Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிமிகு கணங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலிமிகு கணங்கள்

சுற்றிலும் ஒளிவெள்ளம் சுடர்விட

இதயங்கள் மட்டும் இருள் மண்டிக்கிடந்த

அந்த அந்தகார இருளின் நடுவே

அலைகடலாய் குமுறி அனலாய் கொதிக்கும்

அடங்காத வலிகள்

வலிகளும் வாதைகளும் மருந்தின் வாடைகளும்

மௌனமாய் ஓலமிடும் ஏக்கங்களுமாய்

ஏகாந்தமாய் அந்த இரவுப் பொழுது நகர

என் உயிரின் இறுதி ஊசலாட்டம்

புன்னகை சிந்தும் வதனம் புதர் மண்டிக்கிடக்க

நெற்றியிலோ முத்துமுத்தாய் வியர்வைத் துளிகள்

சொர்க்கத்தின் கதவுகளாய் சொக்கவைத்த

உதடுகளோ பாலைவனமாய்…

உள்ளும் வெளியும் ஓடிக்கொண்டிருக்கும்

உயிரோட்டம் ஒட்சிசன் குழாய்களினூடே…

பக்கத்தில் இருந்த எலக்ரோனிக் இயந்திரம்

சுவாசத்தை வாசித்துக்கொண்டிருந்தது

ஒழுங்கற்ற முறையில் ஓடிக்கொண்டிருந்த அந்த

ஒப்புதல் அறிக்கை எந்த நிமிடமும்

ஒட்டத்தை முடிக்கலாம் என யோசித்தபடி…

தொட்டணைத்து எத்தனையோ சுகங்களை

அறிமுகம் செய்த கரங்களிரண்டும்

தொட்டுணர்வு இழந்து துவண்டு கிடந்தன

நெற்றியில் வடியும் வியர்வையைத் துடைப்பதுவும்

கரங்களை மென்மையாய் வருடிக் கொடுப்பதுமாய் நான்…

அந்த அறைக்குள் என் உயிருக்கும் எனக்குமாய்

ஐPவ மரணப் போராட்டம்

மூச்சு இரைத்து இரைத்து என்

மூச்சை அடைத்தபடி…

ஏல்லா உணர்வுகளும் இழந்து போனாலும்

கேட்கும் உணர்வு மட்டும்

இறுதிவரை இருக்குமென்று

ஏங்கோ படித்தது என் ஞாபகத்தில்

எப்படி வந்தன என் வாயில் அவ் வார்த்தைகள்

என இப்பொழுதும் வியக்கின்றேன்

“சந்தோசமாய் போய் வாருங்கள்”

இவைதான் நான் என் உயிருடன்

பேசிய இறுதி மொழி

உரக்கக் குரல் கொடுத்தால்

என் உயிருக்கு வலிக்குமென்று

உள்ளுக்கள் அழுதபடி

என் உடலில் உயிர் கசிந்து

விழிகள் நீர் சொரிய…

திடீரென்ற என்னவரின் விழிகள் விரிய

நேருக்கு நேராய் எம் விழிகள்

சுந்தித்துக் கொண்டன

நிலைகுத்தி நின்ற விழிகளில்

எம் இருவருக்கும் புரியும்

எத்தனையோ மொழிகள்

அந்த இறுதிக் கணங்களில்

என் இழப்பின் துயரைமீறி அவரை

நிம்மதியாக வழியனுப்ப வேண்டும்

என்ற எண்ணமே என் இதயத்தில்

ஆண்டுகள் ஐந்தாகியும்

என் உயிரின் துடிப்பை

உணராத நேரமில்லை

பிரிவு என்பதை உணரா வண்ணம்

பிரிந்தோம் இருந்தும்

இன்றும் சேர்ந்தே வாழ்கின்றோம்

Edited by Kavallur Kanmani

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை தந்ததோ ஏக்கங்களும் சோகங்களும்.

மனதைக் கரைய வைத்தது உங்கள் கவிதை.

நிஜவாழ்வில் அனுபவித்து உணர்ந்து வடித்த கவிதையா?

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்கள் அழுதபடி

என் உடலில் உயிர் கசிந்து

விழிகள் நீர் சொரிய…

திடீரென்ற என்னவரின் விழிகள் விரிய

நேருக்கு நேராய் எம் விழிகள்

சுந்தித்துக் கொண்டன

நிலைகுத்தி நின்ற விழிகளில்

எம் இருவருக்கும் புரியும்

எத்தனையோ மொழிகள்

அந்த இறுதிக் கணங்களில்

என் இழப்பின் துயரைமீறி :o

கவிதைக்கு நன்றி

வாத்தியார்

*********

வலிமிகு கணங்கள்

சுற்றிலும் ஒளிவெள்ளம் சுடர்விட

இதயங்கள் மட்டும் இருள் மண்டிக்கிடந்த

அந்த அந்தகார இருளின் நடுவே

அலைகடலாய் குமுறி அனலாய் கொதிக்கும்

அடங்காத வலிகள்

வலிகளும் வாதைகளும் மருந்தின் வாடைகளும்

மௌனமாய் ஓலமிடும் ஏக்கங்களுமாய்

ஏகாந்தமாய் அந்த இரவுப் பொழுது நகர

என் உயிரின் இறுதி ஊசலாட்டம்

புன்னகை சிந்தும் வதனம் புதர் மண்டிக்கிடக்க

நெற்றியிலோ முத்துமுத்தாய் வியர்வைத் துளிகள்

சொர்க்கத்தின் கதவுகளாய் சொக்கவைத்த

உதடுகளோ பாலைவனமாய்…

உள்ளும் வெளியும் ஓடிக்கொண்டிருக்கும்

உயிரோட்டம் ஒட்சிசன் குழாய்களினூடே…

பக்கத்தில் இருந்த எலக்ரோனிக் இயந்திரம்

சுவாசத்தை வாசித்துக்கொண்டிருந்தது

ஒழுங்கற்ற முறையில் ஓடிக்கொண்டிருந்த அந்த

ஒப்புதல் அறிக்கை எந்த நிமிடமும்

ஒட்டத்தை முடிக்கலாம் என யோசித்தபடி…

தொட்டணைத்து எத்தனையோ சுகங்களை

அறிமுகம் செய்த கரங்களிரண்டும்

தொட்டுணர்வு இழந்து துவண்டு கிடந்தன

நெற்றியில் வடியும் வியர்வையைத் துடைப்பதுவும்

கரங்களை மென்மையாய் வருடிக் கொடுப்பதுமாய் நான்…

அந்த அறைக்குள் என் உயிருக்கும் எனக்குமாய்

ஐPவ மரணப் போராட்டம்

மூச்சு இரைத்து இரைத்து என்

மூச்சை அடைத்தபடி…

ஏல்லா உணர்வுகளும் இழந்து போனாலும்

கேட்கும் உணர்வு மட்டும்

இறுதிவரை இருக்குமென்று

ஏங்கோ படித்தது என் ஞாபகத்தில்

எப்படி வந்தன என் வாயில் அவ் வார்த்தைகள்

என இப்பொழுதும் வியக்கின்றேன்

“சந்தோசமாய் போய் வாருங்கள்”

இவைதான் நான் என் உயிருடன்

பேசிய இறுதி மொழி

உரக்கக் குரல் கொடுத்தால்

என் உயிருக்கு வலிக்குமென்று

உள்ளுக்கள் அழுதபடி

என் உடலில் உயிர் கசிந்து

விழிகள் நீர் சொரிய…

திடீரென்ற என்னவரின் விழிகள் விரிய

நேருக்கு நேராய் எம் விழிகள்

சுந்தித்துக் கொண்டன

நிலைகுத்தி நின்ற விழிகளில்

எம் இருவருக்கும் புரியும்

எத்தனையோ மொழிகள்

அந்த இறுதிக் கணங்களில்

என் இழப்பின் துயரைமீறி அவரை

நிம்மதியாக வழியனுப்ப வேண்டும்

என்ற எண்ணமே என் இதயத்தில்

ஆண்டுகள் ஐந்தாகியும்

என் உயிரின் துடிப்பை

உணராத நேரமில்லை

பிரிவு என்பதை உணரா வண்ணம்

பிரிந்தோம் இருந்தும்

இன்றும் சேர்ந்தே வாழ்கின்றோம்

இறப்பில் பிரிவோர் என்றும் நிரந்தரமாகப் பிரிவதில்லை அக்கா, அவர்கள் தம் அன்புக்குரியவர்களின் சிந்தனை, செயல்களின் மூலம் ஆயுள் வரை பிரதிபலிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவு என்பதை உணரா வண்ணம்

பிரிந்தோம் இருந்தும்

இன்றும் சேர்ந்தே வாழ்கின்றோம்.............

இளம் வயதில் இப்படி ஒரு துய்ரம் பிரிவு வரவே வேண்டாம்.

பிரிவு உடலுக்கு அன்றி உள்ளத்துக்கு அல்ல .

அது தான் பிரிந்தும் பிரியாத வரம்.

பிரிவின் இறுதிக் கணத்தின், இறுதித் தருணத்தின் உணர்வுகள் கவிதைகளாக விரிந்து செல்கின்றது. ஒரு பெரும் நாவலே எழுதக்கூடிய தருணங்களை வாழ்க்கை சில வினாடிகளில் தந்து விடும் சந்தர்ப்பங்கள் உண்டு. அந்த தருணங்கள் வாழ்வில் மிச்ச காலம் முழுக்க ஒரு புள்ளியில் இருந்து புறப்படும் பெரும் நதியாக தொடர்ந்து விரிந்து பரவி விரிந்து செல்லும்.

உறவொன்றை 'சந்தோசமாக போய் வாருங்கள்" என்று வாழ்த்தி இறுதி வழி அனுப்ப முடிவதாயின் அந்த உறவு எத்தகைய அளவுக்கு உங்கள் உணர்வுக்குள் கலந்து ஒன்றாகி இருக்க வேண்டும் என்று புரிகின்றது. ஒன்றாக இவ்வளவு நாளும் வாழ்ந்த வாழ்வின் கனதியில் அன்பின் தோய்த்தெடுத்த பிரியாவிடை தான் அந்த வார்த்தைகள். ஒரு மகத்தான உறவால் மட்டுமே இப்படி வழியனுப்பி வைக்க முடியும் அக்கா...அந்த பிரியாவிடை தான் நீங்கள் அவ்வளவு நாளும் பேசிய அன்பான வார்த்தைகளின் முழு கனமும் கொண்ட மிகப் பெறுமதியான ஒரு வார்த்தையாக அவருக்கு இருந்திருக்கும்.

இப்பொழுதும் உங்களுடன் மானசீகமாக பேசிக்கொண்டு இருக்கும் அந்த உறவு இந்தக் கவிதையை வாசித்து புன்முறுவல் பூக்கும் அக்கா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூப்பூவாய் பூத்த அன்புப் பூக்கள் அத்தனையும் இன்று எம் திருமண நினைவு நாளின் பரிசாக எம் தோள்களில்....

மலர்ச்சரத்தில் மணம் சேர்த்து மலர் தொடுத்த அத்தனை அன்பு உறவுகளுக்கும் எம்மனமார்ந்த நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

'வைரத்தில் கோடு கீறும்

உங்கள் மனவலிமை,

உயிர்க் கூட்டை விட்டு,

உயிர் பிரிகின்ற வேளையிலும்,

ஒன்றாய்க் கலந்து விட்ட,

உங்கள் உயிர்ப் பூக்கள்

என்றோ ஒரு நாள்

ஏதோ ஒரு விதத்தில்

மீண்டும் கலக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா உங்கள் கவிதைக்கு கருத்து எழுதும் தகுதி எனக்கு இல்லை ஒரு பெண்ணாக இருந்து உங்கள் உணர்ச்சியை,வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் சேர்ந்தே வாழ்கின்றோம்

உங்கள் அன்பின் ஆழத்தை ஒரு வரியே சொல்லி விட்டது.உங்கள் அன்பானவரின் இழப்பின் துன்பத்திலும்,உங்கள் மனதில் சேர்ந்து வாழ்வதில் ஒரு இன்பம் இருந்து கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தோழி எவருக்குமே வாழ்த்துக்கவிதை பகிரும் பழக்கமற்றவள் நின் மணவாழ்வின் வெள்ளிவிழாவிற்கு ஒரு கவிதை படைத்தேன் இது இப்போதும் பொக்கிசமாக என்னுடைய தகவல்பெட்டியில் இருக்கிறது. இன்றும் இந்த மணவாழ்வின் நிறைவில் சில வருடங்கள் கடந்து........ உன் இதயத்திற்குள் பூட்டிவைத்த வலியின் கணங்களை மொழியில் உறைத்தாய். இந்த வலியின் கணங்களே உன் வாழ்வின் திருப்புமுனையானதும், வாழும் கணங்களை அர்த்தப்படுத்தியதும் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கே அதிகம் புரியும். பல சமயங்களில் அமைதியை உன்னிடம் கற்றிருக்கின்றேன். இங்கு நீ வீசியது கவிதையல்ல இதயத்தின் பேச்சு. அன்றந்த நாளில் எவருக்குமே விளங்காத உன் மூச்சு. பாராட்டும் தகுதி எனக்கில்லை. பக்கத்தில் நின்று உன் வலிகளுக்கு மயிலிறகால் வருடும் சிநேகிதியாக இவள் தொடர்ந்தும்.......

  • கருத்துக்கள உறவுகள்

இதை அழுகையாய் நான் நினைக்கவில்லை

தோளில் கொட்டுதல் போன்றதொரு ஆவாசமாய் எண்ணுகின்றேன்.

வரிகளைக்கூட்டி

இதை வளர்க்கவிரும்பவில்லை

வாழட்டும் தங்கள் நினைவுகள் என்றென்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

வலிமிகுந்த கணங்களை மிகவும் வலிமையான கனங்கலாக்கி விட்டீர்கள் சகோதரி!

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதையை வர்ணிக்க வார்த்தைகள் தேடுகிறேன்

அன்பினால் கட்டுண்ட உறவுகளுக்கு பிரீவென்பதே இல்லை. அந்த நினைவிலேயே தான் வாழ்ந்து கொண்டிரு;ககிறோம் எ;னப அழகாகச் சொல்லீயுள்ளீர்கள் அக்கா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.