Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன செய்யலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யலாம்

நேசக்கரம் அமைப்பிறகாக பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியில் நிகழ்ச்சியொன்று புதன் வெள்ளி மற்றும் சனிக்கிழைமைகளில் சாந்தி ரமேசும் நானும் செய்வது வழைமை .சில நேரங்களில் நான் நிகழ்ச்சி செய்வதாக அடித்து சத்தியம் செய்து விட்டு நிகழ்ச்சி செய்யாமல் எஸ்கேப்பாகி சாந்தியிடம் திட்டுவாங்குவதும் வழைமையான நிகழ்ச்சிநிரலில் அடங்கும். இதுபோலத்தான் ஒருநாள் வானொலி நிகழ்ச்சி முடிந்து வழைமை போல உதவ விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும் என்று சாந்தியினுடைய தொ.பே மற்றும் என்னுடைய தொ.பே இலக்கங்களை அறிவித்து நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் எனது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது மறு முனையில் ஒரு ஆணின் குரல் அதனை உரையாடல் வடிவிலேயே இங்கு தருகிறேன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

நான். வணக்கம் யார் கதைக்கிறீங்கள்

மறுமுனையில்..தம்பி நான் தணிகாசலம் கதைக்கிறன் பாரிசிலையிருந்து உங்கடை றேடியோ நிகழ்ச்சி கேட்டனான் அதைப்பற்றி கதைக்கத்தான் எடுத்தனான் சிறிதானே கதைக்கிறது

நான்..ஓமண்ணை சொல்லுங்கோ நான் சிறிதான் கதைக்கிறன் எப்பிடியான உதவி செய்யப்போறீங்கள்?? யாருக்கு எண்டு சொன்னால் நாங்கள் எங்களாலை அதுக்கான நேரடி தொடர்புகளை ஏற்படுத்தித் தரலாம்.உங்களுக்கு நேரடியா உதவ முடியாட்டி அதுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தரலாம். என்னமாதிரியான உதவி செய்யப் போறீங்கள்.

தணிகாசலம்...தம்பி விதைவை பெண்கள் முண்டு பேர் இருக்கினம் அவைக்கு உதவி வேணும் எண்டு இண்டைக்கு கேட்டிருந்தனியளல்லோ அது பற்றி.........(இழுத்தார்)

நான் ..ஓமண்ணை இண்டைக்கு மூண்டு பேரின்ரை விபரம் கிடைச்சது கொஞ்சம் பொறுங்கோ வாறன் ( கொப்பியை பிரட்டி விபரங்களை பார்த்துவிட்டு) ஒருத்தருக்கு நாலு பிள்ளையள் அண்ணை இன்னொருத்தருக்கு இரண்டு பிள்ளையள். அடுத்தவருக்கும் இரண்டு பிள்ளையள் அதோடை அவா காயமும் பட்டு இயலாதஆள்.உங்களிட்டை மெயில் விலாசம் இருந்தால் தாங்கோ நான் அவையளின்ரை பிள்ளையளின்ரை வயது விபரங்கள் உடைனை போட்டு விடுறன்.

தணிகாசலம். ஓஓஓஓ மூண்டு பேருக்கும் பிள்ளையள் இருக்கினமோ???

நான் ..ஓமண்ணை எல்லாம் சின்னபிள்ளையள் படிக்கிறவயது பள்ளிக்கூடம் போக விரும்பினம் அவையளை கட்டாயம் படிப்பிக்கவேணும். விரும்பினால் நீங்கள் நேரை கதைக்கிற வசதி செய்து தரலாம். கதைச்சு பாருங்கோ.

தணிகாசலம்...ஓம் தம்பி கட்டாயம் படிப்பிக்கத்தான் வேணும் அது நல்ல விசயம் ஆனால் நான் என்ன சொல்லுறனெண்டால்...

நான் ...சொல்லுங்கோ ..

தணிகாசலம்...எனக்கு தம்பி இப்ப 56 வயது

நான்..ஒம்

தணிகாசலம்..என்ரை மனிசி வருத்தம் வந்து 2 வருசத்துக்கு முதல் மோசம் போயிட்டா..

நான்.....ஸ்.....ப்ச்......ம்........சொல்லுங்கோ

தணிகாசலம்....எனக்கு இரண்டு பிள்ளையள் அதுகளும் கலியாணம் கட்டி தனியா போட்டுதுகள்.

நான்..ஓ அப்ப நீங்கள் தனிச்சு போனியள் உங்கடை கவலை விளங்குது அப்பிடியெண்டால் ஒரு சின்ன பிள்ளையொண்டை பொறுப்பெடுத்து வளவுங்கோவன் அதுக்கான வசதியை செய்து தரலாம்..

தணிகாசலம்..நான் ஒரு பிள்ளையை பொறுப்பெடுத்து வளக்கிறதெண்டிறது கஸ்ரம் தம்பி அதோடை நான் இந்தமாத கடைசி ஊருக்கு போறன் அங்கை ஆரும் பிள்ளையள் இல்லாத விதைவை இருந்தால் நான் பொறுப்பெடுத்து உதவிசெய்யலாமெண்டு பாக்கிறன். அப்பிடி யாரும் உங்கடை லிஸ்ரிலை இருந்தால் சொல்லுங்கோ. அதுவும் வயது ஒரு முப்பதுக்குள்ளையெண்டால் இன்னும் நல்லது......

அப்பொழுதுதான் அவர் என்னவகையான உதவி செய்ய விரும்புகிறார் என எனக்கு பட்டென்று புரிந்தது ;அண்ணை .நாங்கள் உதவி அமைப்புத்தான் நடத்திறம் புறோக்கர் வேலை செய்யேல்லை என்றுவிட்டு தொலைபேசியை நிறுத்தலாமா??என ஒரு செக்கன் யோசித்தாலும். சரி யாரோ ஒரு பெண்ணிற்கு ஒரு வழியும் வெளிநாட்டு வாழ்வும் கிடைத்தாலும் கிடைக்கும். எதற்கு குழப்புவான் என இரண்டு மனதில் போராட்டத்துடன்

நான்.அண்ணை உங்கடை பிரச்சனை விளங்கிது ஆனால் உதவவிரும்புகிறவையின்ரை உதவியை கொண்டு சேர்க்கிறதுதான் எங்கடை வேலை ஆனால் உங்கடை உதவி கொஞ்சம் சிக்கலான விசயம்.அதாலை நான் தனியா முடிவெடுக்கேலாது எங்கடை அமைப்பிலை மற்றவையோடையும் கதைத்து முடிவு சொல்லுறன். அதோடை வேறை உதவியளும் பிள்ளையளிற்கு கல்வி எண்டு கனக்கதேவைப்படுது அதைப்பற்றியும் யோசியுங்கோ நான் உங்களுக்கு பிறகு போனடிக்கிறன்.

தணிகாசலம்..தம்பி நான் இந்தமாதக்கடைசி கட்டாயம் போறன் றிக்கற் எல்லாம் போட்டிட்டன். மற்றபடி நான் வடக்கு கிழக்கு சாதி சமயம் எண்டெல்லாம் பாக்கிறேல்லை(எண்டெரு தத்துவத்தையும் உதிர்ந்து) உங்களிட்டை இருக்கிற விபரங்களை போடுங்கோ நான் நேரை போய் சந்தித்து மிச்ச அலுவல்களை நான் பாக்கிறன். கட்டாயம் போகமுதல் நல்லமுடிவாய் சொல்லுங்கோ

தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

இப்பொழுது தணிகாசலம் ஊரிற்கு போகப்போகிறார். இது சம்பந்தமாக சாந்தியிடம் கருத்து கேட்டபொழுது அவர் தந்த பதில்(***************) சுய தணிக்கை ..எனவே என்ன செய்யலாம்...?????????????????????????????????? :D

Edited by sathiri

  • Replies 187
  • Views 14.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தணிகாசலம்..நான் ஒரு பிள்ளையை பொறுப்பெடுத்து வளக்கிறதெண்டிறது கஸ்ரம் தம்பி அதோடை நான் இந்தமாத கடைசி ஊருக்கு போறன் அங்கை ஆரும் பிள்ளையள் இல்லாத விதைவை இருந்தால் நான் பொறுப்பெடுத்து உதவிசெய்யலாமெண்டு பாக்கிறன். அப்பிடி யாரும் உங்கடை லிஸ்ரிலை இருந்தால் சொல்லுங்கோ. அதுவும் வயது ஒரு முப்பதுக்குள்ளையெண்டால் இன்னும் நல்லது......

இவர் கெட்ட, கேட்டுக்கு....... பிள்ளையள் இல்லாத விதவை அதுகும் முப்பது வயதுக்குள்ளை தேவைப் படுகுது.

ஊரிலை வைத்து, நலம் எடுத்து விட்டால் தான்.... இந்த ஜன்மங்கள் திருந்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் இவ்வுலகில் வாழ வேண்டியவனே அல்ல

அனுப்பிட வேண்டியதுதான்....?

..........

..........

ஊருக்கு...

இவர் கெட்ட, கேட்டுக்கு....... பிள்ளையள் இல்லாத விதவை அதுகும் முப்பது வயதுக்குள்ளை தேவைப் படுகுது.

ஊரிலை வைத்து, நலம் எடுத்து விட்டால் தான்.... இந்த ஜன்மங்கள் திருந்துங்கள்.

தமிழ் சிறியின் கருத்தை வழி மொழிகின்றேன் .. ஊரில நல்ல கொடுவாக் கத்தியாக பார்த்து தீட்டி வைக்க வேண்டும்

துணை இழந்த ஒருவர் துணை தேடுவதும், தன்னைப் போன்ற துணை இழந்தவராக இருந்தால் நல்லது என்று நினைப்பதும் தவறில்லை...ஆனால் இந்த மனுஷன் தன்னை விட 26 வயது க்கும் குறைவான ஒரு பெண்ணை உதவி செய்யப் போகின்றேன் என்ற பெயரில் பெண்ணின் இயலாமையை வைத்து பேரம் பேச முனைகின்றார்

'தணி'யின் மணிக்கு ஆப்பு வைத்தால் தான் சரி

Edited by நிழலி

உங்கள் அமைப்பின் வரையறையின் படி இந்த மாதிரி ஆட்களின் தேவைகளுக்கு உதவகூடாது, உதவ முடியாது. அமைப்பின் வரையறுக்குள் நிற்பதால் மட்டுமே எமது குறிக்கோளை அடைய முடியும்.

அவரும் (தணிகாசலம்) இப்படியான ஒரு அமைப்பிடம் இப்படியானான தேவையை முன்வைத்து அவரின் முதிர்ச்சியின்மையை காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தணி, விருப்பப் பட்டது தவறில்லை ஆனால் விலாசம் மாறி கதவைத் தட்டுகிறார் ! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ அவரது புண்ணியம்

சாத்திரியார் தனது விலாசத்தையும் தொலைபேசி இலக்கத்தையும் கொடுக்காதவரை தப்பித்தார்....? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அமைப்பின் வரையறையின் படி இந்த மாதிரி ஆட்களின் தேவைகளுக்கு உதவகூடாது, உதவ முடியாது. அமைப்பின் வரையறுக்குள் நிற்பதால் மட்டுமே எமது குறிக்கோளை அடைய முடியும்.

அவரும் (தணிகாசலம்) இப்படியான ஒரு அமைப்பிடம் இப்படியானான தேவையை முன்வைத்து அவரின் முதிர்ச்சியின்மையை காட்டுகின்றது.

அகோதா எங்கள் அமைப்பின் சட்டவரைபின்படி இதுபோன்ற உதவிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களிற்கு பிள்ளைகளை தத்தெடுத்து கொடுப்பது போன்ற விடயங்களை செய்வதில்லை .ஆனால் நேசக்கரம் அமைப்பு என்பதை தாண்டி சில தனிப்பட்ட உதவிகளையும் செய்யவேண்டியுள்ளது . அதனால்தான் மனதில் சில குளப்பங்கள்.

என்ன செய்யலாம்

தணிகாசலம்...எனக்கு தம்பி இப்ப 56 வயது

என்ன செய்யலாம்

சமயம் எண்டெல்லாம் பாக்கிறேல்லை(எண்டெரு தத்துவத்தையும் உதிர்ந்து) உங்களிட்டை இருக்கிற விபரங்களை போடுங்கோ நான் நேரை போய் சந்தித்து மிச்ச அலுவல்களை நான் பாக்கிறன். கட்டாயம் போகமுதல் நல்லமுடிவாய் சொல்லுங்கோ

தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

என்ன செய்யலாம்

தணிகாசலம்..நான் ஒரு பிள்ளையை பொறுப்பெடுத்து வளக்கிறதெண்டிறது கஸ்ரம் தம்பி அதோடை நான் இந்தமாத கடைசி ஊருக்கு போறன் அங்கை ஆரும் பிள்ளையள் இல்லாத விதைவை இருந்தால் நான் பொறுப்பெடுத்து உதவிசெய்யலாமெண்டு பாக்கிறன். அப்பிடி யாரும் உங்கடை லிஸ்ரிலை இருந்தால் சொல்லுங்கோ. அதுவும் வயது ஒரு முப்பதுக்குள்ளையெண்டால் இன்னும் நல்லது......

தணி தன் குறிக்கோளில் தெளிவாகவே உள்ளார்.

இவருக்கு தேவை ஒரு பாக்கு வெட்டி.

"ஆனால் நேசக்கரம் அமைப்பு என்பதை தாண்டி சில தனிப்பட்ட உதவிகளையும் செய்யவேண்டியுள்ளது . அதனால்தான் மனதில் சில குளப்பங்கள்."

குழப்பங்களுக்கு இடம் அளிக்காதீர்கள். மனத்தை கொஞ்சம் இறுக்குங்கள். ( ஆம் மன்னிக்கவும் சொல்வது இலகு. அதுவும் இது எங்கள் உறவுகள், எங்கள் மக்கள்). நீங்கள் சென்ன மாதிரி சட்ட வரையறுக்குள் நிண்டால், உங்கள் பாதையில் தெளிவும் மனத்தில் ஒரு திருப்தியும் வரும்.

தொடர்க உங்கள் பணி. நன்றி உங்களுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் கெட்ட, கேட்டுக்கு....... பிள்ளையள் இல்லாத விதவை அதுகும் முப்பது வயதுக்குள்ளை தேவைப் படுகுது.

ஊரிலை வைத்து, நலம் எடுத்து விட்டால் தான்.... இந்த ஜன்மங்கள் திருந்துங்கள்.

சிறிஅவரின் மற்றைய கோரிக்கைகள் எனக்கு ஓரளவு நியாயமானதாய் பட்டது ஆனால் 30 குள்ளை வேணும் எண்டதுதான் எரிச்சலை கிளப்பியது :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறியின் கருத்தை வழி மொழிகின்றேன் .. ஊரில நல்ல கொடுவாக் கத்தியாக பார்த்து தீட்டி வைக்க வேண்டும்

துணை இழந்த ஒருவர் துணை தேடுவதும், தன்னைப் போன்ற துணை இழந்தவராக இருந்தால் நல்லது என்று நினைப்பதும் தவறில்லை...ஆனால் இந்த மனுஷன் தன்னை விட 26 வயது க்கும் குறைவான ஒரு பெண்ணை உதவி செய்யப் போகின்றேன் என்ற பெயரில் பெண்ணின் இயலாமையை வைத்து பேரம் பேச முனைகின்றார்

'தணி'யின் மணிக்கு ஆப்பு வைத்தால் தான் சரி

நிழலி இதே பதிலைத்தான் சாந்தியும் இன்னம் இரண்டு வசனம் அதிகமாக சேர்த்து.சொல்லியிருந்தார் கோபத்தில் அப்படி சொன்னாலும் அது தீர்வாகாது . ஆனால் எம்மவர்கள் இப்படியும் இன்னும் இருக்கிறார்கள் என்று கவலைப்படுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது இதனை விட மோசமான அனுபவங்களும் அவை பற்றி முடிந்தால் எழுதுகிறேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கள் சிறி

போய் முப்பதில் ஒன்றைக்கொண்டுவரட்டும்

தணி எனது பக்கத்து வீட்டுக்காறன் தான்....??? :D:wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கள் சிறி

போய் முப்பதில் ஒன்றைக்கொண்டுவரட்டும்

தணி எனது பக்கத்து வீட்டுக்காறன் தான்....??? :D :D

முப்பதிலை ஒண்டை கொண்டுவந்தால் பிரச்சனையில்லை விசுகு அவர் முப்பதை இரண்டால் பிரித்து இரண்டு பதினைஞ்சை கொண்டுவர வெளிக்கிட்டால் பிரச்சனையே :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அவரை விட 26 வயது கூட உடைய விதவை ஒருவர் இருக்கிறார். அவர் திருமணம் செய்வரா என்று கேளுங்கள்

குறிப்பிட்ட நபர் உரையாடியதில் பெரிய பிழை ஏதும் உள்ளதாக எனக்கு தெரியவில்லை. சுவை அவர்கள் கூறியதுபோல் கதவுமாறி தட்டியுள்ளார் என்று வேண்டுமானால் கூறலாம். சரி, அவர் ஊரிற்கு சென்று இக்கட்டான நிலையிலுள்ள ஓர் முப்பது வயது பெண்ணை திருமணம் செய்தால் உங்களால் என்ன செய்யமுடியும்? இது சட்டவிரோதமான செய்கை இல்லையே! வெளிப்படையாக துணிந்து தனது விருப்பத்தை கூறியுள்ளார். இதற்கு ஏன் பாக்குவெட்டி எல்லாம் தேவைப்படுகின்றது என்று தெரியவில்லை. பாக்குவெட்டி தூக்குவதற்கு ஓர் நாள் இரவு படுத்து எழும்புவதற்கா பெண் கேட்டார்? இணைந்து வாழ்க்கைத்துணையாக வாழ்வதற்குத்தானே இப்படி கேட்டுள்ளார். உண்மையில் இவர் எதிர்பாப்பதுபோல் உளப்பூர்வமாக விரும்பக்கூடிய வாழ்வைத்தேடுகின்ற ஓர் விதவைப்பெண் ஊரில் காணப்படலாம். வசதி, வாய்ப்புக்கள், வாழ்க்கைச்சூழ்நிலைகள் மாறுபடும்போது.. எல்லாரையும், எல்லாவற்றையும் ஒரே பார்வையில் பார்ப்பது தவறானது. வெளிநாட்டில் வாழ்கின்ற இவர் நினைத்தால்.. ஐம்பத்து ஐந்து வயது என்ன.. அறுபது வயதானால் எழுபது வயதானால் கூட.. கையில் காசை காட்டும்போது இளம்பெண்களுடன் உறவுகொள்ள முடியும். ஆனால்.. அவர் நாகரீகமாக, உண்மையாக தனது பிரச்சனைகளை கூறித்தானே இவ்வாறு தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இங்கு பிழை பிடிப்பதற்கு என்ன உள்ளது? பலர் இங்கு இன்னமும் யதார்த்த உலகம் அறியாமல் கண்ணை மூடிக்கொண்டு கருத்து எழுதுகின்றார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகின்றது. நீங்கள் நினைக்கும் வகையில் உங்கள் வரைவிலக்கணங்களிற்கு கட்டுப்பட்டு அதை திருப்திப்படுத்தும் வகையில் ஒருவன் வாழவேண்டும் என்று இல்லை. உலகம் நமது ஊரைவிட மில்லியன் மில்லியன் அளவு பெரியது. குறுகிய கோணத்தில் மட்டும் பார்க்காது பல்வேறு கோணங்களில் ஓர் விடயத்தை அணுகுங்கள். வெறும் கிண்டல்கள், நையாண்டிகள் மூலம் ஆகப்போவது ஒன்றும் இல்லை.

எல்லாவற்றையும் வித்த்தியாசமாக பார்கின்றேன் என்று நிரூபிக்க முயல்வது போல் இருக்கு

தணிகாசலம் இவற்றை ஒரு காலியான புரோகருக்கு சொல்லி இருந்தால் சரி,... யுத்தத்தால் அனைத்தையும் இழந்தவருக்கு உதவும் அமைப்பினை சேர்ந்தவரிடம் கேட்பது தான் தவறு... நீங்கள் சொல்வது போல், யாராவது ஒரு பெண் இதற்கு சரி எனலாம்...அது அவரின் இயலாமையில் இருந்து வெளி வர முயலும் முயற்சியாகத் தான் இருக்குமே ஒழிய, அவரின் ஆசைகளை அங்கீகரித்த ஒரு செயலாக இருக்காது

நிழலி, நீங்கள் சொல்வது சரி.

மேலும் அந்த தணிகாசலம், வானொலி நிகழ்ச்சியில் நேசக்கரத்தின் நிகழ்ச்சியை கேட்பவர் என்னும் முறையில், நேசக்கரத்தை பற்றி விபரம் தெரிந்த ஆளாகத்தான் உள்ளார். சிலவேளை..... சாத்திரியாரையும், சாந்தியையும் உசுப்பேத்த அப்படிக் கேட்டாரோ..... தெரியாது. எதுக்கும் அவரின் விபரத்தை எடுத்து "தணியின் மணியை கட்" பண்ணுவதே..... சரியான தீர்வு. :D

விடுங்கள் சிறி

போய் முப்பதில் ஒன்றைக்கொண்டுவரட்டும்

தணி எனது பக்கத்து வீட்டுக்காறன் தான்....??? :D:(

விசுகு, நீங்கள் "சைக்கிள் கப்பிலை கார் ஓட்ட" நிற்கிறீர்கள். :wub:

.

Edited by தமிழ் சிறி

" குறிப்பிட்ட நபர் உரையாடியதில் பெரிய பிழை ஏதும் உள்ளதாக எனக்கு தெரியவில்லை.

இது சட்டவிரோதமான செய்கை இல்லையே! வெளிப்படையாக துணிந்து தனது விருப்பத்தை கூறியுள்ளார்."

உண்மைதான். அத்துடன் இன்னுமொரு கோணத்தில் எழுதியது இந்த கூற்றுடன் முரண்படுவது போலுள்ளது"

"சட்டத்திற்கு அப்பால் morality என ஒன்று உள்ளது. ஓர் ஊடகத்திற்கு இது பிரதானமானது. Ethicsஇற்கு அப்பால்பட்டு இப்படியான விளம்பரத்தை பணத்திற்காக ஒலிபரப்பு செய்ததை கருத்துச்சுதந்திரம் எனும் பிரிவில் வைத்து ஆலாத்தி காட்டமுடியாது."

திரி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=76899&view=findpost&p=617555

"சட்டத்திற்கு அப்பால் morality என ஒன்று உள்ளது. ஓர் நேசக்கரம் கேட்கும் தமிழனுக்கு இது பிரதானமானது. Ethicsஇற்கு அப்பால்பட்டு இப்படியான கேள்வி கேட்டு தனி மனித சுதந்திரம் எனும் பிரிவில் வைத்து ஆலாத்தி காட்டமுடியாது."

எல்லாவற்றையும் வித்த்தியாசமாக பார்கின்றேன் என்று நிரூபிக்க முயல்வது போல் இருக்கு. தணிகாசலம் இவற்றை ஒரு காலியான புரோகருக்கு சொல்லி இருந்தால் சரி,... யுத்தத்தால் அனைத்தையும் இழந்தவருக்கு உதவும் அமைப்பினை சேர்ந்தவரிடம் கேட்பது தான் தவறு... நீங்கள் சொல்வது போல், யாராவது ஒரு பெண் இதற்கு சரி எனலாம்...அது அவரின் இயலாமையில் இருந்து வெளி வர முயலும் முயற்சியாகத் தான் இருக்குமே ஒழிய, அவரின் ஆசைகளை அங்கீகரித்த ஒரு செயலாக இருக்காது.

ஊரைக்கூட்டியா அவர் இவ்வாறு கேட்டார்? இல்லையே! சாத்திரி அண்ணாவிடம் தனிப்பட தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது விருப்பத்தை கூறியுள்ளார். அவர் ஐம்பத்து ஐந்து வயது ஆளாக இல்லாமல் இருபத்து ஐந்து வயது ஆளாக காணப்பட்டிருப்பின் சாத்திரி அண்ணா இவ்வாறு எழுதுவாரா? இருபத்து ஐந்து வயது நபராக காணப்பட்டிருப்பின் யுத்தத்தினால் அவதிப்படுபவகளிற்கு உதவும் அமைப்பிடம் இவ்வாறு கேட்கும்போது அது தவறாகாதா? அச்சமயத்தில் இங்கு பலரும் பாராட்டு கூறுவார்களா? எல்லாவற்றையும் வித்தியாசமாக பார்க்கின்றேன் என்பதை நிரூபிக்க இவ்வாறு எழுதவில்லை. எழுதப்பட்டுள்ள கருத்துக்களை வாசித்து இங்குள்ள பலரும் கிணற்றுக்குள் இருந்து இன்னமும் வெளியில் வரவில்லை என்பதை பார்த்துவிட்டே எனது கருத்தையும் கூறினேன்.

அவரது தேவை: தனியாள், உதவிக்கு ஒருவரும் இல்லை, வெளிநாட்டில் வசதியாக உள்ளார், ஓர் வாழ்க்கைத்துணை தேவை. இந்தத் தேவையை தாயகத்தில் இக்கட்டான நிலமையில் உள்ள விருப்பம் உள்ள ஓர் விதவைப் பெண்ணிடம் எதிர்பார்க்கின்றார். இவர் மூலம் குறிப்பிட்ட பெண்ணிற்கும் ஓர் வாழ்க்கை கிடைக்கின்றது. ஒருவகையில் பார்த்தால் இது win win situation. வயது இடைவெளி என்கின்ற ஒரேயொரு காரணத்தினாலேயே குறிப்பிட்ட விடயத்தில் இங்கு பலர் சினம் அடைந்துள்ளனர் என்பது வெளிப்படை. இதற்காக பாக்குவெட்டி பற்றி பேசுவது நம்மவரின் பக்குவமற்ற தன்மையையே காட்டுகின்றது.

யாராவது ஒரு பெண் இதற்கு சரி எனலாம்...அது அவரின் இயலாமையில் இருந்து வெளி வர முயலும் முயற்சியாகத் தான் இருக்குமே ஒழிய, அவரின் ஆசைகளை அங்கீகரித்த ஒரு செயலாக இருக்காது.

ஏற்கனவே ஒரேயொரு தாரமாக ஒன்று, இரண்டு வயது இடைவெளிகளில் மணம் முடித்த பலகோடிப்பெண்களிடம் ஓர் கருத்துக்கணிப்பு வைத்தால் பலகோடி பெண்களிடம் இருந்து நீங்கள் இதே பதிலை எதிர்பார்க்கலாம். இதே பதிலை பலகோடி ஆண்களிடம் இருந்தும் எதிர்பார்க்கலாம்.

உண்மைதான். அத்துடன் இன்னுமொரு கோணத்தில் எழுதியது இந்த கூற்றுடன் முரண்படுவது போலுள்ளது" "சட்டத்திற்கு அப்பால் morality என ஒன்று உள்ளது. ஓர் ஊடகத்திற்கு இது பிரதானமானது. Ethicsஇற்கு அப்பால்பட்டு இப்படியான விளம்பரத்தை பணத்திற்காக ஒலிபரப்பு செய்ததை கருத்துச்சுதந்திரம் எனும் பிரிவில் வைத்து ஆலாத்தி காட்டமுடியாது." திரி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=76899&view=findpost&p=617555 "சட்டத்திற்கு அப்பால் morality என ஒன்று உள்ளது. ஓர் நேசக்கரம் கேட்கும் தமிழனுக்கு இது பிரதானமானது. Ethicsஇற்கு அப்பால்பட்டு இப்படியான கேள்வி கேட்டு தனி மனித சுதந்திரம் எனும் பிரிவில் வைத்து ஆலாத்தி காட்டமுடியாது."

நன்றாகத்தான் எனது கருத்துக்களை மேய்ந்து இருக்கின்றீர்கள். ஆனால், அதை நீங்கள் கூறிய context இனுள் வைத்து குறிப்பிட்ட எனது கருத்தை பார்த்தால் இப்படி எழுதமாட்டீர்கள். உங்களுக்கு morality, context இவை இரண்டும் பற்றி தெளிவில்லை என்பது இப்போது புரிகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தணி, விருப்பப் பட்டது தவறில்லை ஆனால் விலாசம் மாறி கதவைத் தட்டுகிறார் ! :D

உண்மைதான் சுவியண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

தனி முக்கியமான ஒன்றை யோசிக்க தவறி விட்டார்.அந்த வதில் ஒரு பெண் இங்கு வந்தாலும் தொடர்ந்து இவருடன் வாழ்வாரா என்று.கிட்டத்தட்ட சம வயதில் உள்ள பெண்ணுக்கு ஒருவர் வாழ்வு கொடுத்ததும் பெண் இங்கு வந்ததும் டாடா காட்டிய சம்பவமும் நடந்திருக்குது.மற்றும் படி இந்த வயது வித்தியாசத்தில் ளொள்ளு விடும் ஆண்களை எந்த இனத்திலும் தாராளமாக கானலாம்.இதுக்கு தீர்வு பாக்குவெட்டிதான் என்றால் முக்கால்வாசி ஆண்கள் முன்டமாக தான் திரிவினம்.இங்கு சாத்திரியின் குழப்பத்துக்கு நான் சொல்லக்கூடியது அந்த மனிசனுக்கு பிரச்சனையை பக்குவமாக விழங்கப்படுத்தி ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க முற்சிக்கலாம்.

ஒரு பச்சை குத்தியுள்ளேன்.

பாக்கு வெட்டியை தடை செய்ய வேண்டும்...

தட்டிய இடம் பிழை ......அவருடை ஆசை சரி.....தேடும் பெண்னின் வயது அவருக்கு குரு சந்திரயோகம் இருந்தால் கிடைக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.