Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடை விலக்க படும் -டில்லி முக்கியஸ்தர் தெரிவிப்பு ..!

Featured Replies

புலிகள் மீதான தடை விலக்க படும் -டில்லி முக்கியஸ்தர் தெரிவிப்பு ..!

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை தற்போது இலங்கை மீது சுமத்த பட்டிருக்கும் போர்குற்ற

நிகழ்வினை அடுத்து இலங்கை தொடர்பான சர்வேதேச நாடுகளின் அரசியல் நிலை பாடுகள் மாற்றம் அடைந்துள்ளதை

அடுத்தும் மேலும் இவர்களின் எதிர்கால அரசியல் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் நிலை உருவாகும் நிலையில்

இந்தியா தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிதிருக்கும் தடையினை விரும்பியோ விரும்பாமலோ பிராந்திய நலன் அடிப்படையில்

இந்திய விலக்க வேண்டிய நிர்பந்த சூழல் ஏற்படும் எனவும் .

அதனை இந்திய செய்தே தீரும் .தமிழர்களை அழித்த பழியினை இந்தியா காங்கிரஸ் மீது விழுந்துள்ள நிலையிலும் ஒட்டு மொத்த தமிழர்களும்

இந்தியாவை வெறுத்து ஒதுக்கி வரும் நிலையிலும் இலங்கையில் தனி அரசியல் அலகு ஒன்றை தமிழருக்கு ஐநா வழங்கும் நிலை

தோன்றியுள்ள நிலையிலும் மேலும்தமிழர்களுடன் இந்தியா முரண்பாடுகளை வளர்க்காது தமது ஆதரவு கரத்தினை தமிழர்களிற்கு நீட்ட வேண்டிய சூழல்

ஏற்படும் என அந்த பிரமுகர் நமக்கு தெரிவித்தார் .

சர்வதேச கண்காணிப்பின் கீழ் தமிழர்களிற்க்கான தனி அரசியல் அலகு வழங்க பட உள்ள நிலையில் ..மேற்கத்தைய நாடுகள் தமிழர் பகுதியில் வந்து குந்தவும்

தமது அரசியல் இருப்புக்களை அங்கு பலபடுத்தவும் இந்தியா விரும்பாத நிலை தோன்றும் எனவும் அதற்கமைய இந்திய தமிழர் மீதான தனது கொள்கையில் உடனடி

மாறுதலை ஏற்படுத்த வேண்டிய சூழல் உருவாகும் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .

எதிர் காலத்தில் தமிழகத்தை பலமான மூன்றாம் தரப்பு கட்சி ஒன்று தமிழகத்தை ஆளும் நிலை தோன்றும் எனவும் அந்த கட்சி ஈழ தமிழருக்கு வெளிப்படையாக ஆதரவினை

வழங்கும் ..அவ்வாறாக உள் நாட்டில் மாற்றமடையும் இந்த அரசியல் நிகழ்வுகளும் சர்வதேச இலங்கை தொடர்பான அரசியல் பார்வைகளும் மாற்றங்களும்

இந்தியாவிற்கு பெரும் நிற்பந்ததினை வழங்கும் எனவும் அதன் அடிபடையில் இந்தியா தன்னை மாற்றி கொள்ளும் எனவும் அப்போது இந்த தடைகள் விலக்க படும் என அந்த பிரமுகர் தெரிவித்துள்ளார் .

நன்றி

எதிரி

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையான, ஆனால் ஒரு நல்ல அருள்வாக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முக்கியஸ்தருக்கு பெயர் இல்லையா?.

  • கருத்துக்கள உறவுகள்

இது கற்பனையோ இல்லையோ எமக்கு எமது விடிவை தீர்மானிக்க வழி இருக்கிறது என்பதை சொல்லலாம்.

எப்படி சிங்களம் எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகக் காட்டி.. பிராந்திய பூகோள நலனை அடிப்படையாகக் கொண்டு சீனாவையும் ரஷ்சியாவையும் வைச்சுக் கொண்டு இந்தியாவை தன் பக்கம் இழுத்திச்சுதோ அதே வேலையை மேற்குலகை எமது பக்கம் கொண்டு வருவதன் மூலம் செய்ய முடியும்.

இன்றைய நிலையில் பிராந்தியத்தில் தமிழர்கள் முக்கிய சக்திகள். அவர்களால் பிராந்தியத்தில் இரண்டு நாடுகளின் அரசியலை தீர்மானிக்கும் பலம் இருக்கிறது. தெற்காசியாவில் மட்டுமன்றி தென்கிழக்காசியாவிலும் அவர்களின் செல்வாக்கு இருக்கிறது. புலம்பெயர் நாடுகளிலும் இருக்கிறது. இந்தப் பலம் சிங்களவர்களுக்கோ.. வட இந்தியர்களுக்கோ கிடையாது. நாம் தமிழர்களாய் ஒற்றுமையாக நின்றோமானால்.. நிச்சயமாக மேற்குலகம் எம்மை ஆதரித்து தான் தெற்காசியாவில் வலுவாக காலூண்ற விளையும். நமக்கு எண்ணை வளம் அவசியமில்லை. ஆனால் பெரும் பிராந்தியங்களில் வாழும் மக்கள் பலம்.. நிலம் இருக்கிறது. அது முக்கியம். குறிப்பாக ஒற்றுமையான ஒருமித்த கருத்தோட்டமுள்ள மக்களாக நாம் இலங்கையிலும் இந்தியாவிலும் இதர சேதங்களிலும் வலுபெறும் போது.. எமது சொல்லிற்கு செயலிற்கு உலகம் மதிப்பளிக்கும்.

பூகோள நலனை அடிப்படையாகக் கொண்டு.. யூதர்களை இன்று மதிப்பது போல எம்மையும் இந்த உலகம் மதிக்கும். கருத்தில் எடுக்கும். எந்த வளமுமற்ற இஸ்ரேலை வைச்சு மத்திய கிழக்கில் உள்ள வளங்களை சுரண்டுவது போல எம்மை வைத்துக் கொண்டு மேற்குலகம் எதிர்கால பெரும் பொருளாதார சக்திகளாக எழும்பி நிற்க விரும்பும் சீனாவையும் இந்தியாவையும் கட்டுப்படுத்த நினைக்கும். மேற்குலகம் தங்கள் கைகளில் இருந்து உலகின் செல்வாக்கு சீனாவிடம் போவதையோ இந்தியாவிடம் போவதையோ விரும்பப் போறதில்லை. 2030 இல் சீனா அமெரிக்காவை விஞ்சி உலகப் பொருளாதாரத்தில் முதன்மை பெற உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. அந்த நிலையை இந்தியா 2050 எடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவை நீண்ட காலம் அல்ல. ஒப்பீட்டளவில் குறுகிய காலம். அந்த வகையில் மேற்குலகம் தெற்காசியாவில்.. தென்கிழக்காசியாவில் தனது வலுவான காலூண்றலை செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. பாகிஸ்தான்.. முஸ்லீம் அடிப்படைவாதிகளின் கைகளில் சிக்கி இருப்பதால்.. அங்கு மேற்குலகம் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. அதனை வைச்சு சீனாவையோ இந்தியாவையோ எதையும் செய்ய முடியாது. அதுமட்டுமன்றி பாகிஸ்தானின் அணு ஆயுத வளர்ச்சியில் சீனா நேரடியாக பங்களித்துள்ளது. இது மேற்கு நாடுகள் விரும்பக் கூடிய ஒன்றல்ல.

அதேபோல்.. சிறீலங்கா சீனாவையோ இந்தியாவையோ உதறித்தள்ளிவிட்டு மேற்குலகின் பக்கம் 100% சாய முடியாது. அப்படி சாய்ந்தால் சீனா அல்லது இந்தியா அதற்கு எதிரியாகும். அப்போதும் நமக்கு நன்மை இருக்கிறது. அதேபோல் சீனாவை அணைத்துக் கொண்டு மேற்குலகை அணைக்கிற மாதிரி எனி நடிச்சுக் கொண்டிருக்க முடியாது. மேற்குலகம் தெளிவான நீண்ட கால ஆதரவாளன் ஒருவன் கிடைப்பான் என்றால் சிறீலங்காவை அங்கு உதறிவிடும்... அல்லது சிறீலங்காவை பகுதியாக கட்டுப்படுத்தி வைச்சுக் கொள்ளும்.

அந்த வகையில்.. நாம் இன்றைய சூழலை சரிவரப் பயன்படுத்திக் கொள்வதில் தான் வெற்றியும் தோல்வியும் தங்கியுள்ளதே தவிர.. முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. ஒரு ஆரம்பமே என்பது மிகவும் யதார்த்தமான உண்மை. ஈழ - தமிழக - உலகத் தமிழர்களின் ஒற்றுமையில் தான் எனி எமது இனத்துக்கான விடிவே தங்கி இருக்கிறது. இது தமிழீழ மக்களும் அவர் தம் பிள்ளைகளான விடுதலைப்புலிகளும் தம் உயிர் கொடுத்து எமக்கு பெற்றுத் தந்துள்ள ஒரு வரம். அதனை வீணடிக்காது.. சரியான வழியில் பயன்படுத்தி தமிழினத்தை அழிவில் இருந்தும் காத்து வளம் மிக்க இனமாக ஆக்க வேண்டும்.

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் அருமை!

இலங்கை என்றுமே அமெரிக்காவின் சொல்லை மீறி நடந்ததில்லை. தற்போதும் IMF உத்தரவுகளை நடைமுறைப் படுத்தக் காத்திருக்கின்றது. மே தின ஆர்ப்பாட்டம் குறித்து ராஜபக்சவுடன் தொழிற்சங்கங்கள் முரண்பட்ட செய்தியை படித்தாலே புரியும். அந்த நேரத்தில் தான் ஐ.நா. அறிக்கை வெளியானது. நீங்களே புரிந்து கொண்டது போல இந்த அறிக்கை விசாரணைக்கு ஆனது அல்ல. மாறாக ஒரு மிரட்டல் மட்டுமே.

அதாவது IMF உத்தரவை நடைமுறைப் படுத்தா விட்டால் மட்டுமே அந்த விசாரணை எல்லாம் வரும். சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையிலான இனப்பிரச்சினை கூட பொருளாதார பிரச்சனைகளை மறைக்கும் திரை தான். சிங்கள ஆளும் வர்க்கமும், தமிழ் தேசிய தலைமையும், மேற்கத்திய நாடுகளும் அந்த மாயத்திரையை பூதாகரமாக காட்டி வருகின்றனர். இந்தியாவில் ஆங்கில வழிக் கல்வி பரவிய அளவுக்கு இலங்கையில் இன்னும் நடக்கவில்லை. அங்கே சுயமொழிக் கல்வியும், அரசு செலவில் இலவசக் கல்வியும் இன்று வரை நீடிப்பதை அறிவீர்களா? ராஜபக்ச அரசு கல்வித் துறையை தனியார் மயப் படுத்தி வருகின்றது. இதெல்லாம் அமெரிக்காவினதும், IMF இனதும் உத்தரவின் பேரில் நடக்கிறது. இது போன்ற நடவடிக்கைகள் தான் அரபு நாடுகளில் மக்கள் எழுச்சியை தோற்றுவித்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இது கற்பனையோ இல்லையோ எமக்கு எமது விடிவை தீர்மானிக்க வழி இருக்கிறது என்பதை சொல்லலாம்.

அந்த வகையில்..

நாம் இன்றைய சூழலை சரிவரப் பயன்படுத்திக் கொள்வதில் தான் வெற்றியும் தோல்வியும் தங்கியுள்ளதே தவிர.. முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. ஒரு ஆரம்பமே என்பது மிகவும் யதார்த்தமான உண்மை. ஈழ - தமிழக - உலகத் தமிழர்களின் ஒற்றுமையில் தான் எனி எமது இனத்துக்கான விடிவே தங்கி இருக்கிறது. இது தமிழீழ மக்களும் அவர் தம் பிள்ளைகளான விடுதலைப்புலிகளும் தம் உயிர் கொடுத்து எமக்கு பெற்றுத் தந்துள்ள ஒரு வரம். அதனை வீணடிக்காது.. சரியான வழியில் பயன்படுத்தி தமிழினத்தை அழிவில் இருந்தும் காத்து வளம் மிக்க இனமாக ஆக்க வேண்டும்.

நன்றி நெடுக்ஸ்

எல்லோரும் இணையவேண்டும் தமிழகம் உட்பட. எமது பலத்தை ஒருமித்து காட்டுவதுதான் இவர்களை அடுத்த கட்டத்துக்கு செல்லவைப்பதற்கான ஒரே ஓருவழி. அதற்கு ஆரம்பமாக எழுச்சியாக கிருஸ்ணமூர்த்தியின் தியாகத்தை நாம் கொள்ளவேண்டும்.

நெடுக்ஸ் அவர்கள் நல்ல கருத்தை முன்வைத்துள்ளார்.

மேலும், மேலே கூறப்பட்ட செய்தி உண்மையாக இருக்கும், காரணம், இந்தியா / சீனா / உருசியா என்பன முடிந்தளவுக்கு போர்க்குற்ற விசாரணைகளை இல்லாமல் போக நிச்சயமாக தவிர்த்திருக்கும். ஐ. நா. கூட விரும்பியிருக்காது, எனவே மேற்குலகமே இந்த முடிவுக்கு (குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி இன்னும் நீண்ட காலத்திற்கு ஆட்சிக்கு வரமாட்டாது, மற்றும் சீனாவின் அதிகரித்த உள்ளீடு) வர வைத்துள்ளது என நம்பலாம்.

அந்தவகையில் தமிழரின் நலம் கருதி இல்லாமல் தமது பிராந்திய நலன்களை மேற்குலகம் முன்னெடுக்கும் பொழுது அதே பிராந்திய வல்லரசும் (இந்தியா) சில நகர்வுகளை விருப்பத்திற்கு அப்பால் எடுக்க வேண்டிய தேவை திணிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் தமிழர் தரப்பு மிகவும் சாதுரியமாகவும் அவதானமாகவும் காய்களை நகர்த்தல் வேண்டும். அதாவது இந்திய நலன்களை, முக்கியமாக அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நாம் அமையமாட்டோம் என்ற உத்தரவாதத்துடன், மேற்குலத்தை அணைத்தபடி நாம் எமது உரிமையை வென்றெடுக்கவேண்டும்.

-

சிந்தித்து எழுதப்பட்ட கருத்துக்கள் நெடுக்ஸ் icon-plus-green.png

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு நானும் ஒன்டு குத்தியுள்ளேன்.பச்சைதான் :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

இது கற்பனையோ இல்லையோ எமக்கு எமது விடிவை தீர்மானிக்க வழி இருக்கிறது என்பதை சொல்லலாம்.

எப்படி சிங்களம் எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகக் காட்டி.. பிராந்திய பூகோள நலனை அடிப்படையாகக் கொண்டு சீனாவையும் ரஷ்சியாவையும் வைச்சுக் கொண்டு இந்தியாவை தன் பக்கம் இழுத்திச்சுதோ அதே வேலையை மேற்குலகை எமது பக்கம் கொண்டு வருவதன் மூலம் செய்ய முடியும்.

இன்றைய நிலையில் பிராந்தியத்தில் தமிழர்கள் முக்கிய சக்திகள். அவர்களால் பிராந்தியத்தில் இரண்டு நாடுகளின் அரசியலை தீர்மானிக்கும் பலம் இருக்கிறது. தெற்காசியாவில் மட்டுமன்றி தென்கிழக்காசியாவிலும் அவர்களின் செல்வாக்கு இருக்கிறது. புலம்பெயர் நாடுகளிலும் இருக்கிறது. இந்தப் பலம் சிங்களவர்களுக்கோ.. வட இந்தியர்களுக்கோ கிடையாது. நாம் தமிழர்களாய் ஒற்றுமையாக நின்றோமானால்.. நிச்சயமாக மேற்குலகம் எம்மை ஆதரித்து தான் தெற்காசியாவில் வலுவாக காலூண்ற விளையும். நமக்கு எண்ணை வளம் அவசியமில்லை. ஆனால் பெரும் பிராந்தியங்களில் வாழும் மக்கள் பலம்.. நிலம் இருக்கிறது. அது முக்கியம். குறிப்பாக ஒற்றுமையான ஒருமித்த கருத்தோட்டமுள்ள மக்களாக நாம் இலங்கையிலும் இந்தியாவிலும் இதர சேதங்களிலும் வலுபெறும் போது.. எமது சொல்லிற்கு செயலிற்கு உலகம் மதிப்பளிக்கும்.

பூகோள நலனை அடிப்படையாகக் கொண்டு.. யூதர்களை இன்று மதிப்பது போல எம்மையும் இந்த உலகம் மதிக்கும். கருத்தில் எடுக்கும். எந்த வளமுமற்ற இஸ்ரேலை வைச்சு மத்திய கிழக்கில் உள்ள வளங்களை சுரண்டுவது போல எம்மை வைத்துக் கொண்டு மேற்குலகம் எதிர்கால பெரும் பொருளாதார சக்திகளாக எழும்பி நிற்க விரும்பும் சீனாவையும் இந்தியாவையும் கட்டுப்படுத்த நினைக்கும். மேற்குலகம் தங்கள் கைகளில் இருந்து உலகின் செல்வாக்கு சீனாவிடம் போவதையோ இந்தியாவிடம் போவதையோ விரும்பப் போறதில்லை. 2030 இல் சீனா அமெரிக்காவை விஞ்சி உலகப் பொருளாதாரத்தில் முதன்மை பெற உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. அந்த நிலையை இந்தியா 2050 எடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவை நீண்ட காலம் அல்ல. ஒப்பீட்டளவில் குறுகிய காலம். அந்த வகையில் மேற்குலகம் தெற்காசியாவில்.. தென்கிழக்காசியாவில் தனது வலுவான காலூண்றலை செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. பாகிஸ்தான்.. முஸ்லீம் அடிப்படைவாதிகளின் கைகளில் சிக்கி இருப்பதால்.. அங்கு மேற்குலகம் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. அதனை வைச்சு சீனாவையோ இந்தியாவையோ எதையும் செய்ய முடியாது. அதுமட்டுமன்றி பாகிஸ்தானின் அணு ஆயுத வளர்ச்சியில் சீனா நேரடியாக பங்களித்துள்ளது. இது மேற்கு நாடுகள் விரும்பக் கூடிய ஒன்றல்ல.

அதேபோல்.. சிறீலங்கா சீனாவையோ இந்தியாவையோ உதறித்தள்ளிவிட்டு மேற்குலகின் பக்கம் 100% சாய முடியாது. அப்படி சாய்ந்தால் சீனா அல்லது இந்தியா அதற்கு எதிரியாகும். அப்போதும் நமக்கு நன்மை இருக்கிறது. அதேபோல் சீனாவை அணைத்துக் கொண்டு மேற்குலகை அணைக்கிற மாதிரி எனி நடிச்சுக் கொண்டிருக்க முடியாது. மேற்குலகம் தெளிவான நீண்ட கால ஆதரவாளன் ஒருவன் கிடைப்பான் என்றால் சிறீலங்காவை அங்கு உதறிவிடும்... அல்லது சிறீலங்காவை பகுதியாக கட்டுப்படுத்தி வைச்சுக் கொள்ளும்.

அந்த வகையில்.. நாம் இன்றைய சூழலை சரிவரப் பயன்படுத்திக் கொள்வதில் தான் வெற்றியும் தோல்வியும் தங்கியுள்ளதே தவிர.. முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. ஒரு ஆரம்பமே என்பது மிகவும் யதார்த்தமான உண்மை. ஈழ - தமிழக - உலகத் தமிழர்களின் ஒற்றுமையில் தான் எனி எமது இனத்துக்கான விடிவே தங்கி இருக்கிறது. இது தமிழீழ மக்களும் அவர் தம் பிள்ளைகளான விடுதலைப்புலிகளும் தம் உயிர் கொடுத்து எமக்கு பெற்றுத் தந்துள்ள ஒரு வரம். அதனை வீணடிக்காது.. சரியான வழியில் பயன்படுத்தி தமிழினத்தை அழிவில் இருந்தும் காத்து வளம் மிக்க இனமாக ஆக்க வேண்டும்.

நெடுக்ஸ் உங்கள் கருத்து ஆக்கபூர்வமான கருத்து.

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குவுக்கு விழுந்த 10வது பச்சையை வழங்கியவர் வேறுயாருமல்ல, நான் தான் திருவாளர் கந்தப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி சிங்களம் எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகக் காட்டி.. பிராந்திய பூகோள நலனை அடிப்படையாகக் கொண்டு சீனாவையும் ரஷ்சியாவையும் வைச்சுக் கொண்டு இந்தியாவை தன் பக்கம் இழுத்திச்சுதோ அதே வேலையை மேற்குலகை எமது பக்கம் கொண்டு வருவதன் மூலம் செய்ய முடியும்.

இன்றைய நிலையில் பிராந்தியத்தில் தமிழர்கள் முக்கிய சக்திகள். அவர்களால் பிராந்தியத்தில் இரண்டு நாடுகளின் அரசியலை தீர்மானிக்கும் பலம் இருக்கிறது. தெற்காசியாவில் மட்டுமன்றி தென்கிழக்காசியாவிலும் அவர்களின் செல்வாக்கு இருக்கிறது. புலம்பெயர் நாடுகளிலும் இருக்கிறது. இந்தப் பலம் சிங்களவர்களுக்கோ.. வட இந்தியர்களுக்கோ கிடையாது. நாம் தமிழர்களாய் ஒற்றுமையாக நின்றோமானால்.. நிச்சயமாக மேற்குலகம் எம்மை ஆதரித்து தான் தெற்காசியாவில் வலுவாக காலூண்ற விளையும். நமக்கு எண்ணை வளம் அவசியமில்லை. ஆனால் பெரும் பிராந்தியங்களில் வாழும் மக்கள் பலம்.. நிலம் இருக்கிறது. அது முக்கியம். குறிப்பாக ஒற்றுமையான ஒருமித்த கருத்தோட்டமுள்ள மக்களாக நாம் இலங்கையிலும் இந்தியாவிலும் இதர சேதங்களிலும் வலுபெறும் போது.. எமது சொல்லிற்கு செயலிற்கு உலகம் மதிப்பளிக்கும்.

-------

அருமையான கருத்து நெடுக்ஸ். :)

நெடுக்ஸ் ஸ்டார் வோர் படமெல்லாம் பார்ப்பீர்களோ? கற்பனை கொடி கட்டி பறக்கின்றது. ஜோர்ச் லூக்காசுக்கு நன்றி.

யாழிலும் பலருக்கு நிலாவில் உலாவர ஆசைபோல் உள்ளது பச்சைகளை பார்க்கும் போது.

எங்கள் போராட்டத்தை பயங்கரவாதமாக சீனாவிற்கும்,ரஸ்யாவிற்கும்,இந்தியாவிற்கும் காட்டி?

அவர்களென்ன பால்குடிக்கும் பாலகர்களோ இலங்கை சொல்வதை நம்ப?

இன்னமும் குண்டு சட்டிக்குள் தான் குதிரை?

1988 இல் சிறீலங்காவில் ஜே வி பி கலகம் செய்து கொண்டிருக்க.. மாலைதீவைக் கைப்பற்றி தமிழீழம் காண கனவு கண்டதை விட இந்தக் கனவு எவ்வளவோ மேல். செயற்பாட்டு சாத்தியங்கள் கொண்டவை. 1987 இந்திய இராணுவத்தின் ஈழத் தலையீட்டோடு பிராந்தியத்தில் சரிந்து போயிருந்த தனது செல்வாக்கை உயர்த்த மாலைதீவை கைப்பற்ற வைச்சு பிராந்தியத்தில் தனது செல்வாக்கை இந்தியா நிலைநிறுத்த உதவியதைக் காட்டிலும்....

ஈழப்போராட்டம் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தல் என்பதை காட்ட இந்த மாலைதீவுப் புரட்சி பயன்பட்டதே அன்றி எமக்கு எந்தப் பலனையும் தரவில்லை. எமது விடுதலைப் போராட்டத்தை பிராந்திய அச்சுறுத்தலுக்குரிய ஒன்றாக மாற்றிய பெருமை.. எமது போராட்டத்தை சர்வதேசம் முழுமையாக ஏற்க முடியாமல் செய்த பெருமை புளொட் கூலிக் கும்பலைச் சாரும். ஆனால் என்ன எஜமானர்களின் தவறான பேச்சைக் கேட்டு மாலைதீவில் புரட்சி செய்யப் போய்.. 19 க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களைப் பலியிட்டதும் இன்றி.. இன்றும் பல தமிழ் இளைஞர்கள் ஜெயிலில் கிடக்கின்றனர். அதுதான் வேதனை.

ஈழப் போராட்டத்திற்கு இந்திரா காந்தி அம்மையார் வெளிப்படையாக உதவி நின்றதற்கு காரணம்.. தமிழக தமிழர்கள் குறிப்பாக எம் ஜி ஆர் போன்ற பலமான அரசியல்வாதிகள் ஈழத்தவர்களோடு ஒரே கருத்தியலோட்டத்தைக் கொண்டிருந்ததால் தான். இன்றேல் அந்த ஆதரவு என்பது பற்றி அவர் அன்று கொஞ்சம் யோசித்தே இருப்பார்.

இந்திய இராணுவத்தோடு கூட நின்று.. பிள்ளை பிடிச்சு.. மாகாண அரசியல் நடத்தி.. ஈழப்பிரகடனம் செய்தும்.. காணாத ஒன்றை பிராந்தியத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமை சாதித்துக் காட்டி இருக்கிறது. அதே நிலையை உருவாக்கின் நிச்சயம் அது எமக்கு பெரும்பலம்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது அவரின் தவறான அரசியல் செய்த மனிதப் படுகொலைகளால். தனிப்பட்ட காரணங்களுக்காக என்று அது இருக்க முடியாது. ஆனால் உலகிற்கு காட்டப்பட்டது வேறு. அரசியல் கொலைகளுக்காக தண்டிக்க வேண்டின்.. இன்று சீக்கியர்கள் முழுப் பேரும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை. தமிழர்கள் மட்டும் தட்டிக்கப்படக் காரணம்..??????!

ஈழப் போராட்டத்தின் உண்மைத் தோற்றத்தை ஜே ஆர் அறிந்திருந்தும்.. அவர் உலகிற்கு காட்டியது பயங்கரவாதமாக. ஈழப் போராட்டத்தை விடுதலைப் போராட்டமாக இந்தியா வரிந்து நின்ற காலம் சோவியத் வீழ்ச்சிக்கு முன்னான காலம். அக்காலத்தில் இந்தியா சோவியத்தின் பிராந்தியக் கூட்டாளி. பாகிஸ்தான் அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. ஜே ஆர்... வெஸ் ஒப் அமெரிக்காவை கொண்டு வந்து நிறுத்தினார். இந்தியாவை கண்காணிக்க விட்டார். சீனாவை அரவணைத்தார். அந்த நிலையில்.. இந்தியாவால் விளங்க முடியாத எதிரி.. தந்திரியாக அவர் இருந்தார். ஆனால் இன்று நிலை அப்படியல்ல...!

பிராந்திய.. சர்வதேச அரசியலை உலக மயமாக்கல்கள்.. பொருண்மிய.. வள பரம்பல்.. இன்று அதிகம் தீர்மானிக்கிறது. அன்று அரசியல் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி வல்லாதிக்க போட்டி இருந்தது. இன்று பொருண்மியம் சார்ந்த போட்டியாக அது மாறி இருக்கிறது.

தெற்காசியாவில் சிங்களவர்களை விட தமிழர்கள் கிட்டத்தட்ட 7 மடங்கு அதிகம் வசிக்கின்றனர். அதைவிட தமிழர்கள் உலகம் பூரா பரந்து வாழ்கின்றனர். அவர்களிடம் பொருண்மியம் சார்ந்த வளம் இருக்கிறது. மனித வளம் இருக்கிறது. சந்தை இருக்கிறது. பொருண்மிய கொள்கைகளை தீர்மானம் செய்யும் அரசியலை தீர்மானங்களை செய்யக் கூடிய வளம் இருக்கிறது. தமிழர்கள் ஜனநாயக விரோதமற்ற சக்திகளாக இருக்கின்றனர். தமிழர்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டால்.. நிச்சயம் அவர்களால் பிராந்தியத்தில் செல்வாக்கு செய்பவர்களிடம் பேரம் பேச முடியும்..!

குறிப்பாக தமிழக அரசியல் சக்திகள் ஈழத்தமிழர் ஆதரவை வெளிப்படுத்தும் நிலை மீண்டும் எம் ஜி ஆர் காலம் போல பிரகாசமாக வளர வேண்டும். நாம் தமிழராய் மக்கள் இன உணர்வோடு ஒற்றுமைப்பட்டு நின்றால் அது சாத்தியமாகும். அதற்கு தமிழக தலைவர்களின் கூட்டுப் பங்களிப்பு மிக அவசியம்.

நட்சத்திரப் போர் திட்டம் என்பது கற்பனை அல்ல. சோவியத் - அமெரிக்க பனிப்போர் காலத்தில் தீட்டப்பட்ட திட்டங்களின் ஒரு வடிவமே ஆகும். இன்று அது லேசர் துப்பாக்கிகள் பாவனை வரை வளர்ந்திருக்கிறது.

உங்களைப் பொறுத்தவரை.. எங்களால் எதுவும் முடியாது. சிங்களத்தோடு ஒட்டு உறவாடி ஒரு அடிமை வாழ்வை வாழ்வதே நல்லது. இதுதான் சித்தார்த்தன் போன்றவர்களின் கொள்கையும் கூட. இதனால் இவர்கள் கண்ட பலன்.. ஒரு மாநகராட்சியில் கூட ஒரு அபிவிருத்தியை கொண்டு வர முடியவில்லை. பெளத்த விகாரைகள் அமைவதை தடுக்க முடியவில்லை. இதிலும்.. எமது கனவு சாத்தியப்படக் கூடிய பூகோளச் சூழல் எவ்வளவோ சாத்தியமா இருக்குது. நாங்க தான் சிந்திக்க மாட்டமே..! யாரும் ஒரு வட்டத்தை விட்டு வெளில.. சிந்தித்தாலும் அதை மட்டம் தட்டிடுவமே. மிஞ்சிப் போனா மாற்றுக் கருத்தென்று குப்பைகளை புலி எதிர்ப்பை கதைச்சுக் கொண்டே அதுவே எங்கள் சன நாய் அகம் என்றும் முழக்க மிடுவோம். இதுவே நமக்கு பிழைப்பா போச்சு. :D:)

Edited by nedukkalapoovan

ஒற்றுமையாக நின்று ஒரு கட்டைசம்பலை சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்வதை நிற்பாட்டமுடியவில்லை.தமிழ்நாட்டில் இருந்து கூட்டிக்கொண்டு உலகெங்கும் திரிந்த திருமாவை கட்டிற்குள் வைத்திருக்கமுடியவில்லை.ரஸ்யா,சீனா என்று எடுப்புமாத்திரம் அந்தமாதிரி.

அடுத்து கருணாவும்,பிள்ளையானும் இன்னமும் புலிகளா?

நாங்கள்தானே 80 களிலேயே உருப்பாடாத கேஸுகள் என்று விட்டுட்டுவந்திட்டம்,பிறகேன் உந்த முத்திரை,முள்ளிவாய்க்காலுக்கு உதுவும் ஒரு காரணம்.

முதல் இரண்டுவருடத்திலேயே புலம்பெயர்ந்ததுகள் இப்ப செய்பவற்றை செய்ய தொடங்கிவிட்டோம்.தமிழனுக்கு அழிவு வேண்டும் என எழுதிவைத்துவிட்டார்கள் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்து கருணாவும்,பிள்ளையானும் இன்னமும் புலிகளா?

நாங்கள்தானே 80 களிலேயே உருப்பாடாத கேஸுகள் என்று விட்டுட்டுவந்திட்டம்,பிறகேன் உந்த முத்திரை,முள்ளிவாய்க்காலுக்கு உதுவும் ஒரு காரணம்.

அந்த உருப்படாடதுகளுக்காக வாங்கும் வக்காலத்து, புலிகளை உருப்படாததாக காட்டியமைதான், அந்த முத்திரை மூஞ்சைக்கு வரக் காரணம்!

.

இன்றைய.. போர்குற்ற விசாரணை போன்ற நிலைப்பாடுகளிற்கு அமெரிக்க தலைமைகளில் ஏற்பட்ட சிந்தனை மாற்றங்கள் தான் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக இருக்க வேண்டும்.

குறிப்பாக ஒபாமா ஹிலாரி.

அடிப்படை வாதங்கள் நிலையற்றவை என்பதையும் அமெரிக்கா தொடர்ந்தும் பழைய பாணியிலேயே வியாரத்தைக் கொண்டு செல்ல முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கலாம் / நம்பியிருக்கலாம் / அந்தக் கோட்டில் சிந்திக்கலாம்.

அத்தோடு இவர்கள் இருவரும் ஏனைய பழைய அமெரிக்க தலைவர்கள் போன்று முதலாளிகளின் பிரதிநிதிகள் அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.

உதாரணமாக சிறீ லங்காவின் மீது போர்குற்ற விசாரணை அழுத்தங்களை அமெரிக்கா பிரயோகிக்க வேண்டிய அவசியமேயில்லை. முள்ளிவாய்க்காலின் பின் சில மில்லியன்களை தூக்கி வீச சிறீ லங்கா அமெரிக்காவின் காலில் சரணாகதியாகக் கிடந்திருக்கும்.

ஆனால் அப்படி நடக்கவில்லை.

இது இவர்களின் சிந்தனைப் போக்கின் செல்வாக்கைக் காட்டுகிறது.

அப்படியிருக்க.. தமிழர்களுக்கு செல்வாக்கு அளிப்பதன் மூலம் பிராந்தியத்தை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பது என்பது பழைய அமெரிக்கத்தனம் என்று தான் சொல்லலாம். ஒபாமா ஹிலாரி சிந்தனைப் போக்கிற்கு முரணானது.

உலகின் மேற்பரப்பில் உள்ள அனைத்து நாகரீகங்களையும் அழிக்கும் வல்லமை அமெரிக்காவிடம் இருக்கிறது. ஆகவே நிறைய தன்னம்பிக்கை அவர்களிடம் உண்டு. சீனாவுடனோ, இந்தியாவுடனோ பனிப்போர் நடாத்தும் எண்ணம் அவர்களிடம் இருக்காது.

சீனா பற்றி ஹிலாரி சொல்லும் போது சீனா உலகோடு ஒத்து இயங்க வேண்டும் என்று சொன்னார். (சீனாவை அடக்கும் எண்ணம் அமெரிக்காவிடம் இல்லை).

அமெரிக்கத்தலமை தீர்ந்து போகும் உலக வளங்கள் பற்றி அதிக கவனம் கொள்கிறது. இதுதான் அவர்களின் அடுத்த 10,20,30.. ஆண்டுகளின் திட்டமாகவும், கவனமாகவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தெரியாமல் தான் கேட்கிறேன் அர்ஜீன் அண்ணா எதாவது கேட்டால் அதற்கு பதில் சொல்வதை விட்டு,விட்டு[விருப்பம் இருந்தால்] அதென்ன சோற்றுப் பார்சல் என்கிறீர்கள்,கழகம்[புளட்] என்கிறீர்கள்...அவர் இப்பவும் கழகம் என்டால் கருணா இப்பவும் புலியா?

ஒற்றுமையாக நின்று ஒரு கட்டைசம்பலை சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்வதை நிற்பாட்டமுடியவில்லை.தமிழ்நாட்டில் இருந்து கூட்டிக்கொண்டு உலகெங்கும் திரிந்த திருமாவை கட்டிற்குள் வைத்திருக்கமுடியவில்லை.ரஸ்யா,சீனா என்று எடுப்புமாத்திரம் அந்தமாதிரி.

அடுத்து கருணாவும்,பிள்ளையானும் இன்னமும் புலிகளா?

நாங்கள்தானே 80 களிலேயே உருப்பாடாத கேஸுகள் என்று விட்டுட்டுவந்திட்டம்,பிறகேன் உந்த முத்திரை,முள்ளிவாய்க்காலுக்கு உதுவும் ஒரு காரணம்.

முதல் இரண்டுவருடத்திலேயே புலம்பெயர்ந்ததுகள் இப்ப செய்பவற்றை செய்ய தொடங்கிவிட்டோம்.தமிழனுக்கு அழிவு வேண்டும் என எழுதிவைத்துவிட்டார்கள் போல.

அண்ண, பெரும்பாலான தமிழ் மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், ஒரு சிலரைத் தவிர...

உதாரணத்திற்கு, நெடுக்ஸ் எழுதின கருத்து பெரும்பாலான யாழ் கருத்துக் கள உறவுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, அதன் வெளிப்பாடே அவரின் கருத்துக்குக் கிடைத்த பச்சைப் புள்ளிகளாகும்.

நீங்கள் ஒற்றுமை என்று எதை சொல்ல வருகிறீர்கள் என்று கொஞ்சம் விபரிக்க முடியுமா? கருத்தில் ஒற்றுமையாக இருந்தால், 'நிலாவில உலா வர ஆசை, எடுப்பு எடுக்கிறோம்' என்று எழுதுறீங்கள்... பெரும்பாலானவர்கள் சில யதார்த்தமான கருத்துகளோடு ஒத்துதானே போகிறார்கள்... உங்களின் உங்கள் அரசியல் சிந்தனையை தான் புரிந்து கொள்ள முடியவில்லை. (கருத்து எழுதின கையோட புற முதுகில நீங்களே தட்டுறது கொஞ்சம் கூட சகிக்க இல்லை...)

இதற்கெல்லாம் அவருக்கு விளக்கம் தெரியாது. அதைப்பற்றி அவருக்கு கவலையும் கிடையாது. பொறுப்பாக சிந்திப்பவனும் ஏதாவது நன்மை செய்யணும் என்று நினைப்பவனுக்குத்தான் எழுத்திலும் பேச்சிலும் செயலிலும் சிந்தனையும் பொறுமையும் அடக்கமும் வேண்டும்.

தன்மீது தானே காறித்துப்புபவனுக்கு

கண்டதையும் தின்றுவிட்டு வாந்தி எடுப்பவனுக்கு

பொறுப்பில்லாமல் கண்டவனுடன் ஊர் சுத்தி அதை மற்றவர்மேல் திணிப்பவனுக்கு

குறிப்பிட்ட ஒரு பொருள்மீது அலர்ச்சி உடையவனுக்கு அல்லது குறிப்பிட்ட பொருள் தன்னால்முடியாததையெல்லாம் சாதித்துவிட்டானே என்ற வன்மம் கொண்டவனுக்கு.......................

எதற்கு பொறுப்பு கடமை கண்ணியம் ................??????? :(:(:(

இன்றைய.. போர்குற்ற விசாரணை போன்ற நிலைப்பாடுகளிற்கு அமெரிக்க தலைமைகளில் ஏற்பட்ட சிந்தனை மாற்றங்கள் தான் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக இருக்க வேண்டும்.

குறிப்பாக ஒபாமா ஹிலாரி.

அடிப்படை வாதங்கள் நிலையற்றவை என்பதையும் அமெரிக்கா தொடர்ந்தும் பழைய பாணியிலேயே வியாரத்தைக் கொண்டு செல்ல முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கலாம் / நம்பியிருக்கலாம் / அந்தக் கோட்டில் சிந்திக்கலாம்.

அத்தோடு இவர்கள் இருவரும் ஏனைய பழைய அமெரிக்க தலைவர்கள் போன்று முதலாளிகளின் பிரதிநிதிகள் அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.

உதாரணமாக சிறீ லங்காவின் மீது போர்குற்ற விசாரணை அழுத்தங்களை அமெரிக்கா பிரயோகிக்க வேண்டிய அவசியமேயில்லை. முள்ளிவாய்க்காலின் பின் சில மில்லியன்களை தூக்கி வீச சிறீ லங்கா அமெரிக்காவின் காலில் சரணாகதியாகக் கிடந்திருக்கும்.

ஆனால் அப்படி நடக்கவில்லை.

இது இவர்களின் சிந்தனைப் போக்கின் செல்வாக்கைக் காட்டுகிறது.

அப்படியிருக்க.. தமிழர்களுக்கு செல்வாக்கு அளிப்பதன் மூலம் பிராந்தியத்தை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பது என்பது பழைய அமெரிக்கத்தனம் என்று தான் சொல்லலாம். ஒபாமா ஹிலாரி சிந்தனைப் போக்கிற்கு முரணானது.

உலகின் மேற்பரப்பில் உள்ள அனைத்து நாகரீகங்களையும் அழிக்கும் வல்லமை அமெரிக்காவிடம் இருக்கிறது. ஆகவே நிறைய தன்னம்பிக்கை அவர்களிடம் உண்டு. சீனாவுடனோ, இந்தியாவுடனோ பனிப்போர் நடாத்தும் எண்ணம் அவர்களிடம் இருக்காது.

சீனா பற்றி ஹிலாரி சொல்லும் போது சீனா உலகோடு ஒத்து இயங்க வேண்டும் என்று சொன்னார். (சீனாவை அடக்கும் எண்ணம் அமெரிக்காவிடம் இல்லை).

அமெரிக்கத்தலமை தீர்ந்து போகும் உலக வளங்கள் பற்றி அதிக கவனம் கொள்கிறது. இதுதான் அவர்களின் அடுத்த 10,20,30.. ஆண்டுகளின் திட்டமாகவும், கவனமாகவும் இருக்கும்.

அண்மையில் தூநிசியாவில் தொடங்கிய தற்கொலை எரியூட்டல் மத்திய கிழக்கில் பரவியபொழுது அது ஒபாமா ஆட்சியை சற்று எதிர்பாராதவிதமாக அதிர்ச்சி கொடுத்தது. பின்னர் அது எகிப்துக்கு பரவியபொழுது ஒபாமாவுக்கு ஒருபுறம் 'பழைய' ஆட்களும் ( உப அதிபர் பெய்டன், இராசாங்க செயலாளர்

ஹிலாரி, பாதுகாப்பு செயலாளர் கேட்ஸ்) மறுபுறம் ஐம்பதுக்கு உட்பட்ட புதிய ( ஐ.நா. பிரதிநிதி சூசான ராய்ஸ், பிரத்தியேக அறிவுரையாளர் சமந்தா பொக்ஸ்) என்பனர் இருந்து நன்மை தீமைகளை வாதிட்டனர்.

இறுதியில் இந்த நாடுகளில் உள்ள இளையோரின் விருப்பையும் அமெரிக்காவின் எதிர்காலத்தியும் ஒபாமா ஏற்றார் என்று பல ஊடகங்கள் தெரிவித்தன. இந்த மாறுதலே எமது போர்குற்றம் உட்பட அமெரிக்காவின் நிலையில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்திருக்கலாம்.

நாயாக பிறந்தால் குலைக்கத்தான் வேண்டும்.இதைப்போல் எத்தனை பேரைதாண்டி வந்தனாங்கள்.

எங்களை துரோகி எத்தனையோ பேர் இப்ப அரசுடன்.

இங்கு கனடாவிலும் வானொலி நடாத்தும் ஒரு பொன்னையர் தமிழீழம் வந்த பின் பலாலி விமானநிலையத்தில் என்ன செய்யவேண்டும் என ஒரு நிகழ்ச்சி நடாத்தி பெரும் கைதட்டு வாங்கினார்.துரோகிகளுக்கு என்ன தண்டனை,தமிழ் தெரியாத சிறுவர்களுக்கு என்ன தண்டனை என்றெல்லாம் பட்டியல் போட்டார்.கிளிநொச்சிக்கு ஆமி போனால் புலிகள் தாக்கத்தேவை இல்லை அந்த காடும் இயற்கையுமே சிங்களத்தை தாட்டுவிடும் என்றார்.இப்ப கண்டால் மற்றப்பக்கம் திரும்பி போகின்றார்.

இன்று "அல்சியராவில்" வந்த காணொளியை பார்க்கவும்.பலவற்றுக்கு பதில் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தெரியாமல் தான் கேட்கிறேன் அர்ஜீன் அண்ணா எதாவது கேட்டால் அதற்கு பதில் சொல்வதை விட்டு,விட்டு[விருப்பம் இருந்தால்] அதென்ன சோற்றுப் பார்சல் என்கிறீர்கள்,கழகம்[புளட்] என்கிறீர்கள்...அவர் இப்பவும் கழகம் என்டால் கருணா இப்பவும் புலியா?

அம்மணி! தாங்கள் நிட்சயம் தெரியாமல்த்தான் கேட்கின்றீர்கள் என்பது அனைவருக்கும் புரிகின்றது.

இங்கே எழுதப்படும் கருத்துக்களுக்கு பதில் "படிக்காததுகள்", "புலிப்பால் குடித்ததுகள்", "அரசியல் அறியாததுகள்"

இப்படி எல்லாம் பட்டம் கொடுபதற்கு அர்யுன் அணாவுக்கு: யார் பதவுயும், உரிமையும் கொடுத்தார்களாம்?

அர்யுன் "புளொட்" என்று சொல்லப்பட காரணம். இப்போதும், அதன் நடவடிக்கைகளை சரியென்று செய்யும் சாதிப்பு.

கருணா இப்போதும் புலிகளின் நடவடிக்கைகளை தூக்கிக் கொண்டாகிக்கொண்டா இருக்கின்றார்?

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு தெரிந்தா, தெரியாமலா போடுகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாயாக பிறந்தால் குலைக்கத்தான் வேண்டும்.இதைப்போல் எத்தனை பேரைதாண்டி வந்தனாங்கள்.

எங்களை துரோகி எத்தனையோ பேர் இப்ப அரசுடன்.

இங்கு கனடாவிலும் வானொலி நடாத்தும் ஒரு பொன்னையர் தமிழீழம் வந்த பின் பலாலி விமானநிலையத்தில் என்ன செய்யவேண்டும் என ஒரு நிகழ்ச்சி நடாத்தி பெரும் கைதட்டு வாங்கினார்.துரோகிகளுக்கு என்ன தண்டனை,தமிழ் தெரியாத சிறுவர்களுக்கு என்ன தண்டனை என்றெல்லாம் பட்டியல் போட்டார்.கிளிநொச்சிக்கு ஆமி போனால் புலிகள் தாக்கத்தேவை இல்லை அந்த காடும் இயற்கையுமே சிங்களத்தை தாட்டுவிடும் என்றார்.இப்ப கண்டால் மற்றப்பக்கம் திரும்பி போகின்றார்.

இன்று "அல்சியராவில்" வந்த காணொளியை பார்க்கவும்.பலவற்றுக்கு பதில் இருக்கு.

கோவணம் கழன்றால் கூட முள்ளிவாய்க்கால் தோல்விக்கு அதுவும் காரணமாக்கும், அர்யுன் அண்ணா!

தமிழீழம் அடைவதும், அடையாமல் விடுவதும் ஒரு சாதாரண நிகழ்ச்சி. நிகழ்காலத்தின் எதிர்பார்ப்பு இறந்தகாலத்தில் வெற்றி அடையலாம், அடையாமல் விடலாம் இவை சாதாரண விடயம். ஆனால் இப்படி ஒரு எதிர்பார்ப்பு வைத்திருந்தீர்களே என்று பரிகசிப்பதுதான் அசாதாரணம், அற்பத்தனத்தின் உச்சம்.

நாளையின் எந்த ஆபத்தையும் வெல்லும் என்று, ஒரு வீட்டைக் கூடக் கட்டி அடித்துக் கூற எந்த விஞ்ஞான ஆற்றலாலும் முடியாது. ஏன் என்றால் ஒரு சுனாமியோ, இல்லை பூமி அதிர்வோ தனது எந்த அளவு பலத்தை பிரயோகிக்கும் என்று எதிர்பார்க்கவே முடியாத ஒன்று. அது போன்றுதான் புலி என்ற படைக்கும் ஆபத்தை வெல்லும் அளவு என்ற ஒன்று உண்டு. வல்லரசுகளின் கரங்கள் ஒன்றாகும் போதும் வரும் ஆபத்தின் அளவு சுனாமியை போன்றதே. அதுவும் எப்படி சொல்லாமல் நிகழ்கின்றதோ இவர்களின் ஒன்றாதலும் அப்படியேதான் நிகழ்கின்றது.

யப்பானில் ஒருவன் உண்ணாமல், உறங்காமல் பெரிய வீட்டைக் கட்டி சுனாமி அழிவிடம் கொடுத்து விட்டால், அவனைப் பரிகசிப்பதைப் போன்றதே, எமது தோல்வியைப் பரிகசிப்பதும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.