Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தினம் சார்ந்து ஒரு உணர்வுப் பகிர்வு

Featured Replies

நேற்று ஒரு அம்மாவின் உரையினைக் காணொளியில் பார்த்தேன். அறுபதைத் தாண்டிய வயது, குட்டையான, சற்றுப் பருமனான, பரந்த வட்ட முகமுடைய, சேலைக்கு மேல் குளிராடை போட்ட, கண்ணாடி அணிந்த ஒரு அம்மாவின் உரை அது. இவ்வாண்டின் மாவீரர் வாரம் சார்ந்து ஒழுங்கமைந்த ஒரு நிகழ்வின் காணொளி. அந்த அம்மாவின் மகன் மாவீரர். பயிற்சிப் பாசறையில் குண்டொன்று வெடிக்கப்போகின்றது என்று தெரிந்த மாத்திரத்தில், தான் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அறுபது பயிலுனர்களைக்காப்பதற்காகத் தான் குண்டின்மீது படுத்து உயிர்க்கொடை செய்த மகன் பற்றி அந்த அம்மா தன் பரந்த முகத்தில் கண்கள் நடமிடக் கூறினார். எனக்குள் பீறிட்ட உணர்வு மேலீடு காரணமாய் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாது போனதால் அம்மாவின் மிகுதி உரை எனது மூளையில் பதியவில்லை.

எனது உணர்வு மேலீடு குண்டின் மீது படுத்து உயிர்துறந்த வீரன் சார்ந்தது அல்ல. அவனது கதை கூறிய அவனின் தாயார் சார்ந்தது. டொபீடோ வெடிக்காததனால் முட்கம்பி வேலி மீது தான் படுத்து தன்மேல் ஏறிப் படையணி செல்லப் பணித்த தியாகம், கடைசிக் குண்டோடு ராங்கிக்குள் பாய்ந்து படைநகர்வு தடுத்த தியாகம், தன்னைச் சுட்டுவிட்டு ஓடும் படி தோழனைப் பணித்த தியாகம், இராணுவ வைத்தியசாலையில் தான் படுத்திருக்கிறேன் என்று நினைவு திரும்பிய மாததிரத்தில் கட்டிற் சட்டத்தில் தன்தலைமோதி மரித்து இரகசியம் காத்த தியாகம், பன்னிரு நாள் நீரும் இன்றி மரித்த தியாகம் என்று தியாகங்களின் வகையும் எண்ணிக்கையும் நிறைந்த எங்கள் வரலாற்றில் தியாகங்களிற்கு நாங்கள் புதியவர்கள் அல்ல. நாங்கள் தியாகம் செய்யாத வேளையிலும் எங்களிற்காகத் தியாகம் செய்தவர்கள் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள் நாங்கள். அந்த வகையில் இந்த அம்மாவின் மகனின் தியாகமும் நான் முன்னரே செவியுற்ற வகையமைந்த தியாகமாகவே இருந்தது. தியாகங்கள் பற்றி எழுதுவதற்காகவே பலர் வாழும் சமூகத்தில் வாழ்வதால் மேற்படி மகனின் தியாகம் என்னை உணர்வு மேலிடச் செய்து எனது கண்களைக் குளமாக்கும் வலுவினை தன்னுள் ஒளித்துத் தான் வைத்திருந்தது. ஆனால், அந்த அம்மாவின் உரை அரிதாகப் பேசப்படும் உணர்வினைக் காட்டியதால் உலுக்கிப்போட்டது.

படைகள் நகர்ந்து கொண்டிருக்கையில், வெற்றிச் செய்திகள் குவிந்த வண்ணம் இருக்கையில் தியாகச் செய்திகளை உசுப்பேத்தும் பொருட்களாய்ப் பாவித்தவர்கள் நாங்கள். அத்தகைய வெற்றித் தருணங்களில் தியாகச் செய்திகள் வந்த மாத்திரத்தில் தங்கச் சங்கிலிகள், கரவளைகள் பணப்பைகள் என மேடை நோக்கிய எறிந்த வழமை எங்களுடையது. ஓரு வேளை இந்த அம்மாவும் முன்னர் அவ்வாறான தருணங்களில் பேசியிருப்பாரோ என்னமோ, நேற்றைய தினம் அவரின் முகத்தில் துடித்த கண்கள் எனக்குக் கூறிய மேலதிக சேதியில் ஒரு தேடல் தெரிந்ததது. அதாவது தான் வழமையாகக் கூறும் கதை கேட்போரில் ஏற்படுத்தத் தவறியிருந்த வழமையான உணர்வலைகளை அந்த அம்மா தேடியது எனக்குத் தெரிந்து. தனது சித்தம் குலைந்ததா? தான் என்ன பேசிக்கொண்டிருக்கின்றேன் என்று தான் நினைப்பது தான் உண்மையில் தனது வாய் வளி வெளிவருகின்றனவா? இல்லை எதையோ பேசி வேறு எதையோ தான் கேட்டுக் கொண்டிருக்கின்றேனா? "என் சனமே என் இனமே என் பேச்சு உன்னை அடைகிறதா?" என்று அந்தத் தாயின் கண்கள் தேடிய தேடல் என்னை உலுப்பிப் போட்டது.

தன் மகனின் இறப்பை வைத்து இருப்பு நடத்தும் தாய் அவள் என்று நான் கூறுவதாய் வம்பிற்கும் நினைத்து விடாதீர்கள். அன்னையின் தேடலின் அர்த்தம் எனக்கு நன்கு புரிகிறது. தன் கோடானு கோடி அணுக்கள் எல்லாம் உதிரம் சிந்தி நொந்து கிடக்கக் காரணமான தன் மகனின் மரணத்தில் அர்த்தம் இருந்ததாய் அவ்வன்னையினை நம்பவைத்து அவளின் இரத்தப்போக்கை நாங்கள் கட்டி வைத்திருந்தோம். படிய மறுத்து வடிந்து கொண்டிருக்கும் அவள் உதிரப்போக்கு நம் முகங்கள் கொடுத்த உணர்வுப் பெருக்கில் சற்றுக் கட்டுண்டு கிடந்திருக்கும். இன்று நிலைமை வேறு. இன்று எமது சிந்தை வேறு. ஆனால் அந்த அம்மா அவளிற்குத் தெரிந்த ஒரே கதையினை எங்களிற்கு இந்த மாவீரர் தினத்திற்கும் சொல்லுகிறாள். எங்கள் முகங்களால் அவள் தேடும் உணர்வினைக் காட்டமுடியாது போகிறது. ஐஸ்கிறீமை நிலத்தில் போட்ட ஐந்து வயதுக் குழந்தை போல் அந்தக் குஞ்சுக் கிழவியின் முகத்தில் குழப்ப ரேகைகள். என்சனமே என் இனமே என்ர பிள்ளை கதை புரியலையா என்று கூடக் கேட்கத் தெரியாத தாய் தன் வாயினைப் பரிசோதிக்கிறாள். "என் வாய் விழும் வார்த்தைகளும் செவி செல்லும் வார்த்தைகளும் ஒன்று தானா இல்லை என் சித்தமே நீ பேதலித்துத் தான் போனாயா" எனப் பார்த்துத் தேடிய தாயின் முகம் என்னை உலுப்பிப் போட்டத…

அந்தத் தாய் தேடியது நான் புரிந்ததைத் தானா, அவரது முகபாவம் சொன்ன சேதி நான் விளங்கியது தானா என்பது ஒருவேளை விவாதத்திற்குரியதாய் இருக்கலாம். எனது புரிதல் பிளையாக இரக்கலாம். எனக்குள் தோன்றிய உணர்வினைத் தோன்றியபடி பதிந்துள்ளேன். அவ்வளவு தான்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வு களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ...........

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் உங்கள் உணர்வை ஒத்ததான உணர்வை வௌ;வேறு சந்தர்ப்பங்களில் நானும் உணர்ந்திருக்கிறேன். என் அருகாமையில் நிற்பவர்களிடம் அவ்வுணர்வின் தாக்கத்தைப் பேசவோ அல்லது உணர்த்தவோ முடியாமல் ஊமையாகி இருக்கிறேன். ஏன் எனக்கு மட்டும் அதீதமான ஆழமான புரிதல் ஏற்படுகிறதா அல்லது நான் கவிதைகளை எழுதுவதால் அவ்வுணர்வு என் கற்பனை சார்ந்து எழுகிறதா என்றெல்லாம் குழம்பியிருக்கிறேன். பல மாவீரர்களின் பெற்றோரைச் சந்தித்திருக்கிறேன். என்னை மானசீகமாக ஆரத்தழுவிக்கொண்டு என்னிடமான அவர்களின் தேடலை, அந்த பார்வைக்குள் வைத்து வாய்கள் பேசாத ஏதோ ஒன்றை மனதால் பேசுகிறார்கள். அவர்களின் பார்வைக்கு ஒப்பான உணர்வை இதுவரை மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் என்னால் கவிதையால் உணர்த்தமுடியாது. அந்தத் தேடலின் ஒரு வீதத்தைக்கூட என்னால் திருப்திப்படுத்த முடியுமா? என்னிடம் அதற்கான பதில் இல்லை. தலைகுனிகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் பேசி....

இறுதியில் அவர்களது தியாகத்துக்கு அர்த்தமில்லாமல் செய்து விடுவோமாக....

மாவீரர்களின் தியாகம் மகாத்தானது.அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

நீங்கள் இன்று அந்ததாயின் முகத்தில் கண்ட அதே ஏக்கத்தை ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் கல்லறையில் இருந்து அழும் தாய்மார்களின் முகத்திலும் காணலாம்.என்னதான் பெரிய மாவீரனாகினாலும் பெரிய சாதனை படைத்திருந்தாலும் ஒவ்வொரு தாய்மாருக்கும் அவர்கள் தம் பிள்ளைகள்.பெற்றுவளர்த அந்தத் தாய்க்குத்தான் தெரியும் தன் பிள்ளையின் அருமை.

எஸ்.போ.வின் ஒரு கதை பெயர் ஞாபகம் இல்லை.வாசிக்கும் போது உணர்ந்தேன் பிள்ளையின் இழப்பில் பெற்றோர் படும் வலி.

அந்தத் தாய் தேடியது நான் புரிந்ததைத் தானா, அவரது முகபாவம் சொன்ன சேதி நான் விளங்கியது தானா என்பது ஒருவேளை விவாதத்திற்குரியதாய் இருக்கலாம். எனது புரிதல் பிளையாக இரக்கலாம். எனக்குள் தோன்றிய உணர்வினைத் தோன்றியபடி பதிந்துள்ளேன். அவ்வளவு தான்.

அந்த தாய் தேடியது வேறை ஒண்டும் இல்லை... தன் பிள்ளையை போரட விட்டு விட்டு ஓடி வந்து நிண்டு வம்பு பேசும் ஆக்களில் எத்தினை பேரில் அங்கே உண்மையான உணர்வை தட்டி எழுப்ப முடியக்கூடியதாக இருக்கிறார்கள் என்பதாக தான் இருக்கும்... ஆக கூடுதலாக தன் பிள்ளை அடைய நினைத்ததை உங்களின் யாராவது முன் வந்து பெற்று தருவீர்களா, தன் மகனின் இறுதி ஆசை ஈடேறுமா எனும் ஏக்கமாக தான் இருக்கும்...

அவவுக்கு எங்கை தெரியும் நாங்கள் அவவின் முகத்தை பாத்து ஆராட்ச்சி மட்டும் தான் செய்வம் எண்டு...

Edited by தயா

  • தொடங்கியவர்

கருத்துக்களிற்கு நன்றி. வல்வைசகாரா நீங்களும் இவ்வுணர்வை உணர்ந்தமையினைக் குறிப்பிட்டமைக்கு நன்றி.

அர்யுன். தாய் மட்டுமல்ல தந்தைக்கும் தன்பிள்ளைiயினை இழப்பது எத்தனை கொடுமையானது என்பது விவாதிக்கத் தேவையற்றது. இங்கு நான் குறிப்பிட்ட விடயம் அவ்வலி பற்றியது அல்ல. அவ்வலியோடு கூடிய, எமது சமூகம் சார்;ந்த ஏமாற்றம் பற்றியது. பற்றிக்கொள்ள ஏதுமற்ற, ஊன்றுதடிகள் முறிந்துபோன, பாவித்துவந்த தற்காலிக நோவுநீக்கி மாத்திரை வலுவிழந்த நிலைபற்றியது.

தயாவிடம் விவாதிப்பதற்கு எதுமிருப்பதாய்த் தெரியவில்லை. எனக்கு அந்தத் தாயின் முகத்தைப் பார்த்தபோது என்ன தோன்றியது என்று நான் எழுதியதைக் கண்டித்து, உலகில் உள்ள அனைத்து மாவீரர்களதும் தாய்மார்கள் எங்கு எப்போது என்ன முகபாவம் காட்டினாலும் அதனைச் சரியாகப் புரியக்கூடியது தான் மட்டுமே என்று கூறி, எனது பதிவிற்குக் காரணமான தாய் சார்பில் எனக்கு ஒரு கண்டனமும் தயா இட்டுச் சென்றுள்ள நிலையில் தயாவோடு விவாதிப்பதற்கு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சில நேரம் யோசனை வேற மாதிரி வரும் எப்படி என்டால் எனக்கு இரு மகன் என வைத்துக் கொள்வோம் ஒரு மகன் புலிக்குப் போய் விட்டார் அடுத்த மகன் புலம் பெயர்ந்து வந்து விட்டார்.நான் எந்த மகனுடன் இருக்க விரும்புவன்...என்ட மகன் போராடப் போயிருக்கையில் அவனை விட்டு விட்டு என்னால் எப்படி புலம் பெயர்ந்து இருக்க முடியும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் சார்ந்து ஒரு உணர்வுப்பகிர்வு...... இன்னுமொருவன் தான் உணர்ந்த தன்னுடைய தனிமனித உணர்வை வெளிப்படுத்தியுள்ளார் என்று நினைக்கிறேன். இதற்குள் குற்றங்காண எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் காண்கிலும் மூலப்பெருள் ஒன்றுதான். அதை யாராலும் களங்கப்படுத்த முடியாது. நதிகள் பிறப்பெடுக்கும் இடங்கள் வேறாயிருக்கலாம் ஆனால் அவை சென்றடையும் இடம் கடல்தான். உதிரமாய், சதையாய், உணர்வாய் சுமந்த கருவறைகளின் வெம்மை மட்டுமே கல்லறைகளை ஆற்றுப்படுத்தக்கூடியன. அத்தகைய கருவறைகளின் தேடலை, புரிய எத்தனித்திருக்கும் ஒரு பதிவையே இன்னுமொருவனின் பதிவில் காண முடிகிறது. இங்கு இத்திரியை ஆரம்பித்தவரின் பதிவைச் சாடியிருந்தால் அதனைத் தொடர்ந்த என் பதிவும் அச்சாடலுக்கு உள்ளானதே அந்த வகையில் இதனைப்பற்றி பேச வேண்டிய தேவை எனக்கும் எழுந்துள்ளது. பொதுவாக பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைகளைத் தவிர்த்ததன் மூலம் நான் வாழும் பூமியில் துரோகியாகக் கருதப்படுகிறேன். ஒருவேளை இவ்விடயத்தைப் பேசுவதால் இங்கும் துரோகிப் பட்டியலில் இணைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்னினத்திற்காக இந்த உலகில் இருக்கும் அதி உச்சப்பட்டமான எதையும் ஏற்கத்தயார்.

எத்தினையோ தாய் மார் வீதிவளிய திரியுதுகள் தன் பிள்ளைக்கு என்ன நடந்தது எண்டே தெரியாமல்... எத்தினையோ தாய் மார் தன் பிள்ளையை செல்லுக்கும் , விமானங்களுக்கும் பறி குடுத்து இருக்குதுகள்... இதுகளை பற்றி இந்த பதிவை எழுதினவருக்கு எப்பவாவது சிந்தனை வந்து இருக்கும் எண்டுறீயளோ....?? அப்படி எல்லாம் எப்படி சிந்தனை வருமோ...??? வந்தால் ஆச்சரியம்...

எல்லா அம்மாவும் அம்மா தான்... தன் பிள்ளையின் சாவை யாரும் வரேவேற்க்க போவதில்லை... போராட போய் சாவடைந்த தாயின் உணர்வுக்கும், அனியாயமாக கொல்லப்பட்டவனின் தாயுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரிகிறதா....??

***

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

அதைத்தான் நானும் கண்டித்தேன்

எல்லோரும் ஒரு வரம்பு வரை வந்ததும் இந்த நோய் தொற்றிக்கொண்டுவிடுகிறது.

அதன்பின் இவர்கள் ஒரு ஆராய்ச்சியாளராக தம்மை பதிவுசெய்ய முனைகின்றனரே தவிர...

உண்மையான தூய்மையான அந்த தியாகங்கள் கொச்சைப்படுத்தப்படுவதை....

தமது திறமையான எழுத்துக்கள் மூலம் அல்லது சில சொற் தொடர்கள் மூலம் லாவகரமாக மறைத்துவிடுகின்றனர்.

இதை இவர்கள் அறியாது செய்கின்றனர் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது இவர்களது எதிர்பார்ப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தயா அண்ணா. :rolleyes:

இங்கு தயா அண்ணாவின்(தூக்கப்பட்ட கருத்தையும் சேர்த்து) கருத்து தான் எனதும் ஆணித்தரமான கருத்து. அந்த தாயின் முகத்தில் தோன்றிய உணர்வலைகளை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி புரிந்துகொள்ளலாம் அது அவரவர் புரிதலைப் பொறுத்த விடையம். என்னை பொறுத்தவரை அந்த தாயின் தேடல் தன் மகனின் தியாகத்துக்கு என்ன பரிகாரம் என எங்களைப் பார்த்துக் கேட்பதாகவே எனக்குத்தோன்றுகிறது? இத்தனை பேரை இழந்த பின்னும் எதுவும் செய்யாமல் ஆடையுடன் திரிகிறீர்களே என்ற அசிங்கமாக கூட அந்த தாயால் உணர்ந்திருக்கலாம் அல்லவா? இத்தனை மாவீரர்களும்,போராளிகளும் கட்டாயப்படுத்தியா போராடப்போனார்கள்? எத்தனை ஆயிரம் பேர் நாட்டுக்காக போனார்கள் அந்த மாவீரர்களின் தியாகத்துக்கு என்ன சொல்லப்போகிறோம்?

இல்லை போராட்டத்திற்கு போன தேவை தான் நிறைவேறிவிட்டதா? இல்லை புலிகளை அழித்து ஒன்றரை வருடம் கடந்த பின்னும் தமிழர்கள் சிங்கள அரசால் சரி சமனாக நடத்தப்படுகிறார்களா? சரி தமிழர்க்கு என்று ஒரு தனி நாடு தான் வேண்டாம் என்று வைத்துக்கொண்டாலும் தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த பகுதிகளில் தன்னும் நிம்மதியாக வாழ எமது மக்களை விடுகிறார்களா? புலிகளையும் அவர்கள் தம் தியாகங்களையும் தவிர்த்து இத்தனை கட்சிகள்,மாற்றுக்கருத்துக்காரர்கள் இருந்தும் எமது மக்களுக்காக ஒரு குண்டுமணி இடத்தைக் கூட பெற்றுக்கொடுக்க முடியுமா? அப்படி ஏதும் செய்தீர்களேயானால், உங்கள் அனைவரையும் சிரம்தாழ்த்தி வணங்குவோம் . ஏன் காலில் விழுந்து வணங்கவும் தயாராகத்தான் இருக்கிறோம் இல்லை எனில் மாவீரர்களின் தியாகத்தை கேள்விக்கு உட்படுத்தவோ,கொச்சைப்படுத்தவோ யாருக்கும் தகுதியோ,அருகதையோ கிடையாது.

நல்லிணக்க ஆணைக்குழு முன் புளொட் சித்தார்த்தன் கூறிய கருத்தை இதில் சொல்ல வேண்டும் புலிகளுக்கு எதிரான போரில் தம்மை பயன்படுத்திக்கொண்ட அரசு இன்று தம்மைப் புறக்கணிப்பதாக கூறியுள்ளார். இது தான் ஒவ்வொரு ஒட்டுக்குழுக்களின் நிலையும். எமது தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கத்தான் முடியுமே தவிர வேறு கடுகளவும் சாதிக்க முடியாது என்பது தான்.

ஆக இன்னும் இன்னும் தமிழர் போராடவேண்டிய தேவை தான் எழுகிறதே தவிர சிங்கள் அரசு தரும் என்ற காத்திருப்பு அல்ல, இது மாவீரர்களின் தியாகங்களுக்காக அல்லாது விடினும் தமிழர்களின் இருப்புக்காக.

  • கருத்துக்கள உறவுகள்

தயா நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் பற்றி இன்னுமொருவன் எழுதினாரா, சிந்தித்தாரா என்பதை இந்தத்திரியில் புகுத்தி இன்னுமொருவன் ஆரம்பித்த இந்தத்திரியின் கருப் பொருளைச் சிதைப்பதை நான் விரும்பவில்லை. இத்திரி மாவீரர்களை ஈன்ற ஒரு தாய்மையின் தேடல் இன்றைய நாட்களில் எப்படியானதாக எங்களை நோக்கி இருக்கின்றது என்பதே ஆகும்.

நிறைய எழுதினேன் ஆனால் இத்திரிக்கு அவை தேவையற்றன என்பதால் தவிர்த்துவிட்டேன்.

  • தொடங்கியவர்

ரதி,

உங்கள் கேள்வி நிச்சயமாகப் பலனுடையகேள்வி என்றே எனக்குப் படுகின்றது. உங்கள் கேள்வி தொடர்பில் எனக்குத் தெரிந்தவரை நான் நினைக்கிறேன் குழந்தை மற்றும் அக்குழந்தையின் பெற்றார் என்ற உறவுகளிற்கு மேலால் அவர்களது பாதைகள் சார்ந்து நடைமுறைகள் தவிர்க்க முடியாததாகிப் போகின்றன. எங்களது போராட்டம் விடுதலைப் போராட்டம் என்றவகையிலும், போராளிகள் போராடப்புறப்பட்டவர்கள் என்ற ரீதியிலும் சில விடயங்கள் குளப்பகரமானதாகப் படலாம். ஒருவேளை இதே சந்தர்ப்பங்களை வேறு தளத்திற்கு மாற்றிப் பார்க்கும் போது சில சமயம் குளப்பம் தெளிவாகலாம்.

உதாரணமாக சிவில் நடைமுறை உள்ள உள்நாட்டுப் போரற்ற ஒரு நாட்டில் ஒரு பிள்ளை இராணுவத்தைத் தனது தொழிலாகத் தேர்வு செய்கிறது என்ற சந்தர்ப்பத்தைப் பார்த்தால். இப்பிள்ளை இராணுவத்தோடு போர்முனைகளிற்குச் செல்வது தவிர்க்கமுடியாதது என்ற றிலையில் உண்மையில ;அப்பிள்ளை மீது பற்றிருநந்தால் பெற்றோரும் அதனோடு போர்முனைக்குச் செல்லவேண்டும் என்று எமக்கு எண்ணத்தோன்றுவதில்லை. அதற்காகப் பெற்றோரிற்கு அப்பிள்ளை மீது பற்றில்லை என்று ஆகிவிடாது. இராணுவம் மட்டுமல்ல, ஊடகவியலாழரும் போர்முனைகளிற்குச் செல்லப்பணிக்கப்படுகிறார்கள். வியாபாரிகள் போர்முனைகளிற்கு வியாபாரநோக்கு சார்ந்து செல்கிறார்கள். புகைப்பட வல்லுனர்கள், எழுத்தாழர்கள் முதலியோரும் ஆபத்தான சந்தர்ப்பங்களைத் தேடிச்செல்கிறார்கள். கல்விமீது கொண்ட மோகத்தால் பலர் ஆபத்தான இடங்களில் உள்ள பல்கலைக்களகங்களிற்கு (கொழும்பு பெரதேனிய உள்ளடங்கலாக) படிக்கச் செல்லுகிறார்கள். போராளியின் போராட்டப் பாதை போன்று இவை அனைத்துமே ஒவ்வொருவர் தெரிவு செய்யும் பாதைகள். சில பாதைகள் நிர்பந்திக்கப்படுகின்றன, சில பாதைகள் தெரிவாகின்றன. ஆனால், இப்பாதைகளைத் தேர்வு செய்பவர்கள் அனைவரிற்கும் பொதுவானதாக பாசத்திற்குரியவர்கள் பதைபதைப்போடு பாதுகாப்பான இடங்களில் இருக்கவேண்டியது நிர்ப்பந்தமாகிப் போகின்றது. பாசமுள்ள பெற்றோர்களால் எவ்வாறு ஆபத்தான பெரதேனியாவில் அல்லது கொழும்பில் அல்லது மொரட்டுவவில் பிள்ளையினபை; படிக்கவிட்டுவிட்டு யாழ்ப்பாணத்தில் நிம்மதியாக இருக்கமுடியும் என்று எமக்கு எண்ணத் தோன்றுவதில்லை.

ஒரு பிள்ளை தாயகத்தில் போராடப்போனநிலையில் எவ்வாறு பெற்றவர்கள் இன்னுமொரு பிள்ளையுடன் புலம்பெயரமுடிகிறது என்ற கேள்வி சார்ந்து இன்னுமொன்றைப் பார்க்கலாம். அதாவது, ஒரு பிள்ளை போராடப் போய்விட்டதே என்று தாயகத்தில் புலம்பெயராது பெற்றோர்கள் இருந்தாலும் கூட, உள்ளுர இடப்பெயர்வுகள் முதலான விடயங்களில் போராளி குடும்பங்களும் பாதுகாப்பான இடம் தேடி நகர்வது தவிர்க முடியாதது. பிள்ளை போர்க்களத்தில் போராடி நிற்பதால் தானும் துவக்கில்லாட்டியும் பிள்ளைக்குப் பக்கத்தில் தான் நிற்பேன் என்று பெற்றோர் செல்ல முடியாது. உள்ளிற்குள் உள்ள பாதுகாப்பான இடத்திற்கும் புலத்திற்கும் இடையில் ஆயிரக்கணக்கான கிலேமீற்றர்கள் தூரம் இருப்பதால் புலம்பெயர்ந்தவ பெற்றோர் பாசம் குறைந்தவர்கள் என்று கூறிவிடமுடியாது. போர்க்களத்திற்கு அப்பாலான அனைத்து இடங்களும் பெற்றோரிற்கு ஒன்றானதாகவே இருக்கும். அவர்களின் மனம் எப்போதும் அவர்கள் பிள்ளைகளைச் சுழன்றபடிதான் இருக்கும். கூட இருக்கின்ற பிள்ளையினைக் காடடிலும் தூர இருக்கும் பிள்ளைசார்ந்து தான் அவர்கள் மனம் அடிக்கடி அடித்துக் கொள்ளும்.

எனது அனுபவத்தில் நான் கண்ட போராளிகளின் பெற்றோர் மற்றும் மாவீரர் பெற்றோர் சார்ந்த எனது அவதானிப்பு இவ்வாறு தான் அமைகிறது.

வல்வைசகாரகா,

உங்கள் புரிதலிற்கு நன்றி. துரோகிப்பட்டம் என்பது மற்றையவர்கள் தருவதால் மட்டும் ஒற்றிக்கொள்ளக்கூடியது அல்ல. எம்மைப்பற்றி நாமறிந்து கண்ணாடியில் எமது கண்களை நேரிற்குநேர் பார்க்கும் உளசுத்தி எமக்கு இருக்கும் வரை மற்றையவர்கள் வீசும் பட்டங்கள் சார்ந்து பயப்படவேண்டியதில்லை. மாவீரரை நினைவு கூருவதோ அவர்கள் சார்ந்து எவ்வாறு எமக்கு உணர்வுகள் தோன்றலாம் என்பதையோ நாம் எவரிடமும் எழுதி அனுமதி பெற்று உணரவேண்டியதில்லை. எமது உணர்வினை எந்தச் சபையில் பகிரலாம் எங்கு பகிரக்கூடாது என்பதை வேண்டுமானால் அனுபவங்கள் சாhந்;து நாம் அறிந்து கொள்ளலாம். அவ்வளவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்தாய் ஒரு காலத்தில் மாவீரர்களின் தாய் என தூக்கி வைத்த இதே மக்கள் துரோகிகள் என கூறினாலும் என மனதில் எண்ணி சஞ்சலப்பட்டிருக்கலாம்.

தனது பிள்ளை போல பல பிள்ளைகள் உயிர்த்தியாகம் செய்தும் இன்று மீண்டும் அடிமைகளாக வாழ வேண்டி ஏற்பட்டு விட்டதே என மனம் வெம்பி இருக்கலாம். மொத்தத்தில் அவரின் உணர்வு ஒரு விரக்தியானது எனபதை மட்டும் சொல்லமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்துக்கு நான் எழுதியது வெட்டப்பட்டுள்ளது

அப்படியாயின் இந்த படத்தின் மூலம் சொல்லவரும் செய்தி ஏற்கப்பட்டுள்ளதா..?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் யாழ் பல்கலைக் கழகத்தில் கல்விகற்கும் முன்னாள் போராளி ஒருவர் பகிடி வதை தாங்கமுடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தமிழ் ஆங்கில ஊடகங்களில் செய்தி இருந்தது. தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடப் புறப்பட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கல்வி கற்கச் சென்றவரை ஒரு பொருட்டும் மதிக்காத கல்வி சமூகம்தான் தற்போது தாயகத்தில் உள்ளது என்பதுதான் இச்செய்தியின் மூலம் அறிந்துகொண்டது.

இத்தகைய சிந்தனை உள்ள இளைய கல்விசமூகம் இருக்கும்போது தாயகம், தேசியம் என்று தமிழர்களுக்கு விடிவு வேண்டிப் புறப்பட்டவர்கள், போராட்டத்தில் தங்கள் பிள்ளைகளை, உறவுகளை இழந்தவர்கள் நம்மிடம் எதைத் தேடினாலும் வெறுமைதான் அவர்களுக்குக் கிடைக்கும்.

"அண்மையில் யாழ் பல்கலைக் கழகத்தில் கல்விகற்கும் முன்னாள் போராளி ஒருவர் பகிடி வதை தாங்கமுடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தமிழ் ஆங்கில ஊடகங்களில் செய்தி இருந்தது. தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடப் புறப்பட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கல்வி கற்கச் சென்றவரை ஒரு பொருட்டும் மதிக்காத கல்வி சமூகம்தான் தற்போது தாயகத்தில் உள்ளது என்பதுதான் இச்செய்தியின் மூலம் அறிந்துகொண்டது. "

உலகில் ஏறக்குறைய எல்லா பல்கலைகழகங்களையும் பிடித்துள்ள வியாதி இது.

அமெரிக்காவிலும் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள் அதற்காக யாரும் அமெரிக்கர்களை கல்வியை மதிக்காத சமூகம் என்று சொல்வது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் ஏறக்குறைய எல்லா பல்கலைகழகங்களையும் பிடித்துள்ள வியாதி இது.

அமெரிக்காவிலும் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள் அதற்காக யாரும் அமெரிக்கர்களை கல்வியை மதிக்காத சமூகம் என்று சொல்வது இல்லை.

கல்வியை மதிக்காத தமிழ் சமூகம் என்று கூறவில்லை.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு முன்னாள் போராளியை மதிக்காதவர்கள்தான் இப்பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் என்றுதான் சொல்லியுள்ளேன். இவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் நினைக்கின்றேன்.

முதலில் நண்றி ஜீவா, விசுகு அண்ணா, நுணாவினான்....

தயா நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் பற்றி இன்னுமொருவன் எழுதினாரா, சிந்தித்தாரா என்பதை இந்தத்திரியில் புகுத்தி இன்னுமொருவன் ஆரம்பித்த இந்தத்திரியின் கருப் பொருளைச் சிதைப்பதை நான் விரும்பவில்லை. இத்திரி மாவீரர்களை ஈன்ற ஒரு தாய்மையின் தேடல் இன்றைய நாட்களில் எப்படியானதாக எங்களை நோக்கி இருக்கின்றது என்பதே ஆகும்.

நிறைய எழுதினேன் ஆனால் இத்திரிக்கு அவை தேவையற்றன என்பதால் தவிர்த்துவிட்டேன்.

நீங்களாக இதுக்கு புகுந்து கொள்கிறீர்கள் அக்கா...ஒருவேளை கட்டுரையாளரின் உணர்வு எண்று சொல்லப்படுவதில் சொல்ல பட்ட முழுமையான விடயத்துடன் நீங்கள் ஒத்துப்போவதனால் கூட அது இருக்கலாம்... அது எனது பிரச்சினை இல்லை...

நான் கட்டுரையாளரை கண்டித்தது உங்களை கண்டிப்பது போல எண்று மேலே சொல்லி இருக்கிறீர்கள்... ஆகவே சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு உங்களுடையது... இல்லை சொல்ல முடியாது எண்று ஒளிந்து கொண்டாலும் எனக்கு பறவாய் இல்லை...

அது உங்களை பொறுத்தது...

. அன்னையின் தேடலின் அர்த்தம் எனக்கு நன்கு புரிகிறது. தன் கோடானு கோடி அணுக்கள் எல்லாம் உதிரம் சிந்தி நொந்து கிடக்கக் காரணமான தன் மகனின் மரணத்தில் அர்த்தம் இருந்ததாய் அவ்வன்னையினை நம்பவைத்து அவளின் இரத்தப்போக்கை நாங்கள் கட்டி வைத்திருந்தோம்.

இதில் சொல்ல பட்டு இருக்கும் விடயத்தில் கருத்து என்ன....?? எதை நீங்கள் இலை மறைகாயாக சொல்ல முனைகிறீர்கள்...?? எதை நீங்கள் இதன்மூலம் அங்கீகரிக்கிறீர்கள்...??

அப்போ அந்த அம்மாவின் மகனின் சாவில் அர்த்தம் இல்லை எண்றால் சொல்ல முனைக்கிறீர்கள்....?? இல்லை ஒட்டு மொத்தமான போராளிகளின் சாவும் அர்த்தம் அற்றது என்கிறீர்களா...?? இதன் மூலம் நீங்கள் கேவலப்படுத்துவது அம்மாவை அல்ல அவர் மகனையும் அல்ல... உங்களை மட்டும் தான்... உங்களின் குண இயல்புதான் இங்கு தூக்கிக்காட்டப்படுகிறது..

இப்படியான கேவலப்படுத்தலை நீங்கள் அங்கீகரிப்பது உங்களை பொறுத்தது... அதை நாங்களும் அங்கீகரித்து கருத்து கூற வேண்டும் என்பது எங்கள் மீதான திணிப்பு எண்று உங்களுக்கு புரியவில்லையா....??

இப்போ இன்னுமொருவன் மீதான எனது எந்தக் கேள்வி தேவை இல்லை எண்று சொன்னீர்களோ அந்த கேள்விகே வருவோம்... ! எந்த தமிழனின் மரணத்தில் அர்த்தம் இருக்கிறது....??

மீண்டும் அதே கேள்வி ..

30 000 போராளிகளை நாங்கள் இழந்து இருக்கின்றோம்.... ஆனால் இரண்டு லட்ச்சத்துக்கும் மேல் அப்பாவி உயிர்கள் கொடூரமாக பறிக்கப்பட்டு இருக்கின்றன... இதில் அர்த்தமுடைய சாவு யாருடையது....??

நீங்கள் இங்கே உங்களை யாரோ துரோகி பட்டம் தருவதாக சொல்லி இருக்கிறீர்கள்.... அப்படி யாரும் தந்ததாக காணவில்லை... ஆனால் உங்களின் உள் மனம், உங்களின் மனசாட்ச்சி உங்களுக்கு சொன்ன செய்தி தான் அது...

Edited by தயா

என் கண்ணின் முன்னால் ஆழமாக பதிந்த ஒரு காட்சியில் எம் தலைவர் ஒரு நிகழ்வில் இரு கை கூப்பி ஒரு தாயை, மாவீரர் தாயை, வணங்குவது.

அந்த படத்தில் அந்த தாயின் முகத்திலும் தலைவரின் முகத்திலும் தெரியும் முகபாவங்கள் - அவை சொல்லும் கதைகள் ...

அவற்றுள் பதிந்து உள்ளன எல்லா பதில்களும்.

அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை

அழுவதற்கும் முடியாமல்

அழுகின்றேன் அம்மா

உன் தூய மகன் கருவறையைத்

தொழுகின்றேன் அம்மா

என் இனத்தை எழுப்புதற்கே

இனிய மகன் பெற்றெடுத்தாய்

இன்று

எழ முடியா நோய்தன்னை

எதற்கம்மா தத்தெடுத்தாய்?

ஈரய்ந்து மாதந்தான்

உன் பிள்ளை

உன் வயிற்றில் இருந்தான்

பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க

காடென்னும் கருவறைக்குள்

கன காலம்

கன காலம் கரந்தான்

தமிழருக்கே தெரியாமல்

தமிழருக்கே உழைத்தான்

தன் தம்பி தன் தங்கை

தமிழீழம் தனைக் காண

தன்னோடு களமாட அழைத்தான்

தம் நண்பர் கயமைக்கும்

தகவில்லார் சிறுமைக்கும்

தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்

சிறு துளியும் கறை சொல்ல

முடியாத வெள்ளை

எம் வேர்த் தமிழின்

சீர் மீட்கக் கருவான பிள்ளை

என் தந்தை என் அன்னை

என் பிள்ளை என்றே

எப்போதும் எப்போதும்

இவன் பார்த்ததில்லை

அவருக்குச் சொத்தாகத்

தப்பாகத் தப்பாகத்

துளியேனும் முறை மீறிப்

பொருள் சேர்த்ததில்லை

அத்தனைத் தாய்க்கும்

மகனாய் இருந்தான்

அத்தனைச் சேய்க்கும்

அன்னையாய்ச் சிறந்தான்

புலம்பெயர்ப் பிள்ளைகள்

புத்திக்குள் போனவன்

அவர்தம் பொறுக்கா குளிருக்கும்

போர்வையாய் ஆனவன்

இணையிலா இசையினில்

ஈடிலா ஆடலில்

எம் இனப் பிள்ளையை

ஈடுபடுத்தினான்

இடையறா முயற்சியால்

இடை விடா பயிற்சியால்

உடல்களில் உயிர்களில்

உயிர்த் தமிழ் ஊறிய

உளவியல் உளவியல்

மேடை நடத்தினான்

நம்முடன் வாழ்ந்தவன்

நமக்கென வாழ்ந்ததை

நாமா நாமா

நன்கறிந்தோம்

நா கூசாமல் கூசாமல்

நல்ல அத்தமிழனை

வன்முறையாளனாய்

வாய் குழறிப் பேசியே

வரலாற்றில் பெயரிழந்தோம்

தாய்மொழி அறியாத

தலைமுறை ஒன்றிங்கு

தலைவரை உணர்ந்து எழும்

அன்றுதான்

தக தக தக தக

தக தக தக வென

தமிழினம் உயர்ந்து எழும்

தன் பிள்ளை சொகுசாகத்

தப்பித்துப் போக

ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?

போடா போடா

அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி

மாவீரர் பட்டியலில் படமாகினான்

தாய்த் தமிழ்நாட்டில்

வாழ்ந்த தன்

தாயையும் தந்தையையும்

அவசரமாய் அழைத்தாங்கே

குடியேற்றினான்

மனிதமற்ற கயவர்களின்

மரண நெடி நாட்களிலே

அவர்களையும் மக்களுடன்

அலையவிட்டு அலையவிட்டு

அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்

என்னதான் குறை சொல்ல முடியும்

அம்மா உன் பிள்ளையை

என்றுதான் எவர் வெல்ல முடியும்

இல்லையென்றா இவர் கணக்கு முடியும்

உன் பிள்ளை இல்லையென்றால்

இல்லையென்றால்

இல்லை

என்றால் எங்களுக்கு எப்படித்தான்

இக் கிழக்கு விடியும்

வல்வெட்டித் துறையிலங்கே

வாடிக் கிடப்பவளே

உன் கண் முட்டும் கண்ணீரைக்

கை நீட்டித் துடைக்கின்றோம்

தலைவர்க்குப் பால் கொடுத்த

மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்

ஆயிரம் மருத்துவர்கள்

அம்மா உன் அருகிருந்துத்

தீவிர சிகிச்சைதன்னைச்

சிறப்பாகச் செய்வதற்கு

ஆவலாய்க் காத்திருந்தும்

அறமற்றக் கயவர்களின்

அணை தாண்ட முடியாமல்

அடி மனசில் அடி மனசில்

அய்யோ வெடிக்கின்றோம்

சிங்களரும் உனைத் தேடி

சிரம் தாழ்த்தி

வணங்குகிறார் அம்மா

உன் சிறந்த மகன் தூய்மைக்குச்

சிறிதேனும் இணங்குகிறார்

உறவான தாய்த் தமிழர்

ஊமையாய்ப் பார்த்திருப்போம்

உறவற்ற எவர்களையோ

அன்னையென்றும் அம்மையென்றும்

அனுதினமும் தோத்தரிப்போம்

முள்வேலிக் கம்பிக்குள்

உம் காயங்கள் கொத்திக்

கண்ணீரில் பசியாறிக்

கடல் தாண்டி வந்த

அந்தக் காகங்கள்

உம் கதையைக்

கதறி உரைக்கிறதே

ஏமாறச் சம்மதித்து

எவருக்கும் தலையாட்டும்

எந்திரமாய் ஆனதனால்

எம் சனங்கள் உம் துயரை

உமியளவும் உணராமல்

உறங்கிக் கிடக்கிறதே

உலக அற மன்றம்

ஒரு கேள்வி கேட்கலையே

உம் உரிமைக்குத் தடை நீக்க

ஒரு நீதி வாய்க்கலையே

ஒன்று மட்டும் உறுதியம்மா...

ஈழக் கதவுகளை

என் தாயே என் தாயே

உன் மகன்தான் உன் மகன்தான்

திறப்பான்

உன் ஈர விழியருகில்

என் தாயே என் தாயே

மிக விரைவில் உன் பிள்ளை

உன் பிள்ளை இருப்பான்

Edited by akootha

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு முன்னாள் போராளியை மதிக்காதவர்கள்தான் இப்பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் என்றுதான் சொல்லியுள்ளேன். இவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் நினைக்கின்றேன்.

ஒரு சில "பகிடி வதை செய்த" மாணவர்களை வைத்து எல்லாரையும் இல்லை பெரும்பான்மையான மாணவர்கள் இப்படியானவர்கள்

என சொல்ல முடியாது.

தமிழீழ மாவீரர் நாளைக் கடைப்பிடிக்குமாறு அனைத்து மக்களையும் கோரும் துண்டுப்பிரசுரங்கள் கூட இதே யாழ் பல்கலைக்கழகத்தில் விநியோகிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு அம்மாவின் உரையினைக் காணொளியில் பார்த்தேன். அறுபதைத் தாண்டிய வயது, குட்டையான, சற்றுப் பருமனான, பரந்த வட்ட முகமுடைய, சேலைக்கு மேல் குளிராடை போட்ட, கண்ணாடி அணிந்த ஒரு அம்மாவின் உரை அது. இவ்வாண்டின் மாவீரர் வாரம் சார்ந்து ஒழுங்கமைந்த ஒரு நிகழ்வின் காணொளி. அந்த அம்மாவின் மகன் மாவீரர். பயிற்சிப் பாசறையில் குண்டொன்று வெடிக்கப்போகின்றது என்று தெரிந்த மாத்திரத்தில், தான் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அறுபது பயிலுனர்களைக்காப்பதற்காகத் தான் குண்டின்மீது படுத்து உயிர்க்கொடை செய்த மகன் பற்றி அந்த அம்மா தன் பரந்த முகத்தில் கண்கள் நடமிடக் கூறினார். எனக்குள் பீறிட்ட உணர்வு மேலீடு காரணமாய் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாது போனதால் அம்மாவின் மிகுதி உரை எனது மூளையில் பதியவில்லை.

எனது உணர்வு மேலீடு குண்டின் மீது படுத்து உயிர்துறந்த வீரன் சார்ந்தது அல்ல. அவனது கதை கூறிய அவனின் தாயார் சார்ந்தது. டொபீடோ வெடிக்காததனால் முட்கம்பி வேலி மீது தான் படுத்து தன்மேல் ஏறிப் படையணி செல்லப் பணித்த தியாகம், கடைசிக் குண்டோடு ராங்கிக்குள் பாய்ந்து படைநகர்வு தடுத்த தியாகம், தன்னைச் சுட்டுவிட்டு ஓடும் படி தோழனைப் பணித்த தியாகம், இராணுவ வைத்தியசாலையில் தான் படுத்திருக்கிறேன் என்று நினைவு திரும்பிய மாததிரத்தில் கட்டிற் சட்டத்தில் தன்தலைமோதி மரித்து இரகசியம் காத்த தியாகம், பன்னிரு நாள் நீரும் இன்றி மரித்த தியாகம் என்று தியாகங்களின் வகையும் எண்ணிக்கையும் நிறைந்த எங்கள் வரலாற்றில் தியாகங்களிற்கு நாங்கள் புதியவர்கள் அல்ல. நாங்கள் தியாகம் செய்யாத வேளையிலும் எங்களிற்காகத் தியாகம் செய்தவர்கள் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள் நாங்கள். அந்த வகையில் இந்த அம்மாவின் மகனின் தியாகமும் நான் முன்னரே செவியுற்ற வகையமைந்த தியாகமாகவே இருந்தது. தியாகங்கள் பற்றி எழுதுவதற்காகவே பலர் வாழும் சமூகத்தில் வாழ்வதால் மேற்படி மகனின் தியாகம் என்னை உணர்வு மேலிடச் செய்து எனது கண்களைக் குளமாக்கும் வலுவினை தன்னுள் ஒளித்துத் தான் வைத்திருந்தது. ஆனால், அந்த அம்மாவின் உரை அரிதாகப் பேசப்படும் உணர்வினைக் காட்டியதால் உலுக்கிப்போட்டது.

படைகள் நகர்ந்து கொண்டிருக்கையில், வெற்றிச் செய்திகள் குவிந்த வண்ணம் இருக்கையில் தியாகச் செய்திகளை உசுப்பேத்தும் பொருட்களாய்ப் பாவித்தவர்கள் நாங்கள். அத்தகைய வெற்றித் தருணங்களில் தியாகச் செய்திகள் வந்த மாத்திரத்தில் தங்கச் சங்கிலிகள், கரவளைகள் பணப்பைகள் என மேடை நோக்கிய எறிந்த வழமை எங்களுடையது. ஓரு வேளை இந்த அம்மாவும் முன்னர் அவ்வாறான தருணங்களில் பேசியிருப்பாரோ என்னமோ, நேற்றைய தினம் அவரின் முகத்தில் துடித்த கண்கள் எனக்குக் கூறிய மேலதிக சேதியில் ஒரு தேடல் தெரிந்ததது. அதாவது தான் வழமையாகக் கூறும் கதை கேட்போரில் ஏற்படுத்தத் தவறியிருந்த வழமையான உணர்வலைகளை அந்த அம்மா தேடியது எனக்குத் தெரிந்து. தனது சித்தம் குலைந்ததா? தான் என்ன பேசிக்கொண்டிருக்கின்றேன் என்று தான் நினைப்பது தான் உண்மையில் தனது வாய் வளி வெளிவருகின்றனவா? இல்லை எதையோ பேசி வேறு எதையோ தான் கேட்டுக் கொண்டிருக்கின்றேனா? "என் சனமே என் இனமே என் பேச்சு உன்னை அடைகிறதா?" என்று அந்தத் தாயின் கண்கள் தேடிய தேடல் என்னை உலுப்பிப் போட்டது.

தன் மகனின் இறப்பை வைத்து இருப்பு நடத்தும் தாய் அவள் என்று நான் கூறுவதாய் வம்பிற்கும் நினைத்து விடாதீர்கள். அன்னையின் தேடலின் அர்த்தம் எனக்கு நன்கு புரிகிறது. தன் கோடானு கோடி அணுக்கள் எல்லாம் உதிரம் சிந்தி நொந்து கிடக்கக் காரணமான தன் மகனின் மரணத்தில் அர்த்தம் இருந்ததாய் அவ்வன்னையினை நம்பவைத்து அவளின் இரத்தப்போக்கை நாங்கள் கட்டி வைத்திருந்தோம். படிய மறுத்து வடிந்து கொண்டிருக்கும் அவள் உதிரப்போக்கு நம் முகங்கள் கொடுத்த உணர்வுப் பெருக்கில் சற்றுக் கட்டுண்டு கிடந்திருக்கும். இன்று நிலைமை வேறு. இன்று எமது சிந்தை வேறு. ஆனால் அந்த அம்மா அவளிற்குத் தெரிந்த ஒரே கதையினை எங்களிற்கு இந்த மாவீரர் தினத்திற்கும் சொல்லுகிறாள். எங்கள் முகங்களால் அவள் தேடும் உணர்வினைக் காட்டமுடியாது போகிறது. ஐஸ்கிறீமை நிலத்தில் போட்ட ஐந்து வயதுக் குழந்தை போல் அந்தக் குஞ்சுக் கிழவியின் முகத்தில் குழப்ப ரேகைகள். என்சனமே என் இனமே என்ர பிள்ளை கதை புரியலையா என்று கூடக் கேட்கத் தெரியாத தாய் தன் வாயினைப் பரிசோதிக்கிறாள். "என் வாய் விழும் வார்த்தைகளும் செவி செல்லும் வார்த்தைகளும் ஒன்று தானா இல்லை என் சித்தமே நீ பேதலித்துத் தான் போனாயா" எனப் பார்த்துத் தேடிய தாயின் முகம் என்னை உலுப்பிப் போட்டத…

அந்தத் தாய் தேடியது நான் புரிந்ததைத் தானா, அவரது முகபாவம் சொன்ன சேதி நான் விளங்கியது தானா என்பது ஒருவேளை விவாதத்திற்குரியதாய் இருக்கலாம். எனது புரிதல் பிளையாக இரக்கலாம். எனக்குள் தோன்றிய உணர்வினைத் தோன்றியபடி பதிந்துள்ளேன். அவ்வளவு தான்.

தயா உங்களுடைய பதிலில் உங்களினால் சுட்டிக்காட்டப்பட்ட இன்னுமொருவனின் பதிவில் காணப்படும் கருத்தை ஆழமாக நாம் இருவரும் உள்வாங்கித்தான் இருக்கிறோம். 'நம்பவைத்த" என்ற சொல்லினால் இன்னுமொருவனின் பதிவு கேள்விக்குள்ளாகியிருப்பது பிழையன்று, ஏற்றுக் கொள்கிறேன், இருப்பினும் எனக்கு இன்னும் சற்று அதிகமான புரிதல் அவசியமாக இருக்கிறது.

இவ்விடத்தில் இன்னுமொருவனிடம் நீங்கள் சுட்டிக்காட்டிய அந்தப்பகுதியை தெளிவுபடுத்தக் கேட்பது தவறாகாது என்னும் நம்பிக்கையில் இப்பதிவின் மூலம் இன்னுமொருவன் தனது பதிவை தெளிவு படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இன்னுமொருவனின் பதிவு சொல்லும் சேதியின் பின்னால் எனது பதிவைத் தொடர்கின்றேன். முக்கியமாக மேலே வர்ணமிடப்பட்ட பகுதிக்கான தெளிவை இன்னுமொருவனிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.

தொடங்கப்பட்ட திரியில் இருந்து திசை மாறி செல்கின்றோமா?

ஒரு தாயின் முகத்தில் தெரிந்த பாவமே.எம்மை இவ்வளவும் எழுத வைத்தது.எனது உறவினர் வீட்டிற்கு நான் போகும் போது அங்கு இருக்கும் முதியமாது சந்தோசமாக கதைத்துவிட்டு பின் எப்போதும் சோகமாக முகத்தைவைத்து ஒரு கதை தொடங்குவா.எனக்கு அந்த்ம்மா நடிப்பதுபோல் தான் எப்பவும் தோன்றும்.6 பிள்ளைகள் மூத்தது நாலும் பெடியங்கள் அந்த மாதிரி இருக்கின்றார்கள்.அடுத்த இரண்டும் பெண் பிள்ளைகள்.கடைசி மகளுடன் தான் இருக்கின்றா இனிமேல் என்ற வசதிகளுடன்.

எப்பவும் போய் எப்படி அம்மா இருக்கின்றீர்கள் எனக் கேட்டால் நல்ல மாதிரி தொடங்கிவிட்டு தனது மூத்த மகள் சந்தோசமாக இல்லை எனும் புராணம் தொடங்கி விடுவா.மூத்த மகளுக்கு இரு ஆண் பிள்ளைகள் இருவரு யூனிவெர்சிடி வேறு .ஆனால் கணவன் மனைவிக்கிடையில் எப்போதும் பிரச்சனை.

நாட்டில் எவ்வளவு பிரச்சனை.மனுசர் சாப்பிட கூட வழியில்லை.இங்கு 4 பெடியஙக்ளும்,கடைசி மகளும் அந்த மாதிரி.ஒரு பெண்பிள்ளையின் வாழ்க்கை மாத்திரம் கொஞ்சம் பிழைத்துவிட்டது.

எந்த நாளும் அதற்கு மூஞ்சையை நீட்டினால் நடிப்பா அல்லது தாயானவள் அப்படித்தானா?

தாய்மார்களே பதில் கூறுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.