Jump to content

Recommended Posts

Posted (edited)

நன்றி நாரதர் அண்ணா,

தேவையில்லாமல் எவர் கவிதைகளும் வாசிக்க போக மட்டன். மற்றவர்களின் கருத்து கேட்ட பின்னர் தான் நான் வாசிப்பேன். ஆனால் யாழ் இணையத்தில் நல்ல கவிதைகள் மட்டும் தான் இணைக்கப்படும் என்ற நம்பிக்கையில் நான் வாசிப்பேன்.

வாசித்து விட்டு கருத்து எழுதாமல் இருந்தாலும் வாசித்தது வாசித்தது தான்.

கருத்துச் சுதந்திரம், மிகவும் முக்கியமானது!

[size=3]அதில் தலையிடுவது, யாழ் களத்தின் கருத்துச் சுதந்திரத்தை, மறுப்பது போலாகும்![/size]

நன்றி புங்கையூரன் அண்ணா,

கிருபன் அண்ணாவையும் யாழ் இணையத்தையும் பற்றி யோசிக்கும் நீங்கள் அவரது கருத்து சுதந்திரம் எம்மை பாதிக்கிறது என்பதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

இதே கருத்து சுதந்திரத்தை வைத்து பலரும் பல திரியிலும் கருத்து எழுதுவார்கள். அப்பொழுது நிர்வாகத்தினருக்கு புரியும். :)

துளசி

இத்திரியிலிருந்து தள்ளியிருங்கள். (சுட்டிக்காட்டி விட்டீர்கள். இனி..)

மற்ற கருத்தாளர்களையும் புரிந்து கொள்ளுங்கள். அதிலும் நீண்டட கால உறுப்பினர்களின் நீண்ட கால எழுத்துக்குறித்த ஒரு புரிதல் அவசியம் தங்களுக்கு.

நாம் நினைப்பவை மட்டுமே யாழில் வரணும் என்பதும் யாழ் விடுதலைக்கானது மட்டுமே என்பதும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் வேலைதான்.

அதை யாழ் செய்வதை யாழின் வளர்ச்சி கருதி நானும் விரும்பவில்லை.

யாழ் ஒருபக்கம் விடுதலையை நோக்கி பயணிக்கிறது என்று சொன்னேனே தவிர யாழ் விடுதலைக்கானது மட்டும் என்று நான் சொல்லவில்லை. :)

நன்றி விசுகு அண்ணா, உங்கள் மேல் எனக்கு மரியாதை உண்டு. :) உங்களினதும் யாயினி அக்காவினதும் கோரிக்கையை ஏற்று இத்திரியிலிருந்து விலகி இருக்கிறேன். :)

Edited by துளசி
  • Replies 333
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:)

நன்றி விசுகு அண்ணா, உங்கள் மேல் எனக்கு மரியாதை உண்டு. :) உங்களினதும் யாயினி அக்காவினதும் கோரிக்கையை ஏற்று இத்திரியிலிருந்து விலகி இருக்கிறேன். :)

நன்றி துளசி

உங்களை இத்திரியிலிருந்து விலத்துங்கள் என்று நான் சொன்னது ஏன் என்பதற்கு

நான் உங்களுக்கு எழுதியபின் எழுதப்பட்ட சில சொற்கள் சாட்சியாக அமைகிறது.

சில இடங்களில் களேபரம் ஆரம்பிக்க முன் சிலரை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டி வரும்.

அந்த வகை தான் இதுவும்.

புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி கரும்பு 2002 என மேலோட்டமாக பார்த்தபோது தென்பட்டது. எனது இதயம் திக் என்று அடித்தது.

ஏன் கனவில் கவிதை எழுதியிருக்கலாம் என்று நினைத்தீர்களா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேவையில்லாமல் எவர் கவிதைகளும் வாசிக்க போக மட்டன். மற்றவர்களின் கருத்து கேட்ட பின்னர் தான் நான் வாசிப்பேன். ஆனால் யாழ் இணையத்தில் நல்ல கவிதைகள் மட்டும் தான் இணைக்கப்படும் என்ற நம்பிக்கையில் நான் வாசிப்பேன்.

வாசித்து விட்டு கருத்து எழுதாமல் இருந்தாலும் வாசித்தது வாசித்தது தான்.

கிருபன் அண்ணாவையும் யாழ் இணையத்தையும் பற்றி யோசிக்கும் நீங்கள் அவரது கருத்து சுதந்திரம் எம்மை பாதிக்கிறது என்பதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

ஒருவருக்கு பார்வைக் கோளாறு.. மற்றொருவருக்கு வயசுக் கோளாறு.. எல்லாக் கோளாறுகளையும் அறுக்க கோளறு பதிகத்தில் இருந்து ஒன்று!

செப்பிள முலைநன் மங்கை ஒருபாகமாக

விடையேறு செல்வ னடைவார்

ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்

வினையான வந்து நலியா

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே.

Posted

செப்பிள முலைநன் மங்கை ஒருபாகமாக

விடையேறு செல்வ னடைவார்

ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்

வினையான வந்து நலியா

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே.

போற போக்கப்பாத்தால் நாங்கள் கம்பராமாயணத்தையும் , கோளறுபதிகத்தையுமெல்லோ படிக்கேலாமல் கிடக்கு . எங்கைபோய் நான் தலையை முட்ட .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஞ்ச கொஞ்சப் பேர் ஆண்களுக்குத் தான் தப்பான கண்ணோட்டம் என்று காட்ட நிற்கினம். பெண்களுக்கும் ஆணைக் கண்டால்.. தப்பான கண்ணோட்டம் ஏற்பட்டு.. தொடை நனையிறது எல்லாம் நடக்காம். அதுகளையும் கவிஞர்கள் எழுத்தில வடிக்கலாமே. வேணுன்னா அதுக்குப் பின்னால உள்ள biology ஐ நாங்க விலாவாரியா சொல்லுறம்.

பெண்ணின் இயல்பு ஆணைக் கவர்வது இயல்பு. அது தப்பு அல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. அதேபோல்.. ஆணின் இயல்பு பெண்ணைக் கவர்வது இயல்பு. அது தப்பல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. இவை எல்லாமே இயற்கை. கவருது என்பதற்காக.. கண் வைக்கிறது போல.. கை வைக்க ஏலாது. அங்க தான் சட்டம்... நடத்தை.. பழக்க வழக்கம்.. பண்பாடு.. தனிமனித ஒழுக்கம்.. சமூகம்.. வந்து நிற்குது.

அதுபோல.. யாழில் எங்களுக்கு கவர்வதை எல்லாம் பகிர முடியுன்னா.. யாழில் நிர்வாண பக்கத்தையும் நிழலி திறக்கனும்...! அதுதான் நியாயம்..! அதை ரசிப்பது.. சிலருக்கு கலை...! ஏன் அதுக்கு தடை போடினம்...????! :D:lol:

வேணுன்னா சொல்லுங்க.. ஒளிப்பு மறைப்பு இன்றி இப்படியான தலைப்புகளையும் போட்டு விவாதிப்பம். ஆங்கிலக் களங்களில் விவாதிக்கிறாங்க. உண்மையில் அதில தப்பில்ல. மாறாக உயிர்.. உணர்ச்சி.. தூண்டல்.. உடலமைப்பு.. பற்றிய அறிவு தான் வளரும். ஆனால்.. யாழ் அனுமதிக்குமா.. யாழில உள்ள முலையை மட்டும் ரசிக்க விடுற.. படிதாண்டாப் பத்தினிகள் அனுமதிப்பினமா..???!

கலவன் பள்ளியில் உள்ள பிரச்சனை ஒன்று........ கேள்வியாக..............

Can a girl get wet in school when looking at a hot guy? :lol:

இங்க சில பேருட நினைப்பு என்னென்னா.. முலை.. மார்பு.. பற்றி கவிதை எழுதிட்டா அது புரட்சி.. வெளிப்படை என்றது. அதை விட மேல.. கீழ போறாங்களே இல்ல. காலம் காலமா கொப்பற்ற கொல்லைக்க தான் சுத்துறாங்க...! அதைவிட நிறைய இருக்குது.. அந்தரங்க அறைகளுக்குள் நடக்கும் தில்லானாக்கள்..! அந்தப் பக்கம் புரட்சி செய்ய வேணுன்னா... சொல்லுங்க.. நாங்களே அந்த மிச்சப் புரட்சியை செய்ய ஆரம்பிக்கிறம்...! :lol::icon_idea:

இந்தக் கவிதை குறிப்பது பெண்களது மார்பை ஆண்கள் பார்க்கிறார்கள் என்பது பற்றியதாகும் ஆகவே இக் கவிதை பற்றி மட்டும் தற்போது கதைப்போம்...பெண்களுக்கு தொடை நனையிறதைப் பற்றி வேறு யாராவது கவிதை எழுதினால் அதில் போய் அதைப் பற்றி விவாதிப்போம்

ஆண்கள் பெண்களின் மார்புகளை இரசிக்கவிடின், அவன் தன்னினச் செயற்கையாளனாகத் தான் இருப்பான் என்றோ, அல்லது பச்சைப் பொய் சொல்லுவனாகத் தான் இருப்பான் என்ற கருத்தினையும், உங்களின் எழுமாந்தமான முடிவுக்காகத் தான் அந்தப் பதில் சொல்ல வேண்டி ஏற்பட்டது. அப்படி ஒரு முடிவினை எடுக்க நீங்கள் யார்?? அது ஒரு வகையில் ஆண்கள் பெண்களின் அங்கங்களை ரசிக்கச் சொல்லிச் செய்கின்ற தூண்டுதலே....

அப்படி ரசிப்பது தப்பில்லை எனில், உங்களின் குடும்பத்தினரை முதலில் நினைத்துக் கொண்டு கதையங்கள்

நான் சுத்தமானவனாகக் காட்டவரவில்லை. ஆனால் அந்த உணர்வினைப் பொது இடத்தில் வெளிப்படுத்த வேண்டிய தேவையில்லை. கலவி எல்லோரும் தான் கொள்கின்றார்கள் . அதற்காக அதை இங்கே வெளிப்படுத்த முடியுமா? அதற்கென்று தளங்கள் இருக்கின்றன. அவ்வகையான தளங்களில் யாழும் இணைந்து கொள்ளுமாயின், வெளிப்படுத்துங்கள்.

பெண்களின் உடலில் உள்ள அங்கங்களையோ, அல்லது ஆணின் உடலில் உள்ள அங்கங்களையோ பாலியல்ரீதியாக வர்ணிப்பது, கதைப்பது எல்லாம் சரியாகத் தோன்றவில்லை.

உங்களுக்கு ஏதாவது பாலியல் பிரச்சனை என்றால் தகுந்த வைத்தியரை நாடுங்கள்... அதை விட்டு விட்டு, ஆண்கள் இப்படி, அப்படி என வரையறை எங்களுக்குத் தரத் தேவையில்லை

ஓம் ஆண்கள் எல்லாம் சுத்த அப்பாவிகள் தான் நான் இதில் வந்து எழுதினப் பிறகு தான் ஓடிப் போய் பெண்களது மார்பை பார்க்கப் போகிறார்கள்...நீங்களே உங்கள் கருத்தில் முரண்படுகிறீர்கள் நீங்கள் உங்களை சுத்தமானவன் என்று காட்ட வரவில்லை என சொல்லிக் கொண்டு இந்தக் கவிதை பிழை என்று சொல்ல வருகிறீர்கள்...உங்களை பொறுத்த வரை ஆண்களோ பெண்களோ ஒளிச்சு எல்லாம் செய்யலாம் ஆனால் அதையே வெளிப்படையாக யாராவது எழுதினால் அது ஒரு பெரிய குற்றம்...இதற்கு முன்னர் எத்தனை திரி யாழில் பாலியல் சம்மந்தமாக போனது ஏன் "இளைஞன்" கூட இனப் பெருக்கம் சம்மந்தமாக ஒரு திரி தொடங்கியிருந்தார் அப்போது எல்லாம் எங்கே போனீர்கள் மூடிட்டு படுத்துக் கிடந்தனீங்களா?

எனக்கு படுக்க வேண்டும் என்டால் நான் படுப்பன் யாழில் வந்து வந்து யாரையாவது படுக்க வரச் சொல்லிக் கூப்பிட்டேனா? என்னை வைத்தியரிட‌ம் போகச் சொல்ல நீங்கள் யார்?...ஆண்களை பற்றி எழுதக் கூடாது என்று சொல்வதற்கோ அல்லது குறிப்பிட்ட வரைமுறைக்குள் தான் எழுத வேண்டும் என்று சொல்வதற்கான தகுதியை உங்களுக்கு தந்தது யார்?

  • Like 3
Posted

மீண்டும் அதே கவிதையா??

36_2_36.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=6]சித்திரவதைக் கூடத்திலிருந்து [/size]

- அஜித் சி. ஹேரத், தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

[size=5]சித்திரவதைக் கூடத்திலிருந்து[/size]

[size=5]அடுத்த கணம் நோக்கி

எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர

முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ

ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை[/size]

[size=5]எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும்

அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து

தப்பிக்கொள்ள முடியவில்லை

சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே

எண்ணங்கள் காணாமல் போயின[/size]

[size=5]துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள்

உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள்

மரண ஓலங்கள்

அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள்

பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன[/size]

[size=5]பயங்கரத்தைத் தவிர

இங்கிருப்பது

மனிதத்தன்மையில் கையேதுமற்ற நிலை

சித்திரவதைக் கூடத்தில் சந்திக்கக் கிடைக்கும்

ஒரே அன்பான தோழன்

மரணமே

அவனும்

எங்களது வேண்டுகோளை உதாசீனப்படுத்துகிறான்[/size]

[size=5]நேற்றிரவு கொண்டு வரப்பட்ட யுவதியின்

குரல் படிப்படியாகத் தேய்ந்தழிகிறது

சேவல் கூவ முன்பு

மூன்றாவது முறையாகவும்

எவரையும் தெரியாதெனச் சொன்ன சகோதரி

காட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக

அச்சம் தரும் மரணத்தையும்

கெஞ்சுதலுக்குப் பதிலாக

சாபமிடுவதையும் தேர்ந்தெடுத்த சகோதரி

எனதிரு கண்களையும் கட்டியிருக்கும் துணித் துண்டு ஈர்த்தெடுத்த

இறுதிக் கண்ணீர்த் துளிகளை

சமர்ப்பித்தது உன்னிடமே[/size]

[size=5]உற்சாகமூட்டும் மேலதிகக் கொடுப்பனவு

பகலுணவிற்காகக் கிடைத்த யோகட் கோப்பையின்

அடிவரையில் நக்கிச் சுவைத்த படைவீரன்

அதை எறிந்து மிதிக்கிறான்

அடுத்தது யார்[/size]

[size=5]இங்கு வாழ்க்கை இதுதான்

இங்கு மரணம் எது?

முகமொன்றற்ற பிணமொன்று மற்றும்

தலைப்பென்ற செய்தியொன்று மட்டும்[/size]

[size=5]பட்டியலிடப்படாத வாழ்க்கை

பட்டியலிடப்படாத மரணத்தோடு

வந்து சேர்கிறதுபைத்தியக் கனவுகளோடு[/size]

[size=5]நான் எத்தனை தடவை இங்கிருந்து

தப்பித்துப் போயிருக்கிறேன்

எனினும் நான் இங்கேயேதான்

இந்தத் தெளிவு கூட

கண்டிப்பாகப் பயங்கரமானது[/size]

[size=5]இங்கு படுகொலை செய்யப்பட்ட

அனேகருக்கு

மனித முகமொன்று இருந்தது

எனது இறுதிச் சாட்சியாக

எனக்குச் சொல்ல இருப்பது அது மட்டுமே[/size]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5724

  • Like 1
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

[size=4]கவிதைகள் அருமை பகிர்வுக்கு நன்றி கிருபன் [/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிர்வாகத்திடம் கேள்வி யாதெனில்இ பாலியல் கவிதைகள் அனுமதிக்க முடியுமெனில்இ பாலியல் கதைகளையும்இ படுக்கையறைக் கதைகளையும் நிர்வாகம் அனுமதிக்குமா?? இரண்டுக்கும் எவ்வாறான வேறுபாடுகள், விதிமுறைகள் வைத்துள்ளீர்கள்??

ஏலவே சொன்னது போல, யாழ்களம் என்பது தேசியமும் அது சார்ந்தே பயணிக்கும் என்றே நான் இத்தனை காலமும் நம்பியிருந்தேனே, தவிர பெண்களின் அங்களை விற்றுத் தான் பிழைப்பினை ஓட்டும் என அனுமானித்திருக்கவில்லை. முன்பு பேசாப் பொருள் என்ற பிரிவினை உருவாக்கி, கவிதை என்ற பெயரில் உடல் அங்கங்களை இரசிக்கும் செயலினைச் சிலர் செய்ய முயன்றனர். அவர்களில் சிலரே இங்கேயும் வடித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அனை்றைக்கு நாம் கொடுத்த சில எதிர்ப்பு அதில் பல கட்டுப்பாட்டு சார்ந்த விதிமுறைகளை நிர்வாகம் அறிவித்தது. அப்போது யாழ் எங்களின் ஒரு அங்கமாக இருந்தது, அதை எங்களின் சொந்த உறவாக, உரிமை கொண்டதாகவும் இருந்தது.

சிலர் இங்கே பழந்தமிழ் இலக்கியங்களைக் காட்டி, அங்கே பெண்களின் அங்கங்களைகப் பற்றிக் கதைத்திருக்கின்றார்களே என்று நிறுவ முயல்கின்றனர். பெண்களின் உடல் உறுப்புக்களை பாலியல் சிந்தையோடு வரைவதையோ, அதையே முதன்மைப்படுத்துவதையோ வேண்டாம் என்கின்றோம்.அதற்கு யாழ் வேண்டாம் என்கின்றோம். அங்கே உள்ள பாடல்களில் பெண்களின் அங்கம் முதன்மை பெறவில்லை. ( அதை ஒப்பீடு செய்கின்றவர்கள், கவிதை என்ற பெயரில் செய்கின்ற வசனநடையை, அக்காலப் பாடல்களின் தரத்தோடு ஒப்பீடு செய்வதில்லை. ஏன்?)

இப்படியான சிந்தனையோட்டங்கள், கருத்துக்களை நிர்வாகம் நன்றாகவே அனுமதிக்கின்றது. நல்லது வாழ்த்துக்கள்... இதை வைத்துத் தான் யாழ்களத்தின் வாசகர் வட்டத்தைக் கூட்ட முடியும் என நீங்கள் நிரப்புங்கள். ஆனால் இந்த வாசகர் கூட்டம், தங்களை தேவைகளுக்காக மட்டும் தான் இங்கே நிரம்பியிருக்கும் என்பதையும் நினைவுறுத்துகின்றேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனதைக் கவர்ந்த ஒரு நவீனத்துவக் கவிதையை இணைத்தேன். சிலர் பழமைவாதக் கருத்துக்களைப் பதிந்தனர். சிலர் யதார்த்தவாதக் கருத்துக்களைப் பதிந்தனர். இன்னும் சிலர் பின்நவீனத்துவக் கருத்துக்களைப் பதிந்து பின்னர் குத்துக்கரணம் அடித்து பழமைவாதத்திற்குப் போயுள்ளனர்.. தமிழர்கள் அடிப்படையில் பழமைவாதிகள் என்பது உண்மைதான்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆமாம் கிருபன் . உங்களின் பாலியல் வக்கிரங்கள் நவீனசிந்தனை.. அதை எதிர்த்து எழுதினால் பழமைவாதம். நல்லாத் தான் செய்கின்றீர்கள்.

நீங்கள் இணைத்த வசனநடையில்( அது கவிதையாம்?) பெண்ணின் மார்பைத் தவிர என்ன இருக்கின்றது? இலக்கிய்ம, வார்த்தைகளில் கவித்துவம்? அல்லது குறைந்தது ராஜேந்திரர் பேசுவதைப் போல அடிப்படை அடுக்குமொழி.... ஏதுமே இல்லை.

வெறுமனே வக்கிரமான சிந்தனையைத் தவிர..... உங்களது நவீனத்துவமான சிந்தையை அந்தளவு தான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆமாம் கிருபன் . உங்களின் பாலியல் வக்கிரங்கள் நவீனசிந்தனை.. அதை எதிர்த்து எழுதினால் பழமைவாதம். நல்லாத் தான் செய்கின்றீர்கள்.

நீங்கள் இணைத்த வசனநடையில்( அது கவிதையாம்?) பெண்ணின் மார்பைத் தவிர என்ன இருக்கின்றது? இலக்கிய்ம, வார்த்தைகளில் கவித்துவம்? அல்லது குறைந்தது ராஜேந்திரர் பேசுவதைப் போல அடிப்படை அடுக்குமொழி.... ஏதுமே இல்லை.

வெறுமனே வக்கிரமான சிந்தனையைத் தவிர..... உங்களது நவீனத்துவமான சிந்தையை அந்தளவு தான்

நான் இணைத்த கவிதைக்குப் பின்னர் வந்த ஒரு கருத்துக்குப் பின்னூட்டம் இட்டீர்களே. அதுதான் உண்மையில் வக்கிரம்!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இணைத்த கவிதைக்குப் பின்னர் வந்த ஒரு கருத்துக்குப் பின்னூட்டம் இட்டீர்களே. அதுதான் உண்மையில் வக்கிரம்!

உண்மை தான். உங்களின் வக்கிரமான கவிதை மட்டும் அதற்கு மறுமொழியாக இருக்கவில்லை. குறித்த பெண்ணின் பெயரில் இருப்பவர், ஏதோ ஆண்கள் பெண்களின் அங்கங்களை இரசிக்காமல் இருந்தால், அவன் தன்னினச்செயற்கையாளனாகத் தான் இருப்பான் என்பதற்காக, நீங்கள் காட்டிக் கொண்டு திரிவீர்களா என்ற கோபத்தில் எழுதியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனதைக் கவர்ந்த ஒரு நவீனத்துவக் கவிதையை இணைத்தேன். சிலர் பழமைவாதக் கருத்துக்களைப் பதிந்தனர். சிலர் யதார்த்தவாதக் கருத்துக்களைப் பதிந்தனர். இன்னும் சிலர் பின்நவீனத்துவக் கருத்துக்களைப் பதிந்து பின்னர் குத்துக்கரணம் அடித்து பழமைவாதத்திற்குப் போயுள்ளனர்.. தமிழர்கள் அடிப்படையில் பழமைவாதிகள் என்பது உண்மைதான்!!!

ஏன் கிருபண்ணா.. ஒரு ஆணும் பெண்ணும் புணர்வது நேற்றா ஆரம்பிச்சது.. புதுமைவாதமாக இருக்க.

உங்களைச் சொல்லிக் குற்றமில்ல.. உங்களுக்கு இப்ப வர வர நீங்கள் எழுதிறது எல்லாம் புதுமைவாதம்.. பின்நவீனத்துவமாவே இருந்துக்கிட்டு இருக்குது.

எனக்கென்றால் உங்களை விட்ட ஒரு பழமைவாதி உலகில இருக்கான்னா.. தெரியல்ல.

உடுப்பை உரிஞ்சிட்டு போறதை.. புதுமைன்னு மெச்சுறீங்க. மனித மிருகம் பாலுணர்வுத் தூண்டல் அடைவதை வார்த்தையில சொல்லிச்சின்னா.. புதுமைன்னு மெச்சுறீங்க.... அதிலும் பெண் விலங்கை அங்கம் அங்கமா விபரிச்சா.. அச்சோ அச்சோன்னு.. பின்நவீனத்துவம் என்றீங்க..

கூல் கூல்.. உங்களுக்கு இப்படியான சொற்களோட நல்ல பரீட்சையம் இருக்கென்னு.. எங்களுக்குத் தெரியும். அதுக்காக.. ஆதிகாலத்து கலாசாரத்தை எல்லாம் நவீனத்துவமாக்குவது.. ரெம்ப ஓவர்.

இன்னொராள்.. நான் படுக்கப் போவன்.. நீ யார் கேட்கிறது என்றா.. நீங்க படுங்க.. கவுளுங்க எவன் கேட்டான்.. அதைத்தான் மனிசன் தோன்றிய காலம் முதல் செய்யுறானில்ல. இல்ல மனிசன் இப்ப உலகத்தில இருக்க முடியுமா. ஏதோ உலகத்தில இவை தான் படுத்து எழும்பிக்கிட்டு இருக்கிறது போல............. ஊருக்கு சொல்லிக்கிட்டு திரியுதுங்க. ஏதோ இவை தான் மார்பை ரசிக்கினமாம்.. மற்றவன் எல்லாம்.. முந்தானையை ரசிச்சிக்கிட்டு டசின் டசினா பெத்துத் தள்ளுறானாக்கும்..???! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தக் கவிதை குறிப்பது பெண்களது மார்பை ஆண்கள் பார்க்கிறார்கள் என்பது பற்றியதாகும் ஆகவே இக் கவிதை பற்றி மட்டும் தற்போது கதைப்போம்...பெண்களுக்கு தொடை நனையிறதைப் பற்றி வேறு யாராவது கவிதை எழுதினால் அதில் போய் அதைப் பற்றி விவாதிப்போம்.

அவன் மார்பை ரசிக்கட்டுன்னு தானே.. பொண்ணுங்க நீங்க காட்டிக்கிட்டு திரியுறீங்க. அவன் ரசிக்க.. அதை நீங்க ரசிக்க.. உங்களுக்கு தொடை நனையிறதை ஏன் சொல்லப்படாது. அவன் ரசிக்கிறதை வெளிப்படையா சொல்ல முடியுதுன்னா.. அவன் ரசிக்கிறதை ரசிச்சு.. உங்களுக்கு என்னாவது என்றும் சொல்லத் தானே வேணும்..! அப்ப தானே ஒரு புரிந்துணர்வு வந்து படுக்கப் போகலாம்.

கிருபண்ணா தான் இன்னும் மார்ப்பை ரசிக்கிறதைச் சொல்லுறது.. நவீனமுன்னு.. நிற்கிறாருன்னா.. நீங்க...இன்னும் படுக்கிறது என்று.. எழுதிறதே நவீனமுன்னு நிற்கிறீங்க. ஆனால் உலகம்......

அப்படியே இதையும் வாசியுங்க...

பெண்ணுக்குள் புதைந்திருப்பது 50 அல்ல, 366 வகை செக்ஸ் உணர்வுகள்...!!!

16-sex125-300.jpg

'50 Shades of Grey' - இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பரவலாக இன்று பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது இந்த நூல். பெண்களின் செக்ஸ் உணர்வுகள், வேட்கை குறித்து எல் ஜேம்ஸ் எழுதியுள்ள இந்த நூல் இதுவரை 31 மில்லியன் காப்பி விற்று பெரும் சாதனை படைத்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களின் செக்ஸ் தாகம், வேட்கை, உணர்வுகள் குறித்து மிக வெளிப்படையாக பேசிய நூல் இதுதான் என்கிறார்கள். ஆனால் இதில் கூறப்பட்டுள்ளதைப் போல பெண்களுக்கு 50 விதமான செக்ஸ் உணர்வுகள் மட்டும் இருக்கவில்லை, மாறாக அவர்களுக்கு இருப்பது 366 வகை செக்ஸ் உணர்வுகள் என்று ஒரு கட்டுரை நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.

டெல்லி டைம்ஸ் இதழ்தான் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. எப்படி....அதை இப்படிக் கூறுகிறது அந்தக் கட்டுரை..

பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு வகை உணர்வை அவர்கள் வெளிப்படுத்தத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய உணர்வுகளை அவர்கள் பெறுகிறார்கள். புத்தம் புது ஆசைகளை மனதுக்குள் விதைத்துக் கொள்கிறார்கள். புத்தம் புது கற்பனைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால், லீப் ஆண்டையும் சேர்த்தால், அவர்களுக்கு 366 வகையான செக்ஸ் உணர்வுகள் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம் கிடைக்கிறது. சில பெண்கள் தங்களுக்குள் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். தங்களுக்குள் செக்ஸ் உணர்வுகள் குறித்து பேசிக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்களுக்குள் உதிக்கும் உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் உணர்த்தி விடுகிறார்கள்.

கிராமப்புறங்கள் கூட இன்று மாறிப் போயுள்ளன. தனது கணவனுடன் சந்தோஷணாக இருக்க வேண்டும் என்பதை தனது மாமியாரிடம் குறிப்பால் உணர்த்தும் கிராமத்து மருமகள்கள் நிறையப் பேர் உள்ளனர். கிராமத்து மாமியார்களும் முன்பு போல இல்லை. மருமகள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்கிறார்கள்.

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் கணவருடன் சேருவதை ஒரு பெரும் ரகசியமாக கருதி வந்த பெண்கள் இன்று அப்படி இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது கணவனின் ஆதரவுக் கரங்களில் விழுந்து கிடக்கத் தவறுவதில்லை.

நான்கு ஆண்கள் சேர்ந்தால் கண்டிப்பாக செக்ஸ் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் பெண்களிடம் இது பெரிய அளவில் முன்பு இருந்ததில்லை. ஆனால் இப்போது அவர்களும் விரிவாக உரையாட ஆரம்பித்து விட்டார்கள். ஏன், தங்களது ஆண் நண்பர்களிடமும் கூட செக்ஸ் பற்றிப் பேசும் பெண்கள் நிறையவே உள்ளனர். தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பெண்களும் நிறைய உள்ளனர்.

அந்த வகையில் ஆண்களைப் போலவே, பெண்களும் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். எனவே இனியும் செக்ஸ் குறித்த பேச்சுக்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நிச்சயம் யாரும் கூற முடியாது என்பதே நிதர்சனம்.

http://tamil.indians...ity-000512.html

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கிருபண்ணா.. நீங்கள் கட்டாயம்.. இந்த '50 Shades of Grey' வாங்கிப் படியுங்கோ. அப்பதான்.. உங்கள் அளவில் இந்த விடயத்தில் எது நவீனத்துவம் என்ற புரிதல் வரும் என்று நினைக்கிறன்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிருபண்ணா.. நீங்கள் கட்டாயம்.. இந்த '50 Shades of Grey' வாங்கிப் படியுங்கோ. அப்பதான்.. உங்கள் அளவில் இந்த விடயத்தில் எது நவீனத்துவம் என்ற புரிதல் வரும் என்று நினைக்கிறன்..! :icon_idea::)

அடடா.. புத்தகம் வாங்கிப் படிக்கிற பழக்கம் உங்களுக்கும் வந்துவிட்டதா? சொல்லவே இல்லை.

நான் 50 Shades triology படித்து முடித்துவிட்டேன் (ASDA இல் பத்து பவுண்ட்ஸ்களுக்குக் விற்கின்றார்கள்)!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படிச்சுமா உங்களுக்கு இந்தக் கொலைவெறி..... :lol::D

நாங்க வாங்கிப் படிக்கிறதில்ல.. சுட்டுப் படிக்கிறது..! :)

Posted (edited)

madhu-_7_.jpg?w=200&h=300[size=5]காதலுக்கு கண்ணில்லை

என்பதெல்லாம் பொய்,

உன்

கண்ணுக்குள் தான்

காதலில்லை[/size]

[size=5]உன்

ஒவ்வோர் பார்வையும்

சாவியில்லா பூட்டொன்றை

எனக்குள்

பூட்டி நகர்கிறது.

எப்போது தான்

பூட்டு தயாரிப்பதை நிறுத்தி

சாவி தயாரிக்க சம்மதிப்பாயோ ?

http://xavi.wordpres.../08/04/love-49/[/size]

Edited by nunavilan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிருபன் அண்ணா அடுத்த கவிதை எப்ப?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிருபன் அண்ணா அடுத்த கவிதை எப்ப?

படிப்பவை மனதைக் கவரும்போது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=6]Untitled[/size]

டிசே தமிழன்

ஒவ்வொருவரின் வருகைகளும்

கண்காணிக்கப்பட்டு

அவர்களின் முன்/பின் கதைகள்

மூச்சுக்கூட விடமுடியா

பெரும்புகையாய் கிளம்பும்

விழாக்கள்

மனதிற்கு உவப்பில்லாதவை

பிரியமானவர்களின் விருந்துகள்

புறக்கணிக்கமுடியாதன.

பிறரைக் காயப்படுத்தித்தான்

நம்பிக்கைகள்

வாழவேண்டுமென்பதில்லை

மனிதர்கள் முக்கியம்

எனக்கு.

நெளிநெளியான

வர்ணம்பூசிய கூந்தற்கற்றைகளை

அலட்சியமாய் ஒதுக்கிவிடும் பெண்களை

இன்னொருமுறை திரும்பிப் பார்க்காமல்

இருக்க முடிவதில்லை

சூழலின் இறுக்கந்தளர்த்தி

சிறுபுன்னகையுடன்

இவர்களை இரசிக்கத்தொடங்கினால்

விழாக்களின் உயிர்ப்பை

அறிந்துகொள்ளலாம்

சிலவேளைகளில்

இன்றைய விருந்தில்

தேனீக்களாய் பறந்துதிரிந்து

அறுசுவையுணவு பரிமாறிய

வளரிளம்பெண்கள் சிலிர்ப்பூட்டினர்

கோடைகாலத்து சிறுமழைபோல

அவர்களுடன் உரையாடுவதற்கான

காலமும் தனிமையும்

கனிந்தபோதும்

இப்படி

இயல்பாய் சிரித்துப்பழகுபவர்களை

'வேசிகள்' என விளித்து

நக்கலும் (பாலியல்) சேட்டைகளும் செய்யும்

என்னைப்போன்றவர்களின்

நினைவுவர

விலகிப்போகின்றேன்

புன்னகைகளுடன்

முகஞ்சுழிக்காது

அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும்

அவர்களை

ஒரு மேசையில் அமர்த்தி

சில மெழுகுதிரிகளை ஒளிரவிட்டு

ஆறுதலாய்

உணவு பரிமாறும் ஆசை

எழுகிறது எனக்குள்

விழாவின் முடிவில்

எஞ்சியிருந்த

அலங்கரிக்கப்பட்டிருந்த பலூன்களை

ஒன்றாய் இணைத்து

நிலவினொளியில் பறக்கவிடுகையில்

குதூகலத்துடன்

ஆடத்தொடங்குகின்றான்

அண்ணாவின் மகன்

அவன் நடனம் கண்டு

கலகலவெனச் சிரிக்கும்

அந்தப்பெண்களை அவதானிக்கையில்

என் ஆயுட்காலத்தின் எந்தக்கணத்திலும்

பெண்களை

வெறுக்கமுடியாது போலத்தான் தோன்றுகின்றது

http://djthamilan.bl...5/untitled.html

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=6]பழுதான பாலம்[/size]

[size=4]ராகவன்[/size]

[size=4]பழுதான பாலம் என்று

தான் தோன்றுகிறது

அப்புறத்திற்கு கொண்டு சேர்க்குமா

என்று தெரியவில்லை

கடக்காமலே பார்த்துக் கொண்டிருந்ததில்

எதிரில் ஒருவர் கடந்து கொண்டிருந்தார்

விரைந்து கடந்தால் இருவரை

தாங்குமா என்று சந்தேகம் வந்த்து

கொஞ்சம் காத்திருந்தேன்

ஏதோ பேசிக் கொண்டே வந்த

இரண்டு பேர்கள் கடக்க

ஆரம்பித்தார்கள்

நானும் சேர்ந்து கொண்டால்

பிடித்திருக்கும் கயிறுகள் அறுபடலாம்

அல்லது பாலத்தின் பலகைகள் முறியலாம்

மறுபடி காத்திருந்தேன்

அவர்கள் என்னை வேடிக்கையாய்

பார்த்து கடந்து சென்றார்கள்

இப்போது பாலத்தில் யாருமில்லை

தனியாய் கடக்க தயக்கமாய் இருந்தது

திரும்பவும் ஊருக்குள் நகர்ந்து

வேற்று வழி இருக்கா என்று

விசாரிக்க ஆரம்பித்தேன்.[/size]

  • Like 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=6]
முடிவுறாத இருவருக்குமான முரண்
[/size]

ஜே.டேனியல்

[size=4]ஒரே[/size]

[size=4]ஒரு முறை[/size]

[size=4]வருகிற நாள்[/size]

[size=4]எனக்கும்[/size]

[size=4]உனக்குமான[/size]

[size=4]நாளாக இருக்கும்.[/size]

[size=4]முரண்பாடுகள் முற்றி[/size]

[size=4]தலை வீங்கி[/size]

[size=4]வார்த்தைகள் வழிந்து[/size]

[size=4]இதயத்தை நிரப்புகிறபொழுது[/size]

[size=4]நம்[/size]

[size=4]இருவருக்குமான[/size]

[size=4]பாதை[/size]

[size=4]இரு வேறு[/size]

[size=4]திசைகளைக் காட்டி[/size]

[size=4]கொக்கரிக்கும்,[/size]

[size=4]கடந்த காலம் முழுக்க[/size]

[size=4]நடந்துகொண்டதை[/size]

[size=4]நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே[/size]

[size=4]ஒரு[/size]

[size=4]மழைத் துளியின் வேகமாக[/size]

[size=4]எதிர்காலம்[/size]

[size=4]முடிந்திருக்கும்.[/size]

[size=4]நானோ[/size]

[size=4]நீயோ[/size]

[size=4]எங்கு இருந்தோம் என்பது[/size]

[size=4]நம்

இருவருக்குமேத்

தெரியப்போவதில்லை.[/size]

http://nampuzhuthi.b...og-post_28.html




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.