Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் தாயகம் சென்ற போது

Featured Replies

தாயகத்தை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட 20 வருடங்களாகின்றது. நான் தாயகத்தை விட்டு வெளியேறும் போது அங்கு இருந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களில் பலர் உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் சிதறிப் போய் இருக்கிறார்கள். சிலர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாது. சிலர் உயிருடன் இல்லை. இப்பொழுது பலர் தாயகத்துக்கு சென்று வருகிறார்கள். ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்கள் ஒரு செவ்வியில் நல்லூர் திருவிழாவுக்கு ஐம்பதினாயிரம் வெளினாட்டவர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். தாயகத்துக்கு தற்பொழுது செல்பவர்களில் சிலருக்கு அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். பல வருடங்களாக அவர்களைப் பார்க்காததினால் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் செல்லுகிறார்கள். ஆனால் எனக்கு இப்பொழுது தாயகத்தில் நெருங்கிய உறவினர்கள் இல்லை. எனது சொந்த ஊரின் ஒரு பகுதி உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் தான் இருக்கிறது. 2009க்கு முன்பு நான் எனது பிறந்த மண்ணுக்கு போகவேண்டும் என்று விரும்பியிருந்தேன். ஆனால் தற்பொழுது ஏனோ அங்கு போகப் பிடிக்கவில்லை. இனிமேல் போவேனோ தெரியாது. தாயகத்தை விட்டு வெளியேறிய பின்பு ஒரே ஒரு முறை 2005ம் ஆண்டில் தாயகத்துக்கு சென்றிருக்கிறேன். அந்தக்காலத்தில் யூத்த நிறுத்தம் அமுலில் இருந்தது. அப்பொழுது எனது நெருங்கிய உறவினர்கள் அங்கு இருந்தார்கள். அப்பொழுது நான் சென்ற போது பார்த்தவை பற்றிய பதிவே இது.

  • Replies 65
  • Views 12.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எனக்கு யாழில் ஒரு பதிவு எழுதும் போது ஒவ்வொரு பதிவுக்கும் எனது அவதாரை மாற்றுவது வழக்கம். முதன் முதலாக நான் சென்ற வனுவாட்டு நாட்டைப் பற்றிய பதிவினை எழுதியிருந்தேன். அப்பொழுது எனது அவதார்.

p3070308.jpg

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12184

யாழில் எழுதிய வனுவாட்டு தொடரை நான் எனது வலைப்பதிவில் அத்தியாயம், அத்தியாயமாக இணைத்திருக்கிறேன்.

25 பகுதிகளாக இணைத்த தொடர்

பகுதி1 -அறிமுகம்

http://aravinthan29.blogspot.com/2006/07/vanuatu.html

பகுதி2 - போட் விலா (Port Vila)

http://aravinthan29.blogspot.com/2006/07/blog-post_27.html

பகுதி3 - பிரயாணம்

http://aravinthan29.blogspot.com/2008/07/vanuatu-3.html

பகுதி4 - இரகசியமான தோட்டம்

http://aravinthan29.blogspot.com/2008/07/vanuatu-4.html

பகுதி5 - எரகொர் கிராமம்(Erakor village)

http://aravinthan29.blogspot.com/2008/07/vanuatu-5-erakor-village.html

பகுதி6 மேல்(MELE ) நீர்வீழ்ச்சி

http://aravinthan29.blogspot.com/2008/07/vanuatu-6-male.html

பகுதி7 -அதிக வசதியுள்ள 4 நட்சத்திர விடுதிகள்

http://aravinthan29.blogspot.com/2008/07/vanuatu-7-le-lagon-resort.html

பகுதி8 -லீ லகுன் விடுதிகள்(Le Lagon Resort)

http://aravinthan29.blogspot.com/2008/08/8-le-lagon-resort.html

பகுதி9 -லீ லகுன் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

http://aravinthan29.blogspot.com/2008/08/8.html

பகுதி10 -கண்ணாடிப் படகில் பயணம்

http://aravinthan29.blogspot.com/2008/08/10.html

பகுதி11 -உலகில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நாடு

http://aravinthan29.blogspot.com/2008/08/11.html

பகுதி12 - நீர் வாழ் உயிரினங்கள் உள்ள இடம்

http://aravinthan29.blogspot.com/2008/08/12.html

பகுதி13 - Efate(இவெட்) தீவைச்சுற்றி ஒரு நாள் பயணம்

http://aravinthan29.blogspot.com/2008/08/13-efate.html

பகுதி14 -தீ மிதித்தல்(VETETAP FIREWALK)

http://aravinthan29.blogspot.com/2008/08/14-vetetap-firewalk.html

பகுதி15 -2ம் உலகப் போரில் வனு-அற்றில் இருந்த அமெரிக்கப்படைகள்

http://aravinthan29.blogspot.com/2008/08/15-2.html

பகுதி16 -Beachcomber

http://aravinthan29.blogspot.com/2008/09/16-beachcomber.html

பகுதி17 Eboule ஆற்றில் வள்ளத்தில் பயணம்

http://aravinthan29.blogspot.com/2008/09/17-eboule.html

பகுதி18 -அதிசயக்கல்

http://aravinthan29.blogspot.com/2008/09/18.html

பகுதி19 -இவெட் தீவின் கிழக்கு, தெற்குப் பகுதியில் உள்ள சில கிராமங்கள்

http://aravinthan29.blogspot.com/2008_10_01_archive.html

பகுதி20 - எரகோர் குடாவில் ஒரு படகுப்பயணம்

http://aravinthan29.blogspot.com/2008/11/20.html

பகுதி21 -லெலெபா(Lelepa)தீவில் பயணம்

http://aravinthan29.blogspot.com/2008/11/21-lelepa.html

பகுதி22 -குகைக்குள் பயணம்

http://aravinthan29.blogspot.com/2008/12/22.html

பகுதி23 -கடலினுள் இருந்த அமெரிக்கா விமானத்தின் பாகங்கள்

http://aravinthan29.blogspot.com/2008/12/23.html

பகுதி24 -சுற்றுலா

http://aravinthan29.blogspot.com/2009/01/24.html

பகுதி25 - எரகொர்(ERAKOR ) குடா

http://aravinthan29.blogspot.com/2009/08/25-erakor_31.html

---------------------------------

அடுத்ததாக எழுதிய பதிவு நியூசிலாந்து சுற்றுலா. எனது அவதார்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22480

p9280028c.jpg

யாழில் எழுதிய நியூசிலாந்து தொடரை நான் எனது வலைப்பதிவில் அத்தியாயம், அத்தியாயமாக இணைத்து வருகிறேன். இதுவரை இணைத்தவை.

இலவசமாக விமானத்தில் நீங்களும் பயணிக்கலாம்

http://aravinthan29.blogspot.com/2010/02/blog-post.html

நியூசிலாந்து 1 - பயணம் ஆரம்பம்

http://aravinthan29.blogspot.com/2010/05/1.html

நியூசிலாந்து 2 -ஆர்தர்பாசை(Arthur's Pass) நோக்கிப் பயணம்

http://aravinthan29.blogspot.com/2010/05/2-arthurs-pass.html

நியூசிலாந்து 3 -அழகிய மலைகள்

http://aravinthan29.blogspot.com/2010/05/3.html

நியூசிலாந்து 4 - ஆர்தர்பாஸ்(Arthur's Pass)

http://aravinthan29.blogspot.com/2010/06/4-arthurs-pass.html

நியூசிலாந்து 5 - ஆர்தர்பாசில் இருந்து புனாகைகி வரை

http://aravinthan29.blogspot.com/2010/06/5.html

நியூசிலாந்து 6 - புனாகைகி பாறைகள்(Punakaiki Pancake Rocks)

http://aravinthan29.blogspot.com/2010/07/6-punakaiki-pancake-rocks.html

நியூசிலாந்து 7 -புராதன நகரம்(Shanty Town)

http://aravinthan29.blogspot.com/2010/07/7-shanty-town_06.html

நியூசிலாந்து 8 -கொகிரிகா(Hokitika)

http://aravinthan29.blogspot.com/2010/07/8-hokitika.html

நியூசிலாந்து 9 -பெரிய பனிக்கட்டி நாடு

http://aravinthan29.blogspot.com/2010/07/9.html

நியூசிலாந்து 10 - Fox Glacier (வொக்ஸ் கிளேசியர்)

http://aravinthan29.blogspot.com/2010/07/10-fox-glacier.html

நியூசிலாந்து 11 - உலங்குவானூர்தியில் பயணம்

http://aravinthan29.blogspot.com/2010/07/11.html

நியூசிலாந்து 12 -உலங்குவானூர்தியில் இருந்து நான் பார்த்த கிளேசியர்

http://aravinthan29.blogspot.com/2010/07/12.html

நியூசிலாந்து 13 - வொக்ஸ்கிளேசியர் அடிவாரத்தை நோக்கி நடைப்பயணம்

http://aravinthan29.blogspot.com/2010/07/13.html

நியூசிலாந்து 14 -வொக்ஸ் கிளேசியரில் இருந்து காஸ்ட்(Haast) வரை

http://aravinthan29.blogspot.com/2010/08/14-haast.html

நியூசிலாந்து 15 -வானகா ஏரி( Wanaka Lake)

http://aravinthan29.blogspot.com/2010/08/15-wanaka-lake.html

நியூசிலாந்து 16 -Hawea ஏரி

http://aravinthan29.blogspot.com/2010/08/16-hawea.html

நியூசிலாந்து 17 -Puzzling World (குழப்பமான உலகம்)

http://aravinthan29.blogspot.com/2010/08/17-puzzling-world.html

நியூசிலாந்து 18- வானகா(Wanaka)

http://aravinthan29.blogspot.com/2010/08/18-wanaka.html

நியூசிலாந்து 19- வானகாவில் இருந்து குயின்ஸ்டவுன் வரை

http://aravinthan29.blogspot.com/2010/08/19.html

நியூசிலாந்து 20- மெளரி(Maori) நடனம்

http://aravinthan29.blogspot.com/2010/08/20-maori.html

நியூசிலாந்து 21- Kawarau Jetல் படகுப்பயணம்

http://aravinthan29.blogspot.com/2010/08/21-kawarau-jet.html

நியூசிலாந்து 22- படகுப் பயணம்(Shot over jet)

http://aravinthan29.blogspot.com/2010/09/22-shot-over-jet.html

நியூசிலாந்து 23 - குயின்ஸ்டவுனில் இருந்து ரி ஆனா வரை

http://aravinthan29.blogspot.com/2010/09/23.html

நியூசிலாந்து 24 - ரி ஆனா ஒளிரும் புழுக்களின் குகை(Te-anau Glow worm cave)

http://aravinthan29.blogspot.com/2010/09/24-te-anau-glow-worm-cave.html

நியூசிலாந்து 25 - ரி ஆனாவில் இருந்து மில்வேட் சவுண்ட் வரை

http://aravinthan29.blogspot.com/2010/09/25.html

நியூசிலாந்து 26 - உலகப் புகழ் பெற்ற மில்வேட் சவுண்டில் கப்பல் பயணம் ஆரம்பம்

http://aravinthan29.blogspot.com/2010/09/26.html

நியூசிலாந்து 27 - மில்வேட் சவுண்ட்(Milford Sound) கப்பல் பயணத்தில் பார்த்த அழகிய இயற்கைக் காட்சிகள்

http://aravinthan29.blogspot.com/2010/10/27-milford-sound.html

நியூசிலாந்து 28 -மில்வேட் சவுண்ட் underwater observatory

http://aravinthan29.blogspot.com/2010/10/28-underwater-observatory.html

நியூசிலாந்து 29 - மில்வேட் சவுண்டில் இருந்து குரொம்வெல் வரை

http://aravinthan29.blogspot.com/2010/10/29.html

நியூசிலாந்து 30 - அழகிய லின்டிஸ் பாஸ் (Lindis Pass)

http://aravinthan29.blogspot.com/2010/11/30-lindis-pass.html

நியூசிலாந்து 31 -டுவைசல்(Twizel) சல்மொன்(Salmon) மீன் பண்ணை

http://aravinthan29.blogspot.com/2010/11/31.html

நியூசிலாந்து 32 -டுவைசல்(Twizel) நகரத்தில் எனக்குக் கிடைத்த ஏமாற்றம்

http://aravinthan29.blogspot.com/2010/11/32-twizel.html

நியூசிலாந்து 33 -குக் மலை(Mount Cook)

http://aravinthan29.blogspot.com/2010/11/33-mount-cook.html

நியூசிலாந்து 34 -டுவைசலில் இருந்து 'Tekapo' ஏரிவரை

http://aravinthan29.blogspot.com/2010/11/34-tekapo.html

நியூசிலாந்து 35 -'Tekapo' ஏரியில் இருந்து கிறைஸ் சேர்ச் வரை

http://aravinthan29.blogspot.com/2010/12/35.html

நியூசிலாந்து 36 - அந்தாட்டிக்கா நிலையம்(Antarctic Centre )

http://aravinthan29.blogspot.com/2011/05/36-antarctic-centre.html

நியூசிலாந்து 37 -கிறைஸ்சேர்ச் Gondola

http://aravinthan29.blogspot.com/2011/06/37-gondola.html

--------------------------

கடைசியாக எழுதிய பதிவு

அவுஸ்திரெலியாவில் சுற்றுலா - பகுதி 1 பிரிஸ்பனும், சூழவுள்ள இடங்களும்

எனது அவதார்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=42452

pc280134.jpg

இதே போல தாயக அனுபவப் பதிவுக்கு புதிய அவதாருடன் வருகிறேன்.

Edited by Aravinthan

யாழ் தொடரை எழுதுங்கோ ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.....

  • 4 months later...
  • தொடங்கியவர்

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் கொழும்பினை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் எனது இருக்கைக்கு முன்பாக இருந்த தொலைக்காட்சியில் இருந்த கணனி விளையாட்டான ஆடு புலி ஆட்டத்தில் நான் மூழ்கி இருந்தாலும் இடையிடையே தாய் மண்ணை நீண்ட காலத்துக்குப் பின்பு பார்க்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சி இருந்து கொண்டே இருந்தது. 90களில் வானத்தில் பறந்த விமானங்களில் இருந்து விழும் குண்டுகளுக்குப் பயந்து ஓடி ஒளித்த காலங்களும் ஞாபகத்துக்கு வந்து போனது. கணனியில் ஆடு புலி ஆட்டத்தினைத் தமிழர்கள் தான் கண்டுபிடித்ததாக செய்தி இருந்தது. அதில் ஆட்டினை நான் தெரிவு செய்தால் புலிகளை இலகுவாக அடைக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் புலியினைத் தெரிவு செய்தால் ஆடுகளை இல்லாமல் செய்வது கடினமாக இருந்தது. ஆ380 விமானம் வாராத காலம் அது. ஆ380 விமானங்கள் வந்தபின்பு 2008ல் இலண்டனிற்கு சிங்கப்பூர் எயர்லைன்சில் பறந்தபோது ஆடு புலி ஆட்டத்தினைக் காணமுடியவிலை. ஆடு புலி ஆட்டத்தில் விளையாடியதினால் நேரம் போனதே தெரியவில்லை. ஒருவாறு நடு இரவு போல விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தினை அடைந்தது. இந்த விமான நிலையத்தில் இருந்து பறந்த பல விமானங்களினால் உயிர் இழந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் அடங்குவார்கள். இதனால் தங்களது உயிர்களைத் தியாகம் செய்து விமானங்களை அழித்தார்கள் சிலர். அவர்களைப் பயங்கரவாதிகள் என்றது உலகம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அரவிந்தன். 'கற்கரைப் பிள்ளையாரையும்' மறக்காம இந்த முறை காட்ட வேணும்.

  • தொடங்கியவர்

கட்டு நாயக்கா விமான நிலையத்தில் இருந்து கொழும்பு செல்ல ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நேரம் எடுக்கும். உறவினர்கள் வாடகைக்கு அமர்த்திய வாகனத்தில் கொழும்பினை நோக்கிப் பயணிக்கிறேன். கொழும்பில் சிங்கள சிறி பொறிக்கப்பட்ட வாகனங்களைக் காண்பது குறைவாக இருந்தது. ரணில் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை எடுத்து விட்டார் என்று உறவினர் சொன்னார். வாகனத்தில் செல்லும் போது வெலிக்கடைச் சிறைச்சாலையினை பார்த்தேன். அச்சிறைச்சாலையின் மதிலில் இங்குள்ளவர்களும் உங்களைப் போன்றவர்கள், மனிதர்கள் என்று பொருள்படக் கூடிய வாசகத்தினைக் கண்டேன். ஆனால் 83ல் அங்கு இருந்தவர்களில் சிலரை சித்திரவாதை செய்து கொல்லும் போது அவர்களும் மனிதர்களாக அங்குள்ள அதிகாரிகளுக்கும், அப்பொழுது ஆட்சி செய்த அரசுக்கும் தெரியவில்லை. இப்பொழுதும் பலர் அங்கு எதுவித குற்றமிழைக்காமலும், சித்திரவாதைகள் அனுபவித்துக் கொண்டு பலவருடங்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு விடிவு எப்பொழுது கிடைக்கப் போகின்றதோ???.

3 கிழமைக்கும் குறைவான நாட்கள் இலங்கையில் தங்கத்தான் நான் சென்றிருந்தேன். கொழும்பில் இருக்கும் மிகவும் நெருங்கிய உறவினர்களைப் பார்ப்பதற்காகவும், இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளைப் பார்ப்பதற்காகவும் சென்றிருந்தேன். உறவினர்களும் யாழ் மண்ணை விட்டு வெளியேறியபின்பு யாழ் மண்ணுக்கு 15 வருடங்களாகச் செல்லவில்லை. அவர்களும் என்னுடன் வடகிழக்குப் பகுதிகளைப் பார்க்க விரும்பினார்கள். ஆனால் கொழும்பில் வேலை பார்ப்பதினால் சில நாட்கள் வேலையில் விடுமுறை கேட்டு என்னுடன் வட கிழக்கினைப் பார்க்க விரும்பினார்கள். இரவு உணவு அருந்தியபின்பு படுக்கச் சென்றேன். மறு நாள் அதிகாலையில் சிட்னியில் இருந்து நண்பன் ஒருவர் தொலைபேசியில் கூப்பிடுகிறான் என்று உறவினர்கள் சொன்னார்கள். இந்த நண்பன் சிட்னியில் நான் இருக்கும் போது வெள்ளி சனி இரவுகளில் வானொலியில் போகும் கருத்துக்கள நிகழ்ச்சிகளில் அரசியல் விடயங்கள் கதைக்கும் போது தொலைபேசியில் அடித்து கேட்கிறயா என்று அடிக்கடி தொந்தரவு தாரவர். சிகரம் தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சி போகிறது, பார்க்கிறயா என்று கேட்பவர். நான் ஏற்கனவே புதினம், யாழ் இணையத்தில் செய்திகளை படித்ததினால், ஏற்கனவே உந்த அரசியல் செய்தியை படித்திருக்கிறேன் என்று சொன்னாலும் விட மாட்டான். இரவில் தூக்கத்தில் இருக்கும் போதும் தொலைபேசியில் கூப்பிட்டு அங்கே அவரைச் சுட்டுப் போட்டாங்கள், அங்கே குண்டு வெடித்தது என்று சொல்லுவான். இலங்கைக்கு நான் சென்ற போது இலங்கை அமைதியாக இருந்தது. சுனாமி அனர்ந்தம் ஏற்பட்டு சில மாதங்கள் தான் ஆகிவிட்டது. இவன் ஏன் அதிகாலையில் தொந்தரவு தாரன் என்று நினைத்துக் கொண்டு தொலைபேசியில் வணக்கம் என்றேன். டே இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயா. கெளசல்யனைச் சுட்டுப் போட்டங்கள் என்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அமைதியாக இருந்தது. ................................. கெளசல்யனைச் சுட்டுப் போட்டங்கள் என்றான்.

அப்பு பார்தீர்களா அப்போ அமைதியாக இருக்கும் பொழுதும் சுட்டார்கள்

இப்பவும் அமைதியாக இருக்கு என்கிறார்கள் ஆனால் சுடுகிறார்கள்....

தொடருங்கள் உங்கள் பயணத்தை

அமைதி என்றால் என்ன?

Edited by putthan

தொடர்ந்து எழுதுங்கள் அரவிந்தன்.

வனுஅற்று கட்டுரைக்கு நீங்கள் தந்த இணைப்புகள் எனக்கு வேலை செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் அரவிந்தன் வாசிக்க ஆவலாய் உள்ளோம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள். வாசிக்க ஆவலாய் இருக்கிறோம்.

  • தொடங்கியவர்

தொடர்ந்து எழுதுங்கள் அரவிந்தன்.

வனுஅற்று கட்டுரைக்கு நீங்கள் தந்த இணைப்புகள் எனக்கு வேலை செய்யவில்லை.

நன்றிகள் இணையவன். சரி செய்து விட்டேன். மீண்டும் நன்றிகள்.

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்த ஜீல், புத்தன், ரதி, கறுப்பி, பூங்காவூரான் ஆகியோருக்கும் நன்றிகள். கற்கரைப் பிள்ளையார் கட்டாயம் வருவார் பூங்காவூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து பயணம் வாசித்தேன். மிக சுவாரசியமாக இருந்தது. இலங்கை பயணம் அப்படி இருக்காவிட்டாலும் பல வருடங்களில் பல மாற்றங்கள் உங்களை திகிலடைய வைத்திருக்கலாம்.வாசிக்க ஆவலாக உள்ளேன்.

கற்பனைக் கதைகளை ஒரு சிலவற்றை தவிர எல்லாவற்றையும் வாசிக்கும் பொறுமை எனக்கு இல்லை, ஆனால் உண்மையான அனுபவம் என்றால் நேரம் எடுத்தாலும் நிச்சயம் வாசிப்பேன். எழுதுங்கள் அரவிந்தன் வாசிக்க ஆவலாக உள்ளேன். :)

எனக்கும் நான் சென்று வந்த நாடுகளைப் பற்றியும், அனுபவத்தைப் பற்றியும் எழுத வேணும் என்று ஆசை உண்டு, ஆனால் யாழில் உள்ள எழுத்தாளர்களைப் பார்க்கும் போது அவர்களின் கால் தூசுக்கும் நான் இல்லை என்று எனக்கே தெரிந்ததால் தவிர்த்துள்ளேன்.

  • 1 month later...
  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த கெளசல்யன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு உட்பட ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபைக்கு பொதுச் செயலாளராக இருந்த கோபி அன்னன் இக்கொலைக்கு கண்டனம் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் பெரும் பதட்டம். அங்கு பாதுகாப்பில்லை என்று செய்திகள் வரத் தொடங்கியது. இதனால் கிழக்கு மாகாணத்துக்குச் செல்லும் முடிவினைக் கைவிட்டேன். வடமாகாணத்துக்கு மட்டும் தான் செல்வோம் என முடிவெடுத்தேன்.

இதற்கிடையில் என்னுடன் பாடசாலையில் படித்த நண்பர்களைப் பார்க்கலாம் என விரும்பினேன். இலங்கையினை விட்டு வெளினாட்டுக்கு வந்தபின்பு, என்னுடன் படித்த நண்பர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது. இருவரை இலண்டனில் சந்தித்திருந்தேன். அதில் ஒருவர் ஆதவன். வகுப்பில் யாராவது பாடும் போது நன்றாக மேளம் அடிப்பான். இலண்டனில் நடைபெற்ற தமிழர் விளையாட்டுப் போட்டியில் இலங்கையினை விட்டு வெளியேறியபின்பு அவனை முதன் முதலாகப் பார்த்தேன். சிலர் ஆட, சிலர் பாட, அதற்கு ஏற்ப மேளம் அடித்துக் கொண்டிருந்தான். இலண்டனில் சந்தித்த மற்றைய நண்பன் இந்திரன். எனது ஊர்க்காரன். நான் இலங்கை செல்ல முன்பு சில நாட்களுக்கு முன்னாக இலங்கைக்கு சென்று திரும்பியிருந்தான். என்னுடன் படித்த நண்பர்கள் குமாரன்,சங்கர் ஆகியோரை இலங்கையில் சந்தித்திருந்தான். அவர்களின் தொலைபேசியை எனக்குத் தந்திருந்தான். இருவரையும் தொடர்பு கொண்டேன். சந்திப்பதாகச் சொன்னார்கள்.

kuppilan005.jpg

மறு நாள் நான் இருந்த வீட்டின் வாசற்கதவு தட்ட கதவைத் திறந்தேன். தட்டியவரைப் பார்த்தபோது யாரோ சிங்களவன் மாறிக் கதவைத் தட்டி விட்டனோ என்று எனக்குத் தோன்றியது. நான் யார் என்று தெரியுமா என்று கேட்டான். ஆளைப் பார்த்தால் அடையாளம் தெரியவில்லை. தெரியாது என்றேன். நான் தான் குமாரன் என்று சொன்னான். 15 வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். ஆளின் அடையாளம் தெரியவில்லை. தான் பதுளையில் அரசாங்க உத்தியோகம் பார்க்கிறேன் என்று சொல்லி எனக்கு தேயிலைப் பக்கேற்றுக்களை அன்பளிப்பாகத் தந்தான். பதுளைக்கு கட்டாயம் வரச் சொன்னான். வந்தால் தான் தங்கியிருக்கும் விடுதியில் தங்கலாம் என்று சொன்னான். பதுளைக்கு 3,4 மணித்தியாலத்தில் செல்லலாம். கிழக்கு மாகாணத்துக்கு செல்லமுடியாததினால் இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு செல்லலாம் என முடிவெடுத்தேன். மறு நாள் என்னுடன் படித்த சங்கர் என்னைச் சந்தித்தார். மற்றைய நண்பர்களைப் பற்றி விசாரித்தேன். சிலர் கனடாவில் இருக்கிறார்கள். சிலர் ஐரோப்பாவில் இருக்கிறார்கள். சிலர் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். சிலர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது என்றும் சொன்னான். எங்களுடன் படித்த சிவா என்ற நண்பன் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகச் சொன்னான். படிக்கிற காலத்தில் சிவா சரியாக குழப்படி. ஆசிரியர்கள் படிப்பிக்கும் போது குழப்பம் விளைவிப்பான். அவனால் நாங்கள் பலமுறை ஆசிரியர்களிடம் அடி வாங்கி இருக்கிறோம். ஆசிரியர்களைக் குழப்பும் சிவா பன்னாலையில் ஒரு பாடசாலையில் ஆசிரியராக வேலை பார்ப்பதாகச் சங்கர் சொன்னார்.

kuppilan172.jpg

  • கருத்துக்கள உறவுகள்

படிச்ச நண்பிகளை சந்திக்கவில்லையோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்துக் கொண்டிக்கின்றேன் , வாழ்த்துகள் அரவிந்தன்! :)

தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகின்றது! தொடருங்கள் அரவிந்தன்!!!

...

படிக்கிற காலத்தில் சிவா சரியாக குழப்படி. ஆசிரியர்கள் படிப்பிக்கும் போது குழப்பம் விளைவிப்பான். அவனால் நாங்கள் பலமுறை ஆசிரியர்களிடம் அடி வாங்கி இருக்கிறோம். ஆசிரியர்களைக் குழப்பும் சிவா பன்னாலையில் ஒரு பாடசாலையில் ஆசிரியராக வேலை பார்ப்பதாகச் சங்கர் சொன்னார்.

...

:D^_^ வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பயணக் கட்டுரை என்றால், நான் மிகவும் விரும்பி வாசிப்பேன்.

அதிலும் ஊர்ப் பயணம் என்றால், சொல்லத் தேவையில்லை.

அரவிந்தனின், அனுபவங்களில் நாமும் ஒருசிலவற்றையாவது அனுபவித்திருப்போம், என்னும் போது.... கதையை வாசிக்க மேலும் ஆவலாக உள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் உங்கள் அனுபவத்தை. :)

தொடருங்கள் அரவிந்தன். வாசிக்க ஆவலாகவுள்ளேன்.

நீங்கள் போட்ட படத்தில் இருப்பது வெள்ளவத்தை CDI flats போலும்!

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க நன்றாக இருக்கிறது. நீங்கள் இடையிடையே படங்களைப் போட்டு எழுதிச்செல்லும் பாணி அழகு..! தொடருங்கள்..! :D

  • தொடங்கியவர்

கற்பனைக் கதைகளை ஒரு சிலவற்றை தவிர எல்லாவற்றையும் வாசிக்கும் பொறுமை எனக்கு இல்லை, ஆனால் உண்மையான அனுபவம் என்றால் நேரம் எடுத்தாலும் நிச்சயம் வாசிப்பேன். எழுதுங்கள் அரவிந்தன் வாசிக்க ஆவலாக உள்ளேன். :)

எனக்கும் நான் சென்று வந்த நாடுகளைப் பற்றியும், அனுபவத்தைப் பற்றியும் எழுத வேணும் என்று ஆசை உண்டு, ஆனால் யாழில் உள்ள எழுத்தாளர்களைப் பார்க்கும் போது அவர்களின் கால் தூசுக்கும் நான் இல்லை என்று எனக்கே தெரிந்ததால் தவிர்த்துள்ளேன்.

உங்களின் அனுபவங்களைச் சொல்லுங்கள்.

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்த நுணாவிலான், சுவி,குட்டி, பூங்காவூரான், தமிழ்சிறி, சஜீவன்,இசைக்கலைஞன், புத்தன், Eas ஆகியோருக்கு நன்றிகள்

தொடருங்கள் அரவிந்தன். வாசிக்க ஆவலாகவுள்ளேன்.

நீங்கள் போட்ட படத்தில் இருப்பது வெள்ளவத்தை CDI flats போலும்!

வெள்ளவத்தையில் எடுக்கப்பட்ட படங்கள் தான் அவை.

படிச்ச நண்பிகளை சந்திக்கவில்லையோ? :D

என்னுடன் படித்த ஆண் நண்பர்கள் பிற்காலத்தில் காதலித்து எங்களுடன் படித்த பெண்களைத் திருமணம் செய்திருக்கிறார்கள். படிக்கும் போது அவர்களுக்கு காதல் இருந்ததாகத் தெரியவில்லை. வேறு என்னுடன் படித்த பெண்களின் சிலரின் வாழ்க்கையில் எதிர்ப்பாராத திருப்பங்கள் நடைபெற்றிருக்கின்றது. அவற்றை இங்கு விபரிக்க விரும்பவில்லை.

  • தொடங்கியவர்

பதுளையில் இருக்கும் நண்பன் பதுளைக்கு வரச்சொன்னான். கொழும்பில் இருந்த உறவினர்களும் என்னுடன் பயணிக்க விரும்பியதினால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (உறவினர்களில் ஒருவர் கொழும்பில் வேலை பார்ப்பதினால்) பதுளைக்குச் செல்ல விரும்பினேன். நாங்கள் பதுளைக்கு செல்லும் போது நண்பன் வேலை அழுவலாக கொழும்புக்கு வந்துவிட்டான். பேசாமல் வீட்டிலே இருக்கலாம் என்று தான் நான் விரும்பியிருந்தேன். ஆனால் உறவினர்கள் விரும்பியதினால் கண்டி, நுவரெலியா வரை சென்று திரும்புவோம் என முடிவெடுத்தோம். தெரிந்த தமிழர் ஒருவரின் வாகனத்தில் மத்திய மாகாணத்தை நோக்கிப் பயணித்தோம். வெளினாடுகளில் இருந்து இலங்கைக்குச் செல்பவர்கள் குறிப்பாக தமிழர்கள் கொழும்பில் புகைப்படங்கள் எடுக்கும் போது எடுக்கப்பட்ட இடம் கேந்திர முக்கியமான இடமாக இருந்தால் அப்பொழுது கைது செய்யப்பட்டிருந்தாக செய்திகளில் படித்திருக்கிறேன். இதனால் புகைப்படக் கருவியினால் கொழும்பினைப் படம் பிடிக்கவில்லை.

கொழும்பில் இருந்து கம்பகா,கேகாலை வழியாகக் கண்டிக்குச் செல்லலாம். கம்பகாவைக் கடந்து கண்டியை நோக்கிச் செல்லும் போது விதிகளின் இருபக்கமும் சில குடில்களைக் கண்டேன். அங்கே பழங்கள், ஒலையினால் வேயப்பட்ட பொருட்கள் இருந்தன. வேறு சில குடில்களில் பழங்கள், பொருட்கள் இல்லை. ஆனால் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் இளம் பெண்கள் ஒவ்வொரு குடிசைகளிலும் தனியாக இருந்தார்கள். சில மணித்தியாலப் பயண முடிவில் கண்டி நகரை அடைந்தேன். கண்டி நகர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகர். கண்டியினை ஆண்ட கடைசி அரசன் கீர்த்தி இராஜசிங்கன் என்ற தமிழன். நாடு பிடிக்கவும், மதம் பரப்பவும் வந்த வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்தான். கண்டியில் தான் தலதா மாளிகை இருக்கின்றது. புத்தரின் பல்லும் அங்கே இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

kuppilan187.jpg

கண்டியில் தான் அஸ்கிறிய மல்வத்த பீடங்களும் இருக்கின்றன. இப்பீடங்களினைச் சேர்ந்த பிக்குகள் தலதா மாளிகையில் பூசை செய்கிறார்கள். தலதா மாளிகைக்கு சென்ற போது நான் அரைக்காற்சட்டை அணிந்திருந்தேன். இதனால் என்னை தலதா மாளிகைக்கு செல்ல அங்கிருந்தோர் தடுத்தார்கள். அவர்கள் வைத்திருக்கும் சாரத்தினை கட்டினால் அனுமதிப்பதாகவும், சாரம் தாரதற்கு காசு கேட்டார்கள். தலதா மாளிகைக்கு செல்பவர்கள் முழுக்காட்சட்டை அல்லது சாரம் அணியவேண்டும். வாகனத்தில் இருந்த முழுக் காட்சட்டையை அணிந்து தலதா மாளிகைக்குச் சென்றேன்.

kuppilan188.jpg

kuppilan190.jpg

Edited by Aravinthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.