Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவருக்கு அக வணக்கம் செலுத்துவது பற்றி….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்......

சபேசனின் கட்டுரை தொடக்கம்...இறுதி கருத்திட்டவரை அவதானி்த்து வருகின்றேன்.......................!

நான் உங்களுக்கு அணித்தரமாக ஒன்றை கூறுகின்றேன், இருக்கின்றார், இல்லை என்ற விவாதங்களுக்கு அப்பால்.........தலைவரின் வருகைக்கான களத்தினை உருவாக்குங்கள்.. இதுவே எம்மனைவரினதும் தலயாய கடமையாகும்.

தாயகத்திலிருந்து

நீலவன்

  • Replies 71
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தில் என்ன குற்றம் கண்டீர்? :D:wub:

  • கருத்துக்கள உறவுகள்

:D நெல்லைய்யன்,

நன்றிகள் !!

அந்த ஒரு நிலையை தமது தேவை கருதி உருவாக்கியிருந்தார்கள்.மற்றவன் கேள்வி கேட்டக் கூடாது என்பதற்காக.நாட்டில் இருந்தவர்கள் ஓரளவு யதார்த்த நிலையை புரிந்துகொண்டுதான் இருந்தார்கள்.

கடைசியில் நீங்கள் சொன்னது உண்மையிலும் உண்மை.ஒட்டி நின்றவர்களே இன்று நாடு போகும் நிலையை பார்த்து பயப்பிடும் நிலை உருவாகியிருக்கின்றது.அதுவும் சிலவேளை ராசபக்சாகுடும்பத்தின் அழிவிற்கு முதல் படியோ எனத் தோன்றுகின்றது.புலிகளை பார்த்துதான் ராஜபக்சா அரசியல் செய்தார் அதையே இப்பவும் தொடர்கின்றார் அவரும் பாடம் படித்தகாக தெரியவில்லை.

அண்ணை புலிகள் அழிந்ததாக பீத்திக்கொள்ளும் நீங்கள் அந்த செய்தி சரியானதுதானா எண்டு ஒருக்கா சரி பாத்துக்கொள்ளும்...

கனக்க அரசியல் தெரிஞ்ச உமக்கு தெரியாதோ புலிகள் என்பது ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல அது ஒரு கருத்துவாக்கம் எண்டு... புலிகளை அழிப்பது எண்றால் ஆயுதம் கொண்டு நசுக்குவதோ போராளிகளில் சிலரை சிறைப்பிடிப்பதோ அல்ல.... புலிகளின் அழிவு என்பது புலிகளின் தேவையை தமிழ் மக்கள் மத்தியில் இல்லாமல் செய்வது.... அப்படி ஒரு நிலை வந்தது எண்டு உங்கட அரசியல் அறிவுக்கு எட்டுகிறதா....??

நீண்ட காலத்துக்கு முன்னம் கேக்க ஒரு நாயும் இல்லாமல் நீங்கள் ஓடி ஒளிய வேண்டி வந்தது... எந்த சனமும் உங்களை திரும்பி கூட பாக்க இல்லை... ஏன் நாய் எண்டு கூட கேக்க இல்லை... அப்ப உங்கட அழிவுக்கும் காரணம் இருந்ததுதான் என்கிறீர்கள் தானே....???

இப்ப அதே போல புலி அழிந்தது எண்டும் அப்படித்தான் சனம் அழிவை கணக்கு எடுக்க இல்லை எண்டும் சொல்ல நிக்கிறீயள்... நீங்கள் அழிந்த போது புலிகள் உங்களை நோக்கி சேறு அடிக்க இல்லை... காரணம் சனம் உங்களை கணக்கிலையே எடுக்க இல்லை....

அதாவது புலிகள் உங்களை இல்லாமல் செய்ய முடிந்ததின் இரகசியம் என்ன எண்டால் தமிழர் மத்தியில் உங்களை தேவை இல்லாமல் செய்தமை... மக்களுக்கு நீங்கள் ஒரு சுமையாக மட்டுமே தெரிந்தமை...

இண்டைக்கும் புலியை நோக்கி நீங்கள் சேறு அடிக்கிற வேலையை இன்னும் விட இல்லை எண்டதே புலியை மக்கள் மறக்க நீண்ட காலம் ஆகும் எண்டது உங்களுக்கு புரிந்ததால் தான்...

Edited by தயா

நான் செத்த வீட்டிற்கு வந்து கூலிக்கு மாரடிகவில்லை.

உண்மையாக தமிழனின விடிவு வேண்டி ஏறாத படியெல்லாம் ஏறுகின்றோம்.நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்றால் விதைத்துவிட்டு விட்டு போய்விட்டார்கள் இனி வளரும் என்று.உந்த கற்பனை உலகத்தை தான் நாம் கலைக்க சொல்லுகின்றோம்.நீங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை என தெரிந்துதான் நாங்கள் இன்னமும் அரசியலில் நிற்கின்றோம்.உயிரோடு இருக்கும் போராளியை வெளியில் கொண்டுவர விருப்பமில்லை இறந்தவர்களுக்கு மாவீரர் விழா.

களப்பலியான வீரர்களுக்கு மட்டும் விழா.உங்கள் விழாவில் தலைவரும் இல்லை யோகியும் இல்லை நடேசனும் இல்லை புதுவையும் இல்லை புலித்தேவனும் இல்லை திலகரும் இல்லை நடத்துங்கள் உங்கள் நாடகத்தை முடிந்த மட்டும்.கன காலம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை என தெரிந்துதான் நாங்கள் இன்னமும் அரசியலில் நிற்கின்றோம்

நீங்கள் எந்தக்கட்சி? உங்கள் அரசியல் வேலை என்ன? தமிழ் மக்களுக்காக தற்போது என்ன செய்கிறீர்கள்?

அடிக்கடி குறைகளை தான் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.அது தான் கேட்டேன்.

Edited by nunavilan

நான் செத்த வீட்டிற்கு வந்து கூலிக்கு மாரடிகவில்லை.

உண்மையாக தமிழனின விடிவு வேண்டி ஏறாத படியெல்லாம் ஏறுகின்றோம்.நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்றால் விதைத்துவிட்டு விட்டு போய்விட்டார்கள் இனி வளரும் என்று.உந்த கற்பனை உலகத்தை தான் நாம் கலைக்க சொல்லுகின்றோம்.நீங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை என தெரிந்துதான் நாங்கள் இன்னமும் அரசியலில் நிற்கின்றோம்.உயிரோடு இருக்கும் போராளியை வெளியில் கொண்டுவர விருப்பமில்லை இறந்தவர்களுக்கு மாவீரர் விழா

கூலிக்கு மாரடிக்காத அண்ணை ... நீண்ட காலம் அரசியலிலை நிக்கும் உங்களுக்கு உண்மையிலை தமிழ் மக்களுக்கு என்ன தேவை எண்டது தெரியுமோ... அப்படி தெரிய தமிழரின் அரசியல் வரலாறு தெரிய வேணும்... வரலாறு தெரிய முன்னம் அரசியல் தெரிய வேணும்... எனக்கு அரசியல் தெரியும் எண்டு நீங்கள் மாரித்தவளை மாதிரி கத்தினால் மட்டும் போதாது...

நீண்ட காலம் அரசியலிலை நிற்பத்தாக சொன்னால் மட்டும் போதும் தமிழ் மக்கள் உங்களிட்டை தலைமை பதவியை தந்து நடத்துங்கோ எண்டு விட்டு விடுவினமாக்கும்.... மக்கள் அதை எல்லாம் பார்ப்பது இல்லை நீங்கள் அரசியலில் இவ்வளவு காலம் என்னத்தை கிளிச்சியள் எண்டதுதான் மக்களுக்கு தேவையானது...

நாட்டுக்காக மடிந்த வீரர்களையோ, தியாகங்களையோ மதிக்க தெரியாத உமக்கு உயிரோடை இருப்பவர்களுக்கு மதிப்பை குடுப்பீர் எண்டும் , மக்களுக்காக ஏதாவது புடுங்குவீர் எண்டும் ஏதாவது அப்ப கோப்பைதான் நம்பும்... !

களப்பலியான வீரர்களுக்கு மட்டும் விழா.உங்கள் விழாவில் தலைவரும் இல்லை யோகியும் இல்லை நடேசனும் இல்லை புதுவையும் இல்லை புலித்தேவனும் இல்லை திலகரும் இல்லை நடத்துங்கள் உங்கள் நாடகத்தை முடிந்த மட்டும்.கன காலம் இல்லை.

அருமையான கண்டு பிடிபண்ணை... கனகால இல்லை எண்டு இரண்டு வருசமாக சொல்லி வாறீர் எண்டதை ஞாபகத்தில் கொள்ளும்...

Edited by தயா

  • தொடங்கியவர்

தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்று நிருபிக்கப்படுவதை சிறிலங்கா அரசு விரும்பவில்லை. தொடர்ந்தும் குழப்பம் நீடிப்பதையே விரும்புகிறது.

போராளிகளோடு ஒன்றாகப் போட்டு எரிக்கப்பட்டு விட்ட இடத்திற்கு சென்று தேசியத் தலைவரின் புகழுடலின் மிச்சங்களை இனம் கண்டு அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் மூலம் அவருடைய இறப்பை நிருபிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நான் இருக்கிறேன் என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இது நிற்க,

தேசியத் தலைவர் வருகைக்கான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும் என்பது தேசியத் தலைவரை அவமானப்படுத்துகின்ற கருத்து.

அவர் மக்களுக்காக போராடப் புறப்பட்டவர். மக்கள் போராடி தனது வருகைக்கான சூழலை உருவாக்குவர்கள் என்று காத்திருப்பவர் அல்ல.

ஆனால் மீண்டும் ஒரு "பிரபாகரன்" வருவதற்கான சூழலை சில வேளைகளில் சிறிலங்கா அரசு உருவாக்கலாம். தற்போதையை பிரபாகரனுக்கு ஏற்பட்ட "மரியாதையை" பார்க்கின்ற நளையை பிரபாகரன் இந்த மக்களுக்காக போராட தயாராக இருப்பானா என்பது வேறு விடயம்.

தேசியத் தலைவரை விட்டு விட்டு எமது போராட்டம் நகர முடியாது என்கின்ற கருத்துக்கு சில எதிர்வினைகள் வந்திருக்கின்றன

ஒரு தனிமனிதனில் எமது போராட்டம் தங்கியிருக்கக் கூடாது என்பதும், தமிழீழப் போராட்டம் என்பது முற்று முழுதான மக்கள் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதுமே என்னுடைய விருப்பங்களும்

ஆனால் அப்படியிருந்திருந்தால் நான் இன்றைய நிலையில் இருக்க மாட்டோம். போராட்டம் முன்னோக்கி நகர்வதாக சொல்லிக் கொள்வது எம்மை நாமே ஏமாற்றுகின்ற செயல்.

இன்றைக்கும்

தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பொய்யான பரப்புரையை செய்ய வேண்டிய தேவை ஏன் இருக்கிறது?

நிதி சேகரிப்பில் தேசியத் தலைவர் பல ஆயிரம் போராளிகளோடு அடுத்த கட்டப் போருக்கு தயாராகி வருவதாக சொல்ல வேண்டிய தேவை ஏன் இருக்கிறது?

சேரமான் போன்றவர்கள் தமது எதரிகளை "தேசியத் தலைவரின் இருப்பை மறுதலிப்பவர்கள்" என்று கட்டுரைகளில் சாட வேண்டிய தேவை ஏன் இருக்கிறது?

இப்படிக் கேட்டுக் கொண்டே போகலாம். தேசியத் தலைவரை விட்டு விட்டு நாம் நகர முடியாது. அப்படியாக தமிழினம் பழக்கப்படுத்தப்படவில்லை. போலித்தனமான மௌனமும் நீண்ட நாட்கள் பயன் தராது.

தேசியத் தலைவருக்கான மரியாதையை செலுத்துங்கள். உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். கனவில் இருக்காதீர்கள். பொய்யில் இருந்து அடுத்த கட்டத்தை வடிவமைக்காதீர்கள்.

தயவுசெய்து தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்பது நெருங்கிய வட்டாரங்களில் ஒத்துக் கொள்கின்ற பொறுப்பாளர்கள் அவற்றை வெளிப்படையாகவும் தெரிவியுங்கள் என்று இந்த இடத்தில் மண்டியிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.

(வேலைப் பழு காரணமாக இந்தப் பகுதியில் மீண்டு சனிக் கிழமையே என்னால் எழுத முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)

சபேசன்..

நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை... நான் மீண்டும் கேக்கின்றேன்... உங்களுக்கு தலைவர் உயிரோடை இல்லை என்பதை உறுதிப்படுத்தியவர் யார்....??? அல்லது எந்தக்காரணம் உங்களை அப்படி நம்ப வைத்தது....! தலைவரின் உடல் எரிக்கப்பட்டது எண்று வேறு சொல்கிறீர்கள்... அப்படியானால் அந்த தகவல்களின் மூலம் தான் என்ன...???

இதுக்கு சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் சொல்லுங்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

தயா

அவர் எங்கோ சாப்பிட்டதை இங்கு வாந்தியெடுக்கின்றார்

இந்த விடயத்தில் எனக்கு என்ன தெரியுமோ அதுவே அவருக்கும் தெரியும்

ஏனெனில் அவர் எழுதிய அனைத்தையும் நானும் கேள்விப்பட்டுள்ளேன்

அதை எடுத்து இங்கு கொட்டுவதா இல்லை பொறுப்பாக நடப்பதா என்பது ஒவ்வொருத்தரையும் பொறுத்தது.

ஆனால் இங்குள்ள சிக்கல்கள் அனைத்தும் விலக இதற்கான விடைதேவை என்ற விதத்தில் அவர் இதை இங்கு இணைத்திருந்தால்....

அதை பிழை என்று எழுதமுடியவில்லை. அவசரப்படுகிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால் இந்த வினாவுக்கான தேடுதலில் நாம் பல வேண்டப்படாத பயங்கரமான வரலாற்றுச்சம்பவங்களை சந்திப்போம். அப்போதும் நாம் இந்த பொறுமையை இந்த எமக்கிடையிலான ஒற்றுமையை காக்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

தயா

அவர் எங்கோ சாப்பிட்டதை இங்கு வாந்தியெடுக்கின்றார்

இந்த விடயத்தில் எனக்கு என்ன தெரியுமோ அதுவே அவருக்கும் தெரியும்

ஏனெனில் அவர் எழுதிய அனைத்தையும் நானும் கேள்விப்பட்டுள்ளேன்

அதை எடுத்து இங்கு கொட்டுவதா இல்லை பொறுப்பாக நடப்பதா என்பது ஒவ்வொருத்தரையும் பொறுத்தது.

ஆனால் இங்குள்ள சிக்கல்கள் அனைத்தும் விலக இதற்கான விடைதேவை என்ற விதத்தில் அவர் இதை இங்கு இணைத்திருந்தால்....

அதை பிழை என்று எழுதமுடியவில்லை. அவசரப்படுகிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால் இந்த வினாவுக்கான தேடுதலில் நாம் பல வேண்டப்படாத பயங்கரமான வரலாற்றுச்சம்பவங்களை சந்திப்போம். அப்போதும் நாம் இந்த பொறுமையை இந்த எமக்கிடையிலான ஒற்றுமையை காக்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

எனக்கு சபேசன் மீது எந்த கோபமும் இல்லையண்ணா...! ( முன்னரான காலங்களில் எண்றால் ஒருவேளை வந்திருக்கும்)

அவர் பிழையானவர்களின் தூண்டுதலை மட்டும் செவி மடுக்கிறார் என்பதுதான் என் கருத்து...

எங்களின் மக்களில் பலரும் மே 19 க்கு பிறகு மிகவும் குழம்பி போய் இருந்த போது இன்னும் குழப்ப எண்று சிலர் புறப்பட்டார்கள்... அவர்களின் நோக்கம் தமிழ் மக்கள் கொண்டு இருக்கும் கருத்தியலான தனி நாடு, சுதந்திரம் போண்றவை சரிவராது எண்று நம்ப செய்வதுதான்... இதை இதுக்கு முன்னர் நான் இதே கழத்திலும் வெளியிலும் சந்தித்து இருக்கிறேன்...

மக்கள் சுதந்திரம் சரி வராது அது தேவை அற்றது எண்று நம்பவைப்பது அவர்களிடம் மிக முக்கியமான சாரமான செயற்பாடாக இருக்கிறது.. அதை பெற்று தரும் அளவு ஆற்றல் உள்ளவர்கள் எங்களிடத்தில் இல்லை... எங்களுக்குள் ஒற்றுமை இல்லை.. எங்களால் எதையும் சாதிக்க முடியாது எனும் கூறுகள் காரணமாக சொல்லப்பட்டன...

இவைகளால் புலிகள் சரியாவனர்கள் இல்லை எனும் பிம்பம் தோற்றுவிக்க படுகிறது... புலிகள் சரியாவனர்கள் கிடையாது எண்றால் வேறு யார் சரியானவர்கள்...??? அரசோடு இயங்கும் குழுக்களை மாண்பு மிகு அமைச்சர் எண்டு ஒருவர் இங்கு சொல்கிறார்... ( ஆக உங்களுக்கு நோக்கம் தெளிவாக புரியும்)

கிட்டத்தட்ட இவை அனைத்துமே தமிழ் மக்கள் மீது விசம் பூசி வீசப்பட்ட இனிப்பு பண்டங்கள்... இதை எடுத்து உண்டவர்கள் இலங்கை அரசுடன் உடன்பாட்டுடன் செயற்பட வேண்டும் எண்றும் வேறு அமைப்புக்கள் ஊடு செய்ய வேண்டும் எண்றும் கிழம்பினார்கள்...

சபேசன் உட்பட குழம்பிய மக்கள் ஒண்றும் கொலைக்குற்றவாளிகள் கிடையாது... குழம்பி இருக்கிறார்கள் அல்லது குழப்பப்பட்டு இருக்கிறார்கள்... அவர்களுக்கு நேரடியாக உண்மைகளை சொல்லி புரிய வைக்கும் நிலையில் புலிகளும் இல்லை... அவைகளை சொல்லக்கூடிய தகுதி நிலையில் நாங்களும் இல்லை இதுதான் இண்றை பிரச்சினை...

இதன் பின்னால் இருந்ததும் இருப்பதும் இலங்கை புலநாய்வு பிரிவு என்பதை விட இந்திய புலநாய்வு பிரிவும் எண்று சொல்வதுதான் மிகவும் சரியானது... அதில் KP ஒரு அங்கம்...

எங்களின் ஊடகங்களும் இவை சம்பந்தமாக சரியாக புரிந்து கொண்டு பொறுப்போடு செயற்படவில்லை என்பது மிகவும் கவலையானது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தில் என்ன குற்றம் கண்டீர்? :D:wub:

அது தானே எதற்காக அந்த உப்பு,சப்பு இல்லாத கருத்தை வெட்டினார்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே எதற்காக அந்த உப்பு,சப்பு இல்லாத கருத்தை வெட்டினார்கள் :(

அடங்கொய்யால.. :D தயா சபேசனிட்ட கேட்டுக்கொண்டு நிக்கிற கேள்விக்கு நான் சரியான பதில் குடுத்தனான்..! :D தூக்கிப் போட்டினம்..! இப்பப் பாருங்கோ இன்னும் அதே கேள்வியோடை நிக்கிறார் தயா..! :D:wub:

"(வேலைப் பழு காரணமாக இந்தப் பகுதியில் மீண்டு சனிக் கிழமையே என்னால் எழுத முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)"

அன்பான ஒரு வேண்டுகோள்,

ஏதாவது ஒரு கருத்தை மட்டும் ஒரு அலசலில் முன்வையுங்கள் அப்பொழுது உறவுகளுக்கு கூடிய விளக்கமும் தெளிவான விவாதமும் நடக்கும். இதன் மூலம் அனைவரும் பயன் அடைவார்கள்.

உதாரணத்திற்கு,

1 ) ஏன் எமது போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகரமாட்டாது, அஞ்சலி செலுத்தாமல்

2 ) தலைவர் உயிரோடை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது எப்படி அல்லது எந்தக்காரணம் உங்களை அப்படி நம்ப வைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொய்யால.. :(தயா சபேசனிட்ட கேட்டுக்கொண்டு நிக்கிற கேள்விக்கு நான் சரியான பதில் குடுத்தனான்..! :D தூக்கிப் போட்டினம்..! இப்பப் பாருங்கோ இன்னும் அதே கேள்வியோடை நிக்கிறார் தயா..! :D:wub:

அந்த பதில தயவு செய்து எனக்கு ஒருதரம் தனி மடலில்போடமுடியுமே..?

நிம்மதியாக நித்திரை செய்து பல மாதமாகுது இசை...

புண்ணியமாப்போகும் தங்களுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பதில தயவு செய்து எனக்கு ஒருதரம் தனி மடலில்போடமுடியுமே..?

நிம்மதியாக நித்திரை செய்து பல மாதமாகுது இசை...

புண்ணியமாப்போகும் தங்களுக்கு...

எதுக்கு தனிமடல்? இங்கயே நளினமா எழுதிறன்..! :D

அதாவது, சபேசன் உண்மையான ஒரு தமிழ் தேசியவாதிதான்..! அவர் தலைவர் உயிருடன் இருக்க வேண்டும் என விரும்புபவர். அப்படிப்பட்ட சபேசன், மற்றவர்கள் வாயாலும் இச்செய்தியைக் கேட்க வேண்டும் என்கிற ஆவலில் இத்திரியைத் திறந்திருக்கிறார். இதுதான் எனது ஆணித்தரமான கருத்து..! :D

இதையே கொஞ்சம் வேற விதமா எழுதினதுக்கு தூக்கிட்டாங்கப்பா..!

:wub:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மாற்றுக்கருத்து என்னிடமுண்டே..

அதாவது

விருப்பமும் உண்மையும் ஒரே பாதையில் பயணிக்குமா....???

இறுதியாக ஒரு அன்பான வேண்டுகோள்:

தேசிய தலைவர் உள்ளாரா இல்லையா என்பதற்கு அப்பால்;

அவருக்கு அகவணக்கம் செலுத்தினால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்ற விதண்டா வாதத்திற்கு மேலாக;

தலைவர்கள், தளபதிகள், மாவீரர்கள், போராளிகள், மக்கள் தியாகங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து;

சிங்கள பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட எமது மக்களுக்கு உண்மையாக,

மிகுந்த அவலத்துக்குள் இருக்கும் எம்மக்களை எவ்வாறு மீட்டு எடுக்கலாம் என்பதை உள்ளத்தில் கொண்டு;

எவ்வாறு தமிழீழத்தை மீட்டெடுத்து எமது இருப்பை நிலையாக்கலாம் என்று முடிந்தால் எழுதுங்கள், அலசுவோம், ஆராய்வோம்.

உங்கள் திறமையை, ஆற்றலை ஒரு சமுதாயத்திற்கு உரமாக்குங்கள்:

- பல கள உறவுகளுக்கு, சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக

- ஒரு தன்னம்பிக்கையை ஊட்டுபவனாக

- எமது விடுதலைக்கு வலுச்சேர்ப்பவனாக

வணக்கம்.

மிகவும் ஆக்கபூர்வமான கருத்து. இரண்டு விடயங்களை இடைச் செருகியுள்ளேன்.

தவறெனின் மன்னியுங்கள்.

மாவீரர் வார நிகழ்வுகள் பரவலாக நடைபெறவேண்டிய காலகட்டம் இது. தமிழ் சமூகங்கள் இவற்றை ஏற்பாடு செய்தால் நல்லது.

நாடுகடந்த அரசு, இராஜதந்திர ரீதியில் "வெளிப்படையாக" இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலிருந்து விலகியிருப்பது கசப்பான காலத்தின் தேவையாகும்.

இந்த நிகழ்வுகளில் தமிழ் மக்களின் அழிவுகள் அடங்கிய புகைப்பட, வீடியோ கண்காட்சிகளும் இடம்பெறவேண்டும்.

அடுத்த தலைமுறையினரை இந்த நிகழ்வுகளில் பங்குபெறச் செய்வது மிக அவசியம்.

ந.க.த. அரசு மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்து இருக்கவேண்டும் என இந்த திரியின் கருத்தாளர் ஆரம்பத்தில் சொல்லியிருந்தார்.

இதைப்பற்றி மக்களுக்கு ஒரு தெளிவான பார்வையை ந.க.த. அரசு தராமல் ஒரு தவறை செய்வதாயும் கருத்தாளர் சொல்லியுள்ளார்.

கீழே உள்ளது ஒரு கள உறவின் பதில்:

"நாடுகடந்த அரசு, இராஜதந்திர ரீதியில் "வெளிப்படையாக" இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலிருந்து விலகியிருப்பது கசப்பான காலத்தின் தேவையாகும்."

மாவீரர் தினத்தை யார் போன வருடம் செய்தார்களோ அவர்களே தொடர்ந்து செய்யட்டும்.

இந்த புனித தினம் மக்களால், இளையோரால், சங்கங்களால் உணர்வுபூர்வமாக செய்யப்பட வேண்டிய ஒன்று. அதுவே நடக்கின்றது, அப்படியே நடக்கட்டும்.

ந.க.த. அரசு எமது இலட்சியத்தை, தமிழீழத்தை, அடையவே மக்களால் தெரிவுசெய்யப்பட்டது. அவர்களை இந்த மாவீரர் தினத்தை செய்யும்படி கோரி அவர்களையும் நாம் சிக்கலில் மாட்டிவிடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளை நடத்துவது தமிழ்மக்களே ஒழிய குறிப்பிட்ட ஒரு அமைப்புதான் நடத்த வேண்டும் என்பதில்லை.நாடுகடந்த அரசு அதனைப் பொறுப்பேற்று நடத்தவேண்டும் என்று கூறுவது அந்த அமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகளைச் சிக்கலில் மாட்டிவிடுவதற்கான ஆலோசனையாகவே படுகின்றது.நாடு கடந்த அரசின் உறுப்பினர்கள் நிச்சயம் மாவீரர் நாள் நிகழ்வுகளில் தங்கள் பங்களிப்புக்களை மறைமுகமாகச் செய்வார்கள்.

அடுத்ததாக சபேசனிடம் ஒரு கேள்வி.

நீங்களும் நானும் ஏனைய புலம் பெயர் உறவுகளும் ஒரே செய்திகளையே வாசிக்கிறோம்.தேசியத் தலைவர் தொடர்பாக நீங்கள் எதற்காக அவர் இல்லை இல்லை என்று மீண்டும் மீண்டும் வாதிடுகிறீர்கள்.அவர் இல்லை என்பதற்கான சந்தேகத்திற்கிடமற்ற ஆதாரங்களைச் தங்களால் வெளியிட முடியமா?கள உறவுகள் இந்தத் திரியில் அவரின் இருப்பு தொடர்பாக வாதிடவில்லை என்பதற்காக அவர்கள் உங்கள் கருத்துடன் ஒன்றுபடுகிறார்கள் என்று எப்படி உங்களால் எழுத முடியும்.இது பற்றி பல திரிகளில் அவர்கள் தங்கள் சந்தேகங்கள் பலவற்றை எழுதியிருப்பதாலும் இந்த விடயத்தைக் கிளறுவதில் இப்போது எந்த நன்மையும் இல்லை என்பதாலும் அவர்கள் அதை விடுத்து தேச விடுதலையை நோக்கிய திசையில் பயணிக்கிறார்கள்.உண்மையாகத் தேசியத்தை நேசிப்பவன் தன் இலக்கை அடைவதிலேயே குறியாக இருப்பான்.சந்தர்பத்திற்காக தேசியத்தை நேசிப்பதாக நடிப்பவன் தன் வேடம் கலைந்ததும் அடத்த வேடத்திற்க நடிக்கத் தயாராகி விடுவான்.

மாவீரர் நாளை நடத்துவது தமிழ்மக்களே ஒழிய குறிப்பிட்ட ஒரு அமைப்புதான் நடத்த வேண்டும் என்பதில்லை.நாடுகடந்த அரசு அதனைப் பொறுப்பேற்று நடத்தவேண்டும் என்று கூறுவது அந்த அமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகளைச் சிக்கலில் மாட்டிவிடுவதற்கான ஆலோசனையாகவே படுகின்றது.நாடு கடந்த அரசின் உறுப்பினர்கள் நிச்சயம் மாவீரர் நாள் நிகழ்வுகளில் தங்கள் பங்களிப்புக்களை மறைமுகமாகச் செய்வார்கள்.

அடுத்ததாக சபேசனிடம் ஒரு கேள்வி.

நீங்களும் நானும் ஏனைய புலம் பெயர் உறவுகளும் ஒரே செய்திகளையே வாசிக்கிறோம்.தேசியத் தலைவர் தொடர்பாக நீங்கள் எதற்காக அவர் இல்லை இல்லை என்று மீண்டும் மீண்டும் வாதிடுகிறீர்கள்.அவர் இல்லை என்பதற்கான சந்தேகத்திற்கிடமற்ற ஆதாரங்களைச் தங்களால் வெளியிட முடியமா?கள உறவுகள் இந்தத் திரியில் அவரின் இருப்பு தொடர்பாக வாதிடவில்லை என்பதற்காக அவர்கள் உங்கள் கருத்துடன் ஒன்றுபடுகிறார்கள் என்று எப்படி உங்களால் எழுத முடியும்.இது பற்றி பல திரிகளில் அவர்கள் தங்கள் சந்தேகங்கள் பலவற்றை எழுதியிருப்பதாலும் இந்த விடயத்தைக் கிளறுவதில் இப்போது எந்த நன்மையும் இல்லை என்பதாலும் அவர்கள் அதை விடுத்து தேச விடுதலையை நோக்கிய திசையில் பயணிக்கிறார்கள்.உண்மையாகத் தேசியத்தை நேசிப்பவன் தன் இலக்கை அடைவதிலேயே குறியாக இருப்பான்.சந்தர்பத்திற்காக தேசியத்தை நேசிப்பதாக நடிப்பவன் தன் வேடம் கலைந்ததும் அடத்த வேடத்திற்க நடிக்கத் தயாராகி விடுவான்.

என்னுடைய கருத்தும் அதுதான். மேலும் ஆசான், அகூதா கூறியவையும் முக்கியமானவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.