக் காலங்களில் இந்திய ஊடகங்களில் பரபரப்பான செய்திகளும், கட்டுரைகளும் வெளியிடப்பட்டதோடு, இவ்வாரம் மட்டக்களப்பு படுவான்கரை குடும்பிமலை வனப்பகுதியில் சிங்கள வான்படையினரின் மிகையொலி யுத்த விமானங்களில் இருந்து குண்டுவீச்சுக்கள் நிகழ்த்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. உண்மையில் தென்தமிழீழத்தில் நடந்ததும், நடப்பதும் என்ன? இதில் கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனின் பங்கு எத்தகையது? என்ற இரண்டு கேள்விகளுக்கும் விடைபகரும் களமாக இக்கட்டுரை விரிகின்றது.

கடந்த 2006ஆம் ஆண்டு யூலை மாதம் 26ஆம் நாளன்று மாவிலாற்றில் நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பொழுது, தென்தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்த பகுதிகளைத் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் மூலோபாயத்துடன் படை நடவடிக்கைகளை சிங்கள அரசு முன்னெடுப்பதாகவே தென்னிலங்கையின் படைத்துறை ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்த பொழுதும், உண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கிய பெரும் படையெடுப்பிற்கான பூர்வாங்க ஒத்திகை நடவடிக்கையாகவே தென்தமிழீழத்தில் தனது படை நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்டிருந்தது.

சிங்கள அரசின் இந்த மூலோபாயத்தை சம்பூரில் இருந்து மூதூர் நோக்கி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட தற்காப்பு நடவடிக்கையின் பொழுதே தமிழீழ விடுதலைப் புலிகள் இனம்கண்டிருந்தார்கள். இக்காலப் பகுதியில் இக்கட்டுரையாளரிடம் தென்தமிழீழத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளி ஒருவர் கருத்துக் கூறுகையில்: ‘‘முன்னர் நாங்கள் தாக்குதல்களை தொடுக்கும் பொழுது எதிரி பின்வாங்கி ஓடிவிடுவான். அப்படி ஓடிச்செல்லும் எதிரி மீண்டும் திரும்பி வருவதில்லை. ஆனால் இம்முறை நாங்கள் தாக்கும் பொழுது பின்வாங்கியோடும் எதிரி, மீண்டும் மேலதிக படைகளுடன் திரும்பி வந்து எம்மைத் தாக்குகின்றான்.’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதாவது நான்காம் கட்ட ஈழப்போரில் தென்தமிழீழத்தில் சிங்களப் படைகளின் போரியல் யுக்தி என்பது தமது தரப்புக்களில் இழப்புக்களை குறைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் இழப்புக்களை அதிகரிப்பதையும், ஓய்வுக்கு அவகாசமின்றி தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ச்சியாக தாக்கி, தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கெரில்லா தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்துவதற்கான புறநிலையை இல்லாதொழிப்பதையும் அடிப்படையாகக் கொண்டிருந்ததையே இக்கூற்று வெளிப்படுத்தியிருந்தது. இதில் முக்கிய அம்சமாக கருணா, பிள்ளையான் போன்ற துணைப்படைக் குழுக்களையும் தமது படை நடவடிக்கைகளில் சிங்களப் படைகள் இணைத்துக் கொண்டிருந்தன.

அதேநேரத்தில் வடதமிழீழப் போரரங்கில் சிங்களப் படைகளின் போரியல் யுக்தி என்பது இதிலிருந்து சற்றுவேறுபட்டிருந்தது. அதாவது தமது தரப்பில் எந்தளவுக்கு இழப்புக்கள் ஏற்பட்டாலும், ஓய்வுக்கு அவகாசமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இடைவிடாது தாக்குதல்களை தொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுவழிப் போர்த்திறனை சிதைப்பதையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆழ ஊடுருவும் அணிகளைக் களமிறக்கி, மரபுவழி வலிந்த தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்துவதற்கு தேவையான பின்தளப் புறச்சூழலை இல்லாதொழிப்பதையுமே, வடதமிழீழப் போரரங்கில் தமது யுக்தியாக சிங்களப் படைகள் கொண்டிருந்தன.

இவ்வாறான பின்புலத்திலேயே தென்தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த தமது படையணிகளை தந்திரோபாய அடிப்படையில் வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு பின்னகர்த்துவதற்கான முடிவை தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்திருந்தார்கள். மரபுவழிப் போருக்கு உகந்த புவியியல் அமைப்பை தென்தமிழீழப் பகுதிகள் கொண்டிருக்காத நிலையில், அங்கு நிலைகொண்டிருந்த தமது படையணிகளை பல்வேறு கட்டங்களாக வன்னிக்குப் பின்னகர்த்திய தமிழீழ விடுதலைப் புலிகள், சொற்ப எண்ணிக்கையிலான போராளிகளை மட்டும் தென்தமிழீழப் பகுதிகளில் நிலைநிறுத்தியிருந்தனர். இதன் பின்னர் இந்த அணிகளுக்கு உதவியாக ஆழ ஊடுருவும் நடவடிக்கைகளில் தேர்ச்சி மேலும் ஒரு சில அணிகளையும், வன்னியில் இருந்து தென்தமிழீழப் பகுதிகளை நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் நகர்த்தியிருந்தார்கள்.

2007ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வடதமிழீழப் போரரங்கில் போர் உக்கிரமடைந்து கொண்டிருந்த பொழுது, சார்ள்ஸ் அன்ரனி படையணியின் முன்னாள் சிறப்புத் தளபதி நகுலன் தலைமையிலான அணி ஒன்று திருமலை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஓரிரு மாதங்களுக்கு அங்கு இடம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஆழ ஊடுருவும் நடவடிக்கைகளின் பின்னர்இ 2007ஆம் ஆண்டின் இறுதியில் இந்த அணி அம்பாறை மாவட்டத்தை சென்றடைந்து, அங்கு தளபதி ராம் தலைமையில் இயங்கிய அணியுடன் இணைந்து கொண்டது. இதேநேரத்தில் திருமலை மாவட்டத்தில் தேவன் என்ற தளபதியின் தலைமையிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உமாராம் என்ற தளபதியின் தலைமையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் இயங்கி வந்தன.

இதில் திருமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான தாக்குதல்கள் எவற்றிலும் தேவன் - உமாராம் தலைமையிலான அணிகள் ஈடுபடாத பொழுதும், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு – பொத்துவில் வனப்பகுதிகளில் இயங்கிய ராம் - நகுலன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆழ ஊடுருவும் தாக்குதல் நடவடிக்கைகள், அம்பாந்தோட்டை, மொனராகலை போன்ற சிங்கள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருந்தன.

தொடர்ச்சியான படை நடவடிக்கைகள் ஊடாக திருமலை – மட்டக்களப்பு மாவட்டங்களை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் சிங்களப் படைகள் கொண்டுவந்ததை தொடர்ந்து, அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா பாணியிலான தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என்று இக்பால் அத்தாஸ் போன்ற தென்னிலங்கை படைத்துறை ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்த பொழுதும், அவ்வாறான தாக்குதல்கள் எவையும் அங்கு நிகழ்ந்தேறவில்லை.

இதற்கிடையே 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் கிளிநொச்சி நகர் மீதான முற்றுகையை சிங்களப் படைகள் இறுக்கத் தொடங்கியிருந்தன. இதேநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் குடிசார் நடவடிக்கைகளில் கருணா – பிள்ளையான் கும்பல்களின் ஆதிக்கமும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. இந்நிலையில் போர் ஓய்வுக் காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக கடமையாற்றி தயாமோகன் அவர்கள், மீண்டும் வன்னியில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஒருபுறம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் பணிகளை விரிவுபடுத்துவதற்கான பணிப்புரை தயாமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டதோடு, மாவீரர் நாளுக்கு முன்னர் தென்தமிழீழத்தில் மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை நிகழ்த்துவதற்கான திட்டம் ஒன்றும் அவரிடம் முன்மொழியப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவ்வாறான மிகப்பெரும் தாக்குதல் எதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழ்ந்தேறவில்லை. அதேநேரத்தில் அரசியல் பணிகளும் பெரிதளவில் விரிவுபடுத்தப்படவில்லை. மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிய கருணா – பிள்ளையான் குழுவினரின் முகாம்கள் மீதான தாக்குதல்களே, தயாமோகனின் மீள்வருகையை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்திருந்தன. குறிப்பாக கருணா குழுவினர் மீதான தாக்குதல் செய்திகளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆயுதக் குழு மீதான தாக்குதலாக வர்ணித்து வெளியிடுமாறு செய்தியாளர்களிடம் தயாமோகன் வலியுறுத்தியிருந்தார். அதேநேரத்தில் கருணா குழுவினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிகழ்த்திய சில தாக்குதல்களை, பிள்ளையான் குழுவினர் நிகழ்த்திய தாக்குதல்களாக சித்தரித்து, கருணா – பிள்ளையான் குழுவினரிடையிலான மோதல்கள் அதிகரித்திருப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியிலும் தயாமோகன் ஈடுபட்டிருந்தார்.

உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அரசியல்துறைப் பொறுப்பாளராக மட்டும் தயாமோகன் விளங்கிய பொழுதும், மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக விளங்கிய உமாராம் எடுக்கக்கூடிய முடிவுகளை தீர்மானிக்கக்கூடிய ஒருவராகவும், திருமலை – அம்பாறை மாவட்டத்தில் நிகழ்ந்தேறிய அரசியல் - படைய நிகழ்வுகள் மீதும், அம்பாறை மாவட்ட தளபதி ராம் மீதும் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒருவராகவுமே தயாமோகன் விளங்கியிருந்தார். இதில் அம்பாறை மாவட்ட அரசியல்துறையினருக்கான பணிகளை தற்காலிகமாக நகுலன் முன்னெடுத்திருந்த பொழுதும், அதிலும் தயாமோகனின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது.

இதற்கிடையே, புலம்பெயர்தேசங்களில் உள்ள செய்தியாளர்கள் சிலருடனும், தமது உறவினர்களுடனும் நேரடித் தொலைபேசித் தொடர்புகளை தயாமோகன், நகுலன், ராம் போன்றோர் பேணிவந்தனர். இந்தத் தொடர்பாடல்கள் நாளடைவில் வெளிநாடுகளில் இயங்கிய கே.பி குழுவினருடன் விரிவுபடுத்தப்பட்டு, 2009ஆம் ஆண்டின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக கே.பி நியமிக்கப்பட்ட பொழுது மேலும் வலுப்படுத்தப்பட்டிருந்தது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், தயாமோகன், ராம் போன்றோருடன் அடிக்கடி தொலைபேசித் தொடர்பாடல்களைப் பேணி வந்த கே.பி, அழிவுநிலையை நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் சென்று கொண்டிருப்பதாகவும், ஆயுதங்களைக் கீழே போட்டாலே ஒழிய, தமிழீழ விடுதலைப் புலிகளை உலகம் காப்பாற்றப் போவதில்லை என்றும், போர்நிறுத்தம் சாத்தியப்படப் போவதில்லை என்று வலியுறுத்தி வந்திருந்தார்.

இதற்கிடையே, வன்னிப் போர் உச்சகட்ட உக்கிரநிலையை அடைந்த பொழுது, இந்திய அமைதிப் படைகளின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டமை போன்று படைய, அரசியல், நிர்வாகப் பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு தயாமோகன், ராம், நகுலன் போன்றோருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. தென்தமிழீழத்தில் எதிர்காலத்தில் தமது போராளிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் தெளிவான தரிசனத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கொண்டிருந்ததையே இந்த அறிவுறுத்தல் புலப்படுத்தியிருந்தது.

இதனிடையே, மக்களைக் காப்பதற்காக வெள்ளைக் கொடியுடன் சமாதானம் பேசச்சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், தளபதி ரமேஸ் ஆகியோரை, கடந்த ஆண்டு மே 18ஆம் நாள் அதிகாலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்தும், நிராயுதபாணிகளான போராளிகளையும், பொதுமக்களையும் வகைதொகையின்றி கொன்றுகுவித்தும், பெரும் இனவழித்தொழிப்பு நடவடிக்கையை சிங்களப் படைகள் அரங்கேற்றி முடித்த பொழுது, உடனடியாக தயாமோகன், ராம் ஆகியோருடன் அவசர அவசரமாக தொடர்பு கொண்ட கே.பி, ‘தமிழீழ தேசியத் தலைவர் வீரச்சாவைத் தழுவிவிட்டார்’ என்ற செய்தியை சகல போராளிகளுக்கும் தெரியப்படுத்துமாறு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு மட்டும் நின்றுவிடாது, இவர்களின் உதவியுடன், தென்தமிழீழத்தின் பல்வேறு இடங்களில் சிறு அணிகளாக நிலைகொண்டிருந்த போராளிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, ‘இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை’ என்ற செய்தியையும் கே.பி வலியுறுத்தியதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறாக தென்தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த போராளிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களின் போர்க்குணத்தை சிதைப்பதே கே.பி அவர்களின் முதன்மை இலக்காக அமைந்திருந்தது. மறுநாள் 19ஆம் நாளன்று, ‘தேசியத் தலைவரின் உடல்’ என்றுகூறி காணொளிகளை சிங்கள ஊடகங்கள் ஒளிபரப்பிய பொழுது, மீண்டும் தென்தமிழீழத்தில் உள்ள போராளிகளுடன் தொடர்பு கொண்ட கே.பி, ‘அது தலைவரின் உடல்தான்’ என்று அடித்துக்கூறியதோடு, எஞ்சியிருக்கும் மூத்த உறுப்பினர் என்ற வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் தகமை தனக்கு இருப்பதாகவும், தனது முடிவுகளை தளபதி ராம், தயாமோகன் போன்றோர் ஆமோதிப்பதாகவும் கூறியிருந்தார்.

இதன் உச்சக்கட்டமாக போராளிகளை சிங்களப் படைகளிடம் சரணடையுமாறு அறிவுறுத்திய கே.பி, இவர்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை அனைத்துலக சமூகம் தனக்கு வழங்கியிருப்பதாகவும், முற்றுமுழுதாக ஆயுதங்கள் களையப்பட்ட அரசியல் அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மாற்றம் பெறும் பொழுதே இயக்கத்தின் மீதான தடையை வெளிநாடுகள் நீக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதில் கே.பியின் முடிவை ஏற்றுக் கொள்வதாக பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியின் ஊடாக தயாமோகன் பகிரங்கமாக அறிவித்திருந்த பொழுதும், அப்படியான பகிரங்க அறிவித்தலை வெளியிடுவதற்கு ராம் தயக்கம் காட்டியிருந்தார்.

அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது. அதாவது கே.பியின் முடிவை ஏற்றுக் கொள்வதற்கு தென்தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த ஒரு தொகுதி போர்க்குணம் மிக்க போராளிகள் மறுப்புத் தெரிவித்திருந்தனர். தேசியத் தலைவரின் இருப்புத் தொடர்பாகவோ அல்லது போராட்டத்தின் எதிர்காலம் தொடர்பாகவோ எந்தவொரு முடிவுகளையும் வெளிநாடு ஒன்றில் தங்கியிருந்தவாறு கே.பி எடுக்க முடியாது என்பதே அந்தப் போராளிகளின் நிலைப்பாடாக அமைந்திருந்தது. இதே நிலைப்பாட்டையே தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் எடுத்திருந்தனர். மனதளவில் கே.பியின் முடிவை ராம் ஏற்றுக்கொண்டு, கே.பியின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்படுவதற்கு முன்வந்திருந்த பொழுதும், சக போராளிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் கே.பியின் முடிவை பகிரங்கமாக ஆதரிப்பதற்கு ராம் விரும்பவில்லை.

இந்நிலையில், கே.பியை தனது தலைமையாக அறிவித்து பி.பி.சி தமிழோசைக்கு தயாமோகன் வழங்கிய செவ்வி, ஒரு தொகுதி போராளிகளை கடும் சீற்றத்திற்கும், ஏனைய போராளிகளை குழப்பத்திற்கும் ஆளாக்கியிருந்தது. இது இவ்வாறிருக்க தனது பொறுப்பின் கீழ் இயங்கிய ஒரு தொகுதி போராளிகளை கே.பியின் அறிவுரைக்கு அமைய சிங்களப் படைகளிடம் சரணடையுமாறு தயாமோகன் பணித்திருந்தார். இவ்வாறு தயாமோகனின் கட்டளையை ஏற்றுச் சென்ற மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொகுதி போராளிகள் சிங்களப் படைகளால் கோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். இதேபோன்று கே.பியின் அறிவுரைக்கு செவிசாய்த்து சிங்களப் படைகளிடம் சரணடைந்த தேவன் தலைமையிலான திருமலை மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு தொகுதி போராளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதற்கிடையே அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு, பொத்துவில் வனப்பகுதிகள் மீதான பெரும் படை நடவடிக்கை ஒன்றும் சிங்களப் படைகளால் தொடங்கப்பட்டிருந்தது. வன்னியில் நிலைகொண்டிருந்த சிங்களப் படைகளின் ஒரு டிவிசன் படையணி, முள்ளிவாய்க்கால் யுத்தத்தை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்திற்கு நகர்த்தப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தேடியழிப்பு நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டிருந்தது. இதன்பொழுது கஞ்சிக்குடிச்சாறு, பொத்துவில் வனப்பகுதிகளில் ‘இனம்காணப்பட்ட’ தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தொடர்ச்சியாக சிங்களப் படைகளால் எறிகணைகள் பொழியப்பட்டன. கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிங்களப் படைகள் நிகழ்த்திய பதுங்கித் தாக்குதல் ஒன்றில் ஒரு தொகுதி போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டிருந்தார்கள்.

இதனால் அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அணிகள் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பது பெரும் சவாலாக அமைந்தது. இதேநேரத்தில் தனது பொறுப்பின் கீழிருந்த போராளிகளை அப்படியே அனாதரவாகக் கைவிட்டு, கடந்த ஆண்டு யூன் மாத இறுதியில் மட்டக்களப்பை விட்டு வெளியேறி, பாதுகாப்பாக கொழும்பின் ஊடாக மலேசியாவிற்கு தயாமோகன் புறப்பட்டுச் சென்றார். தயாமோகனின் மலேசியப் பயணத்தின் பின்னணியில் பல அந்தரங்க நகர்வுகள் இருந்தாகக் கூறப்படுகின்றது. மலேசியாவை சென்றடைந்த தயாமோகன், அங்கு கே.பி அவர்களை அவரது குடும்பத்துடன் சந்தித்து, பின்னர் சுவிற்சர்லாந்தை சென்றடைந்திருந்தார்.

இதேபோன்று சிங்கள அரசுடன் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் கோத்தபாயவின் நேரடிக் கட்டுப்பாட்டின கீழ் இயங்கும் சிங்கள படைப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த ராம், யூலை மாத முற்பகுதியில் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் கசிந்திருந்தன. கே.பியின் அறிவுரைக்கு அமைய முதலில் சரணடைந்த போராளிகளை சிங்களப் படையினர் படுகொலை செய்த பொழுதும், பின்னர் கே.பியிற்கும், கோத்தபாயவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் ராம் போன்றோரின் சரணடைவிற்கு சிங்களப் படையினர் இடமளித்திருந்தனர்.

ராம் அவர்களின் சரணடைவைத் தொடர்ந்து தயாமோகனால் கைவிடப்பட்ட மேலும் ஒரு தொகுதி போராளிகள், கே.பியின் உதவியுடன் பொலனறுவை வெலிக்கந்தைப் பகுதியில் சிங்களப் படைகளிடம் சரணடைந்தனர். இதேநேரத்தில் அம்பாறையை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு நகர முற்பட்ட போர்க்குணம் மிக்க ஒரு தொகுதி போராளிகள், கே.பி – ராம் தரப்பினரின் உதவியுடன் மிகவும் நயவஞ்சகமான முறையில் திருமலை – மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியில் வைத்து சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

இவ்வாறாக தென்தமிழீழத்தில் காதும்காதும் வைத்தாற்போல் நிகழ்ந்தேறிய போராளிகளின் படுகொலைகள், சிறைப்பிடிப்புக்கள், சரணடைவுகளின் நடுநாயகமாக கே.பி அவர்களே திகழ்கின்றார். தற்பொழுது தயாமோகன் சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள நிலையில், ராம், நகுலன் போன்றோர் சிங்களப் படைகளிடம் கட்டுப்பாட்டிலேயே உள்ளனர்.

தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலிப்பதற்கு தான் எடுத்த முயற்சிகள் கைகூடாத நிலையில், கடந்த ஆண்டு மாவீரர் நாளில் ராம் - நகுலன் ஆகியோர் ஊடாக இதே அறிவித்தலை வெளியிடுவதற்கு கே.பி எடுத்த முயற்சி உலகத் தமிழர்களிடம் எடுபடவில்லை.

இதன் தொடர்ச்சியாக ‘மக்கள் விடுதலை இராணுவம்’ என்ற பெயரில் தென்தமிழீழத்தில் சிங்களப் படைப் புலனாய்வாளர்களால் தொடங்கப்பட்ட ஆயுதக் குழுவும், மக்களிடம் எடுபடாது பிசுபிசுத்துப் போயுள்ளது. இவ்வாறான சூழலில் மீண்டும் ராம் அவர்களைப் பயன்படுத்தி கே.பி – கோத்தபாய தரப்பு அரங்கேற்றிய மற்றுமொறு நாடகமும் புஸ்வாணமாகியுள்ளது. கே.பியின் உண்மை முகம் இப்பொழுது உலகத் தமிழர்களிடையே அசிங்க முகமாக வெளிப்பட்டுள்ள நிலையில், இனியும் கே.பியின் கபட நாடகங்கள் சாத்தியப்படப் போவதில்லை என்பதே யதார்த்தம். ஆனாலும் தமது எசமான்களின் கட்டளை கிடைக்கும் வரை தமது நாடகங்களை கே.பி குழுவினர் தொடர்வது மட்டும் திண்ணம்.

http://www.tamilkathir.com

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் என்ன சொல்ல வருகின்றார் என்றே புரியவில்லை. இன்றும் இவர்கள் பழைய மப்பில் இருக்கின்றனர் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. இவர்கள் எழுதுவதனைப் பார்த்தால் மிகவிரைவில் அடுத்தகட்ட ஈழப் போர் வெடிக்கும் போலிருக்கிறது.

எதற்கும், புலம்பெயர் ஏமாளித் தமிழர்களே தயாராக இருங்கள். அடுத்த சுற்று நிதி சேகரிப்புக்கு வந்து உங்களுக்கு நாமம் போடப் போகின்றனர் அனைத்துலக தொடர்பகத்து வால்பிடிப் புலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: எங்களைப் பொறுத்தவரையில் யார் என்ன சொன்னாலென்ன, எவர் எதைக் காட்டினாலென்ன, நாங்கள் அசையப்போவதில்லை. நாங்கள் நினைப்பதுதான் சரி, சிங்கள அரசுபோல ஒரு அரசு இனி வருமா?? அவர்கள் தமிழர் மேல் எவ்வளவு அக்கறையாக இருக்கின்றனர்? ஏன் இந்தப் பாலாய்ப்போன தமிழர்க்கு நாம் சொல்வது புரிவதில்லை?? நாங்கள் காலம் காலமாக நக்கி வாழ்வதைப்போலா இவர்களும் ஏன் நக்கி வாழ மறுக்கிறார்கள்?? நாங்கள் காலம் காலமாக கூட்டியும், காட்டியும் குடுத்ததுபோல இவர்கள் ஏன் இன்னும் செய்யவில்லை?? எமது பொறுமைக்கும் ஒரு அளவிருக்கிறது, இவ்வளவு கஷ்ட்டங்களுக்கு மத்தியிலும் எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு கே.பீ அங்கிளை உந்த இடத்துக்கு தூக்கிக் கொண்டு வந்திருக்கிறோம், மகிந்த மாமாவும் கே.பீ அங்கிளும் ஆரத்தழுவி முத்தமிடுறதைப் பார்க்கிறதுக்கு ஆயிரம் கண்வேணும், இதெல்லாத்தையும் விட்டுப்போட்டு இன்னும் தமிழீழம் விடுதலை எண்டு உந்தச் சனம் உறுமிக்கொண்டு திரியுது, போகிற போக்கைப் பாத்தால் நாங்கள் பட்ட கஷ்ட்டம் எல்லாம் வீணாகிவிடுமோ எண்டு பயமாக் கிடக்கு !!!!

பிள்ளையான், கருணா, கே.பீ, டக்கிளஸ் எண்டு நாங்களும் எத்தினையோ மாமாக்களை மேடையில ஏத்திப் பாத்தாச்சுது, ஆனால் சனம் மசியிறதாக் காணோம் !!!! வேற வழியில்லை, வாற காசுக்கும், வழியிற எச்சிலுக்கும் ஏதாச்சும் குரைச்சால்த்தான் உண்டு, இருக்கவே இருக்கு யாழ்க்களம், இஞ்ச வந்து எவ்வளவு குப்பை வேண்டுமானாலும் கொட்டலாம், ஏன் நாயே எண்டு யாரும் கேட்கப்போவதுமில்லை, இன்னும் கொஞ்சம் நக்கிகளைச் சேர்த்தமெண்டால், எங்கட காட்டில மழையோ மழை !!!!!

இங்கே எந்த முடிச்சும் கட்டவிழ்வதாக தெரியவில்லை.

வேதனையின் வடி கால் இரண்டு தான்.

ஒன்று பேச்சு, மற்றொன்று செயல் .

வெறும் பேச்சும் வெட்டிப் பேச்சும் சில மணித்துளிகளுக்குச் சரிப்படும், பேண்ட் எய்ட் (Band aid ) போல.

ஆக்க பூர்வமானப் பேச்சு ஆக்க பூர்வமான செயலுக்கு அடி கோலும்.

மறந்து விட வேண்டாம். நாடிழந்து, மொழியிழந்து, 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டும் யூதர்கள் வெகு விரைவிலே மலையுச்சியை ஏறி நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

"என்னால் என்னங்க செய்ய முடியும்? " என்பவர்களால் ஒன்றும் செய்ய முடியாது !

மனச் சோர்வடைந்து உண்டு, உறங்கி வாழ்வது வாழ்வா?

"நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டு முன் வாருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் என்ன சொல்ல வருகின்றார் என்றே புரியவில்லை. இன்றும் இவர்கள் பழைய மப்பில் இருக்கின்றனர் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. இவர்கள் எழுதுவதனைப் பார்த்தால் மிகவிரைவில் அடுத்தகட்ட ஈழப் போர் வெடிக்கும் போலிருக்கிறது.

எதற்கும், புலம்பெயர் ஏமாளித் தமிழர்களே தயாராக இருங்கள். அடுத்த சுற்று நிதி சேகரிப்புக்கு வந்து உங்களுக்கு நாமம் போடப் போகின்றனர் அனைத்துலக தொடர்பகத்து வால்பிடிப் புலிகள்.

கட்டுரைக்கும் உங்கள் கருத்துக்கும் எந்தவித சம்மந்தமுமில்லையே?

கட்டுரை விளங்கவில்லையா? அல்லது சாணியடித்தால் போதும் என்ற நிலைபாடா?

  • கருத்துக்கள உறவுகள்

உவன் சேரமான் திருந்தவே மாட்டானா.? உண்மையான புலிகள் இல்லை என்ற தைரியத்தில் போலி புலிகள் கொஞ்சம் ஓங்கி தான் கத்துகிறார்கள். :lol::D

அதுசரி இவருக்கு இவ்வளவையும் யார் சொன்னது கே பியோ.? அல்லது சேரமான் என்ற மாயமானின் பகல் தூக்கத்தில் வந்ததோ ? :D :D

இந்த யாழ் களத்தில் இவ்வளவு கத்துறதுகள். சேர்த்த காசில கொஞ்சத்தை கே பிற்கு கொடுக்கலை என்றாலும் பரவாயில்லை நேசகரத்துகாவது கொடுகலாமல்லோ . :D :D தண்ட மனுசிக்கும் மாமிக்கும் சோடிக்கிறதை விடிட்ட்டு.

காசை கொள்ளை அடிக்காமல் சனத்துக்கு உதவுங்கோ என்றாலும் நாங்கள் துரோகிகளோ.? :D

அண்ணே உங்களுக்கு ஒண்டு தெரியுமோ.? உலகத்திலே கதை சொல்லி ஏமாத்த கூடிய ஒரே இனம் தமிழினம் தான் என்று இந்த சேரமானுக்கு நல்லா தெரியும். எங்களுக்கு தான் ஒண்டும் விளங்கேல்ல. :D :D

Edited by முதல்வன்

எம்முள் காட்டிக்கொடுபோரும், தம்மையே கேலி பேசுவோரும் , கூட்டிகொடுப்போரும் இருக்கும் வரையில் நம்மினத்திற்கு விடிவு என்பது வெகு தொலைவு தான்

கடவுளே இதற்கு தான பலபேர் தன் குடும்பத்தையும், தன்னையும் இழந்தார்கள்

எப்பதாண்ட மாறுவீங்க நாயிங்களா

Edited by ramathevan

"கே.பியை துரோகியாகக்காட்டி"...............? வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை தமதாக்கிக்கொள்ளும் தீவிர செயற்பாட்டில் "சேரமான் கும்பல்"..............."

அரசாங்கத்தின் புலனாய்வுப் போரில் சிக்கித் திணறும் புலம்பெயர் சமூகம்,

* "கே.பியின் தலைமைத்துவத்தை ஏற்க மறுத்த பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்து அவர் வெளியிட்ட அறிக்கையால் கோபம் கொண்டுள்ள தரப்புகள் அவரை துரோகி என்ற வகையில் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டன. [இதில் சேரமான்களும், வேறும்சில வயிற்றுப்பிழைப்பு கும்பல்களும் இதில் அடங்கும்] புலம்பெயர் ஊடகங்களில் கே.பிக்கு எதிரான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கே.பி அரசதரப்புக்கு ஒத்துழைப்பு வழங்குகிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்குச் சுதந்திரமான எந்த வழிகளும் இல்லை. ஆனால் அவரை வைத்து இலங்கை அரசாங்கம் ஒரு நாடகம் ஆடுகிறது என்பது உண்மை. இந்த நாடகத்தில் அவர் ஒரு பாத்திரமேற்கிறாரா இல்லையா என்பது கூட சரியாகத் தெரியாத நிலை தான் உள்ளது. எந்தவொரு சுதந்திர ஊடகவியலாளரையும் கே.பியைச் சந்திக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அவர் வடபகுதிக்குச் சென்றது தொடர்பாகவோ, அபிவிருத்தி, புனர்வாழ்வு குறித்த சந்திப்புகளில் பங்கேற்றது தொடர்பாகவோ- எந்தவோரு புகைப்பட ஆதாரத்தையும் அரசாங்கம் வெளியிடவும் இல்லை. இப்படிப் பல ஓட்டைகள் இந்த விவகாரத்தில் இருக்கின்றன.கே.பி அரசுக்கு எந்த வழியில் உதவுகிறார் என்பது பற்றிய பல்வேறு கேள்விகள் இருக்கின்ற நிலையில்,அவரக்கு எதிராக அவரை எதிர்க்கும் ஒருசிலரால் புலம்பெயர் சமூகத்தில் இருந்து கருத்துகள் வெளியாகத் தொடங்கி விட்டன. இந்தவகையில் பார்க்கும் போது,கே.பி என்ற சொல்லை வைத்து இலங்கையின் புலனாய்வுச் சேவைகள் தொடங்கிய புலனாய்வுப் போரில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளதையே உறுதிப்படுத்த முடிகிறது. புலிகள் அமைப்பு வெளிநாடுகளில் இருந்தும்; இனிமேல் வலுவாகச் செயற்பட முடியாது என்பதையும், காலப்போக்கில் அது அங்கேயும் வலுவிழந்து போய்விடும் என்பதையுமே இந்த நிகழ்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. [ இதை தமிழ்நெற், மற்றும் தமிழ் தேசியம் பேசும் சிலர் உணரமறுப்பதுதான் வேதனை] அதாவது புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் இந்தச் செய்திகள் ஏற்படுத்தியுள்ள குழப்பமும் தாக்கமுமே இதை உறுதி செய்கின்றன. ............................."

- இன்போதமிழ் குழுமம் -

இனி..,

விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் புலனாய்வுக் கட்டமைப்புகளின் பார்வை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மீது திரும்பியுள்ளது.

புலம்பெயர் தமிழ்ச்சமூகம் புலிகள் இயக்கத்துக்கு உயிரூட்ட முனைவதாக அரசாங்கத் தரப்பு அண்மைக்காலமாக குற்றம்சாட்டி வருகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தொடக்கம் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ வரை எல்லோருமே இந்தக் குற்றச்சாட்டுகளை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் முன்வைக்கின்றனர்.

இந்தநிலையில் புலம்பெயர் சமூகத்தின் மீது இலங்கைப் புலனாய்வுச் சேவைகளின் கவனம் திரும்பியிருப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல.

புலிகள் இயக்கம் உள்நாட்டில் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு விட்ட போதும் வெளிநாடுகளில் அதன் கட்டமைப்புகள் சிதையவில்லை என்பது அரசாங்கத்தின் கருத்து.

ஆனாலும்.

முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்குப் பிறகு புலிகள் இயக்கம் இரண்டுபட்டு நிற்பது உண்மை.

* ஒரு தரப்பு புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை நிராகரிக்கிறது.

* அடுத்த தரப்பு பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக் கொள்கிறது.

ஆனாலும் இந்தப் பிளவின் அடிப்படையானது விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை தக்கவைத்துக் கொள்வதில் ஏற்பட்ட குழப்பம் தான் என்பதில்; சந்தேகம் இல்லை.

* [போராட்டத்துக்கு கடைசி வரை காசு தாருங்கள் இல்லையேல் நீங்களும் துரோகிகள் தான் என்று காஸ்ரோ குழுமம் வலியுறுத்தி காசு திரட்டிய போது காசு கொடுத்த பலர் இன்று நடுத்தெருவில் ஆனால் விடுதலையின் பெயரால் காசு சேகரித்த விடுதலை வியாபாரிகள் ஆடம்பர வாழ்க்கையில், வாழ்வதோடு மட்டுமல்லாமல் , போதாக்குறைக்கு பிரபாகரனின் உயிர்பை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இக் குழுமம் தாம் மறைத்து வைத்திருக்கும் பணத்தில்......? குறள் தொலைகாட்சி சீமானின் கட்சி போன்றவற்றில் முதலீடுகளை செலுத்தி தமக்கு ஆதரவான பிரச்சாரங்களை இந்திய வியாபாரிகள் மூலம் செய்து வருகின்றனர்]

முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு புலிகள் இயக்கம் கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் தலைமையின் ஒன்றுபடும் நிலை உருவானது, ஆனால் அதற்குள் புலனாய்வுப் பிரிவினர் அவரை மலேசியாவில் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு வர புலிகள் இயக்கத்தை மீளமைக்கும் முயற்சிக்குப் பேரிடியாக அமைந்தது.

இப்போது கொழும்பில் அடையாளம் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கே.பியை வைத்து ஒரு புலனாய்வுப்போர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் மற்றும் அதன் முதல் அமர்வு என்பன அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் - கே.பியை வைத்து புலம்பெயர் சமூகத்துக்குள் குழப்பத்தை- அவநம்பிக்கையை- பிளவை ஏற்படுத்தும் காரியத்தில் புலனாய்வுச் சேவைகள் இறங்கியுள்ளன.

2. அரசாங்கத் தரப்பு கே.பி தமக்கு ஒத்துழைப்புத் தருவதாக கூறிக் கொண்டு அவரை புலம்பெயர் சமூகத்திடம் இருந்த அந்நியப்படுத்த முனைகிறது.

3. கே.பியின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட நாடு கடந்த அரசைத் தோற்கடிப்பதற்கான ஒரு தந்திரோபாயமாகவே இது பார்க்கப்படுகிறது.

4. இன்னொரு பக்கத்தில் கே.பி தொடர்பாக பல்வேறு செய்திகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்தும், சிங்கள, ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

5. கே.பி வடக்கு,கிழக்கு புனரமைப்புக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் புலம்பெயர் சமூகத்தினரை ஒன்றிணைக்க முனைவதாகவும் செய்திகள் கசிய விடப்படுகின்றன

6. அவர் வடபகுதிக்கு சென்றதாகவும் சகல சுகபோகங்களுடன் வாழ்வதாகவும் கூட செய்திகள்; வெளியாகின்றன.

எதிர்க்கட்சிகள் இந்த விடயத்தை ஊதிப் பெருப்பிக்க முனைவதையும்,காணமுடிகிறது.

ஒரு பக்கத்தில் இப்படியான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்க கே.பியை வடபகுதிக்குக் கொண்டு போகவேயில்லை என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ. அவர் தடுப்புக் காவலில் தான் வைக்கப்பட்டுள்ளார் - ஆனால் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சிலரை கொழும்புக்கு வரவழைத்து புனர்நிர்மாணப் பணிகள் குறித்துப் பேசுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் உறுதி செய்துள்ளார்.

இந்தக் கட்டத்தில்,

ஏற்கனவே கே.பியின் தலைமைத்துவத்தை ஏற்க மறுத்த பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்து அவர் வெளியிட்ட அறிக்கையால் கோபம் கொண்டுள்ள தரப்புகள் அவரை துரோகி என்ற வகையில் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டன.

* [இதில் சேரமான்களும், வேறும்சில வயிற்றுப்பிழைப்பு கும்பல்களும் அடங்கும்]

புலம்பெயர் ஊடகங்களில் கே.பிக்கு எதிரான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

* கே.பி அரசதரப்புக்கு ஒத்துழைப்பு வழங்குகிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்குச் சுதந்திரமான எந்த வழிகளும் இல்லை.

* ஆனால் அவரை வைத்து இலங்கை அரசாங்கம் ஒரு நாடகம் ஆடுகிறது என்பது உண்மை.

* இந்த நாடகத்தில் அவர் ஒரு பாத்திரமேற்கிறாரா இல்லையா என்பது கூட சரியாகத் தெரியாத நிலை தான் உள்ளது.

* எந்தவொரு சுதந்திர ஊடகவியலாளரையும் கே.பியைச் சந்திக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

* அவர் வடபகுதிக்குச் சென்றது தொடர்பாகவோ, அபிவிருத்தி, புனர்வாழ்வு குறித்த சந்திப்புகளில் பங்கேற்றது தொடர்பாகவோ- எந்தவோரு புகைப்பட ஆதாரத்தையும் அரசாங்கம் வெளியிடவும் இல்லை.

இப்படிப் பல ஓட்டைகள் இந்த விவகாரத்தில் இருக்கின்றன.

* கே.பி அரசுக்கு எந்த வழியில் உதவுகிறார் என்பது பற்றிய பல்வேறு கேள்விகள் இருக்கின்ற நிலையில்.........?

அவரக்கு எதிராக அவரை எதிர்க்கும் ஒருசிலரால் புலம்பெயர் சமூகத்தில் இருந்து கருத்துகள் வெளியாகத் தொடங்கி விட்டன.

இந்தவகையில் பார்க்கும் போது .................,

கே.பி என்ற சொல்லை வைத்து இலங்கையின் புலனாய்வுச் சேவைகள் தொடங்கிய புலனாய்வுப் போரில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளதையே உறுதிப்படுத்த முடிகிறது. அதாவது புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் இந்தச் செய்திகள் ஏற்படுத்தியுள்ள குழப்பமும் தாக்கமுமே இதை உறுதி செய்கின்றன.

புலிகள் அமைப்பு வெளிநாடுகளில் இருந்தும்; இனிமேல் வலுவாகச் செயற்பட முடியாது என்பதையும், காலப்போக்கில் அது அங்கேயும் வலுவிழந்து போய்விடும் என்பதையுமே இந்த நிகழ்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. [ இதை தமிழ்நெற், மற்றும் தமிழ் தேசியம் பேசும் சிலர் உணரமறுப்பதுதான் வேதனை.]

இலங்கையின் புலனாய்வுச் சேவைகள் இப்போது கடல்கடந்த அளவில் புலனாய்வுச் சமர்களை நடத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டன. அதற்கு மலேசியா போன்ற நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் மிகத் தாராளமாகவே ஒத்துழைத்து வருகின்றன.

* இலங்கை அரசின் இந்தப் புலனாய்வுப் போருக்கு முகம்கொடுக்க முடியாமல் புலம்பெயர் சமூகம் திணறத் தொடங்கி விட்டது. ஆனாலும் புலம்பெயர் சமூகமும், புலிகள் சார்ந்த தரப்புகளும் தாம் வழிப்புடன் இயங்குவதாகவும் முன்னெச்சரிக்கையோடு செயற்படுவதாகவும் காட்டிக் கொள்வது தான் வேடிக்கையாக உள்ளது

கட்டுரையாளர் சுபத்ரா இன்போ தமிழ் குழுமம்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சிந்தச் சந்தேகம், இந்தச் சுபத்திரா அக்காவுக்கும் கே.பீ அங்கிளுக்கும் என்ன சம்பந்தம்? அப்பிடி இப்பிடி ஏதாச்சும்...ஏன் கேக்கிறன் எண்டால், கே.பீ ரொம்ப நல்லவராம், ஆனால் சிங்கள அரசுதான் அவரை கட்டாயப்படுத்தி உதெல்லாத்தையும் செய்ய வைக்குதாம், ஐய்யோ...இதை எல்லாரும் நம்புங்கோ.

அதுசரி, ஆரிந்த இன்போக் குழுமம்?? முந்தி கே.பீ அண்ணாவை உச்சத்திலை தூக்கி வைச்சுப்போட்டு, அண்ணா எல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு கோத்தாவிட்ட போய் மண்டியிடஏக்க என்னத்தை எழுதுறதெண்டு தெரியாம கவுண்டு கொண்டு இருந்த ஆக்களோ? அல்லாட்டி, வழுதி, புழுதி, மணல், சேறு எண்டெல்லாம் கயிறுவிட்டு சனத்தின்ர வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொண்டு ஐய்யோ எங்களுக்குத் தெரியாது, ஆர் எழுதினதெண்டு சவடல் விட்ட ஆக்களோ??

பாவம் சுபத்திரா அக்கா, தன்ர கே.பீ அங்கிள் ஒரு சுத்தமான சுத்தல் வாதி எண்டு அழுது புழம்பிறா, பாவமாய்க் கிடக்கு. திரும்பத் திரும்ப, கே.பீ அங்கிள் விரும்பிச் செய்யிறாரோ அல்லது விரும்பாமச் செய்யிறாரோ எண்டு தெரியாதாம், அவர் துரோகியோ நல்லவரோ எண்டும் தெரியாதம், அவற்றை புகைப்படம் ஒண்டும் இன்னும் தங்கட இன்போக்குழுமத்துக்கி கிடைக்கவில்லையாம். சரியான பாவம்.அதுசரி, கே.பீ அங்கிளின்ர படத்தை இவ்வளவு நாளும் ஒருக்கா எண்டாலும் சிங்களவன் வெளியில விட்டவனோ, அல்லது புலம்பெயர் சனத்தில எத்தின சனம் உந்த அங்கிளை இதுவரையில பாத்திருக்கினம்?? நானெண்டால் உந்த மூதேவியின்ர முகத்தை இன்னும் ஒருக்காவெண்டாலும் பார்க் இல்ல. ஆனால், உந்தச் சுபத்திரா அக்காவின்ர கதையைக் கேட்டால், அவர் ஏதோ இங்க பப்ளிக்கா எல்க்ஷன் கேட்டவர் மாதிரியும், சனமெல்லாம் அவற்றை முகத்தை நெஞ்சில பச்சை குத்தி வைச்சிருக்கிறமாதிரியும், அவர் யாழ்ப்பாணத்துக்குப் போன படம் இன்னும் வெளியில வரவில்லை எண்டதால அவர் போயிருக்கச் சந்தர்ப்பமில்லை எண்டும் எழுதுறா!!!!!!!கி...கி...கி பாவம் நல்லாத்தான் கஷ்ட்டப்படுறா??

வெளியில படம் வராட்டி அவர் போகவில்லை எண்டு அர்த்தமா சுபத்திரா அக்கா?? அப்ப சிங்கள மகிந்த அங்கிள் இதுவரை காட்டின படமெல்லாம் உண்மையெண்டு நம்புறீங்களா சுபத்திரா அக்கா?? படங்கள் மட்டும்தான் உண்மையா அல்லது மகிந்த அங்கிள் சொல்லுற செய்த்யெல்லாம் உண்மையா சுபத்திரா அக்கா?? ஏன் கேக்கிறன் எண்டால், வன்னியில் ஒரு தமிழ் மகனைக் கூட கொல்லவில்லை எண்டும், ஒரு போர்க்குற்றத்தைக்கூட செய்யவில்லை எண்டும் மகிந்த அங்கிள் இப்ப சொல்லுறார், நீங்கள் அதை நம்புறீங்களா எண்டு எனக்குத் தெரிய ஆசை?? இல்லை, படத்தை மட்டும்தான் நம்புறியள் எண்டால் நான் உங்களிட்ட அந்தக் கேள்வியைக் கேக்கவில்லை சுபத்திரா அக்கா??

இன்னுமொரு குட்டிக் கேள்வியிருக்கு சுபத்திரா அக்கா, நீங்கள் நாடு கடந்த தமிழீழ அரசை சரியெண்டு நெய்க்கிறியளா சுபத்திரா அக்கா?? அல்லது பிழயெண்டு நெய்க்கிறியளோ சுபத்திரா அக்கா?? ஏனென்டால், கே.பீ அங்கிள் துவங்கினதால் அதைச் சரியெண்டுதான் உங்கட குழுமம் சொன்னவையள், இப்ப கே.பீ அங்கிள் கோத்தாவிட்ட குலாவேக்க நாடு கடந்த தமிழீழ அரசு அவரை ஏற்கிறதில்லை எண்டு போட்டினமாம், நீங்கள் என்ன சொல்லுறியள்??நாடுகடந்த தமிழீழ அரசு பிழை, கே.பீ அங்கிள் தான் சரி எண்டுறியளோ?? அதுவும் சரிதான், உங்கட ஏக்கத்தைப் பாக்கேக்க உங்கட கவலை தெரியுது.

அதுசரி, உந்த இன்போக் குழுமத்துக்கை எத்தினை பேர் இருக்கிறியள் சுபத்திரா அக்கா?? ஒன்Dஉ, ரெண்டு..??சரி, விடுங்கோ, ஒரு அஞ்சு பேராவது?? இவ்வளவும் கதைச்சுப்போட்டன், ஒரு சின்ன ஐடியா தரட்டே?? பேசாம உங்கட இன்போக்குழுமத்தின்ர பெயரை, கே.பீ குழுமம் எண்டு மாத்தினியள் எண்டால் இன்னும் கலாதியா இருக்கும், ஏன் சொல்லுறன் எண்டால், சனத்துக்கும் நீங்கள் எங்க இருந்து வாறியள் எண்ட தெளிவாவது பிறக்கும். உங்களுக்கும் கரைச்சலில்லை( இந்த ரெண்டும் கெட்டான் நிலையில் இருந்து அழுது வடியிறதைக் காட்டிலும்) எங்களுக்கும் உங்கட விழலை மினக்கெட்டு வாசிக்க வேன்டிய தேவையுமிருக்காது.

சர் சுபத்திரா அக்கா, உங்களுக்கு அக அலுவலிருக்கும், இன்னும் எத்தினை தளங்களில கே.பீ அங்கிலை நல்லவர் என்டு காட்ட நீங்கள் எழுதவேண்டியிருக்கும், பாவம் உங்கட அந்தரம் தெரியாம நானும் மினக்கெடுத்டிப்போட்டன், போட்டு வாங்கோ, அந்த பெயரை மாத்திறதைப் பற்றிக் கொஞ்சம் நல்லத் திங்க் பண்ணிப் பாருங்கோ.

உண்மையுள்ள ரகுனாதன் தம்பி.

எல்லா இயக்கமும் தான் உடைந்தது.பலர் விட்டு விட்டும் ஓடினார்கள்.ஆனால் அவர்களில் பலர் இப்போ பல்வேறு இணயதளங்களில் எழுதி வருகின்றார்கள்.எவ்வளவு தெளிவாகவும் எமது பிரச்சனையை உணர்ந்தவர்களாகவும் நடைமுறைக்கு ஏற்றவாறும் கருத்துக்கள் எழுதி வருகின்றார்கள்.

புலிகள் உடைந்ததும், பின்பு அழிந்ததும் அவர்கள் எழுதும் கருத்துக்களை பார்க்க யாரும் ஒருவராவது அரசியல் தெளிவுடன் புலியில் இருந்தார்களா என சந்தேகமாக இருக்கின்றது.

ஆயுதம் தான் புலிகளின் பலமே ஒழிய அரசியல் அவர்களுக்கு சூனியம் என்பதை நிரூபிப்பது போல் அவர்களது ஆக்கங்கள் இருக்கின்றன.என்னென்றுதான் ஒன்றுமேயில்லாத ஒரு ஆக்கத்தை பக்கம் பக்கமாக எழுதுகின்றார்களோ தெரியவில்லை.சேரமான்,இதயசந்திரன்,தெய்வீகன் இவர்களெல்லாம் சாம்பார் வைப்பது எப்படி என கட்டுரை எழுதுவது நல்லது என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: அவையள் எப்பிடி சாம்பார் வைக்கிறதெண்டு எழுதட்டன், நீர் எப்பிடி நக்கி மீசையில் ஒட்டாமக் குடிக்கிறீர் எண்டுறதை எழுதும்.
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இயக்கமும் தான் உடைந்தது.பலர் விட்டு விட்டும் ஓடினார்கள்.ஆனால் அவர்களில் பலர் இப்போ பல்வேறு இணயதளங்களில் எழுதி வருகின்றார்கள்.எவ்வளவு தெளிவாகவும் எமது பிரச்சனையை உணர்ந்தவர்களாகவும் நடைமுறைக்கு ஏற்றவாறும் கருத்துக்கள் எழுதி வருகின்றார்கள்.

புலிகள் உடைந்ததும், பின்பு அழிந்ததும் அவர்கள் எழுதும் கருத்துக்களை பார்க்க யாரும் ஒருவராவது அரசியல் தெளிவுடன் புலியில் இருந்தார்களா என சந்தேகமாக இருக்கின்றது.

ஆயுதம் தான் புலிகளின் பலமே ஒழிய அரசியல் அவர்களுக்கு சூனியம் என்பதை நிரூபிப்பது போல் அவர்களது ஆக்கங்கள் இருக்கின்றன.என்னென்றுதான் ஒன்றுமேயில்லாத ஒரு ஆக்கத்தை பக்கம் பக்கமாக எழுதுகின்றார்களோ தெரியவில்லை.சேரமான்,இதயசந்திரன்,தெய்வீகன் இவர்களெல்லாம் சாம்பார் வைப்பது எப்படி என கட்டுரை எழுதுவது நல்லது என நினைக்கின்றேன்.

மற்ற இயக்கங்களில் இருந்து பிரிந்தவர்கள் எழுதும் கட்டுரைகளை அமெரிக்க சீனா போன்ற நாடுகளின் உளவு துறைகளே தமிழ் தெரிந்தவர்களை கொண்டு மொழிபெயர்க்கிறார்கள். சர்வதேச அரசியல் பற்றி அவ்வளவு தெளிவாகவும் தீர்க்க தரிசனமாகவும் எழுதுகிறார்கள். அதைகூட வியக்காது விடலாம் ஆனால் பருப்பு கறுப்பு என்று எத்தனை அழகாக தமிழ்பெயர்களை தமது இணையதளங்களுக்கு வைத்து எத்தனை அழகாக தமிழை கையாள்கின்றார்கள். நான் கூட செம்மொழி வேந்தன் ஐயா கருணாநிதி அவர்கள் அண்மையில் மாநாடு வைத்து தமிழுக்கு ஆற்றிய தொண்டுக்கு சேர்ந்து தொண்டாற்ற அந்த அற்புதர்களையும் அழைப்பார் என்றுதான் எதிர்பாத்திருந்தேன். ஆனால் அவர்களது செந்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு செல்பவர்களுக்கு விளங்காது என்ற காரணத்தால் கைவிட்டதாகவே உள்ளிருந்து தகவல்கள் கசிகின்றன. அந்தளவு தமிழையும் சர்வதேச அரசியலையும் ஒன்றாக பிழிந்து சாறாக வடிக்கின்றார்கள்.

செம்மொழி மாநாட்டு காரர்போல எமக்கு தெளிவாக விளங்குவதில்லை........

சர்வதேச அரசியலில் பால்மண்டல அளவுக்கு பிரபல்யம் இல்லாவிட்டாலும்........ உலகளாவிய ரீதியில் பிரபல்யமான உங்களைபோன்றவர்களுக்கு அது புரிய கூடியதாக இருக்கின்றது.

எல்லா இயக்கமும் தான் உடைந்தது.பலர் விட்டு விட்டும் ஓடினார்கள்.ஆனால் அவர்களில் பலர் இப்போ பல்வேறு இணயதளங்களில் எழுதி வருகின்றார்கள்.எவ்வளவு தெளிவாகவும் எமது பிரச்சனையை உணர்ந்தவர்களாகவும் நடைமுறைக்கு ஏற்றவாறும் கருத்துக்கள் எழுதி வருகின்றார்கள்.

தெரியவில்லை.சேரமான்,இதயசந்திரன்,தெய்வீகன் இவர்களெல்லாம் சாம்பார் வைப்பது எப்படி என கட்டுரை எழுதுவது நல்லது என நினைக்கின்றேன்.

அரசியல் கட்டுரையிலும்பார்க்க கவிதை,கதைகள் நல்லாய் எழுதினம்,கொப்பி பெஸ்ட நல்லாய் செய்யினம்

இணக்க அரசியல் செய்ய அரசியல் அறிவு தேவையில்லையுங்கோ

ஆயுதம் தான் புலிகளின் பலமே ஒழிய அரசியல் அவர்களுக்கு சூனியம் என்பதை நிரூபிப்பது போல் அவர்களது ஆக்கங்கள் இருக்கின்றன.என்னென்றுதான் ஒன்றுமேயில்லாத ஒரு ஆக்கத்தை பக்கம் பக்கமாக எழுதுகின்றார்களோ தெரியவில்லை.சேரமான்,இதயசந்திரன்,தெய்வீகன் இவர்களெல்லாம் சாம்பார் வைப்பது எப்படி என கட்டுரை எழுதுவது நல்லது என நினைக்கின்றேன்.

உங்களுக்கு எண்டு ஆக்கங்களே கிடையாது நீங்கள் எல்லாம் ஆக்கங்கள் பற்றி பேசுகிறீர்களாக்கும்...!

புலிகள் தமிழீழம் பூராகவும் அனைத்து வகையான நிர்வாகங்களையும் கட்டி அமைத்து வந்தனர்... அது அரசியல் இல்லையா ஆக்கம் இல்லையா...?? குருடன் யானை தும்பிக்கையை தொட்டு பாத்து விட்டு யானை உலக்கை மாதிரி இருக்கும் எண்டு சொன்ன மாதிரி தான் உங்கட கோமாளித்தனமும்...

எல்லா இயக்கமும் தான் உடைந்தது.பலர் விட்டு விட்டும் ஓடினார்கள்.ஆனால் அவர்களில் பலர் இப்போ பல்வேறு இணயதளங்களில் எழுதி வருகின்றார்கள்.எவ்வளவு தெளிவாகவும் எமது பிரச்சனையை உணர்ந்தவர்களாகவும் நடைமுறைக்கு ஏற்றவாறும் கருத்துக்கள் எழுதி வருகின்றார்கள்.

புலிகள் உடைந்ததும், பின்பு அழிந்ததும் அவர்கள் எழுதும் கருத்துக்களை பார்க்க யாரும் ஒருவராவது அரசியல் தெளிவுடன் புலியில் இருந்தார்களா என சந்தேகமாக இருக்கின்றது.

ஆயுதம் தான் புலிகளின் பலமே ஒழிய அரசியல் அவர்களுக்கு சூனியம் என்பதை நிரூபிப்பது போல் அவர்களது ஆக்கங்கள் இருக்கின்றன.என்னென்றுதான் ஒன்றுமேயில்லாத ஒரு ஆக்கத்தை பக்கம் பக்கமாக எழுதுகின்றார்களோ தெரியவில்லை.சேரமான்,இதயசந்திரன்,தெய்வீகன் இவர்களெல்லாம் சாம்பார் வைப்பது எப்படி என கட்டுரை எழுதுவது நல்லது என நினைக்கின்றேன்.

தோழரின் இங்குள்ள பல கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன்! .. அரசியலற்ற அரசியல்துறையின் தமிழ்செல்வன்கள் அன்று/இன்று சிங்களத்துடன் காட்டிக்கொடுத்து/சரணடைந்து/நின்று ஊழியம் செய்வதே ... எங்கே அரசியல் என்பதற்கு ஒரு நல்ல சான்றாகும்!

... இன்றும் புலத்தில் ... தெளிவான நோக்குடன், எதிர்கால இலக்கு தொடர்பாக பொதுக்கொள்கையுடன் ... இத்தனை அழிவுகளுக்கு பின்னும் ... விட்டுக்கொடுப்புகள், தொடர்பாடல்கள் மூலம் இணைந்து செயற்படாமல் குட்டைகளை குழப்பியபடியும், குடும்பியடிச் சண்டையில் ஈடுபட்டுவருவது ... சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலிலா? என சந்தேகிக்க வைக்கிறது!!!!

தோழரின் இங்குள்ள பல கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன்! .. அரசியலற்ற அரசியல்துறையின் தமிழ்செல்வன்கள் அன்று/இன்று சிங்களத்துடன் காட்டிக்கொடுத்து/சரணடைந்து/நின்று ஊழியம் செய்வதே ... எங்கே அரசியல் என்பதற்கு ஒரு நல்ல சான்றாகும்!

ஒரு சிலர் செய்கிறார்கள் என்பதுக்காக அனைவரையும் ஒண்றாக சொல்வதும் ஒருவகையான வியாதியே... நீங்களாக உங்களை அவர்களின் இருந்து பிரித்து வைத்து கொள்ளூம் இந்த செயல் கூட இலங்கை புலநாய்வு பிரிவின் நிகழ்ச்சி நிரலும் கூட ...

ஒருவரை கண்டமானத்துக்கு ( கட்டுகத்தைகளை கட்டி ) ஏசிக்கொண்டு அவர் என்னுடன் வந்து சமாதானம் பேச்ச வேண்டும் எண்று சொல்வது உங்களை பொறுத்தவரைக்கும் சரியாக இருக்கலாம்... என்னை பொறுத்தவரைக்கும் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுபவர்கள் உண்மை தெரிந்தவர்களுக்கு சந்தேக நபர்களே...!

அதை எல்லாத்தையும் விட மிக முக்கியமாக நீங்கள் எல்லாம் வரிசையில் நிண்டு யாருக்கு அறிவுரை சொல்கிறீர்கள்....?? புலிகளுக்கா இல்லை புலிகளின் ஆதர்வாளர்களுக்கா....??? ஏன் அப்படி அறிவுரை சொல்லி மினக்கெடுகிறீர்கள்....?? அவர்களை ஒதுக்கி விட்டு நீங்களே தலைமை ஏற்று செயற்படலாமே...??? இப்பதான் தடைகளே இல்லையே...! காசு மட்டும் தானே புலிகளுக்கு இப்ப குறி...?

Edited by தயா

புலிகளின் கட்டமைப்புகள் பெரும்பாலும் தனிநபர் விசுவாசத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப் பட்டிருந்தன. இதன் விளைவுகள் தான் இப்போதும் நெடியவன் குழு, கேபி குழு, ராம் குழு மற்றும் உருத்திரகுமார் குழு என்று பிரிந்து கிடக்கிறது. இதை விட கொள்கைப் பிரச்சனை என்பது புலிகளின் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பதற்கப்பால் பெரியளவில் முன்னேறிச் செல்லவில்லை.

ஏக தலைமை, ஏகபோக பிரதிநிதிக் கோட்பாடுகளைப் பேணி வந்தவர்கள் தமக்குள் ஒரு ஏகதலைவனை இன்னும் அறிவிக்க முடியாத நிலையிலேயே உள்ளனர். தாம் நம்பி வந்த ஏகபிரதிநிதித்துவக் கோட்பாட்டுக் கட்டமைப்புகள் தமது கண்முன்னாலேயே உடைந்து சிதைந்து போனதை உணர முடியாத சிலர் அதனை இன்னமும் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்களிடம் கோபமும் இயலாமையும் தான் இனி வெளிப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இயக்கமும் தான் உடைந்தது.பலர் விட்டு விட்டும் ஓடினார்கள்.ஆனால் அவர்களில் பலர் இப்போ பல்வேறு இணயதளங்களில் எழுதி வருகின்றார்கள்.எவ்வளவு தெளிவாகவும் எமது பிரச்சனையை உணர்ந்தவர்களாகவும் நடைமுறைக்கு ஏற்றவாறும் கருத்துக்கள் எழுதி வருகின்றார்கள்.

புலிகள் உடைந்ததும், பின்பு அழிந்ததும் அவர்கள் எழுதும் கருத்துக்களை பார்க்க யாரும் ஒருவராவது அரசியல் தெளிவுடன் புலியில் இருந்தார்களா என சந்தேகமாக இருக்கின்றது.

ஆயுதம் தான் புலிகளின் பலமே ஒழிய அரசியல் அவர்களுக்கு சூனியம் என்பதை நிரூபிப்பது போல் அவர்களது ஆக்கங்கள் இருக்கின்றன.என்னென்றுதான் ஒன்றுமேயில்லாத ஒரு ஆக்கத்தை பக்கம் பக்கமாக எழுதுகின்றார்களோ தெரியவில்லை.சேரமான்,இதயசந்திரன்,தெய்வீகன் இவர்களெல்லாம் சாம்பார் வைப்பது எப்படி என கட்டுரை எழுதுவது நல்லது என நினைக்கின்றேன்.

ஓ, புலிகளுக்கு அரசியல் தெரியாமல் பேச்சு வார்த்தையில் தோசை சாப்பிட்டவையாக்கும். :rolleyes::lol:

கிழக்கின் மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இது குறித்த உண்மை நிலமைகளை அறிவதற்காக ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளரின் பார்வை மட்டக்களப்பை நேக்கி திரும்பியது.

இதில் ஊடகங்களின் பார்வைக்கு எட்டாத தகவல்கள் ஜீ.ரீ.என்னிற்குக் கிடைத்துள்ளன. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடும்பி மலை என்ற தொப்பிக்கலப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இராணுவத் தொண்டர் படையைச சேர்ந்த 4 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

கிழக்கின் காடுகளில் எஞ்சிய விடுதலைப் புலிகள் இருக்கலாம் என்று அச்சப்படும் இலங்கைப் படையினர் இராணுவத் தொண்டர் படையைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களுக்கு புலிகளின் சீருடைகளை அணிவித்து இந்தக் காடுகளில் நோட்டம் விட அனுப்பியிருந்தனர். இவர்கள் கருணாவின் பிளவிற்கு முன்பாக ராசீக் குழு உள்ளிட்ட ஏனைய ஆயுதக் குழுக்களில் இருந்து இராணுவத் தொண்டர் படையாக இணைந்திருந்த தமிழ் இளைஞர்கள் என ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பழைய இரணுவத் தொண்டர் படையைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் புலிகளின் சீருடையில் குடும்பிமலைக் காடுகளுக்கு புலனாய்வுக்காக சென்றிருந்ததனை அறியாத புதிய இராணுவத் தொண்டர் படையைச் சேர்ந்தவர்கள் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் புலிகளின் சீருடையில் சென்றவர்கள் கொல்லப்பட்டார்கள்.

கருணாவின் பிரிவிற்குப் பின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பலர் இராணுவத் தொண்டர் படைக்கு புதிதாக இணைக்கப்பட்டதுடன் பல முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் மட்டக்களப்பின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களில் ஆயுதம் தரித்தநிலையில் நிலைகொண்டுள்ளனர்.

ஆக இரு பிரிவுகளான இராணுவத் தொண்டர் படையைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களே மொதிக்கொண்டனர் என்பதும் அவர்களில் கிழக்கைச் சேர்ந்த நால்வரே பலியாகினர் என்பதும் பின்னர் இராணுவ மரியாதையுடன் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது என்பதும் இப்போது ஐP.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளருக்கு தெரிய வந்துள்ளது.

இதேவேளை அண்மையில் கிபீர் விமானக் குண்டு வீச்சுக்கள் இடம்பெற்றதாக வெளிவந்த தகவல்கள் குறித்து ஆராய்ந்த ஜீ.ரீஎன்னின் விசேட செய்தியாளர் கிபீர் விமானப் பறப்பு மட்டுமே குடும்பிமலைப் பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

கிழக்கின் முக்கிய படைத் தலைமை மையம் மின்னேரியாவிலேயே உண்டு. கொழும்பில் இருந்து அல்லது மின்னேரியாவில் இருந்து மட்டுமே கிபீர் பறப்புகள் இடம்பெறமுடியும் என தெரிவித்த ஜீ.ரீஎன்னின் விசேட செய்தியாளர் குடும்பி மலைப் பிரதேசத்தின் ஊடாக பாரிய இரைச்சலுடன் கிபீர் விமானம் பறந்ததாக மக்கள் கூறியதாக தெரிவித்தார். மக்கள் நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதிகளில் எஞ்சிய புலிகள் ஒழிந்திருக்கலாம் என்ற அச்சமும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் ஜீ.ரீஎன்னின் விசேட செய்தியாளர் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=26722&cat=1

புலிகளின் கட்டமைப்புகள் பெரும்பாலும் தனிநபர் விசுவாசத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப் பட்டிருந்தன. இதன் விளைவுகள் தான் இப்போதும் நெடியவன் குழு, கேபி குழு, ராம் குழு மற்றும் உருத்திரகுமார் குழு என்று பிரிந்து கிடக்கிறது. இதை விட கொள்கைப் பிரச்சனை என்பது புலிகளின் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பதற்கப்பால் பெரியளவில் முன்னேறிச் செல்லவில்லை.

ஏக தலைமை, ஏகபோக பிரதிநிதிக் கோட்பாடுகளைப் பேணி வந்தவர்கள் தமக்குள் ஒரு ஏகதலைவனை இன்னும் அறிவிக்க முடியாத நிலையிலேயே உள்ளனர். தாம் நம்பி வந்த ஏகபிரதிநிதித்துவக் கோட்பாட்டுக் கட்டமைப்புகள் தமது கண்முன்னாலேயே உடைந்து சிதைந்து போனதை உணர முடியாத சிலர் அதனை இன்னமும் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்களிடம் கோபமும் இயலாமையும் தான் இனி வெளிப்படும்.

அப்ப தமிழரில் எந்த குழு கொள்கை பற்றொடை இருக்கு...??? இன்னுமொரு அரசியல் குழுவோ...??

நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களை நம்புகிறீர்கள் அது போலதான் இதுவும்.. அவர் அவர்கள் தங்களுக்கு நம்பிக்கையாவரகளுடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள்... அது தான் குழு நிலை எண்டால் அப்படியே இருந்து விட்டு போகட்டும்... எதுவுமே செய்யாமல் இருந்து விமர்சனம் செய்வதை விட இது எவ்வளவோ பறவாய் இல்லை...

Edited by தயா

அப்ப தமிழரில் எந்த குழு கொள்கை பற்றொடை இருக்கு...??? இன்னுமொரு அரசியல் குழுவோ...??

நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களை நம்புகிறீர்கள் அது போலதான் இதுவும்.. அவர் அவர்கள் தங்களுக்கு நம்பிக்கையாவரகளுடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள்... அது தான் குழு நிலை எண்டால் அப்படியே இருந்து விட்டு போகட்டும்... எதுவுமே செய்யாமல் இருந்து விமர்சனம் செய்வதை விட இது எவ்வளவோ பறவாய் இல்லை...

இப்போதுள்ள நிலையில் எந்தக் குழுவையும் காட்டிப் பரிந்துரை செய்யும் நிலையில் எமது இனம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் மரத்துப் போன எமது ஒடுக்கப் பட்ட இனத்தின் கோட்பாட்டுத் தளத்தினை இயங்கு நிலைக்குக் கொண்டுவருவதாயின் இன்னும் சில வருடங்களாவது நாம் அதனை நோக்கி வேலை செய்ய வேண்டியிருக்கும். தனி நபர் சம்பந்தப் பட்ட நம்பிக்கைகள் இயல்பானதே ஆனால் அதுவே நாம் முன்பு விட்ட தவறுகள் தொடரக் காரணமாக இருந்து விடக் கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா இயக்கமும் தான் உடைந்தது.பலர் விட்டு விட்டும் ஓடினார்கள்.ஆனால் அவர்களில் பலர் இப்போ பல்வேறு இணயதளங்களில் எழுதி வருகின்றார்கள்.எவ்வளவு தெளிவாகவும் எமது பிரச்சனையை உணர்ந்தவர்களாகவும் நடைமுறைக்கு ஏற்றவாறும் கருத்துக்கள் எழுதி வருகின்றார்கள்.

புலிகள் உடைந்ததும், பின்பு அழிந்ததும் அவர்கள் எழுதும் கருத்துக்களை பார்க்க யாரும் ஒருவராவது அரசியல் தெளிவுடன் புலியில் இருந்தார்களா என சந்தேகமாக இருக்கின்றது.

ஆயுதம் தான் புலிகளின் பலமே ஒழிய அரசியல் அவர்களுக்கு சூனியம் என்பதை நிரூபிப்பது போல் அவர்களது ஆக்கங்கள் இருக்கின்றன.என்னென்றுதான் ஒன்றுமேயில்லாத ஒரு ஆக்கத்தை பக்கம் பக்கமாக எழுதுகின்றார்களோ தெரியவில்லை.சேரமான்,இதயசந்திரன்,தெய்வீகன் இவர்களெல்லாம் சாம்பார் வைப்பது எப்படி என கட்டுரை எழுதுவது நல்லது என நினைக்கின்றேன்.

புலிகள் செய்த பிழைகளை பெரிய தத்துவார்தங்களோடு எழுதுகின்றார்கள். அது உங்களுக்கு பெரிய அரசியல். அதை என்னால் கூட செய்யமுடியும். என்ன பெரிய வேலை ஒன்றும் இல்லை ... புலிகள் விட்ட பிழைகளை பூதாகாரப் படுத்துவது அந்த இடங்களில் சே குவெரா, பிடல் கஸ்ரோ, நெல்சன் மண்டேலா என்ன செய்தார்கள் என்பதை ஏதொ நேரிலிருந்து பார்த்தவர்கள் மாதிரி அடித்து விடுவது. ஒரு அரை வேக்காடானுக்கு பார்க்க ஆகா என்ன அருமையான அரசியல் தெளிவு என்று இருக்கலாம்.

ஆனால் இவர்களில் எவராவது தமிழர் என்ன செய்ய வேண்டும்? எப்படிப் பட்ட தீர்வை நோக்கி நகர வேண்டும்? இப்படி எதையாவது எழுதியிருப்பார்களா?

இப்போதுள்ள நிலையில் எந்தக் குழுவையும் காட்டிப் பரிந்துரை செய்யும் நிலையில் எமது இனம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் மரத்துப் போன எமது ஒடுக்கப் பட்ட இனத்தின் கோட்பாட்டுத் தளத்தினை இயங்கு நிலைக்குக் கொண்டுவருவதாயின் இன்னும் சில வருடங்களாவது நாம் அதனை நோக்கி வேலை செய்ய வேண்டியிருக்கும். தனி நபர் சம்பந்தப் பட்ட நம்பிக்கைகள் இயல்பானதே ஆனால் அதுவே நாம் முன்பு விட்ட தவறுகள் தொடரக் காரணமாக இருந்து விடக் கூடாது.

அதோடு புரியாத வசனங்கள் இல்லை ஒரு சாமானியனுக்கு புரியாத வசனைங்களை பேட்டு எழுதினால் எல்லாரும் நினைப்பதுண்டு நாங்கள் அறிவாளிகள் எங்களை யாரும் எதிர்க்க முன் வரமாட்டார்கள் எண்டு...

அண்ணை நீங்கள் சொல்லுங்கள் அரசியல் எண்டால் என்ன... அரசியல் எனும் சொல்லுக்கு என்ன விளக்கம்...??

(நீங்கள் சொன்ன உருத்திரகுமார் குழுவை விடுதலை புலிகள் குழு ஆதரிக்கிறது... நீங்கள் சொல்வது போல மக்களை அணி திரட்டும் ஆதரவு தளத்தோடுதான் புலிகள் எனும் சொல்லு இருக்கிறது... )

அதோடு புரியாத வசனங்கள் இல்லை ஒரு சாமானியனுக்கு புரியாத வசனைங்களை பேட்டு எழுதினால் எல்லாரும் நினைப்பதுண்டு நாங்கள் அறிவாளிகள் எங்களை யாரும் எதிர்க்க முன் வரமாட்டார்கள் எண்டு...

அண்ணை நீங்கள் சொல்லுங்கள் அரசியல் எண்டால் என்ன... அரசியல் எனும் சொல்லுக்கு என்ன விளக்கம்...??

(நீங்கள் சொன்ன உருத்திரகுமார் குழுவை விடுதலை புலிகள் குழு ஆதரிக்கிறது... நீங்கள் சொல்வது போல மக்களை அணி திரட்டும் ஆதரவு தளத்தோடுதான் புலிகள் எனும் சொல்லு இருக்கிறது... )

புலிகளின் எந்தக் குழு எண்டதைச் சொன்னா நாங்களும் தெரிஞ்சு கொள்ளுவமே. சாமானியனுக்குப் புரியாத வசனம் என்ன எழுதப் பட்டிருக்கு?

புலிகளின் எந்தக் குழு எண்டதைச் சொன்னா நாங்களும் தெரிஞ்சு கொள்ளுவமே. சாமானியனுக்குப் புரியாத வசனம் என்ன எழுதப் பட்டிருக்கு?

புலிகளின் எந்த குழு எண்டு உருத்திர குமாருக்கு தெரியும்... அவர்தான் சொல்லி இருக்கிறாரே ... அதுகளை எல்லாம் கேக்க மாட்டியளோ...??

எமது இனத்தின் கோட்ப்பாட்டு தளம் எண்டு என்னைத்தியோ சொல்ல முனைந்தீர்களே... அது என்ன...?? தமிழ் மக்களின் கோட்ப்பாடுதான் என்ன...?? உங்கட மனசுக்கை என்ன இருக்கு எண்டு எங்களுக்கு என்னத்தை தெரியும்... ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.