Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி

Featured Replies

சென்னை: மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி - திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு இணக்கமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசை கடுமையாகச் சாடி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள்.

இந்த நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்ற வந்ததும், 90 இடங்கள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, 8 மந்திரிகள் என நிபந்தனைகளை அடுக்கினர்.

இறுதியில் திமுக 60 இடங்கள் தருவதாகக் கூறியும் காங்கிரஸ் இணங்கவில்லை. 63 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் காட்டியது. இன்று கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகக் கூறிச் சென்ற மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் வரவில்லை.

எனவே திமுக தனது உயர்நிலை செயற்குழு கூட்டத்தைக் கூட்டியது. இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர் முக அழகிரி, துணை முதல்வர் முக ஸ்டாலின் உள்பட நிர்வாகிகள் கூடி கூட்டணி நெருக்கடி குறித்து விவாதித்தனர்.

இறுதியில், திமுக கூட்டணியில் இடம்பெற காங்கிரஸ் கட்சி விரும்பாததால், மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இனி பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள் ராஜினாமா..

இந்த முடிவைத் தொடர்ந்து, மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் உடனடியாகப் பதவி விலகுகிறார்கள்.

திமுகவின் இந்த அதிரடி முடிவு காங்கிரஸ் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/03/05/dmk-withdraws-its-support-congress-aid0136.html

இது இவர்கள் இணைந்து நடத்தும் நாடகமா? இல்லை உண்மையாகவே பிளவு ஏற்பட்டதா?, விரைவில் தெரிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையாயின் நல்ல செய்தி. என்றாலும் இந்த சுத்துமாத்து தி.மு.கா

வை நம்பவே முடியாது. :lol:

Edited by nunavilan

விலக வேண்டிய தேவைகள் ஆயிரம் வந்தபோதும் விலகாமல் சீற் பிரச்சனையில் விலகியிருக்கின்றார்கள்

.அ.தி.மு க-விஜயகாந்த் கூட்டு.

கேட்டால் ஆயிரம் விளக்கம் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Saturday, March 5th, 2011 | Posted by thaynilam

மத்திய அரசில் இருந்து தி.மு.க விலகல்! தமிழகத்தில் பரபரப்பு

மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக திமுக அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று 60 தொகுதிகளை ஒதுக்க திமுக முன் வந்தது. இருப்பினும் காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்பதுடன், சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

இந்த நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

திமுக பொதுச்செயலளார் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தயாநிதி மாறன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட மத்திய மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2011ஆம் ஆண்டில் ஏப்ல் திங்கள் 13ஆம் நாள் நடைபெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு திமுக – காங்கிரஸ் கட்சியும் நடத்திய தேர்தல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண முடியாமைக்கும் – கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை 60 இடங்கள் என்று கேட்டு, கழகமும் அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு – தற்போது 63 இடங்கள் வேண்டுமென்பதும், அந்த இடங்களையும் அவர்களே நிர்ணயிப்பார்கள் என்பதும் வேண்டுமென்றே இந்த அணியில் தொடர அவர்கள் விரும்பவில்லை அல்லது நம்மை அவர்கள் விரும்பவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுவதாக திமுக உணருவதால் – இத்தகைய சூழ்நிலையில் மத்தியிலே ஆட்சியிலே திமுக தொடர வேண்டுமா என்பதை எண்ணிப் பார்த்து – மத்திய அரசிலே ஆட்சிப் பொறுப்பிலே இடம் பெற விரும்பாமல் கழகம் தன்னை விடுவித்துக் கொண்டு, மத்திய அரசுக்கு பிரச்சினையின் அடிப்படையில் மட்டும் ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவினை எடுக்கலாமென இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானிக்கிறது. இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=3472

  • கருத்துக்கள உறவுகள்

:) அர்ஜுன்,

உங்கள் கருத்துக்களுடன் நான் ஒருபோதுமே ஒத்துப்போனது கிடையாது. இனியும் அப்படித்தான். ஆனால் இந்தக் கருத்து மட்டும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசில் இருந்து விலகிவிட்டோம்.. இனி எங்களுக்கு வாக்களியுங்கள் என ஈழ ஆதரவு அலையில் கைவைக்கும் திட்டம் போல் தெரிகிறது..! :rolleyes::blink:

திமுக கூட்டணியில் பிரச்சினைகள் உருவாக காங்கிரஸே காரணமாக அமைந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும் இதுவரையில் நடைபெற்ற எந்தவொரு தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையிலும் இப்படியொரு நிலையை நானோ அல்லது திமுக தலைமையோ இதுவரை சந்தித்ததில்லை. இந்த பின்னணியில்தான் மத்திய ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவது என்ற முடிவு எடுக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும், அதற்கான காரணம் குறித்து விரிவாக விளக்கி முதல்வர் கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கை:

கொள்கை அடிப்படையில் செயல்படுகிறது திமுக

இந்திய திருநாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, மதச்சார்பற்ற தன்மை இவற்றைக் கட்டிக் காக்கும் வகையில் செயல்பட்டு வருகின்ற திராவிட முன்னேறக் கழகம், தான் மேற்கொண்டுள்ள இந்தக் கொள்கைகளின் அடிப்படையில்தான் எந்தவொரு கட்சியுடனும் அணி சேர்ந்து பாடுபட்டு பணியாற்றி வருகிறது.

இந்த நிலைபாட்டிலிருந்து இம்மியும் மாறாமல்தான் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடனும், மற்ற தோழமைக் கட்சிகளுடனும் நல்லுறவு கொண்டு நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் நற்பணியாற்றி வருவதோடு - ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தல்களிலும் அணி சேர்ந்து போட்டியிடும் கட்சிகளில் ஒன்றாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கி வருவது நாடறிந்த உண்மையாகும்.

புதுப் பிரச்சினைகளை உருவாக்கிய காங்.

அந்த வகையில், 2011 ஏப்ரல் திங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் புதுவிதமான சில பிரச்சனைகள் உருவாக்கப்பட காங்கிரஸ் கட்சி காரணமாகியது என்பதுதான் திமுகவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வழிகாட்டியுமான தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி அவர்களை ஒவ்வொரு தேர்தலின் போதும் நான் சந்தித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதைப் போல இந்தச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டும், என் உடல் நிலையைக் கூடப் பொருள்படுத்தாமல் டெல்லிக்கே சென்று இரண்டு நாள் தங்கியிருந்து சந்தித்து உரையாடியபோது அவர்கள் விரும்பியவாறு முதலில் திமுக காங்கிரஸ் பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானித்தது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த வருவதற்கு கால தாமதம் ஆகிய நிலையில் திமுக, பாமக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியது. மற்ற கட்சிகளுடன் கலந்து பேசி அதுவரையில் இறுதி முடிவாக எத்தனை தொகுதிகள் - எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி தீர்மானிக்காமல் இருந்து அதன் பிறகே சென்னையிலே 20.02.2011 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்தவிதமான முடிவும் எய்த பெறாத நிலையில் இறுதி முடிவெடுக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் அவர்கள் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

அவர் முன்னிலையில் நான் இருந்து நடத்திய பேச்சுவார்த்தையின்போது 57 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதென ஒப்புதல் கொடுத்தோம். அதுபற்றி டெல்லி சென்று மேலிடத்தைக் கலந்து கொண்டு உடனடியாக அறிவிப்பதாக குலாம் நபி ஆசாத் கூறிவிட்டுச் சென்றார்.

டெல்லிக்குப் போய் 60 கேட்ட ஆசாத்:

பின்னர் டெல்லியில் இருந்து பேசிய குலாம் நபி ஆசாத் அவர்கள் 60 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்றும், அப்போதுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியுமென்றும் அறிவித்ததைத் தொடர்ந்து - கழகத்தின் சார்பில் 60 தொகுதிகள் அளிக்கவும் ஒப்புக்கொண்டு, சென்னைக்கு வந்து கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்யலாம் என்று நான் கேட்டுக் கொண்டேன்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருவார்கள் என்று எண்ணியிருந்த நிலையில், அங்கிருந்து தொலைபேசியில் 60 இடங்கள் போதாது, 63 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டுமென்றும் - அந்தத் தொகுதிகளும் அவர்களால்தான் நிர்ணயம் செய்யப்படும் என்றும், எத்தனை இடங்கள் என்று ஒப்பந்தம் செய்யும்போதே, எந்தெந்த தொகுதிகள் என்பதும் குறிப்பிட வேண்டுமென்றும் நிபந்தனைகள் கூறப்பட்டது.

இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை:

சட்டமன்றத் தேர்தல் ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும் இதுவரையில் நடைபெற்ற எந்தவொரு தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையிலும் இப்படியொரு நிலையை நானோ அல்லது திமுக தலைமையோ சந்தித்ததில்லை. இதைக் காணும்பொழுது, முதலில் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 48இல் தொடங்கி, 51 என்றாகி, 55 என்றாகி, 57 என்றாகி, இறுதியில் 60 தொகுதிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்புதல் அளித்து - அதன் பிறகு இதுபோன்று நிபந்தனைகள் - 63 தொகுதிகள் வேண்டும் என்பதும் - அந்தத் தொகுதிகளின் பெயர்களை பரஸ்பரம் இரண்டு கட்சிகளும் கலந்து பேசி முடிவு செய்யாமல், அவர்கள் நிச்சயிப்பதையே ஒதுக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தது, அதிர்ச்சி தரக் கூடியவைகளாக அமைந்திருப்பதைக் கண்டு தான் - இதை நானோ, பேராசிரியரோ மாத்திரம் முடிவெடுத்து அறிவிப்பதாக இருத்தல் ஆகாதென கருதி, கழகத்தின் உயர்நிலை செயல் திடடக் குழுவில் விவாதித்து முடிவெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் உடன்பாட்டிற்காக தொடக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளையும், உருவாக்கப்பட்ட பிரச்சனைகளையும் எண்ணிப் பார்க்கும்போது, இரு கட்சிகளின் முன்னணி செயல் வீரர்களும், தொண்டர்களும் மன வேறுபாடின்றி நேச மனப்பான்மையோடு பணியாற்றும் நிலைக்கு, குந்தகம் ஏற்படுத்தி, தேர்தல் முடிவைப் பாதிப்பதற்கு இதுபோன்ற பிரச்சனைகள், செயல்பாடுகள், இழுத்தடிப்புகள் காரணமாகி விடக் கூடும் என்பதற்காக மட்டுமல்லாமல் - காங்கிரஸ் கட்சியின் இந்தப் போக்கு தேர்தல் உடன்பாட்டை சுமூகமாகச் செய்துகொள்ள வேண்டுமென்பதற்குப் பதிலாக இதையே சாக்காக வைத்து கழகத்தை அணியில் இருந்தே அகன்று விடச் செய்வதற்கான காரியமோ என்று ஐயுற வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

எனவே இந்த உயர்நிலை செயல் திட்டக் குழுவில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு நாம் உள்ளாகியிருக்கிறோம் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் எங்களை விரும்பவில்லை:

2011ஆம் ஆண்டில் ஏப்ல் திங்கள் 13ஆம் நாள் நடைபெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு திமுக - காங்கிரஸ் கட்சியும் நடத்திய தேர்தல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண முடியாமைக்கும் - கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை 60 இடங்கள் என்று கேட்டு, கழகமும் அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு -

தற்போது 63 இடங்கள் வேண்டுமென்பதும், அந்த இடங்களையும் அவர்களே நிர்ணயிப்பார்கள் என்பதும் வேண்டுமென்றே இந்த அணியில் தொடர அவர்கள் விரும்பவில்லை அல்லது நம்மை அவர்கள் விரும்பவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுவதாக திமுக உணருவதால் - இத்தகைய சூழ்நிலையில் மத்தியிலே ஆட்சியிலே திமுக தொடர வேண்டுமா என்பதை எண்ணிப் பார்த்து - மத்திய அரசிலே ஆட்சிப் பொறுப்பிலே இடம் பெற விரும்பாமல் கழகம் தன்னை விடுவித்துக் கொண்டு, மத்திய அரசுக்கு பிரச்சினையின் அடிப்படையில் மட்டும் ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவினை எடுக்கலாமென இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானிக்கிறது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2011/03/06/dmk-never-faced-such-situation-karunanidhi-aid0091.html

தி.மு.க. அமைச்சர்கள் நாளை விலகல் - டி.ஆர்.பாலு

http://www.inneram.com/2011030614111/dmk-ministers-to-give-resignation-letters-on-monday

என்னதான் செய்யப் போகிறது காங்கிரஸ்?

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தனித்துப் போட்டியிடுவதன் மூலம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. தமிழகத்திலும் தனியாகப் போட்டியிட்டால், ஒருவேளை எதிர்பாராத விதமாகக் தி.மு.க., அ.தி.மு.க. அணிகளுக்கு அதிர்ச்சிகளை காங்கிரஸ் ஏற்படுத்தக்கூடும் என்பதும் காங்கிரஸின் எதிர்பார்ப்பு.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இந்த தைரியம்தான் காங்கிரஸ் தலைமையையும், அதிக இடங்களைக் கேட்கத் தூண்டியிருக்கும் என்று கருத வாய்ப்பிருக்கிறது.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=386304&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D

கண்துடைப்பு அரசியல் நாடகம்! பார்க்கத்தானே போர்கிறோம்!! :rolleyes:

திமுக-காங்கிரஸ் விரிசலுக்கு தொகுதிப் பங்கீடு காரணமல்ல: பழ.நெடுமாறன்

திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ள விரிசலுக்கு தொகுதிப் பங்கீடு காரணமல்ல என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து விலகி, வெளியிலிருந்து பிரச்னை அடிப்படையில் ஆதரவு தரப்போவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு 63 தொகுதிகளை அதுவும் தாங்கள் விரும்பும் தொகுதிகளை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் நிர்பந்தித்ததின் விளைவே இது என அவர் கூறியிருப்பது நம்பத்தகுந்ததாக இல்லை. 60 தொகுதிகளை விட்டுத்தர முன்வந்தவர் மேலும் 3 தொகுதிகளைத் தருவது பெரிதல்ல.

ஏற்கனவே 1980-ம் ஆண்டில் காங்கிரசுக்கு 112 தொகுதிகளை வாரித் தந்தவர் கருணாநிதியே. எனவே, தி.மு.க – காங்கிரஸ் உறவு கசந்ததற்குத் தொகுதிப் பிரச்னை காரணமாக இருக்க முடியாது. மக்களை ஏமாற்றவும் திசை திருப்பவும் இந்த நாடகம் ஆடப்படுகிறது.

சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலை தி.மு.கவைச் சேர்ந்த ராசா செய்ததன் மூலம் காங்கிரசும் கூட்டணிக் கட்சிகளும், பெரும் தலைக்குனிவிற்கு ஆளானதோடு, எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றம் முடக்கப்படும் அவலத்தையும் சந்திக்க நேர்ந்தது.

காங்கிரஸே நினைத்தாலும் இந்த ஊழலில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற இயலாத வகையில் உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் மத்திய புலனாய்வுத் துறை செயல்படுகின்றது. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரின் தலைக்கு மேல்தொங்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் கத்தியிலிருந்து தப்புவதற்கு கருணாநிதி கையாளும் மிரட்டல் தந்திரமே இது.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தி.மு.க.வைப் பொறுப்பாளியாக்கி, தான் தப்ப காங்கிரஸ் நினைக்கிறது. ஈழத் தமிழர் படுகொலையினால் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் காங்கிரஸுடன் கொண்டுள்ள உறவைத் துண்டிப்பதன் மூலம் தான் கரையேறலாம் என தி.மு.க கருதுகிறது. இரண்டு கட்சிகளுமே ஒன்றையொன்று சுமையாகக் கருதுகின்றன.

1996 சட்டமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.கவுடன் காங்கிரஸ் கூட்டுச்சேர்ந்த போது காங்கிரஸை பிளவுபடுத்தி, தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கி தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் கருணாநிதி. கட்சிகளைப் பிளவுபடுத்தும் கலையில் வல்லவரான அவர் இப்போதும் அதைச் செய்வார். ஆனால் இம்முறை மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். அவர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=59721

அதிமுகவுடன் கூட்டணி அல்லது தனித்துப் போட்டி-சோனியா

திமுகவுடன் சமரசத்திற்கு வாய்ப்புண்டா என்ற பரிசீலனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார். அதேசமயம், திமுகவுடன் உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்துப் போட்டியிடுவதா அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாமா என்பது குறித்தும் அவர் பரிசீலித்து வருகிறார்.

திமுக தனது நிலையை தெளிவுபடுத்தி விட்டது. அத்தோடு நில்லாமல் நாளை தனது அமைச்சர்களை ராஜினாமா கடிதங்களை ஒப்படைக்கச் சொல்லி விட்டது. மேலும், தனது தேர்தல் தொடர்பான பணிகளிலும் அது வழக்கம் போல ஈடுபடத் தொடங்கி விட்டது. இன்று பாமகவுடன், என்னெனன தொகுதிகளை ஒதுக்கலாம் என்ற ஆலோசனையையும் மேற்கொண்டுள்ளது.

மறுபக்கம் காங்கிரஸ் தரப்பு என்ன முடிவெடுப்பது என்பதில் தீவிர ஆலோசனைகளில் இறங்கியுள்ளது. திமுகவின் அமைச்சர் பதவி விலகல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும், குலாம் நபி ஆசாத்தும் சந்தித்துப் பேசியுள்ளனர். மறுபக்கம் சோனியா காந்தி தன் முன்பு உள்ள வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸுக்கு 3 வாய்ப்புகள்:

காங்கிரஸ் முன்பு தற்போது 3 வாய்ப்புகளே உள்ளன. அவை..

1. தனது நிலையை தளர்த்திக் கொண்டு திமுகவுடன் சமரசமாகப் போவது. திமுக தரும் தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு தேர்தலை சந்திப்பது.

2. தனித்துப் போட்டியிடுவது.

3. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது.

முதல் வாய்ப்பான சமரசம் என்பது மிகவும் தாமதமாகி விட்ட ஒன்றாகும். அப்படியே சமரசம் செய்து கொண்டு திமுக தரும் தொகுதிகளில் போட்டியிடுவது என்றாலும் கூட மனதளவில் கொந்தளித்துப் போயுள்ள திமுகவினர், காங்கிரஸுக்கு சாதகமாக நடந்து கொள்வார்களா என்பது பெரும் கேள்விக்குறியாகும். இயல்பான ஒத்துழைப்பு திமுகவினரிடமிருந்து கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியாது.

2வது வாய்ப்பான தனித்துப் போட்டியிடுவது என்பது கழுத்தில் கல்லைக் கட்டிக் கொண்டு கடலில் குதிப்பதற்குச் சமமானதாக கருதப்படுகிறது. காரணம், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை உலகம் அறிந்தது. திமுக, அதிமுக என்று மாறி மாறி ஓசி சவாரி செய்தே பழக்கப்பட்டு விட்டது காங்கிரஸ். மேலும், அக்கட்சியில் உள்ள கோஷ்டிப் பூசல் கின்னஸ் சாதனைக்கு அனுப்பத் தகுதி பெற்றது. இத்தனை கோஷ்டிகளை வைத்துக் கொண்டு தனித்துப் போட்டியிட்டால், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் தற்போது பாஜக இருக்கும் நிலையை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படலாம்.

3வது வாய்ப்பு, அதிமுகவுடன் சேருவது. இதிலும் பெரும் சிக்கல் உள்ளது. சோனியா காந்தியை ஜெயலலிதா திட்டித் தீர்த்ததை இன்னும் மறக்கவில்லை காங்கிரஸார். மேலும், தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகளைக் கொடுத்து விட்டார் ஜெயலலிதா. இன்னும் மதிமுக, இடதுசாரிகள் உள்ளன. மேலும், காங்கிரஸ் வருவதாக இருந்தால் முதல் ஆளாக மதிமுக, இடதுசாரிகள் கூட்டணியை விட்டு வெளியேறும். அதை ஜெயலலிதா விரும்புவார் என்பது உறுதியில்லை.

இப்படி எந்தப் பக்கம் போனாலும் எக்குத்தப்பாக இருப்பதால் காங்கிரஸ் கட்சி என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது பெரும் குழப்பமாக உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தன்னை சமரசம் செய்து கொண்டு, திமுகவுடனான மோதல் போக்கைக் கைவிட்டு விட்டு வெட்கம், மானம் பார்க்காமல் திமுகவுடன் அனுசரித்து நடந்து கொள்வது ஒன்றே அக்கட்சியை ஓரளவுக்கேனும் காப்பாற்ற உதவும் என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள்.

தேமுதிகவை அதிமுக கூட்டணியிலிருந்து பிரித்துக் கூட்டி வந்து அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்தும் காங்கிரஸ் தரப்பிலிருந்து யோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கூட்டணிப் பேரத்தை முடித்து விட்டு, சீட்களையும் பெற்று விட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறி, காங்கிரஸுடன் இணைந்தால், தேமுதிகவுக்கு வரலாறு காணாத கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் அந்த முடிவை விஜயகாந்த் எடுப்பாரா என்பது தெரியவில்லை.

இப்படி திக்குத் திசை தெரியாத நிலைக்கு காங்கிரஸைக் கொண்டு போய் வைத்து விட்டது கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம். இதிலிருந்து காங்கிரஸ் மீளும் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=59696

  • கருத்துக்கள உறவுகள்

(பழைய படம்)

01jaya1.jpg

காங்கிரஸ், அ.தி.மு.க.விடம் கூட்டணி வைக்க முயன்றாலும்.....

ஜெயலலிதாவுக்கும், சோனியாவுக்கும் யார் பெரிசு என்று.... எட்டாப் பொருத்தம்.

காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட்டு ..... காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

Edited by தமிழ் சிறி

கருணநிதியின் சாணாக்கியம் இதில் ஒன்றும் இல்லை.அவரே திக்கு திசை தெரியாமல் நிற்கின்றார்.

மூன்று முக்கியவிடயங்கள் விடயங்கள்.

1.தமிழ் நாட்டில் ஆட்சியைப்பிடிப்பது

2.மத்தியில் ஆட்சியுடன் கூட்டு (அமைச்சர் பதவிகள் பெற)

3.ஸ்பெக்கரம் ஊழலில் இருந்து தப்புவது

இதில் முதலாவதை விட அடுத்த இரண்டிற்கும் காங்கிரசின் உதவியே தேவை.

காங்கிரசின் நிலை அப்படி இல்லை.தமிழ்நாட்டில் அவர்கள் நிலை அவர்களுக்கே தெரியும்.தொடர்ந்து தி.மு.க வுடன் கூட்டு வைத்து இந்தியா முழுக்க ஊழல் கட்சியுடன் கூட்டுவைத்ததற்கு அவப்பெயர் எடுப்பது,ஒரு சீற் கூட் கிடைக்காவிட்டாலும் ராகுலின் எதிர்காலதிட்டப்படி காங்கிரசை தமிழ்நாட்டில் காலூன்ற(விஜெய்,விஜயகாந்த் போன்றவர்களை இணைத்து) முயற்சிப்பது,அல்லது அ.தி.மு.க வுடன் கூட்டு.

தி.மு.க, காங்கிரசுக்கு அடிபணிந்து கூட்டுவைப்பதற்கு தான் சாத்தியங்கள் அதிகம்.

(பழைய படம்)

01jaya1.jpg

காங்கிரஸ், அ.தி.மு.க.விடம் கூட்டணி வைக்க முயன்றாலும்.....

ஜெயலலிதாவுக்கும், சோனியாவுக்கும் யார் பெரிசு என்று.... எட்டாப் பொருத்தம்.

காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட்டு ..... காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

ஜெயா அம்மா இருக்கேக்க அங்கே போட்டிஎண்டதே கிடையாது சிறி :D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயா அம்மா இருக்கேக்க அங்கே போட்டிஎண்டதே கிடையாது சிறி :D:D

நீஙக் சொல்வது ரொம்ப சரி ஆனா இதுவரை இந்த தில்லாலங்கடி வேலையை இன்னும் பயன்படுத்தாம, இருப்பது ரொம்பதவறு .. தூரத்தில் ரொம்ப நாளா கைத்தட்டி கொண்டே இருக்கப்டாது....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=78631&st=0&p=626065

:wub:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி திக்குத் திசை தெரியாத நிலைக்கு காங்கிரஸைக் கொண்டு போய் வைத்து விட்டது கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம். இதிலிருந்து காங்கிரஸ் மீளும் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

கருணாநிதியின் சாணக்கியம் முள்ளிவாய்க்காலோடு தோற்றுப்போனது.

மகிந்த சொன்னதே சரி. அரசியல் கோமாளிகள் இவர்கள்.

பிரிவதேல்லாம் நாளை இன்னும் இறுக்கமாக பிணைவதுக்கே..... !

.

காங்கிரஸ் நடப்பு விடுவதும், திமுக விட்டுக்கொடுப்பதும் ஊழல் விவகாரம் இன்னும் இறுகப் போவதற்கான அறிகுறி. திமுக வின் பலர் இதில் சம்பந்தப் பட்டிருப்பதாக காங்கிரஸ் அறிந்திருக்கலாம்.

எப்படியோ "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. !! "

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி

அப்பப்ப புளிச்சல் ஏவறை வாறது கருணாநிதிக்கு நோமல் பிரச்சனை. :)

சேர்க்கிறதெல்லாம் சேர்த்தாச்சு....அமுக்குறதெல்லாம் அந்தமாதிரி அமுக்கியாச்சு.... :lol:

அதாவது.......

அத்திவாரம் பலம் பண்ணியில்பண்ணிப்பாரும் :D

காங். இல்லை, இப்போது வாருங்கள்-கம்யூ. கட்சிகளுக்கு திருமா அழைப்பு

காங்கிரஸ் இருந்ததால்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து விலகின. இப்போது காங்கிரஸ் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2011/03/06/return-dmk-fold-thirumavalavan-calls-aid0091.html

தி.மு.க. ‌அமை‌ச்ச‌ர்‌க‌ள் ரா‌ஜினாமா ‌திடீ‌ர் த‌ள்‌ளிவை‌ப்பு

பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை இ‌ன்று காலை ச‌ந்‌தி‌த்து ‌கொடு‌க்க இரு‌ந்த தி.மு.க. அம‌ை‌ச்ச‌ர்க‌‌‌ளி‌ன் ‌விலக‌ல் கடித‌ம் ‌திடீரென மாலை‌யி‌ல் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சில மா‌த‌ங்களு‌க்கு ‌மு‌ன்பு ஈழ‌‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை தொட‌ர்பாக ‌தி.மு.க. அமை‌ச்ச‌ர்‌க‌ள் ‌விலகுவதாக அ‌றி‌வி‌த்ததோடு ‌ச‌ரி. அத‌ன் ‌பி‌ன்ன‌ர் எதுவு‌ம் ந‌ட‌க்க‌வி‌‌ல்லை எ‌ன்பது எ‌ல்லோரு‌ம் அ‌றி‌‌ந்த ‌விடய‌ம் ஆகு‌ம். அதேபோ‌ல் தா‌ன் இதுவு‌ம் நட‌க்கு‌ம் எ‌ன்பது பலரது க‌ணி‌‌ப்பாக ‌உ‌ள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1103/07/1110307013_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.