Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொலிசார் அனுமதியளித்துள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா உங்களுடைய கருத்திற்கு நன்றி.

ஒருவர் எழுதும் கருத்தை முழுமையாக வாசித்துவிட்டு உங்கள் கருத்தை அறிவுரையாக மற்றவர்களுக்கு வழங்கவும். சும்மா நுனிப்புல் மேய்ந்தது கணக்கில் வாசித்துவிட்டு கருத்தெழுதுவதை கொஞ்சம் திருத்திக் கொண்டால் நல்லது. மக்கள் எழுச்சிக்குத் தடைபோட வேண்டாம் என்று எழுதப்பட்டிருப்பதை நீங்கள் வாசிக்கவில்லையோ?

  • தொடங்கியவர்

அகூதா உங்களுடைய கருத்திற்கு நன்றி.

ஒருவர் எழுதும் கருத்தை முழுமையாக வாசித்துவிட்டு உங்கள் கருத்தை அறிவுரையாக மற்றவர்களுக்கு வழங்கவும். சும்மா நுனிப்புல் மேய்ந்தது கணக்கில் வாசித்துவிட்டு கருத்தெழுதுவதை கொஞ்சம் திருத்திக் கொண்டால் நல்லது. மக்கள் எழுச்சிக்குத் தடைபோட வேண்டாம் என்று எழுதப்பட்டிருப்பதை நீங்கள் வாசிக்கவில்லையோ?

நான் உங்கள் முழுமையான கருத்துக்கு பதில் எழுதவில்லை, பதிலில் உங்கள் பெயரையும் எடுத்துவிட்டிருந்தேன். காரணம், நான் கூற வந்த கருத்து, அந்த " ... " குள் இடப்பட்டதை, அதற்கு மட்டுமே.

மற்றும்படி உங்கள் கருத்துடன் இணங்கி இருந்தேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எது சரியாத் தோன்றுகின்றதோ, அதைச் செய்யுங்கள் உறவுகளே!

இன்றைய காலப்பகுதியில் வீதிக்கு வா! என்று கூப்பிட்டால் எத்தனைபேர் தயாராக இருக்கின்றார்களோ தெரியாது. அப்படியான நிலை இருக்கும்போது, நீங்கள் செய்யும்போது, உங்களை இழக்க நாங்கள் விரும்பவில்லை.

தமிழனின் வரலாறுகள் என்பது தொடர்ச்சியில் தான் இருக்கின்றது. ஒரு போராட்டம் என்பது முறியடிக்கப்பட்டாலும், அதை இச் சமயத்தில் எங்களால் தொடரமுடியாமல் போகலாம். ஆனால் அடுத்தடுத்த தலைமுறையிடம் அதை ஒப்படைக்க வேண்டிய தேவையை கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் வெற்றி தோல்விக்கான காலம் குறுகியது. ஆயிரம் ஆண்டுகள் முன்பு ராஜராஜசோழன் வாழ்ந்தான் என்கின்றோம். அது வெறும் 30 தலைமுறை கூடத் தாண்டாத காலப்பகுதி. ஆனால் அதன் பின்னர் எத்தனையோ தோல்விகள் வெற்றிகள்.....

அவ்வாறு தான் சோழர்கள் தங்களின் பெரும்வெற்றிக்காக 100 ஆண்டுகள் தலைமுறை தலைமுறையாகப் பயிற்சி பெற்றுக் காத்திருந்தார்கள் என்பதும் எங்கோ படித்திருந்த வாக்கியம்.

இந்தப் புத்தி சொல்கின்ற எவருமே, வீதிக்கு வரப்போவதில்லை. ஆனால் தந்திரத்தோடு உணர்ச்சிவசப்படாமல் நடப்பதும் நன்றே. கருணாவை லண்டனில் கோவிலில் கண்டு பிடித்துக் கொடுத்ததால் ஒரு வருடம் உள்ளே இருந்த அவன் பிற்பாடு எதிரியோடு திரும்பவும் சென்று இறுதிச் சமர் காலத்தில் துணை நின்றான். இது எங்களின் தப்பல்ல... ஆனால் சில விளைவுகள் எமக்கெதிராகத் திரும்ப காரணமாக இடம் கொடாமலும் இருப்போம்.

புலிக்கொடி தூக்குவது என்பது எப்போது புலி ஆதரவாளர்களாக உலகுக்கு இனம் காட்டும் என்பது வெறும் 100, 200 பேர் நின்று ஆர்பாட்டம் செய்வது தான். 50 ஆயிரம், ஒரு லட்சம் பேர் நின்றால் அதை ஊடகங்கள் மக்கள் எழுச்சியாகத் தான் காணும். இப்படி மக்கள் கூடாமல் புலி எழுச்சியாகக் காட்ட நாங்கள் தானே இடம் கொடுக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஆமாம் போடுகின்றேன் தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

James Kingston

President

Oxford Union Society

Dear James Kingston,

Your Union is the world's most prestigious debating society, with an unparalleled reputation for bringing international guests and speakers to Oxford. It has been established for nearly 2 centuries, aiming to promote debate and discussion not just in Oxford University, but across the globe. Twelve British Prime Ministers have been Members or Officers of the Union and many others have been Cabinet Ministers. But you maybe at threat of tarnishing your esteemed reputation by inviting a suspected war criminal into your midst.

As you may well know May 2009 marked the atrocious end of the 60 year old armed conflict in Sri Lanka. A disturbing video provided to the media last year showing the apparent summary execution of prisoners by Sri Lankan soldiers underscores the need for an international commission of inquiry into possible war crimes committed - http://www.hrw.org/en/news/2009/08/26/sri-lanka-execution-video-shows-need-international-inquiry Evidence gathered by the International Crisis Group suggests that the final months of the war saw over 40 thousand of Tamil civilian men, women, children and the elderly killed, countless more wounded, and hundreds of thousands deprived of adequate food and medical care, resulting in more deaths. - http://www.crisisgroup.org/en/regions/asia/south-asia/sri-lanka/191-war-crimes-in-sri-lanka.aspx This evidence also provides reasonable grounds to believe the Sri Lankan security forces committed war crimes with top government and military leaders potentially responsible.

President Rajapaksa, his brothers who hold various senior roles in government and the armed forces have been breaking International Humanitarian Laws and Human Rights Laws as well as crimes against humanity. The UN Expert Panel has called for evidence on alleged violations in Sri Lanka, and it is in progress - http://www.amnesty.org/en/news-and-updates/international-inquiry-needed-address-alleged-war-crimes-sri-lanka-2010-10-14 The Government of Sri Lanka are also in the process of carrying out their own tribunal called the Lessons Learned & Reconciliation Commission (LLRC) but obviously this commission not only fails to meet basic international standards for independent and impartial inquiries, but it is proceeding against a backdrop of government failure to address impunity and continuing human rights abuses. In addition to these broader failings of the government, Amnesty International, Human Rights Watch & International Crisis Group believe that the LLRC is deeply flawed in structure and practice. - http://www.amnesty.org/en/library/info/ASA37/015/2010/en

Other informative articles that I strongly suggest you read are:

http://www.channel4.com/news/sri-lanka-execution-video-evidence-of-war-crimes

http://www.innercitypress.com/sri2unfollow050910.html

http://www.innercitypress.com/un5ngoglbt060310.html (article 3)

As of 7.30pm GMT on Tuesday 30th November 2010 new evidence has been received by channel 4 news portraying the appalling behaviour of the sri lankan armed forces. http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims The video shows the same incident as one aired 16 months ago by Channel 4 News which showed the execution of bound men on a muddy track, purportedly defeated Tamil prisoners. A UN investigation later found that the video "appeared authentic". The new video seems to show the same incident but rather than stopping after the execution of a second bound man, it continues and the camera pans left reveals the naked and dead bodies of at least seven women, with accompanying dialogue from onlookers who make lewd and callous comments which seem strongly suggest that sexual assaults have taken place before the death of the women.

As the head of state and commander in chief of the Sri Lankan Armed forces Mahinda Rajapaksa is wholly responsible for crimes committed subsequently he should be tried in an international criminal court for war crimes. Does Oxford Union really want to lower their celebrated reputation by inviting the war criminal President Rajapaksa? I hope you can support the Tamils in our fight for justice.

Yours sincerely,

Agni Subramaniam

Executive Director, MANITHAM - Human Rights Org.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நிர்மலன்..

உங்களுக்கும் புலிக்கும் பிரச்சனையோ...??!

புலி புலி புலி... இதுதானா உங்களின் பிரச்சனை. கடந்த 60 ஆண்டுகளாகத்தான் உலகம் நம்மட பிரச்சனையைக் கண்டுகொள்ளேல்ல.. ஏதோ புலிக்கொடியை பிடிக்கிறதுதான் உலகம் நம்மளக் கண்டுகொள்ளாததற்குக் காரணம் என்பதாப் போல சொல்லுறதுதான் சுத்த அறிவிலித்தனமாக இருக்கிறது.

புலிக்கொடி.. தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாற்றியல் சின்னம். அதை தூக்கி எறியவோ.. தவிர்த்து வைக்கவோ சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது.

எனக்குப் புரியல்ல.. உணர்ச்சியற்ற அறிவுபூர்வமான போராட்டம் என்றால் என்ன...

மகிந்தவோடு கூடிப் பேசி.. வைன் அடிச்சிட்டு.. இணக்க அரசியல் செய்வதா...???!

அறிவு சார்ந்து போராட்டத்தின் பக்கங்களை நகர்த்த வேண்டியது தமிழ் புத்திஜீவிகளின் கடமை. மக்களது கடமை அல்ல. மக்கள் எப்போதும் உணர்ச்சிக்கு முக்கியமளிப்பவர்களாகத்தான் எங்கும் இருக்கின்றனர். அதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புலியால் தான் இந்தியா உதவவில்லை.. புலிக்கொடியால் தான் அமெரிக்கா உதவவில்லை என்பதெல்லாம் சாட்டு. புலிகள் முக்கியம் பெற முதலும் தான் இந்த நாடுகள் எமக்கு உதவவில்லை.

செல்வநாயகம் இந்தியா இந்தியா என்று பறந்து போட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட போதும்.. இந்தியா ஒன்றும் வெட்டிப்புடுங்கல்ல.. அமெரிக்கா ஒன்றும் செய்யேல்ல.

இன்று புலிக்கொடிதான் உலகம்.. கொஞ்சம் என்றாலும் எங்கள் மீது ஒரு கவனத்தை செலுத்த வைத்துள்ளது.

உலக ஊடகங்களில் 30 வருடமாக தனிநாடு கேட்டுப் போராடிய புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்பதும்.. அவர்களை தோற்கடிக்க சிறீலங்கா அரசு மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதாகவுமே செய்திகள் சொல்கின்றன.

எங்கும் தமிழர்கள் மீது இனக்கலவரங்கள் நடந்தததாகச் சொல்லி செய்தி போடுவதில்லை. தமிழர்கள் சிங்களவர்களால் 1952 இல் இருந்து துன்புறுத்தப்படுகிறார்கள் என்று எங்கும் செய்தி கிடையாது.

அடிப்படையில் அறிவுபூர்வமாக நோக்க வேண்டின்.. புலிக்கொடியின் உயர்ச்சியில் தான்.. தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வும் அதன் நிரந்தரத்தன்மையும் தங்கியுள்ளது.

நெல்சன் மண்டேலா பயங்கரவாதி என மேற்குலகால் சொல்லப்பட்டதற்காக தென்னாபிரிக்க கறுப்பின மக்களும் அவரையும் அவர் சார்ந்த கட்சியையும் அதன் கொடியையும் பழித்துக் கொண்டோ.. அல்லது அதை புறக்கணிப்பதுதான் அறிவு பூர்வம் என்றோ சொல்லித் திரியவில்லை.

புலிக்கொடியை கைவிடுவதென்பது தமிழர்களின் ஒன்றுதிரண்ட பலம் புலிகளின் கொள்கையொடு இருந்தது என்பதை இல்லாமல் செய்து தமிழர்களை சிங்களவர்களுக்கு அடிமையாக வாழச் செய்யும்... அதையே நிர்மலன் போன்ற புத்திசீவிகள் சிங்கள விசுவாசத்தின் பெயரால் செய்ய விளைகின்றனர்.

1952 களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்ட போதும்.. நாம் இணக்க அரசியல் தான் செய்தோம். அறிவு ஜீவ.. சன நாய் அக அரசியல் செய்தோம். எதை சாதித்தோம்...???! ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு வழி செய்தோம்... அதையும் எண்ணிப் பாருங்கள்.

இன்று நாம் இழக்கக் கூடாத அனைத்தையும் இழந்து பெற்றுள்ள ஒன்றே புலிக்கொடி. அதன் தாழ்வு என்பது.. நாம் இழந்தவற்றிற்கு அர்த்தமற்ற ஒரு நிலையையே ஏற்படுத்தும். எப்படி தென்னாபிரிக்க தேசிய விடுதலைப் போராட்டம் பின்னடைவுகளூடு வெற்றியை நோக்கிப் போனதோ அதே பாதையில் பயணிக்க வேண்டியதே இன்றைய எமது தேர்வு.

மக்கள் அறிவுஜீவிகளாக இருப்பது என்பது சாத்தியமில்லை. மக்கள் உணர்வுபூர்வமாக இருக்கட்டும். அறிவுஜீவிகள் அறிவுபூர்வமாகச் செயற்படட்டும். இரண்டு செயற்பாட்டுப் புள்ளிகளும் சந்திக்க வேண்டிய இடம் ஒன்றாக அமையட்டும். வேறு வேறு திசையில் செல்லாத நிலையே இன்று அவசியம். எமது ஒற்றுமையும் கொள்கையில் உறுதித்தன்மையும் சர்வதேச நியமங்களோடு எமது கொள்கைக்கான நியாயத்தை சர்வதேசமயப்படுத்தி எமது பொது எதிரியினை இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தி சர்வதேச ஆதரவோடு கொள்கையை வெல்வதே எமக்கு அவசியம்.

இதற்கு புலிக்கொடி எந்த வகையிலும் தடை கிடையாது. <_<

இவ்வளவு நாளும் நாம் செய்த ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்கள் எல்லாவற்றிக்கும் புலிக் கொடி பிடித்துக் கொண்டு சென்றோம் அதையே நொண்டிக் காரணம் காட்டி எல்லா நாடுகளும் தடை செய்த அமைப்புக்கு ஆதரவாக செயற்படும் எங்களுக்கு தங்களால் உதவ முடியாது என சொன்னார்கள்.இனி மேல் கொடி இல்லாமல் வன்முறை அற்ற முறையில் செய்து பார்ர்ப்போம் அதற்கு வெளி நாட்டு அரசுகள் என்ன சொல்கிறது[செய்யப் போகிறது] என பார்ப்போம்.எதையுமே படிப் படியாகத் தான் வழிக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வளவு அழிவுக்குப் பிறகும் எடுத்தேன்,கவிழ்த்தேன் என நடப்பது சரியில்லை.முதலில் மகிந்தாவின் சிங்கள இனவாத அரசிற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் அதற்கு கொடி பிடித்துக் கொண்டு போனால் நிச்சயமாய் சரி வராது என்பது என் கருத்து.

கொடியில்லை இங்கு பிரச்சனை.கொடி யாரை அடையாளப்படுத்துகின்றதென்பது தான் பிரச்சனை.

உலகம் புலிகளை பயங்கரவாத பட்டியலில் போட்டுட்டுது.உலகம் என்ன திறமோ என கேட்கலாம்.சரி பிழையான உலகம் தான் அப்படியென்றால் நாங்கள்பின்னர் அவர்களிடம் உதவி கேட்டு போகக்கூடாது.இதுவே தான் இந்தியாவுடனான எமது நிலைபாடும்.

பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ அவர்களிடம் தான் நாங்கள் நியாயம் கேட்க போக வேண்டும்.அவர்கள் தான் ஏதோ ஒரு தீர்வை எங்களுக்கோ அல்லது ஒரு தண்டனையை சிறிலங்கா அரசுக்கோ வழங்கக்கூடியவர்கள்.உலகத்தில பிழை பிடிப்பதைவிட்டு எமக்கு காரியம் நடக்க வேண்டும் என்றால் அனுசரிக்க வேண்டியவர்களை அனுசரித்து முதலில் சிங்களத்திற்கு ஆப்பு வைக்க வேண்டும்.

அடுத்தது புலிக் கொடி மாத்திரம் அல்ல அதை முன்னிறுத்தியவர்களும் உலகிற்கு நன்கு பரிட்சயமானவர்கள்.கொலைகலாச்சாரத்தை நியாயப்படுத்தியவர்களாகவே உலகம் இவர்களையும் பார்க்கின்றது.தாங்கள் அதிகாரத்தில் இருக்கும் போது எள்ளளவும் தங்களை மதிக்காத இவர்களில் இப்போது எப்படி நாம் அனுதாபம் காட்டுவது என யோசிக்கின்றார்கள்.

சிங்களம் எங்களுக்கு இவ்வளவு அநியாயம் செய்தும் அவர்களை நாங்கள் இன்று கூண்டில் ஏற்ற முடியமலிருப்பத்தற்கு காரணம் எமது கடந்து வந்த பாதையே.இன்றும் நாங்கள் செய்ததும் சரி,செய்வதும் சரி என்று முரண்டுபிடித்தால் ஒரு காலமும் நாங்கள் வெல்லப் போவதில்லை.

ஒன்றுக்கும் கட்டுப்படாத காட்டுமிராண்டி இனமாக ஒதுக்கப்பட்டுவிடுவோம்.(இதைத்தான் இன்றைக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் தமது சுயநலம்கருதியும்,தமது இருப்பின் தேவைக்காகவும் தொடர்கின்றனர்)

ஊடகங்களை திறந்தால் எங்கும் ஒரே இனவாதமும் வெட்டு,குத்து கதையும் தான்.எவ்வளவு தோற்றாலும் ஏதோ நாங்கள் வென்றுகொண்டேயிருக்கின்றோம் எனபினாத்தல்.

சிங்களத்தை வெல்வதானால் இவர்கள் முதல் இல்லாமல் போக வேண்டும்.நாட்டில் இருப்பவர்கள் ஏதோ தங்களுக்கு தெரிந்ததை செய்யட்டும் அவர்களிவிட்டுவிடுங்கள்.

  • தொடங்கியவர்

மகிந்தரை இப்போதைக்கு கூண்டில் ஏற்றுவது கடினம். அவருடன் கூடவே வந்திருப்பவர்களை கைது செய்வது சாத்தியம்.

அப்படியான ஒரு நிகழ்வு நடக்கும்போது மகிந்த குடும்பத்துக்குள் , நண்பர்களுக்குள் பிரச்சனை வரும், பிளவு வரும். அவர்களே ஆதாரங்களை வெளிவிடுவர்கள். ஆளை ஆள் காட்டியும் கொடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்மலன் சொல்வது மாதிரி இந்த முறை கொடி பிடிப்பதை தவிர்க்கலாம். அப்படித் தவிர்த்தால் அநேக ஊடகங்களில் முக்கிய செய்தியாக இது வெளி வரும். கொடியோடு ஆர்ப்பாட்டம் செய்யும் போது தான் ஒருதரும் திரும்பி பார்க்கவில்லை கொடி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்து பார்க்கலாம் யாராவது திரும்பி பார்க்கிறார்களா என

ஒருபக்கம் எமக்கு ஆதரவு அனுமதி எல்லாம் தந்துவிட்டு மறுபுறம், மகிந்தா புலி வருது என்று அலற, அவனை பத்திரமாய் கூட்டி செல்வார்கள்.

எமது தேசியகொடி புலிக்கொடி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த கொடியை புலி என்றும், புலிகளால் மகிந்தவுக்கு ஆபத்து வரலாம் என்றும் பிரித்தானிய போலீசார் விமானநிலையத்தில் கொடுத்து முழு பாதுகாப்பு வழங்கி பத்திரமாக கூட்டி சென்றனர். புலிக்கொடியை காட்டியே மஹிந்த எம்மை நாம் வாழும் நாடுகளில் இருந்தும் அன்னியபடுத்த பார்கிறான். வெற்றியும் பெறுகிறான். நாம் ஓரளவுக்கு வென்றி பெற்ற பின்பு எமது தேசியகொடி பிடிக்கலாம். புலிக்கொடியைத் தாங்கிச் செல்லாது தமிழீழத் தேசியக்கொடியைத் தாங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி, நிர்மலன் சரியாக சொன்னீர்கள்.

ஒருபக்கம் எமக்கு ஆதரவு அனுமதி எல்லாம் தந்துவிட்டு மறுபுறம், மகிந்தா புலி வருது என்று அலற, அவனை பத்திரமாய் கூட்டி செல்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் உங்களின் வாதத்துக்கு என்னால் மட்டுமல்ல பலராலும் எதிர்வாதம் புரியமுடியும்.

புலிக்கொடியை தவிர்த்து நாம் சென்றிருப்போமேயானால் சரத் பொன்சேகா, ஜே.வி.பி. ஆதரவாளர்கள் உள்ளிட்ட எம்மிடையே இருக்கக்கூடிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் பலரும் ஒன்றுதிரண்டிருக்கக்கூடும்.

புலிக்கொடியை சிறிது காலத்துக்கு அனைத்து இடங்களிலும் தவிர்த்துவிட்டு போராட்டத்தினை நடத்திப் பாருங்களேன். (புலிக்கொடியைக் காரணம் காட்டித்தான் கனடிய மற்றும் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகள் எமது போராட்டத்துக்கு ஆதரவு தரவில்லை என்பதனை நினைவில் வைத்திருங்கள்)

மீண்டும் கூறுகின்றேன், அவ்வாறானதொரு போராட்டத்தினை புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தமுடியாது. அப்படி ஒரு போராட்டம் நடத்தப்பட்டாலும் அல்லது எந்தவொரு அமைப்புச் சாராத தரப்பினரும் நடத்தினாலும் புலிக்கொடிகளை சட்டைப்பைக்குள் இருந்து தூக்கி தமது தீவிர விசுவாசத்தினைக் காட்ட புலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் புலிகளின் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தயங்கவும் மாட்டார்கள். ஏனெனில் இதுதான் கடந்த காலத்தில் நடத்திருக்கின்றது. (கனடா, அவுஸ்திரேலியாவில் இவ்வாறான குழப்பத்தினை இதே புலிகளின் கட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கின்றனர்)

பிரித்தானியாவில் நேற்று முன்நாள் நடைபெற்றதும் அவ்வாறுதான் என இந்தப் புலிக்கொடியை சற்றும் எதிர்பாராத எனது நண்பர்கள் கூறி வருத்தப்பட்டனர் என்பதனை இந்த இடத்தில் பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன்.

உங்களது நண்பருக்கு புலிக் கொடியால் என்ன வருத்தம்? புலிக் கொடி பிடிப்பதால் பிரித்தானியாவில் எவருக்கும் ஒரு வருத்தமும் இல்லை.புலிக் கொடி பிடிப்பதற்கான ஒருவரின் உரிமையை உங்கள் நண்பர் எங்கனம் மறுதலிக்கலாம்? அவ்வாறு மறுதலிப்பது எங்கனம் ஜனனாயகமானது? பிரித்தானியா ஒரு ஜனனாயக நாடு .உங்கள் பாசிசத் தனமான எண்ணங்கள் சிறிலங்காவில் சரிவரலாம் இங்கு அல்ல.எனக்குத் தெரிந்த நண்பர்கள் எவரும் அவ்வாறு சொல்லவில்லை.உங்கள் நண்பர் புலிக் கொடி பிடிக்காத போராட்டாத்தை நடத்தலாம், எத்தினை பேர் வருவார்கள்? எவரும் இல்லை.

சிலரின் பார்வைக்கு

//In 2007, amid similar outrage over the Oxford Union’s invitation to Holocaust denier David Irving and British far right leader Nick Griffin triggered protests. The event was disrupted when angry students surge into the venue and resumed when they were later persuaded to leave.//

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் உங்களின் வாதத்துக்கு என்னால் மட்டுமல்ல பலராலும் எதிர்வாதம் புரியமுடியும்.

புலிக்கொடியை தவிர்த்து நாம் சென்றிருப்போமேயானால் சரத் பொன்சேகா, ஜே.வி.பி. ஆதரவாளர்கள் உள்ளிட்ட எம்மிடையே இருக்கக்கூடிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் பலரும் ஒன்றுதிரண்டிருக்கக்கூடும்.

புலிக்கொடியை சிறிது காலத்துக்கு அனைத்து இடங்களிலும் தவிர்த்துவிட்டு போராட்டத்தினை நடத்திப் பாருங்களேன். (புலிக்கொடியைக் காரணம் காட்டித்தான் கனடிய மற்றும் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகள் எமது போராட்டத்துக்கு ஆதரவு தரவில்லை என்பதனை நினைவில் வைத்திருங்கள்)

மீண்டும் கூறுகின்றேன், அவ்வாறானதொரு போராட்டத்தினை புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தமுடியாது. அப்படி ஒரு போராட்டம் நடத்தப்பட்டாலும் அல்லது எந்தவொரு அமைப்புச் சாராத தரப்பினரும் நடத்தினாலும் புலிக்கொடிகளை சட்டைப்பைக்குள் இருந்து தூக்கி தமது தீவிர விசுவாசத்தினைக் காட்ட புலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் புலிகளின் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தயங்கவும் மாட்டார்கள். ஏனெனில் இதுதான் கடந்த காலத்தில் நடத்திருக்கின்றது. (கனடா, அவுஸ்திரேலியாவில் இவ்வாறான குழப்பத்தினை இதே புலிகளின் கட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கின்றனர்)

பிரித்தானியாவில் நேற்று முன்நாள் நடைபெற்றதும் அவ்வாறுதான் என இந்தப் புலிக்கொடியை சற்றும் எதிர்பாராத எனது நண்பர்கள் கூறி வருத்தப்பட்டனர் என்பதனை இந்த இடத்தில் பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன்.

சரத் பொன்சாக்காவின் ஆட்களும் ஜே விபி ஆட்களும் மகிந்தவோடு கூட நின்றுதான் தமிழின அழிப்பை செய்தார்கள். அவர்கள் ஒன்றும் புத்தரால் புனிதப்பட்டு நிற்கவில்லை. சரத்பொன்சேகாவும் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு போர்க்குற்றவாளி. அவனும் தண்டிக்கப்பட வேண்டியவனே..!

புலிக்கொடி என்பது தமிழர்களின் தேசிய அடையாளச் சின்னம். அது வரலாற்றுத் தொன்மைகளோடு தொடர்வது.

அதை புறக்கணிப்பதால்.. நாம் எமது நிலைப்பாட்டை இழக்கிறோம் என்பதுதான் பொருள். அதை அங்கீகரிக்க பட்ட பாடுகள் பல.

கீத்ரோவுக்குள் புலிக்கொடி பறப்பதை பிரிட்டிஷ் பொலிஸாரே தடுக்காத போது.. உங்களின் நண்பருக்கு வருத்தம் வருவது வேடிக்கையாக உள்ளது. இந்த அங்கீகாரத்துக்காக உயிர்விட்ட எம்முறவர்களை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். அந்தக் கொடியை உயிராக நேசித்த மக்களை எண்ணிப்பாருங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க அங்கீகாரம் பெற உதவி நில்லுங்கள்.

அர்ச்சுன்..

புலிக்கொடி வன்முறை நிறைந்ததாக தென்பட்டால்.. அமெரிக்க அரச இலட்சனை கழுகு மட்டும் என்ன சாந்தமாகவா தெரிகிறது. ஜனநாயகமாகவா தெரிகிறது. அந்த மக்கள் அதை அங்கீகரிப்பது போல எமக்கு எமது வரலாற்றுத் தொன்மையோடு கூடிய இலட்சினையை அங்கீகரிக்க உரிமை உண்டு.

வாளேந்திய சிங்கத்தோடு சிங்களக் கொடி பறக்க முடியும் என்றால்.. அதில் வன்முறையை உங்களால் இனங்காண முடியவில்லை என்றால்.. புலிக்கொடி பற்றியும் விமர்சிக்க உங்கள் போன்றவர்களுக்கு அருகதை உண்டா என்ற கேள்வியும் முளைக்கிறது.

வேண்டும் என்றால் தாடி அண்ணனின் வீணையை வைச்சு முகாரி வாசியுங்கோ... மகிந்தவை பிரிட்டன் கைது செய்தாலும் செய்யும்..!

-------------

பிபிசி கூட மாறிவிட்டது. ஆனால் எம்மவர் கொடூரக் கண்களும் பார்வைகளும் இன்னும் மாறவில்லை. ஒரு இனம் முற்றாக அழிந்தால் கூட இந்த மாற்றுக் கருத்துப் பரதேசிகளின் (நாடற்றவர்களின்) எண்ணம் மாறாது.

_50247278_protest_1.jpg

The president's visit to the UK has drawn strong protests from UK Tamils

இந்தப்படத்துக்கு பிபிசி கொடுத்திருக்கும் விளக்கம் இது. புலிகள் ஆர்ப்பாட்டம் செய்ததாக எழுதவில்லை. ஆனால் நம்மவர்கள் எழுத வைப்பார்கள்... அந்தளவுக்கு சிலருக்குள் இன்னும் சிங்கள விசுவாசம் புரையோடி கிடக்கிறது.

http://www.bbc.co.uk/news/world-south-asia-11891866

Edited by nedukkalapoovan

நிர்மலன் சொல்வது மாதிரி இந்த முறை கொடி பிடிப்பதை தவிர்க்கலாம். அப்படித் தவிர்த்தால் அநேக ஊடகங்களில் முக்கிய செய்தியாக இது வெளி வரும். கொடியோடு ஆர்ப்பாட்டம் செய்யும் போது தான் ஒருதரும் திரும்பி பார்க்கவில்லை கொடி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்து பார்க்கலாம் யாராவது திரும்பி பார்க்கிறார்களா என

புலிக்கொடி பிடிக்காமல் போராடி இருந்தால் உங்களுக்கு தட்டிலை தீர்வை வைச்சு தருவாங்கள் எண்டு சொல்லி விட்ட அறிவாளி யார்....?? <_<:D:wub:

இவ்வளவு காலமும் நல்ல பெயர் வாங்கி அதை பிறேமிலை போட்டு வீட்டினை தொங்க விட்டு என்னத்தை சாதிச்சனீங்கள்....???

புலிக்கொடி பிடிச்சு வெஸ்மினிஸ்ரர் பாலத்தை மறிச்ச போதும் அதுக்கு பிறகு சாதிச்சத்தை விட அதிகமாக ஏதும் அதுக்கும் முதல் சாதிச்சவை எண்டுறீயள்...??

என்னட்டை அண்டைக்கு புலிக்கொடி இருந்து இருந்தாலும் நானும் பிடிச்சு இருப்பன்... இனிமேலும் பிடிப்பன்...

இண்டு வரைக்கும் கொடி பிடிச்சவன் எல்லாம் இளம் பெடியள்... போராட வந்ததில் முக்கால் வாசி பேரும் இளம் பெடியள், பிள்ளையள்.... உங்களாலை ஏலாது எண்டால் அவங்களிட்டை விட்டு போட்டு ஒதுங்கி நிக்கிறது தான் நல்லது...

ரதி, நிர்மலன் சரியாக சொன்னீர்கள்.

ஒருபக்கம் எமக்கு ஆதரவு அனுமதி எல்லாம் தந்துவிட்டு மறுபுறம், மகிந்தா புலி வருது என்று அலற, அவனை பத்திரமாய் கூட்டி செல்வார்கள்

புலி வருகுது எண்டு மகிந்த அலறாமல் விட்டால் கைது செய்து இருப்பினமோ...?? :lol:

Edited by தயா

புலிக் கொடி இல்லாமால் தேசம் நெற் சிறிலங்கா அரச பயங்கரவாதக் குழு நடாத்திய போராட்டத்துக்கு வந்த மக்கள் தொகை என்ன? பிரித்தானிய ஊடகங்களோ அரசோ இந்தப் போராட்டத்தை வாழ்த்தி எங்காவது ஒரு வசனச் செய்தியாவது உண்டா?

புலிக் கொடி பிடித்தவனால தான் இன்று சனல் நாலும் காடியனும் இதையாவது செய்யுது.பிபிசியும் கொன்ச்சம் கொன்சமா மாறுது.இவை மேலும் மேலும் சிறிலங்கா அரசையும் அதற்க்கு ஆதரவான சக்திகளையும் தனிமைப்படுத்தும். புலிக் கொடி பிடிப்பவன் தான் மைனஸ் பத்துப் பாகைக் குளிரிலும் வேலையை விட்டுப் போட்டு வந்து நடு ரோட்டில நிப்பான்.உணர்வு இருப்பவன் தான் போராடுவான்.பொழுது போக்கா எழுதிறவன் கணனியில இருந்து புலிக் கொடி பிடித்தது பற்றி எழுதிக் கொண்டு இருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில அவுஸ்திரெலியாத் தேசியக் கொடியையும் ஊர்வலங்களில் பிடிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை தடை செய்தால் தமிழனையும் தடை செய்ததற்க்கு சமம்.............................................................

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி எமது தேசிய அடையாளம்.பிரித்தானியாவில் அடிக்கடி போராட்டங்கள் நடக்கும்.புலிக்கொடி இல்லாவிட்டால் யார் எதற்காகக் போராட்டம் நடத்துகிறார்கள் என்றே தெரியாது.புலிக்கொடி பிடிப்பதால் யார் இவர்கள்?இவர்களக்கு என்ன பிரச்சனை என்பதும் இலகுவாகத் தெரியும்.பிரித்தானியாவில் மாணவர் பெராட்டங்களின் போத எத்தனையோ வன்முறைகள் நடந்தன.ஆனால் அதை விட பல மடங்கு மக்கள் புலிக்கொடியுடன் பேராட்டம் நடத்திய பொதம் எந்த வன்முறையும் இடம்பெறவில்லை.இவர்களை எப்படிப் பயங்கரவாதி என்ற சொல்லலாம் என்று மக்களே ஒரு தெளிவுக்க வருவார்கள்.மேலும் புலிக்கொடி பிடிப்பதைத் தடை செய்யுமாறு சொல்வது சிறிலங்காத் தூதரகம் தான் அவர்களின் வண்டவாளம் தான் உலகில் நன்றாகக் கிழிபடுகிறதே.அவர்களின் இராஜதந்திர அழுத்தத்தால் சிலவேளைகளில் மக்கள் குறைவாகக் காணப்படும் நேரங்களில் தவிர்க்குமாறு கூறுகிறார்கள்.மக்கள் எழுச்சி அதிகமாகம் சந்தர்ப்;பங்களில் அவர்கள் மக்கள் எழுச்சிக்கு தடைபோடுவதே இல்லை.அதை விட மற்றைய நாடுகளில் கொடி விடயம் பெரிய பிரச்சனையே இல்லை.என்னிடம் ஒரு பொலிசார் சொன்னார் வீதி நடை பாதையில் நின்று பிடிக்காமல் ஊர்வலத்திற்குள் நின்று பிடியுங்கள் என்று.

உங்களுக்கு எழுச்சி பெற்ற மக்கள் கூட்டம் வேண்டுமா?வேண்டாமா?

ஆமா புலிக்கொடி பிடிப்பதால் முள்ளிவாய்க்கால் அவலம் நியாமாகுமா?

புலிக்கொடி இல்லாமல் ஈழத்தமிழனின் அடையாளம் என்ன?

முதலில் அதை சொல்லுங்கள்/

சிவப்பு மஞ்சள் கலர் மாத்திரம் அடையாளம் இல்லை.நிறம் ஒரு அடையாளம் இல்லை

சும்மா போய் கூக்காட்டுவதை விட அடையாளத்தோடு செல்வதே சரியானது.

சிங்களவனுக்கும் ,எமக்கும் வித்தியாசம் தெரியனும்.

கொடி இல்லையேல் மொட்டை போராட்டம்தான்

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி பிடிக்காமல் போராடி இருந்தால் உங்களுக்கு தட்டிலை தீர்வை வைச்சு தருவாங்கள் எண்டு சொல்லி விட்ட அறிவாளி யார்....?? :icon_idea::rolleyes::wub:

இவ்வளவு காலமும் நல்ல பெயர் வாங்கி அதை பிறேமிலை போட்டு வீட்டினை தொங்க விட்டு என்னத்தை சாதிச்சனீங்கள்....???

புலிக்கொடி பிடிச்சு வெஸ்மினிஸ்ரர் பாலத்தை மறிச்ச போதும் அதுக்கு பிறகு சாதிச்சத்தை விட அதிகமாக ஏதும் அதுக்கும் முதல் சாதிச்சவை எண்டுறீயள்...??

என்னட்டை அண்டைக்கு புலிக்கொடி இருந்து இருந்தாலும் நானும் பிடிச்சு இருப்பன்... இனிமேலும் பிடிப்பன்...

இண்டு வரைக்கும் கொடி பிடிச்சவன் எல்லாம் இளம் பெடியள்... போராட வந்ததில் முக்கால் வாசி பேரும் இளம் பெடியள், பிள்ளையள்.... உங்களாலை ஏலாது எண்டால் அவங்களிட்டை விட்டு போட்டு ஒதுங்கி நிக்கிறது தான் நல்லது...

தயா அண்ணா இதற்கு முந்தியும் கருத்துக் களத்தில் கொடி பிடிக்கலாமா இல்லையா என்ட விவாதம் நடந்திருக்குது அப்போது எல்லாம் நான் கட்டாயம் புலிக் கொடி பிடிக்க வேண்டும் எனத் தான் எழுதினேன்.இப்ப பிடிக்க வேண்டாம் என எழுதுவதற்கு காரணம் பாராளுமன்றத்தின் முன் கொடி பிடிக்கும் போது சொன்னார்கள் நாங்கள் மக்களுக்கு ஆதரவாய் போராடவில்லை.தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாய்த் தான் போராடுகிறோம்[ கொடி பிடிக்கிறோம்]அதனால் தான் இந்த அரசுகள் எல்லாம் எம்மை திரும்பிப் பார்க்கவில்லை என அது தான் இனி மேல் கொடி இல்லாமல் போராடிப் பார்ப்போம் அவர்கள் எங்களை திரும்பிப் பார்க்கிறார்களா என எழுதினேன்.மற்றப் படி எந்த ஒரு அறிவாளியும் எனக்கு சொல்லவில்லை :)

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் உள்ள எனது உறவுகளுடன் தொலைபேசியில் பேசியபடிதான் இங்கும் எழுதுகின்றேன்.

அவர்கள் குளிரையும் பொருட்படுத்தாது வெளிக்கிட்டபடிதான் உள்ளனர்.

இங்கு எழுதுபவர்கள் அனைவரையும் மீண்டும் மீண்டும் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துமாறு கேட்கின்றேன்

தயா அண்ணா இதற்கு முந்தியும் கருத்துக் களத்தில் கொடி பிடிக்கலாமா இல்லையா என்ட விவாதம் நடந்திருக்குது அப்போது எல்லாம் நான் கட்டாயம் புலிக் கொடி பிடிக்க வேண்டும் எனத் தான் எழுதினேன்.இப்ப பிடிக்க வேண்டாம் என எழுதுவதற்கு காரணம் பாராளுமன்றத்தின் முன் கொடி பிடிக்கும் போது சொன்னார்கள் நாங்கள் மக்களுக்கு ஆதரவாய் போராடவில்லை.தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாய்த் தான் போராடுகிறோம்[ கொடி பிடிக்கிறோம்]அதனால் தான் இந்த அரசுகள் எல்லாம் எம்மை திரும்பிப் பார்க்கவில்லை என அது தான் இனி மேல் கொடி இல்லாமல் போராடிப் பார்ப்போம் அவர்கள் எங்களை திரும்பிப் பார்க்கிறார்களா என எழுதினேன்.மற்றப் படி எந்த ஒரு அறிவாளியும் எனக்கு சொல்லவில்லை :icon_idea:

இந்தியா சுந்தந்திரம் அடைவதுக்கு முன்னர் மூண்று வர்ணம் பொறித்த கொடியின் நடுவில் நூல் நூர்க்கும் கைப்பொறியின் சின்னத்துடன் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் காந்தி காவித்திரிந்த(Swaraj flag) கொடிதான் சிறிது மாற்றம் பெற்று இந்திய தேசியக்கொடியானது...

இந்திய தேசியக்கொடியை யாரும் காங்கிரஸ் கொடி எண்டு சொல்லவது கிடையாது... இப்படியான அடிப்படையையும் வரலற்றையும் விளங்கிக்கொள்ளுங்கோ...

ஒரு தேசிய இனம் என்பதை அடையாளப்படுத்த கொடி நீண்ட காலமாக எல்லா நாடுகளாலும் கைகொள்ளப்படும் முறை... நாங்கள் ஒரு தேசிய இனம் இல்லை எண்டு நீங்கள் சொல்பவராக இருந்தால் இதுக்கும் மேலை வாசிக்காமல் விட்டு விடுங்கள்...

இப்ப எதுக்காக கொடி எண்டால் நாங்கள் ஒரு இனம் அதுவும் நாடு இல்லாத அடிமையாக வாழும் ஒரு இனம்... அந்த அடிமை இனம் சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறது நடந்த அடக்கு முறைக்கு நியாயம் கேட்க்கிறது... அந்த நியாயம் கேட்க்கும் இனத்துக்கான அடையாளம் என்ன... ??? மகிந்தவுக்கு எதிராக யார் போராடுகிறார்கள் என்பதுக்காவது அடையாளம்...

எங்களின் கொடி சொல்லும் சேதி... சொல்லும் சேதி எங்களை சுந்தந்திரமாக வாழ விடுங்கள்... நாங்கள் தனித்து போக விரும்புகிறோம் என்பதுதான்...

மிகைப்படுத்த ப்பட்ட கருத்து ஒண்றை நீங்கள் இங்கை சொல்கிறீர்கள்... அதுவும் பரமார்த்த குருவும் அவரின் சீடர்களின் கருத்தை உண்மை எண்று நம்பி...

சில யதார்த்தமான உண்மைகளை யோசியுங்கள்... யாராவது உங்களிடம் சொல்வார்களா... சிங்களம் உங்களின் மக்களை கொல்வது உண்மை ஆனால் நீங்கள் புலி ஆதரவாளர் என்பதால் உங்களை காப்பாத்த முடியாது எண்று...??? அப்படி ஒருவர் சொன்னதாக் ஆதாரம் கூட இல்லை வெறும் கட்டுக்கதைகளை நம்பி கதை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்...

இதே புலிக்கொடி பிடித்த பெடியளை தான் பாராளுமண்றுக்கு உள்ளை கூப்பிடு வெளியுறவு அமைசர் பேசினார்... இல்லை என்கிறீர்களா...?? புலிக்கொடியை பிடிச்சு கொண்டு உண்ணாவிரதம் இருந்தவரை பாராளு மண்ற உறுப்பினர்கள் பலர் வந்து பார்த்து செண்றனர்... இல்லை என்கிறீர்களா...???

நீங்கள் இதுக்கும் முன்னர் பல போராட்டங்களை கொடி இல்லாமல் செய்து இருக்கிறீர்கள்... குறிப்பாக பொங்கு தமிழ்.... எதாவது ஒரு ஊடகம் செய்தியாவது போட்டதா....???

1996 ம் ஆண்டு முதல் கதிர்க்காமர் போட்டு வைத்து இருந்த வெளியுறவு பாலத்தை நீங்கள் கடைசியாக 40 நாட்க்கள் நடத்தின போராட்டத்தை பாத்து இந்த நாடுகள் உடைக்கும் எண்டா நினைக்கிறீர்கள்... எப்பவோ செய்து இருக்க வேண்டிய போராட்டத்தை காலம் கடத்தி செய்து போட்டு பழியை கொடி மீது போடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை...

பயந்து பயந்து பதுங்கி நிண்டு போராடின நாங்கள் முதல் முதலில் தடையை மீறி பிடித்த போது இந்த புலிச்சின்னம் பொறித்த கொடி தான் துணிவை மனதினுள் ஊட்டினது... இந்தக்கொடிதான் எங்களின் அடையவேண்டிய இலக்கின் அடையளாம்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.