Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்கள் பனிக்கிறது..., இதயம் துடிக்கிறது... பதறித்துடிக்கும் மக்கள் - கிராமங்களில் ஈழப்பிரச்சாரம் -குமுதம் ரிப்போட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸை ஒரு வழி பண்ணாமல் விடமாட் டேன்’ என்று திரைப்பட இயக்குநர் சீமான் ஒரு பக்கம் ஆவேசப்பட்டுக் கொண்டிருக்க... காங்கிரஸுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அமைதியாக துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது ‘மனித நேய வாக்காளர்’ என்ற அமைப்பு.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் விநியோகிக்கப் படும் இந்தப் பிரசுரம் எட்டுப் பக்கங்களைக் கொண்டது. தரமான தாள், நேர்த்தியான அச்சு, வசீகரமான வடிவமைப்புடன் கூடிய இந்தப் பிரசுரத்தில் பளிச்செனத் தெரியும் படங்களைப் பார்த்தால் மனம் பதைபதைக்கிறது. கண்ணீர் எட்டிப் பார்க்கிறது... ஆத்திரம் அலைமோது கிறது.

அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பிரசுரத்தில்? ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்திய கொடூரத் தாக்குதல்களை இந்தப் படங்கள் தோலுரித்துக் காட்டு கின்றன.

“இணையதளத்தில் வந்த இருபதாயிரம் படங்களில் சிலவற்றை இந்தப் பிரசுரத்தில் பாருங்கள். இதற்கு மேலும் காங்கிரஸை ஆதரிக்கலாமா? என்ற கேள்வியை உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்...’’ என்ற வரிகளோடு படங்கள் தொடர்கின்றன. எட்டுப் பக்கங்களிலும் மொத்தம் ஐம்பத் தேழு படங்கள். உயிரிழந்து.. உறுப்பிழந்து.. உறவிழந்து கதறும் ஈழத் தமிழர்கள் கொடூரமாக கொலையானதற்கான சாட்சிகள் அவை.

‘தமிழக வாக்காளர்களுக்கு ஒரு கேள்வி’ என்று தொடங் கும் இந்தப் பிரசுரத்தின் ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பிலும் இந்திய தலைவர்கள் ராஜபக்ஷேயுடன் கைகுலுக்கு கிறார்கள்.

‘ராஜபக்ஷேயுடன் இந்தியா வந்த தமிழக காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு தந்தவர்..’ என்ற விமர்சனங்களோடு அவர்களோடு இருக்கும் மன்மோகன்சிங் படத்தையும் போட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர ஈழப்படுகொலைக்குத் துணை போன தாக அமைச்சர் அந்தோணி, விஜய் நம்பியார், சதீஷ் நம்பியார் ஆகியோரை குற்றம்சாட்டியும் படங்கள் உள்ளன.

“கொல்லப்பட்ட இம்மக்களுக்காக நாம் மனதார அஞ்சலி செலுத்துவோம். காட்டுமிராண்டித் தனமான காங்கிரஸிற்கு எதிராக வாக் களித்து தோற்கடிப்போம்...’’ என்ற வாசகங் களோடு முடிகிறது இந்தப் பிரசுரம்.

இந்தப் பிரசுரங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்கிறார்கள் இளை ஞர்கள்.

அதிலுள்ள படங்களை கிராமத்தினரி டம் காண்பித்து,

“செத்துப்போனது நமது தொப்புள் கொடி உறவுங்க... கொலை செய்ய உதவியது காங்கிரஸ்காரங்க. மறந்தும் காங்கிர ஸிற்கு ஓட்டுப்போடாதீங்க...’’ என்று உருக்க மாகச் சொல்கிறார்கள். இந்தப் படங் களைப் பார்த்து கிராம மக்கள் பதறிப் போகிறார்கள். அந்த இளைஞர்கள் ஈழத் தமிழர்கள் படுகொலையின் பின்னணியை விவரிக்க... வியர்த்துப் போகிறார்கள் கிராம மக்கள்.

‘‘காங்கிரஸ்காரன் ஓட்டுப் போட சத்தியம் வாங்கிட்டு பணம் தந்தா... அதை வாங்கிட்டோமேன்னு கவலைப்படாதீங்க... அதில் ஐந்து ரூபாயை குலசாமிக்குப் போட்டுருங்க. சாமி மன்னிச்சிடும். காங் கிரஸிற்குப் போட்டீங்கன்னா அந்த சாமியே மன்னிக்காது...’’ என்கிறார்கள். பிரசுரத்திலுள்ள படங்களைப் பார்க்கும் அந்த மக்களின் கண்கள் பனிக்கிறது... இதயம் வெடிக்கிறது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
66423099.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டு இளையோருக்கு நன்றிகள். முன்பு போல் இல்லாமல் கடந்த ஸ்ரீ லங்கா ஜெநோசைடை தமிழக பத்திரிகைகள் நன்றாக மக்களுக்கு எடுத்து சென்றுள்ளன. பார்சி குடும்ப காங்கிரசை வீழ்த்துவது இந்தியாவுக்கே செய்யும் ஒரு புண்ணியம்.

  • கருத்துக்கள உறவுகள்

“செத்துப்போனது நமது தொப்புள் கொடி உறவுங்க... கொலை செய்ய உதவியது காங்கிரஸ்காரங்க. மறந்தும் காங்கிர ஸிற்கு ஓட்டுப்போடாதீங்க...’’ என்று உருக்க மாகச் சொல்கிறார்கள். இந்தப் படங் களைப் பார்த்து கிராம மக்கள் பதறிப் போகிறார்கள். அந்த இளைஞர்கள் ஈழத் தமிழர்கள் படுகொலையின் பின்னணியை விவரிக்க... வியர்த்துப் போகிறார்கள் கிராம மக்கள்.

‘‘காங்கிரஸ்காரன் ஓட்டுப் போட சத்தியம் வாங்கிட்டு பணம் தந்தா... அதை வாங்கிட்டோமேன்னு கவலைப்படாதீங்க... அதில் ஐந்து ரூபாயை குலசாமிக்குப் போட்டுருங்க. சாமி மன்னிச்சிடும். காங் கிரஸிற்குப் போட்டீங்கன்னா அந்த சாமியே மன்னிக்காது...’’ என்கிறார்கள். பிரசுரத்திலுள்ள படங்களைப் பார்க்கும் அந்த மக்களின் கண்கள் பனிக்கிறது... இதயம் வெடிக்கிறது!

தமிழன்னை பெற்றெடுத்த இளம் குருத்துக்களே,

உங்கள் நாட்டுக் கவிஜர் 'பாரதியார்' சொன்னது போல,

நெஞ்சில் உரத்துடனும், நேர்மைத் திறனுடனும்,

வஞ்சகமின்றி, உங்கள் மனத்தின் படி,

தமிழனாக 'ஒரே ஒரு முறை; வாக்களியுங்கள் .

நாளை முதல் நீங்கள், நிமிர்ந்து நடப்பீர்கள்!!!

குமுதம் தி மு க பத்திரிகையாச்சே. எப்படி இச் செய்தியை வெளியிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்னை பெற்றெடுத்த இளம் குருத்துக்களே,

உங்கள் நாட்டுக் கவிஜர் 'பாரதியார்' சொன்னது போல,

நெஞ்சில் உரத்துடனும், நேர்மைத் திறனுடனும்,

வஞ்சகமின்றி, உங்கள் மனத்தின் படி,

தமிழனாக 'ஒரே ஒரு முறை; வாக்களியுங்கள் .

நாளை முதல் நீங்கள், நிமிர்ந்து நடப்பீர்கள்!!!

அதை எம்மையும் நிமிர்த்தும்

குமுதம் எக்காலமும் தி.மு.க சார்பான பத்திரிகை அல்ல,ஆனால் எமது போராட்டத்தையும் குறைபிடித்துக்கொண்டுதான் வந்தார்கள்.முள்ளிவாய்கால் பெரும்பான்மையான தமிழ்நாட்டுதமிழர் மனதில் தாக்கைத்தையேற்படுத்திவிட்டதுதான் உண்மை.காங்கிரசையே தமிழ்நாட்டுத்தமிழன் வெறுப்பவன் ஆனால் மத்தியில் ஆட்சியில் கூடுதலாக காங்கிரஸ் வருவதால் மாநில கட்சிகளுக்கு தமது தேவைகளுக்காக அவர்களிடம் மண்டியிடவேண்டிய நிலமை.

தி.மு.கா வோ அல்லது அ.தி.மு.காவோ தமிழர்நலனை விட தமது நலனில் அக்கறை கொண்டவர்கள்.அதனால் தான் எதுவும் அங்கு சாதிக்கமுடியாமல் இருக்கின்றது.காங்கிரசைவிட எமக்கு அதிகம் துரோகம் செய்தது தி.மு.க தான்.கருணாநிதி நினைத்திருந்தால் காங்கிரசை ஆட்டம் காண வைத்திருக்கலாம்.இவ்வளவும் எமக்காக கதைக்கும் பா.மா.கா வே அன்புமணியின் அமைச்சர் பதவியை துறக்க முன்வரவில்லை.

அவர்கள் எல்லோரையும் விட பாதிக்கப்பட்ட நாமே "மானாட மயிலாடவையும்,சன் ரீ,வீ யையும்,சன் பிக்சேர்சையும்" புறக்கணிக்க முன்வரவில்லை. எல்லாம் பேச்சும் எழுத்தும் தான் செயலில் இல்லை.13 வருட வாழ்த்தில் நான் யாழுக்கு சொன்னது போல் ஒரு சிறிய வேலைத்திட்டத்தில் முதலில் இறங்கினால் என்ன?

சன் பிக்சரின் ஒரு படத்தை முதலில் உலகம் முழுக்க திரையிடாமல் பண்ண எங்களால் முடியாதா? அதுவும் முடியாதென்றால் சும்மா அடுத்தவனை திட்டுவதில் எந்த பயனுமில்லை.

ஒரு இணையத் தளத்தால், கருத்துக் களத்தால் இத்தகைய செயற்பாடுகளை தனித்து செய்ய முடியாது. மாறாக இத்தகைய செயல்பாடுகளுக்கான கருத்து தளத்தை அமைத்து கொடுத்து ஒரு கருத்துக்கள ஊடகம் ஆற்றக்கூடிய உச்ச கட்ட செயற்பாடுகளை ஆற்ற முடியும். ஒரு ஊடகம் (ஒரு) இயக்கம் அல்ல. ஒரு செயல்பாடினை முன்னெடுக்கும் அமைப்புக்கு கருத்து ரீதியான தளத்தை அமைத்துக் கொடுத்து, அதற்கான கருத்துகளை மக்கள் முன் எடுத்துச் செல்ல மட்டுமே உதவ முடியும்.

நீங்கள் கனடாவில் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்க அமைப்பு ரீதியில் முன் வந்தால் நிச்சயம் யாழ் அதற்கான கருத்தியல் ஆதரவை தரும்

  • கருத்துக்கள உறவுகள்

.முள்ளிவாய்கால் பெரும்பான்மையான தமிழ்நாட்டுதமிழர் மனதில் தாக்கைத்தையேற்படுத்திவிட்டதுதான் உண்மை.

.13 வருட வாழ்த்தில் நான் யாழுக்கு சொன்னது போல் ஒரு சிறிய வேலைத்திட்டத்தில் முதலில் இறங்கினால் என்ன?

சும்மா அடுத்தவனை திட்டுவதில் எந்த பயனுமில்லை.

நீங்கள் கனடாவில் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்க அமைப்பு ரீதியில் முன் வந்தால் நிச்சயம் யாழ் அதற்கான கருத்தியல் ஆதரவை தரும்

பிரான்சில் இயலுமானவற்றை செய்ய நான் தயாராக இருக்கின்றேன்.

ஒரு இணையத் தளத்தால், கருத்துக் களத்தால் இத்தகைய செயற்பாடுகளை தனித்து செய்ய முடியாது. மாறாக இத்தகைய செயல்பாடுகளுக்கான கருத்து தளத்தை அமைத்து கொடுத்து ஒரு கருத்துக்கள ஊடகம் ஆற்றக்கூடிய உச்ச கட்ட செயற்பாடுகளை ஆற்ற முடியும். ஒரு ஊடகம் (ஒரு) இயக்கம் அல்ல. ஒரு செயல்பாடினை முன்னெடுக்கும் அமைப்புக்கு கருத்து ரீதியான தளத்தை அமைத்துக் கொடுத்து, அதற்கான கருத்துகளை மக்கள் முன் எடுத்துச் செல்ல மட்டுமே உதவ முடியும்.

நீங்கள் கனடாவில் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்க அமைப்பு ரீதியில் முன் வந்தால் நிச்சயம் யாழ் அதற்கான கருத்தியல் ஆதரவை தரும்

இந்த முயற்சி செயல்வடிவம் எடுக்கவேண்டும். நிச்சயம் மக்கள் ஆதரவு தருவர்.

  • கருத்துக்கள உறவுகள்

குமுதம் எக்காலமும் தி.மு.க சார்பான பத்திரிகை அல்ல,ஆனால் எமது போராட்டத்தையும் குறைபிடித்துக்கொண்டுதான் வந்தார்கள்.முள்ளிவாய்கால் பெரும்பான்மையான தமிழ்நாட்டுதமிழர் மனதில் தாக்கைத்தையேற்படுத்திவிட்டதுதான் உண்மை.காங்கிரசையே தமிழ்நாட்டுத்தமிழன் வெறுப்பவன் ஆனால் மத்தியில் ஆட்சியில் கூடுதலாக காங்கிரஸ் வருவதால் மாநில கட்சிகளுக்கு தமது தேவைகளுக்காக அவர்களிடம் மண்டியிடவேண்டிய நிலமை.

தி.மு.கா வோ அல்லது அ.தி.மு.காவோ தமிழர்நலனை விட தமது நலனில் அக்கறை கொண்டவர்கள்.அதனால் தான் எதுவும் அங்கு சாதிக்கமுடியாமல் இருக்கின்றது.காங்கிரசைவிட எமக்கு அதிகம் துரோகம் செய்தது தி.மு.க தான்.கருணாநிதி நினைத்திருந்தால் காங்கிரசை ஆட்டம் காண வைத்திருக்கலாம்.இவ்வளவும் எமக்காக கதைக்கும் பா.மா.கா வே அன்புமணியின் அமைச்சர் பதவியை துறக்க முன்வரவில்லை.

அவர்கள் எல்லோரையும் விட பாதிக்கப்பட்ட நாமே "மானாட மயிலாடவையும்,சன் ரீ,வீ யையும்,சன் பிக்சேர்சையும்" புறக்கணிக்க முன்வரவில்லை. எல்லாம் பேச்சும் எழுத்தும் தான் செயலில் இல்லை.13 வருட வாழ்த்தில் நான் யாழுக்கு சொன்னது போல் ஒரு சிறிய வேலைத்திட்டத்தில் முதலில் இறங்கினால் என்ன?

சன் பிக்சரின் ஒரு படத்தை முதலில் உலகம் முழுக்க திரையிடாமல் பண்ண எங்களால் முடியாதா? அதுவும் முடியாதென்றால் சும்மா அடுத்தவனை திட்டுவதில் எந்த பயனுமில்லை.

ஒரு இணையத் தளத்தால், கருத்துக் களத்தால் இத்தகைய செயற்பாடுகளை தனித்து செய்ய முடியாது. மாறாக இத்தகைய செயல்பாடுகளுக்கான கருத்து தளத்தை அமைத்து கொடுத்து ஒரு கருத்துக்கள ஊடகம் ஆற்றக்கூடிய உச்ச கட்ட செயற்பாடுகளை ஆற்ற முடியும். ஒரு ஊடகம் (ஒரு) இயக்கம் அல்ல. ஒரு செயல்பாடினை முன்னெடுக்கும் அமைப்புக்கு கருத்து ரீதியான தளத்தை அமைத்துக் கொடுத்து, அதற்கான கருத்துகளை மக்கள் முன் எடுத்துச் செல்ல மட்டுமே உதவ முடியும்.

நீங்கள் கனடாவில் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்க அமைப்பு ரீதியில் முன் வந்தால் நிச்சயம் யாழ் அதற்கான கருத்தியல் ஆதரவை தரும்

என்னுடைய முழுமையான ஆதரவும் செயற்பாடும் இதற்கு உண்டு :rolleyes:

அவர்கள் எல்லோரையும் விட பாதிக்கப்பட்ட நாமே "மானாட மயிலாடவையும்,சன் ரீ,வீ யையும்,சன் பிக்சேர்சையும்" புறக்கணிக்க முன்வரவில்லை. எல்லாம் பேச்சும் எழுத்தும் தான் செயலில் இல்லை.13 வருட வாழ்த்தில் நான் யாழுக்கு சொன்னது போல் ஒரு சிறிய வேலைத்திட்டத்தில் முதலில் இறங்கினால் என்ன?

சன் பிக்சரின் ஒரு படத்தை முதலில் உலகம் முழுக்க திரையிடாமல் பண்ண எங்களால் முடியாதா? அதுவும் முடியாதென்றால் சும்மா அடுத்தவனை திட்டுவதில் எந்த பயனுமில்லை.

இங்கு புலத்தில் எம்மில் பலர் ... குறிப்பாக இளவயதினரை விட ஏனையோர் .... திரைப்படங்கள், சின்னத்திரை, பாடல்கள், பட்டிமன்றங்கள் ... என்ற பொழுதுபோக்குகளில் வீழ்ந்து விட்டார்கள். மீட்பது கடினம்!!!!!!!! முடியவே முடியாது!!!! .. கேட்டால், இது பொழுதுபோக்கு, அரசியலையும் இதையும் கலக்காதீர்கள் என்று பதில் வரும்!!! ... உந்த சன், கலைஞரில் இருந்து எம்மவர்களை மீட்க வேண்டுமாயின் ..... சன், கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு இணையான ஓர் மாற்றீடு மூலமே ... முதல் அடி அடிக்க வேண்டும்!!! ..... அதை விடுத்து என்ன முயற்சிகள் எடுத்தாலும், அவை அவற்றிக்கு மேலும் விளம்பரங்களை தோற்றுவிப்பதாகவே அமையும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் எல்லோரையும் விட பாதிக்கப்பட்ட நாமே "மானாட மயிலாடவையும்,சன் ரீ,வீ யையும்,சன் பிக்சேர்சையும்" புறக்கணிக்க முன்வரவில்லை. எல்லாம் பேச்சும் எழுத்தும் தான் செயலில் இல்லை.13 வருட வாழ்த்தில் நான் யாழுக்கு சொன்னது போல் ஒரு சிறிய வேலைத்திட்டத்தில் முதலில் இறங்கினால் என்ன?

சன் பிக்சரின் ஒரு படத்தை முதலில் உலகம் முழுக்க திரையிடாமல் பண்ண எங்களால் முடியாதா? அதுவும் முடியாதென்றால் சும்மா அடுத்தவனை திட்டுவதில் எந்த பயனுமில்லை

அர்ஜுன், சுய தம்பட்டம் அடிப்பது எனது நோக்கமல்ல. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக புலத்தில் வசிக்கின்றேன்.எனது மகள் கூடப் புலத்தில் பிறந்தவள்.இந்த 'சன்' குப்பைகளைக் கிட்டக் கூட விடுவது கிடையாது.ஆனால் எனது மகள் என்னை விடத் தமிழ் நன்றாகக் கதைப்பாள்.இந்தக் குப்பைகள் தமிழையோ எமது கலாச்சாரத்தையோ வளர்க்க எந்த விதத்திலும் உதவுவதில்லை.மாறாகத் தமிழைத் 'தமிங்கிலிசாக' மாற்றுவதிலேயே குறியாக உள்ளன. இந்தப் போக்கில் போனால் பாரதியார் சொன்னது போல 'மெல்லத் தமிழ் இனிச்சாகும்'. இதுவே அவர்களது நோக்கமும்.எங்கள் எதிரிகளை நாங்களே வளர்த்து விடுகின்றோம்.

ஒரு புள்ளியில் ஆரம்பியுங்கள். நீங்கள் சரியும் போது, நாங்கள் உங்களைத் தூக்கி நிறுத்துவோம்.

உங்கள் கருத்துக்கு நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இளைஞர்கள் ஈழத் தமிழர்கள் படுகொலையின் பின்னணியை விவரிக்க... வியர்த்துப் போகிறார்கள் கிராம மக்கள்.

காங்கிரஸ் ,தி.மு.க, அ.தி.மு.க என படிப்படியாக தமிழருக்கு எதிரான கட்சிகள் படிப்படியாக இவ்விளையர்களால் ஓரம் கட்டும் போது சரியான ஒரு தலைமை உருவாக வேண்டும்.

எம்மவருக்கான தொலைக்காட்சிகள் கூட கலைஞரின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத்தான் ஒளிபரப்புகின்றார்கள்.அப்போ எமது மக்கள் பொழுது போக்காக இவற்றை தானே பார்க்கிறார்கள்.எப்படி இவற்றை நிறுத்த முடியும்?

முடியாத ஒரு அலுவலைத் சும்மா பேருக்கு தொடங்கக்கூடாது.எமது பல புறக்கணிப்புகள் தோல்வியில் முடிந்ததற்கு அதுவே காரணம்.சன்.டீ.வீ,கலைஞர் டீ.வீ,இலங்கை பொருட்கள் புறக்கணிப்பு ஒரு நாளைக்கு செய்யலாம் தொடர்ந்து செய்ய முடியாது.

நாங்கள் முடிந்தால் சன் பிக்சேர்சின் ஒரு படத்தை எமது வினியோகஸ்தவர்கள் வாங்குமுதல் தெரிவுசெய்து அந்தப்படம் எந்த ஒரு வெளிநாட்டிலும் வெளியிடப்படமுடியாமல் செய்யவேண்டும்.அப்படி யாரும் வாங்கினால் அதை திரையிடபண்ணமுடியாமல் செய்யவேண்டும் அல்லது பகஸ்கரிப்பில் ஈடுபடவேண்டும்.(டீ.வீ.டீ யில் வருவது வேறுவிடயம்).

எங்களால் இதுவும் முடியும் என ஒரு அடையாளமாக தமிழ்சினிமா உலகிற்கும், அரசியல்வாதிகளுக்குமான பாடமாக இருக்கவெண்டும்.கனடாவில் படம் திரையிடுபவர்களை முதலில் தொடர்புகொண்டு பின்னர் மேலதிகமாக எழுதுகின்றேன்.படம் பிரமாண்டமானதாகவும் இதனால் தயாரிப்பாளருக்கு பாதிப்பு வருவதும் அவசியம்.சில படங்களை இப்போது அவர்களே நேரடியாக கனேடிய திரையரங்குகளில் வெளியிடுகின்றார்கள் எனவே கால அவகாசம் எடுத்து வெற்றிகரமாக முடிக்கவேண்டியது அவசியம்.

காங்கிரஸ் வராவிட்டால், மற்றவர்கள் வந்து ஈழத்தமிழருக்கு என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் கருணாநிதி வராவிட்டால் ஜெயலலிதா வருவாள். அது இன்னமும் கேடு தான்.

சன் பிக்சரின் ஒரு படத்தை முதலில் உலகம் முழுக்க திரையிடாமல் பண்ண எங்களால் முடியாதா? அதுவும் முடியாதென்றால் சும்மா அடுத்தவனை திட்டுவதில் எந்த பயனுமில்லை.

அவர்கள் திரையிட்டு எம்மவர் பார்க்காவிட்டால் சரிதானே? நட்டம் வந்து ஓடிவிடுவார்கள்.

சண் இல்லாவிட்டால் மூன் என்று இன்னொரு நிறுவனம் வந்துவிட்டு போகும். இது வியாபாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் திரையிட்டு எம்மவர் பார்க்காவிட்டால் சரிதானே? நட்டம் வந்து ஓடிவிடுவார்கள்.

சண் இல்லாவிட்டால் மூன் என்று இன்னொரு நிறுவனம் வந்துவிட்டு போகும். இது வியாபாரம்.

இதைதான் நானும் சொன்னேன்.............. வெட்டிபுட்டாங்க!

புறக்கணிக்கலாம்............. ஏன் புறக்கணிக்கிறோம் என்பது தெளிவாக தெரியபடுத்தப்பட வேண்டும்!

எதுவுமே இல்லாது புறக்கணிக்கிறோம் என்றால்?

உண்மையில் இந்திய படங்களை பார்ப்பதயோ இலங்கை பொருட்கள் வாங்குவதையோ நான் எப்போதே நிறுத்திவிட்டேன். ஆனால் நாளாந்தம் கண்டுபழகும் எமது நாட்டு உறவுகளுக்கு அதை விளங்கடுத்தமுடியாது உள்ளது. அவர்களின் தலைக்குள் உள்ளதை வைத்தே அவர்கள் சிந்திக்கிறார்கள்............. அதை என்னாலும் உங்காளாலும் மாற்ற முடியுமா? படத்திற்கும் போராட்டத்திற்கும் என்ன சம்மந்தம் என்று சிந்திக்கிறார்கள்...............

இது சினிமா அது போராட்டம் என்கிறார்கள்..........

கிரிக்கேட்டை விளையாட்டாக மட்டுமே இன்னமும் பார்கிறார்கள் சில அப்பாவி தமிழர்கள்..............

ஆனால் அவனோ அது யுத்தவெற்றியாகும் என்று பேசிவிட்டே விளையாட போகிறான்!

எனக்கு வேடிக்கையாக படுவது.............. விளையாட்டை விளையாட்டாக பார்க்கும் சிலருக்கு சன்பிக்சரின் சினிமாவை சினிமாவாக பார்க்க முடியவில்லை எனடபதுதான்!

இதைதான் நானும் சொன்னேன்.............. வெட்டிபுட்டாங்க!

புறக்கணிக்கலாம்............. ஏன் புறக்கணிக்கிறோம் என்பது தெளிவாக தெரியபடுத்தப்பட வேண்டும்!

எதுவுமே இல்லாது புறக்கணிக்கிறோம் என்றால்?

ஏன் நாங்கள் இந்திய பொருட்களுடன் மட்டும் நிற்க வேண்டும்? அமெரிக்க, பிரித்தானிய என்று தொடரவில்லை? அவர்களும் தான் எம்மக்களின் மரண வேதனைக்கு உதவி செய்ய முன்வரவில்லை?

புறக்கணிப்பு வேறு,கவனயீர்ப்பு வேறு.

அடுத்தது உலகமே எம்மை எதிர்ததென்று உலகம் முழுவதையும் எதிர்துக்கொண்டிருக்க முடியாது.

எம்மை முதலில் காப்பாற்றியிருக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டவர்களே, அடுத்துத்தான் எவரும், புலம் பெயர்ந்த எங்களால் கூட அது சாத்தியமில்லை.தமிழ்நாட்டில் பதவியில் இருந்த அரசு சார்புநிலை எடுக்காமல் கண்ணைமூடிக்கொண்டிருந்தால் கூட பரவாயில்லை தன்னிடமிருந்த ஊடக,அரச அதிகாரத்தை வைத்து போராடமுன் நின்றவர்களை புறம் தள்ளி தான் ஏதோசெய்யப்போவதுபோல் படம் காட்டி, அரசியல் செய்து முழு தமிழ்நாட்டுமக்களையும் அவர்தம் போராட்டங்களையும் திசை திருப்பிவிட்டது.எம்மை கருவறுத்தவர்கள் கருணாநிதி குடும்பமே ஒழிய வேறொருவருமல்ல.அவர்களை மீறி அரசியல் செய்ய யாரும் புறப்பட்டிருந்தால் தனிமைப்பட்டுவிடுவோம் என்ற பயம் தான் பலர் மனதிலும்.இதில் கனிமொழி வேறு தான் விடுதலைபுலிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது போல் காட்டிக்கொண்டார்கள்.

முதலில் எங்களால் இவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிற்க முடியுமா என்பதே கேள்வி?

முடிந்தால் ஒற்றுமையாக ஒரு பாடம் படிப்பிற்போம் இல்லையேல் விட்டுவிடுவோம்.தோல்வியில் முடியுமென்றால் தொடங்கக்கூடாது.

கிரிக்கெட்டை நாம் புறக்கணித்து நாம் வெற்றிபெறமுடியாது,கவனயீர்ப்புக்கு செய்யலாம்.அதுகூட கனடாவில் வெற்றிபெறவில்லை.சும்மா கொடியை காரில் கட்டிக்கொண்டு ஓடுவதில் எவ்வித பயனுமில்லை.வேண்டாத பலரின் வெறுப்புக்கு தான் உள்ளாக நேரிடும்.அதுதான் நடந்ததும்.

கடந்த காலங்களில் நடந்தவைகளை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.