Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடைவெளி..........................

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடைவெளி அழகான தலைப்பை தொட்டுச் சென்று இருக்கிறிர்கள்.

இடைவெளி பற்றி நிறையவே பேசலாம்.

நிறைய எதிர்பார்த்தேன்.

உண்மைதான் கறுப்பி

எனக்கு கிடைத்த 5 நிமிடத்தை பயன்படுத்திக்கொண்டேன். (கரு கனநாளாக மனதில் இருந்தது)

கனக்க பேசவேண்டும் இது பற்றி. எம்மிடையே இது பற்றிய தெளிவின்மை உள்ளது. பேசுவோம். நன்றி தங்களது நேரத்துக்கு.

புலம் பெயர்ந்த தேசத்தி;ல் ஒரு தமிழ் குடும்பம் அல்ல ஒவ்வொரு குடும்பத்திலும் நடப்பதை அழகாகா ஆதங:கத்துடன் சொல்லியுள்ளீர்கள்.விசுகு அண்ணா

Edited by சுமங்களா

எனக்கு தெரிந்து முள்ளிவாய்க்காலுக்கு பின்..........

பிள்ளை வேண்டாம் என்று நிறுத்தியிருந்த பலர் பிள்ளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதை நானே பல இடங்களில் ஊக்கப்படுத்தியுள்ளேன்.

எனக்கு எப்பவும் குறி கொக்கின் தலை மீதுதான் குட்டி. என்ன செய்ய......?

நான் எழுதியதிற்கும் முள்ளிவாய்க்காலுக்கும் சம்பந்தம் இல்லை, இது நடந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் இருக்கும் அண்ண...

எவ்வளவு தான் பணம் இருந்தாலும் குழந்தைகளை பெற்று, தாமே பராமரிப்பது, அவர்களின் கல்வியைக் கவனிப்பது, பிள்ளைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது என்பது எல்லாப் பெற்றோராலும் முடிவத்தில்லை! கல்வி அறிவு இல்லாவிட்டால் என்ன? பணம் இருந்தால், தம்மிடம் பணம் இருக்கு அதன் மூலம் எல்லாம் சாதிக்கலாம் என்ற தலைகனமும், இல்லாதவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது பிள்ளைகளின் கல்வியைக் கவனிப்பதையும் காணலாம்.

அளவோடு பெற்றால் இரு பெற்றோரும் பிள்ளையின் வளர்ச்சியில் நேரடியாகவே பங்கெடுத்து போதுமான அளவு கல்வியறிவை தமது பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்கு வசதியாக இருக்கும். அதிக பிள்ளைகள் இருந்தால், பெற்றோரால் எல்லாப் பிள்ளைகளையும் சரிசமமாகக் கவனிக்கவோ அல்லது வசதிகளைச் செய்து கொடுக்கவோ முடிவதில்லை. அதனால் பிள்ளைகள் வளரும் போது அவர்களிடையே ஏற்றத் தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து வளர சந்தர்ப்பங்கள் உள்ளது.

அளவு கணக்கு இல்லாமல் பிள்ளைகளைப் பெத்து சனத்தொகையை கூட்டுவது முக்கியமா? அல்லது அளவோடு பிள்ளைகளைப் பெத்து அவர்களுக்கு தேவையான கல்வி அறிவைக் கொடுத்து அடுத்த தலைமுறைக்கு ஆயத்தப் படுத்தி விடுவது முக்கியமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதை விசுகு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டி

தாங்கள் தங்கள் குடும்பத்தில் எத்தனையாவது பிள்ளை என்று தெரியாது. ஆனால் நான் ஏழாவது. எனக்கு முன் ஒரு அண்ணன். அதைத்தொடர்ந்து 5 அக்காமார். என்னை அவர்கள் கால் நிலத்தில் படாது வளர்த்ததாக ஊரில் சொல்வார்கள். நானும் அப்படித்தான் வளர்ந்தேன். எனக்கு 6 அம்மாக்கள் என்று சொல்வேன். அதேநேரம் எனக்கும் எனது அண்ணனுக்கும் 15 வயது வித்தியாசம். அவரும் ஒரு தந்தைபோல்தான் எனக்கு. இதுவரை என்னை அடித்ததில்லை. கண் பார்வை ஒன்று போதும். இங்கு எல்லாம் அடங்கிவிடும். என்னை அவர் தான் கொழும்பு கொண்டு சென்று படிப்பித்தார். அதேபோல் இன்றும் அவரை ராஜாபோல் நாங்கள் வைத்திருக்கின்றோம். இதற்கும் இந்த இடைவெளிக்கும் சம்பந்தமுண்டு என்பதால் இதை இங்கு எழுதுகின்றேன்.

அதேநேரம் இன்றைய சந்ததி அதிலிருந்து விலகுகிறது அதுவும் கடந்த 2 அல்லது 3 வருடங்களாக அந்த இடைவெளி அதிகரித்துச்செல்கிறது என்பதே எனது கருவின் நோக்கம்.

காதில் பாடல்கள்

கண்ணுக்கு கணணி அல்லது தொலைக்காட்சி

வாயில் பாடல்கள் அல்லது கைத்தொலைபேசி

காலுக்கு ஆட்டம் அல்லது பந்து

கைக்கு கைத்தொலைபேசி அல்லது முகநூல் அல்லது எம் எஸ் என்

இப்படி இந்த இளம் சந்ததி வீட்டில் நாலு வார்த்தை எவருடனும் கதைக்க நேரமில்லாமல் வரும் என்று எவர் கணக்கிட்டிருக்கமுடியும்......?????????

Edited by விசுகு

நாம் இருவர் நமக்கிருவர் என்றிருந்தால் இந்த இடைவெளிகள் தொடர வாய்ப்பு குறைவாகவே காணப்படும்.

எண்ணிப்பெருக பிள்ளையை பெற்ற பின் எண்ணுவது இலுக்கு. :D :D

குட்டி

தாங்கள் தங்கள் குடும்பத்தில் எத்தனையாவது பிள்ளை என்று தெரியாது. ஆனால் நான் ஏழாவது. எனக்கு முன் ஒரு அண்ணன். அதைத்தொடர்ந்து 5 அக்காமார். என்னை அவர்கள் கால் நிலத்தில் படாது வளர்த்ததாக ஊரில் சொல்வார்கள். நானும் அப்படித்தான் வளர்ந்தேன். எனக்கு 6 அம்மாக்கள் என்று சொல்வேன். அதேநேரம் எனக்கும் எனது அண்ணனுக்கும் 15 வயது வித்தியாசம். அவரும் ஒரு தந்தைபோல்தான் எனக்கு. இதுவரை என்னை அடித்ததில்லை. கண் பார்வை ஒன்று போதும். இங்கு எல்லாம் அடங்கிவிடும். என்னை அவர் தான் கொழும்பு கொண்டு சென்று படிப்பித்தார். அதேபோல் இன்றும் அவரை ராஜாபோல் நாங்கள் வைத்திருக்கின்றோம். இதற்கும் இந்த இடைவெளிக்கும் சம்பந்தமுண்டு என்பதால் இதை இங்கு எழுதுகின்றேன்.

அதேநேரம் இன்றைய சந்ததி அதிலிருந்து விலகுகிறது அதுவும் கடந்த 2 அல்லது 3 வருடங்களாக அந்த இடைவெளி அதிகரித்துச்செல்கிறது என்பதே எனது கருவின் நோக்கம்.

காதில் பாடல்கள்

கண்ணுக்கு கணணி அல்லது தொலைக்காட்சி

வாயில் பாடல்கள் அல்லது கைத்தொலைபேசி

காலுக்கு ஆட்டம் அல்லது பந்து

கைக்கு கைத்தொலைபேசி அல்லது முகநூல் அல்லது எம் எஸ் என்

இப்படி இந்த இளம் சந்ததி வீட்டில் நாலு வார்த்தை எவருடனும் கதைக்க நேரமில்லாமல் வரும் என்று எவர் கணக்கிட்டிருக்கமுடியும்......?????????

அண்ண, நீங்கள் அனுபவித்த எல்லா சுகங்களையும் உங்கள் மூத்த சகோதரங்களும் அனுபவித்து இருப்பார்களா? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்...

ஒரு வேளை அவர்கள் தங்களுக்குக் கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களை தங்கள் கடைசி சகோதரமும் அதே சந்தர்ப்பங்களை இழந்தது போக்கக் கூடாது என்று நினைத்து உங்களை தாங்கி வளர்த்து இருக்கலாம் இல்லையா?

பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் மூத்தவர்கள் தங்களை பல வழிகளில் ஒறுத்து சில தியாகங்களை குடும்பத்திற்காகச் செய்து (பெற்றோரை விட்டுப் பிரிந்தது வாழ்வதே ஒரு பெரிய தியாகம் தானே?) தான் தங்களுக்குக் கீழ் உள்ள சகோதரங்களை முன்றேற்றி விடுகிறார்கள். இன்னும் சில குடும்பங்களில் மூத்தவர்கள் தாங்களே படித்து முன்னேறி விடுவார்கள், பெற்றோர்களுக்கும் ஓய்வூதியம் எடுக்கும் வயதாகிவிடும், ஆனால் கடைசிப் பிள்ளைகள் தான் தமது அன்றாட வேலைகளையும் பார்த்துக் கொண்டு வயதான பெற்றோரை பராமரிப்பார்கள்.

தற்போதைய நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...

ஒரு குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் அது ஆணாக இருக்கடும் அல்லது பெண்ணாகட்டும், இருவருக்குமிடையில் குறுகிய இடைவெளி இருப்பின் இருவரையும் சேர்த்து வளர்ப்பது மட்டும் அல்ல அவர்களின் கல்வியிலும் ஒரே நேரத்தில் கவனம் எடுக்க முடியுமா இல்லையா?

அடுத்து, அவர்கள் காலுக்கு ஆட்டாமோ/ பந்தோ அந்த நேரங்கள் போக வீட்டிக்கு வரும் நேரம் கிட்டத்தட்ட ஒரே நேரமாக இருக்காதா? அல்லது குறுகிய நேர இடைவெளிக்குள் வீடு வந்து சேர வாய்ப்புக்கள் இருக்கும் அல்லவா?

At least இரண்டு பிள்ளைகளுக்கிடையில் உள்ள இடைவெளி குறைய வாய்ப்பு இருக்கும் அல்லவா?

கைக்குத் தொலைபேசி/ முகநூல்/ எஸ்.எம்.எஸ் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு கொடுத்து அந்த அளவோடு போகவேண்டும் என்று பணிப்பது பெற்றோருடைய கடமை இல்லையா?

(18வயது பிள்ளைக்கு லேட்டஸ்ட் phone + facebook இரண்டும் பாவிக்கும் இடத்தில் 10 வயதுப் பிள்ளையும் அதே சித்தனையோடு தான் வளரும். வீட்டில் கேட்டு இல்லை என்றால் அது பள்ளிக் கூடத்தில் கேட்டுத் தெரிந்தது கொள்ளும்... இது யதார்த்தம்)

இடைவெளி கூடுவதால் இந்த நாட்டில் கொஞ்ச வயது சிறார்களே பெரியவர்களை விட அதிகம் எல்லாவற்றிலும் (வயதிற்கு மேற்ப்பட்டதும்) தெரிந்தது வைத்துள்ளார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் வீட்டுக்கென சில கண்டிப்புக்கள் /சட்டங்கள் பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும், தமக்கும் என்று தீர்மானிக்கப் படவேண்டும்.

* வீட்டிற்கு பிள்ளைகள் வரும் நேரம் வரையறுக்கப் படவேண்டும், தாமதமாகும் காரணங்கள் பெற்றோருக்குத் தெரியப் படுத்த வேண்டும்.

* தொலைகாட்சி/ கணணி பாவிக்கும் நேரம் வரையடுக்கப் படவேண்டும்.

* வீட்டில் உள்ள அறைகளுக்கெல்லாம் தனித் தனி தொலைகாட்சிகள் தடைசெய்ய வேண்டும்.

* வீட்டில் படிக்கும் பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கென படிக்கும் நேரம் ஒதுக்கப் படவேண்டும்.

* ஒரு நேரச் சாப்பாடாவது முடிந்த அளவு குடும்பமாக இருந்து சாப்பிட வேண்டும்.

* சாப்பாடு முடிந்த பின்பு அன்றைய நாளைப் பற்றி பெற்றோரும் பிள்ளைகளும் பரிமாறிக் கொள்ளவேண்டும்,

பிள்ளைகள் சொல்லாமல் இருந்தாலும் பெற்றோர் கேட்டு அறிந்தது கொள்ளவேண்டும்.

* ஒரு பிள்ளை தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து இருந்தால், மற்ற பிள்ளைக்கு முன்னால் பேசாது privacy கொஞ்சம் கொடுப்பது மிகவும் அவசியம்.

* பிள்ளைகள் வேற்று மொழி திரைப் படங்கள் பார்க்க நினைக்கும் போது நீங்கள் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்க அடம்பிடிப்பதை குறைத்துக் கொள்ளவேண்டும்.

* பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் வெளிப்படையாக கருத்துப் பரிமாற்றம், புரிந்துணர்வு நடைமுறையில் இருக்கவேணும், அதே நேரம் கண்டிப்பும் அவசியம் தேவை!

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி உண்டாக பிள்ளைகள் மட்டும் காரணம் இல்லை. இளம் சந்ததியினர் என்று குறிப்பிடுகிறீர்கள் அவர்களுக்கு பெற்றோர்கள் தானே வழிகாட்ட வேண்டும்? புலம்பெயர்ந்த பெற்றோருக்கும் இங்குள்ள வாழ்க்கை முறை புதியது தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் பெற்றோர்கள் தான் தமது பிள்ளைகளின் நல்லது/ கெட்டது இரண்டையும் முகம் கொடுக்கவேணும்! அதை செய்யத் தவறினால், அதற்குரிய சன்மானத்தை அவர்களே பெறுவார்கள் என்பது எனது கருத்து!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்கு அறுவைச் சிகிச்சை செய்வது இலகுவானது. அந்த இடத்தில கட்டெறும்பு கடிச்ச மாதிரி..... கொஞ்ச நேரம் இருக்கும்.

அடுத்த நாள் நெஞ்சை நிமித்திக் கொண்டு வேலைக்குப் போகலாம் தப்பிலி.

எல்லா இயக்கமும் முன்பிருந்தது போலவே இருக்கும். :D

ம்...யோசித்து பார்த்தால் பல வகையில் நன்மை போலத்தான் இருக்கு ^_^ எங்கும் எதற்கும் பயப்பிட தேவை இல்லை. :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவா குடும்பத்தில் ஆண் அறுவை சிகிச்சை செய்வதை பெண்கள் விரும்பமாட்டினம், ( அறுவைக் கூடாக சிங்கன் தொங்கிட்டான் எண்டால் டி. என். எ , டிவோர்ஸ் என்று தேவையில்லாத பிரச்சினைகள் வரும் இல்லையா? ). :lol:

அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஆண்களுக்கு தேவையேற்படின் மீளவும் குழந்தை பெறக்கூடியமாதிரி இன்னுமொரு அறுவைச் சிகிச்சை செய்யலாமென நினைக்கிறேன்.

உங்கள் உண்மையான பதிவு நன்றாக உள்ளது. இதுபோல் மேலும் தொடருங்கள் விசுகு.

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவா குடும்பத்தில் ஆண் அறுவை சிகிச்சை செய்வதை பெண்கள் விரும்பமாட்டினம், ( அறுவைக் கூடாக சிங்கன் தொங்கிட்டான் எண்டால் டி. என். எ , டிவோர்ஸ் என்று தேவையில்லாத பிரச்சினைகள் வரும் இல்லையா? ). :lol:

இதற்காக எல்லாமா டிவோர்ஸ் செய்வினம். பெண்களுக்கும் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கே.... அதுகளுக்காக எல்லாம் ஆண்கள் டிவோர்ஸ் செய்ய வெளிக்கிட்டால்.. உலகில் ஒருவர் தினமும் கலியாணம் செய்து கொண்டெல்லோ இருக்கனும். பெண்கள் அந்தளவுக்கு பாலுறவு வெறியர்களா..???! நம்ப முடியவில்லை. பாடப் புத்தகத்தில அப்ப எழுதிறதுகள் பிழையோ..???! :lol::D:o

உங்கள் எழுத்தை நம்பாமலும் இருக்க முடியவில்லை. அண்மையில் ஒரு செய்தி படித்தேன்.. இங்கிலாந்தில் நடந்த சம்பவம். கணவன் ஆப்கானிஸ்தானில் பணி புரிய.. அதே காலப் பகுதியில் இங்கிலாந்தில் வாழ்ந்த அவரின் மனைவி கர்ப்பமாகிட்டார். ஆப்கானிஸ்தானில் இருந்து கணவனுக்கு அந்தக் கர்ப்பத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாக தெரிந்ததால்.. மனைவியிடம் விசாரித்துள்ளார். உடனே மனைவி.. தன்னை யாரோ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டதாகச் சொல்லி இருக்கிறார். புத்திசாலிக் கணவன்.. மனைவியை திட்டவோ அடிக்கவோ.. கொலை செய்யவோ இல்லை. மாறாக சட்டத்தின் பிடிக்குள் சிக்க வைக்க.. பொலிஸாரிடம் அழைத்துச் சென்றுள்ளார். பொலிஸாரிடமும் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவே சொல்லி இருக்கிறார். ஆனால் விசாரணையில்.. அந்தப் பெண் கணவன் இல்லாத சமயம் வேறு ஆணோடு தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அதன் மூலம் உருவானதே அந்தக் குழந்தை என்றும் தெரியவந்தது. சட்டத்தை ஏமாற்றும் வகையில் பொய் சொன்னதற்காக (கவனிக்கவும் கணவனை ஏமாற்ற பொய் சொன்னதற்காக அல்ல) அந்தப் பெண்ணிற்கு 12 மாதச் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இருந்தாலும் அவள் 3 மாதக் கர்ப்பமாக இருப்பதால் குற்றம் செய்யாத அந்தக் குழந்தை சிறையில் பிறக்காது இருக்க நீதிபதி அவளுக்கு 6 மாதமாக சிறை தண்டனையை குறைத்து தீர்ப்பளித்துள்ளார்.

இதுகள.. என்னென்று வரையறுக்கிறது.. ஏன் இந்தப் பெண்களின் புத்தி இப்படி போகுது..????! ஏன் இப்படி ஒரு பாலியல் வெறி அவர்களுக்கு..??! இவர்களை நம்பி எப்படி ஒரு சந்தேசமான சந்தேகத்துக்கு இடமில்லாத குடும்ப வாழ்வை அமைக்கிறது..???????????! :(:o:rolleyes::unsure:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ண, நீங்கள் அனுபவித்த எல்லா சுகங்களையும் உங்கள் மூத்த சகோதரங்களும் அனுபவித்து இருப்பார்களா? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்...

ஒரு வேளை அவர்கள் தங்களுக்குக் கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களை தங்கள் கடைசி சகோதரமும் அதே சந்தர்ப்பங்களை இழந்தது போக்கக் கூடாது என்று நினைத்து உங்களை தாங்கி வளர்த்து இருக்கலாம் இல்லையா?

பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் மூத்தவர்கள் தங்களை பல வழிகளில் ஒறுத்து சில தியாகங்களை குடும்பத்திற்காகச் செய்து (பெற்றோரை விட்டுப் பிரிந்தது வாழ்வதே ஒரு பெரிய தியாகம் தானே?) தான் தங்களுக்குக் கீழ் உள்ள சகோதரங்களை முன்றேற்றி விடுகிறார்கள். இன்னும் சில குடும்பங்களில் மூத்தவர்கள் தாங்களே படித்து முன்னேறி விடுவார்கள், பெற்றோர்களுக்கும் ஓய்வூதியம் எடுக்கும் வயதாகிவிடும், ஆனால் கடைசிப் பிள்ளைகள் தான் தமது அன்றாட வேலைகளையும் பார்த்துக் கொண்டு வயதான பெற்றோரை பராமரிப்பார்கள்.

தற்போதைய நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...

ஒரு குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் அது ஆணாக இருக்கடும் அல்லது பெண்ணாகட்டும், இருவருக்குமிடையில் குறுகிய இடைவெளி இருப்பின் இருவரையும் சேர்த்து வளர்ப்பது மட்டும் அல்ல அவர்களின் கல்வியிலும் ஒரே நேரத்தில் கவனம் எடுக்க முடியுமா இல்லையா?

அடுத்து, அவர்கள் காலுக்கு ஆட்டாமோ/ பந்தோ அந்த நேரங்கள் போக வீட்டிக்கு வரும் நேரம் கிட்டத்தட்ட ஒரே நேரமாக இருக்காதா? அல்லது குறுகிய நேர இடைவெளிக்குள் வீடு வந்து சேர வாய்ப்புக்கள் இருக்கும் அல்லவா?

At least இரண்டு பிள்ளைகளுக்கிடையில் உள்ள இடைவெளி குறைய வாய்ப்பு இருக்கும் அல்லவா?

கைக்குத் தொலைபேசி/ முகநூல்/ எஸ்.எம்.எஸ் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு கொடுத்து அந்த அளவோடு போகவேண்டும் என்று பணிப்பது பெற்றோருடைய கடமை இல்லையா?

(18வயது பிள்ளைக்கு லேட்டஸ்ட் phone + facebook இரண்டும் பாவிக்கும் இடத்தில் 10 வயதுப் பிள்ளையும் அதே சித்தனையோடு தான் வளரும். வீட்டில் கேட்டு இல்லை என்றால் அது பள்ளிக் கூடத்தில் கேட்டுத் தெரிந்தது கொள்ளும்... இது யதார்த்தம்)

இடைவெளி கூடுவதால் இந்த நாட்டில் கொஞ்ச வயது சிறார்களே பெரியவர்களை விட அதிகம் எல்லாவற்றிலும் (வயதிற்கு மேற்ப்பட்டதும்) தெரிந்தது வைத்துள்ளார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் வீட்டுக்கென சில கண்டிப்புக்கள் /சட்டங்கள் பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும், தமக்கும் என்று தீர்மானிக்கப் படவேண்டும்.

* வீட்டிற்கு பிள்ளைகள் வரும் நேரம் வரையறுக்கப் படவேண்டும், தாமதமாகும் காரணங்கள் பெற்றோருக்குத் தெரியப் படுத்த வேண்டும்.

* தொலைகாட்சி/ கணணி பாவிக்கும் நேரம் வரையடுக்கப் படவேண்டும்.

* வீட்டில் உள்ள அறைகளுக்கெல்லாம் தனித் தனி தொலைகாட்சிகள் தடைசெய்ய வேண்டும்.

* வீட்டில் படிக்கும் பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கென படிக்கும் நேரம் ஒதுக்கப் படவேண்டும்.

* ஒரு நேரச் சாப்பாடாவது முடிந்த அளவு குடும்பமாக இருந்து சாப்பிட வேண்டும்.

* சாப்பாடு முடிந்த பின்பு அன்றைய நாளைப் பற்றி பெற்றோரும் பிள்ளைகளும் பரிமாறிக் கொள்ளவேண்டும்,

பிள்ளைகள் சொல்லாமல் இருந்தாலும் பெற்றோர் கேட்டு அறிந்தது கொள்ளவேண்டும்.

* ஒரு பிள்ளை தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து இருந்தால், மற்ற பிள்ளைக்கு முன்னால் பேசாது privacy கொஞ்சம் கொடுப்பது மிகவும் அவசியம்.

* பிள்ளைகள் வேற்று மொழி திரைப் படங்கள் பார்க்க நினைக்கும் போது நீங்கள் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்க அடம்பிடிப்பதை குறைத்துக் கொள்ளவேண்டும்.

* பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் வெளிப்படையாக கருத்துப் பரிமாற்றம், புரிந்துணர்வு நடைமுறையில் இருக்கவேணும், அதே நேரம் கண்டிப்பும் அவசியம் தேவை!

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி உண்டாக பிள்ளைகள் மட்டும் காரணம் இல்லை. இளம் சந்ததியினர் என்று குறிப்பிடுகிறீர்கள் அவர்களுக்கு பெற்றோர்கள் தானே வழிகாட்ட வேண்டும்? புலம்பெயர்ந்த பெற்றோருக்கும் இங்குள்ள வாழ்க்கை முறை புதியது தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் பெற்றோர்கள் தான் தமது பிள்ளைகளின் நல்லது/ கெட்டது இரண்டையும் முகம் கொடுக்கவேணும்! அதை செய்யத் தவறினால், அதற்குரிய சன்மானத்தை அவர்களே பெறுவார்கள் என்பது எனது கருத்து!!

தங்களது நேரத்திற்கு நன்றி குட்டி

ஆனால் இதை நான்வேறு வகையில் பார்க்கின்றேன்.

என்னைப்பொறுத்தவரையில் எல்லாமே வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்கின்றன.

உனது சகோதரத்தை பராமரிக்க முடியாதவன் எப்படி ஊரையோ நாட்டையோ பராமரிப்பான்?

தனது சொந்த சகோதரத்தில் அன்பு செலுத்தமுடியாதவன் எப்படி அடுத்தவர் மேல் அன்பு செலுத்துவான்?

தன்னைவிட வயதில் குறைந்த தனது உறவின் ஆசைகளை புரிந்து கொள்ளாதவன் எப்படி ஒரு ஊனமுற்றவருக்கோ அல்லது ஒரு நோயாளிக்கோ உதவுவான்....?

ஊரில் பார்த்தீர்கள் என்றால் கூட்டுக்குடும்ப வாழ்க்கையிலிருந்து அடுத்தவீட்டு உறவுகளுடன் எமக்கு இருந்த அன்னியோன்னியம் அதற்கான எமது ஈடுபாடுகள் தியாகங்கள் விட்டுக்கொடுப்புக்கள் சகிப்புத்தன்மைகள் மரியாதைகள்.....................

எல்லாமே இந்த மாதிரி வீட்டில் இருந்து நாம் படித்தவைதானே.............?

இடைவெளி குறைந்த பிள்ளைகள் இருக்கும் குடும்பத்திலும், இடைவெளி கூடிய பிள்ளைகள் இருக்கும் குடும்பத்திலும் சொல்லக் கூடிய அளவு வேறுபாடுகளைக் காணலாம். (வேறுபாடுகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும் இங்கே நான் குறிப்பிடுவது பிள்ளைகளின் வயது இடைவெளி...) ஒரு பெரிய வயது இடைவெளி உள்ள குடும்பத்தில் கடைசிப் பிள்ளை பட்டப் படிப்பை படித்து முடிக்கும் முன்பே அப்பிள்ளையின் பெற்றோர் ஓய்வூதியம் எடுக்கும் வயதைத் தாண்டி விடுகிறார்கள் என்று இருந்தால் அவர்களால் அந்தப் பிள்ளையின் அன்றாட வாழ்கையில் பங்கெடுக்க முடியாமல் போவது யாரோட தவறு? அந்தப் பிள்ளை தன்னுடன் படிக்கும் சக மாணவர்களோடு தான் தன்னை இணைத்துப் பார்க்கும், இது மனித இயல்பு. இதனால் மன உளைச்சல்களை அப்பிள்ளை சந்திக்க நேரிட வாய்ப்புகள் உண்டு அதே நேரம் சிலரே அதனை வெற்றி கொள்கிறார்கள்.

நீங்கள் சொல்வது போல் எல்லாம் வீட்டில் இருந்தது தான் பழக்கத்தில் வர வேண்டும்... முனைய சந்ததியினர் பலர் வயது நீண்ட இடைவெளியில் பிள்ளைகள் பெற்றதால் இந்த சந்ததியினர் குறைந்த இடைவெளியில் பிள்ளைகளை பெற்று தாமே கவனிப்பதும், தமக்குக் கிடைக்காததை, நீண்ட இடைவெளி உள்ள குடும்பத்தில் பிறந்தமையால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தாம் இழந்தவைகளை தமது பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து செயல்படலாம். அதை பிழை என்று நாம் ஒரு சொல்லில் தீர்ப்பிட முடியாது/ கூடாது அண்ண!!

எதிர் கால சந்ததியினர் நாம் வாழும் சமூகத்தில் தனிமைப் படுத்த படாமல் இருக்க, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நீண்ட இடைவெளி இல்லாமல் இருக்க முடிந்த அளவு குறைந்த இடைவெளியில் பிள்ளைகளைப் பெற்று அவர்களைப் பொறுப்பாக பெற்றோரே பராமரிப்பதினாலும், தேவையான கல்வியையும் கொடுப்பதனாலும் அன்பான, அறிவுள்ள எதிர்கால சந்ததியினை நிச்சயம் உருவாக்க முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து... :)

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவா குடும்பத்தில் ஆண் அறுவை சிகிச்சை செய்வதை பெண்கள் விரும்பமாட்டினம், ( அறுவைக் கூடாக சிங்கன் தொங்கிட்டான் எண்டால் டி. என். எ , டிவோர்ஸ் என்று தேவையில்லாத பிரச்சினைகள் வரும் இல்லையா? ). :lol:

சிங்கன் தொங்கிறதுக்கு வேறு காரணம் இருக்கலாம். :lol:

அறுவைச் சிகிச்சை மூலம் சிங்கன் தொங்கமாட்டான் என்று வைத்தியரே உத்தரவாதம் தரும் போது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடைவெளி குறைந்த பிள்ளைகள் இருக்கும் குடும்பத்திலும், இடைவெளி கூடிய பிள்ளைகள் இருக்கும் குடும்பத்திலும் சொல்லக் கூடிய அளவு வேறுபாடுகளைக் காணலாம். (வேறுபாடுகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும் இங்கே நான் குறிப்பிடுவது பிள்ளைகளின் வயது இடைவெளி...) ஒரு பெரிய வயது இடைவெளி உள்ள குடும்பத்தில் கடைசிப் பிள்ளை பட்டப் படிப்பை படித்து முடிக்கும் முன்பே அப்பிள்ளையின் பெற்றோர் ஓய்வூதியம் எடுக்கும் வயதைத் தாண்டி விடுகிறார்கள் என்று இருந்தால் அவர்களால் அந்தப் பிள்ளையின் அன்றாட வாழ்கையில் பங்கெடுக்க முடியாமல் போவது யாரோட தவறு? அந்தப் பிள்ளை தன்னுடன் படிக்கும் சக மாணவர்களோடு தான் தன்னை இணைத்துப் பார்க்கும், இது மனித இயல்பு. இதனால் மன உளைச்சல்களை அப்பிள்ளை சந்திக்க நேரிட வாய்ப்புகள் உண்டு அதே நேரம் சிலரே அதனை வெற்றி கொள்கிறார்கள்.

நீங்கள் சொல்வது போல் எல்லாம் வீட்டில் இருந்தது தான் பழக்கத்தில் வர வேண்டும்... முனைய சந்ததியினர் பலர் வயது நீண்ட இடைவெளியில் பிள்ளைகள் பெற்றதால் இந்த சந்ததியினர் குறைந்த இடைவெளியில் பிள்ளைகளை பெற்று தாமே கவனிப்பதும், தமக்குக் கிடைக்காததை, நீண்ட இடைவெளி உள்ள குடும்பத்தில் பிறந்தமையால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தாம் இழந்தவைகளை தமது பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து செயல்படலாம். அதை பிழை என்று நாம் ஒரு சொல்லில் தீர்ப்பிட முடியாது/ கூடாது அண்ண!!

எதிர் கால சந்ததியினர் நாம் வாழும் சமூகத்தில் தனிமைப் படுத்த படாமல் இருக்க, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நீண்ட இடைவெளி இல்லாமல் இருக்க முடிந்த அளவு குறைந்த இடைவெளியில் பிள்ளைகளைப் பெற்று அவர்களைப் பொறுப்பாக பெற்றோரே பராமரிப்பதினாலும், தேவையான கல்வியையும் கொடுப்பதனாலும் அன்பான, அறிவுள்ள எதிர்கால சந்ததியினை நிச்சயம் உருவாக்க முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து... :)

ஆரோக்கியமான எழுத்துக்கள் குட்டி

இது தான் நாம் அதிகம் பேசவேண்டும் என்று குறிப்பிட்டேன்

நீங்கள் மேலே குறிப்பிட்டது போல் பிள்ளையின் வளச்சிக்கு முன் பெற்றோர் வயதாகிவிடுகின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டால்....

மேலை நாடுகளில் இது தானே வழமையாக இருக்கிறது. இவர்கள் தங்களது எத்தனையாவது வயதுகளில் பிள்ளை பெற ஆரம்பிக்கின்றார்கள். அப்படியாயின் படித்த வளர்ச்சியடைந்த இவர்களது போக்கு பிழை என்பதாகிவிடுகிறதே.....?

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா பிள்ளைகளுக்குள் வயது இடைவெளி அதிகரிப்பது பெற்றோரின் வளர்ப்பு முறையை வித்தியாசப்படுத்துகிறது அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த எங்கள் தலைமுறையில் இதனை அதிகம் காணலாம். அத்தோடு ஊரில் குழந்தைகளை வரிசையாகப் பெற்று மகளுக்குத் திருமணமாகி மூன்றாவது குழந்தை பெறும்போதும் தாயும் குழந்தை பிரசவித்ததை பார்த்திருக்கிறோம். அங்கு அக்காவிற்கும் தங்கைக்கும் எவ்வளவு இடைவெளி... அக்காவே தாய்க்கு அடுத்தபடியான தாய். ஆனால் இப்போது அப்படியல்ல நீண்ட இடைவெளி என்பது சகோதரங்களுக்கான நெருக்கத்தைக் கொடுப்பதில்லை. மேற்கத்தைய வாழ்வியலும் காரணியாக உள்ளது. நீண்ட இடைவெளி விட்டு குழந்தைகள் பெறுவதைத் தவிர்ப்பது நன்மையே. அப்படி இல்லாவிட்டால் தாய் தகப்பனின் வயது 35ஐ தாண்டுமுன் குழைந்தைகளைப் பெற்றுக் கொள்வது நலம்.

படிப்பதற்கு வயது எல்லை இல்லை அண்ண!

* படிப்பில் கெட்டித்தனமும் ஆர்வமும், சந்தர்ப்பங்களும் சரியாக அமைந்த்தவர்கள் படித்துக் கொண்டே போக வாய்ப்புகள் உள்ளது... அவர்கள் பட்டப் படிப்பை முடித்து வேலை எடுத்து வீடு வாகனம் என்று வசதிகளோடு திருமணம் செய்கிறார்கள்.

* அதே நேரம் புலம் பெயர் நாடுகளில் மொழிப் பிரச்சனை என்று ஒன்று இருப்பதால் பலர் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் கிடைக்கும் வேலைகளை செய்து சம்பாதித்து தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்.

* பலர் திருமணம் முடித்து, பிள்ளைகளையும் பெற்று வளர்த்துக் கொண்டே தமது பட்டப் படிப்பையும் தொடர்ந்து சமுதாயத்தில் நலத்தொரு நிலைக்கு வந்தது இருக்கிறார்கள். அதற்கு மிக முக்கியம் அவரவருக்கு வரும் வாழ்கைத்துணையின் ஆதரவு. அது மட்டும் இல்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் (பிள்ளைகள் பெற்ற பின்பும் பல மேல் பட்டப்படிப்புகளைப் படித்து முடித்து மனத்திருப்த்தி கண்டவர்கள் பலர், அதில் எனது தந்தையும் அடங்குவார் :) )

---

பிள்ளைகள் பெறுவது அவரவரின் தனிப்பட்ட உரிமை! இருப்பினும், ஆகக் கூடியது ஒரு ஆண் 40 வயதிற்குள் பிள்ளைகளை பெற்றாலே ஓய்வு பெற முன்பு 25 வருடங்கள் பிள்ளைகளைளோடு தனது வாழ்க்கையைப் பகிர்ந்தது கொள்ளமுடியும். (திடீர் வருத்தங்கள், மரணங்கள் அண்மிக்காவிட்டல்...)

குறைந்த இடைவெளியில் பிறக்கும் பிள்ளைகளை பராமரிப்பதும், கல்வியறிவை ஒரே நேரத்தில்/ சிறிய இடைவெளியில் கொடுப்பது, பெரிய இடைவெளியில் பிறக்கும் பிள்ளைகளை பராமரிப்பதை விட குறைவாக இருக்கும், அத்துடன் பெற்றோர் தமது முன்னேற்றத்தையும் கவனித்துக் கொள்ள உதவியாக இருக்கும்,

பிள்ளைகளுக்குள் காணப்படும் நெருக்கமும் சுமூகமாக இருக்கும். ஒருவர் ஒருவரின் உணர்வுகளையும் அனுசரித்துப் போகக் கூடிய வாய்ப்புகள் அங்கே அதிகம்... என்பது எனது கருத்து. அதற்காக தாமத்தமாகத் திருமணம் செய்பவர்களை குறை சொல்லவில்லை, எனக்கு அந்த தகுதியும் இல்லை. பலர் பல காரணங்களால் அந்த நிலைக்கு வந்து இருக்கலாம். அவர்கள் பட்ட கஷ்டம் அவர்களுக்கே தெரியும். ஆனால் நான் இங்கே குறிப்பிட்டது பொதுவான அடிப்படையில் எனது கருத்து மட்டுமே. :)

---

இன்னொன்றும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்...

எமது பெற்றோரின் பெற்றோர் காலத்தில் அதிகப் படியான பிள்ளைகளை பெற்று இருக்கலாம், எமது பெற்றோரும் அதே அளவு பிள்ளைகளா பெற்றார்கள்? எமது சந்ததியினரும் அளவோடு தான் பெறுவார்கள் என்று நினைக்கிறன்... நிகழ்கால சந்ததியினர் அளவாகப் பெறுவதால் ஒரு வேளை எதிர்கால சந்ததியினர் அதிகம் பெறலாம்... :rolleyes::)

பிள்ளைகள் பெறுவது அவரவரின் தனிப்பட்ட உரிமை! இருப்பினும், ஆகக் கூடியது ஒரு ஆண் 40 வயதிற்குள் பிள்ளைகளை பெற்றாலே ஓய்வு பெற முன்பு 25 வருடங்கள் பிள்ளைகளைளோடு தனது வாழ்க்கையைப் பகிர்ந்தது கொள்ளமுடியும். (திடீர் வருத்தங்கள், மரணங்கள் அண்மிக்காவிட்டல்...)

குறைந்த இடைவெளியில் பிறக்கும் பிள்ளைகளை பராமரிப்பதும், கல்வியறிவை ஒரே நேரத்தில்/ சிறிய இடைவெளியில் கொடுப்பது, பெரிய இடைவெளியில் பிறக்கும் பிள்ளைகளை பராமரிப்பதை விட குறைவாக இருக்கும், அத்துடன் பெற்றோர் தமது முன்னேற்றத்தையும் கவனித்துக் கொள்ள உதவியாக இருக்கும்,

பிள்ளைகளுக்குள் காணப்படும் நெருக்கமும் சுமூகமாக இருக்கும். ஒருவர் ஒருவரின் உணர்வுகளையும் அனுசரித்துப் போகக் கூடிய வாய்ப்புகள் அங்கே அதிகம்... என்பது எனது கருத்து. அதற்காக தாமத்தமாகத் திருமணம் செய்பவர்களை குறை சொல்லவில்லை, எனக்கு அந்த தகுதியும் இல்லை. பலர் பல காரணங்களால் அந்த நிலைக்கு வந்து இருக்கலாம். அவர்கள் பட்ட கஷ்டம் அவர்களுக்கே தெரியும். ஆனால் நான் இங்கே குறிப்பிட்டது பொதுவான அடிப்படையில் எனது கருத்து மட்டுமே. :)

அனுபவத்தில் கண்ட உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

குட்டியின் எழுத்துக்களில் ஒரு முதிர்ச்சி காணப்படுகின்றது.

திறமான நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாராட்டுக்கள் குட்டி. :)

டிஸ்கி: குட்டி பெரிய பிள்ளை ஆயிட்டான். :D

குசும்பு... ^_^:D

மனித வாழ்கையில் ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு அனுபவங்களை/ படிப்பினைகளை விட்டுச் செல்கிறது ஒவ்வொரு மனிதனும் தனது வயத்துக்கு மீறிய வாழ்க்கை அனுபவங்களைத் தானே பெறுகிறான்.

ஒருவருக்கேனும் பயனுள்ள கருத்தாக இருந்தால் சந்தோசம் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குசும்பு... ^_^:D

மனித வாழ்கையில் ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு அனுபவங்களை/ படிப்பினைகளை விட்டுச் செல்கிறது

ஒவ்வொரு மனிதனும் தனது வயத்துக்கு மீறிய வாழ்க்கை அனுபவங்களைத் தானே பெறுகிறான்.ஒருவருக்கேனும் பயனுள்ள கருத்தாக இருந்தால் சந்தோசம் :)

ஆம்

அதனால்தான் எனது வாழ்க்கையின் அனுபவங்களை நாலு பேருக்கு பயன்பட்டால்....?

அதற்காகவே இங்கு பதிகின்றேன்

விசுகு அண்ணா பிள்ளைகளுக்குள் வயது இடைவெளி அதிகரிப்பது பெற்றோரின் வளர்ப்பு முறையை வித்தியாசப்படுத்துகிறது அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த எங்கள் தலைமுறையில் இதனை அதிகம் காணலாம். அத்தோடு ஊரில் குழந்தைகளை வரிசையாகப் பெற்று மகளுக்குத் திருமணமாகி மூன்றாவது குழந்தை பெறும்போதும் தாயும் குழந்தை பிரசவித்ததை பார்த்திருக்கிறோம். அங்கு அக்காவிற்கும் தங்கைக்கும் எவ்வளவு இடைவெளி... அக்காவே தாய்க்கு அடுத்தபடியான தாய். ஆனால் இப்போது அப்படியல்ல நீண்ட இடைவெளி என்பது சகோதரங்களுக்கான நெருக்கத்தைக் கொடுப்பதில்லை. மேற்கத்தைய வாழ்வியலும் காரணியாக உள்ளது. நீண்ட இடைவெளி விட்டு குழந்தைகள் பெறுவதைத் தவிர்ப்பது நன்மையே. அப்படி இல்லாவிட்டால் தாய் தகப்பனின் வயது 35ஐ தாண்டுமுன் குழைந்தைகளைப் பெற்றுக் கொள்வது நலம்.

என்ன இப்படி நிறுத்திவிட்டீர்கள்

எனது கடைசிப்பிள்ளை எனது 37வது வயதில் பிறந்தாள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனைவிக்கு 35இன் உள்தானே :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு அண்ணா பிள்ளைகளுக்குள் வயது இடைவெளி அதிகரிப்பது பெற்றோரின் வளர்ப்பு முறையை வித்தியாசப்படுத்துகிறது அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த எங்கள் தலைமுறையில் இதனை அதிகம் காணலாம். அத்தோடு ஊரில் குழந்தைகளை வரிசையாகப் பெற்று மகளுக்குத் திருமணமாகி மூன்றாவது குழந்தை பெறும்போதும் தாயும் குழந்தை பிரசவித்ததை பார்த்திருக்கிறோம். அங்கு அக்காவிற்கும் தங்கைக்கும் எவ்வளவு இடைவெளி... அக்காவே தாய்க்கு அடுத்தபடியான தாய். ஆனால் இப்போது அப்படியல்ல நீண்ட இடைவெளி என்பது சகோதரங்களுக்கான நெருக்கத்தைக் கொடுப்பதில்லை. மேற்கத்தைய வாழ்வியலும் காரணியாக உள்ளது. இல்லாவிட்டால் தாய் தகப்பனின் வயது 35ஐ தாண்டுமுன் குழைந்தைகளைப் பெற்றுக் கொள்வது நலம்.நீண்ட இடைவெளி விட்டு குழந்தைகள் பெறுவதைத் தவிர்ப்பது நன்மையே. அப்படி

என்ன இது?????????????

வைச்சுக்கொண்டே வஞ்சகம் பண்ணுறம்? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள் குறைய உள்ள வீடுகளை விட

குழந்தைகள் கூட உள்ள வீடுகள் கலகலப்பாகவும் சந்தோசமாகவும் இருக்கும்.

புலம் பெயர்ந்து வந்த பின்பு தான் இடைவெளி பெரிசாக தெரிகிறது.

என்ன இப்படி நிறுத்திவிட்டீர்கள்

எனது கடைசிப்பிள்ளை எனது 37வது வயதில் பிறந்தாள்.

என்ன கடைசிப்பிள்ளை என்கிறீங்கள்

எம்பெருமான் இப்பவும் தரலாம் எப்பவும் தரலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.