Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரதராஜப் பெருமாளின் தொலைபேசி உரை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் தோல்வி வெளிநாட்டிலுள்ளவர்களை பாதித்த மாதிரி அங்குள்ள மக்களை பாதிக்கவில்லை.

இதற்கான காரணம் ஒன்றும் பெரிய ரொக்கட் சயன்ஸ் அல்ல. ஒவ்வொரு மக்களாக பார்ப்போம்.

1. வன்னிச் சனம் - தன் வீட்டிலேயெ செத்தவீடு நடக்கையில் ஊர் அழிந்து விட்டதென எவனாவது கவலைப் படுவானா? மேலும் அவர்களின் இழப்புகளுக்கு புலிகளின் இறுக்கமான நிலைப்பாடு தான் காரணம் என கோபம் கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு அது ஒரு ஆதங்கமாகவும் அவர்களுக்கு ஆத்திரமாகவும் இருக்கின்றது. எனவே வன்னி மக்களை இந்த கணக்கில் இருந்து எடுத்துவிடுவோம்.

2. யாழ்பாணச் சனம் - பாதை திறப்பு. பாதுகாப்பு கெடுபிடி குறைவு. பொருண்மிய நிலையில் முன்னேற்றம். இப்படிப் பட்ட பல சுயநல நோக்கங்கள்

3. கிழக்குச் சனம் - வறுமையின் பிடியாலும் போராலும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் என்ற ஒரு பிரிவும், பல்லின மக்களோடு வர்த்தகம் உத்தியோகம் என்று கலந்து போராட்ட உணர்வுகளோடு தொடர்பு அதிகமற்ற பட்டணத்து மக்கள் மற்றொரு பிரிவுமாக இருக்கின்றார்கள். கருணா பிழவு என்பது கிழக்கு மக்களிடையே போராட்டம் மீது பலத்த அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. குறிப்பாக போரட்டத்துக்கு பலரைக் கொடுத்த மட்டு அம்பாறை கிராம மக்களிடத்தில்.

4. கொழும்புச் சனம் -இவர்களின் போராட்ட உணர்வைப் பற்றி அதிகம் பேசவேண்டிய தேவையில்லை என நினக்கின்றேன்.

ஆனால் இன்னுமொரு முக்கிய விடயம் ... நணபர் காவடி அவர்கள் முன்னர் கூறியது ... இப்போ யாழிலோ கொழும்பிலோ O/L A/L படிக்கும் இளையவர்களுக்கு புலிகள் பற்றிய அறிவு என்பது தனக்கு ஹமாஸைப் பற்றி எந்தளவு தெரிந்திருக்குமோ அப்படிப்பட்டது என்று. இது முற்றிலும் உண்மை. 95 க்குப் பின் புலிகளின் பிரதான செயற்பாடுகள் வன்னிக்குள் முடக்கப்பட்டதே இதற்கு காரணமாக அமைகிறது. உதாரணத்துக்கு 90 களில் யாழில் பிறந்தவனுக்கு ஆயுதம் தாங்கிய ஒரு புலி வீரனை கூட நேரில் கண்டிருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.

சரி இவை போக ... யாரைத் தான் ஆதரிக்கின்றீர்கள் என கேட்டீர்களா? நிச்சயமாக அது யாராகவும் இருக்காது. மாறாக தான் தன் குடும்பம் என்று பிழைப்பை கொண்டு செல்லும் மனோபாவம் மட்டுந்தான் அவர்களிடம் இருக்கும். ஏனெனில் மக்கள் என்பவர்கள் மந்தைகள். அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி ஆபிரிக்காவாக இருந்தாலும் சரி அது தான் உணமை. சரியான மேய்ப்பன் கிடைக்கும் போது அந்த மந்தைகள் மேய்ப்பன் சொல்லும் வழியில் நடக்கின்றன. மேய்ப்பன் இல்லாது போனால் கால் போன போக்கில் செல்கின்றன. வரலாறும் இதைத் தான் சொல்கின்றது.

  • Replies 55
  • Views 4.7k
  • Created
  • Last Reply

உண்மைதான் ஒரு ரொக்கெட் சயன்சும் இல்லை.

நாட்டிலுள்ளவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள்,படுபவர்கள்.

இங்கிருப்பவர்கள் கொடிபிடித்துவிட்டு மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு படுப்பவர்கள்.

செல்லடியும்,துவக்குச் சூட்டு சத்தமுமில்லாமல் இருக்கத்தான் அவர்களுக்கு விருப்பம்.

நாலு தற்கொலை தாக்குதல் நடந்து 40,50 பேர் இரத்தமும் சதையுமாக கிடக்க அடியைப் பார் என்பது எமக்கு விருப்பம்.

பிள்ளைகளின் எதிர்காலம் என்னவென ஒவ்வொருநாளும் விடியும் போதும் அவர்களுக்கு கேள்விக்குறி.ஆமிஅடிக்குதா அல்லது புலி பிடுக்குதா என்று.

பிள்ளைக்கு நைக்கி சூவா அல்லது ஜோர்டான் ஜேர்சியா என பிரச்சனை,டான்ஸ் கிளாசுக்கு விடுவோமா கிடார் பழக விடுவோமா என யோசனை'.

30 வருடப் போராட்டம் இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற நிலையை உருவாக்கிவிட்டது.மூச்சுவிட்டால் காணும் என்ற நிலை

30 வருடம் வெளிநாட்டில் உழைத்ததை சேர்த்ததை கொண்டுபோய் விலாசம் காட்டலாம் என்றால் ஒரு 50,60 ஆயிரம் செத்தென்றாலும் நாட்டை பிடிக்கின்றாங்களில்லை.

மற்றது மேலே சிலர் தங்களுக்கு தான் ஏதோ தமிழீழம் பிடிக்க உரிமை கொடுத்தமாதிரி அவனை போடாமல் விட்டது இவனை போடாமல் விட்டது என எழுதுகின்றார்கள்.மற்றவன்ரை உயிரை எடுக்க உங்களுக்கு யார் உரிமை தந்தது.ஏதோ அவர்கள் தப்பியிருபது நீங்கள் போட்ட பிச்சை மாதிரி எழுத வெட்கமாயில்லை.இன்னமும் எழுதலாம் உங்கள் தலைவர்களையும் கேவலப் படுத்தலாம்.பிறகு உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 வருடம் வெளிநாட்டில் உழைத்ததை சேர்த்ததை கொண்டுபோய் விலாசம் காட்டலாம் என்றால் ஒரு 50,60 ஆயிரம் செத்தென்றாலும் நாட்டை பிடிக்கின்றாங்களில்லை.

இங்கு ஒருவனும் அப்படி நடப்பதை விரும்பவில்லை. ஆனால் உங்களைப் போன்ற புலிக் காய்ச்சல் பிடித்தவர்கள் 50000 சனம் செத்தாலும் புலி அழியவேண்டும் என்று நின்றீர்களே அந்த குரூர எண்ணத்தைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இன்னமும் ஒரு 30 வருட்த்திற்கு போர் தொடருமாயின் தமிழினமே அழிந்துவிடும் எனவே புலி அழியவேண்டும் என நினைத்ததில் தவறில்லை.ஆனால் 50,000 மக்கள் இறந்தாலும் பரவாயில்லை தங்கள் தப்ப வேண்டுமென நினைத்தார்கள் பாருங்கோ அவர்களை பற்றித்தான் நீங்கள் இன்னமும் அறியவில்லை.

எங்களுக்கு எதிரிகளை கையாளும் திறமை இருந்தது... ஆனால் எதிரியோடு சேர்ந்த துரோகிகளை எப்படி கையாண்டு இருக்க வேண்டும் என்கிறீர்கள்...?? பிரபாகரன் தான் தோண்றி தனமான ஒடுக்கப்பட்ட மக்களை வதைக்கும் சிந்தனை போல காட்ட முயலும் நீங்கள் சொல்லுங்கள்.... இந்த வரதராஜ பெருமாளை புலிகள் சுட்டு இருக்க வேண்டும் எண்று விரும்பவில்லையா...??

புலிகளின் போராளிகளை இதே வரதராஜ பெருமாள் கொலை செய்ததை புலிகள் மன்னிக்கலாம்... ஆனால் மக்களுக்கு செய்த கொடுமைகளை யார் மன்னிப்பார்...?? மக்களை காக்க போராடுகிறோம் எண்று ஆட்சியில் ஏறி செய்த கொலைகளுக்கு யார் பொறுப்பு யார் தண்டனை கொடுப்பது...

புலிகள் தங்களுக்கு போட்டியாக இருந்த யாரையும் கொல்லவில்லை... தங்களுக்கும் மக்களுக்கும் அச்சுறுத்தலாகவும், துன்பம் கொடுத்தவர்களை தான் கொலை செய்தனர்...

சரி உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா புலிகளால் கொல்ல பட்ட ஒரு மகானை....?? அல்லது தமிழர்களுக்கு எந்த கெடுதலும் செய்யாத ஒரு தமிழனை...??

புலிகள் எதிர்த்தவனை எல்லாம் கொல்வதாக இருந்தால் சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எண்று தொடக்கி சம்பந்தன், எண்டது வரையான நாடாளு மண்ற உறுப்பினர்களும், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, எண்டு யாரும் உயிரோடை இருந்து இருக்க முடியாது...

கொலை செய்தது யாரை மாணிக்க வாசகன் , ராசிக், மோகன், இப்படியான கேடு கெட்டதுகளை தானே...??

-----

ஐயா 200 பேர் மனமுடைந்தார்கள் என்றால் அவர்களின் மனநிலை தன் குடும்பம் சார்ந்து இருந்தது என்பது தான் காரணமே தவிர கொடுக்கப்பட்ட தண்டனையில் குற்றமில்லை.

விமானக்குண்டு வீச்சுக்கும் புலிகளின் நடவடிக்கைதான் காரணம் என்பதாக முடிப்பீர்கள் போலுள்ளது. நடத்துங்கள்

தண்டனைக்கு பழிவாங்கும் கூட்டத்தையும்

அது என்ன உங்கள் கொள்கை

ஆ ... தமிழர்கள் என்றால் போதும் எல்லோரும் கூடியிருந்து கும்பிடுபோட்டு சிங்களவனிடம் யாசித்து அவன் தருவதை பெறுங்கள். தற்போது இடம் காலியாகத்தானே இருக்கிறது. நாங்கள் இதையெல்லாம் செய்து பார்த்து முடியாத நிலையிலேயே ஆயுதம் ஏந்திய வரலாற்றை மறக்கவில்லை. அது தோல்வியில் இன்று முடிந்ததற்கு நாங்கள் காரணமல்ல. அதை நாம்புரிந்து வைத்துள்ளோம். நீங்கள் பூச்சியத்திலிருந்து புரட்சி என்றும் ஐனநாயகம் என்றும் சமதர்மம் என்றும் சோசலிசம் என்றும் ஆரம்பித்து .........

30 வருடங்களின் பின் என்னைப்போல் வந்து நின்று எழுதுங்கள். அதற்கு தங்களைப்போல் ஒன்று வந்து நின்று மீண்டும் புதுவழி எடுத்துயம்பும். ஆமாம் போட்டு மீண்டும் 30 வருடம்.................???

---

எனது கருத்துக்களை விட உங்கள் இருவரது கருத்துமே பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் எதிரானதாக இருக்கின்றது. எனது கருத்துக்களை பிரபாகரன் தலைக்கு அளவான தொப்பியாக நீங்கள் காண்பததையிட்டு அனுதாபப்படுவதை தவிர வேறுவழியில்லை.

நான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் போராட்டம் என்பது எந்த தளத்தில் நடைபெற்றதோ அந்த தளத்தின் முடிவு அவசியமானது என்று.

..இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றது. இவ்வாறான ஒரு முடிவுக்கு மக்கள் வந்ததிற்குக் காரணம் பிரபாகரன் என்ற மனிதனின் தனிப்பட்ட குணாதிசயம் குறித்தல்ல மாறாக எமது தேசியவாதம் எம்மையே அழித்து தின்று ஏப்பம் விடும் அடித்தளத்தை கொண்டது. ..

எமக்குள் நாம் மேதிக்கொள்வதும் அதனால் மக்கள் அதிருப்தி அடைவது என்பதும் புலிகள் மட்டும் மண்டையில் போட்டதை நீங்கள் கணக்கில் எடுத்தால் அதற்கு நான் பொறுப்பாளியாக முடியாது. எனது கருத்து எமது தேசியவாதத்தளத்தில் எம்மை நாம் அழித்துக்கொள்வதற்கான அடிப்படை இருக்கின்றது அதிலிருந்து உருவான ஆயுதப்போராட்டம் எமக்குள் எப்படி அழிவுகளை செய்தது என்பதை சுட்டிக்காட்டுகின்றது. இதற்குள் பொபி தாசைப்போட்டதில் இருந்து புளட்டின் உட்படுகொலைகள் புலிகள் மாற்றியக்க மோதல்கள் இந்த இஸ்லாமிய அடிப்படை பிரிவினை மற்றும் மோதல்கள் எல்லாம் அடங்குகின்றது. இதை புரிந்துகொள்ள முடியாத குறுகிய வட்டத்துக்குள் நீங்கள் நிற்பதற்கு நான் என்ன செய்யமுடியும்?

நான் குறிப்பிடும் எமது தேசிவாதத்தின் அடிப்படை அதன் உருவாக்கம் எவ்வாறானது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். நாம் மிக நீண்டகாலமாக இனம் என்ற பொதுவடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் கிடையாது. இனம் எமக்கு பெரிதாக வரலாற்றில் எங்கேயும் இருந்ததில்லை. சாதி மதம் பிரதேசவாதம் வர்க்கம் என்பனவே எமக்கு பிரதானமாக இருந்தது. இவற்றை தக்கவைப்பதே பிரதான சமூக இயக்கம். இந்த இயக்கம் இயல்பாகவே ஒருவனை ஒருவன் ஏற்கமுடியாத மனநிலையை ஸ்தாபித்திருந்தது. ஒருவனை ஒருவன் அடிமைப்படுத்தும் சமூக கட்டமைப்பை கொண்டிருந்தது. இதுதான் எமது முன்னய வரலாறு. இதுதான் எமது அடிப்படை. இவ்வாறு இருந்த எம்மை சிங்கள பேரினவாதமே ஒரு பொதுவான இனமாக வரையறுத்து ஒடுக்குமுறையை கட்டவிழ்த்தது. நாம் பழைய அடிப்படையுடன் இந்த ஒடுக்குமுறையை கையாண்டோம். இயக்கங்களும் சரி இயக்கங்களுக்கு முந்தய அரசியல்வாதிகளும் சரி மாற்றுக்கருத்தாளர்களும் சரி இந்த அடிப்படையையே தமது தளமாக கொண்டிருந்தனர். புலிகளின் வரலாறும் இந்தத் தளத்திலேயே நடந்து முடிந்தது.

எமக்குள் இருக்கும் வெறுப்பு விருப்புகள் பிடிவாதங்கள் ஒருவனை ஒருவன் ஏற்கமுடியாத மனோபாவம் ஏற்றதாள்வுகள் அதிகாரமனநிலை என்பதெல்லாம் பழைய தளம் தந்தது. ஆயுதங்களை கையில் எடுத்தபின் இவைகள் மிக மோசமான விழைவுகளையும் ஏற்படுத்தியது. எமக்குள் வரலாறு காணதா சிதைவுகளுக்கும் அழிவுகளுக்கும் பிரிவினைகளுக்கும் வித்திட்டது. இந்தத் தளத்தில் துரோகி தியாகி நல்லவன் கேடுகெட்டவன் எல்லாம் வரையறை செய்யமுடியாத நிலையை கொண்டிருக்கின்றது.

வன்னி மக்கள் இறுதியாக இந்த தளத்தை நன்குணர்ந்துள்ளனர். இந்த தளம் எவ்வளவு கோரமானது கொடுமையானது என்பதை உணர்ந்துள்ளனர். ஏனெனில் சிங்களப்பேரினவதமும் இந்த தளத்தில் உருவான தமிழ்த்தேசியவாதமும் அவர்களை என்ன செய்தது என்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. போராட்டத்தின் முடிவு என்பதும் புலிகளின் முடிவு என்பதும் இந்த தளத்தின் முடிவாகவே பார்க்கப்படவேண்டியது அவசியம் என்பதையே எனது கருத்து மீண்டும் வலியுறுத்துகின்றது. இதற்குமேல் உங்களுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை குய்யோ முறையோ போட்டுத்தள்ளுவன் என்று கத்திப்போட்டுப்போங்கோ

புலிகளின் தலைமையின் அழிவை மக்கள் வரவேற்கின்றனர் எனும் பாணியிலும் அதை நேரடியாகவும் நீங்கள் சொல்லி இருப்பதை இங்கே மாற்றி அமைத்து வேறு திசைக்கு கொண்டு செல்கிறீர்களா...???

புலிகளின் தலைமை ஒரு தேசிய வாதம் கொண்டது, தமிழரின் தனிப்பட்ட நலன்களின் அடிப்படை வாதத்தில் அமைந்தது என்பதை புரிந்து கொண்டமைக்கு முதலில் நண்றி...

..இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றது. இவ்வாறான ஒரு முடிவுக்கு மக்கள் வந்ததிற்குக் காரணம் பிரபாகரன் என்ற மனிதனின் தனிப்பட்ட குணாதிசயம் குறித்தல்ல மாறாக எமது தேசியவாதம் எம்மையே அழித்து தின்று ஏப்பம் விடும் அடித்தளத்தை கொண்டது. ..

எமக்குள் நாங்கள் எப்போதும் மோதிக்கொள்ளவில்லை... எம்மை அழித்தவர்களிடனும் அவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்களுடன் தான் போராடினோம்... இதை தெளிவாக புரிய முயண்றால் எந்த குழப்பமும் இல்லை.... என்னால் அப்படியானவர்களை வரையறுக்கவும் பிரித்துப்பார்க்கவும் எனது பகுத்தறிவுக்கு தகுதி இருக்கின்றது...

உங்களது இசங்கள் கோவணங்கள் எல்லாம் தமிழ் மக்களின் உயிர்களையோ இல்லை உடமைகளையோ காக்க மாட்டாது, இந்த இசங்களை காக்கவே எப்போதும் ஒரு போராளி தேவைப்படுகிறான்... பொதுவுடமை கொள்கையே இந்த முதளாளித்துவம் முன் அடிபட்டு நொந்து நூலாகி போய் கிடக்கிறது...

அந்த இசங்களின் பெயரால் ஒரு இன மக்களின் தார்மீக போராடத்துக்கு இனவாதம் எனும் பெயர் சூட்டி அழிவை வரவேற்கும் மனநிலை என்பது ஒரு மன நோயாளிக்கு இருக்க கூடியது... இந்த போராட்டம் எங்களிம் மீது திணிக்க பட்டதே இல்லாமல் எங்களால் உருவாக்க பட்டது இல்லை...

எப்படி எங்களால் தற்காப்பு நடத்த முடியுமோ அப்படி எங்களால் தற்பாதுகாப்பு மட்டும் செய்ய முடிந்தது.... இண்டைக்கு வெற்றி பெற்ற சிங்கள இனவாதமும் பௌத்த அடிப்படை வாதமும், இந்திய தேசிய வாதமும் இணைந்து ஒரு சிறிய இனத்தை ஒட்டு மொத்தமாக சிதறடித்ததை உங்களால் ஒரு இனவாதிகளின் அழிவாக்க பார்க்கும் மனநிலை என்பது கூட உங்கள் மீது மதிப்பை வரவளைக்வில்லை..

சரி உங்களின் வளிக்கே வருகிரேன்... ஹிப்புறு இனவாதமும், யூத மதவாதமும் இணைந்து ஒரு தேசத்தை கட்டி எழுப்பியது சரி எண்றால், இண்டைக்கு கன்ரனீசியர்கள் இனவாதம் தங்களுக்கு ஒரு வியட்நாமை அமைக்க முடிந்தது எண்றால்... வாங்கள இனவாதமும் இஸ்லாம் மதவாதமும் தங்களுக்கு ஒரு நாட்டை அமைக்க முடியும் எண்றால்... தமிழர்களின் தேசிய வாதமும் தன்க்கு எண்று ஒரு நாட்டை அமைக்க தகுதியானதே...

இதுக்கும் மேலை ஸ்ராலினின் இனவாதம் ஒரு சோவியற்றை உருவாக்க முடியும் எண்றால்... இவ்வளவு ஏன் இந்திய தேசிய வாதத்தின் இந்தியாவை ( வல்லபாய் பட்டீலால்) உருவாக்க முடியும் எண்றால்

நான்மேலை குறிப்பிட்ட மிக குறைவான நாடுகளில் உங்களால் குறிப்பிட ப்பட்ட இனவாதம் கொண்டவைகள் தான் சந்தேகம் இருந்தால் அவர்களின் போராட்டத்தின் போது ஏற்பட்டு இருந்த உள் குத்து வெட்டுக்களை பற்றி அறிந்து கொள்ள முயலுங்கள்... ! இதை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றவர்கள் தான் அவர்கள்...

தமிழர்கள் மட்டும் தான் உள்ளுக்குள் அடிபடுகிறார்கள், கேவலமானவர்கள் என்பது கிணத்து தவளையின் வாதம் மட்டுமே...

எமக்குள் நாம் மேதிக்கொள்வதும் அதனால் மக்கள் அதிருப்தி அடைவது என்பதும் புலிகள் மட்டும் மண்டையில் போட்டதை நீங்கள் கணக்கில் எடுத்தால் அதற்கு நான் பொறுப்பாளியாக முடியாது. எனது கருத்து எமது தேசியவாதத்தளத்தில் எம்மை நாம் அழித்துக்கொள்வதற்கான அடிப்படை இருக்கின்றது அதிலிருந்து உருவான ஆயுதப்போராட்டம் எமக்குள் எப்படி அழிவுகளை செய்தது என்பதை சுட்டிக்காட்டுகின்றது. இதற்குள் பொபி தாசைப்போட்டதில் இருந்து புளட்டின் உட்படுகொலைகள் புலிகள் மாற்றியக்க மோதல்கள் இந்த இஸ்லாமிய அடிப்படை பிரிவினை மற்றும் மோதல்கள் எல்லாம் அடங்குகின்றது. இதை புரிந்துகொள்ள முடியாத குறுகிய வட்டத்துக்குள் நீங்கள் நிற்பதற்கு நான் என்ன செய்யமுடியும்?

நான் குறிப்பிடும் எமது தேசிவாதத்தின் அடிப்படை அதன் உருவாக்கம் எவ்வாறானது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். நாம் மிக நீண்டகாலமாக இனம் என்ற பொதுவடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் கிடையாது. இனம் எமக்கு பெரிதாக வரலாற்றில் எங்கேயும் இருந்ததில்லை. சாதி மதம் பிரதேசவாதம் வர்க்கம் என்பனவே எமக்கு பிரதானமாக இருந்தது. இவற்றை தக்கவைப்பதே பிரதான சமூக இயக்கம். இந்த இயக்கம் இயல்பாகவே ஒருவனை ஒருவன் ஏற்கமுடியாத மனநிலையை ஸ்தாபித்திருந்தது. ஒருவனை ஒருவன் அடிமைப்படுத்தும் சமூக கட்டமைப்பை கொண்டிருந்தது. இதுதான் எமது முன்னய வரலாறு. இதுதான் எமது அடிப்படை. இவ்வாறு இருந்த எம்மை சிங்கள பேரினவாதமே ஒரு பொதுவான இனமாக வரையறுத்து ஒடுக்குமுறையை கட்டவிழ்த்தது. நாம் பழைய அடிப்படையுடன் இந்த ஒடுக்குமுறையை கையாண்டோம். இயக்கங்களும் சரி இயக்கங்களுக்கு முந்தய அரசியல்வாதிகளும் சரி மாற்றுக்கருத்தாளர்களும் சரி இந்த அடிப்படையையே தமது தளமாக கொண்டிருந்தனர். புலிகளின் வரலாறும் இந்தத் தளத்திலேயே நடந்து முடிந்தது.

எமக்குள் இருக்கும் வெறுப்பு விருப்புகள் பிடிவாதங்கள் ஒருவனை ஒருவன் ஏற்கமுடியாத மனோபாவம் ஏற்றதாள்வுகள் அதிகாரமனநிலை என்பதெல்லாம் பழைய தளம் தந்தது. ஆயுதங்களை கையில் எடுத்தபின் இவைகள் மிக மோசமான விழைவுகளையும் ஏற்படுத்தியது. எமக்குள் வரலாறு காணதா சிதைவுகளுக்கும் அழிவுகளுக்கும் பிரிவினைகளுக்கும் வித்திட்டது. இந்தத் தளத்தில் துரோகி தியாகி நல்லவன் கேடுகெட்டவன் எல்லாம் வரையறை செய்யமுடியாத நிலையை கொண்டிருக்கின்றது.

வன்னி மக்கள் இறுதியாக இந்த தளத்தை நன்குணர்ந்துள்ளனர். இந்த தளம் எவ்வளவு கோரமானது கொடுமையானது என்பதை உணர்ந்துள்ளனர். ஏனெனில் சிங்களப்பேரினவதமும் இந்த தளத்தில் உருவான தமிழ்த்தேசியவாதமும் அவர்களை என்ன செய்தது என்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. போராட்டத்தின் முடிவு என்பதும் புலிகளின் முடிவு என்பதும் இந்த தளத்தின் முடிவாகவே பார்க்கப்படவேண்டியது அவசியம் என்பதையே எனது கருத்து மீண்டும் வலியுறுத்துகின்றது. இதற்குமேல் உங்களுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை குய்யோ முறையோ போட்டுத்தள்ளுவன் என்று கத்திப்போட்டுப்போங்கோ

எங்களிடம் ஆயுதம் இருக்கிறது ஏதாவது சொன்னால் போட்டு தள்ளி விடுவார்களோ எண்று நீங்கள் பயப்படுவதுக்கும் நான் உங்களிடம் வந்து வாயை திறந்தால் போட்டு தள்ளி விடுவேன் எண்று சொல்வதுக்கும் கூட நிறைய வித்தியாசம் இருக்கின்றது...

நீங்கள் சொல்ல வருவதும் கூட அந்த முதலாவது தான்.... நீங்களாக எங்களை பார்த்து பயந்து போய் இருந்தால் அதுக்கு நான் எப்படி பொறுப்பாளி...??? உங்களிடம் வந்து எந்த விடுதலை புலியின் தலையை சேர்ந்தவர்களாவது வாயை திறக்க கூடாது எண்று சொல்லி இருக்கிறார்களா....?? எங்களிடம் சொறியாமல் வேலை பாருங்கள் இதுதான் புலிகள் எப்போதும் கேட்பது...

நீங்கள் எல்லாரும் எப்போதுமே வேலை செய்வது எண்றால் புலிகளின் குறைகள் எண்று சிலவற்றை கூறி நாங்கள் அப்படி எல்லாம் இல்லை சிறந்தவர்கள் எண்று மக்களுக்குள் குழப்பாவாதம் செய்பவர்களே அண்றி... புலிகள் இவைகளை செய்வதில்லை நாங்கள் செய்கின்றோம் எண்று நடந்து கொள்ளும் பொறுப்பானவர்களாக எபோதும் கிடையாது... அதுதான் எல்லாவற்றுக்குமான பிரச்சினையே...

இப்போது கூட அப்படியான ஒண்றை தான் செய்கிறீர்கள்.... சரியானவை எவை எங்கு போக வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் உங்களால் சொல்ல முடியவில்லை... வெறும் குற்றச்சாட்டுகளுடன் தான் நகர்கின்றது உங்களின் கருத்தாற்றலும் , அதுக்கான சுந்தந்திரமும்....

குறைகளை எவர் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் பிடிக்கலாம்... அது என்னாலும் முடியும்...! இலவசமாக அறிவுரைகளையும் வழங்கலாம்... ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனுக்கு எந்த செலவும் இல்லாமல் கஸ்ரமே படாமல் குடுக்க கூடியது இந்த அறிவுரைகள் தான்.... இது யாருக்கு தேவை என்கிறீர்கள்... ???

Edited by தயா

இன்னமும் ஒரு 30 வருட்த்திற்கு போர் தொடருமாயின் தமிழினமே அழிந்துவிடும் எனவே புலி அழியவேண்டும் என நினைத்ததில் தவறில்லை.ஆனால்

அண்னை அர்ஜுன், சரி நீங்கள் நினைத்தீர்கள் .. ஒட்டி இருந்தீர்கள் .. செர்த்து முடித்தீர்கள் .... சரி இப்ப புலி இல்லை! முடிச்சாச்சு!! ... நம்ம சனம் அங்கு வாழுதா? இல்லை வாழ விடுகிறானா??? ... என்னத்தை சாதித்தீர்கள்???????

புலி இருக்கும் மட்டும் ... தமிழருக்கு என்று ஒரு பூமி இருந்ததாக உலகத்துக்கும் தெரியும்!!! இன்று???????

நீங்கள் போன்றோர் துப்புவதெல்லாம் உங்கள் கூச்சைக்கே திரும்புவது உங்களுக்கு தெரியவில்லை???? ஏன் இன்னும் இந்த கேவலங்கெட்ட ஒட்டுண்ணி வாழ்வு???????

நான் அருவரிக்கு பாடம் எடுப்பதில்லை கடைசி ஒரு ஏ/எல் ஆவது முடித்துவிட்டுவாரும்.

உலகத்துக்கு விளங்கிய உண்மை உங்களுக்கு விளங்க மறுப்பதற்கு காரணம் அதுதான்.

மற்றது மேலே சிலர் தங்களுக்கு தான் ஏதோ தமிழீழம் பிடிக்க உரிமை கொடுத்தமாதிரி அவனை போடாமல் விட்டது இவனை போடாமல் விட்டது என எழுதுகின்றார்கள்.மற்றவன்ரை உயிரை எடுக்க உங்களுக்கு யார் உரிமை தந்தது.ஏதோ அவர்கள் தப்பியிருபது நீங்கள் போட்ட பிச்சை மாதிரி எழுத வெட்கமாயில்லை.இன்னமும் எழுதலாம் உங்கள் தலைவர்களையும் கேவலப் படுத்தலாம்.பிறகு உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்.

அண்ணா அர்ஜுன், புலி மட்டுமா போட்டது? இந்த போடலை தொடங்கியது???? இடையிடையே உள்ளுக்குள் கேட்டுக் கேள்வி இல்லாமல் போட்டுத்தள்ளியது?????... அப்போதெல்லாம் ஏன் கேட்கவில்லை????????

ஆரம்பத்தில்(புலி இல்லாமல் மற்றைய வீரத்திலகங்களின் கைங்கரியங்கள்) ..

1) இறைகுமாரன்/உமைகுமாரன் தொடங்கி பல புலி ஆதரவாளர்கள், .... இடையே புலிகளுக்கு துண்டுப்பிரசுரம் கொடுத்துக் கொண்டிருந்த அறுவர் சுழிபுரத்தில் ... அப்படியே பின் தமக்குள் போடத்தொடங்கி தம்மையே அழித்த புளொட்!!!

2) ரெலோவினுள் 80களின் ஆரம்பத்தில் ரமேஸ்(/சுதன்) என்று போட்டு பல சீரளிவுகள்/உண்ணாவிரதங்கள், அதன் பின்பே ரெலோக்கு சென்ற பெண்பிள்ளைகள் புலியில் சேர்ந்தார்கள்(புலியின் பெண்கள் அமைப்பினர் ரெலோவில் இருந்து வந்தவர்களினூடே தொடங்கப்பட்டது) ... பின்னாளில் ரெலோவின் வெற்றிகளுக்கு காரணமான தாஸ் குருப் சிறிசபாவின் ஏவலில் முடிக்கப்பட்டு, பின் புலி அழிப்பிற்கு வெளிக்கிட ... எல்லாம் முடிந்தது!!

3) ஈ.பியோ நாய்பீ, போராட்டம் என்று ஒன்றில்லை, பெண் உறுப்பினர்களை வைத்து சீரளித்து மக்களை இயக்கங்களை வெறுக்கத்தொடங்கிய கும்பல், பின்னாளில் இந்திய அமைதிப்படையுடன் நடத்திய அட்டகாசங்கள் என்ன கொலை கொலை கொலைகள் மறக்கக்கூடியனவா??

40 திரீ ஸ்டார் ... ஈ.என்.டி.எல்.எப்/ஈ.பி.டி.பி கும்பல்கள் ... சொல்லத்தேவையில்லை ... இன்றுவரைக்கும் கொலைகள்தான் இவர்களின் கொள்கை!!

அப்படி நீங்களே போட்டு/போட்டுத்தள்ளி/போடப்பண்ணி அழிந்தீர்கள்!!

... பின்னாளில் யாழ் வடமராட்சியில் இருந்த புகழ்பெற்ற ஆசிரியர் கூறியது ... இவர் புலி எதிர்ப்பாளர், இயக்கங்கள் தமக்குள் அழிவதை ஏற்கமுடியாது பகிரங்கமாக கருத்துக் கூறியவர் .... இந்திய அமைதிப்படைக்காலத்தில் .... ஏன் இந்த கேடுகெட்டவர்களையும் புலிகள் அழியாமல் விட்டு வைத்தார்கள்??????? ...... இதுதான் இன்று, பலர் புலி எதிர்பாளர்களாக இருந்தவர்களும் கேட்டும் கேள்வி!!!!!!!!! ... எனென்று அர்ஜுன் உங்களுக்கு புரியும்!!!

Edited by Nellaiyan

நான் அருவரிக்கு பாடம் எடுப்பதில்லை கடைசி ஒரு ஏ/எல் ஆவது முடித்துவிட்டுவாரும்.

உலகத்துக்கு விளங்கிய உண்மை உங்களுக்கு விளங்க மறுப்பதற்கு காரணம் அதுதான்.

யார் அண்ணை உலகம்....?? இந்தியாவும் அவைக்கு நக்கும் ஆக்களோ....?? ஊடகம் வைச்சு பக்க சார்ப்பாக பிரச்சாரம் செய்யிறவன் தான் உலகமோ...??

உங்களுக்கு அறிவு இருக்கு எண்டு நீங்கள் தான் காட்ட வேண்டிய நிலையிலை இருக்கிறீயள்... வேணும் எண்டால் சோதிச்சு பாக்கலாம்... தயாரா..??

சரி அரசியல் கனக்க தெரியும் எண்டுறீயளோ... அரசியலுக்கும் தலைமைத்துவத்துக்கும் என்ன வித்தியாசம் எண்டு ஒருக்கா சொல்லுவியளோ....?? சரி எவ்வளவு வித்தியாசம் எண்டாவது சொல்லுங்கள்....??

இனி இங்கை ஆளை காணக்கிடைக்காது எண்டு எனக்கு தெரியும்.. எண்டாலும் கேட்டு வைச்சன்... :D

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அண்னை அர்ஜுன், சரி நீங்கள் நினைத்தீர்கள் .. ஒட்டி இருந்தீர்கள் .. செர்த்து முடித்தீர்கள் .... சரி இப்ப புலி இல்லை! முடிச்சாச்சு!! ... நம்ம சனம் அங்கு வாழுதா? இல்லை வாழ விடுகிறானா??? ... என்னத்தை சாதித்தீர்கள்???????

(சிவாஜி பாணியில் வாசிக்கவும்..! :D )

ஏம்பா நெல்லை..! சொல்றதெல்லாம் சரிதான்பா..! ஆனால் முப்பது வருஷம் ஆயுதப் போராட்டம் சிங்களவனை மிருகம் ஆக்கிடுச்சே..! :D அடிபட்ட அவன் எங்க போவான்? யாகிட்ட கேப்பான்? :D

அதனால.. அடுத்த முப்பது வருஷ்த்துக்கு அவன்சொல்லை நாம் கேட்கணும்..! :D ஏன்னா.. அவனை நாம ரொம்ப சீண்டிப் பார்த்திட்டம்பா..! அவனும் பாவம் இல்லியா? :D:lol:

அண்ணா அர்ஜுன், புலி மட்டுமா போட்டது? இந்த போடலை தொடங்கியது???? இடையிடையே உள்ளுக்குள் கேட்டுக் கேள்வி இல்லாமல் போட்டுத்தள்ளியது?????... அப்போதெல்லாம் ஏன் கேட்கவில்லை????????

ஆரம்பத்தில்(புலி இல்லாமல் மற்றைய வீரத்திலகங்களின் கைங்கரியங்கள்) ..

1) இறைகுமாரன்/உமைகுமாரன் தொடங்கி பல புலி ஆதரவாளர்கள், .... இடையே புலிகளுக்கு துண்டுப்பிரசுரம் கொடுத்துக் கொண்டிருந்த அறுவர் சுழிபுரத்தில் ... அப்படியே பின் தமக்குள் போடத்தொடங்கி தம்மையே அழித்த புளொட்!!!

2) ரெலோவினுள் 80களின் ஆரம்பத்தில் ரமேஸ்(/சுதன்) என்று போட்டு பல சீரளிவுகள்/உண்ணாவிரதங்கள், அதன் பின்பே ரெலோக்கு சென்ற பெண்பிள்ளைகள் புலியில் சேர்ந்தார்கள்(புலியின் பெண்கள் அமைப்பினர் ரெலோவில் இருந்து வந்தவர்களினூடே தொடங்கப்பட்டது) ... பின்னாளில் ரெலோவின் வெற்றிகளுக்கு காரணமான தாஸ் குருப் சிறிசபாவின் ஏவலில் முடிக்கப்பட்டு, பின் புலி அழிப்பிற்கு வெளிக்கிட ... எல்லாம் முடிந்தது!!

3) ஈ.பியோ நாய்பீ, போராட்டம் என்று ஒன்றில்லை, பெண் உறுப்பினர்களை வைத்து சீரளித்து மக்களை இயக்கங்களை வெறுக்கத்தொடங்கிய கும்பல், பின்னாளில் இந்திய அமைதிப்படையுடன் நடத்திய அட்டகாசங்கள் என்ன கொலை கொலை கொலைகள் மறக்கக்கூடியனவா??

40 திரீ ஸ்டார் ... ஈ.என்.டி.எல்.எப்/ஈ.பி.டி.பி கும்பல்கள் ... சொல்லத்தேவையில்லை ... இன்றுவரைக்கும் கொலைகள்தான் இவர்களின் கொள்கை!!

அப்படி நீங்களே போட்டு/போட்டுத்தள்ளி/போடப்பண்ணி அழிந்தீர்கள்!!

... பின்னாளில் யாழ் வடமராட்சியில் இருந்த புகழ்பெற்ற ஆசிரியர் கூறியது ... இவர் புலி எதிர்ப்பாளர், இயக்கங்கள் தமக்குள் அழிவதை ஏற்கமுடியாது பகிரங்கமாக கருத்துக் கூறியவர் .... இருந்து இந்திய அமைதிப்படைக்காலத்தில் .... ஏன் இந்த கேடுகெட்டவர்களையும் புலிகள் அழியாமல் விட்டு வைத்தார்கள்??????? ...... இதுதான் இன்று, பலர் புலி எதிர்பாளர்களாக இருந்தவர்களும் கேட்டும் கேள்வி!!!!!!!!! ... எனென்று அர்ஜுன் உங்களுக்கு புரியும்!!!

ஏன் படகிலை கொண்டு போய் கடலிலை போட்டு தள்ளின சொந்த போராளிகளை விட்டு போட்டியள்... ???

மாலை தீவை பிடிச்சால் தமிழீழம் கிடைக்கும் எண்ட அறிவார்ந்த அரசியல் தெரிந்த போராளிகள் எல்லா அவர்கள்....

Edited by தயா

அர்ஜுன்,

மற்றைய இயக்கங்களை விட நீங்கள் இருந்த PLOTE இலேயே உட்கொலைகளும், சீரழிவுகளும் அதிகம் நடந்தன. புலிகள் தடை விதிக்கும் முன்பே பெரியவர், சங்கிலி, மொட்டை மூர்த்தி (இவர் இப்பொது பாதிரியாராக இருக்கிறாராம்) பண்ணின கொலைகள் எண்ணிலடங்கா. வாமதேவா மற்றும் PLO பயிற்சிபெற்ற போராளிகள் பலர் தூள் கடத்தும் வியாபாரத்திலேயே கொடிகட்டிப் பறந்தார்கள். இதை விட பெண் தொடர்புகளைப் பற்றி ஒரு எபிசொட்டே எடுக்கலாம்.

சென்னை கே கே நகரையே நாறடித்தார்கள். நீங்கள் கூறும் அரசியல் தெளிவு / அறிவுக்கும் PLOTE க்கும் வெகு தூரம். விடுதலை போராட்டத்திற்கும் அவர்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இருக்கவில்லை. PLOTE மிக தேர்ச்சி பெற்ற மாபியா குழு.

அரசியல் முதிர்ச்சி பெற்ற உங்களால் கூட அவர்களை மாற்ற முடியவில்லை.

விடுதலை என வெளிகிட்ட அனைத்து இயக்கங்களுமே பிழைகள் விட்டன.இயக்கங்களுக்குள் கொலை,இயக்கங்களுக்கிடையில் சண்டை.

உள்ளதற்குள் ஈ.பீ.ஆர்.எல்.எப் தான் அராஜகமற்ற இயக்கமாக இருந்தது. இந்தியபடை வருகையுடன் அவர்களும் தாங்களும் ஒன்றும் சளைத்தவர்களல்ல என நிரூபித்துவிட்டார்கள்.ஆயுதம் கையில் வந்தவுடன் தன்னைவிட யாருமில்லை என்ற நினைப்பை எடுக்கத்தொடங்கிவிட்டார்கள்.

எமது ஆயுதப்போராட்டம் ஒரு அரசியல் பார்வையற்ற வெறும் கொலை அரசியலாகவே உருவெடுத்து வளர்ந்தது.அதனால் இயக்கங்களில் இளைஞர் சேருவதில் இருந்து இயக்கங்களில் இருந்து வெளியேறும் ஒரு நிலையேற்பட்டது.இதனாலேயே கட்டாய ஆட்சேர்ப்பு என்ற நிலை உருவானது.

சரியாக எமது போராட்டம் வழிநடாத்தப்பட்டிருந்தால் எப்போதும் இளஞர்கள் இணைந்திருப்பார்கள் ஏன் வெளிநாடுகளில் இருந்தும் போயிருப்பார்கள்.சிங்கள அரசை எதிர்க்க வேறு வழியில்லாமல் தான் கடைசிவரை மக்கள் ஆதரித்துக் கொண்டிருந்தார்கள்.

அதனால் தான் இன்று எதோ ஒன்றில் இருந்தாவது விடுதலை கிடைத்தை போல் உணருகின்றார்கள்.புலிகளின் தோல்வி வெளிநாட்டிலுள்ளவர்களை பாதித்த மாதிரி அங்குள்ள மக்களை பாதிக்கவில்லை.

இந்த திரியில் நான் இட்ட முதல்பதிவு இதுதான்.முழு இயக்கக்களையும் தான் பிழைவிட்டன என கூறியிருந்தேன்.ஆனால் புலிகள் கொலை செய்தால் அது சரி போலவும் மற்றவர்கள் கொலை செய்தால் பிழை போலவும் வைக்கும் கருத்தை ஏற்க முடியாது. மற்றது இப்போ தப்பியிருப்பவர்களியேல்லாம் புலி கொல்லாமல் விட்டபடியால் தான் இப்ப உயிரோடு இருந்து இப்படியெல்லம் கதைகின்றாரென்ற கொலை அரசியல் மனப்பாங்கு இன்னமும் தொடர்கின்றது.பின்னர் ராசபக்சாவைற்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.தேசம் நெட்டில் போய் பாருங்கள் நாங்கள் தான் புளொட்டை உடைத்தோம் எனேனில் தலமையும் இயக்கமும் பிழையென்பதற்காக என்று.யார் பிழைவிட்டாலும் பிழை பிழைதான்.தமிழனின் விடுதலைக்கு தான் போராட்டமே ஒழிய தான் தான் தலமை எடுப்பதற்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

யார் அண்ணை உலகம்....?? இந்தியாவும் அவைக்கு நக்கும் ஆக்களோ....?? ஊடகம் வைச்சு பக்க சார்ப்பாக பிரச்சாரம் செய்யிறவன் தான் உலகமோ...??

உங்களுக்கு அறிவு இருக்கு எண்டு நீங்கள் தான் காட்ட வேண்டிய நிலையிலை இருக்கிறீயள்... வேணும் எண்டால் சோதிச்சு பாக்கலாம்... தயாரா..??

சரி அரசியல் கனக்க தெரியும் எண்டுறீயளோ... அரசியலுக்கும் தலைமைத்துவத்துக்கும் என்ன வித்தியாசம் எண்டு ஒருக்கா சொல்லுவியளோ....?? சரி எவ்வளவு வித்தியாசம் எண்டாவது சொல்லுங்கள்....??

இனி இங்கை ஆளை காணக்கிடைக்காது எண்டு எனக்கு தெரியும்.. எண்டாலும் கேட்டு வைச்சன்... :lol

அரசியலில் தலைமைத்துவம் சரி இல்லாவிடத்து இயக்கமே ஆட்டம் கண்டு விடும் அந்தவிடத்து மற்ற இயக்கத்து தலைவர்களை விட தலைவர் எல்லோரையும்[இயக்கத்தில் உள்ளவரை] கட்டுக் கோப்பாக வைத்திருந்தார்...அப்படி ஒரு ஆளுமை கொண்ட இன்னொருவர் பிறப்பது கஸ்டம் ஆனாலும் அவரும் சில பிழைகள் விட்டுள்ளார் அதையும் மறுப்பதிற்கு இல்லை...அவர் சில பிழைகள் விட்டார் என்பதற்காக அவரை எங்கள் தலைவர் இல்லை என ஒதுக்கவும் இல்லை...ஆனால் தலைவர் அந்த சில பிழைகளை விட்டு இருக்கா விட்டால் இந்தளவு பின்னடைவு வந்திருக்காது என நினைக்கிறேன்...இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற தலைவராய்,தமிழருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவராய் இருந்திருப்பார்[இப்பவும் நான் அவர் திரும்ப வந்து போராட்டத்தை தலைமை தாங்குவார் என நினைக்கிறேன்...அவரால் மட்டுமே தலைமை தாங்க முடியும் என்பதில் மாற்று கருத்து இல்லை.]

தலைவரால் எல்லாப் போராளிகளையும் கவனிக்க முடியாது அதற்காகத் தான் தளபதிமார் என நியமித்து இருக்கிறார்...போராளிகள் பிழை விட்டால் அதற்கு தலைவர் நேர‌டியாய் பொறுப்பாக மாட்டார் ஆனால் தளபதிகள் பிழை விட்டால் அதற்கு தலைவரே பொறுப்பு...மாத்தையா பிழை அவருக்கு தண்ட‌னை கொடுத்தார்கள் அதற்கு பிறகாவது தனது தளபதிகள் விட‌யத்தில் அவர் உச‌ராக இருக்க வேண்டும் கருணாவும் பிழை விட்டால் அது யாருடைய பிழை?...ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மற்றவர் சொல்வதையும் ஆராய்ந்து பார்த்து நல்லது,கெட்டது தீர்மானிக்க வேண்டும் ஆனால் இவர் நேரங்களில் தான் நினைத்தது தான் சரி என நினைத்து மற்றவர் சொல் கூட கேட்பதில்லை[தளபதிகளின் சொல் கூட]...தலைவர் சில நேர‌ங்களில் பக்க சார்பாக நட‌ந்து கொண்டு இருக்கிறார்... கருணாவிலும் பார்க்க தப்பு செய்த தளபதிகள் இயக்கத்தில் இருந்தார்கள் ஆனால் அவர்களுக்கு எல்லாம் கடைசி வரை தலைவர் தண்ட‌னை கொடுக்கவில்லை[அவர்கள் யாரென்டு உங்களுக்கு தெரிந்து இருக்கும்.]...தமிழ்செல்வனை நம்பி அர‌சியலில் பல பிழையான முடிவுகளை எடுத்தார் அந்த நேர‌த்தில் திரு அன்ட‌ன் பாலசிங்கத்தை கூட‌ ஒதுக்கி வைத்து இருந்தார்கள்...முள்ளிவாய்க்காலின் கடைசி நேர‌த்திலும் கூட‌ எதாவது ஒரு நாடு வந்து அங்குள்ள போராளிகளையும்,மக்களையும் காப்பாற்றும் என நம்பி இருந்தது[இதில் எனக்கு நம்ப முடியாத விச‌யம் தலைவர் ஒருவரையும் நம்புவதில்லை எதற்காக இந்த நாடு காப்பாற்றும் என நம்பிக் கொண்டு இருந்தார் என்பது]...எல்லாவற்றையும் விட‌ பெரிய பிழை என நான் நினைப்பது நான் ஏற்கனவே இது பற்றி எழுதியிருந்தேன் வன்னியில் யுத்தம் நட‌ந்து கொண்டு இருக்கும் போது யாழ்,கிழக்கு,கொழும்பு மக்கள் ஒரு ஆப்பாட்ட‌ம்,கிளர்ச்சி செய்யவில்லை அப்படி செய்து இருந்தால் அது கட்டாயம் உலக நாடுகளை தட்டி எழுப்பி இருக்கும் இதில தலைவர் எங்கே வந்தார் எனக் கேட்டால் எங்கள் போராட்ட‌த்தை ஒர் மக்கள் போராட்ட‌மாக மாற்ற அவரால் கூட‌ முடியாமல் போய் விட்டது...தலைவர் செய்த நல்லதுகளை எழுதப் போனால் எழுதிக் கொண்டே இருக்கலாம் அது பற்றி பிறகு கதைப்போம்.

நண்பர்களே..

நீண்ட நாட்களின் பின் ஒரு ஆக்கபூர்வமான விவாதத்தை காண்பதில் மகிழ்ச்சி. இந்த விவாதத்தில் ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் கருத்துக்கள் வருவது எம்மை நாமே சீர்தூக்கி பார்க்க உதவும். மனிதன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் 100% சரியாக இருக்க முடியாது. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது இனம் மிகச் சிறியது. எனவே அதற்கு ஏற்படும் இழப்புக்கள் பாரதூரமானவை. போராட்டத்தில் பிழைகள் நிகழ்ந்திருக்கின்றன. சிலவற்றை தவிர்த்திருக்கலாம். எமது போராட்டத்தின் சரிவிற்கான காரணங்கள் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் நிறையவே எமது சமூக பண்பாட்டு தாக்கங்கள் இருக்கின்றன. அவற்றை தெரிந்து, புரிந்து நீக்குவது மிக முக்கியம்.

நண்பர்களே, வார்த்தைகளில் கோபத்தை சேர்ப்பதை விடுத்து கருத்து செறிவாக எழுதுங்கள். நாம் நிறையவே கற்பதற்கு இருக்கிறது. அரசியலிலும் சரி தனி மனித வாழ்விலும் சரி. கோபத்தால் சாதித்ததிலும் கோபம் சோதித்ததே அதிகம்.

சுகன்:

நீங்கள் சொல்ல வரும் விடயம் என்ன? "தமிழர் தாயகம்" என்ற கோட்பாட்டின் கீழ் ஒன்று திரண்ட போராளிகளுக்குள் பிரிவினைகள் வந்ததெப்படி. அப்படியானால் "தமிழர் தாயகம்" என்பது வெறும் அட்டைப்பட விளம்பரமா? அவர்கள் ஒரே நோக்கத்தோடு, கருத்தாக்கத்தின் கீழ் ஒன்றுசேரவில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே எல்லா பழியையும் அந்தாள் மேல போட்டுவிட்டு அந்தாள் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று முடித்துவிடுங்கள். ரொம்ப நல்லாய் இருப்பீர்கள். ஆனால் ஒரு நாளாவது உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்குமானால் அந்தாள் செய்ததின் லட்சத்தின் ஒரு பங்கையாவது நீங்கள் இந்த இனத்திற்காக உழைத்திருப்பீர்களா என நினைத்துப் பார்த்தால் எங்கே பிழை என்பது எல்லோருக்கும் புரியும். அது வரை சந்தர்ப்பவாதத்திலும் சுயநலத்தின் உச்சக் கட்டத்திலும் வாழ்ந்துகொண்டு கடைசி வரை தான் தன் குடும்பம் என்று பாராது போராடிய அந்த ஜீவன் மேல் காறித் துப்புங்கள். நன்றி!

சுகன்:

நீங்கள் சொல்ல வரும் விடயம் என்ன? "தமிழர் தாயகம்" என்ற கோட்பாட்டின் கீழ் ஒன்று திரண்ட போராளிகளுக்குள் பிரிவினைகள் வந்ததெப்படி. அப்படியானால் "தமிழர் தாயகம்" என்பது வெறும் அட்டைப்பட விளம்பரமா? அவர்கள் ஒரே நோக்கத்தோடு, கருத்தாக்கத்தின் கீழ் ஒன்றுசேரவில்லையா?

எமக்கொரு தாயகத்திற்கான அவசியத்தையும் நிர்பந்தத்தையும் சிங்களப்பேரினவாதமே ஏற்படுத்தியது தவிர இயல்பாக எமக்கு தாயகத்திற்கான அவசியம் இருக்கவில்லை அதற்குப்பதிலாக வேறு காரணிகளையே எமது இனம் முன்நிறுத்தி வந்தது. தாம் சாரந்த சாதி சமயம் பிரதேசம் போன்றனவே தாயகம் இனம் என்பதை விட முக்கியமானதாக இருந்து வந்துள்ளது. இந்தக் காரணிகள் எப்போதும் இனம் என்ற பொதுமைக்குள் மக்களை ஐக்கியப்படுத்துவதற்கு எதிரானது.

சிங்களம் எமக்குள் இருந்த முரண்பாடுகளை கடந்து எம்மை சாதி சமய பிரதேசவாத பிளவுகளுக்கு அப்பால் தமிழர் என்று வரையறுத்து ஒடுக்குமுறையை கட்டவிழ்த்தபோது நாமும் இந்த முரண்பாடுகளை கடந்து தமிழர் என்ற அடிப்படையில் சிங்களத்தை எதிர்கொள்ளமுற்பட்டோம். ஆனால் முடியவில்லை. தோல்வியடைந்தோம். இந்தத் தோல்விக்கான அகநிலைக் காரணங்களை நாம் தேடியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

பிரிவினை என்பதற்கு அடிப்படை இறுக்கமான தனிமனித மனநிலைதான். சிங்களப்பேரினவதத்திற்கு முற்பட்ட காலங்களில் சமுதாய அமைப்பு எப்படி இருந்தது அது எவ்வாறான மனநிலையை தோற்றுவித்தது என்பதையே நான் பிரதானமாகப் பார்கின்றேன். உதராரணமாக இரண்டு தமிழர்கள். ஒருவர் வீட்டுக்குள் ஒருவர் வரமுடியாது. ஒருவருக்கு சிரட்டையில் தேனீர்கொடுப்பார்கள். ஏற்றதாழ்வை சொல்லிப் பழிப்பார்கள். சண்டைகள் வரும். அடிமை நிலையில் இருந்து மீள முடியாத ஏற்றதாழ்வை சாதி சமய கலாச்சாரங்கள் ஊடாக ஸ்திரமாகவும் நிரந்தரமாகவும் வைத்திருந்தார்கள். இவற்றுக்கெல்லாம் பழக்கப்பட்டதுதான் எமது மனம். இங்கே ஜனனாயகம் ஐக்கியம் அவ்வளவு தூரம் போகவேண்டாம் மனிதாபிமானம் என்பதற்கே இடமில்லை. இதுதான் எமது சமூகம் சார் உளவியல் அடிப்படை. சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான தேசிய எழுச்சி என்பதும் இதற்குள் இருந்துதான் வந்தது. எமக்குள் எத்தனை மேதல்கள் பிரிவினைகள் கொலைகள் பிளவுகள் ஏற்றுக்கொள்ளாமை !!! அனைத்துக்குமான அடிப்படை உளவியல் சார் மனநிலையை நீண்டகால சமூக இருப்பு எமக்குத் தந்துள்ளது. இதை வெல்லமுடியாதபோது சிங்களத்தையும் எம்மால் வெல்லமுடியாது என்பதையே இறுதியான போரின் முடிவு எமக்கு அறிவிக்கின்றது.

தாயகம் என்பதை வெறும் அட்டப்பட விளம்பரமாகவே எமது அகமுரண்பாடுகளும் அதன் விழைவுகளும் இறுதியில் முடித்தது. இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் தெகையை எடுத்துக்கொள்ளுங்கள் இவர்களுக்கான தாயகம் தன்னாட்சி உரிமை என்பதை பொதுமைப்படுத்த முடியாத நிலையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். தாயகக் கோட்பாட்டில் இருந்து இஸ்லாமியத்தமிழர்கள் அந்நியப்படுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை மிகப்பெரியது. இது மதவாரியானது. மலையகத்தமிழர்கள் அந்நியப்படுகின்றனர் இது பிரதேசம் பொருளாதரம் சார்ந்தது. அடுத்து ஒரு பிரதான தரப்பாக பெருமளவு புலப்பெயர்வு. இது தாயகத்தின் அவசியத்துக்கான மாற்றீட்டை முன்மொழிகின்றது. தனியே புலம்பெயர்ந்தவர்கள் அன்றி தாயகத்தில் உள்ள ஒவ்வொருவனையும் புலப்பெயர்வே எமக்கான சொந்தத்தாயகத்தை விட மேலானது என்ற போதனையை ஆழமாக விதைக்கின்றது. பொருளாதா கல்வி மேம்பாடு கலாச்சார மேம்பாடு பாதுகாப்பு என்ற பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டு போதிக்கின்றது. தாயகத்தில் உள்ள ஒவ்வொருவனிடமும் புலப்பெயர்வுக்கான சிந்தனை சொந்தத் தாயக உருவாக்க முயற்ச்சியை விட பன்மடங்காக இருக்கின்றது. இவைகளுக்கு அப்பால் எமக்குள்ளன மேதல்கள் அதனால் ஏற்பட்ட உளவியல் அதிருப்திகள் நம்பிக்கையீனங்கள் இனம் தாயகம் என்பன இரண்டாம் பட்சமாக இருந்த பாரம்பரிய மனநிலை பிரதேசவாத மனநிலை அரசு சார்ந்து உத்தியயோகம் சார்ந்து இருந்து பழகிய அடிமை மனநிலை என்பனவெல்லாம் சிங்களவரை அனுசரித்து வாழலாம் என்ற எண்ணத்தை பெருமளவானவர்களிடம் விதைத்துள்ளது. இதை என்னும் உள்ளகமாக ஆராய்ந்துகொண்டுபோகலாம். இவ்வாறே செல்லும்போது தாயகக்கோட்பாடு என்பது கருத்துநிலை சார்ந்ததாக மக்களிடம் இருந்து அந்நியப்பட்டதாக மட்டும் நிற்கின்றதை உணரமுடியும். இது ஒரு விளம்பரநிலைக்கே முடிவில் வந்துநிற்கின்றது என்பது தான் உண்மை. இந் நிலையில் எமது தாயகத்திற்கான உலகளாவிய அங்கீகாரம் என்பதையிட்டு நாம் நிச்சயமாக சிந்திக்கமுடியாது காரணம் அதற்கா தளம் எம்மிடம் இல்லை. மக்களிடம் இருந்து எவ்வாறு தாயகக் கோட்பாடு அந்நியப்பட்டு நிற்கின்றது என்பதையே சொல்ல முற்பட்டிருக்கின்றேன். இதைத்தானே முதலில் நாம் சரிசெய்தாகவேண்டும் இவ்வாறு கருதுவதில் என்ன தவறு என்று எனக்குப்புரியவில்லை.

ஒரே நோக்கத்தோடு கருத்தாக்கத்தின் கீழ் ஒன்றுசேரவில்லையா என்பதற்கு முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். சிங்களம் ஒன்றுசேர்வதற்கான நோக்கத்தை பேரினவாதமாக விதைத்தது இருந்தும் ஒன்றுசேர்வதற்கான அடிப்படை எம்மிடம் இயல்பில் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கொரு தாயகத்திற்கான அவசியத்தையும் நிர்பந்தத்தையும் சிங்களப்பேரினவாதமே ஏற்படுத்தியது தவிர இயல்பாக எமக்கு தாயகத்திற்கான அவசியம் இருக்கவில்லை அதற்குப்பதிலாக வேறு காரணிகளையே எமது இனம் முன்நிறுத்தி வந்தது. தாம் சாரந்த சாதி சமயம் பிரதேசம் போன்றனவே தாயகம் இனம் என்பதை விட முக்கியமானதாக இருந்து வந்துள்ளது. இந்தக் காரணிகள் எப்போதும் இனம் என்ற பொதுமைக்குள் மக்களை ஐக்கியப்படுத்துவதற்கு எதிரானது.

சுகன் நீங்கள் கூறிய காரணங்களை விட சுயநலம் தான் எம்மை போராட (ஒரு ஒன்று பட்ட முழுமையான இனமாக) முடியாமல் போனது.மேற்கூறிய பல பிரிவினைகள் பல இனங்களில் இன்றும் உண்டு.நாங்கள் மட்டும் விதிவிலக்காக முடியாது.

இது தாயகத்தின் அவசியத்துக்கான மாற்றீட்டை முன்மொழிகின்றது

எந்த விடுதலைப்போராட்டத்தில் மக்கள் இடம்பெயரவில்லை? எம்மை போன்ற நாலுபக்கமும் கடலால் சூழப்பட்ட தீவுக்குள் அரசின் அராஜகங்களுக்கு பயந்த மக்கள் தமது உயிரை பாதுகாக்க சிதறி ஓடுவது இயல்பு தானே.இது போராளிகளுக்கும் பொருந்தும்.உ+மாக எரித்திரியர்கள் ஒரு முறை தாம் போரில் தோற்ற போது தப்பி அயல் நாடுகளுக்கு சென்று மீண்டும் தம்மை பலப்படுத்தி எதியோப்பியாவுக்கு எதிராக போராடி வென்றார்கள். இந்த தெரிவு எமக்கு இருக்கவில்லை. மலையக மக்கள் சிங்கள மக்களுக்குள் வாழும் ஓரினம் எம்மோடு சேர்ந்து போராடுவது எவ்வளவு நடைமுறைச்சாத்தியம்? மேலும் அவர்கள் தான் போராடும் எம்மோடு இணைய வேண்டும்.முஸ்லிம்கள் வடக்கு கிழக்குக்கு அப்பால் ஏனைய மாகாணங்களில் சிங்களவர்களோடு இணைந்து பல காலமாக வாழுவோர் தங்களுக்கு பிரிவினை ஒரு தீர்வை தரும் என எதிர்பார்ப்பார்களா? ஆக வடக்கு கிழக்கில் தாம் ஒரு இனம் என கூறிக்கொள்வோரின் தானைத்தலைவர் யார்? வருடத்துக்கு ஒரு கட்சி தாவும் கக்கீமா? அவர்களே (முஸ்லிம் மக்கள்)தமக்கு எப்படியான ஒர் தீர்வு வேண்டும் என்று போராடி இருக்க வேண்டும்? ஒன்றும் செய்யாமல் மதில் பூனையாக இருக்கும் கக்கீம் போன்றவர்களை நம்ப நாம் அவர்களுடன் இணையலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

சுகன்

இந்த சகல வேற்றுமைகளையும் களைய போராடிய தலைவர்இல்லாதொழிக்கப்பட்டதை அங்குள்ள மக்கள் வரவேற்கிறார்கள் என்று சொல்வதும் தாங்கள்தான். அதே மக்களுக்குள் இத்தனை வேற்றுமைகளும் இன்றும் உண்டு என்பவரும் தாங்கள்தான்.இத்தனை தடைகளையும் வேற்றுமைகளையும் தமிழனிடமிருந்து பிரித்து நல்ல நாட்டுப்பற்றுள்ள மக்கள் கொண்ட இனமாக மாற்ற நினைத்து போராடியதாலேயே பிரபாகரன் தோற்றார் என்றுதான் தங்களது கருத்தை நான் புரிந்து கொள்கின்றேன்.

பிரபாகரனால், அவரது போராளிகளால் முடியாத ஒன்றை நீங்கள் இன்று யாரிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் என்றும் சொல்லாமே

Edited by விசுகு

... எல்லாவற்ருக்கும் மேலாக ... சேர்ந்து அழிக்க ஒட்டினார்கள் ...அந்த அழிக்க என்பது புலியை அல்ல, மாறாக ஒட்டுமொத்த ஈழத்தமிழ் இனத்தை!... எம் இனத்தின் சாபக்கேடுகள்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நெல்லைய்யன்,

இந்திய வெளிவிவகாரக் கொள்கை என்று ஒன்று உள்ளதா??ஏன் கேட்கிறேன் என்றால், அது ஒவ்வொரு கட்சியும் பதவிக்கு வரும்போது அதன் தலைவரோ அல்லது தலைவியோ விரும்புவதுதான் கொள்கையாக மாற்றப்படுகிறது என்றுதான் நான் விளங்கி வைத்திருக்கிறேன்.

இந்திரா அம்மையார் எமக்கு உதவினார், இதில் எமது நண்மையை விட ஜே. ஆரை வழிக்குக் கொண்டுவருவதுதான் முக்கியமாக இருந்தது. அவவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி, என்ன செய்கிறோம் என்று கூடத் தெரியாமல் படையை அனுப்பி எங்களை அழித்தார். இன்று சோனியா, தான் கட்சியின் தலைவியானதும் முதல் வேலையாக தனது கணவனைக் கொன்றதற்குப் பழிவாங்கினார். இதில் எங்கே ஒரு வெளியுறவு கொள்கை இருக்கிறது. தனது பக்கத்து நாட்டில் உரிமை கேட்டு ஓலமிடும் ஒரு சின்னஞ்சிறிய இனத்தை அழித்து தான் யாரென்று நிரூபிப்பதுதான் இந்தியாவினது வெளியுறவுக்கொள்கையா??

ஆனால் இவர்கள் எல்லோருமே பார்க்கத் தவறியது இலங்கையில் தமிழர்களுக்கு உண்மையாகவே ஒரு பிரச்சனையிருக்கிறது என்பதைத்தான். அப்படி அறிந்திருந்தால் இன்று எமக்கு ஒரு தீர்வு நிச்சயம் இருந்திருக்கும்.

நெல்லைய்யன், சரி விடுங்கள், புலிகளை அழிக்க திடசங்கற்பம் பூண்டீர்கள், அப்படியே சந்தடி சாக்கில் 40,000 தமிழரையும் கொன்றீர்கள். ஆனால், போர் முடிந்தபின்னரும் கூட சிங்களம் செய்த இனவழிப்பிற்குத் துணைபோவதும், இனவழிப்பிற்கான விசாரணைகள் என்று வரும்போது தடுத்து நிறுத்துவதும் ஏன்?? புரியவில்லையே??

இன்ரைக்கு இந்தியாவின் எதிரிகள் யார்?? அநாதைகளாக்கப்பட்ட ஈழத்தமிழரா அல்லது சீனாவின் மடியில் கொஞ்சி விளையாடும் சிங்களமா?? உண்மை தெரிந்தும் சிங்களத்துக்கு வைப்பாட்டியாக ஆசைப்படுகிறதே ஒழிய தமிழர் பற்றிக் கவலைப்படுவதாகக் காணோம்.

நீங்கள் சொல்வது சரி, இந்தியா எம்பக்கம் மாறவேண்டும். ஆனால் எப்போது, எப்படி??

சுகன்

இந்த சகல வேற்றுமைகளையும் களைய போராடிய தலைவர்இல்லாதொழிக்கப்பட்டதை அங்குள்ள மக்கள் வரவேற்கிறார்கள் என்று சொல்வதும் தாங்கள்தான். அதே மக்களுக்குள் இத்தனை வேற்றுமைகளும் இன்றும் உண்டு என்பவரும் தாங்கள்தான்.இத்தனை தடைகளையும் வேற்றுமைகளையும் தமிழனிடமிருந்து பிரித்து நல்ல நாட்டுப்பற்றுள்ள மக்கள் கொண்ட இனமாக மாற்ற நினைத்து போராடியதாலேயே பிரபாகரன் தோற்றார் என்றுதான் தங்களது கருத்தை நான் புரிந்து கொள்கின்றேன்.

பிரபாகரனால், அவரது போராளிகளால் முடியாத ஒன்றை நீங்கள் இன்று யாரிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் என்றும் சொல்லாமே

வேற்றுமைகளையும் எமது உள்ளக முரண்பாடுகளையும் களைய முடியாததே எமது தோல்வி. எமது இனம் முரண்பாடுகளால் நிரம்பிய ஒரு சகதி அதிலிருந்து தூய்மையாக ஒரு தலமையின் உருவாக்கத்தை எதிர்பார்ப்பது மடமை. பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும் என்பதுக்கேற்ப சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரான போரில் கூட எம்மால் இனமாக ஐக்கியப்படமுடியவில்லை. ஒருவகையில் சிங்கள பேரினவாத அழுத்தம் கூட எமது சகதியை தூய்மைப்படுத்தும் சந்தர்ப்பமாக இருந்தது ஆனால் அதிலும் நாம் கோட்டைவிட்டோம். இது இனத்தின் இருப்பு தவிர பிரபாகரன் என்ற தலைவரின் தனிப்பட்ட குற்றமல்ல. இதையே நான் எனது முதலாவது பத்திக் கருத்தில் சொல்லியுள்ளேன்.

இந்த உண்மையை புலம்பெயர் தமிழர்களால் ஜீரணிக்க முடியவில்லை, ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று மக்களும் சரி விடுவிக்கப்பட்ட போராளிகளும் சரி மாண்டுபோன மாவீர்கள் மீது மரியாதை வைத்திருக்கின்றனர். அவர்கள் குறித்து ஆழமான வேதனைகளை சுமந்துகொண்டிருக்கின்றனர் அதே சமயம் புலிகள் தலமை அழிந்ததையிட்டு எவ்வித கவலையும் படவில்லை ஆனால் அது குறித்து சிந்திக்கின்றார்கள். அவ்வளவு தூரம் மக்கள் உள்ளக அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றும் ஒருவருடன் கதைக்கும் போது கூறினார் ராஜபக்ச மிகக் கொடிய இனவாதி என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் அவர் செய்த நல்ல காரியமெனில் அது புலிகள் இயக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்ததுதான் என்றார். விடுவிக்கப்பட்ட போராளிகளிடமும் இந்தக் கருத்து வலுவாக உள்ளது. இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றது. இவ்வாறான ஒரு முடிவுக்கு மக்கள் வந்ததிற்குக் காரணம் பிரபாகரன் என்ற மனிதனின் தனிப்பட்ட குணாதிசயம் குறித்தல்ல மாறாக எமது தேசியவாதம் எம்மையே அழித்து தின்று ஏப்பம் விடும் அடித்தளத்தை கொண்டது. அந்தத் தளத்திற்கே பிரபாகரன் தலைவரானர். இது தவிர்க்கமுடியாத விதியாகியது. தளத்தை மாற்ற முடியவில்லை. புலிகளின் முடிவு குறித்த கருத்தானதை அதன் தளத்தின் முடிவு குறித்த கருத்தாகவே புரிந்துகொள்ளவேண்டும் அதை விடுத்து குய்யோ முறையோ துரோகி எட்டப்பன் என்று கும்முவதில் எந்த அர்த்தமும் இல்லை.

மக்கள் இருந்தாலே அவர்களுக்கு விடுதலை சாத்தியம். முள்ளிவாய்க்கால் என்பது மக்கள் இருப்பையே முடிவுநிலைக்கு இட்டுச்சென்றது. அது போராட்டத்தை சுமந்த மக்கள். அந்த மக்களுக்குள்ளாகவே போராட்டம் குறுகி இருந்தது. மூன்று லட்சம் மக்கள் உள்ளே முப்பது லட்சம் மக்கள் போராட்டத்துக்கு வெளியே. விடுதலை என்பதன் அர்த்தம் என்ன? விடுதலையின் அவசியம் இங்கே பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்படுகின்றது. ஆனால் விடுதலைக்கான விருப்பம் இருக்கின்றது. கட்டாயமாக இயக்கத்தில் சேர்வதில் இருந்து விலத்தி இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விலத்தி பாதுகாப்பாக இருந்துகொண்டு கூடவே பொருளாதரம் கல்வி அனைத்திலும் ஒப்பீட்டளவில் முன்நிலையில் இருந்து நாம் பேசும் தேசியமும் போராட்ட ஆதரவும் உணர்ச்சியும் முள்ளிவாய்க்காலின் அவலத்தில் பங்குவகிக்கின்றது. இதற்கொரு முற்றுப்புள்ளி அவசியமாகின்றது. தமழீழம் வேண்டுமா? குறைந்தது எழுபது வீத மக்கள் அதற்காக முயலவேண்டும். பத்தில் ஒருபங்கு மக்களிலும் குறைவானவர்கள் போராட்ட சுமையை சுமக்க மீதமானவர்கள் நழுவியும் உணர்ச்சித்தேசியம் பேசியும் விடுதலை சாத்தியம்? வன்னி மக்களை நசுக்கியது விலத்திநின்றவர்களின் விடுதலைக்கான பெருவிருப்பம். அவர்கள்ள ஒவ்வொருவரின் வாழ்வு அழிந்து போனதிலும் எமக்கும் பங்கு உண்டு. இவ்வாறான ஒரு நிலை வேண்டாம். விடுதலை வேண்டுமாயின் பெரும்பான்மை மக்கள் ஐக்கியப்படவேண்டும். நான்குபேர் நாற்பது பேரின் சுமையை சுமக்கமுடியாது. இந்த முடிவுக்கே வன்னிமக்கள் இப்போது வந்துள்ளனர். நாற்பது பேரின் சுமையை நான்குபேரை சுமக்க நிர்ப்பந்திக்கும் இயக்க தளம் முடிவுக்கு வருவதை சுமையால் நசுங்கிய நான்குபேர் விரும்புவதில் தவறென்ன?

எந்த விடுதலைப்போராட்டத்தில் மக்கள் இடம்பெயரவில்லை? எம்மை போன்ற நாலுபக்கமும் கடலால் சூழப்பட்ட தீவுக்குள் அரசின் அராஜகங்களுக்கு பயந்த மக்கள் தமது உயிரை பாதுகாக்க சிதறி ஓடுவது இயல்பு தானே.இது போராளிகளுக்கும் பொருந்தும்.உ+மாக எரித்திரியர்கள் ஒரு முறை தாம் போரில் தோற்ற போது தப்பி அயல் நாடுகளுக்கு சென்று மீண்டும் தம்மை பலப்படுத்தி எதியோப்பியாவுக்கு எதிராக போராடி வென்றார்கள். இந்த தெரிவு எமக்கு இருக்கவில்லை. மலையக மக்கள் சிங்கள மக்களுக்குள் வாழும் ஓரினம் எம்மோடு சேர்ந்து போராடுவது எவ்வளவு நடைமுறைச்சாத்தியம்? மேலும் அவர்கள் தான் போராடும் எம்மோடு இணைய வேண்டும்.முஸ்லிம்கள் வடக்கு கிழக்குக்கு அப்பால் ஏனைய மாகாணங்களில் சிங்களவர்களோடு இணைந்து பல காலமாக வாழுவோர் தங்களுக்கு பிரிவினை ஒரு தீர்வை தரும் என எதிர்பார்ப்பார்களா? ஆக வடக்கு கிழக்கில் தாம் ஒரு இனம் என கூறிக்கொள்வோரின் தானைத்தலைவர் யார்? வருடத்துக்கு ஒரு கட்சி தாவும் கக்கீமா? அவர்களே (முஸ்லிம் மக்கள்)தமக்கு எப்படியான ஒர் தீர்வு வேண்டும் என்று போராடி இருக்க வேண்டும்? ஒன்றும் செய்யாமல் மதில் பூனையாக இருக்கும் கக்கீம் போன்றவர்களை நம்ப நாம் அவர்களுடன் இணையலாமா?

உயிரைக் காப்பாற்ற ஓடுவது தவறில்லை ஆனால் ஓடிய பின் ஓட முடியாத மக்களை விடுதலை பெற்றுத்தரும்படி நிர்ப்பந்திப்பது தவறல்லவா? இதே களத்தில் வன்னி மக்கள் அவலத்தின் உச்சக்கட்டத்தில் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு போகும் போது போவதைக்காட்டிலும் மானத்தோடு சாவது மேல் என்று எழுதியகருத்துக்களும் உண்டு. எமக்கில்லாத மானம் என்னுமொருவனுக்கு இருக்கவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது என்ன நியாயம்? இது எவ்வகையான தேசியவாதம்? சிங்களவனுடனும் சேர்ந்து அனுசரித்து இருந்துகொண்டு வெளிநாடுகளிலும் இருந்துகொண்டு குறிதப்பிட்ட சொற்ப மக்களை எமது மானத்தை நிலைநாட்ட வதைத்தது என்ன நியாயம்? எமது தவறுகளை நாம் முதலில் உணரவேண்டும்.

தமிழர்கள் இந்து முஸ்லீம் பிரிவினை மனநிலையை கடந்து இனமாக ஒருங்கிணையவேண்டும். ஏனெனில் அண்ணளவாக தமிழ்பேசும் முஸ்லீம்களும் இந்துக்களும் லங்கையில் சம எண்ணிக்கையை நெருக்கியுள்ளனர். மேலும் பிரதேசவாத முரண்பாடுகளை கடந்து ஒருங்கிணையவேண்டும். குறைந்தது எழுபது வீதமானவர்கள் ஒருங்கணைந்து இனமாக வலிமைபெற்று ஒரு கருத்தின்கீழ் வரவேண்டும். எமக்குள் ஐக்கியப்பாடே தேசியவதத்துக்கான அடிப்படை. நாம் ஒன்றிணைந்து பலம்பெறாமல் விடுதலை என்பது கனவிலும் சாத்தியப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

வேற்றுமைகளையும் எமது உள்ளக முரண்பாடுகளையும் களைய முடியாததே எமது தோல்வி. எமது இனம் முரண்பாடுகளால் நிரம்பிய ஒரு சகதி அதிலிருந்து தூய்மையாக ஒரு தலமையின் உருவாக்கத்தை எதிர்பார்ப்பது மடமை. பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும் என்பதுக்கேற்ப சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரான போரில் கூட எம்மால் இனமாக ஐக்கியப்படமுடியவில்லை. ஒருவகையில் சிங்கள பேரினவாத அழுத்தம் கூட எமது சகதியை தூய்மைப்படுத்தும் சந்தர்ப்பமாக இருந்தது ஆனால் அதிலும் நாம் கோட்டைவிட்டோம். இது இனத்தின் இருப்பு தவிர பிரபாகரன் என்ற தலைவரின் தனிப்பட்ட குற்றமல்ல. இதையே நான் எனது முதலாவது பத்திக் கருத்தில் சொல்லியுள்ளேன்.

இதைச்சொல்வதற்கு எதற்கு தலைவர்

எதற்கு கட்சி

எதற்கு அணிகள்

இந்த கொள்கையை வைத்து என்ன செய்யப்போகின்றீர்கள்....?

இது தான் உண்மையென்றால் இதைச்சொல்வதற்கா இங்கு நேரத்தை செலவளிக்கின்றீர்கள்...

அல்லது இதைச்சொல்லி

பிரபாகரனுக்கே அல்வா குடுத்த நீங்கள் குறிப்பிடும் மக்கள் கூட்டத்தை வைத்து ஏதாவது செய்யும் நோக்கமுண்டா...???

ஐயா

நீங்கள் குறிப்பிடும் தமிழரின் பலமும் பலவீனங்களும் நாமும் அறிவோம்

ஏன் மொத்த தமிழினமும் அறியும்.

ஆனால் இதை இப்படியே விட்டுவிடமுடியாது என்று அதிலிருந்து தப்பிப்பிறந்த சிலர் சிந்தித்தனர். சிந்திக்கின்றோம்.

அதை மற்றவருக்கும் ஊட்ட நினைத்தார்கள். நினைக்கின்றோம். நீங்கள் கூறும் தப்பி ஓடிய ஒருவன் தான் நானும். தாங்கள் சொல்லுவது போல் கேடுகெட்ட தமிழினம், எப்படி ஆனால் எமக்கென்ன என்று எம்மால்இருக்கமுடியவில்லை. முடிந்தவரை முயல்கின்றோம்.

அவ்வளவுதான்.

Edited by விசுகு

உயிரைக் காப்பாற்ற ஓடுவது தவறில்லை ஆனால் ஓடிய பின் ஓட முடியாத மக்களை விடுதலை பெற்றுத்தரும்படி நிர்ப்பந்திப்பது தவறல்லவா? இதே களத்தில் வன்னி மக்கள் அவலத்தின் உச்சக்கட்டத்தில் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு போகும் போது போவதைக்காட்டிலும் மானத்தோடு சாவது மேல் என்று எழுதியகருத்துக்களும் உண்டு. எமக்கில்லாத மானம் என்னுமொருவனுக்கு இருக்கவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது என்ன நியாயம்? இது எவ்வகையான தேசியவாதம்? சிங்களவனுடனும் சேர்ந்து அனுசரித்து இருந்துகொண்டு வெளிநாடுகளிலும் இருந்துகொண்டு குறிதப்பிட்ட சொற்ப மக்களை எமது மானத்தை நிலைநாட்ட வதைத்தது என்ன நியாயம்? எமது தவறுகளை நாம் முதலில் உணரவேண்டும்.

விடுதலைக்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக ஒரு கூட்டம் இருந்தது... உலகிலேயே அதி உச்சமான தியாகங்களையும் தீரங்களையும் செய்த கூட்டம் எண்று இருந்தது எண்றால் அதில் முதல் இடம் அந்த கூட்டத்துக்கு தான்... அப்படியான ஒரு கூட்டம் உலகின் மற்றய போராட்ட குழுக்களுக்கு முன் உதாரணமாக திகழும் அளவுக்கு சிறப்பான ஒரு கூட்டம்..... அந்த கூட்டத்தை பாத்து இனவாத குழு எண்று சொல்கிறீர்கள்...

அப்படியான கூட்டத்தை உருவாக்கியது ஒண்றும் புலம்பெயர்ந்தவர்கள் கிடையாது.... வேண்டுமானால் கட்டிக்காக்க வேண்டி சிலதை செய்து இருக்க முடியும்...

புலம்பெயர்ந்தவர்கள் பேச்சை கேட்டு செய்யும் நிலையில் தான் பிரபாகரன் போராட்டத்தை வைத்து இருந்தார் என்பது மிகவும் பின் தங்கிய பழைய பிரச்சார உத்தி... அப்படி புலம்பெயர்ந்தவர்களை திருப்திப்படுத்திய போராட்டத்தை பிரபாகரன் முன் எடுக்க வில்லை என்பது அறிவு சார் மக்கள் நன்கு அறிவர்...

போராட்டம் நீண்ட காலம் நடந்தது.... அதின் உச்ச கட்டத்தில் நகர்ந்து கொண்டு இருந்த போது மக்கள் மத்தியில் நீங்கள்.... நான் தனிப்பட சொல்லும் சுகன் என்பவர் எப்படியான நடவடிக்கையை முன் எடுத்துக்கொண்டு இருந்தார் எண்று கேட்டால் என்னால் சொல்லக்கூடிய பதில் மக்களை திசை திருப்பி பெரியார் பாதையில் பயனிக்க வைக்க முயண்று கொண்டு இருந்தார் எண்றுதான் என்னால் சொல்ல முடிகிறது...

இங்கு தமிழ் மக்களை குறை சொல்லும் நீங்களே மக்களின் போராட்டத்தை வெல்ல வைக்க வேண்டுமானவைகளை செய்வதை விட்டு விட்டு கோயில்களை இடிப்பதும் ஐயர்மாரின் கோவணங்களையும் ஆராய்ந்து கொண்டு இருந்து விட்டு இப்போ யாரை குறை பிடிக்க நிக்கிறீர்கள்...??

தமிழர்கள் இந்து முஸ்லீம் பிரிவினை மனநிலையை கடந்து இனமாக ஒருங்கிணையவேண்டும். ஏனெனில் அண்ணளவாக தமிழ்பேசும் முஸ்லீம்களும் இந்துக்களும் லங்கையில் சம எண்ணிக்கையை நெருக்கியுள்ளனர். மேலும் பிரதேசவாத முரண்பாடுகளை கடந்து ஒருங்கிணையவேண்டும். குறைந்தது எழுபது வீதமானவர்கள் ஒருங்கணைந்து இனமாக வலிமைபெற்று ஒரு கருத்தின்கீழ் வரவேண்டும். எமக்குள் ஐக்கியப்பாடே தேசியவதத்துக்கான அடிப்படை. நாம் ஒன்றிணைந்து பலம்பெறாமல் விடுதலை என்பது கனவிலும் சாத்தியப்படாது.

சோர்வு மனநிலையில் அதுவும் தோல்வி மனநிலையில் ஒரு கோட்டின் கீழ் மக்கள் வருவது எப்போதும் நடக்க போவது இல்லை... வெற்றி பெறுவேன் என்பதில் நம்பிக்கை இல்லாது ஒரு துரும்பை கூட யாராலும் நகர்த்த முன்வர முடியாது ...

இங்கு செய்ய பட வேண்டியது வெற்றி மீதான மக்களின் நம்பிக்கை.. அந்த நம்பிக்கையை வெண்று எடுத்ததால் தான் பிரபாகரன் தலைவரானார் ... வெறும் வாய் வீரம் மட்டும் காட்டியதால் சிலர் மக்களுக்கு மாரித்தவளைகளாக மட்டும் தெரிந்தனர் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.