Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதைவைத்து நாம் முடிவெடுப்பது எங்கள் போராட்டம் மக்கள் எழுச்சியுடன் தான் நடந்தது? இல்லை எழுச்சியுடன் நடக்கலவில்லை?? என.

சர்வதேசம் பயங்கரவாதம் என்று சொன்ன கொசவா லிபரேசன் ஆமியை ஏற்றுக்கொண்டது, கொசவாவையும் அங்கீகரித்தது.

கிழக்கு தீமோரில் மக்கள் போராட்டத்தை உடனடியாக "எழுச்சி" என்று ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது.

மொத்தத்தில் இரண்டு இலட்சத்திற்கு மேலாக மக்களை இழந்து; பல்லாயிரம் வீரர்களை இழந்து; ஆயிரக்கணக்கில் சாத்வீக போராட்டங்களை உலகம் முழுவதிலும் நடத்தும் தமிழர்கள் போராட்டம் மக்கள் எழுச்சியுடன் தான் நடந்தது, நடக்கின்றது.

வன்னியில் அவ்வளவு மக்களும் செத்து மடியும் போது இலங்கையில் பிற பாகங்களில் இருக்கும் தமிழ் மக்களால் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தையை[எழுச்சியை]ஏன் மேற் கொள்ள முடியவில்லை?...அந்த மக்கள் வன்னியில் சாகும் போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?...தனிய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது அவர்களுக்கு ஆபத்து என்டால் அரசையும்,புலியையும் எதிர்த்து யுத்தத்தை நிறுத்த சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து இருக்கலாமே! அப்படி செய்து இருந்தால் அது உலகின் கண்களை திறந்திருக்கும்...தனிய புலம் பெயர் மக்கள் மட்டும் ஆர்ப்பாட்டம் செய்ததால் தான் அது கேலிக் கூத்தாகியது...அங்கு மக்கள் அழியும் போது அதைப் பார்த்து தாங்க முடியாமல் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ட உணர்வு உள்ளத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் அப்படி கிளர்ந்து முழு மக்களும் திரண்டு எழுந்திருந்தால் அது மக்கள் புரட்சியாகி இருக்கும்

எங்களிடம் திருகோணமலை துறைமுகம் இருக்குது...அது இருக்கு,இது இருக்குது எனச் சொல்லி எங்களுக்கு நாட்டை பிரித்து தந்தால் எதை எல்லாம் உங்களுக்கு தரலாமோ அதை எல்லாம் தருவோம் எனச் சொல்லி முதலில் ஈழத்தை அடைய முயற்சி செய்து இருக்க வேண்டும் ஈழம் கிடைத்த பின்னர் எப்படி எமக்கு உதவின நாடுகளை ஏமாற்றுவது என்பது பற்றி பிறகு யோசித்திருக்கலாம்...இந்த ராஜதந்திரம் தான் எம்மிடம் இல்லை.

  • Replies 90
  • Views 5.7k
  • Created
  • Last Reply

மக்கள் மந்தைகளாக நினைக்கும் போக்கு இருந்ததுதான். மக்களின் சிந்தனையோடு, அவர்களின் விருப்பத்தோடு, தேவையான இராஜதந்திரத்தோடு போராட்டம் (அரசியல், இராணுவம்) முன்நகர்த்தப்பட்டிருந்தால் விடுதலை கிடைத்திருக்கலாம்.

செய்வதில் எல்லாம் வென்றால் மக்கள் பின்னால் வருவார்கள் என்ற நம்பிக்கை, தோற்றால் மக்கள் என்ன செய்வார்கள் என்பதைச் சிந்திக்கவைக்கவில்லை.

எமது ஆயுதபோரட்டத்திற்கு முன்பான சாத்வீக போராட்டமும் தோல்வியில் முடிந்தது. அந்த தோல்வியின் விளைவே ஆயுத போராட்டம்.

இப்பொழுது ஆயுத போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஆனால், போராட்டத்தின் தேவை இன்னும் இருக்கின்றது. எனவே, விடுதலை போராட்டம் தொடரும், இன்னொரு வடிவத்தில். இது இயற்கையின் நியதி.

வன்னியில் அவ்வளவு மக்களும் செத்து மடியும் போது இலங்கையில் பிற பாகங்களில் இருக்கும் தமிழ் மக்களால் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தையை[எழுச்சியை]ஏன் மேற் கொள்ள முடியவில்லை?...அந்த மக்கள் வன்னியில் சாகும் போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?...தனிய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது அவர்களுக்கு ஆபத்து என்டால் அரசையும்,புலியையும் எதிர்த்து யுத்தத்தை நிறுத்த சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து இருக்கலாமே! அப்படி செய்து இருந்தால் அது உலகின் கண்களை திறந்திருக்கும்...தனிய புலம் பெயர் மக்கள் மட்டும் ஆர்ப்பாட்டம் செய்ததால் தான் அது கேலிக் கூத்தாகியது...அங்கு மக்கள் அழியும் போது அதைப் பார்த்து தாங்க முடியாமல் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ட உணர்வு உள்ளத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் அப்படி கிளர்ந்து முழு மக்களும் திரண்டு எழுந்திருந்தால் அது மக்கள் புரட்சியாகி இருக்கும்

  • ஒரு உண்மையான மக்களாட்சி நாட்டில் தான் இப்படியான் சனநாயக கொள்கைகளை ( மக்கள் போராட்டங்கள், எழுச்சிகள்) எதிர்பார்க்கலாம்
  • தாயகத்தில் மக்கள் தங்கள் போராட்டத்தை / எழுச்சியை காட்டும் உரிமை தந்தை செல்வா காலத்துடன் நசுக்கப்பட்டுவிட்டது.
  • இன்றும் கூட எந்த தமிழ் எதிர்க்கட்சியாலும் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் சிங்களத்திற்கு செய்ய முடியாது
  • வன்னியில் கொடிய இன அழிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது, அந்த அப்பகுதியை தவிர்ந்த தாயக மக்களுக்கு எந்தவித உண்மை செய்திகளும் நேரத்திற்கு தெரியவில்லை.
  • அதையும் மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் அவர்களும் அழிக்கப்பட்டிருக்க கூடும்.

எங்களிடம் திருகோணமலை துறைமுகம் இருக்குது...அது இருக்கு,இது இருக்குது எனச் சொல்லி எங்களுக்கு நாட்டை பிரித்து தந்தால் எதை எல்லாம் உங்களுக்கு தரலாமோ அதை எல்லாம் தருவோம் எனச் சொல்லி முதலில் ஈழத்தை அடைய முயற்சி செய்து இருக்க வேண்டும் ஈழம் கிடைத்த பின்னர் எப்படி எமக்கு உதவின நாடுகளை ஏமாற்றுவது என்பது பற்றி பிறகு யோசித்திருக்கலாம்...இந்த ராஜதந்திரம் தான் எம்மிடம் இல்லை.

இதை இன்றும் கூட கூட்டமைப்போ இல்லை நாடு கடந்த அரசோ இல்லை வேறு யாரும் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

  • ஒரு உண்மையான மக்களாட்சி நாட்டில் தான் இப்படியான் சனநாயக கொள்கைகளை ( மக்கள் போராட்டங்கள், எழுச்சிகள்) எதிர்பார்க்கலாம்
  • தாயகத்தில் மக்கள் தங்கள் போராட்டத்தை / எழுச்சியை காட்டும் உரிமை தந்தை செல்வா காலத்துடன் நசுக்கப்பட்டுவிட்டது.
  • இன்றும் கூட எந்த தமிழ் எதிர்க்கட்சியாலும் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் சிங்களத்திற்கு செய்ய முடியாது
  • வன்னியில் கொடிய இன அழிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது, அந்த அப்பகுதியை தவிர்ந்த தாயக மக்களுக்கு எந்தவித உண்மை செய்திகளும் நேரத்திற்கு தெரியவில்லை.
  • அதையும் மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் அவர்களும் அழிக்கப்பட்டிருக்க கூடும்.

தனிய அரசுக்கு எதிராக மட்டும் ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களுக்கு பிரச்சனை...மக்களாட்சி நடக்கும் நாடுகளில் மட்டும் தான் ஆர்ப்பாட்டம்,எழுச்சி நடக்கும் என்டால் எகிப்தில் மட்டும் எப்படி ஆர்ப்பாட்டம்,எழுச்சி நடக்கும்?...வன்னியில் யுத்தம் நடக்கிறதென்ற விடயமாவது பிற மாவட்டங்களில் உள்ள தமிழருக்கு தெரிந்திருந்தா அல்லது அதுவும் இல்லையா?

தனிய அரசுக்கு எதிராக மட்டும் ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களுக்கு பிரச்சனை...மக்களாட்சி நடக்கும் நாடுகளில் மட்டும் தான் ஆர்ப்பாட்டம்,எழுச்சி நடக்கும் என்டால் எகிப்தில் மட்டும் எப்படி ஆர்ப்பாட்டம்,எழுச்சி நடக்கும்?...

இலங்கையும் எகிப்தும் மேலோட்டமாக பார்ர்க்கும் பொழுது மக்களாட்சி நடக்கும் நாடுகள். இதில் இலங்கை ஒரு பல்லின மக்களை கொண்ட ஒற்றையாட்சி நடத்தும் நாடு. பல நாடுகளில் சர்வதிகாரிகள் "மக்களாட்சி" என்ற போர்வைக்குள் தம்மை மறைத்துக்கொள்ளுகிரார்கள். இந்த சர்வாதிகாரிகள் தமது ஆட்சியை தக்கவைக்க எதுவும் செய்வார்கள்.

எகிப்தில் ஏழு நாட்கள் எடுத்துள்ளது தங்கள் மக்களை நோக்கி சுடுவதற்கு. சிங்களத்திற்கு ஏழு வினாடிகள் போதும், தமிழர்களை சுட.

வன்னியில் யுத்தம் நடக்கிறதென்ற விடயமாவது பிற மாவட்டங்களில் உள்ள தமிழருக்கு தெரிந்திருந்தா அல்லது அதுவும் இல்லையா?

தெரிந்திருந்தது. ஆனால், மனத்துக்குள் அழுவதை தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாதிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டம் வெல்லப்படாமைக்கு காரணங்கள்:

மக்களில் பெரும்பாலானோர் போராட்டத்தை ஒரு கருவியாக்கி தாங்கள் தப்பிப் பிழைத்து சுகமாக எங்காவது போய் வாழனும் என்று எண்ணும் சுயநலத்தை முதன்மையாகக் கொண்டிருந்தது.

மாற்றுக் கருத்து மண்ணாங்கட்டிக் கருத்து என்று கொண்டு இருந்த போராட்டப் பலத்தை சிதறடித்தது. காட்டிக் கொடுத்தது. எதிரி எம்மை பிரித்துக்காட்ட உலகை ஏமாற்ற இடமளித்தது.

எமது மக்களில் பலருக்கு போராட்டத்தின் தேவை.. தொடர்ச்சியான போராட்டம் இவை பற்றி எதுவுமே தெரியாது. ஆமிக்காரன் வந்தா சலூட் அடிச்சு.. கொக்காகோலாவுக்கும் பெப்சிக்கும் மடங்கிற சனத்தை வைச்சுக் கொண்டு எப்படி போராடுறது. விடுதலை வாங்கிறது..! கொள்கை உறுதியற்ற பயந்தான் கொள்ளி மந்தைகள் கூட்டம்.

போராட்ட களத்தில் அரசியல் இராஜதந்திரத்தை நம்பிக்கையோடு நகர்த்திச் செல்லக் கூடிய தலைமைகள் இல்லாமல் இருந்தமை. குறிப்பாக புலிகள் போராட கூட்டணி அதைப் பயங்கரவாதம் என்று சொல்லி 13ம் திருத்தச் சட்டத்துக்குள் சந்திரிக்காவை பொத்தி வைச்சுக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட எதிரிக்கு விலை போகும் அரசியல் தலைமைகள்.

இன்று சம்பந்தன் தான் பேசுறார்.. மற்றவர்களை கழற்றிவிட்டிட்டு. இப்படியான அரசியல் கேணத்தனங்கள் எங்களிடத்தில் மலிந்து கிடப்பது.. எதிரிகளுக்கும் உலகத்திற்கும் எம் மக்கள் கொள்கை அளவில் உறுதியாக இல்லை என்பதை தெளிவாகச் சொல்கிறது. (விடுதலைப்புலிகளின் ஒரே தலைமை.. தமிழீழமே தீர்வு என்றதை எல்லோரும் பின்பற்றி இருந்தால் இன்று எமது பலத்தை உலகம் பாவிக்க அல்லது வாங்க முற்பட்டிருக்கும். நாம் தான் சுயநலவாதிகள் ஆச்சே. ஆளாளுக்கு கிடைக்கிற எலும்புத்துண்டோடு மூலைக்குள் கிடந்து ஆளையாள் கடிப்பட்டு காயப்பட்டு இறக்க.. எதிரி சுகமாக வாழ்கிறான்.)

புலிகள் ஒரு சிறு குழுவினர். பெரும்பான்மை மக்கள் இன ஐக்கியத்தோடு வாழவே விரும்புகின்றனர் என்று சொல்லத்தக்க தமிழர்களும் தமிழ் தலைமைகளும் எம் மத்தியில் மலிந்து கிடப்பது.

பிரதேசவாதம்.. சாதி.. ஊர் வாதம்.. போன்ற மடமைகள் துள்ளிக்குதிப்பது.

விடுதலைப்புலிகளிடம் போதிய அளவுக்கு இராஜதந்திரமும் இருந்தது... அரசியல் சாணக்கியமும் இருந்தது. ஆனால் அவர்களால் உலகில் நிரந்தரமான ஒரு பலமிக்க நண்பனை பிடித்துக் கொள்ள முடியவில்லை. அந்தப் பலவீனமே எமக்கு அழிவாகிவிட்டது.

இன்றோ எமக்கு தாயகத்தில் எந்தப் பலமும் இல்லை.. அங்கிருந்து விடுதலை என்பதும் எட்டாத் தூரம்.

இருப்பதோ ஒன்றே ஒன்றுதான்.. எம்மிடையே இல்லாத ஒற்றுமையை வரவழைத்துக் கொண்டு... எனியாவது ஒரு இராஜதந்திர நலன்காக்கக் கூடிய பலமான நண்பனை உலகில் தேடிக் கொள்வதுதான். அந்த வகையில் நாடு கடந்த தமிழீழ அரசின் சில செயற்பாடுகளைத் தவிர மிச்ச எல்லாம்.. வெட்டிக்கு நடந்து கொண்டிருக்குது.

இப்படியான நிலையில் தென் சூடான் விடுதலைக்கு வாழ்த்திக் கொண்டிருப்பதை விட நமக்கு செய்ய எதுவும் ஆகாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு-

முன்னர் பயங்கரவாதி என் உலகால் கூறப்பட்ட நெல்சன் மண்டேலாவின் சிலை உலகெங்கும் இருக்கு. அதே மாதிரி தலைவரின் சிலைகளும் வரும் என்கின்றீரா? புரியவில்லை.

துரையப்பாவை கொன்றது ஒரு சம்பவம் ஆனால் முள்ளிவாய்க்கால வரை அதையே தொடர்ந்தார்கள்.எந்தப் பெரிய ஒரு விடுதலை அமைப்பு காலத்திற்கேற்ப தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.தற்கொலை தாக்குதல் மூலம் நாடுபிடிக்கலாம் என்றால் இன்று எத்தனையோ நாடுகள் உருவாகியிருக்கும்.ஒரு பிரேமதாசவை கொன்றால் ஒரு சந்திரிகா ,ஒரு பொன்சேகாவை கொன்றால் இன்னொரு கோத்தபாயா.இது விளங்காமல் பழி தீர்ப்பதற்கென்று தற்கொலைதாக்குதல் செய்து தனிநபர் கொலை மூலம் எந்த தீர்வையும் எட்டமுடியாது.

நுணாவிலான் -

அமெரிக்கா,இந்தியா செய்யுது என்று அதை நாங்களும் செய்யமுடியுமா?.உலக அரசியலின் அடிப்படையே அதுதானே.சின்ன மீனை சாப்பிட்டால் தான் பெரியமீன் உயிர்வாழலாம்.எனது பொஸ் ஒவ்வொரு நாளும் ரிலீஸ் ஆகும் புதுப்படத்தை வீட்டிற்கு கொண்டுபோவான் அதை நான் கொண்டுபோகமுடியுமா?பின்னர் ஏன் யூ.என்.ஓ? 5 சுபர் பவர்கள் அவர்களுக்கு வீட்டோ அதிகாரம்.எங்கள் வரையறை தெரிந்து தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும்.ஆயுதம் வாங்கபோனாலும் அதே நிலைதான் காசு இருக்குதென்று விரும்பியதை வாங்கிவிடமுடியாது.

ரஸ்யர்களுடனா போரில் முஜாகிடீன்கள் பாவித்த ஸ்ரிங்கர் மிசைலை புலிகள் வாங்கியிருந்தால் போராட்டம் எப்போதோ முடிந்திருக்கும்.அது அமெரிக்கா ரஸ்யர்களை அடிக்க கொடுத்தது.

இவர்களுக்கால் சுழிஓடி எமக்கு தேவையானதை நாம் பெற்றுக்கொள்வதே இராஜதந்திரம்.அதற்கு தான் சிறுவயதில் சிவனை சுற்றிவந்து பிள்ளையார் மாம்பழம் பெற்ற கதை படிப்பித்தார்கள்.

இன்னமும் பிடிக்கவேண்டியவர்களை பிடித்தால் எமக்கான ஒரு விடிவு தூரமில்லை.90 களிலேயே தொடங்கவேண்டிய "லொபியிங்கை" இப்ப தானெ எங்கட ஆட்கள் தொடங்கியிருக்கினம்.

வெறும் பித்தலாட்டத்தனமாக இருக்கிறது உங்கள் கருத்து.

தற்கொடை தாக்குதல் மூலமோ.. ஆயுதப் போராட்டம் மூலமோ தமிழீழத்தை அடைய முடியும் என்றால் தலைவர் 5 வருடம் ஒப்பந்தம் போட்டிட்டு பேசிக் கொண்டிருந்திருக்கமாட்டார். ஒப்பந்தத்தை முறிக்க எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தும் அவர் அவற்றைப் பயன்படுத்தவில்லை.

அதுமட்டுமன்றி தற்கொடை தாக்குதல் வடிவம் என்பது இராணுவ தாக்குதல் உக்தியாக இருந்ததே தவிர.. அது இராணுவத்தை விரட்டி அடிக்கும் என்றிருந்தால்.. நெல்லியடியில் அடித்த அடியோடு தமிழீழம் கிடைச்சிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஆகவில்லை. அந்த உக்தி அந்தக் காலக்கட்ட போராட்ட இராணுவ உக்தியை.. இன்னொரு இராணுவ போராட்ட பரிமானத்திற்கு மாற்றி அமைத்ததே அன்றி போராட்டத்தை வெல்ல வைக்க அது உகந்தது என்று எவரும் நினைக்கவில்லை.

தேசிய தலைவர் 1987 க்குப் பின்னர் பல பேச்சு வார்த்தைகளில் ஏன் ஈடுபட்டவர். பேசாமல் தற்கொடை தாக்குதலை செய்து கொண்டிருந்திருக்கலாமே.

தற்கொடை தாக்குதல்கள் இராணுவ மற்றும் சில அகற்றப்பட வேண்டிய தடை நீக்கிகள் என்ற வகையில் அதுவும் விரும்பப்படாத ஒரு சூழலில் போராட்டம் ஏற்படுத்தி நின்ற நிற்பந்தத்தின் மத்தியில் நிகழ்த்தப்பட்டவை. எம்மிடம் போதிய ஆயுத பலமும் மக்கள் பலமும் இருந்திருந்தால் நாம் அவற்றை செய்திருக்கத் தேவை இல்லை.

இராணுவ வழிமுறை மூலம் அழுத்தங்களைக் கொடுத்து.. அரசியல் வழிமுறை மூலம் தீர்வைத் தேடுவதே விடுதலைப்புலிகளின் தாக்குதல்களின் நோக்கமே அன்றி.. தற்கொடை தாக்குதல் மூலம் தமிழீழம் அடையலாம் என்று எண்ணி மில்லர் அண்ணா கூடப் போகவில்லை. இறுதியில் கட்டுநாயக்காவில் வீழ்ந்து போனவன் கூட சொல்லிச் செல்லவில்லை.

அவர்கள் சொன்னதெல்லாம் தலைவர் பத்திரம். அவரின் காலத்திலேயே விடுதலையைப் பெற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு விடுதலைப் பாதையில் உள்ள தடைநீக்கிகளாகவே மரணிக்கிறோம். உங்களுக்காக மரணிக்கிறோம் என்று.

அதைக் கொச்சைப்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பாக கருத்தெழுதும் உங்களைப் போன்ற கீழ்த்தரமான தமிழர்களால் தான் எமக்கு விடுதலை கிட்டவில்லை. இதுதான் நிஜம்..!

அடுத்து.. 3ம் ஈழப்போர் முழுவதும் புலிகள் தான் தமிழீழ வான் பரப்பில் செல்வாக்குச் செய்தார்கள். மொத்தம் 30 க்கும் மேற்பட்ட விமானங்களை உலங்குவானூர்திகளை சுட்டுவிழ்த்தினார்கள். ஸ்ரிங்கர் மிசைல்ஸை வைச்சுக் கொண்டு ஈழம் எடுக்கலாம் என்பது அப்போது தெரியாமல் போச்சோ.. ஆருக்கும்...????! வந்திட்டாங்கையா..???! :D:)

Edited by nedukkalapoovan

அண்ணை நான் எழுதியது தற்கொலைதாக்குதலில் தனிநபர்களை அழித்தது பற்றி. போர்முனைகளில் அல்ல.போர்நிறுத்தக்கால கட்டத்தில் எவ்வளவு யுத்தநிறுத்தமீறல்களை புலிகள் மேற்கொண்டார்களென்று போய் பாரும்.கொலைஅரசியலில் இருந்து அவர்களால் மீள முடியவில்லை.

மேற்குலகுகள் ஒன்றும் சும்மா கண்ணை மூடிக்கொண்டு புலிகளை தடைசெய்யவில்லை.தடை செயப்பட்ட இயக்கங்களின் பட்டியலை பார்க்கவும்.கனடாவில் உலகத்தமிழர்களையே தடைசெய்தார்கள்.அதற்கும் டுவின் டவர்தாக்குதலுக்கும் இணைப்பு கொடுத்துவிடாதீர்கள் இங்கிருக்கும் ஆய்வாளர்கள் மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகுகள் ஒன்றும் சும்மா கண்ணை மூடிக்கொண்டு புலிகளை தடைசெய்யவில்லை

சிறிலங்கா அரசு தடை செய்ய முதலே இந்தியாவும் வேறு சில நாடுகளும் தங்கள் நாட்டில் செயற்பாட்டில் இல்லாத இயக்கத்திற்கு தடை விதித்தார்களே! பேச்சு வார்த்தைக் காலத்தில் சிறிலங்கா அரசு தடையை எடுத்த பொழுதும் அவர்கள் தடையை எடுக்கவில்லையே?ஏன் இப்பொழுதுதான் புலிகள் அழிந்து விட்டார்கள் என்று சிறிலங்காவும் உலகமும் வெளிப்படையாக அறிவித்த பின்பும் தடையை நீடித்து இருக்கிறார்களே!எதற்காக?

கொசோவாவின் விடுதலை இயக்கத் தலைவரும் (தற்போதைய கொசோவாவின் பிரதமர்) தனது குறுகிய ஆயுதப் போராட்ட காலத்தில் சிறைக் கைதிகளின் உறுப்புகளைத் திருடி விற்றார் என்று இப்பொழுது குற்றஞ் சாட்டுகிறார்களே!இதைப் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தாமல் அந்த இயக்கத்தைத் தடை செய்யாமல் அந்த நாட்டையே பிரித்துக் கொடுத்தார்களே!அதனையும் கண்களை மூடிக் கொண்டுதான் செய்தார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நான் எழுதியது தற்கொலைதாக்குதலில் தனிநபர்களை அழித்தது பற்றி. போர்முனைகளில் அல்ல.போர்நிறுத்தக்கால கட்டத்தில் எவ்வளவு யுத்தநிறுத்தமீறல்களை புலிகள் மேற்கொண்டார்களென்று போய் பாரும்.கொலைஅரசியலில் இருந்து அவர்களால் மீள முடியவில்லை.

மேற்குலகுகள் ஒன்றும் சும்மா கண்ணை மூடிக்கொண்டு புலிகளை தடைசெய்யவில்லை.தடை செயப்பட்ட இயக்கங்களின் பட்டியலை பார்க்கவும்.கனடாவில் உலகத்தமிழர்களையே தடைசெய்தார்கள்.அதற்கும் டுவின் டவர்தாக்குதலுக்கும் இணைப்பு கொடுத்துவிடாதீர்கள் இங்கிருக்கும் ஆய்வாளர்கள் மாதிரி.

நான் நினைக்கிறேன்.. உங்களுக்கு தற்கொடை தாக்குதல்களின் தன்மையும் தெரியாது புலிகள் பற்றிய வரலாறும் தெரியாது மேற்குலகத் தடைகளின் பின்னணியும் புரியவில்லை.

புலிகளின் தற்கொடை தாக்குதல் 1987 யூலையில் நடந்தது. அதன் பின்னர் இந்திய குற்றச்சாட்டில் ராஜீவ் காந்தியும் அப்படியான ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. சிறீலங்கா சிங்கள ஜனாதிபதி ஒருவரும் அவ்வாறே கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. சில படைத்துறை அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் மீதான இந்தியத் தடை 1991 இலும் அமெரிக்காவின், பிரிட்டனின் தடைகள் 1996 - 98 இலும் அமுலுக்கு வந்தன என்று நினைக்கிறேன். கனேடிய தடை மற்றும் ஐரோப்பியத்தடை 2000 - 2002 காலப்பகுதியில் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆக விடுதலைப்புலிகள் தற்கொடை தாக்குதலை ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் தடைகளே வந்துள்ளன. ஆக தற்கொடை தாக்குதல் என்பது தடைக்கு ஒரு காரணம் அல்ல. அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகளைப் பின்பற்றி கமாஸ் போன்ற இயக்கங்கள் 90 களில் தாக்குதல் நடத்திய போதும் தடைகள் வரவில்லை.

தற்கொடை தாக்குதல் என்பது புதிய யுக்தியும் அல்ல. அது இராண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்தான யுக்திதான். இந்திய பாகிஸ்தான் போரில் கூட இந்திய விமானப்படை வீரர்கள் சிலர் தற்கொடை தாக்குதல் நடத்தியதாக வரலாறு கூறுகிறது.

அதேபோல் சில அரசியல்வாதிகளின் கொலைகளுக்கும் தடைக்கும் தொடர்பு வைக்க முடியாது. காரணம்.. மிதவாதிகள் என்று சொல்லப்பட்ட சிங்கள அரச விசுவாச தமிழ் அரசியல்வாதிகள் 1987 - 90 காலப்பகுதியில் தான் அதிகம் கொல்லப்பட்டனர். அப்போதெல்லாம் இடம்பெறாத தடைகள் 1996-98 க்கும் அதற்குப் பின்னரும் வரக்காரணமானது இரண்டே விடயங்கள் தான் முக்கியம் பெறுகின்றன.

1990 இன் பின்னர் தான் புலிகள் நிலப்பரிபாலத்தை ஆரம்பித்தனர். தமிழீழ கட்டமைப்புக்களை உருவாக்க ஆரம்பித்தனர். அதனை அவர்கள் 5 வருடங்கள் போரின் மத்தியிலும் இடங்களை இழந்தும் மீளப் பிடித்தும் வந்தனர். ஆனால் தக்க வைக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கவில்லை. இராணுவம் வராத பகுதிகளை அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். 1995 யாழ்ப்பாண வீழ்ச்சியோடு புலிகள் பலமழிந்து போனார்கள் என்றிருந்தனர் பலர். 1996 முல்லைத்தீவு தள அழிப்போடு சிறீலங்கா அரச படைகளிடம் இருந்து புலிகள் நிலத்தை இராணுவ ரீதியில் சிறீலங்கா படைகளை தோற்கடித்து சர்வதேச இராணுவ யுக்திகளைக் கடந்து கண்ட வெற்றியே புலிகள் மீதான பார்வையை உக்கிரப்படுத்தியது. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் அகதிகளால் புகலிடத் தஞ்சம் வாங்க உருவாக்கப்பட்ட புலிகள் தொடர்பான பொய்யான ஒரு பார்வையும் 1990 களில் சோவியத் உடைவின் பின்னான இந்து சமுத்திர நாடுகளின் அமெரிக்க மேற்குலக நாடுகளின் மேலான கருத்தியல் கொள்கையியல் மாற்றங்களுமே விடுதலைப்புலிகள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் அவர்கள் மீது தடைகளை கொண்டு வரக்காரணமானது.

புலிகள் மீதான தடைக்கு.. டக்கிளஸ் குழுவினர் மீதான நடவடிக்கையோ... கூட்டணி மீதான நடவடிக்கையோ நேரடிக்காரணங்கள் அல்ல. அது அமெரிக்கா ஜனநாயகத்தின் பெயரால் உலகை வன்வளைத்து நிற்பதற்கு பாவிக்கப்படும் ஒரு சொல்லாடல் போன்று புலிகள் மீதும் பாவிக்கப்பட்ட சொல்லாடல் மட்டுமே.

கொசவாவில் தனிநாடு பிரித்துக் கொடுத்து 2500 - 5000 பேருக்காக மிலோசவிச்சை தண்டித்த அமெரிக்கா.. அதன் முன்னாள் நண்பனும் ஈரானின் முக்கிய எதிரியுமான சதாமை வெறும் 800 பேரை அதே அமெரிக்க அரசு கொடுத்த நச்சுக் குண்டால் கொன்றதுக்காக அமெரிக்காவே தண்டித்தது. ஆனால் ஈழத்தில் மட்டும் இந்தனை படுகொலைகள் இனக்கலவரங்களைக் கண்டும் அமெரிக்கா சிறீலங்காவை தண்டிப்பதற்குப் பதில் அதற்கு இராணுவ மற்றும் பொருளியல் ரீதியில் உதவி வந்ததே அதிகம். காரணம்.. சிறீலங்கா கொண்டிருந்த வெளிவிவகார நட்பு வட்டத்தில் சீனா எப்போதும் குறிப்பிட்ட இடம்பிடித்திருந்ததும்.. இந்திய செல்வாக்கு மிகுந்திருந்ததுமே.

இன்றும் அமெரிக்கா இந்தியாவை முழுமையான நட்பு நாடாகப் பார்ப்பதில்லை. அந்த வகையில் இந்திய சார்ப்பாக தமிழீழம் உருவாவதையோ.. அல்லது சீன சார்பாக சிறீலங்கா போவதையோ அமெரிக்கா விரும்பவில்லை. ஈழம் பிரிக்கப்பட்டால் அதை இந்தியா தனதாக்கும். ஈழம் பிரிந்தால் சிறீலங்கா சீனாவிடம் சரணடையும். அமெரிக்காவிற்கு பெரிய இராஜதந்திர இடைவெளி ஏற்படும். அதன் செல்வாக்கு தெற்காசியாவில் சரிந்துவிடும். இதுதான் அமெரிக்க மேற்குலக நாடுகள் புலிகள் இராணுவ ரீதியில் குறிப்பாக மரபு வழி இராணுவ ரீதியில் பலமடைந்த பின் அவர்களை தடை செய்யக் காரணமானது. புலிகள் கெரில்லா போர் முறையில் இருந்து போராடிய போது யாருமே அவர்களை தடை செய்யவில்லை. மாறாக ஊக்குவித்தனர் மறைமுகமாக. காரணம் புலிகள் நடத்தும் போராட்டத்தை வைத்துக் கொண்டு பிராந்தியத்தில் தமக்கு சாதகமான பதட்ட நிலையை தக்க வைக்க முடியும் என்று கருதியதால். ஆனால் புலிகள் பலமடைந்து தங்களுக்கு என்றான கொள்கை வகுத்து செயற்பட ஆரம்பித்ததும் அமெரிக்காவிற்கு புலிகள் மீதும் அச்சம் ஏற்படத் தொடங்கிவிட்டது. அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தடைகளைக் கொண்டு வந்தது.

ராஜிவ் இறந்து 7 வருடங்கள் சென்ற பின் தான் அமெரிக்கா தடை போட்டது. அந்த வகையில் அந்தத் தடைக்கும் ராஜீவ் கொலைக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் இல்லை. இதுதான் உண்மையாக இருக்கக் கூடிய வரலாறு.

ஆனால் மாற்றுக் கருத்து மாணிக்கங்களும் புலிக்காய்ச்சல் பேர்வழிகளும்.. எல்லாம் தற்கொடை தாக்குதலால்.. புலிகளின் பாசிசக் கொள்கையால் என்று அளந்து திரிகிறார்கள். இவர்கள் இப்படி ஜனநாயகம் .. மாற்றுக்கருத்து.. புலிப் பாசிசம் பேசியும் கூட இவர்களால் தமிழ் மக்களுக்கு என்று அமெரிக்காவிடம் இருந்து ஒரு பை கோதுமை மாவு கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்பதுவும் யதார்த்தமாகும்.

புலிகளை விட அமெரிக்க அலன் தம்பதிகளைக் கடத்தி சோவியத் ஆதரவு இந்தியாவிற்காக அமெரிக்காவை தண்டித்தவர்கள் தான் டக்கிளசும் அவரின் வழியில் நிற்போரும். இதுவும் அமெரிக்காவிற்கு தெரியும். அமெரிக்கா இன்று புலிகளை நம்பும் அளவிற்கு.. மாற்றுக் கருத்து மக்குகளை நம்பத் தயாரில்லை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை தங்களது நேரத்துக்கு நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கொசவாவில் தனிநாடு பிரித்துக் கொடுத்து 2500 - 5000 பேருக்காக மிலோசவிச்சை தண்டித்த அமெரிக்கா..

புலிகள் கெரில்லா போர் முறையில் இருந்து போராடிய போது யாருமே அவர்களை தடை செய்யவில்லை. மாறாக ஊக்குவித்தனர் மறைமுகமாக. காரணம் புலிகள் நடத்தும் போராட்டத்தை வைத்துக் கொண்டு பிராந்தியத்தில் தமக்கு சாதகமான பதட்ட நிலையை தக்க வைக்க முடியும் என்று கருதியதால். ஆனால் புலிகள் பலமடைந்து தங்களுக்கு என்றான கொள்கை வகுத்து செயற்பட ஆரம்பித்ததும் அமெரிக்காவிற்கு புலிகள் மீதும் அச்சம் ஏற்படத் தொடங்கிவிட்டது. அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தடைகளைக் கொண்டு வந்தது.

ராஜிவ் இறந்து 7 வருடங்கள் சென்ற பின் தான் அமெரிக்கா தடை போட்டது. அந்த வகையில் அந்தத் தடைக்கும் ராஜீவ் கொலைக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் இல்லை. இதுதான் உண்மையாக இருக்கக் கூடிய வரலாறு.

ஆனால் மாற்றுக் கருத்து மாணிக்கங்களும் புலிக்காய்ச்சல் பேர்வழிகளும்.. எல்லாம் தற்கொடை தாக்குதலால்.. புலிகளின் பாசிசக் கொள்கையால் என்று அளந்து திரிகிறார்கள். இவர்கள் இப்படி ஜனநாயகம் .. மாற்றுக்கருத்து.. புலிப் பாசிசம் பேசியும் கூட இவர்களால் தமிழ் மக்களுக்கு என்று அமெரிக்காவிடம் இருந்து ஒரு பை கோதுமை மாவு கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்பதுவும் யதார்த்தமாகும்.

Edited by nochchi

அண்ணை நான் எழுதியது தற்கொலைதாக்குதலில் தனிநபர்களை அழித்தது பற்றி. போர்முனைகளில் அல்ல.போர்நிறுத்தக்கால கட்டத்தில் எவ்வளவு யுத்தநிறுத்தமீறல்களை புலிகள் மேற்கொண்டார்களென்று போய் பாரும்.கொலைஅரசியலில் இருந்து அவர்களால் மீள முடியவில்லை.

மேற்குலகுகள் ஒன்றும் சும்மா கண்ணை மூடிக்கொண்டு புலிகளை தடைசெய்யவில்லை.தடை செயப்பட்ட இயக்கங்களின் பட்டியலை பார்க்கவும்.கனடாவில் உலகத்தமிழர்களையே தடைசெய்தார்கள்.அதற்கும் டுவின் டவர்தாக்குதலுக்கும் இணைப்பு கொடுத்துவிடாதீர்கள் இங்கிருக்கும் ஆய்வாளர்கள் மாதிரி.

சரவதேசம் தடை செய்ய காரணம் தேடினார்களா இல்லை உண்மையில் மனித உரிமையை மதித்து புலிகள் செய்வது தவறு ஆகவே அவர்கள் சரிவர மாட்டார்கள் எண்டு தடை செய்தவையோ....??

நீங்கள் சொல்லுறதை பாத்தால் ஒருகாலத்திலை தலிபான்களுக்கும், முகாஜுதீன்களுக்கும்( இப்ப அல்கைதா) ஆயுதம் குடுத்தது அமெரிக்கா எண்டது பொய்யாக இருக்க வேணும்... ! இப்பவும் அமெரிக்க பிரித்தானிய கூட்டில் கொங்கோ போராளிகளுக்கும் , சேராலியோன் போராளிகளுக்கும் தென்னாபிரிக்கா ஊடாக உதவிகள் போகுது எண்டது பொய்....!

உலக அறிவிலை நீங்கள் ஒரு ஜீனியஸ் அண்ணை...

  • தொடங்கியவர்

... அமெரிக்க செய்கிறான், இந்தியா செய்கிறது!! ... நாம் செய்தால் என்ன??? ... இதுதான் உலக நியதி!! அவர்கள் இவற்றை உலக சட்டங்களாக எழுதாமல் எழுதி விட்டார்கள்!! உலகமும் அதற்கேற்பத்தான் ஓட வேண்டும்/ஓடுகிறது! இல்லை நாமும் செய்வோம் ஆயின் என்ன நடக்கும்???? எம்மால் ஏதாவது செய்ய முடிந்ததா???

இங்கு அர்ஜுனின் பல கருத்துக்களுடன் நான் ஒத்து வருகிறேன். ... உலக நாடுகளில் பலவற்றில் தற்கொலை படைகளுக்கு சமனான படையணிகள் உள்ளன, அமெரிக்காவின் கிறீன்பரேட், பிரித்தானியாவின் SAS, .. என்று பல! இவை இராணுவ தாக்குதல்களுக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது!! ... புலிகளும் கரும்புலிகளை இராணுவ தாக்குதல்களுக்கு மட்டும் பயன்படுத்தி இருக்கலாம்!, தனி நபர் தாக்குதல்களால் சாதித்தவை ஒன்றுமில்லை, எமது கோபங்களை காட்டினோம்/பழியை தீர்த்தோமே ஒளிய வேறொன்றையும் சாதிக்க முடியவில்லை!! ஓர் பிரேமதாஸா போக அதனை விட மோசமான ராஜபக்ஸே வந்தான், ஓர் ராஜீவ் போக, பழி தீர்க்கும் சோனியா வந்தாள்!!! கண்டதென்ன? கிடைத்த பலன் என்ன? ... ஒன்றுமே இல்லை!!!!

இதனை 9/!! இற்கு பின்னமாவது மாற்றியிருக்கலாம், உலக ஒழுங்கு 9/11 இனூடு மாறிய மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாறத் தவறிவிட்டோம்!!

Edited by Nellaiyan

ஆக மொத்தம் புலிகள் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் ஒரு ஓரமாக நிண்டு ஆமியோடை மட்டும் சண்டையை பிடிச்சு போட்டு போய் இருக்க வேணும் எண்டுறீள்... யாருக்கும் எந்த பிரச்சினையும் குடுக்காமல் ஒரு போர்...!

காந்தி செய்ததை விட அருமையான யோசினையாய் இருக்கு...!

சிறப்பான கருத்து ஒரு பத்து பச்சையாவது குத்தவேணும்...

மேற்குலகுகள் ஒன்றும் சும்மா கண்ணை மூடிக்கொண்டு புலிகளை தடைசெய்யவில்லை.தடை செயப்பட்ட இயக்கங்களின் பட்டியலை பார்க்கவும்.கனடாவில் உலகத்தமிழர்களையே தடைசெய்தார்கள்.அதற்கும் டுவின் டவர்தாக்குதலுக்கும் இணைப்பு கொடுத்துவிடாதீர்கள் இங்கிருக்கும் ஆய்வாளர்கள் மாதிரி.

கிட்டத்தட்ட மூவாயிரம் அப்பாவி மக்கள் செப்டெம்பர் 11 ஆம் திகதியும் ஜுலை 23 ஆம் திகதியும் கொல்லப்பட்டனர். முதலாவது இனம் இந்த நிகழ்வுக்கு "பயங்கரவாத்திற்கு" எதிரான யுத்தம் என்று தொடங்கி இன்றுவரை தொடரும் யுத்தத்தில் நியாயமான விடுதலை தேவையை இன்றுவரை கொண்ட எமதினம் மாட்டுப்பட்டுக்கொண்டது.

காலச்சக்கரத்தில் 1989 ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய (பெர்லின் சுவர் விழுந்தது முதல்) எழுச்சி முதல் இன்று மத்திய கிழக்கில் நடக்கும் மாற்றங்கள் வரை மாறும் உலகத்தில் எமக்கும் ஒரு விடிவு வரும்.

உலகத்தில் தனிநபர் தாக்குதல்கள் நடப்பது வழமை. இதில் கில்லாடிகள் அரசுகளே. அமெரிக்கா உட்பட பல மேலைத்தேய நாடுகள் தனிநபர் தாக்குதலை செய்துள்ளன, செய்ய முயசிக்கின்றன, வரும் காலத்திலும் செய்யும். விடுதலைபுலிகளை கூட பிரான்சில் வைத்து காசுக்கு அமர்த்தி கொலை செய்தது சிங்களம்.

கியூபாவின் கஸ்ரோவை மட்டும் அழிப்பதற்கு நூறுக்கும் மேற்பட்ட கொலை முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டது. இன்று ஈரான், கொலம்பியா தலைவர்களை அழிக்க மேற்கைத்திய நாடுகள் முயன்று வருகின்றன.

அதுதான் சொல்லீட்டினமே இதை அமெரிக்கா பிரித்தானியா இந்தியா செய்யலாம் ஆனால் புலிகள் செய்யக்கூடாது எண்டு.... காரணம் அவை ஆழும் வர்க்கம் நீங்கள் அடிமைகள் எண்டு...!

இப்ப குனிஞ்சு நிக்கிறது காணாதாம் மூக்கு நிலத்திலை முட்டும் அளவுக்கு குனியட்டாம்... பிறகென்ன குனிஞ்சு பாருங்களன்...

தம்பி நெடுக்ஸ்,

ஆண்டுக் கணக்கெல்லாம் போட்டு விளங்கப்படுத்தியிருக்கின்றீர்.சர்வதேசம் பொதுவாக எந்த ஒரு நடவடிக்கையும் உடன் எடுப்பதில்லை.குற்றங்களை சேகரித்துக்கொண்டே இருப்பார்கள் நேரமும் காலமும் தங்களுகான தேவையும்வரும் போது தான் நடவடிக்கை.

எனது கணிப்பில் என்றோ ஒரு நாள் ராஜபக்சா போர்குற்றங்களுக்காக கோட் ஏறவேண்டிவரும் அது 2020 இற்கு பிறகாகவும் இருக்கலாம்.இராஜபக்சா கேட்க முடியாது 2009 செய்ததற்கு ஏன் 2020 இல் பிடிக்கின்றீர்கள் என்று.அதே போல் தான் புலிகளுக்கான தடையும்.கடைசிகாலங்களிலாவது தங்கள் நிலைய அவர்கள் மாற்றியிருக்கலாம்.(கேதீஸ்வரன் கொலை.அவர் சர்வதேசத்திற்கு நன்கு அறியப்பட்ட நபர்.மிகவும் அமைதியான பண்பான உண்மையாக தமிழனின் விடிவை நேசித்த நபர்.நான் முதன் முதல் கொலன்டில் சந்திதேன்,பின்ன பல தடவை இந்தியாவில் குறிப்பாக டெல்கியில் சந்தித்தேன்.இந்தியமட்டத்தில் எமது விடுதலையை ஆதரித்த பலருக்கு அவர் நண்பராக இருந்தார்.)

கனடாவில் கொன்சவேட்டிவ் ஆட்சிக்கு வந்து புலிகளைதடை செய்ததும் விமர்சனம் எழ கொன்சவேடிவ் எம்.பீ மார் பலர் சொன்னார்கள் ஏற்கனவே லிபரலால் பல வருடங்களாக சேர்த்துவைத்திருந்ததைகொண்டுதான் நாங்கள் இப்போது தடைசெய்கின்றோம் என்று.

சிலி அகெஸ்டோ பினோசே 70 களில் செய்த போர்குற்றங்களுக்கு 2000 இல் தான் லண்டனில் விசாரிக்கப்பட்டார்.

அமெரிக்காவே தனக்கு வேண்டாதவர்களை உலகெங்கும் தனது ஏஜெண்டுகளை வைச்சு போட்டுத் தள்ளுகிறது. ஜனநாயகம் போதித்துக் கொண்டு ஜனநாயக வழி என்று சொல்லி தனது ஏகாதபத்தியத்தை நிறுவ முடியாத இடங்களில் அமெரிக்கா வன்முறையை பிரயோகிப்பதே வழமை.

விடுதலைப்புலிகளின் தடையில் அகதிகள் அகதி அந்தஸ்துக்காக வழங்கிய பொய் வாக்குமூலங்கள் பெரும் பங்காற்றின என்பது என்னவோ ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அதை பொய் என்று நிரூபிக்க புலிகளுக்கு எவரும் சந்தர்ப்பம் அளிக்கவில்லை என்பதும் உண்மை.

ஒரு தலைப்பட்சமான தங்கள் நலன் சார்ந்த தடைகளையே அமெரிக்க மேற்குலக நாடுகள் மேற்கொண்டுள்ளனவே தவிர புலிகளின் நடவடிக்கைகள் அவர்களுக்கோ உலகிற்கோ அச்சுறுத்தல் என்பது எல்லாம் சுத்த வெற்றுவேட்டு.

புலிகள் மீதான தடைக்கு பிராந்திய அரசியல்.. பொருண்மிய.. இராணுவ பல மாற்றங்களும் நலன்களுமே அதிகம் காரணமானதே தவிர.. கேதீஸ்வரன் என்ற ஒரு கேணைக்காக தடை வந்தது என்பதெல்லாம் சுத்தப் பித்தலாட்டம். அவை காரணங்களாக சும்மா வெளிப்படைக்கு காட்டப்படலாம்.. அல்லது காட்டப்பட்டிருக்கலாம்.. ஆனால் உண்மை எங்கையோ பொதிந்து கிடக்கிறது. அங்கல்ல. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எம்மிடம் ...

* இலக்கு இருந்தது!

* கொள்கை இருந்தது!

* நேர்மையான தலைமை இருந்தது!

* முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைமை இருந்தது!

* மக்கள் பலம் இருந்தது!

* ...

.... ஆனால்

... இராஜதந்திரம் ... மட்டும் இருக்கவில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அது மட்டும் இருந்திருந்தால் 1987ல் ராஐPவு ஈழத்தை தாம்பாள தட்டில் வைத்து நீட்டியபோது தட்டிவிடாது வேண்டி வைத்திருக்கலாம்.

இந்தியாவுக்கும் ஸ்ரீலங்கா சிங்களவனுக்கும் மற்றைய ஒட்டின ஒட்டாத குழுக்களுக்கும் புலிதான் குறுக்காக நின்றது. இப்போது புலியும் இல்லை அடிச்ச செல் சத்தத்தினால் எலியும் இல்லை.

தமிழனுக்கு கொடுக்க கூடியதை எந்த நாய் கொடுக்குது?

கருநாய்கே மகிந்தவுடனான கூட்டே தமிழத்தில் முதலமைச்சராக இருப்பதற்கு தேவைபடுகின்றது.

இதை இராஜதந்திரம் என்று சொன்றால்.....................

விபச்சாரிகள்தான் உலகின் அதிசிறந்த இராஜாதி ராஜ ராஜ தந்திரிகள்.

ஆனால் மனிதனாக பிறந்தால் இப்படிதான் வாழவேண்டும் என்று ஒரு வரையறை உண்டு. சில மிருகங்களுக்கே அது உண்டு. ...................உண்மைதான் சில மிருகங்களுக்கு அது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெடுக்ஸ்,

ஆண்டுக் கணக்கெல்லாம் போட்டு விளங்கப்படுத்தியிருக்கின்றீர்.சர்வதேசம் பொதுவாக எந்த ஒரு நடவடிக்கையும் உடன் எடுப்பதில்லை.குற்றங்களை சேகரித்துக்கொண்டே இருப்பார்கள் நேரமும் காலமும் தங்களுகான தேவையும்வரும் போது தான் நடவடிக்கை.

எனது கணிப்பில் என்றோ ஒரு நாள் ராஜபக்சா போர்குற்றங்களுக்காக கோட் ஏறவேண்டிவரும் அது 2020 இற்கு பிறகாகவும் இருக்கலாம்.இராஜபக்சா கேட்க முடியாது 2009 செய்ததற்கு ஏன் 2020 இல் பிடிக்கின்றீர்கள் என்று.அதே போல் தான் புலிகளுக்கான தடையும்.கடைசிகாலங்களிலாவது தங்கள் நிலைய அவர்கள் மாற்றியிருக்கலாம்.(கேதீஸ்வரன் கொலை.அவர் சர்வதேசத்திற்கு நன்கு அறியப்பட்ட நபர்.மிகவும் அமைதியான பண்பான உண்மையாக தமிழனின் விடிவை நேசித்த நபர்.நான் முதன் முதல் கொலன்டில் சந்திதேன்,பின்ன பல தடவை இந்தியாவில் குறிப்பாக டெல்கியில் சந்தித்தேன்.இந்தியமட்டத்தில் எமது விடுதலையை ஆதரித்த பலருக்கு அவர் நண்பராக இருந்தார்.)

கனடாவில் கொன்சவேட்டிவ் ஆட்சிக்கு வந்து புலிகளைதடை செய்ததும் விமர்சனம் எழ கொன்சவேடிவ் எம்.பீ மார் பலர் சொன்னார்கள் ஏற்கனவே லிபரலால் பல வருடங்களாக சேர்த்துவைத்திருந்ததைகொண்டுதான் நாங்கள் இப்போது தடைசெய்கின்றோம் என்று.

சிலி அகெஸ்டோ பினோசே 70 களில் செய்த போர்குற்றங்களுக்கு 2000 இல் தான் லண்டனில் விசாரிக்கப்பட்டார்.

அப்ப அணுகுண்டுபோட்டு ஜப்பானில் மக்களை கொன்ற குற்ற விசாரணையை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி காட்டரின் புதைகுழியை தோண்டி மிச்ச எச்சங்களை கூண்டில் நிறுத்தி தண்டனை விதிப்பார்கள் என்று நீங்கள் சொன்னால்................... அதுகும் டில்லி மும்பாய் அம்சர்டாம் என்று அறிவுபூர்வமான சந்திப்புக்களுக்காக சுற்றிய நீங்கள் சொன்னால் நாங்கள் கேட்டாகவே வேண்டும்.

தெரிந்து கொள்வதற்காவே கேட்கிறேன் எந்த உள்நோக்குமில்லை...............

அப்ப அப்பாவி சீக்கிய மக்களை 1986ல் கொலை செய்த குற்றத்திந்கு ராஜீவ்காந்தி அவர்களுக்கும் தண்டனை கொடுப்பார்களா?

அல்லது அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பாராட்டி பதவிகள் கொடுப்பார்களா? இந்த பாளாய்போன அரசியல் தந்திரங்கள் எங்களுக்கு விளங்குதே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு-

முன்னர் பயங்கரவாதி என் உலகால் கூறப்பட்ட நெல்சன் மண்டேலாவின் சிலை உலகெங்கும் இருக்கு. அதே மாதிரி தலைவரின் சிலைகளும் வரும் என்கின்றீரா? புரியவில்லை.

துரையப்பாவை கொன்றது ஒரு சம்பவம் ஆனால் முள்ளிவாய்க்கால வரை அதையே தொடர்ந்தார்கள்.எந்தப் பெரிய ஒரு விடுதலை அமைப்பு காலத்திற்கேற்ப தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.தற்கொலை தாக்குதல் மூலம் நாடுபிடிக்கலாம் என்றால் இன்று எத்தனையோ நாடுகள் உருவாகியிருக்கும்.ஒரு பிரேமதாசவை கொன்றால் ஒரு சந்திரிகா ,ஒரு பொன்சேகாவை கொன்றால் இன்னொரு கோத்தபாயா.இது விளங்காமல் பழி தீர்ப்பதற்கென்று தற்கொலைதாக்குதல் செய்து தனிநபர் கொலை மூலம் எந்த தீர்வையும் எட்டமுடியாது

நுணாவிலான் -

அமெரிக்கா,இந்தியா செய்யுது என்று அதை நாங்களும் செய்யமுடியுமா?.உலக அரசியலின் அடிப்படையே அதுதானே.சின்ன மீனை சாப்பிட்டால் தான் பெரியமீன் உயிர்வாழலாம்.எனது பொஸ் ஒவ்வொரு நாளும் ரிலீஸ் ஆகும் புதுப்படத்தை வீட்டிற்கு கொண்டுபோவான் அதை நான் கொண்டுபோகமுடியுமா?பின்னர் ஏன் யூ.என்.ஓ? 5 சுபர் பவர்கள் அவர்களுக்கு வீட்டோ அதிகாரம்.எங்கள் வரையறை தெரிந்து தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும்.ஆயுதம் வாங்கபோனாலும் அதே நிலைதான் காசு இருக்குதென்று விரும்பியதை வாங்கிவிடமுடியாது.

ரஸ்யர்களுடனா போரில் முஜாகிடீன்கள் பாவித்த ஸ்ரிங்கர் மிசைலை புலிகள் வாங்கியிருந்தால் போராட்டம் எப்போதோ முடிந்திருக்கும்.அது அமெரிக்கா ரஸ்யர்களை அடிக்க கொடுத்தது.

இவர்களுக்கால் சுழிஓடி எமக்கு தேவையானதை நாம் பெற்றுக்கொள்வதே இராஜதந்திரம்.அதற்கு தான் சிறுவயதில் சிவனை சுற்றிவந்து பிள்ளையார் மாம்பழம் பெற்ற கதை படிப்பித்தார்கள்.

இன்னமும் பிடிக்கவேண்டியவர்களை பிடித்தால் எமக்கான ஒரு விடிவு தூரமில்லை.90 களிலேயே தொடங்கவேண்டிய "லொபியிங்கை" இப்ப தானெ எங்கட ஆட்கள் தொடங்கியிருக்கினம்.

நல்ல கதை நீளம் சற்று போதவில்லை...............

"பயங்கரவாதம்" என்பது வரைவிலக்கணம் இல்லாத ஒன்று. அது, உண்மையை பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் புனையும் பலம் கொண்ட ஆயுதம்.

எங்கள் போராட்டமானது (பயங்கரவாதமானதா இல்லையா) கோழியா முட்டையா முதலில் வந்தது போன்ற ஒரு அறிவுபூர்வமான கேள்வி அல்ல, இலங்கையின் சரித்திரம் ( குறைந்தது 1948 இல் இருந்து) தெரிந்தவர்களுக்கு.

இதையே இன்னும் சுருக்கமமாக சொல்வதென்றால்...................

பணக்காரர்கள் செய்தால் போர்............. ஏழைகள் செய்தால் பயங்கரவாதம்!

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அந்தக் கேதீஸ்வரன்????????????????????????????விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக துளிர் விட்ட காலத்திலிருந்து இந்தப் போராட்டத்தில் மறக்க முடியாத எத்தனையோ பிரபலங்களை அறிந்திருக்கிறோம்.ஆனால் உங்களுக்குத் தெரிந்த பிரபலமான கேதீஸ்வரன் என்பவரை எங்களுக்குத் தெரியாதே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அவர் தான் அது.....! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.