Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுமியும் இரயில் பயணியும்...

Featured Replies

post-6046-019259800 1286487061_thumb.jpe

அந்தச் சிறுமி தன் தாயுடன் இரயில் நிலையம் வந்திருந்தாள். துறுதுறுவென்று அழகாயிருந்த முகத்தில் வறுமையின் சாயல் தெளிவாய்த் தெரிந்தது. அவள் அணிந்திருந்த ஆடைகள் அவர்களுடைய நிலையை முழுவதுமாய் உணர்த்தியது. அவள் தாய்க்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு நேரெதிரே இருந்த இருக்கையில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். வெள்ளை வேட்டி சட்டையில் பார்ப்பதற்குக் கம்பீரமாகவே தெரிந்தார்.

இப்பொழுது இரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. சிறுமி ஜன்னலூடாக வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். மரங்களும் கட்டடங்களும் மிக வேகமாக பின்னோக்கி ஓடுவது அவளுக்கு வியப்பாய் இருந்தது. சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் மெதுவாக இருக்கையில் வந்து அமர்ந்தாள். அவளுக்குப் பசித்தது. தாயின் முகத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் எதுவும் கேட்கவில்லை. மெளனமாக இருந்தாள். அவளுக்குத் தெரியும், தன் பசியைப் போக்குவதற்கு தாயிடம் எதுவுமே இல்லையென்று. இருந்த சொற்பக் காசுக்கும் இரயில் டிக்கற் எடுத்துவிட்டார்கள்!

சிறிது நேரம் கழித்து முன்னால் இருந்த பெரியவர் தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்தார். தான் கையோடு கொண்டு வந்திருந்த பையிலிருந்து உணவுப் பொட்டலம் ஒன்றை எடுத்து தனக்கு அருகில் இருக்கையிலேயே வைத்து லாவகமாகப் பிரித்தார். சிறுமி இமை கொட்டாது பார்த்துக் கொண்டேயிருந்தாள். அந்தப் பொட்டலத்தில் நான்கு இட்லிகள் இருந்தன. அவளுக்குச் சந்தோசமாய் இருந்தது. அந்தப் பெரியவர் நிச்சயமாய் தனக்கும் ஒரு இட்லி தருவார்தானே!

பெரியவர் ஒரு இட்லியைக் கையில் எடுத்தார். சிறுமி ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பெரியவர் மெதுவாக சட்னியுடன் சேர்த்துச் சாப்பிடத் தொடங்கினார். சிறுமியின் முகத்தில் சிறிதளவும் மகிழ்ச்சி குறையவில்லை. அவர் சாப்பிட்டு முடியும் வரை பார்த்துக் கொண்டேயிருந்தாள். பெரியவர் முதலாவது இட்லியை முடித்துவிட்டு இன்னுமொரு இட்லியை எடுத்தார். மீண்டும் சிறுமி ஆவலுடன் பார்த்தாள். இம்முறையும் பெரியவர் ரசித்துச் சாப்பிடத் தொடங்கினார். மீண்டும் அவர் சாப்பிட்டு முடியும் வரை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டேயிருந்தாள் சிறுமி. மூன்றாவது இட்லியை எடுத்தார் பெரியவர். அதையும் சாப்பிடத் தொடங்கினார். இப்பொழுது சிறுமியின் முகத்தில் முன்பைவிட மகிழ்ச்சி பொங்கியது. இன்னும் ஒரேயொரு இட்லிதான். அது தனக்குத்தான். அவள் நம்பிக்கையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். பெரியவர் மூன்றாவது இட்லியையும் முடித்துவிட்டு கடைசி இட்லியை எடுத்தார். சிறுமியின் கைகள் அதை வாங்குவதற்காக மெதுவாக உயர்ந்தன. பெரியவர் சாவகாசமாகச் சாப்பிடத் தொடங்கினார். உயர்ந்த கைகள் அப்படியே நின்றன. அவளுடைய பிஞ்சு முகம் இருண்டு போனது. அப்படியே விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்தாள். அவளின் அடித்தொண்டையிலிருந்து முனகல் ஒன்று எழுந்து அப்படியே அமுங்கிப்போனது...

சாப்பிட்டு முடித்த பெரியவர் திருப்தியுடன் வயிற்றை தடவிவிட்டு பொட்டலம் கட்டி வந்த பேப்பரை கசக்கி ஜன்னலூடாக வெளியே எறிந்தார்...

பி.கு: இது நான் சிறு பையனாய் இருந்தபோது என்னுடைய அம்மா பத்திரிகையிலோ சஞ்சிகையிலோ படித்துச் சொன்ன கதை. சின்னவனாய் இருந்த என்னுடைய அடிமனதில் இது ஆழமாக பதிந்து விட்டது. அதை என்னுடைய வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கிறேன். பயணம் செய்யும் போது சாப்பிடவே கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. அது மற்றவர்களை பாதிக்காத வகையில் இருந்தால் நல்லது..

  • கருத்துக்கள உறவுகள்
:lol::blink::wub::)
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை.. தமிழ்பிரியன். :blink:

சிறுவர் சிறுமியராய் நாம் இருந்த காலத்தில் எமக்குள் எழும் ஆசைகள் பல நிராசைகளாக முடிவதே அதிகம். ஏனெனில் எமது ஆசைகளை பெரியவர்கள் சரியாக விளங்கிக் கொள்ள முன் வருவதும் இல்லை. உள்வாங்க முனைவதும் இல்லை. பெற்றோர் பெரும்பாலான ஆசைகளை நிறைவு செய்தாலும்.. எல்லா ஆசைகளையும் அவர்கள் நிறைவு செய்ய முடியாது. வெளியார் சொல்லவே தேவையில்லை.

எனது அனுபவத்தைச் சொல்கிறேன்.. பாலர் வகுப்பு..

அன்றும் பாடசாலை கூடுகிறது.. மணி அடிக்கிறது.. வழமை போல நாலாம் மணி அடித்ததும்.. ஒரு கப் பிஸ்கட் வழங்கப்படுகிறது. நானோ அதைக் கையில் வாங்காமல் பையில் வாங்க.. பையை எடுப்பதற்கிடையில் அது மேசையில் விரிக்கப்பட்டிருந்த என் கொப்பி (நோட் புக்) மீது கொட்டப்படுகிறது. ஆத்திரம் வருகிறது.. ஏதோ சொல்ல மனசும்.. வாயும் துடிக்கிறது.. ஆனால்.. முடியவில்லை. ஆசிரியை முன்னாள் உட்கார்ந்திருக்கிறார்.. காலையில் கணவரோடு சண்டை போல.. அவரின் தாடைகள் நறுநறும அவர் ஆகாயத்தை நோக்கி விழித்தபடி.. நானோ.. என் எதிர்பார்ப்பு.. பொய்த்துப் போனதில்.. உடைந்து போன மனசை.. சமாதானம் செய்தபடி..!

இப்படி எத்தனையோ... இவை மிக இலகுவாக புறக்கணிக்கப்பட்டனவாக படுவனவாக இருந்தாலும்.. அவை எமக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து.. சிந்திப்பார் யாருமில்லை.

என்னைப் பொறுத்தவரை குழந்தைகளோடு நாம் குழந்தைகளாக வேண்டும். சிறுவர்களோடு நாம் சிறுவர்களாக வேண்டும். வயசானவங்க கூட வயசானவங்களாகனும். அப்பதான் அவங்க உணர்வை புரிஞ்சு கொள்ள முடியும். நான் பெரியாள்.. நீ சிறுசு என்பது என்னைப் பொறுத்தவரை அது மனங்களை எண்ண ஓட்டங்களை இணைக்க தடையாக இருக்கும் என்று நினைக்கிறேன். :wub:

ஆனால்.. பெண்களோடு மட்டும் கராராக வேண்டும். அவங்க டேஜ்ஜர் பாட்டிகள்..! நான் பெண்கள் என்பது பெண் குழந்தைகள்.. சிறுமிகள்.. வயதானவங்களை சொல்லேல்ல. அவங்க நல்லம். நான் சொல்லுறது.. ஒரு 15 வயசில இருந்து 55 வயசு வரை உள்ளவங்கள. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெண்கள் என்பது பெண் குழந்தைகள்.. சிறுமிகள்.. வயதானவங்களை சொல்லேல்ல. அவங்க நல்லம்.

:blink::wub:

அவங்க ஏன் நல்லம் ?

  • கருத்துக்கள உறவுகள்

:blink::wub:

அவங்க ஏன் நல்லம் ?

அவங்க எந்த உள்நோக்கமும் வைக்காம வெளிப்படையா சூதுவாது இன்றி.. பழகுவாங்க. அது எண்ணங்களை இணைப்பதை இலகுபடுத்துகிறது. மனதுக்கு மகிழ்வளிக்கிறது. அதாவது ஒரு இயல்பான மனித சமூக உறவுநிலை வளர்கிறது.

ஆனால் இளம் பெண்கள் அப்படியல்ல. அவங்க ஆரம்பம் தொட்டே.. ஒரு மாதிரியாவே பழகுவாங்க... ( நான் பெண்களில் முதலில் வெறுப்பை வைக்க காரணமாக அமைந்தது.. ஆக்களை கண்டதும்.. மேற்சட்டையை பொத்திப் பிடிகிறதால தான். அந்தச் செயல் ஒரு அசாதாரணமான நிலைக்கு ஒரு வகையான அருவருப்பான நிலைக்கு மனதை கொண்டு செல்கிறது. அந்நியப்பட்டு நிற்க வைக்கிறது.. சொல்கிறது. நாங்க ஏதோ.. அவையை அங்கையே பார்க்கிறது போல எல்லோ அவை நினைக்கினம்...???! இது ரெம்பக் கொடுமை.. இப்ப எல்லாம் வேண்டும் என்றே அங்க தான் பார்க்கிறது. நல்லா பொத்தி பிடிக்கட்டும் என்று.) மறுதளிப்பது அதிகம். இவை ஒரு இயல்பை களைந்து செயற்கையை புகுத்துகிறது. மனது நாடகமாட வெளிக்கிடுகிறது. கள்ளம் செய்ய தூண்டுகிறது. பொய் சொல்ல வைக்கிறது. இயல்பாகப் பழகி ஒரு பெண்ணோடு உறவை.. நட்பை அல்லது காதலை நிலை நிறுத்த முடியுமா என்றால் அது மிகச் சிரமம்..! இயல்பை களைந்து மனதை அது விரும்பாத பாதையில் போகச் செய்து.. தங்களோடு போலி கலந்து பொய் கலந்து பழகத் தூண்டும் செயலால்.. அவங்க கூடாது. :lol::)

Edited by nedukkalapoovan

( நான் பெண்களில் முதலில் வெறுப்பை வைக்க காரணமாக அமைந்தது.. ஆக்களை கண்டதும்.. மேற்சட்டையை பொத்திப் பிடிகிறதால தான். அங்கையே பார்க்கிறது போல எல்லோ அவை நினைக்கினம்...???! இது ரெம்பக் கொடுமை.. இப்ப எல்லாம் வேண்டும் என்றே அங்க தான் பார்க்கிறது. . :D:)

என்ன நீங்க, அவங்கள் அங்க பார்க்க சொல்லி சிக்னல் தந்திருக்கிறாங்கள். அதை விளங்காமல் வெறுக்கத் தொடங்கியது உங்கள் பிழை. ஆனால் ஒன்று, பழிவாங்கும் விதம் நல்ல மேட்டர். புல்லரிக்க வைக்குது. :o

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

( நான் பெண்களில் முதலில் வெறுப்பை வைக்க காரணமாக அமைந்தது.. ஆக்களை கண்டதும்.. மேற்சட்டையை பொத்திப் பிடிகிறதால தான்)

உண்மை.ஆனால் நெருங்கினவர்களே இப்பிடி செய்யேக்கை நாங்கள் என்ன செய்யிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விதத்தில் கதையாக வடித்துள்ளீர்கள் தமிழ்ப்பிரியன் தொடர்ந்து எழுதுங்கள்...எனது சார்பாக ஓர் பச்சை.

நெடுக்கு தம்பி நீங்களும் பெண்களுடன் மனசு விட்டு கள்ளமில்லாமல் பழகினால் அவர்களும் பழகுவார்கள்...உங்கள் மனசில் கள்ளமிருந்தால் :o:D:)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு தம்பி நீங்களும் பெண்களுடன் மனசு விட்டு கள்ளமில்லாமல் பழகினால் அவர்களும் பழகுவார்கள்...உங்கள் மனசில் கள்ளமிருந்தால் :o:D:)

பகிடியையே சீரியஸா எடுக்கிற பெண்களோட எப்படி கள்ளமில்லாமல் பழகிறது...????! இயல்பா பழக அவங்க தயார் இல்லாத போது.. நாங்க மட்டும்.. இயல்பா எப்படி இருக்கிறது. நடிக்கிற இடத்தில நடிக்கனும்.. நடக்கிற இடத்தில நடக்க வேண்டியது தான். அதைவிட்டிட்டு.. ஏதோ.. நடக்கிற காரியமா சொல்லுங்கோக்கா..! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு பதிவில் எழுதி இருந்தீர்கள் கதைக்கும் போது அதிகம் சிரிப்பவர்களை பிடிக்காது என்டு பிறகு எப்படி உங்களால் பகிடியாக பேச முடியும் :o

  • கருத்துக்கள உறவுகள்

( நான் பெண்களில் முதலில் வெறுப்பை வைக்க காரணமாக அமைந்தது.. ஆக்களை கண்டதும்.. மேற்சட்டையை பொத்திப் பிடிகிறதால தான். அந்தச் செயல் ஒரு அசாதாரணமான நிலைக்கு ஒரு வகையான அருவருப்பான நிலைக்கு மனதை கொண்டு செல்கிறது. அந்நியப்பட்டு நிற்க வைக்கிறது.. சொல்கிறது. நாங்க ஏதோ.. அவையை அங்கையே பார்க்கிறது போல எல்லோ அவை நினைக்கினம்...???! இது ரெம்பக் கொடுமை.. இப்ப எல்லாம் வேண்டும் என்றே அங்க தான் பார்க்கிறது. நல்லா பொத்தி பிடிக்கட்டும் என்று.)

முந்தி உங்களையறியாமலே பார்த்திருப்பீர்கள், இப்ப அறிந்து பார்க்கின்றீர்கள். எப்படியோ பெண்களை நெளிய வைக்கும் கண்ணை வைத்திருக்கின்றீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு பதிவில் எழுதி இருந்தீர்கள் கதைக்கும் போது அதிகம் சிரிப்பவர்களை பிடிக்காது என்டு பிறகு எப்படி உங்களால் பகிடியாக பேச முடியும் :o

அக்கா அதிகம் சிரிக்கிறவர்களை தான் பிடிக்காது என்று எழுதி இருக்கிறேன். சிரிக்கவே கூடாது என்று சொல்லேல்லத் தானே அக்கா. சிரிப்பு ஒரு மருந்து.. அது அளவோட இருந்தா. அளவுக்கு அதிகமானா பைத்தியம்..! :):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்ப்பிரியன். நீங்கள் எழுதியது கதை அல்ல. நிஜம்.

அந்தச் சிறுமி அந்த முதியவரிடமிருந்து நாலாவது இட்லியைத் தட்டிப் பறித்துச் சென்றிருந்தால் அல்லது அதற்கு முயற்சி செய்திருந்தால் அது

போராட்டமா? அல்லது

பயங்கரவாதமா?

எனக்கென்னவோ மனிதனுடைய போராட்டங்கள் இப்படியான நிலைகளில் தான் ஆரம்பிக்கின்றன எனத் தோன்றுகின்றது

வாத்தியார்

*********

  • தொடங்கியவர்

நன்றி நெடுக்ஸ் அண்ணா..

இயல்பாகப் பழகி ஒரு பெண்ணோடு உறவை.. நட்பை அல்லது காதலை நிலை நிறுத்த முடியுமா என்றால் அது மிகச் சிரமம்..! இயல்பை களைந்து மனதை அது விரும்பாத பாதையில் போகச் செய்து.. தங்களோடு போலி கலந்து பொய் கலந்து பழகத் தூண்டும் செயலால்.. அவங்க கூடாது. :lol:<_<

யதார்த்தத்தை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்.. நன்றாக அனுபவப்பட்டிருக்கிறீர்கள் போல..

அருமையான விதத்தில் கதையாக வடித்துள்ளீர்கள் தமிழ்ப்பிரியன் தொடர்ந்து எழுதுங்கள்...எனது சார்பாக ஓர் பச்சை.

நன்றி அக்கா.. நிச்சயமாக.

நன்றி தமிழ்ப்பிரியன். நீங்கள் எழுதியது கதை அல்ல. நிஜம்.

நன்றி வாத்தியார்.. தினம் தினம் எங்காவது நடந்துகொண்டுதான் இருக்கும்...

நல்ல பதிவு.நன்றி :)

நன்றி சஜீவன்..

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அழகாக சிறுமியின் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

  • தொடங்கியவர்

அழகாக சிறுமியின் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

ந‌ன்றி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. இறுதியான நாலாவது இட்லியை சிறுமி தட்டிப்பறித்திருந்தால் பாராட்டப்படவேண்டியது. அது போராட்டமே, உலகின் ஒவ்வொரு உயிரும் தன்னை காத்துக்கொள்வதற்காக போராடுகின்றன. தற்போது உலகநாடுகள் பயங்கரவாதம் எனும் பதத்தினை தம்மால் செய்யப்படும் தவறுகளை பூசி மெழுகுவதற்காகவே பயன்படுத்துகின்றன. நெடுக்ஸ் திருமணம் என்பது வாழ்வில் மனிதனைப் பூரணமாக்குவதாகும். பெண்கள் எல்லாம் புறக்கணிக்கத்தக்கவர்கள் அல்லர். மாறாக ஒரு மனிதனின் அனைத்து நடவடிக்கைகளும் பாலுணர்வை அண்டியே நடைபெறுகின்றன. இந்தப்பாழாப்போன பாலுணர்வு இல்லையோல் உலகில் எதுவும் அசையாது. பெண்கள் தங்களையும் அறியாது மார்பை மறைக்கும் சம்பவங்களும் இருக்கின்றன. இதற்குப்போய் கள்ளம் கற்பிக்காதீகள். நான் வாழ்கின்ற நாட்டில் வெள்ளையினப் பெண்கள் கேட்கும் கேள்வி என்னவெனில் எதற்காக இந்தியணோ அன்றேல் பாகிஸ்தானியர்களோ, இலங்கையரோ எம்மைப் பார்க்கும் போது எமது முழு உடலிலும் தங்கள் கண்களை மேயவிடுகிறார்கள்? ஆனால் ஆபிரிக்கர்கள் அப்படி இல்லை எனவும் கூறுகிறார்கள். இது எமது சந்ததி வழிவந்த தப்பு. நாம் விரைவில் இதனை மாற்றமுடியாது. ஆகவே எமது பெண்கள் மார்பை கையால் மூட நினைப்பதில் எதுவித தவறையும் கொள்வதில் அர்த்தமில்லை. கூடிய விரைவில் உங்கள் திருமணச் செய்தியை எதிர்பார்க்கிறேன். தாங்கள் ஏற்கனவே திருமணம் செய்யாது விட்டிருந்தால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.