Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறகின் கதை

-நிலாரசிகன்-

மலைச்சரிவில் பூத்திருக்கும்

பூக்களின் நடுவில் வீழ்ந்து கிடக்கிறது

ஓர் இறகு.

வெளிமான்கள் மேயும் அம்மலையில்

மார்கச்சை அற்ற யுவதி ஒருத்தி

மலையேறுகிறாள்.

பூக்கள் நடுவில் கிடக்கும் இறகை

பேரன்புடன் கைகளில் அள்ளிக்கொள்கிறாள்.

தன் தளிர் விரல்களால் இறகை

வருடிக்கொடுக்கிறாள்.

சிலிர்த்த மலை ஒரு மாயக்கம்பளமாக

உருப்பெறுகிறது.

யுவதியும் இறகும் வெகு தூரம்

பயணித்து

சிற்றோடைகள் நிறைந்த வனத்தில்

இறங்கி நடக்கிறார்கள்.

ஒளிக்கண்களுடன் அவளை நெருங்குகிறான்

வனத்தின் இளவரசன்.

தன் செல்லப்பறவையின் இறகை

திரும்பக்கேட்கிறான்.

இறகை கொடுத்தவுடன் தன்னுடலில்

சிறகுகள் வளர்வதை உணர்கிறாள்.

வனத்தின் இளவரசனை தன்

விழிப்பூக்களில் அமர்த்திக்கொள்கிறாள்.

பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்

அவர்கள் பேரானந்தமாய் பறக்கிறார்கள்

ஓர் இறகின் வடிவில்.

உன் மார்பில் பூக்கள் மலர்ந்திருந்தன..

-நிலாரசிகன்-

1.

ஓர் உன்னதமான நிகழ்வின்

முடிவில் அறையெங்கும் மணம்

நிரப்பியபடி படுத்திருந்தாய்.

கனவில் தோன்றும் கவிதைவரியின்

பூரிப்புடன் கண்கள் மூடி

அமர்ந்திருந்தேன்.

காலமடியில் இசை

வழிந்துகொண்டிருந்தது.

செவி வழி உயிருக்குள்

ஊடுருவியது உனதன்பின்

அணுக்கள்.

மார்பு தாங்கும் வனப்பூக்களுடன்

அறையெங்கும் பறந்து சிலிர்த்தாய்.

இசைக்குள்ளிருந்து இதயத்திற்குள்

நுழைய துவங்கினேன்

நான்.

2.

தவிர்த்தலையும் ரசனையுடன்

என்னில் தெளிக்கிறாய்.

உன் விலகல் ஒரு நட்சத்திரம்

போல் மிளிர்கிறது.

வெறுமை நிறைந்த சொற்களை

உதிர்த்தபடி செல்கிறதுன்

இதழ்கள்.

எவ்வித உணர்வுகளுமின்றி

புன்னகைக்க கற்றுக்கொண்டாய்.

மழை சத்தமின்றி பெய்து

ஓய்கிறது.

கண்ணீர் உடைந்த

நிலாத்துளிகளாய் உருள்கிறது.

என்றேனும்

ஏகாந்தத்தின் செளந்தர்யத்தில்

நீ

லயித்திருக்கும் தருணத்தில்

காற்றில் மிதந்து வரக்கூடும்

சிறகறுந்த கனவொன்றின்

குருதி தோய்ந்த இறகுகள் சில.

Edited by சுபேஸ்

  • 2 weeks later...
  • Replies 338
  • Views 118.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

  • கரும்பு
    கரும்பு

    கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

  • துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

  • கருத்துக்கள உறவுகள்

செயல் தொடங்கு வளம் தானே வரும்

.............................................................................

செயல் தொடங்கு வளம் தானே வரும்

வளமி;ல்லை என்று ஏங்காதே

இருப்பதை கொண்டு

இயன்றவரை செய் (முடிவில்லை)bird_6.jpg

செயலை தொடங்கு

வளம் தேடிவரும்

எதையும் நுட்பமாய் பாவி

இருப்பதே போதும்

இன்னும் பெருகும்

இம்மாம் பெரிய கோலியாத்தே

வீழ்ந்தது தாவீதின் சிறுதுண்டு

கல்லால்தான்

உன் செயலில் வேகம் இருந்தால்

வலி தெரியாது – வெல்வாய்

வளம் எல்லாம் பெறுவாய்

...............................................................

  • கருத்துக்கள உறவுகள்

நீ நினை அதற்கான பலம் தானாகவே வரும்

......................................................................................................

நீ கேட்காதவரை

உனக்கு உதவி கிடைக்காது.... நீ

தட்டினால் தான் (கதவு திறக்கப்படும் ) இதுபிரான் சொன்னமொழி

நீ நகர்த்தாமல் எதுவும் நகராது

நண்டிருப்பவை கூட

நீ தடுக்காவிடின் எதுவும் நிற்காது

இது பௌதிகம் சொல்லும் மொழி

நீ முயலாமல் கனவுகள் மலரா

முயற்சியை சுவாசி... உன்

மூச்சுக்காற்று தென்றலாம்

கனவு மொட்டுக்கள் சட்டென்றே

பூவாகும்

எது நிகழவேண்டுமோ... அது

நிகநீ கேட்காதவரை

உனக்கு உதவி கிடைக்காது.... நீ

தட்டினால் தான் (கதவு திறக்கப்படும் ) இது219684194_3b39c467ca.jpg

இயேசுபிரான் சொன்னமொழி

நீ நகர்த்தாமல் எதுவும் நகராது

நகர்ந்து கொண்டிருப்பவை கூட

நீ தடுக்காவிடின் எதுவும் நிற்காது

இது பௌதிகம் சொல்லும் மொழி

நீ முயலாமல் கனவுகள் மலரா

முயற்சியை சுவாசி... உன்

மூச்சுக்காற்று தென்றலாம்

கனவு மொட்டுக்கள் சட்டென்றே

பூவாகும்

எது நிகழவேண்டுமோ... அது

நிகழும் நீ நினைத்தால் மட்டும்

============================================

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்

உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால்

வலிமை படைத்தவன் ஆவாய்.

- சுவாமி விவேகானந்தர்ழும் நீ நினைத்தால் மட்டும்

============================================

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்

உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால்

வலிமை படைத்தவன் ஆவாய்.

- சுவாமி விவேகானந்தர்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது மனங்கொத்திப் பறவை

ரவி (சுவிஸ்)

----------------------------------------

இன்று நான் சந்தோசமாயிருக்கிறேன்

எனது பிரிய மனங்கொத்திப் பறவையின்

மீள்வரவில்

நான் இலேசாகிப்போயிருக்கிறேன்.

நான் எதையும்

விசாரணை செய்வதாயில்லை.

ஏன் பறந்தாய்

ஏன் எனைவிட்டு தொலைதூரம் பயணித்தாய்

என்பதெல்லாம்

எனக்கு பொருட்டல்ல இப்போ.

என் பிரிய மனங்கொத்தியே

நீ சொல்லாமலே பறந்து சென்ற

காலங்கள் நீண்டபோது

என் மனதில் உன் இருப்பிடம்

பொந்துகளாய்

காயங்களாய் வலிக்கத் தொடங்கியதை

அறிவாயா நீ.

நீ அறிந்திருப்பாய்

நீ இரக்கமுற்றும் இருப்பாய்.

மீண்டும் உன் கொத்தலில்

இதமுற்றிருக்கிறேன் நான்

கொத்து

கோதிவிடு என் மனதை

இதுவரையான உன் பிரிவின் காலங்களில்

என் மனம் கொத்திச் சென்ற

பறவைகளில் பலவும் என்

நம்பிக்கைகளின் மீது

தம் கூரலகால்

குருதிவடிய

எழுதிச்சென்ற வரிகளெல்லாம்

வலிகள் ஊர்கின்றன.

மறக்க முனைந்து மறக்க முனைந்து

தோற்றுப்போகிறேன் நான்.

நான் நானாகவே இருப்பதற்காய்

காலமெலாம்

வலிகளினூடு பயணிக்கிறேன்.

சொல்வதற்காய் எனை மன்னித்துவிடு

உன் மீள்வரவும்

மீள்பறப்பாய் போய்விடும்தான்.

என்றபோதும் இன்று நான்

இதமுற்றிருக்கிறேன் - நீ

கோதிய பொந்துள்

சிறகை அகல விரித்ததனால்!

http://www.vaarppu.com/view/2533/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈசலோடாயினும்...

Winged%20Termites.jpg

1.ஒரு மழைநாளிரவில்

பிறந்த

ஈசல் ஒன்று

சற்றே எம்பிப் பறந்தது

வானில் ..

பக்கத்தில் பறந்துகொண்டிருந்த

பறவையைப் பார்த்து

நானும் ஒரு பறவையென்று

பெருமிதம் கொண்டது

கொண்ட வினாடியே

ஆயுள் தீர்ந்து

விழுந்திறந்தது

2.விழுந்த ஈசல்

இறக்கும் முன்பு நினைத்தது

ஒரு நாள் வாழ்க்கைக்கு

எதற்கிந்த சிறகு?

http://ezhuththuppiz...og-post_30.html

  • கருத்துக்கள உறவுகள்

ஈசலோடாயினும்...

Winged%20Termites.jpg

1.ஒரு மழைநாளிரவில்

பிறந்த

ஈசல் ஒன்று

சற்றே எம்பிப் பறந்தது

வானில் ..

பக்கத்தில் பறந்துகொண்டிருந்த

பறவையைப் பார்த்து

நானும் ஒரு பறவையென்று

பெருமிதம் கொண்டது

கொண்ட வினாடியே

ஆயுள் தீர்ந்து

விழுந்திறந்தது

2.விழுந்த ஈசல்

இறக்கும் முன்பு நினைத்தது

ஒரு நாள் வாழ்க்கைக்கு

எதற்கிந்த சிறகு?

http://ezhuththuppiz...og-post_30.html

கிருபன் நல்ல கவிதை, ஒவ்வொரு படைப்புகளும் விசித்திரமானவை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நகரங்கள்

தேவ அபிரா

இலையுதிர்காலத்தின் எதிர்பாராத வெப்பம் தவழ்கையில்

இந்த நகரத்தை வந்தடைந்தேன்.

நகரத்தின் காலடியில் நகர்கிறது நதி.

கரையோர உணவகங்களில் நடுகுடைகள் விரிந்துள்ளன.

முறுகச்சுட்ட பாணில் உருகி வழியும் பாலாடைக் கட்டிகளுக்கருகில்

மென் பொன் மதுக்குவளையை இருத்தி

நங்கைகள் விரைந்து பரிமாறுகிறார்கள்.

பங்குச்சந்தை காய்கிறது.

வங்கிகள் சரிகின்றன.

ஆயினும் கொழுத்த முகங்களின் எண்ணைப்படிவுகளில்

இலையுதிகாலச்சூரியன் பளபளக்கிறது.

மிதவைப்படகின் தோசைக்கடைகளில் சிறுவர்கள் காத்திருக்கிறார்கள்.

நூற்றாண்டுகளாக நகரும் ஆற்றின் ஈரத்தைத்

தன்காதலியின் உதடுகளுக்குள் விட்டுக்கொண்டிருந்தான் ஒருவன்.

இலையுதிர்காலத்தின் வெப்பம் தவற விடக்கூடியதா என்ன?

நான்கு தசாப்தங்களின் முன்பு

இந்த நதிக்கரையில் எதிரி காத்திருந்தான்.

விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன.

நினைவுச்சின்னங்களாக நசுங்கிப்போன அந்தக்காலத்தின் கல்லறையில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது

"இது எமது நகரம்"

என் வாழ்வின் நினைவுத் தடத்தில்

உறங்கிக்கிடந்தவென் நகரங்கள் விழித்தன...

உறையாதே நடந்து போவென்றன..

காலத்தினூடே பயணம் செய்யும் * நியூற்றினோக்களைத் தேடி

குறுகலான சந்துகளினூடே நடந்தேன்.

நூற்றாண்டுகள் கடந்தும்

கடல் கடந்து அள்ளிவந்த செல்வங்கள்

இன்னும் சிதறிக்கிடந்தன.

தொன்மையை இழந்து நகரத்துள் நசுங்கிக் கிடந்த பூங்காவெளியில்

கண்கள் படாமலும் காமம் சுடாமலும்

பெண்ணுடல் கிடத்தி வெய்யில் சுகிக்கிறது.

என் நகரத்திலோ பூதங்களுக்கஞ்சி

ஒடுங்கிய பெண்களின் சாபத்தில்

இன்னுமெரிகிறது எரிக்கிறது சூரியன்.

நினைவுகளின் தகிப்புத்தாளாது

நிமிர்ந்து நின்ற நினைவுசின்னத்தின் அடியில் அமர்ந்தேன்.

அதன் வேர்கள் எத்தனை ஆண்டுகள் நீண்டிருந்தவென்றறியேன்.

ஆனாலும் அதன் மடியில் இருந்தது ஒரு கவிதை:

"இந்த நகரத்தில் அதிக நாள் நான் வாழவில்லை

ஆயினும் எனது இளமைக்காலம் இங்கேயிருந்தது

நான் எங்கு சென்றபோதும் என்னருகில் இருப்பதும் இந்த நகரமே".*

ஓலங்கள் மட்டும் மௌனமாக அலையும்

எனது நகரங்களில் என்றாவது ஓர் நாள்

நானும் நினவுச்சின்னமொன்றை எழுப்புவேன்.

ஏனேனில் யுகங்களைக்கடந்து செல்ல விரும்பும்

அற்ப மனிதன் நான்.

மனிதர்களற்ற வெளியில் நுழையும்;

சூரியன் விழுந்து சிவப்பாகும் இரவு நதிப்படுக்கையில்

நான் சரிந்தபோது,

என் காதருகில் கேட்கிறது

என் நகரத்தின் ஆழியின் ஓங்காரம்.

http://thevaabira.blogspot.com/2011/10/blog-post_03.html

  • கருத்துக்கள உறவுகள்

நகரங்கள்

தேவ அபிரா

நூற்றாண்டுகள் கடந்தும்

கடல் கடந்து அள்ளிவந்த செல்வங்கள்

இன்னும் சிதறிக்கிடந்தன.

தொன்மையை இழந்து நகரத்துள் நசுங்கிக் கிடந்த பூங்காவெளியில்

கண்கள் படாமலும் காமம் சுடாமலும்

பெண்ணுடல் கிடத்தி வெய்யில் சுகிக்கிறது.

என் நகரத்திலோ பூதங்களுக்கஞ்சி

ஒடுங்கிய பெண்களின் சாபத்தில்

இன்னுமெரிகிறது எரிக்கிறது சூரியன்.

http://thevaabira.bl...og-post_03.html

இந்த நகரத்தை எனக்கு நன்கு தெரியும்!

எவ்வளவு அழகாக தேவ அபிரா, அதன் சரித்திரத்தையே சில வரிகளுக்குள் வடித்து விட்டார்!

நன்றிகள், கிருபன்!!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அருமையான கவிதை! நன்றி கிருபன் தேடித் தந்ததிற்க்கு...

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு தசாப்தங்களின் முன்பு

இந்த நதிக்கரையில் எதிரி காத்திருந்தான்.

விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன

.நினைவுச்சின்னங்களாக நசுங்கிப்போன

அந்தக்காலத்தின்கல்லறையில்

ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது

"இது எமது நகரம்"...............................................

..மிகவும் அருமையாக் எழுதியுள்ளார் . பகிர்வுக்குனன்றி

30021_117444518288021_100000674212179_147123_3581681_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

TreeMan.jpg

ஊர் வீதியை அலங்கரித்து

வழி பிரிக்கும் முச்சந்தியில்

ஒய்யாரமாய் நிற்கும் பொதுமரம்

பிரச்சனை கூடும் பஞ்சாயத்து

மனிதர்களின் சொல்லடி பட்டு

மௌனமாக நிற்கும் மரம்

தன் நிழல் மடியில்

இளைப்பாறும் வழிபோக்கர்கள்

கிளைகாளால் விசுறும் மரம்

தொங்கி விளையாடும் சிறுவர்கள்

வளைந்து கொடுக்கும் கிளைகள்

அன்பிற்கு தாழ்ந்துகொடுக்கும் மரம்

வெட்டி நியாயம் அடுக்கியபடி

ஊர்க்கதை பேசும் பெருசுகள்

வேடிக்கை பார்க்கும் மரம்

தாய்ப் பறவைகள் இரைதேடி

கிளையில் உறங்கும் பறவை குஞ்சுகள்

காற்றே மெல்லமாய் வீசு

என்குழந்தைகளை நசுக்காதீர்கள்

மௌனமாக வினவும் மரம்

காலடியில் உதிர்ந்த சருகுகள்

தளிரும் கிளைகளை களையுங்கள்

என் தலையை வெட்டி

பாவம் சுமக்காதீர்கள்

மரத்தில் பேய் இருக்கு

யாரோ சொன்ன பொய்

முறைத்துக் கொண்டு ஊர்மக்கள்

மனிதர்களின் இல்லாப் பழிசுமந்து

வார்த்தைகள் இன்றி அழுகிறது

பேச இயலாத மரம்

வளர்த்து விட்ட ஊர்மக்கள்

உறவாட மறுக்கையில்

ரணமாகிறது மரத்தின் தனிமை

http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னை முன்வைத்து .

சமீபமாக காணமல்

போய்விட்டான் .

மறந்து வைத்த மூக்குக் கண்ணாடியை

தேடி எடுப்பது போல சுலபமானது

என்று தான் நினைத்திருந்தேன் .

ஆனால்

அது அப்படி இருக்கவில்லை.

தெரிந்தவர்களிடம்

சொல்லியும் வைத்தேன்.

தகவல் ஏதும் இல்லை.

வெயில் சற்று அதிகமாக இருந்த

கோடை நாளில்

இரயில் நிலையத்தில்

என்னைக் கண்ட

காக்கை

மரணம் நிகழாத

பகுதி ஒன்றில்

பிணம் தின்னும் பறவைகளுக்கு

இரையாக கிடப்பதாகச்

சொன்னது

தொலைக்கப்படுவதும்

மீட்டெடுப்பதுவும்

எப்போதும்

அத்தனை எளிமையானதாக இல்லை .

நன்றி - உயிரோசை

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிமை என்னும் மதுபானம்…

கவிதா

நான் அவளது

இறுதி வேர்.

என்னிடம் இருக்கிறது,

அவள் விட்டுச் சென்ற

தனிமையின்

எச்சங்கள்.

அவளை புசித்து பெருகிய

அவளது தனிமைகள்

என்னிடம் தமது

ரகசியங்களை

வெளியிட்டுக் கொண்டன.

புராதான சுவை கொண்ட

அந்த தனிமைகளை

சிறு மதுக் குவளைகளில்

ஊற்றி

உங்களுக்கு

பருகத்

தருகிறேன்.

உங்கள் போதையின் பிறழ்வுகளுக்காக

காத்துக் கொண்டிருக்கிறாள்

தனிமை தின்ற மீதமாய்

அலைந்து கொண்டிருக்கும்

அவள்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாபங்கள் முடிவில்

ராசை நேத்திரன்

சம்பளத்தை நோக்கிய

மாத மாத வாழ்க்கை பயணம்

எளிதாய் மனித வாழக்கையின்

நாட்களை நொடிப்பொழுதில்

தின்று விடுகிறது

தேவைகளை பூர்த்தி செய்து

கொள்ளவே வாழ்க்கை பயணம்

என்று மாறிவிடுவதில் சாதிக்க

பிறந்த மனிதன் எங்கே யோசிக்க

சாதனையின் படிக்கட்டுக்களை

திடும் என திரும்பி பார்க்கிறேன்

பள்ளிப்பருவம் மறக்க தொடங்கி

அனிச்சையாய் ஓடிக்கொண்டு

இருக்கிறேன் .....

இது போலவே இன்னும் சிறிது

நாட்களில் கல்லூரி காலம்,

உயிர் நண்பனின் நட்பு,

உறவின் பாலம்

கொஞ்சம் கொஞ்சமாய்

தேயத்தொடங்கிவிடுகிறது

நாட்காட்டியை போலவே

ஞாபங்களும்.......

http://www.vaarppu.com/view/2571/

என்னை முன்வைத்து .

சமீபமாக காணமல்

போய்விட்டான் .

மறந்து வைத்த மூக்குக் கண்ணாடியை

தேடி எடுப்பது போல சுலபமானது

என்று தான் நினைத்திருந்தேன் .

ஆனால்

அது அப்படி இருக்கவில்லை.

தெரிந்தவர்களிடம்

சொல்லியும் வைத்தேன்.

தகவல் ஏதும் இல்லை.

வெயில் சற்று அதிகமாக இருந்த

கோடை நாளில்

இரயில் நிலையத்தில்

என்னைக் கண்ட

காக்கை

மரணம் நிகழாத

பகுதி ஒன்றில்

பிணம் தின்னும் பறவைகளுக்கு

இரையாக கிடப்பதாகச்

சொன்னது

தொலைக்கப்படுவதும்

மீட்டெடுப்பதுவும்

எப்போதும்

அத்தனை எளிமையானதாக இல்லை .

நன்றி - உயிரோசை

இதை எழுதியது யார்....நல்லதொரு கவிதை

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகமூடிகள்

ராமலக்ஷ்மி

ஒன்றல்ல இரண்டல்ல

ஒருநூறு முகமூடிகள்

அணிந்தது அறியாதபடி

தோலோடு சங்கமமாகி

சதையோடும் எலும்போடும் ஊடுருவி

பளபளத்த முகமூடிகளுக்கே

எத்தனைப் பாராட்டுக்கள் புகழாரங்கள்

அத்தனையும் ரசித்தபடி

இரவிலும் களைந்திட மனம்வராத நேசமாகி

உயிரோடு ஒன்றிப்போய்

உலகுக்கான அடையாளமாகி

ஏதோ ஒருநாளில் ஏதோ ஒருசம்பவத்தில்

விழித்துக் கொள்கிற ஆழ்மன விகாரம்

கிழிக்கத் தொடங்குகிறது முகமூடிகளைத்

தன்னிச்சையாக

ஒவ்வொன்றாக அன்றி

ஒட்டு மொத்தமாக

சுற்றம் மறந்து நிதானம் இழந்து

மதி மழுங்கி மற்றவர் வருத்தி

மனவெறி அடங்கிய வெற்றிக் களிப்பில்

எதிரே இருந்த கண்ணாடியை

எதேச்சையாய் ஏறிட

பேதலித்து அலறுகிறது சுயமுகம்

தன்கோரம் தானே காணச் சகியாமல்.

***

உடைந்து போன பொம்மையைக்

கையில் வைத்தபடி விசும்பிக் கொண்டிருந்த

குழந்தையைச் சுற்றி இறைந்து கிடக்கும்

விளையாட்டுச் சாமான்களைப் போலக்

கலைந்து கிடந்தது வீடு

கழற்றி எறியப்பட்ட முகமூடிகளால்

கலங்கி நின்ற மனதை

ஆற்றுப்படுத்த வந்த ஆத்ம பந்தங்கள்

தேற்ற மறந்து கழற்றத் தொடங்கின

ஆத்திரத்துடன் தத்தமது முகமூடிகளை

குவிந்த முகமூடிகளுக்குள்

அமுங்கி மூச்சுத் திணறி

மீட்கக் கோரி வெளி நீண்ட கையை

ஆதுரமாய் பற்றித் தூக்கிவிட்ட

மகானுபாவர்,

”வருத்தம் விடு!

மனிதருக்காகவே

படைக்கப்பட்டவைதாம் இவை.

சேர்ந்து கிடப்பதில்

இன்னும் சிறப்பானதாய்த்

தேர்ந்தெடுத்து அணிந்துகொள்ள

கிடைத்த வாய்ப்பாகப் பார்”

உபதேசித்தார்

நழுவத் தொடங்கிய தன் முகமூடியை

கெட்டியாகப் பிடித்தபடி.

  • கருத்துக்கள உறவுகள்

கருங்குழி சேரும் பேச்சொலி

ப்ரவின்துள்சி

முதலில் கவிதைகள் பற்றி தான் பேசினோம்

அது ஒரு கோழியிறகின் மேல்

காற்றில் பயணம் செய்வதைப் போலிருந்தது !

பின் எழுத்தாளர்கள் பற்றி பேசினோம்…

அது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை

மாறாக அவை அலுப்பைத் தருவதாகக் கூறினாய் !

பிறகு என்னைப் பற்றி பேசினோம்…

அவை ஒரு சாம்பல் நிற பூமியின்

புதினமென நம்பினாய் !

அதன்பின் உன்னைப் பற்றி பேசினோம்…

ஒரு சொட்டு பாதரசத்தை எனது உள்ளங்கையில்

பத்திரமாக கொண்டு சேர்த்தாய் !

தொடர்ந்து பிறரது காதல்களைப் பற்றி பேசினோம்…

பின், நம்பிக்கையின்மை, ஏமாற்றம் , துரோகங்கள் பற்றிய

பேச்சுகள் தவிற்க முடியாததாகின !

எதிர்பார்ப்பு, தனிமை, ஏக்கம் பற்றி பேசி முடிகையில்

மௌனம் நம் மத்தியில்

நாற்காலியிட்டு அமர்ந்துகொண்டது !

பின் நாம் உடல்களின் மொழிகளில் பேசினோம்…

அவை இதுவரை பிறக்காத ஒரு மொழியில்

வேறு குரல்களில் பேசப்பட்டது குறித்து பதற்றமடைந்தோம் !

பிறகு நாம் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை…

இதுவரை பேசியவை எல்லாம்

சட்டென ஒரு கருங்குழியில் சென்று மறைந்துவிட்டிருந்தது !

பின் நாட்களில்…

யாருடனாவது கவிதைகள் பற்றி பேச நேரிடுகையில்

நாம் முன்பு எப்போதையும்விட

மிகவும் கவனத்துடன் இருந்தோம்

..!

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சறைப்பெட்டி

சின்னப்பயல்

அஞ்சறைப்பெட்டியில்

அம்மா போட்டு வைத்த

மீதக்காசில்

சீரகத்தின் மணமும்

கடுகின் வாசமும்

வெந்தயத்தின் நெடியும்

மஞ்சள்பொடியின் கமறலும்

மிளகின் காரமுமாக

அடித்த வாசம்

இன்னும் என் மனதினுள்

வட்டமடிக்கிறது

அந்தக்காசில்

வாங்கித்தின்ற

மிட்டாயின் மணம்

ஏனோ நினைவில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் நீக்கமற

எம்.ராஜா

துடைத்துக் கவிழ்த்த தேநீர்க் கோப்பையில்

இன்னமும் தேங்கியிருக்கிறது

இறந்த காலத்தின் சுவை ஒன்று

காலியான தண்ணீர்க் குடுவையிலும்

ஒட்டிக்கொண்டு இருக்கின்றன

சில ஈரத் துளிகள்....

ஒரு வெற்றுத் தாளில் வாசிக்கப்படுகிறது

அடர்மௌனத்தின் நீள்வாக்கியம்

யாருமற்ற வீட்டை சுற்றி வருகின்றன

அமானுஷ்யங்களின் நிழல்கள்

நிஜத்தில்

எந்த வெற்றிடமும் காலியாக இருப்பதில்லை...

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகங்கள்

ப.பார்த்தசாரதி

ஒவ்வொருநாளும் பல முகங்களைக்

கையிலேந்தி அலைகிறேன்

யாருக்கும் தெரியாமல்

அவற்றை மறைத்து வைத்து

மீண்டும் அணிந்துகொள்கிறேன்.

ஒவ்வொருவருக்காய் ஒவ்வொரு

முகம் மாட்டி அலைகிறேன்.

எந்த முகம் என்முகம்

என்பது யாருக்கும் தெரியாமல்

சமமாக பாவித்து வருகிறேன்

ஒருவருக்குத் தெரிந்த

முகம் மற்றவர்களுக்குத்

தெரிய வாய்ப்பு கொடுக்காமல்

கையிலிருந்து மாட்டிக் கொள்கிறேன்

சில துளி வினாடிகளில்

நல்லவன் கெட்டவன்

வஞ்சகன் சாது

அப்பாவி வெகுளி

என ஒவ்வொருமுகங்களுக்கும்

பெயர் வைத்து தினமும்

அதற்கு உணவூட்டி

வளர்த்து வருகிறேன்

ஒரு நாள் அகக்கண்ணாடியில்

என் சொந்த முகம் பார்க்கையில்

அது வெளிறிப் பழுதடைந்து

அழுகி அகோரமாய்

என்னைப் பார்த்து சப்தமாய் சிரித்தபடியே

இறந்துகொண்டிருந்தது

ஒவ்வொருநாளும் பல முகங்களைக்

கையிலேந்தி அலைகிறேன்

யாருக்கும் தெரியாமல்

அவற்றை மறைத்து வைத்து

மீண்டும் அணிந்துகொள்கிறேன்.

http://www.uyirmmai....s.aspx?cid=5448

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை பச்சை முடிஞ்சு போச்சு பிறகு வந்து குத்திறன் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதைகள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணநாள் பரிசுகள்

ஆர்.அபிலாஷ்

திருமணநாள் பரிசுகள்

குழந்தைத்தனத்தால் புத்தொளிர்கின்றன.

வருடங்கள் முன் பின் சென்று

தூசு படிந்து

நிறம் மங்கி வரும்

ஒரு குழந்தையின் பாதுகாக்கப்பட்ட

விளையாட்டுப் பொருட்களைப் போல்

இன்று மாலை

பழைய பரிசுகளுடன்

அமர்ந்திருக்கிறேன்.

மஞ்சளான மாலை

அழுகும் இலைகளின் சலசலப்புடன்

இரவில் வெடிக்கும் பூக்களின்

வாசனையையும்

கொண்டு வருகிறது.

மாடி ஜன்னலுக்கு வெளியே

நூறு நூறு கட்டிடங்களுக்கு அப்பால்

ஒரு சோர்வுற்ற சூரியன்

இறுதியாய் ஆஸ்பத்திரிக்கு திரும்பும்

தளர்ந்து வீழ்ந்த உடலைப் போல்

எதையாவது பற்றிக் கொள்ள

விழைகிறான்.

எதிர்பாராது

மழை பெய்யத் துவங்குகிறது

தயாரற்ற மனிதர்கள்

கூரைகள் தேடி சிதறுகிறார்கள்.

கால் இடறி தடுமாறுகிறேன்

உனது பரிசுப் பொருட்கள்

கலந்து விடுகின்றன

எனதுடன்.

மீண்டும் மீண்டும்

அவற்றை

இரு பகுதியாய் பிரிக்க முயன்று

தோல்வியடைகிறேன்

பின் காலவரிசைப்படி

கலைத்துக் கலைத்து

அடுக்குகிறேன்.

மழை நிற்க வெகுநேரமாகிறது

வெப்பம் கிளம்பி

பின்

பனி பொழியும் போது

திகைத்துப் போய்

பரிசுப் பொருட்கள் மத்தியில்

தற்காலிகமாய் எல்லாரும் மறந்து போன ஒரு குழந்தையைப் போல

அமர்ந்திருக்கிறேன்.

வாசலில்

மெல்ல தும்மியபடி

நுழைகிறாய்.

உன்னிடமிருந்து

பரிசுப் பொருளை வாங்கி

அருகில் வைத்து

உனக்கான புதுப் பரிசைக்

குவியலில் தேடி

தோற்று

வேறுவழியின்றி

கண்களில் மன்னிப்பை வைத்தபடி

அங்கு

ஆகப் பழசான பரிசு ஒன்றைப்

பொறுக்கி

நீட்டுகிறேன்

அதில் மிகச்சரியாய்

குறிக்கப்பட்டுள்ளது

இன்றைய தேதி...

'ஞாபகங்கள் முடிவில்' என்ற கவிதை இணைப்பிற்கு நன்றி கிருபன் :)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.