Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் பொதுமக்கள் இழப்பிற்கு காரணம் இந்தியா, பேராசிரியர் சித்தம்பலம் சாடல்

Featured Replies

... அந்த அழிவுகளென்ன, எமக்கு இன்னொரு வாழ்வு என்று ஒன்றும் இந்தியாவினால்தான் தர முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

உபிகாரனுக்கு கூட இந்த அளவுக்கு இந்திய விசுவாசம் இருக்குமா அல்லது விரட்டபட்ட பண்டிட்டுகளுக்கு கூட இருக்குமா என தெரியவில்லை... நன்றி தோழர் உங்களுக்காக இந்த ஸ்பெசல் பாடல்... டெடிகேட் செய்யபடுகிறது.... :rolleyes::D

http://www.youtube.com/watch?v=qq-OfnIC2i0

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் ஆக்குபைட் காஸ்மீரில் சீன ராணுவம் நுழைந்தது மிகப்பெரும் செய்தியாகப் பேசும் ஊடகங்கள் தஞ்சாவூருக்கு அருகில் இலங்கையிலிருந்து சீன ராணுவத்தினர் வந்த செய்திப் பற்றி பேசுவதில்லை...

இந்தியா என்ற யூனியனில் இருக்கும் தமிழன் என்ற ஒரு இனத்தை 30கிமீ தொலைவில் கொல்ல என்றைக்கு இந்த யூனியன் உதவியதோ அன்றைக்கே இந்தியா என்ற யூனியன் கூலிக்கு மாரடிக்கும் ஒரு அமைப்பு. தரகு வேலைக்கு உகந்தவர்கள்.

இந்தியா என்ற அமைப்பு என்றைக்கு சிதறுகிறதோ அன்றைய நாள் தமிழர்களுக்கு தீபாவளி. :rolleyes::D

பேராசிரியர் சிற்றம்பலம் ஐயாவுக்கு நன்றிகள்.

தமது ஈனத்தனம், இரட்டைவேடம் யாழ் தமிழருக்கு தெரியாது என்ற இந்தியப் பயங்கரவாதிகளின் நினைப்பை பேராசிரியர் தகர்த்தெறிந்துள்ளார்.

அவரது துணிச்சலைப் பார்த்து அங்கு கூடியிருந்த கோழைகள் வியந்தார்களாம். மிகக் கேவலமாக உள்ளது.

இந்திய தமிழினப் படுகொலையாளர்கள் அழியும் போதுதான் ஈழத்தமிழரின் வாழ்வு சிறப்பதற்கான வழிகள் பிறக்கும்.

அதுவரை ஒருசில இந்திய தமிழினப் படுகொலையாளர்களின் கைகூலிகள் அவர்கள் புராணம் பாடிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களைவிட்டால் கதியில்லை என்று உளறுவார்கள். இந்தக் கைகூலிகள் அவிழ்த்துவிடும் பொய்களை ஈழத் தமிழர் நம்பப் போவதில்லை.

ஜனாயக வேடம் போட்டு, இனப்படுகொலைகளை நிகழ்த்தி 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்த, வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க நேர்மையான மனிதர்களின் தொடர்ச்சியான முயற்சி அவசியம்.

நன்றிகள்! நன்றிகள்!! ... புரட்சிகரதமிழ்த்தேசிகன்,

... எங்களுக்கு பின்னும் அமெரிக்காவோ, ரஷ்யாவோ, சீனாவோ, பாகிஸ்தான் என்ன ஒரு மாலதீவு நின்றிருந்தால் நாம் விரலைத் தூக்கி இந்தியாவிற்கு காட்டலாம்!! யாரைய்யா இருக்கிறார்கள்???? எல்லோரும் சேர்ந்து 40000 மக்களை இரு பகல்களுக்குள் கேட்பார் யாருமற்று கொண்று குவித்தார்கள்!!!! நாம் வெளியில் வந்து விட்டோம், உங்களுக்கும் தமிழ்நாடு இருக்கிறது அங்குள்ள மக்களுக்கு??????

இந்தியா சிதறும் நாள், எமக்கும் தீபாவளிதான்!! ஆனால் அதுவரை எம்மினம் அங்கிருக்குமா????

முன்பு இந்தியனுடன் சேர்ந்து சிங்களவனுடன் அடிபட்டோம், பின் இந்தியனுடன் அடிபடுகையில் சிங்களவனுடன் சேர்ந்தோம்!! அதை அரசியல்/இராணுவ இராஜதந்திரம் என்றால், இன்று இந்தியனுடன் சேருவதை ஏன் அப்படி அழைக்ககூடாது???

இன்று நாம் குரல்கொடுக்ககூட திராணியற்றுப் போனோம், கனவுகளை கூட காண முடியாத நிலையில் நாம்!! ... மொத்தத்தில் இன்று மிஞ்சியிருப்பவர்கள் உயிருள்ள பிணங்கள்!!! ... புரியுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

உபிகாரனுக்கு கூட இந்த அளவுக்கு இந்திய விசுவாசம் இருக்குமா அல்லது விரட்டபட்ட பண்டிட்டுகளுக்கு கூட இருக்குமா என தெரியவில்லை... :rolleyes::D

:lol::lol::lol::D

தேசி, உங்கள் லொள்ளுக்கு ஒரு பச்சை...

வடிவேலு வசனம்தான் நினைவுக்கு வருது..அவரு ரொம்ப நல்லவருங்க..! எவ்வளவு கொடுத்தாலும்(கொன்னாலும்) வாங்குறார்..(தாங்குறார்).

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டைகள் உங்களுக்காக சிங்களவனுடன் போரிடுவார்கள் என கனவினுலும் நினைக்கவேண்டாம் தோழர் நெல்லையன்.... எரித்தியா போன்று வேறு பக்கம் நகர்வது சிறந்தது... இதற்கு பிறகும் வாதிடுவதற்கு... பேசாமல் ஏன் தோழர் நெல்லையான் பேசாமால் இந்தியனாக மாறிவிட்டால் என்ன.... :rolleyes::D:lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியின் தலையங்கம், எத்தனையோபேரை சுட்டுத்தள்ளிப்போடடியள் விருப்பமென்டால் என்னையும் சுடுங்கோ எனும் இந்தியாவின் தமிழர்மீதான கொலைவெறியினைவெளிக்காட்டுவதை ஆணித்தரமாக்கி, பேராசிரியரது கருத்தினை வழிமொழிந்திருக்கும் வண்ணம் அமைந்திருந்தால் நன்றாகவிருந்திருக்கும். நெல்லையன் தங்களுக்கக் கனவு காண்பதற்கோ அன்றேல் எமையழித்தவர்கட்குக் களுவிவிடுவதற்கோ உரிமையுண்டு, ஆனால் அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது காரணம் இந்தியதேசம் தமிழர்விரோததேசம். ATBC செய்தியாளருக்கு ஒரு வேண்டுகோள் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு புலத்தில் புனிதமான பத்திரிகையாளர்ப் பணிசெய்யும் பரமேஸ்வரனை எதிர்காலத்தில்சங்கடத்தில் மாட்டிவிடவேண்டாம்.பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றிக் கேட்டு, சிலவேளை நிருபாமாராவுக்கு எதிர்காலத்தில் ஏதாவது நடந்தால் (அவரை, ராஜீவ்காந்தியை இந்திய உளவுத்துறை போட்டுத்தள்ளியது போல அவர்களே போட்டும் தள்ளலாம்) பரமேஸவரன் சங்கடப்படவேண்டிவரும் நீங்கள் வாணெலியில் அதையும் ஒருசெய்தியாக்கிப்போட்டு வாளாதிருந்திடுவீர்கள். வடையைத்திண்டமா போனமா எண்டு இருக்கவேண்டும் வடையை யார் சுட்டது ஒட்டையை யார்போட்டது எண்ட கேள்விகளையெல்லாம் விட்டுத்தள்ளவும். முக்கியமாக பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்தல்ல, தமிழீழத்தில் இனிமேலும் பிறக்கக்கூடிய ஒவ்வொருவரதும் கருத்தாகம் இக்கருத்தை சந்ததி சந்ததியாக நாம் எமக்குள் கொண்டுசெல்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கதையோட கதையாக இன்னுமொரு விடையம் தமிழர் விரோத தேசமாம் இந்தியாவின் சட்டமேதையும் அதனது அரசியல் சட்டயாப்பினது உருவாக்கத்தில் அதிக பங்கெடுத்தவராகிய அம்போத்கார் அவர்கள் தனதுரையொன்றில் "இந்தியா சுதந்திரத்திற்கு முன்பு ஒன்றுபட்டதேசமாக இருந்ததில்லை எனக்குறிப்பிட்டுள்ளதாக" இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு நல்லக்கண்ண அவர்கள் கூறியதாக ஆனந்தவிகடனில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆற அமர வந்து நிலைமைகளை மக்களின் கருத்துக்களை கேட்க முடியாதவர்களை எதற்கு ஆனுப்ப வேண்டும். சும்மா 2 படம் எடுத்து தமிழ் மக்களை ஏமாற்றவதற்கா?இப்படித்தான் பாலு என்றவரும் வந்து நேரமில்;லை என்று சொல்லுவிட்டு ராஜபக்சவுடன் ஆற அமர விருந்துண்டு பொன்னாடையும் போர்த்தி விட்டுப் போனவர்.கருணாநிதி நான் கடிதம் எழுதித்தான் சிறப்புத்தூதர் அங்க போய் வந்தவர் என்று சொல்லி அடுத்த தேர்தலுக்கு மக்களுக்கு அல்வா குடுப்பார்.இந்தியாவில் வேலை வெட்டி இல்லாமல் கனபேர் இருக்கிறதா செய்திகள் சொல்லுது.அவர்களில் யாராவது ஒருத்தனைப் பிடிச்சு சிறப்புத் தூதர் என்று அனுப்பியிருந்தால் ஆற அமர வந்து பொழுதைப் போக்கி விட்டுப் போயிருப்பார்.அட அசினையாவது அனுப்பியிருக்கலாமே.

செய்யிறவன் பெருசாய் படம் காட்ட மாட்டான். பெருசாய் படம் காட்டுறவன் ஒன்றுமே செய்ய மாட்டான்.

இதுதான் இன்றைய பொன்மொழி.

அட ஏமாளித் தமிழா! இன்னுமா இந்தியாவை நம்புகிறாய்! உனக்கு விடிவு கிடைச்ச மாதிரித்தான்??????????????

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை உணர்ந்து கொண்டால் சரி....... தோழர் எழும் ஞாயிறு......... அவர்களின் கருத்து போற்ற படவேண்டியது... முதலில் ....இங்குள்ள் மீனவர்க்ளை காக்கவே துப்பில்லை ... அதற்கு மேல் ஈழத்திற்கு உதவ போகிறார்களாம் வருங்காலத்தில்.... :o:wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

:o என்று தணியுமிந்த இந்திய மோகம், என்று குறையும் எங்கள் இந்திய அடிமைத்தனச் சுகம் ??!!!

எம்மை அழித்தாலென்ன , உயிருடன் கொழுத்தினாலென்ன இந்தியாவை நாம் விட்டு விலக மாட்டோம். மொத்த தமிழினமும் அழிந்து எம் நாடு சுவடற்று எரிந்து போனாலும் இந்தியா வரும் என்று காத்திருப்போம், மனிதரற்ற ஒரு சுடுகாடாவது எமக்குக் கிடைக்காதா என்ன??

இந்தியா இந்தியா என்று இதுவரை என்னத்தைக் கண்டோம்?? கிடைத்ததெல்லாம் எமக்கு அழிவு மட்டும்தானே?? இன்னுமென்ன இந்திய விசுவாசம் வேண்டிக்கிடக்கு?? தமிழகத் தமிழனுக்கு இல்லாத விசுவாசமா எமக்கு??

போங்கைய்யா, நீங்களும் உங்கட அரசியல் பேய்க்கதைகளும், சீ...!

இந்திய தமிழினப் படுகொலையாளர்களின் பிரதிநிதியின் மூன்று நாள் விஜயம், வடபகுதியில் தம்மால் அழிக்கப்பட்ட பகுதிகளின் மீள் கட்டுமான நடவடிக்கைகளை பார்வையிட என்று சொல்லப்பட்டது.

ஆனால் அவர் வடபகுதியில் செலவிட்ட நேரம் வெறும் 5 மணித்தியாலங்கள் தான். அதாவது தனது பயணத்தின் 6 % த்தை விடக் குறைவான நேரத்தை மட்டும் தான்.

மிகுதி நேரம் (94 %), சிங்கள இனப்படுகொலை அரசின் உல்லாசங்களை அனுபவித்துவிட்டு, தமிழக மக்களையும், ஏனையவர்களையும் கொலைஞருடன் சேர்ந்து ஏமாற்றும் திட்டம் என்பது வெளிப்படை.

அவர் அருகில், இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் கொலைக் குற்றவாளியும், இலங்கையில் கடத்தல், கப்பம், கொலை மன்னனுமான டக்லஸ் இருப்பதும், தமிழ் மக்களை சொந்த வீடுகளுக்கு செல்ல விடாது தொடர்ந்து பல வருடங்களாக தடுத்து வரும் சிங்கள பயங்கரவாதி சந்திரசிறியும் இருப்பது மேலும் பலத்த சந்தேகங்களை தோற்றுவிக்கிறது.

இந்தியா இதைய சுத்தியுடன் செயற்படவில்லை - பேராசிரியர் சிற்றம்பலம்

புதன்கிழமை, செப்டம்பர் 1, 2010 ஈழ நாதம்

போரின் போது இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களை கொடுத்து அம்மை கொல்ல உதவியது. போர் முடிந்தபின்னர் எமக்கு ஓர் தீர்வினை பெற்றுத்தரவோ எம் மக்களின் வாழ்வாதாரங்களை மறுசீரமைக்கவோ உறுதியாக இந்தியா செயற்படவில்லை. மொத்தத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தியா இதயசுத்தியுடன் செயற்படத் தவறிவிட்டது. இதுவே தமிழ்மக்களின் மனதில் இந்தியா குறித்த கசப்புணர்வை மனவருத்தத்தை ஏற்படுத்தக் காரணமாயிருந்தது.

இவ்வாறு சுட்டிக்காட்டினார் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்டக் கிளைத் தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம். நேற்றுமாலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ் யாழ்.பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் கட்சிகள், திணைக் களங்கள், பல்கலைக்கழகம், சமய நிறுவனங்கள் என்பவற்றின் மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே பேராசிரியர் சிற்றம்பலம் இவ்வாறு கூறினார்.

அங்கு தமது கருத்தைத் தெரிவித்தபேராசிரியர் சி.ஜ.சிற்றம்பலம் தெரிவித்த விடயங்கள் வருமாறு:

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத் தாததால் அது தோல்வியடைந்தது. இந்த நடவடிக்கை எமது மக்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. ராஜீவ் ஜே.ஆர் ஒப்பந்தத்தை உரிய முறையில் அமுலாக்குவதற்குத்தானும் இலங்கை அரசுக்கு இதுவரை வேண்டிய அழுத்தம் கொடுக்கவில்லை.

பல அப்பாவித் தமிழ் மக்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்த இறுதி யுத்தத்துக்கு ஆதரவாக இந்தியா பல நவீனரக ஆயுதங்களை வழங்கி கிளி நொச்சி, மாங்குளம் போன்ற இடங்களில் ஏராளமானோர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது என்று எமது மக்கள் இன்னமும் கருதுகிறார்கள்.

இறுதிப் போர் முடிவடைந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் இனப்பிரச்சிகைக்கான அரசியல் தீர்வு எட்டப்படவில்லை. இது குறித்து இந்திய அரசும் எதுவித அழுத்தமும் கொடுக்கவில்லை. தமிழர் பிரதேசமான வடக்கு கிழக்குப் பகுதியில் யுத்தம் முடிவுற்ற பின்னரும் இராணுவத்தினரை அதிகளவில் வைத்திருப்பதுடன் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்படும் குடியேற்றங்களை இந்தியா தடுக்கவில்லை.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து ஒன்றிணைவோம். இந்தியாவுக்கு தமிழ் மக்களின் நலனில் அக்கறை உண்டு. வடக்கு கிழக்குப் பகுதிகளின் வளர்ச்சிக்கு இந்தியா என்றும் உறுதுணை யாக நிற்கும் என்றார்.

போர் முடிவுற்ற பின்னர் இனியாவது இந்தியா எமது அரசியல் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று நம்பினார்கள். ஆனால் அதனைச் செய்யத்தவறிவிட்டது.

தமிழர் பிரச்சினைகளை கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக நீடித்து அவர்களைச் சீரழித்து வருகிறது. ஆனால் இந்தியா கண்களை மூடிக்கொண்டிருக்கிறது. இதுவே எங்கள் மக்களின் கருத்தாகும்.

போரின் பின்னர் எமது மக்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது. அவர்கள் இருக்க வீடுகள் இல்லை. வெட்டவெளியில் வசிக்கிறார்கள். மொத்தத்தில் பிச் சைக்காரர்கள் ஆகிவிட்டார்கள். இந்த நிலையை நீக்க இந்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது விடயத்தில் இந்தியா உணர்வு பூர்வமாகப் பற்றுறுதியுடன் செயற்பட்டு உரிய தீர்வு ஒன்றை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையும் நிலைப்பாடும் ஆகும். என்றார் சிற்றம்பலம்

ஈழ நாதம்

இந்தியாவுக்கு இதயமே இல்லை பிறகு எப்படி இதய சுத்தி இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rajapakse..jpg

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் இந்தியா இதயசுத்தியுடன் நடந்து கொள்ளத்தவறிவிட்டது என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவிடம் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளைத் தலைவரும், யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யாழ்ப்பாணம் வந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் அரசியல்கட்சிகள், அரச திணைக்களங்கள், பல்கலைக்கழகம், மத நிறுவனங்கள் என்பவற்றைச் சேர்ந்த பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போதே பேராசிரியர் சிற்றம்பலம் இவ்வாறு தெரிவித்தார். “இந்திய - சிறிலங்கா உடன்பாடு ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படாததால் அது தோல்வியடைந்தது. இந்த நடவடிக்கை தமிழ்மக்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. 1987ல் செய்து கொள்ளப்பட்ட ராஜிவ் - ஜே.ஆர் உடன்பாட்டை உரியமுறையில் நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அரசுக்கு இதுவரை இந்தியா போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. ஏராளமான அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த இறுதிப்போருக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி - கிளிநொச்சி, மாங்குளம் போன்ற இடங்களில் பெருமளவானோர் உயிரிழக்க இந்தியா காரணமாக இருந்தது என்று தமிழ்மக்கள் இன்னமும் கருதுகிறார்கள்.

இறுதிப்போர் முடிவடைந்து பல மாதங்களாகிவிட்ட நிலையில் இன்னமும் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு எட்டப்படவில்லை. இது குறித்து இந்திய அரசும் எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.

தமிழர் பிரதேசமான வடக்கு, கிழக்கில் போர் முடிந்த பின்னரும் படையினர் அதிகளவில் நிறுத்தப்பட்டு, தமிழ்மக்களின் பிரதிநிதித்துவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்படும் குடியேற்றங்களைத் தடுக்க இந்தியா முன்வரவில்லை.

போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இனியாவது இந்தியா எமது அரசியல் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று தமிழ்மக்கள் நம்பினர். ஆனால் அதனைச் செய்ய இந்தியா தவறிவிட்டது. தமிழர் பிரச்சினை 60 வருடங்களுக்கு மேலாக நீடித்து அவர்களைச் சீரழித்து வருகிறது. ஆனால் இந்தியா கண்களை மூடிக் கொண்டிருக்கிறது. இதுவே எங்கள் மக்களின் கருத்தாகும். போரின் பின்னர் எமது மக்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது. அவர்கள் இருக்க வீடுகள் இல்லை. வெட்டவெளியில் வசிக்கிறார்கள். மொத்தத்தில் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டார்கள். இந்த நிலையை நீக்க இந்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் இந்தியா உணர்வு பூர்வமாகப் பற்றுறுதியுடன் செயற்பட்டு உரிய தீர்வு ஒன்றை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ்மக்களின் கோரிக்கையும் நிலைப்பாடும் ஆகும்.“ என்று பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ், “கடந்த காலங்களில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து ஒன்றிணைவோம். இந்தியாவுக்கு தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ளது. வடக்கு,கிழக்குப் பகுதிகளின் வளர்ச்சிக்கு இந்தியா என்றும் உறுதுணையாக நிற்கும்“ என்று தெரிவித்தார்.(நன்றி ,புதினப்பலகை )http://www.tharavu.com/2010/09/blog-post_4753.html

rajapakse..jpg

நல்ல பொருத்தாமான வடிவமைப்பு.

ஜனநாயக வேடம் போட்டு, இனப்படுகொலைகளை நிகழ்த்தி 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்த, வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்தால் தான், உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்கும்.

ம்ம்ம் ஒன்னும் சொல்லுவதற்கில்லை . எது ஆனாலும் / எந்த செய்தி ஆனாலும் / கிடைத்தாலும் நாம் அடித்து கொள்கிறோம். ஒருவேளை இது போன்ற செய்திகளை கிளப்பி விட்டுகிட்டே இருந்தால் உள்ளுக்குள் தமிழன் எல்லாம் அடித்துக்கொண்டே செத்து தொலைவான்கள் என்ற எண்ணத்தோடு தான் எதிரிகள் அவ்வப்போது புரளியை கூட கிளப்பிக்கொண்டு திரியுதுகளோ என்னவோ ???

பேராசிரியர் சிற்றம்பலம் சேர் தைரியமாய் தமிழ் மக்கள் பேரழிவின் பின்புலத்தில் இருந்த சில உண்மைகளை புட்டுவைத்துள்ளார்.

இது தான் படித்தவர்களுக்கு இருக்கவேண்டிய அழகு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.