Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திற்கு வெள்ளரசுக் கிளை ( நேரடிக் காணொளி)

Featured Replies

யாழ்ப்பாணத்திற்கு இனி ஞானோதயம் வருமா??

யாழ்ப்பாண மக்கள் இதைப் பார்த்து ஞானம் பெற்றால் சரி......

புத்த பெருமான் ஞானம் பெற்ற வெள்ளரசு மரம்.........

இத்தனை காலத்தின் பின் யாழ்ப்பாணம் வருவதேனோ

பித்தான உங்கள் தலையில் ஞானம் வரவோ

புத்தரும் வந்துவிட்டார் உங்களைத் திருத்துவதற்கு?

thx

thx

NJ200x200.gif

http://newjaffna.com

Edited by புறோக்கர்

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா... வன்னிக்கு.. கிழக்கிற்கு வெள்ள நிவாரணம் கொண்டு போக வழியில்லாமல் சனம் அல்லாடுது. இவங்கள் அவ்ரோவில் வெள்ளரசு மரம் கொண்டு திரியுறாங்கள்.

உந்த மரம் தானே யாழ்ப்பாணத்து வடலிகளில் தொத்திக் கொண்டு முளைக்குதே. அதை வெட்டி நடுங்கோடா.

மோட்டு சிங்களவனும் மோட்டுத்தமிழனும் ஒன்று சேர்ந்தால்.. வெள்ளரசு மரத்துக்கு அவன் தங்கக் குடம் வைப்பான்.. மற்றவன் கடாக்கு தங்க மாலை போட்டு கோவிலில வைச்சு வெட்டுவான். இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைக் கூட்டம். உதுகள் திருந்தப் போறதே இல்லை.

இதில அமெரிக்க தூதுவரையும் பிரித்தானிய தூவரையும் கூப்பிட்டு வைச்சிருந்தா அது தேசிய நல்லிணக்கத்துக்கு சாட்சி சொல்ல உதவி இருக்கும். விட்டிட்டாங்கள். எதுக்கும் உந்த வீடியோ அனுப்பி வையுங்கோ. ஒபாமா.. உதைப் பார்த்திட்டு இம்பிரஸாகி.. போர் குற்ற விசாரணையை கைவிடச் சொல்லி அறிக்கை விட்டாலும் விடுவார்.

வாழ்க யாழ்ப்பாணத்தில் தெருவழிய நிற்கும் அரச மரங்களுக்கு.. அடிச்சிருக்கு அதிஸ்டம். தங்க வேலி போட்டு புத்தரை நிறுத்தப் போறாங்களடோய். தமிழன் அதுக்கு அர்ச்சனை எடுப்பானோய். :lol::D

Edited by nedukkalapoovan

எமக்கு..

ஏன், எல்லொருக்கும் தெரியும் நாம் தமிழர்கள், கீழ்குணம் கொண்ட அற்பமனிதர்களெண்டு.

திருப்பி சொல்லிக்கொண்டிருப்பதால் எதுவும் மாறப்போவதில்லை.

எல்லொரும் போயி அவனவன் வேலையை பாருங்கப்பா....

இனி சான் போனால் என்ன முழம் போனால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

.

இதுக்குத்தானே.... ஒட்டுக்குழுக்கள் ஆசைப்பட்டதுகள்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோட்டு சிங்களவனும்

புரியவில்லை .... ஏன் சிங்களவனை மோடன் என்கிறீர்கள் என்று? தமிழனுக்கு இம்மியளவும் கொடாமல் வெற்றிகரமாக சிங்களமயமாக்கலை செய்வதாலா? அல்லது எல்லா நாடுகளையும் தன் நண்பனாக்கி உதவி பெறும் கெட்டித்தனத்தாலா?

சிங்களம் ஒரு மூர்க்கமான அதே நேரத்தில் ஒற்றுமையும் புத்திசாலித் தனமும் நிறைந்த இனமப்பா. மகிந்தவை பல சிஙளவருக்கு பிடிக்காது. ஆனல் தமிழரை ஒழிப்பதற்காக அவர்கள் மகிந்த பின்னால் கை கோர்க்கவில்லையா? ஆனால் எம்மைப் பாருங்கள். புலி பிடிக்காதென்ற காரணத்திற்காக மட்டும் எதிரியுடன் சேர்ந்து சொந்த இனத்தை அழிப்பதற்கே துணைபோனவர்கள்.

உண்மைதான் காட்டாறு. இவர்களை பார்க்கவே அருவருக்கிறது.

05.jpg

மரத்தை மாட்டை பூச்சி புழுக்களை கும்பிடுகிற பழக்கம் எம்மை விட்டு அகலவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லை .... ஏன் சிங்களவனை மோடன் என்கிறீர்கள் என்று? தமிழனுக்கு இம்மியளவும் கொடாமல் வெற்றிகரமாக சிங்களமயமாக்கலை செய்வதாலா? அல்லது எல்லா நாடுகளையும் தன் நண்பனாக்கி உதவி பெறும் கெட்டித்தனத்தாலா?

சிங்களம் ஒரு மூர்க்கமான அதே நேரத்தில் ஒற்றுமையும் புத்திசாலித் தனமும் நிறைந்த இனமப்பா. மகிந்தவை பல சிஙளவருக்கு பிடிக்காது. ஆனல் தமிழரை ஒழிப்பதற்காக அவர்கள் மகிந்த பின்னால் கை கோர்க்கவில்லையா? ஆனால் எம்மைப் பாருங்கள். புலி பிடிக்காதென்ற காரணத்திற்காக மட்டும் எதிரியுடன் சேர்ந்து சொந்த இனத்தை அழிப்பதற்கே துணைபோனவர்கள்.

வெள்ளரசு மரத்தை பிளேனில கொண்டு திரியுறவனை என்னால அறிவுசாலி என்று நம்ப முடியல்ல. அதைவிடக் கேவலம் அவன் கொண்டுவார வெள்ளரசு மரத்துக்கு பூசை போடுற தமிழ் ஜென்மங்கள். :D:)

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளரசு மரத்தை பிளேனில கொண்டு திரியுறவனை என்னால அறிவுசாலி என்று நம்ப முடியல்ல. அதைவிடக் கேவலம் அவன் கொண்டுவார வெள்ளரசு மரத்துக்கு பூசை போடுற தமிழ் ஜென்மங்கள். :D:)

உண்மைதான்

ஆனால் சிங்களவன் எவ்வளவு நரிப்புத்தியால் வெல்வான் என்பது கடந்த 2500 ஆண்டுகளாக நிரூபணமாகியுள்ளதாக திரு. நா. திருநாவுக்கரசு அவர்களின் போரும் சமாதனமும் என்ற புத்தகத்தில் படித்ததாக ஞாபகம். அதில் முக்கியவிடயம் என்னவென்றால் தமிழனை மட்டுமல்ல பல முறை தன்னை விழுங்கவந்த ராட்சத இந்தியாவையே பலமுறை தந்திரத்தால் வென்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளரசு மரத்தை பிளேனில கொண்டு திரியுறவனை என்னால அறிவுசாலி என்று நம்ப முடியல்ல. அதைவிடக் கேவலம் அவன் கொண்டுவார வெள்ளரசு மரத்துக்கு பூசை போடுற தமிழ் ஜென்மங்கள். :D:)

அந்த வெள்ளரசு மரத்தை அவனே நம்புகிறானோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் எவ்வாறு சிங்கத்துக்கு பிறந்தது என்று கூறும் ஒரு மொக்கை நூலை வைத்து அரசியல் செய்தானோ அதே போல் தான் இந்த வெள்ளரசு மரக்கிளையையும் வைத்து வெற்றிகரமாக அரசியல் செய்கின்றான்.

விசுகு சொன்னதை போல் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மதத்தையும் மொழியையும் கொண்டு ஒரு நாட்டையே சொந்தமாக்கிவிட்டான். உண்மையில் இது ஒரு மிகப்பெரும் சவால். அண்மையில் சோழப் பேரரசுகள் எல்லாம் இருந்த போதும் இப்படி ஒரு குட்டித் தீவில் தனக்கென ஒரு மதம் மொழி இராச்சியம் என்று கட்டிக் காத்தது மிகப் பெரும் சாதனை. இத்தனைக்கும் அவன் என்ன இலங்கையின் ஆதிக் குடியா? அதுவும் அல்ல. தறுதலைகள் என்று சொந்த தகப்பனால் துரத்திவிடப் பட்ட ஒரு கூட்டம் (விஜயனும் அவனது தோழர்களும்). இந்தப் பெரிய தமிழகத்துக்கு அண்மையில் இருக்கும் குட்டித் தீவில் தமிழனைத் தவிர வேறு யார் ஆதிக்குடிகளாக் இருந்திருக்க முடியும்? ஆக சிங்களவன் இவ்வாறு ஆதிக்கம் செலுத்த் முக்கிய காரணி என்ன? ...... காரணம் தமிழன் ஒரு கேனையன் என்பது தான்.

தனக்குள் சேர சோழ பாண்டியன் என்று அடிபட்டானே தவிர வேறு எதைச் செய்தான்? தன்க்கே உரித்துடமையான சைவ சமயத்தை இந்து என்ற கள்ள மதத்துக்குள் கரைந்துபோக விட்டான். தனது அழகிய மொழிக்குள் சமஸ்கிருதம் என்னும் அந்நிய மொழி ஆதிக்கம் செலுத்தவிட்டான்.

சிங்களவன் ஒன்றும் கட்டுக்கோப்போடு வேலிகட்டி வாழவில்லை. அவன் பாண்டிய நாட்டிலிருந்தும் பெண் எடுத்தான். நாயக்கர்கள் இடத்திலும் பெண் எடுத்தான். ஆனால் தனது இருப்பை இழக்காமல் வந்த எல்லோரையும் சிங்களத்துக்குள் கரைத்துக்கொண்டான்.

இன்று அவன் தனக்கென்று ஒரு மதம் மொழி நாடு என்று கட்டியெழுப்பியிருக்க இவனோ வாழும் இடமெல்லாம் அடிமையாகி வழ்கின்றான். ஆனால் இவன் இன்றும் தனக்குள் குழிபறித்தலை நிறுத்தவேயில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

Edited by குமாரசாமி

புரியவில்லை .... ஏன் சிங்களவனை மோடன் என்கிறீர்கள் என்று? தமிழனுக்கு இம்மியளவும் கொடாமல் வெற்றிகரமாக சிங்களமயமாக்கலை செய்வதாலா? அல்லது எல்லா நாடுகளையும் தன் நண்பனாக்கி உதவி பெறும் கெட்டித்தனத்தாலா?

சிங்களம் ஒரு மூர்க்கமான அதே நேரத்தில் ஒற்றுமையும் புத்திசாலித் தனமும் நிறைந்த இனமப்பா. மகிந்தவை பல சிஙளவருக்கு பிடிக்காது. ஆனல் தமிழரை ஒழிப்பதற்காக அவர்கள் மகிந்த பின்னால் கை கோர்க்கவில்லையா? ஆனால் எம்மைப் பாருங்கள். புலி பிடிக்காதென்ற காரணத்திற்காக மட்டும் எதிரியுடன் சேர்ந்து சொந்த இனத்தை அழிப்பதற்கே துணைபோனவர்கள்.

யதார்த்தமான கருத்து green_plus.gif

மாவீரரின் வித்துடலுக்கு பூ போட்ட நாங்கள், இன்டைக்கு வெள்ளரசு கிளைக்கு போடுறம். :(

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வெள்ளரசு மரத்தை அவனே நம்புகிறானோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் எவ்வாறு சிங்கத்துக்கு பிறந்தது என்று கூறும் ஒரு மொக்கை நூலை வைத்து அரசியல் செய்தானோ அதே போல் தான் இந்த வெள்ளரசு மரக்கிளையையும் வைத்து வெற்றிகரமாக அரசியல் செய்கின்றான்.

விசுகு சொன்னதை போல் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மதத்தையும் மொழியையும் கொண்டு ஒரு நாட்டையே சொந்தமாக்கிவிட்டான். உண்மையில் இது ஒரு மிகப்பெரும் சவால். அண்மையில் சோழப் பேரரசுகள் எல்லாம் இருந்த போதும் இப்படி ஒரு குட்டித் தீவில் தனக்கென ஒரு மதம் மொழி இராச்சியம் என்று கட்டிக் காத்தது மிகப் பெரும் சாதனை. இத்தனைக்கும் அவன் என்ன இலங்கையின் ஆதிக் குடியா? அதுவும் அல்ல. தறுதலைகள் என்று சொந்த தகப்பனால் துரத்திவிடப் பட்ட ஒரு கூட்டம் (விஜயனும் அவனது தோழர்களும்). இந்தப் பெரிய தமிழகத்துக்கு அண்மையில் இருக்கும் குட்டித் தீவில் தமிழனைத் தவிர வேறு யார் ஆதிக்குடிகளாக் இருந்திருக்க முடியும்? ஆக சிங்களவன் இவ்வாறு ஆதிக்கம் செலுத்த் முக்கிய காரணி என்ன? ...... காரணம் தமிழன் ஒரு கேனையன் என்பது தான்.

தனக்குள் சேர சோழ பாண்டியன் என்று அடிபட்டானே தவிர வேறு எதைச் செய்தான்? தன்க்கே உரித்துடமையான சைவ சமயத்தை இந்து என்ற கள்ள மதத்துக்குள் கரைந்துபோக விட்டான். தனது அழகிய மொழிக்குள் சமஸ்கிருதம் என்னும் அந்நிய மொழி ஆதிக்கம் செலுத்தவிட்டான்.

சிங்களவன் ஒன்றும் கட்டுக்கோப்போடு வேலிகட்டி வாழவில்லை. அவன் பாண்டிய நாட்டிலிருந்தும் பெண் எடுத்தான். நாயக்கர்கள் இடத்திலும் பெண் எடுத்தான். ஆனால் தனது இருப்பை இழக்காமல் வந்த எல்லோரையும் சிங்களத்துக்குள் கரைத்துக்கொண்டான்.

இன்று அவன் தனக்கென்று ஒரு மதம் மொழி நாடு என்று கட்டியெழுப்பியிருக்க இவனோ வாழும் இடமெல்லாம் அடிமையாகி வழ்கின்றான். ஆனால் இவன் இன்றும் தனக்குள் குழிபறித்தலை நிறுத்தவேயில்லை.

தற்போதைய தோல்விகளின் விரக்தியால் வந்த வரிகள்............

தமிழ் மன்னர்கள் ஒருபோதும் இன்னொருவனை அழித்து வாழவேண்டும் என்று ஆசைகொண்டதில்லை தர்மத்திற்கும் நீதிக்கும் தலைவணங்கியே போர்களை செய்தார்கள். கடாரம் வரை விரிந்த சோழபேரரசு சுரண்டலை கொள்கையாக கொண்டதில்லை மறாக அந்த இடத்தின் முன்னேற்றம் பற்றியே சிந்தித்து உழைத்தார்கள். அறிவூட்டுதலோடு அந்த இடத்தினை பண்படுத்தினார்கள். 3வது ஜெயவர்மன் உலகிலேயே பெரிய கோவிலை கம்போடியாவில் கட்டினான் அவனது ஆட்சி கம்போடியாவிற்கு உள்பட்டாதாகவே இருந்தது அவன் அந்த இடத்திற்கு மகுடம் சூட்டுவதே தனது கடமை என்று எண்ணினான்.... மாறாக அந்த நாட்டின் வளங்களை அள்ளிகொண்டுவந்து தனது மூல சோழஅரசை கட்டியெழுப்ப எண்ணியதில்லை. (இப்போது அத தங்களுடையது என்று தாய்லாந்து கம்போடியாவோடு சண்டைபோடுகிறது ஆனால் புலியோடு ஜெயவர்மனின் பெயரும் இப்போதும் சுவரில் பொறிக்கபட்டுள்ளது கட்டியது 3வது ஜெயவர்மன் என்றே விக்கிபீடியாவிலும் போட்டுள்ளார்கள்) அவன் அப்படி எண்ணினாலும் அதற்கு சோழ அரசு இடம்கொடுத்திருக்காது என்பதே வராலாற்று புத்தகங்களில் படிக்க கூடியதாக உள்ளது.

40வயதை ஒத்த துட்கைமுனு 70வயதை உடைய எல்லாளனை போருக்கு அழைத்தபோது தனது வயதை பற்றியோ இழப்பைபற்றியோ சிந்திக்கவில்லை எல்லாளன் சிந்தித்தது எல்லாம் போர்விதிகளையும் தர்மத்தின்பால் தனது நியாயபாட்டையுமே. அந்தவயதில் கூட அவன் போர்விதிகளுக்கு மாறக எல்லாளன் குதிரையால் வீழ்ந்திருந்தபோதே கீழ்தரமாக கொன்றான் துட்கைமுனு.

சிங்களவனை அழிப்பது பற்றி பிரபாகரன் சிந்தித்திருந்தால் சிங்களவனுடைய அழிவு எப்படியிருந்திருக்கும் என்பது யாவருக்கும் தெரியும். இத்தனை கொடுமைகளை செய்தாலும் புலிகள் ஒருபோதும் சிங்கள மக்களை இலக்காக்க மாட்டார்கள் அல்லது கீழ்தரமான போருக்கு போக மாட்டார்கள் என்பது இந்தியாவிற்கும் ஸ்ரீலங்க சிங்கள நாய்களுக்கும் நன்றாக தெரிந்தபின்புதான் இந்த கொடுமையை அரங்கேற்றினார்கள்.

தோற்றது தர்மமும் நீதியும்................. பிரபாகரன் அல்ல. இதுதான் தமிழருடையதும் தமிழ் மன்னர்களுடைய வரலாறு.

தமிழருக்கு மன்னன் ஆக உகந்தவனே வரலாறில் தமிழரின் மன்னனாக இடம்கொள்கிறான். மற்றவர்கள் குறுநில மன்னர்களாக கூட முடியாது தமது வாழ்நாளிலேயே தமிழர்களால் வெறுத்து ஒதுக்கி சாகிறார்கள். என்று சாண்டில்யனின் ஒரு புத்தகத்தில் முன்பு எப்போதோ வாசித்திருந்தேன்.........

எனது வாழ்நானிலேயே அதை நேரில் பார்க்கிறேன்.............. எத்தனையோ இயக்கங்களும் தலைவர்களும் மழைக்கு முழைத்த காளன்கள்போல் முளைவிட்டிருந்தாலும்............. (எது பிழை எது சரி என்ன நடந்தது என்பதை கடந்து) பிரபாகரனே எனது வாழ்நாளில் (ஈழ)தமிழனை உலகிற்கு அறிமுகம் செய்தவன்.

கருணாநிதி உள்ள களவு எல்லாவற்றையும் செய்து தனது குடும்ப அரசியலை தமிழ்நாட்டு தமிழரிடம் புகுத்தி இப்போது காறி துப்பும் நிலையிலேயே இருக்கிறார். ஆனால் பதவியின் ஆழுமையை வைத்து சூரியன்போல படம் காட்ட முடிகிறதே தவிர சூரியன் ஆகிவிட முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய தோல்விகளின் விரக்தியால் வந்த வரிகள்............

தமிழ் மன்னர்கள் ஒருபோதும் இன்னொருவனை அழித்து வாழவேண்டும் என்று ஆசைகொண்டதில்லை தர்மத்திற்கும் நீதிக்கும் தலைவணங்கியே போர்களை செய்தார்கள். .

சிங்களவனை அழிப்பது பற்றி பிரபாகரன் சிந்தித்திருந்தால் சிங்களவனுடைய அழிவு எப்படியிருந்திருக்கும் என்பது யாவருக்கும் தெரியும்.

தோற்றது தர்மமும் நீதியும்................. பிரபாகரன் அல்ல. இதுதான் தமிழருடையதும் தமிழ் மன்னர்களுடைய வரலாறு.

எனது வாழ்நானிலேயே அதை நேரில் பார்க்கிறேன்.............. எத்தனையோ இயக்கங்களும் தலைவர்களும் மழைக்கு முழைத்த காளன்கள்போல் முளைவிட்டிருந்தாலும்............. (எது பிழை எது சரி என்ன நடந்தது என்பதை கடந்து) பிரபாகரனே எனது வாழ்நாளில் (ஈழ)தமிழனை உலகிற்கு அறிமுகம் செய்தவன். கருணாநிதி உள்ள களவு எல்லாவற்றையும் செய்து தனது குடும்ப அரசியலை தமிழ்நாட்டு தமிழரிடம் புகுத்தி இப்போது காறி துப்பும் நிலையிலேயே இருக்கிறார். ஆனால் பதவியின் ஆழுமையை வைத்து சூரியன்போல படம் காட்ட முடிகிறதே தவிர சூரியன் ஆகிவிட முடியவில்லை.

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருதங்கேணி நீங்கள் சொல்வது சரி. அதாவது தமிழன் ரொம்ப நல்லவன். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது ஜின்னா பாக்கிஸ்தானை பிரித்துக்கொண்டார். எம்மவர்களோ சிங்களவா ... நீ என் சகோதரனப்பா ... நாம் எல்லாம் இலங்கை மாதாவின் புதல்வர்கள் நீயே எம்மை ஆளப்பா என்று பெருந்தன்மையோடு விட்டுவிட்டார்கள். நீங்கள் சொல்லும் தர்மமும் இந்த பெருந்தன்மைகளும் தான் எம்மை இவ்வாறு சீரழித்து வைத்திருக்கிறது.

கேள்வி யார் புத்திசாலி என்பது தானே தவிர யார் தர்மத்தை கடைக்கொண்டு வாழ்ந்தார்கள் என்பதல்ல. தர்மம் இன்றல்ல உலகில் என்றும் இருந்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சைடு கேப்பில் கருணாவை தமிழரென்று விளித்து.. ஆட்டோ ஓட்டும் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன் :lol: .. இங்க தான் என்ன இனம் என்று பெரும்பாலும் எவனுக்குமே தெரியவில்லை.. இதெல்லாம் கல்வியறிவு பெற்று சொந்தமாக சிந்தித்து... இப்பவே கண்ணகட்டுது.. ரைட்டு... :(

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது ஜின்னா பாக்கிஸ்தானை பிரித்துக்கொண்டார். எம்மவர்களோ சிங்களவா ... நீ என் சகோதரனப்பா ... நாம் எல்லாம் இலங்கை மாதாவின் புதல்வர்கள் நீயே எம்மை ஆளப்பா என்று பெருந்தன்மையோடு விட்டுவிட்டார்கள். நீங்கள் சொல்லும் தர்மமும் இந்த பெருந்தன்மைகளும் தான் எம்மை இவ்வாறு சீரழித்து வைத்திருக்கிறது.

ஜின்னா தனிநாடு கேட்கும் பொழுது எங்கள தலைவர்கள் சொல்பரியிடம் 50 - 50 ௦ ௦ கேட்டார்கள். தனிநாடு கேட்க விரும்பவில்லை. காரணம் அவர்களின் சொத்துக்கள் எல்லாம் சிங்களப் பகுதியில் இருந்தன. 50 - 50 கேட்பது தவறு என்பதை சுட்டிக்காட்டியவருக்கு (மகாதேவா என நினைக்கிறேன்) மல சல முட்டி அடிக்கப்பட்டதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

காக்கை வன்னியன் காலம் தொடக்கம்,

சேர் பொன் அருணாச்சலம், இராமநாதன் ஈடாக....

செல்வநாயகம், ஜீ.ஜீ. பொன்னம்வரை வந்து....

பிரபாகரன் என்னும் மாபெரும் தலைவன் தமிழனுக்கு கிடைத்தும்....

அதனைப் பயன் படுத்தாத தமிழினம் உலகில் முற்றாக அழிந்து போக வேண்டும்.

இனத்தைக் காட்டிக் கொடுத்து, வயிறு வளர்க்கும் தமிழர்க்கு சுதந்திரம் தேவை இல்லை.

சொத்தும் உழைப்பும் சுரண்டலும் சின்னவீடும் சிங்களபகுதியில் தான் இருந்தது.பிறகேன் தனிநாடு.

இன்றும் அதே நிலைதான் தான் நான் போன தடவை இலங்கை போயிருந்தபோது(95) கொழும்பில் லண்டனில் இருந்து வந்திருந்த பலரைசந்தித்தேன்.எல்லோரும் அனேகமாக ஒரு பிளட் வைத்திருக்கின்றார்கள் அதை வாடகைக்கு கொடுத்துவிட்டு வந்து 5 ஸ்டார் கொட்டேல்களில் நிற்கின்றார்கள்.சிலர் முன்னாள் எனக்கு தெரிந்தவர்கள் கூட.வெளியில் கைநிக்கன் பியர் 120 ரூபாயோ என்னவோ கொட்டேலில் 500 ரூபா லொபியில் இருந்து அந்தமாதிரி பாட்டி நடக்குது.மனேஜர் வேறு தமிழர்.ஒவ்வொருவருடமும் வருவார்களாம் அதை விட கிளப் வேறு போய்வந்தார்கள் ஈஸ்ட் ஜ்ரோப்பியன் தொடங்கி சைனீஸ் வரை இருக்குதென்றார்கள்.

ஒரு 50 மைல் தள்ளி எமது சனம் பங்கருக்கையும்,அகதிமுகாம்களிலும்.அரசியல் கதைத்தால் எங்களால் கொஞ்சக் காசுதான் கொடுக்கமுடியும் வேறென்ன எதிர்பார்க்கின்றீர் என்று கேட்கின்றார்கள்.

போனமுறை உலககோப்பை கிரிக்கெட் பார்க்க போனபோதும்(2007) நான் ஒவ்வொரு நாளும் விடிய எழும்பி உள்ள இணையம் எல்லாம் தடவுகின்றது நாட்டில் என்ன நடக்கின்றதென்று.பெயர்களை எழுதவிருப்பமில்லை அதேதான் சொன்னார்கள் முடிந்தவரை கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம் அது மாத்திரம் தான் முடியும்.

அவர்களுக்கு அங்கு என்ன நடப்பதென்பதில் துளியும் அக்கறையும் இல்லை,அதை விட தங்களால் தலையிடமுடியாதெனவும் தெரியும்.இங்குதான் நாம் தோற்றோம்.எமது முதலீடு,அல்லது எனது குடும்பம் சம்பந்தப்பட்டது என்றால் இப்படி இருப்போமா ?இல்லவே இல்லை. தமிழன் இது தனது இருப்பின் போராட்டம் என்று மனதால் உள்வாங்கப்படவில்லை.வேசங்களும் வியாபாரங்களும் தான் முதன்மை பெற்றன.இதுவே இன்றும் தொடர் கதை ஆகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன... செய்வது? ஈழத் தமிழன் தொடக்கம் தமிழகத் தமிழன் வரை ஒருவருக்கும் தனது தாய் மொழியில், இருப்பில் ஆசை இல்லையே.....

எத்தனை சோழப் பேரரசருகளால் கட்டிக் காக்கப் பட்ட மொழியும், நிலமுமும் கண்முன்னே... பறிபோகின்றது.

அடுத்த நூற்றாண்டில் தமிழ் வாழ்ந்தால்... சந்தோசம். அது இப்போது..... போகும், போக்குளால்....நடவதாத காரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

சொத்தும் உழைப்பும் சுரண்டலும் சின்னவீடும் சிங்களபகுதியில் தான் இருந்தது.பிறகேன் தனிநாடு.

இன்றும் அதே நிலைதான் தான் நான் போன தடவை இலங்கை போயிருந்தபோது(95) கொழும்பில் லண்டனில் இருந்து வந்திருந்த பலரைசந்தித்தேன்.எல்லோரும் அனேகமாக ஒரு பிளட் வைத்திருக்கின்றார்கள் அதை வாடகைக்கு கொடுத்துவிட்டு வந்து 5 ஸ்டார் கொட்டேல்களில் நிற்கின்றார்கள்.சிலர் முன்னாள் எனக்கு தெரிந்தவர்கள் கூட.வெளியில் கைநிக்கன் பியர் 120 ரூபாயோ என்னவோ கொட்டேலில் 500 ரூபா லொபியில் இருந்து அந்தமாதிரி பாட்டி நடக்குது.மனேஜர் வேறு தமிழர்.ஒவ்வொருவருடமும் வருவார்களாம் அதை விட கிளப் வேறு போய்வந்தார்கள் ஈஸ்ட் ஜ்ரோப்பியன் தொடங்கி சைனீஸ் வரை இருக்குதென்றார்கள்.

ஒரு 50 மைல் தள்ளி எமது சனம் பங்கருக்கையும்,அகதிமுகாம்களிலும்.அரசியல் கதைத்தால் எங்களால் கொஞ்சக் காசுதான் கொடுக்கமுடியும் வேறென்ன எதிர்பார்க்கின்றீர் என்று கேட்கின்றார்கள்.

போனமுறை உலககோப்பை கிரிக்கெட் பார்க்க போனபோதும்(2007) நான் ஒவ்வொரு நாளும் விடிய எழும்பி உள்ள இணையம் எல்லாம் தடவுகின்றது நாட்டில் என்ன நடக்கின்றதென்று.பெயர்களை எழுதவிருப்பமில்லை அதேதான் சொன்னார்கள் முடிந்தவரை கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம் அது மாத்திரம் தான் முடியும்.

அவர்களுக்கு அங்கு என்ன நடப்பதென்பதில் துளியும் அக்கறையும் இல்லை,அதை விட தங்களால் தலையிடமுடியாதெனவும் தெரியும்.இங்குதான் நாம் தோற்றோம்.எமது முதலீடு,அல்லது எனது குடும்பம் சம்பந்தப்பட்டது என்றால் இப்படி இருப்போமா ?இல்லவே இல்லை. தமிழன் இது தனது இருப்பின் போராட்டம் என்று மனதால் உள்வாங்கப்படவில்லை.வேசங்களும் வியாபாரங்களும் தான் முதன்மை பெற்றன.இதுவே இன்றும் தொடர் கதை ஆகின்றது.

முதல் முதலாக தங்களுக்கு ஒரு பச்சை போட்டுள்ளேன்

புலிகளை மறந்து நிதானமாக தமிழரின் நிலையை எழுதியதற்கு...

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி நீங்கள் சொல்வது சரி. அதாவது தமிழன் ரொம்ப நல்லவன். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது ஜின்னா பாக்கிஸ்தானை பிரித்துக்கொண்டார். எம்மவர்களோ சிங்களவா ... நீ என் சகோதரனப்பா ... நாம் எல்லாம் இலங்கை மாதாவின் புதல்வர்கள் நீயே எம்மை ஆளப்பா என்று பெருந்தன்மையோடு விட்டுவிட்டார்கள். நீங்கள் சொல்லும் தர்மமும் இந்த பெருந்தன்மைகளும் தான் எம்மை இவ்வாறு சீரழித்து வைத்திருக்கிறது.

கேள்வி யார் புத்திசாலி என்பது தானே தவிர யார் தர்மத்தை கடைக்கொண்டு வாழ்ந்தார்கள் என்பதல்ல. தர்மம் இன்றல்ல உலகில் என்றும் இருந்ததில்லை.

புத்திசாலி என்பது வேறு......

கீழ்தரமான புத்தி என்பது வேறு..........

கீழ்தரமான புத்தி தற்காலிக வெற்றிகளை கொடுத்துகொண்டே இருக்கும்.......... ஆனால் ஈற்றில் வெல்லாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.