Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதி பலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலம் செய்த கோலம் . தாயகத்தில் இருந்து அதிகம் பேர் உள நாட்டுக் குழப்பங்களால் அகதிகளாக் வெளி நாடு சென்றனர். ராஜ சுந்தரம் குடும்பமும் விதி விலக்கல்ல . அவரும் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இரு மகன்களும் பள்ளியில் பயின்றனர. பிள்ளைகளின் தேவைகளை சமாளிக்க் முடியாமலும் வாடகைப்பணம் அதிகமானதாலும் இரண்டு வேலைக்கு சென்றார். ராஜ சுந்தரம். . பகலில் ஒரு கார் கம்பனியிலும் மாலை நேரங்களில் ஒரு உணவு விடுதியிலும். வேலை செய்து இரவு பத்து மணியாகும் வீடு வந்து சேர .அத்தோடு வெளி நாட்டு வாழ்வுக்கே உரிய கால நிலை மாற்றங்களும் அவருக்கு வாழ்வில் வெறுப்பை தந்தது. இருந்தாலும் மகன்களின் எதிர்கால் வாழ்வை எண்ணி சகித்து கொண்டார். ஒரு நாள் தாயகத்தில் உள்ள ஒரு மூத்த சகோதரி . தன் பெண்ணை இங்கு வைத்திருக்க் மிகவும் பயங்கரமாக உள்ளதால் முகவர் மூலம் அனுப்புவதாகவும் அவளை பொறுப்பெடுத்து பார்த்துக்கொள்ளும்படியும் எழுதினார். அவளும் ( ராதிகா) நாட்டுக்கு வந்து படித்து ஒரு வேலையில் சேர்ந்து ,..தன் முறைப்பையனை திருமணம் செய்தாள்.

அந்த பையன் வேறு ஒருநாட்டில் இருந்து வந்ததால் அவனுக்கு வேலை கிடைப்பது , மிகவும் கஷ்டம் ஆக இருந்தது. பின்பு சுந்தரம் மாமாவின் வேலையிடத்தில் ...அவரது முயற்சியால் மருமகனுக்கு வேலையும் கிடைத்தது. ராதிகா மூன்று குழந்தைகளுக்கு தாயானாள். அவர்கள் வாழ்வு வளமாகவே சென்றது. ஒரு தடவை ...அவர்களது வாகனம் ஐந்துபேருக்கு போதியதாக் இல்லாததால் அதிவிட பெரிய இருக்கைகள் கொண்ட ஒருவாகனம் வாங்கி தரும்படி கேட்டாள் . மாமா சுந்தரத்திடம. அவரும் சற்று பொறு வசதியாக் வரும்போது வாங்கித்தருகிறேன் என்றார். சுந்தரம் அந்த கம்பனியில் பல் வருடங்கள் வேலை செய்வதால் அவருக்கு சலுகை அடிப்படையில் வாகனம், ஒருவருடத்துக்கு ஒரு தடவை வாங்க முடியும் .

ராதிகாவின் நல்ல காலம் விரைவில் அமைந்தது. ஒரு எட்டு இருக்கைகள் கொண்ட வாகனம் ,அதற்குரிய பத்திரங்கள். முறையான் உரிமம் பெற்று வாங்க உதவி செய்தார். ஒரு நாள் ஒரு கோடை விடுமுறையில் ஒரு நாள் சுத்தரத்தின் மனைவியின் சகோதரன், குடும்பத்துடன் இவர்கள் நாட்டுக்கு வந்தார்கள். அங்கு எல்லோரும் சுற்றுலா போகும் காலம். சொந்த வாகனம் அல்ல்து வாடகை வாகனத்தில் செல்வார்கள். வந்தவர்களை ஊர் காட்ட அழைத்து செல்ல வேண்டி இருந்ததால் சுந்தரம் மருமகளிடம் அந்த வாகனத்தை ஒரு நாள் தரும் படி கேட்டார் . மருமகள் ராதிகா மறுத்து விட்டார் .. சாட்டுப் போக்கு சொன்னாள். மாமா சுந்தரம் மிகவும் வேதனைப்பட்டார். வாடகைக்கும் எடுக்க முடியாத நிலை. அது சுற்றுலாக் காலமேன்பதால் ..எல்லோரும் முன் பதிவு செய்து விடார்கள்.

என்ன செய்வது உலகம் இப்ப்டித்தான்.. எல்லோரும் நன்றி மறந்தவர்களாகவே வாழ்கிறார்கள். இனி வரும் வார இறுதியில்செல்வததற்காக முன்பதிவு செய்துவிட்டு காத்திருகிறார்கள். நாம் உதவி செத்தவர்கள் ஒரு நாளும் எமக்கு திரும்பி செய்யமாடார்கள் . இதுவும் சுந்தரத்துக்கு ஒருபாடம். நன்றி மறந்த வாழ்வு அவர்களை எங்கே கொண்டு விடும்..........ஒரு விடயத்தில் படித்தாயிற்று ...ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி ..அதன் பின் நீ யாரோ நான் யாரோ..........

.காலம் ஒரு நாள் மாறாமல் போகுமா?........உங்களுக்கும் ஒரு பாடமாகக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சிறு கதைக்கு மிக்க நன்றி அக்கா..உங்கள் கதையைப் படித்தபோது..கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று ஒரு வாக்கியம் எனது மனதில் அடிக்கடி வந்துபோகும்..அது தான் ஞாபகத்தில் வருகிறது..ஆனாலும் வாகனம் வாங்கிக் கொடுப்பது உங்கள் கடமை எண்டும் எடுத்துக் கொள்ள முடியாது.விட்டுத் தள்ளுங்கள் அக்கா.இப்படி எல்லாம் எதிர் பார்த்துக் கொண்டு இருந்தால் உறவுகளில் விரிசல் தான் ஏற்படும் அதை தவிர்த்து வாழப் பழகுவோமாக.நன்றி.

Edited by யாயினி

ஜீரணிப்பதற்கு கடினமாக காணப்பட்டாலும் நிதர்சனமான கதை நிலாமதி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை அழகு . இப்படி பலபேர் இருக்கினம்.

புலம்பெயர் வாழ்வில் சொந்தங்கள் பல இருந்து ம் சொந்தங்களை இழந்து கொண்டு வருகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காலத்தில சுய நலமில்லாத ஆட்களை தேடிப் பிடிக்க வேண்டும்...அப்படி நாங்கள் இல்லா விட்டால் எங்களைத் தான் முட்டாள் என சொல்கிறார்கள்...நன்றி அக்கா கதைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை.. ஆனால் வாங்கிக்கொடுத்த அவரைத்தான் சொல்லவேணும்..! மருமகளுக்கு உழைத்து வாங்க கைகால் இல்லையா? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தன் உழைத்துச் சம்பாதித்த காசில் இன்னொருவன் இன்பம் கொள்வது நமக்கென்ன புதிசா?

அதுக்குள்ள பக்கத்து வீட்டுக்காரனுக்கு படம் வேறை காட்டினம்.

கொடுக்கிறவன் இருக்கும் வரை கேக்கிறவனும் இருப்பான்.

நன்றி நிலாமதி அக்கா

வாத்தியார்

********

ஒரு உண்மை சம்பவத்தை மனதில் நிறுத்தி எழுதிய கதையாக தோன்றுகிறது.

உதவி செய்வதற்கும் ஒரு வரையறை இருக்க வேண்டும். தேவை அவசியம் அறிந்து அடிப்படைத் தேவைகளுக்கு மட்டும் உதவி செய்யலாம். ஒருவர் தனது சொந்தக் காலில் தனது தேவைகளை பூர்த்திசெய்ய முயற்சிப்பதற்கு உதவி செய்யலாம்.

ஒருவர் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அவருக்கு செய்ய நினைப்பது இப்படியான கவலைகளில் முடியாலாம்.

வணக்கம்

நல்ல கதை நிலாமதி அக்கா வாழ்த்துக்கள்

இதில் ராஜ சுந்தரம் தனது தேவையை நிறை வேற்ற முடியவில்லை என்று கவலைப்பட்டாலும் தன் சகோதரியின் மகளுக்கு தன்னால் முடிந்தவற்றைச் செய்து கொடுத்தோம் என்ற மனதிருப்தி மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனால் ராதிகாவிற்கு தனது தவறை உணரும்போது மகிழ்ச்சி என்பது வாழ்நாளிலேயே இல்லாது போய்விடும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனத்திட்ட எதிர் பார்ப்பதே தவறு.அது சகோதரங்கள் மனைவி பிள்ளைகள் என்றாலும் கூட.நன்றி உங்கள் பதிவுக்கு.

உதவி செய் பலனை எதிர் பாராதே.... எதிர் பார்த்தாலும் கிடைக்காது! அனுபவத்தில் தந்த பாடம்!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படிப்பினையான கதை.நன்றி நிலா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கதைக்கு கருத்துப் பகிர்ந்த யாயினி ..கரும்பு..கறுப்பி ..ரதி..இசைக்கலைஞன் ...வாத்தியார் ஆராவமுதன்..

.மொழி ..சஜீவன் ...குட்டி ..நுனாவிலான் யாவருக்கும் என் நன்றி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயசரிதை போன்ற நல்ல கதை.

நிலாமதி!

எழுத்தாற்றல் எல்லோருக்கும் இருப்பதில்லை.

அது உங்களிற்கு இருக்கின்றது.

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குமாரசாமி அண்ணா ( ஐயா) கருத்துபகிர்வுக்கு நன்றி .மிக்கமகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியக்கா தங்களது எழுத்துக்கும் நேரத்துக்கும்

ஆனால் இந்த கருத்தை இருவகைப்படுத்தலாம்

தலைப்பே பிரதி பலன் என்கின்ற போது...

ஒரு உதவிக்கு பிரதிபலனை எதிர்பார்ப்பதும் தவறாகும்

நாம் செய்தோம்தானே

அதனால் அவர்கள் கட்டாயம் அதற்கு கைமாறு செய்யவேண்டும் என்பதிலும் கேள்விகள் உண்டு

அதைவிட

அவருக்கு உண்மையில் வாகனங்களை வேறு ஒருவரிடம் கொடுக்கும் பழக்கம் என்னைப்போல் இல்லாது இருக்கலாம்

நான் எனது குடும்பத்தில் பலபேருக்கு பல லட்சம் உதவி செய்துள்ளேன்

அத்துடன் அதை மறந்துவிடுவேன்

ஏனெனில் எனது கடமையை நான் செய்தேன் என்பதே எனது திருப்தி

மறுபடியும் அவர்களிடமிருந்து உதவியை நான் எதிர்பார்க்கின்ற போது...

அந்த ஆத்ம திருப்தி என்னை விட்டு அகன்றுவிடும்

அத்துடன் மற்றவர் சொல்லும் காரணங்களை நாம்; மனப்பூர்வமாக ஏற்க வேண்டும்

இல்லையெனில் குடும்ப ஒற்றுமை மற்றும் கூட்டுக்குடும்ப பாரம்பரியம் இல்லாது போய்விடும் என்பது எனது கருத்து.

எல்லோருக்கும்;ஒரே கருத்து இருக்கும் என்று இல்லைத்தானேதப்பெனில் பெரிது படுத்தவேண்டாம்

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.