Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த அரசை உருவாக்கிய நோக்கம் வேறு! விரைவில் உருத்திரகுமார் என்னுடன் இணைவார்! கே.பி பரபரப்புத் தகவல்!!!

Featured Replies

நாடுகடந்த அரசை உருவாக்கிய நோக்கம் வேறு! விரைவில் உருத்திரகுமார் என்னுடன் இணைவார்! கே.பி பரபரப்புத் தகவல்!!!

பிரிவினைவாத நோக்கத்துடனோ அல்லது ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் திட்டத்துடனோ

நாடுகடந்த அரசை தான் உருவாக்கவில்லை என்றுஇ சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்படும்

கே.பி என்றழைக்கப்படும் தம்பியையா செல்வராஜா பத்மநாதன் ஒப்புதல் வாக்குமூலம்

அளித்துள்ளார்.

அத்துடன், உருத்திரகுமாரனுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், விரைவில் தன்னுடன்

உருத்திரகுமாரன் இணைந்து கொள்வார் என்றும், கே.பி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கே.பி கூறியுள்ளார். அவர்

மேலும் குறிப்பிடுகையில்:

“சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள கலாநிதி

ஜோய் மகேஸ்வரன்இ கனடாவில் உள்ள அருட்தந்தை சந்திரகாந்தன் ஆகியோர் இணங்கியுள்ளனர்.

நாடுகடந்த அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவில் இவர்கள் இருவரும் அங்கம் வகித்தவர்கள்.

உருத்திரகுமாரனின் தலைமையில் வெளிநாட்டில் நாடுகடந்த அரசாங்கம் இயங்குகின்றது.

இவர்களுக்கு போட்டியாக நெடியவன் என்பவரின் குழுவும், அருட்தந்தை இம்மானுவேல்

அடிகளார், தமிழ்நெற் ஜெயா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி

போன்றோரும் செயற்படுகின்றனர். இதில் தவறான வழியில் செல்ல முற்படும்

ஜெயானந்தமூர்த்தியை சரியான வழியில் பயணிக்குமாறு எனக்கு தெரிந்தவர்கள் ஊடாக நான்

எச்சரித்திருக்கின்றேன்.

கலாநிதி மகேஸ்வரன் மனம்மாறி எம்முடன் இணைந்தமை போன்று விரைவிலும் உருத்திரகுமாரனும் இணைந்து கொள்வார். நாடுகடந்த அரசாங்கத்தை நான் உருவாக்கியதன் நோக்கம் வேறு. பிரிவினைவாதத்தையோ அல்லது ஆயுதப் போராட்டத்தையோ தூண்டுவதற்கான நான் அதனை உருவாக்கவில்லை. இது உருத்திரகுமாரனுக்கும் நன்கு தெரியும். என்னோடு இணைந்து செயற்படுமாறு உருத்திரகுமாரனிடம் நான் கேட்டுள்ளேன்.

உண்மையில் உருத்திரகுமாரன் எனது அருமை நண்பன். சிறீலங்கா அரசாங்கம் என்னைக் கைது

செய்வதற்கு முன்னரே எனது திட்டத்தை அவரிடம் விளக்கிவிட்டேன். இப்பொழுதுகூட சில

தகவல்களை உருத்திரகுமாரனிடம் நான் பரிமாறியுள்ளேன்.

2009ஆம் ஆண்டு என்னை தமது அனைத்துலக தொடர்பாளராக தமிழீழ விடுதலைப் புலிகள் நியமித்த பொழுது, எனது அணியில் உருத்திரகுமாரனும், கலாநிதி மகேஸ்வரனும் இணைந்து கொண்டனர். நாம் மூவருமாக நோர்வே தூதுக்குழுவுடன் சந்திப்புக்களை நிகழ்த்தினோம். நாங்கள்

மூவருமாக மலேசியாவில் நோர்வே தூதுவரை சந்தித்தோம். யுத்தத்தில் வெற்றி பெற

முடியாது என்பதில் நாங்கள் மூவரும் உறுதியாக இருந்தோம். எங்களையொத்த கருத்தை

கனடாவில் உள்ள சிலரும் கொண்டிருந்தனர்.

போர்நிறுத்தத்தை புலிகளே முறித்தார்கள். களத்தில் நின்றவர்கள் உண்மையை விளங்கிக்

கொள்ளவில்லை.

இனிமேல் தமிழீழம் என்பது ஒரு கனவுதான். இனி ஆயுதப் போராட்டம் தொடங்கினால் அதனை

முதலில் எதிர்ப்பவன் நானாகவே இருப்பேன். தமிழர்களும்இ சிங்களவர்களும் சகோதரர்களாக

வாழலாம். இதில் வெளிநாடுகளின் தலையீடு தேவையில்லை.

மகிந்த ராஜபக்ச மிகச்சிறந்த ஒரு தலைவர். எனக்கு அவர் மீது நம்பிக்கை உள்ளது. அவரின்

பின்னால் நாமெல்லாம் அணிதிரள வேண்டும்.”

இவ்வாறு, சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் கே.பி என்றழைக்கப்படும் தம்பியையா

செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கே.பி கைது செய்யப்பட்டதில் இருந்து தனக்கும் கே.பிக்கும் எவ்வித தொடர்பு இல்லை

என்று வி.உருத்திரகுமாரன் கூறிவரும் நிலையில், வி.உருத்திரகுமாரனுடன் தான்

தொடர்புகளைப் பேணி வருவதை கே.பி ஒப்புக் கொண்டுள்ளமை, வி.உருத்திரகுமாரனின்

நம்பகத்தன்மையையும், நேர்மையையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக அவதானிகள்

சுட்டிக் காட்டுகின்றனர்.

தமிழீழ தாயகக் கோட்பாட்டை சிதறடிக்கும் வகையில் கடந்த சனவரி – பெப்ரவரி மாதங்களில்

நாடுகடந்த அரசமைப்புக் குழு வெளியிட்ட அறிக்கையை வடிவமைத்ததில்,

வி.உருத்திரகுமாரனுடன் இணைந்து கலாநிதி ஜோய் மகேஸ்வரன் முதன்மையான பாத்திரத்தை

வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாரோ சொல்லிக் கொடுத்ததை இவர் ஒப்பிவிப்பதாக தெரிகிறது

சொல்லப்படும் எல்லாவற்றையும் நாங்கள் முழுமையாக நம்பிவிடுவதில்லை

ஜெயானந்தமூர்த்தியை சரியான வழியில் பயணிக்குமாறு எனக்கு தெரிந்தவர்கள் ஊடாக நான்

எச்சரித்திருக்கின்றேன்.

கேட்டுக் கொள்ளவில்லை எச்சரித்திருக்கிறார் ம்ம்ம்...

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்காரர் இப்போது கேபியின் பேச்சை நம்பிக் கட்டுரை வரையத் தொடங்கி விட்டார்களா? அந்தளவு அவர்களின் நிலை??

கேபிக்கு ஒரு வேண்டுகோள். யார் யாரோ எழுதித் தாறதை எல்லாம் வைத்துப் பேட்டி போடுறீங்கள். நான் எழுதித் தாறதையும் வைத்து ஒருக்கால் போடுங்கோவன். பதிவு என் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்குகின்றது." என்று ஏதாவது ஒரு வசனம் சொல்லுங்கோ? அவை எந்த முகத்தை வைச்சுக் கொண்டு கட்டுரை எழுதுகினம் பார்ப்போம்.

எவன் எவனை எல்லாம் பிரிச்சு. தமிழ் இனத்தைச் சின்னபின்னமக்காச் சிங்களக் கொடுங்கோல் அரசு நயவஞ்சகமாகத் திரியுது. அதுக்கு எண்ணை ஊத்துவது போல இவர்களின் மானங்கெட்ட செயல்கள். நீங்கள் எத்தனை பேரை வசை பாடி எழுதுகின்றீர்களோ தெரியா? ஆனால் நாளைக்கு அதே பாணம் உங்கள் மீதும் ஏவப்படும்போது புரிந்து கொள்ளுவீர்கள்..

சிங்கள, இந்திய பயங்கரவாதிகளின் தாளத்துக்கு ஆடும் KP இன்னும் எவ்வளவு காலத்துக்கு உளற முடியும்?

இங்கு யாழில் ... ஆதிரை எண்டொன்று, கலைவாணி எண்டொன்று .... வயித்துப் பிழைப்புக்கு தமிழ்த்தேசியத்தை மாற்றிய வீராதிவீரர்களுக்கு, வெட்டி ஒட்டும் செயல்களை செய்து கொண்டிருக்கிறது! ... கறுமம்! ...

இப்ப உந்த காஸ்ரோக்களின் பதிவு, சிங்களவன் செய்யாததுகளை/எண்ணாததுகளை சிறப்பாக செய்கிறார்கள்! ... பன்னாடைகள்!!!! :o

உண்மையில் இது ஈனமுரசு தயாரித்த கொடுத்து கொழும்பு ஊடகத்தின் மூலம் வெளியடப்பட்டது. ஒக்டோபர் மாதம் பாரிசில் இவர்களுக்கு எதிராக தொடரப்படவுள்ள வழக்கில் சிங்கப்பூரில் இருந்து இயங்கும் பங்கரவாத பேராசிரியரின் வழிகாட்டலில் செய்படும் இவர்களது முகமூடிகழரும்

இங்கு யாழில் ... ஆதிரை எண்டொன்று, கலைவாணி எண்டொன்று .... வயித்துப் பிழைப்புக்கு தமிழ்த்தேசியத்தை மாற்றிய வீராதிவீரர்களுக்கு, வெட்டி ஒட்டும் செயல்களை செய்து கொண்டிருக்கிறது! ... கறுமம்! ...

இப்ப உந்த காஸ்ரோக்களின் பதிவு, சிங்களவன் செய்யாததுகளை/எண்ணாததுகளை சிறப்பாக செய்கிறார்கள்! ... பன்னாடைகள்!!!! :o

K.P பிடிப்போம் என்றாற்கள், செய்து காட்டினார்கள், போற போக்கைப் பார்த்தால் இதுவும் நடந்து விடுமோ என்றல்ல்வா பயப்பட வேண்டி இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசை உருவாக்கிய நோக்கம் வேறு! விரைவில் உருத்திரகுமார் என்னுடன் இணைவார்! கே.பி பரபரப்புத் தகவல்!!!

இவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும்...???

இவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும்...???

இதுவரை நடந்த சம்பவம் இதுதான்.....

முள்ளிவாக்காலுக்கு பிறகு புலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு பற்றிய அறிவித்தல் வந்தவுடன் சிறீலங்கா அரசு கொஞ்சம் அதிகமாகவே பயப்பிட்டது.

அதை அழிக்க என்ன செய்யலாம் என்ற சிறீலங்கா அரசு யோசித்தது.அப்போது தான் கேபிக்கு நெடியவனுக்கமான முரண்பாடு அதற்கு தெரிய வந்தது. இதை பயன்படத்த அவர்கள் திட்ட மிட்டார்கள்;

சிங்கப்பூரில் இருந்து இயங்கும் பயங்கரவாத தத்துவாசிரியர்? கருணா ... உட்டபட 5 பேர் கொண்ட குழு இதற்காக அமைக்கப்பட்டது.

இந்தக் குழு முதலில் நெடி பிரிவன் நெருங்கிய சகாவான மலேசியா ராஜன் என்பவரை கைக்குள் போட்டுக் கொண்டது.(இவர் இப்போது சிறலங்கா அரசாங்கத்தோடு வெளிப்படையாக கொழும்பில் இருந்து செயற்படுகிறார்)அவர் மூலமாக கேபி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டதுடன் கேபிக்கும் நெடியவன் பிரிவுக்குமான முரண்பாட்டை யும் வளர்த்து. நாடுகடந்த அரசுக்கு போட்டியாக மக்கள் பேரவைகளையும் உருவாக்கும் திட்டம் சிங்கப்புரில் கருக் கொண:டு ராஜன் மூலமாக நோர்வேக்கு வருகிறது.

கேபி துரோகி கேபியோடு முன்னர் செயற்பட்டவர்கள் துரோகிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை உரிய முறையில் வழிநடத்தக் கூடிய மூத்த போராளிகள் துரோகிகள் என்ற பிரச்சாரத்தை புலத்தில் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சிங்கப்பூரில் இருந்து வருகிறது.

இதைச் செய்தால் நந்தவனத்து நண்டுக்கள் முதல் அவுகள் வரை 14 பேரை விடுவிப்பதாகவும் ஒரு பேரம் நடந்தது.இந்தப் பேரத்தின் தரகர் கருணா.

இதன் மூலம் சிறீலங்கா அரசு என்ன இலாபத்தை அடைய விரும்பியது என்றால்.....

01.விடுதலைப்புலிகள் புலத்தில் ஒருங்கிணைகிறார்கள். அவர்கள் தங்களுக்கள் மோதுவதன் மூலம் புலம்பெயாந்த நாடுகளில் வன்முறையை தூண்டி அமைதிக்கு பங்கம் விளைவிக்கப் போகிறார்கள். அதனால் விடுதலைப் புலிகள் மீதான தடையை புலம்பெயர்ந்த நாடுகள்தொடாந்து நீடிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களை புலம்பெயர்ந்த நாடுகளின் அரசுகள் கைது செய்யும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்

02.வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க வேண்டுமானால் அந்தப் பகுதியை தொடர்ந்து இராணுவ பிடிக்குள் வைத்திருக்க வேண்டும்.முகாங்களில் உள்ள தமிழர்களை பேருக்கு மீழ்குடியேற்றம் செய்துவிட்டு எனையோரை குடியேற்றாமல் இழுத்தடிக்க வேண்டும் சரணடைந்த போராளிகளை தொடர்ந்து தடுத்து வைத்திருக்க வேண்டும்.இதற்கு அவரகாலச் சட்டமும் பயங்கரவாத தடை சட்டமும் தொடர்ந்து நீடித்திருக்க வேண்டும். இதை நீடிப்பதற்கு புலிகளின் அச்சுறுத்தல் இருக்கிறது என்ற பூச்சாண்டியை காட்ட வேண்டும். உள்ளுரில் புலிகள் இருக்கிறார்கள் என்று காட்டினால் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டோம் என்று சிங்கள மக்களுக்கு சொன்ன கதை பொய்யாகிப் போய்விடும்.அதனால் புலிகள் வெளிநாட்டில் தான் ஒருங்கிணைகிறார்கள் அவர்கள் நாட்டுக்குள் வராமல் தடுப்பதற்கு கரையோரப்பகுதிகளை இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்,அதற்கு கடலோரக் காவல் படை என்ற பெயரில் சிங்களவர்களை தாயகக் கடற்கரையோரங்களில் குறியேற்ற வேண்டும் இது தான் சிறீலங்கா அரசின் திட்டம்

03.தமிழர் தாயகப் பகுதி எங்கும் சிங்களப் பெரு முதலாளிகளை தொழில் செய்தவதற்க நிலம் ஒதுக்கி கொடுத்து அதை ஒட்டி சிங்கள வர்த்தக வலையங்களை உருவாக்கி தமிழர்களை அந்த வர்த்தக நியைங்களில் பணிபுரியும் கூலிகளாக மாற்றுவது அடுத்த திட்டம். கேபி வைத்து வடக்கு கிழக்கு அபிவிருத்தி புனர்வாள்வு என்று பிரச்சாரப் படுத்திக் கொண்டு மறுப்புறத்தில் இந்தக் கும்பலை வைத்து கேபிக்கு எதிர்பிரச்சாரம் செய்ய வைத்து புலத்தில் வாழும்தமிழர் எவரும் தாயகத்தில் இருக்கும் தமிழருக்கு உதவிசெய்யும் மனோநிலைய உடைத்து எல்லோரும் கள்ளர்கள் இனி நாங்கள் ஒண்டுக்கும் உதவி செய்யிறதில்லை என்ற மனோநிலையை திட்டமிட்டு உருவாக்குவது,இதன் மூலம் தாயகத்து தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடிமைகளாக கூலிகளாக வாழும் சூழ்நிலையை வளர்த்தெடுப்பது.

இங்கே பல மூத்த போராளிகள் இவ்வாறான எழுத்துக்களை நிறுத்தும்படி பலதடவை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் இவர்கள் தொடந்து இவ்வாறு செய்வதன் பின்னணி இதுதான்.

அண்மையில் தாங்கள் சிலரை காட்டிக் கொடுப்பதற்கும் விடுதலைப்புலிகளின் மூத்த பேராளிகள் சிலர் புலத்தில் இயங்குகிறார்கள் எனபதை உலகநாடுகளுக்கு தெரியப் படுத்துவதற்கும் விடுதலைப்புலிகளின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி பதிவு சங்கதி விடயம் தொடர்பாக இராம சுபனின் பேரில் ஒரு பொய் அறிக்கையை இவர்களே வெளியிட்டுவிட்டு அதற்கு தாங்கள் எற்கனவே தாயரித்து வைத்த காகிதப்புலிகள் என்ற மறுப்பறிக்கையை தாங்களே விடுகிறார்கள்ஐயோ பாவம் ஸ்கைப்பில் கொன்பிறன்ஸ் சிஸ்டத்தில்; இருந்து எல்லோருடனும் கதைத்துவிட்டு அதை கட்பண்ணாமல் இந்த அறிக்கை மோசடியை செய்யும் விடயத்தை இவர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதை சம்பந்தப்பட்ட பலர் ஒலிப்பதிவு செய்து வைத்திருப்பதாக அறிகிறோம்.

ஆக மொத்தத்தில் சிறீலங்கா அரசுக்காக கருணா மூலமாக வேலை செய்யும் இந்தக் கும்பல் எல்லோரையும் முட்டாளாக்கப் பார்க்கிறது

ஒக்டோபர் மாதம் இவர்களுக்கு எதிராக தொடரப்போகும் வழக்குக்கான ஆதாரங்களை நாங்கள் பெருமளவுக்கு திரட்டிவிட்டோம்;; இந்த வழக்கின் போது நிச்சயமாக இவர்கள் எவ்வாறு ஈழப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தார்கள் காட்டிக் கெடுக்கிறார்கள் என்ற பல உண்மைகள் வெளிவரும்.

அது வரை தயவு செய்து விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சொல்வது தான் உண்மை என்பதை புரிந்து கௌ;ளுங்கள்.இந்தக் கும்பல் செல்வதை கணக்கில் எடுக்க வேண்டாம் என்று 32 ஆயிரம் மாவீரர்களின் பேரால் மன்றாட்டமாக கேட்டக் கொள்கிறேன்

K.P பிடிப்போம் என்றாற்கள், செய்து காட்டினார்கள், போற போக்கைப் பார்த்தால் இதுவும் நடந்து விடுமோ என்றல்ல்வா பயப்பட வேண்டி இருக்கு

இதில் பயப்பட என்ன இருக்கு. கே பி யுடன் உருத்திரகுமார் இணைவதுதான் நல்லது. இன்று கே பி யால் மட்டுமே கைதான போராளிகளையும் தாயக மக்களையும் நெருங்க முடிகின்றது. நக அரசும் கேபியுடன் இணைந்தால் நக அரசில் தாயக மக்கள் அங்கம் வகிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள athiyan க்கு

தாங்கள் சர்சைக்குரிய பல விடையங்களை கூறுகிறீர்கள் அதற்கான ஆதாரங்களை தரமுடியுமா??

உங்கள் பாசையில் சொல்லப்போனால் காகிதப்புலிகளிர்கெதிராக வழக்குபோடும் தாங்காளால்/தாங்கள் சார்ந்த குழுவால் தங்களது புலத்துப்பூசாரிகளுக்கெதிரான வழக்கு வெற்றி அழிக்கும் பட்சத்தில் ஏன் சிறிலங்கா அரசுக்கெதிராக ஜனநாயகத்தின் தாய் என அழைக்கப்படும் பிரித்தானியா மற்றும் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான கனடா போன்றவற்றில் வழக்குத்தொடரக்கூடாது???

எப்பிடி இருந்தபோதும் தங்களது சமுகநோக்கு வழக்கு வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்......

தேழமையுடன்

வெடியன்

:o:unsure::( :( :rolleyes: :rolleyes:

Edited by வெடியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்டோபர் மாதம் இவர்களுக்கு எதிராக தொடரப்போகும் வழக்குக்கான ஆதாரங்களை நாங்கள் பெருமளவுக்கு திரட்டிவிட்டோம்;; இந்த வழக்கின் போது நிச்சயமாக இவர்கள் எவ்வாறு ஈழப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தார்கள் காட்டிக் கெடுக்கிறார்கள் என்ற பல உண்மைகள் வெளிவரும்.

அது வரை தயவு செய்து விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சொல்வது தான் உண்மை என்பதை புரிந்து கௌ;ளுங்கள்.இந்தக் கும்பல் செல்வதை கணக்கில் எடுக்க வேண்டாம் என்று 32 ஆயிரம் மாவீரர்களின் பேரால் மன்றாட்டமாக கேட்டக் கொள்கிறேன்

ஒன்றுமே புரியவில்லை நண்பரே

எந்தக்குழுவுக்கு எதிராக எவர் வழக்கு

எந்தச்சட்டத்தின்கீழ்

எந்த நாட்டில்

எந்த நாட்டுப்பிரசைக்கு எதிராக

எந்த பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு எதிராக................??????????????????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சொல்பவன் சொன்னால் கேட்பவருக்கு என்ன மதி?நாடு கடந்த அரசுக்கு சிறிலங்கா அரசு நன்றாகப் பயப்படுகிறது. அதனைக் குழப்பியடிக்கும் வகையில் கேபியைக் கொண்டு அறிக்கை விடுகிறது.நாடு கடந்த அரசுக்கு எதிரானவர்கள் அதனைத் தூக்கிப் பிடிப்பதன் மூலம் சிறிலங்கா அரசின் எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கிறார்கள்.இதை விட வேறு எந்தப் பலனும் (கேடும்)இந்த அறிக்கையைத் தூக்கிப் பிடிப்பதனால் வரப்போவதில்லை.உருத்திரகுமாரன் கேபியுடன் சேர்ந்து விட்டால் அதன்பின் எழுத வேண்டியவைகளை இப்பொழுது எழுதி தேவையில்லாமல் உருத்திரகுமாரின் மீது சேறடிப்பது உள்நோக்கம் கொண்டு மக்களைத் திசைதிருப்புவதற்காகும்.இப்பொழுது உள்ள சூழ்நிலையில் போராட்டத்தை அரசியல் சட்ட நுணுக்கங்களுடன் வழிநடத்தக் கூடிய தகுதி உருத்திரகுமாரனுக்கு இருக்கிறது.தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டிய நேரத்தில் அவர்களைப் பிரிக்கும் வேலையில் தயவு செய்து யாரும் இறங்க வேண்டாம்.மக்களவையும் செயற்படட்டும் நாடு கடந்த அரசும் செயற்படட்டும் ஒருவரை ஒருவர் தாக்கி எதிரியின் வேலையைச் சுலபமாக்க வேண்டாம்.

Edited by புலவர்

உருத்திரகுமரன் கே பீயின் ஆள் என்றால் கேபீ இப்படி அறிக்கை விட்டு தமிழ்மக்களுக்கு வெளிப்படுத்துவரா? உருத்துரகுமரன் வெளியே இருபது கேபீகு தலையிட்டியா இல்லை நெடியவனுக்கா?

உருத்திரகுமார் தன்னுடன் இணைவார் என கேபி சொன்னால் அதை நம்புவதா? அப்படியாயின் கேபி சொல்வதெல்லாம் உண்மையென இந்த சங்கதி பதிவு குழுமம் நம்புகிறதா? உருத்திரகுமாரின் நம்பகத் தன்மை குறித்து கேள்வியெழுப்பும் அல்லது சந்தேகப்படும் ஆய்வாளர்கள் யார் என சங்கதி பதிவு குழுமம் வெளிப்படுத்துமா? சங்கதி பதிவின்ர நம்பகத்தன்மை குறித்து பெரும்பாலானோர் ஏற்கனவே கேள்வியெழுப்பத் தொடங்கிவிட்டார்கள் அவர்களை நம்பும் சிலரும் இவர்களின் செயலைப்பார்த்து இவர்களை ஒதுக்க முன்பு இவர்கள் திருந்திக்கொள்வது நன்று.

  • தொடங்கியவர்

நாடு கடந்த தமிழீழ அரசு எனும் கோ~சம் பெரியது.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பது தொடர்பான அறிக்கைகள் ஆலோசனைக்கூட்டங்கள் என நிகழ்தப்பட நிகழ்வுகளின் அதிர்வு பெரியது.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைத்தபின் ஆக்க பூர்வமாக செயற்பட்டதற்குரிய பெறு பேறு மிக மிகச் சிறியது.

நாடு கடந்த தமிழீழ அரசு எனும் நிறுவனத்தின் செயற்பாடு சுழியம்

எனவே மக்களிடையே ஒரு கவற்சிகரமான திட்டத்தை முன்வைத்து.

மக்களை தன்வசப்படுத்தி, தமிழரின் ஏக பிரதிநிகளாக பிறப்பெடுப்பது

கேபியின், நாடுகடந்த அரசின் திட்டமாக இருந்தது.

கேபியின் இந்த திட்டம் நிறைவேறவில்லை.

கேபி நல்லவரோ கேட்டவரோ தெரியாது. பிடிபட்டிருந்தால் கைதியாக, சரணடைந்திருந்தால் அடிமையாக ஸ்ரீலங்கா அரசின் தேவைகளுக்கேற்பவே கேபி செயல்பட முடியும். எங்களுக்குள் அடிபடாமல் எங்கள் கடமைகளை செய்வதே நல்லது.

  • தொடங்கியவர்

கடமை செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள்.

கடமை செய்யாது இருப்பதன் காரணம் எது.

நாடு கடந்த தமிழீழ அரசு எனும் கோ~சம் பெரியது.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பது தொடர்பான அறிக்கைகள் ஆலோசனைக்கூட்டங்கள் என நிகழ்தப்பட நிகழ்வுகளின் அதிர்வு பெரியது.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைத்தபின் ஆக்க பூர்வமாக செயற்பட்டதற்குரிய பெறு பேறு மிக மிகச் சிறியது.

நாடு கடந்த தமிழீழ அரசு எனும் நிறுவனத்தின் செயற்பாடு சுழியம்

எனவே மக்களிடையே ஒரு கவற்சிகரமான திட்டத்தை முன்வைத்து.

மக்களை தன்வசப்படுத்தி, தமிழரின் ஏக பிரதிநிகளாக பிறப்பெடுப்பது

கேபியின், நாடுகடந்த அரசின் திட்டமாக இருந்தது.

கேபியின் இந்த திட்டம் நிறைவேறவில்லை.

ஏன் அண்ணை கேபி யின் திட்டம் நிறைவேறவில்லை? இப்ப கேபி விட்ட அறிக்கையோடு நீங்களே உருத்திர குமரனை கொண்டு போய் சேர்த்து போடுவியல் தானே?

மாத்தையா புலிகளால் கைத்து செய்ய பட்டு விசாரணைகளின் போது ஒவ்வொரு நாளும் புலிகளின் ஒவ்வொரு தளபதிக்கும் தனக்கும் தனது சதிக்கும் தொடர்பு எண்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.... அதில் கேணல்களான தீபன் அண்ணை, ஜெயம் அண்ணை , சொர்ணம் அண்ணை , தொடக்கம் பல தளபதிகள் பொறுப்பாளர்கள் அடக்கம்... அதிலை தீபன் அண்ணையும் ஜெயம் அண்னையும் விசாரிக்க பட்டதுமே மாத்தையாவின் நோக்கம் தெளிவாக புரிந்து விட்டது...

இப்ப KP யின் நோக்கமும் அப்படித்தான்... நாடுகடந்த அரசை சிதைப்பதுவே .... இதை தான் கெகலிய சொன்னவன் என்ன விலை கொடுத்தேனும் நாடுகடந்த அரசை சிதைப்போம் எண்று ... அதுக்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன எண்று...

கேபி நல்லவரோ கேட்டவரோ தெரியாது. பிடிபட்டிருந்தால் கைதியாக, சரணடைந்திருந்தால் அடிமையாக ஸ்ரீலங்கா அரசின் தேவைகளுக்கேற்பவே கேபி செயல்பட முடியும். எங்களுக்குள் அடிபடாமல் எங்கள் கடமைகளை செய்வதே நல்லது.

கேபி துரோக செய்துட்டார் என்று மக்களை நம்ப்ப வைக்கும் வரை ஆத்தா அடங்க மாட்டவாம்( கேபி சரன் அடைந்தாரோ கைது செய்யப்பாடாரோ ஆனால் சிறிலாங்க் அரசின் கையில் அவர் ஆனால் நெடியவன் நோர்வேயில் இருந்து என்ன செய்கிறார்/.?

  • தொடங்கியவர்

கேபி குழுமத்திடம் தோற்றுப்போனவர் நெடியவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்பவன் சொன்னால் கேட்பவருக்கு என்ன மதி?நாடு கடந்த அரசுக்கு சிறிலங்கா அரசு நன்றாகப் பயப்படுகிறது. அதனைக் குழப்பியடிக்கும் வகையில் கேபியைக் கொண்டு அறிக்கை விடுகிறது.நாடு கடந்த அரசுக்கு எதிரானவர்கள் அதனைத் தூக்கிப் பிடிப்பதன் மூலம் சிறிலங்கா அரசின் எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கிறார்கள்.இதை விட வேறு எந்தப் பலனும் (கேடும்)இந்த அறிக்கையைத் தூக்கிப் பிடிப்பதனால் வரப்போவதில்லை.உருத்திரகுமாரன் கேபியுடன் சேர்ந்து விட்டால் அதன்பின் எழுத வேண்டியவைகளை இப்பொழுது எழுதி தேவையில்லாமல் உருத்திரகுமாரின் மீது சேறடிப்பது உள்நோக்கம் கொண்டு மக்களைத் திசைதிருப்புவதற்காகும்.இப்பொழுது உள்ள சூழ்நிலையில் போராட்டத்தை அரசியல் சட்ட நுணுக்கங்களுடன் வழிநடத்தக் கூடிய தகுதி உருத்திரகுமாரனுக்கு இருக்கிறது.தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டிய நேரத்தில் அவர்களைப் பிரிக்கும் வேலையில் தயவு செய்து யாரும் இறங்க வேண்டாம்.மக்களவையும் செயற்படட்டும் நாடு கடந்த அரசும் செயற்படட்டும் ஒருவரை ஒருவர் தாக்கி எதிரியின் வேலையைச் சுலபமாக்க வேண்டாம்.

ஆமாம், சரியாக சொன்னீர்கள் புலவரே.

நாடு கடந்த தமிழீழ அரசு எனும் கோ~சம் பெரியது.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பது தொடர்பான அறிக்கைகள் ஆலோசனைக்கூட்டங்கள் என நிகழ்தப்பட நிகழ்வுகளின் அதிர்வு பெரியது.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைத்தபின் ஆக்க பூர்வமாக செயற்பட்டதற்குரிய பெறு பேறு மிக மிகச் சிறியது.

நாடு கடந்த தமிழீழ அரசு எனும் நிறுவனத்தின் செயற்பாடு சுழியம்

எனவே மக்களிடையே ஒரு கவற்சிகரமான திட்டத்தை முன்வைத்து.

மக்களை தன்வசப்படுத்தி, தமிழரின் ஏக பிரதிநிகளாக பிறப்பெடுப்பது

கேபியின், நாடுகடந்த அரசின் திட்டமாக இருந்தது.

கேபியின் இந்த திட்டம் நிறைவேறவில்லை.

நா.க.த.அரசு தனது முதலாவது அமர்வை முடித்துவிட்டது. விரைவில் இரண்டாவது அமர்வும் நடைபெறவுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் அவர்கள் முதலாவது அமர்வை நடத்தியதுடன் வெளிப்படையாக எதனையும் செய்யவில்லை. நீங்கள் இதனை விமர்சித்தால் பரவாயில்லை.

ஆனால் நா.க.த அரசுக்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன்னமே அவர்களை துரோகிகளாக்கும் முயற்சிகளை நீங்கள் தொடங்கிவிட்டீர்களே! தமிழ் ஒட்டுக்குழுக்களின் பெயரில் ஈழம் இருக்கிறது நா.க.த.அரசிலும் ஈழம் இருக்கிறது எனவே அவர்களைப்போல இவர்களும் துரோகம் செய்து விடுவார்கள் என்று தொடங்கிய உங்களின் வசைபாடல்கள் தேர்தலுக்கு அண்மைவரை தொடர்ந்து தேர்தலில் உங்கள் சார்பானவர்கள் போட்டியிட்டதால் கொஞ்சம் அடக்கி வாசித்துவிட்டு, மீண்டும் தொடர்த்த உங்களின் வசைபாடல்கள் தற்போது கேபீ என்ற சிங்களக்கூலியின் கருத்தை தூக்கிப்பிடிக்கும் நிலைக்கு வந்துள்ளது.

நல்லாச் செய்யிறியள். இப்படியே தொடருங்கோ. 30 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களும், இரண்டு இலட்சம் வரையான மக்களும் உயிரைக் கொடுத்ததற்கு நீங்கள் நன்றாக நன்றிக்கடன் செலுத்துறீங்கள். வாழ்க

இப்ப சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலம் எப்படி புலிகளை பலவீனமாக்கினோம் என்று வெளிப்படையாக சிங்கள அரசு சொல்வது போல், சில வருடங்களின் பின் "நாம் எப்படி புலம் பெயர் தமிழ் மக்களின் பலத்தை உடைத்து எல்லாவற்றையும் பலவீனமாக்கினோம்" என்றும் சொல்வார்கள். அப்போதும் 'உச்' கொட்டின படி எம் தலைவிதியை நொந்து கொண்டு "எமக்கு இராசதந்திரம் தெரியாது' என்று புலம்புவோம்.....

தமிழனாக பிறந்ததை விட என் வாழ்வில் நான் செய்த கேடு கெட்ட விடயம் ஒன்றுமில்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.