Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிபியா மீது காட்டிய அவசரம் தமிழர் விடயத்தில் காட்டவில்லை- ஐ.நா.மீது குற்றச்சாட்டு

Featured Replies

இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின்கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா குற்றஞ்சாட்டினார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 16வது கூட்டத் தொடரில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதி சுகிந்தன் முருகையா, இளையோர் முன்னணி பொறுப்பாளர் ஜனர்தனன் புலேந்திரன்(சந்தோஸ்), இனப்படுகொலை-போர் குற்றங்களுக்கு எதிரான அமைச்சகத்தின் ஐநா மனித உரிமை சபைக்கான விவகாரங்களுக்கான பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்

22 மார்ச் 2011 - செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுநிலவரங்களுக்கான பிரிவில், தமிழர் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா ஆற்றிய உரையில், ஆயதப்போர்கள் இடம்பெறும் சுழல்களில், பெரும் இனப்படுகொலைகள் இடம்பெறும் வாய்ப்புக்கள் உள்ளது பற்றி, சர்வதேச சமூகம் விழிப்புடன் இருத்தல் வேண்டும் எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே, முன்னாள் ஐநா பொதுச்செயலாளர் கொபி அனன் ஆலோசனை கூறியிருந்த போதும், பல்வேறு ஆயதப் போர்ச்சூழல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலைமை, கவனிப்பாக கையாளப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இலங்கைத் தீவில் இடம்பெற்ற போரினை, அதற்கான உதாரணமாக முன்வைத்த சிறிசஜீதா சிவராஜா அவர்கள், தொடர்ந்து தனதுரையில், தமிழர் தாயகப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மையங்கள், தாக்கி அழிக்கப்பட்டு 100000 மேற்பட்ட மக்கள் போரின் இறுதி வாரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. 40000 மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐநா அதிகாரிகளே சொல்லியிருந்த போதும், ஐநா அமைதி காத்துள்ளது.

இன்று செயலாளர் நாயகத்தின் சிறப்புக் குழு போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கூறுகின்றது என்றும், நேரிடையான முறையில் ஐநாவின் அன்றைய செயலற்றதன்மையை தமிழ் பிரதிநிதி எடுத்துரைத்தார்.

இன்று தமிழ்மக்களின் நிலைமை போர்க்காலத்திலும் பார்க்க மோசமாகவுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய தமிழர் பிரதிநிதி, சிங்கள அரசு, உலகம் முழுவதும் பயணம் செய்து, புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்தினை குற்றஞ்சாட்டுவதிலும், அவர்களது சனநாயக நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதிலும், கவனம் செலுத்துகின்றது என்றும் நாடுகடந்த அரசு பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா சுட்டிக்காட்டினார்

உலகசமூகம், தமிழ்மக்களிற்கு உதவிடும் என நம்பிக்கையை வெளியிட்ட தமிழர் பிரதிநிதி, ஐநாவின் இனத்துவேசத்திற்கு எதிரான சிறப்புப்பிரதிநிதியும் சிறீலங்காவின் நடவடிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோளை விடுத்தார்.

இறுதியாக, உலக நாடுகள், புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடல்களை நிகழ்த்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கடந்தாண்டு 15வது மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது

... எங்களிடம் ... எண்ணெய் இருக்கிறதா????????? தங்கம் இருக்கிறதா?????? வெள்ளி இருக்கிறதா?????? ... இல்லவே இல்லை!!!!! ... அப்ப உந்த கேள்வியை கேட்பதை நிறுத்துவோம்!!! ... நாமும் உலகில் ஓர் மூலையில் உட்கார்ந்து கொண்டு, கனவுகளை கண்டு கொண்டு இருந்து விட்டோம்!!!!!! .... இனியாவது கனவுலகில் இருந்து வெளி வருவோமா???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரேல் நாட்டில் என்ன இருக்கிறது? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் நாட்டில் என்ன இருக்கிறது? :blink:

மூளை இருக்கிறது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மூளை இருக்கிறது..! :lol:

எங்களிட்டையும், மூளை இருக்குத் தானே.... :D

எங்களிட்டையும், மூளை இருக்குத் தானே.... :D

:D :D :D

Edited by கிளியவன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிட்டையும், மூளை இருக்குத் தானே.... :D

எங்களிட்டை இருந்த மூளைக்கு

புட்டுக் குழல் , விசிறி , இடியப்ப தட்டு இவைகளை தான் கண்டு பிடிக்க முடிஞ்சது :wub::( ..அவங்ட மூளைக்கு என்னவோ எல்லாம் <_<:rolleyes:

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூளை இருக்கிறது..! :lol:

மூளையத்தவிர வேறொன்றும் அவர்களிடம் இல்லை ......அப்படித்தானே? :D

எங்களிட்டை இருந்த மூளைக்கு

புட்டுக் குழல் , விசிறி , இடியப்ப தட்டு இவைகளை தான் கண்டு பிடிக்க முடிஞ்சது :wub::( ..அவங்ட மூளைக்கு என்னவோ எல்லாம் <_<:rolleyes:

எமது மக்களிடமும் மூளை உள்ளது. ஆனால் முயற்சியும் இலக்குகளும் இல்லை. பொருளாதார நெருக்கடிகள் மற்றும் போரவலங்கள் மத்தியிலே விடுதலைப்புலிகள் எத்தனையோ அரிய கண்டுபிடிப்புக்களை செய்திருக்கின்றார்கள் என்பது மறப்பதற்கல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களிட்டை இருந்த மூளைக்கு

புட்டுக் குழல் , விசிறி , இடியப்ப தட்டு இவைகளை தான் கண்டு பிடிக்க முடிஞ்சது :wub::( ..அவங்ட மூளைக்கு என்னவோ எல்லாம் <_<:rolleyes:

இரத்தக்கண்ணீர் எம்,ஆர்.ராதாமாதிரி எங்களை நாங்களே மட்டம்தட்டிக்கொண்டு காலத்தை போக்காட்டுவம்.

புட்டுக்குழல்,விசிறி,இடியப்பத்தட்டு இவைகளை கழிவுகளாக வீசும்போது சுற்றாடல் சூழலுக்கு மாசுகளை ஏற்படுத்தமாட்டாது.

இந்த உபகரணங்களை வைத்து தயாரிக்கப்படும் உணவுவகைகளால்......மனிதனுக்கு விக்கனங்கள் ஏற்பட்டதாக சரித்திரமும் இல்லை.

இன்றைய காலத்தில் மனிதன் உபயோகப்படுத்தும் பிளாஸ்ரிக் பொருட்களால் உலகம் அவதிப்படுவதை பாருங்கள்?

இன்று மனிதன் உட்கொள்ளும் உணவினாலேயே நோய் நொடிகள் வந்து அவதிப்படுவதை பாருங்கள்?

பழமை பட்டிக்காடு அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

மூளை இருக்கிறது..! :lol:

எமது மக்களிடமும் மூளை உள்ளது. ஆனால் முயற்சியும் இலக்குகளும் இல்லை. பொருளாதார நெருக்கடிகள் மற்றும் போரவலங்கள் மத்தியிலே விடுதலைப்புலிகள் எத்தனையோ அரிய கண்டுபிடிப்புக்களை செய்திருக்கின்றார்கள் என்பது மறப்பதற்கல்ல.

தமிழரின் பலம் பலவீனம் அறிந்தே எமது போராட்டம் கவிழ்க்கப்பட்டது.

எமது பலமே எமக்கு எதிரியானது என்பதுதான் உண்மை. எவ்வளவோ கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார தடைகளுக்குள் ஒரு உண்மையான ஊழலற்ற எதிரியே மெச்சும் நாட்டை தமிழன் உணர்த்தி நின்றான்.

அவை எம்மைவிட்டு விலகும்போது மீண்டும் தமிழன் அதை உணர்த்துவான். அதுவரை எமது கல்வி பொருளாதார வளங்களை நாம் வளர்த்துக்கொள்வோம்.

Edited by விசுகு

இஸ்ரேல் நாட்டில் என்ன இருக்கிறது? :blink:

பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் பூர்வீக நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட யூத மக்களை, அரேபிய நாடுகளின் குழுமத்துக்குள் தங்களுக்கு சார்பான ஒரு நாடு வேண்டுமென்றே இஸ்ரவேலை நிறுவி மேற்குலம் அங்கீகரித்தது.

மேற்குலகின் தேவைகளும் யூதர்களின் அபிலாசைகளும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொண்டதின் விளைவு அது. இன்று மேற்குல உயர்மட்ட நிர்வாகத்திலும் அதிகளவில் ஊடுருவி விட்டார்கள். 60 , 70 களில் இஸ்ரவேல் நடத்திய போரை, மேற்குலத்தினை ஏவி நடத்துகிறார்கள். (லிபிய போரும் இதற்குள் அடக்கம்).

யூதர்களுக்கு தங்கள் இனத்தின் மேல் பாசம் அதிகம். ஒருவரை ஒருவர் கொல்வதில்லை. சந்தர்ப்பங்களை தங்கள் இனத்திற்கு சாதகமாகப் பாவிப்பார்கள். கற்ற அறிவை ஞானமாக்கி வாழ்க்கை முறைக்கு பயன்படுத்துவதில் வல்லவர்கள்.

மற்றும்படி சரணடைந்த போராளிகளின் மறு வாழ்வுக்கு நாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதை நினைத்துப் பார்த்து, எங்களை யூதர்களுடன் ஒப்பிட்டு, யூத இனத்தை கேவலப்படுத் தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடம் எல்லாம் இருக்கிறது.ஆனால் ஒற்றுமையில்லையே.யூதர்கள்2000 ஆண்டுகளுக்கு மேலாக நாடிழந்து அகதிகளாகி நாட்டை அமைக்க 2000 வருடம் சென்றது.தமிழன் அரசிழந்து 500 வரடங்களே ஆகின்றன.இப்பொழுதே நாட்டை மீட்பதற்காக பேராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.ஒரு நாள் வெல்லுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களிடம் எல்லாம் இருக்கிறது.ஆனால் ஒற்றுமையில்லையே.யூதர்கள்2000 ஆண்டுகளுக்கு மேலாக நாடிழந்து அகதிகளாகி நாட்டை அமைக்க 2000 வருடம் சென்றது.தமிழன் அரசிழந்து 500 வரடங்களே ஆகின்றன.இப்பொழுதே நாட்டை மீட்பதற்காக பேராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.ஒரு நாள் வெல்லுவோம்.

பல நூறு வருடங்களுக்குமுன் வட இந்தியர்கள் புலம் பெயர்ந்து...இன்று சிகோயினாராகவும்,ரோமாவாகவும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்கிறார்கள்.அவர்களுக்கும் விடிவில்லை :D

எமக்கும் யூதருக்கும் "உழைக்கவேண்டும்" "பணம் சம்பாதிக்க வேண்டும்" என்ற முயற்சி கூடுதலாக உள்ளது. யூதர்களுக்கு தங்கள் ஆட்களை தூக்கி மேலே உயர்த்தும் பண்பு கூடுதலாக உள்ளது. நாமும் கோடீஸ்வரர்களை உருவாக்க உதவ வேண்டும், தாயகத்திலும் புலத்திலும்.

இஸ்ரேல் இவ்வாறான திட்டங்கள் மூலம் உலகளாவிய புலம்பெயர் மக்களிடம் ஆழமான உறவை வைத்துள்ளது : http://www.israelbonds.com/

தமிழர்களும் ஒரு உலக வங்கியை உருவாக்க வேண்டும். அதன் மூலம் தமது சேமிப்பை, அடையாளத்தை, தாயக உறவை, எமது அபிவிரித்திக்கு உதவவேண்டும். எங்கு, எவனிடம் பணம் உள்ளதோ அவனுக்கு உலகில் மரியாதையும் அதன் ஊடாக அரசியல் பலமும் கிடைக்கும்.

"யூத இனத்துக்கு அடுத்து உலகெங்கிலும் பரவியது தமிழினமே" : http://www.yarl.com/forum3/index.php?showtopic=80556&st=0

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கும் யூதருக்கும் "உழைக்கவேண்டும்" "பணம் சம்பாதிக்க வேண்டும்" என்ற முயற்சி கூடுதலாக உள்ளது. யூதர்களுக்கு தங்கள் ஆட்களை தூக்கி மேலே உயர்த்தும் பண்பு கூடுதலாக உள்ளது. நாமும் கோடீஸ்வரர்களை உருவாக்க உதவ வேண்டும், தாயகத்திலும் புலத்திலும்.

இஸ்ரேல் இவ்வாறான திட்டங்கள் மூலம் உலகளாவிய புலம்பெயர் மக்களிடம் ஆழமான உறவை வைத்துள்ளது : http://www.israelbonds.com/

தமிழர்களும் ஒரு உலக வங்கியை உருவாக்க வேண்டும். அதன் மூலம் தமது சேமிப்பை, அடையாளத்தை, தாயக உறவை, எமது அபிவிரித்திக்கு உதவவேண்டும். எங்கு, எவனிடம் பணம் உள்ளதோ அவனுக்கு உலகில் மரியாதையும் அதன் ஊடாக அரசியல் பலமும் கிடைக்கும்.

"யூத இனத்துக்கு அடுத்து உலகெங்கிலும் பரவியது தமிழினமே" : http://www.yarl.com/...opic=80556&st=0

தோழருக்கும் எனக்கும் வேவ் லெந்து கரெக்டாக செட்டாகுது.. நன்றி தோழர் அக்கூதா? பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும்.. :D

டிஸ்கி:

thanksgiving_dog_gets_bone.jpg

சேர்த்து வைத்தால் மட்டும் போதாது உரிய நேரத்தில் அல்லகைகளுக்கு வீசவும் தெரியணும்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

குமாரசாமியார்,

..... இஸ்ரேலில் என்ன அப்படி இருக்கிறது??? ... யூத இனம்!!!!!! ... அந்த யூத இனம் உலகெங்கும் பரவியிருக்கிறார்கள் ... யூதர்களாகவே!!!!

.... அப்படி யூதர்களாக இன்னும் உலகெங்கும் இருப்பதனால் .... தான் இஸ்ரேல் எனும் நாடு உருவானதும், அந்த நாட்டை தொடர்ந்து பலப்படுத்துவதும் , காப்பதும் கூட நடக்கிறது!!!

... இன்றும் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட முக்கிய நாடுகளின் செல்வந்தர்கள் பட்டியலில் அவர்களே பெரு வீதத்தினர், அதற்கு மேல் இந்த மேற்குலக வல்லரசு நாடுகளில் ஏறக்குறைய ஒரு சத வீததுக்கு குறைவானவர்களே இந்த யூதர்கள்( அவர்களின் நல்ல காலம் வெள்ளை நிறத்தவர்களாக இருப்பது, அடுபட்டு வந்தும், இந்த நிறத்தினால் பெரியளவு பிரட்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளவில்லை), ஆனால் பாராளுமன்றங்களையோ அதற்கு மேல் அமைச்சரவைகளையோ நிரப்புவ்பவர்கள் அவர்களே பெருமபாலானவர்கள்!!! ... இங்கு எந்த கட்சியானாலும் அவர்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை!!!! எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முக்கிய அமைச்சர்களாகவும் அவர்களே ... பாதுகாப்பு, உள்துறை, நிதி எதுவாகட்டிலும் அவர்கள் இல்லாமல் இல்லை!!!

... 70களின் ஆரம்பத்தில், பல அரபு நாடுகள் சேர்ந்து இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து இல்லாதொழிக்க பெருமெடுப்பில் புறப்பட்டன, எகிப்து, ஜோர்டான், ஈராக், லெபனான், ப்லஸ்தீனம் உடபட.

HenryKissingerWebPortraitCo.jpgஅப்போது அமெரிக்காவில் இராஜாங்க அமைச்சராக இருந்தவர் ஹென்றி கீஷிங்கர்!! அவர் ஒரு யூதர்!! அதற்கு மேல் அமெரிக்க வெளியுறவு கொள்கைகளை வகுப்பவர்களும் முக்கியமானவர்கள் யூதர்கள். இரவோடு இரவுகளாக அமெரிக்க நவீன யுத்த தாங்கிகள், ஏவுகணைகள், என் என்ன என்ன வேண்டுமோ அவைகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டன. அத்தோடு இஸ்ரேலியர்களின் மூலையும் இணைந்து பலஸ்தீனம் என்ற நாடே இல்லாமல் போனது, ஜோர்டான் பெரும் நிலப்பரப்பை இழந்தது, எகிப்துக்கும் அதே நிலைமை!!!

... அப்படி இருக்க .... நாங்கள் எம்மை இஸ்ரேலுடன் ஒப்பிடுகிறோம்!!! ... ஓஓஓ... யூதனுக்கு அடுத்த மூளையுள்ள இனமல்லோ?????????? :lol: :lol: :lol: :lol:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானிய தொழில் கட்சி தலைவர் ஒரு யூதர். அண்மையில் லிபியா மீதான பாராளுமன்ற விவாதத்தின் பொழுது தமது இனமக்களுக்கு நடந்த கொடுமைகளை நினைவு கூர்ந்தார். Ed Milliband (Labour party leader, UK) his brother David Millivand Ex Foreign Secretary, UK

http://en.wikipedia.org/wiki/David_Miliband

Born in London, Miliband is the elder son of Jewish immigrants, Belgian-born Marxist Ralph Miliband and Marion Kozak from Poland.[3][4] He has said "I am the child of Jewish immigrants and that is a very important part of my identity."[3] Both his Polish Jewish paternal grandparents lived in the Jewish quarter of Warsaw. His paternal grandfather, Samuel, a trained leather worker, fought for the Red Army in the Polish–Soviet War of 1919-1921 before moving to Belgium.[5][6] His paternal grandmother, Renia (later known as Renée), also moved to Belgium, where she first met Sam, and the couple married in 1923.[7] The German invasion of Belgium in May 1940 split the Miliband family in half: Ralph and father Samuel fled to England,[8] while Ralph's mother Renée and baby sister Nan stayed behind for the duration of the war. They were not reunited until 1950.[9] During his visit to Poland in June 2009, Miliband went to his family tomb in the Jewish Cemetery in Warsaw. He said of Poland, 'My mother was born here, her life was saved by those who risked theirs sheltering her from Nazi oppression,' and that he is 'one of the million Britons who have Polish blood'.[10][11]

Sri Lanka ceasefireEditDuring the latter stages of the Sri Lankan Army's 2008/09 offensive against the LTTE, Miliband travelled to Sri Lanka to press the government to call a ceasefire with the Tamil Tigers, citing concerns for civilians caught in the crossfire.[38] Miliband's visit was met with protests by Sri Lankan nationalists, who accused Miliband of attempting to save the lives of Tamil Tiger militants.[39] During the victory celebrations that took place a few weeks later, a burning effigy of Miliband was reported to have been tossed over the gate of the British High Commission in Colombo.[40]

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.