Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்பாலுறவு (ஒரு பாலுறவு) குறித்த புரிதலைக் கொண்டுவரும்படியான முதற்குறிப்பு: கற்சுறா

Featured Replies

தற்பாலுறவு (ஒரு பாலுறவு) குறித்த புரிதலைக் கொண்டுவரும்படியான முதற்குறிப்பு: கற்சுறா

நாம் எதிர் கொள்ளும் சமூகத்தின் புற நிலைகளையும் பொதுமையான வாழ்வில் அடங்கிக் கொள்ளாத வாழ்வுமுறைகளையும் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்றும் அதற்கான எல்லை எந்தளவு தூரம் நமக்கு விரிந்து கிடக்கிறது. என்பதையும் பேசுவதே எனது கட்டுரையின் நோக்கம்.

இங்கே அகநிலை என்பதற்குள் நான் அடக்க நினைக்கும் -நாம்- என்ற பதத்தின், சொல்லின் வன்முறை அடையாளத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதில் தற்போது நமக்கு அண்மித்திருக்கும் அல்லது நாம் பேசுவதற்கு அதிகம் நினைக்கும் ஒருபாலுறவு அதாவது தற்பாலுறவு, ஹோமோசெக்சுவல், லெஸ்பியன், என்ற இன்னோரன்ன தகமைபெற்ற வார்த்தைகளாலும் கம்பி சாப்பை சைக்கிள் புரி ரொட்டி புல்லு வெட்டுற மிசின் என்ற மிக அதிகளவான கொச்சைத்தனமான வார்த்தைகளாலும் அழைக்கப்படுகின்றவர்கள் குறித்தே இங்கு பேசுகிறேன்.

மிக இறுக்கமான காலாசாரவழிமுறைகளாலும் தேசிய வெறியூட்டப்பட்ட சூழல்களாலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நமது சமூகத்தால் அதற்குப் புறநிலையிருக்கும் தனது தாக்கத்தை மெதுவான முறையில் உள்நுழைக்க முயற்சிக்கும் மிகப்பெரிய – அதிர்ச்சியூட்டக் கூடிய தற்பாலுறவுக் கோட்பாட்டை அல்லது ஒட்டுமொத்த புறநிலையில் இயங்கும் ஙரநநச கோட்பாட்டை எதாவது ஒரு தருணத்தில் உள்வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்குமா நமது சமூகம் என்பதை நாம் பேசத்தானே வேண்டும்.

மிக மிக அதிகமான பாலியல் இச்சைகளுடனும் மிக அதிகளவாக பெண்களில் விருப்பும் கொண்ட ஒரு ஆண் தனத்திலிருப்பதாக உணரும் கற்சுறாவாகிய நான்- தற்பாலுறவு குறித்தஅரசியலையும் அழகியலையும் அதன் உள்ளும் புறமும் இருக்கின்ற முரண்பாடுகளையும் நாங்கள் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும், இதற்குள் எவ்வாறு உள்நுழைய முடிகிறது என்றும் பார்க்கும் எனது ஆரம்பநிலை அணுகலே இது.

பொதுவாக தமிழ் இனத்தின்; மானமாகவும் புனிதமாகவும் போற்றப்படுகின்ற ஒழுக்கம் என்ற பாலியல் சார் நடவடிக்கை மீதான கண்காணிப்பு என்பது மிக முக்கியம் வாய்ந்ததொன்று. இந்தப் பாலியல் பற்றிய கவனமென்பதே ஒவ்வொரு தனிநபரையும் அச்சப்படுத்திக் கொண்டிருக்கும் ஒன்றாக வாழ்நாள் ப+ராவும் இருந்து வருகிறது. தனிநபர்களது பாலியல் விருப்பு என்பதை எமது சமூகம் ஒருபோதும் ஒத்துக் கொள்வதி;ல்லை. அதை சமூகத்தின் விருப்பாக ஒரு இனத்தின் விருப்பாக ஒவ்வொரு தனிநபர்கள் மீதும் திணித்து விடுகிறது. பொதுவாக கல்வி, உடை, உழைப்பு, வேலை மற்றும் அனைத்து விதமான இருத்தல்களையும் விருப்புக்களையும் சமூகத்தின் விருப்பாக நமது சமூகம் கொண்டிருந்தாலும் எதிர்பார்த்தாலும் பாலியல் பற்றிய தெரிவில் அனைத்தையும் மீறிய வன்முறையைச் செலுத்தி தனிநபர் விருப்பை நிராகரித்து விட்டு இனத்தின் தெரிவாக சமூகத்தின் தெரிவாக முன்நிறுத்தகிறது.

புலம்பெயர் சமூகத்தில் பாலியல் பற்றிய அறிவுடனும் தெரிவின் உரிமையுடனும் நமது குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் பாலியல் பற்றிய மிக நூதனமான கண்காணிப்புக்களிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இங்கே இந்த இரண்டு பிரிவுக்குமிடையில் வளர்ந்து வரும் மிகப்பெரிய இடைவெளி குறித்து அதற்குள்ளிருக்கும் ஆபத்துக் குறித்து நாம் அவ்வளவு அக்கறைப்படுவதேயில்லை.

அண்மையில் கனடாவில் சாதிமாறிக் காதலித்ததற்காக காரினால் அடித்துத் தன் பிள்ளையைக் கொல்ல முயன்ற ஈழத்தமிழ்த் தகப்பன் பற்றிய சம்பவம் அறிந்திருப்பீர்கள். இதுதான் இன்று 30வருடத்தின் மேலாகப் புலம் பெயர்ந்து வாழும் நமது இனத்தவர்களது மனநிலை. இதற்குள் தற்பாலுறவு குறித்த அறிவு அல்லது புரிதல் எப்படி நிகழும் ? எங்கே சாத்தியம்?

ஆனாலும் நாம் கட்டிவைத்த புனிங்கள் நம் கண்முன்னாலேயே தகர்ந்து போய்க்கொண்டிருக்கும் காலம் இது. அத்தோடு தகர்க்க வேண்டிய காலமும் கூட. மதங்களின் பெயரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும் விடுதலையின் பேரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும் நீதியன் பெயரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும்தகர்ந்து போனதைக் கண்டுகொண்டிருக்கிறோம். ஒழுக்கத்தின் பெயரால் போதிக்கப்பட்ட பாலியல் உறவும் அதன் மீதான கண்காணிப்பும் தகரும் தருணம் தான் அடுத்து நடக்கப்போவது.

தற்பாலுறவு பற்றிய அறிவு எதுவுமற்ற வயதில் அதாவது பதின்மங்களில் எனது கிராமத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்களால் அவர்களின் பாலியல் இச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். அதாவது சிறிய வயதில் கம்பியடிக்கப்பட்டவன் நான். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நான் பேசுகின்ற விடையமும் அதனைப் புரிந்து கொள்ளலுக்கும் இடையே ஊடாடப் போவது இதுதான்.

ஒருபாலுறவு பற்றிய புரிதலின் ஆரம்பகாலங்களில் நானும் மிகக் கொச்சைத்தனமாகவே நண்பர்களுடன் உரையாடியிருக்கிறேன். அதன் மீதான அரசியல் தெளிவற்ற நிலையில் வெறும் பற்றாக்குறையான உடல் சார் இன்பங்களாக மட்டுமே அதனைக் கருதியிருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன். அதாவது கட்டுப்படுத்தப்பட்ட பாலியல் இன்பங்கள் கொண்ட நமது சமூகத்தில் வசதிப்பட்ட, ஒரு சந்தர்ப்பங் கிட்டிய பாலியல் இன்பங்களாகவே நான் தற்பாலுறவுவை உணர்ந்திருக்கிறேன். அதிகமாக எனது நண்பர்களும் நான் உட்பட அவ்வாறே சிந்தித்திருக்கிறார்கள்.

அதாவது நமது சமூகத்தில் ஆண் நண்பர்களே அதிகம் நெருங்கிப்பழக வசதியிருக்கிறது. மாணவர்கள் விடுதியாக இருந்தாலும் சரி. இயக்க முகாமாக இருந்தாலும் சரி இதுதான் நடை முறையாக இருந்திருக்கிறது. இங்கே ஒன்றாகப் பழகும் ஆண்கள் ஒருவரில் ஒருவர் பாசம் கொள்ளும் ஆண்கள்- அல்லது ஒன்றாகவே படுத்து எழும்பும் ஆண்கள் மிகுந்த அன்பாகவும் மற்றவர்களை தொந்தரவுக்குட்படுத்த விரும்பாத தாங்கள் தனிஉலகமாக இருக்க விரும்புகின்ற தன்மையை நாhன் அதிகம் கண்டிருக்கிறேன். தங்களுக்குள் ஆண் தன்மையும் பெண்தன்மையும் கொண்டமைந்த மிக நளினங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு குடும்பமாய் தங்களை உணர்ந்து கொள்ளும் தன்மைகளை அந்தச்சிறிய வயதுகளிலேயே அவர்களிடம் கவனித்தும் இருக்கிறேன். பாலுறவு அரசியல் அறிவற்ற அந்தத் தருணங்களில் இருபாலுறவு விருப்பு சார் உணர்வு கொண்ட சமூகத்தில் இவர்கள் மிகுந்த பழிப்புக்கும் அருவருப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களாயினும் அதில் அநேகர் அதைப் பொருட்படுத்துவதேயில்லை. ஆனால் அவர்கள் எல்லோருமே பின் நாட்களில் பெண்களைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். ஆக, அவர்கள் அனுபவித்த பாலியல் தன்மை என்பது எதைக் குறிக்கிறது.? பற்றாக்குறையான பாலியல் சூழலில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததை பகிர்ந்து கொண்டார்களா? அல்லது தற்பாலுறவில் விருப்பமிருந்தும் சமூகத்திற்காக பெண்களை த் திருமணம் செய்தார்களா என்பதுதான் நாம் யோசிக்க வேண்டியது. இங்கு இன்னும் ஒன்றையும் சொல்கிறேன். என்னைச் சிறிய வயதில் கம்பியடித்தவர்கள் இரண்டு பேருமே திருமணமானவர்கள். அதில் ஒருவருக்கு ஒரு பெண்குழந்தையும் இருக்கிறது. இங்கே திரும்பத்திரும்ப நான் கம்பியடித்ததவர்கள் என்ற சொற்பதத்தைப் பாவிப்பதற்கான காரணம் அந்த உறவுக்கு உரிய சரியான சொல் நமது மொழியில் இல்லை என்பதே. அதனைபுரிந்து கொள்ள அல்லது அந்தப் பாலியல் உணர்வின் வித்தியாசத்தை உணர இந்தச் சொல் அதுவும் மிகக் கொச்சசைத்தனமான இந்தச் சொல்லே தற்போது நம்மிடம் இருக்கிறது.

சரி , பாலியல் அரசியலறிவற்ற காலங்களில் அறிந்து கொண்ட தற்பாலுறவு குறித்த அக்கறை இப்படியிருந்தது எனினும் இன்று உலகம் ப+ராவும் தற்பாலுறவுக்கான உரிமைக்குரலை சகல தரப்பிலிருந்தும் எழுப்பிவரும் காலத்தில் உலகெங்கும் பரவியிருக்கும் நாங்கள் அதாவது நமது தமிழ் சமூகம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது அடுத்துப் பேசவேண்டியது.

கனடாவில் வசிக்கத் தொடங்கியதன் பிற்பாடு வருடாவருடம் நடக்கின்ற பிறைட் பரட் க்கு அதிகமான தடவை சென்றிருக்கிறேன். அந்த ஆக்கிரோசமான அந்தத் தொடரணி ஊர்வலத்தில் வடஅமரிக்க கண்டத்தின் அனைத்து தற்பாலுறவு விருப்பாளர்களும் ஆதரவாளர்களும் பெரும்பாலும் கலந்து கொள்வார்கள். அதனை ஒட்டுமொத்த உலகின் அதிகாரங்களுக்கு எதிரான கோசங்களை முன்வைக்கும் தளமாக – தற்பாலுறவு குறித்த தெரிவின் சுதந்திரத்தை முன்நிறுத்தி மிக ஆக்கிரோசமாக இருநாட்களும் நடைபெறும். ஆனாலும் பெண்கள் மீதான வன்முறை குழந்தைகள் மீதான வன்முறை எயிட்ஸ் மற்றும் மாபகப் புற்று நோய்கள் போன்ற மிகக் கவனிக்கப்படவேண்டிய மறுசமூகம் பெரும்பாலும் அக்கறை கொள்ளாத விடையங்களை அங்கு முன்நிலையில் வைத்துப் பேசப்படுகிற சூழலை அவதானித்திருக்கிறேன். மிக அதிகமாக பாலியல் தெரிவில் சமூகத்தால் உபயோகிக்கப்படும் வன்முறை மற்றும் கட்டுப்பட்டித்தனமான விளக்கமளிப்புக்கள் கட்டுப்பாடுகள் ஒழுங்குகள் என்பவற்றைத் தகர்த்தெறியும் நாட்களாக அந்த நாட்கள் இருந்துவிடுகின்றன.

தற்பாலுறவு குறித்து பேசுவதில் அடுத்தது

அவர்கள் பற்றிய அடையாளப்டுத்தல்களில் அவர்கள் குறித்து நமக்கிடையில் பாவிக்கப்படும் சொற்கள் வார்த்தைப் பிரையோகங்கள் குறித்துப் பேசவேண்டும். உண்மையில் அனைத்திற்கும் தூயதமிழ்சொற்கள் தேடும் நமது சமூகத்திடம் இவர்களை அழைப்பதற்கு ஒரு தமிழ்ச் சொல் இல்லை என்பது வெட்கமானது. வெறும் கொச்சைத்தனமான கேலிக்குட்படுத்தும் அல்லது ஒடுக்கும் சொற்களே வார்ததைகள் எங்கினும் பரவிக்கிடக்கின்றது. புயல என்பதற்கோ அல்லது டநளடியைn என்பதற்கான தமிழ்ச் சொல் என்னவாக இருக்கிறது என்றால் பொண் ஒருபால் உறவு ஆண் ஒருபாலுறவு என்றுதான் அர்த்தப்படுத்த முடிகிறது. ஞரநநச என்பதற்கான நமது விளக்கமளிப்பு என்னவாக இருக்கமுடியும்? ஆக இன்று மிக விவாதிக்கப்படக்கூடிய நிலையிலிருக்கும் தற்பாலுறவு நிலை குறித்த உரையாடல்களில் தமிழ் மொழியின் பற்றாக்குறை என்பது அதிகமாக இருக்கிறது என்பதுதான். இங்கே தூயதமிழ்ச் சொல் தேடும் தேசியக் காய்சலில் இதனைச் சொல்லவில்லை. பொதுத் தளத்தில் உரையாடுவதற்கு தமிழ் மொழியினைப் பேசுகின்ற நமது காலாசாரங்களால் தமிழ் மொழியை அடையாளப்படுத்துகின்ற எங்களால் முழுமையடைய உரையாடலைத் தொடரமுடியாது இருக்கிறது என்பதைத்தான் சொல்கிறேன். குறிப்பாகச் சொல்வது என்னவென்றால் டன்ஸ்ரன் சொல்வது போல் எனது துணையை எனது பாட்ணரை பொதுச்சூழலில் அதவாது குடும்ப உறவுக்குள்அழைப்பதற்கு ஒரு தமிழ்ச் சொல் இல்லை ஒரு உறவுமுறை இல்லை என்பதே முதற்தவறு என்பதாகும். சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா என்பது போல் எமக்கான துணைவரை அழைப்பதற்குரிய சொல் நமது மொழியில் இன்னும் இல்லை என்பது கவனிக்கப்படவேண்டியது. இரகசியமாக அடையாளப்படுத்த வேண்டிய தேவைதான் நமது குடும்பச் சூழல்களில் இருக்கிறது என்கிறார். அதைவிட புயல என்பதற்கு அவர்கள் சந்தோசம் என்று அழைத்துக் கொள்கிறார்கள். pPride parade ஐ தேர் என்றும் கொடியேற்றம் என்றும் பொது இடங்களில் குறிப்பிடும் நிலைதான் இன்னும் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் தான் அவர்கள் சினேகிதன் என்ற அமைப்பு ஒன்றைத் தொடங்கி தற்பாலுறவுக்காரர்களது உரிமைகள் உறவுகள் குறித்த அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார்கள்.

தற்பாலுறவு பற்றிய அறிவின் பற்றாக்குறையும் விளக்கமின்மைக்கும் அப்பால் தற்பாலுறவுக்காரர்கள் மீது நமது சமூகம் தனது ஒடுக்குதலை வெளிப்படையாகவே நிகழ்த்திய சம்பவங்கள் மிக அண்மைக்காலங்களில் இலங்கையிலும் கனடாவிலும் நிகழ்ந்தன.

கனடாவின் முக்கிய வானொலிகளில் ஒன்றான சிரிபிசி வானொலியில் கொடுக்கப்பட்ட விளம்பரம் ஒன்றைப் கேட்டிருப்பீர்கள். ரொரன்ரோ மேஜர் தோர்லில் வேட்பாளராக நின்ற சிமிதர்மன் என்பவரை தற்பாலுறவுக்காரர் என்பதற்காக மிகக் கொச்சைத்தனமாகக் கிண்டலடித்திருந்தார்கள். அதுபற்றி வெளிப்படுத்திய எந்தவித எதிர்ப்புணர்வுகளுக்கும் இன்றுவரை பதிலளித்ததி;ல்லை. கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்ற அடையாளத்துடன் கொடுக்கப்பட்டாலும் அவ்விளம்பரம் குறித்த பொறுப்பு அது சுட்டும் கருத்துக் குறித்து அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்பட்டது கிடையாது.

Ctbc வானொலி விளம்பரம் ; http://www.youtube.com/watch?v=8-4Q-gdDwCo&feature=player_embedded

இரண்டாவது, ஈழத்து முக்கிய எழுத்தாளரும் நாவலாசிரியரும் கூர் பத்திரிகை ஆசிரியருமான தேவகாந்தன் அவர்கள் டிசம்பர் தாய்வீடு பத்திரிகையில் தற்பாலுறவுக்காரர்கள் குறித்து படு கேவலமான பத்தியொன்றை எழுதியிருந்தார்.

எனக்குப் பிடித்தமான பழைய ஆங்கிலப்பாடல்களில் ‘I love you more than I can say’ என்ற லியோ சேயரின் பாடலும் ஒன்று. லியோசேயர், காதலின் நுண்மையின் ரகசியக் கூறுகளை அந்த ஒரு பாடலிலேயே வெளிப்படுத்திவிட்டதாக நான் பரவசம் கொண்டிருந்தேன். அதனாலேயே லியோ சேயர் ஒரு கதாநாயகப்பாடகன் நிலைக்கும் உயர்ந்திருந்தார். ஆனால் அவர் ஒரு தற்பாற் புணர்ச்சியாளர் என அறிந்தகணமே நான் அளித்திருந்த அந்த உயர்ந்தபீடம் அரை நொடியில் சிதறிப்போனது.

என்கிறார்.

இந்த அனுதாபங்களும் பிடித்தங்களும் என்கருத்துநிலை சார்ந்தவை என்றபோதிலும், இது தனிமனிதப் பிரச்சினை மட்டுமில்லை, சமூகப்பிரச்சினையும்தான் ஆகும் என்ற புரிதல் எனக்கு இருக்கிறது. அதனால் விபசாரர்கள், குற்றவாளிகள்,அரவாணிகள்போல தற்பாற் புணர்ச்சியாளர்களை எளிதில் என்னால் வரவேற்றுவிட முடியாதிருக்கிறது. அது ஒரு தனிமனித பிரச்சினையே எனினும், அதையும் மீறிஅது ஒரு தனிமனித வக்கிர நிலையை அடைந்துவருவதால்,இது சமூகப் பிரச்சினையும்தான் ஆகின்றது என்பதே என் திடமான கருத்து.

நிலப்பிரபுத்துவத்தின் அம்சமாக இருந்த கூட்டுக்குடும்ப வாழ்முறை முதலாளியத்தின் வருகையோடுதான் சிதறியது. அது நல்லது. முன்னேற்-றமானதும்கூட. ஆனாலும் தனிக் குடும்ப வாழ்முறைக்கான அதி உச்சபட்ச விதிகளைவகுத்தது மேலைத் தேசம். இன்று தற்பாற்புணர்ச்சியையும் அது தனிமனித சுதந்திரமென்கிற திரையின் பின்னணியாகவே முன்-மொழிகிறது.தற்பாற் திருமணத்தை அங்கீகரித்த நாடுகளில் இரண்டாவதானது கனடா. அது நல்லது. அந்தளவுதான் அந்த விவகாரத்தில். சமூகஅக்கறை அதை எதிர்க்கிற அளவு செல்லவேண்டியதில்லை. அதை தனி மனிதர்களின் விருப்புச் சார்ந்த ஒரு விஷயம்மட்டுமாக எடுத்துக்கொண்டு ஒதுக்கிவைப்பதுதான் விவேகம்.ஆனால் அதை ஒரு வாழ்முறையின் அம்சமாகப்பிரச்சாரப்படுத்துவது போன்ற எந்தமுயற்சியையும் எதிர்ப்பதைவிட இதில் ஒருஜனநாயக முற்போக்குவாதிக்கு வேறு வழியில்லை.

அது விபச்சாரம்போல் மிகப் புராதனமானது.சுயவின்பத் திருப்திப்படுதல்போல் உயிரின இயல்பானது. ஆனாலும் விபச்சாரத்தில் ஒருசமூக அநீதியின் கூறு ஒட்டிக்கொண்டிருக்கும். சுயவின்பதாரியிடம் தேக, மன அடக்குதல்களின்விடுபடுதல் என்ற முத்திரை இருக்கும். தன்பாற் புணர்ச்சியாளரிடத்தில் மனோவிகாரத்தின்கூறுமட்டுமே காணக்கிடக்கும். என்கிறார்.

பாருங்கள் இந்தப் பத்தி தெரிவிப்பதை. நாம் மிக மதிப்பளிக்கும் ஒரு எழுத்தாளன். கனவுச் சிறை கதாகாலம் என்று ஈழத்துப் படைப்பிலக்கிய ஆழுமை கொண்ட ஒரு ஈழத்துச் சமகால எழுத்தாளரது கருத்து. இது. எவ்வளவு ஒரு பிற்போக்குத்தனமாக இருக்கிறது பாருங்கள்.

தற்பாலுறவு என்பது ஒரு மனநோய் என்ற வாதம் 19ம் நூற்றாண்டுகளிலேயே தவறு என்று கைவிடப்பட்ட, நிராகரிக்கப்பட்ட கூற்று. இன்று தற்பாலுறவு என்பது மரபணுவில் இருக்கிறது என்றும் அது பழக்கத்தாலோ அல்லது பாதிப்பக்களாலோ உருவாவதில்லை என்றும் நீரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக்காலத்தில் தேவகாந்தன் அவர்களது கூற்று அப்பட்டமான தேடலற்ற அறியாமையின் வெளிப்பாடு என்று புறந்தள்ளிவிடமுடியாது. இதுதான் ஒரு சாதாரண தமிழ் மனத்தின் இன்றைய நிலைப்பாடாகவும் இருக்கிறது.அவருக்கு லியோ சேயர் தற்பாலறவுக்காரர் என்று தெரிந்ததும் அவர்மீது தான் வைத்திருந்த உயர்ந்த பீடம் அரை நொடியில் சிதறிப் போனதற்கும் சிமிதர்மான் தற்பாலுறவுக்காரராக இருப்பதாலேயே ரொரண்ரோ மேயராக வரத்தகுதியற்றவர் என்று சொல்லும் சிரிபிசியின் விளம்பரத்திற்கும் ஒரு வேறுபாடுமி;ல்லைத்தானே.

அடுத்து இலங்கையில்,

1883 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டவிதிகளிலேயே முதன் முதலில் ஒரு பாலுறவு தடை செய்யப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது. பிரித்தானிய காலனித்துவ சக்திகள் தமது ஆட்சியிலேயே அந்தச் சட்டத்தை உருவாக்கினார்கள். இன்று ஒருபாலுறவு தண்டனைக்குரிய குற்றம். அது இயற்கைக்கு முரணானதாம். இலங்கை குற்றவியல் சட்டத்தின் 365ஆவது பிரிவின் பிரகாரம் இதற்கு 12 வருட சிறைத்தண்டனையும் கசையடியும் தண்டனையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஒருமுறை நடந்த பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது அமைச்சர் மங்கள சமரவீர மீது தற்பாலுறவுக்காரர் என குற்றம் சுமத்தப்பட்டது. தொடர்ந்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மேற்படி சட்டத்தின் பிரகாரம் அவர் தண்டனைக்குரியவர் என்று கூறினார்.

ராஜித்த சேனாரத்ன பொதுவாகவே எல்லா இடங்களிலும் ஒருபாலுறவு குறித்து மோசமான கருத்து தெரிவித்து வந்தார்யுக்திய பத்திரிகைக்கு அவர் வழங்கியிருந்த பேட்டியொன்றில்..நான் ஒருபாலுறவை கடுமையாக எதிர்க்கிறேன். இதற்கென்று இருக்கின்ற நிறுவனங்களில் அரசாங்கத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்மார் உள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு அரச அனுசரணை கிடைக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதையும் (ளுநஒ ஊடரடி) பாலியல் சமூகமாக ஆக்கப் பார்க்கின்றனர். 2500 வருடகால பாரம்பரிய கலாசாரமுடைய இந்த சிங்கள பௌத்த நாட்டை அழிக்கப் பார்க்கின்றனர். இதனைக் கேட்டுக்கொண்டு மகா சங்கத்தினர் அமைதியாக இருப்பது என்னை ஆச்சரியமூட்டுகிறது. நான் கற்றிருக்கின்ற வைத்தியத்துறையைப் பொறுத்தவரை ஒருபாலுறவு என்பது மனநோயின் விளைவு. மனநோயாளர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும். அவர்களை புனருத்தாரனம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக அதனைப் பேண ஜனநாயக உரிமை வழங்குவதை நான் எதிர்க்கிறேன். எமது குடும்ப கட்டமைப்பை சீரழிக்கிற இயற்கைக்கு முரணான விடயத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. பைத்தியக்காரத்தனமான சுதந்திரத்தை கதைத்துக்கொண்டு இதனை செய்ய முயல்வதை நான் இறுதி வரை எதிர்த்தே தீருவேன் என்றார். (யுக்திய செப்டம்பர் 06)

இதனை மறுத்துக் கருத்துத் தெரிவித்த சேர்மன் டி ரோஸ் அவர்கள்ஒருபாலுறவினர் என்கின்ற ரீதியில் நாங்கள் அமைப்பொன்றை உருவாக்கியதே அதற்குரிய உரிமையை ஏற்கச்செய்வதற்காகவே. அரசியல் நே?க்கங்களுக்காக பாலியல் உரிமையை பலியாக்கியுள்ளனர். ஒருவருக்கு இந்த உரிமையை ஏற்காதிருக்க உரிமையுண்டு. ஆனால் நாகரிகமான ஜனநாயக முறையியல் என்று ஒன்று உண்டு. ஒருவர் ஒருபாலுறவு கொண்டதற்காக அவர் ஒருபாலுறவினர் என ஆகிவிடமாட்டார். அதற்கு பல காரணங்கள் உண்டு. இது தெரிவைப் பொறுத்தது. இலங்கையில் ஆயிரக்கணக்கான ஒருபாலுறவினர் உள்ளனர். அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருபவர்கள். ராஜித்தவின் கருத்தானது அந்த ஆயிரக்கணக்கான அனைவருக்கும் எதிரான தாக்குதல். இந்த மோசமான கருத்து குறித்து மக்கள் முன்னிலையில் ராஜித்த பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். என்றார். எங்களுக்குத் தெரியும் அனுரா பண்டார நாயக்காவுக்கு இருந்த ஒருபாலுறவு நண்பர் குறித்த அரசியல் விவகாரங்கள். இன்று ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தற்பாலுறவுக்காராக இருக்கிறார். ஆனால் இவர்கள் குறித்த எதிர்ப்புணர்வு அவர்கள் மட்டத்தில் பொதுவாக வெளிவருவதில்லை.

இப்போது பார்த்தீர்களென்றால் சிங்களவர்களாயிருந்தாலும் சரி அது தமிழர்களாக இருந்தாலும் சரி தற்பாலுறவை ஒரு மனநோயின் விளைவு என்ற புரிதலோடு மட்டும் தான் அணுக நினைக்கிறார்கள். இதனை எதிர்ப்பவர்கள் அதற்குமப்பால் தமது தேடலை மேற்கொள்ள மறுதலிக்கிறார்கள். உடலியலின் கூறுகளை அதன் அரசியலை அழகியலை புரிந்து கொள்வதின் அவசியம் பற்றிக் கூட இவர்கள் யோசிப்பதில்லை. தமது மதங்களினூடும் தமது தேசியங்களினூடும் தமது கலாச்சாரங்களினூடும் கட்டிவைத்திருக்கும் சீர் கேட்டை யாருக்கும் குலைக்க விருப்பமி;ல்லை. ஆக மற்றவர்களது பாலியல் தெரிவிலும் தமது மூக்கை நுழைத்து விட்டு அரசியல் செய்வார்கள் இவர்கள்.

தற்பாலுறவுக்காரர்களிடம் எப்பொழுதும் எதிர்ப்பாலுறவுக்காரர்கள் குறித்து அச்சமும் அவநம்பிக்கையும் தொனித்துக் கொண்டிருக்கிறது. தம்மீதான புறக்கணிப்புக்களை அவர்கள் நிதமும் அனுபவித்து வருபவர்களாகையால் ஒரு நிரந்தர இடைவெளி ஒன்று எப்பொழுதும் அகலமாகவே இருந்து வருகிறது. பெண்தன்மை எதிர் ஆண்தன்மை என்ற இரு எதிர் வாழ்நிலைகளுக்கிடையில் ஆணாகிப் பொண்ணாகுதல் அல்லது பெண்ணாகி ஆணாகுதல் என்பதை ஒருபொழுதும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. -ஸ்ரெயிட் பீப்பிள்ஸ்- என்று தற்பாலுறவுக்காரர்களால் அழைக்கப்படும் எதிர்ப்பாலுறவுக்காரர்கள் பற்றிய அவர்களது கதையாடல்கள் எப்பொழுதும் எதிர்மறையாவே இருக்கின்றன. அறிவின்மையானவர்கள்,சிந்திக்கத் தெரியாதவர்கள், அரியண்டமானவர்கள், மாற்றத்தை விரும்பாதவர்கள், புதியன சிந்திக்கத் தெரியாதவர்கள் என பலவகை அடைமொழிகளுடனேயே அழைக்கப்படுகிறார்கள். ஆக ஞரநநச என்று தங்களை அழைக்கும் இவர்கள் பொதுச் சமூகத்தின் புறநிலையாளர்களாய் உணர்ந்து கொள்வதோடு சமூக மாற்றத்தின் முன்நிபந்தனையாக தம்மையே முன்வைக்கிறார்கள். தமது உடலையே முன்நிறுத்துகிறார்கள்.

கடந்த இரு பன்முகவெளி நிகழ்வுகளிலும் உரையாற்றிய டன்ஸ்ரன் அவர்கள் உங்கள் பிள்ளைகள் தற்பாலுறவுக்காரர்களாக அடையாளம் கண்டீர்கள் என்றால் உங்கள் முடிவு என்னவாக இருக்கும் என்க கேட்டபொழுது தாம் அதனை ஏற்கமாட்டோம்; என்பதாகவும் தாம் தாங்க முடியாத மன வேதனைக்குள்ளாவோம் என்பதாகவும் பலரது கருத்து இருந்தது. இங்கு கவனிக்க வேண்டிய விடையம் என்னவென்றால் நாம் விரும்பும் நாம் செய்யும் பாலியல் நடைமுறை சரியானது எனவும் நமக்கு விருப்பமற்றது தவறானது எனவும் சிந்திக்கத் தோன்றுவது எவ்வாறு? அந்தச்சிந்தனை எங்கிருந்து தொடங்குகின்றது. இது வெறுமனே தமிழர்களிடம் மாத்திரமல்ல. ஐரோப்பிய நாட்டவர்களிடமும் கனடிய அமெரிக்க நாட்டவர்களிடமும் இதே எண்ணம் தொடர்ந்து இருக்கிறது. எதிர்ப்பால் விருப்பமுள்ள எல்லா இனத்தவர்களாலும் ஜீரணிக்க முடியாத விடையமாகத்தான் தற்பாலுறவு இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. இதற்குள்ளிருந்துதான் இவர்களது சாத்தியங்களை நகர்த்த வேண்டியிருக்கிறது. கனடிய அரசின் அங்கீகாரம் கிடைத்தாலும் கூட இன்னமும் ஏதோ ஒரு மூலையில் இருந்து ஒழித்துதத்தான் வாழ்வை ஓட்டவேண்டியிருக்கிறது.

இறுதியாக,

நாம் இவ்வாறு முக்கியம் கொள்ளும்- ஒடுக்கப்பட்ட சமூகமாக கருதும்- தற்பாலுறவு சமூகம் தன்னளவில் அல்லது தனக்குள் எவ்வாறு இயங்கிக் கொள்கிறது என நாம் பார்க்கவும் வேண்டும்.நாம் அணுகும் சமூகத்தின் சிஸ்ரம் என்பது அதாவது அதிகாரப் படிநிலை என்பது ஆண் அதிகாரப் படிநிலை. கட்டப்பட்ட அனைத்து சமூகமும் ஆண் தன்நிலை அதிகாரம் சார்ந்தே இயங்குகின்றது. என்பதை நிங்கள் அறிவீர்கள். அதாவது முதல் ஆண் இருப்பினது மையம் குறித்தே அதன் அக்கறை குறித்தே இது இயங்குகின்றது. அது எந்த சமூகமாக இருந்தாலும். இதுதான் நிலை. இதில் வர்க்கம் இனம் சாதியம் பாலியல் நிறம் என்பன பிரிவுகளாக இருந்தாலும் முன்நிலையில் இருப்பது ஆண் மையச் சிந்தனையே. இந்த அடிப்படையில் தான் தற்பாலுறவுச் சமூகமும் தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. மிக எளிமையான கண்ணோட்டத்துடன் Pசயனை pசயனஐப் பார்த்தோமானால் சுலபமாக விளங்கிக் கொள்ளமுடியும். நான் முன்னம் சொன்னது போல் ஆக்கிரோசமான தொடரணி ஊர்வலங்களும் உலக அரசியலும் குழந்தைகள் மீதான அக்கறையும் பெண்களது உடல் உள அரசியலைப் பேசுகின்ற நாளாக ஊர்வலத்தின் முதல்நாள் லெஸ்பியன்களது நாளே இருக்கும். இரண்டாம் நாள் மிக கோலாகலமான அதிக வியாபார நிறுவனங்களது ஸ்பொன்சரின் கீழ் ஆடம்பர நிகழ்வாக மாற்றப்பட்ட தற்பாலுறவு ஆண்களது நிகழ்வு இருக்கும். உலகச் சூழலை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தெரியும் தற்பாலுறவு அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத நிறுவனங்கள் கூட அங்கே தமது றேட் மார்க்கை முன்வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். தற்பாலுறவுக் கொடியின் வானவில் நிறத்தைப் பொறித்த ஆடைகளும் அலங்காரப் பொருட்களுமாக வியாபாரம் முன்நிலை பெற தற்பாலுறவு உரிமை அரசியல் காணாமல் போய்க் கொண்டிருக்கும். இந்தமுறை ஊர்வலத்தில் கனடியத் தமிழ்க் காங்கிரசும் பங்குபற்றியது என்றால் பாருங்களேன்.

மிக நுணுக்கமாகப் pசயனை praid ஐப் பார்தால் தெரியும் அதற்குள் இருக்கும் உட்பிரிவுகள். ஒரு தற்பாலுறவுக்காரர் என்பவர் அழகானவராக துப்பரவான ஆடையணிந்த சாதுவான நபராக இருப்பார் என்பது பொதுவாக நாம் அறிந்து வைத்திருப்பது. மாறாக மீடியாக்களில் தற்பாலறவுக்காரர்களை வெளிப்படுத்தும் போது விகாரமான வித்தியாசமான ஆடை அணிந்த ஒரு முரட்டுக் கோணத்தில் தலை வாரப்பட்ட நபர்களைப் பிரசுரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். சாதாரண பொதுவான சாயலில் இருப்பவர்களை தற்பாலுறவுக்காரர்கள் என்று ஒருபோதும் எந்த மீடியாவும் பிரசுரித்ததில்லை. தற்பாலுறவுக்காரர்கள் என்பவர்கள் இந்த உலகத்திற்குப் புதிதானவர்கள் என்பது போலவே அடையாளப்படுத்தல்கள் தினமும் நிகழுகின்றன.

praid ஊர்வலத்திலும் அதிகாரங்களை முதல்நிலையில் வைத்திருப்பவர்கள் படித்த துப்பரவான ஆண் தற்பாலுறவுக்காரர்களே. அவர்களே தற்பாலுறவு அடையளச்சின்னமாக இருப்பவர்கள். அதனால் அவர்கள் உலக அரசியலையோ அல்லது வேறு ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த அரசியலையோ பேசுவதில்லை. தமது தகமையைத் தக்கவைக்க வெறும் வியாபாரம் சார்ந்தே அதிகமாக அகக்றைகொள்வார்கள். இவர்களை நிராகரித்தே தற்பாலுறவுப் பெண்களும் மற்றும் இதர அடித்தட்டுத் தற்பாலுறவுக்காரர்களும் போட்டி போட வேண்டியிருக்கிறது. துப்பரவான படித்த ஆண்களை விலத்தி நிர்வாணத்தை முன்நிறுத்தும் தற்பாலுறவுக்காரர்களும் (வுரூவு) மற்றும் ளுரூஆ – போன்றோர்கள் தமது அரசியலை எப்போதும் முன்நிறுத்திப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் தற்பாலுறவைப் பற்றியே பேசமறுக்கின்ற நமது சமூகம் தற்பாலுறவுக்காரர்களுக்குள் இருக்கின்ற மறுதலைச்சிக்கல்கள் குறித்து விளங்கிக் கொள்ளப் போவது நடக்கின்ற காரியமல்ல. இதையும் தாண்டி வசயளெநஒரயட என்பவர்களது வாழ்வு அவர்களது சிக்கல்கள் குறித்து நாம் பேசவிளைவது எப்போது? நேற்றுவரைக்கும் அவன் என்று விழித்த ஒருவரை இன்று அவள் என்று விழிக்கவேண்டிய காலங்களில் வாழ்கிறோம் இந்த உணர்வுகளை வாழ்வு முறையை விளங்குதல் எப்போது நிகழும். அதற்கான தயார்படுத்தல்களை நாம் எங்கிருந்து தொடங்குவது? மற்றவருடைய பாலியல் விருப்பை அல்லது தெரிவை தனதாகவும் தன் சமூகத்தின் விருப்பாகவும் கருதி அதனைக் கண்காணிக்கும் மிக ஆபத்தான சிந்தனையைத் தவறவிடாத நமது சமூகம் தற்பாலுறவு பற்றி மிக அச்சத்துடனேயே காலங்கழிக்கும்.

www.matrathu.com

Edited by நிழலி

தற்பாலுறவு (ஒரு பாலுறவு) குறித்த புரிதலைக் கொண்டுவரும்படியான முதற்குறிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் எல்லோரும் அப்படியே அந்தபக்கமாகவே சென்றீர்கள் என்றால்............

எமக்கு வாய்ப்புக்கள் அதிகமாகும். சமூக அந்தஸ்த்தை உங்களுக்கு பெற்றுதர நாம் உங்களுடன் கைகோர்த்து நிற்போம்...... என்று உறுதி மொழியும் தருகிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சமூகம் ஏன் அரைகுறையா இருக்குது என்பதற்கு இந்த கற்சுறா - பாற் சுறா விஞ்சாணிகளே முக்கிய காரணம்.

உடற்தொழிலியல் இரசாயன ஆராய்ச்சிகளின் படி.. ஆண் அல்லது பெண் homosex (ஒருபாலுறவு).. நபர்களின் மூளைச் செயற்பாடுகளில் சாதாரண ஆண் அல்லது பெண்ணினை விட செயற்பாட்டு மாற்றங்கள் அவதனானிக்கப்பட்டுள்ளதுடன் அவை குறித்த சில பரம்பரை அலகுகளின் செயற்பாட்டு தாக்க விளைவுடனுன் உடல் இரசாயனச் செயற்பாடுகளுடனும் தொடர்பு பட்டுள்ளமை ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை சாதாரண மனிதர்களில் காணப்படுவதிலும் மாறுபட்டும் உள்ளன... என்றும் சொல்கிறது ஆராய்ச்சி.

ஆனால் இந்தக் கட்டுரையாளர்.. அதை ஒரு மறைக்கப்பட்ட ஒன்றாக.. அதைப் பற்றி பேசுவது சமூகப் புரட்சி என்பதாக இனங்காட்டிக் கொண்டு.. இக்கட்டுரையை பதிவு செய்துள்ளாரே அன்றி.. உண்மையான அறிவியலோ.. சமூகவியலோ.. சார்ந்து ஒருபாலுறவு சம்பந்தப்பட்ட இக்கட்டுரை வரையப்பட்டுள்ளதாக தெரியவில்லை.

http://www.youtube.com/watch?v=r7aUlWjPZVw

  • கருத்துக்கள உறவுகள்

அதன் மீதான அரசியல் தெளிவற்ற நிலையில் வெறும் பற்றாக்குறையான உடல் சார் இன்பங்களாக மட்டுமே அதனைக் கருதியிருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன்.

ஒரு பாலுறவுக்கு ஏன் அரசியல் தெளிவு தேவை??

ஒரு பாலுறவு:

அந்தரங்கத்திலிருந்து அரசியலுக்கு....

என்.சரவணன்

இன்று ”ஒருபாலுறவு” குறித்து சூடான விவாதம் நடந்து வருகின்றது. இது குறித்து ”சிரச” தொலைக்காட்சி சேவை, மற்றும் யுக்திய, ராவய, மாதொட்ட, பாராதீச போன்ற மாற்று பத்திரிகை, சஞ்சிகைகளிலும் விவாதம் தொடர்ந்து வருகிறது. இந்தளவுக்கு தமிழில் இது குறித்த விவாதம் இடம்பெறாதது ஒரு வகையில் துரதிருஷ்டவசமான ஒன்று.

இந்த விவாதத்துக்கு ஆரம்பம் எங்கிருந்து தொடங்கியது என்றால், அமைச்சர் மங்கள சமரவீர தனது கிரெடிட் கார்ட்டைப் பாவித்து இன்டர்நெட்டுக்கூடாக பாலியல் படங்களைப் பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பாராளுமன்றத்தில் ஐ.தே.க. வினரால் சுமத்தப்பட்டு பின்னர் அவர் மீதும் பொதுவாகவும் ”ஒருபாலுறவு”க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனை ஒரு சந்தர்ப்பவாத அரசியலுக்கு மாறி மாறி காறி உமிழும் விவாதமாக அன்று பாராளுமன்றத்தில் இந்த சச்சரவு நிகழ்ந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்தே இந்த விவாதம் கட்சி அரசியலுக்கு அப்பால் தொடர்புசாதனங்களில் நடத்தப்பட்டது.

இன்றைய மைய நீரோட்டத்தில் பெரும்போக்காகவே ஒரு பாலுறவுக்கு விரோதமான கருத்துக்கள் ஆழமாக வேறூன்றியுள்ளன. இதற்கு எமது சமூக அமைப்பின் பண்பாடு, மதம், வர்க்கம், ஆணாதிக்கம் போன்ற ஆதிக்க மரபுவழிக் காரணிகளின் செல்வாக்கின் வழியாக வந்த ஐதீகங்கள் காரணமாக உள்ளன. எனவே இந்தக் கருத்தியலை முறியடிப்பது என்பதற்கு முன்நிபந்தனையாகவே மேற்படி காரணிகளை தகர்ப்பது என்பது அமைகிறது. ஒரு பாலுறவு நடைமுறையில் வழக்கிலுள்ள ஒன்றென்பதையும், அது குறித்து அவமானப்படுத்த, வெட்கங்கொள்ள, அசிங்கம் கொள்ள எந்தவித விஞ்ஞானபூர்வ காரணங்களும் இல்லையென்பதையும் ஒப்புக்கொள்ளத் தடையாக இந்த ஐதீகங்களே இருக்கின்றன.

ஒரு பாலுறவு என்பது திடீரென்று வானத்தில் இருந்து குதித்த அபூர்வமான ஒன்றல்ல அது ஏலவே எமது கலாசாரத்தில் நீண்ட காலம் புழக்கத்திலுள்ள ஒன்று. நிலவி வந்த ஐதீகங்கள் காரணமாக அது வெளிப்படைக்குரிய ஒன்றாக இருக்கவில்லை. அவ்வளவே. இன்று உலகமுழுவதும் ஜனநாயக உரிமைகளின் விரிவாக்கத்தினால் இன்று பகிரங்க உரிமை கோரி கருத்துகள் வெளியாகின்றன.

இன்று தன்னுடைய நண்பி தனது சக நண்பியை அல்லது நண்பன் தனது சக நண்பனைத் தழுவவோ, அல்லது கைகோர்த்து நடக்கவோ, தோளில் கைபோடவோ, மடியில் சாயவோ அஞ்சுகின்ற நிலைக்கு இந்த ஐதீகங்கள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. இதன் விளைவுகளாக பாலியல் குறித்த எந்தவித கலந்துரையாடலுக்கோ, அல்லது அது குறித்த புரிதலை நாடவோ விடாதது வரை விளைவுகளாக்கியுள்ளது. அவ்வாறான பேச்சு ஒரு நடத்தைக் குறைவாகவும், ஒழுக்கக்கேடாகவுமே நோக்கப்படுகின்றது. சொந்த மனைவி பாலியல் குறித்த கலந்துரையாடலை ஆரம்பித்து வைக்க தயக்கம் கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. அது அவள் ஏற்கெனவே அனுபம் கொண்டவள் என்கின்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. இவற்றுக்கு பாலியல் குறித்த திறந்த கலந்துரையாடல் எம் சமூகத்ததில் இல்லாததே காரணம். இதன் விளைவுகள் மோசமானவை என்பது கூறித்தெரிய வேண்டியவையல்ல.

1883 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டவிதிகளிலேயே முதன் முதலில் ஒரு பாலுறவு தடை செய்யப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது. பிரித்தானிய காலனித்துவ சக்திகள் தமது ஆட்சியிலேயே அந்தச் சட்டத்தை உருவாக்கினார்கள். ஆனால் இன்று அந்தச் சட்டத்தை பிரித்தானியாவில் நீக்கிவிட்டார்கள். இங்கு இன்னமும் அது நிலவுகிறது. இன்று ஒருபாலுறவு தண்டனைக்குரிய குற்றம். அது இயற்கைக்கு முரணானதாம். இலங்கை குற்றவியல் சட்டத்தின் 365ஆவது பிரிவின் பிரகாரம் இதற்கு 12 வருட சிறைத்தண்டனையும் கசையடியும் கொடுக்கப்படும்.

அண்மையில் நடந்த பாராளுமன்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மோசமான அவதூறுகள் காரணமாக அமைச்சர் மங்கள சமரவீர தான் ஒரு தன்னினச் சேர்க்கையாளன் தான் என்று ஆத்திரத்துடன் திருப்பித் திருப்பிக் கூறினார். இதைக் கூறியதும் அங்கிருந்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மேற்படி சட்டத்தின் பிரகாரம் அவர் தண்டனைக்குரியவர் என்று தம் சந்தர்ப்பவாத அரசியலுக்கு சாதகமாக இதனை பாவித்தார்.

இதனைத் தொடர்ந்து இது குறித்த ஒரு விவரண நிகழ்ச்சி ஒன்றை ”சிரச” தொலைக்காட்சி செய்தது. அதில் பல புத்திஜீவிகள், மனித உரிமையாளர்கள், தன்னினச்சேர்க்கை உரிமையாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் என்போரின் பேட்டியும் இடம்பெற்றது. ”சிரச” கூறிய தகவலின்படி ராஜித்தவை இது குறித்து கருத்து தெரிவிக்க அழைத்திருந்தும் அதனை நிராகரித்து நழுவினார் என்று கூறுகின்றனர். ஆனால் ராஜித்த சேனாரத்ன பரவலாக எல்லா இடங்களிலும் ஒருபாலுறவு குறித்து கருத்து தெரிவித்து வந்தார்.

யுக்திய பத்திரிகைக்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில்...

”..நான் ஒருபாலுறவை கடுமையாக எதிர்க்கிறேன். இதற்கென்று இருக்கின்ற நிறுவனங்களில் அரசாங்கத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்மார் உள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு அரச அனுசரணை கிடைக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதையும் (Sex Club) பாலியல் சமூகமாக ஆக்கப் பார்க்கின்றனர். 2500 வருடகால பாரம்பரிய கலாசாரமுடைய இந்த சிங்கள பௌத்த நாட்டை அழிக்கப் பார்க்கின்றனர். இதனைக் கேட்டுக்கொண்டு மகா சங்கத்தினர் அமைதியாக இருப்பது என்னை ஆச்சரியமூட்டுகிறது. நான் கற்றிருக்கின்ற வைத்தியத்துறையைப் பொறுத்தவரை ஒருபாலுறவு என்பது மனநோயின் விளைவு. மனநோயாளர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும். அவர்களை புனருத்தாரனம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக அதனைப் பேண ஜனநாயக உரிமை வழங்குவதை நான் எதிர்க்கிறேன். எமது குடும்ப கட்டமைப்பை சீரழிக்கிற இயற்கைக்கு முரணான விடயத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. பைத்தியக்காரத்தனமான சுதந்திரத்தை கதைத்துக்கொண்டு இதனை செய்ய முயல்வதை நான் இறுதி வரை எதிர்த்தே தீருவேன்.....”

என்றார். (யுக்திய செப்டம்பர் 06)

இவரின் இந்தக் கருத்தோடு சேர்த்து ஐ.தே.க. பிரமுகர் சீ.ஏ.சந்திரபிரேம, ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவங்ச, ந.ச.ச.கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பெண் பத்திரிகையாளரும் பெண்ணியவாதியுமான அனோமா ராஜகருணாநாயக்க, மற்றும் தன்னினச் சேர்க்கை அமைப்பின் தலைவர் சேர்மன் டி ரோஸ் ஆகியோர் யுக்தியவுக்கு கருத்துத் தெரிவித்திருந்தனர்.

ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவங்ச குறிப்பிடுகையில்...

”பாலியல் ஒருவாpன் தனிப்பட்ட உரிமை. ராஜித்தவுக்கு இது குறித்து பேச எந்த அருகதையுமில்லை. இதனை ஒரு இழிவுக்கும் குற்றத்துக்குமுள்ளாக்கும் ராஜித்த ஐ.தே.க.வுக்குள் இருக்கின்ற ஒருபாலுறவினரை எவ்வாறு காண்கிறார்.... இன்று ஐ.தே.க.வும் பொ.ஐ.மு.வும் மாறி மாறி குறை சொல்ல ஒன்றும் மிச்சம் இல்லை. ஏனென்றால் இரு கட்சிகளும் ஒன்று தான். ஒரே கொள்கை, ஒரே நடைமுறை. எனவே தான் அரசியல் கொள்கைகளுக்காக சண்டை பிடிப்பதை விட்டுவிட்டு தனிப்பட்ட விவகாரங்களை சந்திக்கு இழுத்து இழிவுபடுத்தி அரசியல் நடத்தத் தொடங்கியிருக்கின்றனர்....”

விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிடுகையில்...

”...இன்று உலகம் முழுவதும் ஒரு பாலுறவை மானுட ரீதியில் அணுகி அங்கீகாரமளிக்கின்ற போக்கை காணக்கூடியதாக இருக்கின்றது. ராஜித்தவிடம் ஒருபாலுறவு குறித்த மாறுபட்ட கருத்து இருந்தாலும் கூட அதனை ஏனைய சமூக, பொருளாதார காரணிகளுடன் நிறுவ முயலவில்லை. தனது இயலாமையை மூடி மறைக்க தனிப்பட்ட தாக்குதலைப் பிரயோகித்தமை குறித்து ராஜித்த வெட்கப்பட வேண்டும். இது ஐ.தே.க.வின் சீரழிவையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறான கருத்துகள் அசட்டை செய்யக்கூடியதல்ல....”

பெண்ணியவாதி அனோமா ராஜகருணாநாயக்க கூறுகிறார்..

”....குறுகிய அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு இப்படிப்பட்ட தனித்துவமிக்க பாலியல் இறைமைகளை பலியாக்குவது என்பது துரதிருஷ்டவசமான ஒன்று. இப்படிப்பட்ட இழிவுபடுத்தல் எமது நாட்டில் நிலவுகிற வங்குரோத்துதனமிக்க அரசியல் போக்குக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஒருபாலுறவு என்பது ஏதோ திடீரென்று வானத்திலிருந்து குதித்த அபூர்வமான ஒன்று அல்ல....”

சீ.ஏ.சந்திரபிரேம இது குறித்து கருத்து தெரிவிக்கையில்...

”...பௌத்தத்தின்படி பாலியல் குற்றம் என்று இல்லை. கிறிஸ்தவ சமயத்தில் தான் அப்படிப்பட்ட விதிகள் இருக்கின்றன. பௌத்தத்தில் பிக்கு-பிக்குனிகளுக்கு மாத்திரம் சகல பாலியல் இன்பங்களும் மறுக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருந்த போதும் இந்த பிரச்சினையின் மூலம் எமது சமூகத்தில் பாலியல் கருத்தாக்கம் குறித்த விடயம் பகிரங்க விவாதத்துக்கு வந்துள்ளது. அது எதிர்கால சமூகத்துக்கு மிகவும் நன்மை பயக்கத்தக்கது....”

சேர்மன் டி ரோஸ் கருத்து தெரிவிக்கையில்....

”....ஒருபாலுறவினர் என்கின்ற ரீதியில் நாங்கள் அமைப்பொன்றை உருவாக்கியதே அதற்குhpய உரிமையை ஏற்கச்செய்வதற்காகவே. அரசியல் நோக்கங்களுக்காக பாலியல் உரிமையை பலியாக்கியுள்ளனர். ஒருவருக்கு இந்த உரிமையை ஏற்காதிருக்க உரிமையுண்டு. ஆனால் நாகரிகமான ஜனநாயக முறையியல் என்று ஒன்று உண்டு. ஒருவர் ஒருபாலுறவு கொண்டதற்காக அவர் ஒருபாலுறவினர் என ஆகிவிடமாட்டார். அதற்கு பல காரணங்கள் உண்டு. இது தெரிவைப் பொறுத்தது. இலங்கையில் ஆயிரக்கணக்கான ஒருபாலுறவினர் உள்ளனர். அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருபவர்கள். ராஜித்தவின் கருத்தானது அந்த ஆயிரக்கணக்கான அனைவருக்கும் எதிரான தாக்குதல். இந்த மோசமான கருத்து குறித்து மக்கள் முன்னிலையில் ராஜித்த பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்....” என்றார்.

இப்படி இந்த விவாதம் சென்று கொண்டிருந்த போது ”மாதொட்ட”, மற்றும் ”பாராதீசய” (இப்பத்திரிகைகள் இரண்டும் மங்கள சமரவீரவின் அனுசரணையுடன் நடத்தப்படும் மாதாந்த சஞ்சிகைகள். இதன் ஆசிரியர் குழுவில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் முன்னைநாள் ஜே.வி.பி. இளைஞர்கள். இவை தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் மாற்று சஞ்சிகைகளில் குறிப்பிடத்தக்கவை. அரச சார்பற்றவை. பின்நவீனத்துவம், மாக்சீயம், பெண்ணியம், அமைப்பியல்வாதம், உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விவாதித்து வரும் முக்கிய இரு சஞ்சிகைகள். அது மட்டுமன்றி பாலியல் குறித்த விடயங்களை பகிரங்கமாக விவாதித்து வருகின்றவை.) பத்திரிகைகள் இது குறித்து நிறையப் பக்கங்களை ஒதுக்கி விவாதித்தது (ஒக்டோபர் இதழ்கள்). அச்சஞ்சிகைகள் ராஜித்தவை 12ஆம் நூற்றாண்டின் அரசியல்வாதியென்று கூறியிருப்பதுடன் அவரை பகிரங்க தொலைக்காட்சி விவாதத்துக்கு வரும்படி சவால் விடுத்துள்ளன.

ராஜித்தவோ சிரசவுக்கு பின்னர் அளித்த பேட்டியொன்றில் ”பாராதீசய” சஞ்சிகை ஒரு தூஷன பத்திரிகை என்று கூறியிருக்கிறார். அதன் பின்னர் பாராதீச சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் ”தூஷனம் என்றால் என்ன? கனவான்களே முடிந்தால் மோதுங்கள்!” என்று விவாதத்துக்கு அழைத்துள்ளனர்.

இந்த விவாதம் இவ்வாறு தொடர்ந்து செல்கின்றது. இது எவ்வாறிருந்த போதும் உண்மையிலேயே இது குறித்து பகிரங்க விவாதத்துக்கு வந்துள்ள இக்கருத்துப் பரிமாறலை உச்ச அளவு பயன்படுத்துவது சமூகத்தின் ஆரோக்கியமான சமூக மாற்றத்துக்கு அத்தியாவசியமான ஒன்று.

(சரிநிகர் இதழ் 157)

  • கருத்துக்கள உறவுகள்

தன்னினச் சேர்க்கையாளராக இருப்பதும் பல்லினச் சேர்க்கையாளராக இருப்பதும் தனி நபர் விருப்பங்கள்: இது கலாச்சாரம் சமயம் நாடு போன்ற எந்த எல்லைகளும் அற்ற ஒரு விஷயம். இந்தக் கட்டுரையோ தமிழ் சமூகத்தில் இது "அரிசி பருப்பு" மாதிரி சாதாரணமாக புளங்க வைக்கப் பட வேண்டிய ஒன்று என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துவது மாதிரி எனக்கு விளங்குது (அல்லது என் சிறு மூளைக்கு விளங்க இல்லையோ தெரியாது!). சொல்லப் போனால் எத்தனையோ விசயங்கள் கோட்பாடுகள் தமிழ் கலாச்சாரத்தில ஒரு ஓரங்கட்டப் பட்ட நிலையில தான் இருக்கின்றன. ஏன் தன்னினச் சேர்க்கைக்கு மட்டும் இவ்வளவு கவலை எண்டு எனக்கு விளங்கவில்லை, யாராவது விளக்குவீங்களா?

வெளிப்படையாக உண்மையை கதைக்காத எமது சமூகத்திற்கு வேண்டாத ஒரு கட்டுரை.புலம் பெயர்ந்தாலும் வடலிக்கு பின்னால் போக நினைப்பவர்கள் நாம்.

இப்படியே பொத்திக்கொண்டே செத்துப்போவோம்.

இதையெல்லாம் விளங்கிக்கொள்வதற்க்கு நாமில் பெரும்பாலானோர் இன்னும் பரினாமவளர்ச்சி அடையவில்லை......

தமிழெருக்கே உரிய ''பீத்தல் பயம்'' மட்டுமில்லாட்டி, நாங்கள் காப்பிலிகளைவிட கேவலமான இனம் எண்டபேர் எடுத்திருப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையாக உண்மையை கதைக்காத எமது சமூகத்திற்கு வேண்டாத ஒரு கட்டுரை.புலம் பெயர்ந்தாலும் வடலிக்கு பின்னால் போக நினைப்பவர்கள் நாம்.

இப்படியே பொத்திக்கொண்டே செத்துப்போவோம்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, சமூக மட்டத்திலும் சரி, உண்மை பகுதியாகத் தான் பேசப் படும். இதன் காரணம் பூரண உண்மை பேசப் படுவதால் வரக்கூடிய நன்மையை விட தீமைகள் அதிகம் இருப்பதேயாகும். இதை சொல்கிற நீங்களே இங்கே உண்மைகளை மறைத்தும் selective ஆக இருட்டடித்தும் தான் எழுதுகிறீர்கள். உதாரணத்திற்குச் சொல்கிறேன் (திரியைத் திசை திருப்ப அல்ல!): ஈழப் போராட்டத்தில் இருந்து புலிகளை அகற்றி விட வேண்டிய தேவை உள்நாட்டிலேயே பிரிவினைகளை எதிர் கொள்ளும் இந்தியாவுக்கு 1987இற்கு முன்னரேயே இருந்தது-ராஜிவ் கொலையோ புலிகளின் நடவடிக்கைகளோ இந்தக் கொள்கைக்கு ஒரு தோற்றுவாய் அல்ல.இது ஒரு உண்மை. ஆனால் இந்த உண்மையை மறைத்துத் தான் நீங்கள் எழுதுகிறீர்கள் பல இடங்களில். தயா இதைப் பற்றிக் கேட்டாலும் பதிலே சொல்லாமல் "மாறி" விடுகிறீர்கள். இப்படி selective ஆக உண்மை பேசும் நீங்கள் எப்படி மற்றவர்களிடம் "சுத்த" உண்மையை எதிர்பார்க்கிறீர்கள்?

"தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, சமூக மட்டத்திலும் சரி, உண்மை பகுதியாகத் தான் பேசப் படும். இதன் காரணம் பூரண உண்மை பேசப் படுவதால் வரக்கூடிய நன்மையை விட தீமைகள் அதிகம் இருப்பதேயாகும்"

உந்த வசனம் நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் நாம் தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையை பற்றிகதைக்கவில்லை.

உலகமே ஒருபாலாரை ஒதுக்கிவைத்த வைத்த காலமிருந்தது காலப்போக்கில் ஒவ்வொருநாடாக அதற்கான அங்கீரத்தை இப்போ வழங்கிவருகின்றன.அவர்கள் பக்கத்து நியாயத்தையும் சீர்தூக்கி பார்த்ததால்தான் இந்த நிலமை ஏற்பட்டது.வெறுமென உது இயற்கைக்கு மாறு என ஒதிக்கிவைத்திருந்தால் ஒருபோதும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்காது.நாம் எமது கலாச்சாரம் கட்டுக்கோப்பானது எனும் போலிமாயைக்குள் வீழ்ந்துகிடப்பதால் மாற்றங்களை ஏற்க மறுக்கின்றோம்.(விசுவின் அரட்டை அரங்கம் பார்த்தால் குழந்தை குட்டிகளெல்லாம் வந்து இந்திய கலாச்சார புகழ்ந்துவிட்டு மேற்கத்தைய கலாச்சாரத்தை பற்றி கிழிப்பார்கள் ஆனால் தங்கள் கலாச்சாரம் என்று பெருமைப்படும் பலவிடயங்களை அவர்கள் பின் பற்றுவதேயில்லை).இது ஒரு சமூகபிரச்சனை இதை மனம் திறந்து கதைப்பதில் எதுவித பிழையுமில்லை.

அடுத்தது நான் எங்கும் ஓடவில்லை.பதில் எழுதவேண்டிய தேவையில்லாமல் இருப்பவைகளுக்கு எழுதாமல் விடுகின்றேன்.நான் வாசித்த கதை ஒன்றுதான் ஞாபகம் வருகின்றது.தகப்பனை பிரிந்து தாயுடன் வளர்ந்த ஒரு குழந்தை பெரியவனாகி தகப்பனை சந்திக்கின்றான் அப்போது தாய் அவனுக்கு தகப்பனைபற்றி சொல்லிவைத்திருந்ததெல்லாம் முரண்பாடாக இருக்கின்றது.இதே போல் தான் இங்கு பலரின் நிலை. கடந்த 30 வருடங்கள் அவர்கள் சொல்லி கேட்டவற்றை மட்டுமே சரியென நம்புகின்றார்கள். இயக்கமானது ஒரு தேவைக்காக பலவிடயங்களை தம்மை நியாயப்படுத்தி சொல்லி இருக்கலாம் ஆனால் அவைதான் உண்மைகள் என்றதில்லை.நடந்தவைகளை அறியாது நான்பிடித்தமுயலுக்கு மூன்றுகால் என்றால்தான் எப்படி பதில் எழுதுவது.

உங்கள் முதல் பாதி உண்மை தான். இரண்டாம் பாதியுடன் ஒத்துவர முடியவில்லை. உங்கள் பக்க நியாயத்திற்காக தரவுகளை நீங்கள் யார் கேட்டாலும் கொடுக்க வேண்டும். இல்லா விட்டால் "என் பக்க நியாயத்தைப் புரிந்து கொள்கிறார்கள் இல்லை" என முறைப்பாடு செய்ய முடியாது (இப்போது நீங்கள் சொன்ன மூன்று கால் முயல் கதை போல). எனது புரிந்து கொள்ளல் பிழையாக இருக்கலாம். ஆனால் என் புரிதல் வேண்டுமென்றே நீங்கள் சில கேள்விகளுக்குப் பதில் தருவதில்லை என்பதாகத் தான் இருக்குது. இதையெல்லாம் பேச இது சரியான திரியில்லை.இனியொரு சந்தர்ப்பம் வரும் போது அப்படி இல்லையென நிரூபியுங்கள். "உனக்கு ஏன் நான் நிரூபிக்க வேணும்?" என்று நீங்கள் நினைத்தாலும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச் சேர்க்கை, சமயம் மற்றும் கலாச்சாரம்

அடே, நீ தமிழனாவே இருடா! அது பிரச்சனை இல்லை. ஆனால் உனக்கு எங்கேயடா கலாச்சாரம் இருக்கிறது? எங்கேயடா சமயம் இருக்கிறது? சொல்லடா மடையா!

அரசியல் கட்டுரை ஒன்றை எழுதுகின்ற திட்டத்தில் இருந்தேன். ஆனால் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட ஒரு விளம்பரம் என்னை இதை எழுத வைத்து விட்டது.

அண்மையில் அங்கே நடந்த நகராட்சித் தேர்தலை ஒட்டி ஒரு அருவருக்கத்தக்க விளம்பரத்தை அந்த வானொலி ஒலிபரப்பியது. ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் தமிழர்கள் சிலர் கட்டணம் செலுத்தி அந்த விளம்பரத்தை வானொலியில் ஒலிபரப்பச் செய்தார்கள்.

பொறுப்போடு நடந்த கொள்ள வேண்டிய அந்த தமிழ் வானொலி பொறுப்பற்றத்தனமாகவும் அறிவுகெட்டத்தனமாகவும் நடந்து அந்த விளம்பரத்தை ஒலிபரப்பியது.

இருவர் பேசுவது மாதிரி உருவாக்கப்பட்டிருந்த விளம்பரம் இதுதான். ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்கிறார், “மேயர் எலக்ஸனில் உங்களுடைய ஓட்டு யாருக்கு?”. அதற்கு மற்றவர் சொல்கிற பதில் இதுதான், “என்ன கேள்வி, நான் தமிழனடா, எங்களுக்கு ஒரு சமயம் கலாச்சாரம் இருக்கிறது, ரோப் பேட்டை பாருங்கள், அவருடைய மனைவி ஒரு பெண்…” இப்படிப் போகிறது அவருடைய பதில். ரோப் பேட் என்பவருக்குத்தான் தன்னுடைய வாக்கு என்று விளம்பரம் முடிகிறது.

அதாவது அவர் ஒரு தமிழராம். அவரிடம் சமயம் கலாச்சாரம் எல்லாம் இருக்கிறதாம். அதனால் ஒரு ஆணுடன் வாழ்கின்ற ஜோர்ஜ் ஸ்மிர்தமன்னுக்கு வாக்கைப் போடாமல் ஒரு பெண்ணுடன் வாழ்கின்ற ரோப் பேட்டுக்கு வாக்கு போடப் போகிறாராம்.

இப்படி ஒரு அருவருப்பானதும் முட்டாள்தனமானதுமான விளம்பரத்தை இந்த வானொலி ஒலிபரப்பியது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு செயல் இது.

இது விளம்பரதாரரும் வானொலியும் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று சொல்லி யாரும் தப்பிக் கொள்ள முடியாது. இந்த விளம்பரம் புலம்பெயர் தமிழர்களைப் பற்றி சில செய்திகளை சொல்கிறது.

•மேயர் தேர்தலில் வேட்பாளர் தன்பால் மீது நாட்டம் கொண்டவரா அல்லது எதிர்பால் மீது நாட்டம் கொண்டவாரா என்பதில் தமிழர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்

•அதை வைத்து வாக்கை போடுகின்ற அளவிற்கு தமிழர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்

•ஓரினச் சேர்க்கையாளர்களை கிண்டல் செய்கின்ற விளம்பரங்களை வெளியிடுவதை அனுமதிக்கின்ற நிலையில் தமிழ் சமூகம் இருக்கிறது

இதில் மூன்றாவது விடயம் முக்கியமானது. தமிழர்களில் யாரோ சிலருக்கு அவர்களின் அறியாமை காரணமாக ஒரு வேட்பாளரின் ஓரினச்சேர்க்கையை வைத்;து கிண்டல் செய்கின்ற எண்ணம் வந்திருந்தால் அதை பெரிதுபடுத்தாது விடலாம். வேண்டும் என்றால் அவர்களுக்கு ஓரினச் சேர்க்கை பற்றி சொல்லி புரிய வைக்கலாம்.

ஆனால் அவர்கள் அதை வைத்து விளம்பரம் ஒன்றை உருவாக்குகிறார்கள். கனேடியத் தமிழர்களின் முக்கிய வானொலி ஒன்று அதை கட்டணம் பெற்றுக் கொண்டு ஒலிபரப்புச் செய்கிறது. அந்த விளம்பரம் ஓரினச்சேர்க்கையாளர்களை அவமதிக்கிறது என்பது கூட அந்த வானொலியில் உள்ளவர்களுக்குப் புரியவில்லை.

விளம்பரத்தை உருவாக்கியவர்களும் வானொலியைச் சேர்ந்தவர்களும்தான் அறிவு கெட்டு நடந்தார்கள் என்றால், வானொலியை கேட்பவர்களுக்கு அறிவு எங்கே போனது? கனேடியத் தமிழர்களிடம் இருந்து இந்த விளம்பரத்திற்கு குறிப்பிடும்படியான எதிர்ப்புகள் வரவில்லை.

காரணம் இந்த விளம்பரத்தின் உள்ளடக்கத்தை ஆதரிப்பவர்களைத்தான் தமிழ் சமூகம் பெரும்பான்மையாக கொண்டிருக்கிறது. அந்தத் துணிவிலேயே இப்படியான விளம்பரத்தை வெளியிட்டு விட்டு எதுவும் நடக்காதது போன்று அந்த வானொலியாலும் இருக்க முடிகிறது.

ஒரு அநீதியை எதிர்க்காதவர்களும் அதற்கு துணை போனவர்களாகவே கருதப்படுவார்கள் என்று சொல்வார்கள். இந்த விளம்பரம் ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு குற்றம். இதைக் கண்டித்தே ஆக வேண்டும்.

இங்கே ஓரினச் சேர்க்கை பற்றி சில விடயங்களை சொல்ல வேண்டும். ஓரினச்சேர்க்கை என்பது குற்றமோ, பாவமோ இல்லை. ஒரு காலத்தில் ஓரினச் சேர்க்கையை ஒரு உளவியல் பிரச்சனையாக வரையறுத்த அறிவியல் இன்றைக்கு அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டது.

எப்படி பல ஆண்களுக்கு பெண்கள் மீது நாட்டமோ அதே போன்று சில ஆண்களுக்கு ஆண்கள் மீது நாட்டம். எப்படி பல பெண்களுக்கு ஆண்கள் மீது நாட்டமோ அதே போன்று சில பெண்களுக்கு பெண்கள் மீது நாட்டம். இதைப் போன்றே இரு பாலிலும் நாட்டம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

வலது கையால் எழுதுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக இடது கையால் எழுதுபவர்கள் ஒன்றும் ஊனமானவர்களோ அசாதரணமானவர்களோ இல்லை. அதே போன்று எதிர்பாலின் மீது நாட்டம் கொள்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக தன்பால் மீது நாட்டம் உள்ளவர்களை அசாதரணமானவர்களாவும் குற்றவாளிகளாகவும் பார்ப்பது மிகத் தவறான ஒன்றாகும்.

எனக்கு ஒரு ஆணுடன் உறவு கொள்வது உவப்பற்றதாக இருக்கிறது. அவனுக்கு ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது உவப்பற்றதாக தெரிகிறது. ஆனால் என்னுடைய விருப்பத்தை அவன் புரிந்து கொள்வது போன்று, அவனுடைய விருப்பத்தை நானும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இதை வைத்து அவனை கிண்டல் செய்வதோ, அவனைப் போன்றவர்களை அவமதிப்பதோ மனிதகுலத்திற்கு விரோதமாக அமையும்.

இங்கே ஒரு சிறுபான்மைச் சமூகத்தை கிண்டல் செய்து அவமதிக்கின்ற விளம்பரத்தை வெளியிட்ட வானொலி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதே சரியானது. இந்த விளம்பரம் கனடாவின் பல ஊடகங்களில் கண்டனத்தை பெற்று வருகின்றது. இது ஏற்படுத்தப் போகின்ற தாக்கம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு பாதகமானதாகவே இருக்கும்.

இந்த விளம்பரத்தில் இன்னும் ஒரு அறியாமையும் வெளிப்பட்டு நிற்கிறது. விளம்பரத்தில் ஒரு வசனம். “நான் தமிழனடா, எங்களுக்கு ஒரு சமயம், கலாச்சாரம் என்று இருக்கிறது”, இப்படி ஒருவர் சொல்கிறார்.

அடே, நீ தமிழனாகவே இருடா! அது பிரச்சனை இல்லை. ஆனால் உனக்கு எங்கேயடா கலாச்சாரம் இருக்கிறது? எங்கேயடா சமயம் இருக்கிறது? சொல்லடா மடையா!

இது என்னுடைய மிகப் பணிவான பண்பான கேள்விகள். பணிவும் பண்பும் இல்லையென்றால் இதிலே வேறு சொற்கள் இருந்திருக்கக் கூடும்.

வட இந்தியன் போன்று ஆடைகள் உடுத்தி, ஆரிய விழாக்களை கொண்டாடி, ஆரிய மொழியில் நிகழ்வுகளை செய்கின்ற உனக்கு எங்கேயடா கலாச்சாரம் இருக்கிறது? உடல் உறுப்புகள் எந்தப் பாகத்தில் சேர்கின்றன என்பதற்குள்ளே அடங்கிவிடக்கூடிய ஒன்றா உன்னுடைய கலாச்சாரம்?

அட, கலாச்சாரத்தை விடுங்கள். சமயத்தை கொண்டு வந்தான் பாருங்கள், புல்லரித்து விட்டது.

சமயம் என்ன சொல்கிறது?

தேர்தலிலே போட்டியிட்ட ரெப் பேட்டும் ஜோர்ஜ் ஸ்மிர்தனும் சாந்திருக்கின்ற கிறிஸ்தவ சமயமே ஓரினச் சேர்க்கையை தடை செய்கிறது. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதை பாவம் என்று சொல்கிறது. அதற்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற கன்னியாஸ்திரிகள், பாதிரிமார்கள் இல்லையா என்று இங்கே முட்டாள்தனமாக கேட்க வேண்டாம். இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய மதம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் இங்கே சொல்லப்படுகின்ற விடயம்.

ஆனால் இந்த விளம்பரத்தை வெளியிட்டவர்கள் பின்பற்றுகின்ற சமயம் ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்கிறது என்பதுதான் இங்கே முரண்நகையாக நிற்கிறது.

இந்து மதத்தின் வேதங்கள் ஓரினச் சேர்க்கை பற்றி பேசுகின்றன. புராணங்கள் ஆண் கடவுள்கள் உறவு கொண்ட கதைகளை சொல்கின்றன. எங்குமே இந்த ஓரினச் சேர்க்கைய கண்டித்தோ, அதைப் பாவம் என்றோ சொல்லப்படவில்லை.

சிவனும் விஸ்ணுவும் உறவு கொண்டு ஐயப்பனைப் பெற்றார்களாம். நாரதரும் விஸ்ணுவும் உறவு கொண்டு அறுபது குழுந்தைகளை பெற்றெடுத்தார்களாம். எத்தனையோ கோயில்களில் உள்ள சிற்பங்கள் ஓரினச் சேர்க்கையை சொல்லி நிற்கின்றன.

சைவ சமயத்திலும் மாணிக்கவாசகர் தன்னை பெண்ணாகப் பாவித்து சிவனை தன்னுடைய காதலனாக கற்பனை செய்து பல பாடல்கள் எழுதியிருக்கிறார். இவற்றை சிற்றின்பமாக பார்க்காமல் பேரின்பமாக பார்க்கச் சொல்லி சிலர் சமாளித்துக் கொண்டு திரிகிறார்கள்.

ஆனால் ஓரினச் சேர்க்கை தமிழ் சமூகத்தில் புரிந்து கொள்ளப்படுகின்ற காலத்தில் மாணிக்கவாசகரின் பாடல்கள் புதிய அர்த்தங்கள் பெற்று நிற்பதை யாராலும் தடுக்க முடியாது போகும்.

இந்து சமயம் ஓரினச் சேர்க்கையை பாவமாகவோ குற்றமாகவோ பார்க்கவில்லை என்பதை புரிந்து கொள்ளாதவர்களே இந்த விளம்பரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் குறிப்பிட்ட விளம்பரம் முட்டாள்தனத்தின் உச்சக் கட்டமாகத்தான் நிற்கிறது. தமிழர்களை முட்டாள்களாகவும் மனிதகுல விரோதிகளாகவும் சித்தரிக்கின்ற விளம்பரங்களை வெளியிடாது கவனித்துக் கொள்கின்ற கடப்பாடு ஊடகங்களுக்கு உண்டு.

ஒரு இனத்தின் ஊடகங்களே அந்த இனத்தை பிரதிபலிக்கின்ற கண்ணாடிகள் என்பதை ஊடகங்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

- வி.சபேசன் B.A.Pol.Sci

http://www.webeelam.net/archives/429

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான ஆள் ஏல்லோரும் கையை தூக்கவும்.

இப்படியாவது 1 ஆணுக்கு 10 பெண் என்ற நிலைவரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் படைப்பின் அருமருந்து இந்த ஆண் பெண் உறவு. அதை விட்டுவிட்டு....

வேறு எதற்கோ பயன்படுத்தவேண்டியவற்றை இதற்காக பயன்படுத்துவதனால் ஏற்படும் பலாபலன்களான புதுவித வியாதிகளையும் தொற்று நோய்களையும் நாம் இன்று அனுபவிக்கின்றோம்.

இன்று பலர் நாய் உட்பட சில பிராணிகளையும் இதற்காக வளர்க்கின்றனர். அதன் தொடர்ச்சியாக அவர்களும் தம்மை அனுமதிக்கும் படி விரைவில் போராடக்கூடும். அதையும் நாம் அனுமதிப்போமாக.................

அர்ஜீனின் கருத்தை நான் வரவேற்கின்றேன். உண்மையைச்சொன்னதற்காக.

அதிலும் நான் வேறுபடுகின்றேன். எனது பார்வை என் சுயநலம் சார்ந்ததல்ல. எதிர்கால எமது சமுதாய நலன் சார்ந்தது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பலர் நாய் உட்பட சில பிராணிகளையும் இதற்காக வளர்க்கின்றனர். அதன் தொடர்ச்சியாக அவர்களும் தம்மை அனுமதிக்கும் படி விரைவில் போராடக்கூடும். அதையும் நாம் அனுமதிப்போமாக.................

அட.. இதை நான் சிந்திக்கவில்லை..! :unsure: போகிற போக்கில் நாய்க்கும் மனிதனுக்கும் கூட சட்டரீதியாகத் திருமணம் நடக்குமா? :blink:

விசுகு அண்ணனின் இயற்கை குறித்த கருத்து கவனிக்கத்தக்கது. விலங்குகளில் ஓரினச் சேர்க்கை இருக்கிறதா? உயிரினங்களின் இருப்பின் அடிநாதமே தமது மூலத்தை அடுத்த சந்ததிக்குக் கடத்துவது. :rolleyes: ஓரினச் சேர்க்கையென்பது இதை முற்றிலும் நிராகரிப்பதாக இருக்கிறது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பாலுறவு பற்றி முழுமையான ஒரு அறிவை எங்கள் சமுகம் பெற வேனும்.அதுக்கு பின் தான் மற்றதுகளைப்பற்றி சிந்திக்க முடியும்.இப்பவும் முதல் உறவுக்கு முன்பே பிறக்கும் பிள்ளையை டாக்குத்தருக்கு படிப்பிக்காலாமோ டொட்டருக்கு படிப்பிக்கலாமோ என்டும் பெண் பிள்ளை பிறந்தால் எப்படி சீதனம் சேர்க்கலாம் என்டு கதைப்பதை விட்டு கொஞ்சமாவது பாலுறவை அனுபவிக்க கற்றுக்கொள்ள வேனும். :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அட.. இதை நான் சிந்திக்கவில்லை..! :unsure: போகிற போக்கில் நாய்க்கும் மனிதனுக்கும் கூட சட்டரீதியாகத் திருமணம் நடக்குமா? :blink:

விசுகு அண்ணனின் இயற்கை குறித்த கருத்து கவனிக்கத்தக்கது. விலங்குகளில் ஓரினச் சேர்க்கை இருக்கிறதா? உயிரினங்களின் இருப்பின் அடிநாதமே தமது மூலத்தை அடுத்த சந்ததிக்குக் கடத்துவது. :rolleyes: ஓரினச் சேர்க்கையென்பது இதை முற்றிலும் நிராகரிப்பதாக இருக்கிறது. :wub:

நன்றி இசை தங்களது கருத்துக்கு

இது பற்றி நாம் அதிகம்பேசமுடியும். எனக்கு இதில் எந்த தர்ம சங்கடங்களுமில்லை. முடிவு சுபமாக இருக்கணும். அதுதான் முக்கியம்.

ஒரு பாலுறவு நடக்கவில்லை என்றோ அது கதைக்கப்படமுடியாத விடயம் என்றோ சொல்லவரவில்லை.

ஆனால் பாலைவனத்தில் மாட்டிய ஒருவன் அல்லது ஒருத்தி அங்கு கிடைக்கும் உணவை உண்டு உயிரைக்காப்பாற்றி வெளியில் வந்த பின்பும் அதே உணவு தான் தேவை என அடம்பிடிப்பது எவ்வளவு முட்டாள்தனம். அதுபோலவே இதுவும்.

கொஞ்சமாவது பாலுறவை அனுபவிக்க கற்றுக்கொள்ள வேனும். :unsure::rolleyes:

இந்த வரிகளின் உள்ளடக்கம் எனக்கு புரியவில்லை. அல்லது ஆபத்தானது போல் தெரிகிறது.

விளக்கம் தரநேரமிருக்குமா சஜீவன்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வரிகளின் உள்ளடக்கம் எனக்கு புரியவில்லை. அல்லது ஆபத்தானது போல் தெரிகிறது.

விளக்கம் தரநேரமிருக்குமா சஜீவன்.

எங்கட ஆக்களில் பெரும்பான்மையானவர்கள் இப்பவும் பாலுறவு(வளமையான) சம்பந்தமான தெளிவின்மையில் தான் இருக்கிறார்கள் என்பது சிலருடன் உரையாடும் போது அறியக்கூடியதாக உள்ளது.கணவன் மனைவி கூட இது பற்றி கலந்துரையாடுவதில்லை.ஒரு கறி வைத்தாலே அதுக்கு உப்பு கானுமோ அவிந்தது கானுமோ என்டு கதைக்கிறோம் தானே.சாதாரன கறிக்கே இப்படி என்டால் வாள்க்கையின் முக்கிய விசயத்தில எவளவு கவனம் செலுத்த வேனும்.அதைத்தான் சொல்ல வந்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.