Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. குறூப்பில இன்னொரு ஆள் சேர்ந்திட்டாரய்யா..! :lol: கற்பனை நல்லாயிருக்கு குட்டி..! :D

சரி.. இன்னும் யாரெல்லாம் இருக்கிறீங்கள்..! :lol:

  • Replies 225
  • Views 21.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையிலும் கதை எழுதிய தமிழ்சிறி, ரதி, குட்டி ஆகியோருக்கு நன்றிகள்..! :lol: உங்களுக்கு இந்தப் பாடல் காட்சியைக் காணிக்கையாக்குகிறேன்..!! :lol::D

:D

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்திலிருந்து தாக்குகின்றார்கள். :lol:

க்ண்ணை மூடித் திறப்பதற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா? :lol:

குட்டியின் கற்பனையும் நல்லாத்தான் இருக்கின்றது. :D

அப்பவும் சொன்னனான் விடாதேங்கோ தொடருங்கோ தொடருங்கோ எண்டு.விதி ஆரை விட்டது. :D

இருந்தாலும் ஒரு மனுசனை இப்படி எல்லாரும் சேர்ந்து தாக்கக் கூடாது. :D

அவர் ஒற்றை ஆளாய் நிண்டு எத்தனை பேரைத் துவைச்செடுத்தவர் ^_^

கடவுளே இனி இசையின் தாக்குதலுக்கு உள்ளாகப் போகும் களத் தோழர்களை யார் காப்பாற்றுவார்? :D:D

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையிலும் கதை எழுதிய தமிழ்சிறி, ரதி, குட்டி ஆகியோருக்கு நன்றிகள்..! :lol: உங்களுக்கு இந்தப் பாடல் காட்சியைக் காணிக்கையாக்குகிறேன்..!! :lol::D

:D

என்ன இசை

இதைப்பார்த்தால்

போதும் நிறுத்துங்கள் என்று கெஞ்சுவது போல் உள்ளதே....

எங்கே அந்த மானஸ்தன் இசை....???

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டைப் பார்த்தால் நிலமை மோசம் போலை இருக்குது :D

ஆர் முதல்ல வாங்கிக் கட்டப் போகினமோ ? :lol::lol:

எதுக்கும் எளிதின ஆக்களும் ஊக்கம் அளித்த ஆக்களும் உசாராய் இருங்கோ!!! :D:D

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டைப் பார்த்தால் நிலமை மோசம் போலை இருக்குது :D

ஆர் முதல்ல வாங்கிக் கட்டப் போகினமோ ? :lol::lol:

எதுக்கும் எளிதின ஆக்களும் ஊக்கம் அளித்த ஆக்களும் உசாராய் இருங்கோ!!! :D:D

வாத்தியார்

*********

அதெப்படி வாத்தியார்

இவர் சிரித்த, போட்ட ஆட்டத்துக்குத்தானே

ஆளாளுக்கு தீர்ப்பு வழங்குகிறார்கள்.

இனி இவர் போட்டா

இப்ப ஒவ்வொன்றா போடுகிறவர்கள்

ஒன்றாய்ச்சேர்ந்து போட மாட்டார்களா...?

எதற்கும் இசை பின் வாங்குவதுதான் நல்லது என்று இந்த போடலைப்பார்த்த பிறகு எனக்கு தெரியுது

இதை வைத்து யாராவது ஆராய்ச்சிக்கட்டுரை அல்லது அலசல் செய்வதுதான் இனி நடக்கப்போகுது போல....

  • கருத்துக்கள உறவுகள்

ராமதேவா.. இதுக்கெல்லாம் அசந்திடுவோமா? இப்புடுச் சூடு.. :lol:

http://www.youtube.com/watch?v=Looe44Refgo

:lol:

நல்ல காரியம் நடக்கும் போது சில தடங்கல்களும் நிகழதான் செய்யும். :D:D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காரியம் நடக்கும் போது சில தடங்கல்களும் நிகழதான் செய்யும். :lol::lol:

நம்ம இசையின் நிலை இப்படி ஆச்சே... :D:D

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை விடுமுறைக்கு குடும்பத்துடன் லண்டன் வந்த ' டங்கு' தனது நண்பன் ஒருவரின் குடும்பத்துடன் தங்கினார். இளையராஜாவின் இசையில் மயங்கும் பசை, அன்று வழக்கத்திற்கு மாறாக ARR இன் இசையில் "டங்கு டக்கு...டங்கு... டக்கு... டங்கு டக்கு... டங்கு டக்கு...." அந்தப் பாடலை முணு முணுத்த வண்ணம் டப்பாங் குத்து போட்டபடியே துவாயுடன் பாத்ரூம் பக்கம் போனார்...

"அங்க என்ன சத்தம்?" என்ற மனைவியின் மெதுமையான குரலில் வந்த கேள்விக்கு, " அது ஒண்ணுமில்லிங்... சும்மா ஒரு பாட்டுக்கு முன்னால் வாற மீசிக்ங்கோ..." என்று பம்மினார். "சரி சரி கெதியா போட்டு வந்தால் தானே மற்றாக்களும் ரெடியாக ஏலும்" என்று சொல்ல, ஐந்து நிமிசத்தில வாறன் என்றபடி உள்ளே நுழைந்தார். "ஐஞ்சு நிமிசமோ? அரைமனதியாலம் என்றாலும் பறவாய் இல்லையடா மச்சான் இண்டைக்காவது ஒழுங்கா குளியடா பிளீஸ்" என்ற நண்பனின் பதிலை கேட்டு சிரித்தவாறே குளிக்கத் தொடங்கினார்.

மியூசிக் தானே போட்டம், இப்ப மனுசிக்குக் கேட்காது தானே என்றபடி மீதிப் பாடலையும் மெதுவாகப் பாடத் தொடங்கினார்...

'டங்கு டக்கு... டங்கு டக்கு.... டங்கு டக்கு... டங்கு டக்கு...

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு...

சிகரத்தை அடைந்தால் figure-றினைப் பாரு...

என்பேரு டங்குயப்பா

எடுபட்ட நடையப்பா

என்னோட உள்ளதெல்லாம்

உவதிங்க படையப்பா

நெஞ்சில் ஆறு படையப்பா

பினால நூறு figure-ரப்பா

பிரச்னை என்று வரும் போது

மனைவியிடம் சரண்டரப்பா

(சரண்டரப்பா சரண்டரப்பா)

பாசமுள்ள மனுசனப்பா

நான் மீசை வளிச்ச குழந்தையப்பா

என்றும் நல்ல தம்பி நானப்பா

நன்றி உள்ள ஆளப்பா

காலாட்டி வளத்தது

கனடா நாட்டு மண்ணப்பா' :D:lol:

ஒரு மாதிரி குளியலறையை விட்டு வெளியே வந்தவர் வாய் சும்மா இருக்க ஏலாமல், " நான் லண்டனுக்கு வந்து இரண்டு நாள் தான் ஆகுது, ஆனால் சரியாக மெலிஞ்சு போனேன்" என்றார். அது நண்பனின் காதில் கேட்கவே, "மச்சான் நீ லண்டனுக்கு வந்து இரண்டு நாளில மேலிஞ்சது மாதிரி தெரிய இல்லையடா, இப்ப அரை மணத்தியாலத்துக்குள்ளே மேலிஞ்சது மாதிரித் தான் இருக்கு" என்றதும் மெல்ல நல நழுவி மனைவி எடுத்து வைத்து இருந்த உடைகளை போட ஆரம்பித்தார். ஏறக் குறைய இரண்டு மணிநேராமாகி விட்டது, டங்கு கண்ணாடியுடன் ஒட்டிக் கொள்ளாத குறையாக அறையை விட்டு வெளியே வராமல் இருந்தவரை நேரத்துக்கு வரும் படி மனைவியும், மகளும் நண்பனுமாக அழைத்தார்கள். எங்கு போனாலும், ஒரு மாப்பிள்ளை ரேஞ்சில் தன்னை அலங்கரிப்பது அவரின் ஸ்டைல். (யப்பா..... தாங்க முடியலடா சாமி!) டங்குவின் ஸ்டைலைக் கண்ட நண்பன் டங்குவின் மகளிடம், "அங்க நிறைய பேர் நிப்பினம் அப்பாட கையைப் பிடிச்ச படியே தான் நிக்க வேணும்" என்று சொன்னதும், ஆ.. கா... மகளுக்கு ஐடியா குடுக்கிறானே என்று உள்ளுக்குள்ளே நொந்தது கொண்டவர் வெளியே காட்டிக் கொள்ளாமல், "அங்க நிறைய அங்கிள் மாரோட அப்பா பிஸியாக இருப்பேன் நீங்கள் அம்மாவோட தான் நிக்கோணும்" என்றதும், அவரது மனைவியார் ஒரு புன்சிரிப்புடன் சரி எனத் தலையாடினார்.

எல்லோரும் மாலை 5 .30 மணியளவில் கல்லூரி பழைய மாணவர் ஒன்றுகூடல் விழாவுக்கு வந்து இருந்தார்கள். மண்டப நுழைவாயிலில் நுழையும் போது சேரனின் 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே....' பாடல் ஒலிக்கிறது. கண்களுக்குக் குளிர்மையாக வானவில்லின் வர்ணங்களில் சாறி என்ன... சுடிதார் என்ன... ஸ்...ஸ்....ஸ்....எங்கு பார்த்தாலும் பிகருகள்... 'ஓ... வந்தது பெண்ணா.... வானவில் தானா...???' என்றபடி கண்ணகள் கட்டுப்பாடு இன்றி அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தை கஷ்டப் பட்டு கொன்றோலில் கொண்டு வந்தார். நண்பர்களைப் பார்த்த சந்தோசத்தில் கட்டித் தழுவி சுகம் விசாரித்தவர், பிகருகளைப் பார்த்து கைகுலுக்கி கண்ணடித்து வணக்கம் தெரிவித்துக் கொண்டார். 'பசுமை நிறைந்தத நினைவுகளே... பாடித் திரிந்த பறவைகளே...' பாடல் ஒலிக்கும் போது டங்குவின் கல்லூரியின் பக்கத்துப் பாடசாலையில் படித்த பெண்களை இங்கே காண்கிறார்... ஒரு கணம் அவர்களை வெள்ளை சீருடையிலும் அந்த கோடு கோடு போட்ட கழுத்துப் பட்டியிலும் கன்பனை செய்தது பார்த்த டங்குவின் நண்பன் ஒருவரின் மகன் ஓடிவந்து அவரின் மகளை விசாரித்தான். குனிந்து சிறுவனின் காதில் அவர்கள் இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து figures இருக்கும் இடத்திற்குச் செல்கிறார். தனியாக அங்கே போனதால் அவருக்கு ராஜ மரியாதை கிடைக்கும் என்று எண்ணினார்... கொஞ்ச நேரம் இருந்து அங்குள்ள பெண்களோடும், அவர்கள் சகோதரிகளோடும் அரட்டை அடித்த பின்பு சாப்பாடுப் பக்கம்... கேட்கவா வேணும்??? :lol:

புல் கட்டு கட்டிவிட்டு, திரும்பியவருக்கு இன்ப அதிரிச்சி... ஒரு கோனறில் ஒரு குருப் பெண்கள் (10 -15 ) பாடுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருந்தார்கள். விடுவாரா டங்கு? இளையராஜாவின் பரம விசிரியாச்சே?? அதிலும் ஒரு முக்கிய அறிவித்தலை அறிவித்திருந்தார்கள், அந்த பாட்டுக்குப் பாடு நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர் ஒரு அழகிய பெண்ணின் கையால் பரிசு பெறுவார்கள் என்று... இதுக்குப் பிறகும் டங்கு விடுவாரா?????

தெரிஞ்ச பாட்டு தெரியாத பாட்டு என்று சும்மா பாட்டுகள் என்றால்... சொல்லி வேலை இல்லை... எதிர் பார்த்த படி அவருக்கே பரிசும் வழங்க முடிவெடுத்து இருந்தார்கள். பரிசளிக்க வரும் அந்த அழகிய பெண் எப்படி இருப்பாரோ என்று கற்பனை கடலில் மூழ்கிப் பொய் இருந்தார்... இந்தக் கூட்டத்திலையே அழகான பெண் என்று சொல்லுகிறார்கள்.... பரிசு தரும் போது கைகளை பிடித்து நன்றி சொல்லவேண்டும், அப்படியே கன்னத்தில் சின்னதாக ஒரு முத்தமும் கொடுக்க வேண்டும் என்ற ஒரு முடிவோடு பரிசு வாங்க ரெடியானார். இதோ அந்த அழகான பெண்மணி என்று சொல்லும் போது, தன்னை அறியாமலே டங்கு தனது இரு கண்களையும் இறுக்கி மூடிக் கொண்டார். 'வெல் டான்' என்று சொல்லி பரிசை கொடுக்கும் போது கண்களை மூடியவாறே அந்தப் பெண்ணின் கைகளையும் லேசாகப் பற்றிக் கொண்டார். அதோட நிப்பாட்டாமல், கன்னத்திலும் சிறிதாக ஒரு முத்தத்தையும் கொடுத்த போது "என்ன இது?" என்று அந்தப் பெண்ணின் குரல் கேட்டு கண்ணை திறந்தவருக்கு எள்ளும் கொள்ளும் முகத்தில் கலன் கலனாக வழிந்தது... :D :D :Dவீட்ட வாடி :D :D என்ற தொணியில் டங்குவின் மனைவி கண்ணால் நக்கலாகச் சிரித்ததை டங்கு ஒருவாறு அசடு வழிய சுதாகரித்துக் கொண்டார்!!!

:D^_^47b20s0.gif47b20s0.gif

முடியல குட்டி.எப்பிடி இப்பிடியெல்லாம்??.கற்பனை அருமை.

முடியலை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிச்சாசு... குட்டி கதை சூப்பர் பாடல் சூப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா பல திறமைசாலி களின் முயற்சிகள் பளிச்சிடுகின்றன. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா! குட்டியை கதாசிரியர் ஆக்கிய டன் வாழ்க!! கற்பனை கலக்கலப்பு!!! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இசை

இதைப்பார்த்தால்

போதும் நிறுத்துங்கள் என்று கெஞ்சுவது போல் உள்ளதே....

எங்கே அந்த மானஸ்தன் இசை....???

இதுவரையிலும் எண்டுதானே சொல்லியிருக்கிறன்..! :D மற்றவர்கள் கதைகள் எழுதினாலும் அவர்களுக்கும் எனது பாடல் காணிக்கை உண்டு..! :lol:

இதுவரையிலும் கதை எழுதிய தமிழ்சிறி, ரதி, குட்டி ஆகியோருக்கு நன்றிகள்..! :wub: உங்களுக்கு இந்தப் பாடல் காட்சியைக் காணிக்கையாக்குகிறேன்..!! :rolleyes::D

:lol:

இவர்களுக்கும் பாடலுக்கும் இடையிலுள்ள உள்குத்து விளங்கியிருக்கும் எண்டு நினைச்சன்..! :rolleyes: பரவாயில்லை..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசையார் வீட்டுக் களேபரம்...!

{விசை(வி யார் ... திருமதி விசை(திவி) யார் .. யாழ் திண்ணை (யாதி)}

விசையார் யாழ் திண்ணையில் அரட்டையில் மூழ்கி இருக்கிறார்...

நானே ராஜா நானே மந்திரி நானே தந்திரி.. என்ற பாட்டும் பயனுமாக குசி மூட்டில் இருக்கிறார் விசையார்...

திவியார் அப்போதுதான் சமர் சொப்பிங் முடித்து வீட்டுக்குள் நுழைகிறார். யாதியில் தோழிகளோடு அரட்டையில் குசி மூட்டில் இருந்த வியார் அவரைக் கவனிக்கவே இல்லை. ஆனால் திவியார் கடைக்கண்ணால் நோட்டமிட்டபடி சோபாவில் வந்து மெதுவாக அமர்கிறார். :rolleyes:

சிறிது நேரம்.. தன்னையே மறந்து யாதியில் அரட்டையில் மூழ்க்கி இருந்த வியாரை தெளிவாக அவதானித்து விட்டு ஆரம்பித்தார்..

திவியார்.. என்ன விசைப்பலகை உடையப் போகுது போல... ஐயா தட்டிற தட்டில..

வியார்.. (மனதுக்குள்).. அட இவள் பாவி அதுக்குள்ள வந்துட்டாளே..! ரவுண்டு கட்டி தாக்கப் போறாளே.. அதுக்குள்ள எப்படி சொப்பிங் முடிச்சாள்.. இப்ப.. என்ன செய்யலாம்.. சமாளிப்பம்.... என்று நினைத்துக் கொண்டிருக்க..

திவியார் தொடர்ந்தார்... என்னைத் தனிய கடைக்குப் போகச் சொல்லேக்கையே நினைச்சன். இதுதான் நடக்குமென்று.. அப்படியே நடக்குது.

(திவியார் சொல்லச் சொல்ல வியார் மெளனமாகவே இருந்தார்.. வாயே திறக்கல்ல.)

திவியார்.. என்ன நான் சொல்லுறது காதில விழுகுதோ இல்ல.. ஐயா அரட்டைப் புறத்தில தீவிரமா புரண்டு கொண்டிருக்கிறாரோ..

வியார்..( மனசுக்குள்) சரி இண்டைக்குத் திருவிழாத் தான். (சமர் வெக்கைக்குள்ளேயே கூனிக் குறுகி நடுங்கத் தொடங்கியது வியாருக்கு.)

திவியார்.. பம்மினது காணும்.. எனக்குத் தெரியும் எல்லாம்.. அங்க பொம்பிளப் பிள்ளையளுக்கு சிமலி போட்டு அனிமேசன் படம் போட்டது காணும்.. எழும்பி வரலாம்..

வியார் (மனசுக்குள்ள.. இவள் பாவிக்கு யானைக் கண்.. அங்க இருந்தே இங்க நடக்கிறத அப்படியே ஸ்கான் பண்ணிச் சொல்லுறாளே..)

திவியார்.. என்ன நான் சொல்லிக் கொண்டே இருக்கிறன்.. ஒரு றியாக்சனையும் காணேல்ல.. ஆ..

வியார்.. (மீண்டும் மனதுக்குள்.. சரி தொலைஞ்சன்.. பத்திரகாளி உருக்கொள்ளுது.. எத்தின ரவுண்டோட முடியப் போகுதோ..)

திவியார்.. எழும்பி வந்தன் எண்டால் கணணி சுக்கு நூறாகும். உந்த யாழை நடத்திறவங்களுக்கு வேற வேலை இல்லையே..

வியார்..(மனசுக்குள்).. எனக்குத்தான் பேசுவாள் என்று பார்த்தா.. யாழ் நடத்திற மோகன் அண்ணாவும் வாங்கிக் கட்டிறாரே.. பாவம்.. :wub:

திவியார்.. என்ன நான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறன்.. எழும்பி வாற நோக்கம் இல்லைப் போல.. எழும்பி வரட்டே இப்ப ஐயாவுக்கு..!

வியார்...( எழும்பினாள் பூரிக்கட்டையும் கையுமா எல்லோ வருவாள்.. என்று யோசிச்சவர்).. பணிவோடு.. வாரேம்மா.. கொஞ்சம் பொறுங்கோ என்றார்.

திவியார்.. இவ்வளவுக்கும் பொறுத்ததே பெரிய காரியம். எழும்பி வரலாம்.

வியார்.. ஜஸ்ட் எ மினிட்..

திவியார்.. இத்தனை நிமிசம் குந்தி இருந்தது போதாதென்று.. அங்க என்ன நடக்குது.. என்று சோபாவில் இருந்து எழும்பி கணணியை நோக்கி வந்தார் திவியார்..!

(இதனைக் கடைக்கண்ணால் கண்டு விட்ட வியார்.. கணணித் திரையை சிறிதாக்க முனைந்தார்..)

திவியார்.. என்ன கடைக்கண் பார்வை.. ஆ.. உந்தப் பார்வை எனக்குப் பிடிக்காது என்று என்னை லவ் பண்ணேக்கேயே சொல்லிட்டன். எனிப் பாத்தியள் உந்த முழியைத் திருகி பின்னுக்க போட்டிடுவன்.

வியார்.. மீண்டும் மெளனமாக...

திவியார்.. என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறியள்.. நான் மாரித் தவளை மாதிரி கத்திக் கொண்டிருக்கிறன்.. நீங்க எருமை மாட்டில மழை பெய்த கணக்கா எனக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறியள்..

வியார்.. இல்லையம்மா.. இந்த யாழை மூடப் போகினமாம். அதுதான் ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறன்.. மூட வேணாம் என்று.

திவியார்.. யாழை மூடப்போகினமாமோ... நான் கும்பிட்ட தெய்வம் என்னைக் கைவிடேல்ல. அதுக்கு என்ன நீங்கள் வேணாங்கிறது. மூடிறது தான் நல்லது. இல்ல உங்களைப் போல கலியாணம் முடிச்சவை மனிசி பிள்ளையள கவனிக்கிறதை விட்டிட்டு.. அங்க வாற பொம்பிளப் பிள்ளையளுக்கு எல்லோ முசுப்பாத்தி காட்டிக் கொண்டிருப்பியள்..!

வியார்..(கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு).. என்ன... நான் எங்க பொம்பிளப் பிள்ளையளோட கதைச்சன். அவையள் வந்து கதைக்கிறதுக்கு நான் என்ன செய்யுறது.

திவியார்.. அப்படியே கதைக்க வந்தாலும்.. நீங்கள் என்ன செய்ய வேணும்.... எனக்கு மனிசி பிள்ளை இருக்கு.. நேரமில்லை என்றிட்டு வாறது.

வியார்.. அப்படிச் சொன்னா என்ர இமேஜ் என்னாகிறது. :lol:

திவியார்.. என்ன இமேஜ் வேண்டிக் கிடக்கு. உங்கட இமேஜைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும். என்னை லவ் பண்ணேக்கையே என்ர பிரண்ட்ஸுக்கும் (அவையள் கேட்காமலே) சேர்த்து ஐஸ்கிறீம் வேண்டிக்கொடுக்கிற உங்கண்ட ஜொள்ளு வழியிற இமேஜை நல்லா கண்டிருக்கிறன்.

வியார்.. (மனசுக்குள்ள.. அப்ப சும்மா இருந்து போட்டு இப்ப அவிழ்க்கிறாளே. என்று நினைச்சவர்.. ஒரு மாதிரி சமாளிச்சு.. ஒரு பதிலை இழுத்து விட்டார்.) அது ஒரு சமூக சேவை.

திவியார்.. ஓமோம் பெட்டைப்பிள்ளையள் என்றால் தான் உங்களுக்கு சமூக சேவை செய்ய வரும் என்றதும் எனக்குத் தெரியும்.. இப்ப கதைக்கு கதை சொல்லிக் கொண்டிராமல்.. கணணியை சட் டவுன் பண்ணுங்கோ.. பாப்பம். பண்ணிப் போட்டு பிரிஜ்ஜில மரக்கறி வைச்சிருக்கிறன் எடுத்து நறுக்கி வையுங்கோ. நாளைக்கு காலைல சமைச்சு கொண்டு போக வேணும்..வேலைக்கு. :lol::rolleyes:

வியார்.. பெளவியமாக.. சரிம்மா.. செய்யுறன்.. என்றவர் யாதியில்.. நான் ரெம்ப பிசி.. இப்ப போயிட்டு பிறகு வாறன்.. என்று சிமிலிகளை அள்ளி வீசிக் கொண்டே இருந்தார். :lol:

இதனை அவதானித்த

திவியார்.. வியாரின் காதைப் பிடித்து இறுக முறுக்கிய படி.. இப்ப என்ன சொன்னனான். நான் முன்னால நிக்கவே இத்தனை விளையாட்டுக் காட்டுற நீங்க.. நான் இல்லாத போது எத்தினை கூத்துக் காட்டி இருப்பீங்க.. என்று தானே மறுகையால் கணணியின் பவர் சுவிச்சை அளுத்தி கணணியை ஓவ் செய்தார். :D

வியார்.. காது சிவக்க.. விடம்மா.. விடு... எனி செய்யமாட்டன்... எனி யாழ் பக்கமே தலைவைச்சுப் படுக்கமாட்டன்... என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்.

திவியார்.. இதுதான் கடைசியும் முதலும். எனி உங்களை யாதியில பார்த்தன்.. என்ன நடக்குமென்று எனக்கே தெரியாது. யாழில இல்ல இங்க வீட்டில தான் பெரிய களேபரமா நடக்கும்.. சொல்லிட்டன்.

வியார்.. (மனசுக்குள்).. யாழில தான் அப்படி ஒரு தலைப்பை திறந்து.. வகை வகையா வாங்கிக் கட்டிகிறன் என்றால் வீட்டிலையுமா.. போதுமடா சாமி. ரெக்கியும் கிக்கியும். மற்றப் பாகமாவது.. எழுதிறதாவது. ஆளை விடுங்கடா சாமி.. சும்மா இருந்த என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி.. உடம்பெல்லாம் ரண களம் ஆக்கிட்டீங்கலேடா... என்று யாழ் கள உறவுகளை திட்டி தீர்த்துக் கொண்டார்.

திவியார்.. என்ன இன்னும் பேயறைஞ்சது போல கணணிக்கு முன்னால குந்திக் கொண்டிருக்கிறியள். போய் சொன்ன வேலையைப் பாருங்கோ. இல்ல திரும்பி வரட்டே.

வியார்.. வேணாம்மா.. நானே போயுக்கிறேன். நாளைக்கு என்ன மரக்கறி நறுக்கிறது என்று கொண்டே... கதிரையை விட்டு எழுந்து கிச்சினுக்குள் நுழைந்தார் வியார்.

கிச்சினுக்குள் போனவர்... அவரின் மகள் யூஸ் குடித்துக் கொண்டிருப்பதை கண்டுவிட்டு.. யாழிலும் வீட்டிலும் நடந்த சம்பவங்களை மறக்க.. மகளுக்கு விளையாட்டுக் காட்டுவது போல் பாசாங்கு செய்து கொண்டு.. இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே பிரிஜ்ஜை திறந்து மரக்கறிகளை எடுத்து நறுக்க ஆரம்பித்தார் ஏக்கம் கவலை நிறைந்த மனதோடு.

:D

காட்சி முற்றும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடிச் சிரிக்கப் பயமாய்க் கிடக்கு! :rolleyes::rolleyes::wub:

:rolleyes::rolleyes::wub:
:wub::rolleyes: :rolleyes:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::lol::rolleyes:

.

விசை இவ்வளவும் வாங்கிக்கட்டினது காணாது என்று,

5.gif

ப்ரியாவை சொந்தமாக்கச் சொல்லி, கோவாவிடமும் வாங்கிக் கட்ட‌ வைக்க‌...... அட்வைஸ் பண்ணும் நண்பர்கள்.129fs3867689.gif

:lol::wub:

.

Edited by தமிழ் சிறி

எழுத்துப் பிழைகளைத் திருத்தியமைக்கும், பாடல் வரித் தெரிவுக்கும் நன்றி நெடுக்ஸ். :D

ஆகா

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்திலிருந்து தாக்குகின்றார்கள். :rolleyes:

க்ண்ணை மூடித் திறப்பதற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா? :rolleyes:

ஹிஹிஹி... அழகான ஒரு பெண் வந்து பரிசு தருவார் என்று கண்ணை மூடி கனவு காணத் தொடங்கியவர் பரிசு கொடுத்தது அவரது அன்பான மனைவி என்பதனை அறியாமல் கைகளை பற்றி, கன்னத்தில் முத்தமுமிட்ட போது தன் மனைவியின் "என்ன இது?" என்ற குரல் கேட்டு கண்ணை திறந்து பார்த்தவருக்குத் தான் எள்ளும் கொள்ளும் முகத்தில் கலன் கலனாக வழிந்தது... டங்கு கண் திறக்கும் அந்த நொடியில் அவரது மனைவி புரிந்தது கொண்டார், தன்னை அவர் கொஞ்சம் கூட அழகான பெண் என்ற லிஸ்டில் எதிர் பார்க்கவில்லை என்று... அதனால் தான் 'வீட்ட வாடி' என்ற நக்கலான தொணியில் அவரது மனைவி சிரித்துக் கொள்கிறார்...

குட்டியின் கற்பனையும் நல்லாத்தான் இருக்கின்றது. :D

....

வாத்தியார்

*********

சின்னனில இருந்து கொஞ்சம் ஜாலியாக இருக்கும் போது, அல்லது போர் அடிக்கும் போது பாடல் வரிகளை ஆக்களுக்கு ஏற்றது போல மாத்திப் பாடுவது வழக்கம். அந்த பழக்க தோசத்தில வந்தது தான் இந்தப் பாடலின் மறுவடிவம் ... :lol:

இதெல்லாம் உள் குத்தும், இல்லை வெளிக் குத்தும் இல்லை... எல்லாம் சும்மா, சும்மா... உ...உ... து... து... :wub::lol:

இதெல்லாம் மனசில வைச்சிருக்கப் படாது... அப்புறமா நான் அழுதுடுவன்.... :lol:

கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி :D

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு பொதுவாழ்க்கைக்கு வந்தால் இது எல்லாம் சகஜம்.மனதை தளல விடமால் அடுத்த பாகத்தை விரைவில் தொடங்கவும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் டங்குவுக்கு 9 முடிச்சு போட்ட அந்த நடுத்தர வயது மாது.

என்னப்பா லண்டன்ல இருந்து வந்ததிலிருந்து இப்படி இரவும் பகலும் நடக்கின்றீர்

நேரமாற்றத்தால ஏதும் உமக்கு ஆயிடுத்தோ என்றார் டங்கு.

திரும்பி ஒரு வெட்டு வெட்டிவிட்டு

முடியல

இதுகளின்ர சேட்டைகளை சகிக்கவும்முடியல சமாளிக்கவும்முடியல அங்கால இங்கால தனிய விடவும்முடியல

என்று அழாத குறையாக சொன்னார்

அது சரியப்பா

பிள்ளைகள் என்றால் அப்படித்தானே இருக்கும்

நாமதான் சமாளித்து போகவேணும் என்று டங்கு முடிப்பதற்குள்

டங்குவின் கன்னத்தில் புலிநகம் விளையாடி முடிந்தது போலிருந்தது டங்குவுக்கு.

நான் என்ர பிள்ளையை ஒழுங்காகத்தான் வளர்க்கிறன்

உங்க அப்பா அம்மா தான் இப்படி வளர்த்து என்ர தலையில சுமத்திப்போட்டு

கனடாவுக்கு கலைத்துப்போட்டு அவ நிம்மதியாக இருக்கினம்

நான் இரவும்பகலும் நித்திரை கொள்ளாமல் இப்படி நிற்கிறன் என்று இடித்து முடித்தார் இசை கலைஞி

இது என்னடா போன இடததிலும்ஒன்றும் அம்பிடல

இங்க வந்தா இப்படிக்கிடக்கு என்று நினைத்தபடி யாழைத்திறந்தார் டங்கு...

டங்கு லண்டர் வந்திருந்தார்

நான் அவரைச்சந்தித்தேன் என்று பரபரப்பு செய்தி போட்டிருந்தார் ரதிதேவி.

கள உறுப்பினர்கள் வேறு இந்த திரியையே பூகம்பப்படுத்தினர். கல்யாணம் முடித்து பிள்ளையும் பெற்றுவிட்டனர் அந்ததிரியில்.

அடடா

சுத்தி சுத்தி பார்த்தேனே சுழண்டு சுழண்டு சுழண்டு பார்த்தேனே தாவித்தாவி பார்த்தேனே

இது தெரியாம நழுவிடுச்சே

படத்திலேயே இவ்வளவு அழகா இருக்கே….இது தெரியாம நழுவிடுச்சே

என்று மேசையில் அடித்துக்கொண்டார். மனம் நொந்து போனவர் அப்பொழுதுதான் திரும்பிப்பார்த்தார்

எல்லாவற்றையும் வாசித்தபடி ஆத்துக்காறி.

அடப்பாவி இவ்வளவு கவனமாக கண்ணும் கருத்துமாப்பார்த்தும் அல்வா குடுத்திட்டியே… என்றபடி பாய்ந்தார் இசைமீது…..

முடிவு சாக்குக்குள் அகப்பட்ட எலியானார்

எல்லாம் முடிந்து சங்கு அறுக்கப்பட்டு சாக்கால் வெளியில் ஒரு மூலையில் தூக்கி எறியப்பட்ட டங்குவுக்கு இது வழமையான சங்காபிசேகம் என்பதால் அது வலிக்கவில்லை.

மாறாக செய்திருந்தாலும் மனதை ஆத்திக்கலாம். செய்யாத ஒரு லீலையை செய்ததாக நம்பவைத்த யாழ் இணையத்தை திட்ட முடிவெடுத்தார். எழுதத்தொடங்கினார்.

கண்டபடி எழுதியதால் எழுத எழுத காணாமல் போயிற்று. என்ன என்று முடிப்பதற்குள் விழலி தனிமடல்போட்டிருந்தார்.

குளவிதிகளை மீறி குளிக்கமுடியாது. தொடர்ந்தால் ……வெளியே தூக்கி எறியப்படுவீர்கள் என்று .

மட்டுனரும் முட்டுகிறார். எழுதிப்பிரயோசனமில்லை .

அணைப்பதுபோல் அடிக்கணும்

கொஞ்சுவது போல் கடிக்கணும்

தூற்றவேணும் ஆனால் எதிரி திருப்பி தாக்கக்கூடாது

மட்டுனரையும் போட்டுத்தாக்கணும் ஆனால் எழுத்து தாமரையில் தண்ணீர் போலல்லாது நிலைக்கணும்.

கலகலப்பா இருப்பது போல்……களேபரம் செய்யணும்

யோசித்தவருக்கு திண்ணை ஞாபகம் வந்தது.

திண்ணையில் கிளிஜோசியர் இருப்பார் ஐடியா கேட்கலாம் என்று திண்ணைக்கு வந்தார். கிளிஜோசியர் கோழிக்கறிக்கு செய்முறை தேடிக்கொண்ருந்தார். எத்தனை கோழிக்கு அல்வா கொடுத்திட்டம் இது தெரியாதா என செய்முறையை சொன்னவருக்கு கிளிஜோசியர் கொடுத்த ஐடியதாதான் உள்குத்து ……வெளிக்குத்து. ….

திறந்தார் கணணியை

வைத்தார் தலைப்பு

யாழ் களத்தில் களேபரம்

போட்டுத்தாக்கினார். ஏல்லோரும் சிரித்தபடியே வாங்கிக்கட்டினர்.

மட்டுனருக்கும் போட்டார் எழுத்து நிலைத்தது

ஐடியா கொடுத்த கிளிஜோசியருக்கும் போட்டார். உள் குத்தை அவரும் உணர்ந்தார்

எழுதித்தள்ளியதால் ஆத்துக்காறியை மறந்தது ஞாபகம் வந்தது. சத்தத்தையே காணோமே. கொலை வெறியுடன் லண்டனுக்கு ஏறிட்டுதோ என்று பயந்தவர். தொடர்ந்து தாக்குவதை நிறுத்தி …..

பாகம் ஒன்று என்று விசுரில் ….முடித்தார்.

அங்குதான் பிடித்தது சனி டங்குவுக்கு….

தாக்குதல் நிறுத்தப்படடதும்

தெலுங்கிலிருந்து சிறி தாக்குதலை ஆரம்பித்தார்……

அதைத் தொடர்ந்து இரதிதேவி குட்டி வயித்தாலபோவான் விசுகர் என களம் விரிவடைந்தது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் கற்பனை சூப்பர்...அது சரி டங்கு உங்களது உண்மையாகவே காதல் திருமணமா?...விசுகு அண்ணா டங்குவை மட்டும் தாக்காமல் என்னையும் சேர்த்து அல்லவா தாக்கிட்டிங்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :wub:
  • கருத்துக்கள உறவுகள்

வியார்.. (மனசுக்குள்).. யாழில தான் அப்படி ஒரு தலைப்பை திறந்து.. வகை வகையா வாங்கிக் கட்டிகிறன் என்றால் வீட்டிலையுமா.. போதுமடா சாமி. ரெக்கியும் கிக்கியும். மற்றப் பாகமாவது.. எழுதிறதாவது. ஆளை விடுங்கடா சாமி.. சும்மா இருந்த என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி.. உடம்பெல்லாம் ரண களம் ஆக்கிட்டீங்கலேடா... என்று யாழ் கள உறவுகளை திட்டி தீர்த்துக் கொண்டார்.

நெடுக்ஸ் அண்ணா.

அந்தாளை நினைச்சாப் பாவமா இருக்கு. :lol:

சிரிப்பை அடக்க முடியவில்லை. :rolleyes::wub::lol:

பாராட்டாமலும் இருக்க முடியவில்லை :rolleyes:

வாத்தியார்

**********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.