Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒழுக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்டார் திருவள்ளுவர்.அந்த காலத்தில் எல்லாம் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக கடைப் பிடித்தார்கள்.ஆணோ,பெண்ணோ ஒழுக்கத்தை மீறினால் தகுந்த தண்டனை கொடுத்தார்கள்.சமுதாயத்தை விட்டு ஒதுக்கியும் வைத்தார்கள் ஆனால் அப்படி இருந்தும் அந்தக் காலத்திலும் தப்பு செய்தவர்கள் இருந்தார்கள்.ஆனால் இந்தக் காலத்தில் ஒழுக்கத்தை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்கள்? மாறாக இச் சமூகத்தில் அவர்கள் மிகவும் படித்தவர்களாகவோ அல்லது வசதியான பணக்காரர் ஆகவோ இருந்தால் அவர்கள் எந்த வகையிலும் ஒழுக்கத்தை மீறலாம் அது தப்பில்லை என்ட பின்னனியே புலம் பெயர் சமுதாயத்தில் காணப்படுகிறது.

நான் கேள்விப் பட்ட சம்பவங்கள் பல அதில் ஒன்டு 50 வயதினை உடைய ஒர் பெண் திருமணம் முடித்து அவவுக்கு 25,26 வயதில் ஒரு மகனும்,மகளும் உண்டு.அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த ஒர் இளைஞனோடு அவவுக்கு தொடர்பு இருந்தது.இத் தொடர்பு அவவினது கணவருக்கு தெரிந்து கண்டிக்கத் தொடங்கியவுடன் அப் பெண் அவரது கணவரை விவாகரத்து எடுத்து விட்டு வீட்டை விட்டு துரத்தியும் விட்டார்.அதன் பிறகு நடந்தது தான் உச்ச கட்டக் கொடுமை தனக்கும் அந்த இளைஞனுக்கும் ஆனான தொடர்பு எங்கே வெளியே தெரிந்து விடும் என்ட பயம் காரணமாகவும் அத்தோடு தொடர்ந்தும் அந்த இளைஞனோடு தொடர்பு வைக்க வேண்டியும் அவரை தன் மகளுக்கு திருமணம் முடித்து கொடுத்து விட்டார்.திருமணத்தின் பின்பு தான் தனது தாயுக்கும்,தனது கணவருக்கும் தொடர்பு இருப்பது அப் பெண்ணிற்கு தெரிய வந்தது அதன் பின் குடும்பத்தில் சண்டை நடந்தது.தற்போது விவாகரத்து கோரியுள்ளார் அப் பெண்ணின் கணவரும் பெண்ணின் தாயாரும் சேர்ந்து கொடுமைப்படுத்தி விவாகரத்து கொடுக்க மாட்டேன் என நிற்கிறார் அப் பெண்ணின் கணவர்.தற்போதும் கூட அப் பெண்ணின் கணவரோ அல்லது அப் பெண்ணின் தாயாரோ பொது இடங்களுக்கு வருகிறார்கள் விழாக்களிலும் பங்கு பற்றுகிறார்கள். அவர்கள் தப்பு செய்தார்கள் எனத் தெரிந்த பிறகும் அவர்களுக்கு உரிய மரியாதை அவர்களது உறவினர்களாலும்,ஊர் மக்களாலும் வழங்கப்படுகிறது.

சம்பவம் இரண்டு ஒரு பெற்றோருக்கு ஒரே ஒரு பெண்.மிகவும் அழகான பெண்.அவவை மிகவும் கண்டிப்பாக வீட்டில்[கடுமையான சட்ட திட்டங்கள் அவவிற்கு விதிக்கப்பட்டது வீட்டில்] வைத்து வளர்த்தார்கள்.பல்கலைகழகம் வந்ததும் அவிழ்த்து விட்ட மாடு மாதிரி சுதந்திர உலகைக் கண்ட பெண் படிப்பை குழப்பி ஒருவருடன் ஓடி விட்டார்.கூட்டிக் கொண்டு ஓடினவர் கொஞ்ச நாள் அவவுடன் குடும்பம் நடத்தி விட்டு அப் பெண்ணை விட்டு விட்டு ஓடி விட்டார்.பிறகு அப் பெண்ணை முதலில் கூட்டிக் கொண்டு ஓடிப் போனவரின் நண்பர் திருமணம் செய்து உள்ளார்.[அவர் எல்லாம் தெரிந்து தான் திருமணம் செய்து உள்ளார்]தற்போது அவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.சந்தோசமாய் குடும்பம் நடத்துகிறார்கள்.இதில் இப் பெண் தெரிந்தோ,தெரியாமலோ தப்பு செய்தாலும் அவவுக்கு நல்ல வாழ்க்கையே கிடைத்து உள்ளது.

சம்பவம் மூன்று இப் பெண் ஈழத்தில் இருக்கும் போது ஒரு சாதி குறைந்தவரை காதலித்த காரணத்தால் அப் பெண்ணை புலம் பெயர் நாட்டிற்கு வேறோருவரை திருமணம் செய்து அனுப்பி விட்டனர்.இங்கு வந்து அவ திருமணம் அவவுக்கு 2 பிள்ளைகள் மூத்த மகளுக்கு 14 அல்லது 15 வயது இருக்கும்.கட‌ந்த இரு வருட‌ங்களுக்கு முன்னர் அப் பெண்ணின் காதலர் அப் பெண் குடியிருக்கும் நாட்டுக்கு வந்திருந்தார் இப் பெண் தனது இர‌ண்டு பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு தனது காதலனிட‌ம் சென்று விட்டார்.ஒரு கிழமை மட்டில் அவரோடு குடும்பம் நட‌த்தி அவர் தான் உங்களது அப்பா என்டும் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்திருந்தார்.அதன் பின்னர் அவவின் கணவரும்,சகோதர‌ர்களும் அவவை தேடிக் கண்டு பிடித்து கூட்டி வந்தது வேற கதை.தற்போது அவர் திரும்பவும் அவவினுடைய கணவருட‌ன் குடும்பம் நட‌த்துகிறார்.விழாக்க‌ள்,பொது நிகழ்ச்சிகள் எல்லாவற்றிக்கும் முன்னுக்கு நிற்கிறார்.எல்லோரும் அவவை மதித்து அவவுக்கு சிறந்த முன்னுரிமை வழங்குகிறார்கள்.அவ ஓடிப் போனவ என்டு ஒருதருமே அவவை ஒதுக்கி வைக்கவில்லை.

இங்கு எனது கேள்வி என்ன என்டால் இந்தப் பெண்கள் செய்தது பிழை என்டால் ஏன் இந்த சமுதாயமோ,உறவினர்களோ ஏன் அவர்களுக்கு தண்ட‌னை கொடுக்கவில்லை. அவர்கள் எப்படி உணர்வார்கள் தாங்கள் செய்தது பிழை தான் என?... ஒரு பெண் சூழ் நிலை கார‌ணமாக[வேலை,படிப்பு] தனிய இருக்க நேரிட்டால் உட‌னே அப் பெண்களை மட்டும் இச் சமுதாயம் தப்பாய் பார்க்கிறது இதே நேர‌த்தில் பெண்ணோ,ஆணோ தங்கள் பெற்றோருட‌ன் இருந்து கொண்டு தப்பு செய்தாலோ அல்லது கணவன்/மனைவியுட‌ன் இருந்து தப்பு செய்தாலோ அவர்களை இச் சமுதாயம் தண்டிப்பது இல்லை என நினைக்கிறேன்.சமுதாயத்தின் இந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு என்ன கார‌ணம் என நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை தைரியமாய் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இது போன்ற சில சிக்கல்களுக்கு எனது குடும்பம் சார்ந்தும், எனது உறவுகள் சார்ந்தும், முகம் கொடுத்தேன்

அதில் சில இறுக்கமான முடிவுகளை எடுத்தேன்.

அந்த முடிவுகள் ஒரு தனி நபர் சார்ந்ததாக அல்லாமல் ஒரு சமுதாயம் சார்ந்ததாக எடுக்கப்பட்டதால், சிலரது எதிர்ப்புக்களையும் எதிர் கொள்ள வந்தபோதிலும் முடிவில் நான் உறுதியாக இருந்தேன்.

அதை சிலர் தற்போது மீறி விட்டாலும் நான் இன்றுவரை அந்த முடிவுகளை அப்படியே செயற்படுத்திவருகின்றேன். காரணம் அந்த

சமூகச்சீரழிவான செய்கைகள் எமது சமூகத்துக்கோ அல்லது எமது அடுத்த சந்ததிக்கோ தப்பான முன் உதாரணங்களை சொல்லிவிடக்கூடாது என்பதே எனது அந்த முடிவுகளின் தார்ப்பரியம்.

இதில் சிலவற்றிற்காக நான் மனம் நொந்திருக்கின்றேன். ஆனால் இந்த சமூகம் ஒரு ஒழுங்குப்பாதையில் செல்லவேண்டுமாயின் நாம் சில மருந்துக்களை அல்லது எமக்கு வேண்டாத சிலவற்றை அகற்றியே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி அக்கா,

இப்படியானவர்களுக்கு புலிகளின் நிர்வாகப்பகுதியில் வழங்கிய தண்டனை தான் வழங்கவேண்டும் என்று சொன்னால் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள்,தலிபான்கள் போல இருக்கிறாங்கள் என்று சொல்லிகொண்டு ஒரு குறூப் வந்துடுவினம்.

பாக்குவெட்டி தான் சரி என்று சொன்னால் தனிமனித சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை,நாகரீகம் தெரியாதவை என்று கொண்டு வருவினம்.

அதனாலை உந்த விளையாட்டுக்கு எல்லாம் நாங்க வரலை அக்கா. :D:wub:

சமுதாயம் தண்டனை கொடுக்கிறதுக்கு இப்ப சமுதாயத்தில் யார் யோக்கியவானாய் இருக்கினம்? எல்லாருக்கும் எங்கையோ ஒரு ஓட்டை இருக்கிது. காலம், சூழ்நிலை ஒவ்வொருவரை ஒவ்வொரு இக்கட்டுக்களில் மாட்டுகின்றது. தண்டனை குடுக்கிற விளையாட்டுக்களை எல்லாம் விட்டுப்போட்டு ஆளோட ஆள் மனுசத்தன்மையுடன் வாழ்ந்தால் போதும். நாம் செய்யக்கூடியது இதுதான்.

நீண்ட நாட்களாக/ஏறக்குறைய வருடங்களாக ... புலத்தில் ..... மனிதத்தை தொலைத்து விட்டோம் ... என கண்ணுற்ற/கேள்விப்பட்ட/அறிந்த பல அவலங்களை இங்கு தொடராக எழுத வேண்டும் என விரும்பினேன் ... நேரமும் வரவில்லை .... (என்னை யோக்கியனாக நினைத்தல்ல)!!!!!! ...

.... இதனிலும் பல அருவருக்கத்தக்க அவலங்கள் இலங்கையில் நடந்தது/நடக்கின்றன ... யாரை நோவது .... சமுதாயத்தையா?? தனி மனிதர்களையா???? சந்தர்ப்ப சூழ்நிலைகளையா??? //////////

ஒழுக்கம் என்றால் என்ன?கிலோ என்ன விலை?

சுய ஒழுக்கம் ....ரொம்ப கஸ்டம்....... சூழ்நிலை ஒழுக்கம் பயத்தில சில ஆட்கள் ஒழுக்கமாக இருப்பினம் :D:wub:

  • கருத்துக்கள உறவுகள்

"அனுபவக் கதைகள்" இப்படித்தான் எல்லா சமூகத்திலும் இருக்கும்!

"ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம்; அதன் உள்ளே இருப்பதெல்லாம் ஈரும், பேனாம்"

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்டார் திருவள்ளுவர்.அந்த காலத்தில் எல்லாம் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக கடைப் பிடித்தார்கள்.ஆணோ,பெண்ணோ ஒழுக்கத்தை மீறினால் தகுந்த தண்டனை கொடுத்தார்கள்.சமுதாயத்தை விட்டு ஒதுக்கியும் வைத்தார்கள் ஆனால் அப்படி இருந்தும் அந்தக் காலத்திலும் தப்பு செய்தவர்கள் இருந்தார்கள்.ஆனால் இந்தக் காலத்தில் ஒழுக்கத்தை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்கள்? மாறாக இச் சமூகத்தில் அவர்கள் மிகவும் படித்தவர்களாகவோ அல்லது வசதியான பணக்காரர் ஆகவோ இருந்தால் அவர்கள் எந்த வகையிலும் ஒழுக்கத்தை மீறலாம் அது தப்பில்லை என்ட பின்னனியே புலம் பெயர் சமுதாயத்தில் காணப்படுகிறது.

சங்க காலத் தமிழகத்தில் பல்வேறுபட்ட இனக்குழுவினர் ஒருங்கிணைந்தும் முரண்பட்டும், தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தினர். குடும்பம், அரசு போன்ற கருத்தியல்கள் வலுப்பெற்றுக் கொண்டிருந்தன. ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்பம் இருந்தது. அதே வேளையில் தாய் வழிச் சமுதாயத்தின் எச்சமாக விளங்கிய பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் கட்டுப்படாமல், ஆணைப் போலவே தன்னிச்சையாக வாழ்ந்தனர். போரில் எதிராளியைக் கொல்லுதல், இறைச்சி உண்ணுதல், கள் குடித்தல், ஆறலைக் களவு, ஆநிரை கவர்தல், ஒருவரையொருவர் விரும்பிய ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்ளுதல் போன்றன இயல்பாக நடைமுறையிலிருந்தன. கொண்டாட்டங்கள் நிரம்பிய அன்றாட வாழ்வில், தத்துவ போதனைகளைக் கேட்கவோ, போதிக்கவோ யாருக்கும் அக்கறை இல்லை. எனவே ஒழுக்க விதிகள் அல்லது அறக் கருத்துகளின் தொகுப்பு நூல் எதுவும் சங்க காலத்தில் எழுதப்படவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் நான் ஒரு இரவு விருந்துக்கு போயிருந்தேன்.அங்கே ஒருவருக்கு மிகப்பெரிய மரியாதை நடந்தது,என்னடா இவரும் எங்களைப்போலை மனிசன் தானே எண்டு நினைச்சு பக்கத்திலை இருந்தவரை கேட்டன்.அவர் சொன்னார் இவர் பெரும் பணக்காரராம் எல்லாருக்கும் நல்லா உதவி செய்வாராம்.நானும் நினைச்சன் சரி இவர் எல்லாருக்கும் உதவி செய்வதால் மரியாதை குடுக்கிறதிலை தப்பில்லைஎண்டு.சிறிது நேரத்திலை எல்லாருக்கும் மப்பு ஏறியிருக்கேக்கை தான் அவர் எப்பிடியான உதவி செய்தார் எண்டு தெரிஞ்சது.அவருடைய நண்பரின் மகள் இங்கே பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறாராம்.அவ படிக்கேக்கை தாயகத்திலிருந்து மாணவ விசாவில் வந்த ஒருவரை காதலித்திருக்கிறார்.அது அவாடை அப்பாவுக்கு பிடிக்கேலை.அவா என்ன செய்திருக்கிறா தான் காதலித்தவருடன் இலங்கை சென்று திருமணம் செய்து கொழும்பில் வாழ்ந்திருக்கினம்.இதை கேள்விப்பட்ட அவாடை அப்பா இவையை பிரிக்கிற பொறுப்பை இந்த பெரிய மனிசனிட்டை குடுத்திருக்கிறார்.இதற்கிடயிலை அவாக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கு.இந்த பெரிய மனிசன் கொழும்புக்கு போய் இலங்கை காவல் துறைக்கு லஞ்சம் குடுத்து அவாடை கணவனையும் மாமனாரையும் பிடிச்சு குடுத்து அவாவை வெருட்டி இப்ப பிரிச்சு கொடு வந்திருக்கினம்.இப்ப என்னடா எண்டால் அவாடை பிள்ளையை தாங்கள் வளத்துக்கொண்டு அவாக்கு இரண்டாம் கல்யாணம் செய்யப்போகினமாம் தங்கடை அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரி.இது செய்ததாலை தான் அவருக்கு அந்தளவு மரியாதையாம்.இதைக்கேட்ட பிறகு எனக்கு அவர் மேலை அருவருப்பு தான் வந்தது.இப்பிடிப்பட்ட சனம் இருக்கேக்கை நாங்க என்னத்தை எதிர் பார்க்கிறது.அதுகும் செய்ததே பிழை அதுக்கை அவருக்கு மரியாதை வேறை.

Edited by வாதவூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமுதாயம் தண்டனை கொடுக்கிறதுக்கு இப்ப சமுதாயத்தில் யார் யோக்கியவானாய் இருக்கினம்? எல்லாருக்கும் எங்கையோ ஒரு ஓட்டை இருக்கிது. காலம், சூழ்நிலை ஒவ்வொருவரை ஒவ்வொரு இக்கட்டுக்களில் மாட்டுகின்றது. தண்டனை குடுக்கிற விளையாட்டுக்களை எல்லாம் விட்டுப்போட்டு ஆளோட ஆள் மனுசத்தன்மையுடன் வாழ்ந்தால் போதும். நாம் செய்யக்கூடியது இதுதான்.

ஏன் கலைஞன் இப்படி எழுதுகிறீர்கள்?...எமது சமுதாயத்தில் உள்ள அனைவருமே ஒழுக்கம் கெட்டவர்களா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பெயர்தான் நடுநிலை

கொள்கை இருக்கக்கூடாது

இலட்சியம் இருக்கக்கூடாது

ஒருவருக்கு ஆலோசனை சொல்லக்கூடாது

நாலு பேர் ஒரு கொள்கை அடிப்படையில் சேரக்கூடாது

அவரவர் தனக்கு சரியாகப்படுவதை செய்ய அனுமதித்தல்

அதாவது அவருக்கு சரியாக பட்டால் எதுவும் செய்யலாம் அதை நீ தட்டிக்கேட்கக்கூடாது

அவரது தனிதனித விருப்பங்களை தடை செய்ய நீயார்...?

அது உனது மனைவியைக்கேட்பதாக இருந்தாலும்....???

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவனை/ளை பார்த்து ஒழுக்கம் தீர்மானிக்க வெளிக்கிட்டால்.. அசிங்கங்கள் தான் அதிகம் கண்ணுக்கு தெரியும். உலகம் எப்பவுமே அப்படித்தான். எத்தனையோ பேர் நல்லவங்களா பழையவற்றை திட்டமிட்டு மறைச்சு தங்களையும் உலகையும் ஏமாற்றி வாழுறாங்க. அவங்களே கெட்டவங்களாகவும் நடந்துக்கிறாங்க. நமக்கு அவை தெரியாது. தெரிஞ்சாலும் அவங்களுக்கு அது சரி என்று படும். இங்கு ஒழுக்கத்திற்கு ஒரு அளவுகோல் இடுவது மிகப் பெரிய சிரமம்.

தன்னையும் பிறரையும் பாதிக்காத செயற்பாடு பொதுவாக ஒழுக்கம் என்று கொண்டால் நன்று. அதுமட்டுமன்றி ஒழுக்கம் என்பதை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும். அதை அடுத்தவரை மையமாக வைத்தோ அளவுகோலாக வைத்தோ தீர்மானிக்கக் கூடாது.

உனக்கு நீயே.. நல்ல நீதிபதி. மனச்சாட்சியே மானசீக சாட்சி. பிறர் உனக்கு தண்டனை வழங்க அல்லது தீர்மானிக்க அவர்களுக்கு அந்தத் தகுதி கிடையாது.. இதை தான் ஒழுக்கம் என்று வரும் போது இங்கு சொல்ல முடியும்.

பொதுவாக அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அவரின் தனிப்பட்ட விடயமாக பார்க்க வேண்டும். பொது நிகழ்வுகளில் விழாக்களில் மேடைகளில் அவரின் பொது நடவடிக்கையை மட்டும் தான் நோக்க வேண்டும். அங்கு அவர் அசிங்கமாக நடந்து கொள்ளவில்லை என்றால் நாம் ஏன் அதற்காக வருந்த வேண்டும். அவங்கட தனிப்பட்ட வாழ்க்கையை நாம் ஏன் கிண்டிக்கிளறிக் கொண்டு திரிய வேணும்..??! அதனால் நமக்கு என்ன பயன்.. பொது மக்களுக்கு என்ன பயன்.

பொதுவாக பொது வாழ்க்கையில் ஈடுபடுறவங்க பலருக்கு நல்ல தனிப்பட்ட ஒழுக்கம் கிடையாது. ஆனால் நாம் அதை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் பொது இடத்தில் ஒழுக்கமாக இருக்கினமா என்பதை மட்டும் தான் நாம் நோக்க முடியும். அப்படி இல்லைன்னாத்தான் அது எங்களையும் பிறரையும் பாதிக்கும். அப்போது மட்டுமே அவர்களுக்கு தண்டனை வழங்குவது பற்றிப் பேசலாம்.. பிரேரிக்கலாம். மற்றும்படி.. அவங்கட தனிப்பட்ட வாழ்க்கையை பொது இடத்தில் முக்கியப்படுத்துவது அழகல்ல. நாகரிகமும் ஆகாது. நமக்கு அவசியமும் அற்றது. அது நமக்கு ஒழுக்கமும் அல்ல.

நமக்கு பிடிக்கல்லையா நாம் ஒதுங்கி இருந்து கொண்டால்.. நமக்கு நாம் ஒழுக்கம் உள்ளவர்களாக இருந்து கொண்டால்.. அவர்களால் நமக்கு தீமை வராது. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எனக்கு உடன்பாடு இல்லை நெடுக்ஸ்

ஆனால் நேரமின்மை காரணமாக தங்களுடன் விவாதிக்க முடியவில்லை

சமூகப்பொறுப்புடன் தாங்கள் எழுதவில்லை என்பது எனது ஆதங்கம்

அத்துடன் ஒருவருடைய தரங்கெட்ட சுதந்திரங்கள் நிச்சயம் பலரை இச்சமூகத்தை பாதிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கம் என்றால் என்ன?கிலோ என்ன விலை?

சுய ஒழுக்கம் ....ரொம்ப கஸ்டம்....... சூழ்நிலை ஒழுக்கம் பயத்தில சில ஆட்கள் ஒழுக்கமாக இருப்பினம் :D:lol:

ஜில்லின் தில்லான கருத்து எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..! :D உண்மையும் அதுதான்..! :rolleyes:

பலர் பல்லைக் கடித்துக்கொண்டு நல்ல ஆக்கள்போலை (என்னையும் சேர்த்துத்தான்) இருக்கினம் எண்டால் அதுக்குக் காரணம் சமுதாயம்தான். :) எங்கே கெட்டபெயர் வந்திடுமோ என்கிற பயம்தான் எல்லாத்துக்கும் அடிப்படை..! :D

நம்மளைப் பார்த்து அடுத்த சந்ததியும் இளமைப் பருவத்தில் ஒழுக்கத்தோடை இருந்தால் அதுவும் ஒருவகை வெற்றிதானே..! :)

ஒழுக்கம் என்றசொல்லின் அர்த்தம் தமிழனுக்கு "அது" மாத்திரம் தான்.

அதுக்குள்ள புலியின்ரை கட்டிபாட்டு பகுதியிக்க என்று வேறு உதாரணம்.சில பழையவைகளை வேணுமெண்டே மறப்பீர்களா?

எங்கள் மனம் தான் இன்னமும் பிற்போக்காக இருக்குதென்றால எமது பிள்ளைகளிடம் இருந்தாவது சிலவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பெயர்தான் நடுநிலை

கொள்கை இருக்கக்கூடாது

இலட்சியம் இருக்கக்கூடாது

ஒருவருக்கு ஆலோசனை சொல்லக்கூடாது

நாலு பேர் ஒரு கொள்கை அடிப்படையில் சேரக்கூடாது

அவரவர் தனக்கு சரியாகப்படுவதை செய்ய அனுமதித்தல்

அதாவது அவருக்கு சரியாக பட்டால் எதுவும் செய்யலாம் அதை நீ தட்டிக்கேட்கக்கூடாது

அவரது தனிதனித விருப்பங்களை தடை செய்ய நீயார்...?

அது உனது மனைவியைக்கேட்பதாக இருந்தாலும்....???

பின்நவீனத்துவம் என்பதுதான் சரியான பெயர் என்று நினைக்கின்றேன்!

உன் வழி உனக்கு. என் வழி எனக்கு. சரியான வழி, நேரான வழி, ஒரே வழின்னு எந்த புண்ணாக்கும் கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கம் என்றசொல்லின் அர்த்தம் தமிழனுக்கு "அது" மாத்திரம் தான்.

அதுக்குள்ள புலியின்ரை கட்டிபாட்டு பகுதியிக்க என்று வேறு உதாரணம்.சில பழையவைகளை வேணுமெண்டே மறப்பீர்களா?

எங்கள் மனம் தான் இன்னமும் பிற்போக்காக இருக்குதென்றால எமது பிள்ளைகளிடம் இருந்தாவது சிலவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் பிள்ளைகளிடம் இருந்து என்ன ஒழுக்கத்தை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள்??

பல பழக்க வழக்கங்கள்.

1. யாரையும் யாருடனும் ஒப்பிட்டு கதைப்பது,யாரையும் பற்றி தேவையில்லாமல் கதைப்பது.

2.ஒழிவு மறைவின்றி பேசுதல். முகம் பார்த்து பேசாமை.(அதாவது ஆட்களுக்கு தக்க மாதிரி பேசுதல்)

3, இனவாதம். (நண்பர்கள் காப்பிலியோ என மறைமுகமாக கேட்டால் அவர்கள் சொல்வது)

4.சில பழக்க வழக்கங்கள் கூட.

முக்கியமாக இவைகள் தான்..

  • கருத்துக்கள உறவுகள்

பல பழக்க வழக்கங்கள்.

1. யாரையும் யாருடனும் ஒப்பிட்டு கதைப்பது,யாரையும் பற்றி தேவையில்லாமல் கதைப்பது.

2.ஒழிவு மறைவின்றி பேசுதல். முகம் பார்த்து பேசாமை.(அதாவது ஆட்களுக்கு தக்க மாதிரி பேசுதல்)

3, இனவாதம். (நண்பர்கள் காப்பிலியோ என மறைமுகமாக கேட்டால் அவர்கள் சொல்வது)

4.சில பழக்க வழக்கங்கள் கூட.

முக்கியமாக இவைகள் தான்..

உண்மைதான்.நன்றிகள்.

ரதி,

நீங்கள் கூறிய 3 மே பெண்ணின் 'கற்பு' நிலை சார்ந்த விடயங்களாக இருக்கு, ஒழுக்கம் என்பதை எப்பவுமே பெண்கள் மீது திணிக்கும் சமூகமாகவே இன்றும் நாம் இருக்கின்றோம். இந்த மூன்றிலும் சம்பந்தப் பட்ட ஆண்கள் பற்றி எந்த விதமான ஒழுக்க எதிர்பார்ப்பும் இல்லை. ஒரு பெண் கணவரை விட்டு ஓடினால் அது அந்த பெண்ணின் ஒழுக்கம் சார்ந்ததாக மட்டுமே பார்க்கப்படுவது எமது வந்குரோத்தனமான சிந்தனை. ஒரு பெண்ணோ ஆணோ தம் துணையை மீறி இன்னொருவருடன் போனால் அதற்கான 50 வீத காரணம் அவரின் துணையிலும் தங்கி இருக்கும்

எம் சமூகத்தில், கள்ள காட் அடித்து பணக்காரனாகியவனுக்கு, Agency வேலை செய்து பலரை ஏமாற்றி பணம் சுருட்டியவனுக்கு, தூள் கடத்தில் கோடீஸ்வரன் ஆகியவனுக்கு, தரமற்ற பொருட்களையும் expired ஆனா உணவு வகைகளையும் வைத்து வியாபாரம் செய்பவனுக்கு, வரி ஏய்ப்பு செய்து தன்னை பெரிய தந்திர சாலியாக காட்டி கொள்பவனுக்கு, புலிகளுக்கு என சேர்த்த காசில் உல்லாசமாக வாழ்பவனுக்கு, சாதி வெறி கொண்ட எண்ணற்றவர்களுக்கு எல்லாம் நாம் எல்லா மரியாதையும் தருகின்றோம். அவன் கோயிலில் பெரிய பூசை அல்லது திருவிழா செய்தால் அதனை பெரிய விடயமாக கதைப்போம். இப்படியான சமூகத் துரோகிகளுக்கு மரியாதை கொடுத்துக் கொண்டு, தம் குடும்ப வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு ஏற்ப, முடிவுகளை எடுக்கும் பெண்களிடம் மட்டும் 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்ப்போம்

Edited by நிழலி

ஏன் கலைஞன் இப்படி எழுதுகிறீர்கள்?...எமது சமுதாயத்தில் உள்ள அனைவருமே ஒழுக்கம் கெட்டவர்களா என்ன?

சட்டவிரோதமாக எதையாவது செய்தால் அதைப்பார்ப்பதற்கு சட்டம் உள்ளது. தனிநபர் ஒருவர் பாதிக்கப்படும்போது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு மேலாக உடனடியாக ஏன் சமுதாயம் மூலமாக தண்டனை என்று பாய்கின்றீர்கள்? ஆங்கிலத்தில் Prejudice என்று ஓர் வார்த்தை உள்ளது. அதன் தமிழ்ச்சொல் தெரியவில்லை. உங்கள் முறைப்பாட்டை பார்க்கும்போது மேற்கண்ட வார்த்தை நினைவில் வந்தது.

ஒவ்வொரு நாட்டின் வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் இடத்திற்கு இடம் வேறுபடும். இதற்கு அமையவே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள நம்மவரின் ஓர் விடயத்தை அணுகும்போது வன்னி போரியல் வாழ்வின் சட்டதிட்டங்கள் பற்றி பேசுவது பொருத்தமானது இல்லை.

நேற்று ஒருவர் எனக்கு கூறினார் Anarchy அமைப்பு நமது கனடா நாட்டில் தேவை என்று. இங்குள்ளவர்கள் எப்படி கட்டற்ற சுதந்திரத்துடன் வாழலாம் என்று பார்க்கின்றார்கள். நாம் எப்படி கட்டுப்போடலாம் என்று பார்க்கின்றோம்.

"ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம்; அதன் உள்ளே இருப்பதெல்லாம் ஈரும், பேனாம்"

முதுமொழிகள் அந்தமாதிரி உள்ளது. :rolleyes:

Edited by கரும்பு

வேலை வெட்டியில்லாமல் அடுத்தவன் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பது, விடுப்பு புடுங்குவது, விளக்கு பிடிப்பது இவைதான் முதன்மையான ஒழுக்கக் கேடு. தமிழரின் ஒழுக்கத்தில் 90 வீதமும் பாலியல் உறவை முன்வைத்துத்தான் இருக்கின்றது. இதற்கு காரணம் கால காலமாக சாதியத்தை தக்கவைப்பதற்காக உடற்சேர்க்கையை இறுக்கமான நிலையில் வைத்திருந்து பழக்கப்பட்ட நிலைதான். இதனடிப்படையில் பெண்ணுக்கே ஒழுக்கம் பெருமளவு திணிக்கப்படுகின்றது. சமுதாயம் என்பதும் அதற்கான வரையறைகள் நீதி நெறிகள் எல்லாம் எம்மைப் பொறுத்தவரை ஏகமக்களுக்குமானதில்லை. சாதியாலும் அந்தஸ்த்தாலும் உயர்ந்தவன் வைத்ததுதான் அவைகள். அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. சமுதாயம் என்பதை முன்நிறுத்தி ஒழுக்கத்தை பற்றி பேசுவது மிகத் தவறானதும் கண்டிக்கத் தக்கதுமாகும். புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் ஒழுக்கம் குறித்து அந்தந்த நாடுகளின் சட்டங்கள் என்ன வரையறையை வைத்திருக்கின்றதோ அதையே பேணவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"சுயபரிசோதனை" உதில சொல்லுறதுக்கு ஒண்டும் இல்லை. நான்கூட சந்தர்ப்பம் கிடைத்தால் தவறுவிட ஆயத்தம்தான், பிறகெதுக்கு! ஆதலினால் என்னாலை ஒண்டும் சொல்லமுடியாது. காரணம் நான் அப்பிடியொண்டும் நல்ல பண்டமில்லை.

. இதற்கு காரணம் கால காலமாக சாதியத்தை தக்கவைப்பதற்காக உடற்சேர்க்கையை இறுக்கமான நிலையில் வைத்திருந்து பழக்கப்பட்ட நிலைதான். . சாதியாலும் அந்தஸ்த்தாலும் உயர்ந்தவன் வைத்ததுதான் அவைகள்.

தமிழனின் அரசியலுக்கும் சரி ,தமிழனின் சாதாரன வாழ்க்கைக்கும் சரி " சாதி" தான் முக்கிய காரணம் சாதி இல்லாட்டி தமிழன் உலகையே ஆண்டிருப்பான் என்று சொல்லினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி ஒரு தம்பதியினர் பிரிந்தால் அங்கே ஆணைக் குற்றம் சொல்ல மாட்டார்கள்[அந்த ஆணில் தான் பிழை எனத் தெரிந்தால் கூட] பெண்கள் மீது தான் முழுப் பழியையும் போடுவார்கள்.இது பற்றி நான் ஏற்கனவே சமூக சாளரத்தில் எழுதியுள்ளேன்.

நான் கேட்டது சமூகத்தில் ஆணோ,பெண்ணோ அவர்கள் குற்றம் புரிந்த பிறகும் சமுகம் அவர்களை மதிக்குமாயின் பிறகு நாங்கள் ஏன் ஒழுக்கமாய் இருக்க வேண்டும்.....காசு,படிப்பு,அழகு இருந்தால் எப்படியும் இச் சமுதாயம் எங்களை மதிக்கத் தான் போகிறது பிறகு ஏன் அடக்கமாகவும்,ஒழுக்கமாகவும் நாங்கள் இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆதங்கம்...நெடுக்ஸ் எழுதியதும் நீங்கள் எழுதியதும் கிட்ட தட்ட ஒன்டு தான். நீங்கள் பெண்களிடம் மட்டும் ஏன் ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள் என எழுதியுள்ளீர்கள் நெடுக்ஸ் தாங்கள்,தாங்கள் சுய ஒழுக்கமாய் இருந்திட்டால் பிரச்சனை இல்லை மற்றவர் செய்வதை என்னத்திற்கு பார்ப்பான் என எழுதியுள்ளார்.மொத்தத்தில் உங்க்ள் இருவருக்கும் ஒழுக்கம் முக்கியம்.

கலைஞன் நாங்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்ப எமது கலாசாரம்,பண்பாடு வேறு பட்டாலும் நாங்கள் அடிப்படையில் தமிழர்கள் தானே.அநேகமாய் இங்கு கருத்து எழுதியவர்கள் அனைவரும் எழுதியது அடித்தவரின் விடயத்தில் மூக்கை நுழைக்க கூடாது,அவர்களது தனிப்பட்ட விடயம் அவர்கள் என்னவும் செய்து விட்டுப் போகட்டும் என்டு தான் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் அவர்களை சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வைக்கும் போது தான் யோசிக்க வைக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சுயபரிசோதனை" உதில சொல்லுறதுக்கு ஒண்டும் இல்லை. நான்கூட சந்தர்ப்பம் கிடைத்தால் தவறுவிட ஆயத்தம்தான், பிறகெதுக்கு! ஆதலினால் என்னாலை ஒண்டும் சொல்லமுடியாது. காரணம் நான் அப்பிடியொண்டும் நல்ல பண்டமில்லை.

சந்தர்ப்பம் பல கிடைத்தும் பிழை விடாதவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தான் உண்மையில் ஒழுக்கமானவர்கள் ஆனால் அவர்களுக்கு இச் சமுதாயத்தில் மதிப்பு இல்லை என்பது என் கருத்து.

ஜில்லின் தில்லான கருத்து எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..! :D உண்மையும் அதுதான்..! <_<

பலர் பல்லைக் கடித்துக்கொண்டு நல்ல ஆக்கள்போலை (என்னையும் சேர்த்துத்தான்) இருக்கினம் எண்டால் அதுக்குக் காரணம் சமுதாயம்தான். :D எங்கே கெட்டபெயர் வந்திடுமோ என்கிற பயம்தான் எல்லாத்துக்கும் அடிப்படை..! :D

நம்மளைப் பார்த்து அடுத்த சந்ததியும் இளமைப் பருவத்தில் ஒழுக்கத்தோடை இருந்தால் அதுவும் ஒருவகை வெற்றிதானே..! :wub:

அட்லீட்ஸ் பயத்தை காரணம் காட்டியாவது ஒழுக்கமாய் இருக்கிறீர்களே :lol::D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.